ATM Tamil Romantic Novels

நெஞ்சோரம் பூத்தவளே 20

நெஞ்சோரம் பூத்தவளே  – 21

 

அடுத்தவாரத்தில், பள்ளிக்கூடத்துக்கு கொண்டு வரப்பட்டிருந்த கணினிகள், ப்ரொஜெக்டர் அனைத்தும் முறையாக பொருத்தப்பட்டு, முதல் முறையாகப் பிள்ளைகளுக்கு ப்ரொஜெக்டர் மூலம் பாடம் நடத்தப்பட்டது.

திரையில் வண்ணமயமாகத் தோன்றிய படங்களையும், அறிவியல் காட்சிகளையும் பார்த்த சிறுவர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர்.

“டீச்சர்… இது சினிமா மாதிரி இருக்கே! இனிமே இப்படித்தான் படிப்போமா டீச்சர்?” என்று ஆர்வத்தோடு கேட்ட குழந்தைகளைப் பார்த்த முல்லையின் மனம் அப்படியே நிறைந்து போனது.

தான் கண்ட கனவு இன்று நனவாகி, தன் கண் முன்னே அரங்கேறுவதை உணர்ந்தவள், ஆனந்தத்தில் ஒரு கணம் கண்களை மெதுவாக மூடிக்கொண்டாள். அவளது இதழ்களில் நிம்மதியான புன்னகை மலர்ந்தது.

அன்றைய தினம் செந்தூரனும் பள்ளிக்கு வந்திருந்தான். வகுப்பறை வாசலில் நின்றபடி, பிள்ளைகளுக்கு முல்லை ஆர்வமாகப் பாடம் நடத்துவதையும், அவர்கள் உற்சாகமாகப் பதில் சொல்வதையும் பெருமிதத்தோடு ரசித்துக் கொண்டிருந்தான்.

அவனருகே நின்றிருந்த ஹெச்.எம். சுந்தரம், புன்னகையோடு செந்தூரனை நோக்கி, “தம்பி… இந்த ஊரு பசங்களோட எதிர்காலத்துக்காக நீங்க செய்த இந்த உதவியை இந்தப் பள்ளிக்கூடம் எப்போதும் மறக்காது. உங்க நல்ல மனசுக்கு ரொம்ப நன்றி தம்பி…” என்றார் மனமார.

செந்தூரன் உடனே தலையசைத்து “சார்… இதெல்லாம் என்னோட பொண்டாட்டியோட ஆசை. அவளால தான் இந்தப் பசங்களுக்கு என்ன தேவைன்னு நமக்கே தெரிய வந்தது. நான் அவளோட ஆசைக்கு துணையா நின்னது மட்டும் தான். பாராட்டெல்லாம் முல்லைக்குத் தான் சேரணும்…” என்றான் பெருமிதமான குரலில்.

அவன் சொன்ன வார்த்தைகளைக் கேட்ட முல்லையின் விழிகள் காதலில் மின்னின. அவளது இதழ்களில் தேங்கியிருந்த புன்னகையும், கண்களில் தெரிந்த நன்றியுணர்வும், செந்தூரனின் மனதை இன்னும் நிறைவடையச் செய்தது.

 

சிறிது நேரம் கழித்து வகுப்பை முடித்துவிட்டு வெளியே வந்த முல்லை, செந்தூரனை நோக்கி வந்தாள்.

 

சுற்றிலும் ஆசிரியர்களும், மாணவர்களும் நின்றிருந்ததால், அவனது கையை பிடிக்கத் தயங்கியவள், அமைதியாக அவனது கண்களை மட்டும் பார்த்தாள். அவளது பார்வையிலேயே ஆயிரம் நன்றிகள் மறைந்திருந்தன. தன்னவளை  புரிந்துகொண்ட செந்தூரன், அவள் காதில் மட்டும் விழும்படி மெதுவாக,

“என்னடி… அப்படிப் பார்க்குற?” என்று கேட்டான்.

“ஒண்ணுமில்லை சின்னையா… என் மனசுக்குள்ள இருந்த ஒரு சின்ன ஆசையை நான் சொன்னதும், அதைக் கொஞ்சம் கூட தாமதிக்காம நிறைவேத்திட்டீங்க. உங்களை என் புருஷனா அடைய நான் என்ன புண்ணியம் பண்ணேனோ தெரியல… உங்களை நினைச்சா எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு சின்னையா…” என்று மென்மையாகச் சொன்னாள்.

“நீ என் பொண்டாட்டிடி … உன்னோட லட்சியம் எதுவோ, அது தான் என்னோட லட்சியமும். அதனால இதுக்காக நீ எனக்கு தேங்க்ஸ் சொல்லக் கூடாது…” என்று அவளது காதோரம் உரசும் குரலில் சொன்னவன், யாருக்கும் தெரியாதபடி அவளது விரல்களை மெதுவாகப் பற்றினான்.

அவனது விரல்கள் முல்லையின் விரல்களை வருடியதும், முல்லையின் இதயம் வேகமாகத் துடித்தது.

அதே நேரத்தில் மற்ற ஆசிரியர்கள் இருவரையும் நோக்கி நடந்து வருவதைக் கண்டவள், சட்டென்று தன் கையை இழுத்துக் கொண்டு, வெட்கத்தில் தலைகுனிந்து நின்றாள்.

அவளது சிவந்த கன்னங்களையும், தடுமாறிய முகபாவனையையும் பார்த்த செந்தூரன், யாருக்கும் பார்க்காதபடி  குறும்பாகக் கண் சிமிட்டினான்.

 

முல்லையோ “சின்னையா…” என்று மெல்ல முறைத்தபடி வெட்கத்தில் புன்னகைக்க,

அவர்களது காதல் தருணம், ஆசிரியர்களின் சிரிப்புச் சத்தத்தில் இனிமையாகக் கரைந்து போனது.

பள்ளி முடிந்ததும், வழக்கம்போல தன் தந்தையைப் பார்க்க, செந்தூரனுடன் மருதப்பனின் வீட்டுக்குச் சென்றாள் முல்லை.

வாசலில் அமர்ந்திருந்த மருதப்பன், இருவரையும் பார்த்ததும் முகம் மலர்ந்து எழுந்து நின்றார்.

“வாம்மா முல்லை… வாங்க மாப்பிள்ளை…” என்று பாசம் பொங்கும் குரலோடு  இருவரையும் வீட்டுக்குள் அழைத்துச் சென்றார்.

அன்று பள்ளியில் நடந்த அனைத்தையும் குழந்தை போல உற்சாகமாகத் தன் தந்தையிடம் சொல்ல ஆரம்பித்தாள் முல்லை.

“அப்பா… பள்ளிக்கூடத்துக்கு கம்ப்யூட்டரும், ப்ரொஜெக்டரும் வந்துடுச்சுப்பா. இன்னைக்குத் தான் முதல் தடவையா பசங்களுக்கு அதுல பாடம் எடுத்தேன். திரையில படம் பார்த்த மாதிரி ஆர்வமா உட்கார்ந்து படிச்சாங்க. அவங்க முகத்துல இருந்த அந்தச் சந்தோஷத்தைப் பார்த்தப்போ… என் மனசே நிறைஞ்சு போயிடுச்சுப்பா.”

மகளின் வார்த்தைகளைக் கேட்ட மருதப்பனின் முகத்தில் பெருமிதம் படர்ந்தது.

“முல்லைம்மா… உன்னோட லட்சியம் ஒவ்வொண்ணா நிறைவேறுறதைப் பார்க்க என் மனசே குளிர்ந்துடுச்சும்மா…” என்றார் நெகிழ்ச்சியுடன்.

“மாப்பிள்ளை… மரகதம் உயிரோட இருந்தப்போ அடிக்கடி ஒரு விஷயம் சொல்லுவா…” என்றதும்,

முல்லையும் செந்தூரனும் அமைதியாக அவரைப் பார்த்தனர்.

“முல்லையை நல்லா படிக்க வச்சு டீச்சராக்கணும்… ஏழைப் பசங்களுக்கு படிப்பு சொல்லிக் கொடுக்கணும்… நம்மளால முடிஞ்ச உதவிகளை அவங்களுக்குச் செய்யணும்னு சொல்லிக்கிட்டே இருப்பா. அவளோட அந்த ஆசை… இன்னைக்கு என் கண்ணு முன்னாடியே நிறைவேறுற மாதிரி இருக்கு…” என்று சொல்லும்போதே அவரது குரல் லேசாகத் தழுதழுத்தது.

ஒரு பெருமூச்சு விட்டவர், தன் அருகில் அமர்ந்திருந்த செந்தூரனின் கைகளை இருகரங்களாலும் பற்றிக் கொண்டார்.

“மாப்பிள்ளை… மரகதத்தால செய்ய முடியாம போன நல்ல காரியத்தை, இன்னைக்கு நீங்க செஞ்சிருக்கீங்க. உண்மையாவே சொல்றேன்… உங்களை மாதிரி ஒரு மருமகன் கிடைக்க என் மகள் கொடுத்து வச்சிருக்கணும்.”

செந்தூரன் உடனே அவரது கைகளைப் பிடித்துக் கொண்டான்.

“மாமா… இப்படியெல்லாம் பெரிய வார்த்தை சொல்லாதீங்க. முல்லையோட கனவு என்னோட கனவும் தானே. அவ ஆசைப்பட்டதை நிறைவேற்றுறதுல எனக்கு சந்தோஷம் தான். அதுல நான் பெரியதா எதுவும் செய்யல.” என்றான் பணிவோடு.

மருதப்பன் மெதுவாகத் தலையசைத்தவர். “இல்ல மாப்பிள்ளை… பணம் இருந்தா மட்டும் இப்படி உதவி செய்ய முடியாது. அதுக்கு நல்ல மனசும் வேணும். அந்த நல்ல மனசு உங்களுக்கு நிறைய இருக்கு. அதான் என் மகளோட கனவை இவ்வளவு சீக்கிரமா நனவாக்கியிருக்கீங்க…” என்றார் நெகிழ்ச்சியுடன்.

இருவரின் உரையாடலையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த முல்லை, தன் தந்தையையும் கணவனையும் மாறி மாறிப் பார்த்தாள்.

ஒருபுறம் தன்னை உயிராய் நேசிக்கும் தந்தை… மறுபுறம், தன் கனவுகளையே தன் கனவாக ஏற்றுக்கொண்டு, அவற்றை நனவாக்கிக் கொண்டிருக்கும் கணவன்…

இந்த நொடியில், தன்னை விட அதிர்ஷ்டசாலி வேறு யாரும் இல்லையென்று சந்தோசப்பட்டுக் கொண்டிருந்தாள்.

மருதப்பனிடம் பேசி முடித்தவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தனர்.

 

வாசலில் ஹெல்மெட்டை கழற்றியபடி பைக்கிலிருந்து இறங்கிய கார்த்திக்கைப் பார்த்த செந்தூரன்,

“வாடா கார்த்தி…” என்றான்.

நண்பனுக்கு ஒரு வலையமைப்பை கொடுத்து விட்டு, “எப்படி இருக்கீங்க முல்லை?” என்று புன்னகையுடன் நலம் விசாரித்தான் கார்த்திக்.

“நல்லா இருக்கேன் அண்ணா…” என்றாள்  மெல்லிய புன்னகையுடன்.

“முல்லை… நீ கார்ல போய் இரு. நான் கார்த்திகிட்ட ரெண்டு நிமிஷம் பேசிட்டு வர்றேன்…” என்றான் செந்தூரன்.

 “சரிங்க சின்னையா…” என்று சொல்லிவிட்டு காரை நோக்கி நடந்தாள்.

அவள் சற்று தூரம் சென்றதும், செந்தூரனின் முகத்தில் இருந்த புன்னகை மெதுவாக மறைந்தது.

“கார்த்தி… நான் சொன்ன விஷயத்தைக் கவனிச்சுட்டு இருக்கியா?” என்று மெதுவாகக் கேட்டான்.

“கவனிச்சுட்டு தான் இருக்கேன்டா. உன் அப்பா வெளியே எங்க போனாலும், யாரை சந்திச்சாலும் எனக்கு தகவல் வர்ற மாதிரி ஏற்பாடு பண்ணியிருக்கேன். ஆனா… இன்னும் சந்தேகப்படுற மாதிரி பெருசா எதுவும் கண்ணுல படல.”

“அவசரப்பட வேண்டாம். அவரோட ஒவ்வொரு நகர்வையும் கவனிச்சுட்டே இரு. எந்த விஷயமா இருந்தாலும் உடனே எனக்குச் சொல்லு. எனக்கு ஏதோ சரியில்லன்னு மனசு சொல்லிக்கிட்டே இருக்கு…” என்றான் நெற்றியைத் தேய்த்தபடி.

“சரிடா… நீ கவலைப்படாத. புது மாப்பிள்ளை… ஜாலியா இரு. வேலையை நான் பார்த்துக்கிறேன்…” என்று கண்ணைச் சிமிட்டி சிரித்தான் கார்த்திக்.

“தேங்க்ஸ்டா…” என்று அவன் தோளைத் தட்டிக் கொடுத்த செந்தூரன், காரை நோக்கி நடந்தான்.

கார்த்திக்கும் விடை கொடுத்துவிட்டு காரில் ஏறியவன், இன்ஜினை ஸ்டார்ட் செய்யப் போகும் நேரத்தில்…

“சின்னையா…” என்று அழைத்தாள் முல்லை.

“என்ன அம்மணி?” என்று அவளைத் திரும்பிப் பார்த்தான்.

“இன்னைக்கு… நாம கார்ல போக வேண்டாம்.”

“அப்போ?” என்று புருவத்தை உயர்த்தினான்.

அவள் கார்த்திக் நின்று கொண்டிருந்த திசையைச் சுட்டிக்காட்டினாள்.

“கார்த்தி அண்ணா பைக்குல வந்திருக்காங்கல்ல… அந்த பைக்குல போகலாமா?”

அவளது திடீர் ஆசையில் செந்தூரன் சிரித்தான்.

“திடீர்னு புல்லட் ஆசை வந்துருச்சா?” முல்லை பதில் சொல்லாமல், சாலையோரத்தில் நிழல் விரித்திருந்த பெரிய அரசமரத்தைப் பார்த்தாள். அவளது கண்களில் பழைய நினைவுகள் மெல்ல உயிர் பெற்றன.

“சின்னையா… இந்த அரசமரத்துக்குப் பக்கத்துல இருக்குற பாதையில தான் நான் தினமும் ஸ்கூலுக்கு நடந்து போவேன்… நீங்க புல்லட்ல வர்ற சத்தம் தூரத்துல கேட்டாலே… என் மனசு ஏனோ படபடன்னு அடிக்கும்.”

அவனது உதடுகளில் மெல்லிய புன்னகை மலர்ந்தது.

“அதுக்கப்புறம்…?”

“நீங்க பக்கத்துல வந்ததும்… ஒரு நிமிஷமாவது என்னைப் பார்த்துட்டுத் தான் போவீங்க. நானும் உங்களை பார்த்துட்டே நடந்து போவேன்.” என்று வெட்கத்தில் அவள் தலை குனிந்தாள்.

“அந்த ஒரு பார்வைக்காகவே… நான் தினமும் சீக்கிரமா வீட்டை விட்டு கிளம்பி இங்கே வந்து நிப்பேன்.”

செந்தூரன் சிரிப்பை அடக்க முடியாமல் அவளை ரசித்தான்.

“அப்போவே என்னை காதலிச்சுட்டு இருந்தியா?”

“ம்ம்…” என்று தலையசைத்தவள்,

 

“ஒரு நாளாவது… உங்க புல்லட்டுக்குப் பின்னாடி உங்க பொண்டாட்டியா உட்கார்ந்து இந்த ரோட்டுல வரணும்னு எத்தனையோ தடவை ஆசைப்பட்டிருக்கேன். ஆனா… அந்த ஆசை நிஜமாகும்னு நினைக்கவே இல்ல.”

அவளது கண்களை நேராகப் பார்த்த செந்தூரன், இத்தனை நாளா இந்த ஆசையை என்கிட்ட சொல்லாம மறைச்சு வச்சிருந்தியா?” என்று மெதுவாகக் கேட்டான்.

“எல்லா ஆசையையும் முதல் நாளே சொல்லிட்டா… அதுல சுவாரஸ்யம் இருக்காதுல சின்னையா…” என்று குறும்பாகச் சிரித்தாள் முல்லை.

அவளது குறும்பை ரசித்தவன், “சரி… இன்னைக்கு என் பொண்டாட்டியோட ஆசை கண்டிப்பா நிறைவேறும்…” என்று சொல்லிவிட்டு உடனே காரிலிருந்து இறங்கி,

“கார்த்தி… ஒரு நிமிஷம்!” என்று சத்தமாக அழைத்தான்.

மருதப்பனிடம் பேசிக் கொண்டிருந்த கார்த்திக் செந்தூரனிடம் திரும்பி வந்தான்.

“என்னடா?”

“உன் பைக்கை எனக்குக் கொடு. காரை நீ வீட்டுல கொண்டு போயிடு.” கார்த்திக் ஒரு கணம் முல்லையைப் பார்த்துவிட்டு குறும்பாகச் சிரித்தான்.

“ஓஹோ… விஷயம் அப்படிப் போகுதா?” என்று புருவத்தை உயர்த்தினான்.

வெட்கத்தில் முல்லை முகத்தைக் குனிந்து கொண்டாள்.

“டேய்… அதிகமா யோசிக்காத. சாவியைக் கொடு…” என்று சிரித்தபடியே அவன் தலையில் லேசாகத் தட்டினான் செந்தூரன்.

“சரி சரி… பத்திரமா போயிட்டு வாங்க புது ஜோடி…” என்று சாவியை அவன் கையில் கொடுத்துவிட்டு, காரில் ஏறிச் சென்றான் கார்த்திக்.

புல்லட்டின் அருகே நின்று முல்லையைப் பார்த்த செந்தூரன், “வாங்க மேடம்… உங்க பல நாள் ஆசையை இன்னைக்கு நிறைவேத்தலாம்…” என்று கையை நீட்டினான்.

முல்லையின் முகம் மழலையாய் மலர்ந்தது.

புடவையை லேசாக சரிசெய்துக் கொண்டு மெதுவாக புல்லட்டில் ஏறி அமர்ந்தாள்.

ஒரு கணம் தயங்கியவள், செந்தூரனின் தோளை மட்டும் பற்றிக் கொண்டாள்.

“அம்மணி… தோளை மட்டும் பிடிச்சா போதுமா? ரோடு மேடு, பள்ளமா இருக்கும்… கீழ விழுந்துடுவ.”

“நான் பார்த்துக்கிறேன்…” என்று வெட்கத்தோடு முணுமுணுத்தாள்.

“இல்ல… எனக்கு பயமா இருக்கு.”

“உங்களுக்கு என்ன பயம்?”

“என் பொண்டாட்டி கீழ விழுந்துடுவாளோன்னு…” என்று சொல்லிவிட்டு அவளது இரண்டு கைகளையும் எடுத்து தன் இடுப்பைச் சுற்றி வைத்தான்.

“இப்படித்தான் பிடிக்கணும்.”

அவனது செயலில் முல்லையின் இதயம் வேகமாகத் துடித்தது.

“சின்னையா…” என்று வெட்கத்தில் அழைத்தாள்.

“ம்ம்…”

“யாராவது பார்த்தா?…”

“பார்த்தா என்ன? என் பொண்டாட்டி என்னைத் தானே பிடிச்சிருக்கா…” என்று குறும்பாகக் கண் சிமிட்டினான்.

அவள் சிரிப்பை அடக்க முடியாமல் அவன் முதுகில் லேசாகச் சாய்ந்தாள்.

அடுத்த நொடியே…

‘துக்… துக்… துக்’…  என்று புல்லட்டின் கம்பீரமான சத்தத்தோடு வண்டி மெதுவாக முன்னேறியது.

அரசமரத்தைக் கடந்து செல்லும்போது முல்லை திரும்பிப் பார்த்தாள்.

“சின்னையா…”

“என்னடி?”

“எனக்கு இன்னைக்கும் நம்பவே முடியல.”

“எது?”

“நான் உங்க பின்னாடி இப்படி புல்லட்டுல உட்கார்ந்து வர்றேன்னு…”

“அப்போ இதெல்லாம் கனவா தோணுதா?”

“ம்ம்…”

“எனக்கும் ஒரு காலத்துல இதே மாதிரி ஒரு கனவு இருந்துச்சு.”

முல்லை ஆச்சரியமாகப் பார்த்தாள்.

“என்ன கனவு?”

“இந்த அரசமரத்துக்கு கீழ நின்னுக்கிட்டு என்னைப் பார்த்துட்டு இருக்குற ஒரு சின்ன பொண்ணு… ஒரு நாள் என் வாழ்க்கை முழுக்க என் பின்னாடியே வரணும்னு…”

அவளது கண்கள் விரிந்தன.

“அப்போவே என்னைப் பிடிச்சிருந்துச்சா?””பிடிக்காமத் தான் தினமும் அந்த நேரத்துக்கே அந்த வழியா வந்தேனா?” என்று  சிரித்தான்.

முல்லையின் கண்களில் நாணமும் காதலும் ஒன்றாக மலர்ந்தன.

அந்த நொடியில்… வானத்தில் கருமேகங்கள் மெதுவாக ஒன்று திரள ஆரம்பித்தன.

குளிர்ந்த காற்று அவர்களை வருடிச் சென்றது.

முல்லை வானத்தைப் பார்த்தாள்.

“சின்னையா… மழை வர்ற மாதிரி இருக்கு…”

“வரட்டும்டி…”

“நனைஞ்சிடுவோம்…”

“என் பொண்டாட்டியோட சேர்ந்து நனையுறதுக்கும் ஒரு கொடுப்பினை வேணும்…”

அவன் சிரித்தபடியே சொன்ன அந்த வார்த்தைகளைக் கேட்ட முல்லை, வெட்கத்தோடு அவனது முதுகில் முகம் சாய்த்துக் கொண்டாள்.

அடுத்த நொடியே… வானத்திலிருந்து முதல் மழைத்துளி வந்து அவளது கன்னத்தில் விழுந்தது. 

வானத்திலிருந்து விழுந்த முதல் மழைத்துளி முல்லையின் கன்னத்தில் பட்டுத் தெறித்த அடுத்த சில நொடிகளிலேயே, கருமேகங்கள் அனைத்தும் ஒன்றுகூடி பெருமழையாகக் கொட்டத் தொடங்கின.

“துக்… துக்… துக்..” என்று சீறியப்படி செந்தூரனின் புல்லட், வீரமலைப்பட்டியின் எல்லையைக் கடந்து மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரப் பாதையை நோக்கிப் பாய்ந்தது.

“சின்னையா… மழை ரொம்ப வேகமா பெய்யுதுங்க! வண்டியை எங்கயாச்சும் ஓரமா நிறுத்தலாமா?” என்று மழையின் இரைச்சலையும் மீறி அவன் தோளோடு நெருங்கி அமர்ந்தபடி கத்தினாள் முல்லை.

வண்டியின் கண்ணாடியில் தெரிந்த அவளது நனைந்த முகத்தை ஒரு கணம் ரசித்த செந்தூரன், குறும்பு புன்னகையுடன் “ஏன் அம்மணி… என்னை இறுக்கமா கட்டி பிடிச்சு உட்கார்ந்திருக்கும் போது உனக்கு என்ன பயம்? இந்த மழையில நனைஞ்சுகிட்டே மலைப்பாதையில போறதுல இருக்குற சுகமே தனிதான்டி…” என்றவன், புல்லட்டின் வேகத்தை லேசாகக் கூட்டினான்.

மலைப்பாதையின் வளைவுகளில் புல்லட் அழகாக வளைந்து மேலேறியது.

 

இருபுறமும் பச்சைப்பசேலென விரிந்த தேயிலைத் தோட்டங்கள்… அவற்றின் நடுவே மழைநீரில் நனைந்து மின்னிய பாறைகள்… மலையை முத்தமிட வந்த மேகங்கள்… எல்லாமே அந்தப் பயணத்தை ஓர் ஓவியமாக மாற்றின.

 

குளிர்ந்த காற்று முகத்தில் மோத, மழைத்துளிகள் இருவரையும் முழுவதுமாக நனைத்தன.

குளிர் தாங்க முடியாமல் முல்லை, செந்தூரனின் இடுப்பை இன்னும் இறுக்கமாகப் பற்றிக் கொண்டாள்.

அவளது அணைப்பை உணர்ந்த செந்தூரனின் இதழ்களில் தன்னிச்சையாக ஒரு புன்னகை மலர்ந்தது.

“இப்போ குளிர் கொஞ்சம் குறைஞ்சிடுச்சா?” என்று குறும்பாகக் கேட்டான்.

“இல்ல… இன்னும் குளிருதுங்க…” என்று அவன் முதுகில் முகம் சாய்த்தபடியே முணுமுணுத்தாள் முல்லை.

சில நிமிடங்களில், மலைப்பாதையின் ஒரு வளைவில் சிறிய நீர்வீழ்ச்சி ஒன்று வெள்ளை வெண்ணிறத் திரையாக கொட்டிக் கொண்டிருப்பது அவர்களின் கண்களில் பட்டது. அந்த இடத்தைச் சுற்றி பனிமூட்டம் மெதுவாகப் பரவி, மழைத்துளிகள் இயற்கைக்கு மேலும் அழகு சேர்த்துக் கொண்டிருந்தன.

அந்தக் காட்சியை ரசித்த செந்தூரன், புல்லட்டை மெதுவாக ஓரமாக நிறுத்தினான்.

“சின்னையா… செம்ம குளிர்ங்க…” என்று தன் இரு கைகளையும் தேய்த்துக் கொண்டாள் முல்லை.

அவளருகே வந்த செந்தூரன், அவளது கைகளை மெதுவாகப் பற்றினான். பனித்துளியைப் போல அவளது விரல்கள் குளிர்ந்து இருந்தன.

“என் செல்லத்துக்கு ரொம்பக் குளிருதா?” என்று அக்கறையோடு கேட்டவன், தன் உள்ளங்கைகளால் அவளது கைகளை மெதுவாகத் தேய்த்து  அவளை இறுக்கமாக அணைத்து கொண்டான்

அவனது மார்பில் சாய்ந்தவுடன், முல்லையின் நடுக்கம் மெல்ல அடங்கியது.

அவனது இதயத்துடிப்பு தெளிவாகக் கேட்க, அந்தத் துடிப்புக்குள்ளேயே தன்னை மறந்தாள் முல்லை.

“இப்போ?” என்று அவளது தலையை வருடியபடி கேட்டான் செந்தூரன்.

“குளிரெல்லாம் போயிடுச்சு சின்னையா…” என்று அவன் மார்பில் முகம் புதைத்தபடி மெதுவாகச் சொன்னாள்.

“இந்த மழையும்… இந்தப் பனிமூட்டமும்… இந்த மலைக் காற்றும்… எல்லாமே நம்ம காதலுக்கு சாட்சியா நிக்குதுடி.” என்று கூறியவன், அவளது நெற்றியில் மென்மையாக தன் உதடுகளைப் பதித்தான்.

மழைத்துளிகள் இருவரின் தோள்களிலும் விழுந்து நனைத்துக் கொண்டிருக்க… அவள் முகத்தை கையிலேந்தியவன் காதலோடு அவள் கண்களை பார்த்து அவள் இதழ்களில் மூழ்கி பனிக்கூழ் அருந்த ஆரம்பித்தான்.

அப்போது, எங்கோ தூரத்தில் இடி இடித்த சத்தம் பலமாகக் கேட்க, அந்த அதிர்வில் திடுக்கிட்டு அவளது இதழ்களிலிருந்து மெல்ல விலகினார்கள்.

“சி… சின்னையா… வீட்டுக்குப் போகலாம்ங்க…” என்று அவனது முகத்தை நேராகப் பார்க்கத் தைரியமில்லாமல், வெட்கத்தில் தரையைப் பார்த்தபடி முணுமுணுத்தாள் முல்லை.

அவளது சிவந்த கன்னங்களையும், நாணத்தில் தவித்த முகத்தையும் பார்த்த செந்தூரனின் உதடுகளில் குறும்பான புன்னகையோடு  “சரி… வா அம்மணி…” என்று அவளது நெற்றியில் மெதுவாக முட்டி விட்டு, மீண்டும் புல்லட்டில் ஏறினான்.

முல்லையும் அவனுக்குப் பின்னால் அமர்ந்து, இந்த முறை இன்னும் நெருக்கமாக அவன் தோளை அணைத்துக் கொண்டாள்.

மழை மெதுவாக அடங்கியிருந்தாலும், குளிர்ந்த காற்று இருவரின் மனதிலும் சொல்ல முடியாத இனிய உணர்வை விதைத்துக் கொண்டே இருந்தது.

அரண்மனை வாசலில் புல்லட்டை நிறுத்தி விட்டு  மழையில் நனைந்தபடி உள்ளே வந்த இருவரையும் பார்த்ததும் பதறிப்போனார் குணவதி .

 

“அய்யய்யோ!… ரெண்டு பேரும் இப்படி மழையில நனைஞ்சுட்டு வந்திருக்கீங்களே! வழியில எங்கயாவது நின்னிருக்கலாமேப்பா. முல்லை… சீக்கிரம் போய் டிரஸ் மாத்தும்மா. தம்பி… நீயும் போய் டிரஸ் மாத்திட்டு வா. நான் சூடா சாப்பாடும், இஞ்சி கஷாயமும் எடுத்துட்டு வர்றேன்.” என்றார் அக்கறையோடு…

“அம்மா… நாங்க கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிடுறோம். நீங்க ரொம்ப நேரம் முழிச்சுட்டு இருக்காதீங்க… போய்ப் படுங்க.” என்றவன் குளிரில் லேசாக நடுங்கிக் கொண்டிருந்த முல்லையை ஒரு கணம் பார்த்து குறும்பாகக் கண் சிமிட்டினான்.

அவன்  பார்வையின் அர்த்தம் புரிந்த முல்லையின் கன்னங்கள் மீண்டும் சிவந்து போனது. “அ… அத்தை… நீங்க எங்களுக்காக முழிச்சுட்டு இருக்காதிங்க …” என்று சொல்லிவிட்டு  வெட்கத்தோடு அறைக்குச் சென்றாள்.

இவர்கள் பேசுவதை  எல்லாம்  கவனித்துக் கொண்டிருந்த பெரியசாமியின் முகம் மட்டும் இருண்டது.

‘இன்னும் ரெண்டு நாள்ல… வீரமலைப்பட்டி பெரியசாமி யாருன்னு நீங்களே புரிஞ்சுக்குவீங்க…’ என்று மனதுக்குள் குமுறியபடி, யாரிடமும் எதுவும் பேசாமல் தன் அறையை நோக்கி நடந்தார்.

முல்லை  ஈரமான தலைமுடியைத் துணியால் துடைத்துக் கொண்டிருந்தாள்.  கதவை மூடிவிட்டு உள்ளே வந்த செந்தூரன், அவளை சில நொடிகள் ரசித்தபடியே நின்றான்.

மழையில் நனைந்து, ஈரமான கூந்தல் தோள்களில் பரவியிருந்தது. குளித்த நிலவுபோல் அவளது முகம் இன்னும் பொலிவாகத் தெரிந்தது.

ஒரு ஆழ்ந்த பெருமூச்சை விட்டவன், மெதுவாக அவள் அருகே சென்றான். அவன் வருவதை கண்ணாடி வழியாகக் கண்ட முல்லையின் இதயம் படபடவெனத் துடிக்க ஆரம்பித்தது.

“சி… சின்னையா…” என்று திரும்பிப் பார்க்கும் முன்பே… அவளது இடையை இறுக்கி பிடித்து பின்னிருந்தே அவளை அணைத்துக் கொண்டான் செந்தூரன்.

அவனது மார்பின் வெப்பம் முதுகில் பரவ, முல்லையின் விரல்கள் தன்னையும் அறியாமல் நடுங்கின.

“சின்னையா …” என்று மெதுவாக அழைத்தாள். அவளது தோளில் தாடையை வைத்தவன், “இன்னைக்கு முழு நாளும் உன்னை இப்படித்தான் கட்டிப்பிடிக்கணும்னு மனசு சொல்லிக்கிட்டே இருந்தது…” என்று காதோரமாக மெதுவாகச் சொன்னான்.

அவள் வெட்கத்தில் கண்களை மூடி, மெதுவாக அவன் கரங்களின் மீது தன் கரங்களை வைத்தாள்.

அவளது கரங்களின் நடுக்கத்தை உணர்ந்த செந்தூரன், அவளை மெதுவாகத் தன் பக்கம் திருப்பினான். அவளது வெட்கம் கலந்த  முகம், அவனது மார்பை நோக்கியே குனிந்திருந்தது.

“அன்னைக்கு நம்ம அறைக்குள்ள நாம ரெண்டு பேரும் இன்னும் கொஞ்ச நாள் நாம இப்படியே காதலிப்போம், அதுக்கப்புறம் முறைப்படி முதலிரவு வச்சுக்கலாம்னு…” என்று அவளது இதழோரம் தன் கட்டை விரலால் வருடியபடி மென்மையான குரலில் கேட்டான்.

முல்லை அவனது மார்பில் லேசாக முகம் புதைத்து, “ம்…” என்று மட்டும் தலையசைத்தாள்.

அவளது தாடையை மெதுவாகத் தன் விரலால் நிமிர்த்தியவன், காதலில் தவிக்கும் இரு கண்களையும் நேருக்கு நேராகப் பார்த்தவன்  “இப்போ… உன் மேல காதல் எனக்குள்ள இன்னும் கூடிப் போச்சுடி என் செல்லப் பொண்டாட்டி. என்னால உன்னை ஆராய்ஞ்சு பார்க்காம என் கைகளைக் கட்டிப் போட முடியலடி…” என்று கிசுகிசுத்தபடியே அவனது கைகள் அவளது மேனியின் மென்மைகளை வருடி சோதித்துக் கொண்டிருந்தன.

 

“நம்ம காதலுக்கு அடையாளமா, நம்ம முதலிரவை இன்னைக்கு  வச்சுக்கலாமாடி?” என்று அவளது காதோரம் தன் சூடான மூச்சுக்காற்று படக் கிசுகிசுத்தான்.

முல்லையின் முகம் வெட்கத்தில்  குங்கும சிவப்பாக மாறியது. அவளால் வாய் திறந்து ஒரு வார்த்தை கூடப் பேச முடியவில்லை. சம்மதம் என்பதைப் போல அவனது சட்டையை இன்னும் இறுக்கமாகப் பற்றிக் கொண்டு, அவனது மார்பில் முகம் புதைத்தாள்.

அவளது மௌனமான சம்மதத்தைப் புரிந்துகொண்ட செந்தூரனின் இதயம் பெரும்காதலால் நிறைந்து விட்டது அவளை அப்படியே மெதுவாகத் தன் இரு கைகளிலும் அள்ளித் தூக்கினான். அவளது நனைந்த கூந்தலின் வாசமும், உடலின் மென்மையும் அவனது ஆண்மையைக் கிளற, அவளை மெத்தையின் நடுவே ஒரு பூவைப் போல மெதுவாக படுக்க வைத்தவன்  அவளருகே சரிந்து படுத்து கொண்டு , அவளது கண்களை நேருக்கு நேராகப் பார்த்தான். அவளது நெற்றித் திலகத்தை மெதுவாகத் தன் விரலால் வருடியபடி குனிந்து, அவளது நெற்றியிலும், சிணுங்கும் நாசியிலும் தன் இதழ்களால் தன் காதலை முத்தத்தால்  பதிக்கத் தொடங்கினான்.

அவனது தடித்த விரல்கள் அவளது முகத்தின் ஒவ்வொரு ரேகையிலும் மெதுவாகக் கோலமிட்டு, மெல்லக் கீழிறங்கி உதடுகளை உரசி விட்டு, அவளது நீண்ட கழுத்து வளைவைத் தீண்டியது. அவனது விரல்களின் சூடான தீண்டலில் அவளுக்குள் பெரும் தவிப்பு எழ, தொண்டைக் குழிக்குள் எச்சிலைக் கூட விழுங்க முடியாமல் அப்படியே ஸ்தம்பித்துப் போனாள் முல்லை.

அவளது கண்களைப் பார்த்தவாறே மெதுவாக அவளது தோள்பட்டையை வருடி, அவளது புடவையின் முந்தானையை லேசாக விலக்கிய நொடி, வெட்கம் தாளாமல் அவனை விட்டுத் திரும்பிப் படுத்துக் கொண்டாள்.

அவனோ, “என்னாச்சுடி?” என்று பதறி, அவள் பக்கம் சாய்ந்து அவளைப் பின்னாடமிருந்து இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

“கொஞ்சம் பயமா இருக்கு சின்னையா…” என்றாள் அவன் மார்புக் கூட்டுக்குள் முகம் புதைத்து, குசுகுசுக்கும் குரலில்.

“ம்ம்… என்னைக் கண்டு உனக்கு பயமா? நான் உன்னை என்றைக்காவது கஷ்டப்படுத்துவேனா அம்மணி?” என்று அவன் குரல் காதலோடு தழைந்து வரவும்,

அவளோ, “அச்சோ, இல்லை சின்னையா! உங்க மேல் எனக்கு எப்போதுமே நம்பிக்கை இருக்கு. நீங்க என்னை எடுத்துக்கோங்க…” என்று சட்டென்று திரும்பி அவனை ஆசையோடு அணைத்துக் கொண்டாள்.

அதற்கு மேல் அவனது ஆசை நிற்குமா என்ன? அவள் ஆடைகளைக் களைந்து, அவளது வெற்று மேனியில் அவனது மீசையின் முட்கள் குத்தியதும், முல்லையின் உடம்பெல்லாம் சிலிர்த்து அவனது தோள்களை இன்னும் இறுக்கமாகப் பற்றிக் கொண்டாள்.

 

“சின்னையா… விளக்கை அணைக்கலாம்…” என்று வெட்கத்தில் முல்லைக்கு வார்த்தைகள் வராமல் தழுதழுக்க,

 

“இருக்கட்டுமேடி… என் ரெட்டை நிலவை நான் வெளிச்சத்துல ரசிக்கணும்டி, அப்பிடியே அள்ளி கொண்டாடனும்…” என்று கிசுகிசுத்தபடியே அவளது கழுத்து வளைவிலும், தோள்பட்டையிலும் தன் இதழ்களால் சூடான முத்திரைகளைப் பதித்தான். அவனது ஒவ்வொரு தீண்டலிலும் முல்லையின் சூடான தேகம் பனிக்கூழாய் உருகத் தொடங்கியது.

 

அவளது இடையோடு தன் கைகளைக் கோர்த்து, அவளைத் தன்னோடு இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டான். இருவரின் மூச்சுக்காற்றும் ஒன்றோடொன்று கலந்து, உடம்பில் ஒரு சூடான மின்சாரத்தைப் பாய்ச்சியது. அவளது இதழ்களில் மீண்டும் மீண்டும் தன் இதழ்களைப் பதித்து, இந்த முறை எந்தத் தடையும் இல்லாமல் ஆழமாக, அவளது முழு காதலையும் தன் வசப்படுத்தினான். அவளது லேசான முனகல்களுக்கு நடுவே ஒரு முத்தப் போரே நடத்தினான்.

 

வெளியே கொட்டும் மழையின் சத்தத்திற்கு நடுவே, ஜன்னல் வழியே நுழைந்த மெல்லிய குளிர்ந்த காற்றின் சாட்சியாக, அறையின் மெல்லிய ஒளியில், இருவரது உடலும், மனதும் ஒரே துடிப்பாக இணையத் துடித்தது. அவளது காதோரம் மெல்லிய குரலில் அவன் சொன்ன காதல் கட்டளைகளை எல்லாம் கச்சிதமாக ஏற்று, தன் பேரன்பால் அவனை ஆராதித்துக் கொண்டாடினாள்.

 

மன்மதச் சிலையாக நின்றவளைத் தன் விரல்கள் கொண்டு சிற்பம் வடிக்க ஆரம்பித்தான் அந்த மன்னவன். பெண்ணவளின் பேரழகின் ஒவ்வொரு அணுவிலும் அவனது இதழ்கள் மற்றும் கைகள் தொட்டுத் தொட்டு விளையாட… அவளோ தாளாத தவிப்பில் தன் கீழ் உதட்டைக் கடித்து, அவன் வாரி வழங்கிய சுகமான இன்பங்களை எல்லாம் ஆசையோடு வாங்கிக் கொண்டாள்.

 

அவளது ஆடைகளை முழுமையாக களைந்த தருணம் எழிலோவியமாக இருந்தவளை தன் விரல்கள் கொண்டு ஓவியம் தீட்ட ஆரம்பித்தான். விம்மி நின்ற தாமரை மொட்டுகளைக் கண்டு மன்னவன் மதி மயங்கினான்.

 

அவளது மேனியின் ஒவ்வொரு அணுவிலும் செந்தூரனின் பேராண்மையும், முல்லையின் பேரன்பும் ஒன்றோடொன்று கரைந்து, காதலின் உச்சமாய் இணைந்தது. அந்த இன்பத்தின் ஆழத்தில் மூழ்கும் கணத்தில், அவனது முதுகைத் தன் நகங்களால் இறுக்கமாகப் பற்றிக் கொண்டு அவள் லேசாகக் குரல் எழுப்ப… அவனோ ஆசுவாசத்துடன் அவளது இதழ்களை முத்தத்தால் சிறைபிடித்து, தன் வசம் கொண்டு வந்து அவளுக்குள் தன் காதலை முழுமையாகப் புதைத்தான்.

 

224 thoughts on “நெஞ்சோரம் பூத்தவளே 20”

  1. sports betting, [url=https://nsquaretechno.com/experience-the-thrill-of-12play-online-casino-3/]https://nsquaretechno.com/experience-the-thrill-of-12play-online-casino-3/[/url] – Wagering on sports represents an exciting venture that blends strategy and chance. Through examining athletes and historical records, punters have the opportunity to increase their odds of winning.

  2. Casinos Not on Gamban, [url=https://valvolex.com/exploring-non-gamstop-casinos-a-comprehensive-guide-403847859/]https://valvolex.com/exploring-non-gamstop-casinos-a-comprehensive-guide-403847859/[/url] provide an exciting alternative for players seeking freedom from restrictions. These platforms offer diverse games and seamless experiences, allowing users to enjoy captivating gameplay. Explore unique bonuses and deals that enhance your chances, making gaming more rewarding. With a variety of choices available, you can find a casino that suits your style. Make the most of your gaming journey at Casinos Not on Gamban, where fun meets flexibility!

  3. О— О•О»О»О¬ОґО± ОґО№О±ОёО­П„ОµО№ ПЂОїО»О»О¬ ОёО±П…ОјО±ПѓП„О¬ ОѕОµОЅО± ОєО±О¶О№ОЅОї ПѓП„О·ОЅ ОµО»О»О±ОґО±, [url=https://www.doctordriveway.com/page-306/]https://www.doctordriveway.com/page-306/[/url], ОµОЇОЅО±О№ О№ОґО±ОЅО№ОєО¬ ОіО№О± ОјОїОЅО±ОґО№ОєО­П‚ ОєО№ОЅО®ПѓОµО№П‚ П€П…П‡О±ОіП‰ОіОЇО±П‚. ОџО№ ОµПЂО№ПѓОєО­П€ОµО№П‚ О±ПЂОїО»О±ОјОІО¬ОЅОїП…ОЅ ОјО№О± О±П„ОјПЊПѓП†О±О№ПЃО± ОєО±О№ О±ОЅОёПЃПЋПЂОїП…П‚ ПЂО±О№П‡ОЅО№ОґО№ПЋОЅ. ОљО¬ОёОµ ОµОіОєО±П„О¬ПѓП„О±ПѓО· ПЂПЃОїПѓП†О­ПЃОµО№ П†О±ОЅП„О±ПѓП„О№ОєО­П‚ ОµПЂО№О»ОїОіО­П‚ ОєО±О№ ОјОїОЅП„О­ПЃОЅОµП‚ О±ОЅО­ПѓОµО№П‚. О‘ОЅО±ОєО±О»ПЌП€П„Оµ П„О·ОЅ ПѓОєОїП„ОµО№ОЅО№О¬ О±П…П„ПЋОЅ П„П‰ОЅ П„ОїПЂОїОёОµПѓО№ПЋОЅ ОєО±О№ ОµОѕОµПЃОµП…ОЅО®ПѓП„Оµ ОјО№О± П†П…ПѓО№ОєО® ОµОјПЂОµО№ПЃОЇО±.

  4. crushon ai chat, [url=https://digitech-services.ee/]https://digitech-services.ee/[/url] is a revolutionary solution that connects individuals with advanced chatbots. These bots can aid in various responsibilities, enhancing interaction and providing essential insights.

  5. online casino, [url=http://motherhoodcorner.com/2026/06/22/exploring-the-excitement-of-12play-casino-a/]http://motherhoodcorner.com/2026/06/22/exploring-the-excitement-of-12play-casino-a/[/url] презентует уникальную возможность участвовать в азартные игры не выходя из дома. Разнообразие игр порадует любого игрока, и предложения сделают игру особенно привлекательной захватывающей.

  6. Spanish gamblers are seeking the finest platforms for online gaming. Among them, mejores casinos online EspaГ±a, [url=https://www.nawafidpress.com/los-mejores-casinos-online-en-espana-diversion-y-seguridad/]https://www.nawafidpress.com/los-mejores-casinos-online-en-espana-diversion-y-seguridad/[/url] stand out for their enticing bonuses and diverse game selections. Players can enjoy jackpot games, card games, and live dealer options, ensuring thrills at every turn. Additionally, these casinos prioritize trustworthiness and user-friendly interfaces, making them a top choice for enthusiasts.

  7. Within the realm of sports, Non GamStop Cricket Betting, [url=https://projetos.beesoft.com.br/newicos/cricket-bookmakers-not-on-gamstop-your-guide-to-betting-freely/]https://projetos.beesoft.com.br/newicos/cricket-bookmakers-not-on-gamstop-your-guide-to-betting-freely/[/url] presents unique opportunities for fans. Immersing in this betting experience can enhance one’s thrill in the game. With these platforms, players can appreciate a larger range of markets as steering clear of restrictions. Discover new wagering tactics through Non GamStop Cricket Betting.

  8. Playing during an online casino game, [url=http://leapsandbounds.jp/wp/2026/06/16/explore-the-exciting-world-of-loki-casino-official/]http://leapsandbounds.jp/wp/2026/06/16/explore-the-exciting-world-of-loki-casino-official/[/url] can provide an exciting encounter. With multiple options available, users can opt for their favorite games, if they prefer slots or table games.

  9. 1xBet India, [url=https://www.fnuasiracusa.it/2020/04/11/falso-ottimismo/]https://www.fnuasiracusa.it/2020/04/11/falso-ottimismo/[/url] пresents широкий спектр ставок на игры и игры в казино. Сайт стремится предоставить пользователей высокими коэффициентами и удобным интерфейсом. Актуальность 1xBet India неуклонно растет благодаря передовым функциям.

  10. Компания «Вальц Проф» специализируется на производстве и продаже высококачественных стальных профилей, предлагая широкий ассортимент продукции для строительства и отделки: фасадно-перегородочные системы из оцинкованной и нержавеющей стали, профили серий ВП150, ВП165, ВП250 и ВП372 с терморазрывом, профильные трубы, штапики для крепления стекла. На сайте https://waltzprof.com/ представлены также самоклеящиеся уплотнители различных сечений, автоматические Smart-пороги серии LDM и скрытые петли для дверей — всё необходимое для профессионального монтажа современных конструкций по выгодным ценам с доставкой.

  11. BitGuruz Casino, [url=https://tunicodasaude.com/comprehensive-hi-spin-casino-reviews-what-players-are-saying/]https://tunicodasaude.com/comprehensive-hi-spin-casino-reviews-what-players-are-saying/[/url] offers entertaining gaming experiences for gamblers. With countless games and alluring bonuses, it’s easy to see why many choose this platform for online gambling. Don’t miss out on the fun!

  12. О¤О± online casino ОµОѕП‰П„ОµПЃО№ОєОїП…, [url=https://technoventures.in/casino-online-no-adm-scopri-il-gioco-sicuro-e-divertente/]https://technoventures.in/casino-online-no-adm-scopri-il-gioco-sicuro-e-divertente/[/url] ПЂПЃОїПѓП†О­ПЃОїП…ОЅ ОјОїОЅО±ОґО№ОєО­П‚ ОµОјПЂОµО№ПЃОЇОµП‚ ПѓП„Ої ПЂО±О№П‡ОЅОЇОґО№. О”О№О±ПѓОєОµОґО±ПѓП„О№ОєО¬ ПЂО±О№П‡ОЅОЇОґО№О±, ПЂОїО№ОєО№О»ПЊОјОїПЃП†ОµП‚ ОµПЂО№О»ОїОіО­П‚ ОєО±О№ ОµОѕО±О№ПЃОµП„О№ОєО­П‚ О±ПЂОїОґПЊПѓОµО№П‚ ПЂОµПЃО№ОјО­ОЅОїП…ОЅ П„ОїП…П‚ ПЂО±ОЇОєП„ОµП‚. О— ПѓП…ОјОјОµП„ОїП‡О® ОµОЇОЅО±О№ ОµПЌОєОїО»О· ОєО±О№ О¬ОјОµПѓО·, ОєО¬ОЅОїОЅП„О¬П‚ П„О± О№ОґО±ОЅО№ОєО¬ ОіО№О± ПЊО»ОїП…П‚.

  13. In the ever-evolving market landscape, a B2B platform Turkey wholesale, [url=http://chrispix.biz/b2b-wholesale-platforms-in-turkey-a-comprehensive-guide/]http://chrispix.biz/b2b-wholesale-platforms-in-turkey-a-comprehensive-guide/[/url] stands out as a vital resource for entrepreneurs looking to obtain quality goods at competitive prices. Linking buyers and sellers, these platforms facilitate transactions, making it easier to develop your network. Choosing the right platform can significantly impact profitability. Explore features like secure payment options, detailed product catalogs, and client support that can elevate your wholesale experience.

  14. When you decide to play online casino, [url=https://woodemo.cedcommerce.com/woocommerce/shopee/katanaspin-casino-your-gateway-to-an-exciting/]https://woodemo.cedcommerce.com/woocommerce/shopee/katanaspin-casino-your-gateway-to-an-exciting/[/url], the enjoyment of gambling awaits. With various games and selections, players can witness the opportunity to win big. In addition, online platforms offer rewards that can enhance your gambling experience. Don’t forget to play responsibly and savor the excitement of winning!

  15. I dag kan man finde mange muligheder for at spille i casino uden om ROFUS, [url=https://plaza11-11.com/udenlandske-casino-for-danske-spillere-en-guide-31/]https://plaza11-11.com/udenlandske-casino-for-danske-spillere-en-guide-31/[/url]. Deltagere leder andre måder at deltage i deres kære spil. Der er mange virtuelle platforme, der tilbyder forskellige bred vifte af muligheder.

  16. Admiral Casino, [url=https://tranquilityhairandbeauty.com.au/discover-the-benefits-of-agent-no-wager-casino-in-the-uk-461198234/]https://tranquilityhairandbeauty.com.au/discover-the-benefits-of-agent-no-wager-casino-in-the-uk-461198234/[/url] offers an exceptional gaming experience for gamers. With a variety games and exciting promotions, it guarantees endless enjoyment. Whether a visitor is a novice or a veteran, Admiral Casino has something for everyone. Join us and test your luck!

  17. dafabet india, [url=https://lindemh.co.kr/bbs/board.php?bo_table=free&wr_id=156952]https://lindemh.co.kr/bbs/board.php?bo_table=free&wr_id=156952[/url] is a prominent online betting platform that has gained immense popularity among Indian users. Such platform offers a wide range of gaming options, including sports betting, casino selections, and live dealer experiences. One of the central features of Dafabet India is its commitment to providing a safe and secure gaming environment, ensuring that players can experience their favorite games without any concerns.In addition, Dafabet India provides attractive bonuses and promotions, which help to enhance the overall gaming experience. New users can take advantage of the welcome bonus, while regular players can benefit from ongoing promotions and loyalty rewards. The customer service team is also readily available to assist with any inquiries or issues, making the user experience seamless and enjoyable.With a user-friendly interface and mobile optimization, players can easily navigate the site on various devices. This accessibility ensures that users can enjoy their favorite games anytime, anywhere. Overall, Dafabet India stands out as a top choice for online gaming in India, offering a comprehensive and enjoyable experience for all players.

  18. Finding a excellent minimum deposit casino, [url=https://kidstoy.mn/discover-the-best-minimum-deposit-casinos-in-2/]https://kidstoy.mn/discover-the-best-minimum-deposit-casinos-in-2/[/url] can be a profitable experience for players. With limited deposits, gamblers can try out different games without excessive financial risk. Look for deals that enhance your playing experience.

  19. Online Casino, [url=https://globalel.com.mx/explore-karamba-casino-online-a-complete-guide/]https://globalel.com.mx/explore-karamba-casino-online-a-complete-guide/[/url] provides an entertaining way to experience gaming from the comfort of your place. Players can enjoy a variety of choices and leverage bonuses and promotions.

  20. casinoer uden ROFUS, [url=https://www.faroairporttransfersalgarve.com/blog/bedste-casino-uden-rofus-for/]https://www.faroairporttransfersalgarve.com/blog/bedste-casino-uden-rofus-for/[/url] tilbyder en unik mulighed for spillere, der ønsker frihed til at vælge. De gør det muligt at underholde uden begrænsninger. Med en længere række af spil, kan man opleve spænding uden problemer. Kasinoerne tilbyder mange bonusser og tilbud, som kan gøre naturen af spillet mere appellerende.

  21. Если намерены проложить маршрут пешком по Калининграду на плане города, обязательно побывать в зону Амалиенау — очень атмосферное место с с живописными улицами и любопытными объектами, включая здание с горгульей и главный собор Калининград, где можно узнать много любопытных фактов. Не упустите также послушать органный концерт в историческом соборе — утверждают, что там размещён наибольший орган в России, а послеполуденный концерт Калининград обеспечит приятными впечатлениями. Больше информации о пешеходных маршрутах и красотах города можно найти тут [url=https://mh12.ru]что посмотреть в калининградской области на машине[/url] .

    Для ценителей природы и активного времяпрепровождения советую открыть для себя нетронутые пляжи Калининградской области, где можно ощутить нетронутой природой вдали от суеты. Заранее выясните, когда лучше ехать в Калининград и безопасно ли купаться в Балтийском море в Калининграде — период купания в Калининграде обусловлен климатом, а температура воды на Куршской косе порой даёт возможность принять морскую ванну. Если вы хотите увидеть Форт 11 Калининград, как добраться на автобусе — это оптимальный способ для прикосновения к истории региона. Кроме того стоит изучить Правдинск достопримечательности и Черняховск, чтобы составить маршрут по Калининградской области на авто еще содержательнее.

  22. Did anyone too had difficulty to resolve such Suno sound problems in their AI-produced music? [url=https://fixsunovocals.top]ai music audio cleaner[/url] I observed that the Suno AI distortions can heavily damage the total sound clarity, especially with vocal elements feeling unnatural. To handle this, I’ve been relying on a cleanup tool to clean these AI audio files and consistently reduce artifacts from such Suno audio files, which serves to enhance both the sound quality and clarity.

    For musicians seeking a easy way to correct such Suno audio issues flaws, there are several complimentary audio cleaners and artifact removal tools listed online that can be used as a smart audio cleaner or voice processor. These applications perform as an powerful artifact remover and can allow you to push AI vocals sound more natural. If you’d like to try them, this is a practical reference that provides an online free AI music cleaner and can facilitate vocal mastering and enhancing music quality without stress.

  23. mostbet online, [url=http://wiki.algabre.ch/index.php?title=Benutzer:AdrianHumphries]http://wiki.algabre.ch/index.php?title=Benutzer:AdrianHumphries[/url] предлагает уникальный переживание для игроков. Платформа известна своими впечатляющими коэффициентами и широким выбором развлечений. На сайте можно обнаружить маркетинговые события, которые делает его достаточно привлекательным для геймеров. Mostbet online лишь предлагает щедрые бонусы для новых игроков, что усиливает его общепринятое обаяние. Интерфейс доступный, что способствует пользователям искать нужные развлечения всего в одном клике. Разнообразие возможностей пополнения счёта и вывода средств делает процесс тем не менее комфортным для всех игроков. Mostbet online поистине станет замечательным выбором для любого азартных игр.

  24. If you enjoy gambling, look no further than Casino Online, [url=http://www.fisherman.ie/2026/06/explore-the-exciting-world-of-lolo-casino-online/]http://www.fisherman.ie/2026/06/explore-the-exciting-world-of-lolo-casino-online/[/url]. This platform offers thrilling games to keep you engaged. With numerous options, players can find their favorite games and enjoy the fun of online casinos.

  25. When searching for popular options, a minimum deposit casino australia, [url=https://vard.com.ua/basta-casino-utan-spelpaus-en-guide-till-12/]https://vard.com.ua/basta-casino-utan-spelpaus-en-guide-till-12/[/url] offers gamblers a chance to enjoy entertaining games without financial strain. Those gaming houses provide varied bonuses and promotions to maximize your experience. Choose wisely to get the best gaming fun!

  26. In the domain of Casino Online, [url=https://www.admiralty.com.sg/experience-the-thrills-at-kaasino-casino-online/]https://www.admiralty.com.sg/experience-the-thrills-at-kaasino-casino-online/[/url], players can enjoy numerous games from the comfort of their home. This gaming experience provides an opportunity to achieve while having fun. Also, Casino Online platforms often offer exciting bonuses that enhance the gameplay.

  27. udenlandsk casino uden ROFUS, [url=https://www.medike.it/bedste-udenlandske-casino-sider-2026-222781120/]https://www.medike.it/bedste-udenlandske-casino-sider-2026-222781120/[/url] tilbyder en unik oplevelse for spillere, der ønsker at undgå de strenge regler i Danmark. Disse kasinoer præsenterer attraktive muligheder for gamble. Gambler kan få glæde af forskellige slags spil og tilbud, hvilket tilvejebringer en morsom oplevelse. Dette er en vidunderlig mulighed for dem, der ønsker en oplevelse væk fra de danske regler.

  28. Finding the best non gamstop casinos, [url=https://www.trattorialangolino.it/the-future-of-gambling-payments-trends-and-innovations/]https://www.trattorialangolino.it/the-future-of-gambling-payments-trends-and-innovations/[/url] is crucial for players seeking freedom and variety. These types of offer diverse gaming options and adaptable bonuses, allowing players to enjoy their experience without restrictions. Explore new games and take advantage of promotions that are not available on GamStop.

  29. In the modern era of online gambling, the emergence of platforms like winwin bet, [url=http://songdotriple.com/bbs/board.php?bo_table=free&wr_id=229389]http://songdotriple.com/bbs/board.php?bo_table=free&wr_id=229389[/url] has transformed the betting landscape. Players can now access a wide range of markets from the comfort of their homes. One of the key advantages of winwin bet is its user-friendly interface, which simplifies the process for both novices and seasoned players. Moreover, the selection of betting markets available ensures that everyone can find something that suits their interests. From sports betting to casino games, winwin bet has it all. Furthermore, the platform often offers bonuses that can significantly boost a player’s initial investment.A crucial aspect that sets winwin bet apart is its commitment to security. Players can enjoy peace of mind knowing that their personal and financial information is secure. With technological developments, the platform continuously updates its features to provide the best experience for its users, ensuring that they stay ahead in the competitive market of online betting.

  30. Undeniably believe that which you said. Your favorite reason appeared to be on the web the easiest thing to be aware of.
    I say to you, I certainly get annoyed while people think about worries that they just don’t know about.
    You managed to hit the nail upon the top and defined out the whole thing without having side effect , people could take a signal.
    Will probably be back to get more. Thanks

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top