ATM Tamil Romantic Novels

நெஞ்சோரம் பூத்தவளே 19

பூ  – 22

ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்த சூரிய ஒளி வெளிச்சத்தில் மெதுவாகக் கண்விழித்த முல்லை, செந்தூரனின் மார்பில் சாய்ந்தபடி இருப்பதை உணர்ந்ததும் வெட்கத்தில் முகம் சிவந்தது.

 

அவனுக்குத் தெரியாமல் மெதுவாக எழுந்திருக்க முயன்றாள்.

 

செந்தூரன் அவளை எழும்ப விடாமல் அவள் கைகளை பிடித்துத்திருந்தான். அவன் கண்களைத் திறக்காமல்  “எங்கடி ஓடுற?” என்று சிரித்தபடி கேட்டான்.

 

“சின்னையா… விடுங்க… நேரமாச்சு…” என்று நாணம் கொண்டு மெல்லிய குரலில்…

 

கண்களைத் திறந்தவன்,  அவளது வெட்கம் கலந்த முகத்தைப் பார்த்ததும் அவன் உதடுகளில் தன்னிச்சையாக ஒரு புன்னகை மலர்ந்தது.

 

“அம்மணி… உனக்கு… எந்தச் சிரமமும் இல்லையே?” என்று அவன் குரலில்  அக்கறை ததும்பியது.

 

வெட்கத்தில் அவன் தோளில் மெதுவாக சாய்ந்து  “நீங்க என்னை பூ மாதிரி பார்த்துக்கிட்டீங்க சின்னையா… எனக்கு என்ன கஷ்டம் வரப்போகுது?” என்றாள் நாணத்தோடு.

 

அந்த பதிலைக் கேட்ட செந்தூரனின் மனம் நிறைவடைந்தது.

 

“என் செல்ல பொண்டாட்டி இப்படியே எப்போதும் சிரிச்சுக்கிட்டே இருக்கணும்…” என்று அவளது நெற்றியில் மென்மையாக ஒரு முத்தமிட்டான்.

 

“முதல்ல நான் குளிக்கணும் … அத்தை தேடுவாங்க…” என்று அவள் சிணுங்க..

 

“சரி… ஆனா நீயும் என்னோட தான் வரணும்…” என்று குறும்பாக அவளது கரத்தைப் பிடித்தான்.

 

“சின்னையா…” என்று வெட்கப்பட்டவள் சிரித்தபடியே அவனைப் பின்தொடர்ந்தாள்.

 

சிறிது நேரத்தில் இருவரும் சேர்த்து குளித்து விட்டு முகத்தில் புது தம்பதிகளுக்கே உண்டான களையோடு சாப்பிட வந்தனர்.

 

முல்லையின் முகத்தில் தெரிந்த நாணமும், செந்தூரனின் கண்களில் தெரிந்த நிறைவைவும் பார்த்தவர்,

 

“கடவுள் என் மகனும், மருமகளும் இப்படியே காலம் முழுக்க சந்தோசமா இருக்கணும்…”  என்று மனதிற்குள் குலதெய்வத்தை  வேண்டிக் கொண்டார்.

 

இவர்களை பார்த்த பெரியசாமியின் மனதில் “இவங்களோட இந்த சந்தோஷம் இன்னும் எத்தனை நாள்?” என்று விஷமாக சிரித்துக் கொண்டு சென்றார்.

 

அடுத்தடுத்து வந்த நாட்கள்… செந்தூரனுக்கும் முல்லைக்கும் வாழ்வின் இனிமையான நாட்களாக சென்றது.

 

காலையில் முல்லை பள்ளிக்குச் செல்வாள். மாலை பள்ளி முடிந்ததும், வழக்கம்போல தந்தை மருதப்பனைப் பார்த்துவிட்டு இருவரும் அரண்மனைக்குத் திரும்புவார்கள்.

 

பகலில் தங்கள் பொறுப்புகளில் மூழ்கியிருந்த இருவரும், இரவு வந்தாலோ ஒருவருக்கொருவர் மனம் திறந்து பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும், தங்களது காதலை இன்னும் ஆழமாகப் புரிந்து கொண்டும் நேரத்தைக் கழித்தனர்.

 

ஒவ்வொரு நாளும் அவர்களது அன்பும் நெருக்கமும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கொண்டே இருந்தது.

செந்தூரனின் காதலில் முல்லை தன்னை முழுமையாகக் கண்டாள். முல்லையின் பாசத்தில் செந்தூரன் தன் உலகையே கண்டான்.

 

அவர்களது வாழ்க்கை… தெளிந்த நீரோடை போல அமைதியாகவும், இனிமையாகவும் ஓடிக் கொண்டிருந்தது.

 

பெரியசாமி அமைதியாக பின்னிக் கொண்டிருந்த சூழ்ச்சியை யாரும் அறிந்திருக்கவில்லை…

அடுத்த சில நாட்கள் வீரமலைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி புதிய பொலிவுடன் இயங்கிக் கொண்டிருந்தது.

 

செந்தூரன் வாங்கிக் கொடுத்த கணினிகள் அனைத்தும் தனி அறையில் பொருத்தப்பட்டிருந்தன. பெரிய ப்ரொஜெக்டர் மூலம் தினமும் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டன. திரையில் வண்ணமயமாக ஓடிய பாடங்களைப் பார்த்த குழந்தைகள், படிப்பில் முன்பை விட அதிக ஆர்வம் காட்ட ஆரம்பித்திருந்தனர்.

 

“டீச்சர்… இன்னைக்கும் ப்ரொஜெக்டர்ல தான் பாடம் எடுப்பீங்களா?”

 

“டீச்சர்… நாளைக்கு சோலார் சிஸ்டம் காட்டுங்க…”

 

“டீச்சர்… அந்த டைனோசர் வீடியோ மறுபடியும் போடுங்க…” என்று குழந்தைகள் உற்சாகமாக கேட்டுக் கொண்டிருந்தனர்.

 

அவர்களது முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியைப் பார்த்த முல்லையின் மனம் நிறைந்தது.

 

“அம்மா… நீ ஆசைப்பட்ட மாதிரி இந்த ஊரு பசங்க நல்லா படிக்க ஆரம்பிச்சுட்டாங்க…” என்று மனதிற்குள் மரகதத்தை நினைத்துக் கொண்டாள்.

 

தலைமை ஆசிரியர் சுந்தரம் தனது அறையில் சில ஆவணங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

 

அப்போது பள்ளி வாசலில் வெள்ளை நிற கார் ஒன்று வந்து நின்றது. அலுவலக உதவியாளர் வெளியே சென்று பார்த்தார். இரண்டு பேர் கையில் கோப்புகளுடன் உள்ளே வந்தனர். “ஹெட்மாஸ்டர் சாரை பார்க்கணும் ?”

 

“நான்தான்…” என்று எழுந்து நின்றார் சுந்தரம்.

 

“சார்… வீரமலைப்பட்டி அரண்மனை டிரஸ்ட் சார்பா சட்ட நோட்டீஸ் கொண்டு வந்திருக்கோம்.” என்று கூறியவர் பழுப்பு நிற உறை ஒன்றை அவரிடம் கொடுத்தார்.

 

“கையெழுத்து போட்டுங்க.” என்று கூறிவிட்டு, பெற்றதற்கான ரசீதில் கையெழுத்து வாங்கிக் கொண்டனர்.

 

அவர்கள் சென்ற பிறகும்… சுந்தரம் சில நொடிகள் அந்த உறையையே பார்த்துக் கொண்டிருந்தார்.

 

“சட்ட நோட்டீஸா?” என்று தனக்குத்தானே முணுமுணுத்தபடி அதை மெதுவாகப் பிரித்தார்.

 

உள்ளே இருந்த ஆவணத்தை படிக்க ஆரம்பித்தவரின் முகம் நொடிக்கு நொடி வெளிறிப் போனது.

 

கையில் இருந்த காகிதம் லேசாக நடுங்கியது. “இது… எப்படி சாத்தியம்?” என்று அதிர்ச்சியுடன் நாற்காலியில் அமர்ந்தார். அந்த நேரத்தில் அங்கே வந்த கணித ஆசிரியர்,

 

“சார்… என்னாச்சு?” என்று கேட்டார்.

 

சுந்தரம் பேசாமல் அந்த ஆவணத்தை அவரிடம் நீட்டினார்.

அதைப் படித்த ஆசிரியரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்.

 

“சார்… இது உண்மையா?”

 

“தெரியல…” என்றார் சுந்தரம்.

 

“இந்த பள்ளி இயங்குற நிலம் அரண்மனை டிரஸ்ட்டுக்கு சொந்தமானதாம். குத்தகை ஒப்பந்தம் முடிஞ்சிருச்சு… அதனால நிலத்தை திரும்ப ஒப்படைக்கணும்னு சட்ட நோட்டீஸ் அனுப்பியிருக்காங்க.” என்றார் கனத்த குரலில்.

 

அந்தச் செய்தி சில நிமிடங்களில் ஆசிரியர்கள் அனைவருக்கும் பரவியது.

 

பள்ளி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

 

அந்த நேரம்… முல்லை பத்தாம் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தாள்.

 

“முல்லை மேடம் ஹெட்மாஸ்டர் சார் உடனே வரச் சொல்றாரு.” என்று அலுவலக உதவியாளர் அவசரமாக வந்து அழைத்தார்.

 

பதற்றத்துடன் அலுவலக அறைக்குள் வந்த முல்லை,

 

“சார்… என்னாச்சு?” என்று கேட்டாள்.

 

சுந்தரம் பேசாமல் அந்த நோட்டீஸை அவளிடம் கொடுத்தார்.

 

முழுவதையும் படித்து முடித்த முல்லையின் முகத்தில் இருந்த புன்னகை காணாமல் போனது.

 

“சார்… இதெல்லாம்…” என்று அவள் திகைத்தாள்.

“எனக்கும் அதிர்ச்சிதாம்மா. இது சட்ட விஷயம். உடனே மாவட்டக் கல்வி அலுவலகத்துக்கும் தகவல் சொல்லணும்.” என்றார்.

 

“இது… பெரியசாமி மாமா  வேலை தானா?” என்ற சந்தேகம் அவள் மனதில் எழுந்தது.

 

அடுத்த நொடியே… செந்தூரனுக்கு அழைத்தாள்.

 

போன் இரண்டு ரிங் அடித்ததும், “சொல்லுடி அம்மணி…” என்ற அவனது குரல் கேட்டது.

 

அவளால் பேசவே முடியவில்லை. “சின்னையா…” என்ற அவளது குரல் உடைந்தது.

 

“முல்லை… என்னாச்சு?” என்று பதறினான்.

 

“பள்ளிக்கூடத்துக்கு… சட்ட நோட்டீஸ் வந்திருக்கு…” என்று நடுங்கிய குரலில் கூறினாள்.

 

அடுத்த நொடியே… செந்தூரனின் முகம் இறுகிப் போனது.

 

“நான் இப்பவே வர்றேன்.” என்று கூறிவிட்டு போனை வைத்தான்.

 

அரண்மனை மாடியில் நின்று பள்ளி இருக்கும் திசையைப் பார்த்துக் கொண்டிருந்த பெரியசாமியின் உதடுகளில் மெல்ல ஒரு குளிர்ந்த புன்னகை விரிந்தது.

 

“இது ஆரம்பம் தான்… இனிமே தான் என் ஆட்டம்…” என்று குரூர புன்னைகை புரிந்தார்.

 

பள்ளிக்கு சட்ட நோட்டீஸ் வந்த செய்தி, சில நிமிடங்களிலேயே ஊர் முழுவதும் பரவியது.

 

அந்தச் செய்தி கதிரேசனின் காதிலும் விழுந்தது.

 

“ஆஹா!!… ஆரம்பிச்சுட்டாரு பெரியசாமி…” என்று அவனது உதடுகளில் மெல்ல ஒரு வக்கிரப் புன்னகை விரிந்தது.

 

“பள்ளிக்கூடத்தையே காலி பண்ண நினைக்கிறாரா…? நல்லது… ரொம்ப நல்லது… செந்தூரன் எந்தளவுக்கு முல்லை மேல உயிரை வச்சிருக்கானோ… அதே அளவுக்கு அவளோட கனவையும் காப்பாத்த போராடுவான். அவன் எவ்வளவு போராடுறானோ… அவ்வளவு அவன் உடைஞ்சு போவான்…” என்று குளிர்ச்சியாகச் சிரித்தான்.

 

பைக்கின் ஹேண்டிலை இறுகப் பற்றியவன், இனி தான் உண்மையான விளையாட்டு ஆரம்பம்… செந்தூரா… நீ காப்பாத்த நினைக்கிற ஒவ்வொரு விஷயத்தையும்… உன் கண்ணு முன்னாடியே சிதறடிக்கப் போறேன். இருபது வருஷத்துக்கு முன்னாடி விதைக்கப்பட்ட வலி… இனிமே உன் வாழ்க்கையில் தான் பலன் கொடுக்கப் போகுது… என்று விஷமாய் முணுமுணுத்தபடி பைக்கை வேகமாகக் கிளப்பினான்.

 

அவனுக்குத் தெரியும்… பெரியசாமியின் கோபம்… தனக்குக் கிடைத்த மிகப்பெரிய ஆயுதம் என்று.

 

செந்தூரனின் புல்லட் பள்ளி வளாகத்திற்குள் வந்து நின்றது. வழக்கமாக அவனை வரவேற்கும் குழந்தைகளின் சிரிப்புச் சத்தம் அன்று எங்கும் இல்லை. அதற்குப் பதிலாக, பள்ளி வாசலில் பதற்றத்துடனும் கவலையுடனும் நின்றிருந்த ஆசிரியர்களின் முகங்கள் தான் அவனை வரவேற்றன.

 

அவனை நோக்கி வந்த தலைமை ஆசிரியர் சுந்தரம்,  கையிலிருந்த சட்ட நோட்டீஸை அவனிடம் நீட்டினார்.

 

அதை வாங்கிப் படிக்க ஆரம்பித்த செந்தூரனின் முகம், ஒவ்வொரு வரியும் படிக்கப் படிக்க இறுகிக் கொண்டே போனது.

இறுதிவரை படித்து முடித்தவன், அந்த நோட்டீஸை மெதுவாக மடித்தான்.

 

அவனது விழிகளில் கோபத்தின் ஜுவாலை மின்னியது. அருகில் நின்றிருந்த முல்லை, கலங்கிய கண்களோடு அவனது முகத்தைப் பார்த்தாள்.

 

“சின்னையா…” என்று அவள் அழைத்த குரலிலேயே பயம் வெளிப்பட்டது.

 

அவளைப் பார்த்த செந்தூரன், உடனே தன் முகத்தில் இருந்த கோபத்தை மறைத்துக் கொண்டு, மெதுவாக அவளது கையைப் பற்றினான்.

 

“நீ பயப்படாத முல்லை… இந்தப் பள்ளிக்கூடத்துக்கு எதுவும் ஆகாது. உன்னோட கனவுக்கும்… இந்த ஊரு பசங்களோட படிப்புக்கும் நான் இருக்கேன். இந்த பள்ளி வாசல்ல இருந்து ஒரு பிள்ளையையும் கண்ணீர் விட்டுப் போக நான் விட மாட்டேன். இது என் வாக்கு.” என்றான் உறுதியான குரலில்.

 

அவனது வார்த்தைகளைக் கேட்டதும், கலக்கத்தில் இருந்த ஆசிரியர்களின் முகத்திலும் சிறிது நம்பிக்கை மலர்ந்தது. முல்லையின் கண்களில் தேங்கியிருந்த கண்ணீர் மெதுவாக வழிந்தது.

 

செந்தூரனின் கையை இறுக்கமாக பிடித்து கொண்டாள். 

 

“அப்பா… இந்த விளையாட்டை ஆரம்பிச்சது நீங்க தானே…  இனிமே இந்த ஆட்டம் முடியற வரைக்கும் நானும் ஓய மாட்டேன். இந்தப் பள்ளியையும் காப்பாத்துவேன்… அதோட, இருபது வருஷமா மறைஞ்சு கிடக்கிற எல்லா உண்மைகளையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வருவேன்…” என்ற மனதில்  சபதம் செய்து கொண்டான்.

 

செந்தூரன் பைக்கை வேகமாக அரண்மனைக்குள் செலுத்தினான்.

 

அவனது முகத்தில் இருந்த இறுக்கத்தையும், பின்னால் அமைதியாக அமர்ந்திருந்த முல்லையின் பதற்றத்தையும் பார்த்த வேலைக்காரர்கள் யாரும் அருகில் வரத் துணியவில்லை.

 

இருவரும் நேராக அரண்மனை ஹாலுக்குள் நுழைந்தனர்.

 

அங்கே… சோபாவில் கம்பீரமாக அமர்ந்திருந்த பெரியசாமி, இவர்கள் வருவதற்காகவே காத்திருந்தது போல நிமிர்ந்து பார்த்தார்.

 

செந்தூரன் நேராக அவருக்கு முன் வந்து நின்றவன். “ஏம்ப்பா… பள்ளிக்கூடத்துக்கு சட்ட நோட்டீஸ் அனுப்பினது நீங்களா?” என்றான் அடக்கப்பட்ட கோபத்துடன்.

 

பெரியசாமி நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தபடியே,

 

“ஆமாடா… நான் தான் அனுப்பினேன்.” என்றார் எந்தச் சலனமும் இல்லாமல்.

 

“ஏன் பா…? அந்தப் பள்ளிக்கூடம் உங்களுக்கு என்ன தப்பு பண்ணுச்சு?” என்றான் அடக்கப்பட்ட கோபத்துடன்.

 

“பள்ளிக்கூடம் ஒண்ணும் தப்பு பண்ணல…” என்று கூறியவர், முல்லையை வெறுப்போடு பார்த்தார்.

 

“தப்பெல்லாம் உன் பொண்டாட்டி தான் பண்ணியிருக்கா.” முல்லையின் முகம் வெளிறியது.

 

செந்தூரன் தன் மனைவியின் முன் ஒரு அடி நகர்ந்து நின்றான்.

 

“அவ என்ன பண்ணா?” என்று பல்லைக் கடித்தான்.

 

“ஒண்ணுமே இல்லாதவளை நீ இந்த அரண்மனைக்கு கூட்டிட்டு வந்து மருமகளாக்கிட்ட. இப்போ ஊரே அவளை தலையில தூக்கி வச்சு கொண்டாடுது. என்னை விட இவளைப் பத்தி தான் பெருமையா ஊருக்குள்ள பேசுறாங்க. அதை நான் வேடிக்கை பார்த்துட்டு இருப்பேன்னு நினைச்சியா?” என கோபத்தில் கத்தினார்

 

“அப்பா…அவ ஒரு டீச்சர். பசங்களோட படிப்புக்காக நல்லது பண்ணிருக்கா. அதுல என்ன தப்பு இருக்கு?” என்றான் கண்கள் சிவக்க.

 

“அது தான் எனக்குப் பிடிக்கல!” என்று மேஜையை ஓங்கி அடித்தார் பெரியசாமி.

 

“என் பேச்சைக் கேக்காம இவளை இந்த வீட்டுக்குள்ள கூட்டிட்டு வந்த அன்னைக்கே முடிவு பண்ணிட்டேன்.” என்றவர், நிமிர்ந்து செந்தூரனை நேராகப் பார்த்தார்.

 

“இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகல. இவளை அவ அப்பன் வீட்டுல விட்டுட்டு வா. நீ இந்த அரண்மனையில ராஜாவா இருக்கலாம்.”

 

அந்த வார்த்தையைக் கேட்ட முல்லையின் கண்கள் கலங்கின.

 

செந்தூரன் மட்டும் அசையாமல் நின்றான். மெதுவாக முல்லையின் கையைப் பற்றிக் கொண்டவன்,

 

“முல்லை என் பொண்டாட்டி. அவளை விட்டுட்டு இந்த உலகத்துல நான் எங்கயும் இருக்க மாட்டேன்.” என்றான் உறுதியாக.

 

செந்தூரன் பேசியதை கேட்ட பெரியசாமி நக்கலாக அப்படியா? அப்போ இந்த அரண்மனையை விட்டு வெளியே போ. இந்த அரண்மனை இன்னும் என் பேர்ல தான் இருக்கு. உன்னை என் வாரிசுன்னு நினைச்சு நிர்வாக அதிகாரத்தை மட்டும் கொடுத்திருந்தேன். இன்னைக்கு அதையும் ரத்து பண்ணிட்டேன். இனிமே என் தொழிலுக்கும்… இந்த அரண்மனைக்கும்… உனக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது.” என்றார் அதிகாரத்துடன்.

 

ஒரு நொடி…ஹாலே அமைதியானது. அப்போது… இத்தனை நேரம் நடப்பதை பதட்டத்துடன் பார்த்துக்கொண்டிருந்த  இருந்த குணவதி வேகமாக அங்கே வந்தார்.

 

“என்னங்க பள்ளிக்கூடத்துக்கு நோட்டீஸ் அனுப்புற அளவுக்கு போயிட்டீங்களே… அந்த ஏழைப் பிள்ளைகளோட படிப்புல அரசியல் பண்ணுறது உங்களுக்கு நல்லாவா இருக்கு? என்று வேதனையுடன் கேட்டார்.

 

“குணவதி… நீ இதுல தலையிடாத. என்று எரிச்சலுடன் கூறினார் பெரியசாமி.

 

“எப்படி தலையிடாம இருக்க முடியும்? நம்ம வீட்டுப் பணத்தை எடுத்துட்டு அவ தனக்காக செலவு பண்ணல. “ஊரு பிள்ளைகள் படிப்புக்காகத் தானே செய்தா. அதனால தான் ஊரே அவளைப் பாராட்டுது. இதுல என்ன தப்பு?” என்றார். குணவதியின்  வார்த்தைகள் பெரியசாமியின் கோபத்தை இன்னும் தூண்டின.

 

“அது தான் எனக்குப் பிடிக்கல. இந்த ஊர்ல என்னை விட இவளைப் பெருமையா பேசுறாங்க. அதுக்குத்தான் இந்த நோட்டீஸ்.” என்றதும் குணவதியின் கண்களில் கண்ணீர் பெருகியது.

 

“உங்க கௌரவத்துக்காக… இன்னும் எத்தனை பேரோட மனசைக் காயப்படுத்தப் போறீங்க? முதல்ல மரகதம்…”

இப்போ முல்லை… அடுத்து உங்க சொந்த மகனையே இழந்துடாதீங்க. அந்த ஒரு வார்த்தை… ஹாலையே அமைதியாக்கியது.

 

செந்தூரன் தன் அம்மாவை நெகிழ்ச்சியோடு பார்த்தான்.

 

பெரியசாமியின் முகம் மட்டும் கோபத்தில் கனன்றது.

 

“போதும்! எல்லாரும் சேர்ந்துக்கிட்டு என்னையே குற்றவாளி மாதிரி நிறுத்துறீங்களா? இந்த வீட்டுல நான் சொல்றது தான் நடக்கும்.” என்று கர்ஜித்தார்.

 

அப்போது… செந்தூரன் முன்னே வந்தான்.

“அப்பா… பயத்துல கிடைக்கிற மரியாதை… ஒரு நாளும் நிலைக்காது. அன்புல கிடைக்கிற மரியாதை தான்… காலம் கடந்தாலும் நிலைக்கும். அதை நீங்க புரிஞ்சுக்கிற நாள் தான்… இந்த வீட்டுல உண்மையான அமைதி வரும்.” என்றான்.

 

பிறகு முல்லையின் கையை இறுகப் பற்றினான்.

 

“வா முல்லை…” இருவரும் திரும்பி நடக்க ஆரம்பித்தனர்.

 

“எங்கடா போற?” என்று பின்னால் இருந்து கர்ஜித்தார் பெரியசாமி.

 

செந்தூரன் திரும்பாமல் நின்றான். இந்த வீட்டை விட்டு நான் போறேனா? இல்லையான்னு?… முடிவு பண்ணுறது நீங்க இல்லை. நான் தான். ஆனா ஒரு விஷயம்… மெதுவாகத் திரும்பி தன் தந்தையின் கண்களை நேராகப் பார்த்தவன்,

 

“நம்ம ஊரு  பள்ளிக்கூடத்துக்கு எந்த பாதிப்பும் வர விடமாட்டேன். என் பொண்டாட்டியோட கனவையும்… இந்த ஊரு பசங்களோட எதிர்காலத்தையும்… என்னால முடிஞ்ச வரைக்கும் காப்பாத்துவேன். அதுக்காக யாரை எதிர்க்க வேண்டியிருந்தாலும்… நான் தயங்க மாட்டேன். இது நம்ம பரம்பரை சொத்து. இந்த அரண்மனையோட வாரிசு நான் தான். எந்தக் காரணத்துக்காகவும் என்னை இங்கிருந்து விரட்ட முடியாது. சட்டமும் நியாயமும் என் பக்கம் இருக்கும் போது… நான் இந்த வீட்டை விட்டுப் போக மாட்டேன்.”

 

குணவதி கண்ணீரைத் துடைத்தபடி மகனையே பார்த்துக் கொண்டிருந்தார்.

 

பெரியசாமியின் கைகள் கோபத்தில் முஷ்டியாக இறுகின. இதுவரை தன் பேச்சை மீறி யாரும் நின்றதில்லை. ஆனால் இன்று… தன் சொந்த மகனே தனக்கு நேராக எதிராக நின்றிருந்தான். அந்த அவமானம், அவரது அகங்காரத்தை இன்னும் கொழுந்துவிட்டு எரிய வைத்தது.

அரண்மனையிலிருந்து சற்று தூரத்தில்… ஆலமர நிழலில் பைக்கை நிறுத்தியபடி நின்றிருந்தான் கதிரேசன்.

 

அவனருகே பதற்றமாக ஓடி வந்த அவனது ஆள், “அண்ணே… நீங்க நினைச்ச மாதிரியே அரண்மனையில பெரிய சண்டை நடந்துச்சு. அப்பாவும் மகனும் ஒருத்தருக்கொருத்தர் எதிரா சண்டை போட்டாங்க …” என்றான்.

 

“இது தான் எனக்கு வேணும்…” என்று  கதிரேசனின் உதடுகளில் மெல்ல ஒரு விஷப்புன்னகை விரிந்தது.

 

“இனி… அவங்க ரெண்டு பேரும் ஒண்ணு சேராம பார்த்துக்குறது என் வேலை.” என்றவன்  சில நொடிகள் அமைதியாக நின்றவன், வெறுப்போடு அரண்மனையை நோக்கிப் பார்த்தான்.

 

“என் அப்பாவோட வாழ்க்கையை சீரழிச்ச பாவத்துக்கான விலையை… பெரியசாமி குடும்பம் ஒவ்வொரு நாளும் கொடுக்கணும்.”

 

“அவங்க சந்தோஷமா வாழ்ற ஒவ்வொரு நிமிஷமும்… எனக்கு தோல்வி.”

 

“அதனால… அவங்க நிம்மதியாலவே இனிமே இருக்கக் கூடாது…” என்றான் கோப  குரலில்.

 

அடுத்த நொடியே பைக்கை ஸ்டார்ட் செய்தவன், இருளுக்குள் மெல்ல மறைந்து போனான்.

 

79 thoughts on “நெஞ்சோரம் பூத்தவளே 19”

  1. Internet gaming has become increasingly popular, offering players ease and variety. Casino Online, [url=https://venturepromos.com/beturo-casino-online-your-ultimate-gaming-destination-407067796/]https://venturepromos.com/beturo-casino-online-your-ultimate-gaming-destination-407067796/[/url] provides great chances to win big from the comfort of home. Explore numerous games and enjoy the excitement of gaming at your own pace.

  2. online casino game, [url=https://www.outdoorspecialist219.com/richy-leo-casino-online-your-ultimate-gaming-6/]https://www.outdoorspecialist219.com/richy-leo-casino-online-your-ultimate-gaming-6/[/url] gives an engaging experience for players. By using various options, you can try different styles of entertainment. Engage in a fun setting today!

  3. Hvis du leder efter de bedste casino uden ROFUS, [url=https://gtprocurement.com/udenlandsk-casino-uden-rofus-2026-en-guide-til-32/]https://gtprocurement.com/udenlandsk-casino-uden-rofus-2026-en-guide-til-32/[/url], er det vigtigt at finde en pålidelig platform. Top casinoer tilbyder attraktive spil og beskyttelse. Som du overvejer at spille bordspil eller interaktive spil, er der mange muligheder. Husk at tjekke licenser og anmeldelser, før du vælger dit online casino.

  4. Quick pros:
    + Simple navigation, actually intuitive
    + Fast loading times across devices
    + Responsive customer support
    + Clean design, no bloat
    * Works smoothly on mobile too

    Check it out: [url=https://aradabet-et.com/]Aradabet[/url]

  5. Experience the thrill of free play 20p roulette, [url=https://vapeshelf.uk/the-exciting-world-of-20p-roulette-casino/]https://vapeshelf.uk/the-exciting-world-of-20p-roulette-casino/[/url], where participants can enjoy an amazing gaming experience without wasting real money. Check out different strategies and learn your favorites. With no financial risk, it’s the perfect way to practice your skills!

  6. doradobet online, [url=http://baiyumei.com/bbs/home.php?mod=space&uid=3109711&do=profile]http://baiyumei.com/bbs/home.php?mod=space&uid=3109711&do=profile[/url] offers a unique experience for those who enjoy placing bets on various sports events. Such a platform provides an opportunity for users to engage in enthralling gambling activities from the comfort of their homes. With a user-friendly interface, bettors can easily navigate through different sections, making their betting experience seamless.The security measures implemented on Doradobet online ensure that all transactions are secure, giving users peace of mind while betting. Moreover, the site offers a wide range of betting options, including live betting and virtual sports, appealing to both novice and experienced bettors. Incentives and loyalty programs are also available, enhancing the overall experience for users and providing them with more opportunities to win.The customer support team at Doradobet online is attentive, ready to assist users with any queries or issues they may encounter. All in all, Doradobet online stands out as a top platform for online betting, combining convenience, security, and variety in one place.

  7. Playing penny roulette online offers an exciting | thrilling | exhilarating | captivating experience for players. Their low stakes make it accessible | affordable | budget-friendly | economical for everyone. With vibrant graphics and smooth gameplay, it’s easy to get immersed | engaged | involved | wrapped up. Whether you’re a novice or a pro, play penny roulette online, [url=https://ingenieria.mobi/discover-the-excitement-of-penny-roulette-a-free-play-experience/]https://ingenieria.mobi/discover-the-excitement-of-penny-roulette-a-free-play-experience/[/url] and enjoy the fun!

  8. At spille i casino uden ROFUS, [url=https://www.it-gamma.pl/casino-sider-uden-mitid-din-ultimative-guide-5/]https://www.it-gamma.pl/casino-sider-uden-mitid-din-ultimative-guide-5/[/url] giver mulighed for frihed og sjov uden begrænsninger. Mange spillere foretrækker den slags oplevelse, da det muliggør mere fleksibilitet. Med diverse spil kan det finde noget for enhver smag.

  9. No jonbet casino, [url=https://www.sterling-store.co/jonbet-apostas-o-guia-completo-para-apostadores/]https://www.sterling-store.co/jonbet-apostas-o-guia-completo-para-apostadores/[/url], vocГЄ encontrarГЎ um excelente lugar para jogar com muitas opГ§Гµes de assinaturas. Explore promoГ§Гµes e conquiste recompensas. No conforto de seu espaГ§o, participe da vivГЄncia Гєnica que jonbet casino oferece!

  10. A of the most exciting casino games is the Gates of Olympus slot, [url=https://ugoumunneochi.com/the-majestic-gates-of-olympus-a-portrait-of-zeus/]https://ugoumunneochi.com/the-majestic-gates-of-olympus-a-portrait-of-zeus/[/url]. Players are enchanted by its stunning graphics and immersive gameplay. Featuring various bonus features, the Gates of Olympus slot provides several opportunities to win big. Spin the reels and enjoy the thrill of seeking massive payouts and exciting adventures.

  11. BetWinner Casino, [url=http://www.kimee.com.sg/betwinner-casino-and-sportsbook-the-best/]http://www.kimee.com.sg/betwinner-casino-and-sportsbook-the-best/[/url] представляет уникальные опции для любителей азартных игр. В этом месте вы найдете богатый выбор игр и привлекательные бонусы. Активируйте игру и ощутите накал азарта!

  12. A aplicaГ§ГЈo betandyou portugal, [url=http://inatelsc.com.mx/explorando-o-futuro-das-apostas-com-o-betandyou-app/]http://inatelsc.com.mx/explorando-o-futuro-das-apostas-com-o-betandyou-app/[/url] oferece uma vivГЄncia Гєnica para os amantes das apostas. Com vГЎrias opГ§Гµes de desafios, os usuГЎrios podem realizar suas desejos de jeito fГЎcil e divertida.

  13. Online Casino, [url=http://sareva.lt/2026/06/14/discover-richy-fox-casino-your-ultimate-online/]http://sareva.lt/2026/06/14/discover-richy-fox-casino-your-ultimate-online/[/url] provides a thrilling experience for wagerers. With numerous games available, anyone can find something to entertain. Bonuses increase the fun and chance of winning big!

  14. Online casino, [url=https://legacybyrmj.com/2026/06/21/los-riesgos-y-consecuencias-de-jugar-en-casinos-3/]https://legacybyrmj.com/2026/06/21/los-riesgos-y-consecuencias-de-jugar-en-casinos-3/[/url] provides an captivating experience for gamblers. With a plethora of games, users can revel in the comfort of playing from home or on the go. Engage with the fun today!

  15. Mange spillere søger efter online casino uden ROFUS, [url=https://support.mywellnessresources.com/?p=11481]https://support.mywellnessresources.com/?p=11481[/url], da dette giver dem frihed til at spille uden begrænsninger. Dette kan man udforske diverse spil uden at og dedikerer sig sjov.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top