ATM Tamil Romantic Novels

நிலா நேசம் வானளவு

4.நேசம்

 

இன்று அப்பள்ளியின் இருபதாவது ஆண்டு  விழா..சேர்மேன் வருகைக்காக வாசலில் அழகழகான தோரணங்கள் கட்டி இருக்க சிகப்பு கம்பள வரவேற்பு ஏற்பாடு செய்திருந்தனர்…

 

சிறு குழந்தைகள் எல்லாம் முதல் முதலில் பூங்கொத்துடன் பார்ப்பவர்கள் கண் மயங்கும் அழகு பொம்மைகள் போல நின்றனர்..

 

வெண்ணிலா மிஸ் நீங்க இன்னைக்கு டேன்ஸ் உங்க ஸ்டூடெண்ட்ஸ் தான்..

 

எஸ் மேம்..எல்லாரும் பக்காவா பெர்பாமென்ஸ் பண்ணிடுவாங்க..

 

ஓகே வெண்ணிலா நீங்களும் ஒரு ஸ்பீச் கொடுக்கணும். ..நோ ன்னு மட்டும் சொல்லிட்டாதிங்க..என்று தலைமை ஆசிரியர் பரத்வாஜ் கேட்டுக்கொள்ள சரி என்று ஒப்பு கொண்டாள்…

 

வாசலை ஆவலுடன் அனைவரும் எதிர்பார்க்க அங்கு கோர்ட் சூட்டில் பக்காவாக ராயலான லுக்கில் காரை விட்டு இறங்கினான் விக்ரம் என்கிற விக்கிரமாதித்யா ..

 

 

 

 

யார் யார் என்று ஆர்வத்தில் முன்னே வந்து நின்றாள் வெண்ணிலா..அங்கோ அவள் வெறுக்கும் அனைவராலும் நேசிக்கப்படும் ஒருவன்..

 

 

தன்னை மீறி இதழ்கள் துடித்தது.. கைகள் நடுங்கியது..இவ.. இவனா.. என் கண்ணு சரி இல்லையா என்று கண்களை கசக்கி விட்டு திரும்ப பார்த்தாள்.. ஆம் அவனே தான் அந்த திமிர்ப்பிடித்த விக்ரம் தான் இங்கு வந்திருக்கிறான்..இங்க இவன் எப்படி..இவனை தான் எல்லோரும் புகழ்கின்றனர்களா ..ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொள்பவனுக்கு அனைவரும் மரியாதை கொடுப்பது அவ்வளவு எளிதில் ஏற்று கொள்ள கூடியதாக இல்லை வெண்ணிலாவுக்கு..

 

விக்கிரமாதித்யா விற்க்கு அனைவரும் பூங்கொத்து கொடுத்து வரவேற்க ..,அதை ஏற்றுக்கொள்ளுமுன் ..,ரோஜா மலர்கள் கொடுத்த சின்னஞ்சிறு மழலைகள் முன் மண்டியிட்டு தேங்க் யூ ரோஸ் பட்ஸ் என்று அழகாக கூறி ஒவ்வொரு குழந்தைக்கும் பணிவாக நன்றி சொல்லி அன்போடு அவர்கள் மரியாதையை வாங்கிக்கொண்டவன்..விழா நடக்கும் இடத்திற்கு சென்றான்..

 

 

வெண்ணிலா அவன் முகத்தில் விழிப்பதே பாவம் என்று அந்த இடத்தை விட்டு அருகே இருந்த க்ளாஸ் ரூமில் உள்ள ஒரு பெஞ்சில் தலை சாய்த்து படுத்து கொண்டாள்..அவனை கண்டாலே பற்றி கொண்டு வந்தது..அதைவிட அந்த நாள் நியாபகம் வந்து தொலைகிறது..

 

 

விழா மேடையில் அமர்ந்திருக்க அவனுக்கு ஸ்பெஷல் ஸ்பீச் கொடுப்பதர்காக ஒவ்வொரு மாணவர்களும் பேசினர்..

 

 

அடுத்து கலை நிகழ்ச்சிகள் ஆரம்பம் ஆகியது…ருத்ர தாண்டவ ஆட்டமும்.காண்போரை வியக்க செய்யும் விதமாக இருந்தது…. பாடல்களில் மின்சார கண்ணா பாட்டிற்கு ஏற்ப ஆடிய மாணவிகளின் நளினம் விக்ரமின் கவனத்தை ஈர்த்தது..அனைவருக்கும் பரிசு கொடுக்க விக்ரம் ஓவ்வொரு மானவரையும் அழைத்து அந்த விழா மேடையிலே அவர்களுக்கு தேவையான மேல் படிப்பு செலவு அனைத்தையும் செய்வதாக கூறினான்..

 

 

மாணவர்கள் அனைவரும் சந்தோசமாக ஹோ என்று கத்தி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்..

 

விக்ரம் தலைமை ஆசிரியர் பரத்வாஜிடம் பரத் இங்க பசங்க டேன்ஸ் ரொம்ப விரும்பி பார்த்தேன்..எனக்கு இது மாதிரி நடனம் பற்றி எல்லாம் தெரியாது..நம்ம ஸ்கூல் ல பசங்க எல்லாம் ப்ரம்மாதமா ஆடினார்கள்.. இது மாதிரி ட்ரெயின் பண்ணுங்க என்றான்..

 

சார்..இதெல்லாம் புதுசா இங்க ஒரு டேன்ஸ் டீச்சர் ஜாயின் பண்ணிருக்காங்க..அவங்க தான் இப்படி மாணவர்களுக்கு பரதம் சொல்லி கொடுத்தது..அது மட்டும் இல்ல சார் ..இங்க உள்ள குழந்தைகளுக்கு வர டவுட்ஸ் எல்லாம்  அவங்களுக்கு புரியுற மாதிரி மொழியில பாடம் சொல்லி கொடுக்கிறாங்க..

 

 

வாவ்வ்..அவங்கள கூப்பிட்டு வாங்க..நானே அவங்கள விஸ் பண்ணனும் நினைக்கிறேன்..

 

ஓகே சார் என்று பாரதியிடம் கேட்க..

 

இங்க தான் சார் இருந்தாங்க..

 

பாரதியும் பரத்வாஜும் தேடி சென்றனர்..க்ளாஸ் ரூமின் ஒரு ஓரம் அனாதை சிறுமி போல படுத்திருந்தாள்..

 

ஏய் வெண்ணிலா ..இங்க என்ன பண்ணிட்டு இருக்க..

 

ஹான்..ஒன்னுமில்ல டி..டையர்ட் அதா வந்து படுத்துட்டேன்..

 

ம்ம் சரி சரி வா அங்க உன்னை கூப்பிடுறாங்க..

 

நா எங்கயும் வரல டி..நீ மட்டும் போ..

 

போச்சுடா..அந்த ராகுலும் பரத்வாஜும் உன்னை வலை வீசி தேடுறாங்க.. நீ தனியா சிக்குன மொக்க போட்டே காதுல ரத்தம் வர வச்சுருவாங்க.. 

 

அவள் ஏதோ யோசனையில் ஜன்னல் வழியே வெறித்து பார்த்து கொண்டிருக்க..ஹே என்ன டி நா காமெடி பண்ணிட்டு இருந்தா நீ எதையோ இழந்த மாதிரி பார்த்துட்டு இருக்க..எனி ப்ராப்ளம் டி

 

நத்திங் பாரதி 

 

அப்போ வா..

 

காரணத்தை பாரதியிடம் கூறவில்லை.. ஒரு முடிவுடன் சரி அவனை கண்டு கொள்ளாமல்  சென்று விட வேண்டும் என்று நினைத்தாள்.

 

ஆனால் அவனோ இவ்வளவு திறமையாக உள்ள  அவளை பார்த்து விட்டு தான் செல்வேன் என்று நின்று கொண்டிருந்தான்..

 

 

வெண்ணிலா வரவும் அவளை பார்த்து முதலில் ஷாக் ஆகினான்.. தலைவருக்கு அவளை முதமிட்டது நியாபகம் வர மனதில் ஒரு ஜில் உணர்வு தோன்றியது..இவ இங்க எப்படி…

 

சார் இவங்க வெண்ணிலா ..

 

பின் இவள் தானே என்ற திமிருடன்..நீங்க மத்த வொர்க் பாருங்க நா மேடம்மை பார்த்து பேசிக்கிறேன்..

 

ஹாய் மிஸ் ஆர் மிசஸ் என்று கை நீட்ட

 

 அம் மிஸ் .வெண்ணிலா ராகவன் சார்..என்று தமிழ் முறைப்படி வணக்கம் சொன்னாள்..

 

 

 என்கிட்ட கை கொடுக்க மாட்டாளாம்மா..மேடம் மேனர்ஸ் என்னனு கத்து தரனும் போலயே..கை கொடுக்குறது எல்லாம் பேசிக் மேனர்ஸ் அது கூட தெரியல என்றான்..

 

தெரியாத ஆள் கிட்ட எல்லாம் தொட்டு பேசுகிற பழக்கம் எனக்கு இல்லை .. என்று சூடாக பதில் கொடுத்தாள்..

அவள் முணுமுணுத்த உதட்டை பார்த்தவனுக்கு உள்ளுக்குள் ஏதோ கிளர்ந்தது..அவன் பார்வையை உணர்ந்தவள் ..ஓகே சார் எனக்கு கொஞ்சம் பெர்சனல் ஒர்க் இருக்கு என்று கூறி விட்டு சென்றாள்..

 

ஒரு நிமிஷம் வெண்ணிலா மேடம்..

மிஸ் வெண்ணிலா ராகவன் பரத் சொன்னாரு நீங்க திறமையான ஆளுன்னு..அழகும் அதிகம் அறிவும் அதிகம் போலயே என்று அவள் உடலை மேய்ந்த வண்ணம் கூற..அவள் அவனை  தீப்பார்வை பார்த்தாள்..பொறுக்கி என்று திட்டினாள்.

 

என்ன மேடம் பொறுக்கி ஸ்கூல் க்கு வேலைக்கு வந்துருக்கிங்க..என்றான் நக்கலாக

 

 

தெரிஞ்சிருந்தா வந்துருக்க மாட்டேன் சார்..

 

உங்க கிட்ட என்று ஆரம்பித்தவன் தொண்டை யை செருமி கொண்டு 

உன்கிட்ட தனியா பேசணும்..கொஞ்சம் கார்ல போய் உக்காரு..

 

 

தெரியாத ஆள் கூட நா ஏன் வரணும்.. உங்களுக்கும் எனக்கும் பேச என்ன இருக்கு..இந்த ஸ்கூல் ஓட எல்லாம் முடிஞ்சு போச்சு.. இதுக்கு மேல பேச என்ன இருக்கு..

 

 

ப்ச்..சொல்றத கேளு..

 

நீ சொல்லறது நா ஏன் கேக்கணும் நா என்ன உன் பொண்டாடியா நீ சொன்னதும் உடனே போய் செய்ய..முடியாது..நா வீட்டுக்கு போறேன்..

 

 

ஒஹ் அவ்வளவு திமிரா டி 

 

ம்ம் ஆமா டா..

 

 

டா ன்னு சொன்னா இன்னும் என்கிட்ட பட வேண்டியது இருக்கும்..உன் திமிர அடக்கி காட்டுறேன்..,சோத்துக்கு பிச்சை எடுத்தாலும் திமிர் குறையாது போல..

 

பிச்சை எடுக்குறதுன்னு ஆனா கூட உன்கிட்ட வந்து நிக்க மாட்டேன்..

நா ராகவன் பொண்ணு..எங்ககிட்ட உன் அளவு சொத்து இல்லனாலும் சந்தோசமா வாழ தேவையான அளவு இருக்கு..இந்த வேலை இல்லனா வேற வேலை பார்த்துக்குவேன்..

 

 

அவனை மதிக்காமல் வீட்டிற்கு சென்று விட்டாள்..அதற்கு முன் முதலில் ரிசைன் லெட்டர் எழுதி கொடுத்து விட்டு தான் வீட்டின் வந்தாள்..

 

 

என்னையவே எதிர்த்து பேசிட்டு போறியா போ உன்ன எப்படி என் வலிக்கு கொண்டு வரணும்னு தெரியும்…

 

 

நில்லு டி..என்று அவளை கை பிடித்து இழுக்க கைய விடுங்க ஆதித்யா.. அவன் என் சொல்லு பேச்சை கேக்கமா போற எவ்வளவு திமிர் டி உனக்கு..என்கிட்ட சம்வளம் வாங்குற வேலைக்காரி முதலாளி சொன்னா மதிக்கணும்..ப்ளடி இடியட்..

 

வெண்ணிலா கோபத்தில் விக்ரமை பளார் என அறைந்து விட்டு நா வேலையை ராஜினாமா செய்துட்டேன்..உனக்கும் எனக்கும் எந்த விதமான உறவும் இல்ல..அண்ட் உனக்கு சொந்தம் இல்லாத ஒருத்தியை தொட எந்த உரிமையும் இல்ல..இனிமே இப்படி பிகேவ் பண்ணா அதுக்கான பலன் இப்படி தான் இருக்கும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top