ATM Tamil Romantic Novels

நிலா நேசம் வானளவு

6.நேசம்

 

 

விக்ரம் மற்றும் வெண்ணிலா இருவரும் உணவு அருந்த விக்ரமின் கண்கள் வெண்ணிலாவை துகிலுரித்தது.. அந்த பிங்க் நிற ஸ்கர்ட்டும் ஒயிட் கலர் டாப்ஸும் அவள் குளித்து முடித்து ஈர கூந்தலோடு நீர் சொட்ட சொட்ட அமர்ந்து ஏதோ கவிதை போல  தோன்றியது..அவ்வளவு அழகாக இருக்கும் இவளிடம் ஆண்களிடம் எப்படி மதிப்புடன் நடக்க வேண்டும் என்று தெரியாமல் போயிற்று..அதற்கு தானே இந்த தண்டனை..என்று மனதில் நினைத்தவன் சாப்பிடாமல் அவளை பார்க்க..இதை கவனித்த வெண்ணிலா ஆதி சார் சாப்பிடாம என்ன யோசிக்கிறீங்க..

 

ஆஹ்.ஒன்னுமில்ல நிலா.. உன்னை துரத்திட்டு வந்த நபர்கள் யாருன்னு தெரியுற வரை நிம்மதியே இருக்காது..உங்களுக்கு இங்க எந்த எதிரியும் இல்லையே..

 

தெரியல ஆதி சார்..

 

ப்ச் என்ன சார் ன்னு கூப்பிடுறீங்க..ஆதின்னோ இல்ல விக்ரமின்னோ கூப்பிடுங்க..

 

 

ம்ம்ம் சரி என்று தலையாட்டி விட்டு உணவை உண்டார்கள்..

 

நாளைக்கு ஊருக்கு போய்டலாம்ல ஆதி ..

 

எதுக்கு என்றான்..அவள் பார்க்கவும் இல்ல இப்போ இந்த பிரச்சனை எல்லாம் முடிந்ததும் பிறகு போலாம் வெண்ணிலா..நானும் வீட்டிற்கு போக முடியாது..

 

ஐயோ அம்மா நாளைக்கு கார்த்தி வீட்டுல இருந்து பொண்ணு பார்க்க வராங்கன்னு சொல்லிருக்காங்க..நா போகலைன்னா அம்மா அப்பா எனக்கு கெட்ட பெயர் ஆகிடுமே..என்று கூற விக்ரம் கண்கள் முகம் கோபத்தை தத்து எடுத்தது..

 

ஹே..வாவ் வெண்ணிலா சூப்பர் உங்களுக்கு கல்யாணமா..

 

ம்ம் ஆமா ஆதி கார்த்தி அப்பாவோட க்ளோஸ் ப்ரெண்ட் சன் நாங்க ஒண்ணா தான் காலேஜ் முடிச்சோம்…நேத்து அப்பா பேசுனாங்க.. என்று எல்லா தகவலையும் அவனுக்கு சொன்னவள்..,அவன் முகத்தை கவனிக்க தவறி விட்டாள்..

 

சரி வெண்ணிலா தூங்க போலாம்..பயம் இல்லாம தூங்குங்க..நாளைக்கு என்னோட ஹெலிகாப்டர் ல போயிடலாம்..

 

 ம்ம் ஓகே ஆதி என்று.. 

 

வெண்ணிலா தூங்க செல்ல நடு இரவு…

அவள் அறை கதவை யாரோ வேகமாக தட்டுவது போல இருந்தது.

தூக்கத்தில் இருந்து முழித்தவளுக்கு அந்த கதவு தட்டும் சத்தம் இன்னும் வேகமாக கேட்டது…

மெல்ல மெல்ல அடி எடுத்து கதவருகே சென்றாள்.

“யா… யாரு…?”

தொண்டைக் குழி ஏறி இறங்க, நெற்றியில் வியர்வை துளிகள் வழிந்தது.

இதயம் வேகமாக துடிக்க, மனதில் சிறு தைரியம் வர… நடுங்கும் கைகளால் கதவை திறந்தாள்.

கதவு திறந்த அடுத்த நொடி—

முகமூடி போட்ட ஒருவன் அவள் மீது கன் வைத்து நின்றான்.

 

“சத்தம் போட்டா உன்னை சுட்டுடுவேன்…” அவன் கரகரத்த குரலில் மிரட்ட,

 

“ஆஆஆ…!” என்று பயத்தில் கத்தினாள் வெண்ணிலா.

 

“என்னை விட்டுட்டு போ… நீ யாரு…?”

 

 

பயத்தில் பின்னோக்கி செல்ல 

முயன்றவளை, அவன் கையை பிடிக்க முனைந்தான்.

அந்த நொடி அவளுக்குள் இருந்த பயம் கோபமாக மாறியது.

 

“என்னை தொட்டா கொன்றுடுவேன்…!”

அவள் அருகில் இருந்த பூ ஜாடியை எடுத்து அவன் மீது வேகமாக அடித்தாள்…

அவன் தடுமாறியவுடன் அறை முழுக்க சண்டை சத்தம் எதிரொலித்தது…

 

 

நா யாரா இருந்தா என்ன டி என்று அவளை அடித்தான்.. அவன் அடித்த அடியில் கீழே விழுந்தவளை அந்த முகமூடி போட்டவன் நெருங்க பதறியவள் அவனை தள்ளி விட்டு விக்ரம் அறைக்கு ஓடிவந்தாள்..

 

 

ஆதி …ஆதி கதவை திறங்க..

 

விக்ரம் கதவை திறக்க ஓடி சென்று அவனை கட்டி கொண்டாள்..

 

ஹே என்னாச்சு வெண்ணிலா..கூல் கூல்..என்னாச்சும்மா அவள் உடல் பயத்தில் நடுங்க அவன் முகத்தில் குரூர சிரிப்பு தாண்டவமாடியது..அங்.. அங்கே என அவள் தங்கி இருந்த அறையை காட்ட  விக்ரம் அவள் அறை சென்று பார்க்க யாரும் இல்லை..

 

இங்க யாருமே இல்ல வெண்ணிலா 

இல்ல இங்க ஒருத்தன் என்னை என்ன என்று கூறி  அவன் மீதே மயங்கி விழுந்து விட்டாள்..

 

ஏய் ..வெண்ணிலா..என்று கன்னத்தை தட்ட முழிக்க அவள் மயக்கத்தில் இருந்தாள்?..

 

 

அன்று இரவு முழுவதும் விக்ரம் அறையில் அவன் பெட்டில் தூங்கி கொண்டிருந்தாள்..

 

 விக்ரம் வெண்ணிலாவுடன் விதம் விதமாக புகைப்படம் எடுத்து கொண்டான்..

 

விக்ரமை பொறுத்த வரை அவளை பழி வாங்க வேண்டும் அவள் பெண்மையை இழிவு படுத்தும் கேவலமான செயலில் இறங்க நினைத்தான்…

 

அடுத்த நாள் காலை வெண்ணிலா நன்கு தூங்கி எழவும் அவள் முன் சோபாவில் தூங்கி கொண்டிருந்த  விக்ரமாதித்யா கண்ணில் பட்டான்.. அப்போது தான் இரவு நடந்த நிகழ்வு நியாபகம் வர இந்த அறை அவனுடையது என்று தெரிந்தது.. ஒரு பெண் தனிமையில் கிடைக்கும் போது அத்து மீறாமல் கண்ணியமாக நடந்து கொண்ட விக்ரம் மீது மலை அளவு நம்பிக்கையும் மரியாதையும்  வந்தது..

 

 

விக்ரம் தூக்கம் களைந்து சோம்பல் முறித்து எழுந்து வெண்ணிலா தன்னை பார்ப்பதை உணர்ந்தவன் ..ஹே எழுந்தச்சா..

 

 

ம்ம்ம் சாரி ஆதி நைட் பயத்துல உங்களுக்கு நிறைய தொந்தரவு கொடுத்துட்டேன் போல..சாரி 

 

 

இட்ஸ் ஓகே வெண்ணிலா..நாம நல்ல ப்ரெண்ட்ஸ்.. நமக்குள்ள சாரி தேங்க்ஸ் எல்லாம் வர கூடாது..

 

 

ம்ம் என்று சிரித்தவள்.நா குளிச்சுட்டு ப்ரெஷ் ஆகிட்டு வறேன்.. நாம எப்போ கிளம்புறது.

 

 

ம்ம் இதோ கமிஷனர் கிட்ட பேசிட்டு வறேன்..என்று கூறிவிட்டு கமிஷனர் ஜார்ஜ் இடம் பேசியவன்..

 

என்ன சொன்னங்க ஆதி..

 

சாரி வெண்ணிலா கொஞ்சம் இஸ்ஸூஸ் நாம நாளைக்கு மார்னிங் தான் போக முடியும்.

 

ஓ ஓ என்று அம்மாக்கு மட்டும் போன் பண்ணிக்கவா

 

ம்ம் பண்ணிக்கோங்க பட் நைட் நடந்த ஏதும் சொல்லாதீங்க எல்லாரும் பயப்படுவாங்க..,

 

 ம்ம் சரி என்று ராகவனுக்கு கால் செய்ய அங்கு எடுத்ததும் இங்க நடந்தை கூற மதியழகியிடம்

 

என்னவோ டி எனக்கு பயமா இருக்கு..பொம்பள பிள்ளையை இப்படி தனியா விட்டுட்டு இருக்குறது நினைச்சா நெஞ்சு வெடிச்சுறும் போல இருக்கு..ஊர் புல்லா கலவரம் இதுல பொம்பள பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்ல..வயித்துல நெருப்பை கட்டிக்கிட்டு இருக்கேன்..என்று மதியழகி வெளியில் இருந்து வர..

 

என்னங்க யார் போன் ல..

 

வெண்ணிலா அம்மாகிட்ட ஏதும் சொல்லாத நானே சொல்லுகிறேன்.. பயப்படுவா..

 

சரிப்பா..

 

வெண்ணிலாதான் ..பேசுறா.

 

கொடுங்க நானே பேச நினைச்சேன் அம்மாடி வெண்ணிலா எப்போமா வர..அங்க ஏதோ கலவரம்னு நியூஸ் ல போட்டுட்டு இருக்காங்க.. வீட்டுள்ளயே இரு..

 

ம்ம்மா அது..

 

என்ன டி சொல்லு..சரி சரி நாளன்னைக்கு பொண்ணு பார்க்க வராங்க டி..தெரியும் தான

 

ஆமா மா..சரி சரி இரு கார்த்தி உன்கிட்ட பேசனுமாம்..

 

என்ன எல்லாரும் அங்க வந்துடாங்களா.

 

ம்ம்ம் ஆமா வெண்ணிலா..

 

கார்த்தி யிடம் ..,பேச வெளியில் தோட்டடத்தில் நின்று பேச சென்றாள்..

 

 

ஹாய் வெண்ணிலா எப்படி இருக்க..

 

ம்ம் நல்லாருக்கேன்..நீங்க எப்படி இருக்கீங்க

 

அம் குட் உன்னை பார்க்க தான் ஆஸ்திரேலயாவில் இருந்து வந்தேன்..உன்கிட்ட நிறைய பேசணும் வெண்ணிலா என்று பேச ஆரம்பித்தான்.. அம்மா உன் போட்டோ காட்டினங்க முதல் பார்வையிலே நா க்ளீன் போல்ட்..ரொம்ப அழகா இருக்க..

 

தேங் யூ கார்த்தி..என்று கூறி கன்னம் சிவந்தாள்..அவள் பேசியதை கேட்ட விக்ரமிற்கு பிபி எகிறி நின்றது..

 

நாளைக்கு நாம எங்கேஜ்மெண்ட் முடிச்சுட்டு ஒரு வாரத்துல மேரேஜ் பண்ணிக்கலாம்..

 

ஒரு வாரத்துலயா..

 

ம்ம் உன்ன போட்டோவில பார்த்துல இருந்து ஐ காண்ட் கண்ட்ரோல் மைசெல்ப்.தேவதை மாதிரி இருக்க..

 

ஐயோ கார்த்தி போதும் என்று கன்னம் சிவக்க சிரித்தவள்..நாளைய நாளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தாள்..

 

 

தேங்க்ஸ் ஆதி..

 

யாருக்கிட்ட இவ்வளவு சந்தோசமா பேசிட்டு வரீங்க வெண்ணிலா..

 

என்னோட பியூச்சர் ஹப்பி கிட்ட..

 

ஒஹ் சூப்பர்..கங்கிரட்ஸ் மிஸ் வெண்ணிலா..என்றான் குரலை குழைத்து முகத்தை கொடூரமாக வைத்து கொண்டு

 

ம்ம் ஆதி உங்க கிட்ட ஒன்னு கேட்கலாமா

 

ம்ம் யா..கேளுங்க

 

நீங்க மேரீட் ஆஹ்..உங்க வைப் யாருன்னு தெரியல..பட் அவங்கள என்னோட மேரேஜ் க்கு கூட்டிட்டு வரணும்

 

ஃவைப் வந்த பின்னாடி கூட்டிட்டு வறேன்.. அது வரைக்கும் மேரேஜ் பண்ணாதீங்க..

 

அவள் ஆச்சர்யமாக உங்களுக்கு கல்யாணம் ஆகிட்டுன்னு அண்ணா சொன்னான்..

 

அது ஜஸ்ட் மோதிரம் மாத்திக்கிட்டோம்.மேரேஜ் இன்னும் வீட்டுல டேட் பிக்ஸ் பண்ணல ..

 

ஒஹ் என்று அவள் சிவந்த உதடை கண்டவன் மனது அவளை அணைத்து அந்த ஈரமான தேன்வடியும் ரோஜா நிற உதட்டை பருக சொன்னது..ப்ச் இவளிடம் என் மனது அடிமையாக கூடாது..

 

அப்புறம் எதுக்கு டா அவக்கூட போட்டோ எடுத்த..

 

அது அவளை வச்சு மிரட்ட என்னை மதிக்காம போனதுக்கு என்ன அவமான படுத்தியதற்கு பழி வாங்க போறேன் ..

 

போட்டோ அனுப்பிட்டு டெலிட் பண்ணிட்ட போல இது தான் நீ பழி வாங்குற லட்சணமோ…வேண்டாம் டா அந்த பொண்ணு பார்த்தா பாவம் போல இருக்கு..நீ தான் அவளை வெறுக்கிற இல்ல அப்புறம் ஏன் அவளை குருகுருன்னு பாக்குற..

 

அவனிடம் பதில் இல்லை..ஆனால் அவளை யாருக்கும் விட்டு கொடுக்கும் எண்ணமும் இல்லை இந்த விக்ரமாதித்யாவிற்கு..

 

ஆனால் விதி வலியது.. அவளை கூடவே வைத்து கொள்ள மனது துடித்தது.. கேட்டால் வெறுக்கிறேன் என்ற ஒரு காரணம் மட்டும் வரும்..

2 thoughts on “நிலா நேசம் வானளவு”

  1. offshore casinos, [url=http://www.liushibin.com/?p=1710368]http://www.liushibin.com/?p=1710368[/url] deliver a distinct gaming experience for gamblers seeking thrills in a secure environment. The privacy they grant attracts many who desire to enjoy a wide selection of games. Offshore casinos often include generous bonuses, enhancing the total gaming experience.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top