ATM Tamil Romantic Novels

Author name: Shaahithya Srinivasan

26071999-C143-4E3D-B726-B4764668FF53

12 – புயலோடு பூவுக்கென்ன மோகம்

12 – புயலோடு பூவுக்கென்ன மோகம்

ரூபேஷ் குளியலறை கதவை பலமாக இடித்து கொண்டு இருந்தான்.நிகிதா கதவையே உடல் நடுங்க பார்த்து கொண்டு இருந்தாள். வாயோ வீரா மாமா .. வீரா மாமா.. என ஜபம் போல சொல்லி கொண்டு இருக்க… அறையின் கதவு படபடவென தட்டப்பட…

“ஷீட்.. எவன் டா அது..” என வேகமாக சென்று கதவை திறக்க.. வீரா புயலாக உள்ளே வந்தான். ரூம் சர்வீஸாக இருக்கும் என நினைத்து கதவை திறந்தவன்.. வீராவை சற்றும் எதிர்பார்க்கவில்லை.

உள்ளே வந்தவனின் விழிகள் ஒரு நொடி அறையை சுற்றி வர.. நிகிதா அங்கு இல்லை எனவும் அடித்து துவைத்து எடுத்துவிட்டான்.

முதலில் வீராவை எதிர்த்த ரூபேஷால் சிறிது நேரத்திற்கு மேல் தாக்குபிடிக்க.. முடியவில்லை. சொகுசான வாழ்க்கையினால் விளைந்த உடல்.. போதை என ..பலவீனமான உடல் ருபேஷ்.. உழைத்து உரம்பேறிய உடல் கொண்ட வீராவின் அடியால் சுருண்டு விழுந்தான்.

கீழே விழுந்த ரூபேஷை நிகிதா எங்கே என கேட்டு நாலு எத்து எத்த.. அவனால் வாயை திறந்து கூட பேசமுடியவில்லை. குளியலறை நோக்கி கை நீட்ட..

வீரா சென்று கதவை தட்ட.. மறுபடியும் கதவு தட்டப்பட.. பயத்தில் கதவை திறக்கவில்லை நிகிதா. வீரா கதவை தட்டியது.. ரூபேஷை அடித்தது.. அவன் அடி தாங்காமல் அலறியது எதுவும் அவள் உணரவில்லை. பயத்தில் உறைந்து போயிருந்தாள்.

“நிகிதா..நிகிதா.. கதவை திற..”என.வீராவின் குரல் கேட்கவும் தான் சுரணை வந்தது. படாரென கதவை திறந்து கொண்டு ஓடி வந்து வீராவை அணைத்து கொண்டு கதறி அழுதாள்.

நிகிதாவை பார்த்தும் ரூபேஷ் மேல் ஆத்திரம் இன்னும் அதிகமாகியது வீராவிற்கு… நிகிதாவின் தோள்பட்டடையில் நககீறல்கள் அதில் இரத்தம் கசிய… கையை பிடித்து இழுத்ததில் கன்றி போய்.. அவளுடைய பால் நிற தேகத்தில் அவை எல்லாம் அதிக சிவப்புடன் தெரிய… அழுது கரைந்ததால் முகம் எல்லாம் கோவை பழமாக…

வீரா நிகிதாவை கை அணைப்பில் வைத்து கொண்டே அவனை மீண்டும் புரட்டி எடுத்தான். நிகிதா “மாமா…. போ..லாம்..” எனவும் தான் அவனை விட்டான்.

“உன் டாப்ஸ் எங்க..”என்றான்.

கட்டிலுக்கு பின்புறம் கைகாட்ட..அதை எடுத்து வந்து அவளை போட வைத்து அவளை அழைத்து கொண்டு வேகமாக வெளியேறினான்.

வீடு வரும் வரை இருவரிடமும் பேச்சில்லை. வீராவோ கோபத்தின் உச்சத்தில்… நிகிதாவோ தான் எந்த ஆபத்தும் இல்லாமல் தப்பிவிட்டோம் என நம்பமுடியாமல்.. அச்சத்தில் கார் இருக்கையில் ஒடுங்கி போய் உட்கார்ந்து இருந்தாள். அவ்வாறு அவளை பார்க்க.. பார்க்க… அவள் மேல் கோபம் அதிகமானது.

வீடு வந்தும் இறங்காமல் இருந்தவளை..”நிகிதா.. இறங்கு..” என சத்தமிட.. தூக்கி வாரி போட.. அவனை நிமிர்ந்து பார்த்தாள்.அவளை கைபிடித்து உள்ளே இழுத்து வந்தவன் பெரியவர்களை பார்த்ததும் நிதானமானான்.

“நீயே கூட்டிட்டு வந்துடட்டியா.. வீரா.. “என்ற தாத்தா.. நிகிதாவிடம் “போன் பண்ணியிருந்தா டிரைவரை அனுப்பி இருப்பேன்ல..”என்று சொன்னவர் அப்போது நிகிதாவை கவனித்தனர்.

“ஏய் நிகிதா.. என்னாச்சு” என்ற பாட்டியின் கேள்வியில் பேந்த பேந்த விழித்தாள். என்ன என்று சொல்வது..

“இல்ல எனக்கு போன் பண்ணினா.. நான் போவதற்குள்.. ஹோட்டலில் இருந்து வெளியே வந்து எனக்காக காத்திருக்கும் போது ஒரு தெரு நாய் கடிக்க
வந்திருக்கு..பயந்து ஓடி வரும் போது கீழ விழுந்திட்டா..” என்று ஏதோ கூறி சமாளித்தான்.

பெரியவர்களுக்கு தெரிந்தால் தாங்கமாட்டார்கள் பாவம் என மறைத்துவிட்டான்.

“எதுக்கு வெளிய எல்லாம் வந்து நிக்கற.. காலம் கெட்டு கிடக்கு..வீராவ வந்துட்டு கால் பண்ண சொல்லி இருக்கலாம்ல..”என்ற பாட்டியிடம்..

“அம்மாச்சி அவளே பயந்து போய் இருக்கா..”

“விடு மங்களா.. காலைல பேசிக்கலாம்.சரி போய் படுங்க..”என்றார் தாத்தா.

அவளை மறுபடியும் இழுத்து கொண்டு அறைக்கு வந்தவன்.. வந்த வேகத்தில் அவளை அங்கிருந்த சோபாவில் தள்ளினான்.

“இந்த சகவாசத்த எல்லாம் விட்டு ஒழினு சொன்னேன்ல.. கேட்டியா.. இப்ப என்னாச்சு பார்த்தியா..” என்று சீறி கொண்டு அடிக்க கையை ஓங்கி கொண்டு வர…

அவனின் கோபத்தில் இன்னும் பயந்து நடுங்கி போய்.. அவன் அடிக்கும் முன் அவன் கையை பிடித்துக்கொண்டு..

“இல்ல மாமா… அந்த ரூபேஷ் தான் ப்ரண்ட்ஸ எல்லாம் மறந்துட்டியானு கேட்டு அதை இதையும் சொல்லி.. நான் கில்டியா பீல் பண்ற மாதிரி பேசினான். ப்ரண்ட்ஸ பார்த்தும் ரொம்ப நாளாச்சுனு தான் போனேன்”

“பட்.. அவன் இப்படி செய்வான்னு நான் நினைக்கல..”

“சரி…. அவனோட ஹோட்டல் ரூம் வரைக்கும் எப்படி போன..” என கேட்க…

தன்னை சந்தேகப்படறானோ என கவலை கொண்டவள்.. மறுப்பாக தலை அசைத்தவாறு..

தயக்கத்துடன்..”என்னை ட்ரிங்ஸ் எடுத்துக்க சொன்னான்.” அவனின் கோபப்பார்வை கண்டு பேச்சு தடை பட…எச்சில் கூட்டி விழுங்கினாள். ..

பின் அவசரமாக …”இல்ல நான் எடுத்துக்கல.. அவன் போர்ஷ் பண்ணினான் தான்” என நடந்த அனைத்தையும் சொன்னாள். ஹோட்டல் அறையில் ரூபேஷ் நடந்து கொண்டதை சொல்ல முடியாமல் அழுகை வர திக்கி திணறி ஒருவாறு சொல்லி முடித்தவள் அவனை அணைத்து கொண்டு கதறினாள்

இவளின் நண்பர்களால் தான் இவளுக்கு இந்த கெட்ட பழக்கம்.. அதனால் வீட்டினர் எடுத்த நடவடிக்கை…தங்கள் வாழ்க்கை சிக்கலானது என்று வீராவுக்கு கோபம் வந்த போதும்…

அவள் கதறுவதை பார்த்தவனுக்கு மனது வலிக்கவே செய்தது.என்ன இருந்தாலும் ரத்த உறவல்லவா.. சிறு வயதில் இருந்தே பார்த்து வளர்ந்தவள்…

தன்னை போலவே அவன் கைகள் அவளை அணைத்திருந்தன. தேம்பி தேம்பி அழுபவளிடம் கோபத்தை காட்ட மனம் வராமல் ஆறுதல் படுத்தினான்.

“நிகிதா.. சொல்றத கேளு.. அழுகாத..”என்றவன் அவளை அழைத்து வந்து படுக்க வைத்து விட்டு பார்மல் டிரஸ்ஸில் இருந்தவன் ப்ராஷாகி வரலாம் என செல்ல… கையை பிடித்து நிறுத்தினாள்.

“என்னடி..” என்றான் திரும்பி பார்த்து..

“எனக்கு பயமா இருக்கு..என் கூடவே இருங்க மாமா..”

“ப்ராஷாகிட்டு வரேன் இரு”கையை விடுவித்து கொண்டு சென்றவன் சில நிமிடங்களில் வழக்கமான இரவு உடையில் வந்து படுத்தான்.

நிகிதா உடலை குறுக்கி கொண்டு உடல் நடுங்க விசும்பியபடியே இருக்க.. பார்த்திருந்த வீராவுக்கு மனம் தாளவில்லை. தன் மாமனின் செல்லமகள். அவனுக்கு தெரிந்து இவள் இப்படி அழுது பார்த்ததில்லை. அவளின் அருகே நகர்ந்து நெருங்கி படுத்தவன் அவளை அள்ளி தன் மேல் போட்டு கொண்டான். வஜ்ரம் பாய்ந்த தேக்கு போன்ற அவனுடைய அகன்ற.. வாட்ட சாட்டமான உடம்பில் அவள் ஒடிசலான.. பூவையான தேகம் அல்லி கொடி போல படர்ந்திருந்தது.

அவன் அள்ளி தன் மேல் போட்டு கொண்டதும் அவனின் மார்ப்புக்கு மத்தியில் அழுத்தமாக முகம் புதைத்து மேலும் விசும்ப… அவனோ அவள் முதுகை நீவி ஆறுதல் படுத்த முனைய.. அவனின் ஆறுதல் போதாது என்னும் விதமாக அவன் கழுத்தை கட்டி கொண்டு இறுக்கி அணைத்தாள். அவனோ மல்லாக்க படுத்து இருக்க.. அவனின் நேர் மேலே கவிழ்ந்து படுத்து இருந்தவளின் அணைப்பு அவனை தடுமாற வைக்க…

“நிகிதா.. ப்ளீஸ்…” என்றான் கெஞ்சுதலாக..

முடியாது எனும் விதமாக தலையாட்டி அவனுடைய கை இல்லாத டீசர்டை மேலே சுருட்டி விட்டு.. அவளுக்கு மிகவும் பிடித்த அவனுடைய மார்பு ரோமங்களை முகம் கொண்டு உரச.. “என் வீரா மாமா.. என் வீரா மாமா…” என புலம்ப… ஒரோர் வீரா மாமாவிற்கும் மார்பில் ஒரு செல்லகடி கடிக்க… கண் திறக்காத நாய் குட்டியாக அவன் மார்ப்பில் முட்டி மோதினாள். அவன் மார்ப்பே அவள் காதல் ஆட்சி செய்யும் இடமானது. அவனின் அவஸ்தையின் அளவு ஜெட் வேகத்தில் எகிறியது. இனி அவளை தீண்டாமல் முடியாது என்னும் நிலையில் அவன்.. உண்மையில் அந்த நேரத்தில் அவளுக்கும் அவனின் சாதாரண அணைப்பு.. ஆறுதல் வார்த்தைகள்.. பற்றவில்லை.அதற்கு மீறிய நெருக்கத்தை ஆறுதலுக்காக தேடினாள்.

அவளிடம் இருந்து தப்பிக்கும் மார்க்கமாக..

“நீ போய் நைட் டிரஸ் போட்டு வந்து படு.. ஜீன்ஸோடு படுக்காத.. போ..” என தன்னிடம் இருந்து விலக்க பார்க்க…

அவள் நகரவில்லை. அவனின் வார்த்தைகளுக்கு அவளின் மறுப்புகள் எல்லாம் மௌனமொழியாகவே இருக்க…அவளை தன்னில் இருந்து பிரிக்க பார்க்க.. இன்னும் இன்னும் பசையாக ஒட்டினாள்.

அவனின் நிலையோ மிக மோசம்.. பேரலையாக எழும்பும் உணர்வுகளை தன்னுள் அடக்க.. அடக்க.. நீரில் அழுந்த மறுக்கும் பந்து போல எதிர் விசையில் எகிறி கொண்டு மேலே கிளம்பியது.

அவளின் தேவையை உணர்ந்தவனுக்கு அதை பூர்த்தி செய்ய.. ஆசை கிளர்ந்த போதும்…அவனின் வரட்டு பிடிவாதமும்.. அவன் நினைத்து கொண்டு இருக்கும் பொருந்தாத வாழ்க்கை என்ற எண்ணமும் தடையாக வந்து நின்றன.

இரு மனங்கள் கூடிய சங்கமம் என்பது எந்த ஏற்ற தாழ்வுகளையும் தகர்த்தெறியும் என்ற நியதியை அறியாமல் அழகாக.. அன்பாக. ஆளவேண்டியவளை தள்ளி நிறுத்தப் பார்க்க.. அவன் தடைகள் எல்லாம் உடைப்பெடுக்கும் நிலையை உருவாக்கி கொண்டு இருந்தாள்.

அவன் மார்ப்பை சுற்றி சுற்றி விடாது முத்தம் கொடுத்து கொண்டு இருந்தாள் நங்கை. அவன் பாதத்தின் மேல் தன் பாதத்தை வைத்து…அவன் தோள்களில் தன் கைகளை ஊன்றி.. எக்கி எழுந்து.. அவனின் இதழை தன் இதழால் இடமிருந்து வலமும் வலமிருந்து இடமும் மாற்றி மாற்றி உரசி உரசியே சிக்கிமுக்கி கல்லாக அவனுள் காதல் தீயை பற்ற வைத்தாள்.

அவனின் பிடிவாதங்களை எல்லாம் அவளின் பிடித்தம் ஜெயிக்க.. சிறு சிறு அலையாக எழுந்த மோகங்கள் எல்லாம் ஆழி பேரலையாக எழுச்சி பெற…

தன் மேல் கிடந்தவளை புரட்டி கீழே போட்டு.. அவள் மேல் இவன் படர… நிகிதாவின் நயனங்களில் காதல் மின்ன.. மென்னகை பூக்க.. நம்ப முடியாமல் “மாமா” எதிர்பார்ப்போடு கணவனை பார்க்க…

“சும்மா இருந்தவனை உசுப்பேத்தி விட்டல்ல.. இனி வரும் சேதாரத்திற்கு நான் பொறுப்பில்லை.. பார்த்துக்கோ..” என்றான் குறும்பு புன்னைகையுடன்..

“ம்ம்ம்.. ஹாஹாங்.. அதையும் பார்க்கலாம்”என்று அவனை மேலும் உசுப்பேத்தி விட..

“உன் கொழுப்பை எல்லாம் இன்னைக்கு அடக்கறேன்டி” என்றான் உல்லாசமாக..

“வீராச்சாமி மச்சானுக்கு ஒருவழியாக வீரம் வந்துடுச்சு போல..” என்றாள் உதட்டை சுழித்து நக்கலாக..

அவளின் பேச்சின் நோக்கம்அறிந்தவனுக்கு மனதை மயிலிறாக வருட..

“திமிரா பேசற இந்த வாயை..” என்றவன் அவள் இதழ்களை இழுத்து கவ்வி சுவைக்க..

இதழ் சிந்தும் தேனை பருக… பருக..வயாகாரா ஜீஸ் குடித்தது போல கிறங்கி போனான்.

அடுத்து அவளை ஆவேசமாக ஆலிங்கனம் செய்தான். அன்று போதையில் அரங்கேறியது வீராவுக்கு எதுவும் நினைவில் இல்லை. இன்று சுய நினைவோடு தன் இல்லாளின் பேரழகை காண… இப்போது மது அருந்தாமலேயே போதை தலைக்கு ஏற… கிறுகிறுத்து போக…

அவன் ஆவேசமாகவே காதல் போர் தொடுக்க… எதிர்கொள்ள முடியாமல் திணறினாள். அவள் திணறும் போது எல்லாம் தலை கோதி.. முத்தம் வைத்து..

“அமுல் பேபி..அமுல் பேபி..” என கொஞ்ச..

“மாமா.. வீரா மாமா..”என கிள்ளையாக மிழற்ற…

இருவருக்குமே வாழ்நாளின் வசந்தமாக.. நிறைவான கூடலாக.. அரங்கேறியது.

அவன் காதலை அவன் உணர்ந்தானோ இல்லையோ.. நிகிதா உணர்ந்தாள். உணர வைத்து இருந்தான் நிகிதாவின் ஒவ்வொரு அணுவிலும் பதியுமாறு…

காதல் போதை தெளிய.. தெளிய.. மீண்டும் மீண்டும் மனைவியை நாடினான். வேண்டாம் என ஒதுங்கியவன் தான் இன்று வேண்டும்.. வேண்டும் என அடம்பிடித்து தனக்கு தேவையானதை நடத்தி கொண்டான்.

ஒரு கட்டத்தில் நிகிதா சோர்ந்து மயங்கும் நிலைக்கு வரவும் தான் விடுவித்தான். ரூபேஷினால் ஏற்பட்ட அதிர்ச்சி.. இரவு உணவு எடுத்து கொள்ளாதது.. வீராவின் ஆவேசமான ஆலிங்கனம்.. எல்லாம் அவளுக்கு லேசான மயக்கம் ஏற்பட..

தங்கள் அறையில் மினி ப்ரிட்ஜில் இருந்த ஜீஸை எடுத்து வந்து அவளுக்கு புகட்டி.. அவனும் சாப்பிடவில்லையே.. இப்போது தான் பசி தெரிய.. தானும் கொஞ்சம் குடித்துவிட்டு.. அவளை தன் மேல் சாய்த்து தட்டி கொடுத்து தூங்க வைத்து.. தானும் தூங்கி போனான்.

மையல் கொண்டு நங்கை பேதலிக்க..

மோகம் கொண்ட நாயகன் கிறங்க..

மன்மத தேசத்தில்..மயங்கும் பொழுதில்..

காதல் மழையில் நனைந்து…

மோக கடலில் மூழ்கி…

தாப அலை அடித்து செல்ல..

தீராத தாகம் தணிய… தணிந்து

உருகி கரைந்து போயினர்..

12 – புயலோடு பூவுக்கென்ன மோகம் Read More »

7F095FA0-6F54-4AE5-97B2-B57A9C8D7E48

11 – புயலோடு பூவுக்கென்ன மோகம்

11- புயலோடு பூவுக்கென்ன மோகம்

காஞ்சிபுரம் போயிட்டு வந்ததில் இருந்து நிகிதா வீராவிடம் தன் காதலை தடம் பதிக்கும் வேகம் கூடியது. அது வீராவிற்கு ஒரு அழுத்தத்தை கொடுக்க.. பிரிய வேண்டும் என்ற முடிவை துரிதப்படுத்தினான்.

ஏற்கனவே இவர்களுக்குள் நடந்த கூடலுக்கு பிறகு விலகி செல்லும் முடிவை செயல்படுத்த முயற்சித்தான்.நிகிதாவிடம் பேசி புரிய வைக்கலாம் என்றால் அவளோ புரிந்து கொள்ளாமல் இம்சை பண்ணுகிறாள் என கோபம் வந்தது.

இவர்கள் வீரா வீட்டிற்கு சென்ற போது.. நிகிதாவும் வருவாள் என எதிர்பார்க்காத அய்யாவு விசாலாவிற்கு அவ்வளவு மகிழ்ச்சி. விசாலா மருமகளை பார்த்ததும்…

“வாடா.. நிகிதா கண்ணு..” என கைபிடித்து உள்ளே அழைத்து செல்ல.. இவனை வாவென என ஒரு தலையசைப்பு கூட இல்லை. எப்போது இவன் சென்றாலும் இவனுக்கு வரவேற்பும் உபசரிப்பும் தடபுடலாக தான் இருக்கும்.

இன்று நிகிதாவை எதிர்பாராமல் பார்த்ததும் வீராவை கவனிக்க மறந்தார் விசாலா..வீராவின் முகம் சுண்டிவிட்டது. மகனை கவனித்த அய்யாவு தான் “வாய்யா.”என தோளில் தட்டி அழைக்கவும் முகத்தை சீராக்கி கொண்டான்.

அன்று முழுவதும் நிகிதா அத்தை அத்தை என விசாலாவின் பின்னாலேயே சுற்ற..ஏற்கனவே தம்பி மகளாக இருக்கும் போதே நிகிதாவை அவ்வளவு பிடிக்கும். மருமகளாக ஆன பின் அதுவும் இப்போ தன்னிடம் ஒட்டி கொள்ளவும் ரொம்பவே பிடித்துபோனது.

பொன்னியும் வந்திட.. அவளுடைய ஒன்றரை வயது மகனை ஆசையாக தூக்கி வைத்துக்கொண்டு விளையாடினாள். அவ்வப்போது வீராவை யாரும் அறியாமல் கள்ளப்பார்வை பார்த்து கொண்டு இருந்தாள்.

சிறிது நேரத்தில் அய்யாவுவும் வீராவும் தறிப்பட்டறைக்கு சென்றுவிட…

இவளையே கவனித்து கொண்டு இருந்த பொன்னிக்கு நிகிதா மனம் மாறிவிட்டாள் என்பதை புரிந்து கொண்டாள்.

ஆண்கள் வெளியே செல்லவும் பெண்கள் மாநாடு தொடங்கியது.

“ஓய்… என்ன என் தம்பிய சைட் அடிக்கறியா..”

சேட்டை செய்து தாயிடம் மாட்டி கொண்ட குழந்தையாக முழித்தாள். பதறி போய் பயந்து ஏதாவது சொல்வார்களா.. என பார்க்க..

அவளின் பதட்டத்தை பார்த்து ” ஏய் நிகிதா சும்மா கிண்டல் தான் பண்ணினேன். நான் கூட இவளுக்கு என் தம்பிய பிடிக்கலையானு கோபப்பட்டு இருக்கேன். உன்னை இப்படி பார்க்க சந்தோஷமா இருக்கு..”

விசாலா நிகிதாவிடம்”நீயும் சீக்கிரம் ஒரு பேரனோ… பேத்தியோ பெத்து குடு கண்ணு” ஆசையாக கேட்க…

பொன்னியும் “ஆமாமாம் சீக்கிரமே பெத்துக்கோ… இப்ப வேணாம்னு ஏதாவது தள்ளி வைச்சிருங்கிங்களா..” என கேட்க..

நிகிதாவோ முதலுக்கே மோசம் இது எங்க தள்ளி வைக்க…என ஏக்க பெருமூச்சு விட்டாள்.

“என்னடியம்மா..பெருமூச்சு பலமா இருக்கு.. அப்படி தானா.. நான் வேணா வீராகிட்ட பேசவா..”

“ஐயோ..அக்கா அப்படி எல்லாம் இல்லை.. அவர்கிட்ட ஒன்னும் பேச வேணாம்”

“ஓஹோ.. ஏன் நீயே பார்த்துக்குவியோ..” என மேலும் ஏதேதோ சொல்லி கிண்டலடிக்க… நிகிதா முகம் சிவந்து போனாள்.

கேலியும் கிண்டலுமாக பொன்னியும் நிகிதாவும் பேசி கொண்டு இருக்க.. விசாலா மீன் சமைத்து இருக்க.. அதுவும் நிகிதாவுக்காக காரம் குறைவாக செய்து இருக்க.. நன்றாக சாப்பிட்டாள்.

மாலை வரை இருந்து விட்டு கிளம்பிவிட்டனர். பயணம்.. அவன் வீட்டில் வாசம்… சாப்பாடு..என எங்கயாவது முகம் சுழிப்பாள் என வீரா பார்த்திருக்க..அவனின் எதிர்பபார்ப்பை எல்லாம் பொய்யாக்கினாள்.

வீரா வீட்டுக்கு சென்று வந்ததில் இருந்தே நிகிதாவிற்கும் தனக்கு வீராவை போல ஒரு குழந்தை வேண்டும் என்ற ஆசை வந்தது.

பிள்ளையாரை சுத்தினால் பிள்ளை வரம் கிடைக்காது புருஷனை சுத்த வேண்டும் என கிராமத்தில் ஒரு பேச்சு வழக்கு உண்டு. நிகிதாவும் புருஷனை சுற்றி தான் வருகிறாள். ஆனால் இவளையே சுத்தல்ல விட்டு வேடிக்கை பாராப்பவனை என்ன செய்ய….

இப்படியே நிகிதா நெருங்கவும்.. வீரா கண்டு காணமால் விலகுவதும்..ஒரே இழுபறியாக வாழ்க்கை சென்று கொண்டு இருக்க…

ஒருநாள் ரூபேஷ் நிகிதாவிற்கு போன் செய்தான்.

“நிக்கி … ஹவ் ஆர் யூ ? ஏன் இப்ப எல்லாம் ப்ரண்ட்ஸ மீட் பண்றதில்லை. எங்களை அவாய்ட் பண்ற.. எனி ப்ராப்ளம்” என கேட்க..

“நோ..நோ.. நத்திங் ரூப்ஸ்.. லிட்டில் பிசி..அதனால தான்.. நீ சொல்லு எப்படி இருக்க.. ப்ரண்ட்ஸ் எல்லாம் எப்படி இருக்காங்க..”

அவள் பேச்சு அவனுக்கு எரிச்சலை கிளப்ப.. இருந்தும் அதை குரலில் காட்டாமல்..

“நீ தான் எங்க கூட டச்லயே இல்ல..அப்புறம் எப்படி தெரியும்..” என்றான் குற்றம் சாட்டும் குரலில்…

அவன் பேச்சு அவளுள் லேசா குற்றவுணர்வை கிளப்ப…

“சாரி ரூப்ஸ்… ” சின்ன குரலில்…

“இட்ஸ் ஓகே.. எங்களை மறந்துட்டியோனு தான் வருத்தமா இருந்துச்சு..”

“என்ன ரூப்ஸ் இப்படி பேசற… எனக்கு கில்டியாகுது..”

அதானே எனக்கும் வேண்டும் என மனதில் நினைத்து கொண்டு நிகிதாவிடம்..

“லீவ் இட்… கம்மிங் ப்ரை டே.. எனக்கு பர்த்டே… எப்பவும் போல பார்ட்டி இருக்கு… ஹோட்டல் கீரின்பார்க்ல வந்திடு… கண்டிப்பா வரனும் நிக்கி…”

“கண்டிப்பா வருவேன் ரூப்ஸ்..” என அவள் வருவதை உறுதிபடுத்தி கொண்டே போனை வைத்தான்.

ரூபேஷ் பர்த்டே பார்ட்டிக்கு போகனும்.. எப்படி போறது..முதல் போல வீட்டில் பொய் சொல்லி விட்டு போக.. இப்ப இருக்கும் நிகிதாவால் முடியவில்லை. உண்மை சொல்லி பர்மிஷன் கேட்கவும் பயம்..இப்படியான சிந்தனைகளோடவே இரண்டு நாள் கழிந்தது.

அன்று வெள்ளிக்கிழமை வீரா பாட்டி இருவரிடமும் சொல்ல வேண்டும். போகாமல் தவிர்க்க முடியவில்லை. ரூபேஷின் பேச்சு அவளை போக வேண்டும் என்ற நிர்பந்தத்தை ஏற்படுத்தி இருந்தது.

வீராவிடம் கேட்க சந்தர்ப்பம் எதிர்பார்த்தவள் அவன் குளித்து தயராகி வரும் வரை அறையிலேயே காத்திருந்தாள். அலுவலகம் செல்ல தயராகி வந்தவன் சற்றும் இவளை கண்டு கொள்ளாமல் செல்ல..

“மாமா..”என்று அழைத்து அவனை நிறுத்தினாள். என்ன என்பது போல அவளை ஏறிட்டு பார்க்க..

“இல்ல..வந்து…”தயங்கியவளை அவன் முறைத்துப் பார்க்க…

“அது வந்து ரூபேஷ் பர்த்டே பார்டி கீரீன்பார்க்ல ஈவ்னீங்….. பார்டிக்கு இன்வைட் பண்ணான். போகவா…” என வேகமாக சொல்லி முடித்தாள்.

அவள் சொல்லியதை கேட்டவன் மேலும் முறைக்க.. அவனின் முறைப்பிற்கான காரணம் புரிந்தவளாக…

“இல்ல ட்ரிங் பண்ணமாட்டேன்.. ப்ராமிஸா பண்ணமாட்டேன்.இப்ப அதெல்லாம் இல்லை. ப்ரண்ட்ஸ் பார்க்க கூட போறதில்லை.பார்த்து ரொம்ப நாளாச்சா.. அதான் ஜஸ்ட் மீட் பண்ணி பேசிட்டு மட்டும் வரலாம்னு தான்” என்றாள் பயத்தோடு அவன் முகம் பார்த்து..

என்ன நினைத்தானோ… இவளை பிரிய நினைக்கும் தனக்கு அவளை கட்டுப்படுத்தும் அதிகாரம் இல்லை என நினைத்தானோ.. என்னவோ…சரி என தலையாடி விட்டு சென்று விட…

அப்பாடி என இழுத்து பிடித்த மூச்சை வெளியிட்டவள் அவனுக்கு டிபன் எடுத்து வைக்க.. பின்னோடு சென்றாள்.

பதினோரு மணிவாக்கில் பாட்டி தாத்தாவிற்கு செகண்ட் டோஸ் காபி எடுத்து சென்றவள்… அவர்களுக்கு கொடுத்து விட்டு அருகேயே அமர்ந்து கொண்டாள்.

இருவரும் காபி அருந்தி முடிக்கும் வரை அவர்களிடம் எப்படி பர்மிஷன் கேட்பது என தயங்கி யோசித்து கொண்டு இருக்க..

அவளை கவனித்து கொண்டு இருந்த பாட்டியே “என்ன நிகிதா..”என்க..

“அது வந்து கீரேனீ..”

“என்ன தயங்குறவ.. சொல்லு”

நிகிதா படபடவென எல்லாம் சொல்லி முடிக்க.. பாட்டி கோபத்துடன்..

“இப்ப தான..ஒழுங்கா இருக்கனு நினைச்சு சந்தோஷப்பட்டோம்.பழையபடி ஆரம்பிக்கறியா..” என கேட்க…

அவசரமாக.. மறுப்பாக..”இல்ல கீரேனீ..அப்படி எல்லாம் இல்லை.ப்ரண்டஸ பார்த்து ரொம்ப நாளாகுது. சும்மா பார்த்துட்டு வரலாம்னு தான்.. எப்படி போறனோ அப்படியே வந்திடுவேன் ப்ராமிஸா..”என்றாள்.

அவள் பயமும் பதட்டமும் அவள் பழையபடி செய்யமாட்டாள் என உணர்த்த..

தாத்தாவும்”மங்களா விடு.. அதான் பேத்தி அவ்வளவு தூரம் சொல்றால்ல.. போயிட்டு வரட்டும்” என்றவர் நிகிதாவிடம்..

“எத்தனை மணிக்கு போகனும் நிக்கி.. டிரைவர் கூட நம்ம வண்டியிலேயே போ.. எல்லாம் முடிச்சிட்டு கூப்பிடு கார் அனுப்பி வைக்கிறேன்” என்றார். நிகிதாவும் சந்தோஷமாக தலையாட்டினாள்.

மாலை கிளம்பி வந்தவள் பெரியவர்களிடம் சொல்லி கொண்டு கிளம்பினாள்.

“பத்திரம் நிக்கி.. சொன்னது நினைப்பு இருக்குல்ல..”என்று எச்சரித்த
பாட்டியிடம் சரி என்றாள்.

“நீ போயிட்டு டிரைவரை திருப்பி அனுப்பிடு.. முடிந்ததும் கால் பண்ணு.. நான் அனுப்பி வைக்கிறேன்” எனவும்…சொல்லி கொண்டு கிளம்பிவிட்டாள்

வெகு நாட்களுக்கு பிறகு நண்பர்களை பார்க்கவும்.. உற்சாகம் தொற்றி கொண்டது நிகிதாவிற்கு…

ரூபேஷ் கேக் வெட்ட.. நிகிதாவிற்கு தான் முதல் துண்டை ஊட்ட வந்தான். அதை லாவகமாக கையில் வாங்கி கொண்டாள். ரூபேஷின் முகம் ஒரு பிடித்தமின்மையை காட்டியது. நொடியில் முகத்தை திருத்தி கொண்டான். ஒருவருக்கு ஒருவர் கேக்கை முகத்தில் பூசி கொண்டு.. ஆட்டம் பாட்டம் என களைகட்டியது.

கொஞ்ச நேரத்தில் ட்ரிங்ஸ் வர.. நிகிதா வேணாம் என மறுக்க…

“ஓவ்.. நோ.. நிக்கி.. கமான் ஹேவ் இட்”என ரூபேஷ் சொல்ல…

“நோ.. ரூப்ஸ்.. நாட் இன்ட்ரஸ்ட்டட்..” என பிடிவாதமாக மறுத்துவிட்டாள். அவள் குடித்தால் தான் தன் திட்டம் நிறைவேறும் என வற்புறுத்த.. அவள் பிடிவாதமாக மறுக்க.. அவனுக்கு கோபம் கனன்றது. அதை மறைத்து கொண்டு போலியான சிரிப்புடன்..

“ஓகே பேபி.. யுவர் விஷ்..” என்றவன் ஒரு ஜீஸ் வரவழைத்து தன் கையாலேயே கொடுக்க வரும்போது டேபிளில் இடித்து.. கையில் இருந்ததை நிகிதாவின் மேலேயே கொட்டினான்.

உடேனே பதறிபோய் “ஓ.. நோ..சாரி.. சாரி நிக்கி..” என அவசரமாக ஒரு டிஷ்யூ எடுத்து அவளின் உடையை துடைக்க வர நாசுக்காக நகர்ந்து நின்றாள்.

“பரவாயில்லை ரூப்ஸ்.. ஐ வில் மேனேஜ்”

“இல்ல.. என்னோட மிஸ்டேக் தான் சாரி நிக்கி.. இப்படியே எப்படி உன்னால இருக்கமுடியும்..”

அவன் சொல்லவும் தான் நன்றாக தன்னை குனிந்து பார்த்தாள்.அவளுடைய ஹாப் ஒயிட் டாப்ஸில் அங்காங்கே திட்டுதிட்டாக கறை படிந்தது போல இருக்க.. பார்த்தவள் சங்கடத்துடன் முகம் சுழிக்க…

“நீ தப்பா எடுத்துக்கலைனா.. இங்க எங்களுக்கு கெஸ்ட் பிசினஸ் பீப்புள் வந்தா ஸ்டே பண்ண எப்பவும் ஒரு ரூம் இருக்கு.. அங்க வந்து டிரஸ் வாஷ் பண்ணிட்டு கொஞ்சம் டிரை ஆகற வரைக்கும் இரு..”

கள்ளம் கபடம் அறியாத நிகிதா அவன் பேச்சை நம்பி அவனோடு சென்றாள்.

அறையினுள் சென்றதும்”போய் வாஷ் பண்ணிவிட்டு வா நிக்கி.. நான் வெயிட் பண்றேன்” என்றான் நல்லவனாக…

பாத்ரூம்மில் டாப்ஸை கழட்டி வாஷ் செய்தவள் அங்கிருந்த ஷவர் கோட்யை போட்டு கொண்டு வெளியில் வந்து டாப்ஸை அங்கிருந்த டீப்பாய் மேல காய வைத்தாள்.

அங்கிருந்த ஷோபாவில் அமர்ந்து கொண்டாள். எதிரில் பெட்ல உட்கார்ந்து இருந்த ரூபேஷை பார்க்க கூட கூச்சமாக இருந்தது. என்ன தான் ஜீன்ஸ் மேல தான் கோட் போட்டு எங்கும் விலகாத மாதிரி நாட் போட்டு இருந்தாலும்… தலை குனிந்து அமர்ந்து இருந்தாள்.

அவள் அறியாமல் பார்வையால் துகிலுரித்து கொண்டு இருந்தான் ரூபேஷ். அவளுக்கு அருகே இருந்த மற்றொரு சோபாவில் வந்து அமர்ந்தான். மெல்ல அவள் கையை பிடிக்க.. என்ன தான் நண்பனாக இருந்தாலும் ஹோட்டல் அறையில்ஒரு ஆணோடு தனித்து இருக்க ஒரு பெண்ணாக மனதில் இனம் புரியாத பயம்…விதிர்விதிர்விதிர்த்து போனாள்.

“ஹேய்.. கூல்.. கூல்..ஜஸ்ட் பேசிட்டு இருக்கலாமேனு..”

“ம்ம்ம்..”

“ஹவ் இஸ் யுவர் மேரிட் லைப்”

“இட்ஸ் கோயிங் நைஸ்..”

நிகிதாவின் இந்த பதில் ரூபேஷ்கு உவப்பானதாக இல்லை.எரிச்சல் மேலிட..

“எப்படி உன்னால இப்படி சொல்ல முடியுது”

“ஏன் ரூப்ஸ்.. எனக்கும் முதல்ல பிடிக்கல தான்.. ஆனா மாமா.. மேன்லி.. ஹேண்ட்சம்..யூநோ வெரி கேரிங்.. சோ ஐ லவ் ஹிம் வெரி மச்” என கண்களில் காதல் மிக.. சொன்னவளை கண்டு வெறியானவன்…

“ஸ்டாப் இட்.. நிகிதா.. என்னால டால்ரெட் பண்ணமுடியல.. போயும்போய் அந்த கருவாயன.. இப்படி…டாமிட்”

“ஏன் கருப்பா இருந்தாலும்.. லுக் லைக் அ ஹுரோ..”

“ஏய்ய்.. என்னடி பெரிய ஹுரோ.. ஹேண்ட்சம் என உளறிகிட்டு இருக்க.. என்னைய விட பெரிய அழகா அவன்.. ம் சொல்லு..”என கத்தி கொண்டே எழுந்து அவள் முன் வந்து நிற்க..

அவன் கத்தியதிலேயே.. வெலவெலத்து போனவள் நடுங்கி போய் நிற்க.. கிட்டே நெருங்கி வந்தவன்…

“உனக்கு என்னை பார்த்தா ஹேண்ட்சமா தெரியலையா.. நானும் உன்னை இம்ப்ரஸ் பண்ண எவ்வளவோ டிரை பண்ணினேன். ஃபூல் உனக்கு அதெல்லாம் புரியவே இல்லை. சரி பேரண்ட்ஸ் கிட்டபேசி கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைச்சுகிட்டு இருந்தேன். ஆனா உன் பேமிலி அந்த கருவாயனுக்கு உன்னை மேரேஜ் பண்ணி வச்சிடாங்க..”

அவன் பேச்சில் அதிர்ச்சியாகி..மூளை மறுத்து போய் நின்றாள்.

“நானும் உன்கிட்ட பேசி எப்படியாவது வீட்டை விட்டு வெளியே வரவச்சு நான் நினைத்ததை நடத்திக்கலாம்னு பார்த்தேன்.ஆனா அந்த கிழவனும் கிழவியும் உன்னை பார்க்க விடலை போனை வாங்கி வைத்து கொண்டு பேசவும் விடலை”

“இப்ப அதெல்லாம் எதுக்கு .. எனக்கு உன் பியூட்டி நைட் எல்லாம் தூங்க விடாம டார்ச்சர் பண்ணுது.. ஒரு ஒன் நைட் ஜஸ்ட் ஒன்நைட் என் கூட பெட் ஷேர் பண்ணிட்டு போ.. ஒரு நைட் இந்த அழகை ரசித்து அனுபவித்தால் போதும்” அவளை இழுத்து அணைக்கவும்..

ரூபேஷ்ஷின் கை தன் மேல படவும் தான் சுரணை வந்தது நிகிதாவிற்கு.. அவனை நெட்டி தள்ளி கொண்டு விடுபட முயற்சித்தாள்.

அதில் ஏற்கனவே குடித்து இருந்தவன் அந்த போதையோடு நிகிதா மேல் கொண்ட போதையும் சேர்ந்து கொள்ள..வெறி கொண்டவன் போல.. அவள் மேல் துணியை பிடித்து இழுக்க.. அது அவன் கையோடு வந்தது. அவன் முன் ஸிலிப்போடு அரை குறை ஆடையில் நிற்க அசிங்கமாக இருக்க… தன்னை மறைத்து கொள்ள.. அவள் டாப்ஸை எடுக்கப் போக.. அவள் நோக்கம் அறிந்தவன் அவளுக்கு முன் சென்று அதை எடுத்து சுருட்டி தூக்கி எறிய… அது படுக்கைக்கு பின்புறம் சென்று விழுந்தது.

அதில் நிகிதா மனதளவில் சோர்ந்து போனாள். அவன் அவளின் சோர்வை பார்த்து வெற்றி களிப்பில் சிரிக்க…

“கமான் நிக்கி.. ஓவரா சீன் கிரியேட் பண்ணாத.. இதெல்லாம் இந்த காலத்துல ஜஸ்ட் காபி குடிக்கற மாதிரி.. என்ஜாய் பண்ணிட்டு போவியாம்..அத விட்டுட்டு ப்ளாக் அண்ட் ஒயிட் சினிமா ஹீரோயின் மாதிரி ரியாக்ட் பண்ற… ” என சொல்லி கொண்டே மெல்ல.. மெல்ல.. அவளை நெருங்கினான். அவனை பிடித்து தள்ளி விட்டு அறையை சுற்றி ஓட ஆரம்பித்தாள். வெறி நாயாக துரத்த தொடங்கினான்.

மனதும் உடலும் களைத்து போக.. இதுக்கு மேல் முடியாது என தெரிந்ததும் அழுகை வந்தது. அவள் கிட்ட நெருங்கி படுக்கைக்கு கையை பிடித்து இழுத்து செல்ல..எங்கிருந்து அவ்வளவு சக்தி வந்ததோ..அவனின் இடுப்புக்கு கீழே எட்டி ஒரு உதை விட்டாள். அதில் அவன் வலியில் சுருண்டு துடிக்க…

அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி குளியலறைக்குள் புகுந்து கதவை அடைத்தாள். அவளால் தாங்க முடியவில்லை. தான் நண்பன் என நினைத்திருக்க.. இப்படி ஒரு சாக்கடை புத்தியோடு.. அவன் தன்னிடம் பழகியிருக்கான் என நினைக்க… நினைக்க… நெஞ்சம் வலியில் துடித்தது. சற்று நேரம் முகத்தை மூடிக்கொண்டு அழுகையில் கரைந்தவள்…

இங்கிருந்து எந்த சேதாரமும் இல்லாமல் தப்பிக்க வேண்டும் என தோன்ற… அப்போது தான் அவளுக்கு வீரா ஞாபகம் வந்தது. உடனே தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்த போனை எடுத்து வீராவுக்கு அழைத்துவிட்டாள்.

வீரா அப்போது தான் தனது வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு கிளம்பி கொண்டு இருந்தான். இவள் அழைப்பை பார்த்தும் எரிச்சலோடு தான் அழைப்பை ஏற்றான்.

“மாமா.. மாமா.. என்னை காப்பாத்துங்க.. “என்று கதற…

முதலில் ஒன்றும் புரியவில்லை அவனுக்கு.. அவள் கதறல் ஏதோ ஆபத்து என உணர்த்த..

“ஏய். நிகிதா.. இப்ப எங்க இருக்க.. என்னாச்சு தெளிவா சொன்னா தான என்னால எதுனாலும் செய்ய முடியும்”

அவன் சொன்னது புரிய கண்களை துடைத்து கொண்டு தன்னை நிதானப்படுத்தி கொண்டு..

“மாமா இங்க.. இந்த ரூபேஷ் என்கிட்ட..” சொல்ல..மீண்டும் அழுகை வெடித்தது. அழுது தேம்பி கொண்டே..

“இங்க கீரின் பார்க்ல.. தேர்ட் ப்ளோர்ல.. ரூம் நம்பர் த்ரீ நாட் செவன்” என்க..

அவனோடு அறைக்கு எதுக்கு சென்றாள் என கோபம் வர… பல்லை கடித்து கொண்டு..

“லரேன் வை..” என போனை வைத்தவன் காரை எடுத்தவன் புயலாக வந்து கொண்டு இருந்தான்.

இங்கு குளியலறை கதவை தட்டி “ஏய் திறடி..” உடைக்க தொடங்கினான் ரூபேஷ்..

நிகிதா நடுக்கத்துடன் கால்களை கட்டி கொண்டு ஒரு மூலையில் ஒண்டினாள்.

வெறி கொண்ட நாயாக.. தன்னை வேட்டையாட துடிப்பவனிடம் இருந்து தன்னை காத்து கொள்ள முடியாமல்.. உயிரை கையில் பிடித்து கொண்டு நிகிதா..

வெறி நாயை கொன்று புதைக்கும் சிங்கமாக.. வந்து கொண்டு இருக்கும் வீரா..நிகிதா வெறி நாயால் கடித்து குதறப்படுவாளா…வீராவால் காக்கப்படுவாளா…. ?

11 – புயலோடு பூவுக்கென்ன மோகம் Read More »

F0625830-C006-4ABF-BB0A-BF0EE8284994

10 – புயலோடு பூவுக்கென்ன மோகம்

10 – புயலோடு பூவுக்கென்ன மோகம்

தண்ணிலவு அழகாக ஒளி வீசி கொண்டு இருக்க…தென்றலாக வருடும் காற்று.. என இரவு பொழுது ரம்மியமாக இருந்தது.

நிகிதா அறையில் ஏசி குளிர் மிதமான அளவில் அறையை நிறைத்திருக்க… தூக்கம் வராமல் இரண்டு ஜீவன்களுமே… வீராவிற்கோ நிகிதாவின் எண்ணம் புரிந்து தான் இருந்தது. பிரிந்து செல்வதில் சிக்கல் அதிகமாகி கொண்டு இருப்பதை உணர்ந்து தான் இருந்தான். ஆனால் என்ன செய்ய… அவனால் இந்த ஆடம்பரமான வாழ்க்கையில் ஒட்ட முடியவில்லை. நவ நாகரிக மங்கை நிகிதாவையும் பிடிக்கவில்லை. தன் தாயை போல எளிமையான மனைவி தான் அவனின் எண்ணமாக இருக்க…

விரும்பி படித்த படிப்பு… பிடித்த வேலை.. அதில் வெளிநாட்டு செல்லவேண்டும். ஒரு ஐந்து வருடங்கள் சம்பாதித்துவிட்டு திரும்பி வந்து தந்தையின் தொழிலை கைத்தறியில் இருந்து மாற்றி கையில் பணத்தை பொறுத்து பவர்லூம் அல்லது ஆட்டோலூம் போட்டு செய்யவேண்டும்.தந்தைக்கு ஓய்வு கொடுத்து அருகில் இருந்து பார்த்து கொள்ள வேண்டும். இதுவே அவனது வாழ்வின் லட்சியமாக இருக்க…

பெற்றவர்களும் குடும்பத்தினரும் அவன் மனதை அறியாமல் அவனிடம் கேட்காமல்.. அதிரடியாக எடுத்தமுடிவை இன்று வரை அவன் மனது ஏற்று கொள்ளவில்லை.

அதிலும் ராகவ்வின் தொழிற்சாலையில் உதிரி பாகங்கள் தயாரிக்கும் முறை.. அலுவலக கணக்கு வழக்கு எதுவும் அவனுக்கு பிடிபடவில்லை. அதுவே அவனுக்கு மிகப்பெரிய மன உளைச்சல்.

தொழில் வாழ்க்கை இரண்டும் அவன் எதிர் பார்ப்பிற்குள் அடங்கவில்லை. மனதின் அழுத்தம் தாங்க முடியாத நெருக்கடி.. அதில் இருந்து விடுபட.. என்ன செய்ய எப்படி செய்ய… என சதாசர்வகாலமும் யோசனை..

நிகிதாவின் மாற்றம் அவனின் எண்ணத்தை சீக்கிரம் செயல்படுத்த தூண்டியது.

அதே சிந்தனையில் தூக்கம் வராமல் சீலிங்கை வெறித்து பார்த்தபடி படுத்திருந்தான்.

அருகில் படுத்திருந்த நிகிதாவிற்கு அவனின் அணைப்பின்றி உறக்கம் கொள்ளவில்லை. அவன் எப்ப தூங்குவான் என அவனையே பார்த்து கொண்டு இருந்தாள்.முழித்திருக்கும் போது அவனை அணைத்திருக்க ஆசை தான் ஆனால் அவனை நெருங்க பயம் கொண்டாள்.

வெகு நேரமாகியும் அவன் உறங்கவில்லை.இவளுக்கு என்ன செய்வது என தெரியவில்லை. கொஞ்சம் தைரியத்தை வரவழைத்து கொண்டு அவனை நெருங்கி அணைத்தாற் போல… மெதுவாக அவனின் நெஞ்சில் தலை வைத்து படுக்க…

அவளிடம் உண்மையை சொல்லி பிரிந்து விடுவது தான் நல்லது என நினைத்தவன்.. மெல்ல “நிகிதா” என அழைத்தான்.

அவன் நெஞ்சில் தாடையை பதித்து அவன் முகம் நோக்கி “சொல்லுங்க மாமா..” என்றாள்.

இவனும் அவளின் முகம் பார்த்து வெகு நிதானமாக சிறுபிள்ளைக்கு சொல்வது போல..

“என் லைப் ஸ்டைல்.. படிப்பு..வாழ்க்கை.. இதெல்லாம் வேற.. உன்னுது எல்லாம் வேற.. நான் அப்ராட் போயி ஐந்து ஆறு வருசம் சம்பாதிச்சு.. இங்க வந்து எங்கப்பா தொழிலை இம்புரூவ் பண்ணனும்…பவர்லூம் இல்ல ஆட்டோ லூமா.. எங்கப்பாவுக்கு ரெஸ்ட் கொடுக்கனும். உன்னாலயும் இந்த லக்ஸரி லைப்பை விட்டு வரமுடியாது. எனக்கு சாதாரண மிடில் கிளாஸ் லைப் தான் பிடிக்கும்… இப்படி இருக்கும் போது.. நாம எப்படி சேர்ந்து வாழ முடியும் நீயே சொல்லு.. நாம நல்ல நண்பர்களாக பிரிஞ்சிடலாம். நாம அத்தை மகன்.. மாமா பொண்ணு அந்த உறவோட இருந்துகலாம். மியூச்சுவலா பிரிஞ்சிடலாம் அது தான் இரண்டு பேருக்கும் நல்லது” என்றான்.

அவன் சொல்ல..சொல்ல..நிகிதாவின் அகத்தில் அத்தனை ஒரு சொல்லமுடியாத வேதனை. எப்படியும் மாமனோடு வாழ்ந்திடலாம் என நினைத்திருக்க.. அவனோ பிரிவை பற்றி பேச.. அவள் காதலை தீ வைத்து பொசுக்கியது போல..மனம் உடல் எல்லாம் காந்தியது..

அழுகை தாங்காமல்.. அவனை விட்டு எழுந்து படுக்கையை விட்டு சென்று தரையில் படுத்துக் கொண்டாள். கவிழ்ந்து படுத்து தேம்பி தேம்பி அழுதாள்.

முதுகு குலுங்குவதிலேயே அவள் அழுகிறாள் என்பதை உணர்ந்தவன் மனது கேளாமல் அவள் அருகில் வந்து அமர்ந்து..

“நிகிதா.. அழுகாத.. ப்ளீஸ்..”

இப்போது அவள் அழுகை கூடியதே தவிர குறையவில்லை. நான் சொல்லவறது புரியாமல் இப்படி பண்றாளே என மனதில் சலித்து கொண்டான்.

“நாம இரண்டு பேரும் சேர்ந்து வாழ முடியாது. சொன்னா புரிஞ்சுக்கோ.. வாழ்ந்தாலும் சரி வராது..”

மீண்டும் அவன் பிரிவை பற்றியே பேச..மனம் நோக.. எழுந்து அமர்ந்து..

“பிரியனும்னு நினைக்கறவங்க.. அன்னைக்கு.. அன்னைக்கு.. எப்படி.. நீங்க.. என்கிட்ட..”சொல்ல முடியாமல் தவிப்புடன் அவன் முகம் பார்க்க…

அவள் எதை கேட்கிறாள் என சரியாக புரிந்து கொண்டான். தலை கோதி.. அவள் முகம் பார்க்க முடியாமல்.. எதிரில் இருந்த சுவற்றை பார்த்தவாறே..

“அன்னைக்குனா..என்னைக்கு.. என்ன..” என்றான் புரியாத பாவனையில்.. தெரிந்தும் தெரியாத பாங்கில்…

அவனை சரியாக இனம் கண்டு கொண்டாள். எப்படி தெரியாத மாதிரி பேசறான் பாரு.. திருடா.. அப்பவும் அவன் மேல் கோபத்திற்கு பதில் காதல் தான் வந்தது.

“மாமா.. உங்களுக்கு தெரியும் எதை சொல்றேனு..” என்றாள்.

இனி மறைத்து பேசி பயனில்லை என…

“அன்னைக்கு போதையில் ஏதோ தவறாகிவிட்டது. ஆனால் அது கூட எனக்கு சரி வர நினைவில்லை. அது விபத்து மாதிரி .. அதுக்காக ஒத்து வராத வாழ்க்கையை பிடித்து தொங்கி கொண்டு இருப்பது நியாயமில்லை”

அது விபத்தா..என அதிர்ந்தாள். அதானே என் வாழ்க்கையை எனக்கு உணர்த்தியது. இவங்க இப்படி சொல்றாங்களே..மனம் நொந்து போனாள்.. மீண்டும் அழுகையில் கரைய….

இவளுக்கு எப்படி புரிய வைக்கறது என தெரியாமல்.. சரி இன்னைக்கே எல்லாம் வேண்டாம். மெல்ல மெல்ல சொல்லி புரிய வைக்கலாம் என எண்ணி..

“சரி… அழுகாத.. இப்ப எதுவும் பேச வேண்டாம்.. அப்புறம் பார்த்துக்கலாம். வந்து படுத்து தூங்கு..”

அப்ப… கொஞ்ச கொஞ்சமா மாமா மனச மாத்திடலாம் என ஆசுவாமானாள்.

“இன்னும் என்ன யோசிச்சிட்டு இருக்க..பெட்ல வந்து படு..” என எழுந்து நின்று இவளையும் கூப்பிட…

“இல்ல.. நான் இங்கயே படுத்துகிறே..” என்றாள் முகத்தை தூக்கி வைத்து கொண்டு..

“ஏன்..ஏசி சில்னெஸ் உடம்புக்கு ஆகாது.. வந்து மேல படு வா..”

“இல்ல.. பெட்ல படுத்தா.. தூக்கம் வராது”

“அது எப்ப இருந்து..”

கொஞ்ச நாளா அப்படி தான்”

அவனுக்கு என்ன சொல்கிறாள் என புரிந்து விட..

“உனக்கு எப்படி படுத்தா தூக்கம் வருமோ.. அப்படியே படுத்துக்கோ..” என மறைமுகமாக சம்மதம் தர..

நம்பமாட்டாமல் அவனைப் பார்க்க.. சிறிய புன்னகையுடன் இவளையே பார்த்து கொண்டு இருந்தான்.

உடனே படுக்கைக்கு ஓடிவிட்டாள். இவனும் சென்று படுக்க.. உடனே அவனை ஒட்டி கொண்டு படுத்தாள்.

அவனை அணைத்த சில நிமிடங்களில் நிகிதா உறங்கிவிட.. வீராவும் மெல்ல.. மெல்ல.. கண்யர்ந்தான். அவனுக்கும் தூக்கம் பிடிபட.. அவளுடைய அருகாமை தேவைப்பட்டதோ.. என்னவோ..

இதுவே இரவில் தினசரி வழக்கமானது. வீராவும் நிகிதாவை தள்ளி நிறுத்த தான் நினைக்கிறான்.ஆனால் அவளாக விரும்பி நெருங்கி வருவதை அவனால் தடுக்க முடியவில்லை. அந்த ஒருநாள் தான் அவன் சம்மதம் எதிர்பார்த்து இருந்தாள். அடுத்து வந்த நாட்களில் தானாகவே அணைத்து படுத்து கொண்டாள் அவளின் நெருக்கம்.. அதற்காக அவள் எடுத்து கொள்ளும் உரிமை.. எல்லாம் வீராவிற்கு எரிச்சலாக இருந்த போதும்.. அதையும் மீறி மனதில் ஒரு இதம் பரவ தான் செய்தது. அது எதனால் என அவன் சரியாக உணரவில்லை.

நாளுக்கு நாள் நிகிதா தனது உரிமையை வீராவிடம் தானாகவே எடுத்து கொண்டு நெருக்கத்தை அதிகப்படுத்தினாள்.

அன்று ஒருவிடுமுறை நாளாக இருக்க… காலை உணவு நேரம் வீராவுக்கு அருகில் இருந்து உணவு பரிமாறி கொண்டு இருந்தவளிடம் ஆரு “அக்கா.. சாம்பாரில் உப்பு கம்மியா இருக்குகா..” என்க

“அப்படியா..” என்றவள் வீராவின் தட்டில் அவன் தோசையை பிய்த்து சாம்பாரில் பிரட்டி கொண்டு இருந்ததை பிடுங்கி வாயில் போட்டு கன்னத்தில் அதக்கி..மெல்ல மெல்ல மென்று ரசித்து ருசித்து ஒவ்வொரு பிசிறாக விழுங்கினாள்.

தன் கையில் இருந்ததை பிடுங்கி அவள் வாயில் போடவும் அவளை முறைத்து பார்த்தவனின் பார்வை கொஞ்ச கொஞ்சமாக மாறி… கண்களை மூடி.. நாக்கை சுழற்றி சுழற்றி அவள் தின்ற அழகில் ஒரு நிமிடம் வீரா சொக்கி போனான்.

அடுத்த நொடி தனது வரட்டு பிடிவாதத்தை இழுத்து பிடித்தான். இடறிய மனதை இறுக்கினான்.

“அக்கா..ஆஆ..”என்ற ஆருவின் சத்தத்தில்… கண்ணை திறந்து ஆருவை பார்க்க…ஆரு முறைக்க…

“ஹீஹீ..ஹீ.. உப்பு கம்மியா தான் இருக்கு..”என அசடு வழிந்தாள்.

ஆரு தலையில் அடித்து கொண்டு..”உப்பை போடு..”என்றாள்.

இது எதையும் கண்டு கொள்ளாத பாவனையில் சாப்பிட்டு எழுந்து மேலே சென்று விட்டான்.

அவன் சென்றதும் வேக வேகமாக சாப்பிட்டு விட்டு பாட்டியிடம் வந்தவள்

“கீரேனீ.. நானும் காஞ்சிபுரம் போறேன்.மாமாகிட்ட சொல்லுங்க.. என்னையும் கூட்டிட்டு போக சொல்லுங்க..” என்றாள் கொஞ்சலாக…

மாதத்தில் இரண்டு தடவை ஞாயிறு காலை காஞ்சிபுரம் சென்று பெற்றவர்களை பார்த்து விட்டு இரவு வந்துவிடுவான்.

இதுவரை நிகிதாவை கூட்டிக் கொண்டு போனதில்லை. அவன் மட்டுமே சென்று வருவான்.

அவனின் மேல் பித்தான பிறகு அவனை சார்ந்தவர்களும்… சார்ந்தவைகளும் பிடித்தமாகி போனது நிகிதாவிற்கு..

வீரா வரவும் பாட்டி ” வீரா.. நிகிதாவையும் கூட்டிட்டு போ..”

உடனே நிகிதாவை முறைத்தான்.

“கீரேனீ.. முறைக்கறாங்க..”என சிறு பிள்ளையாக புகார் வாசித்தாள்.

“வீரா..” பாட்டி கண்டிப்பான குரலில்..

“அம்மாச்சி… நான் பஸ்ஸில் போறேன். இவளை எப்படி..”

” பஸ்ஸா இருந்தாலும் பரவாயில்லை” என்றாள் அவசரமாக.. எங்கே விட்டுட்டு போயிடுவானோ என …

அவளை திரும்பி ஆச்சரியமாக பார்த்தான். நிகிதா பிறந்ததில் இருந்து எங்கும் காரிலேயே சென்று பழக்கப்பட்டவள்..

இவர்களை பார்த்து மெல்ல சிரித்த பாட்டி.. “வீரா..அது தான் வீட்டில் நாலு கார் இருக்குதுல.. அதுல போகாம பஸ்ஸில் எதுக்கு.. நானும் சொல்லிகிட்டே இருக்கேன்.. நீ கேட்கறதே இல்லை”

வீரா ஒன்றில் தெளிவாக இருந்தான்.காஞ்சிபுரம் செல்லும்போது ராகவ்வின் மருமகனாக அல்லாமல் அய்யாவுவின் மகனாக தான் இருக்கவேண்டும் என..

அதனால் எப்பவும் பஸ்ஸில் தான். பாட்டி சொல்லியும் கேட்டதில்லை. இன்று நிகிதா வரேன்னு சொன்ன போதும் தனது வழக்கத்தை மாற்றி கொள்ளவில்லை.

பஸ்ஸிலேயே வரட்டும்.. அப்போ தான் இவ அடங்குவா.. வாடி வந்து அவதிபடு.. அப்ப தான் என்கிட்ட டிஸ்டென்ஸ் மெயின்டெயிண் பண்ணுவ… என நினைத்து கொண்டு அவளை கூட்டிட்டு போக ஒத்து கொண்டான்.

அவன் சரி என்றதும் துள்ளி கொண்டு அறைக்கு ஓடினாள். அவனோடு முதல் முறையாக வெளியே செல்கிறாள். சொல்வ முடியாத ஆனந்தம் அவளுள்..

வார்ட்ரோப்பை திறந்தவள் வில்லேஜ் பீப்புள் கொஞ்சம் குளோஸ்டு நெக்… சிம்பிளாக தானே டிரஸ் பண்ணுவாங்க.. என யோசித்து ஒரு சாதாரண காட்டன் சுடிதாரை அணிந்து கொண்டு..

நன்றாக மேக்கப் செய்ய ஆசை தான். எங்கே நேரம் ஆனால் விட்டு சென்று விடுவினோ…. என பயந்து முகத்திற்கு சன்ஸ்கீரின் லோஷன் மட்டும் போட்டு வழக்கமாக வைக்கும் கறுப்பு பொட்டு வைத்து கொண்டு.. ஓடி வந்தாள்.

பாட்டிக்கு திருப்தி. எப்படி வருவாளோ என பயந்து மாடிபடியை பார்த்து கொண்டு இருந்தவருக்கு..பேத்தியின் எளிமையான அலங்காரம் பார்த்தும் பரம திருப்தி.

“அம்மாச்சி நாங்க கிளம்புறோம்”என சொல்லி வீட்டின் தெரு முனைக்கு வந்து ஒரு ஆட்டோ பிடித்து.. பஸ் ஸ்டாண்ட் வந்து காஞ்சிபுரம் பஸ்ஸில் ஏறி இருவர் அமரும இருக்கையில் அமர்ந்தனர்.

பஸ் கிளம்பவும் எதிர் காற்று முகத்தில் மோத.. பல தரப்பட்ட மனிதர்கள்.. பக்கத்தில் தன் மாமனோடு நெருங்கி உட்கார்ந்து இருப்பது என அந்த பஸ் பயணத்தை மிகவும் ரசித்தாள். நடுவே மாமன் அறியாமல் இருவரையும் சில பல ஷெல்பிக்கள்..

நக நுனியில் கூட அழுக்கு படாதவள்..அவள் வாழ்வது.. பழகுவது எல்லாம் ஹை சொஸைட்டி.. ஹைடெக் லைப்.. எங்கயாவது பிடிக்காமல் முகம் சுளிப்பாளா.. என பார்த்திருந்தவன்.. அவளின் குதூகலத்தில்.. குழம்பி போனான்.

காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இறங்கி வெளியே வந்தனர். வெயில் சுரீரென அடிக்க.. வெயில் படாத சருமம் ரோஸ் நிறத்தில் சிவந்து.. வியர்க்க… ஹேண்ட் டிஷ்யுவில் முகத்தில் இருந்த வியர்வையை ஒத்தி எடுத்தவாறு அவனோடு வந்தவளின் உற்சாகம் மட்டும் குறையவில்லை.

இதை எல்லாம் பார்த்தவனுக்கு இவளுக்கு என்ன தலைஎழுத்தா.. இப்படி என்னோடு வரனுமா.. மனதோடு சலித்து கொண்டான்.

வெளியில் வந்தவன் சுற்றி முற்றி யாரையோ தேட.. இரண்டு நண்பர்கள் இரண்டு பைக்கில் வந்து அவனருகே நிறுத்த.. ஒன்றை வாங்கி கொண்டு நிகிதாவை ஏற சொல்ல..

அவள் இருபக்கமும் கால்களை போட்டு அவினின் இடுப்பில் இரு பக்கமும் கை போட்டு அணைத்து கொண்டு அமர்ந்தாள்.

அவனுக்கு பெரும் அவஸ்தையாக இருந்தது.

“ம்ப்ச்… நிகிதா கையை எடு..”

“மாமா… இதான் பர்ஸ்ட் டைம் பைக் ரைடிங் எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு” என்றாள் பாவம் போல் முகத்தை வைத்து கொண்டு..

அதற்கு பிறகு வீரா ஒன்றும் சொல்லவில்லை. நிகிதா குஷியாகி.. இன்னும் அவனை இறுக்கி அணைத்தாள். ஒன்றும் சொல்ல முடியாமல் பல்லை கடித்தான்.

சொல்ல முடியாத

சங்கடத்தில் அவன்..

சொல்லில் அடங்காத

ஆனந்தத்தில் அவள்..

விலகி செல்லும்

முனைப்பில் அவன்..

இரும்பை ஈர்க்கும்

காந்தமாக அவள்…

10 – புயலோடு பூவுக்கென்ன மோகம் Read More »

6757D25E-7922-45BC-8481-4B2F97C65322

9 – புயலோடு பூவுக்கென்ன மோகம்

9 – புயலோடு பூவுக்கென்ன மோகம்

நிகிதா செயலில் வீராவின் மனதில் லாலிபாப் மிட்டாயின் தித்திப்பு அந்த சிறு தித்திப்பு மனதின் ஒரு ஓரத்தில் இருந்து கொண்டு இருக்க…உற்சாகமாக வேலை பார்த்தான்.

மதிய உணவுக்கு வருவான் என எதிர்பார்த்தாள். அவன் வரவில்லை. பாட்டி சொன்ன மாதிரி வேலை இருக்குமோ.. அழைக்கலாமா..திட்டுவாரோ.. என யோசித்து நேரம் கடத்தினாள்.மாலை நான்கு மணி வரை பார்த்து விட்டு இவள் சாப்பிட்டு விட்டு வந்து அமர்ந்து கொண்டாள்.

நேரம் கடக்க..கடக்க..வீராவை பார்க்க வேண்டும் என ஆசை அதிகமாகி கொண்டே போக.. ஹாலில் சோபாவில் அமர்ந்து கொண்டுவருவாரா என வாசலைப் பார்க்க.. அழைக்கலாமா என போனைப் பார்க்க.. என இருக்க…

ஒரு குட்டித் தூக்கம் போட்டு விட்டு வந்த பாட்டி இவளை பார்த்து ஆச்சரியமாகி..

“நிகிதா.. என்ன பண்ணிட்டு இருக்க…”

சோகமாக முகத்தை வைத்து கொண்டு

“மாமா இன்னும் வரல.. கீரேனீ”

பாட்டி பக்கென சிரித்து விட்டார்.

பாட்டியின் சிரிப்பில் முகம் சிவக்க… “போங்க கீரேனீ சிரிக்காதிங்க..”சிணுங்கினாள்.

“எதுக்கு இப்படி வாசலையே பார்த்துட்டு இருக்கற..”

“மாமா இன்னும் சாப்பிட வரலையே..”

பாட்டி கடிகாரத்தை பார்த்து விட்டு “அஞ்சு மணியாகுது. அவன் இவ்வளவு நேரமாகவா சாப்பிடாம இருப்பான்.ஏதாவது ஹோட்டல்ல வாங்கி சாப்பிட்டு இருப்பான்.நீ இன்னும் சாப்பிடலையா..”

“சாப்பிட்டுடேன்.ஆனா மாமாவ இன்னும் காணலயே..” என்றாள் ஒரு ஏக்க பெருமூச்சுடன்…

ஆஹா.. பேத்தி செம்ம பார்ம்ல இருக்கா.. ஆனா இந்த வீரா பையன் அதை புரிஞ்சுக்காம சுத்திகிட்டு இருக்கானே..என வீராவை மனதோடு திட்டி கொண்டு…

“அவன் வர எட்டு மணியாகும்.போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு.. ஏழு மணி போல கிளம்பி வா”என சொல்ல..

இரண்டு முறை வாசலை திரும்பி திரும்பி பார்த்தவாறே தனதறைக்கு சென்றாள். அடுத்த ஒருமணி நேரத்தில் கீழே வந்து உட்கார்ந்து கொண்டாள்.

அழகாக தன்னை அலங்கரித்து கொண்டு பூச்சரம் சூடி அமர்ந்திருந்தவளை பார்த்து ஆராத்யா விசித்திரமாக பார்த்தாள்.

பாட்டியிடம் தமிழ் பாடம் படிக்க வந்த ஆராத்யா நிகிதாவை கண்டு விழி அகல பாராத்தாள்.

“அக்கா..நீயா இது..” என நிகிதாவை சுற்றி வந்து கேலிப் புன்னகையோடு கேட்க…

“ச்சீ… போடி..”என்றாள் வெட்கத்துடன்..

“ம்ம்.. அக்கா… சூப்பர்.. சூப்பர்..” என அவள் வெட்கத்தை பார்த்து சொல்லி சிரிக்க… பாட்டி தாத்தா இருவரும் கூட சேர்ந்து சிரிக்க..

“கீரேனீ..தாத்தா…நீங்களும் அவ கூட சேர்ந்து என்ன ஓட்டறிங்களா..” என்றாள் போலி கோபத்துடன்..

“பின்னே என்னக்கா..ஓவர் நைட்ல.. நீ ஓவர் ஸ்மார்ட்டாயிட்டா.. நாங்க என்ன தான் பண்றது சொல்லு..”என்றாள் பொய்யாக முகத்தை சோகமாக வைத்து கொண்டு..வராத கண்ணீரை துடைத்து கொள்ள…

நிகிதா ஆராத்யாவை அடிக்க துரத்த… அக்காவிற்கு போக்கு காட்டி கொண்டு தங்கை ஓட..

“நில்லு ஆரு..”

தமக்கையின் கைகளுக்கு சிக்காமல் ஓட..பேத்திகளின் விளையாட்டை பார்த்த பெரியவர்கள் கண்கள் கலங்கி விட…

வீட்டில் எப்போதும் இது போல கலகலப்பு இருந்ததில்லை. அவரவர் வேலை.. அவரவர் நேரம் காலம் என இருக்க…

தன் நண்பர்களின் வீடுகளை பார்த்து குடும்ப சூழலுக்காக ஏங்கும் ஆராத்யா தந்தை டியூஷன் செல்ல சொன்ன போது.. மறுத்து விட்டு மாலையில் தாத்தா பாட்டி அமர்ந்து பேசி கொண்டு இருக்க.. அவர்கள் அருகே அமர்ந்து படிப்பாள்.

எப்பவும் வீடு ஒருவித அமைதியுடன் தான் இருக்கும்.

உடனே ஆராத்யா ஓடி வந்து பாட்டியை அருகே அமர்ந்து தாடையை பிடித்து “அச்சோ கீரேனீ என் ஸ்வீட்டில.. க்யூட்டீல.. “என கொஞ்ச…

“போடி போக்கிரி..” என சேலை தலைப்பால் கண்களை துடைத்து கொள்ள…

“அதென்ன வீரா மாமா கொஞ்சினா மட்டுமே ஒன்னும் சொல்லமாட்டிங்க.. அதே நான் கொஞ்சினா திட்டறது..”

தாத்தாவின் அருகே அமர்ந்து அவரின் கைகளை ஆறுதலாக பற்றிய இருந்த நிகிதா வீரா கொஞ்சியது இவளுக்கு எப்படி தெரியும் என பார்க்க..

“என்னக்காக அப்படி பார்க்கற…”

ஒன்றுமில்லை என்பதாக தலையாட்ட.. தமக்கை கேட்கவில்லை என்றாலும் ஆராத்யா சொன்னாள்.

“மாமா.. மாசம் ஒரு தடவையாவது தாத்தாவையும் கீரேனியும் பார்க்க வருவாங்க… அப்ப கீரேனிய இப்படி தான் கொஞ்சுவாங்க..”

தான் வீட்டில் இருந்திருந்தால் தானே இதெல்லாம் தெரிந்திருக்கும் என நினைத்து கொண்டாள்.

வீராவின் மேல் கொண்ட காதலால் இன்னும் இன்னும் அவனை பற்றி தெரிந்து கொள்ள ஆவல் கொண்டாள்.

இரவு வீரா வரும் வரை நால்வரும் ஏதோ சலசலவென பேசி கொண்டே இருந்தனர்.ஆராத்யாவிற்கு மனசில் அவ்வளவு சந்தோஷம்.

இரவு எட்டு மணி ஆகியும் வீரா வராததால் நிகிதா அவனுக்கு அழைத்தாள். அப்போது தான் வேலையை முடித்து கிளம்பி காரில் வந்து கொண்டு இருந்தவன் போனின் மணி சத்தத்தில் அழைப்பது யார் என பார்த்தவன் நிகிதா என திரை ஒளியில் மின்ன…அவளது எண்ணை நிகிதா என பதிவு செய்து கொண்டான் அவள் முதன்முதலாக அழைக்கும் போதே.. அழைத்தது அவள் தான் என தெரிந்ததும் அழைப்பை ஏற்கவில்லை. அதுவே அவளுக்கு கம்ப்யூட்டர் வாய்ஸாக வரவும்..மீண்டும் முயற்சித்தாள். முழுவதும் போய் கட்டாகும் கடைசி நொடியில் எடுக்காவிட்டால் மீண்டும் அழைப்பாளோ என எண்ணி எடுத்தான்.

“ஹலோ.. மாமா.. வீட்டுக்கு இன்னும் வரலயே.. வந்துடுவிங்களா.. லேட்டாகுமா…”அவன் எடுத்ததும் அவனை பேசவிடாமல் ஒரே மூச்சில் இவள் பேச…

மாமா என்ற அழைப்பே இவனுக்கு எரிச்சலை கிளப்ப..மேலும் அவளின் உரிமையான பேச்சு வேற இவனின் எரிச்சலில் எண்ணையை ஊற்ற.. உள்ளுக்குள் திகுதிகுவென எரிந்தது.

“வரேன் வைடி”என்று போனை அணைத்து டேஷ்போர்டில் தூக்கி போட்டவன்..ம்கூம் இவ சரியில்லை.. இவ இப்படியே போனால் நமக்கு நல்லதில்லை.. பிரச்சினை இல்லாமல் இவளை விட்டு பிரிஞ்சி போயிடனும். அதுக்கு இவகிட்ட டிஸ்டன்ஸ் மெயின்டென் பண்ணனும் என நினைத்து கொண்டு வீடு வந்து சேர்ந்தான். காலையில் இருந்தே இருந்த உல்லாசமான மனநிலை போய் ஒரு எரிச்சல் வந்து உட்கார்ந்து கொண்டது.

வீட்டினுள் நுழைந்தவன் பேத்திகளோடு பேசி கொண்டு இருந்த பெரியவர்களின் முகத்தை தான் முதலில் பார்த்தான். அதில் என்றுமில்லாத அளவுக்கு பூரிப்பு. அதே அவனின் எரிச்சலில் சற்று தண்ணீர் தெளிக்க..கொஞ்சம் அடங்கியது.

பாட்டியின் அருகில் அமர்ந்தவன் “என்ன அம்மாச்சி.. ஒரே குதுகலாமா இருக்கறிங்க போல..ப்யூட்டி கூடி தெரியுது.”என கிண்டல் செய்ய..

“போடா படவா..”என அவனின் தோளில் செல்லமாக அடிக்க..

தாத்தாவோ “என் பொண்டாட்டி எப்பவும் ப்யூட்டி தான். எம் பொண்டாட்டியவே எப்ப பாரு கொஞ்சிகிட்டு.. போ..போ.. அதான் உனக்கு கொஞ்சறதுக்குனு ஒரு ஆளை சேர்த்து வச்சிருக்கோம்ல..அவளை போய் கொஞ்சுவானாமா.. அத விட்டுட்டு எப்ப பாரு எம் பொண்டாட்டி கூடவே ரொமான்ஸ் பண்ணவேண்டியது..” என கடுப்பில் பேச..

பாட்டியின் காதில் “தாத்தாவிற்கு பொறாமை அம்மாச்சி” என கிசுகிசுக்க..

பாட்டி சத்தமாக சிரித்து விட… தாத்தாவின் பேச்சு அவனுக்கு பிடிக்கவில்லை என்பதை காட்டுவதாக அவன் முகம் சிரிப்பில் இருந்து கடுப்புக்கு மாறியது. இருந்து போதும் அதை மறைத்து கொண்டு ஆராத்யாவிடம்

“ஆரு… என்ன படிச்சிட்டு இருக்க…ஏதாவது டவுட் இருந்தா கேளு சொல்லி தரேன்”

“தமிழ் தான் படிக்கறேன்.. கீரேனீ சொல்லி தராங்க.. வேற சப்ஜெக்ட்ல டவுட் இருந்தா கேட்கறேன்..”

சரி என்பதாக தலையாட்டியனான். எல்லோரிடமும் பேசியவன் மறந்தும் நிகிதா பக்கம் பார்வையை திருப்பவில்லை. ஆனால் நிகிதாவோ ஒரு விநாடி கூட அவனிடமிருந்து பார்வையை அகற்றவில்லை.

வீராவை… அவனின் ஒவ்வொரு செயலையும்.. பேச்சையும்.. காதல் மிகுந்த பார்வையோடு ரசித்து கொண்டு இருந்தாள். உள்ளே வரும்போது நிமிர்ந்த வேக நடையை.. பாட்டியின் தோளில் கை போட்டு கண்ணை உருட்டி பேசியது… தாத்தா சொன்ன போது அவன் முகம் மாறியது.. அதை சடுதியில் மாற்றி இயல்பாக இருப்பதாக காட்டி கொண்டது. ஆருவிடம் பேசிய போது அவன் குரலில் இருந்த பாசம்…… பேசும் போது அவன் முகம் காட்டிய பாவனை…கைகளின் அசைவு.. கணீர் என இருந்த கம்பீரமான குரல்… என அத்தனையும் காதலோடு ரசித்து மனம் எனும் கேலரியில் இமேஜாக சேவ் செய்து கொண்டாள்.

தாத்தா சொன்னாற் போல தன்னை ரொமான்டிக்காக பார்த்தால்.. பேசினால்.. எப்படி இருக்கும் என சிந்திக்க.. சொல்லாமல் கொள்ளாமல் அவர்களின் கூடல் பொழுதுகள் ஞாபகத்தில் வந்து ஒட்டி கொண்டது. கன்னம் சிவக்க.. அன்று வீராவின் காதல் மொழிகளை அசை போட்டவளுக்கு… அதுக்கு பிறகு அவனுடைய பாராமுகமும் நினைவுக்கு வந்தது.

நிகிதாவின் ரசிகமனம் கொஞ்சம் வாடவும் செய்தது. யாருக்காக தன்னை பார்த்து பார்த்து அலங்கரித்து கொண்டாளோ.. வீடே தங்காமல் ப்ரண்ட்ஸ் கூட சுற்றி திரிந்தவள் இப்போது எல்லாம் யாருக்காக வீட்டிலேயே சுகமாக அடைந்து கிடக்கிறாளோ.. யாரின் வரவுக்காக காத்திருந்தாளோ.. அவனின் நேர்பார்வை என்ன கடைகண் பார்வை கூட கிடைக்கவில்லை எனவும் வாட்டம் கொண்டது.

நிகிதா தன்னை விழி மூடாமல் பார்த்து கொண்டு இருப்பதை… அவளை பார்க்காமல் பார்த்து கொண்டு இருந்தவனுக்கு தெரிந்து தான் இருந்தது. அவளின் செயல் எதுவும் அவனுக்கு பிடிக்கவில்லை. அவன் பின்னால் எடுக்க போகும் முடிவுக்கு அது உகந்தது அல்ல.. அதை எப்படியாவது அவளுக்கு புரிய வைக்க வேண்டும் என நினைத்து கொண்டு தங்கள் அறைக்கு சென்றான்.

அவன் செல்லவும்.. அவன் பின்னோடு இவளும் சென்றாள். தன் பின்னாலேயே வருவாள் என நினைத்தான். அதை மெய்பிப்பது போலவே தான் அவளும் வந்தாள். வீரா வீட்டில் இருந்தால் அவன் இருக்கும் இடத்தில் நிகிதா இருப்பதை கண்டு கொண்டு இருந்தான்.

அவளை எரிப்பது போல பார்த்தவன்.. உடை மாற்றி ப்ரெஷாகி வர செல்ல.. அவனுக்கு முன்பு சென்று அவனின் டீசர்ட் டிராக் பேண்டை எடுத்து கொடுத்தாள். அதில் அவன் பார்வையின் வெப்பம் கூடியது. அதை வசிய பார்வை ஒன்றை செலுத்தி தணிக்க முயன்றாள்.

இதுக்கு எல்லாம் மசியமாட்டேன் என முகத்தை திருப்பி கொண்டு குளியலறைக்கு செல்ல.. அங்கும் அவனை முந்தி கொண்டு உள்ளே செல்லப் பார்க்க..

“ஏய் நில்லு.. இப்ப எதுக்கு என்ன இடிச்சு தள்ளிகிட்டு உள்ள போற…” என்றான் கோபமாக..

“இல்ல… உள்ள டவல் இருக்கானு பார்க்கத் தான்..”என்றாள் அசடு வழிந்தவாறே…

கோபத்தில் அவளின் கைபிடித்து இழுத்து தள்ளி விட்டான். அவன் தள்ளி விட்ட வேகத்திற்கு கீழே விழுந்தவளின் முன் மண்டியிட்டு அமர்ந்து அவள் முகத்திற்கு நேராக விரலை நீட்டி எச்சரித்தவன்..

“இங்க பாரு.. உனக்கும் எனக்கும் என்றைக்கும் பொருந்தாது. நா… பொருந்தாமல் ஒட்டாமல் வாழறதையே வீட்டு பெரியவர்களுக்காக சகிச்சிகிட்டு இருக்கேன். இதுல நீ இப்படி எல்லாம் நடந்து என்னை இரிடேட் பண்ண.. பார்த்துகிட்டு சும்மா இருக்கமாட்டேன்”என காட்டமாக பேசியவன் எழுந்து குளியலறைக்குள் சென்று கதவை சாத்தி கொண்டான்.

சிறிது நேரத்தில் கதவை திறந்து வெளியே வந்தவன் எப்படி விட்டு சென்றானோ.. அதே நிலையில் இருக்க.. பேதலித்து போய் இருந்தவளை கையை பிடித்து தன்னை நோக்கி வேகமாக இழுக்க..இழுத்த வேகத்தில் அவன் மார்பில் வந்து மோதியவள் என்ன செய்கிறான் மலங்க விழிக்க… ஹப்பா என்ன பார்வை டா.. என சிலிர்த்தவன்.. கண்கள் இரண்டிலும் முத்தம் வைக்க.. விழி மூடி மெல்ல கிறங்கினாள்.

“ம்ஹா…”கிறக்கமான அவளின் குரல் உசுப்பேத்த…அவள் இதழை தன் இதழால் வன்மையாக கடித்து சுவைக்க… தீரவில்லை தாகம்.. கண்ணாளனுக்கு…

அவளின் உமிழ் நீர் எல்லாம்

அவனின் தாகம் தீர்க்கும் உயிர் நீராக…

போதவில்லை…. தாகம் தீர வில்லை..

தாகம் தீராது… அதிகமாகி போனது…

கடிகார மணியின் கூக்கூ ஓசையில் கலைந்தவள் “ச்சே.. இதெல்லாம் கனவா… நிஜமில்லையா… ” வெட்கத்தில் சிவந்த முகத்தை மூடிக்கொண்டு சிரித்தாள்.

என்னவோ போடி நிகிதா.. இப்படியே கனவுல தான் வாழனுமோ..என ஏக்க பெருமூச்சு விட்டாள்.

மாமா ஏன் இப்படி பிஹேவ் பண்றாங்க.. எனக்கும் முதல்ல பிடிக்கல தான் ஆனா இப்ப ரொம்ப பிடிக்குதே.. வேணாம்னு சொன்ன நானே நெருங்கி வரும்போது இவங்க ஏன் தள்ளி தள்ளி போறாங்க..என்னய பிடிக்கலயோ… எல்லோரும் சொல்லற மாதிரி நான் அழகாக தானே இருக்கேன்… இல்ல கல்யாணத்துக்கு முன்னாடி யாரயையாவது லவ் பண்ணி இருப்பாங்களோ… அந்த காதல மனசு வச்சுகிட்டு தான் இப்படி நடந்துகிறாங்களோ.. என்ன காரணமாக இருக்கும் என்னை பிடிக்காம போக… என பலவிதமாக யோசித்து கவலைப்பட்டாள்.

அது எல்லாம் சிறிது நேரம் தான் எதுவாக இருந்தாலும் இனி மாமாவுக்கு என்னை பிடிக்கற மாதிரி நடந்து.. அவர் மனசு மாத்தி.. அவர் கூட சந்தோஷமா வாழ்ந்திரனும் என முடிவு எடுத்தவள்.. சுற்றும் முற்றும் பார்க்க.. அவன் அறையிலேயே இல்லை.

ப்ரெஷாகி குளியலறையில் வந்தவன் இவன் தள்ளி விட்டு சென்றவாறே தலையில் அமர்ந்து தன்னை மறந்து ஏதோ சிந்தனையில் இருந்தவளை பார்த்தவன் முகத்தை திருப்பி கொண்டு எதுவும் பேசாமல் சென்றுவிட்டான்.

தெளிந்த மனதுடன் எழுந்து கீழே சென்றாள். எல்லோரும் சாப்பிட அமர்ந்திருக்க.. வேலையாட்கள் உணவை டேபிளில் எடுத்து வைத்து கொண்டு இருந்தனர்.

வேலையாட்கள் எடுத்து வைத்ததும் நகர சொல்லி கையசைத்தவள் தானே எல்லோருக்கும் தானே பரிமாறினாள். அன்று ராகவ்வும் வீட்டுக்கு நேரமாக வந்திட.. இவர்களோடு சாப்பிட உட்கார்ந்தவர் மகளின் நடவடிக்கையை தன்னை மறந்து பார்த்து கொண்டு இருந்தார்.

தன் மகளா இது..ஜீன்ஸ் டீசர்ட்.. நடை உடை பாவனை எதிலும் ஒரு ஆண்பிள்ளை போல சுற்றி கொண்டு இருப்பவள்.. இன்று அழகான காட்டன் சுடிதாரில் எப்பவும் விரித்திருக்கும் கூந்தலை சிறு பின்னலிட்டு பூ சூடி.. பொட்டு இல்லாமல் இருக்கும் நெற்றியில் சிறு கருப்பு பொட்டு ஒட்டி.. வகிட்டில் குங்குமம் வைத்து.. பார்க்க கண் நிறைந்திருக்க.. அதற்கு மேல் கையசைவில் வேலைக்காரர்களை நகர்த்திய விதம் அனைவருக்கும் அருகே இருந்து தேவையறிந்து பரிமாற.. தன் மகளை இப்படி பார்க்க தானே ஆசை கொண்டார். கண்கள் கலங்கிவிட..

தாத்தா கையை அழுத்தி கொடுத்து “சாப்பிடு ராகவா..” என சொல்ல…

மகளிடம் கேட்டு கேட்டு வாங்கி வழக்கத்தை விட அதிமாகவே சாப்பிட்டார். மனதும் வயிறும் நிறைந்தது அவருக்கு.

ஆராத்யா”டேடி நாம தினமும் நைட் இப்படியே எல்லோரும் சேர்ந்தே சாப்பிடலாமா.. இது நல்லா இருக்குல்ல..மம்மியும் வந்திருந்தா இன்னும் நல்லா இருக்கும்”

“அதுக்கென்னடா..மம்மிகிட்ட நான் சொல்றேன். எப்பவும் இப்படியே சாப்பிடலாம்” என ராகவன் சொல்ல..

“ஹே…சூப்பர்” என துள்ளி குதித்தாள். சாதாரண குடும்பங்களில் நடக்கும் வழக்கமான ஒன்று ஆராத்யாவிற்கு பெரியதாக பட.. அவளின் மகிழ்ச்சியை எல்லோரும் ஆதுரமாக பார்த்து கொண்டு இருந்தனர்.

வீரா ஆருவின் ஏக்கத்தை சரியாக புரிந்து கொண்டவன் ” ஆரு பேபி.. கண்டிப்பா சாப்பிடலாம் ” என தலையை தடவி கொடுத்தவன்.. “மாமா.. இனி எந்த வேலை இருந்தாலும் கரெக்ட் டைமுக்கு சாப்பிட வந்திடலாம்” என ராகவ்விடம் சொன்னான்.

நிகிதாவிற்கோ பற்றி கொண்டு வந்தது. எல்லார்கிட்டயும் நன்றாக பேசு.. ஆனால் என்கிட்ட மட்டும் கடுவன் பூனை மாதிரி விழுந்து பிராண்ட வேண்டியது என அவனை திட்டி கொண்டு இருந்தாள் மனதோடு…

ஒட்டி உறவாட தவிக்கும்

அவள்…

வெட்டி பிரிய துடிக்கும்

அவன்…

சொல்லாமலே இருவரும்

ஆடும் கண்ணாமூச்சி ஆட்டம்

ஆட்டம் நிறைவுக்கு வரும் நாளில்

வெற்றி என்பது யாருக்கு..

முடிவு மகிழ்ச்சியா..

மனவருத்தமா…

வாழ்க்கை இனிமையா..

கசப்போடு செல்லுமா…

கேள்விக்கு பதில் யார்

சொல்வது…

காலத்தின் சட்டதிட்டம்

என்னவோ….

9 – புயலோடு பூவுக்கென்ன மோகம் Read More »

A266E203-0948-4A20-8941-D349A9B77763

8 – புயலோடு பூவுக்கென்ன மோகம்

8 – புயலோடு பூவுக்கென்ன மோகம்

காலையில் வழக்கம் போல வீரா தான் முதலில் விழித்தான். தன்னை அணைத்து படுத்திருந்த நிகிதாவை கண்டு எரிச்சல் வந்தது.

“ச்சே..இவளுக்கு இதே வேலையா போச்சு”

எப்பவும் போல தள்ளிவிட இன்று மனசு இடம் கொடுக்கவில்லை. மெல்ல அவளை நகர்த்தி படுக்க வைத்துவிட்டு எழுந்து சென்று விட்டான்.

மொபைலில் அடித்த அலாரத்தில் அடித்து பிடித்து எழுந்தாள் நிகிதா.நல்ல உறக்கத்தில் இருந்ததால் சில நிமிடங்கள் ஒன்றும் புரியவில்லை. பிறகே பாட்டி நேரமாக எழுந்து தயராகி வர சொன்னதும் தான் அலாரம் வைத்ததும் ஞாபகம் வந்தது. மணியைப் பார்க்க ஆறு என காட்டியது.

இவ்வளவு நேரமாகவா எழுந்திருக்கனும். கொஞ்ச நேரம் தூங்கலாமா.. என நினைத்தவள் வேண்டாம் அப்புறம் லேட்டாகி விடும் என மனதை மாற்றி எழுந்தவள் வீராவை தேடினாள்.

அவன் அறையில் இல்லை எனவும் எப்படி தானோ.. தினமும் சொல்லி வச்ச மாதிரி அலராம் கூட இல்லாமல் நேரமா எழுந்திருக்காங்களோ.. என நினைத்தாள்.

இவள் எழுந்து குளித்து தயராகி கீழே சென்ற போது… வீரா தனது ஜாகிங் முடித்து வந்திருந்தான்.. வியர்வையில் அவனுடைய டீசர்ட் தொப்பலாக நனைத்திருக்க… தலைமுடி கலைந்து.. நெற்றியில் சில வியர்வை துளிகள் பூத்திருக்க…அதை புறங்கையால் துடைத்தவாறு உள்ளே வந்தவனை கண்டு..

பார்த்தவுடன் சொக்கிப் போனாள்.அழகன் தான்டா நீ என மனதோடு கொஞ்சி கொண்டாள்.

வீரா வந்தவன் பேப்பர் படித்து கொண்டு இருந்தான். பாட்டி கிச்சனில் இருக்க..அங்கு தாத்தாவிற்கு தானே தன் கையால் டீ போட்டு கொண்டு இருந்தார்.

அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. வேலைக்காரர்கள் பயந்து ஒதுங்கி நிற்க.. மஞ்சள் பூசிய முகத்தில் கொஞ்சம் பெரியதாக குங்கும பொட்டு வைத்து.. கொண்டையை சுற்றி பூ வைத்து.. பார்க்க கம்பீரமாக.. ராஜகளையாக.. நிமிர்வாக.. ஆளுமை உணர்வுடன்.. இருந்த பாட்டியை கண்டு அதியசித்து போனாள். இந்த வயதிலும் என்ன தேஜஸ் என வியந்து தான் பார்த்து கொண்டு இருந்தாள்.

“என்ன பார்க்கிற.. என்னடா வேலைக்கார்கள் இருக்க.. நான் வேலை செய்யறேனுனா..”

ஆம் என இவள் தலையாட்ட…

“என்ன தான் வேலைக்காரர்கள் இருந்தாலும் சிலது எல்லாம் என் கையால உங்க தாத்தாவுக்கு செஞ்சு கொடுத்தா.. அவரு சந்தோஷப்படுவாரு… அவர் சந்தோஷத்தில் எனக்கு ஒரு மனதிருப்தி..” என அவர் அதை சொல்லும் போதே அவர் முகத்தில் அவ்வளவு மலர்ச்சி..

இந்த வயதிலும் இப்படி ஒரு காதலா.. என ஆச்சரியப்பட்டாள். அவரின் மலர்ச்சி கண்டு இவள் முகமும் புன்னகை பூசி கொள்ள..

சிரித்த முகமாக இருந்தவளை பார்த்து…

“என்ன என்னைய பார்த்து சிரிச்சிகிட்டு இருக்க… இந்தா இந்த டீயை வீராவுக்கு கொண்டு போய் குடு.. அதுக்கு முன்ன ப்ரிட்ஜில் பூ இருக்கு எடுத்து வை.. தினமும் காலையிலும் சாயங்காலமும் பூ வச்சுக்கனும். தினதினம் சொல்லிட்டு இருக்கமாட்டேன் புரிஞ்சுதா..”என்றார் மிரட்டும் தொனியில்..

எப்ப பாட்டி திட்டினாலோ மிரட்டினாலோ கோபமும் எரிச்சலும் கொள்பவள்.. இன்று சிரித்தபடி தலையாட்டினாள்.எல்லாம் புருஷன் நடத்திய காதல் பாடத்தின் எபெக்ட்..

பூவை சூடிக் கொண்டு டீயை எடுக்க வந்தவள் பாட்டி டீகப்பை எடுத்து வருவதை கண்டு..

“கொடுங்க கீரேனீ..நான் கொண்டு வரேன்”

“எம் புருஷனுக்கு என் கையால கொடுக்கனும். உன் புருஷனுக்கும் உனக்கும் அங்க வச்சிருக்கேன் எடுத்துட்டு போ” சொல்லி சென்று விட..

இவர்களுக்கு நிகிதா எடுத்து கொண்டு செல்ல.. அதற்குள் அங்கே பாட்டி தனக்கு டீ தருவார் என வீரா பார்க்க.. அவர் கையில் இருந்தது என்னவோ இரண்டு கப் ஒன்றை தன் கணவருக்கு கொடுத்து விட்டு அவனை கண்டு கொள்ளாமல் தனக்கு ஒன்று எடுத்துக்கொண்டு கணவரின் அருகில் அமர்ந்து கொண்டார்.

வீரா பாட்டியிடம் “அம்மாச்சி..எனக்கு டீ” என்றான்.

“உம் பொண்டாட்டி கொண்டு வருவா…” என்றார் கண்டு கொள்ளாமல்..

என்னங்கடா இது எல்லாம் ஒரு புதுசா இருக்கு என நினைக்க.. சன்ன சிரிப்போடு வந்த நிகிதா வீராவின் கையில் டீயை கொடுக்க..

இவளுக்கு என்னாச்சு என ஆராய்ச்சியாக அவளை பார்த்தவாறு.. டீயை வாங்கியவன் அவளை ஒரு பொருட்டாக மதிக்காமல் நியூஸ் பேப்ரில் மூழ்கி போனான்.

பூவையவள் முகம் வாடி போனது.

சிறிது நேரம் கழித்து ஏதோ உறுத்த…டக்கென நிமிர்ந்து பார்த்தான். எதிர் சோபாவில் அமர்ந்து அதுவரை வீராவை சைட் அடித்து கொண்டு இருந்த நிகிதா நொடியில் தன் பார்வையை வேறு பக்கம் திருப்பி கொண்டாள்.

இவ எதிர்ல உட்கார்ந்துட்டு என்ன பண்றா..என யோசித்தவன்..நம்மள சைட் அடிக்கிறாளோ.. ச்சேச்ச.. இவளுக்கு தான் நம்மள புடிக்காதுல..என.. எனக்கும் இவள புடிக்காது என தன் எண்ணப்போக்கை வெட்டி விட்டு.. மீண்டும் பேப்பரில் கவனம் செலுத்தினான்.

மீண்டும் உறுத்த.. இவன் பார்க்க.. அவள் பார்வையை திருப்ப…. மீண்டும்… மீண்டும்… இந்த விளையாட்டு கொஞ்ச நேரம் நடந்தது.

நிகிதாவை கண்டு கொண்டான் வீரா. இவளை.. பல்லை கடித்தவன்…பேப்பரை மடித்து டீப்பாய் மேல் போட்டு விட்டு விடு விடுவென தங்களது அறைக்கு சென்றுவிட்டான்.

போனவனையே.. ஏக்கமாக பார்த்து கொண்டு இருந்தாள்.

“என்ன பார்த்துகிட்டு இருக்க..போ அவனுக்கு டிரஸ் எடுத்து வை.. வேணுங்கறத கேட்டு செய் போ..”என பாட்டி சொல்ல…

ஹை சூப்பர் என சத்தமின்றி சொன்னவள் தங்கள் அறைக்கு ஓடினாள்.படாரென கதவை திறந்து கொண்டு மூச்சிரைக்க வந்து நின்றவளை தோளில் துண்டோடு குளிப்பதற்காக சென்றவன் போன் வரவும் பேசி கொண்டு இருந்தவன் புரியாத பார்வை பார்த்தான்.

போனில் பேசி கொண்டே..என்ன என்பதை போல புருவத்தை ஏற்றி இறக்கி கேட்க… சொக்கி போனாள் சுந்தரி.

ஒன்றுமில்லை என வேகமாக தலையாட்டியவள் அங்கிருந்த சோபாவில் நிதானமாக நடந்து சென்று அமர்ந்து கொண்டாள்.

பேசி முடித்து அலைபேசியை அணைத்து விட்டு.. இவள் மூச்சிரைக்க வந்தது என்ன.. இப்போ அன்னநடை நடந்து சென்று உட்காருவது என்ன…சம்திங் ராங்… ஏதோ சரியில்லையே தாடையை தடவி கொண்டு யோசித்தவன்..

இவ என்ன செஞ்சா நமக்கென்ன.. என தோளை குலுக்கி கொண்டு குளிக்க சென்றுவிட்டான். அவன் சென்றதும் டிரஸ்ஸிங் ரூம்க்கு சென்று அவனின் வார்ட்ரோப்பை திறந்தவள் அவன் துணிகள் பொருட்கள் எல்லாம் நேர்த்தியாக வைத்திருப்பதை பார்த்து மிஸ்டர் பெர்பெக்ட் தான் என மெச்சி கொண்டாள்.

அவனுக்கு எதை எடுத்து வைக்கலாம் எது நல்லா இருக்கும் என சிறிது நேரம் ஆராய்ச்சி செய்தவள்.. ஐவரி கலர் பேண்ட்.. லைட் வைலட் சர்ட் என எடுத்து அங்கிருந்த டேபிள் மேல் வைத்து விட்டு வந்து ஒன்றும் அறியாதவள் போல பழையபடி சோபாவில் அமர்ந்து கொண்டாள்.

குளித்து விட்டு வந்தவன் அங்கிருந்த உடைகளை பார்த்தும் இதெப்படி இங்கே என ஒரு நிமிடம் தான் யோசித்தான். நிகிதாவின் வேலை என புரிந்து விட..இவளை என பல்லை கடித்து கொண்டு..வேகமாக படுக்கையறைக்கு வந்தான்.

அதுவரை டிரஸ்ஸிங் அறையையே பார்த்து கொண்டு இருந்தவள்.. கதவு திறக்கவும் குனிந்து அலைபேசியை நோட்டம் விடுவது போல நடிக்க..

அதையும் அவன் கவனித்துவிட்டான். அவன் கடுப்புடன்..

“ஏய்..” என்று கத்தினான்.

“சொல்லுங்க மாமா” என்று எழுந்து நின்றாள் பவ்யமாக..

அவளின் செயல் எல்லாம் இவனுக்கு பிடிக்காமல் எரிச்சலையே தர…

“என்னடி ஓவரா நடிக்கற..எதுக்காக இதெல்லாம் செய்யற.. உனக்கு இது செட்டாகலை..” என்றான்.

அவள் எங்கே இவன் பேசுவதை கவனித்தாள். இடுப்பில் துண்டோடு துவட்டியும் துவட்டாமல் தலை முடிகளில் இருந்து சொட்டிய நீர் திவலைகள் கன்னம் காது என வழிந்து அவன் தோள்களில் இறங்கி அவன் மார்ப்பில் இறங்க.. அந்த நீர் திவலைகள் அடர்ந்த கரு கருவென இருந்த மார்பு ரோமங்களை நனைந்திருக்க.. அதிலும் அங்காங்கே நீர் திவலைகள் சொட்ட.. வெற்று மார்ப்புடன் அழகோவியமாக.. நின்று கொண்டு இருந்தவனை இன்ச் பை இன்சாக.. ரசித்து கொண்டு இருந்தாள்.

ரோமங்கள் அடர்ந்த வெற்று மார்ப்பில் முத்தமிட்ட ஞாபகங்கள் வந்து அலைகழிக்க.. மீண்டும் முத்தமிட… ரோமங்களை கைகள் கொண்டு கோதிட.. அந்த ஈர மார்ப்பில் முகம் வைத்த புரட்டி அந்த சில்லிப்பை உணர .. என அவள் ஆசை எல்லாம் எல்லை கடந்து கொண்டிருக்க..

“நிகிதா..” என அவன் கூச்சலில் உடல் தூக்கி வாரி போட நிகழ்வுக்கு திரும்பினாள்.

“கூப்பிட்டு கிட்டு இருக்கேன்.. அதை கூட கவனிக்காம நினைப்பு எல்லாம் எங்க வச்சிருக்க..”

உன்னை தான் நினைச்சிட்டு இருக்கேன் மாமா..என் வீரா மாமா.. மனதோடு கொஞ்சி கொண்டாள்.

மறுபடியுமா..இவளை..

“ஏய்..” என அழுத்தி கூப்பிட்டவன் “நீ என்னவோ பண்ணிட்டு போ.. ஆனால் என்னை வெறிச்சு.. வெறிச்சு பார்க்கறது…டீ கொடுக்கறது..சாப்பாடு போடறது.. டிரஸ் எடுத்து வைக்கறது.. இதெல்லாம் சரியில்ல…உனக்கும் எனக்கும் என்னைக்கும் செட்டாகாது.இனி இது மாதிரி வேலை எல்லாம் செய்யாதே” என்றான் அதட்டலாக…

அன்றலர்ந்த மலர் போல மலர்ந்திருந்த அவள் முகம் கூம்பி போனது. வாடிய முகத்தை கண்டும் காணாமல் சென்றுவிட்டான்.

அவனை பொறுத்தவரை இருவருக்கும் குணம், பழக்கவழக்கம், வாழ்க்கை தரம் எதிலும் ஒத்துவராது. சேர்ந்து வாழ்ந்தாலும் சரிவராது.கொஞ்ச நாள் பெரியவர்களுக்காக இருப்போம். வேறு ஏதாவது ஒரு வழி கண்டுபிடித்து இங்கிருந்து சென்றுவிட வேண்டும் என முடிவு செய்திருந்தான்.

அதனால் நிகிதாவிடம் ஒதுங்கி இருக்கவே முடிவு செய்திருந்தான். அவர்களுக்குள் நடந்தது ஒரு விபத்து என்பதே வீராவின் எண்ணம்.அதற்காக வாழ்க்கையை பணயம் வைக்க தயாராக இல்லை வீரா

சுட்ட கத்திரிக்காய் போல வதங்கிய முகத்துடன் வந்து அமர்ந்தவளை பார்த்த பாட்டி அருகில் வந்து என்ன என கேட்க..அவர் தோளில் சாய்ந்து விசும்பியவாறே.. அவன் சொன்னதை சொல்லி முடிக்க..

இவனை.. என பல்லை கடித்தவர்..இவளே தளைந்து வரா… இந்த சமயம் இவன் முறுக்கிட்டு திரியறான்..என நினைத்தவர்.. தலை கோதி கொடுத்து…

“இங்க பாரு..முதல்ல நீ அவன மதிக்கல..எடுத்தெறிஞ்சு எல்லாம் பேசின.. இப்ப தான உனக்கு அவன் மேல அன்பு வந்திருக்கு..இதெப்படி அவனுக்கு தெரியும். நீ தான் சொல்லி அவனுக்கு புரிய வைக்கனும். அத விட்டுட்டு அழுதினா சரியா போயிடுமா… நீ மாறிட்டங்கறதா சொல்லாம எப்படி தெரியும் அவனுக்கு.. சொல்லு பார்க்கலாம்” என கேட்க..

அதானே அதை சொல்லாமல் அழுது என்ன பிரயோஜனம் என யோசித்தாள்.

“நீ தான் வாய் வார்த்தையிலும் செயல்லயும் உனக்கு அவன் எவ்வளவு முக்கியம் என உணர்த்தனும் போ அவனை கவனி..”

பாட்டியின் வார்த்தைகள் அவளுக்கு உள்ளும் புறமும் ஒரு நிமிர்வை தர… சட்டென தன்னை நிலைபடுத்தி கொண்டாள்.

அதே சமயம் வீரா ஆபிஸ் செல்ல தயாராகி வர…அவனை பார்த்ததும் மலர்ச்சியுடன் எழுந்து சென்றாள்.

சாப்பிட அமர்ந்தவனுக்கு தட்டை வைத்து நிகிதா பரிமாற… இவன் பாட்டியை தேட..இந்த முறை பாட்டி இவர்கள் அருகில் வரவில்லை. வீரா தன்னை பார்க்கவும் தாத்தாவிடம் பேசுவது போல திரும்பி அமர்ந்து கொண்டார்.

அவனுக்கு புரிந்துவிட்டது அம்மாச்சியின் தூண்டுதலின் பேரில் இவள் இவ்வாறு செய்கிறாள் என…. ஆனால் இவள் அம்மாச்சி பேச்சை கேட்கமாட்டாளே.. என்றவாறே அவளை பார்த்து முறைக்க..

அவளோ அவனின் முறைப்பை சட்டை செய்யாமல்.. அவனுக்கு இட்லி வைத்து சாம்பார் ஊற்ற..

சாப்பிட பிடிக்காமல்.. தட்டை தள்ளி விட்டு எழுந்து கொள்ள..ஒரு நொடி அவனின் கோபத்தில் பயந்தவள்..மறு நொடி பாட்டியின் உபதேசங்கள் ஞாபகம் வர..

வீராவின் கையை பிடித்தவள் “உட்காருங்க மாமா.. சாப்பாட்டுல கோபத்தை காமிக்காதிங்க.. இனி இப்படி தான் நான் தான் உங்களுக்கு எல்லாம் செய்வேன்.பழகிங்க..”

“ஏய்..கையை விடுடி..”என கோபத்தை அடக்கி கொண்டு மெதுவாக சீற..

“சில்..சில்..சில்.. கோபப்படாம சாப்பிடுங்க..”

சாப்பிடாமல் நகரப் பார்க்கவும்..நிகிதா தட்டை கையில் எடுத்தவள் “நான் ஊட்டி விடனும்னு ஆசையா இருக்கா.. அப்ப சரி நானே ஊட்டிவிடறேன்” இட்லியை ஒரு விள்ளை பிட்டு எடுத்து சாம்பாரில் தோய்த்து ஊட்ட போக..

அவள் கையை தட்டி விட்டு அவளிடம் இருந்து தட்டை பிடுங்கி… அமர்ந்து உண்ண ஆரம்பித்தான் அவள் பரிமாற… சாப்பிட்டு கை கழுவ அவன் எழுந்து செல்லவும்..

சத்தமில்லாமல் “ஓ..ஓ..ஓ..” என்றாள் ராகமாக.. அது அவன் காதுகளில் விழுந்திட.. திரும்பி அவளை பார்த்து முறைத்தான்.

அவன் கண்டு கொண்டான் என கண்களை சுருக்கி.. நுனி நாக்கை கடித்து கொண்டு நெற்றியில் லேசாக அடித்து கொண்டு திரும்பி நின்று கொண்டாள்.

பார்க்க ரசனையாக இருந்தது. ரசிக்கவும் மறுக்கவில்லை வீரா.. ரசனையான புன்னகையோடு கிளம்பிவிட்டான். ஆனால் அவன் ரசித்ததை நிகிதா கவனிக்க தவறிவிட்டாள். அலுவலகம் சென்றவனுக்கு நிகிதாவின் செயலால் வெகுநாட்களுக்கு பிறகு மனது இதமாக இருக்க.. அவனுக்கு பிடிக்காத வேலை தான் எரிச்சோடு எப்போதும் செய்பவன் இன்று விரும்பத்தோடு செய்தான். நிகிதா அவனுக்கு அழைக்கும் வரை தான் அதெல்லாம்….

இராப்பொழுது நினைவுகள்..

இராஜாவின் சேவைகள்..

ரோஜாவின் எதிர்பார்ப்புகள்..

கண்ணன் காதல் லீலைகள்..

காரிகை கொண்ட பித்துக்கள்…

பித்தம் தெளிய வைக்கும் வித்தைகள்..

வித்தகனின் கைகள் செய்யும் மாயங்கள்…

மாயங்கள் தேடும் பெண் மனம்..

பெண் மனம் அறியா.. பேரழகன்…

பேரழகன் அறிவானோ.. தீர்ப்பானோ..

அழகி கொண்ட தாக(ப)ங்களை..

8 – புயலோடு பூவுக்கென்ன மோகம் Read More »

6797CA3F-0BF8-4494-9CC9-E059B602E15C

7 – புயலோடு பூவுக்கென்ன மோகம்

7 – புயலோடு பூவுக்கென்ன மோகம்

நிகிதா தன்னை அழகாக திருத்தமாக தன்னை பார்த்து பார்த்து அலங்கரித்து கொண்டாள். மாமாவுக்கு இந்த கலர் பிடிக்குமா.. இது பிடிக்குமா… தனது வார்ட்ரோப்பையே கலைத்து போட்டு ஒரு சுடிதாரை தேர்வு செய்து உடுத்தி கொண்டாள்.

நிகிதாவை பார்த்த பெரியவர்கள் இருவருக்கும் மனதில் மகிழ்ச்சி. ஒரு திருப்தி. தயங்கி தயங்கி வந்தவளை பாட்டி தன்னருகே அமர்த்தி கொண்டார். நிகிதாவிற்கு இதெல்லாம் புதிது. கொஞ்சம் கூச்சமாக கூட இருந்தது.

வீரா வந்தால் என்ன செய்வது என கூட அவளுக்கு தெரியவில்லை.அவள் அம்மா தந்தைக்கு எதுவும் செய்து பார்த்ததில்லை. எல்லாம் வேலைக்கார்கள் தான். பாட்டி தாத்தாவிற்கு செய்வதை வீட்டில் இருக்கும் சமயங்களில் பார்த்து இருக்கிறாள்.

மாமா வந்தா என்ன செய்யனும் என யோசித்தாள். என்கிட்ட பேசுவாரா.. என்னை பிடிக்குமா.. அருவருப்பா இருக்குனு சொல்லிட்டாரே..எனக்கு வந்த பீலிங் அவருக்கு வரலையா…அமுல் பேபினு எப்படி கொஞ்சினாரு.. ஆசை இல்லாமலா கொஞ்சினாரு..மறுபடியும் அப்படி கூப்பிடுவாரா.. காலைல மாதிரி முகத்த திருப்பி கிட்டு போயிடுவாரா..என பலவாறு கவலை கொண்டாள்.

அவளுடைய கவலை கொண்ட முகத்தை பார்த்த தாத்தா பாட்டியிடம் கண்களால் பேத்தியை சுட்டி காண்பிக்க…

பாட்டி நிகிதாவிடம் “என்ன நிகிதா.. என்ன கவலை..”

அவளுக்கே சொல்ல ஒரு மாதிரியாக இருந்தது. கல்யாணத்திற்கு முன்பும் பின்பும் தான் செய்த அழிச்சாட்டியங்கள் எல்லாம் ஞாபகம் வர …இன்று தன் மனதை உணர்ந்த பின்பு தன் தவறு பெரியதாக தெரிய… எதுவும் பேசாமல் தலை குனிந்து கொண்டாள்.

பாட்டி நிகிதாவின் தாடையை பிடித்து முகம் பார்க்க… வாடி போய் களையிழந்து இருக்க..

“என்னடா… ஏன் இப்படி இருக்க..என்ன வருத்தம் சொன்னா தான தெரியும்” என்று கனிவாக கேட்க…

கண்கள் கலங்கி “பாட்டி நான் மாமாவ இதுக்கு முன்னாடி மரியாதை இல்லாம பேசி உதாசீனப் படுத்தியிருக்கேன். இனி அப்படி பண்ணமாட்டேன். பட் மாமாவுக்கு என்னை பிடிக்காதுல.. மாமா என்கிட்ட பேசுவாங்களா..” என கேட்க…தவறு செய்த சிறு குழந்தையாய்…

பெரியவர்களுக்கே மனதிற்கு வருத்தமாகி விட்டது.

“எல்லாம் பேசுவான். எங்க போயிடறான். நாங்க இருக்கோம். எல்லாம் சரி பண்றோம்”என தாத்தா சொல்ல.. பாட்டியும் ஆமோதிப்பாக தலை அசைத்தார். அதில் கொஞ்சம் நம்பிக்கை பெற்றவளாக… மாமனின் வரவுக்காக காத்திருந்தாள்.

நேரங்கள் கடந்தது. வீரா தான் வந்த பாடில்லை. பெரியவர்கள் வீராவிற்கு அழைத்து கேட்க சொல்ல.. திரு திருவென முழித்தாள்.

“என்ன முழிக்கிற..” என பாட்டி கேட்க..

நெற்றியை சுட்டு விரலால் சுரண்டிக் கொண்டே.. “மாமா.. நம்பர் இல்லை..”என்றாள் கலக்கமாக..

பாட்டி உடனே முறைக்க.. தாத்தா தான் “விடு மங்களா.. இப்ப தான பேத்தி மனசு மாறியிருக்கா.. என் போன்ல இருக்கு.. சொல்றேன்.. நீ சேவ் பண்ணிக்கிடா..”என்றார்.

தாத்தாவிடம் நம்பர் வாங்கி அவனுக்கு அழைக்க…வீரா வேலையில் மூழ்கி இருந்தவன் புது எண்ணில் இருந்து அழைப்பு வரவும் யார் என தெரியாமல்..

“ஹலோ..”

அவன் குரல் கேட்டு புதிதாக வெட்கம் வந்திட…எப்படி பேச.. தயங்கி.. தழுங்கி.. நிற்க..

அதற்குள் இரண்டு மூன்று முறை ஹலோ.. ஹலோ.. என்றிட..

“யாரு போன் பண்ணிட்டு பேசாம இருக்கறது.. ச்சு..”

எங்கே வைத்து விடுவானோ என்ற படபடப்புடன்..

“நான் நிகிதா.. பேசறேன்” என்றாள் அவசர அவசரமாக..

எதிர்முனையில் முழுதாக ஒரு நிமிடம் அமைதி.

“ஹலோ.. மாமா..” என்றாள் நடுக்கத்துடன்..

என்னது மாமாவா…வீராவின் இதயம் ஒரு நொடி அதிர்ந்து..நார்மலானது.

ஏற்கனவே அவள் மேல் ஏக கடுப்பில் இருந்தவன்..

“என்னடி இன்னும் தெளியலையா.. புதுசா மாமாங்கற..” என்றான் கோபமாக..

அவனின் கோபத்தில் இன்னும் நடுக்கம் அதிமாகிட…

“இல்ல.. வந்து.. நீங்க சாப்பிட வரலையானு கீரேனீ கேட்டாங்க..” கண்களை இறுக்க மூடி வேக வேகமாக சொல்லி முடித்தாள்.

இரவு நடந்ததே அவன் மனம் மூளை என ஆக்ரமித்திருக்க… அதில் இருந்து வெளியில் வர முடியாமல் முயன்று வேலையில் கவனம் செலுத்தி அப்போது தான் ஓரளவு மீண்டு வேலையில் மூழ்கி போனான்.

மறந்து இருந்ததை அவள் போன் அழைப்பு ஞாபகப்படுத்த… அவளிடம் பேச பிடிக்காது

“வரல..எனக்கு வேலையிருக்கு..” என சொல்லி வைத்துவிட்டான்.

நிகிதாவுக்கு பெரும் ஏமாற்றமாக போனது.
“மாமாவுக்கு வேலை இருக்காம்.. வரலையாம்..” என்றாள் வாட்டமாக..

“அது அவனுக்கு வேலை இருந்தா அப்படி தான்.. அங்கேயே ஏதாவது சாப்பிட்டுக்குவான். நீ போய் சாப்பிடு.. நைட் வருவான்ல பார்த்துக்கலாம்” என சமாதானம் செய்தனர் பெரியவர்கள்.

ஏதோ கொஞ்சம் கொறித்து விட்டு தங்கள் அறைக்கு வந்தாள்.அறைக்கு வந்தவளுக்கு நேற்றைய பசுமை நினைவுகளே.. இனிமையாக மனதில் உலா வர…அவனுடனான கூடலை விட.. கூடல் பொழுதில் அவனுடைய கொஞ்சல்களே..அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.

நிகிதாவிற்கு சிறுவயதில் இருந்தே பணம் கிடைத்த அளவிற்கு பாசம் கிடைக்கவில்லை. பெற்றவர்கள் பணமாகவும் கேட்டது கிடைக்குமாறு செய்வதே பாசமாக நினைத்தனர்.

பெரியவர்களும் கண்டிப்பை மட்டுமே காட்ட.. நினைவு தெரிந்த நாளில் இருந்தே.. பாசமான அழைப்போ.. அன்பான அரவணைப்போ.. இருந்தது இல்லை..

வீரா தன்னை அறியாமலேயே அவளுக்கு அந்த இரண்டையும் கொடுத்து இருக்க.. அதுவே அவன் பால் அவள் மனம் சாய காரணமாகி போனது.

வந்து படுக்கையில் அவன் படுக்கும் இடத்தில் படுத்து கொண்டவள்.. தான் எப்பவும் கட்டி அணைத்து தூங்கும் பெரிய டெட்டிபியரை “இனி நீ எனக்கு வேணாம் போ.. எனக்கு என் மாமா இருக்காங்க..”
என அதன் முகத்தில் இரண்டு குத்து விட்டு தூக்கி எறிந்தாள். ஐயோ பாவம் அது ஒரு மூலையில் போய் விழுந்தது.

வீராவின் தலையணையை கட்டி அணைத்து அதில் அவன் வாசம் பிடித்தவள்…
மாமனின் நினைவுகளில் மூழ்கி போனாள். அமுல்பேபி என கொஞ்சிய பொழுதுகள்..அவன் முத்தத்தின் சிலிர்ப்புகள் எல்லாம் நினைக்க.. நினைக்க.. சுகமான நோவுகளாக வாட்ட… அழகான கனவுகளில் ஆழ்ந்து போனாள்.

அவளின் கனவை கலைக்கும் விதமாக.. அவளின் போன் சிணுங்கியது. எடுத்தவள் ரூபேஷ் எனவும் எடுத்து பேசினாள்.

“சொல்லு ரூபேஷ்”என்றாள் உற்சாகமாக..

அவளின் உற்சாகத்தில் தன் திட்டம் வெற்றி பெற்றதாக நினைத்து கொண்டு..

“என்ன நிக்கி நம்ப ப்ளான் சக்ஸஸா..” என கேட்க..

“என்ன ப்ளான்” புரியாமல் கேட்டாள். அது எல்லாம் எங்கு அவளுக்கு ஞாபகம் இருந்தது.

அவளின் பதிலில் ரூபேஷின் முகம் கர்ண கொடூரமானது. கோபமும் வந்தது.

“என்ன நிக்கி.. இப்படி கேட்கற.. நேத்து பாட்டில் கொடுத்தனே.. அத அவனுக்கு கொடுத்தியா.. அவன் குடிச்சானா..”என்றான் கோபமாக..

அவன் கோப குரலும்.. மரியாதை இல்லாத பேச்சும்.. நிகிதாவிற்கு பிடிக்கவில்லை.

“என்ன ரூப்ஸ் ஒரு மாதிரி பேசற..” என்றாள் வெடுக்கென..

அவளின் கோபம் அவனுக்கு புதிதாக இருக்க.. கொஞ்சம் நிதானித்தான்.

“இல்ல நிக்கி.. பயந்துகிட்டே கொண்டு போனியே.. என்னாச்சோ கவலைல போன் பண்ணினேன்”என்றான் குழைந்து கொண்டு..

நடந்ததை அவனிடம் சொல்ல அவளுக்கு இஷ்டமில்லை.. அதனால்

“வேலையிருக்கு ரூப்ஸ்.. அப்புறம் கால் பண்றேன்” என அவசர அவசரமாக சொல்லி அவன் பேசும் முன் வைத்துவிட்டாள்.

மாலை மயங்கும் நேரம் நிகிதா அழகாக புடவை உடுத்தி இரு சரமாக மல்லிகை பூ வைத்து வீராவிற்காக காத்திருந்தாள். மங்களம் பாட்டி தான் நிகிதாவிற்கு புடவை கட்டி விட்டு எப்பவும் ப்ரீ ஹேர் ஆக இருப்பவளை.. அவள் கூந்தலை ஒரு பாண்ட்ல் அடக்கி பூ வைத்து அலங்கரித்திருந்தார்.

நேற்று போல இன்று இரவும் தாமதமாகவே வந்தான். எல்லோரும் உண்டு உறங்கியிருக்க…நிகிதாவும் அவளுக்கு துணையாக பாட்டியும் மட்டுமே இவனுக்காக காத்திருந்தனர்.

வந்தவன் அவளை கண்டு கொள்ளவில்லை. பாட்டியின் அருகில் அமர்ந்தவன்

“அம்மாச்சி சாப்டிங்களா…”

“ம் ஆச்சு பா..”

“தாத்தா தூங்கிட்டாரா..”

“தூங்கிட்டாரு.. நீ ஏன் இவ்வளவு லேட்..”

“வேலை இருந்துச்சு.. நீங்க ஏன் இவ்வளவு நேரம் தூங்காம முழிச்சிட்டு இருக்கறிங்க..”

நிகிதாவை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. வீரா பார்ப்பானா என ஆவலாக நிகிதா அவனையே பார்த்து கொண்டு இருந்தாள்.

“உனக்காக தான்..”

“எனக்காகவா.. நான் போட்டு சாப்பிட்டுக்குவேன்..தூக்கம் கெட்டா.. உங்க பியூட்டி ஸ்பாயிலாகிடுமே.. என் செல்ல க்யூட்டி..” என அழகான மெல்லிய புன்சிரிப்புடன் பாட்டியின் தாடையை பிடித்து கொஞ்ச..

நிகிதா இதுவரை பார்த்திராத முகம் அது. கொஞ்சம் கனிவாக.. குறும்பு மின்ன.. மலர்ந்த புன்னகையுமாக.. கண்களை உருட்டி.. அவன் பேசிய அழகில் வஞ்சியவள் சொக்கி போய் தன்னை மறந்து கணவனையே இமை சிமிட்டாமல் பார்த்து கொண்டு இருந்தாள்.

“டேய் பேராண்டி.. அழகான பொண்டாட்டி பக்கத்தில் இருக்கும் போது.. என்னை போய் பியூட்டி.. க்யூட்டினு ரைமிங்கா.. கொஞ்சிகிட்டு இருக்க..”

உடனே வீரா முகம் இறுகி.. எதுவும் பேசாமல் முகத்தை திருப்பி கொண்டான். பாட்டிக்கே அவன் செயல் மனதிற்கு பிடிக்கவில்லை. சட்டென நிகிதாவை பார்க்க.. அவள் முகம் கசங்கி கலங்கி இருந்தது.

நிகிதாவிற்கு அவன் செயல் ரம்மியமான கனவில் இருக்கும் போது யாரோ சுடுநீரை கொட்டி கலைத்து விட்டது போல ஆனது.

பாட்டி தான் நிலைமையை சரி செய்யும் பொருட்டு..

“சரி.. சரி..பேசினது போதும்… சாப்பிட..வா..எனக்கு தூக்கம் வருது”

அவன் எழுந்த செல்ல..அவன் பின்னாலேயே பாட்டியும் செல்ல…

போவதா.. வேண்டாமா.. இப்ப தான் என்ன செய்யவேண்டும் என தெரியாமல் நின்றுவிட்டாள் நிகிதா.

நிகிதா பின்னோடு வருவாள் என நினைத்து கொண்டு சென்ற பாட்டி சிறிது தூரம் சென்று திரும்பி பார்த்தவர் இவளை.. என பல்லை கடித்தவர் வா என சைகை செய்ய.. வேகமாக சென்று பாட்டியோடு இணைந்து கொண்டாள்

டைனிங்கில் வீரா அமர்ந்து இருக்க.. அவனருகில் பாட்டி அமர்ந்து கொண்டு…

“நிகிதா.. தட்டை வை..”

“தண்ணீர் எடுத்து வை..”

பாட்டி சொல்ல.. சொல்ல.. நிகிதா ஒவ்வொன்றாக செய்ய…

இது எல்லாம் என்ன புதுசா இருக்கே..இவள் இப்படி எல்லாம் செய்யகூடியவள் இல்லையே.. என ஆராய்ச்சியாக பார்த்தான் வீரா.. ஒரு வேளை அம்மாச்சி தான் கட்டாயப்படுத்தி செய்ய வைக்கிறாங்களோ என நினைத்தான்

நிகிதா இரண்டு சப்பாத்தி வைத்து குருமா ஊற்ற அமைதியாக சாப்பிட்டான். மேலும் நிகிதா சப்பாத்தி வைக்கப் போக.. போதும் என கையை அசைத்தவன் எழுந்து கொள்ள…

அவன் நன்றாக சாப்பிட கூடியவன் என அவளுக்கு தெரியும் காஞ்சிபுரம் போன போது பார்த்து இருக்கிறாளே…

பாட்டியும் அதையே தான் கேட்டார்.”வீரா போதுமா.. இரண்டு தான வச்சா..”

“மாண்புமிகு நிகிதா மேடம் பரிமாறினதுல… வயிறு நிறைஞ்சு போச்சு” என்றான் நக்கலாக…

நிகிதாவின் கண்கள் கரை கட்டி நின்றது.

பாட்டி நிகிதாவை பார்த்து விட்டு கண்டன குரலில் “டேய் வீரா..”

அதை எல்லாம் சட்டை செய்யாமல் சென்று விட்டான். கலக்கத்துடன் பார்த்த நிகிதாவை

“எதுக்கு இப்படி இருக்கிறவ.. நீ மாறின மாதிரி அவனும் மாறுவான். அதுக்கு கொஞ்ச நாளாகும். அதுவரைக்கும் நீ பொறுமையா தான் இருக்கனும்”

“மாறிடுவாங்கல்ல..” என்றாள் சந்தேகமாக..

“பொறுப்பு இல்லாத நீயே மாறிட்ட.. அவன் பொறுப்பானவன் கண்டிப்பாக மாறிடுவான்” என்று அவளை ஆறுதல் படுத்தி அனுப்பி வைத்தார்.

மேலே தங்கள் அறைக்குள் நுழைந்தவளை பார்த்து ஏகத்துக்கும் முறைத்தான். அமைதியாக உடை மாற்றும் அறைக்கு சென்று உடை மாற்றி வந்தாள்.இப்போது அவன் முன்னால் மினி ஷார்ட்ஸ் போட கூச்சமாக இருக்க..முழு பேண்ட் போட்டு இருந்தாள்.

படுக்கையில் படுக்காமல் உட்கார்ந்து இருந்தவன் இவள் வரவும்

“என்ன புது டிராமா.. இதெல்லாம்”என்றான்.

“இல்ல… மாமா..அது வந்து..”

“என்னவோ புதுசா மாமங்கற..உன் போக்கே சரியில்லையே..” என்றான் தாடையை சொறிந்து கொண்டே அவளை ஒரு மார்க்கமாக பார்த்தான்.

தன் மனதில் உள்ளதை சொல்ல முடியவில்லை. பெண்களுக்கே உண்டான நாணம் ஒருபுறம்..சொன்னால் நம்புவானா என்ற சந்தேகம் ஒரு புறம்.. சொன்ன பிறகு எப்படி எடுத்து கொண்டு என்ன பேசுவானோ என பயம் ஒரு புறம்..என அவள் மனம் அலைகழிக்க…

மிரட்சியுடன் அவனை பார்த்தாள்.அவளுடைய மருண்ட பார்வையை கண்டு அவனுக்கு ஆச்சரியம் . இவள் பயப்படுகிறாளா.. அதுவும் என்னை கண்டு என…

“என்ன மேடம் கேட்டால் பதில் சொல்லாமல் திமிரா பார்க்கறிங்க..”என்றான் வேண்டுமென்றே…

அந்த பேச்சில் உதறல் எடுக்க.. “இல்லல்ல அப்படி எல்லாம் இல்ல.. மா..” மாமா என சொல்ல வந்தவள் பாதிலேயே நிறுத்தி கொண்டாள்.

தான் எதற்கு இப்படி பயப்படுகிறோம் என அவளுக்கே தெரியவில்லை.

“அம்மாச்சி தான் இப்படி கூப்பிட சொல்லுச்சா.. அம்மாச்சி கட்டாயத்துக்காக எல்லாம் உனக்கு விருப்பம் இல்லாம எதையும் செய்யவேண்டாம்” மங்களம் பாட்டி வீராவிற்கு பரிமாற சொன்னதை வைத்து இவனாகவே நினைத்து கொண்டு பேச…

அடப்பாவி..இவரு தானே.. மாமா சொல்லு.. மாமா சொல்லு.. என டார்ச்சர் பண்ணினாரு… என நினைக்க.. அவளது மனசாட்சியோ..அடியே நிகிதா உனக்கு டார்ச்சராவ இருந்துச்சு என கேட்க…ஹீஹீஹீ..சுகமான டார்ச்சர் என லேசாக அசடு வழிந்தவாறு மனதை சமாதானப் படுத்தினாள்.

வீரா இவள் முகத்தில் அசட்டு சிரிப்பை பார்க்க.. நான் என்ன சொல்லிட்டு இருக்கேன் இவ என்ன இப்படி இளிச்சிட்டு இருக்கா… குடிச்சிருக்காளோ..என எண்ணி..

“குடிச்சிருக்கியா..”என அவளிடமே கேட்க.. சட்டென முகம் கூம்பி போனது நிகிதாவிற்கு..

இல்லை எனும் விதமாக தலையாட்டியவள் ஒன்றும் பேசாமல் திரும்பி படுத்துக் கொண்டாள். அவன் கேட்டது மனதை வாட்ட.. இது நாள்வரை தவறாக தெரியாத ஒன்று இப்போது அவளுக்கே தவறாகப் பட்டது.

நிகிதாவை பார்த்தவன் தோளை குலுக்கி கொண்டு படுத்தவன் படுத்த சிறிது நேரத்திலேயே உறங்கியும் விட..

நிகிதாவிற்கு தான் நேற்றைய சரசங்கள்.. இன்றைய அவனின் பேச்சு..என மனதில் பலவும் ஓட.. உறக்கம் வரவில்லை. அவனை அணைத்து படுத்தால் உறங்கி விடுவாள் என அவளுக்கே தெரியும்.

சுருக்கென்று ஏதாவது சொல்லி விடுவானோ என பயந்து அவன் உறங்கும் வரை பொறுத்தவள் அவன் நன்றாக உறங்கிவிட்டான் என்பதை உறுதி செய்து கொண்டு அவனை லேசாக அணத்தாற் போல படுத்து கொண்டாள். படுத்த சில நிமிடங்களிலேயே அவள் மனம் அமைதி அடைய.. நிம்மதியான உறக்கம் கொண்டாள்.

கண்ணனின் கைப்பாவையாக..

கண்மணி ஆவா கொள்ள…

மோகம் கொண்ட கணங்கள்..

தேகம் கூடல் பொழுதுகள் தேட…

தலைவியோ அண்மை நாட..

தலைவனோ தள்ளி நிற்க..

என்று தீரும் இந்த மாய நாடகம்..

7 – புயலோடு பூவுக்கென்ன மோகம் Read More »

8F4BD7E1-38EF-47A3-A4E2-40C72D29E7CD

6 – புயலோடு பூவுக்கென்ன மோகம்

6 – புயலோடு பூவுக்கென்ன மோகம

அன்று பௌர்ணமி… ஏகாந்தமான இரவு வேளை…. மிதமான ஏசி குளிர் அந்த அறையை நிறைத்திருக்க…. வீராவும் நிகிதாவும் தங்கள் சுயக்கட்டுப்பாட்டில் இருவருமே இல்லை.

படுக்கைக்கு வரும்போது சரி வந்த பின்பும் சரி இருவரும் ஒருவரை ஒருவர் இம்மியளவு கூட இடைவெளியின்றி இணைந்து பிணைந்து தான் இருந்தனர்.

வீரா அவள் இதழ் ரச போதையில் நீண்ட நேரம் திளைத்திருக்க..அவள் இதழின் தித்திப்பு எல்லாம் திகட்டி போக.. அவன் உதடுகள் நிகிதாவின் முகமெங்கும் முத்தங்களாக இன்றி இதழ் தீண்டலாக… உலா செல்ல…

அவனின் இதழ் தீண்டல் அவளின் காதல் உணர்வின் முடிச்சுக்களை எல்லாம் மொட்டவிழ்க்க… நிகிதா முதன்முதலாக காதல் என்ற உணர்வுக்குள் இழுத்து செல்லப்பட்டாள் வீராவால்..

பெண்ணவளின் தேகமோ…மலரினும் மெல்லிய தேகம்.. பார்லரின் உபயோகத்தில் மேலும் பட்டு போல வளவளக்க… கண்ணாளனுக்கோ.. மலர் தேக ஸ்பரிசமோ பித்துக் கொள்ள செய்தது

வீரா நிகிதாவை மெல்ல மெல்ல… மிக மிக மென்மையாக…நிதானமாக… பூவை போல… தயங்கி தாங்கி… ஒவ்வொரு அடியாக முன்னேறி அவள் அழகில் திளைத்து… திக்குமுக்காடி… காதலாடி கொண்டாடி தீர்த்தான் தன் இணையை…

ஒவ்வொரு தீண்டலுக்கும் “அமுல் பேபி” “அமுல் பேபி” என கொஞ்சி கொஞ்சியே காரியம் சாதித்து கொண்டான். போதைக்கு அடிமையாக இருந்தாலும் பெண்மையை மென்மையாக தான் கையாண்டான்.அவனின் மென்மையான நிதானமான தொடுகையே…நிகிதாவிற்கு வீராவின் மேல் ஈர்ப்பு கூட காரணமானது.

அவனோ காமத்தின் பிடியில்… இவளோ காதலின் சுவடில்….விடிய விடிய…. மன்மத தேசத்தில் இந்திர விழா அரங்கேறியது.

மன்னவன் தான் சுய நினைவின்றி போதையின் மயக்கத்தில்… மங்கையவளோ சுய நினைவோடே மன்னவனை தாங்கி கொண்டாள்.

காதல் அவளை ஆட்கொண்ட நொடி வீராவின் மேல் அவள் கொண்ட அபத்தம் எல்லாம் பிடித்தமாக மாறின. வீராவின் மேல் கொண்ட வெறுப்பு எல்லாம் விருப்பமாக மாறிய தருணம் அது.

“வீரா” என்று உருகியவளை “மாமா சொல்லுடி அமுல் பேபி” என படுத்தி எடுத்தான். அவளின் “மாமா” என்ற ஒவ்வொரு அழைப்பிற்கும் அவன் அணைப்பின் வேகம் கூடியது.

விடியலின் நெருக்கத்தில் பெண்ணவளை விட்டு நீங்கியவன் அமுல் பேபி அமுல் பேபி என பிதற்றி கொண்டே நிகிதாவை அள்ளி தன் மாரின் மேல் போட்டு அணைத்தவாறே உறங்கி போனான்.

கணவனின் ஆளுமை நிகிதாவின் மனதிற்கு நிறைவாக பூரிப்பாக இருக்க… இது நாள் வரை ஆண் பெண் பேதமின்றி எல்லோரிடமும் விகல்பமில்லாமல் பழகியவளுக்கு… தன் ஆண் தன்னிடம் கொண்ட மோகம் எல்லாம் புதிதாக இருக்க.. பிடித்தும் இருந்தது. அவனோடு ஒன்றி இறுக அணைத்து களைப்போடு உறங்கினாள்.

விடிந்து வெகுநேரம் ஆன போதும் இருவரும் கீழே இறங்கி வராததால் பெரியவர்கள் இருவரும் கவலையுடன் மாடியையே பார்த்து கொண்டு இருந்தனர்.

எப்பவும் நிகிதா நேரம் கழித்து தான் எழுந்து வருவாள். வீரா விடியலில் எழுந்து தனது உடற்பயிற்சி முடித்து குளித்து தயராகி தனது அலுவலை பார்க்க சென்று விடுவான். இன்று அவனும் வராததால் இரவு அவன் எப்போது வந்தான் என்பதும் தெரியாததால் பாட்டி தான் மிகவும் கவலை கொண்டார்.

மங்களம் பாட்டி எப்பவும் வீரா விசயத்தில் மிகவும் கவனமாக இருப்பார். விருப்பமில்லாமல் தான் இங்கு இருக்கிறான்.. எதையும் அவனாக கேட்கமாட்டான்… எனவே அவனுக்கு எந்த ஒரு சவுகரியம் குறைவான.. சங்கடமான நிலை ஏற்படகூடாது என்பதில் தெளிவாக இருந்தார்.

வீரா விழித்து எழுந்த போது வழக்கம் போல நிகிதா அவனை அணைத்து படுத்திருக்க…அவளை பிடித்து தள்ளிவிட்டான். அதில் உறக்கம் கலைந்து எழுந்தவள்.. இருவரின் நிலை கண்டு நாணம் கொண்டு அவசரமாக திரும்பி அமர்ந்து கொண்டாள்.

அப்போது தான் வீராவும் கவனித்தான் இருவரையும்…படுக்கையும்… நடந்ததை ஊகித்தவன் தன் மேலேயே எரிச்சல் கொண்டான்.இரவு என்ன நடந்தது என்று யோசிக்க.. யோசிக்க…தலைவலி மண்டையை பிளக்க ஆரம்பித்தது.

தலையை கையில் தாங்கியவாறு உட்கார்ந்திருந்தவனை கண்ட நிகிதா…அவனின் தலைவலிக்கான காரணம் அறிந்து.. தன் உடையை சரிபடுத்தி கொண்டு கீழே வேகமாக சென்றாள்.

இவர்களின் அறையையே பார்த்து கொண்டு இருந்த பாட்டி நிகிதா வேகமாக இறங்கி வந்து கிச்சனுக்கு செல்வதை பார்த்தவர்.. என்ன என தெரியவில்லையே
பதறி பின்னோடு சென்றார்.

அங்கு நிகிதா லெமன் ஜீஸ் செய்து கொண்டு இருப்பதை கண்டவர்.. புரியாமல்..

“என்ன பண்ணிட்டு இருக்க.. எதுக்கு காலங்கார்த்தால லெமன் ஜீஸ்..”

என்ன சொல்வாள். சொன்னால் அவ்வளவு தான்.. தொலைத்துவிடுவார்கள். செல்ல பேரன் அவனை குடிக்க வைத்தது தெரிந்தால்.. போச்சு வசமாக மாட்டிக் கொண்டேன் என பதட்டத்துடன் நின்றாள்.

“கேட்கிறேன்ல.. சொல்லு” என அதட்டி.. அவள் முகம் பார்க்க… அவளோ பார்வையை தழைத்து கொண்டு எங்கோ பார்த்தாள்.

அவள் முகத்தில் கழுத்தில் சில இடங்களில் வீராவின் பல் தடயங்கள்.. அவளின் உடல்மொழி எல்லாம் வேறு சொல்ல… நடந்தவற்றை ஒருவாறு யூகம் செய்தவர் மேற்கொண்டு அவளை எதுவும் கேளாமல் “சரி போ..”என்றிட..

விட்டால் போதும் என அடித்து பிடித்து ஓடி வந்துவிட்டாள்.வீராவிடம் லெமன் ஜீஸை நீட்ட..என்ன என்பது போல அவளை நிமிர்ந்து பார்த்தான்.

“இல்ல.. உங்களுக்கு கொஞ்சம் ஹேங்ஓவர் ஆகிடுச்சு.. அதான் லெமன் ஜீஸ் எடுத்து வந்தேன்”என தயங்கியவாறு சொல்ல…

சடாரென வேகமாக எழுந்தவன்”ஏன்டி என்னை உசுப்பேத்தி குடிக்க வச்சதும் இல்லாம.. இப்ப லெமன் ஜீஸ் வேற தரீயா…என்ன நெஞ்சழுத்தம்டி உனக்கு..”

அவன் கோபமாக எழுந்த போதே பயத்தில் ஓரடி பின்னால் நகர்ந்தவள் பயத்துடனே..

“இது குடிச்சா… சரி.. ஆகிடும்..” சொல்ல…அவளிடம் இருந்து பிடுங்கி ஒரே மிடறாக குடித்து முடித்தான்.

டிரிங்க்ஸா இருந்தாலும்.. ஜீஸா இருந்தாலும் கல்ப்பா தான் அடிப்பாரா.. என அவனை ஆவென வாயை பிளந்து பார்த்து கொண்டு இருந்தாள்.

குடித்திருந்த ஜீஸ் அவனை கொஞ்சம் தெளிய வைத்திருக்க..நடந்தது எல்லாம் ஓரளவுக்கு நிழலாக அவனுக்கு தெரியப்படுத்த… ச்சே நானா இப்படி இவளை பிடிக்கலைனு சொல்லிட்டு இவகிட்டேயே இப்படி நடந்து இருக்கேனே… என தலையில் அடித்து கொண்டான்…. ஏற்கனவே கோபத்தில் கனன்று கொண்டு இருந்தவனுக்கு அவள் பார்வை மேலும் தூபம் போட…

எல்லாம் இவளால் தானே..இவள் தானே அந்த கருமத்தை வீடு வரைக்கும் கொண்டு வந்தாள். வந்தது மட்டுமில்லாமல் என்னிடம் சண்டை போட்டு என்னையவே குடிக்க வைத்துவிட்டாள் என தன் இயலாமையை எல்லாம் கோபமாக அவள் புறமே திருப்பினான்.

“என்னடி என்னை அப்படி பார்க்கற.. என்னையும் உன்ன மாதிரி குடிகாரனா ஆக்கிடலாம். அப்ப தான் உனக்கு வசதியா இருக்கும்னு பார்க்கறியா…”

“இல்ல.. அப்படி எல்லாம்..” அவளை பேசவிடாமல்..

“இல்லைனா.. எதுக்குடி அதை ரூம் வரைக்கும் எடுத்திட்டு வந்த.. எனக்கு தெரியும் என்கிட்ட சண்டை போட்டதே என்னை குடிக்க வைக்கத் தான..”

ஐயோ கண்டுபிடிச்சிட்டானே.. திரு திருவென முழித்தாள்.

“என்னடி முழிக்கற.. அப்ப எல்லாமே ப்ரீ பிளேனிங்கா தான் செஞ்சிருக்க.. என்னை குடிக்க வச்சு.. என்னை மயக்கி… உன் இஷ்டத்துக்கு என்னை ஆட்டி படைக்க பார்த்திருக்க..”

அடப்பாவி நானாடா உன்னை மயக்கினேன்.. நீ தானடா இங்க வலிக்குதுனு நெஞ்ச தொட்டு புலம்பின.. வலிக்கு ஒத்தடம் கொடுத்தது ஒரு குத்தமாடா என நினைத்து அவனை முறைத்துக் கொண்டு நின்றாள்.

அவளின் முறைப்பு மேலும் கோபத்தை தூண்ட.. நிதானம் இழந்து வார்த்தையை தவறவிட்டான்

“எவ்வளவு திமிரா முறைக்கிற.. என்ன குடிக்க வச்சு.. காரியம் சாதிச்சுகிட்டே இல்ல.. நானும் புத்தி கெட்டு போயி.. உன்னைய தொட்டு இருக்கேன் பாரு.. நினைச்சாவே அருவருப்பா இருக்கு…”என தோளை குலுக்கி கொண்டு சொல்ல…

பங்குனி மாதத்தில் பூக்கும் வேப்பம்பூ சிறியதாக இருந்தாலும் அதன் வாசனை அதிகமாக இருக்கும் அதுபோல பெண்ணவளின் மனதில் பூத்திருந்த காதல் ஒரு இரவில் பூத்ததாக இருந்தாலும்..மனம் முழுவதும் வியாபித்து மணம் பரப்பிக் கொண்டு இருந்தது.

வீராவின் அருவருப்பு என்ற வார்த்தையிலும்… பாவனையிலும் அவளின் மண(ன)ம் நிறைந்த காதல் அடி வாங்கியது.

அவள் கண்களில் கரகரவென கண்ணீர் இறங்கியது. இது நாள் வரை கண்ணீரே அறியாத அவள் கண்கள் வெந்நீரை சிந்தின..

அதையும் நடிப்பு என அவளை சாடினான். “என்னடி நீலி கண்ணீர் வடிக்கற..அழுதா நல்லவனு நம்பிடுவேனா..” என அவளை பிடித்து தள்ளி விட்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.

குளித்து அலுவலகம் செல்ல தயராகி வந்தவன் அவளை திரும்பியும் பாராமல் வேகமாக சென்றுவிட்டான்.

அவன் தள்ளிவிட்டதில் படுக்கையில் குறுக்காக விழுந்தவள் அழுது கொண்டு இருக்க.. அவன் தன்னை பாராமல் சென்றதில் மேலும் அழுகை கூடியது.

வீரா சாப்பிட டைனிங்கிற்கு வரவும் பாட்டி பரிமாற சென்றார். அருகே அமர்ந்து அவனுக்கு பரிமாறியவர் அவனையே கூர்ந்து பார்த்து கொண்டு இருந்தார்.

காலையில் பேத்தியை கவனித்ததில் அவர் மனதில் ஏற்பட்ட சந்தோஷம் வீராவின் முகத்தில் தெரிகிறதா… என பார்க்க.. அவன் முகம் இறுகி கடுகடுப்பாக இருக்க…

என்ன என தெரியாமல்..குழம்பி.. அவனை எதுவும் கேட்டு சங்கடபடுத்தாமல் அமைதியாக அவனுக்கு பரிமாறினார்.

எப்பவும் பெரியவர்களிடம் சொல்லி விட்டு கிளம்புபவன்.. தான் நடந்து கொண்டதை நினைத்து குற்றவுணர்வில் இருந்தவன் சொல்லாமலயே சென்றுவிட…

சொக்கலிங்கம் பேரன் சொல்லாமல் செல்வதை கண்டவர் மங்களத்திடம்

“மங்களா.. என்னாச்சு பேராண்டி சொல்லாம கிளம்பிட்டான். முகமே சரியில்லை..”என கேட்க…

மங்களம் கணவரின் அருகே அமர்ந்து மெல்லிய குரலில் காலையில் பேத்தி வந்ததையும்.. வீராவின் கடுகடுப்பையும் சொல்லி தான் ஓரளவு நடந்ததை கணித்தவர்

“நடந்தது சந்தோஷமான விசயமா இருந்தாலும்.. இருவரும் சந்தோஷமா இல்லை.. என்ன சொல்ல.. புரிஞ்சுகாத புள்ளைகளா இருக்காங்களே..”என சலிப்பாக பெருமூச்சு விட்டார்.

“விடு மங்களா..எல்லாம் சரியாகும்.. வீரா எல்லாம் சரி பண்ணிடுவான்”என சமாதானம் செய்தார் சொக்கலிங்கம். வீராவை தான் சரி பண்ணனும் என அவருக்கு தெரியவில்லை பாவம்.

அழுது கொண்டு இருந்தவள் மதிய உணவுக்கு கூட கீழே இறங்கி வரவில்லை.நிகிதா வராததால் மங்களம் பாட்டி அவளை பார்க்க அவர்கள் அறைக்கு சென்றார்.

நிகிதா அழுதழுது கண்கள் சிவந்து முகம் எல்லாம் வீங்கி ரோஜா நிறத்தில் கன்றி போய் இருக்க.. தேம்பிவாறு குப்புற படுத்திருந்தாள்.

பார்த்ததும் கோபம் தான் வந்தது பாட்டிக்கு.. என்ன பெண் இவள் என…

“ஏய் நிகிதா.. எதுக்கு இப்படி அழுதுகிட்டு இருக்க… எந்திரி முதல்ல..” என்றார் அதிகாரமாக..

எப்பவும் பாட்டியின் அதிகாரத்தில் சிலிர்த்து கொண்டு நிற்பவள்.. எழுந்து அமைதியாக அமர்ந்தாள்.

“என்ன நடந்துச்சுனு இப்படி அழுதுகிட்டு இருக்க…”

“கேட்கறன்ல பதில் சொல்லு”

அதற்கும் அவள் அமைதியாக இருக்க…

இவளுக்கு பிடிக்காமல் பேரன் வலுகட்டாயமாக ஏதாவது செய்து விட்டானா..அப்படி செய்யகூடியவன் இல்லை.என்ன நடந்தது என தெரியலையே இப்படி அழுகறாளே.. எப்படி கேட்பது..என யோசித்தவர்….

“வீரா.. உன்கிட்ட.. உனக்கு பிடிக்காம.. தப்பா நடந்துகிட்டானா..”என தயக்கமாக கேட்க…

இல்லை என தலை அசைத்தாள்.

“அப்புறம் எதுக்கு அழுகற..இப்ப என்ன நடந்துச்சுனு சொல்ல போறியா இல்லையா..” என்று சத்தமிட..

பயத்துடன் தலை குனிந்து ரூபேஷ் ட்ரிங்ஸ் வாங்கி கொடுத்தது.. வீட்டுக்கு கொண்டு வந்தது.. வீராவிடம் வம்பு செய்து அவனை குடிக்க வைத்தது.. என எல்லாம் சொன்னவள்.. அதற்கு மேல் நடந்தவற்றை சொல்ல தயங்கி..

“ம்ம்..அப்புறம் அவங்க.. என்கிட்ட..”

இதை எல்லாம் கேட்ட பாட்டிக்கு கோபம் தாறுமாறாக ஏற..

“ஏய் உனக்கு எவ்வளவு கொழுப்புடி.. அவனை குடிக்க வச்சிருக்க.. குடிச்சிட்டு அவன் தப்பா நடந்துகிட்டானு புகார் வாசிக்கறியா.. உன்னை.. “என அடிக்க கை ஓங்கி கொண்டு போக..

சட்டென அவரை கட்டி கொண்டு “தப்பா எல்லாம் நடந்துக்கல.. எனக்கு பிடிச்சிருக்கு.. மாமாவ எனக்கு பிடிச்சிருக்கு..” என தோள் சாய்ந்து அழுக…

அவள் சொன்னது புரிய ஓரிரு நிமிடங்கள் ஆக… புரிந்ததும் கோபம் போய் அடக்கமாட்டாமல் உல்லாசமாக சிரிக்க…

“கீரேனீ நான அழுதுகிட்டு இருக்கேன்.. நீங்க சிரிக்கறிங்க..”என சிணுங்கினாள்.

“அடியே ராஜாத்தி…இப்ப தான் பார்க்க அழகா இருக்க..” நெட்டி முறித்து திருஷ்டி கழிக்க…

“எது.. நா..அழுது வீங்கி இருக்கறதா..” என பொய் கோபம் கொண்டு முறைக்க..

“அதான் உன் மாமன.. பிடிச்சிருக்குல்ல.. அப்புறம் எதுக்கு அழுகறவ..”

“எனக்கு பிடிச்சிருக்கு..ஆனா மாமா.. என்னை பார்த்து அருவருப்பா இருக்குனு சொல்லி.. தள்ளிவிட்டு போய்டாங்க..” என மீண்டும் தேம்பி கொண்டு அழுக..

“முதல்ல அழுகையை நிறுத்து.. நீ செஞ்ச வேலைக்கு வச்சு கொஞ்சுவானா.. “என திட்டியவர் பின்பு கொஞ்சம் பொறுமையாக..

“நீ செஞ்சது தப்பு தான.. அத நீ தான் சரி பண்ணனும். உனக்கு அவனை பிடிச்சிருக்குனு நீ தான் அவனுக்கு புரிய வைக்கனும்” என சொல்ல..

“புரிஞ்சுப்பாங்களா.. மாமாவுக்கும் என்னை பிடிக்குமா..கீரேனீ” என ஏக்கமாக கேட்க..

“எங்க போயிடறான். எல்லாம் புரிய வைப்போம். நீ மட்டும் நான் சொல்றபடி கேட்டு செய்.. அவன உன் வழிக்கு கொண்டு வந்திடலாம்” என்றார்.

உடனே அவரை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் ஒன்று வைத்து.. “என் செல்ல கீரேனீ” என்றாள்.

அவளின் முத்தத்தில் கூச்சம் கொண்டு “சீ.. எச்சில் பண்ணிகிட்டு.. பாரு படுக்கை எல்லாம் அலங்கோலமா கிடக்கு.. நீயும் எப்படி இருக்க பாரு.. ஆள அனுப்பி வைக்கறேன். எல்லாம் சுத்தம் பண்ண சொல்லிட்டு நீயும் குளிச்சிட்டு ரெடியாகி அவன் மதிய சாப்பாட்டிற்கு வரங்காட்டி வா..”

“புடவை கட்டிட்டு வா..”

எனக்கு சேரி கட்ட தெரியாது கீரேனீ” என்றாள் பயத்துடன்..

“உன்னை சொல்லி குத்தமில்லை.. எல்லாம் உன் அம்மாவ சொல்லனும்.. சரி இனி பேசி என்னாக போகுது.. நல்ல சுடிதாராவது போட்டுகிட்டு வா..” என சொல்லி சென்றார்.

நிகிதாவும் பாட்டி சொன்னது போல குளித்து நல்ல காட்டன் சுடிதார் அணிந்து வழக்கமான மேக்கப் செய்து கீழே சென்று பாட்டியோடு அமர்ந்து வீராவின் வருகைக்காக காத்திருந்தாள்.

ஆனால் வீராவோ இவள் முகம் பார்க்க பிடிக்காமல் உணவை தவிர்த்து வீட்டுக்கு வரவில்லை.

மாயவன் செய்த மாயங்கள் எல்லாம்

மங்கை நெஞ்சை கொள்ளை கொள்ள..

கள்வனாய் உள்ளம் கவர்ந்தது தெரியாமல்..

கள்ளியின் நேசத்தை அறியாமல்..

பேதையை தள்ளி நிறுத்தி எட்டி நின்று

வாட்டி வதைப்பானோ..

இந்த மாய கண்ணன்….

6 – புயலோடு பூவுக்கென்ன மோகம் Read More »

A429FEE1-560B-44DA-BB03-EF84029FDD39

5 – புயலோடு பூவுக்கென்ன மோகம்

5 – புயலோடு பூவுக்கென்ன மோகம்

வீரா மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தான். விருப்பம் இல்லாமல் வலுகட்டாயமாக திணிக்கப்பட்ட வாழ்க்கை. தொழிலும் அவ்வாறே.. அவன் படிப்பிற்கும் வேலைக்கும் சம்மந்தம் இல்லாத தொழில். அதன் அரிச்சுவடி புரியவே அவனுக்கு நாட்கள் எடுத்தது.

இருந்த போதிலும் முயன்று ஈடுபாட்டோடே கற்று கொள்ள முயன்றான். இதுவே அவனுக்கு ஒரு மன அழுத்தத்தை கொடுத்திருக்க…இன்று நடந்த குளறுபடியால் ஏகப்பட்ட டென்ஷன்.

அவனின் மனநிலை புரியாமல் நிகிதா அவனுக்காக காத்திருந்தாள். வீடு வந்து சேர்ந்தவனை அமைதியான யாருமற்ற வரேவேற்பறையே வரவேற்றது.

அந்த வீட்டில் உள்ளவர்கள் தனித்தீவு போல தான் வாழ்ந்தார்கள். எப்பவும் இவனுக்காக பாட்டி காத்திருந்து இவன் வந்து சாப்பிடும் வரை கூட இருந்து கவனிப்பார் தான் ஆனால் இன்று அவன் வழக்கத்தை விட அதிக நேரம் கடந்து வந்திருக்க…

பாட்டியும் வயதின் தள்ளாமை மாத்திரையின் உபயோகம் என உறங்க சென்றிட.. தனியே உணவு உண்ணும் நிலை.

பரிமாற வந்த வேலைக்காரர்களை வேண்டாம் என சொல்லி விட்டு தானே எடுத்து வைத்து சாப்பிட்டான்.

ஊரில் என்றால் அவன் அம்மா அருகில் இருந்து அவன் பசியறிந்து பரிமாறுவார். வேலைக்காக சென்னை வந்த பிறகு வீராவும் அவன் நண்பர்கள் என நான்கு பேர் சேர்ந்து வீடு எடுத்து தங்கியிருந்தனர். முடிந்தால் சமைத்து உண்பர். இல்லை என்றால் வெளியே வாங்கி கொள்வர்.

ஆனால் சமைத்ததோ பார்சல் உணவோ நைட் ஷிப்ட் செல்பவர்களை தவிர மற்றவர்கள் இரவு நேரங்களில் விடுமுறை நாட்களில் கேலியும் கலாட்டாவுமாக பேசிக் கொண்டே சாப்பிடுவர்.

அப்படி இருந்தவனுக்கு இந்த சூழ்நிலை ஒவ்வாமை தான். இந்த ஒவ்வாமை மனதில் ஒரு வெறுமை என அன்று வீரா கொஞ்சம் எரிச்சல் கொஞ்சம் சலிப்பு என அவன் மனம் சற்று நிலை பிறழ்ந்து தான் இருந்தது.

அவன் அறைக்கு வந்து உடை மாற்றி குளியலறை சென்று வரும் வரை சோபாவில் அமர்ந்து அவனையே பார்த்து கொண்டே எப்படி ஆரம்ப்பிப்பது என யோசித்து கொண்டு இருந்தவள் அவன் படுக்க செல்லவும்…

மறைத்து வைத்திருந்த பாட்டிலை எடுத்து வந்தவள் அவனை பார்த்தப்படியே டீப்பாய் மேலே வைத்தாள். அவள் என்னமோ செய்கிறாள் என அவளை சட்டை செய்யாமல் படுக்க சென்றவன் பாட்டிலை பார்த்ததும் அதிர்ந்து விட்டான்.

அவன் பார்க்கும் போதே பாட்டிலை திறந்து கண்ணாடி டம்ளரில் உற்ற… வீராவிற்கோ மேலும் அதிர்ச்சி.

நிகிதா குடிப்பாள் என்று தெரியும். அதுவும் எப்போவதாவது நண்பர்களின் வற்புறுத்தலில் இரண்டு மூன்று தடவை அவ்வளவே..

வீட்டிலேயே இவ்வாறு அதுவும் கல்யாணத்திற்கு பின்பும் செய்வாள் என அவன் எதிர்பார்க்கவில்லை.

அவனின் அதிர்ந்த முகத்தை பார்த்தவாறே அவள் எடுத்து குடிக்க… வேகமாக அவளிடம் வந்தவன்

“என்னடி பண்ணிட்டு இருக்க..”

“பார்த்தா தெரியலையா.. ட்ரிங் பண்றேன்”

“வீட்ல வச்சு குடிக்கிறது இல்லாம… அதை என்கிட்டயே சொல்லற.. என்ன தைரியமடி உனக்கு” என்று கோபமாக பேச..

அவனை கோபப்படுத்தி குடிக்க வைக்க வேண்டும். அவனை தாத்தா பாட்டியிடம் காட்டி பெரிய பேரன்… ஒழுக்கசீலன்… என சொன்னிங்கல்ல பாருங்க…. அந்த நல்லவனை.. என அவன் மதிப்பை கெடுக்க வேண்டும் என எண்ணி செய்து கொண்டு இருந்தாள்.

“குடிப்பேனு தெரிஞ்சு தான கட்டிகிட்ட.. அப்புறம் என்னமோ புதுசா அதிர்ச்சியாகி கத்தற..” என்று எடுத்தெறிந்து பேசினாள்.

பேசியதோடு அல்லாமல் டம்ளரில் உள்ளவற்றை ஒரே மடக்கில் குடித்து முடித்தாள்.

“சொல்லிகிட்டே இருக்கேன்.. குடிக்கிற.. உன்னைய..”என அடிக்க கை ஓங்க..

அவன் முன்னால் திமிறி கொண்டு நின்றவாறே..

“அடிப்பியா.. எங்க அடி.. அடி பார்க்கலாம்” என்க…

“ச்சை உன்னைய அடிச்சா எனக்கு தான் அசிங்கம்”என்றான் முகத்தில் அருவருப்புடன்..

இதுவரை அவளை யாரும் அப்படி சொன்னதோ.. பார்த்ததோ இல்லை வீட்டிலும்… நண்பர்களும் அவளை கொண்டாடி தான் பார்த்திருக்கிறாள்.அதில் மேலும் கோபம் கொண்டவள்

“நான் அசிங்கமா உனக்கு..நீ பெரிய ஆணழகனா.. ரொம்ப நல்லவனா.. நீயும் கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி இருந்தியோ… யாருக்கு தெரியும். நல்லவன் மாதிரி நடிச்சு எல்லோரையும் நம்ப வச்சு ஏமாத்திட்ட..” என்றாள் ஏளனமாக…

அவளின் ஏளனகுரலில் கோபத்தின் உச்சிக்கே சென்றவன்

“ஆமாண்டி நான் ஆணழகன் இல்லை தான் ஆனால் எந்த கெட்ட பழக்கமும் இல்லாத நல்லவன்டி.. நான் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழனும்னு ஆசைப்பட்டேன் தெரியுமா..போயும் போய் உன்னைய என் தலைல கட்டி வச்சிட்டாங்க..”

எப்படிபட்ட மனைவி.. எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ ஆசை கொண்டான் என சொல்ல.. சொல்ல.. நிகிதாவின் கர்வம் திமிர் எல்லாம் அடி வாங்கியது.

“கடைசியில் என் வாழ்க்கை உன்னோடனு சேர்த்து வச்சிட்டாங்க.. எல்லாம் என் தலையெழுத்து” என்றான் வேதனையான குரலில்

எல்லோரும் கொண்டாடும் தன்னை ஒருவன் தலையெழுத்தே என சகிப்பதா..என ஆத்திரம் கொண்டவள்.

மேலும் அவனை உதாசீனப் படுத்தி பேச.. இவன் பதிலுக்கு அவளிடம் மல்லுக்கட்ட…சண்டை வளர்ந்து கொண்டே சென்றது..

ஏற்கனவே ஒரு வித மன அழுத்தத்தில் வந்தவனிடம் நிகிதா பெரிய சண்டையை செய்ய.. மன அழுத்தம் அதிமாகி.. தன்நிலை மறந்து.. தன் குணத்தில் இருந்து தடுமாறி.. தன் பழக்கத்தில் இருந்து தடம் புரண்டு.. எதிரில் இருந்த பாட்டிலை எடுத்து மொத்தமாக வாயில் சரித்தான்.

நிகிதாவோ ஆவென வாயை பிளந்து பார்த்து கொண்டு இருந்தாள். அடப்பாவி என்னைய குடிகாரினு சொல்லிட்டு இவன் பெரிய இவனாட்டம் பேசினான். இப்ப என்னடானா.. மொத்தமா வாயில் ஊத்திக்கிட்டானே.. என அவனை பார்த்து கொண்டு இருந்தாள்.

குடித்து முடித்தவன் பாட்டிலை வேகமாக டீப்பாய் மேல் வைத்தவன்.. சோபாவில் தொப்பென அமர்ந்து தலை மேல் கை வைத்து..

“நானூ..உ..உ.. எப்படீடீ…பட்டவனு.. தெரியுமா… இந்த கருமத்தை. …ஐஐஐ….எல்லாம் மோந்தூ கூட பார்த்ததில்ல… எல்லாம் சகவாச… தோஷம்… உன்னோட சேர்ந்தூ.. நானும் குடிகாரனா…ஆகிட்டேன்”என மேலும் மேலும் ஏதேதோ அழுகையான குரலில் புலம்ப…

நிகிதாவும் குடித்திருந்ததால் லேசான மயக்கத்தில் இருந்தவள் அவன் புலம்பவும் மனது கேளாமல் அவனருகே அமர்ந்து..

“அழுகாத.. வீரா..” என அவன் கையை பிடித்துக்கொண்டு சொல்ல..

“போடி…அழுகாத.. னு.. சொல்ற… இங்க…இங்க… வலிக்குதடீடீ… ரொம்ப…”என தனது நெஞ்சை தொட்டு காட்ட…

“இரு நான் உனக்கு அங்க முத்தா.. வைக்கறேன்.. முத்தா வைச்சா.. வலி.. எல்லாம்.. பறந்து போயிடும்” என கையை விரித்து பறந்து போவது போல சைகை செய்ய…

“ம்ம்ம்… அப்படியா… சொல்ற… அப்ப… முத்தா …வை..”

அரை மயக்கத்தில் நிகிதாவும் முழு போதையில் வீராவும் சுய நினைவின்றி இரண்டும் பிதற்றி கொண்டு இருந்தன.

வீராவின் அருகே நெருங்கி அமர்ந்து தன் மொத்த உடலையும் அவன் மேலே உரசியவாறு.. அவன் போட்டு இருந்த உள் பனியன் மேலேயே முத்தம் கொடுக்க…

“இப்ப சரியா போச்சா…வலி எல்லாம் போச்சா..” என அவன் முகம் பார்த்து கேட்க…

சிறு குழந்தையாக உதட்டை பிதுக்கி கொண்டு “நீயி… பொய் சொல்லற… என்ன..ஆ…ஏமாத்தற…”

“இல்ல…நா.. கொடுத்தே…இரு..மறுபடியும் தரேன்..” என அவனை இன்னும் நெருங்கி முத்தம் கொடுக்க போனவள் தாடையில் தன் ஆள்காட்டி விரலால் தட்டி யோசித்தவாறே…

“வீரா..ரா..இந்த பனியன கழட்டிடூ…இது மேல கொடுத்தேனா ஆ.. அதான் உனக்கு ஒன்னுமே தெரியல..”

“ஆங்..அப்படியா..சொல்ற..”என சாதுவாக அவன் கேட்க.. ஆமாம் என இவளும் அப்பாவியாக தலையை ஆட்ட..

பரபரவென பனியனை கழட்டி எறிந்தான்.

“இப்ப.. கொடு..”

நிகிதா கண்களை சுருக்கி உதட்டை குவித்து அவன் நெஞ்சில் அழுத்தமான முத்தம் ஒன்று வைக்க….

அந்த முத்தத்தின் குளிர்ச்சி அவன் நெஞ்சில் இருந்து உடல் முழுவதும் பரவி அவன் உடல் ஒரு நொடி சிலிர்த்து அடங்கியது.

“ம்ஹா..” கண்மூடி அதை அனுபவித்தான். அவனின் செய்கை இவளை மேலும் தூண்டிவிட.. அவன் நெஞ்சமெங்கும் குட்டி முத்தங்கள் வைத்தாள்.

வீரா குடும்பத்திற்கு கட்டுப்பட்டவன். இது வரை எந்த பெண்ணையும் காதல் என்ற பார்வையில் பார்த்ததில்லை.. விடலை பருவத்தில் பெண்களை சைட் அடித்திருக்கிறான். ஆனால் தனது தந்தையின் உழைப்பை பார்த்து வளர்ந்தவன் சிறு வயதில் இருந்தே பொறுப்பானவன் தான்.

எனவே தனது கல்யாணம் பெற்றவர்கள் பொறுப்பு என சுயக்கட்டுப்பாடோடு இருந்தவன் அதனால் தான் பிடிக்காமல் போனாலும் பெற்றவர்கள் தேர்வு நிகிதா எனவும் மறு பேச்சின்றி தாலி கட்டினான்.

இன்று அவளின் முத்தம்… அவன் வாழ்வில் முதல் முறையாக ஒரு பெண்ணின் முத்தம்… அவனின் காதல் உணர்வுகளை தட்டி எழுப்ப…

அந்த முத்தம் தன் உடலெங்கும் வேண்டும் என்ற வேட்கையை தூண்ட.. அவளை காதல் மிகுந்த ஏக்கப் பார்வையோடு பார்த்தவன்.. இங்கு இங்கு என நெஞ்சில் இருந்து மேல் நோக்கி கழுத்து கன்னம் என தன் சுட்டுவிரல் கொண்டு தொட்டு காண்பிக்க…

நிகிதாவிற்கும் ஆண் நண்பர்கள் உண்டு தான். அவளுக்கு நட்பில் ஆண் பெண் பேதம் கிடையாது.எல்லோரிடமும் விகல்பமில்லாமல் தான் பழகுவாள்.

வீட்டில் கிடைக்காத அன்பை வெளியில் தேடிய பொழுது அமைந்த நண்பர்கள் அவர்கள். எல்லாம் மேல் வர்க்க பிள்ளைகள். அவர்களை பொறுத்தவரை குடிப்பது தவறில்லை. சிறு வயதிலேயே வீட்டில் பார்ட்டிகளில் பார்த்து வளர்ந்தவர்கள். அவர்களின் போதனைகள் தான் நிகிதாவின் இந்த பழக்கம். இது வரைக்கும் அவளுக்கும் காதல் உணர்வுகள் யாரிடமும் தோன்றியதில்லை.

வீரா தன் சுட்டுவிரலால் ஒவ்வொரு இடமாக கழுத்து கன்னம் என சுட்டிக் காட்ட.. அவள் குட்டி குட்டி ஐஸ் முத்தங்களை வைக்க.. ஒவ்வொரு முத்தத்திற்கும் ஹா.. என தலையை உயர்த்தி சிலிர்த்து அடங்கினான். முத்தத்திற்கே இப்படியாடா.. மொத்தமும் அவள் கொடுத்தால்.. என்னாவியோ….

இறுதியாக அவனின் உதட்டில் தட்ட.. ஒரு நொடி யோசித்தாள். மறு நொடி அவன் உதட்டில் ஒரு சில் முத்தத்தை வைத்து விலக… விலக எத்தனித்த… நொடிக்கும் குறைவான நேரத்தில் அவள் இதழை தன் இதழால் மடக்கி இழுத்து சுவைக்க… அவன் பருகிய பழ ரசத்தால் உண்டான போதையை விட இவளின் இதழ் ரசம் தந்த போதை அவனின் உச்சி மண்டை வரை சுரீரென கிறு கிறுக்க வைக்க..

அடுத்து முத்தத்தை எல்லாம் அவன் கைவசமாக்கி கொண்டான். அவள் நெஞ்சில் இருந்து உதடு வரை கொடுத்ததை … இவன் உதட்டிலிருந்து கீழ் நோக்கி முத்த தடம் பதிக்க… நிகிதாவிற்கும் ஒரு பரவச உணர்வு ..அவளுக்கு இந்த புது வித உணர்வு பிடித்திருக்க…அவனோட ஆன நெருக்கத்தை இன்னும் அதிகப் படுத்தினாள்.

இருவரும் ஏப்பொழுது சோபாவில் இருந்து படுக்கைக்கு இடம் பெயர்ந்தார்கள் என்று அவர்களே அறியவில்லை.

இருவருமே சுய நினைவில் இல்லை. அவர்களை அறியாமல் உள்ளத்தால் அன்றி உடலால் நெருங்கியவர்கள் மேற் கொண்டு என்ன செய்ய போகிறார்கள்…?

5 – புயலோடு பூவுக்கென்ன மோகம் Read More »

5697C917-9D02-4D18-9A75-F502FF13CB26

4 – புயலோடு பூவுக்கென்ன மோகம்

4 – புயலோடு பூவுக்கென்ன மோகம்

காலையில் எப்பவும் விடியலுக்கு முன்பு எழும் பழக்கம் உள்ளவன் என்பதால் தன் வழக்கமான நேரத்திற்ககு விழித்தவன் தன்னை அணைத்து படுத்திருக்கும் நிகிதாவை பார்த்ததும் இரவு நடந்தது ஞாபகம் வர மெல்ல தலையை தூக்கி அவள் கன்னத்தை பார்த்தான்.

நிகிதாவின் தேகமோ ரோஜாப்பூ போன்று மென்மையான தேகம். எந்த வேலையும் செய்யாமல் வெயில் படாமல் பட்டு போன்று வழுவழுப்பான தேகம். இவனுக்கோ படிக்கும் காலத்திலும் சென்னைக்கு வேலைக்கு வந்த சமயங்களில் ஊருக்கு செல்லும் காலத்திலும் ஓய்வாக இருக்கும் போது தன் தந்தைக்கு உதவியாக பட்டு கைத்தறி நெய்ய சென்று விடுவான்.

அதனால் அவன் கை சற்று காய்ப்பு காய்ந்து இருக்கும். அவனின் முரட்டு கைகளால் அறைந்திருக்க.. அவள் ரோஜா நிறம் கன்னம் மேலும் சிவந்து கன்னி போய் லேசாக வீங்கி இருந்தது.

அவள் கன்னத்தின் கன்றலை பார்த்தவனுக்கு மனதில் ஒரு வலி. மெல்ல கன்னத்தை வருடி கொடுத்து

“ஏன்டி எனக்கு கோபம் வர மாதிரி நடந்துக்கிற.. நான் தான் மரியாதை இல்லாம பேசாதேனு சொல்லறன்ல கேட்காம இப்படி பண்றயே..” என மிக மெல்லிய குரலில் அவளுக்கு கேட்காதவாறு சொல்லிவிட்டு… அவள் தூக்கம் கலையாதவாறு தன் நெஞ்சில் இருந்து தலையணைக்கு அவளை இடம் மாற்றி விட்டு… வெளியே சென்றான்.

அந்த அதிகாலை வேளையிலேயே வீடு பரப்பரப்பாக இருந்தது. அன்று அசைவ விருந்து.ஞாயிறு விடுமுறை வேறு.

வீரா கொல்லைப்புறம் கிணற்றடியில் பல் விளக்கி கொண்டு இருக்க…. அங்கு வந்த ஆரா “மாமா குளத்துக்கு போலாமா..” என கேட்க..

“போலாமே..”என்றான். சின்ன பெண் எவ்வளவு அழகாக தங்களோடு பொருந்தி போகிறாள். இவளும் இருக்காளே என மனைவியை மனதுள் வசை பாடினான்.

விசாலா கொடுத்த காபியை குடித்து விட்டு இருவரும் குளத்திற்கு சென்று விட..

வீரா வீடு வருவதற்குள் நிகிதா அவன் மேல் ஒரு பெரிய பஞ்சாயத்தே வைத்திருந்தாள்.

வீரா சென்ற சிறிது நேரத்தில் நிகிதா எழுந்துவிட்டாளா.. என விசாலா சென்று பார்க்க..

நிகிதா வீராவின் தலையணையை கட்டி பிடித்து உறங்கி கொண்டு இருந்தாள். சிறு பிள்ளையென உறங்குபவளை கண்டு புன்னகையுடன் அருகில் சென்றவர் அவளின் கன்னத்தைப் பார்த்து அதிர்ச்சியாகிவிட்டார்.

இருவருக்கும் பிடிக்காத கட்டாய கல்யாணம் தான் இருந்த போதும் கல்யாணமாகி ஓரிரு தினங்களே கடந்த நிலையில் இதை அவர் எதிர்பார்க்கவில்லை.

தன் மகனே ஆனாலும் மனைவியை அடித்தது பிடிக்கவில்லை. அய்யாவு இத்தனை ஆண்டுகளில் எப்போதாவது கோபப்படுவாரே தவிர அடித்தது எல்லாம் இல்லை. விசாலா அய்யாவு இருவருக்கும் ஒத்த எண்ணங்களே… அதனால் இவர்களிடையே பெரிய கருத்து வேறுபாடு இருந்ததில்லை.

விசாலாவிற்கு மகனின் செயலில் மிகவும் வருத்தம். மெல்ல நிகிதாவின் அருகில் அமர்ந்து அவளின் கன்னத்தை நீவிக் கொடுக்க…

அந்த மெல்லிய ஸ்பரிசம் கூட வலியை தவிர..

“ஷ்ஷ்..ஷ்.. வலிக்குது” என நிகிதா விசாலாவின் கையை தட்டி விட..

“வலிக்குதா.. நிகிதா கண்ணு..” என தலையை கோதியவாறே கேட்க…

ஏற்கனவே விசாலா கன்னத்தை நீவும் போதே.. தூக்கம் கலைந்தவள் விசாலாவின் கேள்வியில் முழுதாக விழிப்பு வந்திட.. எழுந்து அமர்ந்து விசாலாவை பார்த்து..

“வீரா அடிச்சிட்டான்.. அத்தை..” என உதட்டை பிதுக்கி சொல்ல..

“புருஷனுல்ல.. அப்படி மரியாதை இல்லாம பேசகூடாது தங்கம்”என்று கனிவாக சொல்ல..

மகளும் பேத்தியும் என்ன பேசுகிறார்கள் என பார்க்க வந்த மங்களத்திற்கு பேத்தியின் கன்னத்தை பார்த்ததும் புரிந்து விட்டது. இவ ஏதோ வில்லங்கமா பேசியிருப்பா.. அதான் செவுட்லயே ஒன்னுவிட்டுட்டான் போல..

“பாருங்கம்மா உங்க பேரன.. எப்படி அடிச்சிருக்கான்.. புள்ள கன்னமே வீங்கி போச்சு..”

“இவ என்ன பண்ணி வச்சாளோ..”

“எதுவா தான் இருக்கட்டும்.. அதுக்கு அடிக்கிறதா..” என்றவாறே சொக்கலிங்கமும் வந்துவிட…

தாத்தாவா நமக்கு சப்போர்ட் பண்ணுவது என நம்பாமல் பார்த்தவள்.. ஏற்கனவே விசாலாவின் பரிவான பேச்சில் சோகம் போல முகத்தை வைத்திருந்தவள்.. இப்போதும் இன்னும் சோகமாக அடிவாங்கிய குழந்தையாக முகத்தை வைத்து கொண்டாள்.

சொக்கலிங்கத்தின் சத்தத்தில் அய்யாவு வெங்கட் ரோகிணி என எல்லோரும் அங்கு வந்திட.. வெங்கட் ரோகிணி இருவரும் மகளை பார்த்ததும் மன வருத்தப்பட.. அதிலும் ரோகிணிக்கு கண்களில் நீர் திரண்டிட ..

விசாலா அய்யாவு இருவருக்கும் தர்ம சங்கடமான நிலை. நிலைமையை சமாளிக்கும் பொருட்டு மங்களம் தான்நிகிதாவிடம்

“ம்ம் சரி சரி போ.. போய் முகம் கழுவிட்டு வா.. விசாலா அவளுக்கு ஏதாவது குடிக்க கொண்டு வா..”

தாத்தாவோ..”அவன் வரட்டும் நான் கேட்கிறேன் ராஜாத்தி.. நீ போ ஏதாவது குடி” என்று சொல்லிவிட்டு சென்றார்.

“ரொம்ப வலிக்குதா பேபி ஐஸ் க்யூப் வைக்கவா..”என ரோகிணி கேட்க..
எல்லோரும் தாங்கவும் இரு.. இரு.. என்னைய அடிச்சில்ல..உனக்கு இருக்கு எல்லார்கிட்டயும் என மனதுக்குள் குதூகலமாக எள்ளி நகையாடினாள்.

வீரா வீட்டிற்கு வரும் போது எல்லோரும் இவனை கோபமா வருத்தமா என சொல்லமுடியாத பாவனையில் பார்க்க..

அட என்னங்கடா இது எல்லோரும் என்னை இப்படி பார்க்கறாங்க..என யோசித்து கொண்டு நிற்க..

விசாலாவோ மருமகள் வழக்கமாக குடிக்கும் ஹெல்த் ட்ரிங்க்ஸை அருகில் அமர்ந்து மெதுவாக அவளுக்கு புகட்டி கொண்டு இருந்தார்.

அதை பார்த்தவனோ இவ ஏதோ சீன் கிரியேட் பண்ணிட்டா.. என நினைத்து பல்லை கடித்து கோபத்தை அடக்கினான்.

தாத்தா “வீரா.. என்ன தான் கோபமாக இருந்தாலும்.. பொம்பள புள்ளய கை நீட்டி அடிக்ககூடாது. தப்பு ய்யா..” என்றார் கண்டனத்துடன்..

அய்யாவு “நீ இப்படி செய்வேனு எதிர்பார்க்கல ய்யா”என்று சொல்லி விட்டு எழுந்து சென்றுவிட..

வெங்கட் வீரா அருகே வந்து அவனின் கைகளை பிடித்து கொண்டு “மாப்ளே.. எத்தன கோபமா இருந்தாலும் நாலு வார்த்தை சேர்த்து வேணாலும் திட்டு.. அடிக்காத.. செல்லமா வளர்த்த பொண்ணு பார்க்கவே மனசு ரொம்ப வலிக்குது”

ஏற்கனவே அடித்து விட்டோமே என்ற குற்ற உணர்ச்சியில் இருந்தவன் பெரியவர்களின் பேச்சில் மனம் குன்ற … தலை குனிந்து கொண்டான்.

“சாரி மாமா.. இனி இது போல நடக்காது” என சொல்லிவிட்டு தனது அறைக்கு செல்ல..

நிகிதாவை குடிக்க வைத்துவிட்டு வெளியே வந்த விசாலா தன் பங்கிற்கு..

“பாவம் புள்ள..இனி இப்படி பண்ணாத ராசா.” என சொல்லி செல்ல..

உள்ளே சென்றவன் அவளை பார்த்து எல்லாம் இவளால வந்தது என கோபமாக பார்க்க..

எல்லோரும் அவனை திட்டிய குஷியில் நிகிதாவோ உதட்டை சுழித்து நாக்கை மடித்து அவனுக்கு பழிப்பு காட்டினாள்.

அதில் மேலும் கடுப்பானவன் “போடி” என சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியே சென்றுவிட்டான்.

விசாலா நிகிதாவிற்கு என்ன பிடிக்கும் என்ன எப்படி சாப்பிடுவாள் என அவளிடமே கேட்டு முன்தினமே அய்யாவிடம் சொல்லி வாங்கி வைத்தார்.

நிகிதாவிற்காக தனியாக அவளுக்கு பிடித்த மாதிரி சமைக்கவும் செய்தார். இது எல்லாம் நிகிதாவிற்கு விசாலாவை பிடித்து விட அத்த.. அத்த.. சலுகை கொண்டாடினாள்.

விசாலாவும் மருமகள் தன்னிடம் இழையவும் தாங்கினார்.வீராவோ என்னமா நடிக்கிறா.. இவ நடிப்புல எங்க அம்மா கவுந்திடுச்சே என பொருமினான்.

இப்படியாக அன்று விருந்தை முடித்து கொண்டு.. இரவே சென்னை திரும்பினர்.

அடுத்த நாளில் இருந்து வீரா வெங்கட்டோடு பேக்டரிக்கு செல்ல ஆரம்பித்தான். வெங்கட்டின் தொழிற்சாலை கார் லாரி பஸ் போன்றவை தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சில உபரி பாகங்களை தயாரித்து கொடுப்பது ..

வீராவின் படிப்பு வேலை எல்லாம் ஐடி துறை . அவனுக்கு இந்த தொழிலை புரிந்து கொள்ளவே மிகவும் சிரமப்பட்டான். வெங்கட் சொல்லி கொடுப்பதை வைத்தும் தன் சுய முயற்ச்சியிலும் முயன்று கற்றுக்கொள்ள.. அவனுடைய சிந்தனை நேரம் எல்லாம் அதிலேயே செலவிட..

நிகிதாவிற்கும் வீராவிற்கும் இடையே சாதரண பேச்சுகளோ.. ஏன் சண்டை கூட இல்லை. காலேஜ் ப்ரண்ட்ஸ் என சுற்றி கொண்டு இருந்தவளுக்கு வீட்டில் தனிமை மிகவும் சிரமாக இருந்தது.

திருமணத்திற்கு வந்த நண்பர்களை மறுபடியும் சந்திக்காததால் இவளே அவர்களுக்கு போன் செய்து பேசினாள்.அவர்கள் இவளை வெளியே போகலாம் வா என வற்புறுத்த.. பாட்டிக்கு பயந்து மறுத்து கொண்டு இருந்தாள்.

ஒரு வாரம் அவர்களிடம் மறுத்து கொண்டு இருந்தவளிற்கு போனால் என்ன என்று தோன்றிவிட.. எப்படி வீட்லயே முடங்கி இருப்பது போரிங் என நினைத்தவள் வெளியே செல்லலாம் என முடிவு எடுத்து வருவதாக நண்பர்களிடமும் சொல்லிவிட்டாள்.

ஆனால் வீட்டில் என்ன சொல்லி செல்வது என யோசனை. பாட்டிக்கு தான் மிகவும் பயந்தாள். ஓல்டி எப்படியும் கண்டுபிடிச்சிடுமே என யோசித்தாள்.

எப்படியோ ஷாப்பிங் போறேன் தனக்கு சில பொருட்கள் வாங்க வேண்டும் என சொல்லி சமாளித்து சென்றாள். கல்யாணம் ஆகிவிட்டது எதுனாலும் வீரா பார்த்து கொள்வான் என தாத்தாவும் பாட்டியும் ஒன்றும் சொல்லவில்லை.

இதையே தினமும் வழக்கமாக்கி கொள்ள.. அவளும் எந்த வம்பும் இன்றி நேரமாகவே வீடு வந்திட.. இவர்களும் அனுமதித்தனர்.

பேக்டரி வேலை என வீரா அவன் போக்கிலும்.. நிகிதா நண்பர்களோடு வெளியே செல்வது அரட்டை என இவள் போக்கிலும் இவர்கள் வாழ்க்கை எண்ணெய்யும் தண்ணியும் போல ஒட்டாமல் சென்று கொண்டு இருந்தது.

வார இறுதி நாட்களில் மாலையில் பப்பிற்கு சென்று இரவு வரை கும்மாளம் போடுவது நண்பர்களின் வழக்கம். வார இறுதி நாட்களும் வந்திட.. நண்பர்கள் பப்பிற்கு வற்புறுத்த.. அவள் வீட்டில் சொல்ல மிகவும் பயந்தாள்.

அன்றும் வழக்கம் போல ஷாப்பிங் செல்வதாக கூற.. பாட்டியோ..

“தினமும் என்ன ஷாப்பிங்.. காசு இருந்தா இஷ்டப்படி செலவு செய்யனுமா… தேவையில்லாம ஆடம்பர செலவு பண்றத முதல்ல நிறுத்து..” என திட்ட..

அச்சோ இப்ப என்ன சொல்லி சமாளிக்கறது என அவசர ஆலோசனை நடத்தினாள் மனதினுள்..

ஹாங் இப்படி சொன்னா பர்மிஷன் வாங்கிடலாம் என திட்டமிட்டு

“இல்ல பாட்டி வீராவுக்கு கொஞ்சம் டிரஸ் பர்சேஸ் பண்ணலாம்னு…”என இழுக்க..

புருஷனுக்கு வாங்க போகிறாள் என்றதும் மகிழ்ந்தனர் பெரியவர்கள்.

அந்த சந்தோஷத்திலேயே “நிகிதா கண்ணு புருஷன பேர் சொல்லி கூப்பிட கூடாதுடா..”என தன்மையாக சொல்ல..

சாதுவாக தலையாட்டிக் கொண்டாள்.

“சரி.. சரி.. போயிட்டு வா..” என்றதும் சிட்டாக பறந்துவிட்டாள்.

வீட்டில் டிரைவரோடு கார் இருந்தாலும் அதிகம் இவளை நண்பர்கள் யாராவது பிக்அப் செய்வது தான் வழக்கம். அன்று ரூபேஷ் வந்திருக்க..

ரூபேஷை கண்டால் பெரியவர்களுக்கு ஆகாது.அவன் நல்ல பையன் இல்லை என்பது அவர்களின் கருத்து. எங்கே தெரிந்தால் வேண்டாம் என சொல்லிவிடுவார்களோ என கேட்டிற்கு வெளியேவே நிற்க சொல்லி ஏறிக் கொண்டாள்.

பப்பில் எல்லாம் ஒன்று கூடினர். ரூபேஷ் எல்லோருக்கும் தேவையான ட்ரிங்ஸ் ஆர்டர் செய்ய.. நிகிதா தனக்கு எதுவும் வேணாம் என சொன்னாள்.

ரூபேஷ் “ஏன் நிக்கி.. வேணாம்னு சொல்ற.. ஒரு ஸ்மால் எடுத்துக்க.. பேபி..”

“வேணான்டா..வீட்ல திட்டுவாங்க..”

தனுஷாவோ”எப்பவும் திட்டறது தானடி.. புதுசா என்ன..”

சொல்லமுடியாமல் வேணாம் என மறுக்க…

ரூபேஷ்”நிக்கி பேபி.. ஏதோ மறைக்கற… என்னன்னு சொல்லு”

“ஒன்னுமில்லடா”

“மேரேஜ்கு அப்புறம் உன்கிட்ட நிறைய சேஞ்சஸ் தெரியுது பேபி.. எப்பவும் எதையும் எங்ககிட்ட தான் ஷேர் பண்ணிக்குவ..இப்ப ஏன் மறைக்கிற..”

எங்கோ பார்த்தவாறு கண்களில் நீர் திரள..
“என்னை அவன் அடிச்சிட்டான்டா..”

“என்ன பேபி சொல்ற..”

நண்பர்களும் பதறி போய் கேட்க நடந்தவற்றை சொன்னாள்.

“என்னடி சொல்ற.. இதற்கா அடிச்சான்..சுத்த பட்டிக்காடா இருப்பான் போல..” என்றாள் தனுஷா..

ரூபேஷோ”நிக்கி அவன் ஐடி பீல்ட் தானா.. ஐடி பீல்ட்ல இருந்துட்டு லிக்கர் எடுக்காம இருக்கமுடியாது.சம்திங் ராங்.. ஐ திங் .. அவன் பொய் சொல்லி நடிக்கிறானு நினைக்கிறேன்”

இவளோ அப்படியும் இருக்குமோ என அவனின் பேச்சை நம்பி”அப்படியா சொல்ற ரூப்.. ஆனா அவன பார்த்தா அப்படி தெரியலடா..”

“எதுக்கு சந்தேகம் இன்னைக்கு டெஸ்ட் பண்ணி பார்த்துடலாம் விடு..” என ரூபேஷ் சொல்ல..

அவனின் பேச்சை நண்பர்கள் அனைவரும் ஆமோதிக்க.. ரூபேஷ் திட்டம் தீட்ட அதை கேட்ட நிகிதாவுக்கோ உதறல் எடுத்தது.

“டேய் ரூப் வீட்டுக்கு எல்லாம் எடுத்து போகமுடியாது. வீட்ல தெரிஞ்சா கொன்னே போட்ருவாங்க..”

அதற்குள் இவர்கள் ஆர்டர் செய்த ட்ரிங்ஸ் வந்திட.. நிகிதாவுக்கு மட்டும் லைட்டா ரம் கலந்த மொஜீட்டோ வாங்கி கொடுக்க.. எப்பவும் போல நண்பர்களின் பேச்சிற்கு இணங்கி அவர்களோடு சேர்ந்து கொண்டாள்.

வெகு நேரம் பேசி மகிழ்ந்து கொண்டாடி விட்டு கிளம்பினர். போகும் போது மறக்காமல் தான் ஆர்டர் செய்த பார்சலை வாங்கி கொண்டு நிகிதாவோடு கிளம்பினான்.

நிகிதாவை வீட்டில் வாசலில் இறக்கி விட்டு பார்சலை கையில் கொடுத்து

“பேபி அவன எப்படியாவது இதை குடிக்க வச்சிடு.. அவன் ஆக்டிங் தெரிஞ்சிடும். இதை வைத்தே அவனை துரத்தி விட்டுடலாம்”என சொல்ல..

பயத்தில் கைகள் நடுக்க.. அதை வாங்கி கொண்டு உள்ளே வந்தாள். தாத்தா பாட்டி இருவரும் சோபாவில் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்க..

அவர்களைப் பார்த்தும் இவளுக்கோ பயத்தில் வியர்த்து கைகால் எல்லாம் உதறல் எடுக்க ஆரம்பித்து விட்டது.

பாட்டி தான் இவளை கவனித்துவிட்டு “வாம்மா.. நிகிதா.. வீராவுக்கு ஏதோ வாங்கனும் சொன்னயே.. வாங்கிட்டயா.. என்ன வாங்கின காமி..”

நிகிதாவுக்கோ பயம் அதிகமாகி மயக்கம் வருவது போல ஆகிவிட..

தாத்தாவோ”சின்ன சிறுசுக.. ஏதோ புருஷனுக்கு ஆசையா வாங்கி இருப்பா.. அதை போய் காமிக்க சொல்ற..நீ போடாமா..” காப்பாற்றி விட

“நிகிதா சாப்பிட்டு போ” என்ற பாட்டியிடம் “நான் சாப்பிட்டேன் கிரேனீ என சொல்லி விட்டு நிற்காமல் தங்கள் அறைக்கு ஓடிவிட்டாள்.

நிகிதா எப்படி வீராவை குடிக்க வைப்பதென யோசித்து கொண்டு இருக்க… இவளின் திட்டம் அறியாமல் அன்று பேக்டரியில் வீரா தெரியாமல் செய்த சிறு பிழை அக்கௌண்ட்ஸ்ல பெரிய குளறுபடி ஆகிவிட..வெங்கட்டோடு சேர்ந்து அதை கண்டு பிடித்து சரி செய்வதற்குள் ரொம்ப டென்ஷன் ஆகிவிட்டான்.

சரி செய்துவிட்டாலும் இவனுக்கு அது ஒரு மன உளைச்சலை கொடுத்து இருக்க.. அது குறையாமலேயே வீடு வந்து சேர்ந்தான்.

நிகிதாவின் செயலால்.. நிகிதா வீரா இவர்களுக்கு இடையே அடுத்து என்ன நடக்குமோ…. நிகிதா மீண்டும் மீண்டும் தவறு செய்ய.. பிரச்சினை பெரிதாகி பெரியவர்கள் வரை செல்லுமோ..?

4 – புயலோடு பூவுக்கென்ன மோகம் Read More »

A55E16EC-6F10-471D-B2EE-56992E98002D

3 – புயலோடு பூவுக்கென்ன மோகம்

3 – புயலோடு பூவுக்கென்ன மோகம்

சென்னையில் நிகிதா வீட்டில் விருந்து முடிந்து காஞ்சிபுரம் தாமரையூர் சென்றனர் வீரா நிகிதா தம்பதியர்.

அங்கு இரண்டு நாள் விருந்து. குடும்பமே கிளம்பி இருந்தனர். வீடு மிக எளிமையான கான்கிரீட் வீடு தான். இரண்டு படுக்கையறை சின்ன சமயலறை ஒரு ஹால் முன்னால் கொஞ்சம் வாசல். பின்புறம் கிணறு பாத்ரூம் சிறிய தோட்டம் என இருந்தது.

சொக்கலிங்கத்திற்கு பக்கத்து ஊர் தான். அங்கு அவருக்கு வீடு நிலபுலன் எல்லாம் உண்டு. வெங்கட் சில வருடங்களுக்கு முன்பு தான் ஓட்டு வீட்டை இடித்து நவீன வசதிகளோடு கூடிய இரண்டு அடுக்கு வீடாக கட்டியிருந்தார்.

இருந்த போதும் அனைவரும் வீரா வீட்டிலேயே தங்கிக் கொள்ளலாம் என முடிவு செய்து கிளம்பி வந்திருந்தனர்.

அய்யாவுக்கு தான் அவர்களுக்கு வசதி போதுமா என்று பெரிய கவலை. ஆனால் விசாலாவிற்கு தன் தம்பி வெகு வருடங்களுக்கு பிறகு குடும்பத்தோடு தன் வீட்டிற்கு வந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.

நிகிதாவிற்கு அந்த வீட்டை பார்த்ததும் பிடிக்கவில்லை. அவளால் அங்கு இருக்க முடியவில்லை. அட்டாச்டு பாத்ரூம் இல்லை. வெஸ்டர்ன் டாய்லெட் இல்லை. ஏசி இல்லை என எத்தனையோ இல்லைகள்.இதை அனைத்தையும் ரோகிணியிடம் தான் சொல்லி புலம்பிக் கொண்டு இருந்தாள்.

சென்னையில் இருந்து கிளம்பும் போதே சொக்கலிங்கம் சொல்லிவிட்டார் வீரா வீட்டில் தான் தங்குவது என..

மங்களமும் வீரா அறியாமல் ரோகிணியிடமும் பேத்திகளிடமும் வீடு வசதி குறைவாகதான் இருக்கும் பொறுத்து போக வேண்டும் என கண்டிப்புடன் சொல்லிவிட.. வேறு வழியின்றி யாரும் அறியாமல் தாயிடம் எரிச்சல் பட்டாள்.

வந்ததும் அனைவருக்கும் வீட்டின் பின்புறம் உள்ள தென்னையில் இளநீர் சீவி குடிக்க கொடுத்தார் அய்யாவு. உள்ளூரிலேயே இருக்கும் பொன்னியும் வந்துவிட விருந்து வீட்டிலேயே தடபுடலாக பெண்களே செய்தனர்.

ரோகிணியும் அவர்களோடு இணைந்து கொள்ள..பேச்சும் சிரிப்புமாக சமையல் வேலை நடந்தது

வீட்டில் இருந்து சிறிது தொலைவில் அய்யாவின் தறிப்பட்டறை இருந்தது. பெரிதாக இல்லை பத்து கைத்தறி ஆட்கள் போட்டு இவரும் கூட செய்வார்.சொக்கலிங்கத்தையும் வெங்கட்டையும் பட்டறைக்கு கூட்டி கொண்டு சென்றார் அய்யாவு.

நிகிதாவிற்கு தான் பிடிக்கவில்லையே தவிர ஆராத்யாவிற்கு அந்த வீடும் ஊரும் மிகவும் பிடித்தது.வீட்டையே சுற்றி சுற்றி வந்தாள்.

விசாலாவிற்கு தன் தம்பி மகளே மருமகளாக வந்ததில் அவ்வளவு ஆனந்தம். அவருக்கு சிறு வயதில் இருந்தே நிகிதா மேல் பிரியம் அதிகம்.

யாருடனும் ஒட்டாமல் தனியாக போனோடு இருந்த நிகிதாவிடம்

“நிகிதா.. தங்கம் ஏன்டா தனியா இருக்க..”

நிகிதா அவர்களிடம் அதிக ஒட்டுதல் இல்லை என்பதால் என்ன சொல்ல என தெரியாமல் அமைதியாக இருக்க..

“காருல வந்தது களைப்பா இருக்கா.. கொஞ்ச நேரம் ஓய்வா படுத்துக்கறியா..” என்றார்.

எவ்வளவு நேரம் தான் சும்மா இருப்பது பேசாமல் தூங்கலாம் என அவளும் சரி என தலையாட்ட..

வீராவின் அறைக்கு கூட்டி சென்று படுக்க வைத்தவர்

“நிகிதா கண்ணு எது வேணாலும் கூச்சப்படாம அத்தைகிட்ட கேட்கனும் சரியா..” என்று குழந்தையிடம் சொல்லும் பாவனையில் சொல்ல.. அதற்கும் அவள் தலையசைப்பையே பதிலாக தந்தாள்.

அவள் உறங்குவதற்கு தேவையானதை செய்து கொடுத்து கதவை மூடி விட்டு சென்றார்.

ஆராத்யா வீராவிடம் “மாமா..கிணத்துல தண்ணி இறைச்சு காமிங்க” என்க

வீரா லுங்கியை மடித்து கட்டி கொண்டு நீர் இறைக்க.. அதை பார்த்து குதூகலித்தவாறே..

“மாமா..மாமா.. நான் இறைக்கவா..”

“ம்ம்ம்.. சரி” என்றிட..

கிணற்றில் நீர் ஒரு தடவை இறைப்பதற்குள் சின்ன பெண்ணின் மென்மையான கை கயிற்றை இறுக்கி பிடித்தில் காந்தல் எடுத்து விட்டது.

வீரா தான்”போதும் ஆரா உள்ள வா”என்க..

ஆனால் ஆராவிற்கு தான் ஆர்வம் குறைந்தபாடில்லை.

“மாமா.. இந்த கிணத்துல ஸ்விமிங் பண்ணாலாமா.. நீங்க பண்ணுவிங்களா..”

“எனக்கு ஸ்விமிங் பண்ண தெரியும். ஆனால் இது வீட்டு கிணறு சின்னது இதுல பண்ணமுடியாது. இங்க குளம் இருக்கு அதுல நீச்சலடிப்பேன்”

“ஹை.. சூப்பர்… சூப்பர்.. வாங்க இப்பவே போலாம் நானும் ஸ்விம் பண்றேன்” என்றாள் ஆர்வமாக..

“ஆரா..ஆ.. இப்ப வெயில் நேரம். நாளைக்கு காலைல கூட்டிட்டு போறேன் ஓகே வா”

சற்றே ஏமாற்றத்துடன் “சரி மாமா” என்று உள்ளே சென்றவள் உடனே பாட்டியிடம்

“கிரேனீ.. மாமா என்னை நாளைக்கு ஸ்விம் பண்ண குளத்துக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லியிருக்காங்க..” என்றாள்.

மங்களத்திற்கு பேத்தியின் சந்தோஷத்தை பார்த்து அவரின் உள்ளம் கனிந்து போனது.

“சரிடி ராஜாத்தி”என கன்னம் வலித்து கொஞ்சினார்.

தறிபட்டறையில் இருந்து மூவரும் வரவும் விருந்தும் தயராகி இருந்தது.வரும் போதே அய்யாவு பதநீரில் நொங்கு போட்டு வாங்கி வந்திருந்தார்.பொன்னியின் கணவன் கணேசனும் வந்திட..

பந்தி பாய் விரித்து தரையில் அமர்ந்து ஆண்கள் அனைவரும் சாப்பிட.. நிகிதாவை வீராவின் அருகில் அமர வைத்தனர். அவளால் பழக்கம் இல்லாததால் தரையில் அமர்ந்து குனிந்து இலையில் சாப்பிட மிகவும் சிரமப்பட்டாள்.

வீராவிற்கு அதைப் பார்க்க அவள் மேல் இன்னும் எரிச்சல் கூடியது.அவளை பார்த்து முறைக்க..

ஏற்கனவே அந்த வீடு சூழ்நிலை பழக்கவழக்கம் எல்லாம் ஒவ்வாமையாக இருக்க…அவனின் முறைப்பும் சேர்ந்து கோபத்தை கிளப்ப.. சாப்பிடாமலேயே எழுந்து கொண்டாள்.

விசாலா பதறி கொண்டு”ஏங்கண்ணு சாப்பாடு புடிக்கலையா..ஏன் எந்திரிச்சிட்ட.. வேற எதாவது செய்து தரவா..” என கவலையுடன் கேட்க..

ஒன்றும் பேசாமல் முகத்தை திருப்பி கொண்டு நின்றாள்.தன் தாயை அவமதிக்கிறாள் என நினைத்த வீரா பெரியவர்கள் முன் எதுவும் பேச முடியாமல் பல்லை கடித்து பொறுத்துக்கொண்டான்.

அவளின் செயல் யாருக்கும் பிடிக்கவில்லை என்பதை அவர்கள் முகமே சொன்னது.ரோகிணிக்கோ மகளை என்ன செய்வது என தெரியாமல் முழித்தார்.

மங்களம் பாட்டி”ஏய் நிகிதா இப்ப எதுக்கு பாதி சாப்பாட்டுல எந்திரிச்சா.. அத மொதல்ல சொல்லு”

அதற்கு கொஞ்சம் பயந்தவாறு”இல்ல கிரேனீ கொஞ்சம் காரமா இருக்கு.. “என்று இழுக்க..

காரம் அதிகம் சாப்பிடாத பிள்ளைகள் என்பதால் உண்மை என நம்பினர்

“நீ போய் ரெஸ்ட்டு எடு கண்ணு”என விசாலம் அனுப்பி வைத்தார்.

“ஆமாம் இவ என்ன வெட்டி முறிச்சா.. இந்தம்மா… ரெஸ்ட் எடுக்கசொல்லுது” என வாய்குள்ளே முனுமுனுத்தான்.

அவள் வீராவின் அறையில் சென்று முடங்கி கொண்டாள். எல்லோரும் சாப்பிட்டு முடிக்க.. விசாலா எல்லோருக்கும் நொங்கு சிறு துண்டுகளாக சீவிப் போட்ட பதநீர் கொடுத்தார்.

ஆராவுக்கு அதன் சுவை பிடித்துப் போக அதை தெரிந்து கொள்ள அத்தனை கேள்விகள் கேட்டாள் அய்யாவுவிடம்.

விசாலா நிகிதாவிற்கும் கொண்டு போய் கொடுத்தார்.

“நிகிதா கண்ணு.. இந்தா கண்ணு பதநீரு சாப்பிடுமா..” என்க

அவர் கையில் இருந்த கிண்ணத்தை வாங்கி ஒரு ஸ்பூன் சாப்பிட்டு விட்டு

“உவ்வே… தூ..தூ… ச்ச்சீ..நல்லாவே இல்லை. எப்படியோ ஸ்மெல் அடிக்குது”என்றாள் முகத்தை சுழித்து..

உடனே விசாலா முகம் வாடிவிட்டது.

“ஏங்கண்ணு இதுவும் பிடிக்கலையா…உனக்கு என்ன பிடிக்கும்னு சொல்லு.. அத்தை செஞ்சு தரேன்”

“எனக்கு எதுவும் வேணாம்” என்றுவிட்டாள் பட்டென்று..

விசாலா மருமகள் சரியாக சாப்பிடாததால்.. மனம் சுணங்க வெளியே வந்தார்.

தனது சார்ஜரில் போட்டு இருந்த போனை எடுக்க வந்த வீரா தன் அறைவாசலில் நின்று எல்லாம் கேட்டு கொண்டு தான் இருந்தான்.

விசாலா வீராவிடம் “இந்த பொண்ணு எதுவுமே சாப்பிடமாட்டேங்குது தம்பி.அதுக்கு நம்ம சாப்பாடு புடிக்கல போல..காஞ்சிபுரம் டவுனுல இருந்து அதுக்கு பிடிச்சமாதிரி எதாவது வாங்கியாறியா..” என்றார்.

அம்மாவின் முகவாட்டம் வீராவுக்கு நிகிதாவின் மேல் இன்னும் கோபத்தை அதிகரிக்க செய்தது.

“அம்மா நான் பார்த்துக்கறேன். நீங்க போங்க”என்று அனுப்பி வைத்தவன் உள்ளே வந்து நிகிதாவை தீப்பார்வை பார்க்க..

அவனை அலட்சியமாக பார்த்துவிட்டு தனது போனை எடுத்து அதில் தலையை நுழைத்து கொண்டாள். அவளின் செயல் அவனை அவமானப் படுத்த…கோபத்துடன் அவளை நெருங்க…

அவனுக்கு முன்பு பாட்டி அவளின் முன்னால் வந்து நின்றார்.

“ஏய்.. என்ன.. திமிரா…எதுவும் சாப்பிட மாட்டேங்கற..இழுத்து வச்சு இரண்டு அப்பு அப்புனேன் வையி.. கன்னம் பழுத்து போயிடும் பார்த்துக்க”

பெற்றவர்கள் செல்லத்தால் பிடிவாதகுணம் நிகிதாவிடம் அதிகம்.எப்போதும் பாட்டி தான் மிரட்டி அதட்டி என அவளை வழிக்கு கொண்டு வருவார். அதனால் பாட்டியிடம் அவளுக்கு கொஞ்சம் பயமுண்டு.

“விசாலா சாப்பாடு கொண்டு வருவா.. சாப்பிடற நீ அவ்வளவு தான்”

வெளிப்புறம் திரும்பி “விசாலா” என குரல் கொடுக்க.. விசாலா உணவுத் தட்டோடு வந்தார்.

“அம்மா நீங்க போங்க.. நான் பார்த்துக்கறேன்” விசாலா சொல்லிட..

பாட்டியும் பேரனும் நிகிதாவை எரித்து விடுவது போல பார்த்து விட்டு வெளியேறினர்.

ரோகிணி இதை எல்லாம் பார்த்தும் பார்க்காது போல இருந்து கொண்டார். மகளின் கஷ்டம் புரிந்தும் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. மகளின் ஒரு செயல் தான் சரியாக பிள்ளைகளை கவனிக்கவில்லையோ என குற்றவுணர்ச்சி அதுமட்டுமின்றி மகள் வாழ்க்கைக்கு இது தான் சரி என அமைதியாக இருந்து கொண்டார்.

விசாலா நிகிதாவிடம்”ஏங்கண்ணு சாப்பாடு காரமா இருக்கா..அதுக்காக சாப்பிடமா இருப்பியா.. தயிர் சாதம் பிசைஞ்சு எடுத்துட்டு வந்திருக்கேன் சாப்பிடறியா”

கோபத்தில் எழுந்து வந்துவிட்டாளே தவிர அவளுக்கு நல்ல பசி.எதுவும் சொல்லாமல் வாங்கி அமைதியாக சாப்பிட்டாள்.

அதற்கு பிறகு எது செய்தாலும் விசாலா மருமகளை கேட்டு கேட்டு அவளுக்கு பிடித்த மாதிரி செய்து கொடுத்தார்.

பதினைந்து வயதான ஆராவிற்கு வீட்டில் எப்பவும் தனிமை தான். தந்தை பிசினஸ் என இரவு வெகு தாமதமாக தான் வருவார். ரோகிணி ப்ரண்ட்ஸ் கூட மீட்டிங் கிளப் என வெங்கட் வரும் தாமதமாகத் தான் வருவார். நிகிதாவும் காலேஜ் வீட்டு வீடு வந்து சிறிது நேரத்தில் ப்ரண்ட்ஸ் கூட ஷாப்பிங் சினிமா மால் வீக் எண்ட் பப் என அவள் பொழுதுகள்…

பாட்டி தாத்தா வீட்டில் இருந்தாலும் அவளுக்கு என சில ஏக்கங்கள் உண்டு. வீரா வீட்டில் அனைவரும் ஒன்றாக சேர்ந்து சிரிப்பும் கொண்டாட்மாக இருப்பது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.

கலகலப்பாக பேசும் பொன்னியோடும் ஆயிரம் கேள்விகள் கேட்டு வீராவோடு ஒட்டிக் கொண்டாள்.

நிகிதா எவரோடும் ஒட்டாமல் ப்ரண்ட்ஸ் கூட பேசுவதும் சாட் பண்ணுவதும் என ஒதுங்கியே இருந்தாள்.

வீரா அறையில் இருந்தது சராசரியான டபுள்காட் கட்டில் இருவருக்கும் படுக்க இடம் போதவில்லை. ஒருவரை ஒருவர் இடித்து கொண்டு முறைத்துக் கொண்டு படுத்திருந்தனர்.

நிகிதாவிற்கு எப்பவும் டெட்டிபேர் கட்டி பிடித்து தூங்கினால் தான் தூக்கம் வரும்.அட்லீஸ்ட் கட்டிபிடிக்க ஒரு தலையணையாவது வேணும். தூக்கம் வராமல் கைகாலை உதறிக் கொண்டு படுத்திருக்க…

இவள் அழிச்சாட்டியத்தால் வீராவிற்கு தூங்க தொந்தரவாக இருக்க.. சிறிது நேரம் பொறுத்தவன்.. எழுந்து அமர்ந்து..

“எதுக்குடி இப்படி நெளிஞ்சுகிட்டே இருக்கே.. மனுசன் தூங்க வேணாம்”

எப்பவும் அவனிடம் ஏட்டிக்கு போட்டியாக பேசுவது போல இப்பவும்

“நான் அப்படி தான் பண்ணுவேன். உனக்கு டிஸ்டர்ப்பா இருந்தா கீழே போய் படு”

“மரியாதை இல்லாம பேசாதேனு சொல்லிஇருக்கேன்ல.. வந்ததுல இருந்து யாரையாவது மதிச்சு பேசியிருக்க.. தனியா வந்து உட்கார்ந்துகிட்டு உன்னை தேடி தேடி வந்து எல்லோரும் பேசனுமோ பெரிய மகாராணி இவங்க..”

“நீ சொன்னாலும் சொல்லாட்டியும் நான் ராணி தான் என் பேரண்ட்ஸ் என்னை அப்படி தான் வெச்சிருக்காங்க..இந்த ஓல்டி பேச்சை கேட்டுகிட்டு உனக்கு கட்டி வச்சிட்டாருஎங்க அப்பா.. இதை ஒன்னு தான் எனக்கு பிடிக்காம அவங்க செஞ்சது”

“ஏன் செஞ்சாங்க.. நீ பண்ணி வச்ச வேலை அப்படி… ஏன்டி ஒரு பொம்பள புள்ள செய்யற காரியமா நீ செஞ்ச..”

“எங்கம்மா பதநீர் கொண்டு வந்து கொடுத்தா பிடிக்கலைனு துப்பற… நல்லா குடிச்சிட்டு வந்து நடுவீட்டில் மட்டையாகி கீழே விழுந்த உனக்கு பதநீர் புடிக்கலைனா ஆச்சரியம் தான்டி.. ஒரு வேளை சுண்ணாம்பு தடவாம கள்ளா கொடுத்து இருந்தா குடிச்சிருப்பியோ..”

“ஏய்… நான் ஒன்னும் வேணும்னே அப்படி குடிக்கல.. அது ப்ரண்ட்ஸ்குள்ள ஒரு போட்டி… அதான் அப்படி..” என இருக்க இருக்க அவள் பேச்சில் ஸ்ருதி குறைந்தது.

“என்னடி ஏய்.. சொல்ல சொல்ல மரியாதை இல்லாமல் பேசற..”

“போட்டியாம் போட்டி.. இல்லைனா மட்டும் இவ குடிக்கவே மாட்டா..”

“சும்மா என்னை மொடா குடிகாரி மாதிரி பேசாத.. நான் முதல்ல மொஜீட்டோ தான் குடிச்சிட்டு இருந்தேன். என் ப்ரண்ட்ஸ் தான் இதுல கொஞ்ச கொஞ்சம் ரம் கலந்து காக்டெய்ல் மாதிரி குடிச்சா நல்லா இருக்கும்னு சொன்னாங்க.. அது அப்படியே பழகி எப்பாவது கொஞ்சம் ஒயின் சாப்பிடுவேன். அதுவும் ஓயின் சாப்பிட்டா அழகா இருப்போம்னு தனுஷாவும் ரூபேஷீம் சொன்னாங்க அதான்”

“அது ஒரு குத்தம்னு உன்னைய போய் கட்டி வச்சிட்டாங்க.. என் கலர்க்கு அழகுக்கும் கொஞ்சம் கூட மேட்சாகாத உன்னைய என் லைப் பார்ட்னரா.. நினைச்சாவே டிஸ்கஸ்டிங்கா இருக்கு”

அவள் குடித்தது குற்றமே இல்லை என்பது போல விளக்கம் கொடுத்ததிலேயே கோபத்தில் இருந்தவனுக்கு தன்னை தரக் குறைவாக பேசுவும் சுருசுருவென ஏறவும்..

“ஏன்டி குடிச்சதை தப்பில்லைனு பேசினது மட்டுமில்லாம..என்னையவே டிஸ்கஸ்டிங்னா சொல்ற” என பளார் என அறைந்தான்.

அவன் அடிப்பான் என எதிர்பார்க்காதவள்.. அவன் அறைந்ததில் அதிர்ச்சியாகி அப்படியே அவனை பார்க்க.. கண்ணில் இருந்து கண்ணீர் கரகரவென இறங்கியது.

“ஆம்பள குடிக்கறதே தப்புனு நினைக்கறவன் நான்.. எனக்கு இப்படி ஒருத்திய கட்டி வச்சிடாங்க..நான் அமைதியா நிம்மதியான வாழ்க்கை தான் ஆசைப்பட்டேன்.ஆனா எனக்கு உன்னோடு மல்லுகட்டியே காலம் போயிடும் போல..”

“பெண்களே அடிக்கறது பாவம்னு நினைப்பேன். ஆனா அப்படி பட்ட என்னையவே அடிக்க வச்சிட்ட.. இருந்தாலும் நான் அடிச்சது தப்பு தான்… சாரி…சாரி… வெரி சாரி..” என சங்கடத்துடன் சொல்லி விட்டு திரும்பி படுத்து கொண்டான்.

இதுவரை அவளை யாரும் அடித்ததே இல்லை. ஏன் குடித்து மயங்கி விழுந்த போது கூட யாரும் அடிக்கவில்லை. பெற்றவர்கள் மகளின் நடவடிக்கையில் வருத்தம் தான் கொண்டனர். பாட்டி தாத்தா தான் திட்டி தீர்த்தனர்.

நிகிதா எதுவும் பேசாமல் சுவற்றின் பக்கம் ஒருக்களித்து கைகாலை குறுக்கி கொண்டு விசும்பியபடியே படுத்திருந்தாள். இருவரும் வெகு நேரம் வரை உறங்கவில்லை.

பொருந்தா வாழ்வில்

பொருத்தி வைத்து

சேர்த்து வாழ

கட்டாயப்படுத்தினால்

கட்டாயத்தினால்

காதல் மலருமா..

வாழ்வு சிறக்குமா…

3 – புயலோடு பூவுக்கென்ன மோகம் Read More »

error: Content is protected !!
Scroll to Top