ATM Tamil Romantic Novels

Author name: Shaahithya Srinivasan

8E0BD04D-A14F-4C8B-9C5C-42F878291A93

27 – ஆடி அசைந்து வரும் தென்றல்

27 – ஆடி அசைந்து வரும் தென்றல்

அனிவர்த்திடம் பேசவிடாமல் தடுக்கவே தன்னை கிளப்பியுள்ளாள் என தெளிவாகிற்று.. ஆனால் ஏன்.. அவரை கண்டு தடுமாறுவதேனோ…

அவரின் கம்பெனி பேர் என்னவோ சொன்னாரே..சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டோமே.. என வெகு நேரம் யோசித்து கண்டுபிடித்தார்.. சி. கே டிரேடர்ஸ்.. ஆமாம் சி்.கேடிரேடர்ஸ. இது.. இது… தேவர்ஷி முன்பு வேலை செய்த கம்பெனி அல்லவா.. அங்கு சென்ற வந்த போது தானே.. காதல் குழந்தை என வந்து நின்றாள்.

ஒரு வேளை அந்த சமயத்தில் கூட வேலை செய்த யாரிடமாவது ஏமாந்து போயிருப்பாளா.. அனிவர்த்தை விசாரித்தால் ஏதாவது தகவல் கிடைக்கலாம் அதை கொண்டு மகளி்ன் வாழ்க்கையை சீரமைக்க முடியுமா.. பேத்தி அந்த சின்னசிட்டின் தந்தை ஏக்கத்தை போக்கி விட முடியாதா.. என நினைத்தவர் போன் நம்பர் வாங்கி வைக்காது விட்டமோ என வருந்தியவர்…

கூகுளில் அனிவரத் பேர் கம்பேனி பேர் போட்டு அனிவர்த்தின் செல் நம்பரை எடுத்துக் கொண்டார். மாலையில் போன் பண்ணி அனுமதி வாங்கி கொண்டு நேரில் சந்திக்க வேண்டும் என முடிவு செய்தார்..

இங்கோ அனிவர்த்திற்கு ஆபிஸில் வேலையில் கவனம் வைக்க முடியாமல் திண்டாடினான். அவனுள் பல யோசனைகள்…ஏனோ அவளின் கணவன் யார் என தெரிந்து கொள்ள வேண்டும் என துடித்தான். இன்னும் தன் தீண்டலில் மயங்குகிறாள் என்றால் தன் மீதான் காதல் அப்படியே தான் இருக்கிறது என்று தானே அர்த்தமாகிறது. அப்படி இருக்கும் போது எப்படி இன்னொருவனை மணந்திருப்பாள்… ஷாஷிகா எப்படி..

தன்னை விட்டு பிரிந்த பிறகு தேவர்ஷி வாழ்க்கையில் நடந்தவற்றை அறிந்தே ஆகவேண்டும் என மண்டையை குடைந்தது. ஏன் மனம் இப்படி அலை பாய்கிறது.. அப்படி என்ன ஸ்பெஷல் இவள் எனக்கு என நினைக்க.. ஸ்பெஷல் இல்லையா.. எத்தனை பெண்களை இப்படி நினைவுல் வைத்திருக்கிறாய்.. அவளோடு இருந்த கார்கால பொழுதுகளை மறக்காமல் அதை ஏன் மற்ற பெண்களிடம் தேடி அலைந்தாய் என மனம் கேட்க..

ஆமாம் அப்படி தானே இருக்கிறேன்.. அப்போ எனக்கு ஸ்பெஷல் தான் அவள்… அது தான் காதலா.. நான்அவளை காதலித்திருக்கிறேனா.. அதை உணராமல் தான் இப்படி எல்லாம் கெடுத்து வைத்திருக்கிறேனா.. அவள் காட்டிய காதலை காசு கொடுத்து தேடியிருக்கிறேனே முட்டாளாட்டம் என தலையில் அடித்துக் கொண்டான்.

இப்போ உணர்ந்து என்ன பண்ண… அவளுக்கு கல்யாணம் ஆகிவிட்டதே.. என வருத்தப்பட்டான். அப்போது அவன் போன் சிணுங்கியது. புது எண்ணில் இருந்து அழைப்பு..

“ஹலோ.. மிஸ்டர் அனிவர்த்..”

“எஸ்.. நீங்க..”

“ஷாஷிகாவின் தாத்தா திருகுமரன்..”

“சொல்லுங்க சார்..” குரலில் ஒரு மரியாதை..

“நான் உங்களை மீட் பண்ணனுமே..”

“பண்ணலாம் சார்.. எனக்கும் உங்ககிட்ட பேசனும்..”

“ஓ.. பேசலாமே.. என்ன பேசனும்.. “என திருகுமரன் கேட்க..

“ஷாஷிகா பாதர் பற்றி…”

‘எனக்கு தான் என் மகள் வாழ்க்கைகாக தெரிந்து கொள்ள வேண்டும்.. இவர் எதற்காக கேட்கிறார்..’ என குழம்பினார். பாவம் அன்று அவருக்கு குழப்பம் தொடர்கதையாகி போனது…

“உங்களுக்கு எதுக்கு அந்த விபரம்..”

“நேரில் பேசலாமே..” அனிவர்த் கேட்க..

“ஓகே.. எங்க மீட் பண்ணலாம்” என திருகுமரன் கேட்க…

“வீட்டிற்கே வருகிறேன் ..” என சொல்லி வைத்துவிட்டான்.

வரவா.. என அனுமதி கூட கேட்கவில்லை பாரேன் என மெல்ல சிரித்தார் திருகுமரன்…

இருவரும் சந்தித்து பேசி கொண்டால் எல்லாம் தெளிவாகி விடும்.. தேவர்ஷி என்ன பண்ண போகிறாளோ…

மதிய உணவு கூட இறங்கவில்லை அனிவர்த்துக்கு உண்மை அறியாமல்.. தன் காதலை காலம் கடந்து உணர்ந்த தன்னை தானே மனதார திட்டி தீரத்தான். இதற்கு மேல் உண்மை அறியாது தலை வெடித்திடும் போல இருக்க… உடனே தேவர்ஷி வீட்டிற்கு கிளம்பிவிட்டான்.

அனிவர்த் மாலை வருவான் என திருகுமரன் நினைத்திருக்க… மதியமே வருவான் என எதிர்பார்க்கவில்லை அவர். அவன் பாடு அவனுக்கு தானே தெரியும்.. இன்னொன்று தேவர்ஷி மாலையில் இருந்தால் பேசவிடாமல் துரத்தி விடுவதிலேயே குறியாக இருப்பாள். அதை எல்லாம் மனதில் கொண்டே உடனே கிளம்பி வந்துவிட்டான்.

அனிவர்த் வந்து அமர்ந்ததும் நேரடியாக விசயத்திற்கு வந்துவிட்டான்.

“ஷாஷிகா பாதர் யார்… உங்க மருமகன் எங்க இருக்கார்..”

அவனின் பரபரப்பு கண்ட திருகுமரனுக்கு ‘இவர் ஏன் இப்படி பரபரப்பாக கேட்கிறார்.. எனக்காவது என் பொண்ணு.. இவருக்கு இதில் என்ன இருக்கு..’ என யோசனை ஓடியது…

“சொல்லுங்க.. ஏன் அமைதியாக இருக்கறிங்க..” என்றான் அனிவர்த்..

“அது உங்களுக்கு எதுக்கு.. நீங்க எதுக்கு தெரிஞ்சுக்கனும்..”

“இல்லை என் ஆபிஸ்ல வேலை செஞ்சாங்க.. நல்ல திறமையான பொண்ணு.. அவங்க மேல உள்ள அக்கறைல தெரிஞ்சுக்கலாம்னு..” என சாமர்த்தியமாக பேசினான்.

அவனின் சாதுர்யமான பேச்சை நம்பி எல்லாம் ஒப்புவித்துவிட்டார்.

“உங்க ஆபிஸில் வேலை செய்யும் போது தான் யாரையோ காதலித்திருப்பா போல… ஒருநாள் அழுதழுது ஓஞ்சு போய் உயிரை கையில பிடிச்சு கிட்டு வந்து நின்னா.. நாங்க எவ்வளவோ கேட்டோம் வாயே திறக்கல.. அப்புறம் ஒருநாள் மயங்கி விழுந்துட்டா.. தூக்கிட்டு ஓடினோம்.. அங்க டாகடர் பார்த்துட்டு சொல்லவும் தான் கர்ப்பமா இருக்கறதே எங்களுக்கு தெரியும்.. அப்பவும் கேட்டோம்… நான் ஒருத்தர லவ் பண்ணினேன்.. நாங்க கல்யாணம் பண்ணிகிட்டோம். கொஞ்சநாள் வாழ்ந்தோம்.. ஒத்து வரல.. பிரிஞ்சிட்டோம்னு சொன்னா.. யாருனு சொல்லு நாங்க வேணா பேசி பார்க்கிறோம்னு எவ்வளவு தூரம் கேட்டோம்… சொல்லவே இல்லை.. மீறி கேட்டா எங்கயாவது போயிடுவேனு சொல்லிட்டா.. நாங்களும் பயந்து போய் எங்க கண் முன்னாடி இருந்தா போதும்னு அமைதியாகிட்டோம்..” என சொல்லியவர் கண்கள் கசிந்தது..

அதை கேட்ட அனிவர்த்துக்கோ சர்வமும் நடுங்கியது… உடல் வியர்க்க.. மூளை மரத்துப் போய்… மனம் ஸ்தம்பித்த நிலை..

“தம்பி என்னாச்சு.. இந்தாங்க தண்ணீ குடிங்க..” திருகுமரன் அனிவர்த்தை பார்த்து பதறி பருக தண்ணீர் கொடுத்தார்.

தண்ணீரை குடித்து கொஞ்சம் ஆசுவாசமானவன்.. யோசிக்க ஆரம்பித்தான்…

என்னோட வேலை செய்த போதுனா.. அது நான் தானே.. என்னை தான் காதலித்தாள்.. அப்போ ஷாஷிகா என் குழந்தையா.. ஆனால் கலயாணம் செய்து கொண்டோம் என சொல்லியிருக்காளே.. அது தானே இடிக்குது…

“தேவர்ஷி கல்யாணம் ஆகிடுச்சு சொன்னாளா..”

“ஆமாம் தம்பி தாலியை காண்பித்தாளே.. இன்னும் அந்த தாலி அவ கழுத்தில தான் இருக்கு..”

‘என்னது தாலியா.. நான் அப்படி எதுவும் கட்டலையே..’ குழம்பத்துடனே திருகுமரனிடம் கூட விடை பெறாமலேயே எழுந்து சென்றுவிட்டான்.

திருகுமரனும் இவருக்கும் ஒன்னும் தெரியலை போல.. எப்படி கண்டுபிடிக்கறது.. கடவுளே என் பொண்ணுக்கு ஒரு வழி காட்டேன் என கடவுளிடம் தனது கவலைகளை கொட்டினார்…

குழப்பத்துடன் வீட்டிற்கு வந்தான் அனிவர்த்…

மகனின் முகத்தை பார்த்த கங்காவிற்றகு ஏதோ சரியில்லை என தோன்றியது. காலையில் கிளம்பி சென்ற உற்சாகம் என்ன.. இப்போ மகனின் இருண்ட முகத்தை பார்தது சற்று பயம் தட்டியது.

சிதம்பரத்திடம் “என்னன்னு கேளுங்க.. நான் கேட்டா சொல்லமாட்டான்..” என்க..

சிதம்பரம் கேட்பதற்குள் தன் அறைக்கு சென்று கதவடைத்துக் கொண்டான். தன அறைக்கு வந்தவன் தலையை தாங்கி கொண்டு அமர்ந்துவிட்டான்.

கங்கா முறைக்க.. சிதம்பரம் அவசரமாக “கீழே இறங்கி வருவான்ல கண்டிப்பா கேட்கிறேன்” என சொல்லி தப்பித்து கொண்டார்.

‘தாலி என எதுவும் நான் கட்டவில்லையே.. என்னோடு வேலை பார்த்த சமயம் என்றால என்னோடு தானே பழகினாள். அவள் என்னை தானே லவ் பண்ணியதாக சொன்னாள். அப்போ ஷாஷிகா என் குழந்தையா.. ‘

சில கணக்குகள் போட்டவன் ‘ஷாஷிகா வயதை பார்த்தால் என்னோடு இருந்த நாட்களோடு ஒத்துப் போகிறதே.. அப்போ ஷாஷிகா என் பொண்ணா.. எனக்கு ஒரு பொண்ணா..’ மனதில் ஆனந்தம் கூத்தாட.. கண்களில் மகிழ்ச்சி பெருக்கு நீராக உகுக்க.. கைகள் நடுங்க.. தாளமுடியாமல் அப்படியே படுக்கையில் மல்லாக்க சாய்ந்துவிட்டான்.

எதேதோ உணர்வு அவனுள் கத்தவேண்டும் போல.. குதிக்கவேண்டும்போல.. சத்தமாக சிரிக்கவேண்டும் போல.. வாய் விட்டு அழுகவேண்டும் போல… அது எல்லாம் அவன் இயல்பு இல்லை என்பதால்.. சிறுபிள்ளைதனமாக இருக்கும் என வெகு பாடுபட்டு தன்னை அடக்கிக்கொண்டான்.

தன் உணர்வுகளோடு சில மணிதுளிகள் போராடியவன் முதலில் ஷாஷிகா தன் பெண் தானா உறுதியாக தெரிந்து கொள்ள வேண்டும் என முடிவு செய்தான். எப்படி எனவும் முடிவு செய்தவன்.. எதையும் நினைத்தவுடன் செய்து முடிக்கும் பழக்கம் கொண்டவன் என்பதால் உடனே கிளம்பிவிட்டான்.

ஷாஷிகா பள்ளி விடும் நேரம் என்பதால் நேரே பள்ளிக்கே சென்றான். பள்ளி வாசலில் திருகுமரன் பேத்திக்காக காத்திருந்தவர் அனிவர்த்தை பார்த்தும் இவர் எதற்கு இங்கே வந்திருக்கார் என்ற கேள்வி தான் தோன்றியது.. அனிவர்த் திருகுமரனின் பார்வையை கொண்டே அவரின் மனதை படித்தவன்..

“ஷாஷிகா நினைப்பாகவே இருக்கு.. அதான் அவ கூட கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ணலாம்னு வந்தேன்.. ப்ளீஸ் சார்.. நான் கொஞ்சம் அவளை வெளியே கூட்டிட்டு போய் வருகிறேனே.. ஒரு ஹாப்னவர் சார்..” என கேட்க..

திருகுமரனுக்கே என்ன சொல்வது என தெரியவில்லை. அதிக பழக்கமும் கிடையாது… அதற்காக தெரியாதவரும் கிடையாது.. என்ன செய்வது என தெரியவில்லை..

“ப்ளீஸ் அங்கிள்..” என நெருக்கத்தை கூட்டினான். மாமா என சொல்லிவிடலாம் என நினைத்தான் தான் அவனுக்கே உறுதியாக தெரியாமல் எப்படி என விட்டுவிட்டான்.

கண்களில் இறைஞ்சுதலுடன் கேட்கவும் திருகுமரனும் சரி என தலையை அசைத்துவிட்டார்.

பள்ளி மணி அடிக்கவும்.. குழந்தைகள் வெளியே வரவும் ஷாஷிகாவை மிகவும் ஆர்வமாக துழாவினான். ஷாஷிகா இவனை பார்த்ததும்..

“ஹாய் அங்கிள்..” என துள்ளலாக ஓடி வந்தது..

ஷாஷிகாவை தூக்கி இரு கன்னத்திலும் முத்தம் வைக்க.. அவனின் செயல் எல்லாம் பார்த்து கொண்டிருந்த திருகுமரனுக்கு ஒன்றும் புரியவில்லை..

ஷாஷிகாவை தூக்கி தோளோடு அணைத்து கொண்டு திருகுமரனிடம் தலை அசைத்து விடை பெற்றவன் காருக்கு சென்று முன் சீட்டில் அமர வைத்து காரை எடுத்தவன் நேராக சென்றது ஒரு மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல்..

ஏற்கனவே டி.என்.ஏ. டெஸ்ட்கு தன் மருத்துவ நண்பனிடம் முன்பதிவு செய்திருந்தான். உடனே அனிவர்த்துக்கும் ஷாஷிகாவிற்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முடிவுகள் வர மூன்று நாட்களகும் என சொல்லிவிட.. மூன்று நாளா என மலைத்து போனான். ஏனோ அவன் மனம் ஷாஷிகா தன் மகள் தான் நம்ப.. ஆதாரபூர்வமாக தெரிந்தால் தான் அடுத்து செய்யவேண்டியதை செய்ய முடியும்…

ஷாஷிகா அவனை கேள்வியாக கேட்டது..

“எதுக்கு இங்க என்னை கூட்டிட்டு வந்திங்க..”

“ஊசி போடுவாங்களா..”

“எனக்கு பீவர் கூட இல்லையே அங்கிள்..”

“எதுக்கு ப்ளட் எடுத்தாங்க..”

“எனக்கு வலிக்குது..”

“அம்மாவும் தாத்தாவும் தானே எப்பவும் ஹாஸபிட்டல் கூட்டிட்டு போவாங்க..”

“நீங்க ஏன் கூட்டிட்டு வந்திங்க..”

‘ஹப்பா.. எத்தனை கேள்வி..’ மகளின் புத்திசாலிதனத்தில் மெச்சி போனான்..என் மகள் என்னை போல கர்வம் வேறு…

“அங்கிள்.. நான் கேட்டுட்டே இருக்கேன்.. சைலண்ட்டா இருக்கறிங்க..”

மகளின் அதட்டலில் சிரிப்பு வந்திட..

“ஷாஷிமா.. ஒன்னும் இல்ல சும்மா.. நாம ஐஸ்கிரீம் சாப்பிட போலாமா..” என்க..

ஐஸ்கிரீம் என்றதும் அந்த சுட்டியும் குஷியாகிவிட்டது.

ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து சாப்பிட வைத்து வீடு வர ஒருமணி நேரம் கடந்துவிட்டது. வீட்டிற்கு வந்தனர். இவர்களுக்காக திருகுமரன் காத்திருந்தார். ஷாஷிகாவை கொண்டு வந்து விட்டு சென்றுவிட்டான்.

27 – ஆடி அசைந்து வரும் தென்றல் Read More »

C9EF4DE2-FD93-49A0-9C45-C252AC084179

26 – ஆடி அசைந்து வரும் தென்றல்

26 – ஆடி அசைந்து வரும் தென்றல்

விடிய விடிய தன் மனம் என்னும் கேலரியில் ஷேவ் செய்து வைத்திருந்த தேவர்ஷியோடான காலங்களை திகட்ட திகட்ட எடுத்துப் பார்த்து திளைத்து போனவனுக்கு தூக்கம் டெலிட் ஆகிவிட்டது. காலையிலேயே அவளை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை அடக்க முடியவில்லை. எப்படி பாரக்க.. என்ன சொல்லி.. என யோசித்தவனுக்கு ஷாஷிகா வந்து மின்ன.. தன் பிகரை கரெக்ட் செய்ய போகும் விடலை பையனாக துள்ளி கொண்டு கிளம்பினான்.

எத்தனையோ பெண்களை கடந்து வந்துவிட்டவனுக்கு ஏன் தேவர்ஷி மட்டும் நினைவில் நிலைத்துவிட்டாள் என இப்பவும் யோசிக்க மறந்தான். யோசித்து இருந்தால் தேவர்ஷியிடம் சிக்கி சின்னாபின்னம் ஆகாமல் தப்பித்து இருக்கலாம். சேதாரம் குறைவாக இருந்திருக்கும்.. கர்மா அவனை யோசிக்க விடவில்லை..

படிகளில் குதித்து இறங்கி வந்த மகனை பார்த்து காபி குடித்து கொண்டிருந்த கங்கா வாயில் ஊற்றிய காபியை கூட விழுங்காமல் ஹாங் என வாயை பிளந்து.. வாயின் கடைவழியே காபி ஒழுக.. அதை கூட உணராமல் பார்த்து கொண்டிருந்தார்.

அனிவர்த்கோ தாயை பார்த்ததும் வந்த சிரிப்பை உதட்டை மடக்கி அடக்கினான். கங்காவின் அருகில் வந்தவன் தாடையை தட்டி வாயை மூட வைத்தவன்.. அவரின் சேலை தலைப்பை எடுத்து வாயை துடைத்துவிட்டான்.

“பை கங்கா டார்லிங்..” என ஸ்டைலாக கையை அசைத்து… கார்கீயை விரலில் சுழட்டிக் கொண்டு ஒரு சினிமா பாட்டை விசிலடித்துக் கொண்டு செல்லும் மகனை பார்த்து கங்காவிற்கு மயக்கம் வந்துவிட்டது. பக்கத்தில் இருந்த சிதம்பரத்தின் மேலேயே மயங்கிவிட்டார்.

“கங்கா.. கங்காம்மா..” சிதம்பரம் கன்னத்தில் தட்ட… மெதுவாக கண்களை திறந்து பார்த்தவர்..

“ஏங்க.. இது நம்ம அனிவர்த் தானுங்களா..”

“ஆமாம்.. உம்மவன் தான்..”

“ஏதாவது மோகினி பிசாசு அடிச்சிருக்குமோ..”

“அப்படி எல்லாம் இருக்காது..”

“ஒருவேள எந்த சீமை சித்தராங்கிய புடிச்சுட்டனோ..”

“இப்ப எல்லாம் அவன் அப்படி இல்லையே கங்கா..”

“இவ்வளவு நேரமா எழுந்து இத்தனை ஆர்பாட்டமா எங்க கிளம்பி போறானாம்..”

“தெரியலையே ம்மா..”

“க்கும்.. கத்திரிக்கா முத்தினா.. கடை தெருவுக்கு வந்து தானே ஆகனும்..” என நொடித்து கொண்டு எழுந்து சென்றுவிட்டார்.

அனிவர்த் ஒரு ஆர்வத்தில் கிளம்பி வந்துவிட்டான். ஷாஷிகாவிற்கு ஏதாவது வாங்கி போகலாம் என்றால் ஒரு கடை கூட திறக்கவில்லை. மணி ஏழு தான் ஆகியிருந்தது. இவ்வளவு நேரமாக எப்படி போய் நிற்பது என்ற யோசனை வேறு.. ஒரு உணவகத்திற்கு சென்றவன்.. எந்த உணவு தயாரித்து கொண்டு வர லேட்டாகும் என கேட்டு அந்த உணவையே கொண்டு வருமாறு சொல்லி தன் போனோடு தன் நேரத்தை நெட்டி தள்ளினான்.

ஏதோ ஞாபகம் வந்தவனாக தன் போனில் தேவர்ஷியின் போட்டோ இருக்கா என துழாவினான். பொன்முடியில் எடுத்த சிலது இருக்க… தொட்டு தடவி “குட்டிம்மா..” என்றான் ஏக்க பெருமூச்சோடு…

உணவு வந்து மெல்ல சாப்பிட்டு என ஒரு மணி நேரம் கடத்தியிருந்தவன்.. ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் சில பார் சாக்லேட்களும் ஐஸ்கீரீமிம் வாங்கி கொண்டு தேவர்ஷியின் வீடு வந்து சேர்ந்தான். அழைப்பு மணி அடிக்க.. திருகுமரன் வந்து திறந்தார். அவருக்கு அனிவர்த் யார் என்று தெரியவில்லை..

“நீங்க..”

“நான் ஷாஷிகா ப்ரண்ட்.. அவளை பார்க்கனும்..”

இந்த வயதில் தன் பேத்திக்கு ஒரு ப்ரண்டா என வியந்தவர்.. அவனின் பகட்டான தோற்றம் தவறாக நினைக்க விடவில்லை. உள்ளே அனுமதித்தார்.

உள்ளே வந்து அமர்ந்தவனிடம்…

“நீங்க யாரு.. ஷாஷிகாவ எப்படி தெரியும்..” திருகுமரன் கேட்க..

“நான் அனிவர்த்.. சி.கே டிரேடர்ஸ் எம்.டி..”என்றவன்..

ஷாஷிகாவை சந்தித்த நிகழ்வுகளை உற்சாகமாக சொன்னான். பேத்தியின் பெருமைகளை கேட்டதில் அனிவர்த தன்னை பற்றி கூறியதை சரியாக கவனிக்க தவறிவிட்டார்.

“காபி.. டீ..” என திருகுமரன் அனிவர்த்தை கேட்க…

“நோ.. தேங்க்ஸ் சார்..” என் ஒரு சின்ன சிரிப்பை உதிர்த்தவன்.. உள்ளே தலையை எக்கி பார்த்தான்.

“கௌசி.. ஷாஷிகாவை கூட்டிட்டு வா..” உள்ளே குரல் கொடுத்தார்.

மிகவும் ஆர்வமாக உள் பக்கமாகேவ பார்த்திருந்தான். பார்வை நாலு திசையிலும் பயணித்தது. எங்கயாவது தேவர்ஷி தென்படுகிறாளா என.. யூனிபாரம்மில் அழகாக வந்தது குட்டி ஏஞ்சல்.. ஷாஷிகாவை பார்த்ததும் ஒரு பாசம் சுரந்தது தான்.. இருந்தாலும் அந்த பாசத்தை கூட ஓரங்கட்டிவிட்டது தேவர்ஷியின் மீதான காதல்.. ஆனால் இன்னும் அந்த காதலை உணரவில்லை அவன்..

“ஹாய் அங்கிள்..”

“ஹாய் ஷாஷிகா..” என தான் வாங்கி வந்த பொருட்களை நீட்டினான்.

அந்த வாண்டோ வாங்காமல் தன் தாத்தாவை பாரத்தது.. உடனே இவன் முகம் சுருங்கிவிட்டது. அவரின் தலை சம்மதமாக அசையவும் வாங்கி கொண்டது.

“தேங்க்ஸ்.. அங்கிள்..”

அனிவர்த் ஷாஷிகாவோடு பேசிக் கொண்டிருந்தாலும் நிமிடத்திற்கொரு ஒரு முறை அவன் பார்வை உள்ளே சென்று மீண்டது.

திருகுமரன் இதை எல்லாம் அவதானித்து கொண்டு தான் இருந்தார்.

தேவர்ஷி வந்தாள்.. அனிவர்த் பார்வை ஜவ்வுமிட்டாயாக அவள் மேல் ஒட்டிக் கொண்டது.

அழகாக பின்னலிட்ட கூந்தல்.. நெற்றி வகிட்டில் குங்குமம்.. அதை பாரத்தவனுக்கு மனம் சுணக்கம் கொண்டது.. புருவங்களுக்கு மத்தியில் சிறு சிகப்பு பொட்டு..

பார்வை சற்று கீழே இறங்கி கழுத்திற்கு வந்தடைந்தது. தாலி இருக்கா என பார்த்தான்.. ஒன்றும் தெரியவில்லை.. குளோஸ்ட் காலர் நெக் பிளவுஸ் அணிந்திருந்தாள்.

சட்டென் அவளின் மச்சம் நினைவில் வந்து ஒட்டிக் கொண்டது.. அதை பார்க்க துடித்தது மனது.. வளைவான பள்ளத்தில் இருப்பதை சாதரணமாகவே பார்க்க முடியாது. இப்ப எங்கே காண.. ஏக்க பெருமூச்சு..

நேர்த்தியான காட்டன் புடவையில் மிடுக்காக இருந்தாள். பார்த்தவுடன் மதிக்கும் படியான தோற்றம்..

தான் ரசித்திருந்திருந்த சின்ன பெண் தோற்றம போய் கம்பீரமான தோற்றத்தில் இருந்தவளை இன்னும் இன்னும் பிடித்து போனது.. ஆசையோடு அவள் முகம் பார்த்தான்.

தேவர்ஷியோ இவனை பார்வையால் நெருப்பாக சுட்டு கொண்டிருந்தாள்.

‘ஆளை பாரு.. பார்வையை பாரு.. நெட்டபனமரம் ..கண்ணாமுழியை நோண்டறேன் இருடா.. காலங்கார்த்தால எதுக்கு வந்திருக்கானு தெரியலையே.. இவனுக்கும் ஷாஷிக்கும் எப்படி பழக்கம் அதுவும் தெரியலை.. ஷாஷிய சாக்கா வச்சுகிட்டு என்கிட்ட ஏதாவது வம்பு பண்ணட்டும்.. அப்புறம் இருக்கு.. நடு மண்டைலயே எதயாவது எடுத்து போடறேன்..’ மனதினுள் ஆயிரம் வசைபாடி அர்ச்சனை நடத்திக் கொண்டிருந்தாள்.

அனிவர்த்ததோ.. ‘ ம்ம்ம்… இந்த மொத்த அழகையும் எவன் ஆண்டு அனுபவிக்கிறானோ தெரியலயே.. ‘

ஏனோ தேவர்ஷியின் கணவனை பற்றி தெரிந்து கொள்ள துடித்தான். ‘அப்படி எவன தான் கல்யாணம் பண்ணியிருக்கா.. என்னை விட ஹேண்ட்சம்மா இருப்பானா.. என்னை விட பெரிய பணக்காரனோ..என்னை வேணாம்னு சொல்லிட்டு எந்த மன்மதராசாவ கட்டி இருக்கானு பார்க்கலாம்..’

“சார்…ஷாஷிகா பாதர்..”

“அவரு..”

“ப்பா..” தேவர்ஷி சத்தமாக இடையிட்டாள்…

திருகுமரன் அனிவர்த்தை விட்டு மகளைப் பாரக்க…

“புதுசா யாரையும் வீட்டுக்குள்ள விட வேண்டாம்னு சொல்லி இருக்கேன்ல.. யாரு என்னனு வாசல்ல வச்சு பேசி அனுப்ப மாட்டிங்களா..” என்றாள் அனிவர்த்தை அந்நிய பார்வை பார்த்தவாறு…

“இல்லம்மா.. இவரு ஷாஷிகா ப்ரண்டுனு..”

“ப்பா.. ஷாஷிகா ஸ்கூலுக்கு டைம் ஆகுது பாருங்க.. கிளம்புங்க…”

திருகுமரன் சுவர் கடிகாரத்தை பார்க்க… இன்னும் பள்ளிக்கு செல்ல நேரமிருந்தது..

அப்பாவின் பார்வையை அறிந்தவள்..”ப்பா.. அவ கிளாஸ் மிஸ் பார்க்கனும் சொன்னாங்க… நீங்க கிளம்புங்க..”

“ம்மா.. மிஸ் அப்படி எல்லாம் சொல்லவே இல்ல..” என்றது ஷாஷிகா விவரமாக….

குட்டி பிசாசு என பல்லை கடித்த தேவர்ஷி..”எனக்கு போன் பண்ணினாங்க.. அப்பா கிளம்புங்க..” என பிடிவாதமாக நின்றாள்.

எதாவது பேசி இவன் யார் என்று குடும்பத்திற்கும்… ஷாஷிகா இவன் குழந்தை என்று இவனுக்கும் தெரிந்துவிடுமோ.. என்ற பதட்டம் தொற்றிக் கொண்டது..

“சாரி சார்.. ஸகூலுக்கு போகனும்.. இன்னொரு நாள் ப்ரீயா பேசலாம்..” என திருகுமரன் சொல்லிவிட்டு.. ஷாஷிகாவை கூட்டி கொண்டு கிளம்பிவிட்டார்.

அவர் செல்லும் வரை பார்த்திருந்த அனிவர்த்..

“நான் என்ன தெரிஞ்சுக்க கூடாதுனு.. இப்படி உங்கப்பாவ துரத்திவிடற.. என்கிட்ட இருந்து ஏதோ மறைக்கற போல..” என்றான் அவளை கூர்மையாக பார்த்து…

“யார் சார் நீங்க.. நீங்க யாருனே எனக்கு தெரியாது… உங்ககிட்ட இருந்து மறைக்கிறதுக்கு என்ன இருக்கு..” என்றாள் தெனாவட்டாக..

“நான் யாருனு தெரியாது உனக்கு.. அப்படி தான.. சரி விடு.. ஆனாலும் அப்ப இருந்தத விட இப்ப தான் நல்லா கும்முனு இருக்கற…” என அவளின் கொஞ்சம் சதைபிடிப்பான உடலை மேலிருந்து கீழ வரை பார்வையால் மேய்ந்தான்.

அவனின் பார்வையில் அவளின் காதல் மனது மயங்கி தான் போனது. இத்தனை பட்டும் தன் மானங்கெட்ட மனது அவனின் பார்வையில சொக்கியதில் தன் மேலேயே எரிச்சல் கொண்டவள் அதையும் அவன் பக்கம் திருப்பினாள்.

“எதுக்கு இப்படி பார்க்கறிங்க.. கண்ணை நோண்டிருவேன்..”அவனின் முகத்திற்கு நேராக கையை ஆட்டி பேச..அவளின் கையை பிடித்து விரல்நுனிகளில் தன் உதட்டை உரச…

இப்போதும் அவன் தீண்டல் அவளை பாதிக்க… குப்பென முகம் சிவக்க.. ஒரு நொடி பேச்சற்று நின்றவளை பார்த்து உல்லசமாக சிரித்தவன் உடனே கிளம்பிவிட்டான்.

அவன் சென்றதும் தொப்பென ஷோபாவில் அமரந்தாள். படபடப்பு.. பயம்.. கண்கள் தானாக நீர் உகுக்க… எங்கே மறுபடியும் தன் மானங்கெட்ட மனசு அவன் பின்னால் போயிடுமோ.. மீண்டும் அவமானபடும் படி ஆகிவிடுமோ என பயம் கொண்டாள்.

கௌசல்யா தேவர்ஷியின் லஞ்ச் பேக்கை எடுத்து வந்தவர் மகளை பாரத்து…

“என்னாச்சு தேவாம்மா.. ஏன் அழுகற..” என பதட்டமாக கேட்க..

அவசர அவசரமாக கண்களை துடைத்தவள்..”ஒன்னுமில்லம்மா.. கொஞ்சம் ஒர்க் டென்ஷன்..” என சொன்னவள் தன் பேகையும் கார் சாவியையும் எடுத்துக் கொண்டு..

“வரேன் மா..” சொல்லி கொண்டு வேலைக்கு சென்றுவிட்டாள்.

இப்ப மகள் அழுதாளா.. இல்லையா.. என குழம்பி போய் அமரந்திருந்தார் கௌசல்யா.. திருகுமரனும் ஒரு குழப்பத்தோடு தான் வீடு வந்தார்.

ஷாஷிகாவின் டீச்சர் நான் வர சொல்லவில்லையே.. நன்றாக படிக்கும் குழந்தை என்பதால் சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட.. மகள் எதற்கு இப்படி பொய் சொன்னாள் என குழப்பம்…

வீடு வந்தவர் தான் வந்தது கூட தெரியாமல் மனைவி உட்கார்ந்திருப்பதை பார்த்தவர்.. என்ன ஏது என விசாரித்தவர்.. மனைவி சொன்னதை கேட்டு மேலும் குழம்பி போனார்.

தேவர்ஷி திருகுமரனின் வழிகாட்டுதலில் மீண்டும் படித்து தேசிய வங்கியில் நல்ல பதவியில் வேலை கிடைத்த பிறகு எதிலும் எங்கயும் தெளிவாக தனக்கும் தன் மகளுக்கும் சேர்த்து முடிவு எடுக்கும் மகளை கண்டு வியந்து தான் போயிருக்கிறார். இத்தனை காலங்கள் கழித்து மகளின் நடவடிக்கை அவரை யோசிக்க வைத்தது..

மனைவியை சமாதனப்படுத்தி தனக்கு ஒரு காபி கொண்டு வருமாறு அனுப்பி விட்டு யோசித்தார்.மனைவியிடம் சொன்னது போல வேலை டென்ஷன்லாம் இருக்காது என தெரியும் மகளின் வேலை திறனை நன்கு அறிந்தவர் தானே..

மகளின் இந்த மாற்றம் எப்போதிருந்து என யோசித்தார்..முன்தினம் வேலையில் இருந்து வரும் போது ஷாப்பிங் மால் போய் வீட்டிற்கும் தன் மகளுக்கும் ஏதேதோ வாங்கி கொண்டு சந்தோஷமாகவே வந்தாள். காலையில் எழுந்து நல்ல மூடில் தான் வேலைக்கு கிளம்பி ஆயத்தமானாள்.. அதுக்கப்புறம் அனிவர்த்தை பார்தத பின் தான்… பிரச்சினையின் ஆரம்ப நூலை பிடித்துவிட்டார்.

26 – ஆடி அசைந்து வரும் தென்றல் Read More »

55FE2D4F-A9FC-4C72-B366-DB9A980B11EC

26 – ஆடி அசைந்து வரும் தென்றல்

26 – ஆடி அசைந்து வரும் தென்றல்

விடிய விடிய தன் மனம் என்னும் கேலரியில் ஷேவ் செய்து வைத்திருந்த தேவர்ஷியோடான காலங்களை திகட்ட திகட்ட எடுத்துப் பார்த்து திளைத்து போனவனுக்கு தூக்கம் டெலிட் ஆகிவிட்டது. காலையிலேயே அவளை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை அடக்க முடியவில்லை. எப்படி பாரக்க.. என்ன சொல்லி.. என யோசித்தவனுக்கு ஷாஷிகா வந்து மின்ன.. தன் பிகரை கரெக்ட் செய்ய போகும் விடலை பையனாக துள்ளி கொண்டு கிளம்பினான்.

எத்தனையோ பெண்களை கடந்து வந்துவிட்டவனுக்கு ஏன் தேவர்ஷி மட்டும் நினைவில் நிலைத்துவிட்டாள் என இப்பவும் யோசிக்க மறந்தான். யோசித்து இருந்தால் தேவர்ஷியிடம் சிக்கி சின்னாபின்னம் ஆகாமல் தப்பித்து இருக்கலாம். சேதாரம் குறைவாக இருந்திருக்கும்.. கர்மா அவனை யோசிக்க விடவில்லை..

படிகளில் குதித்து இறங்கி வந்த மகனை பார்த்து காபி குடித்து கொண்டிருந்த கங்கா வாயில் ஊற்றிய காபியை கூட விழுங்காமல் ஹாங் என வாயை பிளந்து.. வாயின் கடைவழியே காபி ஒழுக.. அதை கூட உணராமல் பார்த்து கொண்டிருந்தார்.

அனிவர்த்கோ தாயை பார்த்ததும் வந்த சிரிப்பை உதட்டை மடக்கி அடக்கினான். கங்காவின் அருகில் வந்தவன் தாடையை தட்டி வாயை மூட வைத்தவன்.. அவரின் சேலை தலைப்பை எடுத்து வாயை துடைத்துவிட்டான்.

“பை கங்கா டார்லிங்..” என ஸ்டைலாக கையை அசைத்து… கார்கீயை விரலில் சுழட்டிக் கொண்டு ஒரு சினிமா பாட்டை விசிலடித்துக் கொண்டு செல்லும் மகனை பார்த்து கங்காவிற்கு மயக்கம் வந்துவிட்டது. பக்கத்தில் இருந்த சிதம்பரத்தின் மேலேயே மயங்கிவிட்டார்.

“கங்கா.. கங்காம்மா..” சிதம்பரம் கன்னத்தில் தட்ட… மெதுவாக கண்களை திறந்து பார்த்தவர்..

“ஏங்க.. இது நம்ம அனிவர்த் தானுங்களா..”

“ஆமாம்.. உம்மவன் தான்..”

“ஏதாவது மோகினி பிசாசு அடிச்சிருக்குமோ..”

“அப்படி எல்லாம் இருக்காது..”

“ஒருவேள எந்த சீமை சித்தராங்கிய புடிச்சுட்டனோ..”

“இப்ப எல்லாம் அவன் அப்படி இல்லையே கங்கா..”

“இவ்வளவு நேரமா எழுந்து இத்தனை ஆர்பாட்டமா எங்க கிளம்பி போறானாம்..”

“தெரியலையே ம்மா..”

“க்கும்.. கத்திரிக்கா முத்தினா.. கடை தெருவுக்கு வந்து தானே ஆகனும்..” என நொடித்து கொண்டு எழுந்து சென்றுவிட்டார்.

அனிவர்த் ஒரு ஆர்வத்தில் கிளம்பி வந்துவிட்டான். ஷாஷிகாவிற்கு ஏதாவது வாங்கி போகலாம் என்றால் ஒரு கடை கூட திறக்கவில்லை. மணி ஏழு தான் ஆகியிருந்தது. இவ்வளவு நேரமாக எப்படி போய் நிற்பது என்ற யோசனை வேறு.. ஒரு உணவகத்திற்கு சென்றவன்.. எந்த உணவு தயாரித்து கொண்டு வர லேட்டாகும் என கேட்டு அந்த உணவையே கொண்டு வருமாறு சொல்லி தன் போனோடு தன் நேரத்தை நெட்டி தள்ளினான்.

ஏதோ ஞாபகம் வந்தவனாக தன் போனில் தேவர்ஷியின் போட்டோ இருக்கா என துழாவினான். பொன்முடியில் எடுத்த சிலது இருக்க… தொட்டு தடவி “குட்டிம்மா..” என்றான் ஏக்க பெருமூச்சோடு…

உணவு வந்து மெல்ல சாப்பிட்டு என ஒரு மணி நேரம் கடத்தியிருந்தவன்.. ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் சில பார் சாக்லேட்களும் ஐஸ்கீரீமிம் வாங்கி கொண்டு தேவர்ஷியின் வீடு வந்து சேர்ந்தான். அழைப்பு மணி அடிக்க.. திருகுமரன் வந்து திறந்தார். அவருக்கு அனிவர்த் யார் என்று தெரியவில்லை..

“நீங்க..”

“நான் ஷாஷிகா ப்ரண்ட்.. அவளை பார்க்கனும்..”

இந்த வயதில் தன் பேத்திக்கு ஒரு ப்ரண்டா என வியந்தவர்.. அவனின் பகட்டான தோற்றம் தவறாக நினைக்க விடவில்லை. உள்ளே அனுமதித்தார்.

உள்ளே வந்து அமர்ந்தவனிடம்…

“நீங்க யாரு.. ஷாஷிகாவ எப்படி தெரியும்..” திருகுமரன் கேட்க..

“நான் அனிவர்த்.. சி.கே டிரேடர்ஸ் எம்.டி..”என்றவன்..

ஷாஷிகாவை சந்தித்த நிகழ்வுகளை உற்சாகமாக சொன்னான். பேத்தியின் பெருமைகளை கேட்டதில் அனிவர்த தன்னை பற்றி கூறியதை சரியாக கவனிக்க தவறிவிட்டார்.

“காபி.. டீ..” என திருகுமரன் அனிவர்த்தை கேட்க…

“நோ.. தேங்க்ஸ் சார்..” என் ஒரு சின்ன சிரிப்பை உதிர்த்தவன்.. உள்ளே தலையை எக்கி பார்த்தான்.

“கௌசி.. ஷாஷிகாவை கூட்டிட்டு வா..” உள்ளே குரல் கொடுத்தார்.

மிகவும் ஆர்வமாக உள் பக்கமாகேவ பார்த்திருந்தான். பார்வை நாலு திசையிலும் பயணித்தது. எங்கயாவது தேவர்ஷி தென்படுகிறாளா என.. யூனிபாரம்மில் அழகாக வந்தது குட்டி ஏஞ்சல்.. ஷாஷிகாவை பார்த்ததும் ஒரு பாசம் சுரந்தது தான்.. இருந்தாலும் அந்த பாசத்தை கூட ஓரங்கட்டிவிட்டது தேவர்ஷியின் மீதான காதல்.. ஆனால் இன்னும் அந்த காதலை உணரவில்லை அவன்..

“ஹாய் அங்கிள்..”

“ஹாய் ஷாஷிகா..” என தான் வாங்கி வந்த பொருட்களை நீட்டினான்.

அந்த வாண்டோ வாங்காமல் தன் தாத்தாவை பாரத்தது.. உடனே இவன் முகம் சுருங்கிவிட்டது. அவரின் தலை சம்மதமாக அசையவும் வாங்கி கொண்டது.

“தேங்க்ஸ்.. அங்கிள்..”

அனிவர்த் ஷாஷிகாவோடு பேசிக் கொண்டிருந்தாலும் நிமிடத்திற்கொரு ஒரு முறை அவன் பார்வை உள்ளே சென்று மீண்டது.

திருகுமரன் இதை எல்லாம் அவதானித்து கொண்டு தான் இருந்தார்.

தேவர்ஷி வந்தாள்.. அனிவர்த் பார்வை ஜவ்வுமிட்டாயாக அவள் மேல் ஒட்டிக் கொண்டது.

அழகாக பின்னலிட்ட கூந்தல்.. நெற்றி வகிட்டில் குங்குமம்.. அதை பாரத்தவனுக்கு மனம் சுணக்கம் கொண்டது.. புருவங்களுக்கு மத்தியில் சிறு சிகப்பு பொட்டு..

பார்வை சற்று கீழே இறங்கி கழுத்திற்கு வந்தடைந்தது. தாலி இருக்கா என பார்த்தான்.. ஒன்றும் தெரியவில்லை.. குளோஸ்ட் காலர் நெக் பிளவுஸ் அணிந்திருந்தாள்.

சட்டென் அவளின் மச்சம் நினைவில் வந்து ஒட்டிக் கொண்டது.. அதை பார்க்க துடித்தது மனது.. வளைவான பள்ளத்தில் இருப்பதை சாதரணமாகவே பார்க்க முடியாது. இப்ப எங்கே காண.. ஏக்க பெருமூச்சு..

நேர்த்தியான காட்டன் புடவையில் மிடுக்காக இருந்தாள். பார்த்தவுடன் மதிக்கும் படியான தோற்றம்..

தான் ரசித்திருந்திருந்த சின்ன பெண் தோற்றம போய் கம்பீரமான தோற்றத்தில் இருந்தவளை இன்னும் இன்னும் பிடித்து போனது.. ஆசையோடு அவள் முகம் பார்த்தான்.

தேவர்ஷியோ இவனை பார்வையால் நெருப்பாக சுட்டு கொண்டிருந்தாள்.

‘ஆளை பாரு.. பார்வையை பாரு.. நெட்டபனமரம் ..கண்ணாமுழியை நோண்டறேன் இருடா.. காலங்கார்த்தால எதுக்கு வந்திருக்கானு தெரியலையே.. இவனுக்கும் ஷாஷிக்கும் எப்படி பழக்கம் அதுவும் தெரியலை.. ஷாஷிய சாக்கா வச்சுகிட்டு என்கிட்ட ஏதாவது வம்பு பண்ணட்டும்.. அப்புறம் இருக்கு.. நடு மண்டைலயே எதயாவது எடுத்து போடறேன்..’ மனதினுள் ஆயிரம் வசைபாடி அர்ச்சனை நடத்திக் கொண்டிருந்தாள்.

அனிவர்த்ததோ.. ‘ ம்ம்ம்… இந்த மொத்த அழகையும் எவன் ஆண்டு அனுபவிக்கிறானோ தெரியலயே.. ‘

ஏனோ தேவர்ஷியின் கணவனை பற்றி தெரிந்து கொள்ள துடித்தான். ‘அப்படி எவன தான் கல்யாணம் பண்ணியிருக்கா.. என்னை விட ஹேண்ட்சம்மா இருப்பானா.. என்னை விட பெரிய பணக்காரனோ..என்னை வேணாம்னு சொல்லிட்டு எந்த மன்மதராசாவ கட்டி இருக்கானு பார்க்கலாம்..’

“சார்…ஷாஷிகா பாதர்..”

“அவரு..”

“ப்பா..” தேவர்ஷி சத்தமாக இடையிட்டாள்…

திருகுமரன் அனிவர்த்தை விட்டு மகளைப் பாரக்க…

“புதுசா யாரையும் வீட்டுக்குள்ள விட வேண்டாம்னு சொல்லி இருக்கேன்ல.. யாரு என்னனு வாசல்ல வச்சு பேசி அனுப்ப மாட்டிங்களா..” என்றாள் அனிவர்த்தை அந்நிய பார்வை பார்த்தவாறு…

“இல்லம்மா.. இவரு ஷாஷிகா ப்ரண்டுனு..”

“ப்பா.. ஷாஷிகா ஸ்கூலுக்கு டைம் ஆகுது பாருங்க.. கிளம்புங்க…”

திருகுமரன் சுவர் கடிகாரத்தை பார்க்க… இன்னும் பள்ளிக்கு செல்ல நேரமிருந்தது..

அப்பாவின் பார்வையை அறிந்தவள்..”ப்பா.. அவ கிளாஸ் மிஸ் பார்க்கனும் சொன்னாங்க… நீங்க கிளம்புங்க..”

“ம்மா.. மிஸ் அப்படி எல்லாம் சொல்லவே இல்ல..” என்றது ஷாஷிகா விவரமாக….

குட்டி பிசாசு என பல்லை கடித்த தேவர்ஷி..”எனக்கு போன் பண்ணினாங்க.. அப்பா கிளம்புங்க..” என பிடிவாதமாக நின்றாள்.

எதாவது பேசி இவன் யார் என்று குடும்பத்திற்கும்… ஷாஷிகா இவன் குழந்தை என்று இவனுக்கும் தெரிந்துவிடுமோ.. என்ற பதட்டம் தொற்றிக் கொண்டது..

“சாரி சார்.. ஸகூலுக்கு போகனும்.. இன்னொரு நாள் ப்ரீயா பேசலாம்..” என திருகுமரன் சொல்லிவிட்டு.. ஷாஷிகாவை கூட்டி கொண்டு கிளம்பிவிட்டார்.

அவர் செல்லும் வரை பார்த்திருந்த அனிவர்த்..

“நான் என்ன தெரிஞ்சுக்க கூடாதுனு.. இப்படி உங்கப்பாவ துரத்திவிடற.. என்கிட்ட இருந்து ஏதோ மறைக்கற போல..” என்றான் அவளை கூர்மையாக பார்த்து…

“யார் சார் நீங்க.. நீங்க யாருனே எனக்கு தெரியாது… உங்ககிட்ட இருந்து மறைக்கிறதுக்கு என்ன இருக்கு..” என்றாள் தெனாவட்டாக..

“நான் யாருனு தெரியாது உனக்கு.. அப்படி தான.. சரி விடு.. ஆனாலும் அப்ப இருந்தத விட இப்ப தான் நல்லா கும்முனு இருக்கற…” என அவளின் கொஞ்சம் சதைபிடிப்பான உடலை மேலிருந்து கீழ வரை பார்வையால் மேய்ந்தான்.

அவனின் பார்வையில் அவளின் காதல் மனது மயங்கி தான் போனது. இத்தனை பட்டும் தன் மானங்கெட்ட மனது அவனின் பார்வையில சொக்கியதில் தன் மேலேயே எரிச்சல் கொண்டவள் அதையும் அவன் பக்கம் திருப்பினாள்.

“எதுக்கு இப்படி பார்க்கறிங்க.. கண்ணை நோண்டிருவேன்..”அவனின் முகத்திற்கு நேராக கையை ஆட்டி பேச..அவளின் கையை பிடித்து விரல்நுனிகளில் தன் உதட்டை உரச…

இப்போதும் அவன் தீண்டல் அவளை பாதிக்க… குப்பென முகம் சிவக்க.. ஒரு நொடி பேச்சற்று நின்றவளை பார்த்து உல்லசமாக சிரித்தவன் உடனே கிளம்பிவிட்டான்.

அவன் சென்றதும் தொப்பென ஷோபாவில் அமரந்தாள். படபடப்பு.. பயம்.. கண்கள் தானாக நீர் உகுக்க… எங்கே மறுபடியும் தன் மானங்கெட்ட மனசு அவன் பின்னால் போயிடுமோ.. மீண்டும் அவமானபடும் படி ஆகிவிடுமோ என பயம் கொண்டாள்.

கௌசல்யா தேவர்ஷியின் லஞ்ச் பேக்கை எடுத்து வந்தவர் மகளை பாரத்து…

“என்னாச்சு தேவாம்மா.. ஏன் அழுகற..” என பதட்டமாக கேட்க..

அவசர அவசரமாக கண்களை துடைத்தவள்..”ஒன்னுமில்லம்மா.. கொஞ்சம் ஒர்க் டென்ஷன்..” என சொன்னவள் தன் பேகையும் கார் சாவியையும் எடுத்துக் கொண்டு..

“வரேன் மா..” சொல்லி கொண்டு வேலைக்கு சென்றுவிட்டாள்.

இப்ப மகள் அழுதாளா.. இல்லையா.. என குழம்பி போய் அமரந்திருந்தார் கௌசல்யா.. திருகுமரனும் ஒரு குழப்பத்தோடு தான் வீடு வந்தார்.

ஷாஷிகாவின் டீச்சர் நான் வர சொல்லவில்லையே.. நன்றாக படிக்கும் குழந்தை என்பதால் சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட.. மகள் எதற்கு இப்படி பொய் சொன்னாள் என குழப்பம்…

வீடு வந்தவர் தான் வந்தது கூட தெரியாமல் மனைவி உட்கார்ந்திருப்பதை பார்த்தவர்.. என்ன ஏது என விசாரித்தவர்.. மனைவி சொன்னதை கேட்டு மேலும் குழம்பி போனார்.

தேவர்ஷி திருகுமரனின் வழிகாட்டுதலில் மீண்டும் படித்து தேசிய வங்கியில் நல்ல பதவியில் வேலை கிடைத்த பிறகு எதிலும் எங்கயும் தெளிவாக தனக்கும் தன் மகளுக்கும் சேர்த்து முடிவு எடுக்கும் மகளை கண்டு வியந்து தான் போயிருக்கிறார். இத்தனை காலங்கள் கழித்து மகளின் நடவடிக்கை அவரை யோசிக்க வைத்தது..

மனைவியை சமாதனப்படுத்தி தனக்கு ஒரு காபி கொண்டு வருமாறு அனுப்பி விட்டு யோசித்தார்.மனைவியிடம் சொன்னது போல வேலை டென்ஷன்லாம் இருக்காது என தெரியும் மகளின் வேலை திறனை நன்கு அறிந்தவர் தானே..

மகளின் இந்த மாற்றம் எப்போதிருந்து என யோசித்தார்..முன்தினம் வேலையில் இருந்து வரும் போது ஷாப்பிங் மால் போய் வீட்டிற்கும் தன் மகளுக்கும் ஏதேதோ வாங்கி கொண்டு சந்தோஷமாகவே வந்தாள். காலையில் எழுந்து நல்ல மூடில் தான் வேலைக்கு கிளம்பி ஆயத்தமானாள்.. அதுக்கப்புறம் அனிவர்த்தை பார்தத பின் தான்… பிரச்சினையின் ஆரம்ப நூலை பிடித்துவிட்டார்.

26 – ஆடி அசைந்து வரும் தென்றல் Read More »

95E8643E-491E-4D59-A677-DB1F80061AEF

25 – ஆடி அசைந்து வரும் தென்றல்

25 – ஆடி அசைந்து வரும் தென்றல்

மொத்த குடும்பமும் திருகுமரன் வீட்டில் கூடியிருந்தனர். இளையவர்களில் சரண் தவிர மற்றவர்கள் கண்ணன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பெரியவர்கள் நிலைகுலைந்து போயிருந்தனர். என்ன செய்வது…என தெரியாமல் ஆளுக்கொரு சிந்தனை. ஏதாவது செய்து.. எப்படியாவது தங்கள் குடும்பத்திற்கு இழுக்கு வராது செய்தாக வேண்டிய கட்டாயம்.சுந்தரமூர்த்தியோ கோபத்தின் உச்சத்தில்…. கோபம் இருக்க தானே செய்யும்.. ஆணோ.. பெண்ணோ.. ஒழுக்கம் என்பது அவசியம். அந்த ஒழுக்கம் தவறும் போது அந்த குடும்பத்தின் மேல் சமூகத்தின் பார்வையே மாறி் தானே போகிறது.

தேவர்ஷியை நடுவில் நிறுத்தி அவளை கேள்விகளால் கார்னர் பண்ணினர்.

“லவ் பண்ணினியா.. யாரை..”

“இல்ல.. லவ் பண்ணறேனு சொல்லியிருந்தா.. நாங்களே கல்யாணம் பண்ணி வச்சிருப்போம்ல.. “

“எதுக்கு இப்படி பண்ணின..”

“இப்பவாவது சொல்லு.. யார் என்னனு.. “

“எவனாவது உன்கிட்ட முறை தவறி நடந்துகிட்டானா..”

“அப்படி இருந்திருந்தா.. யார் அவன்.. எங்ககிட்ட சொல்லியிருக்கலாமல… கட்டி வச்சு வெளுத்திருப்போம்..”

எதுவும் பேசாமல் அமைதியாக அழுது கொண்டிருந்தாள். என்ன சொல்லுவாள்.. அனிவர்த்.. அவன் தெளிவாக தான் இருந்தான். விருப்பம் உள்ள வரை தான் இந்த உறவு.. இதில் காதல் கல்யாணம் என்ற பேச்சிற்கு இடமில்லை இதை சொல்லி தானே… அவன் உறவுக்கு அழைத்தான். கடைசி வரை அவன் முடிவில் அவன் உறுதியாக தானே இருந்தான்.

அவன் மேல் உள்ள காதல் பித்தில் அவனோடு பழகியது நான் தானே.. தன் மேல் அவன் காட்டும் அதீத ஆர்வம்.. நாளடைவில் தன்னை இழக்க விரும்பாமல் கல்யாணம் செய்து கொள்வான் என நினைத்தது எல்லாம் தன் தவறு தானே.. இதில் எங்கிருந்து அவனை சொல்லமுடியும். அதுவும் அவன் சொன்னதும்.. அதையும் ஏற்று கொண்டு தான் பழகியது தெரிந்தால் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என மிகவும் பயந்தாள்.

குழந்தை என கேட்டதும் அதிர்ந்தவள்.. முதலில் எப்படி எடுத்து கொள்வது என அவளுக்கு தெரியவில்லை. தன் காதலின் கிறுக்குதனத்தின் உச்சம் தான் இந்த குழந்தை அப்படி தான் அவளால் நினைக்க முடிந்தது. அவனை எப்படி இதில் பொறுப்பாக்க முடியும். அவன் கண்டிசன்களுக்கு எல்லாம் கட்டுப்பட்டு தானே அவனுக்கு இணங்கினேன்.. அப்போ பிள்ளைக்கும் நான் தானே பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

என்ன ஆனாலும் அது என் குழந்தை.. என் உதிரத்தில் உதித்தது… என் குழந்தை.. என் காதலுக்கு கிடைத்த அன்பு பரிசு.. நான் காதலித்தேன் என் காதலில் விளைந்த முத்து…என் காதலின் சின்னம் என நினைக்க.. நினைக்க… அவளுள் தாய்மை பெருகி உவகை கொண்டது. எனக்கு மட்டுமே குழந்தை.. இந்த குழந்தை போதும் என் வாழ்க்கைக்கு… என குழந்தையை வாழ்வாதரமாக பற்றி கொண்டாள்.

எந்நேரமும் எதோ யோசனையில் இருக்கும் மகளிடம் கௌசல்யா என்ன கேட்டும் பதிலில்லை. இரண்டு நாட்கள் இவர்களாக சொல்வார்கள் என காத்திருந்த குடும்பத்தினர் ஒன்றும் சொல்லாமல் இருக்கவே.. காலையிலேயே வந்து.. விசாரணையை ஆரம்பித்துவிட்டனர்.

அவள் எதுவும் பேசாமல் இருக்கவும்.. எல்லோருக்கும் கோபம் வந்தது. சுந்தரமூர்த்தியோ..

“குமரா.. உன் பொண்ணு உங்ககிட்டயாவது ஏதாவது சொன்னாளா…” திருகுமரனைப் பார்க்க…

அவருக்கே தெரியாததை அவர் என்ன என்று சொல்வார். இல்லை எனும் விதமாக தலையை ஆட்டினார்.

ஆடிட்டிங் படித்து கவர்மெண்ட் வேலை தேடிக் கொண்டதோடு தங்கள் குடும்ப தொழிலுக்கும் ஆடிட்டிங் செய்யும் தன் சித்தப்பாவின் மேல் எப்போதும் தனி மதிப்பு உண்டு சரணுக்கு… எல்லோர் முன்பும் அவர் தலை குனிந்து நிற்பதை பாரத்தவனுக்கு தேவர்ஷியின் மேல் கோபம் அதிகமானது. கோபத்தில் தேவர்ஷியை ஓங்கி ஒரு அறைவிட்டான்.

சரண் அடிப்பான் என யாரும் எதிர்பார்க்கவில்லை.. வீட்டின் முதல் பெண் வாரிசு அதுவும் இரண்டு தலைமுறையாக பெண் வாரிசு இல்லாமல் பிறந்தவள்.. என அவள் மேல் எல்லோருக்கும் பாசம் தான். அவளிள் துடுக்குத்தனமும்… அசட்டு தனமும் தான் அவர்களுக்கு பிடிக்காமல் போனது.

“டேய் சரண் வேண்டாம்..” கண்ணன் வந்து தடுத்தார்.

“அது என்ன பழக்கம் .. பொம்பள புள்ளைங்க மேல கை வைக்கிற பழக்கம்..” என மீனாட்சி மகனை கண்டிக்க…

என்ன தான் மகள் தவறு செய்திருந்தாலும் தாயாக கௌசல்யாவின் மனம் துடித்து தான் போனது. புடவை தலைப்பால் வாயை மூடிக் கொண்டு அழுதார்.

திருகுமரன் என்ன சொல்லுவார்.. அவருக்கு மகள் தேவதை..கள்ள கபடமில்லா குழந்தை…என நினைத்திருக்க… மகள் எவ்வளவு பெரிய தப்பை மறைத்திருக்கிறாள் என அறிந்த நொடி ஒரு தகப்பனாக மரித்து போனார்.

“பின்னே என்ன சித்தப்பா… குமரன் சித்தப்பாவை பாருங்க.. எப்படி வேதனையோடு நிற்கிறாரு.. எல்லாம் இவளால தான.. இத்தனை பேர் கேட்கிறோமே.. ஏதாவது வாய் திறந்து சொல்றாளா பாருங்க..”

“சரண் வேண்டாம்.. அவளை தொடாத இந்த தரங்கெட்ட நாய தொட்டா நமக்கு தான் அசிங்கம்.. உடம்பு அரிப்பெடுத்து போய் எவன்கிட்டயோ வயித்துல வாங்கிட்டு வந்திருக்கா.. ச்சை.. இந்த …. நாய இனி நம்ம குடும்பத்துல வச்சுக்க முடியாது. இவளுக்கு இந்த வீட்ல இடமில்லை.. கழுத்தை பிடித்து வெளிய தள்ளு…”என சுந்தரமூர்ததி கர்ஜிக்க..

அவர் வீட்டை விட்டு போக சொல்வார் என எதிர்பார்க்காமல் எல்லோரும் அதிர்ந்து நின்றனர். தேவர்ஷியோ கிளம்ப எத்தனிக்க… திருகுமரன் வேகமாக வந்து மகளின் கை பிடித்து தடுத்து நிறுத்தினார். அதற்குள்

“அப்பா.. என்ன இப்படி பேசறிங்க.. போ சொன்னா எங்க போவா அவ..” என கண்ணன் பேச…

“எங்கயோ போகட்டும்.. இவளால நம்ம குடும்ப கௌரவம் போயிடும்.. இந்த தறுதலையால மத்த புள்ளைங்க கெட்டு போயிடும் .. அதனால இவளை துரத்தி விடறது தான் நமக்கு நல்லது..”

அது வரை தவறு தன் மகள் மேல் இருக்க.. தந்தையின் கோபத்திற்கு கட்டுப்பட்டு இருந்தவர்.. தன் மகளை வெளியே அனுப்ப சொல்லவும்… தந்தையை எதிர்த்து நின்றார்.

“அப்பா என் பொண்ண நான் எங்கயும் அனுப்பமாட்டேன். அவ இங்க தான் இருப்பா..”

“அவள இங்க வச்சிருந்தா நம்ம சொந்தங்களுக்கு எல்லாம் தெரிஞ்சிடும்.. எனக்கு ஒரு பேரு… ஒரு மரியாதை இருக்கு.. எனக்கு தான் அவமானம்… இவள எங்கயாவது அனுப்பிடு.. கேட்டா வெளிநாட்ல படிக்கறா.. இல்ல வேல பார்க்கிறா.. சொல்லிக்கலாம்..”

“இல்லப்பா அப்படி பண்ண முடியாது.. என் மக சொல்ற மாதிரிஇருந்தா சொல்லியிருப்பா.. அவளே உள்ளுக்குள்ள என்னத்தையோ போட்டு மறுகிட்டு இருக்கா.. இந்த நிலைல என் பொண்ண என்னால தனியா விடமுடியாது..”

சுந்தரமூர்த்தியோ “குமரா.. அந்த சனியனோட நீயும் போனா என் சொத்துல் ஒரு சல்லி பைசா தரமாட்டேன். இந்த வீடு கூட இன்னும் என் பேர்ல தான் இருக்கு.. அத மறந்திடாத.. உன் பொண்ணு தான் வேணும்னா நீங்களும் இந்த வீட்டை விட்டு போகனும்..” என்றார் ஆவேசமாக..

உடனே சற்றும யோசிக்காமல் மகளுக்காக சட்டென குடும்பம் சொத்து எல்லாவற்றையும் நொடியில் தூக்கி எறிந்தார்.

“தப்பு பண்ணி இருந்தாலும் என் பொண்ண நான் எப்படியோ போனு தெருவுல விடமுடியாது. உங்க பேர் என் பொண்ணால கெட வேண்டாம். நாங்க குடும்பத்தோட வேற ஊருக்கு போயிடறோம்..” என ஒரு தந்தையாக தன மகளை அந்த நிலையிலும் விட்டு கொடுக்கவில்லை.

“அண்ணா.. வேண்டாம்..” என கண்ணனும்..

“என்ன சித்தப்பா..” என சரணும் தடுக்க..

விஸ்வநாதன் தந்தையின் பேச்சை ஆமோதிப்பது போல அமைதியாக இருந்து கொண்டார்.

“இல்ல வேண்டாம்.. அப்பானு நான் இருக்கும் போது என் பொண்ணு அநாதை மாதிரி எங்க போவா.. அவளுக்கு கடைசி வரைக்கும் நான் துணை இருப்பேன்.. ஒரு பத்து நாள் டைம் கொடுங்க.. நாங்க கிளம்பிடறோம்”

கண்ணன் எதோ சொல்ல வர.. எல்லோரையும் பார்த்து கை எடுத்து கும்பிட்டவர்.. மகளையும் மனைவியையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றுவிட்டார்.

சொன்னது போலவே திருகுமரன் டிரான்ஸபர் வாங்கி கொண்டு டெல்லி சென்றுவிட்டனர். பிரவீனின் படிப்புக்காக ஹாஸ்டலில் சேர்க்க பாரக்க.. கண்ணன் கோமதி தம்பதியர் “ நாங்க பார்த்துக்கமாட்டோமா.. எங்களை எதுக்கு தள்ளி வைக்கறிங்க..” என கோபப்பட..

தன் மகளை வேண்டாம் என சொன்ன இடத்தில் மகனை விட்டு வைக்க.. தன்மானம் இடம் கொடுக்காததால்.. மகனை பிடிவாதமாக ஹாஸ்டலில் சேர்த்துவிட்டார்.

பெற்றவர்கள் தன்னிடம் எதுவும் கேட்கவில்லை என்றாலும் தன்னை பார்த்து வருந்துவதை கண்டு தேவர்ஷி பொறுக்க முடியாமல்… தான் முறை தவறி எல்லாம் போகவில்லை. எனக்கு ஒருவரை பிடித்திருந்தது. ரகசிய கல்யாணம் செய்து கொண்டோம். சில நாட்கள் வாழ்ந்தோம். ஒத்துவரவில்லை.. பிரிந்துவிட்டோம்.. என சொல்ல..

திருகுமரன் யார் என சொல்… வேண்டுமானால் நான் பேசி பார்க்கிறேன்.. என கேட்க பிடிவாதமாக மறுத்துவிட்டாள். இனி இதை பற்றி பேசினால் கண்காணாமல் எங்கயாவது போயிடுவேன் என மிரட்ட.. அதன்பின் அதை பற்றி பேசுவதே இல்லை. இருவரும் அமைதியாக மகளை தாங்கி கொண்டனர்.

தேவர்ஷி எதிலும் பிடிப்பு இல்லாமல் இருக்க… அவளை கவனித்துக் கொள்வதே பெரும் பாடாகி போனது. ஷாஷிகா பிறந்து பால்குடி மறக்கும் வரை அமைதியாக இருந்த திருகுமரன் மகளை படிப்பின் பக்கம் திசை திருப்பிவிட்டார்.

தனது பொல்லாத கணவனின் நினைவுகளை மறக்க.. படிப்பில் தன்னை வலுகட்டயமாக துணித்து கொண்டாள். ஏற்கனவே நன்றாக படிக்க கூடியவள் என்பதால் படிப்பு அவள் வசமாகி போக…படித்து அரசு தேர்வும் எழுதி தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் நல்ல பதவியில் வேலை கிடைத்துவிட்டது. அவளுடைய வேலையே அவளுக்கு ஒரு மதிப்பை ஈட்டு தந்திருந்தது.

இந்த ஏழு வருடங்களில் அவள் படிப்பும் பதவியும் அவளுக்கு ஒரு ராஜகம்பீரத்தை கொடுத்து இருந்தது. உறவுகளிடையே தேவர்ஷியின் கணவர் வெளிநாட்டில் இருக்கிறார் என சொல்லி சொல்லி நம்ப வைத்து இருந்தனர்.

சுந்தரமூர்த்தி எந்த பேத்தியை குடும்பத்தின் அவமானசின்னம் என நினைத்தாரோ.. இன்று அந்த பேத்தியின் வேலையும் அவளின் கம்பீரமும் அவரை மாற்றி இருந்தது. வயதின் தள்ளாமையும் அவரின் மாற்றத்திற்கு ஒரு காரணம்.. பேத்தியை சற்றே குடும்பத்திற்குள் அனுமதித்தார் தான். ஆனால் தேவர்ஷி குடும்ப நிகழ்வுகளுக்கோ.. உறவுகளின் விழாவிலோ அதிகம் கலந்துக்கமாட்டாள். எதற்கும் பெற்றோரை அனுப்பிவிடுவாள். அவர்களும் ஷாஷிகாவோடு சென்று வருவர்.

டெல்லியில் இருந்து தேவர்ஷிக்கு கொல்கத்தாவிற்கு மாற்றலாக.. திருகுமரன் விருப்ப ஓய்வு வாங்கி கொண்டார். இன்றும் அவர்கள் தொழிலுக்கு அவர் தான் ஆடிட்டர்.கொல்கத்தாவில் இரண்டு வருடங்கள் இருந்து விட்டு சென்னைக்கு மாற்றலாகி விட.. இப்போ தேவர்ஷி சென்னை வந்து மூன்று மாதங்களாகிவிட்டது.

அவர்கள் வீட்டிற்கே சுந்தரமூர்ததி அழைத்தும் கூட தேவர்ஷி போகாமல் வைராக்கியமாக ஒரு லக்ஸரி ப்ளாட் வாங்கி குடியேறிவிட்டாள். இப்பவும் தேவர்ஷியோடே இருந்து கொண்டனர் அவளின் பெற்றவர்களும் பிரவீனும்…

சென்னை வர அவளுக்கு இஷ்டமில்லை தான். அவளின் காதல் குளத்தின் அடியில் தங்க விட்ட பாசியாக.. அடிமனதில் தேங்கிவிட்டது. எங்கே அனிவர்த்தை மீண்டும் பார்க்க வேண்டி வந்தால்… மேலெழும்பி அவன் பாதத்தில் தன்னை மண்டியிட்டு முத்தமிட வைத்திடுமோ.. தன்மானம் அடிபட்டுவிடுமோ.. என்ற பயம்

பெற்றவர்களால் முன் போல் சென்னைக்கு அலைய முடியவில்லை. ஷாஷிகாவும் பெற்றவர்களுடன் சென்று வந்ததில் அவளும் உறவுகளை தேட…. அதிலும் அந்த புத்திசாலி குழந்தை கேட்கும் கேள்விகளில் அவளின் தந்தையின் தேடலை கண்டு கொண்டவளுக்கு இன்னும் இன்னும் பயம் மகளும் தந்தையும் சந்திக்க கூடாது என…

அதை எல்லாம் விட ஒரு வலி அவள் மனதில் முணுமுணுவென.. அவனின் நினைவு பெட்டகத்தில் எந்த இடத்திலும் என் காலசுவடிகள் இருக்காதே.. எனக்கு பின் எத்தனை எத்தனை தேனீக்கள் தேனடையை நாடி.. என் மனம் தான் தூக்கி சுமந்து கொண்டு பாரம் தாங்காமல் கனத்து போய் கிடக்கிறதோ…

எதை எல்லாம் நினைத்து பயந்தாலோ.. இதோ கண் முன் நடந்து கொண்டிருக்கிறது. இருவருக்கும் எப்படி பழக்கம்.. மகள் என அறிந்து வந்தானோ.. இல்லை தெரியாமல் தேடி வந்தானோ.. மேலும் என்ன நடக்கும்.. அவனுக்கு மகள் தேவை படாமல் போகலாம்… ஆனால் தந்தையை போலவே பிடிவாத குணம் கொண்ட மகள் தந்தை என தெரிந்தால் விடமாட்டாள். தன் காதலையும் மகளையும் நினைத்து விடிய விடிய தூக்கத்தை தொலைத்தாள் தேவர்ஷி..

அனிவர்த்தோ மனதில் ஆழத்தில் பதிந்துவிட்ட அவளோடு நடந்த வில்விழா காலங்களை அடி கரும்பின் தித்திப்போடு அசை போட… நாட்டம் குறைந்திருந்த இளமை தேடல்கள் எல்லாம் வீறு கொண்டு காம கணைகளை செலுத்த தயாராக தன் மனையாளை மாற்றான் மனைவியாக நினைத்து அடக்க இயலாமல் போராடிக் கொண்டிருந்தான்…

தேவர்ஷி தள்ளி வைக்க நினைக்க.. அனிவர்த்தோ அவளால் தட்டி எழுப்ப பட்ட உணர்வுகளோடு போராட.. தாய் தந்தையை இணைக்கும் முல்லை மொட்டோ அமைதியாக உறங்கி கொண்டிருந்தது.

25 – ஆடி அசைந்து வரும் தென்றல் Read More »

D93D4BE8-8DB9-43D0-B408-739324BF6B66

24 – ஆடி அசைந்து வரும் தென்றல்

4 – ஆடி அசைந்து வரிம் தென்றல்

எப்படியோ வீடுவந்து சேர்ந்துவிட்டாள் தேவர்ஷி.. அவளை பாரத்ததும் உடன்பிறப்புகள் பயந்து போயினர். அழுகை அவமானம் கோபம் ஆங்காரம் என கலவையான உணர்வுகளால் அலைகழிக்கப்பட்டு தளர்ந்த நடையுடன் வந்தவளை கண்டு… “என்னாச்சு.. ஏன் இப்படி இருக்க…” இளையவர்கள் கேட்க…

சரண் மட்டும் அமைதியாக.. ஆனால் ஆழ்ந்து பார்த்திருந்தான். அவன் உள்மனம் சொல்லியது ஏதோ சரியில்லை என்று… “அவளை விடுங்க.. தேவா போய் ரெஸட் எடு.. ஈவ்னிங் பேசிக்கலாம்..” அவர்களிடம் என்ன சொல்வது என தெரியாமல்… அதைவிட தன் செயலை எப்படி சொல்வது என பயந்தவள் விட்டால் போதும் என தங்கள் வீட்டிற்கு சென்று தன் அறையில் சென்று படுத்தவளுக்கு ஒரே அழுகை..

அழுது கொண்டே இருந்தால்.. சோர்ந்து போய் தன்னை மறந்து தூங்கும் வரை..மதிய உணவுக்கு ஸ்வாதி வந்து பார்க்க… தேவர்ஷி நன்றாக உறங்கி கொண்டு இருந்தாள். அழுது ஓய்ந்து போனதால் நல்ல உறக்கத்தில் இருந்தாள். ஸ்வாதியும் எழுப்பி பார்த்தாள். எழுந்திருக்கவில்லை எனவும் விட்டுவிட்டாள்.

பெரியவர்கள் இரவு உணவிற்கு வீட்டிற்கு வந்துவிட… சரணிடம் தெரிவித்திருக்க.. அவனும் சமையலாளிடம் செய்ய சொல்லியிருந்தான்.

பெண்கள் பரிமாற.. ஆண்களும் பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர். எப்பாவது பண்டிகை விசேச நாட்களில் விஸ்வநாதன் வீட்டில் ஒன்று கூடுவர் தான்.அன்று விருந்து அமர்களப்படும்.

கௌசல்யா வந்தவுடன் மகளை காணாது கேட்க.. சரண். “அவ ப்ரண்டுக்கு பீவர்னு ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போனா சித்தி.. வரும் போதே ரொம்ப டயர்டா வந்தா.. அப்ப போய்படுத்தவ தான்.. இன்னும் எந்திரிக்கவே இல்ல. லஞ்ச்கு ஸ்வாதி போய் எழுப்பியும் எந்திரிக்கல சித்தி..”

“என்ன சொல்ற சரண்.. சாப்பிடாம தூங்கறாளா.. இவளுக்கும் காய்ச்சல் வந்திடுச்சா.. பாரத்திங்களா.. டேப்லெட் எதாவது குடுத்திங்களா..”

“பீவர்லாம் இல்லை சித்தி..”

”ஆமாம் பெரியம்மா.. நான் எழுப்பும் போது அக்கா உடம்புல சூடு இல்ல..” “இருங்க நான் போய் பார்த்திட்டு வரேன்..” என கௌசல்யா கிளம்ப.

“கௌசல்யா.. தூங்கிட்டு தான இருக்கா.. சாப்பிட்டு அவளுக்கும் எடுத்திட்டு போ..” சுந்தரமூர்த்தி சொல்ல்…

மகளை பார்க்க உடனே கிளம்ப பார்க்க.. சுந்தரமூர்த்தி சாப்பிட்டு தேவர்ஷிக்கும் எடுத்திட்டு போக சொல்லிவிட…

கௌசல்யாவிற்கு இருப்பு கொள்ளவில்லை. மாமனார் பேச்சையும் மீற முடியவில்லை. சிட்டுகுருவி போல ஒரு இடம் அமராமல் சுற்றி திரிபவள் பகல் போய் இரவு வந்தது கூட தெரியாமல் தூங்குகிறாள் என்றதும் மனம் பதறியது.

திருகுமரனைப் பார்க்க அவருக்கும் மகளை நினைத்து கவலை தான்.. இருந்த போதும் தந்தை சொன்ன பிறகு அவர் பேச்சை மீறினால் அதற்கும் ஏதாவது பேசுவார். எனவே மனைவியை கண்களால் சமாதானம் செய்தார்.

ஏதோ கொஞ்ம் சாப்பிட்டு விட்டு மகளுக்கும் எடுத்துக் கொண்டு தங்கள் வீட்டிற்கு ஓடினார்.

கௌசல்யா தேவர்ஷியை எழுப்ப.. அவளால் கண்களை பிரிக்க கூட முடியவில்லை. தொடர்ந்து அழுதது நீண்ட நேர தூக்கம் என முகம் வீங்கி சிவந்து போய்… கண்கள் தடித்து… பார்க்க பயமுறுத்தினாள். கௌசல்யா மகளை கண்டதும் கலங்கிவிட்டார்.

“தேவாம்மா.. என்னடா ஆச்சு.. ஏன் இப்படி இருக்க..” ஒன்றும் சொல்லாமல் தாயை கட்டி கொண்டு ஓவென ஒரே அழுகை..

.கொஞ்ச நேரம் தலை கோதி கொடுத்தவர்.. வற்புறுத்தி இரண்டு இட்லிகளை சாப்பிட வைத்தார். திருகுமரன் மகளை பார்க்க வந்தார். அவருக்கும் மகளை பார்த்தும் பதைபதைப்பு.. “தேவாம்மா என்ன ஆச்சு..” என கேட்க…

தந்தையை பார்த்ததும் மீண்டும் அழுக ஆரம்பித்தாள். மகளின் அழுகையில் துடித்து போனவர்… “அழுகாத பாப்பா.. எதுனாலும் காலையில் பேசிக்கலாம்..” மகளின் கண்களை துடைத்து விட்டவர்…

“கௌசி.. இன்னைக்கு பாப்பா கூடவே படுத்துக்கோ..” “எதுவும் நினைச்சு பயப்படாம தூங்குடா.. அப்பா இருக்கேன்.. எதுனாலும் பார்த்துகலாம் விடு..”என்ன என்று தெரியாமலேயே மகளுக்கு நம்பிக்கை கொடுத்தார்.

கௌசி மகளை அணைத்து கொண்டு படுத்துக் கொள்ள.. தாயின் அணைப்பு சற்று ஆறுதலாக இருந்தது. காலையில் திருகுமரன் தேவர்ஷியிடம் “தேவாம்மா.. இன்னைக்கு லீவ் போட்டுட்டு ரெஸ்ட் எடுடா..”. என்க.

தேவர்ஷியோ தயங்கிவாறே.. “இல்லப்பா நான் ரிசைன் பண்ணிடலாம்னு இருக்கேன்… எனக்கு வேலைக்கு போக பிடிக்கல…” மகளை ஒரு நிமிடம் அமைதியாக பார்த்தவர்…

“உன் இஷ்டம் பாப்பா.. நீ வேலைக்கு போய்தான் இங்க நிறையனும்னு ஒன்னும் இல்ல.. உன்னை வருத்திக்காம வீட்லயே ஜாலியா இரு..”

தன் அறைக்கு வந்தவள் அனிவர்த்துக்கு ரெசிகனேஷன் மெயில் அனுப்பினாள். அப்போதும் அழுகை வர பார்க்க… போதும் இந்த கண்ணீருக்கு கூட அவன் தகுதியில்லாதவன் என கண்களை அழுந்த துடைத்து கொண்டாள்.

அனிவர்த் தன் அறைக்கு வந்தவுடன் தேவர்ஷியின் கேபினை தான் பார்ததான்.

. வெற்றிடமாக இருக்கவும் கோபம் துளிர்த்தது.அவள் வந்திடமாட்டாளா.. நான் பேசியது எல்லாம் தப்புதான் வர்தா.. மன்னிச்சிடுங்க..என கேட்டு தன் முன் நிற்கமாட்டாளா.. என ரொம்ப எதிர்பார்த்து வந்தான்.

அவள் அனிவர்த்திடம் சண்டை போட்டு விட்டு அந்த பங்களாவில் இருந்து போன பிறகு.. அனிவர்த்திற்கு எல்லை கடந்த ஆத்திரம் கோபம் ஆங்காரம் எல்லாம்… எவ்வளவு ஆசையோடு அவளிடம் சரசமாட வந்தான். பார்த்ததும் கட்டி கொண்டு முத்தமிட்டு முத்தமிட்டே கிறங்க வைப்பாள்.. என்ற அவனின் எதிர்பார்ப்பு எல்லாம் காற்றுபட்ட நீர்குமிழியாக உடைந்து போனது. அவள் போனதும் அவள் கொளுத்திய வெப்பம் தணியாமல் வாட்ட…அங்கிருக்க பிடிக்காமல் பப்பிற்கு சென்றான். தனதுவிருப்பமான ட்ரிங்கை வாங்கி சிப் சிப்பாக உள்ள இறக்கி தன் கோபத்தை எல்லாம் தணித்து கொள்ள முயன்று கொண்டிருந்தான்.

அல்டாப்பு ராணி ஒருத்தி அவன் தேவையை பூர்த்தி செய்து தன் தேவையை நிறைவேற்றி கொள்ள வந்தாள். இருவரும் இடம் பார்த்து ஒதுங்கினர். ஏனோ அந்த உறவு அவனை சாந்தப்படுத்தவில்லை. மாறாக தகிக்க வைத்தது..

அவனின் தகிப்பு தவிப்பு தாபம்எல்லாம் அவள் ஒருத்தியிடம் மட்டுமே அடங்கும் என உணரும் காலம் வெகு தொலைவில் இருக்கும் போது எப்படி உணரமுடியும்.

மனதில் காதல் தளும்ப உரிமையோடு உறவை கொடுத்தவளின் சுகத்திற்கு ஈடாகுமா… உடல் வேட்கையை மட்டும் தீர்த்து கொள்ள வருபவளிடம் கிட்டும் சுகம்..

வண்ணம் பூசிய கிளி எல்லாம் பஞ்சவர்ணகிளி ஆகிவிடுமா என்ன..

இன்னும் அவனை எரிச்சல் படுத்த… அத்தனைக்கும் அவன் மனம் அவளையே குற்றம் சாற்றி நின்றது.அவளின் மெயிலை பாரத்தவனுக்கு தன் தவறை உணராத ஆணவ புத்தி ‘என்ன ஆட்டம் காட்டறாளா.. இந்த சால்ஜாப்புக்கு எல்லாம் நான் பயப்படுவேனா.. பார்க்கறேன் எவ்வளவு தூரம் போகறேனு.. இந்த உலகத்துலேயே நீ ஒருத்தி தான் பொண்ணா.. போடி..’ இப்படி தான் நினைத்தது.

தேவர்ஷியால் அனிவர்த்தின் வார்த்தைகளை ஜீரணிக்க முடியவில்லை. தன்னை பார்த்து இப்படி சொல்லிவிட்டானே… இத்தனை நாள் பழகியும் தன்னை புரிந்து கொள்ளவில்லையே.. நான் என்ன இவனின் பணத்துக்காகவா இவன் பின்னால் போனேன்..எப்படி பேசிவிட்டான். வேசி என சொல்லாமல் சொல்லிவிட்டானே.. நான் வேசியா.. நான் அப்படி பட்ட பொண்ணா நினைக்க… நினைக்க.. உடல் எல்லாம் காந்தியது. நிற்காமல் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது.

இரண்டு நாட்களாக சரியாக உண்ணாமல்.. வெறித்த பார்வையுடன் எதையோ மனதில் நினைத்து மறுகி கொண்டு அறைக்குள்ளயே முடங்கி கிடக்கும் மகளை கண்டு பயந்து போய் மந்திரித்து தாயத்து கட்டி கூட்டி வந்தார் கௌசல்யா.

அப்பவும் அவள் தன் அம்மாவிடம் எதுவும் சொல்லவில்லை. சொல்ல மனம் கூசியது.. தன்னை போல உண்மையான அன்போடு பழகவில்லையா.. தன் உடல் இச்சைக்காக தான் பழகினானா…அதான் கல்யாணம் பண்ணிக்கலாம் என கேட்டதும் தட்டி எறிந்துவிட்டானா.. நான் தான் இவனை நம்பி ஏமாந்து போயிட்டேனா.. காதலை காதலாக உணராமல் காமமாக உணர்ச்சியின் பிடியில் நின்றுவிட்டானா.. எந்த இடத்திலும் எந்த நிலையிலும் என் காதலை ஒரு நொடி கூட உணரவில்லையா.. என தன்னிலேயே உழன்று தன்னையே வருத்திக் கொண்டாள்.

ரோஜா இதழ்களால் இதயத்தை வருடியவனே.. ரோஜா முட்களால் கீறியும் விட்டுவிட்டான். ஊமையாக இரத்தம் சிந்துகிறது… அவளை பார்த்து என்ன என தெரியாமல் குடும்பமும் தவித்து நின்றது. என்ன கேட்டும் வாயே திறக்கவில்லை. நேரத்திற்கு உண்ணவில்லை.. உறங்கவில்லை… துஷ்யந்தன் புறக்கணித்த சகுந்தலையின் நியூ வெர்சனாகி போனாள்.

இப்படியே ஒரு வாரம் கடந்த நிலையில் ஒருநாள் நண்பகல் வேளையில் மயங்கி விழுந்தாள். குளித்து விட்டு பாத்ரூமில் இருந்து வெளியே வந்தவள் மயங்கி விழுக… சத்தம் கேட்டு வந்த கௌசல்யா மகளின் நிலையைபார்தது பயந்து அழுது திருகுமரனுக்கு அழைத்தார். அவரும் பதறி வந்து மகளை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர்.

அதற்குள் தேவர்ஷியின் பெரியப்பா சித்தப்பா குடும்பத்திற்கும் தெரிந்துவிட.. அவர்களும் வந்துவிட்டனர். டாக்டர் பரிசோதித்து விட்டு அதிக மன அழுத்தம் தான் மயக்கத்திற்கு காரணம் என சொல்ல.. இந்த வயதில் மன அழுத்தம் கொள்ள என்ன என்று தெரியாமல் கலங்கி போயினர். அதற்குள்இரத்தபரிசோதனை முடிவுகளும் வந்துவிட.. பார்த்த டாக்டரே அதிர்ந்து போனார். குடும்ப டாக்டர் என்பதால் அவர்கள் குடும்ப விவரம் தெரியும் என்பதால்.. என்ன இது..என.. பெரிவர்களை அழைத்து சொல்லியும் விட்டார்.

நம்பமுடியாமல் அதிர்ச்சியாக இருந்தது. கௌசல்யா மனம் ஒடிந்து போய் அழுக.. திருகுமரனுக்கோ ஒரு சின்ன விசயத்தை கூட மறைக்காமல் தன்னிடம் சொல்லும் மகள் இவ்வளவு பெரிய விசயத்தை மறைத்துவிட்டாளே.. இன்று செய்திகளில் எல்லாம் வருவது போல மகளுக்கு ஏதேனும் கொடுமை நடந்துவிட்டதா.. தன் அப்பாவி பெண்ணை எவனாவது ஆசை வார்த்தை பேசி கெடுத்துவிட்டானா.. என பல சிந்தனைகள் ஓட மிகவும் கலங்கி போனார்.

சுந்தரமூர்த்திக்கு குடும்ப கௌரவத்தை கெடுத்துவிட்டாளே… என தாங்க முடியாத கோபம்.

“குமரா.. உன் பெண்ணை அடக்கி வைனு எவ்வளவு தூரம் சொன்னேன்… என் பேச்சை கேட்டியா… உன் பொண்ணால நான் இத்தனை நாளா காப்பாத்தி வந்த குடும்ப கௌரவமே போச்சு..” என சத்தமிட ..

சரண் “தாத்தா.. இங்க எதுவும் பேச வேண்டாம் வீட்டுக்கு போய் பேசிக்கலாம்.. “ என சொல்லவும் தன்னை முயன்று அடக்கி கொண்டார். சரணுக்கும் கோபம் தான் எப்பவும் தேவர்ஷியை பிடிக்காது. அவனை பொறுத்தவரை பொறுப்பில்லாதவள்.. இப்பவும் பொறுப்பில்லாமல் குடும்ப பேரை கெடுத்துவிட்டாள் என அவனுக்கும் ஆத்திரம் தான்.

தூங்குவதற்கு மருந்திட்டு இருக்க.. அடுத்த நாள் காலையில் தான் கண்விழித்தாள் தேவர்ஷி. பெற்றவர்களை தவிர மற்றவர்கள் யாரும் இல்லை. தேவர்ஷி கண்விழித்ததும் கௌசல்யா அழுது கொண்டே…

“யாராவது உன்கிட்ட தப்பா.. உனக்கு பிடிக்காம மிரட்டி.. கட்டாயபடுத்தி ஏதாவது செஞ்சிட்டாங்களா..” எங்கே மகளை கற்பழித்துவிட்டார்களோ என பயத்தில் பதட்டத்துடன் கேட்டார்.

மனைவி கேட்கவும் திருமரனுக்கும் நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது

. “அப்படி எல்லாம் இல்லம்மா..”என்றாள் இன்னும் ஒன்றும் தெரியாமல் அப்பாவியாக….

“அப்போ… யாரையாவது லவ் பண்ணனியா..உன் விருப்பத்த சொல்லியிருந்தா.. நாங்க வேண்டாம்னா சொல்ல போறோம்.. ஏன்இப்படி பண்ணின…” என் கோபம் கொண்டு அடிக்க..

அனிவர்த் கூட பழகியது தெரிஞ்சிடுச்சா… எங்கே எல்லாம் தெரிஞ்சிடுச்சா.. என விழித்தாள்.

“கௌசி.. பொறுமையா விசாரி..” என்றார் திருகுமரன் ஒரு ஒட்டாத தன்மையுடன்..

எப்பவும் அடிக்காத தாய் தன்னை அடிக்கவும் அதிலேயே பயந்து போயிருந்தவள்…

தனக்கு எதாவது என்றால் தாயை விட அதிகம் துடித்துப் போகும் தந்தை கிட்ட கூட வரவில்லை.. அவருடைய முகத்தில் ஒரு அந்நியதன்மை தெரியவும்… துடித்து போனாள்.

“என்னத்த விசாரிக்க சொல்லறிங்க… புள்ளய வயித்துல வாங்கிட்டு வந்திருக்கா.. அந்த கேவலத்த என்னனு கேட்க சொல்லறிங்க…

” என்னது வயித்துல புள்ளயா… என அதிர்ந்தாள். அழுவதா… சந்தோஷப்படுவதா.. என்ன செய்வது என அவளுக்கே தெரியவில்லை.

தேவர்ஷி என்ன செய்யப் போகிறாளோ????

24 – ஆடி அசைந்து வரும் தென்றல் Read More »

A511270F-A463-4FBA-84E8-9FCE76C1E266

23 – ஆடி அசைந்து வரும் தென்றல்

23 – ஆடி அசைந்து வரும் தென்றல்

அவனிடம் வருகிறேன் சொன்ன நாளில் இருந்தே அவளுள் பல சிந்தனைகள்… பல குழப்பங்கள்…

எத்தனை நாளைக்கு இப்படி இருக்க முடியும். இவனையும் வீட்டையும் சமாளிக்க முடியாமல் திணறினாள்.பெற்றவர்களுக்கு தெரியாமல் தப்பு செய்கிறோம் என்ற குற்றவுணர்வு அவளை அரித்து கொண்டிருந்தது. கண்டிப்பாக இதற்கு எதாவது செய்யவேண்டும் என நினைத்தாள். என்ன செய்ய.. யோசித்தவளுக்கு கல்யாணம் தான் தீர்வு. அவனிடம் பேச வேண்டும். அவனின் கொள்கைக்கு எதிரானது தான். சாமனியத்தில் ஒப்புக் கொள்ள மாட்டான் தான். ஒருவேளை தன்னை போல அவனுக்கும் தன் மேல அதீத அன்பு இருந்தால்.. அந்த அன்பு அவனை சம்மதிக்க வைக்கலாம் என நம்பினாள். அதனால் அவனிடம் இதை பற்றி பேசலாம் என முடிவு செய்தாள். அதுவும் அவன் கோபம் கொள்ளாதவாறு பொறுமையாக பேச வேண்டும் என நினைத்து பல முறை தனக்குள் ஒத்திகை பார்த்து கொண்டாள். பாவம் பாவை இந்த பேச்சே தங்கள் பிரிவுக்கு வழி வகுக்கும் என அறியவில்லை.

தேவர்ஷி வீட்டில் நெருங்கிய உறவில் திருமணம் தங்கள் கிராமத்தில் என்று இளையவர்களை மட்டும் விட்டுட்டு பெரியவர்கள அனைவரும் கிளம்பினர். முகூர்த்தம் முடித்து விட்டு அங்குள்ள தங்கள் விவசாய நிலங்களின் வேலைகளை மேற்பார்வை பார்த்து விட்டு ஞாயிறு இரவு வருவதாக சொல்லி சென்றனர்.

விஸ்வநாதன் மீனாட்சி தம்பதியருக்கு ஒரே மகன் சரண் மட்டுமே.. முதல் வாரிசு.. அதுவும் ஆண் வாரிசு.. சுந்தரமூர்த்தியின் செல்ல பேரன்.. பட்டத்து இளவரசன் அந்த குடும்பத்திற்கு… அவனுக்கும் தேவர்ஷிக்கும் எப்பவும் ஏழாம் பொருத்தம் தான்…அவனின் பொறுப்பில் தான் இளையவர்களை விட்டுச் சென்றார்கள்.

திருகுமரன் கௌசல்யாவிற்கு தேவர்ஷி அவள் தம்பி பிரவீன்.. கண்ணன் கோமதிக்கு ராகுல் அடுத்து ஸ்வாதி…

சரண் தாத்தாவின் வளர்ப்பு. அவரை போலவே குடும்ப கௌரவம்.. குடும்ப பாரம்பரியம் என அதிகம் பார்ப்பான். அவனின் பேச்சு செயல் எல்லாம் அதை ஒட்டியே இருக்கும். தேவர்ஷி பாஷையில் பட்டத்து இளவரசன் பாகுபலி..

சரணின் பொறுப்பில் விட்டுச் சென்றிருக்க.. அவனிடம் என்ன சொல்லி செல்வது என்ற யோசித்தாள்.

சுந்தரமூர்த்தி மூன்று மகன்களுக்கும் ஒரே காம்பவுண்டிற்குள் அடுத்தடுத்து மூன்று பங்களா கட்டி கொடுத்திருந்தார். சரணும் எல்லாரும் ஒரே இடத்தில் இருங்கள் என தங்கள் வீட்டிற்கு கூட்டிட்டு வந்து விட்டுட்டு தன் வேலைகளை பார்க்க சென்றான். ஞாயிறு காலையில் இருந்தே சரண் வீட்டிலேயே இருக்க… தேவர்ஷிக்கு தான் என்ன செய்ய என்று தெரியவில்லை.

ஒன்பது மணி அளவில் அனிவரத் போன் செய்துவிட்டான். எல்லோரும் இருக்க இவளால் தான் அவனிடம் பேச முடியவில்லை. ஒரு பத்து நிமிடம் பொறுத்தவன் மீண்டும் அழைக்க.. இவள் எடுக்காமல் போகவும் விடாமல் தொடர்ந்து அழைக்க ஆரம்பித்துவிட்டான்.

போன் அடித்துக் கொண்டே இருக்க.. இவள் எடுக்காமல் இருக்கவும் இவளை எல்லோரும் ஒரு மாதிரி பார்க்கவும்…

சரண்”யாரு.. என்னனு தான் எடுத்து பேசேன்..”

“இல்ல.. என் ப்ரண்ட் தான்..”

“ப்ரண்ட் தான எடுத்து பேசறதுக்கு என்ன..” அவளை சந்தேகமாக பார்த்தான்.

போன் மறுபடியும் ஒலிக்க… தேவர்ஷி போனை எடுத்து கொண்டு வெளியே சென்றாள். அழைப்பை ஏற்றதும் அனிவர்த் பொரிந்து தள்ளினான்.

“எத்தனை தடவை கால் பண்ணறது… ஏன் அட்டென்ட் பண்ணல..”

“இல்ல போன் சைலண்ட் மோட்ல இருந்திருக்கு நான் பார்க்கல..” சின்ன குரலில்

“கிளம்பிட்டயா?… நான் இந்த மெயின் ரோட்ல இருக்கேன்..”

“இல்ல.. இனி தான் கிளம்பி வரனும்..”

“வாட்… இன்னும் வரலையா..”

“சாரி.. சாரி இதோ கிளம்பிட்டேன்” என்று சொல்லிவிட்டு உள்ளே ஓடினாள்.

அவளின் பதட்டத்துடன் வருவதை பாரத்து எல்லோரும் அவளை என்ன எனபதாக பார்க்க..

“இல்லை என் ப்ரண்ட்க்கு பீவர் அவ பேரண்ட்ஸ் திருப்பதி போயிட்டாங்களாம்.. அவள ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போகனுமாம்.. என்னை கூப்பிடறா…”

சரண்”உன் வண்டில போறியா.. எப்படி போற..”

“இல்லை நாம வழக்கமா போற ஆட்டோல போயிக்கிறேன்..”

“இரு பிரவீன கொண்டு வந்து விட சொல்றேன்..”

‘இவன் ஒருத்தன் கேள்வியா கேட்டு கொல்றானே… அங்க ஒருத்தன் மலையேறிட்டான் அவனை எப்படி சரிகட்டப் போறனோ தெரியல..’

“இல்லை அவளுக்கு பீவர் ஹையா இருக்காம்.. ஆட்டோல தான் கூட்டிட்டு போகனும்..” என சொல்லிட்டு எங்கே நின்றால் இன்னும் கேட்பானோ.. என நினைத்து வேகமாக கிளம்பிவிட்டாள்.

எத்தனை பொய்கள்.. எத்தனை சமாளிப்புகள்.. எத்தனை நாளைக்கு என ஆயாசமாக இருந்தது.

வியர்வையில் நனைந்து வேகமாக வந்து காரில் ஏறியவளை முறைத்துப் பாரத்தான். அச்சோ நாம் பேசப் போகும் விசயத்திற்கு இவன் இவ்வளவு கோபமாக இருந்தால் ஆகாதே.. என விசனப்பட்டாள்.

“வர்தா.. சாரி..”

“இப்ப எல்லாம் என் கூட வரதுல உனக்கு அவ்வளவு இன்டரஸ்ட் இல்ல போல..”

“அப்படி எல்லாம் இல்ல.. வீட்டில ஸ்டிரிக்ட்.. அதான்..”

“அது உன் ப்ராப்ளம்..நான் ஒன்னும் உன்னை கட்டாயப்படுத்தியோ ஏமாத்தியோ கூட்டிட்டு போகலயே.. எல்லாம் கிளீயரா சொல்லிட்டேன்.. நீயும் அதுக்கு ஒத்துகிட்டு தானே வர… ஆனா நீ பண்றது எல்லாம் எனக்கு டென்ஷன் தான் குடுக்குது.. நானே ரிலாக்ஸ் பண்ண தான் வரேன்.. நீ அத ஸ்பாயில் பண்ற மாதிரியே எல்லாம் செய்யற..”

அவனை எப்படி பேசி அவனை சாந்தப்படுத்தி கல்யாணத்தை பற்றி பேசுவது என தெரியாமல் மிகவும் சோரந்து போனாள். முதல் முறையாக எதிர்காலத்தை நினைத்து பயம் வந்தது.

அவனின் குற்றசாட்டில் எதுவும் பேச இயலாமல் அமைதியாகிவிட்டாள்.அதுமட்டுமில்லாமல் கோவத்தில் இருக்கும் சமயத்தில் ஏதாவது பேசி இன்னும் கோபத்தை அதிகப்படுத்த வேண்டாம் என நினைத்து பேசாதிருந்தாள்.

அவனோ ‘ஏதாவது பேசறாளா பாரு.. நாய்குட்டி மாதிரி பின்னாடியே சுத்திகிட்டு இருந்தா.. இப்ப எல்லாம் ரொம்ப அலட்சியம் வந்திருச்சு.. குட்டிம்மா.. வர்ஷிம்மானு குழையற்றேன்ல.. அதான் என்னை அவ பின்னாடி சுத்த வைக்க பார்க்கறாளா.. நான் யாரு அனிவர்த்.. என்னையவா.. நெவர்..’ வெளியில் போறோம் என்று ஒரு சந்தோசம்.. கண்ணில் துளி அன்பு இருக்கா? அவன் மனதில் காய்ந்தான்.. ஓடி கட்டிக்கொண்டு கன்னம் ஈசி முத்தாடுவாள் அவன் எதிர்பார்ப்பு..

காரில் மௌனமே ஆட்சி செய்தது… அவரவர் சிந்தனையில் இருவரும்…

பயணம் ஒரு பங்களா முன்பு போய் முடிய. கேட்டை திறந்து விட்டு பங்களாவின் சாவியை கொடுத்த வாட்சமேன் தேவர்ஷியை பார்த்த பார்வையே இழிவாக இருந்தது. தேவர்ஷிக்கு உடல் கூசி போனது கண்கள் கலங்கி.. மனம் காயப்பட்டு போனது…

உள்ளே சென்றதும் தனியறை செல்லும் பொறுமை கூட அனிவர்த்துக்கு இல்லை. நட்டநடு ஹாலிலேயே அவளை இழுத்து அணைத்தான். தேவர்ஷிக்கோ மூன்று வாரங்கள்… அனிவர்த்தக்கோ நீண்ட நெடிய கொடிய இருபத்தியொரு நாட்கள்… தாபம் தீர்க்கா நாட்கள்… அவனின் ஆசை தேடல் எல்லாம் எல்லை கடந்து கரை உடைக்க துடிக்க… மூன்று வார துடிப்பை எல்லாம் மூர்க்கமாக காட்டினான்.

“வர்தா.. இங்கயேவா.. ப்ளீஸ் நான் கொஞ்சம் உங்ககிட்ட பேசனும்…”

அவளின் சொற்கள் அவனின் காதுகளை தீண்டவே இல்லை. அவளோ முதலில் பேசி தீர்ததுக் கொண்ட பிறகே மற்றது எல்லாம் என்ற முடிவில்…

“வர்தா..நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க.. ப்ளீஸ்…”

அவனின் தோளில் கை வைத்து தள்ள.. அவளிள் கையை இலகுவாக தட்டிவிட்டான். அவள் விலக்க.. அவன் தடுக்க.. அவளின் தடையை எல்லாம் முறுயடித்து முன்னெடுக்க…

தன் பேச்சிற்கும் மறுப்பிற்கும் மதிப்பில்லையா.. என கோபம் கொண்டவள்.. வெறி கொண்டு வேகமாக அவனை தள்ளிவிட்டாள். அவள் தள்ளியதும் அருகில இருந்த ஷோபாவில் விழுந்தான்.

அவனின் தாபங்கள் அறுபட…கோபம் தலைக்கு ஏற.. விழுந்த வேகத்தை விட எழுந்த வேகம் அதிகம்…

“என்னடி திமிரா…” என கையை ஓங்கி கொண்டு வர… அவனின் கோபம் கொண்டு பயந்தவள்…

அடிக்க வந்த கையை பற்றி கண்களில் ஒற்றியவள்.. “ப்ளீஸ்.. எனக்கு கொஞ்சம் பேசனும்..” மன்றாடும் குரலில்..

“சொல்லு” என ஷோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டான்.

“நாம் கல்யாணம் பண்ணிக்கலாமா..” பட்டென கேட்டுவிட்டாள்.

“வாட்.. கல்யாணமா..” என்றான் அதிர்நது போய்..

“ஆமாம்.. நான் உங்களை லவ் பண்றேன்.. உங்களுக்கும் என்னை பிடிச்சிருக்கு.. நாம ஏன் கல்யாணம் பண்ணிக்க கூடாது..”

“பிடிச்சதுக்காக எல்லாம் கல்யாணம் பண்ணிக்க முடியாது.. முதல்ல என்னை கல்யாணம் பண்ணிக்க உனக்கு என்ன தகுதி இருக்கு.. சாதாரண மிடில் கிளாஸ் பேமிலி.. உங்கப்பா சாதாரண ஒரு கவர்மேண்ட் சர்வண்ட்.. என் ஸ்டேட்டஸ் என்ன தெரியுமா.. உன்னோட இன்னோசன்ட்காக தான் உன்னை பிடிச்சது.. ப்ளான் பண்ணி தான் என்னோட பழகுனியா…”

அவன் பேச்சு அவள் மனதை ஆயிரம் முட்கள் கொண்டு கீறியது போல இருந்தது.

“இல்ல.. நான் எந்த ப்ளானும் பண்ணல.. நான் உங்கள உண்மையாவே லவ் பணறேன்.. என்னை நம்புங்க..” கண்களில் நீர் வடிய.. கிட்டதட்ட கெஞ்சினாள்.

“உண்மையா லவ் பண்றவ தான் என் வீக்னஸ யூஸ் பண்ணி கல்யாணம் பண்ணி செட்டிலாயிடலாம்னு நினைப்பாளா..”

பதறி போய் “ஐயோ.. நான் அப்படி எல்லாம் நினைக்கல.. எனக்கு கல்யாணம் பண்ணாமல் உங்களோட இப்படி கண்ட கண்ட இடத்துக்கு எல்லாம் வரதுக்கு ரொம்ப அவமானமா இருக்கு.. “

“ஓஹோ.. என்னோட வரது உனக்கு அவமானமா இருக்கா…” என எகிறினான்.

“இல்லல்ல.. நான் அப்படி சொல்லல்ல.. வீட்டில் பொய் சொல்லிட்டு உங்களோட வரது எனக்கு தப்பு பண்ற மாதிரி குற்றவுணர்ச்சியா இருக்கு..”

“அப்படி குற்றவுணர்வோட.. நீ இனி என்னோட எங்கயும் வரவேண்டாம்.. இதோட எல்லாத்தையும் முடிச்சிக்கலாம்” பட்டென்று உறவை முறித்தான்.

“பட்டுனு இப்படி சொன்னிங்கனா எப்படி… என்னால உங்களை தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது..” அவனின் அருகில் அமர்ந்து அவன் தோளில் சாய்நது கொண்டு அழுதாள்.

“என்ன.. ப்ளாக்மெயில் பண்றியா..”

பதற போய் அவனை நிமிர்ந்து பார்த்து “ அப்படி எல்லாம் இல்லைங்க.. என் மனசுல என்ன இருக்கோ அதை தான் சொன்னேன்..”

“உன் மனசுல என்ன இருக்குனு நான் சொல்லவா.. நல்ல வசதியானவன்… என் வீக்னஸ தெரிஞ்சுகிட்டு அப்பாவி மாதிரி நடிச்சு… எப்படியாவது மயக்கி பின்னாலயே சுத்த விட்டு.. கல்யாணத்துக்கு கேட்டா சரினு தலையாட்டிடுவான்.. அப்படியே லைப்ல செட்டிலாயிடலாம்னு.. ப்ளானோட தான் லவ் அது இதுனு அழுது நடிச்சிட்டு இருக்க..”

தன் காதலை நடிப்பு என்று சொல்லவும் அவளின் உயிர் நாடி வரைக்கும் துடிதுடித்தது. எப்படியாவது அவனுக்கு தன்னை புரிய வைத்திடமாட்டோமா என்ற ஆற்றாமையில் இன்னும் இன்னும் அவனிடம் இறங்கி போனாள்.

“சத்தியமா.. நான் நடிக்கலைங்க.. என்னை நம்புங்க…” காலில் விழாத குறையாக கெஞ்சினாள்.

“நடிப்பு இல்லாம் வேற என்ன.. நான் உன்கிட்ட சொல்லி தானே பழகினேன். நீயும் ஓகேனு தான வந்த… இப்ப அவமானமா நினைக்கறவ அப்பவே மேரேஜ் பண்ணாம ரிலேஷன்ஷிப் வேண்டாம்னு சொல்லியிருக்கலாமே… ஏன் சொல்ல.. ஒரு கார் கூட போக முடியாத ஒரு சின்ன தெருவுல ஒண்டு குடித்தனத்துல் இருக்கற உனக்கு அழகா நல்ல வசதியா இருக்கற என்னை பார்த்தும் என்னை யூஸ் பண்ணி லைப்ல செட்டிலாயிடும்னு தோணியிருக்கு.. அதான் இன்டரவியூவுக்கு வந்த அன்னைக்கே பார்த்தனே என்னை பார்த்து வழிஞ்சத…”

அவன் பேச பேச தன்னையே கேவலமாக ஒரு வேசி போல இப்படி தன்னை நினைத்துவிட்டானே..என இழிவாக உணர்ந்தாள். ஒரு நிமிடத்தில் தான் இன்னார் குடும்பத்து பொண்ணு என சொல்லிவிடலாம். அவள் குடும்ப பெயரே அவள் ஒன்றும் பணத்துக்காக பழகவில்லை என்று சொல்லிவிடும். அதை சொல்லி தான் இவன்கிட்ட வாழ்க்கையை பிச்சையாக கை ஏந்தி வாங்கனுமா… என்னை எனக்காக ஏற்று கொள்ளாதவன் எனக்கும் வேண்டாம் என தீர்மானமாக முடிவு எடுத்தாள். தனது முகத்தை துப்பட்டாவால் அழுந்த துடைத்தவள்..

எழுந்து அவன் முன் நிமிர்வாக நின்றவள்..”இப்ப என்ன தான் சொல்லறிங்க…”

“என்ன மிரட்டி பார்க்கறியா.. உன்னை மேரேஜ் பண்ணிக்க முடியாது..”

அவனை ஒரு நிமிடம் தீர்க்கமாக பார்த்தவள் எதுவும் பேசாமல் வெளியேறினாள்… இவ்வளவு நாள் பழகி புரியாதவனுக்கு பேசியா புரிய வைக்கமுடியும் என…

முடிந்துவிட்டது.. எல்லாம் முடிந்துவிட்டது என இருவரும் முற்றுபுள்ளி வைக்க… இல்லை இன்னும் இருக்கிறது என ஷாஷிகா வடிவில் கடவுள் கமா போட்டதை அறியாமல்…. இரு வேறு திசையில் பயணித்தனர்.

23 – ஆடி அசைந்து வரும் தென்றல் Read More »

5325E123-41FC-4632-BE7B-C29C6926098D

22 – ஆடி அசைந்து வரும் தென்றல்

22 – ஆடி அசைந்து வரும் தென்றல்

அப்படியே இருவரும் உறங்கிவிட…. மதியத்திற்கு மேல் தேவர்ஷி தான் முதலில் கண் விழுத்தாள். சோர்வு பசி… உடல் சக்திக்கு உடனடியாக எதாவது வயி்றுக்கு போட வேண்டும். அனிவர்த்தை எழுப்பினாள்.

“வர்தா… வர்தா…”

தூக்கத்திலேயே புரண்டு அவள் இடையில் கை போட்டு அவளை அணைத்து…

“என்ன பேபி.. அடுத்த இன்னிங்க்ஸ் போலாமா..”

“எனக்கு சாப்பிடனும்..”

நன்றாக கண்விழித்து மணியை பார்த்தான். மணி மூன்று…

டைனிங்கு கால் பண்ணி உணவை ஆர்டர் கொடுத்தான். இருவரும் ப்ரஷாகி வரவும் உணவும் வந்துவிட… ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டு கொண்டு சாப்பிட்டனர். சாப்பிட்டு முடித்ததும் அவன் அடுத்த ஆட்டத்திற்கு தயாராக..

இவளோ..” வர்தா.. வீட்டிற்கு போகனும்..”

“போகலாம் பேபி.. நைட் போகலாம்..”

“இல்லல்ல.. லேட்டா போனா வீட்டுல திட்டுவாங்க.. இப்பவே போகனும்”

“போகலாம் குட்டிம்மா..ஒரு எட்டு மணிக்கு கொண்டு போய் விட்றுவேன்..” என தாடையை பிடித்து கொஞ்ச.. அவன் கையை தட்டி விட்டு…

“ஐயோ.. அவ்வளவு லேட்டாவா… அது எல்லாம் வேண்டாம் இப்பவே போகனும்..”

“சரி.. ஒருஆறு மணி போல போகலாம்..” என்றான் சமாதான படுத்தும் விதமாக..

அவள் எங்கு ஒத்து வந்தாள். அவனும் வித விதமாக தன் வித்தையை காண்பித்து அவளை தன்னோடு இன்னும் சற்று நேரம் இருத்திக் கொள்ள பாரக்க…

அவளோ ஆத்தா வையும் சந்தைக்கு போகனும் காசு கொடு மாடுலேஷன்லயே… வீட்டுக்கு போகனும் என அதையே கீறல் விழுந்த ரெக்கார்ட் போல திரும்ப… திரும்ப படிக்க…

அனவர்த்தால் அவளை சமாளிக்க முடியாமல்…

“கிளம்புடி… இனி எங்கயாவது உன்னை கூப்பிட்டனா பாரு.. எப்ப பாரு வீட்டுல திட்டுவாங்க இதையே சொல்லிகிட்டு.. சரியான பட்டிகாட்டு குடும்பம் போல.. போ.. கிளம்பு..வீட்டுக்கு போய் தின்னுட்டு தூங்க போற..அதுக்கு இத்தனை ரகளை..” என கத்த..

ஒன்றும் பேசாமல் கிளம்பி தயாராக நின்றாள். திட்டியும் கிளம்பி நின்றவளை பார்த்தவனுக்கு கோபம் கட்டுக்கடங்காமல் வர… ஒன்றும் பேசாமல் அவனும் தயாராகி வந்தவன் அவளை அழைத்து கொண்டு கிளம்பிவிட்டான்.

காரில் அமைதி..இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. அவனோ கோபத்தில்.. இவளோ அவனின் கோபத்தை கண்டு பயத்தில்… அவனின் கோபத்தின் அளவை காரின் வேகத்தில் காட்டினான். தேவர்ஷியை வழக்கமாக இறக்கி விடும் இடத்தில் இறக்கி விட்டவன்.. எதுவும் பேசாமல் காரை வேகமாக கிளப்பி கொண்டு சென்றுவிட்டான்.

தேவர்ஷிக்கோ அழுகை வருவது போல இருக்க.. அழுகையை கட்டுப்படுத்தி கொண்டு வீடு வந்தாள். தாயின் கேள்விகளுக்கு எதோ சொல்லிவிட்டு மதியம் சாப்பிட்டதுக்கே பசியில்லை என சொல்லி தனது அறையில் வந்து கதவை அடைத்து தாழிட்டவள்…

அவனுக்கு அழைக்க..அவன் எடுக்கவில்லை. மீண்டும் அழைத்துப் பார்த்தாள். வாட்சப்பில் மெசேஜ் அனுப்ப.. எதற்கும் அவனிடம் பதில் இல்லை. ஒரு கட்டத்தில் அவன் போனை அணைத்து வைத்திருப்பதாக வரவும் சோர்ந்து போய் அழுகையில் கரைய ஆரம்பித்துவிட்டாள்..

அழுகைகள் சலுகைகளாய் இனி நீளுமே!!! அம்மணி… நல்லது நல்லதை தரும்.. அல்லது என்ன தரும்???

அழுதழுது அப்படியே உறங்கிவிட்டாள். காலையில் இமைகளை பிரிக்க முடியவில்லை. கண்கள் சிவந்து இமைகள் தடித்து முகம் வீங்கி பார்க்கவே பரிதாபமக இருந்தாள். எழுந்து குளித்து ஆபிஸ் செல்ல தயாராகி வந்தவளை பாரத்து வீட்டினர் பதறி போயினர்.

கௌசல்யா பதறி போய்”தேவாம்மா.. என்னடா காய்ச்சல் அடிக்குதா..” என கழுத்தை தொட்டுப் பார்ததார். லேசாக கணகணப்பும் இருக்கவே..

“உடம்பு சூடு லேசா இருக்கு.. லீவ் போட்டுட்டு டேப்லெட் சாப்பிட்டு தூங்குடா..”

‘என்னது லீவ் போடறதா.. வர்தாவை பார்ககனுமே.. அவனை சமாதனப்படுத்தனுமே..’

“இல்லம்மா.. இன்னைக்கு முக்கியமான ஒர்க் இருக்கு.. போயே ஆகனும்..”

“தேவா பாப்பா.. அம்மா சொல்லறத கேளு.. உடம்பு முடியாம எப்படி வேலை செய்வ…” மகள் மறுக்கவும் தானும் வற்புறுத்தினார் திருகுமரன்.

“இல்லப்பா.. டேப்லெட் போட்டுகிறேன். ஆபிஸ் போய்தான் ஆகனும்..”

பெற்றவர்கள் என்ன சொல்லியும் கேளாமல் இரண்டு இட்லி சாப்பிட்டு விட்டு ஒரு பேரசிட்டமலையும் விழுங்கி விட்டு அடமாக கிளம்பிவிட்டாள்.

அனிவர்த் அவளுக்கு முன்பு வந்திருக்க… அவனை கண்டதும் ஓடி போய்…

“வர்தா சாரி… “

அவன் இவளை கண்டு கொள்ளாமல்.. காது கேளாதவன் போல தன் வேலையை செய்து கொண்டிருக்க… இவளுக்கு கண்களில் நீர் தேங்கிவிட்டது. அவளும் சிறிது நேரம் நின்று பார்த்தாள். ஒருத்தி நிற்கிறாளே என்று அவன் சிறிதும் இளகவில்லை.

திரும்பி அவனை பார்த்து கொண்டே தனது கேபினுக்கு வந்தவள் வேலை செய்ய முனைய.. வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. அடிக்கடி அவனையே தவிப்போடு பார்தது கொண்டிருந்தாள்.

அவள் பார்க்காத போது அவளை பார்ததிருந்தவன் அவளின் தவிப்பை அறிந்து தான் இருந்தான். கண்கள் முகம் எல்லாம் வீங்கி பார்க்க பாவமாக இருந்த போதும்..

‘உன்னை எல்லாம் இப்படி தாரட்டுல விட்டா தான்டி வழிக்கு வருவ..’ என கறுவிக் கொண்டான்.

மதிய உணவை இருவரும் எப்போதும் சேர்நதே உண்பர். இன்று அவளை அழைக்காமல் தன் பெர்ஷனல் அறைக்கு சென்றுவிட்டான். அவன் கூப்பிடாமல் செல்ல மனம் இடம் கொடுக்கவில்லை. சாப்பிடாமல் டேபிளில் கவிழ்ந்து படுத்துக் கொண்டாள்.

சாப்பிட்டு வந்தவன் அவள் கையில் தலையை தாங்கி படுத்திருப்தை பார்த்தவனுக்கு மனம் இளகியது. அடுத்த நொடி ‘வேண்டாம் இப்ப இவகிட்ட பேசினா.. இவள் நேத்து மாதிரி என் பேச்சை கேட்கமாட்டா.. இவளை கொஞ்சம் பயமுறுத்தி வைக்கனும்..” என நினைத்து அவளை சட்டை செய்யாமல் தனது வேலையில் மூழ்கி போனான்.

அவன் சாப்பிட்டு வந்தும் தன்னை கண்டு கொள்ளாமல் இருக்கவும் அழுகை வந்தது. அழுது கொண்டே அப்படியே தூங்கிவிட்டாள். சிறிது நேரம் கழித்து பார்த்தவன் அவள் தூங்குவதை கண்டு பல்லை கடித்தான்.

‘என்ன ஒரு கொழுப்பு .. கொஞ்சம் கூட வருத்தமே இல்லாம தூங்கறத பாரு.. இருடி இன்னும் உன்ன சுத்தல்ல விடறேன்..’

அவள் தூங்குவதை எரிச்சலை கிளப்ப.. வேண்டும் என்றே பேப்பர் வெயிட்டை வேகமாக கீழே போட்டான்.
அந்த சத்தத்தில் அடித்து பிடித்து எழுந்து கண்ணை கசக்கி என்ன எங்க சத்தம் என்று சுற்றும் முற்றும் பார்த்தாள்.

அனிவர்த் அவளை முறைத்து கொண்டிருந்தான். அவனை பார்க்கவும் பயம் எடுத்து கொண்டது தேவர்ஷிக்கு..
அவன் தன்னிடம் பேசாமல் தன்னால் நிம்மதி கொள்ள முடியாது என உணர்நதவள்.. கொஞ்சம தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவனருகே சென்றாள்.

“வர்தா.. ப்ளீஸ் வர்தா.. பேசுங்களேன்..” கெஞ்சுதலாக..

அங்கு ஒருத்தி இல்லாததை போலவே அவனிருக்க.. படாரென அவனின் காலடியில் மண்டியிட்டு அமர்ந்தாள்.அவனின் முழங்கால்களில் தன் கைகளை ஊன்றி.. அண்ணாந்து அவனை பார்த்தாள். அவள் கண்கள் அவளின் காதலின் வலியை தாங்கி நின்றது.

அவள் என்ன செய்கிறாள் என அமைதியாக அவளை பார்த்துக கொண்டிருந்தானே தவிர.. மனம் இளகவில்லை.. இன்னும் சொல்ல போனால் அவள் தன் முன் மண்டியிட்டு அமர்ந்தது அவன் மனதில் சின்ன சந்தோஷம் தான்.

“சாரி.. தப்பு தான் மன்னிச்சிடுங்க.. இனி நீங்க என்ன சொனானாலும் கேட்கறேன்.. ப்ளீஸ் பேசுங்களேன்.. நீங்க பேசாம இருந்தா.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. ப்ளீஸ் பேசுங்க..” என காலில் முகம் புதைத்து அழுக..

அவள் அழுகை அவன் கோபத்தை கொஞ்சம் தணிய வைக்க..

“சரி.. சரி..எழுந்திரு..”

அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் சமாதானம் ஆகிவிட்டனா.. என சந்தேகமாக பார்க்க..

“இனி எப்பவும் நான் என்ன சொல்லறனோ அதை தான் கேட்கனும்.. செய்யனும் புரிஞ்சுதா..”

“கண்டிப்பா.. நீங்க சொல்றபடியே செய்யறேன்..” என்றாள் தணிவாக…

அவளின் கண்களை துடைத்து விட்டு கைகளை பிடித்து எழுப்பி தன் மடியில் அமர்த்தி…

“நான் தான் நைட் கொண்டு போய் விட்டுடறேன் சொன்னேன்ல குட்டிம்மா.. நீ எதுக்கு அப்படி அடமா போகனும்னு நின்ன.. அதான் எனக்கு கோபம்.. எனக்கு இருக்கற அஃபெக்‌ஷன் உனக்கு இல்ல… அதான் எப்ப பாரு என்னை விட்டு போறதுலயே குறியா இருக்க..” என அவளை குறை சொல்லி கொண்டிருந்தான்.

இவன் மொத்தமாக ஒரு நாள் அவளை உதறி எறிந்து விட்டு போகப் போவது தெரியாமல்.. வயசு பெண் நேரத்திற்கு வீட்டுக்கு வர வேண்டும் எல்லா குடும்பத்திலும் சொல்வது தானே அதற்காக தானே அவள் போக வேண்டும் என்றாள். அது புரியாமல் அவளை குற்றவாளி ஆக்கி கேட்டு கொண்டிருக்கிறான். அது சரி அக்கா தங்கை இருந்து அவர்களோடு வளரந்திருந்தால் அவனுக்கு அது எல்லாம் தெரிந்திருக்கும். ஒற்றை பிள்ளையாக இருந்தவனுக்கு தேவர்ஷியின் கஷ்டம் தெரிய வாய்ப்பில்லை.

‘நான் உன்மேல உயிரா இருக்கேன். அதை சொன்னால் உனக்கு புரியுமா.. அதான் எனக்கு தெரியல..’ என நினைத்தவள் அதை அவனிடம் சொல்லவில்லை ஏதாவது சொல்லி மறுபடியும் மலையேறிவிட்டாள் என்ற பயத்தில் அவன் சொல்வதற்கு தலையை மட்டும் அசைத்தாள்.

“இல்லை.. அப்படி எல்லாம் இல்ல..”என்றாள்.

“சரி விடு… லஞ்ச் சாப்பிடவே இல்ல தான.. போ சாப்பிடு” என்றவன் அவளை பின்புறமாகவே அணைத்து இதழ் முத்தமிட்டே அனுப்பி வைத்தான்.

தேவர்ஷிக்கும் கவலையில் இவ்வளவு நேரம் தெரியாத பசி.. இப்போ வாட்டி எடுக்க… தன் லன்ச் பாக்ஸை திறக்க.. காலையில் கொண்டு வந்த உணவு கெட்டு போயிருந்தது. முகத்தை சுழித்து மூடி வைத்தாள். அவளையே பாரத்து கொண்டிருந்தவன் உடனே போன் பண்ணி கேன்டீனில் சூடாக என்ன இருக்கு கேட்டு கொண்டு வர சொன்னான்.

அட்டென்டர் வந்து அனிவர்த டேபிளில் வைத்து விட்டு போக.. அவனே உணவை எடுத்து சென்று தேவர்ஷியிடம் கொடுத்தான்.

“இந்தா.. இதை சாப்பிடு..”

அவனின் கரிசனத்தில் அவளால் சந்தோஷப்பட கூட முடியவில்லை. வீட்டிற்கு தெரியவும் கூடாது. இவனும் மனம் சுணங்ககூடாது என்ன செய்வது என்ற கவலை தான் பெண்ணை அரித்துக் கொண்டிருந்தது.

அவள் சாப்பிடும் வரை அங்கேயே நின்றான். அவளுக்கு தான் டென்ஷன் ஆனது. அள்ளி திணித்து ஒருவழியாக சாப்பிட்டு முடித்தாள்.

அந்த வாரம் முழுவதும் அனிவர்த் தன் கோபத்தை விடுத்து எப்பவும் போல அவளிடம் அன்பாகவே நடந்துகொண்டான். வாரஇறுதி நெருங்கவும் தேவர்ஷிக்குள் பயம் பிடித்துக் கொண்டது. எங்கே…எத்தனை நாள் என…

அந்த வாரம் மட்டுமில்லாமல் அதற்கு அடுத்த இரண்டு வாரங்களும் அனிவர்த் அவளை எங்கும் கூப்பிடவில்லை. அந்த வாரம் உடனே வேண்டாம் அவளை சுத்தல்ல விட்டு பின்னாடியே வர வைக்கனும் அடுத்த வாரம் பார்த்துக் கொள்ளலாம் என விட்டுவிட்டான். அடுத்தவாரம் நேர்த்திகடன் என கங்கா அனிவர்தை கட்டயமாக குலதெய்வ கோவிலுக்கு அழைத்து சென்றுவிட்டார். அதற்கு அடுத்த வாரம் பிசினஸ் கம்யூனிட்டி பார்ட்டி.. மூன்று வாரங்கள் இப்படியே ஓடிவிட..

இந்த மூன்று வாரங்களும் தேவர்ஷிக்கு எப்ப? எங்கே கூப்பிடுவானோ? என படபடப்புடனே திக் திக் என நகர்ந்தது. அதுவே ஒரு மன அழுத்தத்தை கொடுத்தது.

அனிவர்தோ அவளை சுத்தல்ல விட நினைத்தவனுக்கு ஒரு வாரம் கூட தாக்குபிடிக்க முடியவில்லை. அவளில்லாமல் அவளை பார்க்காமல்.. தீண்டாமல் ஒன்றும் முடியவில்லை… பல மலர் தாவும் வண்டு தான்.

ஏனோ தேவர்ஷி என்னும் மலரின் தேனில் மதி மயங்கி அங்கேயே தேங்கிவிட்டான். தேவர்ஷி மலரின் தேனை பருகாமல் பைத்தியமாகி போனான். டிராகன் போல மோக அனல் மூச்சு தேகமெங்கும் சுட்டது..

அந்நிலையிலும் அவனின் நாட்டம் வேறு பெண்களிடம் செல்லவில்லை… பாவம் அது தான் காதல்! என அவன் உணரவில்லை.

மூன்று வாரங்கள் என்பது அவனுக்கு நேரங்களாக இருந்தது.

நான்காவது வாரம் அனிவர்த் ஆரம்பித்துவிட்டான். சனிக்கிழமை ஏதோ அரசு விடுமுறையாக இருக்க.. இரண்டு நாள் ட்ரிப்கு பிளான் பண்ணினான். அதை தேவர்ஷியிடம் சொல்ல..

“இரண்டு… நாளா..” என திணறினாள்.

“என்ன மென்னு முழுங்கற..”

“இல்ல.. இரண்டு நாளா.. காலையில் போய்ட்டு ஈவ்னிங் வந்திடலாமே..” பயத்தில் தயங்கி தயங்கி பேச..

“ஏன்..” என்றான் கோபமாக…

“இல்லை.. சட்டர்டே வீட்டில் பங்ஷன்..” சட்டென தோன்றியதை சொன்னாள்.

அவளை சந்தேகமாக பார்த்து “என்ன பங்ஷன்” என்றான்.

ஒருநிமிடம் என்ன சொல்ல என தெரியாமல் முழித்தாள்.

“என்ன.. முழிக்கிற…என்ன பொய் சொல்றதுனா..”இடுப்பில் கை வைத்து அவனை முறைத்தவாறு..

“அத்தை வீட்ல பங்ஷன்…” என இல்லாத அத்தையை இழுத்து விட்டு தப்பித்து கொள்ள பார்த்தாள்.

“உண்மை தானே.. பொய்யில்லயே…” நம்பாமல்…

“சத்தியமா..”என்றாள் அழுத்தமாக..

“சரி சன்டே ஓகே தான..” என்றான்.

“ம்ம்ம்” என தலையை உருட்டினாள்.

“நைட் தான் ட்ராப் பண்ணுவேன்..” மிரட்டலாக…

அதற்கும் தலையை உருட்டினாள். வீட்டில் ஏதாவது சொல்லி சமாளித்து கொள்ளலாம் என நினைத்தாள்.

22 – ஆடி அசைந்து வரும் தென்றல் Read More »

CBB1E474-51E7-4C90-93F8-F8EC7D0F5E05

21 – ஆடி அசைந்து வரும் தென்றல்

21 – ஆடிஅசைந்து வரும்தென்றல்

தேவர்ஷி ஞாயிறு அன்று நண்பர்களோடு வெளியே சென்று வருவதாக சொல்லி விட்டு அனிவர்த்தோடு மகாபலிபுரம் சென்றாள். இப்படி எப்பாவது செல்வது தான் என்பதால் திருகுமரனும் கௌசல்யாவும் மகளின் திருட்டுதனம் தெரியாமல் அனுப்பி வைத்தனர்.

அனிவர்த் அன்று இறக்கிவிட்ட மெயின் ரோட்டிலேயே தேவர்ஷிகாக காத்திருந்தான்.அவள் வரவும் பிக்கப் பண்ணிக்க… மகாபலிபுரம் நோக்கி கார் சென்றது. காரில் அமைதி.. தேவர்ஷிக்கோ பெற்றவர்களிடம் பொய் சொல்லி வந்ததால் ஒரு பதைபதைப்பு..

“வர்ஷிம்மா… என்ன ஒன்னும் பேசாம வர…”

“இல்ல.. கொஞ்சம் டென்ஷன்.. “

“என்ன டென்ஷன்.. என்னோடு வரதில..”

“இல்ல.. உங்களோடு வரதுல ஒன்னும் இல்ல.. வீட்ல பொய் சொல்லிட்டு வந்தது தான்..”

“எதுக்கு பொய் சொல்லனும்.. ப்ரெண்ட் கூட போறேனு சொல்லிட்டே வரலாமே..”

“அப்படி தான் சொல்லிட்டு வந்தேன்..”

“அப்புறம் என்ன பொய்னு சொல்லிட்டு இருக்க…”

“இல்லை ப்ரெண்ட்ஸ் கூட சினிமா போய்ட்டு மால் போய்ட்டு வரேன் என சொன்னேன். உங்க கூட மகாபலிபுரம் போறேனு சொல்லலை.. சொன்னா அவ்வளவு தான் கொன்னே புடுவாங்க..”

அவள் பேச்சில் அனிவர்த் ஏகத்திற்கும் கோபம் வந்தது.

“அப்படி எதுக்கு பொய் சொல்லனும். என் ப்ரண்ட் கூட டேட்டிங் போறேன்னு சொல்ல வேண்டியது தானே..”

“அப்படி எல்லாம் சொல்ல முடியாது.. “

“ஏன் சொல்ல முடியாது..”என்றான் கோபமாக..

“இது என்ன உங்க ஜெர்மன்னு நினைச்சிங்களா.. இங்க எல்லாம் அப்படி சொல்ல முடியாது தோலை உரிச்சு உப்பு கண்டம் போட்டுருவாங்க…” என்றாள் சின்ன குரலில் அவன் கோபத்தில் பயந்து…

“அப்படி ஒன்னும் பொய் சொல்லிட்டு நீ ஒன்னும் வர வேண்டாம்.. போடி..” என்றான் ஆத்திரத்தில் காரை ஓரங்கட்டி நிறுத்தினான்.

என்ன தான் ஜெர்மன்ல படித்தாலும் பிறந்து வளர்ந்த கலாச்சாரத்தை மறந்தா போவான்..

“நீ கிளம்பு இறங்கு..” அவளை பிடித்து தள்ளினான்.

அவன் தள்ளிய வேகத்தில் கதவின் கண்ணாடியில் தலை மோதிட..

“ஆ…ஸ்ஸ்..” என நெற்றியை பிடித்துக்கொண்டு வலியில் கத்தினாள்.

அவள் கத்தவும் தான் தன் தவறை உணர்ந்தவன்….

“ஏய் வர்ஷி…. என்னாச்சு..”அவளை நெருங்கி.. கன்னத்தை பிடித்து நெற்றியை பார்க்க…

அவனின் கையை தட்டிவிட்டாள் இப்போது இவள் கோபம் கொண்டு..

“டேய் குட்டிம்மா… சாரிடா.. ஏதோ கோபத்தில்… தப்பு தான்டா.. சாரி..” என தாடையை பிடித்து சாமாதனமாக பேசி நெற்றியை பார்க்க.. லேசாக வீங்கியிருந்தது. பெருவிரலால் தடவி விட்டு வாயை குவித்து மெல்ல ஊதினான்.

சில்லு என்று அவன் வாய் வழி வந்த காற்றால் பெண்ணுள் ஒரு சிலிர்ப்பு ஊடுருவி செல்ல… கண்ணை மூடி.. அவன் தாடையை ஏந்தி பிடித்திருக்க.. லேசாக உதடு பிரிந்து மூச்சை இழுத்து பிடித்து உணர்வுகளை அடக்க முயல…

பிரிந்திருந்த உதடுகள் அவனை ஏதோ செய்ய… மெல்ல மேல் உதடு கீழ் உதடு இரண்டையும் கவ்வி இழுத்து பிடித்தான். மொத்தமாக இழுத்து சப்பி சுவைத்தான்.

பெண்ணோ அவனின் ஜாலத்தில் காதல் மயக்கம் கொண்டு சட்டை காலரை இறுக்கி பிடித்து நெருக்கத்தை அதிகப்படுத்த… இருவரின் இருக்கைக்கு நடுவில் இருந்த இடைவெளியால் அவனுக்கு அவளை நெருங்க வாகாக அமையவில்லை. அவளை இழுத்து அழுத்தமான் ஆழமான முத்தத்தை பதித்தவன்..

“ஸ்வீட் கேர்ள்..” என கன்னம் தட்டி காரை எடுத்தான். அவனின் எண்ணத்தை ஈடுகட்ட காரும் வேகமெடுத்தது.

மகாபலிபுரம் சென்றனர். அது பிரைவேட் பீச்சுடன் கூடிய் ரிசார்ட்ஸ். அப்படி பட்ட ரிசார்ட்டை புக் செய்திருந்தான் அனிவர்த். அதன் பிரம்மாண்டத்தில் சற்று மிரண்டு போனாள் தேவர்ஷி. அவர்கள் வீட்டிலும் டிரிப் செல்வார்கள் தான் ஐந்து நட்சத்திர விடுதியில் தங்குவார்கள் தான். ஆனால் அதை எல்லாம் சாதாரணம் என சொல்லும் அளவுக்கு மூலை முடுக்கு எல்லாம் பணத்தின் செழுமையில் இழைக்கப்பட்டிருந்தது இந்த ரிசார்ட்.

தங்களுக்கான ரிசார்ட் வந்ததும் அனிவர்த் சில சாட் அயிட்டங்களும் ஹாட் ட்ரிங்சும் ஆர்டர் செய்தான். ஒவ்வொரு இடமாக பார்த்து கொண்டிருந்தவள் பின்புறம் இருந்த நீச்சல் குளத்தை பார்த்து கொண்டிருந்தாள். போனில் ஆர்டர் சொல்லி விட்டு தேவர்ஷியை தேடி வந்தான்.

“வர்ஷி.. உனக்கு நீச்சல் தெரியுமா..” என கேட்க..

“ஓ.. தெரியுமே..” என்றாள் உற்சாகமாக..

அனிவர்த் அவளை ஆச்சரியமாக பார்ததான். இவள் வீட்டில் வசதி குறைவாக இருக்கும் போது இது எல்லாம் எப்படி கற்று கொடுத்தார்கள் என..

“என்ன அப்படி பார்க்கறிங்க.”

“இல்ல… உங்க வீட்டில எப்படி ஸ்விம்மிங் கிளாஸ்லாம் அனுப்புச்சாங்க..”

“என் தாத்தா பொட்ட புள்ளைக்கு எதுக்கு இது எல்லாம் என திட்டினாரு தான்.. ஆன் எங்கப்பா என் ஆசைக்காக தாத்தாவை பேசி சரி பண்ணி அனுப்பினாங்க..” என சொல்லியவள் அன்று அவள் தாத்தா பேசியதை நினைத்து இன்றும் கோபம் வந்தது.

“பொட்டபுள்ளைக்கு எதுக்கு நீச்சல் எல்லாம்.. நீச்சல் டிரஸ் எல்லாம் போட வேண்டி இருக்கும். நம்ம குடும்ப கௌரவத்துக்கு சரி வருமா..”

“பாட்டு கிளாஸ் டான்ஸ் கிளாஸ் போகட்டும்..” என சொல்ல..

திருகுமரன் தான் வழக்கம் போல தந்தையை மகளின் ஆசைக்காக பேசி சரி கட்டினார்.

எப்படி தான் அப்பா சமாளிக்கறாரோ.. அந்த பெரிசை..” என பல்லை கடித்தாள்.

“ஏய்..என்னாச்சு..” அவள் முகத்தை பார்த்து கேட்டான்.

“ஒன்னுமில்ல..” என்றவள் இதை சொன்னால் கோப்ப்படுவானோ என..

“இந்த பூல் நல்லா இருக்குல்ல.” என பேச்சை மாற்றினாள்.

“ஸ்விம் பண்ணலாமா..” என்றான்.

“ ப்ச்ச்.. ஸ்விம் சூட் இல்லையே..” என்றாள் சோகத்தில் முகத்தை பாவித்து…

“அதனால் என்ன.. இங்கேயே ஷாப்பிங் பண்ணலாம்.. வா வாங்கிக்கலாம்” என அவளை அழைத்து கொண்டு கிளம்பினான். அவன்ஆர்டர் செய்தவற்றை சில மணி நேரம் கழித்து தான் சொல்லும் போது கொண்டு வருமாறு சொல்லவிட்டே கிளம்பினான்.

அவனோ பிகினியாக பார்க்க.. அவன் எடுத்தவை எல்லாம் பார்த்தவளுக்கு அச்சோ இதை எப்படி போடுவது என ஒரே கூச்சமாகி போனது. வேண்டாம் என மறுக்க…

“ஏண்டி.. உனக்கு நல்லா இருக்கும்..”

“ச்சீ.. இதை எப்படி போடறது.. எனக்கு வெட்கமா இருக்கு..”

“அது ப்ரைவேட்.. அங்க யாரும் வரமாட்டாங்க…நானும் நீயும் தான..என்கிட்ட என்ன வெட்கம்”

அவனுக்கு என்ன தெரியும் அவனின் பார்வை தான் பாவையவளை வெட்கத்தில் கொன்று தின்னும்…

“இல்லை வேண்டாம்.. நான் இது எல்லாம் போட்டதில்லை… போடமாட்டேன்..” என பிடிவாதமாக மறுத்து ப்ராக் மாடல் ஸ்விம் சூட் எடுத்துக் கொண்டாள்.

அனிவர்த் தனக்கு பிடிக்கவில்லை என்பதாக முகம் திருப்பி நின்றான். அவனை இறைஞ்சுதலாக பார்க்க… சரி போ என்பதாக விட்டுவிட்டான்.

தங்கள் ரிசார்ட்கு வந்தவுடன் அனிவர்த் தேவர்ஷியிடம் ஸ்விம் சூட்டை போட்டு விட்டு வரசொன்னவன்.. தானும் தன் சட்டு பேண்ட் உள் பனியனையிம் களைந்து விட்டு மினி டிரங்கோடு மட்டுமே இருக்க… அதற்குள் அவன் ஆர்டர் செய்ததை வந்திருக்க.. அழகான கிளாசில் பொன் திரவத்தை ஊற்றி மிக்சிங் செய்தவன் ரசித்து ருசித்து ஒரு சிப் செய்தவன் போர்க்கில் பழத்துண்டுகளை குத்தி எடுத்து லாவகமாக சாப்பிட..

அந்த உடையை மாற்றியவள் அவன் முன் வர சங்கடப்பட்டவளாக தயங்கி தயங்கி படுக்கை அறையில் இருந்து அனிவர்த் இருந்த முன் அறைக்கு வந்தவள்… பார்த்ததும் சற்று அதிர்ந்து தான் போனாள் தேவர்ஷி. அவன் குடிப்பான் என்று தெரியும் ஆனால் தன்னோடு இருக்கும் போது குடிப்பான் என நினைக்கவில்லை. பொன்முடி போயிருந்த போது அவன் அந்த மாதிரி எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை என்பதாலும்.. அவள் வீட்டில் தாத்தாவின் கண்டிப்பால் அவள் வீட்டு ஆண்களுக்கு அந்த பழக்கமில்லை என்பதாலும் அவளுக்கு இது புதிது என்பதால் பதட்டமாக இருந்தது. குடிப்பவர்களை கண்டால் சற்று பயம் தான் அவளுக்கு..

பயத்துடன் அவனை பாரக்க.. அவன் அது எல்லாம் எங்கு கவனித்தான். அவளை பார்த்ததும்..

“ஹேய்… செக்ஸியா இருக்கடி..” என ஒரு மாதிரியாக சிரித்து கண்ணடிக்க…

அவளோ எச்சில் கூட்டி விழுங்கினாள்.

“வா.. பூல் போலாம்..” என கை நீட்டி அழைக்க..

அவள் தடுமாறி நிற்க… அவனே அவளை நெருங்கி இடையில் கை போட்டு பக்கவாட்டில் இருந்த கண்ணாடி தடுப்பிற்கு அந்த பக்கம் இருந்த நீச்சல் குளத்திற்கு அழைத்து சென்றான். ஒரு கையில் அவள்.. மறு கையில பொன்திரவம்.. நல்லா அனுபவித்து வாழ்றடா அனிவர்த்..

கிளாசை நீச்சல் குளத்தின் திட்டில் வைத்து விட்டு … பயம் படபடப்பு என கலவையான உணர்வில் இருந்த தேவர்ஷியை அணைத்து பிடித்து கொண்டு அவளோடு சேர்ந்து நீரில் குதித்தான். அவளையும் இழுத்துக் கொண்டு தண்ணீரில் விழுவான் என எதிர்பார்க்கதவள் நீரில் மூழ்கி மேலே வந்தவளை கண்டு அவன் உல்லாசமாக சிரிக்க… அனிவர்த் அப்படி ஒரு உற்சாகமாக சிறுவனை போல துள்ளி கொண்டு நீந்தி அவளருகில் வந்தவன் அவளை இறுக்கி அணைக்க.. அவனிடம் இருந்து திமிறி கொண்டு விடுபட்டு.. நீந்தி எதிர்கரைக்கு செல்ல.. அவளை பிடிக்க இவன் செல்ல.. இவள் மீனை போல நழுவி செல்ல… இந்த விளையாட்டு அனிவர்த்துக்கு பிடித்து போனது. அவன் பிடிக்க முயல.. அவள் கைக்கு சிக்காமல் போக்கு காட்ட.. இந்த விளையாட்டு சற்று நீள..

அனிவர்த் கரைக்கு சென்றவன் பொன் திரவத்தை ஒரே மூச்சாக வாயில் சரித்தான். உள்ளே சென்ற திரவம் அவனை உசுப்பேற்ற.. தம் கட்டி தண்ணீரின் அடியில் நீந்தி சென்றான். அவனை காணாமல் தேட.. தீடிரென நீருக்கடியில் இருந்து அவளின் கால்களை பிடித்து இழுத்து தன்னோடு இறுக்கி பிடிக்க.. அவள் அவனிடம் இருந்து விடுபட முயல… அவளின் கால்களை தன் கால்களால் கிடுக்கி பிடி போட்டு அசைய விடாமல் செய்தான்.

அவனிடம்இருந்து தப்பிக்க முடியாமல் போக..

“விடுங்க என்னை..” சிணுங்கியவாறே அவன் தோளில் அடிக்க..

“குட்டிம்மா..” என அவன் குரல் குழைய…

அவனின் குரல் பேதத்தில் அவன் முகம் பாரக்க… அவனின் பார்வையோ நீருக்கு மேலே இருந்த அவள் பாதி உடம்பை மேய்ந்து கொண்டிருந்தது. நீரில் நனைந்த உடைகள் அவளின் நெளிவு சுளிவுகளை எடுப்பாக காட்ட… அவளின் முகத்தில் இருந்து வடிந்த நீர் கழுத்து வழியாக இறங்கி நெஞ்சிற்கு மத்தியில் இறங்கி உள்ளே செல்ல… பார்த்வனுக்கோ காதல் பித்து தலைக்கேற… சட்டேன வாய் வைத்து நீரை உறிஞ்சி இழுக்க… அவனின் மீசையின் குறுகுறுப்பும்.. இதழ் தீண்டலும் அவளின் உடலை தகிக்க… அவனை இறுக்கினாள்.

அவளை அள்ளி தோளில் போட்டு கொண்டு அறைக்கு வந்தவன் படுக்கையில் கிடத்தி அவள் மேலே விழுந்து இறுக்கி அணைத்து அவளை சீராட்டி தன் காரியத்தை சாதித்து கொண்டான். மீண்டும் மீண்டும் அவளை சீராட்டியே சீர் களைய செய்தான். ஒரு கட்டத்தில் அவளால் முடியவில்லை என்ற நிலை வரவும் தான் விலகினான்.

21 – ஆடி அசைந்து வரும் தென்றல் Read More »

A685F1BF-09D2-490E-BAA1-24A8DFEC0A3F

20 – ஆடி அசைந்து வரும் தென்றல்

20 – ஆடி அசைந்து வரும் தென்றல்

அவளுக்கு தான் இன்ப இம்சையாக இருந்தது. மெல்ல மெல்ல அவளை ஆட்கொண்டான். தன் ஆளுமைக்கு அடி பணிய வைத்தான். அவனின் ஒவ்வொரு தீண்டலிலும் பூம்பாவை உதிர்ந்து உதிர்ந்து மலர்ந்தாள்.

அந்த காதல் யோகி காட்டிய இந்திர ஜாலங்களில் சின்ன பெண் பித்தாகி போதையாகி மயங்கி போனாள். அவனோ ஆசை மீதூற.. காம பித்து தலைக்கேற… வீறு கொண்டு எழுந்த உணர்வுகளை அவளிடம் செயலாக்க பயந்தான். தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு மென்மையாக கையாண்டான் தன் காதல் கூட்டுக்காரியை…

“குட்டிம்மா.. வர்ஷிம்மா…” முணங்கலும்…

“வர்தா..” சிணுங்கலும் ஜதி பாட..

காதல் பாடங்களின் அனைத்து பக்கங்களையும் அவளுக்கு கற்று கொடுத்து தானும் கரைந்து.. அவளையும் கரைய செய்து.. தன்னிலை மறந்த நிலையில் இரு உயிர்கள் ஓருயிராக…

மலரினும் மெல்லியது காமம் உணர வைத்தான்.

காதலும் காமமும் சரிவிகிதத்ததில் பகிரப்பட.. அங்கே ஒரு உள்ளி விழா ( காமன் பண்டிகை) நிறைவாக நடந்தது.

களைத்து உறக்கியவளை தன் மேல் எடுத்து கிடத்திக் கொண்டு உறக்கம் கொண்டான் அனிவர்த். மாலை மங்கி இருள் சூழ்ந்த வேளையில் அனிவர்த் கண் விழித்தான். தன் மேல் கைகால்களை பரப்பிக் கொண்டு …அவனின் கழுத்துக்கடியில் முகத்தை புதைத்து கொண்டு சற்றே வாயை திறந்து தூங்கி கொண்டு இருந்தாள்.

சற்றே தலையை தூக்கி குனிந்து பார்த்தவன்…உதடுகள் கீற்றாக பிளந்து முன் பல்வரிசை தெரிய.. அவளிடம் காதல் சேட்டைகள் செய்யும் ஆசை எழ… தன் நுனி நாவை லாவகமாக உள்ளே நுழைத்து பல் வரிசையை மெல்ல தீண்டினான்.

அவன் நாக்கின் சில்லிப்பு பட்டதில் விருட்டென்று பயந்து எழுந்து முழித்தாள். தூக்க கலக்கத்தில் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை எங்கே.. என்ன…என்று…

“ஹேய்.. ரிலாக்ஸ்டா..” என இழுத்து தன்மேல் போட்டு அணைத்தான். அனிவர்த்தின் கழுத்தை கட்டிக் கொண்டு..

“எதுக்கு இப்படி பண்ண பயந்துட்டேன்..வர்தா..” என்றவளை இறுக்கி அணைத்து முதுகை நீவிக் கொடுக்க…முதுகை நீவிய கைகள் மெது மெதுவாக மேலே கீழே என வருட..

“வர்தா.. “ சிணுங்கியவளை இழுத்து தன் முகத்தோடு முகம் வைத்து நெற்றியில் முட்டி.. மூக்கோடு மூக்கை உரசி.. இதழ் கவ்வி அடுத்த சுற்றுக்கு அச்சாரமிட்டான். காது மடலை மெல்ல கடித்தான். அவள் கூந்தலை இறுக்கி பிடித்தான்.

“ஆ..ஆ..” வலியில் முணங்கினாள்.

கழுத்தை உதடு மடிப்பால் கவ்வி இழுத்தான். பஞ்சு போல் இலகுவானாள்.. கழுத்து கீழே மெல்ல தன் நுனி விரலால் வருடினான். பெண்ணவளுக்கோ தாபம் பற்றி கொண்டது. மெல்லிய கைவிரல்களை முன் பற்களால் கடித்தான். இறகில்லாமல் மிதந்தாள்.. இரண்டு பாதங்களை இருகைகளில் ஏந்தினான். ஒவ்வொரு விரலுக்கும் ஒரு குட்டி முத்தம் வைத்தான். முடிவாக உள்ளங்காலின் மத்தியில் அழுந்த முத்தமிட்டான். உடல் தூக்கிப் போட.. கண்ணாட்டியோ காதல் ஜன்னி கண்டாள். புழுவாய் துடிக்க.. அவளி்ன் துடிப்பை அடக்கும வித்தை தெரிந்த வித்தாரகள்ளனுக்கு மோகன புன்னகை. தன் இல்லாட்டியை தன்னிடம் மயங்க வைத்த வாகை புன்னகை… கந்தனின் வசீகர புன்னகை கண்டு மயங்கி நின்ற வள்ளியாக சொக்கி போனாள்.

இமை சிமிட்டாமல் கண்ணை அகல விரித்து அவனை பார்வையால் தின்று கொண்டிருந்தாள். அவளின் பார்வை வீச்சு தாங்காமல் உணர்ச்சி குவியலாகி போனான். அவளை தழுவி.. தாபம் தாளாமல் அவளை இறுக்கி அணைத்து அவளில் மூழ்கி முத்தாட… போதவில்லை… அவனின் மோகம் எல்லாம் உடைப்பெடுக்க.. தன்னையே கட்டுக்குள் வைக்க முடியாமல்… தேவர்ஷியிடம் வன்மையை காட்டினான். அவனின் வேகத்திற்கு ஈடு கொடுக்க இயலாமல் பாவை தான் துவண்டு போனாள். தன்னால் முடியாமல் சற்று திணறினாலும்.. சற்றும் தன் காதல் கண்ணனை விலக்காமல்.. காதல் கைப்பாவையாகி போனாள்.

மோகத்தை அவளிடம் கொட்டி தீர்த்த பின்பு தான் பெண்ணின் நிலை உணர்ந்தான். பற்றுகோல் இல்லாத கொடி போல் துவண்டு கிடந்தாள் இளம்பூவை.. அவள் உடலில் அங்காங்கே லவ் பைட்ஸ்..

‘என்னடா பண்ண வச்சிருக்க..’ என தன்னையே நொந்து கொண்டான்.

“குட்டிம்மா.. கஷ்டப்படுத்திட்டேனா.. சாரிடாமா..” என கவலையோடு முகம் பார்க்க..

சோர்ந்து களைத்திருந்தாலும் அவளின் முகத்தில் சோபையான புன்னகை…. கண்ட அவன் மனம் பேரு உவகை கொண்டது.

அவளிடம் மீ்ட்சி பெற முடியாமல் தவித்தான். அவளின் நிலை கண்டு மருகினான். அவனின் நெஞ்சில் தலை சாய்ந்திருந்தவளுக்கு அவனின் உடல் மொழி புரிய.. எம்பி அவனின் இதழோடு இதழ் சேர்த்தாள்.

“வேண்டாம் குட்டிம்மா.. தாங்கமாட்ட..”

“உங்களுக்கு வேணும் தானே… உங்களுக்காக எதையும் தாங்குக்குவேன்..” அவளாகவே இழுத்து அணைத்தாள். மென்மையாக கையாண்டான் தன் காதல் மனையாளை…
அந்த இரவு நீண்டு கொண்டே சென்றது அவர்களின் காதல் பயணத்தினால்..

இரண்டு நாட்களும் நினைத்த நேரம் கூடி களித்து.. நினைத்த நேரம் சாப்பாடு தூக்கம் என உல்லாசமாக இருந்தனர். திங்கள அதிகாலையிலேயே விமானத்தில் இருந்தனர்.

அனிவர்த் அவளின் கையை தன்உள்ளங்கையில் வைத்து கொண்டு…

“குட்டிம்மா… பிடிச்சிருக்கு தான…”

அவன் எதை கேட்கிறான் என புரிந்தவளுக்கு என்னவோ அவன் முகம் பார்க்க… ஏதோ தடை விதிக்க… தன் விரல் நகங்களை பார்த்வாறு தலை அசைத்தாள் சம்மதமாக…

அனிவர்த்துக்கு இந்த வெட்கம் எல்லாம் புதிது. அவன் பார்த்த பெணகள் எல்லாம் ஆணை வளைக்கும் சாகசம் கொண்டவர்கள்.. போதையை கண்களில் ஏற்றி மயக்கும் கலையில் தேர்ந்தவர்கள். அனிவர்த்துக்கு இது புதிதாக இருந்தது.

ஆணவன் முகம் பார்க்க நாணி தலை சாய்ந்து நிற்கும் பெண்ணை ஏனோ இன்னும் இன்னும் கொள்ளை கொள்ள ஆசை கொண்டான்.

அவள் தோள் சுற்றி கையை போட்டு மெல்ல அவள் உச்சந்தலையில் முத்தம் ஒன்றை பதித்தான். குனிந்து அவள் காதில்…

“என் கூடவே வந்திடறியா.. ப்ளாட் எடுக்கவா..”

பெண் நிமிரவே இல்லை. மறுப்பாக தலை அசைத்தாள்.

என்ன தான் காதலால் இசைந்தாலும்… ஆண் தன் இணைக்கு சமூகத்தை முன் நிறுத்தி கொடுக்கும் அங்கிகாரம் தானே அந்த பெண்ணை கவுரவப்படுத்தும்..

அந்த அங்கீகாரம் இல்லாமல் அவனோடு இணைந்தையே அவளுக்கு பயத்தை கொடுத்தது. ஸ்திரமில்லாத உறவு தானே.. எதுவரை செல்லும்… அதன் பிறகு எதிர்காலம் மிரட்டியது.. என்ன ஆன போதும் இவன் ஒருவனே வாழ்ந்தாலும்.. பிரிந்தாலும்.. ஆனால் தன் காதல் அவனை தன்னை விட்டு நீங்கவிடாது என பெரும் நம்பிக்கை கொண்டாள். மனம் மாறி ஊரறிய கல்யாணம் செய்வான் என தீர்மானமாக நினைத்திருந்தாள்.

குடும்பம் என்ற கட்டமைப்புக்குள் அடங்க மறுப்பவனா.. இவளின் நம்பிக்கையை காப்பாற்ற போகிறான்…அவனை பற்றி அறியாத பேதையை துச்சமாக நினைத்து தூசியாக தட்டிவிட்டு செல்லும் போது என்ன ஆவாளோ…

அவளின் மறுப்பு அவனுள் சிறு கோபம் குமிழிட… முகத்தை திருப்பிக் கொண்டான். அவனின் முகத்தை தன் புறம் திருப்பி வாஞ்சையாக வருடி கொடுத்தவள்…

“வர்தா.. வீட்டை விட்டு எல்லாம் வரமுடியாது சொன்னா புரிஞ்சுக்குங்க ப்ளீஸ்… நாம இப்ப மாதிரி வெளிய மட்டும் போலாம்..” என்றாள்.

அவள் கெஞ்சவும்.. கொஞ்சம் சமாதானம் ஆனான்.

“சரி வேண்டாம்… ஆனால் நான் சொல்லும் போது என் கூட வரனும்… ஏதாவது சாக்கு போக்கு சொன்ன…. பார்ததுக்கோ..”என மிரட்டினான்.

‘இந்த ஒரு தடவைக்கே..வீட்டில் எத்தனை பொய் சொல்லு சாமளிக்க வேண்டியதா போச்சு.. இன்னுமா…’

“என்ன கேட்டதுக்கு பதில் சொல்லாம யோசிச்சுகிட்டு இருக்க..”

“ம்கூம் ஒன்னுமில்ல.. “

“என்ன வரியா…”

“ம்ம்ம்..வரேன்” என சமாளித்தாள்.

உரிமையற்ற உறவின் பினவிளைவு.. அதன் வீரியம் புரியாமல் அவன் மேல் பித்தாகி அவன் இழுப்பிற்கு சென்று கொண்டிருந்தாள்.

விமானம் விட்டு இறங்கி.. கால் டாக்ஸயில் போய் கொள்கிறேன் என்று சொன்னவளை பிடிவாதமாக தானே கொண்டு விடுவதாக அழைத்து வந்தான்.

இவனோடு சென்று இறக்கினால் வீட்டில் உண்டு இல்லை என ஒரு வழியாக்கிவிடுவார்களே… என்ன செய்வது என யோசித்து கொண்டே வந்தாள்.

தேவர்ஷியின் வீடு இருக்கும் ஏரியாவிற்கு வந்தவுடன்..

“எந்த ஸ்டிரிட்..” என அனிவர்த் கேட்க..

அதுக்குள்ள வந்தாச்சா.. சுற்றியும் பார்த்தாள். ஏரியாவின் மெயின் ரோட்டில் நிற்க…

“நான் இங்கேயே இறக்கிகறேன்” என்றாள்.

“ஏன் வீடு வரைக்கும் கொண்டு வந்து விடறேன்”

“இல்லல்ல.. அது சின்ன தெரு கார் போகாது..” என வாய்க்கு வந்ததை சொல்லி சமாளித்தாள்.

‘கார் கூட போக முடியாத சின்ன தெருவா.. அப்படிபட்ட தெருவிலா இருக்கிறாள். மிடில் கிளாஸ் பேமிலி கூட இல்லயா..’ என நினைத்தான்.

“வர்தா.. நான் இங்கயே இறக்கிக்கவா..”என கேட்க..

“ஓஹோ..சரி இன்னைக்கு ரெஸ்ட் எடுத்திட்டு நாளைக்கு ஆபீஸ் வா…” அவளை லேசாக அணைத்து விடுவித்தான்.

தேவர்ஷியும் தலை அசைத்து அவனிடம் சொல்லி விட்டு இறக்கி கொண்டாள். அவன் கார் மறையும் வரை பார்த்திருந்தவள் தன் வீடு நோக்கி சென்றாள்.

வீட்டில் கௌசல்யா இவளுக்காகவே காத்திருந்தார்.

காலிங் பெல் அடித்த உடன் கதவை திறந்த தாயை கண்டு…

“அம்மா..” என கட்டிக்கொண்டாள்.

“ஏன் தேவாம்மா போனதிலிருந்து ஒரு போன் கூட பண்ணல.. “ கவலையாக கேட்க..

“இல்லமா.. அங்க ஒரே மழை கரண்ட் இல்ல.. சிக்னலும் இல்ல..” என பொய் சொன்னாள்.

அதை நம்பிய அப்பாவி கௌசல்யா..” நானும் அப்படி தான் இருக்கும்னு நினைச்சேன்.. போ குளிச்சிட்டு வா.. சாப்பிடலாம்.. டயர்டா இருப்ப.. நாளைக்கு ஆபிஸ் போகலாம் . இன்னைக்கு ரெஸ்ட் எடு..”

சரி என சென்றவள் குளித்து விட்டு சாப்பிட்டு தூங்கினாள் மதிய உணவுக்குகூட எழுந்திரிக்கவில்லை… கௌசல்யாவும் மகளின் திருட்டுத்தனம் அறியாமல் பயண களைப்பு என எழுப்பவில்லை.

அடுத்தநாள் ஆபிஸ் சென்றாள் அனிவர்த் பார்த்ததும் அவளை இழுத்து அணைத்தான்.

“குட்டிம்மா.. நேத்தே நீ இல்லாமல் ஒரே போரிங் தெரியுமா..” என்றான் ஏக்கம் இழையோடும் குரலில்..

தேவர்ஷி உள்ளுக்குள் மகிழ்ந்து போனாள்.’என்னை விட்டு இருக்க முடியாமல் எப்படி தவிச்சு போறாங்க… நம்ம விட்டு எப்பவும் பிரியமாட்டாங்க.. கொஞ்சநாள் போய் கல்யாணத்திற்கு கேட்போம்’

சீண்டலும் சிணுங்கலுமாக அந்த வாரம் ஓடிவிட…. வார இறுதியில் ஞாயிற்று கிழமை மகாபலிபுரம் போகலாமா.. என கேட்டான் அனிவர்த்.

வீட்டில் என்ன சொல்லுவது என தெரியாமல் வேண்டாம் என மறுக்க அவன் கோபம் கொள்ள… அவனின் கோபத்திற்காக சம்மதித்தாள்.

ஏனோ அனிவர்த்தின் மனமும் உடலும் அவளின் அருகாமைக்காக ஏக்கம் கொள்ள… திரும்ப திரும்ப பைத்தியமாக அவளை தேடினான்.

20 – ஆடி அசைந்து வரும் தென்றல் Read More »

7139F90B-7317-4AA2-BC47-AE301F0AEFF2

19 – ஆடி அசைந்து வரும் தென்றல்

19 – ஆடி அசைந்து வரும் தென்றல்

அவன் காதல் தளும்பும் பார்வை மனதில் இருந்த சிறு சஞ்சலத்தையும் மறைக்க… தனது வலது கையை அவனை நோக்கி நீட்டினாள். அவள் கையை ஏந்தி உள்ளங்கையில் முத்தமிட்டான்.

தனது ஜெர்கின் சட்டை எல்லாம் கழட்டி எறிந்து விட்டு… வெற்று மார்ப்போடு அவள் மேல் படர்ந்தான்.

அவனின் வெற்று மார்ப்பை கண்டு கண்களை மூடிக் கொண்டாள். அவளின் முன் நெற்றியில் முத்தமிட்டான். கன்னத்தோடு கன்னம் இழைந்தான். மூடிய இமைகளை நுனி நாக்கை கொண்டு வருடினான். பட்டென கண்களை திறந்தாள்.

‘எப்படி பார்க்க வச்சுட்டேன்ல..’ எனும் விதமாக புருவங்களை உயர்த்தி… அவளை பார்த்து சிரித்தான். திரும்பி கவிழ்ந்து படுத்து தலையணையில் முகம் புதைத்து கொண்டாள். மொத்தமாக அவள் மேல் தன் உடல் அழுந்துமாறு படுத்தவன்…

காலையில் வரும் போது அவள் வைத்து கொண்டு வந்த முல்லை சரம் இந்த ஊரின் குளிர்ச்சிக்கு வாடாமல் மணத்தோடு இருக்க… அந்த பூச்சரத்தில் தன் நாசியை உரசினான். ஆழ மூச்செடுத்து பூவின் மணத்தை தன்னுள் கடத்த… இழுத்த மூச்சில் அந்த மணம் உள்ளே சென்று அவனின் உணர்வுகளை கிளர்ந்தெழ செய்ய….

உள்ளே சென்ற மூச்சு உணர்வுகளின் தாக்கத்தால் உஷ்ணமாக வர.. இழுத்து விட்ட மூச்சில் பூச்சரம் மட்டும் அல்ல.. அவளும் வாடி வதங்கி போனாள்.

வெம்மை தாங்காமல் அவளின் கழுத்தோர குட்டி குட்டி முடிகள் எல்லாம் சிலிர்த்து எழுந்து கொள்ள… விரல் நகம் கொண்டு மெல்ல சுரண்டினான் அந்த குட்டி முடிகளை…அவள் உடல் லேசாக அதிர்ந்து அடங்கியது.

பின்புறமிருந்து அவளின் ஜெர்கினை கழட்டி வீசியவன்.. டாப்ஸில் கை வைக்க… சட்டென நிமிர்ந்து படுத்தாள். ஒரு கை ஊன்றி மறு கையால் டாப்ஸை கழட்ட முயன்று கொண்டிருந்தவன்… அவள் திரும்பவும் தடுமாறி அவள் மேலேயே மார்ப்புக்கு மத்தியில் விழுந்தான். விழுந்த இடம் அபாயகரமான வளைவு.. அவனுக்கு பிடித்த இடம். முகத்தை வைத்து அழுத்தி தேய்த்தான். கூச்சம் தாளாமல் அவனை பிடித்து நெட்டி தள்ள முயன்றாள். அவனோ அவள் கைகளை அனாயசமாக தட்டி விட்டு பிடிவாதமாக அங்கேயே இன்னும் இன்னும் அழுத்தம் கொடுத்தான். உணர்வின் கணம் தாளாமல் அவனின் உச்சி முடியை இறுக்கிப் பிடித்தாள்.

மெல்ல மேலே வந்தவன் அவளின் கழுத்தை இதழால் மென்மையாக ஒத்தி எடுக்க.. அவளின் சிறு செயின் உறுத்த… அப்போது தான் ஞாபகம் வந்தவனாக.. வேகமாக அவளை விட்டு எழுந்து சென்றான். என்னவோ என படபடப்புடன் எழுந்து அமர்ந்தாள். வேகமாக சென்று தனது பேகில் இருந்த நகைப் பெட்டியை எடுத்து வந்தவன் அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தான். பெட்டியை பார்த்ததும் கையில் கொடுப்பானா.. என பயந்தாள். கழுத்தில் போடமாட்டானா என ஏக்கத்தோடு பார்த்திருந்தாள். பெட்டியில் இருந்த செயினை எடுத்து அவள் முகத்திற்கு நேராக பிடித்தான். அவளை நேர்பார்வையாக பாரத்தவன் அவள் கழுத்தில் போட்டுவிட்டான்.

அவனை பொருத்தவரை அது ஒரு செயின் அவ்வளவே.. தன் அன்பு பரிசு…

ஆனால் அவளுக்கோ.. அது தாலி… அவனோடு கூடும் கூடல் எல்லாம் மனநிறைவை தரக் கூடிய பொக்கிஷம்.

பெண்ணவளின் மனதில் சொல்லில்அடங்காத நிம்மதி ஆட்கொண்டது. என் கணவன் … நான் இவன் மனைவி…

கண்கள் தளும்ப.. மெல்ல மூடினாள். கண்ணீர் மணிகள் உருண்டு வர… இரு கைகளில் கன்னம் தாங்கி பெருவிரல்கள் கொண்டு மென்மையாக துடைத்தான்.

“எனக்கு உன்னை பிடிச்சிருக்கு.. அப்கோர்ஸ் உனக்கும் என்னை பிடிச்சிருக்குனு எனக்கு தெரியும். உன்கிட்ட சில விசயங்கள் வெளிப்படையா பேசிடனும்னு நினைக்கிறேன்.. எனக்கு பெண்களோடான உறவு புதுசு இல்லை.. வீக் எண்ட் பெண்கள் இல்லாமல் இருந்தது இல்லை. ஆனால் நீ எனக்கு சம்திங் ஸ்பெஷல் தான். உன் மேல ஒரு க்ரஷ் வந்த பிறகு மற்ற பெண்களோடு உறவை குறைச்சிகிட்டேன் தான்.என்னவோ இருக்கு உன்கிட்ட… ஏதோ ஒன்னு ஈர்க்குது.. எனக்கு உன்னோட ரிலேஷன்ஷிப் பிடிச்சிருக்கு..” என அவள் முகம் பார்த்து தெளிவாக பேசினான்.

அனிவர்த்தின் பழக்க வழக்கங்கள் அறிந்தவள் தானே.. அதையும் மீறி தானே அவன் மீது காதல் கொண்டாள். எப்போது அவன் மீதான காதலை உணர்ந்தாளோ.. அப்போதே அவன் ஒருவன் தான் வாழ்வு முழுமைக்கும் என்ற முடிவையும் எடுத்திருந்தாள். அவன் மணந்து கொண்டாலும் சரி இல்லை என்றாலும் சரி அவன் மட்டுமே என்பதில் அவள் உறுதியாக இருந்தாள். அவள் அவனை காதலனாக இல்லை கணவனாக தான் வரித்திருந்தாள். அதனால் அவன் கேட்டது தவறாக தெரியவில்லை.

“எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். என் மனசுல எப்பவும் நீங்க தான்.. நீங்க மட்டும் தான்.. உங்க மேல வச்ச காதலால மட்டும் தான் சம்மதிக்கிறேன்.அதனால எனக்கு இது தப்பா தெரியல… “

“நீ என்னை லவ் பண்றினு தெரியும். எனக்கும் விருப்பம் இருக்கு.. அது லவ்வா என்னனு தெரியல… புரியல…கல்யாணத்துல நம்பிக்கை இல்லை.. விருப்பம் உள்ள வரை சேர்ந்திருப்போம். நிச்சயம் நீ இல்லாம என் வாழ்க்கை இல்லைனு தோனினா… அப்ப ஒருவேளை திருமணத்தை பத்தி யோசிக்கலாம் அது வரை இப்படி தான் இருக்கும் நம் உறவு..” சொல்லி விட்டு அவள் முகத்தையே பார்த்திருந்தான்.

அனவர்த்தின் பேச்சிற்கு நல்ல குடும்பத்தில் ஒழுக்க நெறியோடு வளர்க்கப்பட்ட பெண்கள் காறி துப்பிவிடுவார்கள் அது அவனுக்கே தெரியும். ஆனால் தேவர்ஷியின் காதல் மேல் கொண்ட நம்பிக்கையில் தான் கேட்டான்.

“ஊரை கூட்டி தாலி கட்டி இவள் என் மனைவி.. இவன் என் கணவன் என சொன்னா தான் திருமணமா… உடலில் உயிர் இருக்கும் காலம் வரைக்கும் இவனோ.. இவளோ தான் என் வாழ்வின் முழுமைக்கும் என நினைத்தாலே அதுவும் திருமணம் தான்..” என்றாள்.

“உன் அளவுக்கு அன்பா நான் இருக்கேனானு தெரியலை.. ஆனால் நமக்குள்ள இந்த ரிலேஷன்ஷிப் இருக்கும் வரைக்கும் வேற பொண்ணுங்க பக்கம் போகமட்டேன் அந்த உறுதி உனக்கு கொடுக்கிறேன்” என அவள் வலது கைமேல் தன் கையை வைத்து அழுத்தினான். இதுவே போதும் எனக்கு உணர்த்துவது போல… இதை தவிர வேற எதுவும் வேண்டாம் என்பது போல… அவளாகவே அவனை இறுக்கமாக அணைத்து இதழ் முத்தமிட்டாள்.

இருவரின் அன்பை சாட்சியாக கொண்டு…. பரஸ்பர நம்பிக்கையை வேள்வியாக வளர்த்து… இருமனங்கள் ஒருமிக்க…

அழகாக அங்கே ஒரு கந்தர்வ திருமணம் இனிதே நடந்தேறியது.

அனிவர்த் தேவர்ஷி கழுத்தில் தாலி என தெரியாமல் அணிவித்துவிட்டான். தெரிந்திருந்தால் அணிவித்திருக்கமாட்டான் தான். பக்கா பிசினஸ் மைண்ட் உஷாராகி இருப்பான். என்ன தான் தேவர்ஷி மேல் விருப்பம் இருந்தாலும் கல்யாணம் என்ற கமிட்மென்டுக்குள் சிக்க விரும்பவில்லை அதான் உண்மை.

தேவர்ஷி விளையாட்டு பிள்ளை தான். இருந்தாலும் குடும்பத்தில் சொல்லி வளர்க்கப்பட்ட ஒழுக்கநெறி… என்ன தான் காதலனை கணவனாக நினைத்தாலும் மனதில் ஒரு நெருடல். நெஞ்சில் உரசிய தாலி நெருடலை நீக்கி மனதை மயிற்பீலியாக வருடியது. உரிமை கிடைத்ததாக…உடமைபட்டவளாக உணர்ந்தாள்.

அவனாகவே அணிவித்த நொடி அவனை இழுத்து அணைத்து இதழில் முத்தமிட.. அவனுக்கோ அவளுடைய சாத்வீக முத்தம் போதவில்லை.அவள் இதழை இழுத்து தன் பற்களுக்கிடையே அதக்கி கடித்து சுவைத்தான்.

“ஸ்ஸ்..” வலியில் முனகினாள். அந்த முனகல் கூட வெளியேற வாய்ப்பின்றி உள்ளேயே அடங்கியது.

அணைப்பை இறுக்கினான். அவளுள் தன் தேடலை தொடங்கினான். தடைகளாக இருந்த உடைகள் எல்லாம் நாலு திக்கில் பறந்தது.

இவர்களின் இல்லறத்தின் ஆரம்பம் ஆடைகளுக்கு துறவறம்..

அவன் பார்க்கமுடியாமல் தவித்த அழகு எல்லாம் இன்று கண்களுக்கு விருந்தாக… அவளை தள்ளி நிறுத்தி இது வரை பார்க்காத.. இன்று பார்க்க முடிந்த அழகை அணு அணுவாக ரசித்தான். அது காதல் பார்வையாக இல்லாமல் காமப்பார்வையாக தான் இருந்தது. அவனின் பார்வையில் வெட்கம் பிடுங்கி தின்ன போர்வையை இழுத்து கழுத்து வரை போர்த்திக் கொண்டாள்.

“ப்ப்ச்..” என சலிப்போடு தலையை திருப்பி கொண்டான்.

போர்வையை இரு கைகளிலும் இறுக்கி பிடித்து கொண்டு அமர்ந்திருந்தவள் அருகில் நெருங்கி போர்வையை இழுக்க… அவள் இறுக்க.. பார்த்தான் இது வேலைக்கு ஆகாது என போர்வையோடு இழுத்து அணைத்து காதுமடலில் மெல்ல ஊதினான். அவனின் உஷ்ண மூச்சு பட்டு உடல் சிலிர்க்க.. அவளின் பிடி தளர்ந்தது… சட்டென போர்வையை உருவி எறிந்தான்.

அவனின் கள்ளதனத்தில் அடப்பாவி என இவள் தான் ஏமாந்து போனாள். அவளை பார்தது புருவங்களை ஏற்றி இறக்கி உல்லாசமாக சிரித்தான். செல்ல கோபம் கொண்டு அவனின் நெஞ்சில் பட்பட் என அடித்தாள். அடிக்கும் வேகத்தில் சற்றே அதிர்நத உடலை ரசித்தவாறே…

“நீ என்னை அடித்த மாதிரி நானும் உன்னை அடிக்கவா.. சேம் பிளேஸ்..” என கண்ணடித்து சிரித்தான்.

அவனின் பார்வை பதிந்திருந்த இடத்தை பாரத்து.. அச்சோ என அவனுக்கு முதுகு காட்டி அமர்நதுகொண்டாள். அவனுக்கு அதுவும் இன்னும் வசதியாக போனது. சந்தன நிற முதுகில் தன் உதடால் வருட… கூச்சம் தாளாமல் நெளிந்தாள். அவளை பின்புறமாகவே தூக்கி தன் மடியில் அமர்த்தி கொண்டான். அவளுக்கு இன்னும் அவஸ்தையாகி போனது. அவன் கைகள் உடையற்ற உடலில் சுகந்திரமாக விளையாண்டது. பின்புற கழுத்தில்.. காது வளைவில் முத்தமிட்டு.. முத்தமிட்டு.. அவளை தகிக்க வைத்து கொண்டிருந்தான்.அவன் கைகளும் உதடுகளும் காட்டிய வித்தைகளில் மயங்கி கிறங்கி இருந்தவளை தூக்கி படுக்கையில் கிடத்தினான். அவள் மேல் படர்ந்தான்.

முகம் எங்கும் முத்த ஊர்வலம் நடத்தினான். கழுத்து ஏற்ற இறக்கங்களில் நாவை கொண்டு தீட்டினான். அவன் நாக்கின் சிலுசிலுப்பு பட்டதில் உணர்சசி தாளாமல் அவன் கைகளை வலிக்க இறுக்கி நெறித்தாள். அவனுக்கு சுக வேதனையாகி போனது. சற்று கீழே அவன் பார்வை படை எடுக்க..அவள் மார்ப்புக்கு மத்தியில் ஒரு மச்சம். மார்ப்பின் வளைவில் சந்தன நிற உடம்பில் மிளகு சைசில் ஒரு மச்சம் வீற்றிருக்க… அதை பார்த்தவன்…

“வாவ்… பியூட்டிபுல்.. இவ்வளவு நேரம் இதை பார்க்கவேயில்லையே..” அசந்து போனான்.

“ச்சீ..” என அவனின் கையை கிள்ளினாள்.

“என்னடி..ச்சீ.. எவ்வளவு அழகா.. அதுவும் எனக்கு பிடிச்ச இடத்தில் இருக்கு.. அழகு எங்கு இருந்தாலும் ரசிக்கனும்.. ரசிக்கறதோட இல்லாமல் இதா இப்படி முத்தம் கொடுப்பேன்… இப்படி மீசையில உரசுவேன்… இப்படி கடிச்சு வைப்பேன்” என பல் தடம் பதிய கடித்து வைத்தான். ஒவ்வொன்றாக சொல்லி சொல்லி செய்தான்

19 – ஆடி அசைந்து வரும் தென்றல் Read More »

error: Content is protected !!
Scroll to Top