ATM Tamil Romantic Novels

Author name: Shaahithya Srinivasan

50889009-F850-47F7-B27B-F67C67D287A8

18 – ஆடி அசைந்து வரும் தென்றல்

18 – ஆடி அசைந்து வரும் தென்றல்

நான்கூட வந்து பஸ் வச்சுவிடுவேன் பாப்பா… என் ஆபீஸ்கு பஸ் ஸ்டாண்டும் வேற வேற ஏரியா எனக்கு லேட்டாகிடும்.. அதான் பார்ககறேன்” என திருகுமரன் புலம்பினார்.

“அதான் பா சொல்லறேன் நான ஆட்டோவில. போயிடறேன்..”என்றாள்.

கௌசல்யா மட்டுமே தனியாக எங்காவது செல்ல என வழக்கமாக ஒரு ஆட்டோ ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார் திருகுமரன். அந்த ஆட்டோ டிரைவருக்கு போன் பண்ணி சொல்லிவிட்டு…

“பார்த்து பத்திரமா போய் விட்டு மண்டே கண்டிப்பா வந்திடனும் தேவாம்மா.. இல்லனா தாத்தா திட்டுவார்”என எச்சரிக்கை செய்துவிட்டு அவர் கிளம்பிவிட்டார். ஆட்டோ காம்பவுண்டிற்குள் வருவது கூட பிடிக்காது என்பதால்.. கௌசல்யாவின் அறிவுரைகளை எல்லாம் மௌனமாக தலையாட்டி கேட்டுக் கொண்டு வெளியே தயாராக இருந்த ஆட்டாவில் ஏறி உட்கார்ந்த பிறகே நிம்மதியானது.

‘அப்பாடா… எப்படியோ சமாளித்து கிளம்பியாச்சு..’ ஆசுவாசமானாள்..

அனிவர்த் ஏர்போர்ட் பார்க்கிங்கில் டென்ஷனாக நின்று கொண்டிருந்தான்.

“போர்டிங்கு ஹாஃப்னவர் தான் இருக்கு இன்னும் இவளை காணோமே… இதுக்கு தான் நானே பிக்கப் பண்ணிக்கறேன் சொன்னேன் கேட்டாளா..” என புலம்பி கொண்டே அவளுக்கு அழைக்க… ரிங் போய் கொண்டே இருந்தது. அவள் எடுக்கவில்லை..

தேவர்ஷி தன் பேகில் போனை வைத்திருந்தாள். அதனால் ஆட்டோ சத்தத்தில் அவளுக்கு கேட்கவில்லை.

‘ஒருவேளை வரமாட்டாளோ… அதனால் கால் அட்டன் பண்ணலையா..’ என நினைத்து அனிவர்த் கோபத்தில் இருக்க…

தேவர்ஷி வந்துவிட்டாள். ஆட்டோவில் வந்திறங்கியவளை கண்டு கோபம் அதிகமானது. அவளாகவே வரட்டும் என நின்ற இடத்தில் இருந்து நகரவில்லை அனிவர்த்.

ஆட்டோவை அனுப்பி விட்டு அவனை தேடி வந்தாள் தேவர்ஷி.

“லேட்டாயிடுச்சா.. சாரி.. சாரி.. “ என்றாள் கெஞ்சுதலாக… அவள் கெஞ்சுதல் மனதை இளக்க.. இருந்தாலும்

“அதுக்கு தான் நானே வரேன் சொன்னேன்..” என கேட்கவும் செய்தான்.

“சரி வா.. லேட்டாகுது..” என கூட்டி சென்றான். திருவனந்தபுரம் விமானத்தில் அமர்ந்தும் கூட தேவர்ஷிக்கு படபடப்பு அடங்கவில்லை. என்ன தான் அனிவர்த் மேல கொண்ட காதலால் வீட்டில் சமாளித்து வந்துவிட்டாலும் உள்ளுக்குள் ஒரு சிறு பயம் இருக்க தான் செய்தது.

அவளின் பயந்த முகத்தை பாரத்து விமான பயணத்திற்கு தான் பயந்து கொள்கிறாள் என நினைத்து தோளில் கை போட்டு அணைத்து…

“வர்ஷிம்மா.. என் கூட இருக்கும் போது என்ன பயம்… சில்… “

அவனின் தோளில் சாய்ந்து கண் மூடிக் கொண்டாள். அவள் உச்சந்தலையில் முத்தம் வைத்து தன் நெஞ்சில் அவள் முகத்தை அழுத்திக் கொண்டான். சிறிது நேரத்தில் தேவர்ஷி அவன் நெஞ்சில் சாய்ந்தவாறே உறங்கி விட்டாள். தூக்கத்தில் லேசாக வாயை பிளந்து ஜொள் ஒழுக்கி அவனின் சட்டையை நனைத்திருந்தாள். தன் போனில் மூழ்கி இருந்தவன் தன் சட்டையின் ஈரத்தை உணர்ந்து குனிந்து பார்த்தவன் மெல்ல சிரித்துக்கொண்டான். தனது கை குட்டையை எடுத்து துடைத்துவிட்டான். அதில் தூக்கம் லேசாக கலைய…

“ம்ம்ம்” சிணுங்கலோடு தன் முகத்தை அவனின் மார்பில் புரட்டி இன்னும் வாகாக சாய்ந்து உறக்கத்தை தொடர்ந்தாள். அவளின் செயல் எல்லாம் அனிவர்த்தை இருப்பு கொள்ள விடவில்லை. சுற்றுபுறம் உணர்ந்து தன்னை கட்டுப்படுத்தி கொண்டான்.

இவர்களின் எதிர் சீட்டில் இருந்த மூத்த பெண்மணி இவர்களையே வெகு நேரமாக பார்த்து ரசித்திருந்தார். எதேட்சையாக அனிவர்த் திரும்பி அவரை பார்க்க..

“ஆர் யூ நியுலி மேரிட்” என் கேட்க.. அனிவர்த்தும் யோசிக்காமல்.. ஆமாம் என தலையாட்டினான்.

“நைஸ் ஃபேர்… பெஸட் விஷ்ஷஸ்..” என பாராட்டவும்… சிறந்த ஜோடி என்றதும் மனதுக்குள் மெல்ல மணம் பரப்பியது. அது எதனால் என யோசிக்கவில்லை யோசித்து இருந்தால் தேவர்ஷியை விட்டு இருக்கமாட்டானோ..என்னவோ…

“தேங்க்ஸ்..” என்றான் மனம் நிறைந்த சிரிப்போடு..

திருவனந்தபுரம் விமானநிலையத்தில் இறங்கி… அவன் பதிவு செய்திருந்த கார் காத்திருக்க… ஏறி அமர்ந்ததும் அனிவர்த் ஜர்கின் அணிந்து கொண்டான். தேவர்ஷியை பார்த்தவன்…

“வர்ஷி.. ஜெர்கின் போடு..” என்றான். அவள் முழிக்க…

“என்ன..” என்றான்.

“வர்தா.. நான் எதுவும் எடுத்திட்டு வரலை..” என்றான்.

“என்னது கொண்டு வரலையா.. அக்டோபர் மாசம் மழையும் குளிரும் இருக்கும் சொன்னே்ல..”

என்ன சொல்வாள்.. அவள் கிராமத்திற்கு தானே போகிறாள் என கௌசல்யாவே எல்லாம் எடுத்து வைக்க.. தேவர்ஷியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அதை அனிவர்த்திடம் சொன்னால் கோபப்படுவான் என நினைத்து…

“மறந்துட்டேன்..”என சொல்லி சமாளித்தாள். அதற்கும் கோபப்பட்டு முறைத்தான். டிரைவரிடம்..

“அண்ணா.. கொஞ்சம் ஷாப்பிங் பண்ணனும் ஏதாவது மால் போங்கண்ணா..” என்றான்.

சற்று நேரத்திலேயே மழை அடித்துப் பெய்ய…தேவர்ஷிக்கு குளிர ஆரம்பித்துவிட்டது. குளிரில் நடுங்க… அனிவர்த் சட்டென அவளை தூக்கி தன் மடியில் அமர்த்தி தனது ஜெர்கினின் ஜிப்பை கழட்டி அவளைஇழுத்து
ஜெர்கினை அவளுக்கும் சேர்த்தே போட்டுவிட்டான்.

தேவர்ஷி கூச்சத்தில் நெளிந்தவாறே..”வர்தா.. டிரைவர் இருக்கார்..” என்றாள் கிசுகிசுப்பாக..

“சோ வாட்..” என்றான்.

“இறக்கி விடுங்க.. ப்ளீஸ்..”

“இப்ப குளிருதா..இல்லைல பேசாம வா..” என்றான்.

அவள் பின்னங்கழுத்தில் மெல்ல ஊதினான். அவள் கழுத்தோர குட்டி குட்டி முடிகள் எல்லாம் சிலிர்த்து கொண்டு நின்றது. அவள் இடையை அழுத்தி பிடித்து பின்கழுத்தில் மீசை உரச முத்தங்களாக வைக்க… பெண்ணுக்கோ அடி வயிற்றில் இருந்து ஒரு சில்லிப்பான உணர்வு கிளம்பி உடல் எங்கும் பரவ… கணம் தாங்க முடியாமல்… தன் இடையில் இருந்த அவன் கையின் மேல் வைத்து.. அவன் கால்களை தன் கால்களால் பின்னிக் கொண்டாள்.

அனிவர்த்தின் உணர்வுகள் சீற்றம் எடுக்க… தன்னை கட்டுப்படுத்த முடியாமல்.. அவளை சட்டென இறக்கி பக்கத்தில் உட்கார வைத்தான். அவளும் இருக்கும் இடத்தை உணர்ந்து அமைதியாக இருந்து கொண்டாள். இப்பவே இப்படி செய்பவன்.. ரிசார்ட் போனதும் என்ன.. என்ன செய்வான் என சுகமான கற்பனையில் ஆழ்ந்து போனாள்.

லூலூ மாலில் வண்டி நிற்க…. அவளோடு இறங்கியவன்.. அவளின் கை கோர்த்து அங்குள்ள ஒரு துணிகடைக்குள் சென்றான். அவளுக்கு ஜெர்கின் எடுத்து விட்டு…

“வர்ஷி… வேற டிரஸ் ஏதாவது எடுத்துக்கறியா..” என கேட்டான்.

‘அச்சோ இன்னும் டிரஸ்ஸா.. இந்த ஜெர்கினுக்கே வீட்டில் என்ன சொல்லி சமாளிக்க போறேனோ தெரியலை. கேள்வியா கேட்டு கொல்வாங்க….’ என நினைத்தவள் மறுப்பாக தலை அசைத்தாள்.

“இங்கேயே ஏதாவது வேணும்னா வாங்கிக்கோ.. பொன்முடில பெரிசா கடைகள் ஏதும் இருக்காது..”

“எதுவும் வேண்டாம்” என சொல்லிவிட…

“சரி வா சாப்பிடலாம்..” என அங்கிருந்த ஒரு உணவகத்திற்கு அழைத்து சென்றான். இருவருக்கும் உணவை வாங்கி சாப்பிட்டு உணவகத்தை விட்டு வெளியில் வந்தனர் . அங்கு எதிரில் ஒரு நகை கடை தென்பட… அவளை அழைத்து கொண்டு அங்கே சென்றான். இங்கே எதற்கு என அவன் முகம் பார்க்க..

“வா.. ஏதாவது ஜூவல்ஸ் வாங்கிக்கோ…” என்றான்.

நகையா… என அதிர்ந்தவள்… இவன் அழைத்து வரும் பெண்களுக்கு எல்லாம் இப்படி தான் வாங்கி தருவானா.. என்ற எண்ணம் தோன்றியதும் தன்னால் இரண்டடி கால்கள் பின்னால்சென்றது.

இவனோடு பணம் பொருள் என ஆதாயத்திற்கு வரும் பெண்களும் நானும் ஒன்றா.. இவன் மேல் கொண்ட காதாலால் தானே.. திருமண்த்திற்கு முன்பு உறவு கொள்வது தவறு என தெரிந்தும்.. இவன் மேல் காதல் உணர்ந்த நொடியில் இருந்து அவனை காதலனாக அல்லமால் கணவனாகவே வரித்திருந்தாள். அவன் அவ்வளவு ஆசையோடும். எதிர்ப்பார்ப்போடும்.. கேட்க மறுக்க முடியாமல் தானே சரி என சம்மதித்தாள்.

“ஏய்.. வா..” என கை பிடித்து இழுத்தான்.

“வர்தா.. நகை எல்லாம் வேணாம்.. வா போகலாம்..” என இவள் அவனின் கை பிடித்து இழுத்தாள்.

அவளின் முகத்தை பாரத்தவனுக்கு ஏதோ சரியில்லை என தோன்ற..

“என்னாச்சு…”

“ஒன்னுமில்லை.. வா போகலாம்..” என்றாள் பிடிவாதமாக…

“இப்ப சொல்ல போறியா… இல்லையா…” என்று அவளை விட பிடிவாதமாக..

“இல்ல… இந்த மாதிரி தான் எல்லா பெண்களுக்கும்…” என முடிக்க முடியாமல் திணறினாள். அவள் என்ன சொல்ல வருகிறாள் என அவனுக்கு சரியாக புரிந்தது. புரிந்தவனுக்கு கோபம் வர…

“லூசாடி.. நீயும் மத்தவங்களும் ஒன்னா… மனுசன மூட்அவுட் பண்ணிட்டு..” ஏகத்திற்கும் முறைத்துக கொண்டு நின்றான்.

அவனின் ‘நீயும் மத்தவங்களும் ஒன்றா..’ என்ற வார்த்தைகளில் மனம் குளிரந்து போக… அப்பாடி நம்மை அப்படி எல்லாம் நினைக்கவில்லை என்ற நிம்மதி வந்தது. அவனை நெருங்கி உரசிக் கொண்டு நின்றாள்.

“இப்ப எதுக்குடி எரும மாடு மாதிரி உரசிட்டு இருக்க..” எரிச்சலாக..

“ஹீஹீஹீ… வர்தா.. கோபமா இருக்கறியா..”

“இல்லை… குளுகுளுனு இருக்கேன்..”

“ஹீஹீ.. சும்மா காமெடி பண்ணிகிட்டு..”

“யாரு நான் காமெடி பண்றேன்…”

ஹீஹீ..ஹீ என அசடு வழிந்தாள்.

“ரொம்ப வழியாதே.. இப்ப நகை எடுக்க வர்றியா..என்ன..”

“ம்ம்ம்.. போலாமே..” என அவனோடு சென்றாள்.

அவன் டைமண்ட் செக்‌ஷனுக்கு அழைத்துச் சென்றான்.

“ரிங் பார்க்கறியா. பென்டன்ட் பார்க்கறியா.. உனக்கு பிடிச்சத செலக்ட் பண்ணு”என்றான்.

அவள் அமைதியாக எல்லாம் பாரக்க..

“அண்ணா.. அந்த பேங்கல்ஸ் எடுங்க… இங்க பாரு இந்த பேங்கல்ஸ அழகா இருக்கு…”

அவள் பார்வை எங்கோ இருக்க.. அனிவரத் அவளின் தோளில் தட்டி..

“வர்ஷி… எங்க பார்த்திட்டு இருக்க.. செலக்ட் பண்ணு”

“வர்தா.. எனக்கு டைமண்ட் வேணாம்.. அங்க கோல்டு ஜூவஸ் இருக்கு பார்க்கலாமா” என கேட்க..

அவளை அழைத்துக் கொண்டு தங்க நகை இருந்த பக்கம் சென்றான். அங்கே தேவர்ஷி அருகில் சற்று தள்ளி திருமண நகைகள் எடுத்து கொண்டிருந்தனர் ஒரு குடும்பத்தினர். எல்லாம் பெரிய பெரிய நகைகளாக இருக்க.. ஒரு செயின் மட்டும் சின்னதாக சற்று வித்தியாசமாக இருந்தது. அதை பார்த்தும் தேவர்ஷிக்கு பிடித்துப் போக.. தனக்கு நகை எடுத்து காண்பித்து கொண்டிருந்தவரிடம் அதை காண்பித்து அது என்ன என கேட்டாள்.

“அது கேரளா டிரடிஷனல் மங்கள்சூத்ரா..”

“அப்படினா.. என்ன அண்ணா..”

அதற்குள் அனிவர்த்கு ஒரு கால் வர…

“வர்ஷி.. நீ செலக்ட் பண்ணு.. பேசிட்டு வரேன்” என சொல்லி தள்ளி சென்றான்.

“இது கேரளா தாலி மேடம்..” என்றார் அவர்.

அதையே காண்பிக்க சொன்னாள் அதில் அத்தனை டிசைன் அத்தனை வகைகள் இருக்க.. அதில் ஒன்றில் இலை வடிவில் ஓம் என்று பொறிக்கப்பட்டு அழகாக இருக்க… அதுவும் செயினில் கோர்த்திருக்க… அதையே எடுத்துக்கொண்டாள்.

அனிவர்த் பேசி முடித்து வந்தவன்” செலக்ட் பண்ணிட்டியா..” என கேட்க…

புன்னகயோடு அந்த செயினை எடுத்து காட்ட.. கையில் வாங்கி பார்த்தான்.

‘கண்டுபிடித்திடுவானோ..’ பயந்து போய் பார்த்தாள்.

“சரி வா.. டைம் ஆகிடுச்சு.. மழை வந்திட்டா.. ஹில்ஸ் ஏற கஷ்டமாகிடும்..”

நகையை வாங்கி கொண்டு அவசரமாக வண்டிக்கு வந்தனர். லேசாக மழை ஆரம்பித்திருக்க.. தேவர்ஷி ஜெர்கினை அணிந்து கொண்டாள். மழை ஏற.. ஏற… மழையும் காற்றும் வலுக்க… ஜெர்கினை மீறி குளிர.. அனிவர்த்தை ஒட்டி கொண்டு அமர்ந்தாள். அனிவர்த் அவளின் தோளில் கை போட்டு இன்னும் அவளை தன்னோடு இறுக்கிக் கொண்டான்.

மதியம் போல் ரிசார்ட்கு வந்தனர். மதிய நேரமே மழையினால் இருட்டி மாலை போல இருக்க…

இரண்டு உள்ளங்கைகளை தேய்த்து “கிளைமேட் செம்மயா இருக்குல்ல..” என்றவன் தேவர்ஷியை நெருங்கி அணைத்தான். சற்று நேரத்தில் அணைப்பு இறுக்கி கொண்டே போக… கழுத்து வளைவில் முத்தம் கொடுத்தான். அவனின் நோக்கம் புரிந்தவளுக்கு அவளின் அடி வயிற்றில் இருந்து பய உணர்வு கிளம்ப… இப்பவேவா… இப்ப வேண்டாமே என்று தோன்ற…தள்ளி போட நினைத்தாள்.

“பசிக்குது..” என்றாள்.

ஏதோ ஒன்று மனதில் அவனுக்கு உடன்பட தடுக்க… தள்ளி போட எண்ணி பசியை கையில் எடுத்துக் கொண்டாள்.

காலையில் சாப்பிட்டது தானே.. இடையில் எதுவும் எடுத்துக் கொள்ளாத்தால் பசிக்குது போல என நினைத்தவன்

“நான் ஆர்டர் பண்ணறேன்..நீ போய் ப்ரஷாகிட்டு வா..”என்றான்.

இருவரும் தங்களை சுத்தப்படுத்தி கொண்டு வந்திருக்க.. உணவும் வந்திருந்தது. அங்கிருந்த சிறிய கிச்சனில் இருந்த டைனிங்கில் அமர்ந்து சாப்பிட்டனர் அனிவர்த் உற்சாகமாக சாப்பிட.. தேவர்ஷிக்கோ உணவு இறங்கவில்லை. தட்டை அளந்து கொண்டிருந்தாள்.

“பசிக்குதுன.. சாப்பிடாம இருக்க… “

“டேஸ்ட் பிடிக்கலையா.. சாப்பிட முடியாட்டி வச்சிடு” என எழுந்து சென்றுவிட்டான்.

இவளுக்கும சாப்பிட முடியாது என தோன்ற… கை கழுவி வந்தாள். அவன் முன் செல்ல கால்கள் பின்னிக் கொண்டது.

இவளை பார்த்ததும் சட்டென தனது கைகளில் அள்ளிக் கொண்டான். அவனின் செயலில் பயந்து போய் அவனின் சட்டையை இறுக பற்றி கொண்டு அவனை பார்த்தாள். அவன் கண்கள் காட்டிய மாயங்களில் சிக்கி… மயங்கி தன்னை மறந்தாள்.

படுக்கையறைக்கு சென்றவன் அவளை படுக்கையில் கிடத்தி…

“ப்ளீஸ் வர்ஷிம்மா..” என்றான் அவள் கண்களை பார்த்து..

அவன் கண்களில் தெரிந்த காதல் மயக்கத்தில்… மறுக்க மனம் வரவில்லை.

மனமோ வரைவு வேட்கை (மணம் புரிய விருப்பம்) கொள்ள..

தன்னோடு தான் போராடினாள்.

ஏற்பதா.. எதிர்ப்பதா..

மனம் தடுமாற…

தன்னை மறந்தாள்..

தாலியை மறந்தாள்…

தடுமாறினாள்… தடம் மாறினாள்….

18 – ஆடி அசைந்து வரும் தென்றல் Read More »

1FA9A5CE-FFDE-4836-B1DE-DF067E2537DE

17 – ஆடி அசைந்து வரும் தென்றல்

17 – ஆடிஅசைந்து வரும் தென்றல்

அனிவர்த் டிரிப் போகலாமா என கேட்டதும்…தேவர்ஷி சம்மதம் சொல்லிவிட்டாள். அனிவர்த் மகிழ்ந்து போய் அவளை இழுத்து அணைத்து முகம் எங்கும் குட்டி குட்டி முத்தங்கள் வைத்தான்.

அடுத்தநாள் வேலைக்கு வந்த தேவர்ஷி முகமே வாடியிருக்க…அனிவர்த்தும் கவனித்தான். ஆனால் அவளிடம் கேட்க முடியாமல் அவனுக்கு பிசினஸ் கால் அதன் சம்மந்தமான டீலிங் என வேலை நெட்டித் தள்ள… மதிய உணவிற்கு பிறகு தான் சற்று ஓய்வு கிடைக்க…

“வர்ஷி.. இங்க வா..”

முகத்தை தொங்கப் போட்டு கொண்டே வந்து நின்றாள்.

“என்ன ஆச்சு.. ஏன்இப்படி இருக்க…”

“ம்ம்ம்… வீட்ல ட்ரிப் போக வேண்டாம் சொல்லிட்டாங்க…”

கேட்ட் அனிவர்த்துக்கு ‘லூசு.. இதை எல்லாமா வீட்ல கேட்பாங்க.. இவ தான முடிவு பண்ணனும்..’ என கோபம் கொண்டான்.

“வீட்ல என்னனு கேட்ட…” என்றான் எரிச்சலாக…

தேவர்ஷி இரவு தந்தை வந்ததும் தந்தையிடம்…

“ப்பா.. நான் என் எம்டி கூட இரண்டு நாள் பிசினஸ் ட்ரிப் போகனும்… போயிட்டு வரவா..”

“அது எல்லாம் வேண்டாம் பாப்பா.. ஆபிஸ்ல இருந்தே வேலை செய்யற மாதிரி பார்த்துக்கோ… இப்படி எல்லாம் போகனும்னா.. அந்த வேலையே வேண்டாம்..” என் திருகுமரன் சொல்ல…

“ப்ளீஸ்பா.. நான் வரேனு சொல்லிட்டனே… ப்ளீஸ் பா..” என கொஞ்சலாக கெஞ்சினாள்.

“இல்ல பாப்பா… இது எல்லாம் உங்க தாத்தாவிற்கு பிடிக்காது..”

“இதை கூட அவர்கிட்ட கேட்கனுமா..” என முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள்.

“எல்லாமே அவரை கேட்டு செய்வது தானே வழக்கம்.. அதை எப்படி விடமுடியும்… அவர் உன்னை வேலைக்கு அனுப்பும் போதே என்ன சொன்னாரு.. பார்த்தில்ல.. இதை எல்லாம் அவர்கிட்ட கேட்க முடியாது.. எனக்கே இஷ்டமில்ல பாப்பா..” என்றதும் தாயை பார்க்க…

“அப்பா சொல்றது சரி தான் பாப்பா.. அப்ப சொல்லற மாதிரி வெளியூர்லாம் போய் தான் வேலை செய்யனும்னா.. வேலையே வேண்டாம் ஜாலியா வீட்லயே இரு…” கௌசல்யாவும் சொல்லிவிட.. தேவர்ஷியால் எதுவும் பேச முடியவில்லை.

‘நல்ல வேளை இந்த பிரவீன் இல்லை. தப்பிச்சோம்..’ என நிம்மதி பெருமூச்சு விட்டாள். இருந்தாலும் அனிவர்த் கூட போக முடியாதா.. என்ற கவலையும் இருந்தது. அனிவர்த்திடம் வரேனு சொல்லியாச்சு.. இப்ப என்ன பண்றது என தெரியாமல் முழித்தாள். அவனிடம் எப்படி சொல்வது.. அவனுடன் போக முடியாது என நினைத்ததும் மனம் சோர்ந்து போனது.

அதை அனிவர்த்திடம் இப்போது சொல்ல.. அவனுக்கு கோபம்..

“வர்ஷி.. நீ மேஜர்.. படிச்சு முடிச்சு சம்பாதிக்கற… உன் லைப்ல எதைனாலும் நீ தான் முடிவு பண்ணனும். அப்பா சொன்னாங்க.. அம்மா சொன்னாங்கனு சொல்லறது எல்லாம் நாட் ஃபேர்…” என கோபமாக பேச…

தேவர்ஷி கைகளை பிசைந்து கொண்டு பாவமாக நின்றாள்.

“முடிவா என்ன தான் சொல்லற.. வரியா… இல்லையா…” சத்தம் போட..

பயந்து போய்.. “வரேன்.. கண்டிப்பா வரேன்..” சொல்லிவிட்டு.. இன்னும் கோபமாக ஏதாவது பேசிவிடுவானோ என பயந்து தனது இடத்திற்கு சென்றுவிட்டாள்.

அவள் வருகிறேன் சொன்னதிலேயே அவன் கோபம் சற்று தணிந்திருந்த போதும்.. முழுவதும் தீரவில்லை. முகத்தில் மிளகாயை அரைத்து பூசியது போல தான் இருந்தான். அவளிடம் சரியாக பேச கூட இல்லை.

தேவர்ஷி அவன் அப்படி இருப்பதை பார்த்து பார்த்து மேலும் சோர்ந்து போனாள்.அவனை எப்படியாவது சமாதானம் செய்து விட எண்ணி.. இத்தனை நாள் செய்யாத வேலை எல்லாம் இழுத்துப் போட்டு செய்தாள். அதில் சந்தேகம் கேட்க.. முடித்து அவனிடம் ஒப்புதல் வாங்க.. அவனிடம் சென்று அதிகம் பேச்சு கொடுத்தாள்.

அவனோ ஓரிரு வார்த்தைகளில் பேச்சை முடித்து கொள்ள… தேவர்ஷிக்கு கடுப்பாக வந்தது.

“ஓரங்குட்டான்.. ரெட்சில்லி.. என்ன செய்தாலும் பேசாம இருந்து கடுப்படிக்கிறான்…நான் தான் வரேன் சொல்லிட்டன்ல.. இன்னும் என்னவாம்.. போடா ..”

அமைதியாக இருந்த அந்த ஏசி அறையில் அவள் திட்டியது தெளிவாக கேட்கவில்லை என்றாலும்.. ஏதோ தன்னை திட்டுகிறாள் என தெரிந்தது அனிவர்த்கு…

“என்ன.. என்னை திட்டிட்டு இருக்கறியா…” என தனது இடத்தில் இருந்தே கொஞ்சம் சத்தமாக கேட்டான்.

“ஆஹாங்.. திட்டிட்டாலும்..” என முணுமுணுத்து விட்டு சத்தமாக இவளும்..”இல்லயே.. அப்படி எல்லாம் இல்லையை..”. என்றாள் பல்லை கடித்து..

“பேசாம வேலையை பாரு…” அதட்டலாக..

அப்படியே மாலை வரை செல்ல… அவள் கிளம்பவேண்டும். அவனிடம் சமரசம் ஆகாமல் செல்ல முடியவில்லை அவளால்.. அவனை பார்ப்பதும் தன் பொருட்களை எடுத்து வைப்பதுமாக இருந்தாள். அவனோ அவளை கண்டு கொள்ளாமல் தன்வேலையில் முழ்கி போயிருந்தான். எல்லாம் எடுத்து வைத்தாகிற்று. என்ன செய்ய.. அவனிடம் மெல்ல சென்றாள். அவனருகே எதுவும் பேசாமல் போய் நின்றாள். அப்படியாவது பார்ப்பானா என…

அவள் வந்தது தெரிந்தும் சிறிதும் கண்டு கொள்ளவில்லை அவன். அப்போது அதன் கர்மசிரத்தையாக சிஸ்டத்தில் தன்னை புதைத்தை கொண்டான். முகம் வாடினாள். அவனை நெருங்கி.. அவனின் தோள்பட்டையை இரண்டு விரல்களால் சுரண்டினாள்.

“வர்தா.. வர்தா…”

சிஸ்டத்தில் இருந்து பார்வையை எடுக்காமலேயே…

“ப்ச்ச.. என்ன..” சலித்து கொண்டான்.

முணுக்கென கண்களில் நீர் கரை கட்ட..

“நான் கிளம்பட்டுமா..”

இப்போதும் அவளை பார்க்காமல்…

“டைம் ஆனா கிளம்ப வேண்டியது தான.. என்கிட்ட எதுக்கு கேட்கற..”

கண்களில் தளும்பி நின்ற நீர் கன்னங்களில வழிந்தோட… தளர்ந்த நடையுடன் திரும்பி செல்ல..

அவனுக்கே அவளை பார்த்ததும் ஒரு மாதிரி ஆகிவிட… பின்னால் இருந்து அவள் கையை பிடித்து இழுத்தான். அவன் இழுத்த வேகத்திற்கு சுழண்டவாறு அவனின் மடியில் வந்து விழுந்தாள்.

விழுந்தவளை தூக்கி நன்றாக தன் மடியில் இருத்தி கொண்டு இடையோடு அவள் கைகளை கோர்த்து அவள் தோள் வளைவில் தன் முத்தை தாங்கி..

“என்னடாம்மா..”

“நான் வரேன் சொல்லிட்டன்ல…. அப்புறமும் இப்படி இருந்தா..” முகம் சுணங்கினாள்.

“பின்ன என்ன.. நேத்து ஓகே சொல்லிட்டு இன்னைக்கு வந்து வீட்ல வேணாங்கறாங்க அப்படினா எனக்கு கோபம் வராதா… இது எல்லாமா வீட்ல கேட்பாங்க.. நீ படிச்ச பொண்ணு.. உன் வயசுக்கு எவ்வளவு… அந்த அளவுக்கு மெச்சூரிட்டி இருக்கனும்… உன் லைப் நீ தான் டிசைட் பண்ணனும்.. என் லைப் எப்படி இருக்கனும் இன்னைக்கு வரைக்கும் என் முடிவு தான்..”

காதோர சுருளை ஒதுக்கி விட்டு.. மென்மையாக பேச… அவள் சற்றே திரும்பி அவன் முகத்தை பார்த்து..

“எங்க வீட்டில் கொஞ்சம் சட்ட திட்டங்கள் அதிகம்..எல்லாம் என் தாத்தாவை கேட்டு தான் செய்யனும் அதான்..”

அனிவர்த் எரிச்சலாக அவளை பார்க்க… வேக வேகமாக…

“வீட்ல சொன்னது தான் சொன்னேன்.. என் முடிவுனு சொன்னேனா… நான் வீட்ல ஏதாவது சொல்லிட்டு வரேன்…. ஆனா இரண்டு நாள் தான் ஓகேவா..”

அவன் கன்னத்தில் முத்தம் வைத்தாள்.

“என்னடி குழந்தை முத்தம் கொடுக்கற… இப்படியா பாய் ப்ரண்டுக்கு முத்தம் வைப்பாங்க.. எப்படினு நான் சொல்லி தரேன்”

அவள் இதழை இழுத்து சுவைக்க… அவளின் இதழ்ரசம் கள்ளுண்ட மயக்கத்தில் இருந்தவன்.. சில நிமிடங்களில் அவளை விட்டு விலக..

காதல் மயக்கத்தில் இருந்தவள் விலகல் பிடிக்காமல் அவனின் கழுத்தை வளைக்க.. அவளின் செயல் அவன் மனதையும் வளைக்க…

“வர்ஷிமா…நேரமாகுது கிளம்பு..” என எழுப்பி நிற்க வைத்தான்.

பருவத்திற்கேற்ற பக்குவமில்லாத பெண் தானே.. காலை தரையில் உதைத்து…

“பை பை “ என சிணுங்கலாக சொல்லி கிளம்பிவிட்டாள்.

‘இவ மனசு எப்ப வேணாலும் மாறிடும்.. இந்த வீக் எண்ட்லயே அரேஞ்ச் பண்ணிடனும்’ என எங்க.. எப்படி .. யோசிக்க ஆரம்பித்தான்.

‘சிம்லா.. போலாமா.. வேண்டாம் இரண்டு நாள் பத்தாது..”

‘ஊட்டி இல்லை கொடைக்கானல் போலாமா… ச்சே வழக்கமா போற இடம்.. வேண்டாம் இவளோடு போறது சம்மதிங் ஸ்பெஷல்..எங்கு எங்கு’ என யோசித்தான்.

இறுதியாக பொன்முடி போகலாம் என முடிவு செய்து.. உடனே ஆன் லைனில் ஒரு ரிசார்ட் புக் செய்தான். அடுத்தநாள் வந்த தேவர்ஷியிடமும் சொல்லவிட்டான்.

“வர்ஷி… இந்த வீக. எண்ட் பொன்முடி போறோம்..”

“இந்த வீக்கேவா…” தயக்கத்துடன் இழுத்தாள்.

உடனே அவளை முறைத்தான் அனிவர்த். அவன் முறைப்பை கண்டு… அவனின் தாடையை பிடித்து கொஞ்சலாக…

“உடனே கோவிச்சிக்காத வர்தா… நானே என்ன சொல்லிட்டு வரதுனு குழம்பி போய் இருக்கேன..”

அதற்கும் அவளை முறைக்க… “சரி… சரி… என் லைப் நான் தான் டிசைட் பண்ணனும் அப்படி தானே…நானே முடிவு பண்றேன் சரியா…” அவனை சமாளித்தாள்.

“இங்க பாரு வர்ஷி… சேட்ர்டே மார்னிங் செவன்கு ப்ளைட்… ஒன்ஹவர் முன்னாடியே கிளம்பனும்..நான் வந்து பிக்கப் பண்ணிக்கறேன்..”

‘அச்சோ காரியம் கெட்டுச்சு..’ என நினைத்தவள்… அவசர அவசரமாக மறுத்தாள்.

“இல்லை..இல்லை.. நானே வந்திடறேன்”

அனிவர்த் “ஏன் நான் வந்தா என்ன…”

“இல்லை உங்களுக்கு வீண்அலைச்சல்..ஹிஹி..” சிரித்து சமாளித்தாள்.

“என்ன அலைச்சல் உன்னை பிக்கப் பண்ணிகிட்டா.. எனக்கு டென்ஷன் இல்லை..” என்றவனை ஏதோ சொல்லி சரி கட்டினாள்.

இரண்டு நாள் என்ன சொல்லி எப்படி வீட்டில் சம்மதம் வாங்குவது என மண்டையை உருட்டி… செயல்படாத மூளையை கசக்கி… ஒரு வழி கண்டுபிடித்துவிட்டாள்.அதை செயல்படுத்தனும..சரியாக நடக்க வேண்டும் என கடவுளை வேண்டிக் கொண்டு.. செயல்படுத்தினாள்.

கௌசல்யாவின் சித்தி ஒருவர் கணவரை இழந்து குழந்தைகளின்றி தனியாக கிராமத்தில் இருக்கிறார். எந்த நவீன வசதிகள் இன்றி எளிமையாக வாழும் கிராமத்து மனிதர்கள் வாழும் ஊர். எப்பாவது கௌசல்யா சென்று வருவார். தேவர்ஷி இரண்டு ஒரு தடவை உடன் சென்றவளுக்கு பாட்டியும் பசுமையான ஊரும் பிடித்து போக.. ஒரு இரண்டு தடவை தாத்தாவின் திட்டுக்களை மீறி தனது அப்பாவிடம் பிடிவாதம் பண்ணி தனியாகவே சென்று வந்திருக்கிறாள். இப்போதும் அதையே சொல்லி பிடிவாதமாக.. சம்மதம் வாங்கினாள்.

சனிக்கிழமை காலை கிளம்பும் போது.. இவளை பஸ் ஏற்றி விட்டு வருமாறு திருகுமரன் பிரவீனிடம் சொல்ல.. ‘அச்சோ கெட்டுது போ..’ மனதில் அலறியவள்…

“இல்லப்பா.. நான் ஆட்டோவில் போய் கொள்கிறேன்..”

“ஏன் நான் உன்னை அனுப்பிட்டு காலேஜ் போறேன் வா..” என அழைத்தான் பிரவீன்.

“இல்ல நான் இவன் கூட போகமாட்டேன். இவன் போற வழி எல்லாம் திட்டிகிட்டே கூட்டிட்டு போவான்” இன்ஸ்டண்டா.. கண்ணீரை வரவழைத்து டிராமா பண்ணினாள்.

“ஆமாம் திட்டாம என்ன பண்ணுவாங்க.. அந்த ஊர்ல என்ன இருக்கு.. தாத்தாவிற்கும் பிடிக்கறதில்ல..”

‘ஆமாம்… உங்க தாத்தா ஒரு ஸ்டேட்டஸ் பைத்தியம்.. அவருக்கு ஈக்வலா இருந்தாத தானே பிடிக்கும் பிசினஸ் பார்க்காம படிச்ச படிப்புக்கு வேலைக்கு போற நம்ப அப்பாவையே பிடிக்காது.. க்கும்…’என மனதில் தாத்தாவை திட்டி தீர்த்தாள்.

“ப்பா உங்க முன்னாடியே எப்படி பேசறான் பாருங்க… நான் இவன் கூட எல்லாம் போகமாட்டேன்” என பிடிவாதமாக அசையாமல் நின்றாள்.

“எப்படியோ போ.. எனக்கு டைம் ஆகுது..” என கத்திவிட்டு பிரவீன் சென்றுவிட்டான்

17 – ஆடி அசைந்து வரும் தென்றல் Read More »

1AC5985F-6A67-4610-A43B-67BBB3CD7B98

16 – ஆடி அசைந்து வரும் தென்றல்

16 – ஆடி அசைந்து வரும் தென்றல்

லூசு.. பொறுப்பே கிடையாது.. இவளை வச்சு மேய்க்க முடியல…“ தேவர்ஷியை திட்டியவன்… அதை தன் சேப்டி லாக்கரில் பத்திரப்டுத்தினான்.

அடுத்த இரண்டு நாட்களில் தனது அறையிலேயே அவளுக்கு தனி கேபின் போட்டான்.

தேவர்ஷியை அழைத்து… கேபினை காட்டி “இந்த கேபின் உனக்கு தான்.. பிடிச்சிருக்கா.. என் கூடவே இருந்து வேலை செய்வ.. “ தன் கூடவே நாள் முழுவதும் இருப்பதில் சந்தோஷப்படுவாள் என எதிர்பார்ப்பபோடு அனிவர்த் கேட்க…

“ போங்க.. போங்க.. இந்த கேபின் ஒன்னும் எனக்கு வேணாம்… எனக்கு அந்த கேபின் தான் பிடிச்சிருக்கு.. நான் இங்க வரமாட்டேன்”

அனிவர்த்கு சற்று ஏமாற்றமாக இருந்தது. சடுக்கென மனம் சுணங்க…

“ஏண்டி… என் கூட இருக்கப் பிடிக்கலையா..” சிறு கோபத்துடன் கேட்டான்.

அவன் முகத்தை பார்த்தவளுக்கு அவனின் கோபம் புரிய… அவள் பார்த்தும் அவனோ முகத்தை திருப்பிக் கொள்ள… அவனை நெருங்கி உரசி நின்று.. அவனின் மார்பில் பார்வையை பதித்து.. அவனின் சட்டையை இடது கையால் பிடித்து இழுத்து…. வலது கையால் பட்டனை திருகி கொண்டே..

“எனக்கு அந்த கேபின் செட்டாயிடுச்சு.. என் அணில் அங்க நான் இல்லைனா ஏமாந்து போயிடும்… அணில் பாவம் தான…”

தேவர்ஷியின் இந்த செயல் அவனுக்கு பிடித்திருந்தது. வந்த சிறு கோபம் கூட கரைந்துவிட… அவன் பார்த்த பெண்கள் எல்லாம் இவளை போல மனதை வளைக்கவில்லை.

‘இவளை வச்சுகிட்டு… அணில் பாவமாம்.. மனுசனோட கஷ்டம் புரியாம..’

அவன் ஒன்றும் பேசாமல்இருக்க… நிமிர்ந்து அவன் முகத்தை பார்ததாள். அவனும் இவளையே பார்க்க.. அதில் இளக்கம் இல்லாமல் இருக்க… எம்பி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.அனிவர்த் சிரித்துவிட்டான். ‘நல்லா ஆள மயக்கறா..’

“இந்த கேபின பாரு.. ஜன்னல் ஓரம் தான் போட்டு இருக்கேன். இங்கயும் உன்அணில் வரும்டி..”

“நிஜமா வருமா..”

“இங்கயும் சாக்லேட் வை.. அங்க உன்னை காணாம தேடிகிட்டு இங்க வந்திடும்…”

“டூ டேஸ் பார்ப்பேன்.. இங்க வரலைனா நான் அங்கயே போயிடுவேன்..” சுட்டு விரலை நீட்டி மிரட்டலாக பேசினாள்.

அவளின் விரலை பிடித்து மெல்ல கடித்து…”என்ன மிரட்டலா..” என உல்லாசமாக சிரிக்க…

“வலிக்குது வர்தா..” சிணுங்கினாள்.

அவளின் விரலை பிடித்து ஊப்.. ஊப்..என ஊதி.. விரலில் தன் மீசையை வைத்து உரச… குறுகுறுப்பு தாங்காமல் அவள் விரலை இழுக்க… இப்போ விரலை விட்டுட்டு கன்னத்தில் மீசையை உரச… கூச்சம் தாளாமல் அவனை பிடித்து தள்ளினாள். அவளை கையை பிடித்து இழுக்க.. மேலே வந்து மோதியவளை அணைத்து இதழ் அமுதம் பருகிட.. அவன் கைகளோ சற்று அத்துமீறி.. அவள் உடலை அளக்க… தேவர்ஷி மயங்கி கிறங்கி போய் நின்றாள்.

சில நிமிடங்களில் அவளை விடுவித்தவன் கலைந்திருந்த அவள் தலைமுடிகளை கோதி ஒதுக்கி…

“போ.. உன் திங்க்ஸ் எல்லாம் எடுத்திட்டு வா..”என்றான் மிருதுவாக…

தனது பொருட்களோடு அனிவர்த் அறைக்கு வந்ததும் முதல் வேலையாக ஜன்னலை திறந்து வைத்து ஒரு சாக்லேட் துண்டை வைத்தாள்.

அவள் ஜன்னல் திறந்தே வைக்க.. ஏசியை அணைத்து வைக்க வேண்டியதாகி போனது. சில நிமிடங்களுக்கு ஒரு தடவை அணில் வருகிறதா.. என அவள் பார்க்க.. அனிவர்த அவளையும் ஜன்னலையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு இருந்தான். இருவரும் ஒழுங்காக வேலை செய்யவில்லை.

அதற்குள் ஆபிஸ் முழுவதும் அனிவர்த் தனது அறையில் தேவர்ஷிக்கு கேபின் போட்டு கூடவே வைத்திருப்பதாக அரசல் புரசலாக பரவி.. பல்வேறு யூகங்களை கிளப்பிவிட்டிருந்தது.

மதியம் வரை அணில் வராமல் போக… அனிவர்த்திடம் தொண தொணக்க ஆரம்பித்துவிட்டாள்.

“பாருங்க அணில் வரல..”

“வரும்.. புது இடம்ல தேடி வரும் வெயிட் பண்ணு..”

சிறிது நேரம் கழித்து மீண்டும் ஆரம்பித்தாள்.

“இன்னுமே வரல.. நான் அங்கயே போறேன்..”

அனிவர்த்தால் தேவர்ஷியை சமாளிக்க முடியவில்லை. எரிச்சலாக வந்தது,

“சும்மா நை நைனு நச்சு பண்ணாம வேலையை பாரு.. அது வரும் போது வரட்டும்” கோபமாக திட்டி விட…

“என்னை ஏமாத்தி இங்க கூட்டிட்டு வந்திட்டு இப்ப திட்டறிங்க..” ஓவென அழுக..

அனிவர்த் பயந்து போனான். ‘ இவள் அழுவதை யாராவது பார்த்தா.. நான் தான் சின்னபுள்ளையை ஏதாவது பண்ணிட்டேனு நினைக்கமாட்டாங்க..’

அவசர அவசரமாக எழுந்து அவளருகே வந்தவன் அவளை கை பிடித்து எழுப்பி.. கண்களை துடைத்து..

“அழுகாதடா.. வர்ஷிம்மா… நான் என்ன சொல்லிட்டேனு.. இப்படி அழுகற… அணில் வரும்டா.. உன்னை காணோம்னு தேடி பார்க்கும் நாளைக்குள்ள வந்திடும் குட்டிம்மா.. “ என சமாதானம் செய்தவன் ஏதேட்சையாக ஜன்னல் பக்கம் திரும்பி பார்க்க..அங்கு அணில் சத்தமில்லாமல சாக்லேட்டை கொறித்து கொண்டிருந்தது.

“டேய்.. அங்க பாரு..” என அவள் தோளை தட்டி காண்பித்தான்.

“ஹேய்..ய்…ய்.. அணில் வந்திடுச்சு…” என கை தட்டி குதூகலிக்க.. அனிவர்த் ஒரு பெருமூச்சை இழுத்து விட்டவாறு.. ‘நல்ல வேளை அணில் வந்திடுச்சு.. இல்ல இவ பேசியே என்னை ஒருவழியாக்கி இருப்பா..’ என நினைத்தான்.

தினமும் அனிவர்த்துக்கு தேவர்ஷியோடு கெஞ்சலும் கொஞ்சலுமாகவே சென்றது. முன் தினம் அணில் சாக்லேட்டு தின்றுவிட்டு அனிவர்த் சேர் அருகே சில துகள்களை சிதற விட்டு சென்றிருக்க… அதற்கு வந்த எறும்புகள் சேரிலும் சேரை சுற்றிலும் ஊர.. அடுத்த நாள் காலையில அது தெரியாமல் அனிவர்த் வந்த அமர.. சிறிது நேரத்தில் அவனை மொத்தமாக பதம் பார்த்துவிட்டது.

துள்ளி கொண்டு எழுந்தவன் “ஐயோ.. கடிக்குதே..” என அலறி… சட்டை பேண்ட் என எல்லாத்தையும் அவசர அவசரமாக கழட்டி எறிந்தான். அவனின் அலறலில் தேவர்ஷி அவனருகே ஓடினாள். இன்னர்ஸோடு அவனை பார்க்கவும் வெட்கம் மேலிட.. அவசரமாக கைகள் கொண்டு முகத்தை மூடி கொண்டாள்.

வேகமாக தனது பெர்ஷனல் அறைக்குள் புகுந்து கொண்டான் அனிவர்த்.உள் பனியனையும் கழட்டி எறிந்தவன்.. முதுகிலும் சில எறும்புகள் இருக்க… அவனால் தட்டி விட கைகளுக்கு எட்டவில்லை.

“வர்ஷி..” என கத்தினான்.

அவனின் கத்தலில் பயந்து போய் வந்தவள் அவன் மினி டிரங்கோடு நிற்பதை கண்டு இப்பவும் வெட்கத்தில் திரும்பி நின்று கொண்டாள்.

“என்னபண்ற.. முதுகுல எறும்பு இருக்குது பாரு தட்டி விடு..” முதுகில் கைகளை துழாவியவாறு… அவனின் நிலை உணர்ந்து அவசரமாக அவனருகே சென்று தட்டிவிட்டாள். வெற்று முதுகில் அவளின் சில்லிட்ட கைகள் படவும் அவன் உணர்வுகள் சிலிர்த்துக் கொண்டது.

அவனின் முதுகில் எறும்புகள் கடித்திருந்த இடத்தில் எல்லாம் சிவந்து தடித்திருக்க… ஓடிப் போய் தனது பேகில் இருந்து மாய்சரைஸரை எடுத்து வந்து அவன் முதுகில் சிவந்திருந்த இடங்களில் பூச… கண்களில் மையல் கொண்டு காற்றில் மிதந்தான். முன்னால் திரும்பி மார்ப்பை காண்பித்தான். ரோமங்களின்றி மொழு மொழுவென்று இருந்த மார்ப்பில் எறும்பு கடித்த தடயங்கள் இருக்க… அதையும் காண்பிக்க…. அவளோ ரொம்ப கவனமாக கீரிமை தடவ.. இவனோ அவளின் விரல்நுனிகள் துளி துளியாக தன்னுள் கடத்தும் உணர்வுகளில் கண் மூடி லயித்திருந்தான்.

எல்லாம் தடவி முடித்தவள் நிமிர்நது அவனை பார்க்க.. அவனோ கண்ணை மூடி பரவசத்தில் இருக்க… புரியாமல்…

“வர்தா..” நெஞ்சில் சுரண்ட…

அப்படியே அவள் விரல்களை பிடித்த தன் நெஞ்சில் தேய்க்க.. அவளின் உள்ளங்கையில் குறுகுறுக்க.. கைகளை உருவ முயல.. அவன் இழுத்து பிடித்தான். இவள் உருவ… அவன் இழுக்க… ஒரே இழு..பறி… விளையாட்டாக இருந்தது. ஒரு கட்டத்தில் அவளோடு மல்லு கட்ட முடியாமல்…

“சும்மா தான் நில்லேன்டி..” அவளை இழுத்து அணைத்து… மறுபடியும் கண்களை மூடிக்கொண்டான். சற்று நேரம் அப்படியே இருக்க..

“வர்தா.. வலிக்குது விடறியா..”

கண்களை திறந்து பாரத்தவன்…முகம் சுணங்கி நின்றவளை கண்டு ’மனுசனோட் பீலிங்ஸ் புரியுதா பாரு.. இருடி உன்னை…’ குனிந்து அவள் இதழ்களை வலிக்க கடித்து சுவைக்க… வலியை மீறிய சுகம் மேவிட… தேவர்ஷியும் அனிவர்த்தை இறுக்கி அணைத்தாள். அவளின் ஒத்துழைப்பு அவனுக்கு முன்னேறும் துணிச்சலை கொடுக்க… அவளை அள்ளி கொண்டு அங்கிருந்த சோபாவில் கிடத்தி மேலே படர்ந்தான். மினி டிரங் மட்டுமே இருந்த அவன் வெற்று உடம்பை கண்கள் விரிய பார்க்க.

“என்னடி என் அழகுல மயங்கிட்டயா..”

“ம்க்குக்கும்..” உதட்டை சுழித்தாள்.

சுழித்த உதட்டை இரு விரலால் பிடித்து இழுத்து சுண்டிவிட்டான்.

“ஸ்ஸா… “ உதட்டை மடித்து நாவால் நீவ…

“ஏய்.. நிறுத்து.. அது என் வேலைடி..”என தன் நுனி நாக்கால் ஒத்தடம் கொடுக்க… அவனுக்கு வசதியாக லேசாக உதட்டை பிதுக்கி காண்பித்தாள். அவனின் நாக்கின் குளிர்ச்சி… அவளுள் வெம்மையை கடத்த… அவனை இழுத்து தன மேல் போட்டுக் கொண்டாள்.

அவளை இறுக்கி அணைத்து முகம் எங்கும் தன் உதடால் மெல்லிறகாக வருட.. அவளோ தகிக்க… மெல்ல முகத்திலிருந்து கழுத்து வரை வருடி கொண்டே வந்தவனுக்கு அதற்கு கீழே இறங்க.. அவளின் குர்தி தடையாக் இருக்க… தயக்கமே இல்லாமல்… அவளின் அனுமதி எல்லாம் கேட்காமல்.. உரிமையாக அதனை கழட்ட முயல….

“சார்… சார..” என்ற குரல் தடையாக வர…

“ச்சை..” என விலகியவன்…

“நான் சொல்லும் போது வா..” அவளிடம் கிசுகிசுப்பாக சொல்லிவிட்டு.. எப்பவும் வைத்திருக்கும் ஒரு செட் டிரஸ்ஸை வேகமாக அணிந்து கொண்டு வெளியில் வந்தான்.

அங்கு சுந்தர் தான் நின்று கொண்டிருந்தான். அவன் பார்வையோ அறையை சுற்றி நோட்டம் இட்டு கொண்டிருந்தது.

“என்ன சுந்தர்..”

“இல்ல சார்.. இந்த வவுச்சர்ஸ்லாம் செக் பண்ணிட்டிங்கனா.. அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மென்ட்கு அனுப்பிடுவேன்..”

“வச்சிட்டு போங்க..”

பைலை வைத்து விட்டு போகாமல் சுற்றி சுற்றி பார்க்க…

“என்ன சுந்தர்..” அதட்டலாக அனிவர்த் கேட்க..

“தேவர்ஷியை காணோம்.. அதான் பார்த்தேன்…”

“ஏன் அவங்க எங்க போறதுனாலும் உங்ககிட்ட பெர்மிஷன் வாங்கனுமா..”

“நோ சார்.. அப்படி எல்லாம் இல்லை..”

“உங்க வேலை என்னவோ.. அத மட்டும் பாருங்க..” என மிரட்டி அனுப்பி வைத்தான்.

அவன் சென்றதும் உள்ளே வந்தவன்…. “வர்ஷிமா..” என அழைக்க.. அவனை பார்த்ததும் எழுந்து நின்றவளை இழுத்து அணைத்தவன் அவளின் முகத்தை நிமிர்த்தி பார்வையோடு பார்வையை கலக்க விட்டு..

“வர்ஷிமா.. நாம இரண்டு பேரும் ஒரு டூடேஸ் எங்கயாவது ஒரு டிரிப் போகலாமா..”

அவன் கண்களின் வசியத்தில் மயங்கி அவள் தலை சம்மதமாக சரி என ஆடியது..

16 – ஆடி அசைந்து வரும் தென்றல் Read More »

33E9EAC7-71DB-4889-B2E0-86D31F386E9D

15 – ஆடி அசைந்து வரும் தென்றல்

15 – ஆட அசைந்து வரும் தென்றல்

தனது மொபைல் அடிக்க சிரமப்பட்டு நெருப்பாக எரிந்த கண்களை பிரித்துப் பார்க்க… திரையில் ‘ரெட்சில்லி’ என காட்டியது. உயிர்பித்து காதில் வைத்தவள்…”சொல்லுங்க சார்..” குரலே பலஹீனமாக.. சோர்வாக இருக்க…

காதில் வைத்தவள்…”சொல்லுங்க சார்..” குரலே பலஹீனமாக.. சோர்வாக இருக்க…

அவளின் குரலை கேட்ட அனிவர்த் துடித்துப் போனான்.

“குட்டிம்மா.. வர்ஷிம்மா.. என்னடா ஆச்சு..” என உருகினான்.

“அது ஒன்னும் இல்ல வர்தா.. நேற்று மழைல நினைஞ்சேனில்ல… அதான் பீவர் வந்திடுச்சு போல…”

அவள் பேச்சை சரியாக கவனிக்காமல்…

“அதுக்கு தான்.. என்கூட வானு கூப்பிட்டேன்.. நீ எங்கடி கேட்ட..” என கோபப்பட்டான்.

“ஆமாம்.. அப்படி திட்டுவிங்க… அப்புறம் கூப்பிட்டா ரோசம் கெட்டு போய் பின்னாலயே வந்திருவாங்களா..”

“உன்மேல தப்பு இருக்கவும் தான திட்டினேன்.. சரி அத விடு.. டாக்டர்கிட்ட போனியா.. மெடிசன் எடுத்துகிட்டயா..”

“டாக்டர் வந்து பார்த்திட்டு மெடிசன் கொடுத்தாங்க.. இப்ப தான் சாப்பிட்டு டேப்லெட் போட்டேன் வர்தா..”

“ஏய்… இப்ப என்ன சொன்ன..” ஒரு வித பரபரப்பாக கேட்டான்.

“டேப்லெட் போட்டேன்னு சொன்னேன்..”

“அது இல்லடி.. நீ என்னை என்ன சொல்லி கூப்பிட்ட..”

கண்களை சுருக்கி… நுனி நாக்கை கடித்து… கையை உதறி…

“அச்சோ.. எப்பவும் மனசுக்குள்ள கூப்பிடற மாதிரி.. சொல்லிட்டேன் போல” என முணுமுணுக்க..

தெளிவாக அனிவர்த் காதில் விழ….

“அப்போ என்னை அடிக்கடி நினைப்பியா… கூப்பிடுவியா… அப்படி என்ன தான் நினைப்ப.. சொல்லு..”

“அப்படி எல்லாம் எதுவும் இல்லை… போங்க… நான் கால் கட் பண்ணறேன்..”

“ஏய்ய்ய்.. ஒரு நிமிசம் வர்தா கூப்பிடு..”

“ம்கூம் மாட்டேன்..”

“ப்ளீஸ் குட்டிம்மா.. ஒரே ஒருதடவை… கேட்கனும் போல ஆசையாயிருக்கு.. ப்ளீஸ்டி செல்லம்ல…”

“வர்தா.. “என கிசுகிசுப்பாக அழைக்க..

“சரியா கேட்கல.. கொஞ்சம் சவுண்டா.. ப்ளீஸ்டாம்மா..”

“போடா வர்தா..” என வேகமாக.. சத்தமாக சொல்லிவிட்டு போனை அணைத்துவிட்டாள்.

போனையே உல்லாசமாக பார்த்திருந்தான் மனம் நிறைந்த சிரிப்போடு…

இரண்டு நாட்கள் அவளை பார்க்காமல் மனம் நிலை கொள்ளவில்லை தான். இருந்த போதும் அவ்வப்போது அவளுக்கு அழைத்து பேசி ஆறுதல் தேடிக் கொண்டான். இரண்டு நாட்கள் கழித்து வந்தவளை அள்ளி அணைத்து முத்தமிட.. கைகள் பரபரக்க… அவள் தன் அறைக்கு வரும் வரை கூட காத்திருக்க முடியாமல் தவித்துப் போனான்.

தேவர்ஷி அனிவர்த் அறைக்கு வந்தாள். இரண்டு நாட்கள் அவனோடு போனில் பேசியதில் இது வரை இல்லாத ஒரு நெருக்கம் உரிமையும் வந்திருந்தது. அதுவும் இரவில் வெகு நேரம் பேச… என்ன பேசினார்கள் என தெரியாமல் பேசினார்கள்… சிரித்தார்கள்.. ரசித்தார்கள்..

தேவர்ஷிக்கு இந்த இரண்டு நாட்களில் பிடித்தம் காதலாக மாறி இருந்தது. காதல் என்ற உணர்வு அவளை முழுதாக அமிழ்ந்து அழுத்த… ஆபிஸ் வந்தவள் அவனை பார்க்க போவதற்குள் மூச்சு முட்டும் உணர்வு… கால்கள் பின்ன… நடையில் சற்று தேக்கம்… முகத்தில் துளியளவு நாணம்… ஏற்கனவே இருந்த சிவப்போடு இன்னும் தூக்கலான சிவப்பு கன்னங்களில் ஏறியிருக்க… காஜல் தீட்டிய கண்களில் காதல் மயக்கம்…

காதலை முழுதாக உணரும் முன்பே அவன் அணைப்பு.. இதழ்முத்தம் எல்லாம் பிடித்திருந்தது. இப்போது இன்னும் கூடுதலான எதிர்பார்ப்பு மனதில்… காதலை சொல்லாமலே இருவரும் உணர்ந்திருந்தனர்..இப்போது இன்னும் என்னன்ன செய்வானோ என நினைக்க.. உடலில் சிறு நடுக்கம் ஓடியது.

அவளது அறையில் இருந்து தனது அறைக்கு வரும் வரை கேமராவின் வழியாக பார்த்திருந்தவனுக்கு அவளின் அன்ன நடை… முகம் காட்டும் கலவையான உணர்வுகள் எல்லாம் புதிதாக இருக்க… அவனுள்ளும் சின்ன படபடப்பு…

உள்ளே வந்தவள் குனிந்து கொண்டே “குட்மார்னிங் சார்..”

அவனிடம் இருந்து பதில் வரவில்லை சில நிமிடங்கள்… மெல்ல கண்களை உயர்த்தி பார்த்தாள். புருவங்களை ஏற்றி இறக்கினான். வெட்கம் மிகுந்திட சட்டென பார்வையை தழைத்து எங்கோ பார்த்தாள். கருவிழி இரண்டும் இங்கும் அங்கும் உருண்டது. அனிவர்த் எழுந்து அவளை கண்களால் விழுங்கியவாறு ஒவ்வொரு அடியாக அழுத்தமாக எடுத்து வைத்து நெருங்கினான். அவனின் அழுத்தமான காலடி ஓசை அவன் வரவை சொல்ல… இனம் புரியாத பயம்… கைகால் உதறல்.. என்ன செய்வானோ… பதட்டம்…ஏதாவது செய்வானோ.. எதிர்பார்ப்பு.. எல்லாம் காதல் படுத்தும் பாடு..

அவளை நெருங்கியவன் சிறிது இடைவெளி விட்டு கைகளை மார்ப்புக்கு குறுக்கே கட்டி நின்றவன்… அவளிடம் விளையாண்டு பார்க்ககும் ஆசை தோன்ற…

“என்ன தேவவர்ஷி… எதுக்கு இவ்வளவு டென்ஷன்… கம்பெனி சேர்மென்கு ஒரு குட்மார்னிங் சொல்லறதுக்கு இத்தனை பதட்டம் எதுக்கு…”

‘என்னது சேர்மென்னா.. வேற எதுவும் இல்லையா..’ விழிகளில் நீர் கசிய படக்கென நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்க்க…

கண்களில் குறும்பு மின்ன… காதல் கண்ணாக நின்றவனை கண்டு…

‘எல்லாம் விளையாட்டா..’ என கோபம் கொண்டு அவனை நெருங்கி அவன் தோளில சரமாரியாக அடிக்க… அவளை இழுத்து மார்ப்புக்குள் பொதித்து கொண்டான். அவன் மாரப்பில் முகம் புதைத்திருந்தவள் கண்களில் கண்ணீர் வடிய.. அவன் சட்டையை நனைக்க… அவள் முகத்தை நிமிர்த்தியவன்…

“எதுக்குடா அழுகற குட்டிம்மா.. “

“நான் உங்களை எப்படி பார்க்க வந்தேன்.. நீங்க சேர்மன் சொல்லறிங்க..”

“பின்னே.. சேர்மன் இல்லையா…” என இழுக்க..

“எனக்கு சேர்மன் மட்டும் தானா..” கொஞ்சலாக..

“நோ.. சம்திங் ஸ்பெஷல் பார் யூ..”

அவன் சொல்லிய சந்தோஷத்தில்.. அவனே எதிர்பாராத நேரம் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் ஒன்று வைத்தாள்.

“தப்பு… தப்பு.. முத்தம் கொடுத்த இடம் தப்பு… இதோ இங்க கொடுக்கனும்” தனது உதடுகளை தட்டி சொல்ல…

“ம்ம்ம் கொடு… கொடு… இங்க கொடு..” என்றான் உல்லாசமாக…

“ம்கூம் மாட்டேன்.. போங்க..”

“கொடுக்காம இங்க இருந்து உங்களை அனுப்பமாட்டேன்.. வாங்க..” என அவளை போலவே பேச…

தேவர்ஷி கெஞ்சுதலான பார்வை பார்க்க… அனிவர்த் பிடிவாதமாக நிற்க… வேறு வழியில்லை என நினைத்து கதவை பார்த்தாள்.

“என் அனுமதி இல்லாம என் ரூம்கு வர துணிச்சல் உனக்கு மட்டும் தான் இருக்கு..” என சிரிக்க…

அவனின் நெஞ்சில் செல்லமாக குத்த.. அவள் கையை பிடித்து தடவி..

“ஏய் இப்படியே நேரத்தை கடத்தி சீட்டிங் பண்ணலாம்னு நினைக்கறியா…”

எக்கி அவன் பின்னந்தலையில் கை கொடுத்து அவனை தன் உயரத்திற்கு குனிய வைக்க… அவளுக்கு சிரமம் எதுக்கென அவளை தன் உயரத்திற்கு தூக்கி பிடித்தான்.

அவன் தூக்கி பிடித்த இடம் பின்புறம் அவன் கைகள் அழுந்த…. அது வேறு அவஸ்தையாக இருக்க நெளிந்தாள். இவள் வேலைக்காக மாட்டா என நினைத்தவன் தானே அவள் இதழில் தன் இதழை கோர்த்தான். சில நிமிடங்களில் அவன் இதழ் அவளின் கழுத்து நரம்பை கவ்வி இழுக்க… கண்ணனின் மாயங்கள் எல்லாம் காதல் ராதையை பித்து கொள்ள.. அவனின் தோளிலேயே துவண்டு சாய்ந்தாள். துவண்டவளை தூக்கி கொண்டு அங்கிருந்த சோபாவிற்கு செல்ல எத்தனிக்க… அவனின் மொபைல் சிணுங்க… காதலில் கரைந்து… கனவில் மிதந்து.. காற்றில் பறந்த இருவருக்கும் மொபைலின் ஒலி தரை தட்டி நிற்க வைத்தது.

“ம்ப்ச்..”என காற்றில் கைகளை வீசி..கோபமாக மொபைலைப் பார்க்க… அவனின் ஏமாற்றம் முகத்தில் அப்பட்டமாக தெரிய… அதை பார்த்து கிளுக்கி சிரித்தாள்.

“ஏய் உன்னை..” கை நீட்டி அவளை எட்டி பிடிக்க போக… அடித்து ஓய்ந்திருந்த மொபைல் மீண்டும் ஒலி எழுப்ப… ஏமாற்றமாக அவளை பார்க்க..

“பை வர்தா..” என நிற்காமல் ஓடிவிட்டாள்.

தன் முகம் பார்த்து வர்தா என அழைக்க சொல்ல ஆசை கொண்டிருக்க… நிற்காமல் சொல்லி சென்றவளை ஏக்கமாக பார்த்தான்.

அனிவர்த்தும் காதலை சொல்லவில்லை.. தேவர்ஷியும் சொல்லவில்லை.. சொல்லாமலேயே இருவருக்கும் ஒரு புரிதல் வந்திருந்தது. அவளை பார்த்திருப்பதும்.. அவளோடு சின்ன சின்னசில்மிஷங்கள்… இரவில் போனில் மோகப்பேச்சும் முத்த சத்தமுமாக காதலை அரங்கேற்றி கொண்டிருந்தனர்.

ஒருநாள் ஆயாம்மா தேவர்ஷியிடம்…

“தேவா பாப்பா… எம் புருஷன் வாங்கற சம்பளத்தை பூராத்தியும் குடிச்சே அழிச்சிபுடறான். வூட்ல ஒரே கஷ்டமா இருக்கு.. பையனுக்கு இஸ்கூல் பீசு கட்டனும்.. ஏதாவது உதவி பண்ணு பாப்பா..” என சேலை தலைப்பால் கண்ணை கசக்கி வராத கண்ணீரை துடைக்க…

தேவர்ஷி் ‘அச்சோ பாவம்.. எவ்வளவு கஷ்டம் இவங்களுக்கு…’ என மனம் இளகிவிட…

“பாவம் ஆயாம்மா நீங்க.. எவ்வளவு பணம் கட்டனும்..”

‘ஆஹா.. லூசு நம்பிடுச்சு லம்பா ஒரு தொகை பார்த்திடலாம்’ என கண்ணில் ஆசை மின்ன…

“பெரிய இஸ்கூலுல படிக்கறான் பாப்பா… இந்த கூட்டி துடைக்கற பொழப்பு என்னோடு போகட்டும்.. அவனாவது நல்லா பெரிய ஆபீசரா போகனும்னு என் கஷட்த்த மீறி படிக்க வைக்கறேன்.. முப்பதாயிரம் ரூவா.. பீசு கட்டமுடியல.. பள்ளிகூடத்துக்கு வரவேணானு பெரிய வாத்தியார் சொல்லிபுட்டாரு.. ஏதாச்சும் உதவி பண்ணு பாப்பா..” என வராத கண்ணீரை வரவைக்க.. சேலை தலைப்பில் கண்களை தேய்க்க.. உண்மை என நம்பிவிட்டாள் தேவர்ஷி.

அவ்வளவு தொகை பணமாக கையில் இல்லாதால் தனது வலது கைவிரலில் இருந்த ஒரு பவுன் மீன் மோதிரத்தை கழட்டி கொடுத்தாள்.

“ஐயோ பாப்பா இது எல்லாம் வேண்டாம்… பணமா இருந்தா கொடு… அதுவும் கடனா கொடு.. திருப்பி அடைச்சிடறேன்..”

“என்கிட்ட பணமா இல்ல ஆயாம்மா.. இதை வச்சுக்குங்க..திருப்பி எல்லாம் தர வேண்டாம்..” என கை பிடித்து அழுத்தி கொடுத்தாள்.

“ரொம்ப டேங்க்சு பாப்பா..” என கண்களில் ஆசை மின்ன.. வாங்கிவிட்டு வேகமாக சென்றுவிட்டது அந்தம்மா..

பார்த்திருந்த அனிவர்த் ‘இவளை வச்சுகிட்டு… இவ்வளவு ஏமாளியா இருக்கறளா… பேசாம என் ரூம்லயே இவளுக்கு ஒரு கேபின் போட்டறளாமா..’ என யோசித்தான்.

தேவர்ஷியிடம் மோதிரத்தை வாங்கியதும் அரைநாள் விடுப்பு எடுத்துக் கொண்டு முதல் வேலையாக விற்று காசு பார்த்துவிட எண்ணி.. அனிவர்த் அறைக்கு வந்தது அந்த ஆயாம்மா..

ஒன்றும் காட்டிக் கொள்ளாமல்…” சொல்லுங்க.. ஆயாம்மா..”

“சார்… அரைநாளு லீவு வேணும்..”

“எதுக்கு..”

“ஒரே பேதியாக போவுது.. சார்… டாக்டர்கிட்ட போவுனும்…”

“ம்ம்ம்…அப்படியா…” புருவ சுளிப்புடன்…

“ஆமாம் சார்..ரெம்ப சோர்வா இருக்கு….குளுகோசு ஏத்தனும்..”

“அச்சச்சோ… பாவம்..”

அனிவர்த் பரிதாபப்பட்டு பேசுகிறான் என நினைத்து கொண்டு அதிகமாக அளந்து விட்டு கொண்டிருந்தது அந்தம்மா…

“குளுக்கோசு ஏத்த சொன்னா கைல துட்டு கூட இல்ல சாரு..”

“ம்கூம்..”என்றான் பார்வையை உயர்த்தி ஆச்சரியமாக…

‘என்னாதிது .. எப்பவும் எதுவும் கேட்காமல் பணம் தருவாரு.. இன்னைக்கு இப்படி கேட்கறாரு’ என பேந்த பேந்த முழித்தது.

ஆயாம்மாவின் திருட்டு முழியை பார்த்தவாறு இரண்டாயிரம் ரூபாய் தாளகளை ஐந்தை எடுத்து டேபிள் மேல் வைத்தான்.

கண்களில் ஆசை மின்ன.. அசட்டு சிரிப்பு சிரிக்க…

“பணம் வேணுமா..”

“ஆமாம் சார்.. டாக்டரு பீசு கொடுக்கனும்..”

“அப்ப ஓகே.. மோதிரத்தை கொடுத்திட்டு இந்த பணத்தை எடுத்துக்குங்க…”

“மோதிரமா… எந்த மோதிரம் சார்…எனக்கு எதும் தெரியாது..” என திடுக்கிட்டு தட்டு தடுமாறி பேசியது.

“ஒழுங்கா கொடுத்திட்டா ஒன்னும் பண்ணாம மன்னிச்சு விட்றுவேன்.. எல்லாம் கேமரால ரெக்காரட் ஆகியிருக்கு…இல்ல அப்படினா போலீஸ்ல பிடிச்சு கொடுத்துருவேன்…” அனிவர்த் மிரட்டவும்…

போலீஸ் என்றதும் பயந்து போய் சேலை முந்தானையில் முடிந்து வைத்திருந்த மோதிரத்தை எடுத்து டேபிள் மேல் வைத்தது.. ஒரு இரண்டாயிரம் தாளை மட்டும் எடுத்து கொடுத்து…

“இனி இந்த மாதிரி யார்கிட்டயாவது ஏதாவது வாங்கினிங்க… வேலையை விட்டு தூக்கிடுவேன்.. போலீஸ்லயும் சொல்லிடுவேன்”

“இல்ல.. சார்.. வாயே திறக்கமாட்டேன்..” என குனிந்து ஒரு கும்பிடு போட…

“லீவ் எல்லாம் கிடையாது.. போய் வேலையை பாருங்க..” என விரட்ட…

வந்தவரை இலாபம் என பணத்தை வாங்கி கொண்டு ஓடிவிட்டது..

மோதிரத்தை கைகளில் எடுத்துப் பார்த்தான். மீன் வடிவத்தில் கண் பகுதியில் ஒற்றை வெள்ளை கல் பதித்திருக்க..அழகாக இருந்தது.

15 – ஆடி அசைந்து வரும் தென்றல் Read More »

A0B9BA23-E25E-4B7C-A37C-2EA931B9EC11

ஆடி அசைந்து வரும் தென்றல் – 14

14 -ஆடி அசைந்து வரும் தென்றல்

“ரெட்சில்லி.. ஓரங்குட்டான்… மூஞ்சிய பாரு உர்ருனு… கொஞ்சம் சிரிச்சா தான் என்ன..” என முணுமுணுத்தவள்.. வேலையை பாரக்கலாம் என சிஸ்டத்தை பார்க்க ஒன்றும் புரியலை…

“அடியேய்.. தேவா தலையும் புரியல.. வாலும் புரியல.. இப்ப என்ன பண்ண… முடிச்சிட்டு தான் போகனும் சொன்னாரே… ப்ச்ச.. விடு பார்த்துக்கலாம்… எவ்வளவோ பார்த்துட்டோம்… இவர சமாளிக்க முடியாதா…”

மீண்டும் கேம் விளையாட்டில் மூழ்கி போனாள். அனிவர்த் பார்த்து விட்டு பரவாயில்லை நாம ஸ்டிரிக்டா சொல்லவும் செய்யறா.. இனி இவகிட்ட இப்படி தான் நடந்துக்கனும் என தன்னையே மெச்சிக் கொண்டான். அவளை பற்றி சரியாக தெரியாமல்…

அலுவலகம் முடிய ஒருமணி நேரம் இருக்க… அனிவர்த்திற்கு ஒரு பிசினஸ் சர்க்கிள் பார்ட்டிக்கு செல்ல வேண்டியதாக இருந்ததால்.. தேவர்ஷி எந்த அளவுக்கு முடித்திருக்கிறாள் என பார்த்து விட்டு செல்லலாம் என அவள் கேபினுக்கு சென்றான். அவன் வந்தது கூட தெரியாமல் விளையாடி கொண்டு இருக்க… பார்த்தவனுக்கு கோபம்…

“வர்ஷி… என்ன பண்ணிட்டு இருக்க…”

திடீரென பின்னால் கேட்ட அவன் சத்ததில் பயந்து போய் அடித்து பிடித்து எழுந்தவள் தடுமாறி அவன் மேலேயே விழுகப் போக.. அவளை பிடித்து நிறுத்தியவன்…

“எப்ப பாரு.. எதிலும் விளையாட்டு… ஒரு இடத்தில் ஆடாம கொள்ளாம உன்னால நிக்க முடியாதா.. அவ்வளவு தூரம் சொல்லிட்டு போனேன்.. மறுபடியும் கேம் விளையாடிட்டு இருக்க… அறிவிருக்கா உனக்கு.. நம்ம ஒர்க்ல சின்சியரா இருக்கனும்… ஒரு டெடிகேசன் இருக்கா… உன் விளையாட்டுக்கு சேலரி தரமுடியுமா.. வாங்கற சேலரிக்கு ஒர்க் பண்ணனும்ங்கற எண்ணம் இல்லையா.. என்ன நினைச்சுகிட்டு இருக்க… ஒர்க் பண்ற எண்ணம் இருந்தா வா.. இல்லயா வரவே வராத… என்ன பண்ணுவியோ தெரியாது… இன்னைக்கு நான் கொடுத்த ஒர்க்க முடிச்சுகொடுத்துட்டு தான் போகனும்.. மைண்ட் இட்.. “ என மூச்சு விடாமல் கத்த..

உண்மையிலேயே சற்று பயந்து தான் போனாள் தேவர்ஷி. அவள் முகத்தை பார்த்தவனுக்கு இன்னும் கோபம் ஏறியது.

“எப்ப பாரு முகத்தை பாவம் போல வச்சுகிட்டு.. ஆளை ஏய்க்கறது… ஒழுங்கா வேலையை முடிச்சு கொடுத்திட்டு தான் போகனும் புரிஞ்சுதா…” என கத்தி விட்டு நிற்காமல் சென்றுவிட்டான்.

கண்ளில் நீர் கோர்க்க… ‘எப்படி எல்லாம் பேசிட்டு போறான்.. ரெட்சில்லி.. பெரிய இவனாட்டம் என்னை திட்டிட்டு போறான்.. இன்னைக்கு வேலையை முடிச்சு கொடுத்துட்டு இவனை வச்சுக்கிறேன்’ என ரோசத்தோடு செய்தாள்.

அனிவர்த் வீட்டிற்கு சென்று ப்ரஷ்ஷாகி பார்ட்டிக்கு சென்றவன் கொஞ்ச நேரத்திலேயே தேவர்ஷியை மறந்து போனான். இரவு ஏழு மணி போல ஆபிஸ் செக்யூரிட்டி அனிவர்த்துக்கு போன் பண்ணி இன்னும் தேவர்ஷி கிளம்பலை என சொல்லவும்.. அவளுக்கு அழைத்தான். அவள் எடுக்கவில்லை. மீண்டும் மீண்டும் முயற்சிக்க.. அவள் எடுக்காமல் போக… உடனே ஆபிஸ்கு கிளம்பி போனான்.

இவன் போன போதும் அவள் வேலை செய்து கொண்டு இருந்தாள். பார்த்தவனுக்கு கோபம் தான் வந்தது.

“டைம் என்னாகுது.. இன்னும் என்ன பண்ணிட்டு இருக்க…”

அவனுக்கு பதில் சொல்லாமல்.. அவனை கண்டு கொள்ளாமல்… அவள் வேலையில் கண்ணாக இருக்க..

இவளை என பல்லை கடித்தவன்.. “ஏய்… நான் சொல்றது காதுல விழுகல..” என அவள் கையை பிடித்து எழுப்ப.. முகத்தை திருப்பிக் கொண்டாள்.

“கிளம்பு முதல்ல..” என அவளது தோளை பிடித்து தள்ள.. அவன் கையை உதறிக் கொண்டு நகராமல் கைகளை கட்டிக் கொண்டு விரைப்பாக நின்றாள்.

“சொன்னா கேட்கமாட்ட..” என திட்டியவன்.. சிஸ்டத்தை சட்டவுன் பண்ண போகவும்…

“அச்சோ நான் இன்னும் சேவ் கொடுக்கல..” என பதற…

அவனே உட்கார்ந்து சேவ் கொடுக்கப் போக.. அவன் சொன்னது மட்டும் இல்லாமல்.. இதுவரை செய்யாமல் இருந்தவற்றையும் முடித்திருந்தாள்.அவன் மெச்சுதலாக பார்க்க… உதட்டை சுழித்து வெடுக்கென முகத்தை திருப்பிக் கொண்டாள்.

அவன் சேவ் கொடுக்க.. “இன்னும் எரர் செக் பண்ணல..” எங்கோ பார்த்துக கொண்டு சொன்னாள்.

“எல்லாம் நாளைக்கு பண்ணிக்கலாம் கிளம்பு..” என்றான்.

அவள் தனது பேகை எடுத்துக் கொண்டு கிளம்பவும்.. எதுவும் பேசாமல் சிறு குழந்தையாக கோபித்து கொண்டு செல்ல.. அனிவர்த்துக்கோ அவளை அப்படி அனுப்ப மனம் கேட்கவில்லை.

“வர்ஷி..” மென்மையாக அழைக்க… அவள் நிற்காமல் செல்ல…

“வர்ஷிம்மா..”

“டேய்.. குட்டிம்மா..”

என பின்னால் உல்லாசமாக சிரித்து கொண்டே சென்றான். அவளோ நிற்காமல் நடக்க.. இரண்டு அடி வேகமாக சென்று அவள் கையை பிடித்து தன்புறம் திருப்பியவன்…

“பேசுடா.. கண்டுக்காம போற..” என சிரிப்புடன் கேட்க..

“போ.. ஒன்னும் வேணாம்.. என்ன திட்டிட்டல்ல.. உன் கூட பேசமாட்டேன்..” என முறுக்கிக் கொண்டு சென்றாள்.

பேசிக் கொண்டே வெளியே வந்துவிட்டார்கள். செக்யூரிட்டி இவர்களை வித்தியாசமாக் பார்க்க… அதை எல்லாம் பாரக்கும் நிலையில் இருவரும் இல்லை.

இவர்கள் வெளியே வந்த போது லேசாக மழை தூறிக் கொண்டு இருக்க… பார்க்கிங் ஏரியாவிற்கு வருவதற்குள் நன்றாக பெருமழையாக மாறியிருக்க…

தேவர்ஷி மழையில் நனைந்து கொண்டே.. வண்டியை எடுக்க…

அவளருகே வேகமாக சென்று..”வர்ஷி.. இந்த மழைல உன்னால போகமுடியாது.. வா நான் டிராப் பண்றேன்..”

எதுவும் பேசாமல் வண்டியை ஸடார்ட் பண்ண… வண்டி முன் வந்து நின்று…

“சொன்னா கேளுடா.. நைட் டைம் மழை வேற.. சேப் கிடையாது..” என அவன் சொல்லி கொண்டிருக்க…

அவனை தாண்டி வண்டியை கிளப்பி கொண்டு சென்றுவிட்டாள்.

அனிவர்த் “திமிரு…அவ்வளவும் திமிரு.. சின்ன பொண்ணா இருக்காளேனு பார்த்தா.. ரொம்ப தான் துள்ளறா..” என வழி எங்கும் அவளை திட்டியவாறே வீடு வந்து சேர்ந்தான்.

அவர்களுக்குள் முதல் ஊடல்…

நேரம் செல்ல.. செல்ல.. அனிவர்த்தால் இருப்பு கொள்ள முடியவில்லை.

‘வீட்டிற்கு போயிருப்பளா.. வழில ஏதும் ப்ராப்ளம் ஆகியிருந்தா… இந்த காலத்துல டீவில நியூஸ் எவ்வளவோ பெண்களுக்கு எதிரான கொடுமைகள் வருதே… அவ பின்னாடியே அவ வீடு வரைக்கும் போயிருக்கனுமோ..’ என பயந்து போய் அவளுக்கு அழைக்க.. அவள் இவன் அழைப்பை ஏற்கவில்லை என வரவும்.. பயம் அதிகமாக… மணியை பார்த்தான் இந்நேரம் அவள் வீடு போயிருக்கனுமே.. மீண்டும் அழைக்க.. அவள் எடுக்கவில்லை.

அவள் வீட்டிற்காவது போய் பார்க்கலாமா என நினைத்தான். ஆனால் இராத்திரி நேரத்தில் வயசு பொண்ணை தேடி சென்றால் அவள் குடும்பத்தினர் எவரோ.. எப்படியோ.. வீண்பிரச்சினை வேண்டாம் என விட்டு விட… அவன் மனமோ அப்படி எல்லாம் விட முடியாது என அலையாக ஆர்பரிக்க..

வாட்சப்பில் ஒரு மெசேஜ்..

‘வர்ஷி.. வீட்டுக்கு போயிட்டியா…’

அவள் ஆன்லைனில் இல்லை எனவும் பதட்டம் கூடியது..

‘வர்ஷிம்மா.. ஆர் யூ ஓகே..’

‘குட்டிம்மா.. ஏதாவது சொல்லுடா..’

என வரிசையாக மெசேஜ் பறக்க… பதில் என்னவோ அவனுக்கு சாதகமாக இல்லை.. வருத்தமாக போனையே பார்த்துக் கொண்டு படுத்திருந்தான்.

சிறிது நேரத்தில் ப்ளூ டிக் டக் டக்கென் வரிசையாக வர… விடலைபையனை போல..

“யாஹூ” என துள்ளிக் கொண்டு எழுந்து அமர்ந்தான்.

‘குட்டிம்மா.. வீட்டிக்கு போயிட்டயா..’

கோப ஸ்மைலி..

சிரித்துக் கொண்டே.. ‘கால் பண்ணவா..’

அரிவாள் பறந்து வந்தது.

அவளின் குறும்பு அவனையும் தொற்றிக் கொள்ள..

இவன் இதயம் அனுப்ப…

அவளோ நாக்க மடித்து விரலை நீட்டி மிரட்டும் விஜயகாந்த படம் அனுப்ப…

இப்படியே கொஞ்ச நேரம் இருவரும் விளையாட..

குட்நைட் பிக் போட்டுபோய் தூங்கு என அனிவர்த் விளையாட்டை முடித்து வைத்தான்.

ரொம்ப உற்சாகமாக அவன் மனம் இருக்க.. தூக்கம் வராமல் அவளை நினைத்துக் கொண்டே உறங்காமல் விழித்திருந்தான். நாளைக்கு வரட்டும் அவளை என்ன பண்றேன் பாரு.. அப்படியே பிச்சு திங்க்னும் என தலையணையை பிச்சு கொண்டு இருந்தான்.

அனிவர்த் மனம் கட்டுக்கடங்காத காளையாக துள்ள… தேவர்ஷிய பார்க்க என்னவோ காதல் சொல்லப் போகும் டீன்ஏஜ் பையன் போல பரபரப்பாக கிளம்பிக் கொண்டிருந்தான். ஒரு பத்து தடவையாவது கண்ணாடி முன் நின்று தன்னை சரி பார்த்துக் கொண்டான்.லேசா விசில் அடித்தவாறே படிகளில் இறங்கி வந்தவனை கண்டு கங்கா ஆவென வாயை பிளந்து பார்த்தார்.

‘ம்ம் சரி தான் பையன் எங்கயோ வசமா சிக்கிட்டான் போல.’

“மாம்.. சீக்கீரம் டிபன் வைங்க…” டேபிளில் தாளம் போட்டவாறு உல்லாசமாக…

கங்கா தட்டில் இட்லி வைத்து சாம்பார் ஊற்ற..

“என்ன மாம்… எப்ப பாரு இட்லி சட்னி சாம்பாரு தானா..” களிப்புடன் சலித்துக் கொள்ள…

“தோசை சுடவா..”

“மாம்.. இட்லி தோசை எல்லாம் விட்டுட்டு புதுசா ஏதாவது டிரை பண்ணுங்க..”

“நான் புதுசா டிரை பண்றது இருக்கட்டும்… நீ எங்கயாவது லாக் ஆகிட்டயா.. ம்ம்ம்.. என்ன..”

“ச்சேச்ச. அப்படி எல்லாம் இல்லை.. “என அவசர அவசரமாக மறுத்தான்.

“இல்லயே டவுட்டா இருக்கே..”

அனிவர்த்தின் முகத்தை இந்தபுறம் அந்தபுறம் திருப்பி பார்த்தவர்..

“முள்ள கட்டி விட்ட மாதிரி இருக்கற மூஞ்சில பாலும் தேனும் வடியுதே… எந்த புள்ளகிட்டயாவது ப்ரபோஸ் பண்ணிட்டயா…”

“உங்களுக்கு வேற பேச்சே இல்லையா.. எப்ப பாரு லவ் கல்யாணம்.. விடுங்க ஆளை..”

என விட்டால் போதும் என பாதி உணவில் கிளம்பிவிட்டான்.

“ஏம்மா.. இப்படி பண்ற…பாரு அவன் சாப்பிடாம போயிட்டான் பாரு…” என சிதம்பரம் வருத்தப்பட..

“இந்த வீட்டுக்கு மருமகள் வரனும்னு நான்லாம் வாரத்தில் மூனுநாள் விரதம் இருக்கேன்.. அதை நினைச்சு ஒரு நாளாவது வருத்தப்பட்டு இருக்கறிங்களா…உங்களுக்கு உங்க மகன் ஒருவேளை சாப்பிடாம் போனது வருத்தமா இருக்கா… அவன் உங்க இரத்தம்.. நான் வேற இரத்தம் அப்படி தான..”

‘ஆமாம் கேட்டாலும் திட்டுவ.. கொஞ்சமாவது மகனுக்கு கல்யாணம் ஆகலையேனு கவலை இல்லையானு..’ சிதம்பரத்தின் மைண்ட் வாய்ஸ்..

“அவ்வளவு பாசமிருந்தா உங்க மகனை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைங்க பார்க்கலாம்”

“அம்மா.. கங்காம்மா..நீயாச்சு.. உம்மகனாச்சு என்னை ஆளை விடு.. உங்க ஆட்டத்துக்கு நான் வரல..” என கை எடுத்து கும்பிட…

“அது… உங்களுக்கு என்ன முடியுமோ.. அத மட்டும் பாருங்க புரிஞ்சுதா.. போங்க வழக்கமாக பண்ற… நியூஸ் சேனல பாருங்க போங்க..”

சிதம்பரமும் விட்டால் போதும் என அமைதியாக போய் டீவியோடு ஐக்கியமாகிவிட்டார்.

“பயபுள்ள சிக்கமாட்டேங்கறானே… ஆனாலும் இன்னைக்கு என்னவோ ஒரு ஒளிவட்டம் தெரிஞ்சுது.. ஒரு கோடு போட்டா போதும் அத பிடிச்சுகிட்டே ரோடே போட்டறனும்..” என தனக்கு தானே பேசிக் கொள்ள..

பார்த்திருந்த சிதம்பரம் ‘மகனுக்கு கல்யாணம் ஆகாத கவலைல பைத்தியம்கீது பிடிச்சுகிச்சா… ‘ என உற்றுப் பார்க்க..

“என்ன பார்க்கறிங்க..” கங்கா அதட்டல் போட…

“ஒன்னுமில்லம்மா..” என்றார் பவ்யமாக… நினைத்தை சொல்லமுடியுமா…

அனிவர்த் பரபரப்பாக ஆபிஸ் வந்தவன் தனது அறைக்கு வந்தவன் தேவர்ஷிய பார்க்க வசதியாக அவளின் அறையின் கேமராவை மட்டும் தன் மானிட்டரில் தெரியுமாறு வைத்துக் கொண்டு… நொடிக்கொரு முறை பாரத்திருந்தான்.

‘என்ன இன்னும் இவளை காணோம்..’ என தனது கைகடிகாரத்தை பார்க்க.. அது அலுவலகம் ஆரம்பிக்க இன்னும் நேரம் உள்ளது என சொல்லாமல் சொல்ல…. நெற்றியில் தட்டி சிரித்துக் கொண்டான்.

‘என்னடா.. அனிவர்த்… இப்படி ஆகிட்ட… குட்டி பிசாசு நல்லா நம்மள ஆட்டி வைக்கறா…’

நேரம் சென்று கொண்டிருக்க.. அனிவர்த்திற்கோ இருப்பு கொள்ளவில்லை. எல்லோரும் வந்து தங்கள் வேலையில் மூழ்கி ஆபிஸே பரபரப்பாக இருக்க… அனிவர்த எதிர்பார்த்தவளோ வரவில்லை. அவளை காணாமல் மனதின் உற்சாகம் எல்லாம் வடிந்து கொஞ்சம் டல்லடிக்க…

‘ஏன் இன்னும் இவளை காணோம்..’ என கொஞ்சம் கவலை எட்டி பார்த்தது.

‘இன்னைக்கு லீவா..’

‘போன் பண்ணி இன்பார்ம் பண்ணலாம்ல..’

‘ஒரு வேளை மெயில் பண்ணியிருக்காளோ..’ என மெயில் செக் பண்ண…

நினைத்து போல உடம்பு சரியில்லை என இரண்டு நாள் லீவு கேட்டு மெயில் அனுப்பி இருந்தாள். அவளுக்கு உடம்பு சரியில்லை என்பதே அனிவர்த்தை எதையும் யோசிக்க விடவில்லை. உடனே தேவர்ஷிக்கு அழைத்துவிட்டான்.தன்னிடம் வேலை பாரப்பவர்களுக்கு உடம்பு சரியில்லை என்றால் இப்படி தான் அழைத்திருக்கமோ.. என யோசிக்க எல்லாம் இல்லை.

ஆடி அசைந்து வரும் தென்றல் – 14 Read More »

6DE7F38B-C6D1-437E-A571-B8E480E83C94

ஆடி அசைந்து வரும் தென்றல் – 13

13 – ஆடி அசைந்து வரும் தென்றல்

லிப்டிற்கும் அவளுக்குமான இடைவெளி பத்தடி தூரம் இருக்க…லிப்ட் மூடும் முன் அவனோடு இணைந்து கொள்ள துடிக்க… வேகமாக ஓடி சிறிய இடைவெளியில் தன்னை நுழைத்து கொள்ளும் வேகத்தில் சென்றவள்… கால்கள் வழுக்கி அனிவர்த் மேலேயே விழுந்தாள்.

அனிவர்த் போனை பார்த்து கொண்டிருந்தவன் தேவர்ஷியை கவனிக்கவில்லை. அவள் எதிர்பாராமல் விழுகவும் அவளோடு சேர்ந்து அனிவர்த்தும் அவளை அணைத்தவாறு விழுந்தான்.அவனே தேவர்ஷியை கண்டு திகைத்தவன்… பின்பு தாங்கள் இருக்கும் நிலை அறிந்து உல்லாசமாக அவளை நெருக்கத்தில் ரசிக்க… ருசிக்க… துடிக்க…

அனிவர்த் மேல் தேவர்ஷி இருக்க… காலையில் அவன் ரசித்த அழகெல்லாம் அவன் அருகே.. அவன் கையணைப்பில் இருக்க… சித்தம் கலங்கிய பித்தனாகி போனான்.

தேவர்ஷியோ விழுந்த பயத்தில் அனிவர்த்தின் சட்டையை இறுக பிடித்து… முகத்தை அவன் நெஞ்சினில் அழுந்த புதைத்து இருக்க..

“வர்ஷி.. குட்டிம்மா.. வர்ஷிம்மா.. என்னைப் பாரேன்..” என குழைந்தான்.

மெல்ல தலையை உயர்த்தி..அவனின் முகம் பாரக்க.. அவளின் செவ்வரி ஓடிய இதழ்கள் பயத்தில் நடுங்க.. அதன் நடுக்கத்தை நிறுத்தும் முயற்சியாக… இதழ்களை இழுத்து தன் வாயினுன் அதக்கி சுவைக்க… அவன் முரட்டு கைகளோ அவள் பின்னுடலில் சுகந்திரமாக மேலும் கீழும் தொட்டு தடவி அழுத்த… பஞ்சு தேகம் இன்னும் போதையை கூட்ட.. அவன் பிடி இறுகியது…

மையல் கொண்ட பெண்ணுக்கோ.. கந்தர்வனின் செயல்கள் காதலாக கட்டிப் போட… கட்டுண்டு கிடந்தாள்.

மேலும் முன்னேற துடித்த உணர்வுகளை கட்டுப்படுத்த … சடுதியில் தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தவன்.. மென்மையாக தேவர்ஷியை தன்னில் இருந்து பிரித்தவன்… தானும் எழுந்து அமர்ந்தவன்.. அவளின் முகத்தை சங்கடத்துடன் பார்க்க.. அவளோ இனிப்பை பறிகொடுத்த குழந்தையாக வாடிப் போய் இருக்க… அவள் தோளில் கை போட்டு லேசாக அணைத்து..

“நீ இதெல்லாம் தாங்கமாட்ட டா…” என நெற்றியில் முத்தமிட்டு சொல்ல..

அவளோ லேசாக விசும்ப.. அவளை தட்டிகொடுத்து சமாதானம் செய்ய.. அவர்கள் செல்ல வேண்டிய தளமும் வந்திட…லிப்ட் திறப்பதற்குள் எழுந்து நின்று அவளையும் எழுப்பி.. விலகி இருந்த துப்பட்டாவை சரி செய்து…

“பை குட்டிம்மா..” என சொல்லி கடந்து நடந்துவிட்டான்.

அவன் விட்டு சென்ற இடத்திலேயே ஏதும் புரியாமல் மலங்க விழித்து நின்று கொண்டு இருந்தாள்.

‘ஏன் இப்படி விட்டுட்டு போயிட்டாங்க… ஒரு ஆணும் பெண்ணும் திருமணத்திற்கு முன்பு உறவு என்பது தப்பு தான் தெரியாமல் இல்லை… ஆனால் காதல் கொண்டவர்கள் அணைப்பதும் முத்தமிடுவதும் இன்று சாதாரணமாக நடப்பது தானே…’

‘எங்கே இவளை இன்னும் காணோம்..’ தனது காரில் இருந்தவாறு தேவர்ஷி வருவதற்காக பார்த்ததிருந்தான்.

‘சின்ன பொண்ணு மனசுல தேவையில்லாம ஆசையை வளர்க்கறமோ.. என்னோட தேவைக்கு அவளை யூஸ் பண்றமோ..’

வாடிய முகத்துடன் மெல்ல நடந்து வந்தாள். சுற்றுப்புறம் கவனிக்காமல் தன்போக்கில் வண்டியை எடுத்து கிளம்பி சென்றாள். அவள் கிளம்பிய பிறகே அனிவர்த்தும் கிளம்பினான்.

இன்றும் சோர்வாக வீடு வந்தவள் சோபாவில் உட்காரந்திருந்த கௌசல்யா மடியில் தலை வைத்து படுக்க…. மகளின் சோரந்த முகத்தை கண்டு வருத்தப்பட்டவர்…அவள் முடியை கோதிக் கொடுத்தவாறே..

“தேவாகுட்டி இன்னைக்கும் டயர்டா தெரியற… ரொம்ப வேலையா… இப்படி கஷ்டப்பட்டு வேலைக்குப் போகனுமா.. வீட்ல ஜாலியா இருடா.. போதும்…”

“ப்ச்ச்.. ஒன்னுமில்லம்மா.. பசிக்குது அதான்..”என்றிட…

“அட லூசுப்புள்ள.. வந்தவுடன் பசிக்குதுனு சொல்லறதுக்கு என்ன… இரு வரேன்..” அவளை நகர்த்தி படுக்க வைத்து விட்டு சென்றார்.

‘என்னாச்சு.. நல்லா தானே இருந்தாரு.. தீடீர்னு ஏன் அப்படி சொன்னாரு.. தாங்கமாட்டேனா… அப்படினா..எதை தாங்கமாட்டேன்… முத்தமிடுவது தப்பா… எனக்கு பிடிச்சிருந்துச்சே… அதை கூட வேண்டாம் என ஏன் சொல்லவேண்டும். ஒருவேளை இன்று கேன்டீனில் அவர்கள் சொன்னது போல இவருக்கு அல்ட்ரா மார்டனா…. எல்லாம் தெரிந்த டேக்இட் ஈஸி பெண்கள் தான் பிடிக்குமா… இவருடைய பேஷன்ஸ்கு நான் செட்டாக மாட்டேனோ… அதை தான் அப்படி சொன்னாரா..’ என மிகவும் யோசித்து தன்னை வருத்திக் கொண்டாள்.

“தேவாம்மா.. எழுந்திரு..” கையில் தட்டோடு வந்த கௌசல்யா தேவாவை அமர வைத்து.. தோசையை வெங்காய தொக்கோடு வைத்து தானே ஊட்டி விட.. அமைதியாக சாப்பிட்டாள். எப்போதும் வாய் ஓயாமல் பேசும் மகள் இன்று அமைதியாக இருக்கவும் தாயாக கௌசல்யாவிற்கு கவலை… பட்டாம்பூச்சி மாதிரி இருந்தவளை வேலைக்கு அனுப்பி இருக்ககூடாதோ..

சாப்பிட்டு விட்டு தனது அறைக்கு வந்து படுத்தவளுக்கு அனிவர்த் பற்றிய எண்ணமே… ஏதேதோ யோசித்தவள்… இறுதியில்…

‘எனக்கு அவரை பிடிச்சிருக்கு…. அவருக்கும் என்னை பிடிச்ச மாதிரி தான் இருக்கு.. பார்ப்போம் எவ்வளவு தூரம் தான் இந்த பிடித்தம் போகும் என… அதுவரை மனதை போட்டு ஒலட்ட வேண்டாம்’ என முடிவு எடுத்தவுடன் நிம்மதியாக உறக்கம் கொண்டாள்.

மனதில் ஒரு முடிவு எடுத்த பிறகு வாழ்க்கை முன்பை விட கொஞ்சம் உற்சாகமாக தான் சென்றது தேவர்ஷிக்கு… தினமும் எப்பவும் போல தன்னை பார்த்து பார்த்து அலங்கரித்து கொள்வதிலோ… அனிவர்த்துக்கு குட்மார்னிங் சொல்வது போல அவனுக்கு காட்சி கொடுத்து… தானும் அவனை ரசிப்பதிலயோ எந்த மாற்றம் இல்லாமல் பார்த்துக் கொண்டாள்.

அனிவர்த் பாடு தான் படு திண்டாட்டமாகி போனது. தினமும் இவளை பக்கத்தில் வைத்துக் கொண்டு.. பார்க்காது போல பார்த்திருக்க முடியவில்லை. அதிலும் அவள் சேட்டைகளே பார்த்துவிட்டால் அவனின் உடலும் மனதும் நிலை கொள்வதில்லை. இவளை வேண்டாம் என அனுப்பிவிட்டால் இந்த அவஸ்தை இருக்காது அல்லவா.. என்று கூட நினைத்தான். ஆனால் வேண்டாம் போ என சொல்ல தான் முடியவில்லை.

தேவர்ஷி அணிலோடு கூடிய நட்பை பார்த்து… தினமும் சாக்லேட் வைக்க.. அதுவும் பயம் இல்லாமல் இவள் கையில் இருந்து எடுத்து கொள்ளும் அளவிற்கு பழகிட.. அதனோடு அவள் விளையாடும் அழகை ரசிக்க என அவன் பார்வை அவளை தொடர்ந்து கொண்டு தான் இருந்தது.

இப்படியே இவர்களுக்குள் காதல் இழுபறியாக தான் இருந்தது.

அனிவர்த் அன்று ஏகப்பட்ட டென்ஷனில் இருந்தான். அவன் மிகவும் எதிர்பார்த்த டென்டர் சிறிய தொகை வித்தியாசத்தில் கை விட்டுப் போயிருக்க… கிடைத்திருந்தால் பெரும் பணத்தை இலாபமாக பார்த்திருக்கலாம். அதைவிட அவன் கம்பெனி வளர்ச்சி பாதையில் பல படிகள் முன்னேறியிருக்கும்.

அந்த டென்ஷனை கோபமாக ஆபிஸில் எல்லோரிடமும் காட்டிக் கொண்டிருந்தான். தேவர்ஷியின் டிரையினர் சுந்தர் அன்று வசமாக சிக்கி கொண்டான். அவன் வேலைக்கு நடுவே தேவர்ஷியையும் டிரைன் பண்ண வேண்டும். சுந்தர் சொல்லுவதை எல்லாம் அவள் செய்யாமல் விளையாட்டுத்தனமாக இருக்க… அவளிடம் போராடியே பாதி நேரம் செல்ல… இவனின் வேலையும் தேங்கிவிட்டது.

“சொல்லுங்க சுந்தர்… ஏன் பெண்டிங்ல இருக்கு…”

“சார் அது வந்து…” என இழுக்க…

“இங்க பாருங்க.. எனக்கு கரெக்டான ரீசன் வேணும்.. சும்மா சாக்குபோக்கு சொல்லாதிங்க..” என கோபப்பட..

“சார்.. தேவர்ஷி ஒர்க் கான்ஷியஸ் கிடையாது. அவங்களுக்கு என்னால டிரைன் பண்ண முடியலை. அவங்க ஒர்க்கையும் நான் தான் பார்க்க வேண்டி இருக்கு.. நான் ஒரு டைம் உங்ககிட்ட சொன்னேன் தேவர்ஷிய பத்தி நீங்க தான் சரியான ரெஸ்பான்ஸ் கொடுக்கலை…” என அனிவர்த்தையே குற்றம் சாட்டும் விதமாக பேச…

“இப்ப என்ன சொல்ல வரிங்க… தேவர்ஷியால தான் உங்க் ஒர்க்க முடிக்க முடியாம போச்சா.. “

“எஸ் சார்” என்றான் தெனாவட்டாக…

“ம்ம்.. அப்படியா.. உங்களுக்கு ஒரு நியூஜாயினிய ட்ரைன் பண்ற கெப்பாசிட்டி இருக்குனு நினைச்சு தானே இந்த போஸ்ட்ல உங்கள வச்சிருக்கேன்… இந்த போஸ்ட்க்கு நீங்க தகுதியில்லைனு நீங்களே சொல்லறிங்களா…”

சுந்தரோ பதறி போய்… “நோ சார்.. நோ சார்.. அப்படி எல்லாம் இல்லை..”

“என்கிட்ட பேசும் போது யோசிச்சு பேசனும் சுந்தர். இல்லனா இந்த ஆபிஸ்ல இன்னொரு இன்டர்வியூ நடத்த வேண்டியிருக்கும்”

“சாரி சார்..” தலையை குனிந்து பவ்யமாக சொல்ல…

“நீங்க உங்க ஒர்க் பார்க்காம அடுத்தவங்கள ப்ளேம் பண்ணாதிங்க.. ஓகே..”

“சாரி சார்… “

“அப்புறம் இனி தேவர்ஷிய நான் டிரைன் பண்ணிக்கிறேன். இனி நீங்க் உங்க ஒர்க்கை எந்த டிஸ்டபர்ன்சும் இல்லாம கன்டினியூ பண்ணுங்க..” என்றான் நக்கலாக.

சுந்தரோ பயந்து போய்.. “இல்ல சார்… நானே…” என பேசியவனை கைநீட்டி தடுத்தவன்…

“கோ டூ யுவர் சீட்..” என வெளியே போகுமாறு கை நீட்டி சொல்ல..

முகம சிறுத்துப் போய் சுந்தர் வெளியேறிட..

அனிவர்த் ‘இவளை வச்சுகிட்டு என்ன பண்றதுனு தெரியல.. விளையாட்டுத்தனமாவே இருக்கா… கொஞ்சம ஸ்டிரிக்டா தான் ஹேண்டில் பண்ணனும்.. வரட்டும் இருக்கு இவளுக்கு இன்னைக்கு…’ என கோபமாகவே அவளை தனது அறைக்கு அழைத்தான்.

‘ம்க்கும்… நீ பண்ணிட்டாலும்..’ என மனசாட்சி காறி துப்ப.. அதை சட்டை செய்யாமல்…

அவனது அறைக்கு துள்ளலோடு வந்தாள். நேற்று அவன் முத்தமிட்ட தித்திப்பு மனதில் உழாவ.. இனம் விளங்கா உணர்வு என கொஞ்சம் மனம் தத்தளித்தது. அவனை காண மானாக துள்ளல் நடையோடு தான் வந்தாள்.

“குட்மார்னிங் சார்..”

அவளை பார்த்ததும் அனிவர்த்தின் கோபம் எல்லாம் இருக்கவா.. போகவா.. என்றது. மலர்ந்த முகத்துடன்… கண்கள் ஒளிர.. கால்கள் தரையில் பாவாமல்.. கைகளை கோர்த்துக் கொண்டு.. தலையை லேசாக சரித்து புன்னகையுடன் நின்றிருந்தவளை கோபமாக பேசகூட வரலை..

“உனக்கு கொடுத்த ப்ரோகரம் முடிச்சிட்டயா..” என கோபத்தை இழுத்து பிடித்தவாறு கேட்டான்.

“ஹீஹீ..எந்த ப்ரோகரம் “என அசடு வழிய…

“எதுனு உனக்கு தெரியாது.. உனக்கு எத்தனை கொடுத்தாங்க..”

ஒன்று என ஆட்காட்டி விரலை ஆட்டி காண்பித்தாள்.

“அப்புறம் எதுனு கேட்கற… முடிச்சிட்டயா இல்லையா..”

“அது வந்து அந்த சுந்தர் மெட்டல் மண்டையன்.. டவுட் கேட்டா கிளீயர் பண்ணவேமாட்டேங்கறான்..”

“ஒரு சீனியர இப்படி தான் மரியாதை இல்லாம பேசுவியா..”

“அவன் மட்டும் என்ன லூசு.. முட்டாள்னு திட்டுவானா..அதுவும் டிஸ்டிங்கசன்ல வந்த என்னை பார்த்து..”

“சரி விடு.. நான் சொல்லி தரேன் வா.. “ என அவள் கேபினுக்கு சென்று அவளை அருகில் இருத்தி அவள் சிஸ்டத்தில் பார்த்தால் ஒரு வேலையும் செய்ததற்கான அறிகுறி எதுவும் இல்லை. அப்ப நான் பாரக்கும் போது என்ன செய்திருப்பாள். என்ன செய்தாள் என அதையும் கண்டுபிடித்தான். அத்தனை கேம்ஸ் டவுன்லோட் பண்ணி விளையாடி இருக்கிறாள்

தேவர்ஷியை அனிவர்த் முறைத்துப் பார்க்க…

‘ச்சே.. இப்படி சிக்கிக்கிட்டயே.. ஏதாவது சொல்லி சமாளிக்கனுமே… என்ன சொல்லலாம்.. அச்சோ அவசரத்துக்கு ஒன்னும் தோனமாட்டேங்குதே…’

“என்ன ரொம்ப யோசிக்கற.. என்ன சொல்லி சமாளிக்கறதுனா…”

“ஹீ..ஹீ.. அப்படி… எல்லாம்… இல்ல…”

“ரொம்ப வழியாத…”

சிலவற்றை சொல்லி.. “இதெல்லாம் முடிச்சிட்டு தான் நீ வீட்டுக்கு போகனும் புரியுதா..” என கண்டிப்பான குரலில்..

மற்றவர்களிடம் கோபத்தை காட்டியவனால் அவளிடம் காட்ட முடியாமல்.. அவளை திட்ட மனம் வராமல்.. சற்று கண்டிப்புடன் சொல்லி சென்றான்.

ஆடி அசைந்து வரும் தென்றல் – 13 Read More »

F6F4CB15-B0CF-4083-95B4-56DFACBCA071

ஆடி அசைந்து வரும் தென்றல் – 12

12 – ஆடி அசைந்து வரும் தென்றல்

தேவர்ஷி காலையில் எழுந்ததில் இருந்த உற்சாகமாக கிளம்பிக கொண்டிருந்தாள். ஏதோ ஒரு புது உணர்வு அகத்தை ஆக்கிரமித்திருக்க… அந்த உணர்வு புதுபுனல் பிரவாகமாக ஊற்றெடுக்க… துள்ளலோடு தன்னை பார்த்து பார்த்து அலங்கரித்து கொணாடாள்.

“குட்டிம்மா.. அழகா இருக்கடா…” அனிவர்த் போல பேசி தன் கன்னத்தை கிள்ளி தன்னையே கொஞ்சிக் கொண்டாள்.

ஆபிஸ் வந்து வண்டியை நிறுத்தியவள் அனிவர்த் கார் இருக்கிறதா என பார்த்தாள்.

“நெட்ட பனமரம் வந்துடுச்சு… அச்சோ தப்பு தப்பு புருஷர அப்படி எல்லாம் மரியாதை இல்லாம பேசக்கூடாது. எப்படி கூப்பிடலாம்…”என யோசிக்க.. எதுவும் தோன்றாததால் மெதுவா யோசிப்போம். இப்ப ஒரு அட்னன்ஸ் போடுவேம் என அனிவர்த் அறைக்கு சென்றாள்.

தேவர்ஷி சென்ற போது அனிவர்த் சிஸ்டத்தில் மூழ்கி இருந்தான். தேவர்ஷி வந்ததை கவனிக்கவில்லை. கவனிக்காத மாதிரி இருந்தான். அவள்அறையில் சென்று அவள் பேகை வைத்து விட்டு தன் அறைக்கு வரும் வரை பார்த்திருந்தவன்.. அவள் வரும்போது வேலையாக இருப்பது போல காட்டிக் கொண்டான்.

எப்போதும் தேவர்ஷி அனுமதி கேட்டு எல்லாம் வரமாட்டாள் இன்றும் அதே போல வர…

தேவர்ஷியின் “குட்மார்னிங் சார்”ல தான் நிமிர்ந்து பார்த்தான். அவளை கேமரா கண் வழியாக பார்த்ததை விட நேர் கொண்டு பார்க்க… பார்த்தவனுக்கு சீறிக் கொண்டு எழும் உணர்வுகளை அடக்க முடியாமல் திணறி தான் போனான்.

‘ஐயோ நாமளே கன்ட்ரோலா இருக்கனும்னு நினைச்சா கூட விடமாட்டா போலவே..’

ஆளை அசரடிக்கும் அலங்காரத்துடன் அப்படி வந்திருந்தாள். என்றும் இல்லாமல் இன்று மல்லிகைபூ இரட்டை சரமாக வைத்திருந்தாள். மல்லிகை மணம் வேற மயங்க செய்தது.

அனிவர்த் அவள பார்க்காதடா…என அவன் புத்தி இடித்துரைக்க…அவனையும் மீறிக் கொண்டு அவன் மனம் கண்கள் வழியாக அவளை ஸ்கேன் செய்து கொண்டு தான் இருந்தது தலை முதல் பாதம் வரை..

சின்ன நெற்றி அதில் குட்டியாக ஒரு கருப்பு பொட்டு.. மேலே தீற்றலாக சந்தனம்…

‘குட்டியா இருக்கு.. அதான் நேத்து முத்தம் வைக்க சிரம்மா இருந்துச்சா…’

நீண்ட விழிகள் காஜல் தீட்டி..

‘இந்த கண் தான அழுது சிவந்து …காஜல் கலைஞ்சு அது கூட ஓவியமா இருந்துச்சு.. அதிலயும் அந்த ஓரப்பார்வை…’

கூர்நாசி அதில் அழகாக ஒற்றை வைரக்கல் மூக்குத்தி மினுங்க…

‘சார்ப்பா இருக்கற நுனிய புடிச்சு கடிச்சு வைக்கனும்..’

மேல் உதடு சின்னதாக… கீழ் உதடு சற்று பெருத்திருக்க.. அதை கவனித்தவன்

‘குழந்தைல ஜொள்ளா உத்தி இருப்பா போல.. அதான் கீழ் உதடு தடிப்பா இருக்கு….’ என நினைத்தான்.

‘கொக்கு மாதிரி கழுத்து நீண்டு இருக்கு..’

‘கழுத்து நரம்பை உதட்டு மடிப்பால இழுக்கனும்..’

கழுத்து கீழே பார்வையை மேய விட்டவன்..

‘ஆஹா… சின்ன பொண்ணுனு சொல்ல முடியலையே…’

அங்கிருந்து பார்வையை நகர்த்த முடியாமல் திணறி… திண்டாடி…

‘டேய் அனிவர்த்.. தப்புடா… ‘தன்னை திட்டி.. திட்டி…பார்வையை கீழே இறக்கினான்.

சிறுத்த இடை…

‘அது தான் எனக்கே தெரியுமே.. என் இரண்டு உள்ளங்கை சேர்ந்த அளவு கூட இல்லையே..’

அனிவர்த் தேவர்ஷியை லேசர் பார்வையால் ரசித்து கொண்டிருக்க… அவன் பார்வை வீரியம் தாங்காமல்…

‘அச்சோ… என்ன இப்படி பார்க்கறாங்க..’என வெட்கம் மிக.. முகம் சிவக்க… நாக்கின் நுனியை கடித்து… துள்ளி திரும்பி நின்று கொண்டாள்.

திரும்பி நிற்க.. பின்புறமும் அவனை பித்து கொள்ள செய்ய…

‘அம்மாடி… இவ என்னை சாவடிக்காம விடமாட்டா போலவே…’

‘வேணாம்டி பொண்ணே… என் முன்னே வந்து என்னை சீண்டாத.. சேதாரம் உனக்கு தான்டி..’

தன் தலை முடியை கோதிக் கொண்டவன்.. மெல்ல் தன்னை நிதானப்படுத்தி… இல்லாத கோபத்தை வலுவில் வர வைத்து..

“தேவர்ஷி… கோ டூ யுவர் கேபின்.. அநாவசியமா என் கேபினுக்கு வராதிங்க… ஒர்க்ல சின்சியரா இருக்கனும் எனக்கு.. உங்க விளையாட்டுத்தனத்தை விட்டுட்டு கொஞ்சம் வேலையும் பாருங்க… போங்க…”

அவன் பார்வையில் கனவில் மிதந்து கொண்டு இருந்தவள்.. அவனின் சுருக்கென்ற பேச்சில்… கனவு கலைந்து..தேவர்ஷியின் மனம் சுணங்கி போக… கண்கள் லேசாக கலங்க…

‘போடா.. ரெட்சில்லி… உனக்காக எல்லாம் எப்படி கிளம்பி வந்தேன்.. மூஞ்சிய பாரு ஓரங்குட்டான்… சரியான சாமியார்…’

என்னது சாமியாரா… அவன் பத்தி உனக்கு தான் தெரியலமா. ப்ளே பாய்மா.. நீ பேசினத கேட்டா.. இந்த உலகம் உன்ன லூசுனு நினைச்சு சிரிக்கும்…

அவனை மனதினுள் வசைபாடியபடி காலை தரையில் உதைத்தவாறே… முகத்தை தூக்கி வைத்து கொண்டு செல்ல…

‘சிறுபிள்ளை தான்… அனிவர்த்.. உன் சித்து விளையாட்டிற்கு எல்லாம் இவள் தாங்கமாட்டா..’ என மனம் இடிக்க… அவளை விட்டு தள்ளி இருக்கனும் என முடிவு எடுத்தான். ஆனால் அதை எவ்வளவு தூரம் காப்பாத்த முடியும் என அவனுக்கே தெரியலை…

தனது அறைக்கு வந்தவள் தொப்பென இருக்கையில் அமர்ந்தாள். மனதில் இருந்த உற்சாகம் எல்லாம் வடிந்து சோர்வாக இருக்க… வேலையில் கவனம் செலுத்த தோன்றாமல் அமைதியாக அமரந்திருந்தாள்.

‘ச்சே.. ஆசையா கிளம்பி வந்தேன்.. அழகா இருக்கடினு சொல்லாட்டியும் பரவாயில்ல.. விரட்டாம இருக்கலாம்ல..பிடிக்கலையோ…ம்ஹீம். ஆளையே பிச்சு திங்கற மாதிரி தான பார்த்தாரு…அப்புறம் என்ன வந்துச்சு.. தெரியலையே.. அதுக்காக எல்லாம் சோர்ந்திடாத.. பீ ஸ்ட்ராங்..’ என மனதை திடப்படுத்திக் கொண்ட பிறகே.. கொஞ்சம் தெம்பாக உணர்ந்தாள்.

அவளை அனுப்பிய பிறகு சிறிது நேரம் தான் அவளை பார்க்காமல் இருக்க முடிந்தது.. பார்த்தவனுக்கோ.. அவளின் சோர்வை கண்டு..

‘ச்சே.. இப்படி பேசிட்டமே.. எவ்வளவு உற்சாகமாக வந்தா.. இப்ப எப்படி வாடி போய் உட்கார்ந்திருக்கா..’ வருத்தப்பட்டான்.

மெல்ல தேவர்ஷி தன்னை சமாதானப் படுத்திக் கொண்டு வேலை செய்ய… ஜன்னல் ஓரத்தில் ஏதோ சத்தம்… அன்று வந்த அதே அணில்… அணிலை கண்டு குஷியாகி.. மெதுவாக சத்தமில்லாமல் அடி எடுத்து வைத்து கிட்ட போகவும்…அது அவரை அவளை காணாத மாதிரி இருந்த அணில் கிட்ட வரவும்.. இவளுக்கு போக்கு காட்டி விட்டு ஓடி ஒளிந்து கொண்டது.

‘போச்சு.. இன்னைக்கும் குரங்கு மாதிரி ஜன்னல் ஏறி தொங்க்ப் போறா..’ என அனிவர்த் நினைக்க…

வேகமாக ஓடி வந்து தனது பேகில் இருந்த சாக்லேட்பாரை பிரித்து ஒரு துண்டு உடைத்து ஜன்னலில் வைத்து விட்டு வந்து அமைதியாக உட்கார்ந்து கொண்டாள்.

அணில் வருகிறதா.. என அடிக்கடி தலையை திருப்பாமல் அடிப்பார்வையாக பார்த்திருக்க.. அணில் வந்து சாக்லேட்டை கொறித்து திங்க.. குழந்தை போல கை தட்டி ஆர்ப்பரித்தாள்.

அணில் மிரண்டு போய் ஓடி விட நினைத்தது.ஆனால் சாக்லேட்டை விட்டு செல்ல மனமில்லாமல் தேவர்ஷி அருகில் வந்தால் ஓடிவிடலாம் அலரட்டாக அவள் மேல் ஒரு பார்வையும் சாக்லேட் மேல ஒரு பார்வையுமாக கொறித்தது.

‘கேடி அணில்.. இவள மாதிரியே கேடியா இருக்கு’ சிரித்தான் அனிவர்த்.

தேவர்ஷி மதியம் வரை அனிவர்த் அறைக்கு வரவில்லை. செல்ல கோபம் கொண்டு அவனாக அழைக்கும் வரை செல்லகூடாது என இருந்தாள்.

அனிவர்த்தோ தள்ளி நின்று ரசித்தால் மட்டுமே போதும் என இருக்க…. ஒரு பொண்ணை அதுவும் பிடித்த பெண்ணை ரசிக்க மட்டுமே என்பது ரிஷிகளாலே முடியாத போது.. இவனால் முடியுமா…

மதிய உணவை கேன்டீனில் சாப்பிட சென்றாள். தனக்கானதை வாங்கி கொண்டு தன் நணபர்களோடு இணைந்து கொண்டாள்.

“ஏய்..தேவா… இன்னைக்கு கேன்டீன் லஞ்சா.. “

“வா.. ஷேர் பண்ணி சாப்பிடலாம்..”

எல்லோரும் ஷேர் பண்ணி பேசிக் கொண்டு சாப்பிட..

இங்கோ அனிவர்த் ‘எங்க இவளை காணோம்..’ என தேடிக் கொண்டு இருந்தான்.

பேசிக் கொண்டே சாப்பிட.. பேச்சு அனிவர்த்தை பற்றி வர… தேவர்ஷியின் காதல் மனம் அவர்களின் பேச்சை ரசிக்க துவங்கியது.

“ஏய்.. தெரியுமா.. அனிவர்த்சார் ஜெர்மன்ல எம் எஸ் படிச்சிருக்காரு… ரொம்ப டேலண்ட்… அவருடைய ஏஜ் தேர்ட்டிகுள்ள இருக்குமா.. இந்த ஏஜ்லயே எவ்வளவு அச்சீவ் பண்ணியிருக்காரு.. கிரேட்ல…”

“ஆமாம்பா.. டேலண்ட் மட்டும் இல்ல ஹார்ட் ஒர்க்கரும் கூட… நாம வரும் போதும் இருக்காரு… நாம போனாலும் இருந்து ஒர்க் பார்க்காரு… எப்ப வராரு.. எப்ப போவாரு தெரியல…”

அனிவர்த் பற்றிய செய்திகளை துளி துளியாக.. தன் மனப்பெட்டகத்தில் சேகரித்து.. அதை ஒவ்வொரு அணுவிலும் பதிய வைத்தாள்.

டேய்.. அதெல்லாம் விடுங்கடா… ஆள் எவ்வளவு ஹேண்ட்சம்… சார்மிங்… என்ன ஒரு கலரு… என்ன ஸ்டைலு… மேன்லி…” ஒருத்தி வர்ணிக்க…

தேவர்ஷிக்கு சட்டென இனிய மனநிலை மாறியது… பிடிக்கவில்லை.. அப்படியே பத்திக்கிட்டு வந்தது. கண்களில் கனல் கக்கும் பார்வையோடு பாரத்திருக்க…

அந்த பெண்ணோ கண்கள் சொருக… “ஒரு லுக்.. சின்ன ஸ்மைல்.. போதும் நான் அப்படியே ப்ளாடாயிடுவேன்..”

“ஹேய்… அவர் கேர்ள்ஸ் விசயத்தில் கொஞ்சம் வீக்னு கேள்விப்பட்டிருக்கேன்… பார்த்துக்கோ..”

“அவர் எல்லா பொண்ணுங்ககிட்ட எல்லாம் அப்படி இல்ல… டேட்டிங் அப்படி வர பொண்ணுகிட்ட தான்… அவர் ஒன்னும் வுமனைசர் கிடையாது..”என அந்த பொண்ணு வக்காலத்து வாங்க..

தேவர்ஷிக்கு கோவத்தை மீறிய வருத்தம் இப்போ… அவளுக்கு அனிவர்த்தை பற்றி கொஞ்சம் தெரியும். அவள் இங்கு செலக்ட் ஆனதும் அவளின் தாத்தா, பெரியப்பா அவளை வேண்டாம என மறுத்தனர். ஆனால் திருகுமரன் தான் மகள் மேல் முழு நம்பிக்கை இருப்பதாக உறுதியாக சொல்ல… அதன் பிறகு மாற்றி மாற்றி அட்வைஸ் பண்ண… தேவர்ஷிக்கு கடுப்பானாது. அதுவும் தகவல்கள் உபயம் சரண் என பிரவீன் மூலம் அறிந்தவளுக்கு இவனுக்கு எதுக்கு இந்த வேலை என கோபம் வந்தது. இவனுக்கு எப்ப பாரு என விசயத்தில் தலையிடுவதே வேலையா போச்சு… என கோபம்.. ஆனால் அவள் அதை சரணிடம காட்டமுடியாதே… வீட்டு இளவரசன்…

அனிவர்த்தை பற்றி தெரிந்தும் அவள் மனம் அவனை தான் தேடுது… ரசிக்குது.. கண்ணனின் காதல் ராதையாக தான் அவளும் கிடந்து தவிக்கிறாள். என்ன செய்ய….

தன் கேபினுக்கு வந்த பிறகும் என்னவோ மனம் ஒரு மாதிரி தவிப்பாக… சோர்வாக… காலையில் இருந்து அவனை பார்க்காதது… கேன்டீனில் பேசியது… அதை தொடர்ந்து வீட்டினரின் பேச்சு நினைவுக்கு வரவும… தன் காதல் கைகூடுமா… என யோசிக்க.. தலைவலி வந்தது தான் மிச்சம்.

மாலை அவரை அதே யோசனையில் உழண்டவள்.. ஆபிஸ் நேரம் முடிந்து அனைவரும் கிளம்ப..

ஆயாம்மா வந்து “தேவாப்பா… வூட்டுக்கு போகல..” என கேட்கவும்..

கிளம்பி லிப்டிற்கு வந்தவள்… லிப்டினுள் அனிவர்த்தை கண்டதும்.. கண்ணணை கண்ட ராதை போல தன்னை மறந்து தான் போனாள்.

ஆடி அசைந்து வரும் தென்றல் – 12 Read More »

8BA81899-37C9-433A-A967-15AD6BFAF7EF

ஆடி அசைந்து வரும் தென்றல் – 11

1 – ஆடி அசைந்து வரும் தென்றல்

அந்த ஆயாம்மா வீட்டில இருந்தே தனக்கு உணவு கொண்டு வருவது மட்டும் அல்லாமல் ஆபிஸில் தேவர்ஷி போல ஏமாந்தவர்களிடம் பாவம் போல நடித்து நயமாக பேசி பணமாக வாங்கி கொள்ளும் … இது எல்லாம் தெரியாமல் இவள் கொடுக்க்… அந்தம்மாவும் இவள் கொண்டு வரும் உயர்தர உணவில்… அதன் சுவையில் மயங்கி அப்பாவியாக வாங்கி சாப்பிட்டு விடும்.

‘இவள் கொண்டு வருவதே சொப்பு மாதிரி ஒரு டப்பா.. அதையும் ஷேர் பண்ணினா.. இவளுக்கு என்ன இருக்கும்…’என கோபம் கொண்டான்.

தேவர்ஷி தினமும் கொடுப்பதை பார்த்தவன் அவளை அழைத்து கண்டிக்கவும் செய்தான்.

“வர்ஷி.. எதுக்கு தினமும் அட்டென்டருக்கு உன் லஞ்ச் ஷேர் பண்ணற.. நீ கொண்டு வருவதே குட்டி பாக்ஸ் ஒழுங்கா நீ சாப்பிடு..” என்றான் பொறுமையாக…

“பாவம் சார்… அந்தம்மா.. அவங்க வீட்டுகாரர் சம்பாதிக்கறதை எல்லாம் குடிச்சிடுவாராம் … எதுவும் தரமாட்டாராம்.. அது மட்டும் இல்ல.. குடிச்சிட்டு வந்து அடிப்பாராம்.. பாவம் தான.. “ தேவர்ஷியோ எதுவும் அறியாத அப்பாவியாக..

கண்களை சுருக்கி… ஐந்து விரல்களை குவித்து..

“கொஞ்சுண்டு ஃபுட் குடுக்கறதுல.. என்ன வந்திட போகுது…”எதார்த்தமாக பேச..

‘இவளை.. என்ன தான் செய்வது..’ என பல்லைக் கடித்தான். வந்த கோபத்தை மட்டுப்படுத்தி… நிதானத்தை இழுத்து பிடித்தவாறு….

“இங்க பாரு அது அவங்க குடும்ப பிரச்சனை.. அது எல்லாம் நமக்கு எதுக்கு.. அவங்களுக்கு நம்ம கம்பெனில சேலரி கொடுக்கறோம் தான.. அவ்வளவு தான் நாம செய்யமுடியும்.நீ உன் லஞ்ச் கொடுத்தா சரியா போயிடுமா… ஒழுங்கா நீ சாப்பிடு..”

“இல்ல சார்.. பாவம் அவங்க பசியோட வேல செய்யறதா பார்த்தா பாவமா இருக்கு..”

‘லூசு.. லூசு… இவளை இவ வீட்ல எப்படி தான் வச்சு மேய்க்கறாங்களோ…’ என நினைத்தவனுக்கு கோபம் கரையை கடக்க.. அப்பவா இப்பவா என நின்றது.

“இங்க பாரு வர்ஷி.. அந்தம்மா நல்லா தான் இருக்கு… சும்மா உன்னை ஏமாத்திட்டு இருக்கு.. “

“பாவம் யாராவது சாப்பாட்டு விசயத்துல பொய்சொல்வாங்களா.. நீங்க சும்மா என்கிட்ட சொல்லறிங்க.. போங்க.. போங்க..” என சிறுபிள்ளையாக கோவித்துக் கொண்டு நின்றாள்.

கோபம் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் பறந்திட… ஆஹா என மயங்கி போனான். இவளுக்கு சொல்லி எல்லாம் புரிய வைக்க முடியாது.. எப்படியோ போ என விடவும் அனிவர்த்தால் விட முடியாமல் ஏதோ ஒன்று தடுத்தது. அந்த ஏதோ ஒன்று என்ன என்று ஆராய தோன்றவில்லை.

கடைசியில் அவளை சமாதானம் செய்யும் பொருட்டு.. ஆயாம்மாவிற்கு கேன்டீனில் ஆபிஸ் கணக்கில் மதிய உணவிற்கு சொல்லவும்.. சந்தோஷத்தில் முகம் கொள்ளா புன்னகையுடன்…

“தேங்க்யூ.. தேங்க்யூ வெரிமச்…” என சொல்லி கைகளை விசிறிக் கொண்டு துள்ளி குதித்து ஓடிப் போனாள்.

இவள் புண்ணியத்தில் அந்த ஆயாம்மா.. மதிய உணவை ஆபிஸ் கேன்டீனில் தினம் ஒரு வகையாக வாங்கி சாப்பிட்டது. அதை தேவர்ஷியிடமும் சொல்லவும் செய்தது.

“தேவா பாப்பா.. ரொம்ப நன்றி.. ஏதோ நீ எனக்காக சார்கிட்ட் பேசினதால நான் பிரைடுரைஸ்.. அது என்னவோ சொல்வாங்களே.. ஆங்.. பீசா… தினுசு தினுசா சாப்பிடறேன். நான் இந்த மாதரி எல்லாம் சாப்பிட்டதே இல்ல…” என சொல்லவும்…

தேவர்ஷி மனம் உருகி போனாள் அச்சோ பாவம் என… எவ்வளவுக்கு எவ்வளவு துடுக்குத்தனம் நிறைந்தவளோ.. அதே அளவு இரக்க சுபாவமும் கொண்டவள்…

“நீங்க கவலப்படாதிங்க.. ஆயாம்மா… உங்களுக்கு என்ன ஹெல்ப்னாலும் நான் செய்யறேன்..” என அப்பாவியாக சொல்ல.. அந்தம்மா நிரந்தரமாக தனக்கு ஒரு ஏமாளி கிடைத்த சந்தோஷத்தில் சென்றது.

தேவர்ஷியின் கேபின் ஜன்னல் அருகே ஒரு பெரிய குல்மொகர் மரம் இருந்தது. அதில் அழகாக கொத்து கொத்தாக சிவப்புநிற பூக்கள் பூத்திருக்க.. அதற்காக அழகான வண்ணத்துப்பூச்சிகள் வர.. ரோலிங் சேரை கால்களால் உந்த.. வழுக்கிக் கொண்டு சென்று ஜன்னல் அருகே சென்று கன்னத்தில் கை கொடுத்து ரசித்துக் கொண்டிருந்தாள்.

கேமரா கண் வழியாக பார்த்து கொண்டு இருந்தவனுக்கு கோபம் தான் வந்தது. வேலையை பார்க்காம என்ன ஒய்யாரமா வேடிக்கை பார்க்கறா பாரு…

அவளை தனது அறைக்கு அழைத்தவன்…

“வேலையை பார்க்காம என்ன பண்ணிட்டு இருக்க…”என கோபமாக கேட்க…

“வேலையை தான் பார்த்துட்டு இருந்தேன்” என்று பொய் சொன்னாள் முகத்தை சாதுவாக வைத்துக் கொண்டு..

அவள் முகத்தை பார்த்தவனுக்கு கோபம் மறைந்து.. சிரிப்பு வர… அதை அடக்கியவாறே..

“ரியலி… ஒர்க் பண்ணிட்டு தான் இருந்தியா..” என உல்லாசமாக கேட்க..

வேலை செய்து களைத்தாற் போல முகத்தை சோர்வாக வைத்துக் கொண்டு… உதடுகளை அழுந்த மூடி ஆமாம் என தலையை ஆட்டினாள்.

அசராமல் அடிச்சுவிடறாளே என அனிவர்த் தான் அசந்து போனான். கேமரா மானிட்டரை அவள்புறம் திருப்பி அவள் கேபினின் கேமராவில் பதிவாகி இருந்தவற்றை காண்பிக்க..

‘ஙேங்’என விழித்தாள். ‘ஐய்யோ இப்படி மாட்டிகிட்டயே தேவா.. இப்ப ஏதாவது சொல்லி சமாளிக்கனுமே.. என்ன சொல்லலாம்’என வேகமாக யோசித்தாள்.

“என்ன பொய் சொல்லி சமாளிக்கலாம்னு திங்க் பண்ணறியா..”

ஒரு வேகத்தில் ஆமாம் என மேலும் கீழும் தலையாட்டிவள்.. சட்டென கண்களை மூடி நுனி நாக்கை கடித்து..எல்லா பக்கமும் தலையை ஆட்டினாள்.

தஞ்சாவூர் பொம்மை மாதிரி எப்ப பாரு தலையாட்டிக் கொண்டே.. என நினைத்தவன்..

என்ன மாட்டிக்கிட்டாயா..என்பதை போல புருவங்களை ஏற்றி இறக்கி பார்வையால் கேட்க… அவன் புருவ ஏற்ற இறக்கங்களில் கிறங்கி போய் தன்னை மறந்து அவனையே பார்த்திருந்தாள்.

அவள் கிறக்கம் அறியாதவனாக.. “அடுத்து என்ன பொய் சொல்லாம்னு யோசிக்கறியா.. இனி இப்படி செய்யாத போய் வேலையை பாரு..” என கண்டிக்கும் முக பாவத்துடன் சொல்ல..

“ம்ம்ம்”என அதற்கும் தலையை ஆட்டி விட்டு…. விட்டா போதும் என ஓடிவிட்டாள்.

தேவர்ஷி எப்பவும் துருதுருவென ஏதாவது சேட்டைகள் செய்து கொண்டே இருப்பதால்.. வீட்டில் அவளுக்கு ஏகப்பட்ட கெடுபிடி தான். திருகுமரனும் கௌசல்யாவும் மகளின் சேட்டைகளை ரசித்தாலும்… அவளின் தாத்தாவும் பெரியப்பாவும் அவளை திட்டுவதை காண பொறுக்காமல் சிறு கண்டிப்பு இருக்கும்.

வீட்டில் செய்யமுடியாத சேட்டைகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்து.. இங்கு வந்து அவிழ்த்துவிட்டாள். மொத்தத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட கன்றாக தான் திரிந்தாள்.

இவள் வேலை செய்யாதது மட்டுமல்லாமல் மற்றவர்களையும் செய்யவிடாமல்… அவர்களோடு அரட்டை அடிப்பது.. வேலை நேரத்தில் கேன்டீன் கூட்டு சேர்த்திக் கொண்டு செல்வது என ஒரே அட்டகாசம் தான்.

அனிவர்த் ஆபிஸில் தேவர்ஷி இருக்கும் எட்டு மணி நேரத்தில்.. அவளை ஸ்கேன் செய்வதிலேயே செல்ல… அவள் கிளம்பி போன பிறகு தன்வேலைகளை முடித்து விட்டு வீட்டிற்கு நேரம் கழித்து செலவதே வாடிக்கையானது.

கங்கவோ..”என்ன அனிவர்த்.. எங்க போயிட்டு வர..” மகன் வார இறுதி நாட்களில் செய்யும் பிளேபாய் ரோலை தினமும் ஆரம்பித்துவிட்டானோ.. என்ற சந்தேகத்தில் கேட்க..

கங்கா கேட்ட விதத்தில் அனிவர்த்திற்கு சுருக்கென கோபம் வர…

“ம்மா… உங்கள மாதிரியே ஒரு இம்சைய தெரியாமல் வேலைக்கு வச்சிட்டேன். தினமும் அவள கவனிக்கறதே பெரிய வேலயா போச்சு..”என்றான் பல்லை கடித்துக் கொண்டு அடிக்குரலில் சீறினான்.

‘என்னது பொண்ணா… இவனையும் ஒருத்தி டார்சர் பண்றாளா.. ஆஹா..’ என மனதில் குதூகலித்தவர்… அனிவர்த்திடம் மெல்ல…

“அனிவர்த்.. நீ சொல்லறது ஒரு பொண்ணா…”

“ஆமாம்.. பெரிய இம்சை..”என தேவர்ஷி செய்த அனைத்தையும் எதார்த்தமாக கங்காவிடம் சொல்ல..

‘அடியேய் கங்கா.. இவ தான் உனக்கு மருமகளா வர எல்லா பொருத்தமும் பொருந்தி இருக்கு. இவனையும் ஆட்டி வைக்க இந்த பொண்ணு தான் சரியா இருக்கும். நாமும் மருகளோடு கூட்டணி போட்டு இவனை ஒரு வழியாக்கலாம்…’ என கொண்டாட்டடமாக எண்ணி சந்தோஷப்பட்டார்.

“பொண்ணு அழகா இருப்பாளா..” என மெல்ல போட்டு வாங்க பார்க்க..

தாயை சந்தேகமாகப் பார்த்தவன்…”நீங்க இப்ப எதுக்கு இதை கேட்கறிங்க…”

“ஹீ..ஹீஹி.. சும்மா தான்…” என அசடு வழிந்தார்.

“ரொம்ப வழியாதிங்க.. அவ ரொம்ப சின்ன பொண்ணு இப்ப தான் படிப்பு முடிச்சிருக்கா.. போங்க.. போய் சாப்பாடு எடுத்து வைங்க..”

‘கேடி பய கண்டுபிடிச்சிட்டானே… சின்ன பொண்ணா.. அப்ப வேண்டாம்..’ என நினைத்து எழுந்து சென்றுவிட்டார்.

வரும் காலத்தில் தேவர்ஷி தான் மருமகளாக வரப் போகிறாள் என தெரியாமல் இப்படி ஏமாந்திட்டிங்களே கங்காம்மா…

அடுத்த நாள் அனிவர்த் டீலர் மீட்டிங்கிற்கு சென்று விட்டு மதியம் போல ஆபிஸிற்கு வந்தான். அவன் வந்த நேரம் ஒருத்தரும் இல்லாமல் ஆபிஸே வெறிச்சோடி இருந்தது. என்னடா இது இன்னைக்கு அரசு விடுமுறையா.. நாம தான் தெரியாமல் வந்துவிட்டோமா… என முழித்தான்.

பின்புறம் கேன்டீனில் இருந்து சத்தம் வர.. அங்கு சென்று
பார்க்க.. அங்கே ஒரே ஆட்டமும் பாட்டமுமாக ஆர்ப்பாட்ட்மாக இருந்தது. நட்ட நடு டேபிள் மேலே ஏறி நின்று டான்ஸ் ஆடிக் கொண்டு இருந்தாள் தேவர்ஷி. அனிவர்த்துக்கு கன்னாபின்னாவென கோபம் வர..

‘இவ வந்த பிறகு ஆபிஸ்ல ஒரு டிசிப்ளினே இல்லாம போயிடுச்சு..’

“என்ன நடக்குது இங்க… என்ன பண்ணிட்டு இருக்கறிங்க எல்லாரும்…” என கத்த..

அவனின் சத்தத்தால் அவனை கண்டு பயந்து எல்லோரும் ஆளுக்கு ஒரு திசையில் பறந்து ஓடினர். தேவர்ஷி அனிவர்த்தை கண்ட அதிர்ச்சியில் திருதிருவென முழித்து கொண்டு நின்றாள்.

“ கீழ இறங்கு முதல்ல..” என திட்ட..

ஒரே தாவலில் கீழே குதித்தாள்.அனிவர்த் தான் பயந்து போனான்.

“உன்னை..”என ஏதோ திட்டப் போக..கேன்டீனில் வேலை செய்பவர்களின் ஆர்வமான பார்வையில்.. அவளின் கையை பிடித்து இழுத்துக கொண்டு சென்றான்.

அவனின் இழுப்பிற்கு ஏற்றவாறு அவன் பின்னால் சென்றவள் திரும்பி..

“மணியண்ணா.. உங்களுக்கு வந்து அமௌண்ட் தரேன்” என சொல்லி செல்ல…

அந்த மணியோ.. ‘ஐயோ பாவம் வேலையே போக போகுது.. இருந்தாலும் எனக்கு பணம் தரேனு சொல்லுதே நல்லபுள்ள…’ வருத்தப்பட்டார்.

தனது அறைக்குள் வந்த பிறகு அவள் கையை உதற.. தடுமாறி நின்றாள்.

“எதுக்கு எல்லோரையும் கூப்புட்டு வச்சு ஆட்டம் போட்டுட்டு
இருந்த..”

அவன் கேட்டதும் ரொம்ப உற்சாகமாக…

“அது என்னோட பேவரட் ஆக்டரோட நாய் குட்டி போட்டுருக்கு.. அழகா நாலு பப்பி தெரியுமா உங்களுக்கு.. அவருடைய இன்ஸ்டா பேஜ்ல போட்டோ போட்டு இருக்காரு.. அது அமெரிக்காவுல இருந்து வாங்கிட்டு வந்த நாய் புசுபுசுனு அழகா இருக்குமா… அது மாதிரியே அந்த பப்பி எல்லாம் க்யூட்டா இருக்கு.. பிக் பார்க்கறிங்களா..” தனது போனை எடுக்க..

அவளின் பேச்சில் ஏற்கனவே இருந்த கோபம் இன்னும் அதிகரிக்க…

“வாட்… ஒரு நாய் குட்டி போட்டதுக்கா.. எல்லோரையும் வேலை செய்ய விடாம.. டேபிள் மேல ஏறி நின்னு ஆட்டம் போட்ட.. யூ டாமிட்.. இடியட் அறிவில்ல உனக்கு..”

‘இவரு மட்டும் வீக் எண்ட்ல பப் போய் பார்ட்டி பண்ணுவாரு நான் ஆடியது தப்பா.. அதுக்கு என்ன இடியட்னு திட்டுவாரா.. நான் இடியட்னா இவரும் இடியட் தான்..’என மனதுக்குள் அவனை திட்டியவாறு… தனது டிரேட்மார்க் அப்பாவி போஸில் நின்றாள்.

“என்ன அமைதியா நிற்கற.. என்ன பண்ண அத முதல்ல சொல்லு..”

“அது அந்த பப்பிகள் பிறந்தது செலிபிரேட் பண்ண… எல்லோருக்கும் ஸ்நாக்ஸ் வாங்கி கொடுத்தேன். அப்புறம் அந்த ஆக்டரோட சாங் போட்டு டான்ஸ் பண்ணி என்ஜாய் பண்ணுனோம்.. ஜாலியா சந்தோஷமா இருக்கறது தப்பா.. அதுக்கு அந்த கத்து கத்தறிங்க.. பாருங்க எல்லாரும் எப்படி பயந்து ஓடிட்டாங்க..” என முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள்.

“ஒர்க்ல ஒரு சின்சியர் கிடையாது.. டிசிப்ளின் கிடையாது. யூ ஆர்அன்பிட் பார் திஸ் ஜாப்.. நீ எல்லாம் அந்த காலேஜ்ல எப்படி டாப்பரா வந்த.. எக்ஸாம்ல ஏதாவது கோல்மால் செஞ்சு தான் ஸ்கோர் பண்ணுனியா… நீயும் ஒர்க் பண்ணமாட்ட.. மத்தவங்களையும் பண்ண விடமாட்ட… நாளைல இருந்து ஆபிஸ்கு வராத.. உன்னால எனக்கு பிபி வந்திடும் போல… என் கண்ணு முன்னாடி நிற்காத போ..” என கடுமையாக அனிவர்த் திட்டி விட..

முகம் கசங்கி கண்கள் கலங்கி… மூக்கு நுனி சிவந்திட.. அழுகை வரப் பார்க்க.. அதை அடக்க.. அவளையும் மீறி விசும்பலாக வெளி வர…வாயைப் பொத்திக் கொண்டு தனது கேபினுக்கு சென்று தனது பேகை எடுத்தவள் வீட்டிற்கு கிளம்பிவிட்டாள்.

அவள் அவ்வாறு செல்லவும் அனிவர்த் மனது குடைய…கேபினுக்கு சென்றதையும்… பார்க்கிங்கில் வண்டியை எடுத்து சென்றதையும் பார்த்தவனுக்கு அவனது மனசாட்சி குத்த..

‘உனக்கு அப்படி என்ன கோபம்.. பாவம் சின்னபொண்ணு… பாரு அழுதுகிட்டே போறா.. இப்படி ட்ரைவிங் பண்ணிட்டு போய் ஏதாவதாகிட்டா..’ என நினைக்க.. நினைக்க. மனம் நிலை கொள்ளவில்லை..

வேலையில் கவனம் கொள்ள முடியாமல் போக வீட்டிற்கு கிளம்பிவிட்டான். இரவு சாப்பிட முடியாமல் தூங்க முடியாமல் அவளின் முகமே கண்முன் வந்து இம்சித்தது.

‘வராதேனு திட்டிட்டமே.. வருவாளா.. வரமாட்டளா.. ‘என தூக்கம் கொள்ளாமல் சிந்தித்து கொண்டிருந்தான் விடிய விடிய…

ஆடி அசைந்து வரும் தென்றல் – 11 Read More »

C8F8AE51-A096-448F-8A1D-DD9906DFCFE0

ஆடி அசைந்து வரும் தென்றல் – 10

10 – ஆடி அசைந்து வரும் தென்றல்

“ஆல் தி பெஸ்ட் தேவாக்குட்டி” என வாழ்த்தி விட்டு.. “இன்டர்வியூ முடிஞ்சதும் பத்திரமா வீட்டுக்கு ஆட்டோ பிடிச்சு போயிரு..” செலவுக்கு பணம் கொடுத்து விட்டு தான் .. தனது அலுவலகத்திற்கு கிளம்பினார்..

இண்டர்வியூ ஹாலில் உட்கார்ந்திருந்தவளுக்கு இதை எல்லாம் நினைக்க.. பக்குவமில்லா கோபம் அதிகமானது…

“வேலை கிடைச்சு சம்பளம் வாங்கியதும் போறோம் ரெண்டு பக்கட் பிரியாணி வாங்கறோம் அவங்க முன்னாடியே தின்னு வெறுப்பேத்துறோம்..” என கண்களை சுருக்கி… முகத்தை சுழித்தவாறே…விரல்களை மடக்கி குத்துசண்டை வீராங்கனை போல கைகளை உயர்த்தி பிரியாணி சபதம் வெறிகொண்டு எடுத்து முணு முணுக்க…

பக்கத்து இருக்கை பெண் அவளை பார்த்து பயந்து ஓடிப் போய் நான்கு இருக்கைகள் தள்ளி உட்கார்ந்து கொண்டது…

அப்போது தான் உள்ளே நுழைந்த அனிவர்த்தின் பார்வையில் இக்காட்சி விழ… பார்த்தும் ஒரு ரசனை தோன்ற… ஒரு லயிப்பு ஏற்பட… மெல்ல அவளை கடந்து சென்றான். அனிவர்த் வந்ததும் இண்டர்வியூ ஆரம்பிக்கப்பட்டது.

ஒவ்வொருவராக உள்ளே வெளியே போய் வர, தேவர்ஷி ‘கடவுளே… இந்த வேலை கிடைச்சிடனும்.. இல்லைனா ஒவ்வொரு தடவையும் அவங்க முன்னால போய் நிக்கனும்… அந்த மாதிரி வராம காப்பாத்துங்க..’ என வேண்டி கொண்டு இருந்தாள். தேவர்ஷியும் அழைக்கப்பட… உணர்வுகளின் குவியலில் சிக்கிக்கிடந்தவள் நடுங்கிய படியே அனிவர்த் அறைக்குள் சென்றாள்.

சுந்தரனை பார்த்ததும் ஆ என வாய் பிளந்து நின்றாள்… எல்லாம் மாறிபோச்சு ..

அவள் எதிர்பார்த்து வந்தது படிப்பாளி.. அறிவாளி என காட்டிக் கொள்ளும் ஒரு சோடாபுட்டியாவோ… இல்லை ஒரு வழுக்கை மண்டையனோ…

இப்படி ஹாலிவுட் ஸ்டார் மாதிரி இருக்கானே!… ஆள அசரடிக்கறானே.. இவன் மேட் இன் இண்டியாவா.. இல்ல பாரின் மேடா… இல்லல்ல… கொஞ்சம் இந்திய சாயல் இருக்கே… ஒருவேளை இவன் இண்டியன் பாரின் கொலாப்ரேஷனா இருப்பானோ…. என்னா கலரு.. என்னா ஸ்டைலு… பிரம்மன் இவனை மன்மதனுக்கு போட்டியா படைச்சிட்டாரு போல… வேலைன்னு செஞ்சா இவன்கிட்டதான் செய்யனும்.. மனம் விளம்பர வசனம் பேச, இவனை சைட் அடிச்சுகிட்டே அசால்டா வேலை செஞ்சிடலாம்… என அவனை பராபட்சம் பாராமல் கதவருகே நின்று கொண்டு சைட் அடித்தாள்.

அனிவர்த்துக்கோ அவளைப் பார்க்க.. பார்க்க.. ஒரு சுவராஸ்யம் கூடியது. ஏற்கனவே இவளின் சேட்டையை பார்த்தவனாயிற்றே… இவனும் அவள் கண்கள் காட்டிய ஜாலங்களை ரசித்து கொண்டிருந்தான். அவனைப பாரத்ததும் அந்த நயனங்கள் ஆடிய நர்த்தனங்கள் அவனை ஈர்த்தது. அனிவர்த்தும் தன்னை மறந்து தான் லயிப்போடு மூழ்கியிருந்தான்.

சில பல நிமிடங்கள் இந்நிலை நீடித்ததோ… முதலில் அனிவர்த் தன்னிலையில் இருந்து மீட்டு் கொண்டவன்..

“மிஸ் தேவர்ஷி… கம் அண்ட் சிட்..” என்றான்.

அவனின் குரலில் தான் தன்னை மறந்து அவனை சைட் அடித்துக் கொண்டு இருப்பதை உணர்ந்து… தன் தலையில் லேசாக தட்டி..
‘ஐயோ இப்படியா சைட் அடிப்ப.. பக்கி.. இத மட்டும் அந்த கிழவனார் பார்த்திருந்தா கன்பார்மா உனக்கு ஹவுஸ அரெஸ்ட் தான்டி தேவா..’

“மிஸ் தேவர்ஷி.. ஆர் யூ ஓகே…”

“ஹி ஹி..” என அசட்டு சிரிப்புடன் வந்து உட்கார்ந்தாள்.

அவள் உட்காரந்ததும் அனிவர்த் ஸ்டைலாக கை நீட்ட.. என்ன என புரியாமல் முழிக்க.. அவள் முழுதாக தெளியாததால் ஒன்றும் புரியவில்லை..

அவனை பார்த்ததிலேயே கொஞ்சம் கிறுகிறுப்பு ஏறியிருக்க.. இப்படி ஒரு இடத்தில் வேலைக்காக வருவது இது தான் முதல் தடவை என்பதால் என்ன எப்படி என ஒன்றும் தெரியாமல்.. அவன் நீட்டிய கைக்குள் தன் கையை வைத்தாள்…

அனிவர்த் வந்த சிரிப்பை வாய்க்குள் அடக்கினான். கிடைத்த வாய்ப்பை விடாமல் அவளின் கையை தன் கைக்குள் பொதிந்து .. ஆழ கண்ணோடு கண் நோக்க… அதில் தேவர்ஷி உடல் சிலிர்க்க.. தன் இன்னொரு கையை அனிவர்த் நீட்ட.. மான் விழி மருண்டு உருவிக் கொண்டவள் சித்தம் பிழன்று .. மிரள..

“பைல்.. பைல்..” உதட்டோரம் சுழிப்பு சிரிப்புடன் கந்தர்வன் எடுத்து கொடுக்க..

‘அச்சோ! தேவா! மானத்த வாங்கறியே..’ என தன்னை திட்டியவாறே.. நுனி நாக்கு கடித்து பைலை நீட்டினாள்.

வாங்கி பார்த்தவன் டிஸ்டிங்க்சன் மாணவி என்று அது கட்டியம் கூற .. ம்ம்ம் அழகோடு அறிவும் இருக்கு ஆனால் அனுபவமில்லை … புரிந்து சில தொழில் முறை கேள்விகள் கேட்டவன்… அவள் பதிலில் திருப்தியாகி..

“ம்ம்.. ஓகே.. மெயில் வரும்..” என பைலை நீட்டினான். அவள் வாங்கி விட்டு.. கொஞ்சம் கூட பயமில்லாது அவனை முழுசா விழுங்கும் பார்வை ஒன்று பார்த்துட்டு வெளியேற..
அவள் ஒயில் பார்வையில் அனிவர்த்துக்கு சிரிப்பு வந்தது…

’ஆளப் பாரு.. சேட்டைய பாரு’ என…

அதற்கு பிறகு வந்திருந்த அத்தனை பேரையும் பார்த்து அனுப்பியவனுக்கு தேவர்ஷியே மனதில் நின்றாள்..

இளமை அழகு படிப்பு என்ன ட்ரைனிங் கொடுத்தால் போச்சு என்று ஏனோ அவன் மனம் தேவர்ஷிக்கே முன்னுரிமை கொடுத்தது.

மானேஜருக்கு அழைத்து தேவர்ஷிக்கு மெயில் அனுப்ப சொல்லியவன்.. அவளின் ரெஸ்யூமை எடுத்து அதிலிருந்த போட்டோவை தன் பெருவிரலால் தடவியவாறே பார்த்திருந்தான். ஏன் பார்கிறோம்… எதற்கு பார்க்கிறோம் என தெரியாமலே பார்த்திருந்தான்.

தேவர்ஷிக்கு ஒரு வாரத்தில் வேலையில் வந்து சேருமாறு மெயில் வந்திருக்க… சந்தோஷம் தாங்க முடியவில்லை. ஒரே ஆர்ப்பாட்டம் தான்..

நாங்களாம் யாராம்??!! என்று ஒரே அலப்பறை..

யார் காதையும் சும்மா விடவில்லை.. என் அருமை என்ன? பெருமை என்ன? அதிர்ஷ்டம் என்ன? இப்படி உயர்வு நவிற்சி அணியிலேயே சுய பெருமை பேசி பேசி ஆர்ப்பாட்டம்..

அவள் வாழ்நாளிலேயே இன்றே பொன் நாள் மகிழ்ச்சி கடலில் தத்தளிதாள்..

அறியாமைகளில் கிடைக்கும் மகிழ்ச்சி தெய்வீகம் ..

மாலை கம்பெனியில் இருந்த வந்த திருகுமரனிடம்..

“ப்பா.. நான் செலக்டாயிட்டேன் ப்பா…” குதியாட்டம்

“எனக்கு தெரியும்டா என் தேவாக்குட்டி அறிவுக்கு உடனே வேல கிடைச்சிடும்னு..”

“அது தான்பா… எனக்கும் டவுட்டா இருக்கு.. இவ அறிவுக்கு எப்படி வேல கொடுத்தாங்க..” என தேவர்ஷி தம்பி பிரவீன் கலாய்க்க…

அப்போது அங்கு வந்த திருக்குமரனின் தம்பி கண்ணனின் மகன் ராகுலும் பிரவீனோடு சேர்ந்து கொண்டு…

“அப்படி சொல்லுடா.. இவளுக்கு எல்லாம் வேல கொடுத்திருக்கானே அந்த கம்பெனியோட நிலமை இனி என்னாகுமோ?.. நினைச்சாலே ஐயோ பாவம்..”

“ப்பா பாருங்கப்பா.. இந்த தடியன்கள..” தகப்பனிடம் சலுகையாக சாய்ந்து கொண்டு புகார் கொடுக்க.

“டேய் சும்மா இருங்கடா… பாப்பாவையும் நம்பி ஒருத்தன் வேல கொடுத்திருக்கான்.. அத பாராட்டாம.. இப்படி கலாய்பீங்களா?..”திருகுமரனும் வெடிச்சிரிப்போடு அவர்களோடு இணைந்து கொள்ள..

“ப்பா.. நீங்களுமா.. போங்க.. உங்ககூட பேசமாட்டேன்..கா க்கா” தேவா ஊட

தன்னருகே அமர்ந்திருந்த மகளை லேசாக அணைத்து நெற்றியில் முத்தமிட்டார்.

வேலைக்கு செல்வதற்குள் வீட்டில் உள்ளவர்களை ஒரு வழியாக்கினாள். புதிதாக நிறைய ஆடைகள் அதற்கேற்றாற் போல அஸஸரிஸ் வாங்கினாள்…

பார்லருக்கு சென்றாள். ஏற்கனவே இவளுக்கு என ஒரு வண்டி இருக்க… புதிதாக ஒன்று வேண்டும் என கேட்க… திருக்குமரன் மகளின் விருப்பத்திற்காக வாங்கி கொடுத்தார்.

பிரவீன் தான்…

”இவ வேலைக்கு போறதுக்குள் அப்பா சொத்தை காலிபண்ணிடுவாபோல..” என கிண்டல்அடிக்க.. அவனை துரத்தி துரத்தி அடித்தாள்.

முதல் நாள் தனது புது வண்டியில் ஆர்ப்பாட்ட்மாக அலுவலகத்துக்கு சென்று..
மானேஜரிடம் ரிப்போர்ட் செய்து என்ன… எப்படி வேலை என தெரிந்து கொண்டவள்… மானேஜர் சொன்னது போல் அனிவர்த்தை பார்க்க அவனது அறைக்கு வந்தாள்.

கதவை லேசாக தட்டி.. “மே ஐ கம் இன் சார்..” தேவர்ஷா அனுமதி கேட்க…

அனிவர்த்தும் அன்று அலுவலகத்துக்கு சற்று முன்னதாகவே வந்திருந்தான். ஆனால் அவன் இன்று தேவர்ஷி வருவது எல்லாம் நினைவில்லை. தேவர்ஷியையே மறந்திருந்தான். அவள் குறும்புகளால் ஒரு இரண்டு நாள் அவன் நினைவிலிருந்தாள். பிறகு மெல்ல.. மெல்ல.. மறந்தும் போனான்.

தனது அறைக்கு வெளியே இருந்த கேமரா மூலம் தன் முன் இருந்த திரையில் தெரிந்த அவளை பார்த்தவன் அப்போது தான் நினைவு வர உற்சாகமாக…

“எஸ்..” என்றான்.

உள்ளே வந்தவளை பார்த்து அசந்து போனான்… அன்று அவளது சேட்டைகளை ரசித்தானே.. அவளின் தோற்றத்தை அவ்வளாக கவனிக்கவில்லை. தலை முதல் பாதம் வரை பொறுமையாக ரசித்து பார்த்தான்.

பாலில் சில சொட்டு செஞ்சாந்தை கலந்தது போன்ற நிறம்..

‘ப்பா… பிங்கியா இருக்கா…’

அடர்த்தியான சுருள் சுருளான கேசம் அழகாக கிளிப் போட்டு அடக்கி வைத்திருக்க.. அப்படி இருந்தும் ஒன்றிரண்டு அடங்காமல் அவள் நெற்றியிலும் காதோரங்களிலும் புரள..

‘கேர்லி ஹேர்.. இவளை மாதிரியே.. அடங்காது போல..’

நீண்ட கண்கள்.. கூர்நாசி.. ரொம்பவே சின்ன உதடுகள்.. சற்று ஒல்லியான உடல்வாகு…சராசரியான உயரம்.. அவன் கண்களுக்கு குட்டி பொண்ணாக தெரிந்தாள்.

ப்ளஸ்டு கேர்ள் மாதிரி இருக்காளே.. கொஞ்சம் வித்தியாசமா ஹோம்லி லுக்ல நல்லா தான் இருக்கா… இந்த லுக் கூட அழகா தான் இருக்கு..

“குட்மார்னிங் சார்..”

“ம்ம் சொல்லுங்க தேவர்ஷி.. ஆர் யூ ஹாப்பி…”

“எஸ் சார்..”

“ஓகே.. ஒர்க்ல சின்சீயரா இருக்கனும்.. ஒர்க் பர்ஸ்ட்.. மற்றது எல்லாம் அப்புறம் தான். காட் இட்..” என்றான் அனிவர்த் கண்டிப்புடன்…

“ம்ம்ம் ஓகே சார்” என தலையை நன்றாக ஆட்டினாள்.

லேசாக சிரிப்பு வந்துவிட.. “போய் வேலையை பாருங்க..” என

அதற்கும் தலையை ஆட்டி விட்டு சென்றாள். சின்ன பொண்ணு என சொல்லி சிரித்தான்.

சின்ன பொண்ணு என்ற அவன் நினைத்தது சரி என்பது போலவே அவள் செய்த செயல்களும்.. சேட்டைகளும் இருந்தன. அவன் எந்த அளவுக்கு டென்ஷன் ஆனானோ.. அந்த அளவுக்கு ரசிக்கவும் செய்தான்.. தினமும் அவளை ஸ்கேன் செய்வதே அவன் வேலையாகி போனதை வசதியாய் மறந்தான்.. அந்த ஆறரை அடி ஆணழகன்

தினமும் காலையில் அனிவர்த்தை பார்த்து காலை வணக்கம் சொல்லவதை வழக்கமாக வைத்திருந்தாள். அவன் வந்ததும் அவன் அறைக்கு சிட்டுகுருவியாக துள்ளி கொண்டு வருபவள்.. உற்சாகமாக..

“குட்மார்னிங் சார்..” மலர்ச்சியுடன்.. கிள்ளையாக மொழிவாள்.

அவள் மலர்ச்சி அவனையும் தொற்றிக் கொள்ளும். முகத்தில் எப்போதும் மின்னல் கீற்றாக… பனித்துளி அளவு புன்னகை ஒளிர்ந்து கொண்டே இருக்கும்.அவள் பேசுகையில் அவளின் மீன் விழிகள் அவள் உதட்டசைவிற்கு சுதி சேர்க்கும்.

அனிவர்த் கண்களுக்கு தேவர்ஷி வித்தியாசமாக.. அவன் கண்ட பெண்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு.. அவன் கவனத்தை ஈர்த்தாள். அவள் கேபினில் இருந்த கேமரா வழியாக அவளை கவனிக்க தொடங்கினான். ஒழுங்காக வேலை செய்கிறார்களா.. என எல்லோரையும் கவனிப்பது தான். இன்னும் கொஞ்சம் கூடுதலாக தேவர்ஷியை அவளின் சிறுபிள்ளைத்தனத்திற்காக கவனித்தான்.

சுழல் நாற்காலியில் லேசாக ஆடிக் கொண்டு தான் வேலை செய்வாள். ‘கால்கள் ஒரு இடத்தில் பாவாது போல..’ என மெல்லிசான சிரிப்போடு பார்த்திருந்தான்.

தேவர்ஷி எப்பவும் சுடி தான்.. நல்ல தரம் உயர்ந்த காட்டன் சுடி… மடிப்பு எடுத்தோ.. பின் குத்தியோ.. எல்லாம் துப்பட்டா இருக்காது. அலட்சியமாக அவள் தோளில் புரண்டு கொண்டு இருக்கும். அது சரிந்து வரும் போது அப்படியே நாசுக்காக தூக்கி போட்டுக் கொள்ளும் பாங்கு… அனிவர்த்தின் ரசனைக்கு இடமானது.

மதிய உணவை வீட்டில் இருந்தே கொண்டு வரும் தேவர்ஷி அங்கு அலுவலகத்தை சுத்தம் செய்யும் ஆயாம்மாவிற்கு பாதி உணவை கொடுத்து விட்டு உண்பதை கண்டவனுக்கு.. கோபம் கொள்ள செய்தது.

ஆடி அசைந்து வரும் தென்றல் – 10 Read More »

0A60A30C-A4AC-4148-B12C-B06DFD897C24

ஆடி அசைந்து வரும் தென்றல் – 9

9 – ஆடி அசைந்து வரும் தென்றல்

அனிவர்த் ஷாஷிகாவோடு பேசிக் கொண்டு இருந்தான். அனிவர்த் பேச்சுக்கள் ஓரிரு வார்த்தையில் இருக்க.. ஷாஷிகா தான் வாய் ஓயாமல் பேசினாள். இளையாளின் பேச்சுக்களை காதில் வாங்கி மூளையில் பதிவு செய்ய… அவளின் முகம் காட்டும் நவரசங்களை… பரவசங்களை.. மனதில் பதிவு செய்ய.. தனியொரு உலகில் வாழ்ந்து கொண்டிருந்தனர் இருவரும்…

“ஷாஷி.. வா.. லேட்டாகிடுச்சு..”என்ற குரல் இவர்களின் உலகில் உத்தரவின்றி உள்நுழைய… அனிவர்த் மனம் சுணங்க.. கூப்பிட்ட தோழனை கண்டு ஷாஷிகா…

“இருடா.. டீனு.. வரேன்”என கையாட்டி சொன்னவள்.. அனிவர்த்திடம்…

“பை அங்கிள்…” என சொல்லி விட்டு பட்டாம்பூச்சியாக பறந்துவிட்டாள்.

அனிவர்த் உற்சாகம் வடிந்து.. சோர்ந்து போய் அமர்ந்திருந்தான். ஏதேதோ சிந்தனைகள்.. எத்தனை நாளைக்கு…. அடுத்த வீட்டு பிள்ளையிடம் தனக்கு ஏன் இப்படி ஒரு பிணைப்பு… ஷாஷிகாவை பார்க்கும் போது தன் நெஞ்சில் ஏதோ ஒன்று சுனையாக ஊற்றெடுக்கிறதே.. அது என்ன… இன்னும் குழப்பங்கள் அதிகரிக்க… அங்கிருந்து கிளம்பினான்.

இப்படியே சில நாட்கள் கடக்க… மனம் ஷாஷிகாவையே தேடியது.. சோர்வு…அழுத்தம்..எதற்கு இப்படி… என அனிவர்த் என ஒரு நிலையில் இல்லை.

ஷாஷிகாவை பார்த்தே ஆகவேண்டும் என்ற நிலை.. ஷாஷிகாவை தேடி அவள் வீட்டிற்கே சென்றான். முதலில் ஷாஷிகாவை பாரக்க அவள் வீட்டிற்கு செல்ல.. மிகவும் யோசித்தான். முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள் வீட்டிற்கு சென்று அவர்கள் வீட்டுக் குழந்தையை பார்க்க வேண்டும் என்றால் என்ன சொல்வார்கள்..அனுமதிப்பார்களா.. ஏகப்பட்ட தயக்கம்..

ஷாஷிகா சொன்ன டிதேர்ட்டி.. காலிங் பெல்லை அழுத்தி விட்டு.. படபடப்புடன் நின்றான்.

ஒரு சில நிமிடங்களில் கதவு திறக்கப்பட… கதவின் உட்புறம் நின்றவளை கண்டு அனிவர்த்திற்கோ.. ஆச்சரியம்…

கதவை திறந்தவளுக்கோ கதவின் வெளிப்புறம் நின்றவனை கண்டு அதிர்ச்சி…

“வர்ஷி..”

“நீயா..”என்றான் ஆச்சரியமான குரலில்…

அவள் தேவர்ஷி..

மற்றவர்களுக்கு தேவா…

அனிவர்த்கோ வர்ஷி…

தேவர்ஷி…

தேவர்ஷி அனிவர்த்தை எதிர்பார்க்கவில்லை.. அதிர்ச்சியாகி நின்றாள்.ஆனால் அனிவர்த்கோ அவளை பார்த்ததில் மனதில் இருந்த சோர்வு வெறுமை எல்லாம் போன இடம் தெரியவில்லை.உற்சாகம் குமிழிட…

“வர்ஷி..இது உன் வீடா… அப்போ ஷாஷிகா..”

“அம்மா..” என ஷாஷிகா வர…

தேவர்ஷி வாசலை அடைத்துக் கொண்டு நின்றதால்.. அனிவர்த்தும் ஷாஷிகாவும் ஒருவரை ஒருவர் நேர் கோட்டில் பார்த்து் கொள்ளவில்லை. இருந்த போதும் ஷாஷிகாவின் குரலைக் கொண்டே இனம்கண்டு கொண்டவன்…

“ஷாஷிகா உன் பொண்ணா..”

“உன் ஹஸ்பென்ட் பேர் என்ன…”

“என்ன செய்யறார்..”

அவன் கேள்வியாக கேட்க.. ஏதும் பேசாமல் அவனையே பாரத்திருந்தாள். அதற்குள் அனிவர்த்தின் குரல் கேட்டு தேவர்ஷியின் பின்னிருந்து முன் வந்த ஷாஷிகா…

“அங்கிள்..”

“ஹாய் ஷாஷி..”என அனிவர்த் கை அசைக்க..

இதை அதிர்ந்து போய் பார்த்த தேவர்ஷி ஒரிரு நொடிகளில் தன்னை சுதாரித்து கொண்டாள்.

“ஷாஷி.. உள்ள போ..”என்றாள் உத்தரவாக…

இளையாளோ முகம் கூம்பி போய்.. தலையை தொங்கப் போட்டுக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள். அனிவர்த்க்கும் அடிப்பட்ட உணர்வு.. அதிலும் ஷாஷிகாவின் வாட்டத்தை
பார்த்து வருத்தமாகி போனது.

“ஏன் பாப்பாவை திட்டற… பாவம் முகமே வாடி போச்சு..”

அவனின் பேச்சை சட்டை செய்யாமல்…

“என்ன வேணும்… எதுக்கு வந்திங்க..” என்றாள் எரிச்சலாக..

“நானும் ஷாஷிகாவும் ப்ரண்ட்ஸ்.. ஷாஷிகாவை பார்க்க வந்தேன்..”

அவனை தீர்க்கமான பார்வை பார்க்க… அந்த பார்வையில் ஏதோ ஒன்று இருந்தது. அதை அனிவர்த்தால் கண்டு கொள்ள முடியவில்லை. ஆனால் அந்த பார்வை அவனிடம் என்னவோ சொல்லியது. அது மட்டும் அவனுக்கு புரிந்தது.

“ஷாஷிகாவிடம் பேச முடியுமா…”

“அவளுக்கு உங்க ப்ரண்ட்ஷிப் தேவையில்லை. இனி அவளை பார்க்கவோ பழகவோ.. செய்யாதிங்க..”

“ஏன்..” என்றான் ஒற்றை சொல்லாக..

“அது அவளுக்கு நல்லதில்ல.. இனி இங்க வராதிங்க..” கோபத்துடன்…

“கிளம்புங்க..”என சொல்லி விட்டு.. அவன் கிளம்பும் முன் கதவை அடைத்து விட்டு சென்றுவிட்டாள். முகத்தில் அடித்தாற் போல.. முகம் சுருங்கி.. அங்கிருந்து கிளம்பிவிட்டான்.

இரவு தனது அறையில் தூக்கம் வராமல் பால்கனியில் அமர்ந்திருந்தான் அனிவர்த். அவன் எண்ணம் முழுவதும் தேவர்ஷியே… அவளை பார்த்ததில் இருந்து எந்த உணர்வுகள் மறுத்துப் போய் இருந்ததோ… அவை எல்லாம் எழுந்து நின்று பேயாட்டம் போட்டது..

அவனின் எண்ணம் போக்கும்… உணர்வுகளும் அவனை நினைத்து அவனுக்கே அசிங்கமாக இருந்தது. அடுத்தவன் பொண்டாட்டியை இப்படி எல்லாம் நினைக்காதடா.. என அவனை அவனே திட்டி கொண்டு இருந்தான். இருந்தாலும் அடங்க மறுத்தது அவன் உணர்வுகள்.

அவளின் காதலில் மூழ்கி.. மோகத்தில் முத்து குளித்த காலங்கள் எண்ண அலையாக எழுந்து அவனை இம்சித்து கொண்டிருந்தது. தேவர்ஷியின் காதலை நிராகரித்தவனோ.. இப்போது நிராகரிப்பின் வழியை உணர்ந்தான்.

தூக்கம் வராமல் அவனுள் தாபத்தின் தவிப்பு.. தாபத்திற்கு தூபம் போட்டது அவளோடு இருந்த உள்ளி கால நினைவுகள்…

இரண்டு கைகளையும் மடித்து கோர்த்து தலைக்கு அடியில் அணைவாக கொடுத்து மல்லாந்து படுத்து… அவளின் நினைவுகளில் சுகமாக மூழ்கி போனான்.

ஐந்துவருடங்களுக்கு முன்… தேவர்ஷி அனிவர்த் அலுவலகம் வந்த முதல் நாள்…. இப்போதும் காட்சி பிழையின்றி தெளிவாக மனதில் தோன்றியது.

அந்தளவு அவன் நினைவடுக்குகளில் பதிந்துவிட்டாள் என்பதை இப்போதாவது உணர்வானா….

சி. கே டிரேடர்ஸ் வழக்கத்திற்கு மாறாக சற்று பரபரப்பாக இருந்தது. அதன் சுறுசுறுப்புக்கு இணையா தேவர்ஷியும் படபடப்புடன் அமர்ந்திருந்தாள்… நகம் கடிக்காதிருந்தது தான் குறை

படித்து முடித்து முதல் இன்டர்வியூ… தேறுவாளா? காலையிலேயே தாத்தாவும் பெரியப்பாவும் எதிர்மறையாக பேசி டென்ஷனை ஏகத்திற்கும் ஏத்திவிட்டு இருந்தார்கள்.

தங்கள் வீட்டு செல்வமகள் இன்னொரு இடத்தில் வேலைக்கு செல்வதா? என்பதே காரணம்

இன்று தனது அப்பாவோடு தாத்தாவை பார்க்க தன் பெரியப்பா வீட்டிற்கு சென்றாள். பார்க்க என்ன? பார்க்க!!… இன்டர்வியூக்கு செல்ல போவதை சொல்வதற்காக…

சுந்தரமூர்த்தி தன் சாய்வு நாற்காலியில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டு இருந்தார்.

“அப்பா.. “என திருகுமரன் அழைக்க…

பேப்பரில் இருந்து தலையை உயர்த்தியவர்…

“வாடா… குமரா.. என்ன காலங்கார்த்தால வந்திருக்க..”

அதற்குள் திருகுமரனின் குரல் கேட்டு விஸவநாதனும் வந்துவிட..

“வாப்பா.. குமரா..” வரவேற்று அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்தவர் மறந்தும் தன் தம்பியை அமர சொல்லவில்லை. சொல்லாமல் உட்காரமாட்டார் திருகுமரன்.

“என்ன விசயம்” விஸ்வநாதன்

திருகுமரன் தயக்கமே இல்லாமல் அமைதியாக…

“தேவா வேலைக்கு போக ஆசைபடறா.. இன்னைக்கு இன்டர்வியூ.. அதான் அப்பாகிட்ட சொல்லிட்டு போகலாம்னு வந்தோம்”

வி்ஸ்வநாதன் தந்தையைப் பார்த்தார். சுந்தரமூர்த்தி கோபத்தில் சத்தமாக…

“என்ன நினைச்சிட்டு இருக்க குமரா… நம்ம பொண்ண வேலைக்கு அனுப்பறது இது எல்லாம என்ன புதுசா பண்ணிட்டு இருக்கற…”

“சும்மா இன்டர்வியூ தானே போகட்டும்ப்பா..”

தேவர்ஷி அமைதியாக இவர்கள் பேசுவதை பார்ததுக் கொண்டு நின்றிருந்தாள். அதற்காக அவள் அமைதியான பெண் எல்லாம் கிடையாது. குறும்பையே கும்பிடு போட வைப்பாள். இவர்களை துடுக்காக பேசினால் அதற்கும் தன் தந்தை தான் திட்டுவாங்குவார் என்பதால் அமைதியாக நின்றாள்.

ஆனால் மனதுக்குள் கவுன்டர் கொடுத்து கொண்டு இருந்தாள்.

“நம்மகிட்ட ஆயிரம் பேர் வேலை செய்யறாங்க.. என் பேத்தி இன்னொரு இடத்துல வேலை செய்யறதா..”

‘ம்க்கும்.. பெரிய ராஜ பரம்பரை.. அட போங்கப்பா…’

“ப்பா… நம்ம கம்பெனிய பாரக்கவே இன்னும் பத்து பேரு இருந்தாலும் பத்தாது.. அப்படியிருக்க வெளிய எதுக்கு போய் வேலை பார்க்கனும்.. நம்ம கம்பெனிக்கே வரட்டுமே..”என விஸ்வநாதன் கேட்க…

‘இவங்க புள்ள விட்டுருவானா..’

“இல்லைங்கண்ணா.. வெளியே நாலு இடத்துக்கு போய்ட்டு பார்த்துட்டு வரட்டும்.. ஒருவேளை வேலைகிடைச்சாலும் மாப்பிள்ளை தகையற வரை சும்மா போவட்டும் உலக அனுபவம் கிடைக்கும்ப்பா..”

தகப்பனும் தமையனும் முகத்தை தூக்கி வைத்து விளக்கத்தை ஏற்காதிருக்க..

“உங்க பேத்திக்கு ஆசிர்வாதம் பண்ணுங்க… நேரமாகுது.. தேவா தாத்தா கால்ல தொட்டு கும்பிடுடா…”

தந்தை சொன்னது போலவே தேவா செய்ய…சுந்தரமூர்த்தி..

“ம்ம்..

எந்த கம்பெனிக்கு இன்டர்வியூ போற?

தேவா தன் பைல் காட்ட..

“இவன் நிச்சயம் பிரஷர்ஸ் எடுக்க மாட்டான்.. இவ்ளோ நேரம் பேசியதே வேஸ்ட்..போ. போ..”

‘இதுக்கு பேரு ஆசிர்வாதமா..’
அப்பா உங்க குடும்ப அங்கத்தினர்களை மியூசியத்தில் தான் வைக்கனும்..

ஒன்றும் பேசாமல திருகுமரன் மகளை அழைத்துக் கொண்டு வந்துவிட்டார்.

வீட்டிற்குள் வந்தவர்களைப் பார்த்து கௌசல்யா…

“என்னங்க சொன்னாங்க..” பதட்டத்துடன்…

“என்ன சொல்வாங்க.. இவங்க குடும்ப பெருமைய காப்பத்துனுமாம் பெரிய அம்பானி குடும்பம்…” தேவர்ஷி மிகுந்த எரிச்சலுடன்…

“விடுடா தேவா குட்டி அவங்க அப்படின்னு தெரிஞ்சது தான.. இதை எல்லாம் பேசி டென்ஷனான இண்டர்வியூ எப்படி அட்டென்ட் பண்ணுவ… கிளம்பி வா அப்பாவே டிராப் பண்றேன்.”

வர்ஷி உள்ளே செல்லவும் கௌசல்யா…

“ஏங்க என்ன சொன்னாங்க..”கவலையாக கேட்க…

“விடுமா… வழக்கமானது தான..”

“இன்னும் எத்தனை காலத்துக்குங்க.. நாம தான் ஒவ்வொன்னும் அவங்க சொல்றத கேட்டு சகிச்சு வாழனும்.. நம்ம புள்ளைகளுமா…” கண்கள் கலங்க..

“ப்ச் கௌசி.. தேவா வந்திடுவா.. கண்ணை துடை..” என தோளோடு அணைத்து ஆறுதல் படுத்தினார்.

தேவா வரவும் அவசரமாக விலகினார் கௌசல்யா… இருந்தும் வர்ஷி கவனித்துவிட்டாள்.

“லவ் பேர்ட்ஸ்..லவ்பேர்ட்ஸ.. தகதிமிதா..” என கண்ணடித்து கைகளை சிறாக விரித்து அசைத்து பாடிக் கொண்டே வந்தாள். கௌசல்யாவிற்கு வந்த வெட்கத்தை மறைத்தவாறு…

“வாயாடி. வா வந்து சாமி கும்பிடு..” என பூஜை அறைக்கு அழைத்து சென்று கடவுள் படங்களின் முன்பு கண்மூடி நின்று..

“கடவுளே.. என் பொண்ண விருப்பபட்ட மாதிரி அவளுக்கு இந்த வேலை கிடைக்கனும்..” என அப்பாவியாக வேண்டி திருநீறு பூசிவிட்டார்.

மனைவியின் வேண்டுதலை அறிந்தவராக பார்த்துக் கொண்டு நின்றார் திருக்குமரன்.

அவருக்கும் அண்ணன் சொன்னது உண்மையா இருக்கும் என்று தான் தோணுச்சு.. பொண்ணு விளையாட்டுக்காரி.. தடுத்தால் கோபம் கொள்வாள்.அங்கு செலக்ட் செய்யலேன்னாலும் சும்மா போய்ட்டு வரட்டும் என்று பெருந்தன்மையாக இருந்தார்

ஆடி அசைந்து வரும் தென்றல் – 9 Read More »

error: Content is protected !!
Scroll to Top