ATM Tamil Romantic Novels

Author name: Shaahithya Srinivasan

5084B066-540D-4AC3-A08E-4D1B268ABF71

புள்ளி மேவாத மான் – 24

24- புள்ளி மேவாத மான்

இதோ வெகு விமரிசையாக ஊரையே அழைத்து எழிலுக்கு வளைகாப்பு நடத்தி கொண்டு இருந்தான் தனா. மண்டபம் பார்த்து வைக்கலாம் என வீட்டார் சொல்ல வேண்டாம் என மறுத்து வீட்டிலேயே வைத்து கொண்டான். அவனிற்கு அவன் பெற்றோர் வாழ்ந்த வீட்டிலேயே தன் வாரிசின் வரவுக்கான விழா நடை பெறவேண்டும் என நினைத்தான்.அவன் சொன்னது போலேவே ஒன்பதாம் மாதம் தான்.
தனக்கு இருக்கும் ஒரே உறவு அவள் தான்.அதுவும் தன் காதல் மனைவி. தன் வாழ்க்கையில் விடிவெள்ளியாக வந்து வாழ்வை பிரகாசமாக்கினாள் என்றால் .. மண்ணில் உதிக்கும் முன்பே தந்தை மீதான அளப்பற்கரிய பாசம் கொண்ட அவனுடைய பாப்புகுட்டியின் வருகையை உலகுக்கு பறை சாற்றும் விழா. இவர்களுக்கான விழா கொண்டாடி மகிழ்ந்தான்.
மனம் நிறைந்த ஆசைகளோடு ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தான். முத்துக்குமார் தன் செல்லமகளுக்காக செய்ய மிகவும் ஆசைப்பட்டார். ஆனால் தனாவோ சீர்வரிசை மட்டும் செய்யுங்கள் போதும். என் மனைவிக்கு நான் செய்து கொள்கிறேன் என்க..
ஏழாம் மாதம் அனுப்பாததாலேயே ஏக கடுப்பில் இருந்தவர் வழக்கம் போல முத்துக்குமார் சுந்தரத்திடம் பஞ்சாயத்து வைக்க.. சுந்தரம் சொல்லியும் தனா கேட்கவில்லை. ஒரே பிடிவாதமாக தன் நிலையில் நின்று விட்டான்.
முத்துக்குமாரை சமாதானம் செய்வதற்குள் சுந்தரம் தான் சலித்து போனார். “முதப் புள்ள இல்லையா.. அதான் ஆட்டம் போடறான். அடுத்து இரண்டு மூன்று பொறந்தா அடக்கிடுவான். அடுத்த புள்ளபேறும் நீங்க தான் பார்க்க போறிங்க மாமா.. இப்ப அவன் போக்குல விட்டு புடிப்போம்” என சமாதானம் செய்தார்.
சுந்தரம் சொன்னதில் இரண்டு மூன்று பேரக்குழந்தைகள் என்ற நினைப்பே தித்திப்பாக இருக்க.. எளிதில் விட்டு கொடுத்தார்.
இருந்த போதும் வழக்கம் போல மாமனார் மருமகனும் பார்க்கும் போது எல்லாம் முறைத்துக் கொண்டு இருந்தனர்.
கற்பகத்திற்கமும் ஏழாம் மாதம் அழைத்து வந்து மகளை சீராட்ட ஆசைப்பட்டார். தனா மறுத்ததில் மனக்குறை இருந்த போதும்.. மகளின் மீதான மருமகனின் பாசத்தில் மனம் நிறைந்து போனார்.
அவ்வப்போது மகளிற்கு பிடித்ததை செய்து தமிழரசனோடு வந்து பார்த்து விட்டு சென்றார்.
தனா இதுக்கும் அதுக்கும் என நில்லாமல் சுற்றி சுற்றி அலைந்து எல்லாமே சரியாக நடக்கிறதா என பார்க்க.. கருணா இவனின் அலும்பை பார்த்து..
“டேய் மாப்பிள்ளை.. எதுக்குடா இப்ப ஓரிடம் நில்லாமல் அலைந்து கொண்டு இருக்கிற..”
“அது எல்லாம் சரியா இருக்கானு பார்த்தேன்”
அவனை கருணா முறைத்து பார்த்தான்.
“ஏன்டா உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல..”
ஒன்றும் தெரியாதவன் போல “என்னடா” என்றான் சிரிப்பை உதட்டை மடித்து அடக்கி கொண்டு..
அதில் மேலும் கடுப்பாவன் “என்ன… என்னடா..ஏற்கனவே நீ பண்ற அட்டகாசத்துல எங்க பொண்டாட்டிங்க எங்களை மதிக்கறதே இல்லை.. மானக்கேடா பேசறாங்க”
“இதுல இப்படி எல்லாம் பண்ணினா..ஒரு வாரமா எங்களை கூட நம்பாம நீ தான எல்லாம் பார்த்து ஏற்பாடு பண்ணின.. காலைல இருந்து மேற்ப்பார்வை பார்க்கறேனு அலையற…அதுததுக்கு ஆள் போட்டு இருக்கு..அடங்கி ஒரு இடத்துல இருக்க மாட்டியா” என்றான்.
“போடா”என சிரித்து கொண்டே அவனை கைகளால் நகர்த்தி விட்டு அவன் வேலையைப் பார்க்க சென்று விட்டான்.
“அடேய்” என பல்லை கடித்தான் கருணா. பின்ன அவனும் தான் என்ன பண்ணுவான். தனா யார் எங்க என இல்லாமல் எப்பவும் எழில்… எழில்.. என என்று எழில் ஜபம் படிக்க ஆரம்பித்தானோ.. அன்று ஆரம்பித்தது அந்த குடும்ப ஆண்களுக்கு ஏச்சும் பேச்சும் அவர்களின் மனைவிமார்களால்…
“தனா அண்ணா பாருங்க..எழில எப்படி தாங்கறாரு.. நீங்களும் அவர் கூடத்தான இருக்கறிங்க.. அவரப் பார்த்தாவது கொஞ்சம் பழககூடாது”
“தனா மாமா அக்கா வாய திறந்து சொல்லாமலே மனசறிஞ்சு பார்த்து பார்த்து செய்றாரு.. அவரு ரத்தம் தான உங்க உடம்புலயும் ஓடுது.. நீங்க மட்டும் ஏன் இப்படி இருக்கறிங்க..”
என்று ஏற்கனவே பல ஏச்சு பேச்சுகள வாங்கி கொடுத்துவிட்டு இப்படி அவர்கள் கண் முன்னாடியே அட்டகாசம் செய்தால் அவர்களும் என்ன தான் செய்வார்கள்.
“இன்னைக்கு இவன் மொத்தமா டைவர்ஸ் வாங்கி கொடுக்காம அடங்கமாட்டான்” என கருணா மற்றவர்களிடம் கூற அவர்களும் புலம்பி சலித்தனர்.
கொஞ்ச நேரத்தில் தான் வளைகாப்புக்கு என பிரத்யேகமாக எடுத்துக் கொடுத்த மயில் வண்ண பட்டில் தன் திருமணத்தின் போது வாங்கி கொடுத்த நகைகள் பூட்டி.. ஒன்பதாம் மாத வயிறு சற்று பெரிதாக..திருவாரூர் தேரை போல அசைந்து வந்தவளை… சற்று தள்ளி நின்று கண் எடுக்காமல் ரசித்து கொண்டு இருந்தான்.எழில் மணையில் அமர வைக்கப்பட்டு…நலுங்கு வைக்க ஆரம்பிக்க.. தனா எழலின் அருகில் வந்து நின்று கொண்டான்.
முதலில் திலகா நலுங்கு வைத்து வளையல் போட்டு ஆரம்பித்து வைக்க… அடுத்து கற்பகம் நலுங்கு வைத்து மகளுக்கு தங்க வளையல் கைக்கு இரண்டாக போட்டு மகிழ்ந்தார். பிறகு தேவி வசந்தி என பெண்கள் அனைவரும் வளையல் அணிவித்து முடிக்க…
முத்துகுமார் சுந்தரம் கண்ணன் என குடும்பத்தில் மூத்த ஆண்கள் சந்தன பொட்டு வைத்து ஆசிர்வாதம் செய்தனர்.
கடைசியாக தனாவை அழைக்க… தனா எழிலின் முன் வந்தவன்.. நெற்றி கன்னம் என சந்தனம் துலங்க… அலங்காரமான சற்று பெரிதான ஒற்றை சோபாவில் இவ்வளவு நேரம் நிமிர்ந்து அமர்ந்து இருந்ததில் இடுப்பும் முதுகும் வலிக்க.. சற்று சாய்ந்து ஆசுவாசமாக இடக்கையை பின்னால் ஊன்றி அமர்ந்து சோபையாக தனாவை பார்த்து மென்னகை புரிய…
தனாவிற்கோ பிள்ளை சுமக்கும் கிள்ளையை அணைத்து கொஞ்சிட வேகம் பிறந்தது. மெல்ல தன் இரு கைகளிலும் சந்தனத்தை எடுத்து தடவி அவள் கன்னங்களில் தடவ.. சந்தனத்தின் குளுமையை விட அவன் கைகளின் குளுமை அவளின் உடலெங்கும் சிலிர்ப்பை உண்டாக்க.. கோதையின் கண்களோ ஏக்கத்தை பிரதிபலிக்க.. கண்ணளானின் உள்ளமோ கள்வெறி கொண்டது.
நான்கு கண்களும் நேர்கோட்டில் சஞ்சாரமிட… இருவரும் மௌனமான மோனநிலையில்…
“க்க்கும்…க்க்கும்…” என சுற்றியும் கருணா வெற்றி திரு பிரசாத் தமிழரசன் கீர்த்தி கனி வசந்தி என ஒரு பட்டாளமே கணைத்து சத்தமிட…
தனா திரும்பி அவர்களை முறைக்க.. எழிலோ வெக்கத்தில் தலை குனிந்து கொண்டாள்.
தனா மெதுவாக எழிலின் கைகளை பிடித்து தன் சட்டைபையில் இருந்த இரு ஜோடி வளையல்களை அணிவித்தான். அதுவரை வெட்கத்தில் தலை குனிந்திருந்த எழில் தனா தன் கைகளில் அணிவித்த வளையல்களை பார்த்தவுடன் சராலென நிமிர்ந்து தனாவை நோக்கினாள்.
பார்த்தவளின் கண்களில் கண்ணீர் கரகரவென இறங்க… அந்த வளையல்கள் தனாவின் தாய் லட்சுமியின் வைரவளையல்கள் ஒரு ஜோடியும் நவரத்தின கற்கள் வளையல்கள் ஒரு ஜோடியும்… தன் அன்பு அத்தையின் வளையல்கள் கணவன் அணிவித்ததில் மங்கை அவளுக்கு அத்தனை ஆனந்தம். அதனால் வந்த ஆனந்த கண்ணீர்.
தனாவிற்கு புதிதாக வளையல் வாங்க இஷ்டமில்லை. தன் தாய்க்கு மிகவும் பிடித்தவள் அதுமட்டுமின்றி தன் மனைவிக்கும் மகவுக்கும் தன் பெற்றோரின் ஆசிர்வாதம் வேண்டும் என நினைத்தே இவ்வாறு செய்தான்.
“உஷ்ஷ்” என மெல்ல அதட்டி அவளின் நெற்றியில் இதழ் ஒற்றியவன்.. அவள் முன்பு மண்டியிட்டு அமர்ந்து.. அவளின் புடவையை லேசாக விலக்க.. சுற்றி நின்றவர்கள் இவன் என்னடா செய்யறான் என்று குறுகுறுப்புடன் பார்க்க..
அவளுக்கோ அவன் என்ன செய்ய போகிறான் என தெரிந்ததால்.. அனைவரும் முன்பும் இப்படி செய்ய சுற்றி நின்றவர்களில் பார்வையில் கூச்சமாகி நெளிந்தவாறே…
“மாமா என்ன பண்றிங்க..எல்லோரும் பார்க்கறாங்க” என அவனின் கைகளை பிடித்து தடுக்க..
“ஏய் என் பாப்புகுட்டிக்கு முத்தம் கொடுக்கறேன்டி. உனக்கு கொடுத்திட்டு பாப்புகுட்டிக்கு கொடுக்கலைனா கோவிச்சுக்குவாங்க..”
“மாமா.. எல்லாரும் முன்னாடி சேலையை விலக்கி.. எனக்கு ஒரு மாதிரியா இருக்கு..”
“லேசா தாண்டி.. யார் பார்த்தா என்ன நீ ஏன் அவங்களை பார்க்கற.. என்னை பாரு”
தனா “பாப்புக்குட்டி” என அழைத்து இரண்டு மூன்று முத்தங்கள் வைக்க… உடனே குழந்தை வயிற்றில் வேகமாக துள்ளாட்டம் போட..
இவன் என்ன செய்கிறான் என குழப்பமாக பார்த்து கொண்டு இருந்தவர்களுக்கு இவன் முத்தம் வைத்ததும் குழந்தை துடிப்பாக துள்ளவும்.. இவர்களை சுற்றி நின்று கொண்டு இருந்த இரு குடும்பத்தாரும் பேச்சின்றி வியந்து போய் நின்றனர்.
உடனே கீர்த்தி “அண்ணா நான் நான் ணா..” என்று ஓடி வந்து தனா அருகில் மண்டியிட..
தனா கீர்த்தியின் கைகளை எடுத்து மெதுவாக எழிலின் வயிற்றில் வைத்து..
“பாப்புகுட்டி.. இவங்க அத்தடா.. பாப்புகுட்டியோட அத்த…”
தந்தையின் குரலோ.. கீர்த்தியின் ஸ்பரிசமோ.. மீண்டும் குழந்தை அசைந்தாடியது.குழந்தையின் அசைவை உணர்ந்த கீர்த்தியின் கைகள் கூச செய்ய… கீர்த்திக்கோ சொல்ல முடியாத உணர்வில் தத்தளிக்க.. தன் அண்ணனை திரும்பி பார்த்தாள். தனா ஆம் என்பது போல கண்களை மூடி தலை அசைக்க…
பார்த்து கொண்டு இருந்தவர்களுக்கு இம்முறை முகத்தில் வியப்பை மீறிய ஆனந்தம் கூத்தாடியது.
தங்களின் வாரிசு பிறக்கும் முன்பே எவ்வளவு துடிப்பாக பாசமாக இருக்கிறது என தனாவின் சித்தப்பா சித்திகளும் கற்பகமும் பூரித்து போய் இருக்க ….
முத்துகுமார் தான் என் புள்ளைய மயக்கி வச்சிருக்கிற மாதிரி.. என் பேரபுள்ளயையும் மயக்கி வெச்சிருக்கான் என மனதில் வசை பாடினார்.
அடுத்து பிரசாத் “நான்.. நான் தொட்டு பார்க்கிறேன்” என வர..
எல்லோரும் முன்பு இப்படி இருக்க எழில் சங்கடமாக உணர்ந்தாள். அவளின் நிலை உணர்ந்த திலகா தான்..
“போதும் இது என்ன புள்ளதாச்சிய வச்சிகிட்டு விளையாட்டா..எல்லோரும் போங்க.. போயி ஆகற வேலையை பாருங்க..”என சத்தமிட..
எல்லோரும் அமைதியாக… கடைசியாக திலகா தேவி கற்பகம் ஆரத்தி சுற்றி முடித்து எழிலை தனாவோடு சாப்பிட அனுப்பி வைத்தனர்.
சாப்பிட்டு சிறிது நேரத்தில் எழிலை முத்துக்குமார் குடும்பத்தினர் அழைத்துச் செல்ல..தனாவோ அவளை எங்கே அனுப்பினான். அவளின் கைகளை பிடித்துக்கொண்டு தங்கள் அறைக்கு அழைத்துச் சென்றவன்..
“இங்கயே இருந்துடேன்டி.. நீயும் பாப்புகுட்டியும் இல்லாம நான் இங்க தனியா எப்படி இருப்பேன்”
“மாமா..”என எழில் பரிதாபமாக பார்த்தாள்.
“நான் நல்லா பார்த்துகறேன்டி.. வேணும்னா உங்க அம்மாவை இங்கேயே வச்சிக்கலாம்”
“மாமா..”
“நீ இல்லாம என்னால இருக்க முடியாதுடி.. சொன்னா புரிஞ்சுக்கோ..”
தனாவின் முகத்தை பார்த்து அவளால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.
ஏழாம் மாதம் அனுப்பததால் முத்துக்குமார் கற்பகத்திடம் அத்தனை சத்தம் போட்டு இருக்க.. அதை தாயின் மூலம் அறிந்திருந்த எழில் இப்போது என்ன செய்ய என முழித்தாள்.
சுந்தரம் “தனா நல்ல நேரம் போயிட்டு இருக்கு.. அரசி கிளம்பனும். என்ன பண்ணறிங்க.. வாங்க சீக்கிரம்” என்க..
“இதோ வரோம் சித்தப்பா” என்று வெளியே பார்த்து குரல் கொடுத்தவன் எழிலை ஏக்கமாகப் பார்க்க..
எழில் தனாவினை லேசாக அணைத்து “மாமா.. சொன்னா புரிஞ்சிக்குங்க.. இப்ப போய் வரலைனு சொன்னா பெரியவங்க என்ன சொல்வாங்க.. எங்க அப்பா கோவிச்சுகுவாரு..”
“போடி அந்த விருமாண்டிக்கு நான் எல்லாம் பயப்படுவேனா..”
“மாமா.. அவங்களுக்கும் பொண்ண பக்கத்தில் வச்சு பார்த்திகிடனும்னு ஆசை இருக்காதா.. என்ன ஒரு மூனு நாலு மாசம் நிமிசமா ஓடி போயிடும்”
“போடி” என முறுக்கி கொள்ள.. அவன் தாடையை பிடித்து கொஞ்சி கெஞ்சி என சமாதானப்படுத்தினாள் எழில். அப்போதும் மனசில்லாமல் முகத்தை தூக்கி வைத்து கொண்டு தான் அனுப்பி வைத்தான் தனா.
அவனின் முகவாட்டம் அவள் மனதை பிசைந்தது.
முத்துக்குமார் குடும்பம் எல்லோரிடம் சொல்லி கொண்டு எழிலை அழைத்து சென்றனர்.எழில் தனாவை திரும்பி திரும்பி பார்த்தவாறே காருக்கு சென்றாள்.
தமிழரசனோ கீர்த்தியை முறைத்துக் கொண்டே கிளம்பி சென்றான். இன்று எப்படியாவது கீர்த்தியிடம் தனியாக பேசி காதலிக்க சம்மதம் வாங்கி விட நினைத்தான்.
அவளோ இவனுக்கு போக்கு காட்டி கொண்டு இருந்தாள். வீட்டின் பின்புறம் கீர்த்தி எதற்கோ செல்ல.. தமிழரசன் யாரும் அறியாமல் அவளை பின் தொடர்ந்து சென்றான்.
அங்கு யாரும் இல்லாமல் போக இது தான் சரியான சமயம் என நினைத்து..
“ஏய் இங்க பாருடி.. என்ன… சும்மா உன் பின்னாடியே அலைய விட்டுட்டு இருக்க..”
கீர்த்தியோ அவ்விடம் விட்டு நகரப் பார்க்க.. சட்டென் அவள் கைகளை பிடித்துக் கொண்டான் தமிழரசன்.
அவனின் அந்த தீடீர் செயலில் பெண்ணவளோ பதறி போய் கையை உதறிக் கொண்டே யாராவது பார்த்தால் என்ன நடக்குமோ பதட்டத்துடன் சுற்றியும் பார்க்க..
அவள் கையை அவனிடம் இருந்து விடுவிக்க முயல… இன்னும் இறுக்கிப் பிடித்தான். இன்று பதில் தெரியாமல் விடமாட்டேன் என்பதை போல..
அவன் இறுக்கிப் பிடித்ததில் வலியால் முகம் சுருக்கி”ஷ்ஷ்… வலிக்குது விடுங்க..”
“இன்னைக்கு நீ எனக்கு பதில் சொல்லியே ஆகனும் கீர்த்தி அதுவரைக்கும் இப்படி தான் கையை விடமாட்டேன்”
“சொன்னா கேளுங்க.. யாராவது பார்த்தால் பிரச்சினை ஆகிவிடும் விடுங்க மாமா..” தன்னை அறியாமல் அவனை மாமா என அழைத்து விட்டதில் மென் சிரிப்போடு கண்களை சுருக்கி நுனி நாக்கை கடித்து நின்றாள்.
அவளின் அந்த அழகில் சொக்கி போய்..அவளுடைய மாமா என்ற அழைப்பிலும் சந்தோஷம் கொண்டவன் “அப்ப என்னைய லவ் பண்றேனு சொல்லு.. கைய விட்டுடறேன்”
“ஹூம்.. அப்படி எல்லாம் ஒன்னும் இல்லையே..” என சட்டென்று சொன்னாள்.
அவள் முகத்தை வைத்தே அவள் பொய் சொல்கிறாள் என அறிந்தவன் அவளிடம்..
“நிஜமா.. ஒன்னும் இல்லையாடி.. ஆனா நான் இருக்குனு சொல்லறேன் நிருபிக்கவா..” என்றவன் என்னவென்று உணரும் முன்பே அவளின் இடை வளைத்து இறுக்கி அணைத்து இதழில் முத்தமிடப் போக..
அவனின் தீடிர் செயலில் புரியாமல் முழித்தவள்.. பின்பு சுதாரித்து கொண்டு அவனிடம் இருந்து விடுபட முயல..
அங்கு “தமிழ்” என திருவின் குரல் கேட்க..அவனின் உறுமலில் இருவரும் விதிர்விதிர்த்து விலக…
தன் தங்கையின் விருப்பம் இல்லாமல் அவளை கட்டாயப்படுத்தி தப்பாக நடக்க முயற்சிக்கிறான் என நினைத்துக் கொண்டான் திரு
தங்கையின் கையை பிடித்து தன்னருகே நிறுத்திக் கொண்டவன் “என்ன பண்ணிகிட்டு இருக்கறிங்க.. விருப்பமில்லாத பொண்ணை கட்டாயப்படுத்தி தப்பா நடந்துக்க பார்க்கறிங்க.. அசிங்கமா இல்ல..”
தமிழோ “மச்சான்”என ஏதோ சொல்ல வர..அதை எல்லாம் எங்கே காது கொடுத்து கேட்டான் திரு..
“அண்ணியோட அண்ணாங்கறதால … தனா அண்ணா முகத்துக்காக சும்மா விடறேன். இதே வேற யாராவதா இருந்தா நடக்கறதே வேற..”
தமிழ் கீர்த்தியை பார்க்க.. அவளோ என்ன என உணரும் முன்பே எல்லாம் நடந்திருக்க.. செய்வதறியாது திகைத்து நின்றாள்.
தனக்கு சாதகமாக அவள் அண்ணணிடம் சொல்வாளா

புள்ளி மேவாத மான் – 24 Read More »

0618CB9A-441D-4453-8FDA-6D85617BBC5D

புள்ளி மேவாத மான் – 23

23 – புள்ளி மேவாத மான்

எழில் சமாதானம் ஆகி சமரசம் கொண்டு சரசம் ஆடிய பின்பு மேற்கொண்டு இரண்டு நாட்கள் சென்றிருந்தது. அந்த இரண்டு நாளும் அவ்வப்போது எழிலின் முகத்தையே சில நிமிடங்கள் விடாது பார்ப்பான். என்னவென்று எழில் கேட்டால் ஒன்றுமில்லை என தலை அசைத்துவிடுவான்.
அவன் விழிப் பார்வையில் ஒரு எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருக்கும்.முதலில் எழிலுக்கு அந்த பார்வையின் அர்த்தம் புரியவில்லை. சற்று யோசித்து பார்த்தப் பொழுது அந்த பார்வை தன்னிடம் எதையோ கேட்கிறது இல்லை எதிர்பார்க்கிறது என புரிந்து கொண்டாள்.
அன்று இரவில் தங்கள் அறையில் இருந்த பொழுதும் அதே பார்வை. தனாவை கேட்க மழுப்பலாக பதில் சொல்ல… விடாது இழுத்து வைத்து கேட்டாள் எழில்.
“மாமா.. எதுக்கு இப்படி பார்க்கறிங்க…”
“ஒன்னுமில்லை நீ தூங்கு”
“இப்ப சொல்லப் போறிங்களா.. இல்லையா..”
“ம்கூம்.. சொல்லமாட்டேன். நீயே கண்டுபிடி”
“எங்கிட்ட ஏதோ எதிர்பார்க்கறிங்க..கேட்காமேயே அத நான் செய்யனும்னு நினைக்கறிங்க..”
எதுவும் பேசாமல் அவள் முகத்தையே பார்த்திருக்க…
“அப்படி தானா… ஆனா என்னன்னு தெரியலையே..”அழகாக உதடு பிதுக்கினாள்.
அவள் பாவனையில் இவன் சொக்கி தான் போனான். அவளை காதலோடு பார்க்க…
“என்ன்னு சொல்லுங்க மாமா..எனக்கு தெரியல.. மண்டயே வெடிச்சிடும் போல இருக்கு.. ப்ளீ…ஸ்..”என அவன் தாடையை பிடித்து கொஞ்சலாக கெஞ்சினாள்.
அள்ளி அணைத்திட துடித்த கைகளை கடினப்பட்டு கட்டுப்படுத்தினான்.அவள் கொஞ்சல் மொழியில் மனம் இரங்கி தன் வலக்கை நீட்டி தா என்பது போல பார்த்தான்.
என்ன தரனும் என புரியாமல் “என்ன மாமா..என்ன தரனும்” முழித்தாள் சிறு குழந்தையாக…
அவள் செய்கை எல்லாம் அவனை பித்தனாக்கியது. அவளை ஆண்டு விட துடித்த உணர்வுகளை அடக்கி வைத்தான். அவளிடம் தனக்கு வேண்டியதை பெற்ற பிறகே மற்றது எல்லாம் என அவளை தீர்க்கமாக பார்த்தவாறே..
“என் கிப்ட் எல்லாம் கொடுடி”என்றான் அவள் முன் கையை நீட்டினான்.
“மா..மா..”என்றாள் அவனை ஆச்சரியமாக பார்த்தபடி..
எல்லாம் எனக்கு தெரியும் என்பதாக லேசாக தலை அசைத்து இமைமூடி திறந்தான்.
மாமாவுக்கு தெரிந்திருக்கா… தன் காதலை சொல்லாமல் தனக்குள்ளேயே பொத்தி வைத்திருக்க.. அந்த காதல் சொல்லாமலேயே தன் மாமனுக்கு தெரிந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டு இருந்தவளுக்கு தன் காதல் பரிசுகளும் சொல்லாமலேயே தெரிந்ததில்..லேசாக கண் கலங்க.. அதை துடைக்க கூட மறந்தவளாக.. சென்று தன் அலமாரியில் வைத்திருந்த சற்றே பெரியதான அலங்கார மரப்பெட்டியை தூக்கி கொண்டு வந்தாள்.
வேகமாக சென்று அவளிடம் இருந்து வாங்கி வந்து படுக்கையில் வைத்தான்.
அதன் சிறு பூட்டை சாவி கொண்டு திறந்தாள். அந்த பெட்டி பரிசுப் பொருட்களாலும் வாழ்த்து அட்டைகளாலும் நிரப்பப்பட்டு இருந்தது.
ஒரு வாழ்த்து அட்டையை எடுத்து”இது தான் நான் உங்களுக்கு பர்ஸ்ட் பர்ஸ்ட் வாங்கின பர்த்டே கார்டு. நீங்க காலேஜ் போய் ஒரு வருசம் கழிச்சு வந்திங்கல்ல.. அதுக்கப்புறம் வந்த உங்க பர்த்டேவுக்கு நான் வாங்கினது. கொடுக்க தைரியமில்லா வச்சுகிட்டேன்.”
அந்த கார்டை வாங்கி பார்த்தான். அதில் உள்ளே ‘ஹாப்பி பர்த்டே மாமா” என எழிதியிருந்தது. அதை தவிர அதில் ஒன்றும் பெரிதாக இல்லை.

ஆனால் அடுத்தடுத்த வருடங்களில் அவள் கொடுக்காமல் வைத்திருந்தில் ஒன்றில் அழகான இதயம்.. மற்றொன்றில் கொஞ்சி கொள்ளும் லவ்பேர்ட்ஸ்.. இன்னொன்றில் அவளுடைய உதடும் பக்கத்தில் அவன் மீசையும் என ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமாக வரைந்திருந்தாள். பத்து வருட காதலில் பத்து பிறந்த நாள் வாழ்த்து அட்டைகள்.
சில காதலர் தின வாழ்த்து அட்டைகளும் அவன் கையில் இருந்தன.அதை பிரித்து படித்தவனால் சத்தியமாக அவனால் நார்மலாக இருக்க. முடியவில்லை. எதையோ இழந்து விட்டதாகவும்…ஏதோ கிடைத்தற்கரிய பொக்கிஷம் கிடைத்தது போலவும் இரு வேறு உணர்வுகளுக்கு ஆட் கொண்டான்.

காதல் பேதை என்னை
ஒரு மையல் பார்வை
பாரடா என் காதல் தேவா
அந்த பார்வை போதும்
என் காதல் வாழ…
அந்த காதலை உயிராக
கொண்டு நான் வாழ்ந்திடுவேன்.

என ஒரு வாழ்த்து அட்டையில்..

இன்னொன்றில்….

உன் மீசையும்
அதில் மறைந்திருக்கும்
உன் உதட்டில் பளீரிடும்
உன் வெண் சிரிப்பும்
எனை பித்து கொள்ள செய்கிறதடா…

இப்படி சில கவிதைகளும் இருந்தன.
அதை எல்லாம் பார்க்க.. பார்க்க.. அவனை பேச்சற்ற மௌனமே ஆட்சி செய்தது.
ஒவ்வொரு பரிசு பொருளாக கையில் கொடுக்க ஆரம்பித்தாள்.

“உங்களை நான் லவ் பண்றேனு தெரிஞ்ச அந்த வருடம் நான் ஸ்கூல் டூர் கேரளா போயிருந்த போது உங்களுக்காக நான் வாங்கியது”என அவன் கைகளில் வைத்தாள் சந்தன மரத்தில் அழகாக வடிவமைக்கப்பட்ட ஒரு பேனா.
“இது நான் அத்தை கூட உங்க பர்த்டேவுக்கு டிரஸ் எடுக்க போன போது பார்த்தேனா.. பிடிச்சிருந்தது. யாருக்கும் தெரியாம அடுத்த நாள் ஸ்கூல் இருந்து போய் வாங்கிட்டு வந்தேன்” என கொடுத்தாள் சாண்டில் கலர் சட்டை ஒன்று.
“குவாலியர்ல ரொம்ப குளிரும்னு அத்தை சொன்னாங்களா.. அதான் ஒரு ஸ்வெட்டர் வாங்கினேன். ப்ப்ச் கொடுக்க தான் இல்லை” என்றாள் ஒரு ஸ்வெட்டரை எடுத்து..
“நீங்க காலேஜ்ல கோல்டு மெடல் வாங்கினதுக்காக ஏதாவது கொடுக்கனும்னு தோனுச்சா.. கோல்டு மெடல்ங்கற போது.. பெரிசா ஒர்த்தா கொடுக்கனுமில்ல..அதான் ஏதாவது தங்கத்தில கொடுக்கலாம்னு யோசிச்சு என் தோட்டை வித்து இதை வாங்கினேன்”என ஒரு மோதிரத்தை கொடுத்தாள்.
அவள் கண்களில் காதல் மின்ன.. மின்ன.. ஒவ்வொன்றாக சொல்லி எடுத்து கொடுக்க தன்னை மறந்து அவளிடமே லயித்து இருந்தவன்.
“அடிப்பாவி தோட்டை வித்துட்டயா..உங்க வீட்ல ஒன்னும் கேட்கலையா..”
“கேட்டாங்க.. கேட்டாங்க.. கேட்காம இருப்பாங்களா.. அதான் யோசிச்சு முன்னாடியே ஒரு பிளான் பண்ணிருந்தேன்”
“என்னாது அது”
“ஸ்கூல் விட்டு வரும் போது யாரும் இல்லாத ரோட்ல சைக்கிளை மறிச்சு கத்திய காட்டி ஒரு திருடன் கேட்டான். பயத்துல கழட்டி கொடுத்துட்டேனு சொல்லிட்டேன் ஐயோ பாவம் புள்ளனு விட்டுட்டாங்க ” என்றாள் கண்களை சிமிட்டி..
“அடிப்பாவி.. நீ பெரிய கேடியா இருப்ப போல இருக்கே..” என வாய் மேல் கை வைத்து கொண்டான் தனா.
அடுத்தடுத்த சில பொருட்களை கையில் கொடுத்து “நீங்க பூங்கொடிக்காவ லவ் பண்ணறிங்கனு தெரிஞ்சும் இதெல்லாம் வேஸ்ட் இனி வாங்க வேணாம்னு தான் நினைச்சேன். ஆனால் என்னால உங்கள மறந்து உங்களுக்கு வாங்காம இருக்க முடியல.. அதான் என் காதல் எங்கும் தோற்காது என என்னோடவே பொத்தி பொக்கிஷமா வச்சுகிட்டேன்” என்றாள். சொல்லும் போதே கண்களில் சிறுவலி வந்து போனது.
அவளின் காதலில் மிரண்டு தான் போனான் தனா. அவளை தாவி அணைத்து கொண்டான். அவள் காதல் உன்னதத்தை புரிந்து கொள்ளாமல் தான் செய்த மடத்தனத்தை நினைத்து இப்போதும் தன்னையே திட்டிக் கொண்டான் மனதோடு..
அந்த பொருட்களை எல்லாம் பெட்டியில் அடுக்கி எடுத்து கொண்டு போய் தன் அலமாரியில் வைத்து விட்டு வந்தான்.
படுக்கையில் அவளருகே வந்து அவள் மடியில் தலை வைத்து படுத்து அவள் வயிற்றில் முகம் புதைத்து இடுப்பை கட்டிக் கொண்டான்.
எதுவும் பேசாமல் எழிலும் தலை கோதி கொடுக்க..சிறிது நேரத்தில் தன் சேலையில் ஈரம் உணர்ந்தவள்பதறி போய் தனாவின் முகத்தை திருப்ப முயற்சிக்க.. பிடிவாதமாக முகம் திருப்ப மறுக்க..
“என்னாச்ச மாமா.. ஏன் அழுகறிங்க.”
“உன் காதலுக்கு நான் தகுதியானவனே இல்லை தான”
“ஐயோ.. மாமா.. ஏன் அப்படி நினைக்கறிங்க..முதல்லயே என் காதலை நான் உங்கிட்ட சொல்லியிருந்தா.. நீங்க என்னைய தான லவ் பண்ணியிருப்பிங்க.. சொல்லாத காதலுக்கு ஏது மாமா மதிப்பு” என்றாள் ஏக்கத்தோடு..
உடனே வாயை பொத்தி”அப்படி சொல்லாதடி உன் காதலை எல்லாம் காதல்னு சொல்லகூடாது. தெய்வீக அன்பு அப்படி தான் சொல்லனும் சும்மா என்னை சமாதானம் செய்ய எதுவும் சொல்லாத பேசாம இரு.”மீண்டும் அமைதியாக கட்டிக்கொள்ள..
எழில் மீண்டும் தலை கோதிவிட.. அவனுடைய பாப்புகுட்டியோ தந்தையின் கன்னத்தை உராய்ந்து உராய்ந்து கவலையை போக்கியது.
மகவின் பாசத்தில் ” பாப்புகுட்டி.. பாப்புக்குட்டி..” என முத்தமிட..
தந்தை பாசத்தில் அவனோ மீசை உரச முத்தமிட.. எழிலுக்கோ மீசை உரசலில் அவஸ்தையாக நெளிந்தாள்.
அவள் நெளியவும்”ப்ப்ச் என்னடி”என அவள் முகத்தை பார்க்க..அவள் கண்களில் தெரிந்த மையலில் தந்தை வேசத்தை கலைத்து காதலன் பதவிக்கு மீண்டுவிட்டான்.
அதன் பிறகு அவளின் காதல் மழையில் நனைந்தவன் அவளை மோக மழையில் குளிப்பாட்டினான்.
அன்றிலிருந்து தனா எழில்.. எழில்.. என எழில்தாசனாகி போனான். எழுந்தது முதல் தூங்கும் வரை எழிலின் பின்னாலேயே சுற்றி திரிந்தான்.
அவளின் காதல் பொக்கிஷத்தை தனக்குள் வாங்கி கொண்டவன். தன் காதல் தேவதையை தினம் தினம் ஆராதித்தான்.
பகல் எல்லாம் எழில் என்றால் இரவில் பாப்பு குட்டி என வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்தான்.
மாதங்கள் தள்ள தள்ள.. எழிலால் எந்த வேலையும் சுறுசுறுப்பாக செய்ய முடியவில்லை. எல்லா கர்ப்பிணி பெண்களுக்கும் இருப்பதை விட இவள் வயிறும் சற்று பெரியதாகவே இருக்க.. வேலை செய்தால் மேல் மூச்சு வாங்கியது.
கற்பகமோ வீடு பெருக்கு.. துணி துவை குனிந்து நிமிர்ந்து வேலை செய் என போன் செய்து சொல்லவும்… அவளால் முடியாவிட்டாலும் சுற்று வேலைக்கு வரும் பெண்ணை நிறுத்தி விட்டு மெது மெதுவாக செய்ய..
தனாவோ எழில் கஷ்டப்படுவதை கண்டு மாமியாரிடம் போன் செய்து சண்டைக்கு போக.. அவரும் மருமகனிடம் பொறுமையாக எடுத்து சொன்னார்.
எங்கே அதெல்லாம் கேட்கும் நிலையில் இல்லை தனா. அந்தளவுக்கு எழிலின் காதலுக்கு அடிமையாகி இருந்தான்.
எழிலையும் வேலை செய்ய விடவில்லை. இதை அறிந்த கற்பகம் வழக்கம் போல திலகாவிடம் பஞ்சாயத்து வைக்க…
அன்று மாலையே திலகாவும் தேவியும் தனா வீட்டிற்கு வந்தனர். தனாவும் வீட்டில் தான் இருந்தான்.வெற்றி மூலம் அதை அறிந்து தானே வந்திருந்தனர்.
இப்போழுது எல்லாம் சரியாக பேக்டரில அவன் இருப்பதே இல்லை. சமையல் கூட எழிலை செய்ய விடுவதில்லை. இருளாயியால் முடியவில்லை என வயலில் வேலை செய்யும் பெண்களில் ஒருவரை சமையலுக்கு வைத்திருந்தான்.
காலையில் எழுந்து அந்த பெண்ணை இதை செய் அதை செய் என படுத்தி எடுத்து.. அதை எல்லாம் அவளுக்கு மூச்சு முட்டி போகும் அளவுக்கு சாப்பிட வைத்து மாத்திரைகள் கொடுத்து என அவன் பேக்டரி கிளம்பவே பதினொரு மணி ஆகிவிடும்.
சென்ற ஒருமணி நேரத்தில் வந்துவிடுவான். தன் கையாலேயே ஏதாவது பழஜீஸ் எடுத்து அருகில் இருந்து குடிக்க வைத்து விட்டு செல்வான். அடுத்த ஒருமணி நேரத்தில் மதியசாப்பாட்டிற்கு வந்துவிடுவான்.
அவளை சாப்பிட வைத்து தானும் சாப்பிட்டு இருவரும் ஓய்வாக தூங்கி எழுந்து என மாலை ஐந்து மணிக்கு தான் செல்வான்.அடுத்த ஒரு மணிநேரம்.. அடுத்த ஒருமணி நேரம் என பேக்டரிக்கும் வீட்டுக்கும் காவடி எடுப்பான் . இரவு ஏழு மணிக்கு எல்லாம் வீடு வந்துவிடுவான் வேலை இருந்தாலும் இல்லை என்றாலும்.. வெற்றி கருணாவிடம் சொல்லி கொண்டு…
திலகா “தனா.. சொல்றத கேளு..எழில் குனிஞ்சு நிமிர்ந்து வேலை செஞ்சா தான் பிரசவம் சுபலமா இருக்கும். சுகப்பிரசவம் தான் நல்லது.சிசேரியன் பண்ணா எழில் தான் கஷ்டப்படுவா..பெரியவங்க எங்களுக்கு தெரியாதா.. நாங்க சொல்லற படி எழில் இருக்கட்டும். நீ அமைதியா இரு”
எப்பவும் போல பேசாமல் இறுகிய முகத்துடன் இருந்தான் தனா.
அதில் கடுப்பான திலகா “வேணா அடுத்த மாதமே வளைகாப்பு வைச்சு அவங்க வீட்டுக்கு அனுப்பிச்சிடலாமா..”என கேட்க
தனா பதறி போய் “வேணா.. வேணாம்.. நீங்க சொல்றபடியே செஞ்சுகிறோம்”
அதில் திலகா அது என கெத்தாக ஒரு பார்வை பார்த்தார். தேவி வந்த சிரிப்பை அடக்கி கொண்டார்.
பின்னே எழிலை ஏழாம் மாதம் வளையல் போட்டு அழைத்து கொள்ள முத்துக்குமார் கேட்டிருக்க.. தனா தான் ஒன்பதாம் மாதம் அனுப்புவேன் பிடிவாதமாக சொல்லிவிட்டான்.
அதைக் கொண்டு தான் தனாவை மடக்கினார் திலகா. சொல்லிவிட்டு அவர்கள் கிளம்பிவிட.. இவன் புலம்பிக் கொண்டே இருந்தான்.
“அவங்களுக்கு என்ன சொல்லிட்டு போயிட்டாங்க..எனக்கு தான் நீ வேலை செய்யறத பார்த்தா கஷ்டமா இருக்கு..”
“பார்த்துக்கலாம் விடுங்க மாமா.. மெதுவா மெதுவா செய்யறேன்” என தனாவை சமாளித்தாள்.
ஆனால் அதற்காக தனா அமைதியாக எல்லாம் இருந்து விடவில்லை. அவன் செய்த அழும்புகள் சொல்ல முடியாதவை.
தனாவிற்காக எழில் சுற்றிய காலங்கள் போய் தனா எழில் பின்னாடி சுற்றுவதை கண்டு.. தனா குடும்பத்தில் உள்ள கல்யாணமான பெண்கள் எல்லாம் எப்படி இப்படி.. எங்களுக்கும் சொல்லு.. என எழிலை நச்சரிக்க ஆரம்பித்தனர்.
ஒருபடி மேலே போய் கனியோ இதற்கென ஒரு வாட்சப் குரூப் ஆரம்பித்தாள். அதில் ஓயாத மெசேஜ் தான். அதில் எப்படி ஒற்றுமையா.. காதலாக… வாழ்வது என கேட்டு நச்சரித்தனர். எழிலுக்கு தான் வெட்கமாகி போனது.
தன் காதலை மெல்ல பட்டும் படாமல் சொல்ல.. அதற்கே ஆஹா.. ஓஹோ என கேலியும் கிண்டல் தான். கனி வாட்சப் குரூப்பிற்கு தனா எழில் படத்தை வைத்து அன்றில் பறவைகள் என பெயரிட்டாள்.

புள்ளி மேவாத மான் – 23 Read More »

19B76D90-43C4-4961-828C-46901CF91AC7

புள்ளி மேவாத மான் – 22

22 – புள்ளி மேவாத மான்

நெடு நேரம் உறக்கம் வராமல் புரண்டு.. புரண்டு படுத்தவன்…அவள் நன்கு உறங்கிவிட்டதை அறிந்து அவளை நெருங்கி லேசாக அணைத்தாற் போல படுத்து உறங்க முயற்சிக்க…
அவள் வயிற்றில் கைகளை மெதுவாக படரவிட்டு கண்களை மூட… சில நிமிடங்களில் பிள்ளை ஸ்பரிசத்தை இவன் கைகளில் உணர்ந்தான்.
அந்த நொடி அவன் மனதில் வெண்மையாக இருந்த வெறுமை எல்லாம் வர்ண ஜாலங்களால் நிரப்பப்பட்டது.
உனக்கு எல்லாமுமாக நான் இருக்கிறேன் அப்பா என அவன் குழந்தை சொல்வது போல உணர்ந்தான்.
“பாப்பு குட்டி உங்களுக்கு என்ன தெரியுதா… நான் அப்பா.. உங்க அப்பா…”
“நான் பேசறது உங்களுக்கு புரியுதா..நீங்க கவனிக்கறிங்களா..”
உடனே குழந்தை வேகமாக துள்ளியது.தன் குழந்தை தான் பேசுவதை கேட்கிறது என்ற மகிழ்ச்சியில் எழிலின் வயிற்றில் கையை வைத்து அதன் ஸ்பரிசம் உணர்ந்தவாறே அதனிடம் பேசினான்.
“பாப்பு குட்டி உங்களுக்கு அப்பாவ பிடிக்குமா…”
“எனக்கும் உங்கள ரொம்ப பிடிக்கும். உங்க அம்மாவை அதை விட அதிகமா பிடிக்கும் பாப்பு குட்டி”
தன் தலையை தந்தையின் கைகளில் வேகமாக முட்டி தன் எதிர்ப்பை காண்பித்தது.
“ஹாஹா… ஹா… இப்பவே உங்களுக்கு பொறாமையா… “என சிரித்தான்.
அடுத்த நொடி சிரிப்பு மறைந்து முகத்தில் கவலை படர்ந்தது தனாவிற்கு…
“பாருடா குட்டி அம்மா என்ட்ட பேச மாட்டேங்கறா..”
“உங்க அம்மா அன்பை நான் புரிஞ்சுகலை தான். உங்க அம்மா எம் மேல உசிரா இருக்கானு இப்ப தான் தெரிஞ்சுது.. சொன்னா தான எனக்கு தெரியும். அவ சொல்லாம எங்கிட்ட கோவிச்சுகிட்டு இப்படி பண்றா.. நீயே சொல்லு பாப்பு குட்டி அப்பா பாவம் தானே..”
தன் மனக்குறைகளை யாரும் காது கொடுத்து கேட்காததால் வயிற்று பிள்ளையிடம் பிதற்றி கொண்டு இருந்தான்.
“நான் பண்ணினது தப்பு தான் இல்லேனு சொல்ல.. ஆனா இவ்வளவு பிரச்சினை ஆகும்னு தெரியாம பண்ணிட்டேன் பாப்பு குட்டி. என்னை பாவம்னு மன்னிச்சு விடலாம்ல”
“பாப்பு குட்டி.. உங்க அம்மாவை விட்டா.. எனக்கு யாருடா இருக்கா..”
உடனே குழந்தை அவன் கைகளில் ஒரு உதை விட்டது.
“சாரி.. சாரி..உங்களை சொல்லைனு கோபமா.. நீங்களும் தான் எனக்கு ஓகேவா..”
மனைவியிடம் மன்னிப்பு கேட்க கௌரவம் பார்த்தவன் இன்னும் கண்ணிலே காணாத கருவறை பிள்ளையிடம் மண்டியிட்டான். தன் உதிரத்தில் உதித்தது என்பதாலோ…
“போங்க பாப்பு குட்டி உங்க அம்மா மாதிரியே உங்களுக்கும் கோபம் வருது” என செல்ல கோபம் கொண்டான்.
குழந்தை தன் தலையை தந்தையின் கைகளில் முட்டி முட்டி சமாதானம் செய்தது.
“நீங்க உடனே சமாதானம் ஆகிட்டிங்க.. ஆனா உங்க அம்மா சமாதானம் ஆகாம அப்பாவை கஷ்டப்படுத்தறா.. தெரியுமா..”
“நீங்க கொஞ்சம் அப்பாவுக்காக அம்மாட்ட சொல்லறிங்களா..”
குழந்தை அவன் கைகளில் லேசாக அசைந்து அவனை ஆறுதல் படுத்தியது..
வார்த்தைக்கு ஒரு பாப்பு குட்டி போட்டு ஏதோ ஏதோ பேசியவாறு உறங்கி போனான் தனா.
தந்தை உறங்கியது அறிந்தோ என்னவோ குழந்தையும் தாயின் வயிற்றில் அமைதியாகி உறக்கம் கொண்டது.
தந்தை மகவு பரிபாஷணை அறியாமல்
எழில் நல்ல உறக்கத்தில் இருந்தாள்.
எழிலும் கோபித்து கொண்டு தாய் வீடு சென்றுவிட்டாளே தவிர.. எப்போதும் தனாவின் ஞாபகமே.. நேரத்திற்கு உண்டானா.. உறங்கினானா.. என
பகலில் கூட வீட்டிலுள்ளவர்களோடு பொழுதை கழித்துவிடுவாள். ஆனால் இரவில் தனாவின் அருகாமையோ.. அணைப்போ.. இன்றி அவளுக்கு முழுமையான உறக்கம் என்பதில்லை.
இன்று தனாவின் அணைப்பை கோபத்தில் நிராகரித்தாலும்.. அவனின் அருகாமையில் ஆழ்ந்த உறக்கம். அதனால் தந்தை பிள்ளை பாசபிணைப்பை அவள் அறியவில்லை.
நாம் இவரை உயிராக காதலித்து கொண்டு இருக்கோம். இவரோ எப்பவோ முடிந்து போன காதலுக்கு நியாயம் செஞ்சிட்டு இருக்காரு.. என ஆதங்கத்தில் இருந்தாள்.
தினமும் ஊரே உறங்கும் வேளையில் எழிலும் உறங்கியதும் தனாவும் அவனுடைய பாப்பு குட்டியும் வெகு நேரம் உரையாடி விட்டே உறங்க செல்வது வழக்கமானது.
மேலும் சில நாட்கள் தனா வீட்டில் இருக்கும் நேரம் எல்லாம் எழிலின் பின்னாலேயே சுற்றி கொண்டு இருக்க… அவளோ பேசாமல் முறுக்கி கொண்டு இருந்தாள்.
வெளியில் கோபம் முகம் கொண்டு இருந்தாலும்.. உள்ளுக்குள் அவனின் செயலால் மனம் குளிர்ந்து தான் போயிருந்தது.
தனா தன்னை சமாதனம் செய்வதற்காக.. கெஞ்சி கொண்டும்.. கொஞ்சி கொண்டும் பின்னாலேயே சுற்றுவது எழில் மனதில் சாரலாக சாமரம் வீசிக் கொண்டு இருந்தது.
எப்பவும் நாம் தானே பின்னாலேயே சுத்துவோம். இவரை சுத்தல்ல விடறது கூட நல்லா கிக்கா தான் இருக்கு என நினைத்தே
தனாவோடு சமரசம் ஆகாமல் போக்கு காட்டி கொண்டு இருந்தாள்.
இப்படியே ஒரு வாரம் கடந்திருக்க…எழிலின் பாராமுகத்தில் தனா மிகவும் துவண்டு போனான். அன்று பேக்டரியில் அவனால் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் மனமும் உடலும் சோர்வாக இருக்க…
வெற்றியிடம் பேக்டரியை பார்த்து கொள்ள சொல்லிவிட்டு தன் ராயல் என்பீல்டை எடுத்து கொண்டு எங்கு செல்வது என தெரியாமல் மனம் போன போக்கில் மெதுவாக ஓட்டி கொண்டு வந்தவனுக்கு அவனின் வயற்காடு கண்ணில் பட…
வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு மெதுவாக வரப்பில் காலாற நடக்க ஆரம்பித்தான். எழிலின் நினைவிலேயே வயற்காடு தென்னந்தோப்பு எல்லாம் தாண்டி மாந்தோப்பிற்குள் வந்திருந்தான்.
நடந்து வந்து கொண்டு இருந்தவனின் காதில் கிசுகிசுப்பான பேச்சு குரல் கேட்க…. குரல் வந்த திசையை நோக்கி சென்றான்.
அங்கே தோப்பை கவனித்து கொள்ளும் செங்கான் மனைவி வேலாயியை வலுகட்டயமாக இழுத்து அணைத்து கொள்ள… அவளோ கழுத்தை நொடித்து கொண்டு கணவனின் அணைப்பில் இருந்து திமிற…அங்கே இருவருக்குள் ஒரு காதல் கண்ணாமூச்சி நடந்து கொண்டு இருந்தது.
தனாவோ அவர்களின் காதலை கண்டு தன்னை மறந்து ரசித்து கொண்டு இருந்தான். ஆம் ரசித்து கொண்டு தான் இருந்தான்.
அவர்களின் அகவை அறுபதிற்கு மேல்.. நரை கூடி..கூன் விழுந்து.. தோல் சுருங்கி..பொக்கை வாயோடு.. அந்த காதலர்கள் பெரிய அழகு இல்லை.. ஆனால் அவர்களின் காதல் கொண்ட மனம் அழகாக இருந்தது. அது அவர்களின் செயலில் மிளிரந்தது.
எதற்கோ வேலாயி கோவித்து கொள்ள… செங்கான் மனைவியை இழுத்து அணைக்க.. வேறு திசையில் பார்த்து கொண்டு இருந்தவளை கன்னத்தில் முத்தம் கொடுக்க..
அதில் வேலாயி வெட்கப்பட்டு கணவரின் நெஞ்சில் முகத்தை புதைத்து கொள்ள.. மனைவியை ஒரு கையால் அணைத்து கொண்டு.. மனைவியின் காதில் கிசுகிசுப்பாக… எதோ சொல்ல..
“மீசை நரைச்சாலும் ஆசை நரைக்கலையா என் மச்சானுக்கு” என குமட்டில் இடிக்க..
அவரோ பெருங்குரல் சிரிப்போடு மீசையை நீவிக் கொண்டார். பிறகு மனைவியின் காய்ப்பு காய்ந்த கைகளை தன் கையில் எடுத்து வைத்துக்கொண்டு மென்மயாக நீவிவிட்டு அதில் முத்தம் பதித்து
“உனக்குனு நான் எதுவும் பெரிசா செஞ்சதில்ல.எனக்காக.. நம்ம குடும்பத்துக்காக உழைச்சு கையெல்லாம் காப்பு காஞ்சு போச்சுல…” கவலையுடன் உரைக்க…
அதற்கு மனையாளோ”யாருக்கு செஞ்சேன்.. எம் புருஷ சுமைய பாதி வாங்கிட்டே.. அதுல எனக்கு சந்தோசந்தான்.. விசனப்பட ஒன்னுல்ல..” மனம் நிறைந்த வாழ்வுகான புன்னகை முகத்தில் பிரதிபலிக்க சிரிக்க..
அந்த சிரிப்பில் மயங்கிய செங்கானோ தன்னை மறந்து மனைவியை அணைத்து கொண்டார்.அங்கு கலவியில்லாத ஒரு காதல் அரங்கேற்றமானது.
தனாவிற்கு அவர்களின் காதலை காண காண தானும் இது போல எழிலோடு வாழ்வின் இறுதிகாலம் வரை வாழவேண்டும் என ஆசை கொண்டான்.
மனமும் உடலும் சோர்ந்து வந்தவனுக்கு இந்த மூப்பு காதல் அவனை உற்சாகமாக மீட்டெடுத்தது.ஏனோ சொல்ல தெரியாத சந்தோஷம்.. உள்ளத்தில் உடனே எழிலை பார்க்க வேண்டும் என்ற பேராவல்..
அந்த காதல பறவைகளை தொந்தரவு செய்யாமல் … சத்தம் செய்யாமல்.. வந்த சுவடு தெரியாமல்.. ஆனால் வரும் போது இருந்ததிற்கு நேர்மாறாக மிகுந்த துடிப்புடன் சென்றான்.
மாலை மங்கி.. இரவுக்கான ஆயத்த வேலைகளில் வானம் களமிறங்க.. கதிர் முற்றி நெற்குதர்கள் நிறைந்திருந்த பயிர்களை தீண்டி வந்த சில்லென்ற காற்று.. என சுற்றுசூழலும் அவன் மனதை போலவே ரம்யமாக இருக்க..
அவனின் நடையில் இப்போ துள்ளல் வந்தது. நம்மை சுற்றி உள்ளவை ஏற்கனவே தினமும் பார்த்து பழகியதாக இருந்தாலும்.. காதல் கொண்ட மனதிற்கு அவை புதிதாக ரசிக்க கூடியதாக தான் இருக்கும்..
பைக்கை எடுத்தவன் வீட்டிற்கு எதிர்திசையில் சென்றான்.. நேராக தான் வழக்கமாக பொருட்கள் வாங்கும் டிபார்மெண்ட் ஸ்டோரில் எழிலுக்கு பிடித்த டெய்ரிமில்க் சில்க் பெரிய பார் இன்னும் அவளுக்கு பிடித்த சில ஸ்நாக்ஸ் வாங்கி கொண்டு.. வரும் வழியில் அவளுக்கு மிகவும் பிடித்த மல்லிகை சரம் வாங்கி கொண்டு வீட்டுக்கு வந்தான்.
வீட்டிற்குள் நுழையும் போதே “எழில்.. எழில்.. எங்கிருக்க..”என உற்சாகமான குரலில்..
அவனின் குரலில் உள்ளறையில் இருந்து வந்தவள் அவனை வித்தியாசமாக பார்த்தாள். என்னாச்சு நாம கோபமாக இருக்கோம்னு சோகமாக சுத்திட்டு இருந்தாரு.. இப்ப என்ன திடீர்னு மூஞ்சி ஆயிரம் வாட்ஸ் பல்பு எரியுது.. என்னனு தெரியலயே.. எதுக்கும் உஷாரா இருந்துக்கோ எழிலரசி… என தனக்கு தானே சொல்லி கொண்டாள்.
இது எதையும் கண்டு கொள்ளாமல்.. அவள் வந்ததும் அவளை இழுத்து சோபாவில் அமர வைத்து தானும் அவளருகில் அமர்ந்து கொண்டு சாக்லேட் பாரை எடுத்து..
“எழில் இந்தா உன்னோட பேவரட் சாக்லேட்.. இப்ப சாப்பிடறியா.. இல்லல்ல வேணாம் உனக்கு கொஞ்சம் மெல்டானதான பிடிக்கும். அப்புறமா சாப்பிடு.. இப்ப வேணா ட்ரைப்ரூட்ஸ் பால்ஸ் சாப்பிடறியா..உனக்கு பிடிக்கும்ல.. வேணா வேணாம் நேந்திரங்கா சிப்ஸ் சாப்பிடறியா..” தனா தன் போக்கில் பேசி கொண்டே போக..
இவருக்கு என்னாச்சு நான் இவரிடம் சண்டை போட்டது எல்லாம் மறந்து போச்சா.. நான் பேசமாட்டேனு தெரிஞ்சு இவர் பாட்டுக்கு நான்ஸ்டாப்பா பேசிகிட்டே போறாரே…என நினைத்தாள்.
தனாவோ இப்ப பூச்சரத்தை கையில் எடுத்து
“நெருக்கமா கட்டிய மல்லிகப்பூ உனக்கு பிடிக்கும்ல.. இப்பவே வச்சுகறியா..”என ஆசையோடு கேட்க..
அவனின் மகிழ்ச்சியும் நீண்ட நாட்களுக்கு பிறகு அவன் முகத்தில் தெரிந்த பொலிவும்… அவன் உதடுகளோடு கண்களின் சிரிப்பும்…
கண்டவளுக்கு அவனை பேசி காயப்படுத்த விரும்பாமல்.. அமைதியாக பூவை வாங்கி தலையில் சூடிக் கொண்டாள்.
எதுவும் எதிர்மறையாக பேசாமல் பூவை வாங்கி வைத்து கொள்ளவும்.. தனாவால் அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை.
எழிலை தாவி அணைத்து கொண்டான்.அவனின் வேகமான அணைப்பில் எழில் தான் சற்று மிரண்டுவிட்டாள்.
“அச்சோ.. பாப்பா.. “என கத்திவிட்டாள். அதன் பின்பு தான் எழிலின் நிலையறிந்து தன் வேகத்தை சற்று குறைத்து..
அவளின் சேலையை லேசாக விலக்கி.. வயிற்றில் கை வைத்து..
“சாரிடா பாப்புகுட்டி.. சாரி.. உங்களுக்கு வலிக்குதா.. அப்பா தெரியாம பண்ணிட்டேன்.. சாரி”
அடப்போடா தகப்பா.. உனக்கு எப்ப பாரு இதே வேலையா போச்சு.. தப்பு பண்ணிட்டு சாரி கேட்க வேண்டியது.. உனக்கு எங்க அம்மா தான் கரெக்ட்..என ஒரு உதை கொடுத்து விட்டு அமைதியாகிவிட்டது.
தனாவின் பேச்சிற்கு வயிற்று குழந்தையின் பதிலடி இதை எல்லாம் பார்த்தவள்.. என்னடா நடக்குது இங்கே..என புரியாமல் முழித்தாள். அவளுக்கு இதெல்லாம் தெரியாதல்லவா…
அவளின் முழியை கண்டவன் “நீயும் பேசலையா.. இந்த வீட்ல வேற யாரு இருக்கா என்ட பேச… அதான் நீ தூங்கியதும் நானும் பாப்பு குட்டியும் தூக்கம் வரவரை பேசிட்டு இருப்போம்”என்றான் முகத்தை சோகமாக வைத்து கொண்டு..
அவன் சொல்லியது உண்மை தானே என நினைத்து வருத்தபட்டாள். ரொம்ப ஓவரா தான் பண்றமோ.. என நினைத்து கொண்டிருக்க..
அவளின் முகமாற்றைத்தை சரியாக படித்தவன் அவள் இளகி வரும் தருணம் அறிந்து…
“சாரிடி.. சாரி.. எல்லாத்துக்கும் சாரி”என அவள் தாடையை பிடித்து கொஞ்சினான்.அவனின் கொஞ்சலில் மெல்லிதாக சிரிக்க..
அந்த சிரிப்பே.. அவனுக்கு போதுமானதாக இருக்க..இன்னும் நெருங்கி அவளை மெல்ல அணைக்க… அவளும் அவனின் நெஞ்சில் சாய..
அவளை கைகளில் அள்ளி கொண்டவன் தங்கள் அறையை நோக்கி சென்றான்.
எழில் தான் சிணுங்கி கொண்டே..
” மாமா வாசற்கதவு திறந்திருக்கு”
“இருளாயி முன்னால திண்ணைல உட்கார்ந்திருக்கு”
“விளக்கு வைக்கற நேரம் வேணாம்”
“விளக்கு அணைக்கற நேரமே வந்திடுச்சு”
“நான் இன்னும் டிபன் பண்ணல..”
“எனக்கு இன்னைக்கு பசிக்கலடி”
“எனக்கு பசிக்கும் மாமா”
“உன் பசியை மறக்க வைக்கற வித்தை மாமனுக்கு தெரியும்”
“மாமா..”மேலும் அவள் ஏதோ சொல்ல வர..
“அமைதியா வாடி.. இன்னைக்கு உன் சால்ஜாப்பு எல்லாம் மாமன்கிட்ட பலிக்காது”
அவளுக்கும் அவனின் அணைப்பு தேவைப்பட..அவன் கழுத்தை தன் கைகளால் கோர்த்து கொண்டு வழக்கம் போல் அவனை சைட் அடித்து கொண்டு வந்தாள்.
அவள் பார்வைக்கு சளைக்காமல் பதில் பார்வை கொடுத்தவன்.. அவளை படுக்கையில் விட்டு அவள் அருகில் இடைவெளியின்றி படுத்தவன்
கிசுகிசுப்பாக அவள் காதுகளில் “நாம இப்படி… பாப்பு குட்டிக்கு ஏதாவது ஆகிடுமா..”பயத்துடன் கேட்க.. அவனின் முகத்தில் பயத்தை மீறிய ஆசை தென்பட…
அவனின் முகத்தை காதல் பார்வையால் வருடியவாறே… இல்லை என்பதாக மெல்ல தலையை ஆட்டினாள்.
அவள் பதிலில் சீறிப் பாயும் காளையாக.. அவள் மேல் படர…

“மாமா.. மாமா. மெதுவா..” என அவனின் வேகத்திற்கு அணைப்போட.. வருடும் தென்றலாக அவளை ஆட்சி செய்தான்.
நீண்ட நாட்கள் ஊடலுக்கு பின் உண்டான கூடல் அல்லவா..
காமன் கலைகள் பயில… இரு பட்சிகள் முனைப்போடு இயங்க…
தாய்மை கொண்ட பேடையின் நிலையே வேகத்தடையாக இருக்க…
இருந்த போதிலும் அந்த கூடலை அணு அணுவாய் அனுபவிக்க விருப்பம் கொண்டது காதல் பறவைகள்.
பெண்ணவளின் மோகனங்கள் எல்லாம் மன்மதனின் மோகம் தீர்க்கும் மார்க்கமாக அமைய…
அவளின் இதழ்ரசம் மதுரசத்தை விட அதிக போதை ஊட்டுவதாக இருக்க… மேலும் மேலும் அவள் இதழிலேயே குடி கொண்டான்.
மங்கையின் பொன்னுடலில் காதல் ராஜன் கர்ம வீரனாக.. இதழும் கைகளும் காட்டிய மாய வித்தையில்..
மாயங்கள் யாவும் காயங்களாக.. காதல் அச்சாரங்களாக பதிய..
அச்சாரங்கள் கண்டு நாணம் கொண்ட காதல் தேவதையோ.. தலைவனின் ஆசைகளுக்கு தன்னை ஈடு கொடுத்து..
காதல் தந்து காதல் மீட்டாள்.
தன்னை தொலைத்து.. தன்னை தொலைத்த இடத்திலேயே மீட்டு கொண்டான் மீகிய காதலோடு அந்த காதல் கண்ணன்.

“என் சேலையும்
உன் வேட்டியும்
ஸ்பரிசிக்குமோ..
என்மஞ்சள் வாசனை
உன் சந்தன வாசனை
சங்கமிக்குமோ..”

அவள் காது மடலை உரசியவாறே ரசனையாக அவள் கவிதையை அவளுக்கே படித்தான்.
” ஸ்பரிசித்ததா… சங்கமித்ததா..” என ஒற்றை புருவம் உயர்த்தி கேட்டான்
நிறைவான கூடலில் உடல் சோர்ந்தாலும் உள்ளம் நிறைந்திருக்க.. அவளை அள்ளி தன் மார்பில் சாய்ந்து கொண்டு….

“என் நெஞ்சில்
மஞ்சம் என
தஞ்சம் கொண்டு
துயிலும் காலம்
வந்ததா… ”
என்றான் அவள் உச்சந்தலையில் முத்தம் பதித்து.. எழிலுக்கு எழிலானவன்..

புள்ளி மேவாத மான் – 22 Read More »

68298790-11F3-41A5-B1E2-D8C6BF266ABC

புள்ளி மேவாத மான் – 21

21புள்ளி மேவாத மான்

தனா எழிலிடம் மன்னிப்பு கேட்டதும் அமைதியாகினால் தவிர சமாதானம் ஆகவில்லை. தனா எவ்வளவோ சமாதானம் செய்தும் வீட்டிற்கு வர ஒத்து கொள்ளவில்லை. நீண்ட நேரம் போராடி அவளை ஒரு வழியாக ஒத்துக் கொள்ள வைத்திருந்தான். அப்போதும் முகத்தை தூக்கி வைத்து கொண்டு தான் இருந்தாள்.
தனது மாமனார் மாமியாரிடம் எழிலை வீட்டுக்கு அழைத்து செல்வதாக தனா சொல்ல கற்பகம் சந்தோஷப்பட்டார். ஆனால் முத்துக்குமாரோ..
“என் பொண்ணை அனுப்ப முடியாது”
“ஏன்” என்று தனா கேள்வி எழுப்ப..
“என்னங்க” கற்பகம் தடுக்கும் விதமாக…
“நீ பேசாம இரு கற்பகம்” என்று மனைவியை அடக்கியவர் தனாவிடம்
“உங்கள பத்தி எல்லாம் தெரிஞ்சிருந்தும்
என் மாணிக்கத்தோட பையன்… என் பொண்ணு ஆசைப்பட்டா… அதனால தான் உங்களுக்கு என் பொண்ண கட்டி கொடுத்தேன். மாணிக்கத்தோட நல்ல குணத்துல பாதியாவது உங்ககிட்ட இருக்கும் என நினைச்சு தான் என் பொண்ணுக்காக ஒத்துகிட்டேன்”
“ஆனா நீங்க பொண்டாட்டி வாயும் வயிறுமா இருக்கும் போது அவள பார்க்காம இன்னொரு பொண்ண பார்க்கப் போயிருங்கிங்க இந்த மாதிரி தரங்கெட்டவரோட என் பொண்ண அனுப்ப முடியாது”
“நிறுத்துங்கப்பா… பேசினது போதும் நிறுத்துங்க”என்றாள் எழில் சீற்றத்துடன்..
ஏற்கனவே தந்தை தன் கணவனிடம் பேசாமல் முறைத்துக் கொண்டு இருந்தது பிடிக்கவில்லை தான். அவர் ஆதங்கம் ஏதோ செய்கிறார் என அமைதி காத்தவள்.
தன் கணவனின் நடத்தையை தவறாக பேசவும் அவளால் பொறுக்கமுடியவில்லை.
மகளின் சீற்றத்தில் முத்துககுமார் அதிர்ந்து போய் எழிலை பார்க்க..
இதற்கு தான் ஆரம்பத்திலேயே தடுத்தேன்.. எங்க நாம சொல்றது புரிஞ்சா தான.. வாங்கி கட்டுங்க.. அப்ப தான் அடங்குவிங்க. கற்பகத்தின் மைண்ட் வாய்ஸ்..
தனா மாமனாரை வெட்டவா.. குத்தவா.. பார்வை பார்த்து கொண்டு இருந்தான் தனா..
“அவரு பூங்கொடி அக்காவுக்கு ஏதோ நல்லது செய்யலாம்னு தான் போனாரே தவிர வேற எந்த தப்பான எண்ணம் கிடையாது”
” அது உங்களுக்கும் தெரியும். அப்படி இருக்கும் போது நீங்க எப்படி அவர தப்பா பேசலாம்”
மகளின் புருஷனுக்கான பேச்சில் முத்துகுமாரின் தந்தை மனம் அடி வாங்கியது.
“இருக்கட்டுமே அவரு மேல தப்பே இல்லைனே இருக்கட்டும். ஆனா யாருகிட்டயும் சொல்லாம இவரு எதுக்கு அந்த புள்ளய போய் பார்க்கனும். அட யாருகிட்டயும் வேணாம். உங்கிட்டயாவது சொல்லி இருக்கலாம்ல.. எதுக்கு மறைக்கனும்” என்றார் எழிலிடம்..
அவர் கேட்பது நியாயம் தானே.. இதுக்கு என்ன பதில் சொல்வது..
இருந்த போதும் புருஷனை விட்டு கொடுக்க மனமில்லாமல்…..
“அது அவரு ஏதோ மன ஆதங்கத்துல எதாவது நல்லது செய்யலாம்னு தான்.. செய்தாரு..அதுக்கு அவர நிக்க வச்சு கேள்வி கேட்பிங்களா..”
என்ன தான் தன் மேல் கோபம் இருந்தாலும் தந்தையிடம் கூட தன்னை விட்டு கொடுக்காமல் பேசும் மனைவி மீது இன்னும் காதல் கூடி போனது தனாவிற்கு…
“கண்டிப்பா கேட்பேன்.. நான் கேட்பேன் பதில் சொல்லி தான் ஆகனும் என் பொண்ணு வாழ்க்கைகாக ஒரு தகப்பனா நான் கேட்க தான் செய்வேன்”
தந்தையின் பேச்சில் எழில் தடுமாற…மாமனாரின் தார்மீக கோபம் புரிபட தனா தான் சட்டென தன் கோபத்தை விட்டு இறங்கி வந்தான்.
“மாமா… நான் ஏதோ மனக் குழப்பத்தில் செஞ்சிட்டேன். ஆனா தப்பா ஏதும் செய்யல.. அநத பொண்ணு வாழ்க்கை நல்லா இருந்தா நான் கொஞ்சம் நிம்மதியா எழிலோட இருப்பேனு தோனுச்சு..அதான் இப்படி…. இனி இது போல நடக்காது..” என சொல்லியவன்..
மறந்தும் மாமனாரிடம் மன்னிப்பு கேட்கவில்லை. தன் செயலுக்கு விளக்கம் தான் அளித்தான். மனைவியிடமே மன்னிப்பு கேட்க யோசித்தவன் மாமனாரிடமா கேட்பான்.
அது தெரிந்து முத்துக்குமார் அவனிடம் முறைத்துக் கொண்டு நின்றார்.
கற்பகமும் ” மாப்ள தான் அவ்வளவு சொல்லறாருல… எழிலை கூட்டிட்டு போகட்டும். அடுத்த மாசம் வளைகாப்பு பண்ணி கூட்டிட்டு வந்திடலாம்.” கணவரை சமாதானமாக பேசி சரிகட்ட…
என்னது… அடுத்த மாசமா… என அதிர்ந்தவன்.. ம்ஹூம் ஒன்பதாம் மாசம் அனுப்பலாம் எழில.. முதல்ல இங்கிருந்து கூட்டிகிட்டு போவோம்.. அப்புறம் பேசிக் கொள்ளலாம். என தனக்குள் ஒரு கணக்கு போட்டு கொண்டு தனா யோசித்து கொண்டு இருக்க..
ஒருவாறாக எழிலை அனுப்ப மனமே இல்லாமல் தனாவிடம் “அரசியும் கற்பகமும் சொல்றதால அனுப்பறேன். இதே தப்பு மறுபடியும் நடந்தா அரசிய நிரந்தரமா எங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடுவேன்.. அதப் பார்த்துக்குங்க..”என்றார் எச்சரிக்கும் விதமாக..
அவருடைய பேச்சு தனாவிற்கு உள்ளுக்குள் கோபத்தை கிளப்ப..பல்லை கடித்து தன்னை அடக்கியவாறு எழிலை அழைத்து செல்வதற்காக அமைதி காத்தான்.
கற்பகம் மகளை அனுப்புவதற்கான ஏற்பாட்டை கவனிக்க எழிலோடு சென்று விட.. வந்த போது இருந்ததை போலவே மாமனார் மருமகன் இருவரும் எதிரெதிர் சோபாவில் அமர்ந்து முறைத்துக் கொண்டு இருந்தார்கள்.
வேலைக்கு சென்று அப்போது தான் திரும்பி வந்த தமிழரசன் வீட்டில் நடந்தது எதுவும் தெரியாததால்.. அவனும் அவன் பங்கிற்கு தனாவை முறைத்துக் கொண்டே.. தாயைத் தேடி உள்ளே சென்றான்.
வேலையை விட்டு வரும் வழியில் காலேஜ் பஸ்ஸில் இருந்து இறங்கி வீட்டுக்கு நடந்து வந்து கொண்டு இருந்த கீர்த்தி இவனை பார்த்தும் பார்க்காதது போல செல்ல… ஏற்கனவே தனா மேல் இருந்த கோபமும் சேர்ந்து கொள்ள… வழி மறித்து சண்டை போட்டு வந்திருந்தான்.
கீர்த்தியிடம்”என்னடி உங்க குடும்பத்திற்கே திமிரு அதிகமாடி.. என்னைய பார்த்துட்டு பார்க்காத மாதிரி போற..”
“ஹலோ.. நான் எதுக்கு உங்கள பார்க்கனும். உங்களுக்கும் எனக்கும் என்ன இருக்கு”
“உனக்கும் எனக்கும் ஒன்னுமே இல்லயாடி…” என்றான் ஆத்திரத்துடன்…
அவனின் கேள்வியும் கோபமும் மனதுக்குள் சாரலாக இறங்கியது. இருந்த போதும் அதை அவனிடம் காட்டிக் கொள்ளாமல்….
“இருக்கு.. ஆனா நீங்க நினைக்கற மாதிரி இல்ல..”என அவனிடம் சொல்ல..
இருக்கு என்று சொன்னதும் அவன் முகம் மலர்ந்ததையும்.. அடுத்த வார்த்தையில் மலர்ந்த முகம் கூம்பி போனதையும் கண்டவளுக்கு மனதுக்குள் வலித்தாலும்.. அதை அவள் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.
“நான் என்ன நினைக்கறேனு உனக்கு தெரியுமா…”
தன் வாயை பிடுங்கி வார்த்தையை வாங்க பார்க்கிறான் என உஷாரான கீர்த்தி
“அதெல்லாம் எனக்கு தெரியாதுங்க..எனக்கு நீங்க அண்ணியோட அண்ணன் அவ்வளவு தான்..”என சொல்லி விட்டு நிற்காமல் சென்றுவிட்டாள்.
அவளின் பேச்சால் உள்ளுக்குள் கனன்று கொண்டு இருந்த கோபத்தை பைக்கை உதைத்து ஓட்டும் வேகத்தில் காண்பித்தான். பாவம் அந்த பைக்கிற்கு வாய் இருந்தால் கதறி அழுதிருக்கும்..
அதே கோபத்தோடு வீட்டுக்கு வந்த தமிழரசன் தனாவை உறுத்து விழித்தவாறு உள்ளே சென்றான். என்னடா உங்களுக்கு பிரச்சினை எல்லாரும் என்னையவே வெறிக்க வெறிக்க பார்க்கறிங்க.. என தனா நினைத்து காண்டாகினான்.
உள்ளே சென்று தன் அம்மாவிடம் மனதுள் இருந்த கோபத்தை குரலில் காட்டி
“என்னவாம் அவருக்கு”என்றான்.
எழில் தன் துணிகளை எடுத்து வைக்க அவள் அறையில் இருக்க..
கற்பகம் மகனிடம்”டேய் சும்மா இருடா.. அவ காதுல விழுந்திட போகுது.. இப்ப தான் உங்க அப்பா வாங்கி கட்டிகிட்டார்..”
தங்கையை பற்றி அறிந்ததால் அமைதியானவன்
“இப்ப எதுக்கு வந்திருக்காரு..”என்றான் எரிச்சலோடு..
“எழிலை கூட்டிட்டு போக..”
“இனி இது மாதிரி இன்னொருக்கா செஞ்சாரு மனுஷனா இருக்கமாட்டேன். சொல்லி வைங்க..” என்று தாயிடம் எகிற..
“என்ன பேசனுமோ… எல்லாம் பேசி தான் இருக்கோம்.. நீ வேற ஆரம்பிக்காத.. போய் வேற வேலை இருந்தா பாரு”
தாயின் பேச்சில் சமாதானம் ஆகாமல் முனுமுனுத்து கொண்டு தங்கையை பார்க்க சென்றுவிட்டான்..
இப்படி மாமனாரு மச்சினன் முறைப்பை எல்லாம் சமாளித்து ஒருவழியாக எழிலை வீட்டிற்கு அழைத்து வந்தான்.
வீட்டிற்கு வந்தும் எழில் தனாவோடு முகம் கொடுத்து பேசாமல் முறுக்கி கொண்டு இருந்தாள்.
எழில் வந்தது தெரிந்து சுந்தரம் கண்ணன் குடும்பம் வந்து பார்த்து சென்றனர்.
சுந்தரம் எழிலையும் “குடும்பத்துல பெரியவங்ககிட்ட சொல்லாம கொள்ளாம கிளம்பிடறதா..நாங்க எதுக்கு இருக்கோம்.. உங்க அப்பாரு கேட்கறதுக்கு என்னால பதில் சொல்ல முடியல.. எதுனாலும் நம்ம குடும்பத்துக்குள்ள தான் இருக்கனும்.வெளிய போககூடாது”என்று திட்டி விட்டு தனாவையும் சேர்த்தே அர்ச்சித்து விட்டு சென்றார்.
என்னங்கடா இது ஒரு நல்லது பண்ண நினைச்சது குத்தமா… அதுக்கு இப்படி எல்லாரும் ரவுண்டு கட்டறிங்க…என மண்டை காய்ந்தான் தனா…
அவனை மேலும் காய்ச்சி எடுக்க எழில் வேறு காத்திருந்தாள். எல்லோரும் சென்றதும் இரவு உணவுக்கு சாப்பாட்டு மேஜைக்கு வந்தான்.
“எழில் டிபன் போடறியா…”என எழிலை கூப்பிட்டான்.
வரேன் வந்து மண்டைலயே போடறேன் என முனகி கொண்டே வந்தவள் பாத்திரங்களை சத்தம் வருமாறு நங்கென்று வைத்தாள்.
அவள் முனகல் அவன் காதுகளில் விழுகவில்லை.
“எதுக்குடி இப்படி உடைக்கற.. ”
“ம்ம்ம் அப்படி தான் உடைப்பேன்.. அதுக்கு என்னங்கறிங்க இப்ப..”
“இப்ப என்னதுக்கு சண்டகோழி மாதிரி சிலுத்துகிட்டு வர…”
“நீங்க செஞ்ச வேலைக்கு வச்சுகிட்டு கொஞ்சுவாங்களா..”
ஆஹா இவ அத மறக்கமாட்டா போல இருக்கே..டேய் தனா இவள வேற மாதிரி பேசி டைவர்ட் பண்ணு என்ற அவன் மைண்ட் வாய்ஸ்கு அடி பணிந்தான்.
“ஹீஹீஹீ….கொஞ்சினா நல்லா தான் இருக்கும். எங்க நீ தான் செய்யமாட்டேங்கற..”என்று அசடு வழிந்தான்.
“வேணாம்.. ஏதாவது ஏடாகூடாம பேசிகிட்டு இருந்திங்க.. என்ன செய்வேனு எனக்கே தெரியாது”
எதற்கு வம்பு என அமைதியாக தனா சாப்பிட.. எழிலும் சாப்பிட்டு எல்லாம் ஒதுக்கி சுததம் செய்துவிட்டு வர…
எழில் வரும் வரை டிவி பார்க்கலாம் என டிவி பார்த்து கொண்டு இருந்த தனாவை கண்டு கொள்ளாமல்..எழில் படுக்க சென்றுவிட்டாள்.
தன்னருகே வந்து ஏதாவது பேசுவாள் என நினைத்திருந்த தனாவிற்கு.. எழிலின் செயல் மனதிற்கு சட்டென ஒரு வெறுமையை கொடுத்தது.
அவனும் படுக்கையறைக்கு வந்து எழிலின் அருகில் படுத்தான். இருவருக்குமே உறக்கம் வரவில்லை. எழில் கண்ணை மூடி உறங்க முயற்சிக்க… அவளுடைய கால் குடைச்சலால் அவளால் உறங்க முடியவில்லை..
அவளையே பார்த்தவாறே படுத்திருந்த தனாவிற்கு.. அவள் உறங்க சிரமப்படுவதை தெரிந்தும் முதலில் திட்டுவாளோ என தயங்கியவன்.. மனது கேளாமல் எழுந்து காலை பிடித்துவிட..
எழில் கண்ணை திறவாமலே காலை உருவிக்கொள்ள முயற்சிக்க.. விடாப்பிடியாக இழுத்து வைத்து அழுத்திவிட்டான் தனா.
அவனின் பிடிவாதத்தில் அவனை திட்டுவதற்காக.. கண் திறந்து கணவன் முகம் பார்க்க.. அவனின் முகம் களையிழந்து வாடி போய் இருக்க…
இருந்தும் தன் காதல் அறியாமல் அவன் செய்த செயலை மன்னிக்க மனம் இடம் தராததால்.. கண்களை மூடி உறங்க முயற்சித்து உறங்கியும் விட..
தனாவிற்கோ அவளின் அணைப்பின்றி உறக்கம் வராமல் விடிய விடிய தவிப்போடு முழித்து கொண்டு இருந்தான்.
தனா எழிலை சமாதானம் செய்வானா… எழில் தனாவை மன்னித்து அரவணைப்பாளா..

புள்ளி மேவாத மான் – 21 Read More »

BC3D4C8B-56B2-4697-ABED-3DFB6AC3FE2E

புள்ளி மேவாத மான் – 20

20 – புள்ளி மேவாத மான்

எழிலின் காதல் அறிந்த நொடி தனா தன்னை ஒரு மகாராஜா போல கர்வம் கொண்டான். முன்பை விட இப்போது எழில் மேல் ஏக்கம் அதிகமானது. முதல் வேலையாக ஏழிலை கூட்டி வந்திட வேணும் என முடிவு செய்தே பிறகே நிம்மதியான உறக்கம் கொண்டான்.
வழக்கத்தை விட நேரமாக எழுந்து கிளம்பி கொண்டு இருந்தான். அப்போது பேக்டரியில் இருந்து போன் வந்தது. ஏதோ இயந்திரம் பழுதாகி விட்டதாக… உடனே டெக்னீஷியனுக்கு போன் செய்துவிட்டு தானும் கிளம்பி சென்றான்.
எழிலின் தந்தைக்கோ தனா மேல் மிகுந்த கோபம். எழிலோ வந்ததில் இருந்து கணவனைப் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை யாரையும் பேசவிடலை. கற்பகம் தான் என்ன நடந்தது என உருட்டி மிரட்டி தெரிந்து கொண்டார்.
தெரிந்ததை கணவரிடமும் சொல்லி தெரியாமலேயே ஒரு பிழை செய்தார். பெண்களுக்கு மகள் வாழ்க்கையில் சிக்கல் என்றால் பக்குவமாக கையாண்டு குடும்பம் என்றால் அப்படி தான் என அதையும் இதையும் சொல்லி புருஷனோடு அனுப்பி விடுவர்.
இந்த சூட்சமம் அறியாத ஆண்கள் பிள்ளை மேல் உள்ள பாசத்தில் மருமகனிடம் பகைத்து கொண்டு மகளின் வாழ்வை சிக்கலாக்கி விடுவர்.அதே தவறை முத்துக்குமாரும் செய்தார்.
சுந்தரத்தை செல்பேசியில் அழைத்து என் சிநேகிதனின் மகன் என்பதாலும் கௌரவமான குடும்பம் என்பதாலும் தான் என் மகளை உன் அண்ணன் மகனுக்கு கொடுத்தேன்.
அவன் காதல் கண்றாவி எல்லாம் தெரிந்திருந்தும் நீ வந்து கேட்டதால் கொடுத்தேன். என் மகள் இருக்கும் போது பழைய காதலியை தேடி போறானோ.. என காச்மூச் என கத்தி என் மகளை இனி அனுப்பமாட்டேன் நானே வைத்து பார்த்து கொள்கிறேன் என சத்தம் போட்டு வைத்துவிட்டார்.
சுந்தரம் காலங்கார்த்தாலயே இது என்னடா சிக்கல் என டென்ஷன் ஆகிவிட்டார். பேக்டரியில் பிரச்சினை என வெற்றியும் சென்று இருக்க… வரட்டும் பேசி கொள்ளலாம் என அமைதி காத்தார்.
தனா வர மதியம் ஆகிவிட்டது. வந்தவன் கசகசப்பு நீங்க குளித்து எழிலை பார்க்க தயராக…
சுந்தரம் வீட்டிற்கே வந்துவிட்டார் மனைவி சகிதமாக.. வரும்போதே தம்பிக்கும் அழைத்து சொல்லிவிட்டு தான் வந்தார்.
சுந்தரம் வந்த சிறிது நேரத்திற்கு எல்லாம் கண்ணனும் வந்துவிட.. இவர்களின் வருகையும்… சுந்தரத்தின் கோப முகமும் தனாவிற்கு ஓரளவு விஷயத்தை சொல்லிவிட்டது.
சுந்தரம் மிக கோபமாக ” நீ என்ன தான் நினைச்சிட்டு இருக்க.. அரசி எதுக்கு கோவிச்சுகிட்டு போச்சு”
தனா அமைதியாக இருக்க… சுந்தரத்திற்கு ஏகத்திற்கும் கோபம் ஏற…
“இப்படியே அமைதியாக இருந்தா எதுவும் எங்களுக்கு தெரியாது என நினைச்சிட்டு இருக்கறியா..உனக்கு கல்யாணம் ஆகி உனக்குனு ஒரு குடும்பம் ஆகி போச்சு.. இப்ப அந்த பூங்கொடி புள்ளய பார்த்து பேசினா நல்லாவ இருக்கு..”
அவர் அவ்வாறு கேட்கவும் தனா கோபமாக “என்னைய தப்பா நினைக்கறிங்களா..பொண்டாட்டி இருக்கும் போது இன்னொரு பொண்ண தேடி போறவனா நானு…”
உடனே கண்ணன் தணிவாக “தம்பி உன்னை எங்க அண்ணனோட மறுபதிப்பா தான் பார்க்கிறோம். உங்கள எப்படி தப்பா பேசுவோம். அண்ணன் என்ன சொல்ல வராங்கனு பொறுமையா கேளு தம்பி”
“உங்கள தப்பா பேசல தம்பி பனை மரத்துக்கடிய நின்னு பால குடிச்சாலும் ஊரு உலகம் கள்ளுனு தான சொல்லும். நீங்க அந்த புள்ளைக்கு நல்லது செய்ய நினைச்சாலும் ஊரு கண்ணுக்கு அது தப்பா தான் தெரியும்”
“நான் நல்லா வாழும் போது அவ கஷ்டபடறத பார்த்தா எனக்கு குற்றவுணர்ச்சியா இருக்கு”
அவனின் பேச்சில் சுந்தரம் பல்லை கடித்து கோபத்தை அடக்கியவாறு..
“அந்த புள்ள வாழ்க்கையை பார்க்க பெத்தவன் இருக்கான்.. நாங்க பெரியவங்க இருக்கோம் பார்த்து ஏதாவது செய்வோம்”
“இல்லையில்லை அவ புருஷன் கொடுமைக்கு என்னை வச்சு தான பேசறான்.அதனால நான் தான் ஏதாவது செய்யனும்”
அவனின் பேச்சில் சுந்தரம் கோபத்தின் உச்சிக்கே சென்று விட”அவ அப்பன் தான உங்களுக்கு கட்டிக் கொடுக்க மாட்டேனு சொன்னாரு..அவரே தான பொண்ணுக்கு இந்த பையன பார்த்து கட்டி வச்சாரு.. அவரு தேடி தந்த வாழ்க்கை தான.. அவரு தான் சரி பண்ணனும். நீங்க உங்க பொழப்ப மட்டும் பாருங்க…நீங்க தேவையில்லாம தலையிட்டு அந்த புள்ள பேரு இன்னும் கெட்டு போறதும் இல்லாம உங்க வாழ்க்கையும் சிக்கல் பண்ணிக்காதிங்க”
“உங்களுக்குனு கௌரவம் அந்தஸ்து பிரசிடென்ட் பதவி எல்லாம் இருக்கு அதுக்கு தக்கன நடந்துங்குங்க அதான் உங்க வாழ்க்கைக்கும் நல்லது நம்ம குடும்பத்திற்கும் நல்லது”
“முத்துக்குமார் மாமா கேட்கற கேள்விக்கு எங்களால பதில் சொல்ல முடியல.. போய் முதல்ல அரசிய சமாதானம் பண்ணி கூட்டிட்டு வர வழியை பாருங்க” என சொல்லிவிட்டு விருட்டென எழுந்து சென்றுவிட்டார்.
கண்ணன் தேவி திலகா மூவரும் அவனிடம் பொறுமையாக பேசி சில விஷயங்களை புரிய வைத்து விட்டு சென்றனர்.
அதன் பிறகே தனா கொஞ்சம் தெளிந்தான்.உடனே எழிலை கூட்டிட்டு வர கீரனூர் சென்றான்.
இவன் சென்ற நேரம் முத்துக்குமார் வீட்டில் இருந்தார். மருமகனை வா என அழைக்காமல் முகத்தை திருப்பி கொண்டார்.
என் பொண்ணு இவனுக்கு அவ்வளவு இளக்காரமா போயிட்டாளா… சிநேகிதன் மகனாச்சேனு பார்க்கறேன்.. இல்ல நடக்கறதே வேற.. என மனதில் தனாவை தாளித்து கொண்டு இருந்தார்.
தனாவிற்கு அவரின் செயல் முகத்தில் அடித்தாற் போல இருக்க அவரை முறைத்துக் கொண்டே அமர்ந்திருந்தான்.
இவரு என்ன இப்படி முகத்தை திருப்பி கிட்டு இருக்காரு.. என் பொண்டாட்டி நான் சண்ட போடுவேன். கொஞ்சுவேன் எதுனாலும் நானாச்சு… என் பொண்டிட்டியாச்சு.. இந்தாளுக்கு என்ன வந்துச்சாம்.. என மனதோடு வசை பாடி கொண்டு இருந்தான்.
கற்பகம் தான் வரவேற்று காபி பலகாரம் என உபசரித்தார். எழில் அவன் வந்தது தெரியாமல் அவள் அறையில் உறங்கி கொண்டு இருந்தாள்.
தனா எழிலை பார்வையாலே தேடினான். மருமகனின் பார்வை உணர்ந்து கற்பகம் தான்
“அரசி தூங்கிட்டு இருக்கா மாப்பிள்ள.. இருங்க எழுப்பி விடறேன்”
“இல்லல்ல வேணாம் எழுப்ப வேணாம் அத்தை.. நான் பார்த்துக்கறேன்” என சொல்லிவிட்டு சிறு தயக்கத்துடன் எழிலின் அறைக்கு சென்றான்.
இவன் சென்று பார்த்த போது எழில் அசந்து தூங்கி கொண்டு இருந்தாள். என்ன செய்வது என தெரியாமல் அவள் காலடியில் அமர்ந்து கொண்டான்.
அப்போதும் அவள் பாதங்கள் சற்று வீக்கமாயிருக்க… மெல்ல பிடித்து விட ஆரம்பித்தான்.
அவனின் செயலில் சற்று தூக்கம் கலைய “ம்மா விடுங்க தூங்கனும்”என சொல்லி அசைந்து படுத்து மீண்டும் தூங்கிவிட்டாள்.
தன் செயல் அவள் தூக்கத்தை கெடுக்கிறதை உணர்ந்து மெல்ல நகர்ந்து அவள் அருகில் அவளை தொந்தரவு செய்யாமல் படுத்து கொண்டான்.
அவள் மேடிட்டு இருந்த வயிறு அவள் ஒருக்களித்து படுத்து இருந்ததில் சற்று சரிந்து புடவை விலகி இருக்க… எழில் தான் தூங்கி கொண்டு இருந்தாள். ஆனால் அவள் பிள்ளை தூங்கவில்லை.
பிள்ளை துள்ளலோடு அம்மாவின் வயிற்றை உதைக்க.. ஒரு நொடிக்கும் குறைவான நேரம் தான் என்றாலும் தனாவின் பார்வைக்கு அது தப்பவில்லை.
தான் பார்த்தது நிஜமா.. பிரம்மையா என அவன் உணரும் முன்னமே.. வயிறு இயல்பாகி விட பிரம்மிப்பில் இருந்தான்.
அவனோ எழுந்து அமர்ந்து எழிலின் வயிறையே பார்த்து கொண்டு இருக்க.. மறுபடியும் ஒரு துள்ளல்…
தனாவிற்கோ மனதில் சொல்ல முடியாத பரவசம். தன்னை தந்தையாக உணர்ந்தான் அந்த நொடி. அவனை அறியாமல் மகிழ்ச்சியில் கண்கள் கலங்கிவிட்டது.
இதை எல்லாம் கவனிக்காமல் உணராமல் தேவை இல்லாத பிரச்சினையில் தன்னை தொலைக்க இருந்த மடத்தனத்தை எண்ணி தலையில் அடித்துக் கொண்டான்.
குழந்தைக்கு பசி எடுத்துவிட மீண்டும் மீண்டும் தாயின் வயிற்றை முட்ட.. தனா மெதுவாக எழிலின் வயிற்றில் கை வைத்து அதன் ஸ்பரிசத்தை உணர முயன்றான்.
பிள்ளையின் துடிப்போ…. தனாவின் கை அழுத்தமோ… எழிலின் தூக்கத்தை தடை செய்ய…
மெல்ல எழுந்தவள் தன்னருகில் இருந்த தனாவை அவள் எதிர்ப்பார்க்கவில்லை என்பதை அவள் பார்வையே சொன்னது.
சட்டென பார்வையை மாற்றி கொண்டு அவனை முறைத்து பார்த்து கொண்டே இருக்க..
அவளின் கோபத்தை கலைக்கவென பிள்ளை என்னை முதல்ல பாருமா என துள்ளாட்டம் போட்டது. உடனே தன் தாயை தேடி சென்றாள்.
தனாவிற்கோ பிள்ளை பற்றிய சிந்தனையில் அவளின் முறைப்பை எல்லாம் கண்டு கொள்ளவில்லை..
என் பிள்ளை என்னை போல அமைதியாக இல்லாமல் இவளை போல துறு துறுனு இருப்பான் போல… இருந்தாலும் என்னை போல ஆக்டிவா தான் இருப்பான்.என என் பிள்ளை… என் பிள்ளை… என பூரித்து போய் இருந்தான்.
சற்று நேரத்தில் எழில் திரும்பி வர.. தனா உட்கார்ந்து கொண்டு கனவுலகில் தன் பிள்ளையோடு உறவாடி கொண்டு இருக்க..
கற்பகம் எழிலுக்காக சுண்டல் தாளித்து இருக்க.. அதையும் எழிலிடம் மருமகனுக்காக கொடுக்க..
அதை வாங்க மறுத்த எழிலை கண்டித்து அவள் கைகளில் திணித்து அனுப்பி விட…
ஏற்கனவே தனா மேல் கோபத்தில் இருந்தவளுக்கு இந்த மாப்பிள்ளை உபச்சாரம் எரியற தீயில் எண்ணை வார்க்க…
கடுப்புடன் சுண்டல் கப்பை நங்கென்று அங்கிருந்த டீப்பாயில் வைக்கவும்.. அந்த சத்தத்தில் கனவுலகில் இருந்து மீண்டு நிகழ்விற்கு வந்தான்.
அப்போதும் அவன் பார்வை ஆசையாக எழிலின் வயிற்றின் மேலேயே இருக்க…
பார்த்தவளுக்கு பற்றி கொண்டு வந்தது.
“எழில் கிட்ட வாயேன். பாப்பவ தொட்டு பார்க்கனும் போல ஆசையா இருக்கு.. ”
“இப்ப இங்க எதுக்கு வந்திங்க”
“என்னடி இது கேள்வி பாப்பவ பார்க்கனும் போல இருக்கு” என புதிதாக தோன்றிய பிள்ளை பாசத்தில் என்ன சொல்லுகிறோம் என தெரியாமல் உளறி வைத்தான்.
“ஆக என் மேல உள்ள அன்பினால வரலை..புள்ள பாசத்துல வந்திருங்கிங்க..”
“என்னடி இப்படி பேசற.. நம்ம புள்ள..”என்றான்.
“பிள்ளைக்காக வந்திங்களா.. எனக்காக வந்திங்களா..” வெட்டு ஒன்று துண்டு இரண்டு என கேட்க..
“அப்படி எல்லாம் இல்ல.. உன்ன பார்க்க தான் வந்தேன். உன்னைய கூட்டிட்டு போகலாம்னு தான் வந்தேன்”
“ஓஓஓ… அப்படி எல்லாம் வரமுடியாது. நீங்க கூப்பிட்டா வந்திடனுமா.. வந்து என்ன செய்ய.. மறுபடியும் அந்த பூங்கொடி நினைப்புல சுத்துவிங்க.. என்னைய ஒதுங்குவிங்க.. பார்த்துட்டு மூலை உட்கார்ந்துட்டு கண்ணீர் வடிக்கனுமோ…”
“இனி பூங்கொடி பத்தி பேசவேமாட்டேன். நம்ம வாழ்க்கைல இனி எப்பவும் பூங்கொடி கிடையாது. உன் காதல புரிஞ்சுக்காம நான் பண்ணினது தப்பு தான்”
“எந்த மரத்துல இந்த ஞானோதயம் வந்துச்சு”
மிகவும் தயங்கி தயங்கி “உன் டைரி… படிச்சேன்…” என்றான்.
அவ்வளவு தான் பொங்கிவிட்டாள் எழில்.
“ஓஹோ… டைரி படிச்சதால வந்த பரிதாபமா.. இத்தனை நாள் கூட வாழ்ந்த போது தெரியல.. டைரி படிச்சு தான் தெரிஞ்சுதோ..”
“இல்ல டைரி படிக்காததுக்கு முன்னாடியே உன்னை வந்து கூட்டிட்டு போவனும் தான் இருந்தேன். நைட் நீ இல்லாம தூக்கம் வரலையா.. அதான் டைம் பாஸ்கு படிச்சேனா.. அப்படி தான் தெரிஞ்சுகிட்டேன்”
என்னது டைம் பாஸ்கா… என அதிர்ந்தவள் “நான் உயிர கொடுத்து காதலிச்சா..யோவ் உனக்கு டைம் பாஸா” என கத்த ஆரம்பித்தாள்..
அவசர அவசரமாக கிட்ட வந்து அவள் வாயை மூடியவன்..
” ஏய்.. மெதுவா பேசுடி.. ஏற்கனவே உங்க அப்பா முறைச்சிகிட்டு இருக்காரு.. பத்தாதுக்கு சித்தப்பாவுக்கு போன் பண்ணி சொல்லி சித்தப்பா வந்து என்னை திட்டு திட்டுனு திட்டி உடனே அரசி கூட்டிட்டு வர என சொல்லிட்டார்”
எழிலுக்கு முத்துகுமார் சுந்தரத்திடம் பேசினது எல்லாம் தெரியாது.
“இது எப்போ..”
“இப்ப தான் மத்தியானம்”
“அப்ப உங்களுக்கா என்னை வந்து பார்க்கனும்னு தோனல..டைரி படிச்சதாலயும்… மாமா திட்டுனதாலும் வந்திருங்கிங்க இதெல்லாம் நடக்கலைனா இப்பவும் வந்திருக்கமாட்டிங்க..”
அய்யோ நானா ஒரு ப்ளோல எல்லாத்தையும் உளறிட்டேன் போல இருக்கே.. மொத்தமா மலை ஏறிட்டாளே.. எப்படி இறக்க போறேனோ தெரியலையே… என மௌனமாக புலம்பியவாறே பரிதாபமாக அவளை பார்த்தான்.
“ம்ம்ம்.. அப்படி தான் வந்ததும் என்னைய பார்த்திங்களா.. உங்க புள்ளய தான பார்த்திங்க…” என அடுத்த பஞ்சாயத்தை ஆரம்பித்தாள்.
“இல்லடி உன்னைய தான் பார்த்தேன் உன் கால எல்லாம் அமுத்திவிட்டேன் தெரியுமா… உன் தூக்கத்துக்கு தொந்தரவா இருக்கவும் விட்டுட்டேன். அப்புறம் தான் பாப்பாவ பார்த்தேன்” என்றான் அவசரமாக பதட்டத்துடன்…
அவனின் பேச்சில் உண்மை இருப்பது போல தெரியவும்.. எழிலுக்கு மனதுக்குள் கொஞ்சம் சந்தோஷமாக தான் இருந்தது. இருந்தாலும் அதை வெளிகாட்டி கொள்ளாமல் கெத்தாக..
“சரி சரி இப்ப எதுக்கு வந்திங்க.. அத சொல்லுங்க” என்றாளே….
அய்யோ மறுபடியும் முதல்ல இருந்தா என தனா தனக்குள்ளயே புலம்பியவாறே…
“அம்மா… தாயே… நான் தெரியாம தப்பு பண்ணிட்டேன்.. மீ ரொம்ப பாவம்.. அறியாத புள்ள தெரியாம பண்ணிட்டதா.. நினைச்சு மன்னிச்சு விட்று” என்றான் நொந்து போய்…
“மன்னிச்சறு.. மன்னிச்சுறுனா மன்னிப்பு கேட்காம எப்படி மன்னிக்கறது ம்ம்” என்றாள் அதிகாரமாக…
சட்டென அவளை நெருங்கி அவள் கைகள் இரண்டையும் பிடித்துக்கொண்டு
“நான் பண்ணினது தப்பு தான். சாரி..சாரி..இனி இது மாதிரி பண்ணமாட்டேன். சாரி.. மன்னிப்பு கேட்டுக்கறேன்” என்றான் தன் தப்பை உணர்ந்து..
எழில் தனாவை மன்னித்தாளா.. தனாவுடன் சென்றாளா…

புள்ளி மேவாத மான் – 20 Read More »

D15F938D-4C55-43DE-BAA0-7EE2AD4637DA

புள்ளி மேவாத மான் – 19

19-புள்ளி மேவாத மான்

தனா தன் பெற்றோர் அறையில் சிறிது நேரத்திலேயே உறங்கி விட… எழில் தான் தன் காதலுக்கு இவ்வளவு தான் மதிப்பா.. தன் அன்பு கொஞ்சம் கூட அவர் மனதில் அரும்பலையா..அப்போ என் கூட வாழ்ந்தது எல்லாம் கடமைக்காக தானா..
என் காதல் மேல் நம்பிக்கை கொண்டு தான் கல்யாணம் செய்தேன். அந்த காதல் அவரின் மனதில் என்னை நிறுத்தவில்லையா.. என் அன்பில் தான் குற்றம் குறையா… என கழிவிரக்கத்தில் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் விட்டாள்.
எதுவாக இருந்த போதிலும் மனைவிங்கற ஸ்தானத்திற்கு மதிப்பில்லையா.. வாழ்ந்த வாழ்க்கைக்குஅர்த்தமில்லையா… இப்படியாக தான் இருந்தது பேதையவளின் மனதின் சிந்தனை.
தனக்கு மதிப்பில்லாத போது இங்கு எதற்கு இருக்கவேண்டும். தன்னை உணராத கணவனிடம் தன்னை இருத்திக் கொள்ள வேண்டியதில்லை என அவள் தன்மானம் விழித்து கொள்ள .. அந்த நொடி அழுகை நின்றது.
விடிந்தும் விடியாத பொழுதில் தன் அன்னைக்கு போன் செய்தாள். தன் அன்னையிடம் அழுகவில்லை ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. தனா பூங்கொடி காதல் தெரிந்த போது தன் காதல் வலியை தன்னுள் அழுத்திக் கொண்டு வலிய வைத்த சிரிப்புடன் வலம் வந்தவள்… இதற்கா அழுக போகிறாள்.
கற்பகமும் மகளை பொறுமையாக இருக்க சொன்னார்.ஆனால் எழில் பிடிவாதமாக வந்தே தீருவேன் என்று நின்ற நிலையிலேயே இருக்க…
கற்பகம் கணவரை எழுப்பி சொன்னால் மகள் மேல் உள்ள பாசத்தில் நாலு சுவற்றுக்குள் முடிக்க வேண்டியதை ஊரை கூட்டி அம்பலத்தில் ஏற்றி விடுவார் என தமிழரசனை அனுப்பி வைத்தார்.
தமிழரசன் வந்த போது தனா எழுந்திருக்கவில்லை. அவனுக்கும் கோபம் இருந்த போதும் மாமன் மேல் இருந்த மதிப்பும் தங்கையின் வாழ்க்கையும் அவனை அடக்கி வைத்திருந்தது.
தனக்கு தேவையானதை எடுத்து வைத்தவள் தனா எழுந்து வந்ததும் கிளம்பிவிட்டாள்.
தனா எழுந்து வந்தவன் பார்த்தது டிராவல் பேக்கோடு இருந்த எழிலையும் தமிழரசனையும் தான்.
தனா ‘நான் என்ன சொல்லிட்டேன். இப்படி கிளம்பி நிற்கிறா.. ராங்கிகாரி.. போடி போ..’ என எழிலின் முகத்தையே பார்த்து நிற்க..
‘ ஏன்.. என்னனு… கேட்டா தான் என்ன…திமிரு.. திமிரு அவ்வளவும் திமிரு’
மனதுக்குள் பொறுமியபடி முறைத்துக் கொண்டு நின்றாள்.
அவனும் கேட்கவில்லை. இவளும் சொல்லவில்லை. அவனை முறைத்துக் கொண்டே சென்று காரில் உட்கார்ந்து கொண்டாள்.
தமிழரசனுக்கு என்ன செய்வது என தெரியாமல் விடை பெறும் விதமாக தலையை அசைத்து விட்டு கிளம்பவிட்டான்.
எழில் வருவதற்குள் கற்பகம் முத்துக்குமாரிடம் எழில் சொன்னதை சொல்லி,
“ஏதோ புருஷன் பொண்டாட்டி சண்டை.. நாம அமைதியா இருந்தா அவங்களே சரியாடுவாங்க.. நீங்க தலையிட்டு பெரிசு பண்ணிடாதிங்க..”
“மசக்கை சமயத்துல கூட புருஷன விட்டு வரமாட்டேனு இருந்தா.. இப்ப அவளுக்கு பார்த்து செய்து அனுப்புவோம்”
“மறுபடியும் சொல்றேன் நீங்க அமைதியா இருங்க..”
மனைவி சொன்னதற்கு அமைதியாக கேட்டு கொண்டாலும் உள்ளுக்குள் தனாவின் மேல் கோபம் இருக்கத்தான் செய்தது.
எழில் வந்து இரண்டு நாட்களாகி இருக்க… தனாவும் போன் பண்ணவில்லை. இவளும் பேசவில்லை. இருவரும் வீம்புடன் இருந்தனர்.
எழில் சென்றது தெரியாமல் தேவி மீன் சமைத்து அதை கீர்த்தியிடம் கொடுத்துவிட… தனா பேக்டரிக்கு சென்றிருக்க…இருளாயி பாட்டி வருத்ததுடன் எழில் சென்றதை சொல்லிவிட..
கீர்த்தி சென்று சொன்னதும் சுந்தரம் தனாவை வீட்டுக்கு அழைத்து,
“என்ன சண்டை உங்களுக்குள்ள”என்று எவ்வளவு கேட்டும் பேசவில்லை.
சொல்வதற்கு விருப்பம் இல்லாமல் அமைதியாக.. அழுத்தமாக நின்றான்.
கேட்டு சலித்து போய்”எதா இருந்தாலும் இரண்டு நாளில் பேசி கூட்டிட்டு வந்திடு..”என்றார் கோபத்துடன்.
ஒரு நான்கு நாட்கள் விரைப்பாக இருந்தவனால்.. அதற்கு மேல் முடியவில்லை. வீட்டின் தனிமையும் அவளின் அன்பான கவனிப்பும் இல்லாமல் இருக்க முடியவில்லை.இரவோ கொடுமையிலும் கொடுமை..
அன்று எழிலின் ஞாபகம் அதிகமாக இருக்க.. மாலை மானஜேரிடம் சொல்லி கொண்டு வீட்டுக்கு வந்து விட்டான். சிறிது நேரத்தில் மானேஜர் ஏதோ பைல் தேவை என ஆள் அனுப்ப.. அதை எடுக்கும் போது அங்கு ஒரு மூலையில் அன்று அவன் எறிந்த எழிலின் டைரி இருந்தது.
ஆளை அனுப்பி விட்டு வந்து தங்கள் அறையில் டைரியோடு வந்தவன்
வசதியாக முதுகுக்கு ஒரு தலையணை வைத்து சாய்ந்து அமர்ந்து அன்று விட்டதில் இருந்து படிக்க ஆரம்பித்தான்.
அக்டோபர் மாதம்:
மாமா காலேஜ் சென்று நான்கு மாதங்கள் கழித்து தீபாவளிக்கு வந்திட்டு ஒரு வாரம் இருந்துட்டு போயிட்டாங்க… அப்ப நானும் ஊருக்கு போயிட்டேன். மாமாவ பார்க்கல..அதுக்கு பிறகு மாமா ஊருக்கு வரல..
அத்தைக்கு தினமும் போன் பண்ணுவாங்க..சில சமயம் நான் இருக்கும் போதும் பேசுவாங்க.. அத்தை மாமா பேசினது எல்லாம் சொல்வாங்க.. எனக்கு அதை கேட்டு கேட்டு மாமா மேல என்னையும் அறியாம ஒரு பிடித்தம்..ஜெய் மாமா… அப்படி எனக்குள்ள சொல்லும் போதே.. தித்திப்பா மனசு இனிக்கும்.
அவன் பக்கங்களை புரட்ட எழுதாத பக்கங்களில் எல்லாம் ஜெய் மாமா லவ் யூ என்று மந்திரம் போல் எழுதி இருந்தாள்.

ஒருவருடத்திற்கு பிறகு:
மாமா அடுத்த தீபாவளிக்கு தான் வந்தாங்க….ஹப்பா..பா…ஆஆஆ.. ஏற்கனவே ஹைட்டு.. இப்ப இன்னும் ஹைட்டா…வாட்டசாட்டமா..முறுக்கு மீசை வச்சிட்டு.. நல்லா கலரா இருப்பாங்க.. இப்ப இன்னும் செவசெவனு ஹிந்தி பட ஹுரோ மாதிரி ரொம்ப ஸ்மார்ட்டா இருந்தாங்க…
கீழே அவன் மீசையை அழகாக வரைத்திருந்தாள்.
இந்த தடவை நான் ஊருக்கு போகல..அம்மா அப்பா எல்லாரும் மலையனூர் வந்திட்டாங்க.. அதனால தான் மாமாவ பார்க்க முடிந்ததது..
மாமாவ பார்த்ததும் மனசு படபடப்பா…ஏதோ சில்லுனு இறங்கற மாதிரி.. மிதக்கற மாதிரி ஒரு பீலிங்..ஏதோ ஒரு சிலிர்ப்பு…என்னனு சொல்ல தெரியல எனக்கு. ஆனா மாமாவ பார்த்துகிட்டே இருக்கனும் போல இருந்துச்சு.. அப்படி பார்க்கறதும் தப்புன்னும் தோனுச்சு..

சடுதியில் மாறியது என் உலகம்

உன்னை கண்ட விநாடி…

நான் ஏன் இப்படி இருக்கேன்.. கெட்ட பொண்ணாகிட்டனா.. அழுகையா வந்துச்சு.. அந்த அழுகையும் பிடிச்சிருந்துச்சு… நான் ஏன் இப்படி இருக்கறேனு எனக்கே புரியல…
மாமா அத்தைகிட்ட தவிர யாருகிட்டயும் அதிகம் பேசமாட்டாங்க.. ஆனா என்னை பார்த்தும் என்ன படிக்கற கேட்டாங்க.. என் மனசுல அப்படி ஒரு சந்தோஷம் மாமா என்கிட்ட பேசினதுல… இறக்கை இல்லாம வானத்துல பறக்கற மாதிரி இருந்துச்சு..
மாமா கிளம்பி போனதும் மனசு பொசுக்குனு போயிடுச்சு.. ஏதோ கலரா இருந்த உலகம் வெளுப்பா ஆன மாதிரி..மனசுல ஏதோ அழுத்தற மாதிரி…

கங்குலான என் உலகை
உன் வருகை
வானவில்லாக
ஆயிரம் வர்ணங்களை
பாய்ச்சுகிறது.
அதுக்கு பிறகு மாமா தினமும் அத்தைக்கு போன் பண்ணும் டைமுக்கு அத்தை வீட்டுக்கு போயிடுவேன். அததை பக்கத்துல இருந்து கேட்கறதும்.. பேசிட்டு அத்தை மாமா சொன்னத சொல்லறத கேட்கவும்…
மாமா ஒரு நாள் அத்தைகிட்ட பேசலைனாலும் எனக்கு அழுகையா வரும்..மாமா மேல கோபமா வரும் ஏன் பேசலைனு…
மாமா வரும் போது என் சந்தோஷமும் வரும் போகும் போது என் சந்தோஷமும் அவர் கூடவே போயிடும்.

என் உள்ளமதில் உன் வாசம்
நீ வாசம் செய்யும் நெஞ்சை
ஆயிரம் பூக்கள் கொண்டு
அர்ச்சிக்கிறேன்.

கவிதைக்கு கீழே இவன் கண்கள் இரண்டையும் வரைந்து வைத்திருந்தாள்.

மேலும் ஒரு வருடம் கழித்து:

மாமா தேர்ட் இயர் செம் லீவுல வந்தாங்க.. அப்ப நான் டென்த் எக்ஸாம் முடித்து லீவுல இருந்தேன். அடுத்த வருடம் ப்ளஸ் ஒன் எங்க ஊரில் படிச்சிகலாம்னு அப்பா சொல்லிட்டாங்க..
இனி இது போல மாமாவ பக்கத்தில் இருந்து பார்க்க முடியாதே என மனசுல ஒரே தவிப்பா இருந்துச்சு.. அதனால அத்தை வீடே கதினு இருந்தேன். எனக்கு நல்லாவே புரிஞ்சுது நான் மாமாவ லவ் பண்றேனு..
ஆனால் ஒரு பயம் இந்த வயசுல இது தப்போனு… யாருக்கும் தெரியாம என் காதல பொக்கிஷமா எனக்குள்ளயே வச்சுகிட்டேன். இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு.. இன்னும் கொஞ்சம் பெரிய பொண்ணானதும் நானே மாமாகிட்ட சொல்லுவேன். அதுவரைக்கும் யாருக்கும் தெரியாம இருக்கனும்.

நெஞ்சாகூட்டில்
பொதித்து வைத்து
பொக்கிஷமாய்
போற்றி பூட்டி
வைத்தேன்
உன் வரைபடத்தை..
தனாவின் கண் காது மூக்கு மீசை உதடு என தனி தனியாக வரைத்திருந்தாள்.
நெஞ்சில் உள்ள வரைபடத்தை தாளில் கொண்டு வர எனக்கு தெரியவில்லை.
படிக்க… படிக்க… தனாவிற்கு இந்த அடாவடிக்குள்ள இப்படி ஒரு பப்பி லவ்வா… என தோன்றியது. அந்த காலகட்டத்தில் தனாவின் நினைவு பெட்டகத்தில் எங்கும்
எழில் இல்லை.எழிலை போல தனா ரசனையான பார்வை என்ன ஆராய்ச்சி பார்வை கூட பார்த்தது இல்லை.
மாமா லீவ் முடிந்து காலேஜ் போகும் முன்னாடியே… எங்க அப்பா என்னையும் பாட்டியையும் ஊருக்கு கூட்டிட்டு போயிட்டாங்க. ஊருக்கு போகும் முன்ன அத்தையை கட்டிகிட்டு தேம்பி தேம்பி அழுதேன்.
ஆனா இந்த ஜெய் மாமா நான் அழுகறத பார்த்து சிரிச்சாரு… போய்யானு முணுமுணுத்து உதட்டை சுழித்து நொடித்து கொள்ள.. மாமா முறைச்சு பார்த்தாங்க..
படித்ததும் சட்டென சிரித்துவிட்டான் தனா..
மாமா படிப்பு முடிந்து ஊருக்கு வந்த பிறகு கோயில்லயோ… பேக்டரி போற வழியிலயோ எப்படியும் காத்திருந்து பார்த்துடுவேன். நான் பார்க்கறது மாமாவுக்கு தெரியாது.

உன் நெஞ்சில்
மஞ்சம் என
தஞ்சம் கொண்டு
துயிலும் காலம்
எப்போ….
இதற்காகவே அப்பாகிட்ட சண்டை போட்டு ஸ்கூட்டி வாங்கினேன்.
ப்ளஸ்டூ ரிசல்ட் நான் நல்ல மார்க் எடுத்திருந்தேன். அப்பா என்னைய சென்னைல படிக்க சொன்னாங்க…. ஆனால் நான் பொள்ளாச்சிலயே படிக்கறேன்னு சொன்னேன் அப்பாகிட்ட… ரொம்ப சந்தோஷமா மாமாகிட்ட என் மனசுல உள்ளத சொல்லனும்னு பார்க்க போன போது மாமாவும் பூங்கொடிக்காவும் நெருக்கமா சிரிச்சு பேசிகிட்டு இருந்தாங்க..
அதை பார்த்ததும் என் மனசுல சுருக்குனு ஒரு வலி நெஞ்சு பூரா பரவி நெஞ்சே வெடிச்சிடும் போல இருந்துச்சு…

கரை காணாமல்
கரை கடக்காமல்
தேம்பி தேங்கி
நிற்கிறது
என் காதல்
என் காதல் அவ்வளவு தானா… என் ஜெய் மாமா எனக்கில்லையா… மாமா இல்லாம என்னால வாழ முடியுமா… எதுனா செஞ்சு செத்து போயிடலாமா… என யோசித்து யோசித்து அழுது கொண்டே இருந்தேன்.. அம்மா கேட்டாங்க… செத்து போன பாட்டி ஞாபகம் என சொல்லி சமாளித்தேன்.
இரண்டு நாட்களில் அழுதழுது காய்ச்சல் வந்திட… பத்து நாளானது படுக்கையில் இருந்து எழ.. எனக்காக துடிச்ச பெத்தவங்கள பார்த்து மனச ஆறுதல் படுத்திக்கிட்டேன்…

உன்னோடு ஊடல்கள்
கூடல் பொழுதுகள்
எதிர்கால கனவுகள்
என் காதலின் ஏக்கங்கள்
கரையும் காலங்கள்
குறையும் ஆயுள்கள்..

மாமா யாரை காதலிச்சா என்ன.. நான் மாமாவ காதலிக்கிறேன். எப்பவும் காதலிப்பேன்..என் அன்பு அவருக்கு தெரியாட்டி என்ன எப்பவும் போல எட்ட நின்று அவரை காதலிப்பேன்.

உன் நேசம் எங்கோ…
உன் பார்வை எங்கோ…
இருந்த போதும்
என் காலத்தின்.
ஒவ்வொரு நொடிப்
பொழுதும் நீயாகவே
நீ மட்டுமே…
அந்த வரிகளில் தனாவின் கண்களில் அவனை அறியாமலேயே கண்ணீர் சொட்டியது.

என்ன தான் மாமா யாரை காதலிச்சா என்னனு எனக்கு நானே சொல்லிகிட்டாலும் … அவங்க இரண்டு பேரையும் சேர்த்து பாக்கும் போது மனசு வலிக்க தான் செய்தது.

அதனால நான் சென்னைக்கு படிக்க போனேன். ஊருக்கு வரும்போது எல்லாம் மாமாவ எப்பவும் போல எட்ட நின்று பார்த்திட்டு வந்திடுவேன்.

காதல் கண்ணன் நீ
உன்னை தள்ளி நின்று
தரிசிக்கும் பக்தை நான்..

நான் ஸ்டடி லீவுக்கு வந்திருந்த போது:
பூங்கொடி அக்காவிற்கு வேறு ஒருவர் கூட கல்யாணம் ஆகிடுச்சு சொன்னாங்க.. அத்தையும் மாமாவும் பூங்கொடிக்காகவை பெண் கேட்டு போனாங்க. கோவிந்தன் பெரியப்பா அவமானப்படுத்தி அனுப்பிட்டாருனு தெரிஞ்சுது..
மாமாவ நினைச்சு எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. மாமா இதை எப்படி தாங்கிகிட்டாங்க… மாமாவ உடனே பார்க்கனும் போல இருக்கு.. பேக்டரிக்கு போனேன்.
எங்க ஊர் கல்யாணிக்காவ பார்க்கற மாதிரி போய் பார்த்தேன். மாமாவ முகம் இறுகி போயி ஏற்கனவே சிரிக்கமாட்டாங்க.. இப்ப சிரிப்பையே தொலைச்சு பார்க்கவே கஷ்டமா இருந்துச்சு..
சரியான அராத்து என்னைப் பார்க்க பேக்டரிக்கே வந்திருக்கிறாளே.. துணிச்சல் தான்…நான் சிரிக்கவே மாட்டனா.. என நினைத்து சிரித்தான்.

மூன்று மாதங்கள் கழித்து:

நான் எப்பவும் போல நைட் அம்மாவுக்கு போன் பண்ணினேன். அத்தை மாமா இறந்ததுட்டாங்க சொன்னாங்க.. என்னால தாங்க முடியல.. என் அத்தை இந்த உலகத்துல இல்லயா.. கதறி கதறி அழுதேன். மாமா.. மாமா.. இதை எப்படி தாங்குவாங்க…
மாமாவுக்கு தோள் சாய்த்து ஆறுதல் சொல்ல முடியாத என் நிலையை அறவே வெறுத்தேன்.. செமஸ்டர் சமயம் என்னால மாமவ தள்ளி நின்னு கூட பார்க்க முடியாது..

ஒரு மாதம் கழித்து:
செமஸ்டர் முடிந்து ஊருக்கு போனதும் மாமாவை முதல்ல போய்பார்த்தேன். வழக்கம் போல் எட்ட நின்று…
அநாதரவான குழந்தை போல எனக்கு தெரிஞ்சாங்க.. என் மாமாவுக்கு நான் ஆறுதலா இருக்கனும் அவருக்கு எல்லா உறவாகவும் நான் இருக்கனும்..அப்ப முடிவு பண்ணினேன் . படிப்பு முடிந்து வந்ததும் என்ன செய்தாவது மாமாவ கல்யாணம் பண்ணியே தீரனும் என…

என் சேலையும்
உன் வேட்டியும்
ஸ்பரிசிக்குமோ..
என்மஞ்சள் வாசனை
உன் சந்தன வாசனை
சங்கமிக்குமோ..

இப்படி தான் எழுதி இருந்தாள் எழில் அதில்..
அதை படித்ததும் தனாவுக்கு அழுகனும் போலவும்.. சிரிக்கனும் போலவும் .. என உணர்ச்சி குவியலாக இருந்தான்.
என்ன மாதிரியான காதல் இது. இந்த காதலுக்கு நான் தகுதியானவன் தானா… இருந்த போதும் எழிலின் காதல் அவனுக்கு கர்வத்தை தந்தது.
இந்த காதல் முன்னால் என் காதல் வெறும் கானல் நீர் தானோ.. கானல் நீருக்காக அவள் காதலை எட்டி உதைத்து விட்டேனே.. என வருந்தினான். கண்ணன் மேல் மீரா கொண்ட காதலாக அவனுக்கு எழிலின் காதல் தெரிந்தது.
டைரியை அணைத்து கொண்டு விடிய விடிய.. உறங்காமல் இருந்தான். விடிந்தும் எழிலை கூட்டி வந்திடும் முடிவில்…
ஆனால் இவன் நினைவுக்கு எழில் வடிவம் கொடுப்பாளா…..

புள்ளி மேவாத மான் – 19 Read More »

4F17E300-9045-4AAE-BC7E-20498F9D246F

புள்ளி மேவாத மான் – 18

18 – புள்ளி மேவாத மான்

எழிலுக்கு ஆறுமாதங்கள் ஆன நிலையில் சற்று மேடிட்ட வயிறுடன் உடம்பு கொஞ்சம் பூசினாற் போல தாய்மை பூரிப்புடன் பார்க்கவே மிக அழகாக இருந்தாள்.
டாக்டரிடம் பிரச்சினை பண்ணிய பிறகு அடுத்த மாதம் செக்கப்பிற்கு எழில் மாமியார்கள் துணையுடன் மருத்துவமனைக்கு வந்திருக்க…
அழைத்து வந்தவனோ அமைதியாக அமர்ந்திருக்க…அவனையே முறைத்து பார்த்து கொண்டு இருந்தார் அந்த பெண் மருத்துவர்.
திலகா தான் டாக்டரிடம் சமாதானமாக பேசி சரிகட்டினார்.
எழிலுக்கு வாந்தி மயக்கம் எல்லாம் குறைந்திருந்த போதும்… பிரஷர் மட்டும் குறையவில்லை. கற்பகம் ஐந்து மாதம் முடியவும் கடினமில்லாத வேலைகளை செய்ய சொல்ல..
மாமியார்களின் உதவியை மறுத்து அவளே சமையல் மற்ற வேலைகளை மெதுவாக செய்ய.. அவர்களும் பிரசவம் சுலபமாக இருக்கும் என அதை ஆமோதிக்க..
தனா தான் புரிந்து கொள்ளாமல் எழிலிடம் சிடுசிடுத்து கொண்டு இருந்தான்.
“சித்திங்க சமைத்து தரமாட்டாங்களா… இவ்வளவு நாள் செய்தாங்கல்ல.. இன்னும் கொஞ்ச நாள் செய்யலாம்ல”
“இப்ப மார்னிங் சிக்னஸ் இல்லாம நல்லா தான இருக்கேன். மெல்ல செஞ்சுக்குவேன்”
“பாரு நாள் பூரா நின்னுகிட்டு வேலை செஞ்சா இராத்திரில கால் வீங்கி வலில தூங்கமா கஷ்டப்படற”
“அம்மா தான் சொன்னாங்க.. சின்ன சின்ன வேலை எல்லாம் செய்யலாம்னு”
“ஏது நீ செய்யறது எல்லாம் சின்ன வேலையா..ஆளுங்கள வேணாம்னுட்டு வீடு பெருக்கிற.. துணி துவைக்கற.. இதில்லாம சமைக்கற…” என அங்காலய்க்க….
“குனிந்து நிமிர்ந்து வேலை செய்தா தான் சுகப்பிரசவம் ஆகும். எனக்கு சிரமில்லை”
“ஆயாவாலயும் முடியலைல.. சமைக்க மட்டும் ஆள் வச்சுக்கலாமா..”
“நமக்கு தான சமைக்கறது பெரிசா இல்லை. முடியாத போது பார்த்துக்கலாம்” என்றிட…
தனா மனதில் பொறுமிக்கொண்டே அமைதியாக அவனால் முடிந்த உதவிகளை எழிலுக்கு செய்தான். எழிலோ தனாவின் அன்பில் உருகிப் போனாள்.
பூங்கொடி வாழ்க்கையை நினைத்து கோவிந்தன் கவலை பட்டு நிலை குழைந்து போனார். ஊரார் எள்ளல் பேச்சு ஒருபுறம்.. தன்னைப் பார்த்து பார்த்து தந்தை கவலைப்பட்டு உடலை கெடுத்துக் கொள்வது கண்டு பூங்கொடி மௌனமாக கண்ணீர் வடிக்க..
அதை தந்தை பார்த்தால் அவருடைய வருத்தம் அதிகமாகும் என மறைக்க.. மனதுக்குள் போட்டு அழுத்த… அழுத்தம் தாங்காமல் பைத்தியம் பிடிக்கும் நிலையில் …வினையின் வீபரிதம் அறியாமல்… தவறான முடிவை எடுத்தாள்.
காலையில் அறையில் முடங்கிய மகள் மதிய உணவுக்கும் வராமல் போக.. அழைக்க சென்ற கோவிந்தன் மகளின் நிலை கண்டு சத்தமிட்டு கதறி துடிக்க…
அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பூங்கொடியை மருத்துவமனையில் அனுமதித்தனர். வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்திருந்தாள்.
பெரிய போராட்டத்திற்கு பிறகே அவளை காப்பாற்ற முடிந்தது. மகளைப் பார்த்து கோவிந்தன் மிகவும் மனமொடிந்துப் போனார்.
இது தனாவின் காதுகளுக்கும் சென்றது.எழிலிடம் சொல்லாமல் பூங்கோடியை பார்க்கச் சென்றான். பார்த்தவுடன் மனதில் பாரம் ஏறிக் கொண்டது.
கொஞ்ச நாள் தந்தையாகும் சந்தோஷத்தில்.. எழிலின் மேலேயே கவனம் இருக்க..அவன் அடிமனதில் அமிழ்ந்து போயிருந்த குற்றவுணர்வு மனைவி பிள்ளை பாசத்தை பின்னுக்கு தள்ளி.. நீர்குமிழி போல மேலெழும்பி வெடித்து கிளம்பியது.
எதிலும் கவனம் வைக்காமல்.. எழிலையும் சட்டை செய்யாமல்… தன் பழைய காதலுக்கு பரிகாரம் தேடும் சிந்தனையில் மூழ்கி போனான்.
வீட்டை விட்டு வெளியே செல்லாததால் எழிலுக்கு தெரியவில்லை தனாவும் எழிலிடம் சொல்ல சங்கடப்பட்டு சொல்லவில்லை.
தனாவை எழிலும் கவனித்து கொண்டு தான் இருந்தாள். ஏதோ தொழில் சிக்கல் என நினைத்து கொண்டாள். இரண்டு நாட்களாகியும் அவன் முகம் தெளியாமல் போக என்ன என கேட்க ஒன்றுமில்லை என மழுப்பிவிட்டான்.
கட்டாந்தரையில் நெல் காய வைத்து கொண்டு இருந்த பெண்கள் புறணி பேசியதில் விபரம் அறிந்து கொண்டாள் எழில்.
தனாவிடம் சென்று கேட்க…
“பூங்கொடிக்கா மருந்து குடிச்சிட்டு ஹாஸ்பிட்டல்ல இருக்காங்களா…”
“ஆமாம் உனக்கு யார் சொன்னா..”
“கட்டாந்தரையில் வேல செய்யறவங்க பேசிகிட்டாங்க…”
தனா ஆமாம் எனும் விதமாகதலையாட்டினான். அடுத்து அவள் கேட்ட கேள்வியில் கொஞ்சம் தடுமாறி சமாளித்தான்.
“நீங்க போயி பார்த்திங்களா..அதான் கவலையா இருக்கறிங்களா..”
ஒருநிமிடம் என்ன சொல்வது என தடுமாறி.. பின்பு சுதாரித்து அவசர அவசரமாக இல்லை என தலையாட்டினான்.
இல்லை என சொல்லி பெரிய தவறை செய்தான். போனேன் என உண்மையை சொல்லி இருந்தால் கூட எதார்த்தமாக எடுத்து கொண்டு அமைதியாக இருந்திருப்பாள்.
அவன் பேச்சில் வேறு ஏதோ கவலை போல என சமாதானம் ஆகிவிட்டாள்.
பத்து நாள் மருத்துவமனையில் இருந்து விட்டு பூங்கொடி வீடு திரும்பினாள். அவளை பார்க்க வீட்டிற்கே சென்றான் தனா.
வாய் குடல் எல்லாம் புண்ணாகி சாப்பிட முடியாமல் மிகவும் இளைத்து கருத்திருந்தவளை பார்த்தவனுக்கு மனம் இதுக்கு நீதான் காரணம் என ஓலமிட்டது.
அவளிடமும் கோவிந்தனிடமும் ஆறுதலாக சிறிது நேரம் பேசிவிட்டு வீடு வந்தான்.
தான் மட்டும் சந்தோஷமாக வாழ.. அவள் கஷ்டப்படுகிறாள் என நினைத்து நினைத்து உள்ளுக்குள் மறுகினான். அந்த மறுகலே எழிலை நெருங்க விடாமல் தடுக்க.. எழிலை தவிர்த்தான்.
இரவு வேலை எல்லாம் முடித்துவிட்டு வந்த எழில் கண்டது ஏதோ வீரிய சிந்தனையில் இருந்த கணவனை தான்.
என்னாச்சு.. இன்னும் கவலையா யோசிச்சிட்டு இருக்காங்க.. இன்னும் இவங்க பிரச்சினை தீரலையா என எண்ணிக் கொண்டே..
கணவனின் அருகில் வந்து அவனை நெருங்கி அவன் நெஞ்சில் தலை சாய்ந்தாள். அதை கூட அவன் உணரவில்லை.
தன் தலையை உயர்த்தி தனாவின் முகம் பார்த்து,
“ஏன் மாமா என்ன ப்ராப்ளம். ஏன் எப்பவும் யோசனையா ஒரு மாதிரி இருக்கிறிங்க.. என்கிட்ட கூட சொல்லமாட்டறிங்க…”
அவளிடம் சொல்ல முடியாமல் எரிச்சலாகி “எல்லாம் உன்கிட்ட சொல்லனுமா.. நை நைனு மனுசன நச்சு பண்ணாம தள்ளி படு” என கோபப்பட்டான்.
சட்டென எழிலின் முகம் கூம்பி.. கண்களில் நீர் கரை கட்டி நிற்க.. வேகமாக நகர்ந்து படுத்தாள். தலையணையில் முகம் புதைத்து மௌனமாக அழுதவள் சற்று நேரத்தில் தூங்கிவிட்டாள்.
இதை எதையும் அறியாமல் தன்னுள் மூழ்கி போனான். மறுநாள் காலை எழுந்தும் அவன் பாராமுகமாக இருக்க.. தன்னை சமாதனப் படுத்த ஏதாவது பேசுவான் என அவன் முகம் பார்த்து ஏமாந்து போனாள்.தன்மானம் சீண்டப்பட.. எழிலும் அவனிடம் பேசாமல் அவனின் தேவையை மட்டும் கவனித்தாள்.
அவனோ எழிலுக்கு செய்யும் சின்ன சின்ன உதவிகளை கூட மறந்து தன் போக்கில் இருந்தான். அவனின் உதவிகளை விட இரவில் அவன் தன் பாதம் தாங்கி மென்மையாக பிடித்து விடும் சுகத்திற்காக பெரிதும் ஏங்கினாள்.
இதேநிலை ஒருவாரம் நீடிக்க… அவன் வருவதும் சாப்பிடவும் போகவும் இருக்க… தொழிலில் தான் பெரிய பிரச்சினையோ.. இல்ல வேற எதாவதா.. என யோசித்து குழம்பினாள்.
என்ன என தெரிந்தே ஆகவேண்டும். யாரை கேட்டால் தெரியும். வெற்றியை கேட்கலாம் என முடிவு செய்து வெற்றிக்கு போன் செய்தாள்.
“சொல்லுங்க அண்ணி”
“தம்பி உங்ககிட்ட கொஞ்சம் பேசனும் வீட்டுக்கு வாங்க” என சொல்லி வைத்துவிட்டாள்.
வெற்றி என்ன ஏது என தெரியாமல் கொஞ்சம் பதறி தான் வந்தான்.
வந்தவனிடம் எந்த முகாந்திரம் இல்லாமல் நேரடியாகவே விசயத்திற்கு வந்துவிட்டாள்.
“உங்க அண்ணன் பத்து நாளாவே ஏதோ கவலையா இருக்காரு.. என்னனு கேட்டால் சொல்லவே மாட்டேங்கறாரு.. தொழில்ல ஏதாவது சிக்கலா.. ”
“அப்படி எல்லாம் எதுவும் இல்லை அண்ணி” என்றான் கொஞ்சம் தயக்கமாக..
அவனுக்கு தான் தெரியுமே.. தனா பூங்கொடியை பார்த்து விட்டு வந்ததும்.. பூங்கொடியை பத்தி கருணாவிடம் புலம்பியதும்.. அதற்கு கருணா தனாவை கடிந்து கொண்டதையும்…
அதை எழிலிடம் சொல்லலாமா.. வேணாமா… என தடுமாறி பார்க்க..
அவனின் முகத்தை பார்த்ததும் புரிந்து விட்டது விஷயம் வேற என..
“எதா இருந்தாலும் சொல்லிடுங்க தம்பி. உங்க அண்ணன் அவரா இல்லை.. சதா நேரமும் ஏதோ கவலையோடு யோசனையாவே இருக்காரு.. என்னால பார்க்க முடியலை” என சொல்லும் போதே கண்கள் கலங்கி விட..
பதறி போய் எல்லாவற்றையும் சொல்லிவிட்டான். கேட்டவளுக்கோ பூங்கொடியின் தற்கொலை தெரிந்த விஷயம் தான். ஆனால் அதற்காக கணவன் தன்னை தவிர்த்ததை எண்ணி மனசு வலித்தது.
வெற்றிக்கு அண்ணியின் முகத்தை பார்க்க
பரிதாபமாக இருந்தது. தனா மேல் கோபமும் வந்தது. செய்வதறியாது சொல்லி கொண்டு கிளம்பிவிட்டான்.
இத்தனை காலம் தான் காட்டிய அன்புக்கு அர்த்தமில்லாமல் போய்விட்டதே… இன்னும் கணவன் மனதில் அவள் தான் இருக்கிறாளா.. என நினைக்க நினைக்க அவள் காதல் அடிவாங்கியது.
வெகு நேரம் தன்னுள் உழன்று கொண்டு இருந்தவளுக்கு தனா வந்தது கூட தெரியவில்லை. தனா அழைத்து பார்த்து விட்டு தோள் தட்டவும் தான் உணர்வு பெற்றாள்.
“எழில் என்ன சிந்தனை.. வா வந்து சாப்பாடு எடுத்து வை” என சொல்ல..
எதுவும் பேசாமல் பரிமாற அவள் அமைதியை கண்டு மனம் கொஞ்சம் பயப்பட தான் செய்தது. அவன் உள்மனசு ஏதோ பெரியதாக நடக்க போகிறது என மணியடிக்க..
சாப்பிட்டு விட்டு படுக்கைக்கு சென்றுவிட்டான்.எழிலும் சாப்பிட்டு எல்லாம் எடுத்து வைத்து விட்டு அறைக்கு வந்து கதவை அடைத்தவள் தனாவை பார்த்து
“உங்களுக்கு என்ன பிரச்சினை எதுக்கு இப்படி இருக்கறிங்க”என தன்மையாக தான் கேட்டாள்.
“இல்லையே எனக்கு எதும் இல்லையே”
அவளுக்கு தெரிந்து விட்டது என அறியாமல் பொய் சொன்னான்.
அவனின் பொய்யில் உள்ளுக்குள் கனன்ற கோபத்தை அடக்கி கொண்டு
“அப்ப ஏன் ஒருமாதிரி குழப்பமா இருக்கறிங்க… மாமா”
“அப்படி எல்லாம் இல்லை நான் நல்லா தான் இருக்கேன்” சுழட்டி அடிக்க போகும் புயலை அறியாமல் மீண்டும் பொய்.
பொங்கி வந்த கோபத்தை பல்லை கடித்து அடக்கி கொண்டு..
“பூங்கொடிக்காவை போயி பார்த்திங்களா..”
“இல்லை நான் போகலை”
அவ்வளவு தான் அடக்கி வைத்த கோபம் எல்லாம் வெடித்து சிதற..
“நீங்க போய் பார்க்கவே இல்லை. ஏன் மாமா பொய் சொல்லறிங்க…”
“நீங்க இரண்டு தடவை போய் பார்த்து இருக்கறிங்க.. அதை என்கிட்ட மறைக்க வேண்டிய அவசியம் என்ன..”
“ஆமாம் போய் பார்த்தேன். அதுக்கு இப்ப என்னங்கற..”
அவள் தெரிந்து கொண்டே கேள்வி கேட்கிறாள் என்ற எரிச்சலில் பதில் சொன்னான்.
“அப்போ அவங்கள நினனைச்சு தான் இத்தனை நாளா என்கிட்ட பேசாம இருந்திங்களா..”
“என்னைய காதலிச்ச பாவத்துக்கு அவ வாழ்க்கையை இழந்துட்டு நிக்கறா…”
“அது அவங்க தலைஎழுத்து.. அவங்க புருஷன் சரியில்லை அதுக்கு நீங்க என்ன பண்ணமுடியும்”
“நான் தான் ஏதாவது பண்ணனும். அவ அப்படி இருக்கும் போது .. நான் சந்தோஷமா பொண்டாட்டி பிள்ளைனு இருக்கறது ஏதோ தப்பு பண்ணிட்ட மாதிரி மனச அறுக்குது..”
அவன் பேச்சு மனசளவில் அவளை நோகடிக்க…
“உங்களுக்கு என்ன மனச அறுக்குது. அப்ப இன்னும் உங்க மனசுல அவங்க நினைப்பு இருக்கா அந்த நினைப்போட தான் என்கூட குடும்பம் நடத்துனிங்களா”என கோபத்துடன் கேட்க..
“ஏய் புரியாம பேசாத. என்னால தான் இப்படி ஆகிடுச்சோனு உள்ளுக்குள்ள குடையுது”
“அவங்க வாழ்க்கையை சரி பண்ண பெத்தவரு சொந்தபந்தம் இருக்கு. நீங்க அனாவசியமா தலையிடாம இருந்தா போதும்”
“என்னால அப்படி எல்லாம் இருக்கமுடியாது”
“ஏன்….ஏன்.. இருக்கமுடியாது. இருந்து தான் ஆகனும். இனி போய் பார்க்கறது .. கவலைபடறது எல்லாம் இருந்திங்க.. நான் சும்மா இருக்கமாட்டேன் பார்த்துங்க” என சத்தமிட..
“என்ன பண்ணுவ நீ.. என்ன மிரட்டறியா… நான் அவ வாழ்க்கைக்கு ஏதாவது பண்ண தான் போறேன். அத நீன்னு இல்ல யாரு சொன்னாலும் கேட்கமாட்டேன்.”
“நான் முக்கியமா..இல்ல அந்த சிறுக்கி முக்கியமா. இப்பவே முடிவ பண்ணுங்க”
“மரியாதை இல்லாம பேசின பல்லப் பேத்துடுவேன்”
“ஓ..ஓ..ஓ..அவளுக்காக என்ன அடிப்பிங்களா…எங்க அடிங்க பார்க்கலாம்”என சிலிர்த்து கொண்டு நின்றாள்.
அவள் எதிர்க்க.. இவனுக்கு கண்மண் தெரியாத கோபம் வந்தது. கோபத்தில் என்ன பேசுகிறோம் என தெரியாமல் பேசி வைத்தான்.
“நான் பூங்கொடிய விரும்பினேன் தெரிஞ்சிருந்தும்… கல்யாணத்துல விருப்பம் இல்லாம இருந்தவன் பின்னாடியே அலைஞ்சு தான கட்டிகிட்ட..உனக்கு எல்லாம் அவள பேசற தகுதி கிடையாது” என மூர்க்கமாக கத்த…
அவனின் சுடு வார்த்தைகள் மிக சரியாக அவள் காதல் நெஞ்சை குறிபார்த்து தாக்க..தன் காதலை கொச்சைப்படுத்தி விட்டவனை வெறித்த பார்வை பார்த்தாள்.
அவளை பார்க்க பிடிக்காமல் “ச்சை’என்று வெறுப்பாக தன் பெற்றோர் அறையில் புகுந்து கொண்டான்.
அவனின் சுடுசொல்லையும் வெறுப்பையும் தாங்காமல் மௌனமாக கண்ணீர் வடித்தவள் விடியலுக்கு முன்பே வீட்டை விட்டு வெளியேறினாள்.
கொட்டிவிட்டால் நெல்லை அள்ளலாம்.சொல்லை அள்ளமுடியுமா..
ஒரு வார்த்தை வெல்லும் ஒரு வார்த்தை கொல்லும் . இதை அறியாமல் தனா சொல்லிய சொற்கள் அவன் வாழ்க்கையை வினாவுக்கு உள்ளாக்கியது

புள்ளி மேவாத மான் – 18 Read More »

B0E2668F-2B5F-4540-A6B4-B777B55BB35D

புள்ளி மேவாத மான் – 17

17 – புள்ளி மேவாத மான்

தனா எழிலை ரொம்பவே பொறுப்பாக பார்த்து கொண்டான். எழில் தன்னை கவனித்து கொண்டது போல தானும் கவனித்து கொள்வது தனது கடமை என எண்ணினான்.
எழில் செய்தது எல்லாம் தனா மேல் கொண்ட காதலால்.. ஆனால் தனாவோ கடமையுணர்வில் செய்தான். அது தான் பின் நாளில் பிழையாகி போனது.
தனா மில்லுக்கு கிளம்பும் முன் எழிலை சாப்பாடு மருந்து எல்லாம் கொடுத்து விட்டு தான் கிளம்புவான். நடுவே குடிக்க ஜீஸ் எடுத்து வைத்து விட்டு செல்வான்.
அதை குடித்தாளா.. தூங்கினாளா…. என்ன செய்தாள்.. என கேட்டு இடையிடையே போன் செய்வான்.
அதை பார்த்த கருணாவோ கடுப்பாகி…
“டேய் என் தங்கச்சி போன் பண்ணி இதை தானடா கேட்கும். அப்ப நீ என்ன எகிறு எகிறுவ…இப்ப நீ பண்றது மட்டும் என்னவாம். அந்த புள்ளய ஓயாம போன போட்டு ரெஸ்ட் எடுக்க விடாம தொல்லை பண்ணிகிட்டு இருக்கற..”
“ஏன்டா மாசமா இருக்கா… தனியா வேற இருக்கா..கேட்கறது ஒரு குத்தமாடா..”
“அதானே எங்க அண்ண.. அண்ணி மேல உள்ள பாசத்துல கேட்குது.. யோவ் மாமா உனக்கு ஏன்யா இவ்வளவு காண்டு” என வெற்றி தனாவுக்கு கொடி பிடிக்க…
“ஆமாம்டா உங்க அண்ணன் பாசத்துல தீய வைக்க… இவ்வளவு நாளா என் தங்கச்சி தனியா தான இருந்தா… அப்ப எங்கடா போச்சு உங்க பாசம்”
“போதும் நிறுத்துடா.. சும்மா பாசமலர் படம் ஓட்டாத..” என தனா சிரித்து கொண்டே சொல்ல..
“ஆமாம் டா நாங்க பாசமலர் படம் தான் ஓட்டறோம். நீ என்ன காதலுக்கு மரியாதை செய்யறியா.. நீயும் பாசமலர் படம் தான் ஓட்டற..”
தனா மேலும் சத்தமாக சிரிக்க…வெற்றி புரியாமல் முழிக்க…
“என்னடா மாப்புள்ள புரியலையா.. உங்க நொண்ணன் பொண்டாட்டி பாசத்துல இதெல்லாம் பண்ணல.. புள்ள பாசத்துல பண்றான்”
தனாவின் சிரிப்பில் காண்டாகிய கருணா
” வேணா… இங்கிருந்தா சிரிச்சே எரிச்சல கிளப்புவான்..வாடா மாப்புள்ள வேலைய பார்ப்போம்”என வெற்றியை இழுத்து கொண்டு சென்றுவிட்டான்.
எழிலுக்கு மருத்துவ பரிசோதனைக்கு செல்லும் நாள் வர.. திலகா எழிலை தேடி வந்தார்.
“அரசி நாளைக்கு உனக்கு ஹாஸ்பிடல் போகனும் தான..”
“ஆமாங்கத்தை நாளைக்கு தான் போகனும்”
“இல்ல… நாளைக்கு நான் எங்க ஊருக்கு என் சொந்தத்துல ஒரு முக்கியமான கல்யாணம் கட்டாயம் போகனும். தப்பா எடுத்துக்காதே.. நான் வந்த பிறகு ஹாஸ்பிடலுக்கு போகலாமா..” என எழிலின் கையைப் பிடித்துக்கொண்டு கொஞ்சம் தயக்கத்துடன் கேட்க..
அவர் கேட்ட விதத்தில் எழிலுக்கே கொஞ்சம் சங்கடமாகி போனது.
“அத்தை நீங்க வந்ததுமே போலாம். நீங்க கவலைப்படாம போயிட்டு எல்லாம் முடிச்சிட்டு வாங்க..” சமாதனமாக சொல்ல..
“நான் வந்ததும் போலாம்.நான்போயிட்டு வந்திரேன்”
ஒருவாறாக திலகா கிளம்பி சென்றார். அடுத்த நாள் காலையில் தனா ஹாஸ்பிடலுக்கு போகனும்ல நானே உங்களை கூட்டி போகிறேன்னு சொல்ல..
எழில் திலகா சொல்லி சென்றதை சொல்ல… தனாவோ யாரும் வேணாம் நானே கூட்டிட்டு போகிறேன். என்று எழில் சொல்ல சொல்ல… கேட்காமல்… பிடிவாதமாக அழைத்து சென்றான்
மருத்துவ பரிசோதனை எல்லாம் முடிந்து தனா டாக்டரிடம் சந்தேகங்கள் என்ற பெயரில் கேள்விகளாலேயே துளைத்து எடுக்க..
அவனுக்கு பதில் சொல்லியே கலைத்து போன டாக்டர் எரிச்சலுடன் எழிலிடம்
“எழிலரசி வீட்டு பெரியவங்க யாரும் வரலையா..இனி அடுத்த தடவை வரும் போது பெண்கள யாராவது கூட்டிட்டு வா”என்றிட..
சர்ரென கோபம் ஏற தனா “அப்ப என்னைய வர வேணான்னு சொல்லறிங்களா.. அதெல்லாம் நீங்க சொல்லமுடியாது. சொல்லவும் கூடாது.” என்றான் அழுத்தமாக…
“மிஸ்டர் என்ன ஓவரா பேசறிங்க..”
“கேட்கற பீஸ் கொடுக்கறோம்ல… அப்ப கேட்கறதுக்கு பதில் சொல்லி தான் ஆகனும்”
“என்ன மிரட்டறிங்களா…” என டாக்டருக்கும் தனாவுக்கும் வாக்குவாதமாக..
“பேஷண்டா நாங்க கேட்கற சந்தேகங்களை தீர்க்க வேண்டியது உங்க கடமை. பொறுப்பில்லாம பேசறிங்க”
“நொய் நொய்னு கேள்வியா கேட்டுட்டு எனக்கு பொறுப்பில்லைனு சொல்வீங்களா..”
“ஆமாம் அப்படி தான். பேஷன்ட்டோ ஹெல்த் பத்தி கேட்டா கோபம் வருமா.. பொறுமையா சொல்லமுடியாட்டி எதுக்கு டாக்டர் தொழிலுக்கு வர்றிங்க”
எழில் “மாமா பிரச்சினை வேணாம். வாங்க போலாம்” என்று அவள் கையைப் பிடித்து இழுக்க.. இவன் திமிறிக்கொண்டு சண்டைக்கு போக
“விடு என்னை… யாராவது கேட்டா தான் இவங்கள மாதிரி ஆளுங்களுக்கு பயம் இருக்கும்”
“சொன்னா கேளுங்க மாமா வீட்டுக்கு போகலாம் வாங்க” என இழுத்து கொண்டு கார் நிறத்துமிடத்திற்கு வந்தாள்.
காரில் ஏறி தனா கதவை அறைந்து சாத்தியதில் எழிலின் உடல் ஒரு நிமிடம் அதிர்ந்து நடுங்கியது.
முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு எதுவும் பேசமால் வந்தான். எழில் அவனின் கோபத்தை கண்டு அரண்டு போயிருந்தாள்.
இறுகிய முகத்துடன் வந்தவன் வாசலிலையே இறக்கி விட்டு சென்றுவிட்டான்.
தனா பண்ணிய அழிச்சாட்டியத்தில் எழிலுக்கு டென்ஷனில் ப்ரஷர் அதிகமாகி படபடப்புடன் மயக்கம் வர… ஏற்கனவே எழிலுக்கு டாக்டர் ப்ரஷர் இருப்பதாக சொல்லி அதற்கான ஆலோசனையும் சொல்லி இருந்தார்.
தங்கள் அறையில் எதுவும் சாப்பிடாமல் போய் படுத்துக் கொண்டாள். சாப்பிடலையே என அழைக்க வந்த இருளாயி சோர்வாக வேர்த்து சற்று கிறக்கத்துடன் இருந்த எழிலை பார்த்து விட்டு பதறி போய் உப்பும் சர்க்கரையும் கலந்த எலுமிச்சை சாற்றை கொண்டு வந்து குடிக்க வைத்து விட்டு தேவியை கூட்டி வர போனார்.
இருளாயி சொல்லவும் தேவியும் பதறி போய் வந்தவர் எழிலை சாப்பிட வைத்து.. வீங்கியிருந்த கைகால்களுக்கு வெந்நீர் ஒத்தடம் கொடுத்து உறங்க வைத்தார்.
தனா வரும் வரை அங்கேயே இருந்தார். அவரை தேடிக்கொண்டு கண்ணனும் வந்திட…தூங்கி எழுந்து வந்த எழில் நடந்தவற்றை சொல்லிவிட்டாள்.
இருவரும் தனா வருகைக்காக கோபத்துடன் காத்திருந்தனர். தனாவும் வந்தவன் சித்தப்பா சித்தியைப் பார்த்து வரேவேற்கும் விதமாக சிரித்து தலை ஆட்ட…
இருவரும் அவனை முறைத்து பார்த்தனர்.இவங்க எதுக்குடா முறைக்கிறாங்க என யோசித்து கொண்டே உடை மாற்ற சென்றான்.
அவன் பின்னாடியே போகப் போன எழிலை தேவி “எங்க அவன் பின்னாடியே போற… இப்படி பார்த்துப் பார்த்து செய்து தான் அவன் உன்னை புரிஞ்சுக்காம இருக்கான். பேசாம உட்காரு” என தன் அருகில் இருத்திக் கொண்டார்.
எப்பவும் தன்னையே வால் பிடித்துக்கொண்டு வரும் எழில் வராமல் போகவும்..கண்ணன் முறைப்பையும் வைத்து இரண்டும் இரண்டு நாலு என கணக்கு போட்டவன் ஹாஸ்பிடல் சண்டையை கேட்க வந்திருப்பதை அறிந்து கொண்டான்.
“எங்க யார்க்கிட்டயும் சொல்லாம இன்னைக்கு எதுக்குடா அரசிய ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போன..” என கண்ணன் கோபமாக கேட்க…
“இன்னைக்கு தான செக்கப் டேட்” என்றான் கடுப்புடன்
“அது எங்களுக்கும் தெரியும். அண்ணி தான் இரண்டு நாள் கழிச்சு போலாம்னு வந்து சொல்லிட்டு போனாங்கல்ல.. அப்புறம் எதுக்கு கூட்டிட்டு போன”
“இப்ப கூட்டிட்டு போனதால என்னாச்சு” என்றான் விட்டேற்றியாக..
அவனின் பேச்சில் அது வரை அடக்கி வைத்திருந்த கோபத்தை கைவிட்டவராக..
“இப்ப என்னாச்சா.. டாக்டர் கிட்ட சண்டை போட்டு பிரச்சினை பண்ணிட்டு வந்திருக்க.. அடுத்தாப்புல அந்த ஹாஸ்பிடலுக்கு எப்படி போக முடியும்”
“அந்த டாக்டர் விட்டா வேற டாக்டரா ஊருல இல்லை. இவங்கள விட நல்ல டாக்டர் நிறையா இருக்காங்க பார்த்துக்கலாம்”
“நீ இப்படி பேசி வைச்சா இந்த டாக்டர்னு எந்த டாக்டரும் டெலிவரி பார்க்கமாட்டாங்க.. அத முதல்ல தெரிஞ்சிக்கோ”என தேவியும் திட்ட..
இது வரை யாரும் அவனை இப்படி கேள்வி கேட்டதில்லை என்பதால் உள்ளுக்குள் பொசு பொசுவென பொங்கி கொண்டு வந்த கோபத்தை பல்லிடுக்கில் அடக்கி கொண்டு
“சந்தேகத்தை கேட்டா சொல்லனும் தான.. அத விட்டுட்டு தேவையில்லாம பேசினா யாரு தான் பொறுத்துப்பா…”
“அதெல்லாம் பொம்பளைங்களுக்கு தெரியும். எது கேட்கறதா இருந்தாலும் பக்குவமா கேட்டுக்குவாங்க.. தேவையில்லாம அரசிய டென்ஷன் பண்ணி.. ப்ரஷர் அதிகமாகி புள்ள துவண்டு போயிட்டா… ஒழுங்கா நாங்க சொல்றபடி கேட்டு செய்யு.. இல்ல அவங்க அம்மா வீட்டுக்கு அனுப்பிடலாம்.பிள்ளை பேறு முடிஞ்சு அழைச்சிக்கலாம். என்ன சொல்ற..” என கண்ணன் ஒரே போடாக போட..
எழில் துவண்டு போயிட்டா என்றதும் அப்போது தான் அவளை நன்றாக கவனித்து பார்த்தான்.
அவளின் சோர்ந்த முகம் மனதை பிசைய.. பொங்கி கொண்டு இருந்த கோபம் நீர்த்துப் போய்விட.. எழிலை அனுப்பிவிடலாம் என்ற பேச்சில் சர்வமும் அடங்கிவிட்டது அவனுக்கு.
அவன் அமைதியாக”நீங்க சொல்றபடியே செய்யறேன்” என சரணாகதி ஆகிவிட..
அவனுக்கு சிலபல அறிவுரைகளால் அர்ச்சனை நடத்தி விட்டு இருவரும் கிளம்பி சென்றனர்.
“மாமா.. சாப்பிட வாங்க..” என சொல்லிவிட்டு சோபாவை பிடித்து எழுந்து எட்டு எடுத்து வைக்க தடுமாற..
நொடியும் தாமதிக்காமல் அவளை கைகளில் அள்ளிக் கொண்டான். அவளை சாப்பிட அமர வைத்து அவள் தடுக்க தடுக்க..தானே பரிமாறினான்.
எழில் சாப்பாட்டை கைகளில் அள்ள சிரமப்பட.. அப்போது தான் கவனித்தான் அவள் கைகால் வீங்கி இருப்பதை… நெஞ்சில் பாரமாகி போனது.
பெண்கள் வலிகளையும் வேதனைகளையும் பிரசவித்த பிறகே பிள்ளைகளை பிரசவிக்க முடியும் என்பதை ஆண்களுக்கு யார் தான் சொல்வது…
அவளுக்கு ஊட்டி விட்டு தானும் சாப்பிட்டு அவளை தூக்கி கொண்டு வந்து படுக்கையில் கிடத்தி விட்டு வேகமாக வெளியேசென்றான்.
சிறிது நேரத்தில் வெந்நீரோடு வந்தவன் அங்கிருந்த சிறு மேஜை மேல் வைத்துவிட்டு எழிலின் காலடியில் அமர்ந்து அவள் கால்களை தன் மடியில் வைக்க..
“வேணாம் மாமா..” என பதறிப்போய் காலை இழுத்துக் கொள்ள.. அவளின் காலை பிடித்து கட்டாயமாக தன் மடியில் வைத்து
“பேசாம இரு.. எப்படி வீங்கி இருக்கு பாரு..” என ஒத்தடம் கொடுக்க.. சற்று வீக்கம் குறையவும்..
“நான் கால்களை அழுத்தி விடறேன்.தூங்கு” என கால்களை அழுத்த.. அழுத்த.. அவளுக்கோ அவன் கைப்பட்ட இடமெல்லாம் குறு குறுப்பை உண்டாக்க…
பேதையோ போதை கொள்ள… நெளிந்து கொண்டே கால்களை மறுபடியும் இழுத்து கொள்ள…
“ப்ச்ச்” என சலித்து கொண்டே அவள் முகம் காண… அதில் மீகிய காதல் இருக்க… இவனோ அவளின் உடல்நிலையை மனதில் நிறுத்தி தயங்க… அவளோ மாமா என்று சிணுங்க… கூடலுக்கான அழைப்பை ஏற்றவன் அவள் மென் பாதங்களில் இருந்து முத்தமிட்டு முத்தமிட்டு முன்னேறினான்.
முத்த ஊர்வலம் மெத்த உடலில் மெல்ல மெல்ல நடத்தி மாதுளை நிறம் கொண்ட இதழில் வந்து மொத்தமாக மூழ்கி போனான். காதல் ரசம் பருகி பித்தாகி கிறங்கினான். அவளின் உடலின் மேடு பள்ளங்களும் அபாயகரமான வளைவுகளும் அவனின் சித்தம் கலங்க வைத்திட.. மீளா போதையில் சிக்கி சின்னாபின்னமாகி போனான்.
தானும் தெளிந்து தன் இணையையும் தெளிய வைக்கும் செயலில் சேவகனாகி சேவைகள் செய்திட.. அவனின் இணையோ தலைவனின் சேவையில் கர்வம் கொண்டு… அந்த ஆனந்தத்தில் வீழ்ந்து போனாள்.
இந்த ஆனந்த சேவைகள் விடியலில் நிறைவுக்கு வர… ஊரெல்லாம் நித்திரையில் இருந்து விடுபட.. இவர்கள் மட்டும் நித்ராதேவியின் மடியில் சயனம் கொண்டனர்.
இவர்களோ ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க… நாம் வந்த பிறகு எழிலை கடுமையாக பேசி இருப்பானோ என தேவி பதறி வந்து பார்க்க..திறக்காமல் இருந்த கதவை கண்டு சிரித்து கொண்டு திரும்பி சென்று விட்டார்.

புள்ளி மேவாத மான் – 17 Read More »

26019B55-102A-4D00-9D07-ED3CEE1CACC4

புள்ளி மேவாத மான் – 16

16 – புள்ளி மேவாத மான்

கோயிலுக்கு செல்லும் போதே எழிலுக்கு உடம்பு ஒரு மாதிரி இருந்தது. வயிற்றை பிரட்டி கொண்டு வருவது போல இருக்க.. அதிகாலையில் எழுந்தது.. அதோடு கார் பயணம்.. அதனால் அப்படி இருக்கிறதோ.. என நினைத்து கொண்டாள்.
கோயிலுக்கு சென்று பூஜைக்கான வேலைகள் செய்ய மிகவும் களைத்து போனாள். கனிமொழியை பொங்கல் வைக்க சொல்லி எழிலை உதவிக்கு வைத்து விட்டு திலகாவும் தேவியும் உரலில் மாவு இடிக்க சென்றனர்.
அடுப்பின் அருகே உட்கார்ந்து வெல்லம் உடைத்து கொண்டு இருந்தவளுக்கு விறகு புகையால் இருமி ஓக்கரித்து கொண்டு வர ஓடிப்போய் வாந்தி எடுத்தாள்.
கனி பதறி “அத்த.. அத்த.. இங்க வாங்க..”என கூப்பிட.. கனியின் சத்தத்தில் அனைவருமே வந்தனர். திலகாவும் தேவியும் எழிலை அருகே சென்று தண்ணீர் கொடுத்து வாய் கொப்பளித்து முகம் கழுவி கூட்டி வந்து கோயில் மண்டபத்தில் உட்கார வைத்தனர். அதற்குள் அனைவரும் என்ன என வந்துவிட்டனர்.
திலகா “என்ன அரசி என்ன பண்ணுது காலைல சாப்பிட்டது ஏதாவது ஒத்துக்கலையா…”
“இல்லைங்க அத்த இட்லி தான சாப்பிட்டேன். புகை தான் ஒத்துக்கல போல..”
“ஏன் அண்ணி புகையால கண் எரிச்சல்னா கூட பரவாயில்ல… வாந்தி வருதுனா லாஜிக் இடிக்குதே…” என பிரசாத் நக்கல் பேச…
“டேய் தம்பி… உனக்கு நேரம் சரியில்லடா….”என்ற திரு சொல்லிவிட்டு தலையை குனிந்து கொண்டு சிரிக்க…
சுந்தரம் இவர்களை பார்த்து முறைக்க… கண்ணன் அமைதியா இருங்களேன்டா என கை ஜாடையாக பேச…
மகன் சொன்னதை யோசித்த தேவி திலகாவின் காதில் ஏதோ சொல்ல.. திலகாவும் எழிலிடம் மெதுவான குரலில்,
“கடைசியா எப்ப பீரியட்ஸ் ஆன..”
முதலில் முழித்தவள்… பின்பு எப்போ என யோசித்தாள்.
இரண்டு மாதத்திற்கு முன்பு… தனாவின் விபத்திற்கு முன்பு… தனாவை கவனிப்பதில் தன்னை கவனிக்க மறந்துவிட்டாள்.
“அத்த இரண்டு மாசாமாச்சு”சொல்லும் போதே எழிலுக்கு ஏதோ புரிவது போல இருந்தது. நிஜமா… தனக்கா… கடவுள் கருணை காட்டிட்டாரா… என உள்ளம் பூரித்து போக..
“நாளு தள்ளி போயிருக்கு தேவி” என சொன்னவர் வேகமாக கடவுளின் முன் போய் நின்று,
“ஆத்தா… அங்காளம்மா… குலம் தழைக்க வச்சிருக்க.. சந்தோஷமா இருக்கு.. தாயும் பிள்ளையும் நல்லா இருக்கனும்” என மனதார வேண்டி கொண்டு விபூதி எடுத்து வந்து எழிலின் நெற்றியில் இட்டுவிட்டார்.
பெண்கள் அவர்களுக்குள்ளேயே ரகசியமாக பேசிக் கொள்ள ஆண்களுக்கு ஒன்றும் புரியவில்லை. சுந்தரம் திலகாவிடம் என்னவென்று கேட்க.. திலகா சொல்லவும் குடும்பத்திற்கே மகிழ்ச்சி.
திலகா மருத்துவமனைக்கு சென்று உறுதி செய்யும் வரை வெளியில் யாரிடமும் சொல்லவேண்டாம் என்றிட… சுந்தரம் சீக்கிரம் பூஜையை முடித்துவிட்டு கிளம்பலாம் சொல்லவும்,
விரைவாக பூஜையை முடித்து கொண்டு வந்திருந்த மதிய உணவை சாப்பிட்டு ஊர் திரும்பினர்.எழிலை வீட்டில் கொண்டு வந்து விட்டு திலகாவும் தேவியும் ஆயிரம் பத்திரங்கள் சொல்லி சென்றனர்.
தனா இதை எல்லாம் பார்த்து கொண்டு தான் இருந்தான். வர லேட்டாகும் என நினைத்திருக்க..சீக்கிரம் வந்ததோடு இல்லாமல் தன் சித்திகள் எழிலிடம் ஏதோ மெதுவாக சொல்லிவிட்டு செல்வதையும் பார்த்தான். அதைவிட எழில் வழக்கத்துக்கு மாறாக இட்ட அடி நோகுமோ என மெல்ல நடந்து வருவதை பார்த்து இவளுக்கு என்னாச்சு என குழம்பி தான் போனான்.
தனாவிடம் எதுவும் பேசாமல் அறைக்குள் சென்றுவிட… எப்பவும் மாமா என்ற அழைப்போடு தனது டிரேட் மார்க் புன்னகையோடு வருபவள் அமைதியாக செல்ல… எதாவது பிரச்சினையா என யோசித்து டிவியை அணைத்து விட்டு அறைக்கு வந்தான்.
எழில் கட்டிலில் உட்கார்ந்திருக்க…தனா அவளின் அருகே சென்று தோளில் தட்டி
“ஹேய்…எழில் என்னாச்சு ஏன் இப்படி இருக்க..”என கேட்கவும்… அவனை இடுப்போடு கட்டி கொண்டு மௌனமாக கண்ணீர் வடிக்க….
அவள் அழுகையில் இவன் கவலையுடன் “ஏம்மா அழுகற… யாராவது ஏதாவது சொல்லிட்டாங்களா”
தனாவை இழுத்து தன் அருகே அமர வைக்க.. சற்று தடுமாறி அமர்ந்தவனின் நெஞ்சில் சாய்ந்து கொண்டு
“மாமா.. நமக்கு பாப்பா…”
தான் கருவுற்றிருப்பதை அவனிடம் கிசுகிசுப்பான குரலில் சொன்னாள்.
அவள் சொல்ல வருவது சரியாக புரியாமல் அவள் முகம் நிமிர்த்தி பார்க்க… அவனின் கண்கள் வழி விடுத்த கேள்விக்கு பதிலாக அவன் கைகளை எடுத்து தன் வயிற்றில் வைத்து
“நம்மள அப்பா அம்மானு கூப்பிட பாப்பா வர போகுது மாமா…”
அவளின் செய்தியில் அவனுக்கு சொல்லமுடியாத சந்தோஷம். அவளை அணைத்து கொள்ள.. இருவரும் ஆர்பாட்டமின்றியே அந்த மகிழ்ச்சியை அமைதியாக அனுபவித்தனர்.
குழந்தைக்காக எவ்வளவு எதிர்பார்த்து ஏங்கி தவித்தாள் என அவனுக்கு தானே தெரியும். அதற்காக அவள் பட்ட கஷ்டங்கள்… ஏச்சுபேச்சுக்கள்…
கோவிலில் நடந்தவற்றை சொல்லி முடிக்க.. சிறிது நேரம் அப்படியே இருந்தவர்கள் இருளாயின் குரலில் தான் வெளியே வந்தனர்.
எழிலரசியை தன் கைகளால் நெட்டி முறித்து திருஷ்டி கழித்தவர்,
“இப்ப தான் திலகாத்தா… சொல்லுச்சு… ரொம்ப சந்தோஷம் தாயி.. ஐய்யா.. ராசா… ஐயனும் அம்மாவுமே உனக்கு புள்ளையா பிறப்பாங்க ராசா… இனி நீ கொப்பும் குலையுமா.. இருப்ப எனக்கு அது போதுமய்யா.. இனி இந்த கட்டை சந்தோஷமா வேகும்..” என கண் கலங்க… பொக்கை வாய் கொள்ளா சிரிப்புடன்..
“ப்ச்ச் ஆயா..என்னை வளர்த்த மாதிரி என் பிள்ளையும் நீ தான் வளர்த்துவ.. இப்ப குடிக்க எழிலுக்கு ஏதாவது கொண்டு வா” என்க.. தள்ளாத வயதை மறந்து சிறுபிள்ளை போல சுறுசுறுப்பாக சென்றார்.
“எழில் உங்க வீட்ல சொல்லிட்டியா” என்று தனா கேட்க..
“இல்ல மாமா.. உங்ககிட்ட சொல்லிட்டு சொல்லலாம்னு இருந்தேன்”
தனா தனது போனில் இருந்தே அழைத்து எழிலின் கையில் கொடுக்க தன் தாயிடம் விபரம் சொல்ல..
உடனே எழிலின் குடும்பம் எழிலை பார்க்க வந்துவிட்டனர். முத்துக்குமார் மகளுக்கு பிடித்த பலகாரங்கள் பழவகைகள் என அத்தனை வாங்கி வந்திருந்தார்.
தனா அதை பார்த்து ஏன் என் பொண்டாட்டிக்கு நான் வாங்கி தரமாட்டனா… என கடுப்பானான்.
சற்று நேரத்தில் சுந்தரம் குடும்பமும் கண்ணன் குடும்பமும் வர பேசி சிரித்து.. திலகா தேவி கற்பகம் மூவரும் இரவு விருந்து தடபுடலாக சமைக்க… எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டு….என அடுத்த தலைமுறை வருகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.
எல்லோரும் கிளம்பி சென்றதும் தங்கள் அறைக்கு எழிலோடு வந்தவன் அவளை நெருங்கி அவள் வயிற்றில் புடவையை விலக்கி முத்தம் தொடர்ந்து கொடுத்து கொண்டே இருக்க… அவனின் மீசையின் குறுகுறுப்பு தாங்காமல் நெளிந்தவள்..
“மாமா.. கூசுது… போதும் விடுங்க”
“என் புள்ளைக்கு கொடுக்கறேன் உனக்கென்னடி பொறாமையா..”
“ஆமாம் எங்களுக்கு பொறாமையாம் பொறாமை.. ஒரு ஆமையும் இல்ல..”படபட பட்டாசாய் வெடிக்க..
தனா சத்தமாக சிரிக்க.. அவனின் சிரிப்பை கண்டு உதட்டை சுழிக்க.. சுழித்த உதட்டை தன் உதடு கொண்டு அடக்க… அவள் மாமனை இறுக்கி அணைக்க.. இவனுக்கு தான் அடங்காமல் தாபம் கிளர்ந்தெழ.. தன் தாபத்த தீர்த்துக் கொள்ள மேலும் முன்னேறியவனுக்கு குழந்தையின் ஞாபகம் வர.. சட்டென தாப அலை ஓய்ந்தது. அவன் நெற்றியில் முத்தமிட்டு விலகி படுத்துக் கொண்டான்.
கேள்வியாக மாமனை பார்க்க.. அவளை எடுத்து தன் நெஞ்சில் போட்டு கொண்டு
“பாப்பாவுக்கு ஏதாவது ஆகிடுமோனு பயமா இருக்கு”
அவளுக்கும் ஒன்றும் தெரியாததால் அவனின் பயம் அவளுக்கும் தொற்றிக் கொள்ள… பயத்தில் அமைதியாக இருவரும் அணைத்து கொண்டு படுத்திருந்தனர்.
இதற்கு நடுவே தமிழரசன் கீர்த்தியை யாரும் அறியாமல் சைட் அடிக்க.. கீர்த்தி மனசில் ஒரு சின்ன தடுமாற்றம்.. அதை மீறி தன் குடும்பத்தினரை நினைத்து பயம்.
எழிலின் கல்யாணத்தின் போது தமிழரசனுக்கு கீர்த்தி மீதான பார்வை சிறுபிள்ளை என இருக்க… வெற்றியின் கல்யாணத்தில் சிறு சலனம்.. சலனம் சஞ்சலமாகி.. காதலாகி… இப்போ உரிமையோடு அவள் மீது பார்வையை பதிக்க…
கீர்த்தியை பொறுத்த வரை தமிழரசன் அண்ணியின் அண்ணன் அவ்வளவே… விபத்து பிறகு தமிழரசன் தனாவை பார்க்க வரும் சமயங்களில் கீர்த்தியை சந்திக்க நேர்ந்த போது அவன் கண்களில் தெரிந்த ஏதோ ஒன்று அவளை தடுமாற செய்தது தான்.
சிறுபெண் தானே ஏற்பதா.. எதிர்பார்ப்பதா.. என புரியாத நிலை.
எழிலின் கர்ப்பம் தனாவுள் பல மாற்றங்கள். தன் மனைவி தன் குடும்பம் அதனுள் ஒரு புது வரவு பொறுப்புகள் கூடி போக.. இயலாமையை எரிச்சலாக காண்பிக்காமல்… எழிலை கஷ்டப்படுத்த விரும்பாமல்… அப்பா என்ற பதவி உயர்வு புத்துணர்ச்சியோடு ஓடும் வேகத்தை கொடுக்க… முன்பைவிட முனைப்பாக தன் உடலை நிலைப்படுத்த அனைத்தும் செய்தான்.
ஒருமாதம் ஓய்வு மீதமிருக்க… தன் முயற்சியில் பதினைந்து நாளில் முடித்து கொண்டு… டாக்டரிடம் முழுபரிசோதனை பண்ணிக் கொண்டு பேக்டரிக்கு கிளம்பிவிட்டான்.
கோவிலுக்கு சென்று வந்த அடுத்தநாளே மருத்துவமனைக்கு சென்று கர்ப்பத்தை உறுதி செய்து வந்தனர் பெண்கள்படை.
இதுநாள் வரை தனாவை கவனிக்க நேர்ந்ததால்… சரியான நேரத்திற்கு சரியான உணவு எடுத்து கொள்ளவதில் அசட்டை. அதனால் எழிலின் உடலில் கொஞ்சம் பலவீனம். மருத்துவரிடம் அதற்கான அறிவுரையோடு மருந்து மாத்திரைகளோடும் வீடு வந்தனர்.
தாய்மார்கள் இருவருக்கும் சேர்த்தே இதை செய் அதை செய்யாதே என பட்டியலிட்டனர். ஒரு குழந்தை பிறப்பில் இவ்வளவு இருக்கா… என்ற மலைப்பே தனாவின் உத்வேகத்திற்கு காரணம்.
தனாவுக்கு எழில் செய்தது போய் எழிலுக்கு தனா செய்தான். எழில் சமைத்தாளா என பார்க்காமல் திலகாவும் தேவியும் செய்து கொடுத்தனுப்பி விடுவர்.
அவளை வேளைக்கு சாப்பிட வைக்கும் வேலை தனாவின் பொறுப்பாக்கி கொண்டான்.
“எழில் சொன்னா கேளும்மா.. இந்த ஒரு இட்லி மட்டும் சாப்பிடு…”
“மாமா… ப்ளீஸ் மாமா வேணாம் மாமா..”
“சொன்னா கேளுடி.. கொஞ்சம் சாப்பிடு” என வலுகட்டயாமாக ஊட்ட…
ஓடிப்போய் அத்தனையும் வாந்தி எடுத்தாள். சோர்வுடன் வந்தவளை லேசாக அணைத்து முகம் துடைத்து கைவளைவிலேயே அறைக்கு கூட்டி சென்று படுக்க வைத்து அவனும் அவளை நெருங்கி படுத்துக் கொண்டான்.
அவன் நெஞ்சில் தலை வைத்து படுத்திருந்தவள் சிறிது நேரத்தில் அவனின் மீசையை பிடித்து இழுக்க… காதை கடிக்க… இதழோடு இதழ் உரச.. என சேட்டைகள் செய்ய…
எதற்கு இந்த சேட்டை என அறியாதவனா தனா… ஆனால் அவள் உடல்நிலை கருதி அமைதியாக இருந்தான். அவள் அவனை சீண்டிக் கொண்டே இருக்க…
“ஹேய்.. பேசாம இருக்கமாட்டியா…”
“மாமா..மாமா” சிணுங்க…
“வேணான்டி சொன்னா கேளு..மனுசன உசுப்பேத்திகிட்டு இருக்காதே…பாப்பாவுக்கு ஏதாவது ஆகிட போகுது..”
“அதெல்லாம் ஒன்னும் ஆகாது”
“அதெப்படி உனக்கு தெரியும்.எல்லாம் தெரிஞ்சவ மாதிரி பேசாதே…”
“எல்லாம் தெரிஞ்சிகிட்டு தானே சொல்றோம்”
“யாரு சொன்னா.. டாக்டரா…”
“என் மாமியார்களும் உங்க மாமியாரும் நடத்தின பாடத்துல இதுவும் தான் அடக்கம்”
“நிஜமாவா… ஒன்னும் ஆகாதா”
“ஹூம்ம்…”என தலையாட்ட..
அதற்கப்புறம் அங்கு பேச்சுகளற்ற மௌனபாஷை தான் ஆட்சி செய்தது. அவளுக்கு வலிக்குமோ குழந்தைக்கு பாதிக்குமோ என பயந்து பயந்து மென்மையாக அவளை ஆட்கொண்டான்
பயத்துடனே இருந்தாலும் நிறைவான தாம்பத்தயமாக தான் இருந்தது இருவருக்குமே.. அவளிடமிருந்து பிரிந்தவன் அவளருகே படுத்து வயிற்றை வருடி கொடுத்து

“வலிக்குதாடி… ஏதாவது பண்ணுதா…டையர்டா இருக்கா… ஒன்னும் ஆகாதுல்ல..” என்றான்.
“ஒன்னும் ஆகாது மாமா..எதுக்கு இவ்வளவு பதட்டப்படறிங்க..” என்க
இருந்தாலும் அவன் முகம் தெளியவில்லை. கொஞ்ச நேரத்தில் அவள் தூங்கிவிட.. இவனுக்கு தான் வெகுநேரம் உறக்கம் வரவில்லை. அவளிடம் சிறு அசைவு ஏற்பட்டாலும் என்னவோ என பதறிப்போய் பார்த்தான்.
காலையில் எழுந்த பிறகும் அவளை பார்த்து கொண்டே அவள் பின்னாடி சுற்றி கொண்டு வயிறு வலிக்குதா… என்னாவது பண்ணுதா… கேட்டுகிட்டே இருக்க…
எழிலுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரிக்க… அதற்கும் பயந்தான்.
ஒரு கட்டத்திற்கு மேல் அவளுக்கே எரிச்சலாகிவிட… போய்யா போய் பொழப்ப பாரு.. என திட்டிய பிறகே கிளம்பி பேக்டரிக்கு சென்றான்.
செல்லும் போது எதுனாலும் எனக்கு கூப்பிடு என சொல்ல.. இவள் இடுப்பில் கை வைத்து அவனை முறைக்கவுமே.. கிளம்பி சென்றான்.
வீட்டில் கூடவே இருந்து கவனித்துக்கொள்ள பெரியவர்கள் இல்லாத நிலை.. இருளாயி இருந்தாலும் வேலைக்கு என இருப்பவர் உரிமையாக முடியாதல்லவா.. அதுமட்டுமின்றி வயதாகி தள்ளாமை வேற…
அதனால் தான் தான் அவளை கவனித்து கொள்ள வேண்டும். அவளுக்கும் குழந்தைக்கும் தானே பொறுப்பு என்ற எண்ணமே.. அவனுடைய இந்த பதட்டத்திற்கு காரணம்.
தன்னை எப்படி எழில் கவனித்து கொண்டாள். அதைவிட இருமடங்கு அவளை கவனித்து கொள்வது தனது கடமை என நினைத்தான். கடமையாக தான் செய்ய நினைத்தான். காதலாக இல்லை. கடமைவுணர்ச்சி அதிகமாகி எழிலின் சீற்றத்துக்கு ஆளானான்.

புள்ளி மேவாத மான் – 16 Read More »

B658A867-BAE8-41C3-BE68-4008F2C08441

புள்ளி மேவாத மான் – 15

15 – புள்ளி மேவாத மான்

என்ன தான் வெற்றியும் கருணாவும் பேக்டரியை பார்த்து கொண்டாலும் தன் சொந்த முயற்சியால் ஆரம்பித்து அதை இரவு பகல் என பாராது வாலிப வயதுக்கு உண்டான சந்தோஷங்களை தியாகம் செய்து அதை உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்தான். இரவில் தூக்கத்தில் கூட பேக்டரியை பற்றிய நினைவோடு தான் தூங்குவான்.
அவனின் லட்சிய தொழிலான் சுகர் பேக்டரியை பார்க்க முடியாமல் வீட்டுக்குள் அடைந்து கிடக்கும் நிலையை தனா அறவே வெறுத்தான். அதனால் சில சமயங்களில் எழிலிடம் எரிச்சலை காண்பித்து விடுவான். பிறகு அதற்காக வருத்தம் கொண்டு எழிலிடம் சமாதானமும் பேசுவான்.
அவனை புரிந்து கொண்டு இருக்கும் எழில் அவனின் கோபத்தையும் எரிச்சலையும் தன் வழக்கமான சிரிப்புடன் கடந்து விடுவாள். அவனை தன் அன்பாலயே இயல்புநிலைக்கும் கொண்டு வந்துவிடுவாள் .
விபத்து முடிந்து இரண்டு மாதங்கள் ஆன நிலையில் தனா ஓரளவு யாரையும் எதிர்பார்க்காமல் வாக்கரின் உதவியோடு தன் வேலைகளை தானே செய்து கொண்டான். திடகாத்திரமான உடல் என்பதாலும் எழிலின் ஆரோக்கியமான கவனிப்பாலும் அவனின் எலும்புகள் விரைவாக கூடிவிட… டாக்டர் அறிவுரைப்படி காலையிலும் மாலையிலும் வாக்கிங் ஸ்டிக் வைத்து நடக்க பழகினான். முதலில் காலை ஊன்றி நடக்க சிறிது தடுமாறினாலும் அவனின் தொழில் வெறியே அவனை நடக்கும் உத்வேகத்தை கொடுத்தது.
தினமும் வேலை முடிந்து தங்கள் வீட்டிற்கு செல்லும் முன் சுந்தரமும் கண்ணனும் தனாவை வந்து பார்த்து விட்டு தான் செல்வர். அன்றும் அது போல வந்தவர்கள் தனாவிடம்,
“தம்பி வெற்றி கல்யாண படி அரிசிய கொண்டு போய் குலதெய்வத்துக்கு பச்சப் போடனும். இப்பவே ரொம்ப தள்ளி போயிடுச்சு.. வர வெள்ளிக்கிழமை போலாமா.. உன்னால வரமுடியுமாய்யா… மெதுவா அலுங்காம காருல போயிட்டு வந்திடலாமா..”
“நீங்க போயிட்டு வாங்க சித்தப்பா.. என்னால ரொம்ப நேரம் உட்கார்ந்துட்டு வரமுடியாது. அது இல்லாம அங்கயும் வந்து உட்கார்ந்து தான் இருக்கனும் கால்வலி எடுத்துக்கும்”
“நீ இல்லாம எப்படிய்யா.. உன்ன விட்டு எதுவும் செஞ்சதில்லையே… வேணா பூசைய அடுத்த மாசம் வச்சுக்கலாமா..”
“அதனால என்ன சித்தப்பா சந்தர்ப்ப சூழ்நிலை… எனக்காக பண்ண வேண்டிய பூசைய தள்ளி போட வேணாம். நான் வேணா எழில அனுப்பி வைக்கறேன்”
சுந்தரம் என்ன செய்ய என யோசனையில் ஆழ்ந்து விட கண்ணன் தான் “அண்ணா….அதான் தனா சொல்றான்ல… அவன் உடம்பையும் பார்க்கனும்ல.. அரசிய அனுப்பறான்ல.. தம்பிக்காவும் வேண்டிக்கலாம் ண்ணா..சாமி காரியத்த தள்ளி போட வேணாம்” என்க
சுந்தரமும் ஒருவழியாக சமாதானமாகி வெள்ளிக்கிழமை போவது என முடிவு செய்து எழிலை வருமாறு அழைத்து விட்டு கிளம்பினர்.
அவர்கள் சென்று சிறிது நேரம் தனா டீவி பார்த்து கொண்டு இருக்க… எழிலின் சத்தமே இல்லை. முதலில் தனா கவனிக்கவில்லை. ஏதாவது கொண்டு வந்து சாப்பிட சொல்லி நச்சரிப்பா.. இல்லையா இப்படி உட்காரதிங்க.. நடங்க.. என படுத்துவா.. இபப என்னடா ஆளையே காணோம் என கொஞ்ச நேரம் கழித்தே உணர்ந்தவன்
“எழில்.. எழில் எங்க இருக்க… இங்க வா” என கூப்பிட்டான்.
எப்ப கூப்பிட்டாலும் சொல்லுங்க மாமா என வருபவள் அமைதியாக வந்து நின்றாள். என்னடா இது என முகம் பார்க்க.. முகத்தை தூக்கி வைத்து கொண்டு எங்கோ பார்த்து கொண்டு நின்றாள்.
“எழில்.. என்னாச்சு”
அதற்கும் பேசாமலே முறுக்கி கொண்டு நிற்க… எரிச்சல் அடைந்தவன்…
“ஏய்… இப்ப எதுக்குடி இப்படி நிற்கற… சொல்லப் போறியா இல்லையா” சத்தம் போட…
” நீங்க எப்படி பெரிய மாமாட்ட அப்படி சொல்லலாம். என்னைய அனுப்பி வைக்கறேனு.. நீங்க வராம நான் மட்டும் எப்படி போவேன். அதுவும் இப்படி உங்களை விட்டுட்டு என்னால எல்லாம் போக முடியாது…” படபடவென பொரிந்தாள்.
அவள் பொரிந்து கொட்டியதில் கலகலவென சிரித்துவிட்டான்.
“நான் என்ன சொல்லிட்டு இருக்கேன். நீங்க சிரிச்சிட்டு இருக்கறிங்க… என்னய பார்த்தா உங்களுக்கு சிரிப்பா இருக்கா…”
“அது இல்லடி குலதெய்வ கோயிலுக்கு தான கூப்பிடறாங்க.. நம்ம வீட்டு சார்பா யாராவது போகனும் தான…”
“உங்கள தனியா விட்டுட்டு என்னால போகமுடியாது. உங்களுக்கு ஏதாவது தேவைனா யார் செய்வா.. இல்லையா வாங்க இரண்டு பேருமே பூசை நேரத்துக்கு போயிட்டு முடியவும் வந்திடலாம்”
“சொன்னா கேளு எல்லாரும் பார்க்க ஸ்டிக் வச்சு நடக்க சங்கடமா இருக்கு…. ஆயா இருக்குது எதுனா அதுகிட்ட கேட்டு வாங்கிகறேன்”
அப்பவும் எழில் ஏதும் பேசாமல் இருக்க…
“கண்டிப்பா நீ போற..” என்றான் கட்டளையாக..
இரவு வரை முகத்தை தூக்கி வைத்து கொண்டே எல்லாம் செய்தாள். அறைக்கு வந்கவள் பாயை விரித்து போட்டு படுத்தாள். அன்றைய இரவுக்கு பிறகு அவனை லேசாக அணைத்தவாறு படுப்பவள் இன்று வேண்டும் என்றே செய்ய….
பார்த்ததும் தனா எரிச்சலுடன்
“எழில் மேல வந்து படு”
சுவற்று பக்கம் திரும்பி படுத்திருந்தவள்அமைதியாகவே இருக்க…”ப்ச்ச் இப்ப மேல வரயா இல்ல நான் உன்கூட கீழ படுக்கவா..”
அப்பவும் அமைதி அமைதியோ அமைதி.
தனா எழுந்து வாக்கிங் ஸ்டிக் எடுக்க… அந்த சத்தத்தில் அடித்து பிடித்து எழுந்து அவனுக்கு அந்தபுறமாக சென்று படுத்துக் கொண்டாள்.
இப்பவும் தனாவிற்கு முதுகு காட்டி படுத்திருந்தவளை பார்க்க எரிச்சல் போய் சிரிப்பு தான் வந்தது. இவனே இழுத்த அணைக்க.. அவள் திமிற…. கொஞ்ச நேரம் இழுபறியாக இருக்க…
“ஆ…ஆ.. அம்மா வலிக்குது” என தனா கத்த..
“ஐயோ.. மாமா.. எங்க வலிக்குது” என பதறி போய் முதுகு இடுப்பு என ஆராய்ந்தவளை பார்த்து கடகடவென சிரிக்க..
“எல்லாம் நடிப்பா.. உங்கள..” என சிணுங்கி கொண்டே நெஞ்சில் குத்த…
அவளை மேலே இழுத்துப் போட்டு கொண்டான்.
“வேணாம் மாமா வலிக்கும்”
“வேணும்டி” என்றான் விசமமாக…
“மாமா ப்ளீஸ் ஆப்ரேஷன் பண்ண உடம்பு ஏதாவது பிரச்சினையாகிட போகுது”
“ப்ளீஸ்டி ப்ளீஸ்டி”என கெஞ்சி கெஞ்சியே அவளை மசிய வைத்தான்.மெது மெதுவாக அவளை ஆக்ரமித்தான். நிதானமாக அவளை ஆட்கொண்ட போதும்.. அவனுக்கு அவள் ஒத்துழைத்த போதும்… அவள் மனதில் பயம் இருக்க தான் செய்தது.
ஆனால் அவனுக்கோ தொழிலை பார்க்காமல் வீட்டில் முடங்கி கிடந்ததால் மனதில் மண்டி கிடந்த எரிச்சல் மறைந்து மனம் இறகு போல லேசான உணர்வு.
அவன் முகத்தில் இருந்த மலர்ச்சியை கண்ட பிறகே அவளுக்கு நிம்மதியும் சந்தோஷமும்… அவளுக்கும் நீண்ட நாட்களுக்கு பிறகு கிடைத்த கணவனின் அருகாமையல்லவா…
ஊடலை கூடலில் முடித்து வைத்தவன்”எழில் நாளைக்கு கோயிலுக்கு போற தான” என்க
“மாமா நீங்க இல்லாம..” என மெல்ல இழுக்க..
“அடம் பண்ணாத எழில் கோயிலுக்கு போகலைனு சொல்லகூடாது. எனக்காக.. நமக்காக போயிட்டு வா”என மேலும் ஏதோ சொல்லி சமாதானப் படுத்தினான்.
வெள்ளிகிழமை காலையிலேயே எல்லோரும் கோயிலேக்கு கிளம்பினர். எப்போதும் எல்லோருக்கும் முன்ன கிளம்பி மாமியார்களிடம் என்ன செய்ய ஏது செய்ய என கேட்டு எல்லாம் இழுத்து போட்டு கொண்டுசெய்பவள்…
இன்று தனாவையே சுற்றி சுற்றி வந்தாள். விடியும் முன்பே எழுந்து அவனுக்கு சமைத்து எடுத்து வைத்து…அவனுக்கு தேவையான எல்லாம் செய்து என…
மாமா காலைலயும் மதியமும் டைமுக்கு சாப்பிடுங்க.. டேப்லெட் எடுத்து வச்சிருக்கேன்… அதிகம் நடக்காதிங்க…எதுனாலும் ஆயாகிட்ட கேளுங்க… என எதாவது நிமிடத்துக்கு ஒரு தரம் சொல்லி கொண்டே இருந்தாள்.
இருளாயி பாட்டி கூடநான் இருக்கேன்ல நான் பார்த்துக்கிறேன் ராசாவ என சொல்ல…
தனாவிற்கே சலித்து போய் முதல்ல கிளம்புடி என சத்தம் போட.. அப்போதும் மாமா பத்திரமா இருங்க.. என சொல்லி அவனின் முறைப்பை வாங்கி கொண்டு தான் சென்றாள்.
காலை உணவை சாப்பிட்டு விட்டு டீவி பார்த்து கொண்டு இருந்தான் தனா. கொஞ்ச நேரத்திலேயே அவனுக்கு எழில் இல்லாது ஏதோ போல இருந்தது. எந்நேரமும் மாமா மாமா என நாய்குட்டிபோல பின்னாலயே திரிவாள். இப்ப வீடே வெறிச்சோடி போனது போல இருந்தது தனாவிற்கு…
அவளை பற்றி அசை போட்டு கொண்டு இருக்க… அதை கலைக்கவென பேக்டரி மேனேஜர் வந்தார்.
“குட்மார்னிங் சார்”
“குட்மார்னிங்.. சொல்லுங்க குமார் ”
“சார் ஜி எஸ் டி பைல் பண்ணனும் சார். அந்த பைல் உங்ககிட்ட தான் இருக்குனு கருணா சார் சொன்னார் இன்னைக்கு ஆடிட்டர் கிட்ட சப்மிட் பண்ணனும்” என சொல்ல..
விபத்துக்கு முன்பு அக்கௌன்ட் செக் பண்ண வீட்டுக்கு எடுத்து வந்து மேலே தங்கள் அறையில் வைத்தது ஞாபகம் வந்தது . மேலே செல்லவேண்டும். வேறு வழியின்றி தானே வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் ஒவ்வொரு படியாக மெல்ல ஏறி சென்றான்.
எங்கு வைத்தோம் என ஞாபகம் இல்லாமல் எல்லா கப்போர்டிலும் தேடினான். அப்படி தேடும்போது எழிலின் துணிகளுக்கு இடையே ஒரு டைரி இருப்பதை கண்டவன் என்ன இது என அதையும் பைலையும் தேடி இரண்டையும் எடுத்து கொண்டு கீழே வந்தான்.
மானஜேரிடம் பைலை கொடுத்து அனுப்பி விட்டு டைரியோடு
அறைக்கு வந்தான். டைரியை பிரிக்க முதல் பக்கத்தில் நட்ட நடுவே ஜெய் மாமா என்று பெரிய எழுத்தில் எழுதி இருந்தாள்.
அடுத்த பக்கத்தில்….
மார்ச் மாதம்
கடைசி எக்ஸாம் அப்பாடா முடிச்சிட்டா.. நாளைல இருந்து ப்ரீபேர்ட் தான். பத்மா கலையோட பாண்டி தாயம் அஞ்சாங்கல் எல்லாம் விளையாடனும். டிவி பார்க்கனும்.. தூங்கனும்..என நினைத்துக் கொண்டே எக்ஸாம் எழுதினேன். வீட்டுக்கு வந்து சாப்பிட்டு சீக்கிரம் தூங்கிவிட்டேன்.
அடுத்த நாள்
காலையிலேயே அம்மா என்ன எழுப்பி தாத்தா இறந்துட்டாராம் மலையனூர் போகனும்னு சொன்னாங்க.
என் ஆசையெல்லாம் புஷ்வானமாகிவிட்டது. இந்த தாத்தா லீவுல தான் சாககனுமா.. என எரிச்சலாக வந்நது.
நாங்க எல்லோரும் மலையனூர் போனோம். அம்மா தாத்தாவை பார்த்ததும் கதறி அழுதாங்க. யார் யாரோ வந்தாங்க பாட்டியையும் அம்மாவையும் கட்டி பிடிச்சு அழுதாங்க… நேரமாக ஆக எனக்கு பசிச்சுது.. யாருகிட்ட கேட்க என தெரியலை… பின்புற திண்ணைல உட்கார்ந்து இருந்த என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாங்க லட்சுமி அத்தை. அப்ப எனக்கு அவங்களை தெரியாது.
“பாப்பா.. உன் பேரென்ன..”
“எழிலரசி”
“முகம் வாட்டமா இருக்கு… பசிக்குதா…” என முகத்தை வாஞ்சையடன் தடவி கேட்க…
உதடு பிதுக்கி.. கண்களில் கண்ணீர் தேங்க…ஆமாம் என தலையாடட்டினேன்.
“பக்கத்து வீடு தான் அத்தை வீடு. வரயா… அத்தை சாப்பாடு கொடுக்கறேன்”
கண்களில் சாந்தமும் புன்னகை நிறைந்த முகத்தோடு அன்பாக பேசும் லட்சுமி அத்தையை பார்த்தவுடன் எனக்கு பிடித்திருந்தது.
“ம்ம்.. வரேன்” என தலையாட்டிய என்னை கூட்டிக்கொண்டு போனார் அத்தை. துக்கவீட்டிற்கு திரும்பவும் போகனும்ங்கறதால வீட்டுக்குள் போகாம பின்வாசலுக்கு தான் போனோம்.
அங்க தொழுவத்துல புசுபுசவென குட்டி குட்டி முடியோடு நல்ல ப்ரௌன் கலர்ல பெரிய முழியோடு அழகா இருந்தா செல்லா…
“இருளாயி.. இருளாயி.” என அத்தை குரல் கொடுக்க…
உள்ள இருந்து குள்ளமா கருப்பா பேருக்கு ஏத்த மாதிரி ஒரு கிழவி வந்துச்சு…
“ஏன் தாயி அதுக்குள்ள வந்திட்ட.. எடுத்திட்டாங்களா..” என்றது என்னை பார்த்து கொண்டே…
“பாப்பா யாரு தாயி”
“நம்ம கற்பகத்தோட புள்ள.. துக்கத்துல இவள யாரும் கவனிக்கல.. பசி போல வாட்டமா இருந்தா.. அதான் கூட்டிட்டு வந்தேன். சாதம் போட்டு எடுத்துட்டு வா”என அத்தை சொல்ல…
இருளாயி கொண்டு வந்து கொடுக்கவும் அத்தையே எனக்கு ஊட்டிவிட்டாங்க.. இப்ப எல்லாம் அம்மா எனக்கு ஊட்றதில்ல… அதனால எனக்கும் பிடிச்சிருந்துச்சு…
யாராவது வந்து போயிட்டு இருக்க என்ன கவனிக்க யாருக்கும் நேரமில்ல… அதனால நான் அத்தையை தேடி அவங்க வீட்டுக்கு போயிடுவேன்.
காரியங்கள் முடிந்து துக்கவீடு இயல்புக்கு திரும்புவும் பாட்டி தனியா இருப்பதால் தாத்தாவின் இழப்பில் இருந்து மீள்வதற்காகவும் என்னை அங்கேயே விட்டுட்டு போக சொல்லி எல்லோரும் சொல்ல.. அப்பாவும் சரி என்றுவிட்டார்.
தாத்தா இறந்தது சிக்ஸ்த் முடிந்து லீவ் என்பதால் செவன்த் அங்கேயே சேர்த்து விட்டு அப்பா அம்மா அண்ணனோடு ஊருக்கு போயிட்டாங்க…கொஞ்ச நாள் அம்மா விட்டுட்டு இருக்க கஷ்டமா இருந்துச்சு.

ஜீன் மாதம்

லீவ் முடிந்து ஸ்கூலுக்கு போனேன். புதுஸ்கூல் எல்லாம் புதுசு ஒருபயம்.. பாட்டிக்கு வயசாயிட்டதால ஏதோ அவங்க முடிந்தளவு செய்வாங்க.. அத்தகிட்ட சடை போட்டு கொள்ள போவேனா அப்ப தான் ஜெய் மாமா ஸ்கூலுக்கு கிளம்பிட்டு இருப்பாங்க..
அம்மாடி மாமா எவ்வளவு உசரம்..குட்டி மீசை வச்சுகிட்டு… சிரிக்கவே மாட்டாங்களா பார்க்க கொஞ்சம் பயமாயிருக்கும்.
மாமா ப்ளஸ்டூவாம்… நல்லா படிப்பாங்களாம்.. அத்தை சொன்னாங்க…
ஸ்கூலுக்கு போயிட்டு வந்ததும் அத்தை வீட்டுக்கு ஓடிடுவேன். பெரிய கண்ண உருட்டி உருட்டி பார்த்துகிட்டு என்ன பார்த்தும் துள்ளிகிட்டு என்னைசெல்லமா முட்டி விளையாடும் செல்லாகூட விளையாடி…ஹோம்ஒர்க முடிச்சிட்டு நானும் அத்தையும் முத்தத்துல படுத்துகிட்டு நட்சத்திரலாம் எண்ணுவோம்.
மாமா கோச்சிங் கிளாஸ் முடிச்சிட்டு வரதுக்குள்ள நான் வீட்டு வந்துடுவேன்.அத்தைகூட சாப்பிட்டு போனு சொல்வாங்க.. மாமா வந்துட்டா.. பயந்து ஓடி வந்துடுவேன்.
மாமா ப்ளஸ்டூ முடிச்சிட்டு மேல படிக்க குவாலியர் போயிட்டாங்க. ஜெய் மாமாவ பிரிஞ்சு அத்தையால இருக்க முடியல.மாமா தினமும் நைட்டு போன் பண்ணுவாங்க… இருந்தாலும் அத்தை புலம்பிட்டே இருப்பாங்க.. மாணிக்க மாமா கூட அத்தைய திட்டுவாங்க.
அதனால மாமவ பத்தி என்கிட்ட தான் நிறைய… நிறையா சொல்வாங்க… ஜெய் மாமாவுக்கு செய்ய முடியாத ஆதங்கத்தை எனக்கு செஞ்சு கொடுத்து தீர்த்துகுவாங்க..
எழிலின் சிறுவயதில் எழுதியதை படித்து கொண்டு இருந்தவன் போன் அடிக்கவும்.. போன் பேசிவிட்டு சின்னவயசுல ஏதோ பொழுது போகாம கிறுக்கி வச்சிருக்கா… என நினைத்து மேற்கொண்டு படிக்காம அங்கிருந்த கப்போர்டின் மூலையில் தூக்கி போட்டுவிட்டான்.
அவனுடைய துரதிர்ஷ்டம் அடுத்தடுத்த பக்கங்களை படிக்காமல் போனான். படித்து இருந்தால் எழிலின் காதலை தெரிந்து கொண்டு இருப்பான். பின்னாளில் எழிலை பிரிய நேர்ந்திருக்காது….

புள்ளி மேவாத மான் – 15 Read More »

error: Content is protected !!
Scroll to Top