தீயை தீண்டாதே தென்றலே -10
10 வழி எங்கும் பச்சைப் பசேல் என்று மரகதக் கம்பளம் போர்த்தியது போலப் பச்சை பயிர்கள். அதன் நடுவே ஓடும் வயல் நீர்நிலைகளில் நண்டுகளைப் பிடிக்க வெள்ளை நிறக் கொக்குகள். மரங்கள், மலைகள், வண்ணக் கிளிகள், குயில்கள் எனக் காண்பதற்கு இனிய காட்சிகளை எல்லாம் கடந்து வந்தது அந்த உயரக கார். சன்ஷேடைத் திறந்து வைத்துக் கொண்டு, கார் சீட்டின் மீது கம்பீரமாக அமர்ந்து வந்த பத்ரியைப் பார்த்து வயலில் வேலை செய்தவர்கள் வாயைப் பிளந்தனர். […]









