14- புயலோடு பூவுக்கென்ன மோகம்
வழக்கம் போல எழுந்த வீரா பக்கத்தில் பார்க்க நிகிதா இல்லை. என்னங்கடா இது இவ இவ்வளவு சீக்கிரமாவா எழுந்துட்டா..இருக்காதே…பெட்ல இருந்து புரண்டு கீழ விழுந்து கிடக்கிறாளோ.. என அவள் படுக்கும் பக்கம் எட்டி பார்த்தான்.அங்கும் அவள் இல்லை.
இங்க தான் எங்கயாவது இருப்பாள் என நினைத்து தோளை குலுக்கி கொண்டு.. குளியலறைக்கு சென்று தன் காலை வேலைகளை முடித்து கொண்டு ஜாகிங் செல்ல கீழே இறங்கி வந்தான்.
கிச்சனில் நிகிதாவின் குரலும் அம்மாச்சி குரலும் கேட்க…அங்கு சென்று பார்த்தவன் அதிர்ந்து போனான். அங்கு நிகிதா பாட்டியின் மேற்பார்வையில் ஏதோ சமைத்து கொண்டு இருந்தாள். குளித்து தலைமுடி ஈரம் சொட்ட.. கிளிப் போட்டு அப்படியே விட்டு இருந்தாள். புடவை வேற கட்டி இருக்க… அவளின் பிளவுஸ் அளவிற்கே வெட்டப்பட்டு இருந்த முடியில் நீர் சொட்டி.. சொட்டி.. பிளவுஸ் நனைந்து முதுகோடு ஒட்டி அவளின் உள்ளாடை தெரிய.. சுற்றி முற்றி யாராவது வேலைக்கார்கள் இருக்கிறார்களா.. என பார்க்க.. யாரும் கண் படும் தூரத்தில் இல்லை.
இவளை என பல்லை கடித்தவன் “ஏய்.. என்ன பண்ணிட்டு இருக்க.” என அவளருகே சென்றான்.
“வாங்க மாமா .. ஜாகிங் போகலையா..” முகத்தில் தவழும் புன்னகையுடன்..
வீராவை கண்டதும் பாட்டி “நிக்கி.. இதை பாரு.. நான் தாத்தா எழுந்துட்டாரு பார்த்து விட்டு வரேன்..” என வெளியே சென்றுவிட்டார்.
போகிற பாட்டியை பார்த்து “ம்ப்ச் இவளோட ரொமான்ஸா பண்ண போறேன்” என முணுமுணுத்தான்.
“என்ன மாமா சொன்னிங்க..”
“ஒன்னுமில்லை.. எதுக்குடி இப்படி ஈரம் சொட்ட கீழ வந்த.. பின்னால எல்லாம் நனைச்சு.. ஒரு மாதிரியா இருக்கு..”
“என்ன மாமா… ஒரு மாதிரி..”என தன் முதுகை திருப்பி பார்த்தவளுக்கு ஒன்றும் தெரியவில்லை.
எப்படி சொல்ல என தெரியாமல்.. இவர்களுக்குள் இன்னும் சாதாரண கணவன் மனைவிக்குள் இருக்கும் சகஜமான பேச்சு வரவில்லை. எட்டி அடுப்பை அணைத்தவன்..
“போடி.. போய் முதல்ல டிரையர் போட்டு காய வைத்துவிட்டு வேற பிளவுஸ் மாத்திட்டு வா”என சொல்லிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டான்.
வேகமாக தங்கள் அறைக்கு வந்தவள் கண்ணாடியில் பார்க்க.. அவன் சொன்னது புரிந்து மெல்லிதாக வெட்கம் வர சன்ன சிரிப்புடன் நெற்றியில் தட்டி கொண்டாள்.
அவன் சொன்னது போலவே செய்து கொண்டு கீழே வந்தவள்.. வீரா ஜாகிங் முடித்து கொண்டு வரவும் அவளே டீ போட்டு கொண்டு போய் கொடுத்தாள்.
டீயை கொடுத்து விட்டு அவன் முகம் பார்த்து கொண்டு நின்றாள். குடித்தவன் முகம் சுழித்து விட்டு டீபாய் மேலே வைத்துவிட்டான்.
ஒன்றும் சொல்லாமல் பேப்பர் படிக்க ஆரம்பித்து விட.. அந்த டீயை எடுத்து குடித்தவளின் முகம் அஷ்ட கோணாலானது. எடுத்து கொண்டு போய் சிங்கில் கொட்டியவளுக்கு தனக்கு ஒரு டீ கூட தயாரிக்க தெரியலையே என கழிவிரக்கம் கொண்டாள்.
என்ன ஆனாலும் நல்லா கத்துகிறோம்.மாமாவ அசத்தறோம் என தன்னை தேற்றி கொண்டாள்.
காலை உணவையும் பாட்டியின் மேற்பார்வையில் அந்த வீட்டின் ஆஸ்தான சமையல்காரம்மா கண்ணம்மாவின் உதவியோடு செய்து முடித்தாள்.
எல்லோருக்கும் அவளே பரிமாறவும் செய்தாள். ரொம்பவே சுமாராக இருந்த போதும்.. நிகிதா செய்தாள் என்றதிலேயே.. மகிழ்ச்சியோடு நன்றாக இருப்பதாக சொல்லியே சாப்பிட…அதிலும் வெங்கட்கு தன் பெண் பொறுப்பாக எல்லாம் செய்வதை கண்டு மனது நிறைந்து போக ஒரு பிடி சேர்த்தே உண்டார்.
ஆனால் யாருக்காக இத்தனை சிரத்தை எடுத்து செய்தாளோ.. அவன் ஒன்றும் சொல்லாமல் அமைதியாகவே சாப்பிட்டான். ஒன்றும் சொல்லவில்லை என்றாலும் அவளை கவனித்து கொண்டு தான் இருந்தான்.
எப்பவும் மேக்கப் கலையாமல்… உடை நலுங்காமல்.. இருப்பவள் வேர்த்து வடிந்த முகத்தை சேலை தலைப்பால் துடைத்து கொண்டு பரிமாறியவளையும்.. அவள் புறக்கையில் எண்ணெய் பட்டு கொப்பளித்து இருந்ததையும் கவனித்தான்.சமையல் அவளுக்கு புதுசல்லவா.. அதான் தெரியாமல் தாளிக்கும் போது எண்ணெய்யில் வேகமாக வெங்காயத்தை கொட்டிவிட.. அவள் புறங்கையில் மணிக்கட்டுக்கு சற்று மேலே எண்ணெய் பட்டு கொப்பளித்து ரணமாக இருந்தது.
இப்பவும் எதுவும் சொல்லாமல் சாப்பிட்டு விட்டு ஆபிஸ்கு கிளம்பிவிட்டான். நிகிதாவிற்கு மனம் வாடி போனது. நல்லா இல்வை என இரண்டு திட்டு திட்டி இருந்தால் கூட பரவாயில்லை என நினைத்தாள்.
சராசரி கணவர்களை போலவும் வேலை செல்லும் முன் யாரும் அறியாமல் சின்ன சின்ன.. சில்மிஷங்கள் செய்து சொல்லி கொண்டு செல்ல வேண்டும். வேலை முடிந்து வரும் போது பூ வாங்கி வரவேண்டும் அந்த பூவை சூடி அவன் முன் நிற்கும் போது அவன் கண்ணில் மையல் பார்வை இருக்க வேண்டும் என சின்ன சின்ன எதிர்பார்ப்புகள் அவளுக்குள் இப்போது எல்லாம்.
வீராவின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப… அவனின் எதிர்பார்ப்பை அறியாமலேயே நிகிதா தன்னை அவனின் எதிர்பார்ப்புக்குரிய மனைவியாக விரும்பியே மாறிக் கொண்டு இருக்க…
அவளின் காதலை கொண்டு அவள் அவனுடைய காதலை பெற.. அவள் அவனுடைய வாழ்க்கை முறைக்கு தன்னை பழக்கி கொள்வதை கூட உணர்ந்து கொள்ளாமல் அந்தஸ்து பேதம்… தன் இலட்சியம் என தேவை இல்லாததை மனதில் சுமந்து கொண்டு.. அவளை புரிந்து கொண்டு வண்ணமயமாக வாழ வேண்டிய வாழ்க்கையை சிக்கலாக்கி கொண்டு அவளை வருத்தி கொண்டு இருக்கிறான்.
நிகிதாவோ காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை எப்போதும் வீரா.. வீரா.. என அவனை சுற்றியே தன் எண்ணங்களை செலுத்தினாள். அவனுக்கு முன் எழுந்து குளித்து தயாராகி.. முன்பு எல்லாம் ஒருமணி நேரம் கண்ணாடி முன்பு நின்று தன்னை அலங்கரித்து கொள்பவள்.. அவள் சிந்தை முழுக்க அவனின் தேவைகளை நிறைவேற்றும் சேவைகளே ஆக்கிரமித்து கொள்ள .. குளித்து தலைமுடியை கிளிப்பில் அடக்கி பொட்டிட்டு கொண்டு.. அவன் அன்று உடுத்த வேண்டிய உடைகளை எடுத்து வைத்து விட்டு கீழே சென்றுவிடுவாள்.
அவனுக்காக சமைப்பது… பரிமாறுவது வாஷிங் சென்று வந்த அவன் துணிகளை அவனுடைய வார்ட்ரோப்பில் வைப்பது..அவனின் பாடி லோஷன் சோப் சேவிங் கீரிம் என அவன் வழக்கமாக உபயோகிக்கும் பொருட்களை தானே பார்த்து பார்த்து வாங்கி வைப்பது என..
இரவில் அவன் அணைக்க வேண்டும் என எல்லாம் நினைக்கமாட்டாள். தன் உரிமை என நினைத்து இவளே அவனை நெருங்கி அணைத்து கொண்டு குட்டி முத்தங்கள்.. பட்டும் படாமல் இதழ் தீண்ட…. அவனின் மார்பில் மூக்கின் நுனியை உரச.. மீசையை பிடித்து இழுக்க.. கன்னத்தை கடிக்க.. என ஏதாவது செய்து அவனை தவிக்க வைப்பாள். மனம் ஒத்து நெருங்கவும் முடியாமல்.. விலகவும் முடியாமல் ஒவ்வொரு இரவையும் போராடி கடந்தான்.அவனை விலகவே விடவில்லை நிகிதா.அவளின் சின்ன சின்ன காதல் சேட்டைகள் தாளாமல் அவனும் விரும்பியோ விரும்பாமலோ அது அவனுக்கே தெரியவில்லை கூடல் கொண்டான்.
அதுக்கு பிறகு அவள் நிம்மதியாக உறங்கி விட.. இவன் தான் தேவையில்லாத பலவற்றை நினைக்க.. மனம் உறுத்த தொடங்கி விடும்.
அவள் அவனை நெருங்க.. நெருங்க.. இவனுக்கோ மூச்சு முட்டுவது போல இருந்தது.இது எல்லாம் யாராலே தன்னால தானே.. அவளை தொடாமல் தள்ளியே நிறுத்தி இருந்தால் அவளும் தன்னை விட்டு ஒதுங்கியே இருந்திருப்பாள். பிடிக்காத புருஷன் என அவளும் வெறுப்புடன் இருந்திருப்பாள்.
கோபம் தன் மீதுதான்… என்ன ஆனபோதும் அவளோடு உறவாடி இருக்ககூடாது. அதனை தொட்டு அவள் மனசில் ஆசைகளை வளர்த்து இருக்ககூடாது.
அவள் கண்களில் அவனுக்கான ரசனையும்.. அவள் செயல்களில் அவளுடைய நேச மனதும் புரிய… தன் மேலேயே கோபம் கொண்டான்.
அதுவும் அவள் கைகளில் சூட்டு காயத்தை காணவும் மனதுள் சொல்ல முடியாத வேதனை.எப்படி இருப்பாள்.. குடிக்கும் தண்ணீர் கூட அவள் இருக்கும் இடம் தேடி வரும்.தனக்காக தான் என புரிகிறது என தெரிந்த போதும் அவள் தன்னால் கஷ்டப்படுவதாக நினைத்தான்.
அன்று ஆபீஸ் வேலையை முடித்து விட்டு அதே வளாகத்தில் இருக்கும் பேக்டரிக்கு ரவுண்ட்ஸ் சென்றான். இவன் வந்தது தெரியாமல் அங்கு வேலை செய்யும் இருவர்..
“டேய் புதுசா வந்தவனுக்கு வந்த வாழ்வை பார்த்தியா…”
“யாரைடா சொல்ற..”
“அதான் முதலாளி பொண்ணை கட்டி இருக்கானே.. அவன் தான்.. மாச சம்பளத்துக்கு வேலை செஞ்சுக்கிட்டு இருந்தான். அவனுக்கு அடிச்சது லக்கி ப்ரைஸ்… பணத்துலயே முக்குளிக்கிறான்”
“அவன் மாமனார் மட்டும் என்ன.. வேலைக்கு வந்தான். எப்படியோ முதலாளிய மயக்கி அவரு பொண்ணை கட்டி ஆண் வாரிசு இல்லாத சொத்துக்கு வாரிசாகிட்டான். இப்ப தன் அக்கா மவனையே கூட்டிட்டு வந்து அடுத்த வாரிசாக்கிட்டான்”
” இவனுங்களுக்கு அமைஞ்ச மாதிரி வாழ்க்க அமையனும் நமக்கு தான் இருக்குதே…” எனபொறாமையில் பெருமூச்சு விட்டனர்.
அவர்கள் பேச்சை கேட்டவனுக்கு ஆத்திரம். அவர்களை அடிக்கும் அளவுக்கு ஆத்திரம் வந்தது. ஊர் பேச்சு இதுவா தான இருக்கும். இது போல பேசுபவர்களை எல்லாம் அடிக்கவா முடியும். குடும்பத்தினர் கட்டாயத்திற்கு ஒத்து கொண்டு இருந்திருக்கவே கூடாது. தப்பு செய்து விட்டோம். யார் நான் சொன்னதை கேட்டார்கள். பிடிவாதமாக செய்து வைத்து விட்டு அவர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள். நான் தான் அவமானப் படுகிறேன் என மிகுதியான கோபத்தோடு வீடு வந்தான்.
வழக்கத்திற்கு சற்று முன்பாக வீடு வந்தவனை கண்டு தாத்தா..
“வீரா சீக்கிரமே வேலை முடிந்ததா.. ” என கேட்க.. பதில் சொல்லாமல் வேகமாக தங்கள் அறைக்கு சென்றுவிட்டான்.
கிச்சனில் வேலை செய்து கொண்டு இருந்த நிகிதாவிடம் பாட்டி “வீரா வந்துட்டான்.. டீ போட்டு… ரூம்ல இருக்கான் கொண்டு போ..”
நிகிதா டீ எடுத்து கொண்டு தங்கள் அறைக்கு சென்றாள். வீரா உடை கூட மாற்றாமல் கண்மூடி படுத்து இருந்தான்.
“மாமா.. டீ..”
அவளின் குரல் கேட்டும் அசையாமல் படுத்து இருந்தான்.
“மாமா டையர்டா இருக்கா.. டிரஸ் சேஞ்ச் பண்ணல.. டீ குடிச்சிட்டு படுத்துக்குங்க..”
அவளின் அக்கறை அவனின் அகத்தில் இருந்த கோபத்தை தூண்டி விட… எழுந்த வேகத்தில் அவள் கையில் இருந்த டீ கப்பை தட்டி விட்டான்.அது கீழே விழுந்து உடைந்து சிதறியது.
அவனின் இந்த கோபத்தை எதிர்பார்க்காத நிகிதா அதிர்ந்து கைகால் எல்லாம் நடுங்க..ஓரடி பின்னால் நகர்ந்து நின்றாள்.
அவளருகே அடிப்பதை போல வேகமாக வந்தவன்.. “என்னடி எப்ப பாரு மாமா.. மாமானுட்டு.. இளையற… பிடிக்காம தான கல்யாணம் பண்ண.. இப்ப என்ன.. காதல் பொங்கி வழியுதோ.. உன்னை பார்த்தாவே ஆத்திரமா வருது.. என் கண்ணு முன்னாடி நிக்காத.. இங்கிருந்து போ..”
இது நாள் வரை அவனை இவ்வளவு ஆக்ரோஷமாக அவள் கண்டதில்லை.
அவனுடைய கோபம் கண்டு பயந்த நிகிதா அதற்கு மேல் அங்கே நிற்காமல் கண்களில் கண்ணீருடன் கீழே வந்தவள் யாரும் அறியாமல் கண்ணீரை துடைத்து கொண்டு கிச்சனில் புகுந்து கொண்டாள்.
அவள் சென்ற பிறகு கோபத்தை கட்டுபடுத்த முடியாமல்.. சோபாவில் தலையை பிடித்து கொண்டு அமர்ந்துவிட்டான்.
இரவு உணவுக்கும் வீரா கீழே வரவில்லை. நிகிதா சென்று அழைக்க.. அவளை முறைத்த முறைப்பில்… எதற்கு இந்த கோபம் என குழம்பி போய் அமைதியாக வந்துவிட்டாள். தூங்கிவிட்டதாக குடும்பத்தினரிடம் சொல்லி சமாளித்துவிட்டாள்.
நிகிதாவும் ஏதோ சாப்பிட்டு விட்டு அவனுக்கும் கொஞ்சம் எடுத்து கொண்டு தங்கள் அறைக்கு சென்றாள். இப்போதும் சோபாவில் தலையை தாங்கி கொண்டு தான் அமர்ந்து இருந்தான்.
உணவை அங்கிருந்த டீப்பாய் மேல் வைத்தவள்.. அவனருகே செல்ல பயந்து கொண்டு சற்றே தள்ளி நின்றே…
“மாமா.. சாப்பிடறிங்களா..எடுத்துட்டு வந்துருக்கேன்” என்றாள் மெதுவாக..
நிமிர்ந்து உணவை பார்த்தான் அவளை பார்த்தான். மீண்டும் கண்களை மூடி கொண்டான்.
நல்ல சாப்பாடு தான் வேளைக்கு ஒரு தினுசு தான். ஆனால் அவனாக சமைத்த உணவு சுவை குறைவாக இருந்தாலும் அந்த உணவு அவனுக்கு அமிர்தமாக இருந்தது . ஆனால் இங்கு வந்த பிறகு சுவையான உணவாக இருந்தும் அவனுக்கு அது தொண்டையில் சிக்குவது போல தான் இருந்தது.
அவன் சாப்பிடுவதற்காக சற்று நேரம் நின்று பார்த்தவள்அவனின் அமைதி மேலும் பயத்தை கூட்ட.. புடவையை கூட மாற்றாமல் போய் படுத்து கொண்டாள்.
அவன் இவ்வளவு நாளாக மனதுள் போட்டு அழுத்தி வைத்திருந்தது எல்லாம் வெடித்து சிதற காத்திருக்கும் எரிமலையாக பொங்கி கொண்டு இருக்க…
சில மணிநேரம் கடந்தும் அவன் அதே நிலையிலேயே இருக்க..நிகிதா அவனையே பார்த்து கொண்டு உறங்காமல் படுத்து இருந்தவள்..எழுந்து அமர்ந்து மெல்ல…
“சாப்பிடலைனாலும் பரவாலை.. வந்து தூங்குங்க மாமா…” என அழைக்க…
அவ்வளவு தான் அவளுடைய அழைப்பில் உள்ளே புகைந்து கொண்டு எரிமலை வெடித்து சிதற…வேகமாக அவளருகே வந்தவன்.. குனிந்து அவளுடைம முடியை கொத்தாக பிடித்து இழுத்து..
“என்னடி இப்ப கட்டில்ல கட்டி பிடிச்சு உருளனுமா…இப்ப உனக்கு அது தான தேவை.. உன்னால என் நிம்மதி போச்சு.. சந்தோஷம் போச்சு.. எல்லாமே போச்சு.. உனக்கு உன் சுகம் தான் முக்கியம்..என்னைக்கு உன் கழுத்துல தாலி கட்டினேனோ.. அன்னைக்கே என் வாழ்க்கையே போச்சு..” என்றவன் அவளை படுக்கையில் தள்ளி விட்டு தன் சட்டையை கழற்றி எறிந்துவிட்டு.. அவளுடைய புடவையை வெறி வந்தவன் போல பிடித்து இழுக்க…
பயத்தில் நடுக்கத்துடன் நிகிதா”மாமா.. பின் குத்தி… இருக்கேன்…. புடவை… கிழிஞ்சிடும்..”
“ஆமாண்டி எனக்கு வாழ்க்கையே போச்சு.. உனக்கு சேல தான் முக்கியமா..” என்று அவளை ஆவேசமாக ஆக்ரமித்தான். ஏற்கனவே நடுங்கி கொண்டு இருந்தவள் அவனில் ஆவேசத்தில் உடல் தூக்கி போட.. அழுகை வெடிக்க..
“மாமா.. முடியல..விட்டுருங்க.. மாமா..”என அவனிடம் கெஞ்ச.. முதலில் அவனின் ஆவேசத்தில் அவளை கவனிக்கவில்லை. அவளை பேச விடாமல் அவளின் இதழை வன்மையாக இழுத்து கடித்து கொண்டு இருந்தவன் அவளின் எச்சில் நீரில் அவளுடைய கண்ணீரின் உவர்ப்பு சுவை கலக்கவும் தான். ..
தங்கள் நிலை உணர்ந்தான். எழுந்து அமர்ந்தவன் தலையில் அடித்து கொண்டான். தானா இப்படி என..
அவன் அவ்வாறு வருந்துவது பிடிக்காமல்.. பின்னால் அவனின் வெற்று முதுகில் தோள் சாய்ந்தவள்..
“நீங்க ஒன்னும் பீல் பண்ணாதிங்க மாமா.. எனக்கு ஒன்னும் இல்லை. கொஞ்சம் பயமா இருந்துச்சு.. அதான் அழுகை வந்திடுச்சு..”
அவளின் வார்த்தைகள் மனதை அறுக்க.. திரும்பி அவளை அணைத்து தட்டி கொடுத்து “தூங்கு ” என்றான்.
அவள் உடனே “நீங்களும் வந்து படுங்க..”என்கவும்.. அவனுக்கு இநத நேரத்திலும் லேசாக சிரிப்பு வந்திட.. அவளின் எண்ணம் புரிந்தவனாக.. அணைத்து கொண்டு படுத்தான்.
கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவள் வழக்காமான தன் காதல் சேட்டைகளை அரங்கேற்ற.. “மாமா.. வீரா மாமா..”
சீலீங் பேனையே வெறித்து பார்த்து கொண்டு இருந்தவன் அவளை சட்டை செய்யவில்லை.
“யோவ் வீரா மச்சான்..” என அவனை வம்பிழுக்க..
“அடிங் உனக்கு கொழுப்பாடி” என்றவனிடம்
“எனக்கு தூக்கம் வரலை” என ராகமிட..
அதற்கு மேல் அவளை அவனால் தள்ளி வைக்க முடியவில்லை. அவளை கட்டி அணைத்து இதழ் கவ்வி உயிரமுதம் பருக…அவனின் கைகளோ அவளின் மேனி எங்கும் உலாவ.. அதற்கு தடையாக இருந்த ஆடைகளை நீக்கும் பணியை செவ்வன செய்தான். அவளின் உடலெங்கும் இதழால் உலா வர.. அவள் உடலின் ரோஜா இதழின் மென்மை அவனை பித்தனாக்கியது. அணைப்பை இறுக்கினால் கூட அவளின் பாலில் கலந்த ரோஜா நிற தேகம் கன்றி சிவந்து விடுமோ.. என கவலை கொண்டு பூவையை கசக்காமல் மென்மையாக கைகளில் தாங்கி “அமுல் பேபி.. அமுல் பேபி..” என கொஞ்ச.. அவளோ “வீரா மாமா.. வீரா மாமா..” என பிதற்ற..
அவனின் இளமையோ கட்டுகடங்காமல் துடிக்க… மென்மையை விட்டு கொஞ்சம் வன்மையாக அவளை ஆட்கொள்ள.. முதலில் மிரண்டவள் தன் ஆணின் விருப்பம் அதுவென அறிந்து ஒத்திசைக்க.. தன் பெண்ணவளின் இசைவு அவனை கிறங்க வைக்க… காதல் போதை தலைக்கு ஏற… அவன் கடல் அலையாய் ஆர்பரிக்க.. அலையின் சீற்றம் தாங்காமல் துடித்து துவண்டு போனாள். அங்கு அழகான நிறைவான கூடல் நடந்தேறியது.அவளோ களிப்பிலும்.. களைப்பிலும் உறங்கி விட..
இவனோ உறக்கம் தொலைத்தான். ஒருவேளை அவள் அமைதியாக தூங்கி இருந்தால் அவனும் நிம்மதியாக தூங்கி இருந்திருப்பான். எல்லா புதுமண தம்பதிகள் எப்படி இருப்பாரோ அதை தான் நிகிதா வீராவிடமும் எதிர்பார்க்கிறாள் என வீராவுக்கு புரிய தான் செய்கிறது. அதற்காக அவள் அவனிடம் செய்யும் காதல் சேட்டைகளும் அவனுக்கு மேலும் ஒரு அழுத்தத்தை தான் கொடுத்தது. அவளோடு கூடி குழாவும் போது உணர்ச்சியின் பிடியில் இருப்பவன்.. எல்லாம் முடிந்து அவள் உறங்கி விட… இவனின் கொள்கைகள் இலட்சியம் எல்லாம் விழித்து கொள்ள.. இவன் தான் உறக்கம் தொலைத்து தவித்து போனான்.
இன்று இரவும் உறக்கம் தொலைத்தவன் வெகு நேரம் யோசித்து இனியும் இது போல இருக்கமுடியாது என தன் நண்பனுக்கு அழைத்து பேசியவன்.. உறங்காமல் விடியலுக்காக காத்திருந்தவன் விடியலுக்கு முன்பே வீட்டை விட்டு கிளம்பிவிட்டான் நிகிதாவை விட்டு அவளிடம் சொல்லாமல் கொள்ளாமல்..
வரம் வரும் தேவதையே..
வாழ்வாக வந்திட…
வாழ்வின் வசந்தமே
தன் தேவதையிடம் இருக்க..
கானல் நீரை வசந்தமே என..
தேவதையை புறக்கணித்து..
வாழ்வை துறந்து..
கிட்டாத வசந்தத்தை தேடி
இருக்கும் இடத்தை விட்டு..
இல்லாத இடம் தேடி செல்கிறான்
கிட்டாது என உணரும் போது
காலம் இவனுக்கு வைத்திருக்கும்
கோலம் என்னவோ..