உறவே உயிரே பிரியாதே – அத்தியாயம் ஒன்பது
உறவே உயிரே பிரியாதே – அத்தியாயம் ஒன்பது
உறவே உயிரே பிரியாதே – அத்தியாயம் ஒன்பது Read More »
உறவே உயிரே பிரியாதே – அத்தியாயம் ஒன்பது
உறவே உயிரே பிரியாதே – அத்தியாயம் ஒன்பது Read More »
19 ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரம்.. நாம் முதல்முறை நிவேதிதாவை பார்த்த அதே பப் தான்!! அன்றும் தங்கள் வார விடுமுறையை செலவழிக்கவென்று கும்பல் கும்பலாக மக்கள் குவிந்திருந்தனர். இணையுடனும்.. இணை இல்லாமலும்.. நண்பர்களுடனும் என்று வயது வித்தியாசமின்றி அனைவரும் தங்களை மறந்த ஆட்டத்தில் கொண்டாட்டத்தில் களித்து இருந்தனர். தமிழ் பாட்டு காதைக் கிழித்துக் கொண்டு இருந்தது… அதை விட அந்தப் பாட்டுக்கு நம்ம ஊர் ஆட்டத்தை ஆடிக்கொண்டிருந்தனர் அவ்வூர் மக்கள்.. என்னது?
எங்கு காணினும் நின் காதலே… 19 Read More »
15 – இத இதமாய் கொன்றாயடி
சாந்தம்மா வீட்டுக்கு வசந்தா வீறுக் கொண்டு சண்டைக்குச் சென்றார். சாந்தம்மா அப்பொழுது தான் கோவில் இருந்து வாசல்கதவைத் திறந்துக் கொண்டிருந்தாள். தனக்கு முன்னால் மூச்சு வாங்க வந்து நின்ற வசந்தாவைப் பார்த்ததும், தமிழ் சொல்லித் தான் சண்டைப் போட வந்திருக்கிறார் என புரிந்துக் கொண்டாள்.
வசந்தாவை கண்டுக் கொள்ளாமல் பூட்டைத் திறந்துக் கொண்டிருந்தாள். இதைப் பார்த்ததும் வசந்தாவிற்கு கோபம் சுரீரென்று உச்சிக்கு ஏறியது.
“ஏய் நில்லு…”என வசந்தா சத்தமிட்டார். அங்கு ஒருத்திக் கத்தி இருப்பதை கண்டும் காணாமல் உள்ளே போய் கதவைச் சாற்றிக் கொள்ள முற்றப் பெற்றாள்.
“ஏய்… நா ஒருத்தி கத்திகிட்டு இருக்கேன்… நீ என்னடான ஆருக்கோ வந்த விருந்தோ எம்ம சட்டைய செய்யாமல் உள்ள போயி கதவ பூட்டிக்கற பார்க்கறா…”
“வாடிம்மா… வாடி… உம்ம கண்டுக்காம விட்டுட்டா ஒழுங்கா போயிடுவனு பார்த்தா… நீ வரிஞ்சு கட்டிக்கிட்டு சண்ட போடவேனு வந்திருக்க போலிருக்குது…” எகத்தாளமாக சொன்னாள்.
“ஏண்டி… எம்மருகள பார்த்து என்ன சொன்னய…” வசந்தா எகிறிக் கொண்டுப் போனார்.
“ஊருல உலகத்துல பேசதா… நா பேசிப்புட்ட… என்னமோ எம்மகிட்ட சண்டக்கு வரா…” என வியாக்கினம் பேசினார்.
அதற்குள் கூட்டம் கூடிவிட்டது. எல்லோரும் இவர்களைச் சுற்றி நின்று வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தனர்.
“ம்மா… கோவில்ல அத்தன பேரும் சும்மா வேடிக்கை பார்த்தனர். நீ தான் பேசின… உம்மகிட்ட சண்டக்கு வராம… என்ன செய்ய…”
“உம்மருக மேல தப்பு இருக்குது… அத சொன்னதுக்கு எம்மகிட்ட மல்லு கட்டற…”
“எம்மருமக தான் தப்பு பண்ணினாங்கறதுகு என்ன சாட்சி…”
“இதுக்கெல்லாம் சாட்சி வச்சுகிட்டய ஆராவது தப்பு பண்ணுவாங்க… எல்லாம் காதும் காதும் வச்ச மாதிரி நடக்கும் ஆரு என்னத்த கண்டா…”
“ நா அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லனு சொல்றே… ஆரும் நம்பமாட்டறிங்களா… எம்மருமகள தப்பா பேசின வாய் புழுத்து போயிடும்…” என ஊர்ஜனங்களப் பார்த்து மண்ணை வாரி இறைத்துச் சாபமிட்டு விட்டு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க வீடு திரும்பினார்.
அவரைப் பார்த்ததும் தமிழ்,”வேகமாக போனிங்யே என்னாச்சு…” கேட்டான்.
“என்னத்த சொல்றது… நா எது சொன்னாலும் நம்பமாட்டறிங்களே…”
அதைக் கேட்டதும் மகிழ் தலை தலையாய் அடித்துக் கொண்டு அழுதாள். அவள் அழுவதைப் பார்த்ததும் தமிழ்,”உம்ம வயித்துல வளர்த்து ஆரு கொழந்தைனு உமக்கும் எமக்கும் தெரியும்… ஆருக்கும் உண்மய விளக்கவேணாம் புரிஞ்சுதா…”
அப்பொழுதும் அவள் அழுகை நின்றபாடில்லை.
“ஊரு உலகம் சொன்னா அத பிடிச்சுகிட்டு ஜனங்க நம்புவாங்க… உண்ம தெரிஞ்சா நமக்கு தெரியாதா…”
மகிழுக்கு அழுகைக் குறைந்திருந்தது. ஆனால் தேம்பியவாறே,”நாம என்ன சொன்னாலும் நம்பமாட்டறிங்களே…”
“நம்ப வேணாம்… கொழந்த பொறந்தா உண்ம தெரிஞ்சிட போவது…” கூறி அவளைத் தோளில் சாய்த்துக் கொண்டு ஆறுதல் கூறினான்.
வசந்தாவும் தமிழ் சொன்னதைக் கேட்டு கொழந்த பொறந்தா சரியாகிடும்… என ஆறுதலானார்.
அப்போதைக்கு மகிழ் ஆறுதல் ஆனாலும் குழந்தை தமிழ் ஜாடையில் பிறந்துவிட்டா சரி… மாறாக மகிழ் ஜாடையில் பிறந்துவிட்டால் என்ன செய்வது என உள்ளுக்குள் ஒரு பயம் இருந்தது. அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக நடமாடிக் கொண்டிருந்தாள்.
வசந்தாவும் மகிழும் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. தமிழ் ஒன்று தான் பகலில் வயலுக்கும் சாயங்காலம் உரக்கடைக்கும் போய் வருவான். தேவையில்லாமல் யார்கிட்டயும் பேசவேமாட்டான்.
அப்படி ஒருநாள் கடையில் இருக்கும் போது சதீஸ்,”ஏன்ண்ணா நீங்க முதல்ல மாதிரி கலகலப்பா பேசறத இல்லயே என்னாச்சு…” கேட்டான்.
அதற்கும் தமிழ் மௌனமாகவே இருந்தான். “உங்களுக்கு சொல்ல பிரியமில்லனு… சொல்ல வேணாமண்ணா…” என்று கூற… அதன் பிறகு தான் தமிழ் ஒருபெருமூச்சை இழுத்துவிட்டு சொல்லவே ஆரம்பித்தான்.
“உன்கிட்ட சொல்லறதுக்கு என்ன… மகிழ பத்தி ஒரு விஷயம ஊருக்குள்ள அரசல்புரசலா பேசறாங்க உனக்கு தெரியுமா…”
“தெரியும்ண்ணா… வாய் புளிச்சதோனு மாங்கா புளிச்சதோனு… ஜனங்க பேசுவாங்க… அதெல்லாம் லூசு விடுங்கண்ணா…”
“அத நீ நம்பறியா சொல்லு…” என கேட்டான். “ச்சே… ச்சே… நம்மக்கா பத்தரமாட்டு தங்கம்… அதுமட்டும் இல்லாம நா நம்பறளவுக்கு ஒன்னும் கேனப்பயனில்ல தெரிஞ்சுங்கோ…”
“எப்படி அந்த பழி சொல்ல மாத்தறதில்லனு தெரியமா… மண்டய ஒடச்சுக்க வேண்டியதா இருக்கு…” மகிழிடம் ஆறுதல் சொன்னவன் உள்ளுக்குள் எப்படி இந்த பழிச் சொல்லைப் போக்குவது என மிகவும் குழப்பத்தில் இருந்தான்.
“விடுங்கண்ணா… கொழந்த பொறந்தா தெரிஞ்சிட போகுது…” தமிழ் மகிழிடம் என்னச் சொன்னானோ அதையே சதீஸிம் தமிழிடம் சொன்னான். உடனே தமிழ்,’நா சொன்னது சரி தான் போல’என்று எண்ணி நிம்மதியடைந்தான்.
அதன் பிறகு சதிஸிம் தமிழும் ஒன்றும் பேசிக் கொள்ளவே இல்லை. வேலை முடிந்ததும் தமிழ்,”சரக்க உள்ள வைடா… நேரமாகுது கிளம்பலாம்…” சொன்னான்.
“இதோ எடுத்து வக்கறண்ணா…” என சதீஸ் சரக்கை உள்ளே எடுத்து வைக்க ஆரம்பித்தான்.
அவன் எடுத்து வைக்கும் வரைக்கும் காத்திருந்த தமிழ் எடுத்து வைத்தவுடன் கதவை அடைத்தான்.
தமிழ்,“சரி நீ பார்த்துப் போ…” சொல்லிவிட்டு தனது பைக்கை எடுத்துக் கொண்டுக் கிளம்பினான்.
வீடு எப்பவும் போல அமைதியாக இருந்தது. கொஞ்சநாளாகவே அப்படி தான் இருந்தது.
தமிழைப் பார்த்தும் வசந்தா உணவை எடுத்து வைத்தார். தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு தமிழ் உணவுமேஜைக்கு வந்தான்.
“ம்மா… மகிழ் சாப்பிட்டாளா…” தமிழ்க் கேட்டான்.
வசந்தா சலிப்புடன்,”ம்ம்ம்… சாப்பிட்டா… சாப்பிட்டா…” சொன்னார்.
“ஏம்மா… இவ்வளவு சலிப்பு ஏன்?…”
“என்னத்த… எம்ம சொல்ல சொல்ற… சாப்பிட கூப்பிட்டா வந்து பேருக்கு கொரிச்சு வச்சிகிட்டு போறா…”
“ஏம்மா… சரியா சாப்பிடறதில்லயா…”
“எங்க சாப்பிடறா… உடம்பே இளைச்சுகிச்சு பார்த்தியா… ஆஸ்பத்திரிக்கு போக இன்னும் எவ்வளவு நாளிருக்கு…”
“அடுத்த வாரம் போக வேண்டியது தான்…”
“உடம்பு தேறதுக்கு முதல்ல ஏதாவது சத்து டானிக்க கேட்டு வாங்கிட்டு வரணும்…”
“ம்ம்ம்… சரிம்மா…” பேசிக் கொண்டே மனைவி சாப்பிடவில்லையே என்ற கவலையில் தானும் சரியாக சாப்பிட்டாமல் எழுந்தான்.
போகும் தன் மகனையே கவலையுடன் பார்த்து, தானும் பேருக்கு சாப்பிட்டு விட்டு எழுந்தார். மொத்தத்தில் மகழின் கவலையில் மூவரும் சரியாக உணவு இறங்கவில்லை.
டாக்டர்கிட்ட போகும் நாளும் வந்தது. முன்பதிவு செய்துக் கொண்டு மூவரும் கிளம்பினர். அங்கு போய் எல்லா பரிசோதனையும் எடுத்துவிட்டு டாக்டரைப் பார்த்தனர்.
டாக்டர்,”என்னம்மா… நல்லாயிருக்கிங்களா…” என்று விசாரித்தார்.
அதற்கு மகிழும்,”நல்லாயிருக்கேன்… ஆனால் கொஞ்சம் டயர்டாக இருக்குது…” சோர்வாக பதில் சொன்னாள்.
“அப்படியா… கொஞ்சம் படுத்துக் கொள்… என்னனு பார்த்துவிடலாம்…”
சொன்னதுப் போலவே ஏறிப் படுத்துக் கொண்டாள். டாக்டர் பரிசோதித்துப் பார்த்துவிட்டு,”எடை குறைஞ்சிருக்கு… சத்தா எதுவும் சாப்பிடதில்லயா…” என்று் கேட்டார்.
“இல்ல… மனசுல கொஞ்சம் கவல அதான்…” என மகிழ் கூறினாள்.
“என்ன கவலயாயிருந்தாலும் கொஞ்சம் உடம்பயும் பார்க்கனுமில்ல… நீ நல்லாயிருந்தா வயித்துல வளரும் கொழந்தயும் நல்லாயிருக்கும்… கொஞ்சம் சத்துக்காக டானிக் எழுதி தரேன். அத வேளாவேளைக்கு கரெக்ட்டா சாப்பிட்டு அடுத்தமாசம் வா… தமிழ் நீங்க மட்டும் இருங்க கொஞ்ச தனியா பேசனும்…”
“ஏய்யா மருந்து வாங்கிட்டு இருக்கோம்…” வசந்தா சொல்ல… “சரிம்மா… மருந்து வாங்கிட்டு இருங்க… டாக்டரம்மாகிட்ட பேசிட்டு வரேன்…”
“வரேன் டாக்டர்…” மகிழும் வசந்தாவும் சொல்லிக் கொண்டுக் கிளம்பினர்.
இவர்கள் போனதும் டாக்டர் தமிழிடம்,”என்ன தமிழ் இது… இப்படி கவலப்பட்டு உடம்ப கெடுத்துக்கிட்டா பின்னால தாயும் சேயும் என்னால காப்பாத்த முடியாது. பிறகு என்கிட்ட வருத்தப்பட்டு ஒரு பிரயோசமில்ல… கொஞ்சம் பாத்து பத்திரமா வச்சுக்கோங்க…”
“சரி இனி மேல் இதுபோல ஆகாம பார்ததுக்கறேன்…” தமிழ் டாக்டரிடம் விடைப் பெற்றான்.
மருந்து எல்லாம் வாங்கிட்டு தமிழுக்காக காந்திருந்த இருவரையும் அழைத்துக் கொண்டு வீடுத் திரும்பினான். வீட்டிற்கு வந்த உள்ளே செல்ல இருந்த மகிழை தமிழ் தான்,”மகிழ் இங்க வந்து கொஞ்சம் உட்காரு… ம்மா நீங்களும் இங்க வாங்க…” இருவரையும் கூப்பிட்டு உட்கார வைத்தான்.
“இனிமேல் உமக்கு தன்ராஜை பத்தியும் ஊர பத்தியும் கவல இருக்ககூடாது…”
அதற்குள் மகிழ் இடையிட்டு,”நா எதப் பத்தியும் கவலப்படாம இருக்கமுடியாதே…”
“அவனயும் ஊர பத்தியும் கவலப்படாம நம்ம கொழந்த எப்படி வயித்துல வளருதுனு நனச்சுக்கோ… பிரசவம் நல்லப்படியா நடக்கனும் அந்த ஆயாவ கூம்பிடு… இதமட்டும் உம் மனசுல இருக்கனும்…”
மகிழும் சம்மதம் எனஅரைகுறையாக தலையாட்டி வைத்தாள். பிறகு வசந்தாவிடம் திரும்பி,”ம்மா… இவ கொஞ்சம் கவலப்பட்டாலும் இவள திசை திருப்பி சந்தோஷமா வச்சுக்க வேண்டியது மட்டுமில்லாம சத்துள்ள ஆகாரமாம கொடுக்க வேண்டியது உம் பொறுப்பு… நா இவளுக்கு வேளாவேளைக்கு மாத்திரமருந்து கொடுக்க வேண்டியது எம் பொறுப்பு…” என மூவரும் வேலையைப் பிரித்து எடுத்துக் கொண்டனர்.
அதன்படி இருவரும் மகிழுக்கு தன்ராஜிப் பற்றியும் ஊரைப் பற்றியும் கவலைப்பட நேரமில்லாமல் பார்த்துக் கொண்டனர். மாதங்கள் உருண்டோடியது. ஏழாம் மாதம் பிறந்தது. வளைகாப்புக்கு தேதி குறிக்கப்பட்டு வீட்டோட வைத்தனர்.
தமிழுக்கு வளைகாப்பை ஊரைக் கூட்டி வெகுவிமரிசையாக கொண்டாடவேண்டும் என்ற ஆசை. ஆசை என்று சொல்வதைவிட கனவு என்று தான் சொல்லவேண்டும். ஆனால் ஊரில் உள்ளவர்கள் வந்து சாப்பிட்டு விட்டு வாழ்த்திவிட்டாப் போவார்கள். வெறும் வாயை மெல்ல முடியாமல் மகிழை ஜாடைமாடையாக பேசுவார்கள். அதைக் கேட்டு மகிழ் மனம் சங்கடப்படுமே என்று நினைத்து பேசாமல் இருந்துக் கொண்டான்.
நெருங்கிய உறவினர்கள் சிலப் பேரையும் அழைத்தனர். வளைகாப்பில் ஐந்து பெண்மணிகள் மட்டும் வளையல் போட்டுவிட்டனர். வளைகாப்பை வீட்டோடு முடித்துக் கொண்டனர். மகிழுக்கு திருஷ்டி கழித்து அவள் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.
மகிழ் இல்லாத வீடு வெறிச்சோடிக் கிடந்தது. வசந்தாவும் தமிழும் மகிழோட இருந்துவிட்டு மகிழை அனுப்பி வைத்துவிட்டு ஒருநாள் கூட அந்த வீட்டில் தனித்து இருக்க முடியாமல் தவித்துப் போயினர். விடிந்ததும் அம்மா மகன் இருவரும் மகிழ் பிறந்த வீட்டுக்கு நடையைக் கட்டிவிட்டனர்.
ஆண்கிளி தன் பேடைய காண…
சிறகை விரித்து பறந்து செல்ல…
பேடையோ தன்னை மறந்து…
ஆற்றவாரின்றி சோகத்தில் இருக்க…
ஆண்கிளியோ ஆறுதல்படுத்த…
பேடையோ தன் இணையை கண்டு…
ஆறுதல் அடைந்தது…!
15 – இத இதமாய் கொன்றாயடி Read More »
22கணவன் ஸ்ரீ அவர்களுடன் போகவில்லை.. டிவியில் கார்ட்டூன் போட்டுவிட்டு ஹோம் ஒர்க் செய்துகொண்டிருந்தான்அது தகப்பனை போல பொறுமையுள்ள சமர்த்து குட்டி. மகி அவனுக்கு அடிக்கடி ஸ்னாக்ஸ் கொடுத்து கவனித்தவாறே வீட்டு வேலைகளை கை செய்தாலும் மனம் பூரா மகளிடமிருந்தது. மனம் சுழித்த மாதிரி முகமும் கூம்பிப்போனது. என்ன செய்வான்? ஏது செய்வான்? உறவு கொண்டாடி பிள்ளை மனதை குழப்புவானோ? அஜுக்கு எதுக்கு இந்த வீண் வேலை? சட்டப்படி எல்லாம் கட் பண்ணியாச்சு.. இதென்ன புது தொடர்பு? இவளுக்கு
அத்தியாயம் 11 நேரே ரணவீரனிடம் மூச்சிறைக்க ஓடிய மல்லி, “மன்னா! மன்னா! இளவரசியார் விஷமருந்தி விட்டார். தயவு கூர்ந்து அவருடைய உயிரை காப்பாற்றுங்கள்” என்று கூற, “என்ன? விஷமருந்தி விட்டாளா? அங்கதா! ராஜ வைத்தியரை வரச்சொல்லி உடனே தகவல் அனுப்பு.” என்று உத்தரவிட்டவாறே பூவிழியாழைக் காண விரைந்தான் ரணவீரன். இங்கே விருந்தினர் மாளிக்கைக்கு வெளியே வந்து நின்று கொண்டிருந்த பூவிழியாழ், “என்ன இது? விஷம் சாப்ட உடனே வாயில் நுரை
இரகசிய மோக கனாவில் 11 முதல் 14 வரை Read More »
அத்தியாயம் 7 “இப்ப எதுக்கு என்னைய பட்டுவேட்டி சட்டைல வரச்சொல்லிருக்க? திரும்பவும் எனக்கு பொண்ணு ஏதாவது பார்த்து வைச்சுருக்கியா?” “ஆமாண்டா! ஒருத்திக் கூடவே இன்னும் குடும்பம் நடத்த ஆரம்பிக்கல. இதுல இன்னோன்னு வேறயா உனக்கு?” “அய்யா கெப்பாசிட்டி அப்படி. எத்தனை வேணாலும் மெயிண்டெயின் பண்ணிக்கலாம்.” என்று ராக்கி பேசிக் கொண்டிருக்க, அவன் வாங்கிக் கொடுத்த பட்டுப்புடவை கட்டி நகைகளை அணிந்து கொண்டு கோவிலில் குழுவிருக்கும் அம்மனைப் போல் மாடியில் இருந்து இறங்கி வந்த
இரகசிய மோக கனாவில் 7முதல் 10 வரை Read More »
18 வெற்றி நடை போட்டு வெற்றியை விட்டு பிரிந்து சென்றாள் நிவேதிதா!! ஆனால் அவள் மனதிற்குள்ளே பெரும் பாரம்.. அது அவனை பிரிந்ததினால் அல்ல.. பாவைக்கு அவன் மீதான காதலினால்.. ஆம்!! காதலே தான். எங்கே? எந்த புள்ளியில்? அந்த காதல் பற்றி கொண்டது என்று கேட்டால் அவளுக்கு தெரியாது!! காதலில் பொது விதியே அது தானே!! எப்போது யார் மீது யாருக்கு தோன்றும் என்று யாரால் கணிக்க முடியும்??
எங்கு காணினும் நின் காதலே… 18 Read More »
உறவே உயிரே பிரியாதே – அத்தியாயம் எட்டு
உறவே உயிரே பிரியாதே – அத்தியாயம் எட்டு Read More »
உறவே உயிரே பிரியாதே – அத்தியாயம் ஏழு
உறவே உயிரே பிரியாதே – அத்தியாயம் ஏழு Read More »