ATM Tamil Romantic Novels

தொடர் கதை

எங்கு காணினும் நின் காதலே… 16

  16     நிவேதிதாவை அனுப்பி வைத்து விட்டு காரில் சாய்ந்த நின்றவனின் காதுகளில் ரீங்காரமாய் நீங்காமல் ஒலித்துக்கொண்டிருந்தது அவளின் வார்த்தைகள்!! அதிலும் அந்த மாமிச மலைகள் சொன்னதாக அவள் சொன்ன வார்த்தைகள்.    உண்மைதானே!! அன்று இவனே அவளை அப்படித்தானே பஞ்சாயத்தார் முன்னிலையில் சொல்லி வழக்கை திசை திருப்பி விட்டான். இன்று மற்றவர்கள் சொல்லும் போது ஏனோ வலித்தது. அதுவும் அவள் நிலையில் இருந்து பார்க்கும்போது இன்னுமே வலித்தது வெற்றிக்கு!!     வெளிநாட்டில் […]

எங்கு காணினும் நின் காதலே… 16 Read More »

இரகசிய மோக கனாவில் 4

அத்தியாயம் 4   “வணங்குகிறேன் இளவரசியாரே!” என்று வாயிற் காவலன் வரவேற்க, அவனிடம் ஒரு பார்வையை செலுத்திவிட்டு மாளிகையின் உள்ளே சென்றாள் ஆருஷா.    ‘அடியேய் ஆரு! நீ ஒரு கராத்தே மாஸ்டர்னு எல்லோரும் நினைச்சுட்டு இருக்காங்க. ஆனா நீ சாதாரண புரோட்டா மாஸ்டர்னு எனக்கு மட்டும் தானே தெரியும். அவ்வ்வ்வ்..’ என்றவள் மனசாட்சி உள்ளுக்குள் புலம்ப, வெளியே கம்பீரமாக நடந்து வந்தாள். தன் அருகே நடந்து வந்து கொண்டிருந்த மல்லியிடம் மெல்லிய குரலில்,   “மல்லி?”

இரகசிய மோக கனாவில் 4 Read More »

எங்கு காணினும் நின் காதலே… 15

15     நிவேதிதாவை இடைமறித்த இரு ஆட்களும் அவளை ஆட்டோவில் தள்ளி அங்கிருந்து பறக்க.. “டேய் யாருடா நீங்க எல்லாம்? எங்கடா கடத்திட்டு போறீங்க? நான் யாருனு தெரியுமா? எங்க பெரியப்பா யாருன்னு தெரியுமா? எங்க அண்ணனுக்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சது உங்களை எல்லாம் பாண்டி கோயிலுக்கு பிரியாணி ஆக்கிடுவாருடா.. ஒழுங்க என்னை விட்டுட்டு ஓடி போய்டுங்க!!” என்று அந்த மாமிச மலையை தாக்க முடியாமல் வார்த்தைகளால் அவனை தாக்கி கொண்டிருந்தாள்.    

எங்கு காணினும் நின் காதலே… 15 Read More »

இரகசிய மோக கனாவில் 3

அத்தியாயம் 3   “நாதா! இப்போது என்னை எங்கு தூக்கிச் செல்கிறீர்கள்?” என்றவளை தனது கட்டிலில் தூக்கிப் போட்டவன்,   “இங்க தான்; இதுக்கு தான்.” என்றவன், அவளை நெருங்கும் போது மற்றொரு பெட்டியில் இருந்த வேலுநாச்சியார்,   “எப்பா என்ன ஒரு புழுக்கம்? இன்னும் கொஞ்ச நேரம் உள்ளே இருந்திருந்தேனா மூச்சு முட்டி செத்தே போயிருப்பேன். ஏன்டி ஆரு! நீ மட்டும் வெளியே வந்துருக்க, என்னையவும் வெளிய கூப்பிடணும்னு தோணுச்சா? உன் காரியம் முடிஞ்ச உடனே

இரகசிய மோக கனாவில் 3 Read More »

எங்கு காணினும் நின் காதலே… 14

14   இளங்காலை வேளை.. அவர்கள் வீட்டின் கொல்லைப்புறத்தில் இருந்த மரங்களின் நடுவே நடந்து கொண்டிருந்தாள் நிவேதிதா!! அவள் மனம் முழுக்க குழப்பங்கள் மேகங்களாக சூழ்ந்து மழையென பொழிந்துக் கொண்டிருந்தது.     தந்தையின் இந்த திடீர் விஜயம் தன்மேல் உள்ள பாசத்தினால் என்று தெரிந்தாலும் அதற்கு மேலே ஏதோ ஒன்று இருக்கிறது என்று அவளுக்குப் புரிந்தது. சாதாரணமாக இருக்கும்போது கூட அவளையே கண்களால் தொடர்ந்து கொண்டிருந்தார் மேகநாதன். சிறிது நேரம் அவள் வீட்டில் இல்லை என்றாலும்

எங்கு காணினும் நின் காதலே… 14 Read More »

14 – இத இதமாய் கொன்றாயடி

14 – இத இதமாய் கொன்றாயடி

வேலாயுதமும் மந்தாகினியும் தலைப்பொங்கலுக்கு அழைக்க வந்தார்கள். வசந்தாவும் தமிழ்த் தம்பதிகளும் வந்தவர்களை வரவேற்று காபி கொடுத்து உபசரித்தனர். அவர்கள் அழைத்துவிட்டு விருந்தாடி விட்டு புறப்பட்டுச் சென்றனர்.

தமிழ் தம்பதியர் உள்ளுரில் இருந்த போதும் பொங்கலுக்கு இரண்டுநாட்கள் முன்னாடியே வேலாயுதம் வீட்டுக்குச் சென்றனர். இவர்களைக் கண்டதும் வீட்டில் இருந்த மந்தாகினி,”வாங்க… நீங்க வந்தால் சாப்பிடுவதற்கு பலகாரம் வேணுமே… அதான் உங்க மாமா டவுன் கடையிலே வாங்கிட்டு வர போயிருங்கிறாங்க…”

“ஏன்மா… நீ வீட்டில் ஏதும் பண்ணலயா…” என்றாள் மகிழ்.

அதற்கு மந்தாகினி,”நா அதிரசம்,முறுக்கு, சீடை எல்லாம் செய்திருக்கேன். இருந்தாலும் மனசு ஒப்பாம புது தினுசா பலகாரம் வாங்க டவுனுக்கு போயிருக்காங்க வந்திடுவாங்க… மாப்பிள்ளய கூட்டி போயி உன் ரூம்ல போயி ரெஸ்ட் எடுங்க…”

“சரி…” என்று சொல்லிவிட்டு உள்ளறைக்குச் சென்றாள். மந்தாகினி அப்போது தான் ஞாபகம் வந்தவளாக,”ரூம்ல மாப்பிள்ளகு மாத்துடைய வாங்கி வச்சிட்டு போயிருக்கிறாங்க உன் அப்பா… அத எடுத்து கொடுத்து மாப்பிள்ளய மாத்திக்க சொல்லு…”

மகிழும் அன்னை சொன்னப்படியே தமிழுக்கு புதுக் கைலியை எடுத்துக் கட்டிக்கச் சொன்னாள். அதற்குள் வேலாயுதமும் வந்துவிட்டார்.

அறைக்கே வந்து,”வாங்க மாப்பிள்ள… நீங்க வரதுக்குள்ள டவுனுக்கு போயிட்டு வந்திடனும் நனச்சேன்…அதங்காட்டி தாமசமாகிவிட்டது மன்னிக்கனும்…”

“அதுக்கெல்லாம் எதுக்கு மன்னிப்பு கேட்கறிங்க மாமா…”

“விடுப்பா… அவர் உன் மாப்ள தானே… மன்னிப்புங்கற பெரிய வார்த்தை எல்லாம் பேசிகிட்டு…”

“சரிம்மா… நா பட்டாசலைல இருக்கேன். நீங்க கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க…” சொல்லிச் சென்றார்.

பொங்கல் நாள் விடியற்காலையில் இருவருமே எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து கொண்டனர். இவர்களுக்கே முன்னாலே மந்தாகினி குளித்து முடித்து வாசலில் பொங்கல் வைத்துக் கொண்டிருந்தார்.

“ம்மா… ம்மா…” அழைத்தபடியே மகிழ் வந்தாள். புத்தாடை அணிந்து வந்த மகளை கண்ணாரக் கண்டு,”எம்படே கண்ணே பட்டு விடும் போல இருக்கு… அம்புட்டு அழகாக இருக்கே…” சொல்லி திருஷ்டி கழித்தார்.

“போம்மா… எமக்கு வெட்கமா இருக்கு…” வெட்கப்பட்டுக் கொண்டே சொன்னாள்.

“மாப்ள எங்க ஆளயே காணோம்…” மகிழை விசாரித்துக் கொண்டிருக்கும் போதே தோளில் ஒருகட்டு
கரும்பையும் மஞ்சள்கிழங்கையும் சுமந்து வந்தான்.

“என்ன மாப்ள… உம்மை ஆரு இத கொண்டு வர சொன்னது… உம்மை கொண்டு வர சொல்லிட்டு இந்த மனுசன் எங்க போனாரு…” தன் கணவரை நொடித்துக் கொண்டார்.

“நா செத்த காணலயா… எம்ம தலயா போட்டு உருட்டுவ…” திட்டியபடியே வந்துச் சேர்ந்தார் வேலாயுதம்.

மந்தாகினி “நா சும்மா ஒன்னும் வசவு பாடல… மருமகனய இதெல்லாம் கொண்டு வர சொல்லிட்டு நீரு எங்க போனிரூ…” கேட்டாள்.

அதற்கு தமிழ்,”அயித்த… நம்ம தோட்டத்துல இதெல்லாம் வெளைஞ்சது… அதான் கொண்டு வந்தேனு… மாமாவ வய்யாதிங்க…” என்றான். மருமகன் இப்படி சொன்னப் பிறகு மந்தாகினி அமைதியாகிவிட்டாள்.

பொங்கலும் கிழக்குப் பார்த்து பொங்கி வர எல்லோரும்,”பொங்லோ… பொங்கல்…” என வாழ்த்தி வரவேற்று
மகிழை புதுப்பானையில் புத்தரிசியை இடச் சொல்லி அவளும் அதே மாதிரியே செய்தாள். பொங்கலும் தயாராகிவிட்டது. மஞ்சகொம்பைக் கட்டி, படையல் போட்டனர். படையலும் போட்டு மந்தாகினி பரிமாற மூவரும் அமர்ந்து விருந்துண்டனர். பொங்கல் விழா இனிதாக நிறைவுப் பெற்றது.

மேலும் இரண்டு நாட்கள் தங்கிவிட்டு எத்தனையோ கவலைகள் இருந்தாலும் அங்கிருந்த நாட்களெல்லாம் அதையெல்லாம் மறந்துவிட்டு மிகவும் மகிழ்ச்சியாக இருந்துவிட்டு தங்கள் வீட்டுக்கு கிளம்பினர். இதற்காகவும் நேரம் கிடைக்கும் பொழுது வந்து தங்கிவிட்டு போகவேண்டும் என நினைத்தனர்.

வீடு வந்தப்பிறகு கூடந்த போன் கால்வரும் வரை இருவரும் அதே சந்தோஷத்துடன் இருந்தனர். மகிழ் போன்அடிக்கவும் எண்களைப் பார்த்துவிட்டு அது தன்ராஜ் எண் என போன்காலைத் துண்டித்துவிட்டாள்.
துண்டித்த பிறகும் அவன் ஓயாமல் போன் பண்ணினான். ஒருகட்டத்தில் மகிழ் போனை அணைத்து வைத்துவிட்டாள்.

போனை அணைத்தது தெரிந்த பிறகு தமிழ் போனுக்கு முயற்சி செய்தான். மகிழ் மாதிரி அல்லாமல் முதல் தடவையே செய்த போது எடுத்துவிட்டான்.

தமிழ் எடுத்த எடுப்பிலயே,”இப்ப உமக்கு என்னடா வேணும் பரதேசிநாயே…” கோபத்துடன் பேசினான்.

“மருவாத… மருவாதய பேசு… வாடா போடா பேசின நல்லாயிருக்காது ஜாக்கிரதை…” என்றான்.

தமிழ்,“உமக்கெல்லாம் மருவாத ஒருகேடா…” இவனுக்கு மரியாதையெல்லாம் ஒருகேடு என நினைத்தவாறே பேசினான்.

அதே எத்தாளத்துடன் தன்ராஜிம்,”என்ன உனக்கும் உன் பொஞ்சாதிக்கும் பயம் அத்து போச்சுல… உனக்கு போன் பண்ணினா மருவாதயில்லாம பேசற… உன் பொஞ்சாதி என்னடா என் நம்பரை பார்த்து கட் பண்ணறா… என்ன தன்ராஜ கண்டு பயம் அத்து போச்சா…” மிரட்டினான்.

“ஆரு உம்ம கண்டு எமக்கு என்ன பயம்… உமக்கு வாங்கின அடியெல்லாம் பத்தாது… இன்னும் செமத்தியா வாங்கினா தான் அடங்குவ…”

தன்ராஜிம் வாய்க்கு வாய் பேசினான். ஒருகட்டத்தில் தமிழ் இவனை பொறுக்கமாட்டாமல்,”வாய மூடுடா…” சொல்லி போனை அணைத்து வைத்துவிட்டான்.

மகிழ் அறையை விட்டு வெளியே வந்து தன் கணவர் போனிலே யாருடன் இவ்வளவு சத்தமாக பேசிக் கொண்டிருக்கிறார் என அறியும் பொருட்டு,“ஆருங்க போன்ல இத்தன சத்தமா ஏசறிங்களே…”

அதற்கு தமிழும்,”வேற ஆரு… எல்லாம் அந்த வீணாப்போன தன்ராசு தான்… அவன தவிர ஆரு நமக்கு போன் பண்ணி இப்படி குடச்சல் கொடுக்கறது சொல்லு…” மிகுந்த எரிச்சலுடன் சொன்னான்.

“எமக்கு போன் பண்ணினான். நா எடுக்கவே இல்லிங்காட்டியும் உமக்கு போன் செய்திருக்கான். வாய்ய கொடுத்து வாங்கி கட்டிகிட்டான்ல… அவனுக்கு இதுவும் வேணும்… இன்னமும் வேணும்…” மகிழ் சொன்னாள்.

அவள் இப்படி பேசவும் புண்ப்பட்ட மனதிற்கு புனுகு வைத்து தடவியது போல அவனுக்கு இருந்தது. அவன் சமாதானமாக அதுவே போதுமானதாக இருந்தது.

மூன்றுமாதம் கழித்து ஒருநாள் காலையில் மகிழ் வெறும் வயிற்றில் வாந்தி முற்றத்தில் எடுத்தாள். அடுத்த முறை வசந்தாவைப் பிடித்துக் கொண்டு வாந்தி எடுத்தவுடன் அவள் தள்ளாடிபடியே கீழே விழப் போனாள்.

வசந்தாப் பிடிக்கமுடியாமல் தடுமாறியபடியே,”ஏப்பா தம்பி… வந்து இவள கொஞ்சம் பிடி ராசா…” என சத்தம்ப் போட்டார்.

தங்கள் அறையில் உறங்கிக் கொண்டிருந்த தமிழ் வசந்தா கத்திய சத்தம் கேட்டு முற்றத்துக்கு ஓடி வந்து மனைவியும் தாயையும் தாங்கிப் பிடித்தான். “பார்த்தும்மா… மொதல்லவே எம்மய கூப்பிட்டுருக்காமல…” தாயைக் கடிந்துக் கொண்டான்.

தமிழ் கைத் தாங்கலாகவே மனைவிக்கு முகம் கழுவ வைத்து பின்னர் தோள்களில் சாய்த்தப்படியே அவளை அழைத்து வந்து சோபாவில் அமர வைத்தான். அதற்குள் வசந்தாவும் வெந்நீர் கொண்டு வந்து கொடுத்தார். அதை கையில் வாங்கி குடிக்கும் அளவிற்கு அவளுக்கு சக்தியில்லை. அவள் கை நடுங்கவும் தமிழ் வெந்நீரை தன் கையால் வாங்கி குழந்தைக்கு புகட்டுவது போல கொஞ்ச கொஞ்சமாக புகட்டினான்.

பின்னர் வசந்தா நாடியைப் பார்த்து,”ஏய்யா ராசா… நம்ம கொலம் தலக்க போகுது…” மகிழ்ச்சியுடன் சொன்னார்.

தமிழ் ஓடிப் போய் சீனிடப்பாவை எடுத்து வந்து வசந்தாவிற்கும் மகிழுக்கும் ஊட்டினான். அதை மகிழ் வெட்கப்பட்டவாறே வாங்கிக் கொண்டாள்.

“நீயும் கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கோ… வாந்தியெல்லாம் எடுத்து சிரமப்பட்டுட்டா…” தமிழ் கூறி அவளை அணைத்தப்படியே தங்கள் அறைக்கு அழைத்து வந்து படுக்கையில் படுக்க வைத்து கழுத்து வரை போர்வையை போர்த்திவிட்டான்.

மகிழுக்கு முதல் இரண்டு மாதங்கள் மட்டுமே மசக்கை இருந்தது. மூன்றாம் மாதம் பிறந்தவுடன் தெளிந்து எப்பவும் போல அவள் வேலையைச் செய்தாள். ஆனால் மகிழ் வெளியே எங்கும் செல்வதில்லை. அவள் வெளியே வராததினால் தன்ராஜ் தன்னைக் கண்டு பயந்துவிட்டாள் என நினைத்துவிட்டான்.

மேலும் இரண்டு மாதங்கள் சென்ற பிறகு அவளுக்கு ஐந்து மாதங்களான பின்பு முதன்முதலில் தமிழ் மகிழைக் கோவிலுக்கு அழைத்துச் சென்றான். அவள் சற்றே மேடிட்ட வயிறைப் பார்த்த எல்லோரும் வாயைப் பிளந்தார்கள். அவள் வெளியே வராததால், ஜனங்களும் தன்ராஜ்க்கும் அவளுக்கும் தன்ராஜ் சொன்னதை நம்பி அவர்கள் வீடு தேடி போய் பார்க்காததினால் அவள் கர்ப்பம் என தெரியவில்லை.

தமிழ் கோவிலில் மகிழ் பெயரில் அர்ச்சனை செய்துவிட்டு பிராகரத்தைச் சுற்றி வந்தார்கள். மக்கள் அங்கங்கு நின்றுக் கொண்டு அவள் கர்ப்பத்துக்கு காரணம் தன்ராஜ் தான் என இவர்களைப் பற்றி தவறாகப் பேசினார்கள். அதுவும் இவர்கள் காதுப்படவே பேசினார்கள்.

மீண்டும் மகிழ் என்ன இப்படி பேசுகிறார்கள் என மனம் உடைந்து கண்ணீர்விட்டாள். இவளுடைய கண்ணீரைப் பார்த்து தமிழுக்கு ஜனங்களை வெட்டிப் போடும் ஆத்திரம் வந்தது.

அவர்களைப் பார்த்து,”ஆராவது மகிழப் பார்த்து வாய் மேல பல்ல போட்டு பேசினிங்கனு வய்யி… தொலச்சுப்புடுவேனு ஜாக்கிரத்த…” விரல் நீட்டி எச்சரித்தான்.

“அவ வயித்துல வளருது உம்ம வாரிசுனு தெரியுமா?…” கூட்டத்தில் ஒரு மூத்தப் பெண்மணிக் கேட்டார்.

“எம்ம வாரிசில்லாம ஆரு வாரிசுனு நீங்க நனச்சுட்டு இருங்கறிங்க?…” அந்தப் பெண்மணியைப் பார்த்துக் கேட்டான்.

எதிர்க்க நின்றுக் கேள்வி கேட்கப்பான் என தெரியாமல் பதில் சொல்ல முடியாமல் வாயடைத்துத் தான் போனார் அந்த பெண்மணி. சிலமாதங்களுக்கு முன்னால் சிலர் தங்கள் வாய்க்கு வந்தை எல்லாம் ஜாடையாகப் பேசினார்கள். எதிரத்துப் பேசப் போன தமிழை வசந்தா தடுத்துவிட்டார்.

அன்றுப் போல இன்று வசந்தா கூட இல்லாதது தமிழுக்கு வசதியாகப் போய்விட்டது. இன்றைக்கு உடனே எதிர்த்தவர்களைப் பார்த்துக் கேள்விக் கேட்டான். யாரும் பதில் சொல்லவேயில்லை.

“ச்சை… கோவிலுகு வந்தால் கொஞ்சம் நிம்மதியாவது கிட்டும் என நனத்தால்… இங்க கூட நிம்மதியில்லாம போயிடுச்சு…” சொல்லி மகிழை அழைத்துக் கொண்டுச் சென்றான்.

வீடுப் போய் சேர்ந்தும் கூட கோபம் போகவில்லை. “என்ன மனிதர்களோ இவர்ரகளோ…” புலம்பினான்.

அதற்குள் இவர்கள் வந்தது தெரிந்து வசந்தா வயலில் திரும்பி வந்தார். இவன் புலம்பலைக் கேட்டு,”என்னடா… இந்த புலம்பற… ஆரய வய்யற…” என்றார்.

“எல்லாம் அந்த பெரிய பொட்டு வச்சுகிட்டு வருவாள அந்த சாந்தம்மாவ தான்… சாந்தம்மா… பேரு தான் சாந்தம்மா… பேரில இருக்கற சாந்தம்மா பேச்சுல இல்ல…” வைத்தான்.

“அவளா… என்ன பேசினா சொல்லு… நாக்க இழுத்து வச்சு அறுத்தடறேன்.”

“நானே நாக்க பிடுக்கிற மாதிரி தான் கேட்டுவிட்டு வந்தேன்.”

“அவ அப்படி தான் என்ன சொன்னா… அத முதல்ல சொல்லு…” எரிச்சலுடன் கேட்டார்.

சற்று நேரம் தமிழ் அமைதியாக இருந்தான். வசந்தா விடாமல் இவன் முகத்தைப் பார்க்கவும்,”இவ வயித்துல வளருது ஆரு குழந்தனு கேட்கறா… அத கேட்டதும் எம்மால தாங்க முடியல… என்ன தகிரியம் இருந்தா எம் பொஞ்சாதிய பார்த்து இந்த கேள்வி கேட்பா… அதான் அவள அங்கனகுள்ள வச்சு நாண்டு சாவற மாதிரி நாலு கேட்டனு…” என மூச்சிரைக்க கோபத்தில் கத்தினான்.

“நீ கேட்டது பத்தாது… இரு நா நாலு வார்த்தய கேட்டு வரேன்…” சேலையை இழுத்துச் சொருகிக் கொண்டுச் சண்டைக்குச் சென்றார்.

வசந்தா சண்டைப் போடுவாரா… இல்லை அவமானப்பட்டு திரும்புவாரா? இனி என்ன நடக்குமோ அடுத்த எபியில் பார்க்கலாம்.

14 – இத இதமாய் கொன்றாயடி Read More »

இரகசிய மோக கனாவில் 02

அத்தியாயம் 2   “அய்யோ யாராவது கதவை திறங்கள். எனக்கு மூச்சு முற்றுகிறது.”    “என்னடா அதிசயம் இது? ஆருஷா உள்ளப் போன பெட்டி அங்க மூடிகிடக்குது. ஆனா சத்தம் அதுக்கு பக்கத்துப் பெட்டில இருந்து வருதே?!” என்று புலம்பியவாறே அந்த பெட்டியின் திருகு கோலை திறந்தார் வேலுநாச்சியார். அதிலிருந்து வந்த பூராணகாலப் பெண்ணவளைப் பார்த்ததும், வேலுநாச்சியாருக்கு மயக்கமே வந்துவிட்டது.    “அடியேய் ஆரு! இது என்னடி கோலம்? நாடகத்துல ஏதாவது நடிக்கப் போறியா?”   “மூதாட்டியே!

இரகசிய மோக கனாவில் 02 Read More »

error: Content is protected !!
Scroll to Top