ATM Tamil Romantic Novels

காதல் தானடி என் மீது உனக்கு!-17,18,19&20 (விஷ்ணுப்ரியா)

காதல் தானடி என் மீதுனக்கு? 

      [17]

 

இன்று,.. 

பரிதி.. மென்னிலாவை.. வலுக்கட்டாயமாக அவனது இல்லத்திற்கு அழைத்து வந்து, 

அவளும், அவன் காட்டும் காதலுக்கு.. பதில் காதல் செய்வது போல நடித்து… ஒரு மாதகாலம் ஆகிவிட்டிருந்த தருணம் அது!!! 

அவனது அறையோடு உள்ள ‘அட்டாச்டு பாத்ரூமில்’ நின்றிருந்தவளின் இதயம்… அன்று வழமைக்கு மாறாக, “திக் திக்” என்று… தாறுமாறாக அடித்துக் கொண்டிருந்தது;உடல் உள்ளூற வெளவெளத்துப் போயிருந்தது. 

கை, கால்கள் எல்லாம் துணுக்குற… நெற்றி, முதுகுப்புறம், நெஞ்சுக்குழி ஆகிய இடங்களில்… மணி மணியாக அரும்பியிருந்தது வியர்வை!!! 

அவளது இத்தனை நேர பதற்றத்திற்கு காரணமாக இருந்தது அவள் கையில் இருந்த “ப்ரெக்னன்ஸி டெஸ்ட் கிட்”!! 

இந்த மாத நாள் கணக்கு தள்ளிப் போனதில், உடல் சற்றே அலுத்துப் போனதால் விளைந்த அசதியில்.. 

‘எதுவோ ஒன்று உள்ளூற சரியில்லை’ என்று தோன்றத் தான்… எதற்கும் இந்தப் பரிசோதனை செய்து பார்ப்பதன் அவசியம் முகிழ்த்தது அவளுக்குள். 

செய்ய வேண்டிய.. ஆவனவைகளை செய்து விட்டு..கைகள் இரண்டும் ‘கிட்டை’ இறுக்கிப் பற்றியிருக்க, தொண்டையில் எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டவளின்.. கண்ணிமைகள்.. ‘ரிசல்ட்டை’ பார்க்க முடியாதவாறு பயத்தில் மூடியிருந்தது. 

இதழ்களோ.. இடைவெளியே அற்று, மெல்லிய முணுமுணுக்கும் குரலில், 

“கடவுளே.. அப்படியேதும் இருக்கவே கூடாது.. இருக்கவ்வே கூடாது…”என்று பிரார்த்தித்துக் கொண்டே கண் திறந்தவளின் பிரார்த்தனையை.. அத்தனை எளிதாக கடவுள் ஏற்றுக் கொண்டிருக்கவில்லை. 

அவள் கையில் ஏந்தியிருந்த டெஸ்ட் கிட்டில், ‘நேர்மறை பெறுபேறாக’ இரு நிறங்களுமே தெரிந்தது.

அதனை ஏற்றுக் கொள்ள மறுத்தவளின் விழிகளோடு, அதரங்களும் … அகலமானதாக விரிய,அனிச்சை செயல் போல விரிந்த அதரங்களை மறைத்துக் கொண்டது கைகள்!! 

கால்கள் வலுவற்றது போல ஓரெட்டு பின்னோக்கி நகரத் தொடங்க,கண்கள் சீற்றத்தில் சிவக்க, அதன் உஷ்ணம் தாளாமல்.. விழிகளில் நின்றும் வழிந்தது தகிக்கும் கண்ணீர்!! 

‘தாய்மை’ என்பது கடவுளால் அளிக்கப்பட்ட ஒரு வரம்!! 

அது எப்பேர்ப்பட்ட பெண்ணாக இருந்தாலும் சரி… பெண்மை, தாய்மையை வரவேற்பது தான் இயற்கை!! 

ஆனால் பழியுணர்ச்சியில் வெந்து தணிந்து கொண்டிருக்கும் மென்னிலாவுக்கோ, தன்னுள்.. ஒரு தோல்வியைத் தழுவும் மனோநிலை எழுந்து.. அவளை அலைக்கழிக்கவாரம்பித்தது!! 

‘ அவன் செய்த துரோகங்களுக்காக.. பழிவெறி ஊற.. காதலிப்பது போல நடிக்கிறேன் பேர்வழி’ என்று… கரு தங்கக்கூடிய.. ஆபத்தான நாட்களில் கூட.. அதைப்பற்றி சட்டை செய்யாமல் அவனை நெருங்கியது தவறோ..?’என்று தற்போது கிடந்து அல்லாடியது மனம்!! 

இல்லை இருக்கவே கூடாது!! அவனுடனான.. அவள் வாழ்க்கைக்கு ஆதாரமாக.. ஒரு குழந்தை என்று இன்னுமொரு ஜீவன் அவளுக்கு வேண்டவே வேண்டாம்!! 

அவள்.. அவனை நாடி பழிவாங்கத் தான் வந்தாள்;பழிவாங்கியே தீருவாள்!! 

ஆனால், ‘இடையில் வரும் இந்தக் குழந்தை??’என்று சிந்தனை தோன்ற, இதழ்கள் வளைய அழுகை வந்தது அவளுக்கு. 

ஒரு கை கண்ணீரைத் துடைத்துக் கொள்ள, மறுகையோ , அவளையும் மீறி.. அந்தச் சின்ன வயிற்றைத் தழுவத் தொடங்கியது. 

‘தாய்மையின்’ விளைவால் அவளுள் இயல்பாகத் தோன்றும் அன்பு.. அதை.. அவன் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டால்?? 

அதே சமயம், அதே தாய்மையில் விளைந்த அன்பினால் தாய்க்கு செய்து கொடுத்த சத்தியத்தை அவளால் எங்கணம் நிறைவேற்ற முடியும்?? 

அதைப்பற்றி எண்ணும் போது.. இருதலைக்கொள்ளி எறும்பு கடித்தது போல.. தவித்துப் போனாள் மென்னிலா!! 

 வாஷ்ரூமிலேயே அதிக நேரம் செலவிட்டவளுக்கு, உள்ளே நெஞ்சம் பதைபதைக்கத் தான் செய்தது. 

‘இதை..இந்த உயிரற்ற தசைப்பிண்டத்தை.. ஆரம்பத்திலேயே அழித்து விடுவதா? இல்லை அதை வளர விடுவதா?

அப்படியே அந்தக் குழந்தை வளர்ந்தாலும்.. அவளால் பழிவாங்கப் போகும்.. அதன் தந்தையையும், அவன் தந்த கொடிய வேதனையையும் நிமிடத்துக்கு நிமிடம் அது நினைவுறுத்துமே?? 

‘எப்படி?? இந்த உணர்ச்சிச் சுழலில் இருந்து விடுபட்டு.. அவனைப் பழிவாங்குவது எப்படி?’ என்று புருவங்கள் இடுங்க.. அழுது அழுது அதைத்துப் போன முகத்துடன் சிந்தித்தவளுக்கு.. மனதில் தான் கர்ப்பமுற்றதை எண்ணி.. ஒரு எரிச்சல் தோன்ற.. ‘ப்ரெக்னன்ஸி டெஸ்ட் கிட்’டைத் தூக்கியெறிந்தாள் மென்னிலா. 

‘இ.இதோ … இந்த… கு.. குழந்தையை கலைப்பதா??’ என்று யோசித்தவளுக்கு.. அந்த சிந்தனை வந்த கணம்.. உடலில் மின்சாரம் பாய்வது போல ஒரு வலி.. இதயத்தில் சுருக்கென்று எழுந்தது!! 

‘இல்லை.. இந்தக் குழந்தையையே.. பகடைக்காயாக மாற்றி.. தன் பழிவாங்கும் ஆட்டத்தை தொடங்குவதா?’ என்று இன்னொரு எண்ணம் முகிழ்க்க, அப்படியான இழிசெயலைச் செய்யவும் மனம் நாடவில்லை அவளுக்கு!! 

விரும்பாமல் வந்த குழந்தையால்.. ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டவளுக்கு.. அதைப்பற்றி மேற்கொண்டு சிந்திக்க சிந்திக்க.. இன்னும் இன்னும் அழுகை தான் அதிகமானது. 

மனதுக்குள் குழப்பங்கள் சிலந்திவலை போல பின்னப்பட்டிருந்தாலும் கூட… குழப்பத்தை அங்கணமே விட்டு விட நாடி… 

வாஷ்பேஸனில்.. தன் முகத்தை தண்ணீர் கொண்டு அடித்துக் கழுவி விட்டு வெளியே வந்தாள் மென்னிலா!! 

டவலால் சிவந்த முகத்தை துடைத்துக் கொண்டே, சாளரம் தாண்டி.. வெளியே பார்த்த போது.. எதிர்பாராதவிதமாக நில்லாமல் அடித்து ஊற்றிப் பெய்து கொண்டிருந்த.. கொடும்மழையினைக் கண்டு கொண்டது அவளது நீள்விழிகள்!! 

துண்டை தோளில் போட்டுக் கொண்டே… மழையை நோக்கி நடந்தவளின் கால்கள் சென்றன.. அவனுடைய டெராஸினை நோக்கி!! 

மழை… வராது வந்த வான் மழை…. அது அவளுடைய நாசகார பழைய நினைவுகளுக்கு விடுத்தது மீள் அழை!! 

டெராஸோடு ஒட்டியுள்ள கதவில் கைச்சந்து சாய்த்து… அங்கே தரையில் வீழும் பெருத்த பெருத்த மழைத்துளிகளைப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு… அந்த நாளின் கொடுமைகள் எல்லாம் மனக்கண் முன் வந்து போகவாரம்பித்தது. 

அவளை ஊர்க்கோயில் தெரு முன்பாகத் தள்ளி.. வலுக்கட்டாயமாக தாலி பறித்த… 

அந்தக் கொடியவனின் கொடூர நினைவுகள்.. அவள் ஞாபக அடுக்குகளைத் தட்டி விட்டு செல்ல, 

உடலெங்கும் ஓர் வெம்மைத் தீ விரவிப் பரவியது அவளுக்கு!! 

அந்தக் கொடூர மழையில்.. அவளை ஏற்காது.. அவளது காதலைத் துச்சமாக எண்ணி…. ‘அவள் வேண்டாம்’ என்று ஒதுக்கி விட்டுச் சென்றவனின் பின்னால், “மாமாஆஆஹ்.. மாமாஆஆஹ்” என்று முட்டாள்தனமாக ஓடினாளே அவளும்!! 

அவன் வெறுத்து ஒதுக்கி விட்டுச் செல்ல, அவன் பிரிவைக் கூட தாங்க மாட்டாது.. அவன் பின்னாலேயே ஓடிய.. கண்மூடித்தனமான காதல்.. அவன் மேல் கொண்டதை எண்ணி… வெட்கியது மனம்!! 

அவள் நம்பினாள்; வானின் நீலமும், கடலின் நீளமும் மாறிப் போகலாம்.. ஆனால் அவன் மனம் மாறான் என்று.. அவள் நம்பினாள்!! 

அந்தக் காதல் தந்த நம்பிக்கையால் தானே… அவளும்.. அவன் கேட்டதை எல்லாம் கண்ணை மூடிக் கொண்டு செய்தாள்?? 

அவன், ‘ஆற்றில் குதி’என்றிருந்தாலும்… யோசிக்கவேயாமல் குடிக்கும் அளவுக்கு, அவனை.. அவன் தன் பால் கொண்டிருக்கும் எல்லை கடக்காத அன்பை.. மலை போல அல்லவா நம்பினாள் அவள்??

ஆனால்.. ஏமாற்றி விட்டானே அவன்?? 

அவன் தந்த ஏமாற்றத்தின் வலியைத் தாங்க முடியாது, ‘நான் மறக்கவே மாட்டேஏஏன்.. என் உயிருள்ள வரை… மறக்க மாட்டேஏஏன்..”என்று ஈரத்தரையில் கைகளை அடித்து அடித்து அழுத நாள் அது!! 

அவளது பழிவெறிய ஊறிப்போன கண்கள்.. மழைத்துளிகளைத் தாண்டியும்.. விட்டத்தை வெறித்துப் பார்க்க, 

வலி மரத்துப் போன மெல்லிய குரலில், “நீ உன் தாய் வள்ளியம்மைக்காக பழிவாங்க.. நான் உன்மேல வைச்ச காதல் தான் கிடைச்சுதா பரிதி..??’என்று கேட்க, இதயமோ.. வெம்மையில் உழன்றது. 

எல்லாமே நடிப்பு!! 

அன்று அந்தக் குறுந்தீவில்… அவள் முன்னங்கையை ஜெல்லி ஃபிஷ் கடித்த போது.. தனக்கே அந்த வலி என்பது போல என்னமாய் பதறினான்?? 

எல்லாமே பக்கா நடிப்பு!! 

 அந்த நடிப்பு இற்றை வரை.. அவனிடம் தொடர்ந்து இருப்பதாகவே எண்ணத் தோன்றியது அவளுக்கு. 

போன முறை.. ‘பழிவாங்க வேண்டும்’ என்பதற்காக.. ஒரு பேதைப்பெண்ணின் நம்பிக்கையை.. தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு… பக்காவாக நடித்தவன்.. இம்முறை நடிப்பது எதற்காக?? 

அந்தக் கேள்விக்கான விடை அறியும் வண்ணம் அவளின் நடிப்பும் தொடரும்!! 

அவனால் மட்டுமா காதலிப்பது போல நடிக்க முடியும்? அவளாலும் தான் முடியும்!!

இம்முறை அவள் எந்தக்காரணத்துக்காகவும் ஏமாறப்போவதில்லை. மாறாக ஏமாற்றப்பட்டால் நேரும்.. தாங்க முடியாத கொடிய வலியை அவனுக்கும் பரிசளிக்கப் போகிறாள்.

அதை எண்ணிய கணம் அவளது கண்கள்… கூர்மையாகத் தீட்டிய கத்தி.. பளபளப்பது போல.. பழிவெறியில் பளபளக்கவாரம்பித்தது.

அந்த கணம் ..வெளியையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளின் விழிகளில் விழுந்த ‘அது’.. அவளை அலைப்புறுதலுக்குள்ளாகத் தொடங்கியது. 

மனத்தில் ஒரு சின்ன வலி எழ… மழையென்றும் பாராமல்.. வழுவழுப்பான டெராஸை நோக்கி ஓர் எட்டு எடுத்து வைக்க நாடி.. அவள் தன் பாதத்தினை முன்னோக்கி வைத்த போது தான்… அந்தச் சம்பவம் நடந்தேறியது!! 

அவளை டெராஸை நோக்கி அடி எடுத்து வைக்க விடாமல்.. அவளது ஆலிலை போன்ற அழகிய வயிற்றினூடு ஊர்ந்து.. அவளைத் தன்னோடு இறுக்கி அணைத்தது.. அவளுக்கு மிக மிகப் பரிச்சயமான ஓர் முரட்டுக்கரம்!! 

அந்த முரட்டுக்கரம் பிரயோகித்த மென்மையில்.. அவள் உடலில் உள்ள கோடான கோடி மயிர்க்கால்களும் வெறுப்பில் சிலிர்த்துக் கொள்ள, 

அவள் வயிற்றில் ஊர்ந்த அதே கரங்கள் ஒரு மென்மையை பிரயோகிக்க, அவளது வெண்சங்குக் கழுத்தில் பதிந்தது மீசை குறுகுறுக்கும் அவனது அதரங்கள்!! . 

கழுத்து வளைவெங்கிலும் சின்னச் சின்ன முத்தங்கள் வைத்து.. கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி.. அவளது காதுக்குள் தன் அதரங்கள் நுழைத்த மன்னவன், 

கிறக்கம் தருவிக்கும் குரலில், “எப்பவுமே நான் மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வரும் போது.. வாசல்ல நின்னு.. எனக்காக காத்திட்டிருப்ப?? இன்னைக்கு என்ன.. என் ஆண்டாள காணோம்?னு பதறியடிச்சுட்டு வந்தா.. இங்க நீ அமைதியா நின்னு.. மழைய இரசிச்சிட்டிருக்கீய்யாஆஹ்!!”என்று கவிதை இயம்பும் தொனியில் கேட்க, 

இவளோ கணவன் காதுக்குள் கிசுகிசுத்தது பிடிக்கவே பிடிக்காமல் போக, அவன் பிடியில், பல்லைக் கடித்துக் கொண்டு.. விறைத்து நின்றாள். 

‘அந்தோ பரிதாபம்!! கனல் கக்கும் வன்ம விழிகளை… அவன் பாராமல் போனது உண்மையிலேயே பரிதாபம்!! 

உள்ளே என்ன தான் பற்றிக் கொண்டு வந்தாலும்… அவனை நோக்கி இன்முகமாகவே திரும்பத் தலைப்பட்டாள் தலைவி!! 

கணவனின் பரந்த மாரில் ஒரு கை வைத்தவளாக, மறுகையால்.. சற்று நேரத்திற்கு முன் தன்னை அலைப்புறுதலுக்குள்ளாக்கிய.. வெளியை சுட்டிக் காட்டி, 

“அ.. அங்கே.. மா மரம் இருக்குல்ல மாமாஹ்..?”என்று கேட்க, அப்போதும் அவளை அணைப்பிலிருந்து விலக்காமல், அவள் கைகாட்டிய இடத்தை.. அவள் கையளவு உயரம் வரை குனிந்து.. 

அவள் கன்னத்தோடு கன்னம் உரசியவனாக, “எங்கேஹ் ஆண்டாளு?”என்று கேட்டான். 

அந்த உரசலில் மனம் வெறுமையடைவது போல தோன்ற, அவளது குரல் சற்றே கடினமானதாக மாறியது!! 

“அதோ டெராஸோட.. மாமர கிளை போகுதே.. அந்த மரம் மாமா.. அந்த மரத்து மேல ஒரு சின்ன பூனைக்குட்டி.. எப்படி கீழே இறங்கிறதுன்னு தெரியாமல்..மழையில நனைஞ்சிட்டிருக்கு..பார்த்தீங்களா??ரொம்ப பாவமா இருக்கு மாமா..”என்று மெய்யாலுமே.. மர உச்சிக்கிளையில் அகப்பட்ட.. சின்ன பூனைக்குட்டிக்காக வருத்தப்பட.. அந்த சோகம்.. அவளது கணவனையும் தாக்கவே செய்தது. 

முன்பொரு கால்.. ‘கல்லெறி’ போன்ற சொற்களாலும்.. செயல்களாலும்.. அவளை மிகவும் காயப்படுத்திய ராவணன் தான் அவன்!! 

ஆனால் இன்று?? நிலைமையோ தலைகீழ்!! 

ஒரு சின்ன பூனைக்குட்டிக்காக.. தன் ‘மென்னிலவின்’ வதனம் வாடுவது.. ஏதோ உள்ளூற செய்தது அந்தப் பரிதியை!! 

ஒரு சின்ன விஷயத்துக்கு கூட.. அவள் முகம் வாடுவது பொறுக்க மாட்டாதவனுக்கு.. அது கொட்டும் மழையென்பது கூட கருத்தில் பதியவேயில்லை!! 

சற்றை உணர்ச்சி மல்க அவளைப் பார்த்தவன், “இந்தச் சின்ன விஷயத்துக்காக.. நீ கவலைப்பட்றது கூட.. என்னமோ மாதிரி.. உள்ளே.. வலிக்குது ஆண்டாளு… நீ.. மழையில நனையால் வீட்டுக்குள்ளேயே இரு.. நான் இப்ப வந்துட்றேன்” என்று மட்டும் சொன்னவன், 

அடுத்த கணம், தன் வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டு, ஈரத்தில் நனைந்திருந்த டெராஸ் தாண்டி.. பால்கனிச் சுவரில் அநாயசமாக ஏறிப் போய் ,

டெராஸை நோக்கி நீண்டு கொண்டிருக்கும் மா மரக் கொப்பில், தன் உடலின் சமநிலை தவறாத வண்ணம்.. கனகச்சிதமாக நடந்து சென்றான்!! 

மரத்தின் உச்சியில்.. மழைக்கு நனைந்து.. நடுநடுங்கிக் கொண்டிருந்த பூனைக்குட்டியோ.. தன்னை நோக்கி ஆஜானுபாகுவான தோற்றத்தில்.. வரும் அவனைக் கண்டதும் இன்னும் சற்று அச்சத்தில், அநாதரவாக, “மிய்யாவ்.. மிய்யாவ்”என்று கத்திய வண்ணம்.. மரக்கிளையோடு ஒன்றத் தொடங்கியது!! 

விலங்குகள் மீது அவ்வளவு அன்பு கொண்டிராத பரிதியோ.. தன்னவளுக்கு.. அவள் சந்தோஷத்துக்காக.. சற்றே இறங்கிப் போய், 

விரல்களால் சுடக்கிட்டு விசித்திர ஒலி எழுப்பி, “ஹேய்.. இங்கே பாரு.. இங்கே வா… வா.. ட்ச்சு.. ட்ச்சு”என்று கூப்பிட்டுக் கொண்டே.. தூக்கப் போன கணம், அந்தக் கிளையிலேயே.. குஞ்சு பொறித்திருந்த.. கூட்டில் இருந்த தாய்க்காகம் விழித்துக் கொண்டது!! 

‘தன் குஞ்சுகளுக்குத் தான் ஏதேனும் ஆபத்தோ?’ என்று பதறிப் போன அது… நாராசமான ஒலியில் கத்திக் கொண்டே… பரிதியைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டே கத்தியது. 

தலைக்கு மேல் சுற்றிய காகத்தை பொருட்படுத்தாமல்.. அவன் முன்னேறி..பூனைக்குட்டியை அவன் தூக்கிக் கொண்ட கணம்,

சற்றும் எதிர்பாராத வகையில், அவனது கண்ணைக் குறிபார்த்து பறந்து வந்தது ஆவேசமான தாய்க்காகம்!! 

காகம் தன் கண்களை நோக்கி வருவது கண்டு.. அவன் சட்டென தன் முழங்கையைக் கேடயம் போல ஆக்கி.. அந்தத் தாக்குதலில் இருந்து தப்பிக்க, 

கண்ணைக் குறி பார்த்து வந்த காகம், சொண்டுக்கு அகப்பட்ட.. அவனது முழங்கை தசையை தன் அலகாலும், கூரிய நகங்களாலும் கீறிக் கௌவிக் கொள்ள… முழங்கையிலிருந்து.. கையை நோக்கி ஓடவாரம்பித்தது இரத்தம்!! 

‘அவன் கண்கள் பறிக்கப்படக் கூடும்!’ என்ற ஆவலுடன்…அதை சுவாரஸ்யமான கூரிய விழிகளுடன் பார்த்துக் கொண்டிருந்த.. அந்தக் கழுகுப் பெண்ணுக்கோ, 

காகம்..அவனது முழங்கை தசையைக் கௌவிக் கொண்டது, ‘ஜஸ்ட் மிஸ்’ என்பது போல ஒரு ஏமாற்றம்.. முகத்தில் அப்பட்டமாகவே தெரிந்தது. 

இருந்தாலும்.. அவன் முகத்தில் துளியளவு கூட வேதனை மிகவில்லை. 

மாறாக.. தன் மனைவி முகத்தில் சந்தோஷத்தை வரவழைக்க நாடி… ‘அந்தப் பூனைக்குட்டியைக் காப்பாற்றி விட்டோம்’ என்ற திருப்தி உடலெல்லாம் ஓட.. வெள்ளந்தியாக சிரித்துக் கொண்டே அவளை நாடி வந்தான் பரிதி!! 

அவளோ, மழையில் நனைந்து, கையில் இருந்து இரத்தம் வழிய நிற்கும்.. ‘தன் முகத்தில் சந்தோஷம் காண வேண்டும்’ என்ற ஒரே ஆசைக்காக.. 

பூனைக்குட்டியை காப்பாற்றிய அவனைப்பற்றி கிஞ்சித்தும் கணக்கெடுக்காமல், 

அவனது முழங்கை மடிப்பில் சுருண்டிருந்த பூனைக்குட்டியை.. அனுதாபப் பார்த்தவளாக, தூக்கிக் கொண்டவள், 

“அச்சச்சோ.. நனைஞ்சிட்டீயாடா??.. குளிருதா பூனைக்குட்டிக்கு?..”என்று கேட்டுக் கொண்டே, 

தான் முகம் துவட்டிய துண்டை எடுத்து.. நனைந்த பூனைக்குட்டியைத் துவட்ட ஆரம்பித்தாள் மென்னிலா!! 

தான் முகம் துவட்டும் துண்டால்… அதே போல நனைந்து, இரத்தம் சொட்டச் சொட்ட.. வந்திருக்கும், ‘பரிதியைத் துவட்டாமல், ஒரு பூனைக்குட்டியைத் துவட்டுகிறாள்’ என்றால் என்ன அர்த்தம்?

அந்தப் பூனைக்குட்டி மேல் கொண்ட கருணையளவுக்கு கூட.. ‘அவன் பால் ஒரு துளி கருணையேனும் பிறக்கவில்லை?’ என்று தானே அர்த்தம்?? 

அவனுக்கோ.. தன்னைக் கண்டு கொள்ளாத மனைவியைக் காணக் காண.. உள்ளூற ஓர் வலி எழுந்தது. 

அவள் முகத்தில் சந்தோஷத்தைப் பார்ப்பதற்காக, தாய்க் காகத்திடம் கடிவாங்கிய கைகளை.. அவள் பார்க்கும் போது,

 தான் செய்த அநியாயத்தை மீறியும்.. தன் பால் காதல் சொறியும் அந்தக் கண்களில் காதலைக் காண ஆசை கொண்டான் அவன்!! 

இறுதியாக அவள், “எனக்காகத் தானே இவ்வளவும்”என்றவளாக, காதலுடன் அவனது கன்னத்தில் முத்தமும் வைப்பாள் என்று எதிர்பார்த்த.. அந்த முரட்டுக் குழந்தை மனதளவில் சோர்ந்து தான் போனது. 

தன்னைக் கண்டு கொள்ளாமல்.. பூனைக்குட்டியைக் கவனிக்கும் மனைவி மேல் வருத்தம் மிகுந்தாலும், ஏனோ ஆத்திரம் மிகவில்லை!! 

பழைய பரிதியாக இருந்திருந்தால்.. இந்நேரம் ஒரு பிரளயம் நிகழ்ந்திருக்கக் கூடும்!! 

இது அவளுக்காக, ‘புது அவதாரம் எடுத்திருக்கும் உன்னதப் பரிதி’ ஆதலால், தன் மனைவியையே.. அவள் பூனைக்குட்டியைக் கொஞ்சும் அழகினையே…. உள்ளம் இன்புறப் பார்த்து இரசித்திருந்தான் அவன்!! 

பின்பு இரத்தம் சொட்டச் சொட்ட நிற்பது அவனுக்கும் பிடிக்காமல் போகவே, மனைவியை நோக்கி, “நான் குளிச்சிட்டு வந்துட்றேன் ஆண்டாளு”என்று கூறிக் கொண்டே.. குளியலறைப் பக்கம் விரைய, 

கணவன் உரைத்தது தெள்ளத் தெளிவாக, காதில் விழுந்தாலும் பூனைக்குட்டியிலேயே கவனம் பதித்தது போல காட்டிக் கொண்டாள் அவள். 

ஏனோ.. அவளால்….. அவன் காயத்தைக் கண்டு.. மனம் அவதியுற்று, கண்ணீர் வடிக்கும் மனைவியாக, மருந்திடும் காதலியாக நடிக்க.. எவ்வளவு முயன்றும்.. மனதை ஒருமுகப்படுத்த முடியாமல் போயிற்று!! 

அவனது சாவு ஒன்றையே இந்த ஜென்மத்தில் எதிர்பார்த்திருப்பவள், எப்படி அவனுக்காக பதறவும் கூடும்?? 

அந்த நேரம் டிராயர் மீது அவன் வைத்து விட்டுச் சென்ற அவனது செல்பேசி சிணுங்கவாரம்பித்தது. அந்த சிணுங்கல் ஒலியில் பதறிப் போன பூனைக்குட்டி, அவள் மடியில் இருந்து எகிறி குதித்து.. 

தன் உடலை ஒருமுறை உலுக்கிக் கொண்டே நடந்து செல்லவாரம்பித்தது. 

பூனைக்குட்டி தன் மடியை விட்டு அகன்றதும், செல்லைப் பார்த்தவளுக்கு.. அழைப்பெடுத்திருப்பது அவனது அருமை மாமா ‘வாசு’ என்று புரிந்தது. 

அமைதியாக.. காலை அவள் அட்டன்ட் செய்ய, மென்னிலா அழைப்பை ஏற்றதை அறியாத வாசுவோ, 

படபடக்கும் குரலில், “ஹேய் மாப்ள… நீ எங்கேயிருக்க? .. ஆயிரத்து நூறு கோடி ரூவா ‘சிட்டி காம்ப்ளக்ஸ்’ லீஸ்க்கு.. வரப்போற நாள்டா இன்னைக்கு.. மறந்துட்டீயா?? .. .. சீக்கிரம் வா.. இல்ல டென்டர் கை மாறி போயிடப் போகுது.. அப்புறம் அடுத்த அஞ்சரை வருஷத்துக்கு.. திரும்பவும் டென்டர் வர்ற வரைக்கும்.. கைய்ய சொறிஞ்சிக்கிட்டு தான் நிற்கோணும்!!”என்று அவர் பேசிக் கொண்டிருந்த போதே, சட்டென அழைப்பைத் துண்டித்தவள், 

மீண்டும் அவர் அழைப்பை ஏற்படுத்த முடியாத வண்ணம்.. செல்பேசியை அணைத்தே வைத்து விட்டாள். 

அவளது முகத்தில் ஒரு விஷமப் புன்னகை தவழ்ந்தது. இடது ஒற்றைப் புருவம் மாத்திரம் மெல்ல மேலேறியது. 

 “ஓஹ்.. ஆயிரத்து நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள டென்டரா?? இன்னைக்கு அவன் வந்தால் தானே?? சிட்டி காம்ப்ளக்ஸ் டென்டரை வாங்க.. அவன் வர மாட்டான் ம்மிஸ்டர். வாசு”என்று தீவிரமாக உரைத்தவளின் கண்கள்… பழிவெறியில் விகசித்திருந்தது. 

அந்த கணம்.. அவனது செல்லை அணைத்தவளாக அவள் நின்ற தருணம், முதுகுக்குப் பின்னே, கணவனின் குரல் சற்றே சீற்றம் கமழ, “ந்நிலாஆ”என்று கேட்க, 

‘ஆண்டாள்’ என்ற அழைப்பைத் தவிர்த்து, கணவன் தன்னை ‘நிலா’என்பதே அவள் கண்களை சுருங்கச் செய்தது!! 

‘இப்போது என்ன நேர்ந்தது??’ என்ற கேள்வியுடன்.. அவள் திரும்ப, 

குளியலறையில் இருந்து.. ஷாம்பூ மணம் நாசியை நிரட.. இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு வந்து நின்ற கணவனை ஒன்றுமே புரியாதவளாக பார்த்தாள் அவள்!! 

அவனோ… உணர்ச்சிகள் சுத்தமாகத் துடைக்கப்பட்ட முகத்துடன், அவள் முன்பாக ‘ப்ரெக்னன்சி டெஸ்ட் கிட்”டை நீட்டி, 

“.. இதுக்கு என்ன அர்த்தம்?”என்று கேட்க, தலையே ஒருமுறை சுற்றிப் போனது அவளுக்கு!! 

அவள்.. ஆத்திரத்தில்.. சரிவர அப்புறப்படுத்தாமல்.. அதை அங்கேயே எறிந்து விட்டு வந்திருந்தது எத்தனை பெரும் தவறு?? 

யாருக்கு அந்த உண்மை தெரியக்கூடாது என்று நினைத்தாளோ? 

அவன் கைகளிலேயே அந்த உண்மை, ஆதாரத்துடன் சிக்கிக் கொண்டிருப்பது கண்டு… மூச்சடைக்க நின்றாள் அவள். 

அந்த நொடி, அவன் முகத்தில் அரும்பிய, ‘தன்னிடம் ஏன் சொல்லாமல் மறைத்தாய்?’என்ற கோபம்.. அவனை ஏதோ செய்ய, அவளை ரௌத்திரம் தழுவும் விழிகளுடன் ஏறிட்டுப் பார்த்தான் அவன்!! 

கண்களில் அனிச்சை செயல் போல… நீர் கோர்க்கத் தொடங்க.. அதை ஆனந்தக் கண்ணீராகக் காட்டும் முகமாக நகைத்தவள், 

தயங்கித் தயங்கி.. அவனை நாடிச் சென்று, 

அவனது இரு முரட்டுக்கன்னங்கையும் கைகளால் ஏந்தி, இரகசியத்தை வெளிவிட மனம் இல்லாத குரலில், 

“இன்னைக்கு ராத்திரி… சர்.. சர்ப்ரைஸா. சொல்லலாம்னு நினைச்சேன்… ஆனா.. இப்.. இப்போவே சொல்லும்படியாயிருச்சு… நீங்க அப்பாவாக போறீங்க மாமா..”என்று சொல்ல, அந்த வாசகம் கேட்ட ஆண்மகனின் வயிற்றுக்குள் ஒரு கோடி பட்டாம்பூச்சி பறந்தது போல இதமாக இருந்தது அவனுக்கு!! 

அழுந்த மூடியிருந்த இதழ்கள், மெல்ல மெல்ல விகசிக்க.. அவனது முத்து மூரல்கள்.. அழகாகத் தெரிந்தது!! 

பரிதியின் அந்த அழகிய பூங்கொத்து நகைப்பு.. மென்னிலா எஞ்ஞான்றும் கண்டிராதது!! அது நடிப்பு தான் என்று சொல்ல முடியாத படி.. இதயத்தில் இருந்து… வெள்ளந்தியாக வந்தது அந்த நகைப்பு!! 

அவன் கண்கள்.. சிசு ஏந்தி நிற்கும் தன் உள்ளங்கவர்ந்தாளை கனிவன்புடன் பார்த்தது. உள்ளமோ சந்தோஷத்தில் வானுக்கும், பூமிக்குமாக துள்ளித் துள்ளிக் குதித்தது!! 

கால்களை அகல விரித்து நின்றிருந்தவன்.. சந்தோஷ மிகுதியின் காரணமாக.. கண்கள் கலங்க… அதைக் கட்டுப்படுத்த தலைகோதிக் கொண்டே.. தன்னவளின் விழிகளோடு.. தன் விழிகளைக் கலந்தான் பரிதி!! 

அந்த விழிகள் சொன்னது ஆயிரம் ஆயிரம் நேசக் கவிதை!! இன்னும் ஆயிரம் ஆயிரம் சந்தோஷக் கவிதை!! 

அவளை நாடி ஓரெட்டில் வந்தவன், அவளது வயிற்றைத் தன் கைகளுக்குள் அடக்கியவாறு, தவிப்பு மீதூற, “என்.. என்ன சொல்ற ஆண்டாளு..??”என்று அவன் கேட்க, 

அவளுக்கோ.. சந்தர்ப்ப சூழ்நிலையில் அவனிடம் இரகிசயத்தை வெளியிட்டு விட்டோமே?? என்று கண்ணீர் குபீரிடத் தொடங்கியது. 

கலங்கிய விழித்திரையின் விளைவாக, அவன் விம்பம் இரண்டிரண்டாகத் தெரிய.. நெஞ்சை அடைத்த கவலையுடன் சொன்னாள், “நீ.. நீ.. நீங்.. ங்க அப்பா.. வாக போறீ.. ங்கஹ் மாமாஹ்” என்று. 

அவள் கண்ணீர்.. ஒரு கொடூரனின் குழந்தையை தான் சுமப்பதா? என்ற எண்ணத்தில் விளைந்த வெம்மை தாங்காமல் அவள் உகுத்த கண்ணீர். 

ஆனால்.. மனைவி.. தன் குழந்தையை சுமந்து நிற்பதை.. ‘தணலை சுமப்பது போல’ வலியுற்றிருப்பது அறியாது.. சந்தோஷ மிகுதியில்..விளைந்த ஆனந்தக் கண்ணீர் என்று எண்ணிக் கொண்டது தான் பெரும் தவறு!! 

அவன் உடனடியாக ஏதும் சொல்லி விடவில்லை. 

மகிழ்ச்சியின் உச்சத்தில், ‘காலும் ஓடவில்லை. கையும் ஓடவில்லை’என்று சொல்வார்கள் அல்லவா? அப்படியான ஓர் மனோநிலை அவனுக்கு!! 

கண்ணோரம்.. உவர் நீர் கட்டி நிற்க, சிரித்துக் கொண்டே விழிகளாலே, ‘நிஜம் தானா?’என்பது போல தலையாட்டிக் கேட்டான் பரிதி!! 

அவளது தலையும்.. இறுகிய முகத்துடன், ‘ஆமாம்’ என்பது போல, மேலும், கீழுமாக ஆடியது தான் தாமதம், ஓடி வந்து.. 

 அவளது பருத்த பின்தொடைகளூடு கையிட்டுத் தூக்கி, உவகை தாங்காமல்.. அவளை ஒரு சுற்று சுற்றிக் கொண்டே, 

“நாஆஆஆன்.. அப்பாவாகப் போறேஏஏஏன் ஆண்டாளுஊஊஊ!!! ”என்று கத்தியவன்.. 

சந்தோஷத்தில் ‘என்ன செய்கிறோம்?’ என்று தலைகால் புரியாது.. அவளது மார்புக்குழி மத்தியில்… ஆத்மார்த்தமான காதலுடன் முகம் புதைத்துக் கொண்டான். 

அவனைப் போல சந்தோஷம் எல்லாம் அவனில் இல்லை!! 

மாறாக மனம் முழுவதையும் அடைத்துப் பிடித்திருந்தது வெறுமை!! 

அதிலும் அவன் தன் நெஞ்சாங்கூட்டில் முகம் புதைத்து சிறு எரிச்சலைப் பிறக்கச் செய்ய, 

அவனிடமிருந்து திமிறிக் கொண்டே, “என்ன பரிதி இது.. என்னை கீழே இறக்கி விடுங்க.. கூஊசுது.. ப்ளீஈஈஸ்”என்று அவள் நெளிய, அவளை இறக்கி விட்டவன் முகம்.. அந்த சூரியனின் முகம், 

பஞ்சுத் தலையணையில் தூங்கியெழுந்தவன் முகம் போல சற்றே மிருதுவாகியிருந்தது!! 

அதிலும் அமைதியான அந்த விழிகள் பிரகாசத்தைத் தோற்கும் அழகுடன் இருந்தது. 

அவளிரு கன்னத்தையும் கைகளில் தாங்கியவன், களிப்பில் நாக்கு படபடக்க, 

“நா.. நான் இன்னைக்கு எவ்வளவு சந்தோஷ.. மா இருக்கேன் தெரியுமா?? உன்னோட முரட்டுப்பரிதிக்கும் ஒரு குழந்தை..?? இன்னும் கொஞ்சம் மாசத்துல… நம்ம கூட நம்ம குழந்த…

 நான் உன் கூட வாழ்ந்த.. அழகான வாழ்க்கையில்… ஒவ்வொரு ராத்திரியும் நான் காட்டின காதலின் உச்சத்தால் விளைந்த குழந்தை…!!! அதுவும் பெண் குழந்தையா இருந்தா….”என்று அவன் ஏதேதோ கற்பனாசுகத்தில் மிதக்க, இவளுக்கோ, ‘அதுவும் பெண் குழந்தையா இருந்தா…?’ என்ற வாசகத்தில் இதயம் ஒருமுறை நின்று துடித்தது!! 

‘எதுக்கு?? எதுக்கு.. பெண் குழந்தை?? நீ எவனோ ஒருத்தனுக்கு பண்ண தப்புக்காக… அவன்.. என் குழந்தைய…. உன்னைப் போலவே பழிவாங்குறதுக்காகவா??’என்ற மனம் வெறுத்ததால் விளைந்த கேள்வி.. நாவு நுனி வரை வந்தது. 

அவளது, ‘வெறுப்பை உமிழும் சந்தர்ப்பம் இதுவல்ல’ என்பதால் பொறுத்துக் கொண்டாள் அவள்!! 

அவளை அழைத்துச் சென்று மஞ்சத்தில் அமர வைத்து, தானும் அமர்ந்து கொண்டவன், 

அவளது இருகைகளையும் காதலுடன் பற்றிக் கொண்டவனாக, “இங்க பாரு ஆண்டாளு.. எப்பவும் நீ சந்தோஷமா இருக்கோணும்… தேவையில்லாத விஷயங்களைப் போட்டு.. மூளையை குழப்பிக்காதே.. அது நம்ம குழந்தைக்கு.. நல்லதல்ல.. டாக்டரை கன்சல்ட் பண்ணதும்.. டாக்டர் சொல்ற மாதிரியே நீ நடந்துக்கோணும்.. இந்த விஷயத்தில் மட்டும்.. நான் சொல்றதை தான் நீ செய்யோணும்… என்ன புரிஞ்சுதாஆஆ?”என்று சிறு குழந்தைக்கு புத்திமதி சொல்வது போல சொன்னவனை.. இமைக்காமல் பார்த்திருந்தாள் அவள். 

அவளுள் என்ன மாதிரியான உணர்ச்சிகள் தோன்றியது என்று தெரியவில்லையாயினும், 

‘குழந்தைக்கு ஆசை வைப்பது போல அவன் காட்டிக் கொள்வதும் கூட நடிப்பே தானோ?’என்று கூட தோன்றவாரம்பித்தது. 

மனைவியின் மனசஞ்சலங்கள் அறியாது அவன் தொடர்ந்து பேசிக் கொண்டே போனான். 

“இனி நீ.. ஒரு வேலை செய்யக் கூடாது..எது வேணும்னாலும் உன் பரிதிக்கிட்ட கேளு.. உனக்கு என்ன பிடிக்கும்னாலும்.. எ.. என் கிட்ட கேளு..!!”என்று இவன் சொல்ல, ‘இது தான் சந்தர்ப்பம்’என்று குறுக்கிட்டவள், 

“எனக்கு என்ன பிடிக்கும்ன்னாலும் செய்வீங்களா மாமா?”என்று ஏக்கத்துடன் கேட்க, அந்த ஏக்கமே அவள் பாலுள்ள காதலை அதிகப்படுத்துவதாகவே இருந்தது. 

சற்றே உணர்ச்சி வசப்பட்டு.. இதழ்கள் அழகாக மலர்ந்தது, “என்ன வேணும்னு கேளு.. ஆண்டா.. ளு?”என்றான் அவன்!! 

அவனை எப்படியாவது டென்டர் நடைபெறும் இடத்திற்கு போக விடாமல் தடுக்க நாடியவள், சட்டென்று பாய்ந்து.. அவனைக் கட்டியணைத்து, 

அவனது இதயப் பக்கத்தில் தலை வைத்தவளாக, கிறங்கும் குரலில், “இன்னைக்கு என் கூடவே இருந்துடுங்க மாமா.. ப்ளீஈஈஈஸ்”என்று ‘ப்ளீஸ்’ வேறு அழகாய் இழுத்து சொக்கும் தொனியில் சொல்ல, 

சொக்கிப் போனது அவன் உள்ளம்!! 

மனைவி ஆசையாக ஒன்று கேட்ட பின்னரும் கூட.. அவனால் அதை மறுக்கவும் கூடுமோ?? 

அவளுக்காகவே மாறியிருக்கும் உன்னதப் பரிதி.. மற்ற காரியங்கள் மறந்தவனாக.. அவளுடனேயே தங்கிப் போக.. ஒரு சின்ன வெற்றிக்களிப்பு வந்து போனது மென்னிலாவின் முகத்தில்!!! 

அதை அறியாதவன், மனைவி தன்னருகாமையை வேண்டுவதை எண்ணி எண்ணி.. ஆங்கிலத்தில் சொல்வார்கள் அல்லவா? 

‘கிளவுட் நைன்’னில் சஞ்சரிப்பது போல’என்று!! அப்படியான மனநிலையில் தான் இருந்தான் அவன்!! 

அன்றிரவு சாப்பாட்டுக்குப் பின்னர், மொட்டைமாடியில் நின்றிருந்த வாசு, தன் மாப்பிள்ளையின் கவனயீனத்தைக் காய்ச்சி எடுத்துக் கொண்டிருந்தார். 

பால்கனித் திட்டில் ஒரு கையும், இடுப்பில் ஒரு கையும் என நின்று கொண்டிருந்தவர், 

சற்று தூரத்தில் பால்கனித் திட்டில் சாய்ந்து, இரு கைகளையும் மார்புக்கு குறுக்கே கட்டியவாறு நின்றிருந்த பரிதியை நோக்கி, 

“என்ன மாப்ள நீ?? .. அவ்வளவுக்கு அறிவு வேணாம்?? ..கோல் பண்ண ஸ்விச்ட் ஆப்னு வருது.. அப்படி என்ன தான் உனக்கு வெட்டி முறிக்குற வேல?? இந்த டென்டர் போனா திரும்பி கைக்கு வர.. ஒண்ணு இல்ல.. ரெண்டு இல்ல.. அஞ்சரை.. வருஷம் ஆகும்.. உன்னோட கவனயீனத்தால் ஆயிரத்து நூறு கோடி ரூபா காம்ப்ளக்ஸை.. கோட்டை விட்டுட்டீய்யே??? .. வர வர உன் போக்கே சரியில்லை.. எப்போவுமே ‘வீடு வீடு’ன்னு வீடே கதின்னு கெடக்குற?? .. எல்லாருக்குமே குடும்பம் குட்டின்னு இருக்கு தான்.. அதுக்காக மத்த விஷயங்களையும் கவனிக்காமலேயே இருக்காங்க??.. நீ உன் பொஞ்சாதி நிலா மேல உசுரையே வைச்சிருக்கலாம்.. ஆனால அவ?? ”என்று தொடங்கியவர், 

அன்று பரிதி ஹாஸ்பிட்டலில் அடிபட்டுக் கிடந்த வேளை.. அவள் சொன்ன வார்த்தைகளை, ‘அவன் இருந்தாலும் ஒன்று.. இறந்தாலும் ஒன்று. ஏனென்றால் என்னைப் பொறுத்தவரை பரிதி எப்போதோ செத்துட்டான்’ என்று சொன்ன கொடூர வார்த்தைகளைக் கூறி விடவே நாடினார். 

படிகளோரம் நின்று அத்தனையும் ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த மென்னிலாவுக்கோ.. ‘வாசு வாய் திறந்தால் ஆபத்து’ என்று தோன்ற, 

அதற்கு விடாமல்… கையில் ஏந்தியிருந்த பால் தம்ளர் தட்டுடன் மொட்டைமாடிக்கு வந்த மென்னிலா.. முகத்தில் எந்த சலனமும் காட்டாது, “பால் எடுத்துக்குங்க மாமா..”என்று சொல்ல, 

அவள் முன்னிலையிலேயே அவளைப்பற்றி பேச மனமற்று.. வாயை கப்பென்று மூடிக் கொண்டார் அவர். 

மாமா அத்தனை சொல்லியும்.. அதை சூடு, சுரணையே அற்றவன் போல ஏற்றுக் கொண்டவன்,

ஒப்பந்தம் கைவிட்டுப் போன கவலை ஒரு துளி கூட இல்லாதவனாக, புன்னகைத்துக் கொண்டே, 

“இப்போ என்ன ஆயிரத்து நூறு கோடி ரூவா கைவிட்டு போயிருச்சு.. அதானே?? அது எல்லாம் பெரிய மேட்டரே இல்லை தெரியுமா?? .. அதை விட ஹேப்பி நிவ்ஸ் ஒண்ணு இருக்கு… நீங்க தாத்தாவாகப் போறீங்க.. நான்.. அப் அப்பாவாகப் போறேன்..கூடிந சீக்கிரமே நம்ம வீட்டுக்கு குட்டி நிலாப்பொண்ணு வரப்போறா… ”என்று சொன்னவன்.. சந்தோஷம் அதிகமாகி.. வாசு மாமாவை கட்டிப்பிடித்துக் கொள்ள, 

வாசு மாமாவுக்கும் உள்ளூற இருந்த சோகம் மறைந்து.. முகம் விகசிக்க, “வாழ்த்துக்கள் மாப்ள”என்று சொன்னவரின் விழிகளில் எதேர்ச்சையாக விழுந்தது அவள் முகம்!! 

தன்னைக் கட்டியணைத்து தன் சந்தோஷம் பகிரும்.. பரிதியின் களிப்பு முகத்தை.. பழி வெறி ததும்ப… வெறித்துப் பார்க்கும் அவளது முகம்!! 

உள்ளுக்குள் கலக்கம் பிறக்க, மென்னிலாவையே.. யோசனையுடன் பார்த்திருந்தார் வாசு. 

காதல் தானடி என் மீதுனக்கு? 

      [18]

இரவு வானில்.. பவனி வந்து கொண்டிருந்த.. எஞ்ஞான்றும் இளமையின் எழில் கொஞ்சும் நிலவே.. முன்னொரு கால் இரவில் நடந்த அந்த சம்பாஷனைக்குச் சான்று!! 

சத்தமேயெழுப்பாது மாடுகள் அசந்து தூங்கிக் கொண்டிருக்க.. கீழே நிலத்தில் பரபரப்பப்பட்டிருந்த வைக்கோல் மேட்டில்.. குப்புறப்படுத்திருந்தான்.. பதினோரு வயதாகியிருந்த சிறுவன் பரிதி!! 

அவனால் மல்லாக்காகப் படுத்து, வானத்தை வெறித்துப் பார்க்க முடியாதவாறு… 

முதுகெங்கும் இரத்தத்தோடு இணைந்த சிவந்த தழும்புகள்.. தாறுமாறாக சென்றிருக்க, அதற்கு விளக்கெண்ணெய் தடவிக் கொண்டிருந்தார்.. ரொம்பவும் இளவயதான பரிதியின் மாமா!! 

முதுகு முழுக்க இருந்த.. சவுக்கடியின் தழும்புகளைக் காணக் காண.. உள்ளூற ஆத்திரத்துடன், வலியும் மிகுந்தது வாசு மாமாவுக்கு!! 

அதிலும் சிறுவன் பரிதி.. இத்தகைய வன்முறையான அடிகளை எல்லாம் எங்கணம் தாங்கியிருப்பான்??

 அவரில்லாத நேரம்.. தமக்கையின் மகனுக்கு நடந்த கொடுமையில் முகம் கறுத்து வாடிப் போயிருந்தது அவருக்கு!! 

சிறுவன் பரிதியின் முதுகுத் தழும்புகளில்.. மாமாவின் எண்ணெய் விரல்கள் தொட்ட போதெல்லாம்.. அவன் வலியில் கண்களைச் சுருக்கிக் கொண்ட போதிலும் கூட, ‘ஸ்ஸ் ஆஆ’என்று ஒலி தான் எழுப்பவில்லை. 

தற்போதெல்லாம் அந்த அடிகளும், வலிகளும் கொஞ்சம் பழகிப் போயிருந்தது சிறுவன் பரிதிக்கு!! 

பலர் தன்னுடைய சிறுபராயப் பருவத்தினை இனிமையான நாட்களாக எண்ணி இன்புறலாம். ஆனால் பரிதிக்கு?? அது கசடும், வலிகளும் நிறைந்த.. துவர்க்கும் நாட்கள்!! 

எல்லா சிறுவர்களினதும் போல.. மிக இனிமையான சிறுபராயப் பருவம்.. வாய்க்கப் பெறாமல் போனது அவனுக்கு!! 

தன் முதுகை மாமாவுக்கு காட்டிக் கொண்டே, படுத்திருந்தவன் அன்புக்கு ஏங்கித் தவிக்கும் குரலில், 

“மாமாஹ்?.. இந்த உலகத்துல உண்மையான அன்புன்றதே கிடையாதா மாமா?? ‘மனுஷங்க’ன்னாலே சுயநலவாதிகளா மாமா??” என்று கேட்டது சிறுவன் பரிதியே தான்!! 

உலகம் அறியாத பதினோரு வயதுப் பையனாக இருந்த பரிதி, ‘முற்றும் துறந்த முனிவர்ளைப் போல…வாழ்க்கையை அடியோடு வெறுத்தவன் போல.. கேட்கும் கேள்வியா இது?’

 ‘இப்படியும் கேள்விகள் அவன் உள்ளத்தில் உதிக்கிறது’ என்றால் அவன் மனதில் எத்தனை வடுக்கள் இருக்க வேண்டும்??

மருமகனின் கேள்வியில் உள்ளூற கவலை மிகுந்தது அவருக்கு!! 

வர வர தன் மருமகன், ‘வாழ்க்கையில் பிடிமானம் இல்லாமல் போய் விடுவானோ?’ என்ற அச்சம் வேறு அவரை ஒருபுறம் ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது. 

நிதானமான குரலில் சொன்னார் வாசு, “அப்படியெல்லாம் இல்லை மாப்ள.. உலகமே அன்பால தான் இயங்கிட்டிருக்கு.. தாய்ப்பறவை… தன்னோட குஞ்சை பாதுகாக்குதுல்ல??.. அதுவும் அன்பு தான்.. நா.. நாய்.. மனுஷன்.. போட்ட சாப்பாட்டுக்காக வீட்டை காக்குதுல்ல?? அதுவும் ஒருவகையான அன்பு தான்.. அழுற குழந்த அம்மாவ கண்டதும்.. தான் அழுதிட்டிருந்ததயே மறந்து போட்டு.. வெள்ளந்தியா சிரிக்குதுல்ல?? அதுவும் அன்பு தான்..”என்று சொல்ல, 

‘அழுற குழந்த அம்மாவ கண்டதும்.. தான் அழுதிட்டிருந்ததயே மறந்து போட்டு.. வெள்ளந்தியா சிரிக்குதுல்ல?’என்ற வார்த்தை வந்ததும் தாயின் நினைவு வந்து போனது அவனுக்கு!! 

சமீபத்தில் தான்.. அவனை விட்டும் தவறியிருந்த தாயின் நினைவுகள்.. அது தந்த வலிகள்.. புதிதானதல்லவா?? 

‘அம்மா’ என்ற ஒற்றை வார்த்தையில்.. ஒரு நினைவுப் பிரளயமே முகிழ்த்தது சிறுவனான பரிதிவேல் வீரனுக்குள்!! 

சிறுவனின் முகம்.. உடனேயே கூம்பிப் போனதின் அர்த்தம் புரிய, வாசுவுக்குமே.. தமக்கையின் ஞாபகம்.. தன் நினைவடுக்குகளில் வந்து போகலானது. 

அவருக்குமே தமக்கையின் வலி.. தாங்க முடியவில்லையாயின், சிறுவனுக்கு எங்கணம் முடியும்?? 

அதனால் சிறுவனின் மனம் மாற்றவென.. இதமான உள்ளம் வருடும் தொனியில் ஒரு கதை சொல்லலானார் வாசு!! 

“உலகத்துல சுயநலமேயில்லாத மனுஷங்களும் இருக்காங்க.. சுயநலமேயில்லாத அன்பும் இருக்கு மாப்ள… முன்னொரு காலத்துல.. தமிழ்நாட்டுல.. ‘ஸ்ரீவில்லிப்புத்தூர்’ன்ற ஊரில ஒரு பொண்ணு இருந்தா.. அவ.. கண்ணன் மேல அளவில்லாத காதல் வைச்சிருந்தா.. எப்படியான காதல்னா.. கண்ணன் மேல காதல் முத்திப் போய்.. அவனையே கணவனாகவும், காதலனாகவும் நினைச்சிக்கிட்டு.. தினமும்.. அவனுக்காக.. தன்னோட உள்ளத்துல இருக்கற ஆசையெல்லாம் சொல்லி.. கவிதைகள் பாடினாள்… கண்ணனுக்கு சூடுற மாலைகளை தான்.. எடுத்து போட்டுக்கிட்டு.. கண்ணாடி முன்ன நின்னு அழகு பார்க்கிற அளவுக்கு.. கண்ணன் மேல பைத்தியக்காரத்தனமான காதல் வைச்சிருந்தா.. ஒரு நாள்.. கண்ணனுக்காகவே தன்ன அர்ப்பணிச்சு.. கண்ணனனோடு கண்ணனா.. கலந்தும் போனாள்” என்று..’சூடிக் கொடுத்த சுடர்க்கொடியின் கதையை அழகுற எடுத்துக் கூறிய வாசு, 

பையனின்.. வலி மறந்த… ஆர்வம் கலந்த விழிகளை சின்ன புன்னகையோட பார்த்துக் கொண்டே,

 “கண்ணனுக்காக உயிரையும் கொடுக்குற அளவுக்கு.. அவன் மேல் காதல் வைச்சிருந்த.. அந்த பொண்ணோட பெயர் ‘ஆண்டாள்’..”என்று அவர் சொன்ன அடுத்த கணம்.. சிறுவன் பரிதியின் இதழ்கள் மென்மையாக சொல்லிப் பார்த்தது “ஆண்டாள்” என்று. 

சிறுவன் பரிதியின் இதயத்தை.. யாரோ ஒரு நிழலுருவான பெண்ணொருத்தி… மயிலிறகு கொண்டு தடவுவது போல இதமாக இருந்தது!! 

பரிதியின் கண்கள் இத்தனை நேரம் சுமந்து நின்ற வலிகள்.. அனைத்தும், தான் உரைத்த ‘ஆண்டாள்’ கதையின் பின்னர்.. 

உருத்தெரியாமல் போனது கண்ட சந்தோஷத்துடன், தொடர நாடியவர், 

“ஆண்டாளோடது தூய அன்பு.. ஒரு துளி கூட சுயநலம் கலக்காத உன்னதமான அன்பு..கண்ணனுக்காவே வாழ்ந்து மடிஞ்சா ஆண்டாளு..”என்று சொல்ல,

சுயநலமில்லாது அன்பு காட்டிய ‘ஆண்டாள்’ என்ற பெண்.. அவன் பிஞ்சு மனத்தில் ஆழமாக பதிந்து போனது அப்போது தான்!! 

‘ஆண்டாள்!! கண்ணன் சூடும் மாலைகளை.. தான் சூடி அழகு பார்த்த… கண்ணனுடைய காதலுக்காக ஏங்கித் தவித்த பெண் ஆண்டாள்!!’

அன்புக்கு ஏங்கித் தவித்த பரிதியின் பிஞ்சு உள்ளம், தனக்கான ஆண்டாளைத் தேட ஆரம்பித்த கணப்பொழுதும் அப்போது தான்!! 

காயங்கள் மறந்தவனாக வைக்கோல் மேட்டை விட்டும் எழுந்தவன், பளபளக்கும் விழிகளுடன், “என் வாழ்க்கையிலேயும் அப்படியொரு ஆண்டாள் வருவாளா மாமா???”என்று கேட்டான். 

அப்போது.. சின்னப் பையனாக இருந்த பரிதிக்கு.. அது “காதல்” என்ற வாலிபர்களின் எண்ணம், மனதோடு முகிழ்க்கவில்லையாயினும் கூட, 

“சுயநலமில்லாத அன்பு” என்ற வாசகம் மட்டும்.. ஆழமாகப் பதிந்தது. 

மருமகனின் நம்பிக்கைக்கு இன்னும் உரமூட்டும் வண்ணம் வாசு மாமாவும்,

 “கண்டிப்பா வருவா மாப்ள.. சுயநலமில்லாமல்.. உன்னய உனக்காக நேசிக்குற ஆண்டாளு.. கண்டிப்பா வருவா..”என்று மொழிந்தது இன்றும் காதோரம் ஒலித்தது அவனுக்கு!! 

இதோ… அவனது கண்ணெதிரே.. தன்னுடைய சிவந்த காதினை கார் குழல் கற்றை மறைக்க,.. சிசு சுமந்த வயிற்றுடன்.. அவனை நோக்கி ஒருக்களித்துப் படுத்திருக்கும் அவனது ஆண்டாள்!! 

சுயநலமில்லாமல்.. அவனை நேசித்த.. அவனை.. கண்மூடித்தனமாக நம்பிய.. அவனுடைய ஆண்டாள் !! 

நிஜமாகவே.. அவனுக்காகவென்றே வந்த.. ஒரு பசுஞ்சோலை அவனது ஆண்டாள்!! 

அங்கணம்.. பொல்லாத பழைய நினைவுகள்.. எழும்பி..உடலில் ஊடுருவி.. குரூர வலியைக் கொடுக்க.. அவற்றை நினைக்கவே கூடாது என்று கஷ்டப்பட்டு ஒதுக்கித் தள்ள முயன்றான் பரிதி வேல் வீரன்!! 

இப்போது.. நிகழும்.. இந்நொடியை மாத்திரம் இரசிப்பதே உத்தமம்’ என்று தோன்ற.. வலிகளை ஆழ்மனக்கிடக்கையில் போட்டு.. ஒரு பெருமூச்சும் எறிந்து கொண்டான் அவன்!! 

காதினை மறைத்த மென்னிலாவின்.. கார்க்குழல் கற்றை.. தற்போது அவளது வெண்ணையில் குழைத்து குழைத்து செய்தாற் போன்றிருந்த கன்னத்தையும் மறைத்து வீழ, 

அதை காதுக்குப் பின் சொருகிய வண்ணமே, காதல் ஊற்றெடுக்கும் விழிகளுடன், “ஆண்டாளுஹ்!!”.. என்றான் இதமாக. 

தூக்கத்திலும் கூட, அவனது அழைப்புக்கு அனிச்சைச் செயல் போல, கிறங்கும் தொனியில், “மாமாஹ்” என்றவள், சற்றே நகர்ந்து வந்து அவனது மாரோம் தனது தலைபுதைத்துக் கொண்டாள் அவள்.

சர்வ நிச்சயமாக அது நடிப்பல்ல!! 

அயர்ந்த தூக்கத்திலும் கூட.. ஒருவரால் நடிக்க முடியுமா என்ன?? 

அவனது ‘ஆண்டாளு’ என்னும் ஒற்றையழைப்பு.. தூக்கத்திலும் கூட.. அவளை பாடாய்ப்படுத்துகிறதோ?? அதனால் தான்..அவன் இருக்கும் திசை நோக்கி வந்து.. காந்தம் போல ஒட்டிக் கொண்டாளோ அவளும்?? 

தன் மாரோரம் குஞ்சுப் பறவையாக சுருண்டு கொண்டவளின் மதிமுகத்தைக் கண்டதும்.. பரிதியின் முகம் கொஞ்சம் மிருதுவானது. 

அதிலும் அவள் தனக்கான வாரிசு சுமப்பதில்.. இரட்டிப்பு சந்தோஷம் மிக, அவளது மெல்லிய வயிற்றினைப் பற்றிக் கொண்டான் அவன். 

வயிற்றைத் தடவிக் கொடுத்தவனுக்கு மாமா உரைத்த ‘சுயநலமில்லாத அன்பு’… அவனுக்கு கை கூடியது போல.. திரும்ப வந்து ஐக்கியமானது போலவே தோன்றியது. 

அவளது நெற்றியில்.. அவள் துயில் கலையாத வண்ணம்.. மிக மிக மென்மையாக முத்தம் இட்டவன், உறுதியான குரலில் சொன்னான், “உன்னையும், நம்ம குழந்தையையும் கடைசி வரை பாதுகாப்பேன் ஆண்டாளு”என்று!! 

கணவன்.. தன் முகம் பார்த்து காதல்மொழிகள் இயம்புவது அறியாத மென்னிலாவோ.. ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்க.. கீழ்வானில்.. கொஞ்சம் கொஞ்சமாக எட்டிப் பார்க்கத் தொடங்கினான் ‘ரியல்’ பரிதி!!

சூரியனின் கிரணங்கள்.. சாளரம் தாண்டி விழுந்து.. தன்னைக் கட்டியணைத்துப் படுத்துக் கொண்டிருந்தவளின் மேல் பட்டுத் தெறித்து.. 

அவள் மேனியில் தங்கச்சாந்து பூசியது போன்ற.. செம்மையான அழகினைக் கொடுக்க, அதை இரசித்துப் பார்த்திருந்தவனுக்கு, 

சூரியனின் உஷ்ணம்… அதை மனைவி தாங்கிக் கொள்வாளா? என்ற யோசனையும் எழவாரம்பித்தது!! 

தன் அழகிய ஆண்டாளின் துயில் கலைந்து விடாத வண்ணம் எழுந்தவன், சாளரம் தாண்டி விழும் சூரியக் கிரணங்களை.. திரைச்சீலை இழுத்து மறைத்தவன், 

‘அவள் இன்னும் கொஞ்சம் உறங்கட்டும்’ என்று எண்ணியவனாக, அரவமே எழுப்பாது குளியலறை நாடிப் போனான்!! 

குளித்து முடித்து.. அந்தக் காலையின் புதுப் புத்துணர்ச்சியுடன், தனக்கேயுரிய ட்ரேட்மார்க் ஆடையான வெள்ளை, வேஷ்டி சட்டை அணிந்து வந்தவனுக்கு.. அன்று காலையிலேயே செய்ய வேண்டிய வேலைகள் எக்கச்சக்கமாக இருந்தன!! 

அவன் கீழே இறங்கி வந்த போது.. அவன் முகத்தில்.. வாசற்படியோரம் விழுந்து தொலைத்த முகத்தைக் கண்டதுமே.. பரிதியின் சாந்தமான முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடிக்கவாரம்பித்தது. 

காலையிலேயே.. தன்னிடம் பணிபுரியும் கடன்காரன் ‘மாறன்’ இரவு முழுவதும் தூங்காத விழிகளுடனும்,

 அக்குளில் அதக்கிய துண்டுடனும்.. கைகளை கட்டிய வண்ணம்.. நான்காக மடிந்தவர் போல நின்ற தோரணையே எரிச்சலைக் கொடுத்தது அவனுக்கு!! 

கூடவே மாறனின் பக்கத்தில்… நின்றிருந்தாள்.. பதினைந்தே வயதான இளம்மகள்!! 

கொடுத்த காசை.. மூன்று மாதங்களுக்கு மேலாகியும் தராத ‘மாறனுக்கு’ நேற்று வீடு சென்று.. உயிர் வெளவெளத்துப் போகும் வண்ணம், 

“ந்நாளைக்கேஏஏ…வ்வட்டியும், ம்முதலுமா.. எல்லாமும் ஸெட்டில் ப்பண்ணிட்ற?” என்று எச்சரித்து வந்தான் தான் அவனும்!! 

அதற்காக காலையிலேயே… மாறன் வந்து நிற்பது அபசகுனம் தென்பட்டாற் போல எரிச்சலைக் கொடுக்க… முகத்தை சுளித்துக் கொண்டே போய் சோபாவில் அமர்ந்தவன், 

சைகையாலேயே மாறனை உள்ளே வருமாறு பணிக்கவும் செய்தான் பரிதி!! 

‘மாறனின்’ முகத்தைக் கண்டால்.. பணத்தை ஸெட்டில் செய்ய வந்தவன் போல ஒருதுளியும் இல்லை.

 மாறாக.. இன்னும் இன்னும் காலத்தை நீட்டியடிக்க.. பொய்க்காரணங்களை.. ஏற்கனவே தயார்ப்படுத்தி வைத்து.. வந்திருப்பது போல இருக்கவும்.. இன்னும் கொஞ்சம் கடுப்பானது பரிதிக்கு!! 

அந்த அகலமான சொகுசு சோபாவில்.. தன் கம்பீரத்துக்கு இன்னும் கம்பீரம் சேர்க்கும் வகையில் கால் மேல் கால் போட்டவனாக அமர்ந்தவன், தன் முன்னாடி பவ்யத்தின் சிகரமாக நின்றிருந்த மாறனை… ஏறிட்டுப் பார்த்தான் பரிதி. 

தன் எஜமானனின், பார்வையை புரிந்து கொண்டாற் போல மாறனும், தலையை சொறிந்து கொண்டே அசடு வழியும் குரலில், 

“ஐயா.. காலங்காத்தாலேயே வந்து நின்னிருக்கேன்னு தப்பா நினைச்சிக்கிடாதீங்கய்யா.. இந்த வாரம் மட்டும் பொறுத்துக்கிட்டீங்கன்னா.. கண்டிப்பா அடுத்த வாரம் வட்டியும், முதலுமா திருப்பிக் கொடுத்துருவேனுங்கய்யா..” என்று பணிந்த வண்ணமே சொல்ல, 

ஒரு தகப்பன்.. தான் பெற்ற மகள் முன்னிலையில்.. இன்னொருவன் முன்னாடி குனிந்து நிற்பதுவே.. எரிச்சலைக் கிளப்பியது பரிதிக்கு!!! 

அதிலும் ‘மாறனின்’ சீதேவித் தனமற்ற இருண்ட முகத்தை காலையிலேயே காண நேர்வது.. அவனை ஒரு சீற்ற மனோபவாத்துக்கு தள்ள, 

கடுகடுத்த குரலில், “அதெல்லாம் முடியாது… “என்று கடுப்பானவன், மாறனுக்கு தகாத வார்த்தைகளால்… அவன் மகள் முன்னிலையிலேயே திட்டி விடவே நாடினாள். 

‘மாறனின் அதிர்ஷ்டம்’ என்ற வாசகம் தான், இத்தருணத்தில் சாலப் பொருந்தும்!! 

அந்நேரம் பார்த்து, தலைக்கு குளித்து விட்டு.. தளர விட்ட கூந்தலுடன்.. ஐந்தரையடி ரோஜா மலருக்குத் தான் கை, கால் முளைத்து விட்டதோ என்று அவன் ஐயுறத்தக்களவுக்கு, 

வனப்பான இளஞ்சிவப்பு நிற பட்டுச் சேலையில்.. சிந்தையை மயக்கும் வண்ணம்.. மாடிப்படிகளை விட்டும் இறங்கி வந்த மனைவி… 

அவனது விழிகளில் விழ..அவளது அழகில்..கழுத்துக்கு கீழான பிரதேசத்தில்.. தொங்கிக் கொண்டிருந்த தாலிச்சரடில்.. 

 சேலைத்தலைப்பை இடுப்பில் சொருகியிருந்ததால்.. தெரிந்த அழகிய சிவந்த இடுப்பில், ஆகியவற்றில் இருந்து விழியெடுக்க முடியாமல்.. 

அந்த நிமிஷங்கள்.. அப்படியே உறைந்து போக, கல்லாய் சமைந்து நின்றான் ஆண்மகன் பரிதிவேல் வீரன்!! 

மாறனைத் திட்ட திறந்த அவனது அதரங்கள் அழுந்த மூடிக் கொள்ள.. தனக்கே தனக்கென்று சொந்தமான.. தன் ஆண்டாள் அங்கிருந்து இறங்கி வந்து.. 

அடுக்களைக்குள் நுழைகிற போக்கில், அடர்ந்த கண்ணிமைகள் உயர்த்தி.. ஒரு அழகான பார்வை.. அவனை நோக்கி வீசியவள், ‘சிரித்தாளா? இல்லையா?’என்று சந்தேகம் தருவிக்குமளவுக்கு.. ஒரு அணுப்புன்னகையை.. அவனுக்கு பரிசளித்து விட்டுச் செல்ல, 

அந்த சிரிப்பில்.. சர்வமும் கரைந்துருகிப் போக.. ஒரு குழந்தை போல… மென்மையாக புன்னகைத்து வைத்தான் பரிதி!! 

அவள் தன் கண் பார்வையில் இருந்து அகன்றதும் தான் நடப்புக்கு திரும்பியவன்.. 

தன் முன்னாடி குற்றவாளி போல நின்றிருந்த மாறனை.. திரும்பவும் காய்ச்சியெடுக்க தயாராகி,

 “ய்யோவ்… ம்மூணு ம்மாசமா.. உனக்கு டைம் தந்தது பத்தாது?? .. இன்னும் ஒருவாரம் கேட்குதோ?? இன்னைக்கு ஈவ்னிங்க் வர தான் உனக்கு டைம்.. அதுக்குள்ள செட்டில் பண்ற வழியைப் ப்பாரூஊஊ”என்று கத்த, 

 அவனது நாராசமான குரலை உள்ளுக்குள் இருந்து கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு, “என்ன இவன்? காலையிலேயே இப்படி கத்திக் கொண்டிருக்கிறான்?’ என்றே தோன்றியது. 

மெல்ல சமையலறை வாசலில் இருந்து எட்டிப் பார்த்த தருணம்.. கணவன் முன்னிலையில் ஒரு வயோதிகர் கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டு.. காதுகளைப் பொத்திக் கொள்ளும் வண்ணம் நாராசமான வார்த்தைகளில் திட்டுவாங்கிக் கொண்டிருப்பதையும்… 

அதனை அருகில் இருந்த சிறுமி.. பரிதாபகரமான விழிகளுடன் பார்த்திருப்பதையும் கண்டவளுக்கு.. உள்ளூற சின்ன கவலை பிறக்க, ‘இதற்கு ஏதாவது செய்தே ஆக வேண்டும்’ என்று தோன்றவே, 

அடுக்களை வாயிலோரம் நின்று.. மிக மிக மென்மையாக, கிசுகிசுக்கும் குரலில்.. “இஸ்க்க்.. இஸ்க்க்..”என்று அவள் கணவனை அழைக்க, 

மாறனைத் திட்டிக் கொண்டிருந்தவன்.. திட்டலை நிறுத்தி விட்டு.. ‘இஸ்க் இஸ்க்’ என்ற ஒலி.. எங்கிருந்து வந்தது என்று தெரியாமல் சுற்றுமுற்றும் திரும்பிப் பார்க்கலானான். 

ஒலி தான் வந்ததேயொழிய.. ஆளைக் காணோம்!!

‘ஏதோ மனப்பிரம்மை போலும்’ என்று எண்ணிக் கொண்டவன், ஒலியில் கவனம் செலுத்தாமல்.. மீண்டும் அவன் திட்ட வாயெடுக்க, 

அவனது காது.. அதே கிசுகிசுக்கும் குரல், “மாமாஆஆ…? மாமாஆஆஹ்?? ”என்ற அழைப்பது கேட்டு.. புருவங்கள் இடுங்க நின்றவன், அந்த அழைப்புக்கு சொந்தக்காரி யாரென்று புரிந்ததும்… 

இதயத்தில் ஜிலீரென்று கூதல் காற்று வீச… சத்தம் வந்த திசையை நோக்கி சட்டென்று தலையைத் திருப்பினான். 

அங்கே சமையலறை வாசலோரம்.. அடர்ந்த கூந்தல் தோள் மேல் மயில்தோகை போல விரிந்து கிடக்க.. தலையை மட்டும் நீட்டியவளாக..எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த மனைவியை அவன் இமைக்க மறந்து தான் பார்க்கலானான். 

அவனது ஜொள்ளு விடும் பார்வை.. உள்ளூற எரிச்சலைக் கிளப்பினாலும் அதை காட்டிக் கொள்ளாது, மந்தகாசமான புன்னகையை உதிர்த்தவள், ஹஸ்கி குரலில், 

“மாமாஹ்.. இங்கேஹ் கொஞ்சம் வாங்களேன்??..”என்று கைநீட்டி அழைத்தாள் அவள். 

அனைவர் முன்னிலையில் தன் ஆண்டாள் அழைத்ததும்.. மனதுக்குள் குளுகுளுவென்று இருக்க,

சோபாவில் இருந்து.. இறுமாப்புடனேயே எழுந்தவனின் பாதங்கள்.. அவளை நாடி பூனைக்குட்டி போல விரைய, அதைக் கட்டுப்படுத்த பகீரதப் பிரயத்தனம் செய்யலானான் அவன். 

சமையலறை அடைந்தவனின் குரல்.. குழந்தையின் குரல் போல இளகிப் போயிருக்க, “என்ன ஆண்டாளுஹ்..?”என்று கண்களில் காதல் முட்டக் கேட்டான் அவன்.

கணவனின்..நேர்த்தியாக மடிக்கப்பட்ட சட்டைக்காலரை சரி செய்வது போல.. அவனை நெருங்கி நின்றவள், அவனது மார்பை தடவியவளாக, 

மயக்கும் மாயக்குரலில், , “ஏன் காலங்காத்தால.. கோபப்படுறீங்க?? அமைதியா பேசுங்க.. அமைதியாகவும்.. சொல்ல வர்ற விஷயத்தை சொல்லலாம்.. அவர் தான் அடுத்த வாரம் தர்றேன்னு சொல்றாருல? இந்த ஒரு வாட்டி தான்.. விட்ருங்களேன்.. பாவம்.. அவருக்காக இல்லாட்டியும்.. உங்க ஆண்டாளுக்காக… ப்ளீஈஈஈஸ்”என்று மனைவி கெஞ்ச, மனைவியின் அண்மையில் உருகிப் போனான் அவன். 

கண்கள் மிருதுவாக.. அவளது அதரங்களின் அசைவையே பார்த்திருந்தவனுக்கு.. காதல் மயக்கம் குடி கொள்ளலானது.

 அப்போதே.. அவளது இதழ்களில் உறையும், ‘காதல் தேன் உட்கொள்ள வேண்டும்’ போல ஒரு எண்ணம் கள்ளத்தனமாகப் பிறக்க.. இடம், பொருள், ஏவல் கருதி.. தன் ஆசையைக் கட்டுப்படுத்திக் கொண்டு நின்றான் அவன். 

சட்டையை இழுத்து சரி செய்த வண்ணமே.. தன் காதல் மயக்கத்தையும் சரி செய்தவனாக, மாறனை அடைந்தவன், 

முன்பு போல கோபப்படாமல்.. சற்றே தணிந்த குரலில், “சரி.. அடுத்த வாரம் தந்தா போதும்..”என்று சொல்லி விட.. 

உணர்ச்சி வசப்பட்டவனாக அவனைக் கையெடுத்துக் கும்பிட்ட மாறன், “ஐய்யாஆஆ.. ஆயுசுக்கும் நீங்க நல்லா இருக்கோணுமுய்யாஆஆ” என்று சொன்னவனுக்கு, முதல் முறையாக ஒரு ஏழைக்குடியானவன்.. தன்னை மனமார வாழ்த்துவது கேட்டு… என்னவென்று எழுத்தில் சொல்ல முடியாத இதம் பரவியது அவனுக்கு!! 

மெல்ல திரும்பியவன்.. சமையலறை வாசலோரம்.. புன்னகை முகமாக நின்றிருந்த மனைவியை நோக்கி.. சைகையில் தலையாட்டி, ‘இப்போ உனக்கு சந்தோஷமா?’ என்பது போல கேட்டான் அவன். 

அவளும் ‘ கூந்தலை காதுக்குப் பின் சொருகுவது போல குனிந்து.. யாரும் அறியாமல்..அவன் செய்கைக்கு நன்றி சொல்லும் முகமாக.. உதடுகள் குவித்து.. முத்தம் கொடுக்க, 

அந்த இதழ்களின் குவிப்பில்.. சித்தம் குலைந்து.. பெருமூச்செறிந்த வண்ணம்.. நிலையாக நிற்க தடுமாறிப் போனான் அவன்!! 

முதலாளியின் காதல் மனோநிலையை அறியாது.. இடையிட்ட மாறன், கட்டிய கைகளை இறக்கவேயாது, 

“ அதுவரை.. என் பொண்ணு.. உங்க வீட்டுல..வேலை பார்க்கட்டும்ய்யா”என்று சொன்னதும், இம்முறை அடக்கவே மாட்டாமல் கடுப்பானான் பரிதி. 

மாறனை சுட்டெரிப்பது போல பார்த்தவன், “ஸ்கூலுக்கு போற பொண்ண வேலைக்கு அனுப்புறேங்குற??.. உன்னெல்ல்ல்.. லாஆஆம்” என்று அடிக்க கையை ஓஙகியவன், 

மனைவி தன்னையே அதிர்ச்சி முகத்துடன் பார்த்தருப்பதைக் கண்டதும், கையை ஓங்குவதை நிறுத்தி விட்டு, முயன்று வரவழைத்த தணிந்த குரலில், “அதெல்லாம் தேவையில்லை கூட்டிப் போ..”எரிச்சலுடன் அனுப்பி வைக்கலானான். 

அன்று பரிதிக்கு விடிந்த காலை.. இனிய காலைப்பொழுதாகவே இருந்தது. 

மனைவியின் காதல் பார்வையும், மொழிகளும் அவனைப் பித்தனாக்க… அந்த பித்து நிலை கூடப் பிடித்திருந்தது அவனுக்கு!! 

அவளுடனேயே காலையுணவை சிம்ப்பிளாக முடித்துக் கொண்டவன், 

கிளம்பும் போது.. “இன்னைக்கு மதியம் சாப்பிட வரமாட்டேன்..ஈவ்னிங்க் தான் வருவேன்.. எனக்காக காத்திருக்காமல்.. சாப்பிட்டுரு என்ன?? ஏதாவது அவசரம்ன்னா கோல் பண்ணு ஆண்டாளு”என்று சொன்னவன், அங்கிருந்து நகர மனமேயில்லாமல் தான் சென்றான். 

ஆனால் அவளுக்கோ.. அவன் நீங்கிய கணம் தான் இயல்பாக இருக்கவே முடிந்தது!! 

அவனில்லாத தனிமையில்.. தற்போது அவள் சுமந்து கொண்டிருக்கும் ‘வேண்டாத குழந்தை’ பற்றிய யோசனையிலேயே நேரம் போனது அவளுக்கு. 

அதன் தந்தை செய்த தவறுக்காக.. ஒரு பாவமும் செய்யாத குழந்தையை.. தண்டிப்பது.. எந்த விதத்திலும் ஞாயம் என்று தோன்றவேயில்லை அவளுக்கு!! 

அதேசமயம்.. அவனை வீழ்த்த.. அவள் மனதினுள் உருப்போட்டு வைத்திருக்கும் திட்டங்களுக்கு இடையூறாக, குழந்தை இருப்பதை.. எவ்வாறு தடுப்பது என்றும் புரியவில்லை!! 

இந்த யோசனையுடனேயே அவள் உழன்று கொண்டிருந்த போது.. சொன்னது போலவே.. தன் பால் சுயநலமில்லாத அன்பு செலுத்தும் ஆண்டாளைத் தேடி.. மாலை மங்கும் நேரம் வந்தான் பரிதிவேல் வீரன்!! 

அவன் திரும்பி வந்த போது.. அவனது வெள்ளை சட்டையின் பாக்கெட் அருகாமையில்.. இருந்த திலகக் கறையில்… விழிகள் இடுங்க.. புருவங்கள் முடிச்சிட..நிஜமாகவே உள்ளம் உறைந்தது அவளுக்கு. 

என்ன தான் அவனுடன் காதல் செய்வது போல நடித்தாலும் கூட… கணவனின் சட்டைப்பாக்கெட் அருகாமையில் தெரிந்த குங்குமக் கறை.. அவளை ஆட்டிப்படைக்கவே செய்தது. 

பழிவாங்க வந்தவளேயாயினும், கணவனில் தென்படும் சின்ன மாற்றத்துக்கும் அவளது உள்ளம் பதறுவதும் தான் ஏனோ?? 

அவளுள் ஏற்படும் பதற்றத்தை.. வளரவே விடக்கூடாது என்று விடாப்பிடியாக உதறித் தள்ளினாள் மென்னிலா. 

அவன் யாரோடு.. எப்படியிருந்தாலும் தனக்கென்ன? என்று விட்டேற்றியாக எண்ணிக் கொண்டவளுக்கு.. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி.. அவனது மன அமைதியை இல்லாமல் செய்ய வேண்டும் என்ற வைராக்கியம் எழுந்தது. 

தன்னை மையலுடன் பார்த்த வண்ணம்.. அவன் கட்டுக்கடங்காத ஆசையுடன், “என் ஆண்டாளூஊஊ!!’ என்றவாறு.. கட்டியணைக்க வர,.. அவனை கையுயர்த்தி தடுத்தவளுக்கு.. கண்களில் சரம் சரமாக போலிக் கண்ணீர் கோர்க்கத் தொடங்கியது. 

அவளது கண்ணீர் கண்டு பதறி நின்றிருந்தான் அந்தக் காதல் கிறுக்கன்!! 

இவளோ சின்னக்குழந்தைகள் போல கண்களைத் துடைத்துக் கொண்டு, 

“இன்னைக்கு நீ.. நீங்.. க.. எங்கே போய்ட்டு வந்தீங்க மாமா??. நீங்க எனக்கு தெரியாம ஏதோ தப்பு பண்றீங்க..?? சட்டையில் ஏது குங்குமக்கறை??..”என்று கேட்க, அப்போது தான் குங்குமக்கறை கண்டவன், கைசேதப்பட்டவன் போல.. தலையிலடித்துக் கொண்டு நின்று விட்டான் பரிதி!! 

மனைவி தன்னை தவறாக எடுத்துக் கொண்டது போதாது என்று, கண்ணீர் விடுவது வேறு.. அவனது மனதை அலைக்கழிக்க,

 “அதெல்லாம் ஒண்ணுமில்ல ஆண்டாளு..”என்றபடி அவளை சமாதானப்படுத்த அவளை நோக்கி ஓரெட்டு முன்வந்தான் அவன். 

அவளும்.. பின்னாடி நகர்ந்தபடியே.. அவனை சுட்டிக் காட்டி அழுத வண்ணம், 

“ந்.. நீங்க.. நீங்க திரும்பவும் என்னை ஏமாத்து… றீங்க தானே..?”என்று அழ ஆரம்பிக்க, 

அவள் அழுவது தாங்க மாட்டாமல்.. அவளைக் கட்டியணைக்க முயல.. அவனது கையணைப்பை உதறித் தள்ளினாள் அவள்!! 

அவனோ.. சொல்வது கேட்காத மனைவியைப் பார்த்து இயலாமை நிறைந்த குரலில், “இல்ல ஆண்டாளு… அப்படியில்லமா… நான் சொல்றதை கேளு..”என்று மீண்டும், மீண்டும் அவளை நெருங்க, 

அவனைத் தள்ளிவிட்டிக் கொண்டே, 

சீறும் அடிக்குரலில் இருந்து, “க்கிட்டவராதீஈஈஈங்க.. ந்நீங்க திரும்பவும் என்னைப் போல… யாரோ ஒரு பொண்ண ஏமாத்துறீங்க…. நிச்சயமா சொல்வேஏஏஏன்!!.. நீங்க என்னை.. இப்போவும்.. ஏமாத்துறீஈஈங்க?”என்றவளுக்கு, வெறுப்பு தான் வந்ததேயொழிய.. வெடித்து வரும் அழுகை தான் வரமாட்டேன் என்றது.

அதனால் தன் நடிப்பை அவன் கண்டு கொள்வானோ? என்று பயந்தவள், தன் உள்ளங்கைகளில் முகம் புதைத்துக் கொண்டு.. போலியாக விம்மி விம்மி ஒலியெழுப்ப, 

உள்ளத்தில் பழையகால நினைவுகளின் வலி எழுந்து பரவியது அவனுக்கு!! 

என்ன செய்வது என்று தெரியாமல் தத்தளித்துப் போன பரிதி, “நான் அநியாயம் பண்ண முதலும், கடைசியுமான பொண்ணு நீ தான் ஆண்டாளு.. உனக்கு பண்ண பாவத்தையே.. தொலைக்க முடியாமல் இருக்கேன்.. இதில் இன்னொன்னு வேறயா?”என்றபடி.. மீண்டும் அவளை நெருங்கி வர, 

அவன் சொற்களை நம்பாதவள்.. சிவந்த விழிகளுடன், “என்னைத் தொடாதீஈஈஈங்க!!!..”என்று தீச்சுட்டாற் போன்று.. அவனில் இருந்து விலகி நிமிர்ந்தாள் அவள்!! 

மனைவியின் விலகல்.. கொடூர வலியைக் கொடுக்க, பரிதிக்குள்.. அவன் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டு கொடூரத்தனம் மீண்டும் முகிழ்த்தது. 

கை முஷ்டி மடக்கி.. நரம்புகள் ஓட நின்றவன், விரிந்த விழிகளுடன் கடுங்கோபத் தொனியில், 

“ந்நாஆஆன் உனக்கு துரோகம் பண்றேன்னு நினைக்குறீய்யாஆஆ?? அப்படி ந்நாஆன் உனக்கு துரோகம் பண்ணனும்னாலும்.. அதை ஒளிச்சு மறைச்சு செய்ய வேண்டிய அவசியம் என் கிட்ட இல்லை!! ஏன்னாஆஆ.. துரோகத்த தைரியமா பண்ணக்கூடிய தில்லு என்கிட்ட இருக்கு!!” என்று அவன்… தன்னை அவளிடம் புரிய வைப்பதற்காக இறுதி வசனம் சொல்ல, 

அதற்கு தவறான அர்த்தம் கற்பிதம் செய்து கொண்டாள் அவள்! 

‘துரோகத்த தைரியமா பண்ணக்கூடிய தில்லு என்கிட்ட இருக்கு!!’

உண்மை தானே.. இரண்டு வருடங்களுக்கு முன்பு.. அவன் செய்த துரோகமும்.. தில்லான தைரியமான துரோகம் தானே?? 

சட்டென்று அவளது வளைகை பற்றி பிடித்துக் கொண்டவன், தீவிர விழிகளுடன் அவளை நோக்கி, “நான் எங்கே போனேன்னு தெரிஞ்சிக்கணுமாஆஆ?..அப்படின்னா.. என் கூடவ்வாஆ..??”என்றவன்.. அவளை அழைத்துக் கொண்டு..தன் காரில் ஏறிச் சென்றான். 

அவன் அவளை அழைத்துச் சென்றது.. அவள் சற்றே பழக்கப்பட்ட இடம் தான்!! அது.. அவள் வீட்டில் பணி புரிந்த மஞ்சுளாவின் வீடு!! 

இங்கே எதற்கு தன்னை அழைத்து வந்தான்??

 மஞ்சுளாவை அவன் நாடி வந்ததன் காரணமென்ன?? 

அப்படியானால் இந்தக் குங்குமக்கறை?? அவளுடையதா?? என்று விழிகள் இடுங்க அவள் சிந்திக்க, ஓரெட்டு எடுத்து வைக்க முடியாமல், மஞ்சுவின் வீட்டு வாசலிலேயே.. உறைந்து நின்றிருந்தாள் அவள்!! 

அவள் கையை அப்போதும் விடாமல் பற்றியிருந்தவன், உள்ளே இழுத்தவனாக, 

“இன்னும் ஏன் வெளியிலேயே நின்னுட்டிருக்க? வ்வாஆ.. உன் கேள்விக்கான பதில் இங்க தான் இருக்கு”என்று சொன்னவன், அவளது வளைகை பற்றிக் கொண்டு.. மஞ்சுவின் குச்சு வீட்டுக்குள் நுழைந்தான். 

அங்கே அந்த வீட்டில்.. சரி வர.. ஒரு அறை கூட இல்லாத கூடமும், சமையலறையும் மாத்திரம் இருந்தமையானது.. மஞ்சு வீட்டின் ஏழ்மை நிலையை பறைசாற்றிக் கொண்டிருந்தது. 

அந்த குட்டிக் கூடத்தில்.. போடப்பட்டிருந்த கட்டிலில்.. அமர்ந்திருந்த உருவத்தின் கோலத்தைக் கண்டதும்.. திகைப்பூண்டை மிதித்தாற் போல நின்று விட்டிருந்தாள் மென்னிலா!! 

சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில்… அகோரமான கூந்தலுடன்.. நைந்து போன ஆடைகளுடனும், காற்றில் எதையோ தனக்குத் தானே பேசிக் கொண்டே அமர்ந்திருந்தாள் மஞ்சு!! 

மஞ்சுளாவின் தாயாரோ.. இளம்மகளின் நிலையை.. தன் எஜமானியம்மா பார்க்க வந்ததும்.. 

ஆத்திரம் உடலை அடைக்க, சேலைத்தலைப்பில் வாய் பொத்தி அழுது கொண்டே இருக்க, 

அவற்றையெல்லாம் கண்டு அதிர்ந்து நின்றவளுக்கு, அனிச்சை செயல் போல இதழ்கள் “மஞ்சூஊஊ..??”என்ற வண்ணம்.. மனநலம் பாதிக்கப்பட்ட மஞ்சுவை ஓடிப் போய் அணைத்துக் கொண்டாள்!! 

பாவம். அந்த மஞ்சுப் பெண்!!

‘ யார் தன்னை அணைத்தது?’ என்று தெரியா விட்டாலும்.. ஒரு மனித உடல்.. தன்னை அணைப்பது அறிந்து.. பதறிப் போனவள், 

“எ… என்.. ன வ்விடூஊஊ… அம்.. அம்மாஆஆஆ… அம்மாஆஆஆ..”என்று கத்தியவள்,வெறி வந்தவளாக.. மென்னிலாவைத் தன்னிலிருந்தும் தள்ளி விடத் தொடங்க, மஞ்சுவின் நிலை எல்லாமே புதிதாக இருந்தது. 

கண்ணீர் மல்க கணவனைப் பார்த்தவளுக்கு.. ‘குங்குமக் கறை மஞ்சுவினுடையதா?’ என்று அப்போதும் சந்தேகத்துடன் கேட்டு.. நடிக்க.. மனம் வரவில்லை. 

மாறாக.. இம்முறை அவள் தன் உள்ளத்திலிருந்தே கதைத்தாள்!! 

தன் பழிவெறி ததும்பும் நடிப்பை ஓரங்கட்டி வைத்தவள், கணவனை நோக்கி, , “என்னாச்சு..பரிதி? நான் இல்லாத இரண்டு வருஷத்துல என்னாச்சூஊஊ.. சொல்லுங்க??”என்று கேட்க, பரிதியின் கண்கள்… முன்னிலும் பார்க்க சிவந்தது. 

“இந்த குங்குமக்கறை யாரோடதுன்னு இப்ப புரிஞ்சுதாஆஆ? மஞ்சுவுக்கு.. ஏன் இப்படியானது த்தெரியுமாஆஆ? நீ இல்லாத இரண்டு வருஷத்துல.. இங்க என்னென்னல்லாம்.. நடந்ததுன்னு த்தெரியுமாஆஆ?? நான் ஏன் இன்னைக்கு.. ரயில்வே ஸ்டேஷன்ல வைச்சு.. ஒருத்தன் கைய வெட்டினேன்னு த்தெரியுமாஆஆ..??” என்று அவன் மொழிந்த அத்தனை ‘தெரியுமா?’க்களுக்கும், ‘தெரியாது’ என்பது போல ஆடியது அவள் தலை!! 

உடல் விறைத்து.. கழுத்து நரம்புகள் புடைத்து வெளித் தெரிய, பற்களைக் கடித்துக் கொண்டு, “இத்.. தைய்யெ.. ல்லாஆஆம் த்தெரிஞ்சுக்க முன்னாடி.. நீ.. என்கூட.. ஒரு இடத்துக்கு வரணும்..”என்றவன்.. அவள் முன்னாடி தன் கையினை நீட்ட, 

அவளையும் அறியாமல்.. அவன் கையில் தன் கையைப் பதித்தாள் மென்னிலா!! 

காதல் தானடி என் மீதுனக்கு?

(விரைவில் பதில் நவில்வாள்) 

காதல் தானடி என் மீதுனக்கு? 

     [19]

பரிதிவேல் வீரனினதும், அவனது காதற்கிழத்தி மென்னிலாவினதும் சம்பாஷணைகளை ஒட்டுக் கேட்க நாடிய நிலவு மங்கையும்.. இரவு வானில் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த.. 

தென்றல் காற்று சலசலக்கும் ஏகாந்தமான இரவு அது!!! 

அவ்விருளில்.. மென்னிலாவின் கணவன்.. அவளை அழைத்துச் சென்றது சிறுத்தோப்பு கிராமத்தின் ஒதுக்குப்புற எல்லையில் இருந்த… சாதாரண வசதி கொண்ட.. நடுத்தர அளவுள்ள ஒரு வீடொன்றிற்கு!!

அந்த வீட்டுப்பக்கம்.. அவளுக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து.. சென்று பழக்கமேயில்லையாயினும் கூட.. அந்த வீட்டைப் பற்றி.. அரசல்புரசலாக.. பல விஷயங்கள் அவள் கேள்விப்பட்டதுண்டு. 

ஏனென்றால் சிறுத்தோப்பு கிராம மக்களின் கணிகையர்கள் வாழும்.. அநாச்சாரங்கள் பலவும் நிகழும் வீடு அது!! 

அநேகமாக பட்டணங்களில், ‘நைட் கிளப்’ என்ற பெயரில் இந்த அநாச்சாரங்களும், காமக்கிழத்தியர்களின் கூத்தும் நடக்குமென்றால், 

கிராமப்புறங்களிலோ சற்றே வித்தியாசமாக.. ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் வீடுகள்.. அல்லது தெருக்கள்.. இந்தக் கணிகையர்களின் வாழ்விடங்களாகவே அர்த்தம் கொள்ளப்படும்!! 

அது போன்றிருக்கும்.. ஒரு பரத்தையர் வீட்டிற்குத் தான்.. தன் சம்சாரத்தை அழைத்து வந்திருந்தான் பரிதிவேல் வீரன்!! 

கணிகையர் நாடி வரும்.. ஆடவர்களுக்கு உதவுற்காகவென்றே.. பல தரப்பட்ட வகையில் பெண்களைக் கொண்டு..அமைக்கப்பட்டிருந்த..அநாச்சாரம் நிகழும் இல்லம் அது!! 

என்ன தான் பகலில், “ஜென்டில்மேன்” வேஷம் போட்டுக் கொண்டு திரியும்.. ஆண்கள் பலர், 

இரவில் ‘வேஷ்டி’யையே முக்காடாகப் போட்டுக் இந்த கணிகையர்களின் இல்லத்திற்கு வந்து போய்க் கொண்டு தான் இருந்தனர்!! 

அதனால் விழிகள் இடுங்க.. கணவனை நோக்கிய மென்னிலா,கணவனின் செய்கைகளுக்கான காரணத்தை ஊகித்தறிய முடியாமல், 

திக்கிய குரலில், “இ.. இங்.. இங்கே எதுக்கு என்னை அழைச்சிட்டு வந்.. தீங்க மாமா? என்று கேட்க, அவன் அதற்கு உடனடியாக.. நேரடி பதில் ஏதும் அவளிடம் சொல்லவேயில்லை. 

எங்கே அவள் தன்னை விட்டும் சென்று விடுவாளோ? என்று பயந்தானோ? என்னவோ? 

அவளது வளைகையை விடாமல் பற்றிக் கொண்டவன், கூரிய விழிகளை அவள் மேல் நிலை நாட்டி, “சொல்றேன்.. அதுக்கு முன்னாடி உள்ளே வா” என்ற வண்ணம்.. அவளை உள்ளே அழைத்துச் செல்ல, வேறு வழியேயின்றி.. அந்த வீட்டிற்குள் நுழையத் தலைப்பட்டாள் தலைவி!! 

சிசு சுமந்து நின்றிருந்த நிலாப்பெண்ணுக்கோ.. கணவன் தான் கர்ப்பவதியாக இருக்கும் போது.. ‘இப்படியொரு அவலட்சணமான இடத்துக்கு அழைத்து வந்து விட்டானே’ என்று எண்ணும் போதெல்லாம்.. 

அடிவயிற்றில் இருந்து குமட்டிக் கொண்டு வரும் போலிருந்தது!! 

அதனால் பரிதியின் மீது ஒரு அருவெறுப்பு மீதூற.. தன்னை உள்ளே அழைத்துச் சென்ற.. கணவனின் முதுகையே.. எரித்து விடுவது போல.. வெறித்துப் பார்த்தாள் மென்னிலா. 

மனைவியின் கொடூரமான பார்வையை அறியாதவன், அங்கிருந்த கணிகையர்களுக்கெல்லாம்.. தலைமையாக உள்ளே பெண்ணை நோக்கிச் செல்ல, 

அந்தப் பெண்மணியோ.. இந்தப்பக்கம் ஒருநாள் கூட வராது வந்திருக்கும் பரிதியையும், கூடவே அவனது மனைவியையும் கண்டதும், 

அவர்கள் வந்திருக்கும் காரணம் அறியாது குழம்பிப் போனவள், சட்டென்று தன் இருக்கையிலிருந்தும் பவ்யமாக எழுந்து கொண்டவளாக, 

“ நீங்க எதுக்கு சார் இந்தப்பக்கம்?? .. அதுவும் மேடத்தோட வந்திருக்கீங்க..?”என்று ‘சார்’ போட்டு கேட்டாலும் கூட, அவளது வயதோ.. பரிதியின் வயதை விடவும் அதிகப்படியான அதிகமாகவே இருந்தது!! 

பரிதி..அந்தக் கணிகையர் குலத் தலைவியிடம்.. மேற்கொண்டு ஏதும் பேச நாடவில்லை என்பது.. அவனது கடுகடுத்த முகம் தெளிவுபடுத்திக் காட்டிக் கொண்டிருந்தது. 

அதனால்.. சிவப்பேறிய கண்களுடன்.. அவளைப் பார்த்தவன், “அவ்.. வன் எங்க.. இர்ருக்காஆன்??”என்று மட்டும் தான் கேட்டான். 

ஆனால் அந்தக் கணிகையர் குலத்தலைவியோ.. அவனது தலையும் இல்லாத, வாலும் இல்லாத வாழில் குழம்பிப் போனாளோ? இல்லை எதுவுமே தெரியாது என்பது போல நடித்தாளோ?? 

கைகளை பதற்றத்துடன் பிசைந்து கொண்டே, “ஆஆ.. ஆரக் கேக்குறீங்கன்னு புரியேல்லீய்யே??”என்று சொல்ல, அவளின் விழிகளைப் பிடுங்கி எறிவது போல… கொலைவெறி மிகுந்த கண்களுடன் பார்த்தவன், 

“ந்நாஆஆன்.. ஆஆஆரைக் கேட்குறேன்னு தெரியாஆஆதுஊஊஊ??”என்று அவன் அதிர்ந்து கேட்ட தினுசில், தூக்கிவாரிப் போட்டது கணிகையரின் உடல்!! 

கண்கள் மருட்சியில் படபடவென அடித்துக் கொள்ள, எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டே, “அ.. அது… மூ.. மூணாவது ரூம்.. சா.. சார்”என்று சொன்னது தான் தாமதம்,

 மனைவியை பின்னாடி வருமாறு சைகை காட்டியவாறே.. அவள் சொன்ன ‘மூன்றாவது அறை’க்கு வீறு கொண்ட சிங்கம் போன்ற நடையுடன் விரைந்து சென்றான் பரிதிவேல் வீரன்!! 

கணவனின் கட்டளைக்கு ஒப்ப.. அவன் பின்னாலேயே சிறு மெல்லோட்டமொன்றை ஓடிக் கொண்டே விரைந்து சென்றவளின் மனதோ… தடதடவென்று அடித்துக் கொண்டது.

 எந்த மாதிரி குடும்பத்தில் பிறந்தவளை.. இப்படியான இடத்தில் கொண்டு வந்து நிறுத்தி விட்டானே அவளது கணவன்?

வன்மத்தோடு..வெம்மை அதிகமாகி.. கண்கள் கொஞ்சம் கொஞ்சமாக சிவக்கலானது கர்ப்பிணிப் பெண்ணுக்கு!! 

மூன்றாவது அறையை நோக்கி நடந்து கொண்டே.. தன் வேஷ்டியை லாவகமாகத் தூக்கி.. தொடைகள் தெரிய.. மடித்துக் கட்டிக் கொண்டே… அவன் முன்னேறியதும் சரி.. 

சாத்தப்பட்ட மூன்றாவது அறைக்கதவை.. தன் வலிய பாதங்கள் கொண்டு.. அவன் ஆக்ரோஷமாக எட்டி உதைத்து திறந்த போதும் சரி.. 

அந்த கணம்.. நெற்றியில் வீழ்ந்த முடிகள் ஆட.. அவன் நின்றிருந்த போதும் சரி… 

பரிதிவேல் வீரனின் ஒவ்வொரு அசைவிலும், கம்பீரமும், அதனோடு இணைந்த ஆண்மையழகும்.. கொட்டிப் போயிருந்தது. 

ஆனால் அதை இரசித்துப் பார்க்கும் மனநிலை தான்.. அவளில் இல்லை!! 

அங்கே..கதவு உடைந்து.. திறக்கப்பட்ட.. தினுசில்.. 

ஒரு கணிகைப் பெண்ணின் மேல் படர்ந்து.. உல்லாசம் அனுபவித்துக் கொண்டிருந்த.. மேல் சட்டை எதுவும் போடாத ஆடவனொருவன்.. சட்டெனத் திரும்பிப் பார்க்க.. 

அங்கே பரிதிவேல் வீரன்.. ஆவேசமான.. விழிகளுடன் நின்றிருப்பது கண்டு.. காம ஆசைகள் முற்றிலும் வடிந்து போய்.. விக்கித்துப் போய் நின்று விட்டான் அவன்!! 

அவன் சரவணன்!! 

ஆம், அங்கே பரத்தைப் பெண்ணுடன் உறவாடிக் கொண்டிருந்தது.. பரிதிவேல் வீரனின் எதிரியும், மென்னிலாவின் முறை மாமனுமான அதே சரவணன்!! 

ஊருக்கு நல்லவன் வேஷம் போடும்.. பொம்பளைப் பொறுக்கி சரவணன்!! 

அந்தக் கணிகைப் பெண்ணில் நின்றும் எழுந்து கொண்டவன், வெறும் வேஷ்டியுடன்.. சீற்றம் கமழும் விழிகளுடன், “ந்நீயா.. ந்நீ ந்நீஈ.. .. எப்படி இங்கே?”என்று கேட்க, 

பரிதிவேலின் முகத்திலோ.. எதையோ சாதித்து விட்ட பரம திருப்திப் புன்னகை மெல்ல மெல்ல பரவவாரம்பித்தது. 

அப்போது தான்.. கணவனின் புறமுதுகுப் பக்கம் இருந்து வெளியே வந்த மென்னிலா.. சரவணனின் கோலம் கண்டு.. அதுவும் கேவலமான முறையில் தன் இச்சையைத் தீர்த்துக் கொள்ள மாமன் முன்வந்திருப்பது கண்டு, 

மனம் வெதும்பிப் போனவளாக, “அது நாங்.. க.. கேட்க வேண்டிய கேள்வி.. உங்களுக்கு இங்கே என்ன வேலை மா..” என்று ‘மாமா’என்று சரவணனை அழைக்கப் போனவளுக்கு..

 அவனது உறவுமுறை சொல்லி அழைக்க ஏனோ மனம் முரண்டியது. 

அதனால் பாதியிலேயே.. அந்த அழைப்பை முடித்துக் கொண்டாள் அவள்!! 

மென்னிலா!! – அவளைக் கண்டதும் அகல விரிந்து அதிர்ந்தது சரவணனின் முகம்!! 

பரிதிவேல் முதுகின் பின்னாடியிருந்து திடீரென்று வந்த மென்னிலா.. தானிருந்த கோலத்தைக் கண்டதும்.. குற்றவுணர்வில் கூசுக்குறுகிப் போய்.. தலைகுனித்து நின்று கொண்டான் சரவணன்!! 

ஊருக்கு நல்லவன் வேஷம் போடும் சரவணனின் சாயம் வெளுத்துப் போனதை.. பரிதிவேல் வீரன்.. ஒரு விஷமப்புன்னகையுடன் பார்த்திருக்க, 

மென்னிலாவோ.. அருவெறுத்துப் போன குரலில், “நீங்க இப்படியாப்பட்டவர்னு ந்.. நான்.. நான் நினைச்சிக்கூட பார்க்கலை….. ஊர் அறிய கல்யாணம் பண்ணி.. ஒரு பொண்ணை தொட்றது தான் உத்தமம்.. இது இல்லைய்ய்ய்?? நா.. நானும் அம்மாவும் உங்களை எவ்வளவு நல்லவர்னு நினைச்சிக்கிட்டு இருந்தோம்.. நல்லவேளை இதையெல்லாம்.. பார்க்க முன்னாடியே அம்மா போய் சேர்ந்துட்டாங்க..” என்றவளுக்கு,இறந்த தாயின் நினைவில்.. கண்ணைக் கரிக்கவாரம்பித்தது. 

சரவணனுக்கு.. ‘என்ன சொல்லி நிலாவைத் தேற்றுவது?’என்று புரியவில்லை தான். 

இருப்பினும்.. தன் மானத்தை கப்பலேற்றி விட்டு.. அதை விஷமப் புன்னகையுடன் வேடிக்கைப் பார்க்கும்.. பரிதிவேல் வீரனைக் காணக் காணத் தான்… கோபாவேசம் அதிகமாகிக் கொண்டே போனது அவனுக்கு!! 

பரிதி வேலின் முகம்.. ரொம்ப ரொம்பக் கொடூரமானதாக மாறிப் போக, கைமுஷ்டி மடக்கியவாறு அவனைப் பார்த்தவன், 

“உங்க அம்மாவுக்கு.. இதைப்பத்தி த்தெரியும் ஆண்டாளு.. ம்மஞ்சுவோட நிலைமைக்கு ய்யாஆஆர் க்காரணம் த்தெரியுமா?? உன் சரவணன் தான்..!! அதை நான்.. வெறுமனே சொல்லியிருந்தா.. நீ நம்பியிருக்க மாட்ட!!.. ஊருக்கு நல்லவன் வேஷம் போடும்.. உன் முறைமாமனோட.. முகத்திரையைக் கிழிக்கணும்னு தான்..நா..நான் உன்னை இங்கே அழைச்சிட்டு வ்வந்தேன்!!”என்று சொல்லவும்… 

தான் ஆசைவைத்திருக்கும் முறைப்பெண்.. தன்னை அசிங்கத்தைப் பார்ப்பது போல பார்ப்பதை ஏனோ தாங்க முடியவில்லை அந்த பொம்பளைப் பொறுக்கிக்கும்!! 

சரவணன் மேல் அவள் எத்தனை நம்பிக்கை வைத்திருந்தாள்?? இறந்து போன தந்தையின் அந்தஸ்தை அல்லவா அவனுக்குக் கொடுத்து வைத்திருந்தாள்?? 

அத்தனையும் தகர்ந்து போக நின்றிருக்க.. விலாக்கள் ஏறி இறங்க.. கடும் மூச்சுக்களை வாங்கிக் கொண்டவள், பத்திரகாளி அவதாரம் பூண்டவள் போல.. சரவணனை வெறித்துப் பார்த்தாள். 

சங்கிலியில் கட்டப்பட்ட சின்னப்பெண் மஞ்சுளாவின் பாதிக்கப்பட்ட முகம்.. மென்னிலா அணைத்ததும்.. பதறியடித்துக் கொண்டு.. அவள் தாயை உதவிக்கு அழைத்து கத்திய விதம் என அனைத்தும், 

அவளை விடாது அலைக்கழிக்க, கண்களில் சரம் சரமாக கோர்க்கத் தொடங்கியது கண்ணீர்!! 

அழுகையின் விளைவாக… விம்பங்கள் இரண்டிரண்டாகத் தெரிய, கடுங்கோபத் தொனியில்.. “ம்ம்மம.. ஞ்சூ.. இன்னும் வாழவே ஆரம்பிக்க.. லையே?? .. அவங்க அம்மா.. நம்மளை நம்பித்தானே.. வீட்டுக்கு வேலைக்கு அனுப்ச்சிருப்பாங்க?? .. உ.. உன.. உனக்கு எப்படி இப்படி பண்ண மனசு வந்ததூஊஊஊ.. ந்நீஈஈ.. மனிஷனாஆஆ?? இல்லை.. ம்மிருகமாஆஆ?” என்று கேட்டவளுக்கு, தன் முறைமாமன் மேலிருந்த ஆத்திரம் அப்போதும் தணிந்த பாடில்லை. 

 உடலெல்லாம் திகுதிகுவென பற்றியெரியவாரம்பிப்பது போல உஷ்ணம் பரவ, “பளார்” என்றொரு “அறை” விட்டிருந்தாள் சரவணனின் கன்னத்துக்கு!! 

தன்னை கை நீட்டி அறைந்தது மென்னிலாவா? என்ற அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிருந்தான் சரவணன்!! 

சுட்டுவிரல் காட்டி முறைமாமனை எச்சரிக்கும் தோரணையில், “இனி என் ம்மூஞ்சில ம்முழிக்காதே.. உன்னை.. ப்பார்க்கவே அர்ரு.. வ்வெறுப்பாஆஆ இர்ருக்கு..”என்று சொன்னவள், மாமனை காரித்துப்பாத குறையாகத் தான் நின்றிருந்தாள். 

அவளது பார்வையைத் தாங்க முடியாதவன், குற்றவுணர்வில் தடுமாறிப் போனவனாக, இயலாமை நிறைந்த குரலில், “நிலாஆஆஹ்??…”என்று அவளை அழைத்தபடி, ஓரெட்டு முன்னோக்கி நகர்ந்து வர, 

பின்னோக்கி நகர்ந்த வண்ணமே.. கணவனின் கைச்சந்தோடு ஒன்றியவள்.. அதைப்பற்றிப் பிடிக்கவும் செய்தாள்!! 

அவளது செயல்.. சரவணனின் முகத்தில்.. எரிமலைச் சிவப்பை வருவிக்க, இடையிட்டு வாய் திறந்த பரிதிவேல் வீரனோ, 

கழுத்து நரம்புகள் புடைத்து வெளித் தெரிய.. பற்களைக் கடித்துக் கொண்டு , 

“அவ்வளோட ப்பெயரை சொல்லக்கூட உனக்குத் தக்க்.. குதி இல்லை சரவணாஆஆ.. .. வயல்காட்டுல வைச்சு.. ஒரு சின்னப்பொண்ணோட வாழ்க்கைய கண்டம் பண்ணது மட்டுமில்லாமல்… ஞாயம் கேட்டு கோர்ட்ல கேஸ் போடவும்.. அதுக்கு ஒரே சாட்சியான கோவிந்தனையும்.. பொய்சாட்சி சொல்ல வைச்சேல்ல??.. அவன் க்கைய்ய.. வெட்டினதுக்கு பதிலாஆஆ.. உன் க்கைய்ய வ்வெட்டியிரு.. கணும்!! உன் தாஆஆத்த்துனும்..ந்நீஈஈய்யும்..சட்டத்தின் பார்வையில இருந்து தப்பியிருக்கலாம்.. ஆனால் என் பார்வையில இருந்து.. தப்பிக்கிறது.. அவ்வளவு சுலபம் இல்லை..!!என்னைக்கு இருந்தாலும்.. உங்க ரெண்டு பேருக்கும் எமன் நான்தான்டாஆஆ!! ”என்று சொல்ல, 

அவனது பேச்சினை வைத்துத் தான்.. கணவன் ஏன் ‘கோவிந்தன்’ என்னும் நபரின் கையை.. புகையிரத நிலையத்தில் இருந்து வெட்டினான் என்பதற்கான காரணமே புரிந்தது அவளுக்கு!! 

‘மஞ்சுளாவின் கற்பழிப்பை.. நேரில் பார்த்த ஒரே சாட்சியான கோவிந்தன்.. பொய் சொன்ன கோபத்திலேயா கணவன் கையை வெட்டினான்??’ என்ற உண்மை அப்போது தான் புரிய வந்தது மென்னிலாவுக்கு!! 

மென்னிலா.. ‘தன்னை விட்டும் அகன்று விடுவாளோ?’ என்ற பதற்றத்தில் இருந்த.. சரவணனோ.. ஆங்காரமான தொனியில்,

 “என்னைய நம்பி வந்த பொண்ணுக்கு.. நான் பண்ணது தப்புன்னாஆஆ.. உன்னைய நம்பி வந்த பொண்ணுக்கு.. நீ பண்ணதுக்கு பேர் என்னஅஅ?? அவ த்தாஆஆலிய்ய்ய.. புடுங்கிக்கிட்டு.. மறுநாளே.. வ்வாஆழா வ்வெட்டிய அனுப்பி வைச்ச.. நீ.. உத்தமனோஓஓஓ??என் குத்தத்த.. அம்பலப்படுத்தின உடனே.. நீஈஈஈ.. பண்ணது எல்லாம் சரின்னு ஆகிருமோஓஓ??”என்று பரிதியையும் குற்றவாளி கூண்டில் மானசீகமா நிறுத்துமுகமாக கேள்விகள் கேட்டான் சரவணன். 

‘ஒரு திருடன் அகப்பட்டதும்.. இன்னொரு திருடனின் திருட்டையும் அம்பலப்படுத்தும் செயல் போல இருந்தது.. சரவணனின் செயல்!! 

 பரிதிவேலின் இதயத்தில்.. பழையவைகளை மறக்கத் துடிக்கும் அவனது சுத்தமான இதயத்தில்.. அந்த வார்த்தைகள்.. அது தாங்கி வந்த செய்திகள் சரியாகவே தாக்கியது!! 

அதில்.. மெய்யாலுமே பரிதிவேல் வீரன்.. பதில் சொல்ல முடியாமல் காயப்பட்டு நிற்க.. எழுச்சி கொண்ட பெண்சிங்கம் போல பாய்ந்து, சரவணனனை நாடிப் போனாள் மென்னிலா!! , 

சரவணனை புழுவைப் பார்ப்பது போல பார்த்தவள், சிவந்த விழிகளை இன்னும் பெரிதாக்கி, 

“என்.. ப்புருஷன் கெ.. கெட்.. கெட்டவன் த்தாஆன்!!.. ஆனால் உன்னை மாதிரி ஊருக்கு நல்லவன் வேஷம் போட்டுக்கிட்டு.. ஒரு பொண்ண சீரழிச்ச அயோக்கியன் கெடையாஆஆது??!!

 நாஆனாஆ தான்.. அவரை நெருங்கிப் போனேன்.. அவர் நென.. நெனச்சிருந்.. தாஆ… உன்… உன்னைப் போல… நா.. நான் அவர் மேல வைச்ச நம்பிக்கைய.. சாதகமா பயன்படுத்தி.. என்னை கெடுத்திருக்கலாஆஆம்… 

ஆஆனா.. அவர் அப்படி செய்யலை… என் கழுத்தில தாஆஆலி கட்டின..அப்புறம் தான்.. என்னைத் தொட்டாஆஆரு…

 ந்நாஆஆ… வாழா வெட்டியா இருந்திருக்கலாம்.. ஆனால்ல்… ஒருவேளை… அவர் மூலமா நா.. நான் உண்டாகியிருந்தாலும்.. எ.. என் குழந்தைக்கு அப்பா பரிதி தான்னு.. தைரியமா சொல்லக் கூடிய நிலைமையை.. தான் அவர் எனக்கு.. ஏற்படுத்திக் கொடுத்தாரு.. 

உன்னை மாதிரி… தன்னை நம்பி வந்த பொண்ண ஏமாத்திட்டு.. **களை நாடிப்போற.. கேவலமான ஆள்.. இல்லை என் ப்புருஷன்.. அத.. அத மனசுல வைச்சுக்கோஓஓஓ!!”என்றவள் முகம்.. அன்று ரௌத்திரத்தில்.. அதிமிதமாகவே சிவந்து போயிருந்தது. 

தனக்காக.. ‘தன் ஆண்டாள்… பரிந்து பேசக்கூடும்’ என்று கனவிலும் எதிர்பார்த்திராதவன்.. தன் மனைவியையே.. இதயம் ஜிலீரிடப் பார்த்துக் கொண்டேயிருக்க, 

இம்முறை தன் கணவனின் கையை பற்றிக் கொண்டவள், , “அவன் கூடலாம்.. உங்களுக்கு என்ன பேச்சு மாமா??.. நீ.. நீங்க வாங்க மாமா”என்றவளாக, அவனை அழைத்துக் கொண்டு அவ்விடம் விட்டு வெளியேற.. மனைவியை… தன் விழித்திரைக்குள் அழகாக நிரப்பிக் கொள்ளும்.. 

இமைக்கா பார்வை பார்த்துக் கொண்டே நகர்ந்தான் பரிதிவேல் வீரன்!! 

உண்மையாகவே.. எப்போது சரவணனின் முகத்திரை கிழிந்ததுவோ?? அப்போதே.. மென்னிலாவின் மனத்தராசில்.. சரவணனுக்கும், பரிதிவேல் வீரனுக்கும் கொடுக்கப்பட்ட நிலை சமமானதாகவே கருதப்பட்டது. 

இருப்பினும்.. ஒரு பெண்ணை பலவந்தப்படுத்தி.. அவன்..அவளை அடையவில்லையே?? 

திருமணமாகும் வரை பொறுமை காத்த பின்பு தானே.. அவளோடு இரண்டறக் கலந்தான் அவனும்? 

அந்த விஷயத்தில் மட்டும்.. பரிதி சற்றே உயர்ந்து தெரிந்தாலும் கூட… பரிதியை விடவும் அயோக்கியன் ஒருவன்.. பரிதியை சாடுவதை ஏனோ அவளால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. 

அதற்காக.. அவன் பால் அவள் இதயம் சாய்கிறது;அவன் மேல் கழிவிரக்கம் மிகுகிறது என்பதும் தவறு!! 

அவனுக்கான.. அவளது பழிவெறி.. அவள் மூச்சு சுவாசம்.. வெளிவிடப்படும் வரை.. உள்ளுக்குள் கனன்று கொண்டே தானிருக்கும்!! 

அது வேறு;இது வேறு!! 

வண்டியை மீண்டும் தன்னில்லம் நோக்கி ஓட்டிக் கொண்டிருந்தவனுக்கு, மனம் முழுதும் சின்ன சந்தோஷம் நிரம்பி வழிந்திருந்தாலும் கூட, 

மனைவியின் விட்டத்தை வெறிக்கும்.. நிர்மலமான பார்வையை.. அவன் மனத்தை ஆசுவாசம் கொள்ளச் செய்யாமல் அலைக்கழித்துக் கொண்டேயிருந்தது. 

வண்டியை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு, அலைப்புறுதலுக்குள்ளாக்கும் விழிகளுடன், “என்னால உன்னோட ரியேக்ஷ்னலெஸ் முகத்தை பார்க்கவே முடியல ஆண்டாளு.. உன்னய அந்த இடத்துக்கு கூட்டிப் போயிருக்கவே கூடாதுன்னு தோணுது.. மன்னிச்சிடுமா”என்றவன்.. அவளே எதிர்பார்த்திராத நேரம்.. 

அவள் பின்னந்தலையில் கையிட்டு.. தன்னை நோக்கி இழுத்து, தன் நெஞ்சாங்கூட்டுக்குள் அடைக்கலமாக்கிக் கொண்டான் பரிதிவேல் வீரன்!! 

கணவனின் வியர்வை வாசம்.. அவளது நாசியை கொஞ்சம் கொஞ்சமாக நிரடிச் சென்ற அந்த வேளையில் தான்.. அவள் மனம் மெல்ல மெல்ல ஆசுவாசம் அடையத் தொடங்கியது!! 

கூடவே குற்றவுணர்வு ததும்பும் குரலில் அவனும், கண்கள் சற்றே கலங்க, 

“கர்ப்பமா இருக்குறவ கிட்ட இதெல்லாம் சொல்லக்கூடாதுன்னு தான் நெனச்சேன்.. உனக்கு எந்தவிதமான மனஉளைச்சலும் கொடுக்கக் கூடாதுன்னு தான் ஆசைப்பட்டேன்.. ஆனா.. நீ என்னய சந்தேகப்பட்டதும்.. முடியல ஆண்டாளுஹ்!! … இன்னொரு பொண்ணு கூட போயி.. துரோகம் பண்ற அளவுக்கு.. நான் மோசமானவன் இல்ல ஆண்டாளு”என்று அவன் சொல்ல, 

கணவனின் மொழிகள்.. அந்தப் பொல்லாத வரட்டு இதயத்தை சற்றே தொடத்தான் செய்தது. 

அவன் தானாகவே அணைப்பை விடுவிக்கும் வரை காத்திருந்தவள், “மஞ்சுவை.. நல்ல சைக்காட்ரிஸ்ட் கிட்ட.. கூட்டிப் போய் காட்டுவோம் மாமா.. அவளை நிச்சயமாக குணப்படுத்த முடியும்னு நம்பிக்கை எனக்கு இருக்கு.. ப்ளீஈஈஸ்”என்று அவள் கெஞ்ச.. அவனால் அதை மறுக்கவும் முடியுமோ?? 

அவளது கன்னம் தாங்கியவன்.. தணிந்த குரலில், “உன் சந்தோஷம் அதில் தான் இருக்குன்னா… கண்டிப்பா உனக்காக செய்வேன் ஆண்டாளு” என்ற கணவன்.. அவளது நெற்றியில் முத்தம் வைக்க, அமைதியாக ஏற்றுக் கொண்டாள் அவள். 

 

 

******

அன்றிரவு.. குட்டிக்குளியலொன்றைப் போட்டு விட்டு… மனைவியை நாடி.. ஒளிரும் கண்களுடன் அறைக்குள் வந்தவனின் இதயம்.. அவளையே தான் தேடியது. 

அவளை அணைக்க.. அந்த பஞ்சு தேகத்தின் மென்மையை சுகிக்க.. உள்ளம் ஊசலாடிக் கொண்டிருக்க, அறையை தாண்டி.. டெராஸூக்கு வந்தவன்.. 

தனக்கு புறமுதுகிட்டு நின்றவளாக.. நிலாவை வெறிக்கும் தன் பெண் நிலாவை கண்டு கொண்டான் சூரியன்!! 

கதவோரமே நின்று.. மார்புக்கு குறுக்காக இரு கைகளையும் கட்டிக் கொண்டு சாய்ந்து நின்று, தன்னவளின் புறஅழகையே.. இரசிக்கும் கண்களுடன் பார்த்திருந்தவனுக்கு.. அவளது ஒட்டித் தெரிந்த வயிற்றைக் காணவும்.. 

பரிதிவேல் வீரன்.. என்னும் முரடனின் முகத்தில் ஒரு மிருதுத்தன்மை குடி கொள்ளலானது. 

‘இன்னும் இரண்டு.. மூன்று மாதங்களின் பின்.. அந்த வயிறு.. முட்டை வயிறாக மாறி… இன்னும் சில மாதங்களின் பின்.. ஒரு வாரிசைத் தன்னவள்.. தரப் போகிறாள்!’ என்ற நினைப்பிலேயே.. ஜிலுஜிலுவென்ற தென்றல் காற்று… அவன் இதயத்தை வருடுவது போல இருந்தது அவனுக்கு!! 

அரவமே எழுப்பாமல்.. அவளைப் பார்த்துக் கொண்டே இருந்தவனுக்கு.. நெஞ்சினுள்.. அவளை முதன்முறையாகப் பார்த்த ஞாபகம் வந்து போனது. 

இற்றைக்கு ஏழு வருடங்களுக்கு முன்னர், ஒரு சின்ன வர்த்தகப் பணப்பரிமாற்றம் காரணமாக.. தலைநகர் கொழும்புக்கு அவன் சென்றிருந்த நேரம் அது!! 

அவளும் கொழும்பில் ஒரு பிரபலப் பாடசாலையில் உயர்தரம் விஞ்ஞானப்பிரிவில் படித்துக் கொண்டிருந்த நேரம் அது!! 

பரிதிவேல் வீரன்.. அப்போது தன் வாழ்நாளில்.. ‘சமூகம் மதிக்கும் ஒரு செல்வந்தனாக உயர வேண்டும்’ என்று கங்கணம் கட்டிக் கொண்டு.. 

வங்கியில் ‘லோன்’ வாங்கி.. கொழும்பில் தன் நண்பனுடன்… இணைந்து ‘அலுமினியப் பொருட்கள்’ தயாரிக்கும் கம்பெனி தொடங்கி, அதை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருந்த தருணம் அது!! 

‘பிஸினஸ்.. பிஸினஸ் பிஸினஸ்’ என்று முழுமூச்சாக இருந்த பரிதிக்கு.. ‘பார்ட்டி.. சினிமா, பெண்சுகம்’ என்று.. அந்த வயது ஆண்கள் தேடும் சராசரி தேடல் கூட அப்போது இருக்கவேயில்லை. 

மாறாக.. தாய்க்கு நேர்ந்த கொடூரத்துக்கு, வன்மம் தீர்ப்பது ஒன்றையே ஒரே குறிக்கோளாக வைத்திருந்தவனுக்கு.. இதர சுகங்கள் பலவும்.. சுகங்களாக இருக்கவும் இல்லை அவனுக்கு!! 

அவன் கூடவே இருந்த வாசு மாமாவுக்கும் கூட.. மருமகன்.. இளமையின் தேடல்கள் இல்லாமல் இருப்பது மனவருத்தத்தையே கொடுத்துக் கொண்டிருந்தது. 

இந்நிலையில் தான்.. பரிதியின் வியாபாரப் பங்குதார நண்பனும்.. 

பரிதியை நாடி வந்து “எந்நேரமும் வேலை வேலைன்னு இருக்காதேடா.. அப்போ அப்போ.. பார்ட்டி, ட்ரிங்க்ஸ், கேர்ள்ஸ்னு கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணனும்.. உனக்கு தான் அந்தப் பழக்கம் சுத்தமா இல்லையே?? பரவாயில்லை மச்சான்.. இன்னைக்கு என் தங்கச்சி ஸ்கூல் ஃபங்ஷன் இருக்கு.. அவள் பாட்டுப் பாடப் போறாளாம்.. ‘கண்டிப்பா நீ வந்தே ஆகணும்ண்ணா’ன்னு ஒரே அடம்.. நீயும் வாயேன் மச்சான்.. ஓரெட்டு போய் வந்துடலாம்.. எனக்கு என் தங்கச்சி ஃபங்க்ஷன் போன மாதிரியும் ஆச்சு.. உனக்கு கொஞ்சம் நேரம் ரிலாக்ஸ் ஆன மாதிரியும் ஆச்சு.. என்ன சொல்ற?’என்று கேட்கலானான். 

முதலில் மறுத்து வாய் திறக்கப் போனவன். நண்பனும் அவனை வலுக்கட்டாயமாக .. அழைக்க.. சரி ஒரு சின்ன மாற்றத்துக்காக சென்று வரலாம் என்று தலையசைத்தான் அவன்!! 

அன்று..அவன் வாழ்வில் நிகழ்ந்தது சின்ன மாற்றம் அல்ல!! மாறாக அன்று நிகழ்ந்தது பூகம்ப மாற்றம்!! 

வாசு மாமா, பரிதியின் கொழும்பு நண்பன் மற்றும் பரிதி வேல் வீரன் என்று மூவரும்.. கொழும்பிலுள்ள பிரபல பாடசாலையில் நடந்த கலைவிழா அரங்கில்.. அமர்ந்து கொண்டிருந்த சமயம் அது!! 

முற்றிலும் வெள்ளை சீறுடைகளுடன் திரியும்.. சிறுவர்களைக் காணும் போது.. தனக்கு சரிவர கிடைக்காத பள்ளிப்பருவ நாட்களின் ஞாபகங்கள் எழுந்து.. அவனை அலைக்கழிக்க, அதற்கு மேலும் இருந்திருக்க முடியாமல், 

‘நான் கெளம்புறேன்டா’ என்று சொல்லத் தயாராகிய வண்ணம்.. இருக்கையில் இருந்து அவன் எழுந்து கொள்ளப் போன நேரம், 

எதேர்ச்சையாக மேடையில் விழுந்தது ஆடவன் அவனின் நயனங்கள்!! 

அங்கே அவன் எதைக் கண்டு கொண்டானோ? திறந்த அதரங்கள் அழுந்த மூடிக் கொள்ள.. 

இருக்கையில் ‘கம்’ பூசியது போல இருக்கையில் அமர்ந்தவனின் கண்கள்.. மேடையில் வந்த அந்த இளம்பெண்ணைத் தவிர.. வேறெங்கும் தன் விழிகளைப் பதிக்காமலேயே போனது. 

அங்கே.. மேடையிலே.. தன் பதினெட்டு வயதுக்கே உரித்தான .. இளஞ்செழுமைகளுடன்.. தோளிலே.. ஓர் மாலையை அணிந்து.. பரதம் ஆடும் மங்கையர் அணியும் பிரத்தியேக சேலை உடுத்தி, 

குழல் முழுவதையும்.. இடது பக்க உச்சந்தலையோரம் அடக்கி.. அதைச்சூழ மல்லிகைச்சரம் சூடி… 

அல்லிவிழிகள் இரண்டிலும்… வானின் இருளெடுத்து.. அஞ்சனங்கள் பூசி… உதட்டிலே.. ரோஜா இதழ்களின் சிவப்பில்.. உதட்டுச் சாயம் பூசி.. 

ஒப்பனையே தேவையில்லாத மிதமான ஒப்பனையுடன்.. தேவலோகத்தில் இருந்து இறங்கி வந்த பெண்ணுக்குத் தான், 

‘ஆண்டாள்’ வேஷம் பூணச் செய்தனரோ? 

அன்றேல் இவள் அந்தக் கண்ணனின் ஆண்டாளே தானோ? என்று அவனே ஐயுறத்தக்களவுக்கு அழகுடன் நின்றிருந்தாள் அவள்!! 

சின்ன வயதிலிருந்து, அவனது மனதில் ஆழப்பதிந்திருக்கும் பெண்ணான ‘ஆண்டாளுக்கு’ உயிர் வடிவம் கொடுத்தது போல வந்து நின்ற.. அந்தப் பெண்ணை…. இமைக்க மறந்து பார்த்தான் பரிதிவேல் வீரன்!! 

முதன் முறையாக ஓர் பெண்ணிடம்.. பார்த்த நொடிப் பொழுதிலேயே.. சிந்தை இழந்து.. அவளது அழகில் சொக்கிப் போய் நின்றிருக்கும் நொடிகள் வரும் என்று எதிர்பார்த்திராதவனுக்கு, 

சுற்றிலும் உள்ள கூட்டம் மறந்து போய்.. அவள் மட்டுமே முதன்மையானவளாகத் தெரியலானாள். 

தன்னை ஒரு ஆடவன் கூட்டத்தில் அமர்ந்திருந்து.. சொக்கிப் போன பார்வை பார்த்திருப்பது அறியாத அந்த ஆண்டாள் பெண்ணும்,

ஒலிபரப்பப்பட்ட பாட்டுக்கு.. அவளே தான் உணர்ந்து பாடியது போன்ற முகபாவனையுடன் வாயசைத்து, 

உருண்டு திரண்ட நயனங்கள் அலைபாய, தன் பெண்மைக் கலசங்கள் ஏக்கப்பெருமூச்சில் ஏறி இறங்க, 

“மார்கழி திங்கள்.. அல்லவாஆஆ… 

மதி கொஞ்சும் நாள் அல்லவாஆஆ..

இது.. கண்ணன் வரும் பொழுதல்லவாஆஆ.. 

ஒருமுறை உனது.. திருமுகம் பார்த்தால்.. 

விடைபெறும் உயிர் அல்லவாஆஆ… 

வருவாஆஆய்.. 

தலைவாஆஆஆ.. 

வாழ்வேஏஏ.. வெறுங்கனவாஆ”என்று ‘

விரகதாபம் உற்றிருக்கும் ஆண்டாள் அல்ல இது. ஆண்டாள் வேஷம் பூண்டிருக்கும் பெண் தான் இது’ என்று பார்ப்பவர்கள் பிரித்தறிய முடியாத வண்ணம்.. 

‘ஆண்டாளே தான் இது’ என்று.. அவர் தம் மனங்களுக்குள் புகுந்து.. 

தன் முகபாவங்களால் நம்ப வைத்துக் கொண்டிருந்தாள் அந்தப் பெண்!!! அவள் மென்னிலா!! 

பரிதிக்கோ.. ஆண்டாள்.. தன்னையே கண்ணனாக உருவகித்து.. தன் விழிகளைப் பார்த்துக் கொண்டே பாடுவது போல தோன்ற…

 உள்ளுக்குள் ஒருவகையான உவகை எழ.. அவளையே.. ஊனுருக, உயிர் உருக பார்த்திருந்தான் அவன். 

அழகாக.. தன் கண் மை அஞ்சனங்கள் ஆட.. அபிநயம் பிடித்து… நளினமான அடவுகள் கொண்டு.. பக்கா முகபாவங்களுடன் ஆடிக் கொண்டிருந்த கணம், 

ஆண்டாளுக்கென்று நியமிக்கப்பட்டிருந்த கண்ணன் வேஷம் இட்ட விடலைப் பையன் ஒருவன், 

“சூடித் தந்த சுடர்க்கொடியேஏஏஏஏ.. சோகத்தை நிறுத்தி விடு”என்று பாடிய வண்ணம்.. ஆண்டாளை நாடி வந்தவன்.. நாட்டியத்துக்காகத் தொடும் சாக்கில், 

அவளது விலா என்பில் கையிட்டு.. அதற்கு சற்றே மேலான அவளது பெண்மைக் கலசங்களை அவன் அநாச்சாரமாகத் தொட, 

அவனது ஆண்டாள்.. முகத்தில்.. உடல்முழுவதும் கூசிக் குறுகிப் போய்.. சின்ன சலனம் வந்து போனது யாருக்குப் புரியவில்லையாயினும் கூட.. 

கீழே இருக்கையில் அமர்ந்திருந்து.. தன் இதயத்தில் ஊடுருவிக் கொண்டிருக்கும் ஆண்டாளின் ஒவ்வொரு அசைவுகளையும்.. பார்த்திருந்தவனுக்கு.. அவள் அசௌகரியம் புரிந்தது. 

“நாஆஆளை.. வரும்.. 

மாஆஆலை என்றூஊஊ..

நம்பிக்கையை வளர்த்து விடு.. நீ நம்பிக்கையை வளர்த்து விடு”என்ற அந்தப் பையன்.. அந்தரத்தில் நீட்டிய அவளது கையைப் பற்றும் சாக்கில்.. 

‘அவனது’ ஆண்டாளின் பின்புறத்தோடு.. தன் உடல் ஒட்டி.. அவள் பிருஷ்டத்தைப் பிடிப்பதுவும்.. அவள் நளினம் தப்பி.. தகிக்கும் மோனபாவத்துடன் நிற்பதுவும்… அப்படியே தெரிந்தது அவனுக்கு!! 

அந்த விடலைப்பையனுக்கு.. மிஞ்சி மிஞ்சி போனால்.. பதினெட்டு வயதிருக்கும்!! 

அரும்பு மீசை கூட சரிவர முளைத்திருக்காத.. பால்வடியும் முகத்தை வைத்துக் கொண்டு.. அந்தப் பையன்.. செய்த தில்லுமுல்லைப் பொறுக்க மாட்டாது.. 

கைமுஷ்டி மடக்கி, கழுத்து நரம்புகள் புடைத்து வெளித் தெரிய பற்களைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான் அவன். 

“அசைவும், இசையும்” நடந்து முடிந்ததும்.. அந்த நாசகார செயல் புரியும் பையனை விட்டு.. ஈரடி தள்ளி நின்றவள்,

தன் பர்பாமன்ஸ் கண்டு மெர்ஸலாகிப் போய்.. எழுந்து நின்று கைதட்டும்.. பார்வையாளர்களைக்கெல்லாம்.. தலைதாழ்த்தி வணக்கம் வைத்தாள்.. இன்முகமாக அவள்!! 

அந்த செவ்விதழ்கள் பிளந்து.. அவள் புன்னகைக்க.. அந்த சிரிப்பு.. தனக்காகவே உதிர்க்கப்பட்டது போன்று.. சிரிக்கும் பரிதியை.. ஆரம்பம் முதலே பார்த்திருந்த வாசு மாமா, 

தன் மருமகனின் எண்ணவோட்டங்களை.. அச்சொட்டாகப் படித்துக் கொண்டவர், 

அவனது காதுக்குள், “உனக்கு அந்த பொண்ண புடிச்சிருக்குல மாப்ள?”என்று கேட்க, 

முதல் முதலாக ‘ச்சீ அவ்வளவு அப்பட்டமாக தெரியவா? ஜொள்ளுவிட்டோம்?”என்று அசடுவழியலானது அவனுக்கு. 

இருப்பினும் .. அமைதிப் புன்னகை பூத்தவாறே.. அந்த ஆண்டாள் பெண்ணை காதலோடு பார்த்த.. பரிதியை வியந்து பார்த்தார் அவர். 

அதற்கும் மேலதிகமாக தான் அறிந்து வைத்திருக்கும் தகவலை சொல்ல நாடியவர், “இத தான் விதிங்குறது?? அது ஆர் தெரியுமோ? ராஜமாணிக்கத்தோட பேத்தி!!” என்று சொன்னது மட்டும் தான் தாமதம், 

தன் கனவுக்கு உயிர் கொடுத்த நிதர்சனப் பெண் ஆண்டாளை… முகம் இறுகி வாடிப் போனவனாக.. வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்!! 

அன்று அவளை முதன்முறையாகக் கண்டதும் பூத்த காதல்.. அவனது வன்மத்துக்கும், வஞ்சினத்துக்கும் ஆளாகி.. உள்ளுக்குள்ளேயே.. முடங்கிப்போனது. 

ஆனால் காதலும், தீயும் ஒன்று!! மறைத்து வைத்தாலும் புகையவே செய்தது!! 

ஆழ்மனதில் முடக்கப்பட்ட அவனது காதல்.. அங்கேயே செடி விட்டு.. பூப்பூத்து அரும்பி…

 இன்று.. ஒரு பெரும் விருட்சகமாக அந்த முடக்கப்பட்ட காதல் வளர்ந்து நிற்கும் என்று.. அப்போது அவனுமே எதிர்பார்த்திருக்கவில்லை!! 

பதினெட்டு வயதில்.. அவன் முதன் முதலில் கண்ட ஆண்டாளின் நினைவுகளில்.. 

உள்ளத்தில் புதுக்காதல் பூக்க, மெல்ல மெல்ல பூனை போல வந்து.. அவளை வழமை போல பின்னிருந்து அணைத்துக் கொண்டான் அவன். 

நிலவைப் பார்த்த வண்ணம்.. தன்னுடைய காதல் ஏமாற்றப்பட்ட வலியில் உழன்று தவித்துக் கொண்டிருந்த பெண்ணவளுக்கு, கணவனின் மெல்லிய அணைப்பு.. ஏனோ இதம் தரவில்லை!! 

அவனது அணைப்புக்கு எந்த துலங்கலையும் காட்டாது.. மனைவி அமைதியாக நிற்பதற்குக் காரணம்.. அவள் தன் மேல் கொண்டிருக்கும் வன்மம் என்பதை அறியாதவனோ?? 

அவளது கன்னத்தில் மீசை குத்தக் குத்த.. குட்டி குட்டி முத்தங்கள் வைத்தவனாக, 

ஹஸ்கி வாய்ஸில், “அட்வான்ஸ்ட் லெவல் படிச்சிட்டிருக்கும் போதுஹ்… உங்க ஸ்கூல் ஃபங்கஷன்ல.. ஆண்டாள் வேஷம் போட்டுக்கிட்டுஹ்.. ‘மார்கழி திங்கள்’ பாட்டுக்கு ஆடினேல்லஹ்? ஞாபகம் இருக்காஹ்? ..” என்று கேட்க, அவனது கேள்வியில் தன் சிந்தனா வட்டத்தில் இருந்து சட்டென்று வெளியே வந்தவள், 

அவனை நோக்கித் திரும்பி, அழகாக விழி மலர்த்தி, “உங்களுக்கு எப்படி தெரியும் மாமா..?”என்று கேட்டாள். 

(இலங்கையில் அட்வான்ஸ்ட் லெவல் அல்லது உயர் தரம் என்று அறியப்படுவது.. உங்கள் ஊரின் ப்ளஸ் டூ படிப்புக்கு சமமான இலங்கை கல்வியை சுட்டும்) 

அவனோ மனம் மயக்கும் மாயப்புன்னகை உதிர்த்த வண்ணம், அவளைக் கட்டியணைத்துக் கொண்டே, 

“ஷோ முடிஞ்சதும் உன்னைத் தொட்டுத் தொட்டு ஆடின அந்தப்.. பையன் உன்கிட்ட. வாய் முழுக்க இரத்தக்கறையோட வந்து “ஸாரி”யும் கேட்டிருப்பானேஹ்..?”என்று.. ‘பேக் ஸ்டேஜில்’ நடந்ததைக் கூட கணவன் புட்டு புட்டு வைக்க… அவளது நீள்விழிகள் இன்னும் கொஞ்சம் அகல விரிந்தது!! 

சற்றே உணர்ச்சி வசப்பட்ட குரலில், “உங்.. உங்க.. ளுக்கு எப்படி தெரியும்??..”என்று அவள் மீண்டும் கேட்க, 

பதில் சொல்லாமல் தன் மனங்கவர்ந்த ஆண்டாளைப் பார்த்துப் புன்னகைத்தான் அவன். 

அந்தப் புன்னகையின் வசீகரம் கண்டு..ஸ்தம்பித்து நின்றவளுக்கு.. ஏழு வருடங்கள் கழித்துப் புரிந்தது.. தன்னை இங்கிதமற்றுத் தொட்ட ஆடவனின் வாயில் வழிந்த இரத்தக்கறைக்கு யார் காரணம் என்று?? 

அவனை ஆச்சரியம் மீதூறப் பார்த்தவள், “அ.. அப்படீஈஈன்னாஆ… உங்.. உங்க வேலை தானா அது?? அன்னைக்கு நீங்களும் அங்கே இருந்திருக்கீங்கல்ல??”என்று கேட்க, 

அவனது சின்னப்புன்னகை… விரிந்த புன்னகையாக மாற, அவளது அதரங்கள் பார்த்து மொழிந்தவனின் கண்களில் காதல் மயக்கம் குடி கொள்ள, 

சொக்கித் தவிக்கும் தாபக்குரலில், “என்னோட ஆண்டாள்.. நான் முதல் முறையாக ஆண்டாள் வேஷத்துல கண்ட என்னோட ஆண்டாள்” என்று சொல்லிக் கொண்டே.. தன் அதரங்களை நோக்கி நெருங்கி வரும் அவனைப் பார்த்தாள் மென்னிலா. 

கணவனின் அந்த தாபப் பார்வை… தனக்கு தான் ஆபத்து என்று தோன்ற.. மீண்டும்.. நிலவைப் பார்ப்பது போல.. அவள் திரும்பிக் கொள்ள எத்தனித்த சமயம், 

அவளது அதரங்கள் நோக்கிக் குனிந்தவன்.. அவற்றை மிக மிக மிருதுவாகக் கௌவிச் சுவைக்கலானான்.

கணவனின் உமிழ்நீருடன்.. தன் நீர் கலந்த அந்த நொடிகளில்.. அவனுக்கு எப்படியிருந்ததோ.. அவளுக்கோ.. அவனோடு ஒன்றிய அந்தத் தருவாயில் மூச்சு முட்டுவது போலவே தோன்றியது. 

கூடவே வன்மம் தீர்க்க ஆவேசமாக அலையும் அவள் மனம், “நீங்க என்னை அவமானப்படுத்தலாம்.. மத்தவன்..என்னை அவமானப்படுத்தக்கூடாது’ன்றது தான் உங்க மென்டாலிட்டியா? அப்படீன்னா ஏன் மாமா. எல்லார் முன்னாடியும்.. என்னை அகௌரவப்படுத்தினீங்க?” என்று அவனிடம் கேட்டு விடத் துடித்தது. 

இருப்பினும் ‘யானைக்கொரு காலம் வந்த பிறகு.. பூனைக்கும் ஒரு காலம் வரும் அல்லவா?’

அந்தக் காலத்துக்காக.. காத்திருக்க நாடியவள், உணர்ச்சி வசப்படும் தன் மனதை அடக்கிக் கொண்டாள். 

காதல் தானடி என் மீதுனக்கு? 

[20]

 

மூன்று மாதங்களுக்கு பிறகு, 

‘பொன்னாபரணத்தை தலைக்கு அணிந்த இளம்பெண்கள்.. நாணத்தில் தரைபார்த்து நிற்பது போல’, சுற்றிலும் நெல்மணிகள் கதிர்களாக அரும்பித் தொங்கும்.. அழகிய மஞ்சள் பூத்த வயல்!! 

அந்த வயல் மேல்பரப்பின் கதிர்கொய்ய.. வெள்ளை வெளேரென்ற கொக்குக்கூட்டங்கள் படர்ந்து பரவியிருக்க.. 

வயலை ஊடறுத்து.. வாய்க்கால்களும், வரப்புகளும்.. தண்ணீர் சலசலக்க ஓடிக் கொண்டேயிருக்க,

 இடைக்கிடையே.. விஸ்தாரமான நிழல் பரப்பிக் கொண்டு நின்றிருந்தன மாமரங்களும், வேப்பமரங்களும்!! 

கதிர்கள் வெட்ட.. இது தான் உரிய காலம் என்பதை அறிந்த மானுடர்களும் ஆணும், பெண்ணுமாக வயலுக்குள் இறங்கி.. அவற்றை அறுத்துக் கொண்டிருக்க… 

அந்த இடமே இயற்கை அன்னைக்குப் பிறந்த குழந்தைகள்.. இன்னும் இளமையழகு மாறாமல் கொஞ்சி விளையாடுவது போல இதமாக இருந்தது. 

வயல் வரப்பிற்கு.. சற்று தள்ளி இருந்த.. மாமரத்தின் கீழே வெறும் புற்தரையில் தான் ஒய்யாரமாக அமர்ந்திருந்தாள் மென்னிலா. 

அந்தக் காற்றோட்டமான சூழ்நிலையில்.. இதயம் இலேசாகிப் பறப்பது போன்ற மனோபாவத்துடன்… 

கார்க்குழல் கற்றைகள் காற்றுக்கு ஆட.. அதை காதுக்குப் பின் சொருகும் எண்ணம் கூட இன்றி.. தீவிரமாக ஏதோ ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தாள் மென்னிலா!! 

தன் முதுகந்தண்டை மாமரத் தண்டோடு சாய்த்து அமர்ந்திருந்தவளின் ஒரு கரம்.. தன் நான்கு மாத சிசு தாங்கிய.. உப்பிய வயிற்றினை அணைத்துப் பிடித்திருக்க, 

அவள் கால்களை நீட்டி ஒய்யாரமாகவே அமர்ந்திருந்தாள்.

 அவள் கடந்து வந்த, இந்த மூன்று மாத காலப்பகுதியிலேயே.. முன்னிலும் பார்க்க பெரிதாகிப் போன அவளது கொங்கைகள்.. சற்றே.. அதன் பாரம் தாங்காது.. கொஞ்சம் தொங்கி.. 

அவளது அழகான அடிவயிற்றுடன் முட்டத் தொடங்கியிருந்தது இப்போதெல்லாம்!! 

மார்பும், வயிறும் சங்கமிக்கும் இடத்தில்.. அவற்றின் விடாத தொடுகை காரணமாக.. 

‘கசகச’வென்று.. வியர்வை அரும்பி.. ஒரு அவதி தோன்றவாரம்பிக்க, 

அடிக்கடி மார்புக்கும், வயிற்றின் ஆரம்பப் பகுதிக்கும் இடையில் கையிட்டுக் கொள்வது.. மென்னிலாவின் வழக்கமாகியிருந்தது!! 

கன்னஙகள் சற்றே உப்பி.. கைச்சந்துகளில் தசையேறிப் போய்.. இடுப்பென்புகள் வயிற்றின் பாரம் தாங்க முடியாமல் சற்றே முன்னோக்கி வளைந்து.. தொடைகளின் தோல்கள் வரிவரியோட.. கொஞ்சம் விரிந்து.. 

தாய்மை அடைந்தால்… ஏற்படும் இயற்கையின் மாற்றங்களில்.. இன்னும் இன்னும் அழகாகவே தெரிந்தாள் அவள்.. பரிதியின் கண்களுக்கு!! 

 ‘கொண்டான்’ அவளை.. அவனது வயல் பக்கமாக அழைத்து வரவும், அவனை அவன் போக்கில் பணிசெய்ய விட்டுட்டு.. மாமரத்தடியில் அமர்ந்து புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தவளின் விழிகளில்.. 

வீசிய தென்றல் காற்றின் காரணமாக.. மனம் இலேசாகி.. ஒரு சோர்வு வந்து தொற்றிக் கொள்ள.. மெல்ல மெல்ல கண்கள் மூடி.. இதமான ஆழ்ந்த நித்திரையின் வசம் ஆட்பட்டாள் அவள்!! 

இலேசாகக் கண்கள் சொக்கிக் கொண்டு போன நேரம்.. அவளது மடியில் ஒரு பாரம் அழுந்தப்பதிவது போல இருக்க… மெல்ல துயில் கலைந்தவள்.. 

இமைகளை முற்றாகப் பிரிக்காமல்.. இலேசாகப் பிரித்து.. ‘அந்த அழுத்தத்திற்கு என்ன காரணம்?’ என்று பார்த்தாள் மென்னிலா. 

அங்கே அவள் மடியில்.. மிக மிக உரிமையெடுத்தவனாக.. காதல் சிந்தும் விழிகளுடன் தலை வைத்துப் படுத்திருந்தான் அவளது கொண்டான் திரு. பரிதிவேல் வீரன்!! 

அவனைக் கண்டதும்.. அவன் மீது இயல்பாக ஊற்றெடுக்கும் பழிவெறியும், வன்மையும் ஊற்றெடுக்க,கோபம் கொப்பளிக்க அவன் தலையைத் தன்னிலிருந்தும்.. 

அப்படியே உதறித் தள்ளிவிடத் தான் எத்தனித்தாள் அவளும்!! 

அந்த சமயம் தான் அவள் எதிர்பார்த்திராத ஒன்று நடந்தேறியது. 

ஆர்ம்லெஸ் பெனியனுடன்… வேஷ்டியை சிங்களவர் பாணியில் ‘தோட்டி’ போல அணிந்து.. 

தன் திண்ணிய முறுக்கேறிய தோள்புஜங்களிலும், கைச்சந்துகளிலும்… வியர்வை முத்து முத்தாக அரும்பி… அவன் கம்பீரத்துக்கு இன்னும் கம்பீரம் சேர்க்கும் வகையில்.. மனைவி மடியில் படுத்திருந்தவன், 

சட்டென்று இடப்புறம் திரும்பி.. மெல்ல ஒருக்களித்தவன், 

தன் மென்னிலாவின் வயிற்றில்… மீசை அதரங்கள் மென்மையாகக் குத்தி குறுகுறுப்பு மூட்டும் வண்ணம்.. 

முகம் புதைத்து, காதலுடன் முத்தமொன்றும் வைக்க, கொண்டவன் தந்த அந்த முத்தத்தில்… அவளது வயிற்றுக்குள்.. ஒரு கூச்சம் எழுந்து.. உடல் முழுவதையும் ஒரு உலுக்கு உலுக்கியெடுக்கும் போல இருந்தது. 

புத்தகத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டு அந்த ஒற்றை முத்தம் தன்னுள் நிகழ்த்தும் இரசாயன மாற்றத்தை.. தடுக்கும் வழிவகையறியாது அவள் நின்ற வேளையில், 

அவனோ.. மனைவி துயில் கலைந்ததை அறிந்திராதவனாக, மெல்லிய தொனியில் தன் குழந்தையுடன், உரையாடத் தொடங்கினான்.

அவள் மணி வயிற்றுடன் தன் முரட்டு அதரங்கள் கொண்டு சென்றவன், 

தவறுக்கெல்லாம் வருந்தும் இளகும் குரலில், “சமத்தா இருக்கணும் அப்பா பொண்ணே? அம்மாவுக்கு எந்த தொந்திரவும் குடுக்கக்கூடாது.. அப்பாவால அம்மா பட்டதே போதும்டா.. நீயும் அப்பா மாதிரி இல்லாமல்.. இருக்கணும்ன்றது தான் என்னோட ஒரே ஆச..”என்று அவன் சொல்வதைக் கேட்கக் கேட்க.. 

அந்த வன்மக்காரியின் மனதுக்குள் ஏதோ ஒரு மாயம் நிகழ்வது போலவே.. மனதைப் பிசைவது போலவே இருந்தது. 

அந்த மனம் பிசையும் மாற்றங்கள் எல்லாம்.. அவள் இதயத்தில் வந்து போனது ஒரே ஒரு கணம் தான்!! 

‘கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்’ செய்வது என்னும் பழமொழி.. பரிதிவேல் வீரனுக்கு சாலவே பொருந்தும்!! 

மென்னிலா அவன் மீது உயிராக இருக்கும் போது அவளன்பை துச்சமாக மதித்து.. உதாசீனம் செய்தவன்.. தற்போது அவள்..அவனைப் பழிவாங்கத் துடிக்கும் காலத்தில்.. பரிதி அவள் மேல் உயிராக இருக்கிறான்!! 

அந்தோ பரிதாபம்!! .. கணவனின் மனமாற்றம் பற்றி உணரவேண்டியவளோ.. உணராமல்.. உணரவும் முடியாமல்.. ‘நடிப்பு தான் இதுவும்’ என்றெண்ணி.. பழிவெறியில் திளைத்திருப்பதையும் என்னேவென்று சொல்வது?? 

அதிலும் இப்போதும் கூட அவன்..இழைவதைக் காணும் போது.. அவளுக்கு அது ஏனோ காதலாகத் தோன்ற மறுத்தது!! 

மாறாக, ‘இதுவும் நடிப்புத் தான்’ என்றே தோன்றியது!! 

ஒருக்களித்து தன் வயிற்றில் முகம் புதைத்திருக்கும் கணவனின் பக்கவாட்டுத் தோற்றத்தைப் பார்த்துக் கொண்டே, 

“அது எப்படி?? ‘அப்பா பொண்ணு’ன்னு சொல்லலாம்??.. ஏன் ‘அம்மா பையனா’ இருக்கக் கூடாதா?”என்று திடீரென்று கேட்டாள் அவள்.

ஆயினும் அவள் மனதினுள் இருந்தது எல்லாம்… ஒரு சின்ன வேண்டுதல்!! 

ஒரு தாய் பெற்ற மகளின் காதலை மானபங்கப்படுத்திய கொடூரனுக்கு.. ‘மகள்’ என்ற ஒரு பெண்ணுறவை மட்டும் கடவுள், ‘கொடுத்து விடவே கூடாது’ என்றே இருந்தது!! 

அவனோ மனைவியின் தீவிர வேண்டுதலை அறியாதவனாக, மனைவியின் நிலா முகம் பார்த்து திரும்பியவனுக்கு, மனைவி விழித்திருப்பது கண்டு.. இதழோரம் சின்ன புன்னகை அரும்பியது. 

அதிலும் ரொம்பவும், நிச்சயமான குரலில், “இது அப்பா பொண்ணு தான் ஆண்டாளுஹ்!! ”என்றவன்.. சற்றே கையுயர்த்தி.. புஷ்டியான அவள் கன்னங்கள் இரண்டையும் பிடித்தாட்டவும் செய்தான். 

இயல்பிலேயே முரடனான பரிதி.. அவளை செல்லம் கொஞ்சுவதற்காக.. கன்னங்களை பிடித்தாட்டியது, அவனது முரட்டுக்கைகளின் அழுத்தம் காரணமாக.. ஜிவுஜிவு என்று கன்னங்கள் எரிந்து சிவக்கலானது அவளுக்கு. 

அதில் வலி உயிர்போக கத்திக் கொண்டே, அவனது தோள்புஜத்திற்கு ஒரு அடி வைத்தவள், 

“ட்டேஏஏய்.. முரடா.. ஸ்ஸ்ஸ்.. வ்.. வ்வலிக்குதுடாஆஆ”என்று கத்த, ‘கொஞ்சம் அதிக முரட்டுத் தனத்தை பிரயோகித்து விட்டோமோ?’ என்று தோன்ற, அவனது விழிகளில் ஒரு சின்ன வருத்தம் குடி கொண்டது. 

கூடவே சிவந்த அந்த கன்னங்களைப் பார்க்கையில், அதன் அழகில்.. புதுக்காதல் பிறந்தது அவனுக்கு. 

கணவன் தன்னை இரசித்துப் பார்ப்பதை அறியாதவளோ, ..?”- தன் ஒற்றைப் புருவமும், அழகிய நீள்விழிகளும்.. அழகாக மேலுயர, 

“எப்படி சொல்றீங்க இது அப்பா பொண்ணுன்னு?”என்று திரும்பவும் அதே கேள்வியை திரும்பவும் கேட்க, 

மனைவியின் அண்மை தந்த இதம், அவளது வியர்வை வாசம் தந்த கிறக்கம்.. 

கூடவே…அவனுக்கு.. அவளது அருகாமையில் சுவர்க்கம் கிட்டினாற் போன்றிருக்க.. அதை ஓரிரு கணங்கள் இரசித்துப் பார்த்திருந்தான் பரிதி!! 

அவன் கண்களில் சுரந்த காதல் நிமிடத்துக்கு நிமிடம் அதிகமாகி.. அவளது பின்னங்கழுத்தோடு கையிட்டு.. தன்னை நோக்கி இழுத்தவன்..

“என் மனசுக்கு தோணுது.. இது என் நிலாப்பொண்ணு தான்னு” என்று உரைத்தவாறு, 

“பச்சக்”கென்று.. தன் முரட்டு அதரங்களோடு.. அவளது சிவந்த அதரங்களை ஒற்றி எடுக்க, ஒரு நிமிடம் திகைப்பூண்டை மிதித்தாற் போன்று தான் நின்று விட்டாள் அவளும்!! 

உள்ளிழுத்த மூச்சை.. வெளிவிட மறந்தவளாக.. நயனங்களை அகல விரித்து நின்று விட்டவளை.. 

அவன் குறும்புக் கொப்பளிக்கும் விழிகளுடன் பார்த்து.. வாய் விட்டு “ஹஹஹாஆ”என்று நகைக்க, அந்த சிரிப்பொலி வேறு எரிச்சலைக் கொடுத்தது அவளுக்கு. 

அதிலும் வயலில் பணியாளர்கள் கொஞ்சம் தூரத்திலேயே நின்றிருந்தாலும் கூட.. எல்லாரும் நின்றிருக்கும் கணம்.. இப்படி கணவன் நடந்து கொண்டது அவளுக்கு சின்ன சீற்றத்தைக் கொடுக்க, 

அவனைத் தன்னிலிருந்தும் அப்புறப்படுத்த முயன்றவளாக, “முதல்ல.. என் மடியில் இருந்து எழுந்திருங்க!!”என்று சொல்ல, அவன் அப்போதும் எழுந்திராமல் இருக்க, 

ஆழப்பெருமூச்சு விட்டவளாக, “எழுந்திருங்கன்னு சொல்றேஏஏன்ல.. எழுந்திருங்கஅஅஅ!!?”என்று கத்தினாள் அவள். 

அவளது கத்தலில்.. அவன் விழிகளில் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யம் கூடிப் போனதே ஒழிய, அவளுக்கான காதல் கொஞ்சமும் குறையவேயில்லை. 

மாறாக.. காலுக்கு மேல் கால் போட்டுப் படுத்துக் கொண்டே.. அண்ணாந்து அவன் முகம் பார்த்தவன், 

ரொம்ப ரொம்ப கூலான தொனியில், “இப்போ ஏன் பதறுற ஆண்டாளு?? நான் என்ன அடுத்தவன் பொஞ்சாதி மடியிலேயா தலைவைச்சுப் படுத்தேன்? எம் பொஞ்சாதி மடியில தான் தலை வைச்சு படுத்திருக்கேன்.. எவனும் எதுவும் கேக்க முடியாது”.. என்றவன், 

மனைவியின் கையை உரிமையுடன் எடுத்து, அவன் தலையில் வைத்து.. இதமாக கண்கள் மூடியவன்..

 அவளும் கணவனின் ஆசையை புரிந்து கொண்டு, “தலைகோதி விடுவாள்’ என்று எதிர்பார்க்கலானான். 

அவளோ.. கண்கள் மூடி.. தன் மடியில் ஒய்யாரமாக படுத்திருப்பவனை.. கண்களில் அருவெறுப்பு உமிழப் பார்க்க, அவனோ விழிகளைத் திறவாமலேயே அவளை நோக்கி, 

“புருஷனை சைட் அடிச்சது போதும் பொண்டாட்டி.. இப்போ.. ஆசையா தலைகோதி விட்டால்.. தான் என்னவாம்..?”என்று கேட்டான் அவளது அருவெறுப்பு பார்வை பற்றி அறியாத வெள்ளந்திக் காதலன்!! 

அவளோ எரிச்சலை அப்பட்டமாக குரலில் காட்டி, “ம்மண்ணாங்கட்டீஈஈஈ.. எழுந்திருங்க மாமாஆஆ..”என்று மீண்டும் கத்த, கண்கள் மூடியிருந்தவனின் புன்னகை… இன்னும் கொஞ்சம் அழகாக விரிந்தது. 

அவனோ தற்போது மார்புக்கு குறுக்காக கைகட்டியவனாக, “உனக்கென்ன? நான் இப்போ எழுந்திருக்கணும்?? .. அம்புட்டு தானே?? .. என் தலைய கோதி விடு.. எழுந்துக்குறேன்.. இல்லை இப்படியே தான் இருப்பேன்..??” என்றவன், ‘மனைவி மடியே சொர்க்கம்’ என்பது போல இதமாக படுத்திருக்க.. இவள் தான் ஆத்திரம் தாளாமல்.. 

அரவமேயெழுப்பாது.. அவனது நெஞ்சினைத் தாக்க.. காற்றில் கைகளை கொண்டு சென்றாள் அவள்!! 

மனைவி தன்னை தாக்க வருவதை மனக்கண் மூலம் அறிந்து கொண்டானோ என்னவோ? தாக்க வந்த முன்னங்கையினை.. இலேசாக அழுத்திப் பிடித்து, 

தன்னை நோக்கி படாரென அவன் இழுக்க.. அவன் கன்னத்தோடு இவள் இதழ்கள் நச்சென்று சென்று மோதி முத்தம் வைத்தது கிளர்ச்சியை மூட்டுவதாகவே இருந்தது அவனுக்கு. 

அதிலும்.. அந்த முத்தக்காட்சியை.. மறைக்கும்முகமாக.. இருவரையும் மறைத்து வீழ்ந்தது அவளது அடர்ந்த கூந்தல்!!

அவளது தடுமாறும் விழிகளை.. காதல் சொட்டச் சொட்டப் பார்த்தவன், “நீ ஏன் இப்படி மாறினேன்னு..எனக்கு தெரியும் ஆண்டாளு..?” என்றுரைக்க, அவளுக்கோ.. கணவனின் மொழியால் இதயம் தாறுமாறாக அடிக்கத் தொடங்கியது. 

‘அப்படியானால் இவனுக்கு எல்லாமும் தெரிந்திருக்கிறதா?’என்று உடல் முழுவதும் ஒரு பீதி எழுந்து.. அவள் முகத்தை இருளாக்க, 

நாவு திக்கித் திணற, “எ.. என்ன தெரியும்.??”என்று கேட்டாள் அவள். 

அவனோ… வலி ததும்பும் விழிகளுடன், “கொஞ்ச நாளா.. ஏன் என் மேல எரிஞ்சு விழுறன்னு தெரியும்?? என் மேல நீ வைச்ச அன்பு.. ஏன் குறைஞ்சிருச்சுன்னும் தெரியும்…?” என்று சொல்ல.. அவள் விழிகள் குழப்பத்தில் மெல்ல இடுங்கியது. 

தன்னை காதலித்து ஏமாற்றிய கயவனிடம்… பழிவெறி தீர்த்துக் கொள்ள நாடி, 

ஓருயிர் ஈருடலாக… இரண்டறக் கலந்து ‘நடிக்கும்’ மங்கைக்கு.. எத்தனை நாள் தான்.. உள்ளூற பழிவெறியை சுமந்து கொண்டு.. வெளியே அவனோடு இழைவது போல நடிக்கவும் முடியும்? 

அவளுள் ஊறியிருக்கும் வன்மம்.. அந்தப் பழிவெறி.. அவளை அலைக்கழிக்க… இந்த மூன்று மாதங்கள்.. தன்னை நெருங்கி வரும் கணவனிடம் வெளிப்படையாகவே தன் வெறுப்பை அவ்வப்போது காட்டவே செய்தாள் மென்னிலா. 

குறிப்பாக அவன் அவளைப் பின்னிருந்து அணைத்து… கன்னத்தில் முத்தங்கள் வைத்து.. அவளோடு சிற்றின்பக் கூடல் செய்ய நாடும் போதெல்லாம், 

அவன் அண்மையின் வெறுப்பைத் தாளமாட்டாமல்.. அவன் பின்னிருந்து அணைத்ததும்… அவனைத் தள்ளிவிடுபவள், 

சலித்துப் போன குரலில், “ம்ப்ச்சு.. எத்தன தடவ சொல்றதூஊ?? பின்னாடியிருந்து திருடன் மாதிரி கட்டிப்பிடிக்காதீஈஈங்கன்னு .. சொன்னாஆஆ எங்கே புரியுது இந்த பட்டிக்காட்டானுக்கு?” என்று ‘பட்டிக்காட்டான்’ என்று வெளிப்படையாகவே திட்டிய வண்ணம் கத்துவாள். 

இரவில் இருளின் போர்வையில்.. அவளது சிசுவை அணைக்கும் சாக்கில் அவன் வயிற்றோடு கையிட்டு.. அவளை அணைத்து.. கன்னத்தில் குட்டி குட்டி முத்தங்கள் வைக்க.. அவன் நாடும் போதெல்லாம்.. 

அவன் தொட்டாலேயே அருவெறுப்புடன் அவனது கையைத் தட்டி விடுபவள், “க்கைய்ய.. எடுங்க ப்பரிதி ம்மூச்சு முட்டுது.. இராத்திரில கூட கொஞ்சம் நிம்மதியா இருக்க முடியாதே… சேவக்கோழி மாதிரி எப்போவும் அதேஏஏ எண்ணம்” என்று சினந்து.. அவன் அவள் உடலுக்கு அலைவது போல சொல்லாமல் சொல்லிக்காட்டி.. முணுமுணுத்துக் கொண்டே திரும்பிப் படுப்பாள் அவள். 

அவளது மாற்றத்திற்கான உண்மையான காரணம் தான் என்ன?

 அவன் தன்னோடு இழைந்து பழகப் பழக, பழைய காதல் மென்னிலா முகிழ்த்து.. அவளுள் இருக்கும் அவனுக்கான பழிவெறியைத் தீர்க்க முடியாமல் போய் விடுமோ என்று பயமா?? 

இல்லை.. இத்தனை காலமாகியும்..அவனை ஏதும் செய்ய முடியாத தன் கையாகாத்தனத்தை எண்ணி வருந்தியதால் ஏற்பட்ட எரிச்சலா?? 

அது அவளுக்கும், அவள் மனதுக்குமே வெளிச்சம்!! 

அவன் செய்த துரோகங்களையும், பழைய வலிகளையும் மறந்து அவன் மேல் உயிராக இருந்த மென்னிலா..

குழந்தை தங்கிய இந்த சமீப காலமாக… அவன் மீது எரிந்து எரிந்து விழுவதைத் தாங்க மாட்டாது… கவலையில் உழன்று தவிக்கத் தொடங்கியவன், அதைத் தான் அவளிடம் சொல்லவும் செய்தான். 

கணவன் தன் எரிச்சலுற்ற சுபாவத்தில் உழன்று தவிப்பது அறியாத மென்னிலாவோ.. உள்ளுக்குள் சின்ன பதற்றம் மீதூற, “எ.. என்ன உளர்றீங்க..?”என்று கேட்டாள். 

அவனோ தன் மனதில் இருக்கும் இரகசியங்களை சொல்ல நாடியவன், “இது சம்பந்தமா..நான் டாக்டர கூட போய்… பார்த்தேன்..”என்று சொல்ல.. அவளுக்கோ இன்னும் கொஞ்சம் நெருடலுற்றது மனம்

இதமான ஹஸ்கி குரலில், “என் பொண்டாட்டிஹ்..முன்ன மாதிரி.. என் கூட அன்னியோன்னியமா பழகுறது குறைஞ்சிருச்சு டாக்டர்ன்னு சொன்னேன்.. அவர் தான்.. 

‘ இட்ஸ் சிம்பிள்.. பயப்பட்ற மாதிரி ஒண்ணும் இல்லை.. இப்போ உங்க மனைவி ப்ரெக்னென்ட்டா இருக்காங்க இல்லையா?? .. ஸோ ஹோர்மோன்ஸ்ஸோட ஏற்ற இறக்கம் காரணமா.. மூட் ஸ்டிமுலேஷன் இருக்கத் தான் செய்யும்.. பத்தில் இரண்டு பெண்களுக்கு.. கர்ப்பகாலத்தில்.. தன்னோட கணவன் மேல டெம்ப்ரரி வெறுப்பு வர்றது இயற்கை தான்.. அதுக்காக அவங்க உங்களை வெறுக்குறாங்கன்னு அர்த்தம் இல்லை மிஸ்டர். பரிதி.. கொஞ்சம் பொறுமையா இருங்க.. அவங்க மேல அன்பு காட்டுங்க.. கூடிய சீக்கிரம் சரியாகிருவாங்க.. பழையபடி அவங்க உங்க அன்பை ஏத்துக்க ஆரம்பிப்பாங்கன்னு சொன்னார்.. “என்றவன், 

அவளது வயிற்றைத் தடவிக் கொடுத்தவனாக, காதல் மீதூற, “அதனால உன்னோட இந்த மாற்றத்துக்கான காரணம் எனக்குத் தெரியும் ஆண்டாளு.. என்னால உன்னய புரிஞ்சிக்க முடியுது…கொஞ்ச நாள்ல இதெல்லாம் சரியாப் போயிரும்.. அப்புறம் நானே கொஞ்சம் வேலைன்னு பிஸியாகிப் போனாலும்..நீயே எனக்கு கோல் பண்ணி.. ‘மாமா வீட்டுக்கு வாங்களேன் ப்ளீஈஈஸ்’னு கெஞ்சுவ பாரேன்”என்று சொன்ன போது.. அந்த காந்த விழிகள் அவளை எதுவோ செய்யும் போல இருந்தது. 

ஆயினும்.. அவன், ‘இப்போது வரை உண்மைக்காரணம் அறியவில்லை’ என்றதுவே அவளுக்கு மிகப்பெரிய ஆசுவாசத்தைக் கொடுக்க, அமைதியாக அழுந்த அதரங்கள் மூடிக் கொண்டாள் அவள். 

அவனோ இளகிய குரலில், “இந்த சின்ன விஷயத்துக்கு நீ என்னய வெறுக்குறது.. என்னய விட்டு தள்ளிப் போறது..எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா? ..”என்று கேட்க, இதுநாள்வரை ஏனோதானோ என்று அவன் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு.. விழிகளில் மின்னல் வெட்டியது. 

இதழ்கள் இலேசாக குவிய, மனதுக்குள், “ஓ.. கஷ்டமா இருக்கா?நிஜமாவே கஷ்டமா இருக்கா?? அப்படியானால் அவன் காட்டுவது நடிப்பேயில்லையா?’என்று பற்பல கேள்விகள் முகிழ்த்தது அவளுக்குள். 

இத்தனை பேசியும் உணர்ச்சியே காட்டாத மனைவி முகத்தைக் கண்டு சோர்ந்து போனவன், அவளை விட்டும் எழுந்தமர்ந்தவனாக, 

அவள் கன்னம் தாங்கியவாறு, உணர்ச்சி மல்க, “எனக்கு என் மேல மட்டும் அன்பு காட்டுற ஆண்டாள் வேணும்.. நீ வேணும்.”என்று சொல்ல.. அவன் சொல்வது நடிப்புக்குமா? மெய்க்குமா? என்று புரியாத சின்ன நெருடல் வந்து போனது அவளுக்குள். 

கூடவே சின்ன கோபமும் மீதூற.. தன் கன்னம் ஏந்தியிருக்கும் அவனது கையினை தன்னிலிருந்தும் விலக்கியவாறு,

 “ஏன் பரிதி.. உங்களுக்கு ஆண்டாளை.. தவிர வேற எந்த பொண்ணுமே கிடைக்கலையா?? .. இத்தனைக்கும் ஆண்டாளுக்கு கண்ணன் கூட வாழவே கெடக்கலை.. அது ஒரு கைக்கிளை காதல்….காலத்தோடு பொருந்தாத காதல்.. அப்படின்னா நானும்.. ஆண்டாள் போல..சந்தோஷமா வாழாம.. உங்களை நினைச்சே இறந்து போகணும்??.. அது தான் உங்க ஆசையா..?”என்று கேட்க, 

அவன் ஆசையாக அழைக்கும் ‘ஆண்டாள்’ என்ற விழிப்புக்கு.. அவள் கற்பிக்கும் அர்த்தத்தைக் கண்டு.. பரிதிவேல் என்னும் முரடனின் இதயமும் கூட காயப்பட்டுப் போனது!!

“ சந்தோஷமா வாழாம.. உங்களை நினைச்சே இறந்து போகணும்.. அது தான் உங்க ஆசையா..?”- அவளது வலி தரும் சொற்கள்.. அவனது செவிகளில் திரும்பத் திரும்ப ஒலிக்க வலித்தது அவனுக்கு. 

கண்ணன் மேல் அளவில்லாத அன்பு வைத்திருக்கும் பல்லவர்கால ஆண்டாள் போல.. இவன் மேல் அளவில்லா காதல் வைத்திருக்கும் நவீன கால ஆண்டாள் என்று தானே சுட்டும் அவன் மனம்!! 

அவனோடு ‘அவள் நூற்றாண்டு காலம் மனம் ஒருமித்து வாழ வேண்டும்’ என்று எதிர்பார்த்திருக்க.. அவளோ இறப்பினைப் பற்றி பேச்செடுக்க.. அடிவாங்கியது மனம். 

அவளது விழிகளையே.. சிவப்பேறிய கண்களுடன்.. ஏதும் சொல்லாமல்.. வலியுடன் அமைதியாகப் பார்த்துக் கொண்டேயிருந்தான் பரிதி. 

அந்த கணம்.. அவனது கவனத்தைக் கலைத்தது.. அங்கு பணிபுரியும்.. பணியாளர் பெண்களுக்கு என கட்டப்பட்டிருக்கும்.. குழந்தைகள் துயிலும் குடிலில் இருந்து.. பசியில் வீறிட்டழும் குழந்தைகளின் சத்தம்!! 

குழந்தைக் குடிலில் இருந்து முதலில் அழவாரம்பித்தது என்னமோ.. ஒரு குழந்தை தான்!! 

அந்தக் குழந்தையின் வீறிடல் சத்தம் கேட்டு.. துயில் கலைந்த பிற குழந்தைகளும் அழவாரம்பிக்க, காற்றை நிறைத்தது எங்கும் குழந்தைகளின் அழு நாதம்!! 

குழந்தைகளின் அழுகையொலி.. முரடன் பரிதிக்குள் ஒரு தாய்மையுணர்வை சுரக்கச் செய்ய, மனைவியை விட்டும் எழுந்து கொண்டவன், 

பணியாளர்கள் கதிர் கொய்யும் இடம் நோக்கி.. வரப்பு வரை நடந்து சென்றவன், “ஏலேஏ… மூக்காயீஈஈஈ, கண்ணம்மாஆஆ..முத்தூஊ.. .. குழந்தை அழுறது கேக்குதுல்ல.. போய் குழந்தைய தேத்தறதை விட்டுட்டு… அழவுட்டு பார்த்துட்டிருக்கீஈங்க..?அப்புறம் வேலய கவனிச்சிக்கலாம்.. முதல்ல போய்.. குழந்தைங்க பசியாத்துங்க போஓங்க” என்று அனுப்பி வைக்க, 

அங்கிருந்த பெண்கள் என்ன? ஆண்கள் முதற்கொண்டு அவனை எல்லாரும் அதிசயமாகத் தான் பார்த்தனர்.

பின்னே… அழும் குழந்தைகளின் பசியாற்றவென இரங்கும் மென்மையுள்ளம் படைத்தவனல்லவே இந்தப் பரிதி!! 

‘குழந்தை அழுதாலும் பரவாயில்லை. போய் வேலையை முடித்து விட்டு அப்புறம் குழந்தையை கவனிக்க செல்’ என்று வழமையாக சொல்லும், ‘பரிதியா இது?’ என்று அங்கிருந்த அனைவரின் உள்ளத்தில் சின்ன வியப்பு தோன்றாமலில்லை. 

குழந்தைகளின் குடிலிற்கு தாய்மார்கள் சென்றதும் தான்.. குழந்தைகளின் அழுகை மட்டுப்பட.. மெல்ல மெல்ல ஒரு சின்ன சந்தோஷம் பிறந்தது அந்த முரடனுக்குள். 

அந்த சின்ன சந்தோஷத்துடனேயே திரும்பி மாமரத்தடியைப் பார்த்த போது.. அங்கே அவனது மனைவி இல்லை.

 மாறாக அவள் வாசித்துக் கொண்டிருந்த புத்தகம் மட்டும்.. குப்புற விரிந்து படுத்துக் கிடந்தது. 

கைகளை இடுப்பில் வைத்துக் கொண்டு நின்றிருந்தவனின் இலேசர் கண்கள் சிறு பதற்றத்துடன்.. தன் மனைவியைத் தேட, 

அவளோ மாமர நிழலை விட்டும்.. எழுந்து..தென்னந்தோப்பு பக்கம்.. தனிமையில் நடந்து சென்று கொண்டிருப்பது புரிந்தது. 

ஒயிலான இடுப்பு முன்னோக்கி வளைந்திருக்க.. வயிற்றைத் தள்ளிக் கொண்டு நடக்கும் மனைவி பூண்டிருக்கும் தாய்மை என்னும் புது அவதாரத்தில்.. அப்படியே மனம் இலயித்துப் போனது அவளுக்கு. 

அந்த முரடனுக்கோ, ‘அவள் விரல் பிடித்துக் கொண்டு இணைந்து நடக்க வேண்டும்’ என்ற ஆசை இதயத்தோடு பிறந்தது. 

அவளை நாடி.. அவள் பின்னாலேயே அரவமேயெழுப்பாது.. திருடன் போல விரைந்தவன்.. அவள் எத்தனை திட்டிய போதும் சரி.. சூடு சுரணையேயற்று.. அவளைத் திரும்பத் திரும்ப பின்னிருந்து அணைத்து.. கன்னத்தில் குட்டிக் குட்டி முத்தங்கள் வைக்கவே நாடினான்!! 

அவள் திட்டத் திட்ட அணைப்பது கூட சின்ன சந்தோஷம் இப்போது அவனுக்கு!! 

அவளை ஆசையுடன் கட்டியணைக்க விரைந்தவனுக்கு.. அந்தோ பரிதாபம்!! 

விதியின் சதியால்.. அவளைப் பதற்றத்துடன் கட்டியணைக்கும் படியானது!! 

அப்படி பதற்றத்துடன் கட்டியணைக்கும் வண்ணம் என்ன தான் ஆனது? 

இதோ ஆனவை எல்லால் கீழ்வருவன தாம்!! 

அங்கே வானை நோக்கி உயர்ந்து வளர்ந்திருந்த தென்னை மரத்தில்..நுனியில் தொங்கிக் கொண்டிருந்த காய்ந்த குலையொன்று.. திடும்மென வீழ்ந்து.. அவளது உச்சந்தலையில் விழப் போக, 

அதைக் கண்டு ஓடி வந்தவன்.. மனைவியை.. தன் உடலையே கேடயம் போல ஆக்கிக் கொண்டு.. தென்னங்குலை அவள் மீது விழாமல் காத்தவனின்.. தோள்புஜத்தில் வந்தது விழுந்தது அது!! 

தோள்புஜம் விண் விண்ணென்று வலித்துத் தள்ளியது ஒருபுறமிருந்தாலும்.. பரிதியின் கைகளோ.. அப்போதும் விடாமல்.. மனைவியின் வயிற்றைத் தான் அணைத்துப் பிடித்திருந்தது!! 

அவளோ.. சட்டென்று கணவன் பின்னாடி இருந்து.. அணைத்த கோபத்தில்.. திட்டிவிடும் முகபாவத்துடன்.. திரும்பப் போனவளுக்கு.. ‘சரசர’ என்று நாராசமான ஒலியுடன்.. தென்னங்குலை வந்து.. 

அவனில் வீழ்ந்தது புரிய.. சட்டென்று வயிற்றை அணைத்த கணவனின் கையை… பதற்றத்துடன் அணைத்துக் கொண்டாள் மென்னிலா. 

அவள் இதயம் தாறுமாறாக துடிக்கவாரம்பிக்க.. மூச்சுக்களோ..அடிக்கடி பெரும் சத்தத்துடன் வெளிவந்து கொண்டேயிருந்தது. 

‘குழந்தைக்கு ஏதாவது ஆகியிருந்தால்??’என்று யோசிக்கவே பயமாக இருக்க.. கணவனின் பெனியனை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள் அவள். 

மனைவியின் பதற்றம் புரிய.. அவளை அணைத்துக் கொண்டே.. முதுகு தடவியவனாக,

 “உனக்கும்,குழந்தைக்கும் ஒண்ணும் ஆகலைலஹ்??…. “என்று கேட்டவனுக்கு.. தன்னுடலில் ஓடும் வலியை விட.. ‘அவளுக்கு என்னானதோ?’ என்ற பதற்றத்தில் விளைந்த வலி தான் அதிகமாக இருந்தது. 

அந்நேரம்.. கணவனின் முகத்தில் தோன்றிய கோடான கோடி உணர்ச்சி பாவங்களும்.. 

அவளுள் என்ன என்னெல்லாமோ செய்ய, கணவனின் முகத்தையே.. ஒரு விதமான கிளர்ச்சி மீதூறப் பார்த்துக் கொண்டிருந்த சமயம் அது!! 

அவளுள் தோன்றும் உணர்ச்சியினை அப்படியே மழுங்கடிக்கும் வண்ணம் கேட்டது.. ஒரு அடாவடித்தனமான பஜாரிப்பெண்ணின் குரல்!! 

அந்தக் குரலில் அதிர்ந்து போய் நின்றவள், அந்த பஜாரிப்பெண்ணின் முகத்தை வெகுநாள் கழித்து கண்டதில்.. பழைய நினைவுகள் எழுந்து அவளை அலைக்கழிக்க.. அப்படியே உறைந்து போனவளாக நின்று விட்டாள். 

அங்கே.. அகல விரிந்த விழிகளுடன்.. தன் தனங்கள் ஏறி இறங்க.. ‘மூசு மூசு’ என்று மூச்சு வாங்கிக் கொண்டு நின்றது என்னமோ அவளது எதிரி பார்வதியம்மாளே தான்!! 

ரௌத்திரம் கமழும் விழிகளுடன்.. பெருங்குரலெடுத்து கத்தும் தொனியில், “அடிய்யேஏஏஏஏய் க்கூர்றுகெட்ட சிறுக்கீஈஈ.. என்னைக்கு இங்க வந்து தொலைஞ்சியோஓஓஓ? அன்னை.. ய்ய்யிலயிருந்து எம்மவனுக்கு கெட்டகாலம் தான்டீஈஈஈ…. தரித்திரம் பிடிச்சவ்வஅஅ…”என்று கத்திக் கொண்டே வந்தாள் அந்த பஜாரிப்பெண்!! 

மிகவும் தைரியத்துடன் நின்றிருந்தவளுக்கோ.. அவரது குரலும், விழிகளும்.. அந்த கோரமான நாளை நினைவுறுத்த.. மெல்ல மெல்ல பின்னோக்கி நகர்ந்தவள்.. 

அனிச்சை செயல் போல கணவனின் கைச்சந்தைப் பிடித்துக் கொண்டு நின்று விட்டாள். 

பரிதிக்கோ.. ‘அந்தப்பெண்.. எப்படி இங்கே.. திடுதிப்பென்று வந்து நுழைந்தாள்’ என்று தெரியவில்லையாயினும் கூட.. அவளின் வருகையை.. பரிதிவேல் வீரன்.. ஒரு சிறிதும் விரும்பவில்லை என்பது அவனது முகச்சுளிப்பு காட்டிக் கொடுக்கலானது. 

அதிலும் அவனது ஆண்டாள்.. பயந்து போனவளாக.. அவன் பின்னாடி ஒளிந்து.. அவனது கைச்சந்தைப் பற்றி நிற்பது வேறு.. கூடுதல்.. கவலையைக் கொடுக்க.

. மனைவியின் கையை, ‘பயப்படாதே’ என்பது போல தட்டிக் கொடுத்த வண்ணம் நெஞ்சுறுதியுடன் நின்றான் அவன். 

பார்வதி கிழவிக்கோ… மென்னிலா கருவுற்று நிற்கும் புடைத்த வயிறைக் காணக் காண.. பழைய வன்மங்கள் எழுந்து.. அவரின் மனதை.. அலைக்கழிக்க.. அவளை சுட்டெரிப்பது போல பார்த்துக் கொண்டே.. முன்னேறி வந்தவர், 

“ந்நீஈ.. இங்கன காலெடுத்து வைச்ச முதல் நாளே.. எம்மவன ஜெயிலுக்கு அனுப்பி வவைச்சஅஅ.. க்கடல்ல செத்துப்போக இருந்த இந்த சிறுக்கிமுண்டய காப்பாத்தப்போயீஈஊ.. எம்மவனோட.. கையும் போச்சு… இப்போ.. தென்னங்கொல விழுந்து.. செத்துப் போகவுருந்த… உன்னய காப்பாத்தப் போயீஈஈ… எம்மவன் உசுரும் போகணுமோ??”என்று பேசிக் கொண்டே அவள் அருகில் வந்தவர், 

மென்னிலாவை மறைத்து நிற்கும் பரிதியை.. மேலிருந்து கீழ்வரை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே, 

ஆங்காரமான தொனியில், “எதுக்குடீஈஈ.. இங்கன வந்த சூடு சொரண கெட்டவளேஏஏ…”என்றவள், ‘வயிற்றுப் பிள்ளைத்தாச்சி’ என்ற ஈவிரக்கம் கொஞ்சம் கூட இல்லாமல்,

பரிதியே எதிர்பார்த்திராத நேரம்.. பரிதியைப் பற்றியிருந்த அவளது கையை நிமிட நேரத்தில் பிடித்திழுத்த பார்வதி, அவளை.. பரிதி சுதாரித்து தடுக்கும் முன்னர், 

“செத்துத் தொலைடீஈஈ..”என்ற வண்ணம்.. வலுவாகத் தள்ளிவிட, சற்றும் நினைத்துப் பார்த்திராத அந்தத் தள்ளலில்.. ஈரெட்டு பின்னாடி சென்று.. மல்லாக்காக விழுந்தவளின் இடுப்பில் பட்டது.. அப்போது தான் அங்கே வீழ்ந்த தென்னங்குலை!! 

அதில் இடுப்பென்புகள்… நசுங்கி விரிவது போல ஒரு வலி.. சுருசுருவென்று எழுந்து பரவ.. இடுப்பைப் பிடித்துக் கொண்டு, “மாஆஆமாஆஆ”என்று கத்தலானாள் ஆண்டாள். 

மனைவி தன் சித்தியால் தள்ளப்பட்டு விழுந்ததை.. கனவில் நடந்ததுவோ என்று ஒரு கணம் ஜீரணிக்க முடியாமல் நின்றவனுக்கு, அவளது ‘மாஆஆமாஆஆ’என்ற உயிர்போகும் அழைப்பில் தான் சுயநினைவு வந்தது. 

அவள் படும் வேதனையில்.. இடுப்பை பிடித்துக் கொண்டு.. அவள் கண்களில் கண்ணீர் சரம் கோர்க்க.. அவள் கத்தியழுதபடி படும் வேதனையில்… உயிர் ஜீவன் உருக, 

“ஆண்டாளூஊஊஊஊ..”என்று கத்திய வண்ணம்.. அவளைத் தூக்கிக் கொள்ளப் போனவனை..தடுத்து நிறுத்தியது பார்வதியின் குரல்!! 

“ஹேய்.. ந்நிறுத்துல!! ‘காதலிக்குற மாதிரி நடீஈ’ன்னு சொன்னா.. நீர்ருஊஊஊ.. நிஜமாவே அந்தச் சிறுக்கிய காதலிச்சிட்டீரோக்கக்?”என்று கத்திக் கத்திப் பேசிக் கொண்டிருந்தவளை.. அதற்கு மேலும் பேச முடியாத வண்ணம், 

பார்வதியின் கழுத்தை ஒற்றைக்கையால் இறுக்கிப் பிடித்திருந்தான் பரிதி. 

அவனது வலிமையான பிடியில் நின்றும், விலகிக்கொள்ள பார்வதியோ.. எத்தனையோ பிரயத்தனங்கள் செய்தும்.. அவனது கைக்கு தாறுமாறாக அடித்தும் பலனில்லாமல் போயிற்று.. 

நிமிடத்துக்கு நிமிடம் அதிக அழுத்தத்தை பிரயோகித்து.. அவளது குரல்வளையை அழுத்திப் பிடித்தான் பரிதி. 

அதில் பார்வதியின் முகம் அடைத்து.. செக்கச் செவேலென மாறி.. நரம்புகள் புடைத்துக் கிளம்ப, 

இவனோ கொலைவெறி மிகும் கண்களுடன், “ந்நீஈஈ..இதுவரை சொன்னதையெல்லாம் நான் ப்பண்ணேஏஏஏன்.. இப்ப.. வ்வாவது என்னை நிம்மதியா இருக்க வ்விட மாட்டேஏஏல்ல?? .. என்னய்யய்.. சந்தோஷமா .. இருக்க வ்விட மாட்டேஏஏல்ல??”என்று கேட்டவன் கை.. வர வர இறுகிக் கொண்டே போனது. 

அவனது சொல்லையும், செயலையும் வலியில் அலறிக் கொண்டே பார்த்துக் கொண்டிருந்த மனைவியவளுக்கு… அது ஏனோ நடிப்பாகத் தோன்றவில்லை. 

கொஞ்சம் தாமதித்தாலும் கூட.. ‘கணவன் கொலைகாரனாக மாறும் அபாயம் இருக்கிறது’ என்று மட்டும் தோன்ற, மெல்லத் திரும்பி.. கணவனின் பாதத்தினை மெல்லிய கரங்களால் பற்றிக் கொண்டவள், 

“மாமாஆஆஹ்.. வ்வேண்.. ஆஆஹ்..”என்று வலியில் சொல்லவும் தான்.. அந்தக் கொடூரியின் கழுத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாகக் கையை எடுத்தான் அவன்!! 

பார்வதியோடுள்ள பிணக்கினை விடவும்.. வலியில் அலறித் துடிக்கும் மனைவியின் உயிரே அவனை ஒரு பைத்தியக்காரன் போல மாற்ற.. அந்த முரட்டு ஆண்மகனின் கண்களில் இருந்தும் வழிந்து கொண்டிருந்தது நீர். 

அவனுடைய மனதை சமாதானப்படுத்த சொன்னானா? இல்லை மனைவிக்காகச் சொன்னானா? 

திரும்பத் திரும்ப.. திரும்பத் திரும்ப.. உணர்ச்சி வசப்பட்டவனாக, “இல்லை ஒண்ணும் இல்ல..ஆண்டாளு.. ஒண்ணு இல்ல ஆண்டாளு. கொஞ்சம் பொறுத்துக்க.. உனக்கும், என் குழந்தைக்கும் ஒண்ணும் ஆக விடமாட்டேன்.. இதோ ஹாஸ்பிடல் போயிரலாம்”என்று சொன்னவன், அவளை அநாயசமாக கைகளில் ஏந்திக் கொண்டு, 

ஓடவாரம்பித்தான்.. தூரத்தே தரிக்கப்பட்டிருக்கும் தன் வாகனத்தை நோக்கி!! 

இடுப்பைப் பிடித்துக் கொண்டு.. மூச்செடுக்க சிரமப்பட்டவளாக.. வலியில் அனத்திக் கொண்டே.. “என்.. என்னாலஹ்.. ம். ம்முடிய்.. லஹ்.. மாமாஹ்” என்ற வண்ணம்.. அவன் தோளில் மயங்கிச் சரிந்தாள் அவனது இளம் மனைவி!! 

பரிதி அந்நொடி சாதாரண மனிதன் போல இல்லை!! மயங்கி வீழ்ந்தவளைப் பார்ப்பதா? மருத்துவமனை நோக்கி வண்டியை விடுவதா?? என்று சரிவரப் புரியாத ஒரு குழந்தை போலத் தான் நின்றான். 

அவளுக்கான தன் காதலை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு, ஒரு அசுரன் போலத்தான் நடந்து கொள்ள நாடினான் போலும் அவன். 

ஆம், அசுரத்தனமாகவே தான் வண்டியை.. கண்மண் தெரியாத வேகத்தில்.. மருத்துவமனை நோக்கி.. பதினைந்து, இருபது நிமிடங்களில் எல்லாம் ஓட்டி வந்திருந்தான் அவன்!! 

அவளை கைகளில் ஏந்திக் கொண்டே, பதற்றத்துடன் மருத்துவமனை படிகளை இரண்டிரண்டாக தாவி ஏறியவன்.., 

தன் உயிர் போகும் தொனியில், “டாஆஆக்கடர்.. டாஆஆக்கடர்” என்று அவன் கத்திய போதும் சரி..

 மூர்ச்சையற்றிருந்தவளை நோக்கி, ‘எமர்ஜென்சி’ என்று புரிந்து ஓடி வந்த சிற்றூழியர்கள்.. அவளை டிராலியில் வைத்துத் தள்ளிக் கொண்டு போன போதும் சரி.. 

சிகிச்சை அறைக்குள்ளேயே அவன் நுழையப்போன போது, “இங்க எல்லாம் நீங்க வரக்கூடாது சார்.. வெளியே நில்லுங்க சார் ”என்று அவர்கள் தடுத்த போதும் சரி… 

மருத்துவமனைக்கு போய் வந்து கொண்டிருந்த மக்கள்.. அவனை கழிவிரக்கத்துடன் பார்த்த போதும் சரி… 

உடைந்து போனவனாக.. அவன் சிகிச்சை அறைக்கு வெளியேயே… பரதேசி போல நின்றிருந்த போதும் சரி.. 

‘இறால் பண்ணை’யை மேற்பார்வை செய்யச் சென்றிருந்த வாசு மாமா விஷயம் கேள்விப்பட்டு.. ஹாஸ்பிடல் வந்த போதும் சரி… பரிதி பரிதியாக இல்லை!! 

அடிபட்ட நேரத்திலும், ‘அம்மா’ என்று அலறாமல் “மாமாஆஆ’என்று அலறியவளின் குரல்…அவனது செவிகளில் ‘எதிரொலி’ போல நில்லாமல் மீண்டும் மீண்டும் ஒலித்து ஒலித்து, அவனை அலைக்கழிக்க.. 

‘மனைவியை காக்காமல் நின்ற தன் கையாலாகாத நிலையை எண்ணி எண்ணி’

சுவற்றுக்கு.. தன் ஆத்திரம் தீரும் வரை.. ஓங்கி ஓங்கிக் குத்திக் கொண்டே… மௌனமாகக் கண்ணீர் விட்டுக் கொண்டே இருந்தான் அவன். 

பரிதி.. அவ்வளவாக கடவுள் நம்பிக்கை இல்லாதவன் தான்!!

 இருப்பினும் அந்நொடி.. அவன் மனதுக்குள் எழுந்த ஒரே பிராத்தனை ‘நான் பண்ண தப்புக்கு என்ன தண்டி இறைவா.. ஆனா என் குழந்தையயும், பொண்டாட்டியயும் தண்டிச்சிடாதே’என்றே தான் இருந்தது. 

****

சரியாக பதினெட்டு மணிநேரம் கழித்து அவள் கண் விழித்த போது, ‘அவளுக்கு தான் எங்கிருக்கிறோம்?’ என்றே முதலில் புரியவில்லை!! 

சுற்றி வளைத்து கண்களை ஓடவிட்டவளுக்கு.. இதயத்துடிப்பை கண்காணிக்கும் கருவியின் ஓசை கேட்ட பின்பு தான்.. ‘அவள் மருத்துவமனையில் இருக்கிறாள்’ என்றே புரிந்தது. 

மெல்ல மெல்ல.. அந்த பஜாரிப்பெண் பார்வதி.. அவளைத் தள்ளிவிட்ட ஞாபகம் வர, குழந்தைக்கு என்னானதோ? என்ற பதற்றம்.. அவளது இதயத்தைக் கௌவிப் பிடிக்கலானது அவளுக்கு. 

அப்போது அவள் கையை யாரோ உரிமையின்றி பற்றுவது புரிய.. அச்சத்துடன்.. யாரென்று பார்த்தவளுக்கு.. அது தன் கணவன் தான் என்று புரியவும்.. விழிகள் ஆசுவாசம் எய்தத் தொடங்கியது. 

ஆனால் பரிதிவேல்வீரனோ.. மனைவியின் கைகளில் முகம் புதைத்துக் கொண்டு.. குமுறிக் குமுறி அழத் தொடங்க.. அந்த அழுகை அவளை ஏதோ செய்ய… அவனையே உணர்ச்சியற்ற முகத்துடன் பார்த்திருந்தாள் அவள்!! 

முரடன் பரிதி.. ஈவிரக்கமேயற்ற முரட்டுப் பரிதிக்குள்ளும் ஈரமுண்டு என்று அவள் கண்டுகொண்டது அப்போது தான். 

அவன் கோபப்பட்டுப் பார்த்திருக்கிறாள்;புன்னகைத்துப் பார்த்திருக்கிறாள்; இன்னும் ஏன் வாய் விட்டு சிரித்துக் கூட பார்த்திருக்கிறாள்!! 

ஆனால் அழும் பரிதியின் கண்ணீர் முகம்?? அவனது அழும் முகத்தை இன்று தான் பார்க்கிறாள் அவள்!! 

என்ன முரட்டுப்பரிதி அழுகிறானா?? என்று ஆச்சரியம் கமழ அவனையே இமைக்க மறந்து பார்த்தாள் மென்னிலா. 

அழுது கொண்டே அவளைப் பார்த்தவன்.. அவளை மென்மையாக அள்ளித் தன் நெஞ்சோடு அதிரடியாக அணைத்தவனாக, 

“என்னால முடியல ஆண்டாளுஹ்.. நீ இல்லாத நொடிகள நெனச்சுப் பார்க்கக் கூட முடியல ஆண்டாளுஹ்.. நீயும்.. எ.. என் குழந்தையும்.. என்னய விட்டு போயிருவீங்களோன்ற பயமே என்னயஹ்.. ஒரு பைத்தியஹ்.. க்காரன் மாதிரிஹ் ஆக்கிருச்சுஹ்.. குழந்தையோட உனக்கு ஏதாவது ஆஆ… ஆகியிருந்தன்னாஆஆஹ்… .. இந்த பரிதியும் உன்கூட.. வந்திருப்பேஏஏன்ன்..”என்று சொல்லிக் கொண்டே.. மோனமாக அவன் கண்ணீர் விட… 

அவன் நெஞ்சுப் பக்கத்தில் தலை வைத்திருந்தவளுக்கு, அவளது இதயம் தாறுமாறாக துடிப்பது கேட்டது. அவனது பதற்றம் புரிந்தது. 

குழந்தையும் அவளும் நலம் என்றானாலும் கூட.. அந்த அதிர்ச்சி அவனை பாடாய்ப்படுத்தும் தரம் புரிந்தது. 

தன் நெஞ்சுக்கூட்டில் இருந்து.. அவள் தலையைப் பிரித்து எடுத்தவன், தாங்கவே மாட்டாமல், “நான் உனக்கு பண்ண தப்புக்கு.. கடவுள் எந்த தப்புமே பண்ணாத என் குழந்தய.. தண்டி… ச்சிருவா.. ஆஆனோன்னு பயந்துட்டேன் தெரியுமாஹ்?..”என்று உணர்ந்து சொல்லிக் கொண்டே.. அவன்.. அவளை மீண்டும் இறுக்கி அணைத்துக் கொள்ள, மென்னிலாவின் இதயத்துக்குள் ஒரு நடுக்கம் எழுந்து பரவியது. 

கணவனின் அழுகை.. அவனது பதற்றம்.. உளறல் மொழிகள்.. அவன் காட்டும் அன்பெல்லாம்… அந்நொடி அந்நொடி ஏனோ நடிப்பாகவே தோன்றவில்லை அவளுக்கு!! 

கண்ணீர் விடும் கணவனையே அப்போதும் கூட.. வெறித்துப் பார்த்துக் கொண்டேயிருந்தாள் அவள். 

காதல் தானடி என் மீதுனக்கு? 

(பதில் விரைவில் நவில்வாள்) 

 

4 thoughts on “காதல் தானடி என் மீது உனக்கு!-17,18,19&20 (விஷ்ணுப்ரியா)”

  1. Забронировать отель в сервисе бронирования отелей можно быстро и удобно. Новые технологии дают возможность быстро найти и забронировать нужный отель.
    [url=https://official-hotel.ru/]Забронировать отель в сервисе бронирования отелей[/url]
    Выбор отеля — это важный этап подготовки к поездке. При выборе отеля следует обращать внимание на его местоположение, предлагаемые услуги и мнения клиентов.
    После подбора отеля необходимо проверить условия его бронирования. Часто существуют ограничения по отмене, предоплате и срокам пребывания.
    На последнем этапе убедитесь, что ваша бронь подтверждена и сохраните все ключевые детали. Уделите внимание мелочам, чтобы не столкнуться с проблемами при регистрации.

  2. I’ve been surfing online more than 3 hours nowadays, yet I by no means discovered any attention-grabbing article like yours. It’s beautiful price sufficient for me. In my opinion, if all webmasters and bloggers made excellent content as you did, the internet will be a lot more helpful than ever before.

Leave a Reply to canadian pharmaceutical companies Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top