ATM Tamil Romantic Novels

கல்லுக்குள் இதயம் வைத்தாய்

4.கல் இதயம்

 

 

வெளியில் பங்சனுக்கு சென்ற ராஜேந்திரனும் கற்பகமும் வீட்டிற்கு வந்ததும் பார்த்தது நிறை சமைத்த உணவுகள் அனைத்தும் கீழே சிதறி கிடந்ததை தான்..

 

 

என்னங்க இது..,இப்படி கிடக்குது வீடு..நிறை வீட்டை இப்படி வச்சுக்க விட மாட்டாளே எங்க போனா..

 

 

கற்பகம் நம்ம நிறை  வீட்டுல இல்ல..ஏதோ பண்ணிருக்கான் உன் புள்ளை.. நிறை கோவத்துல போயிருக்கணும்..

 

என்ன சொல்றிங்க என்று அதிர்ச்சியில் வினவ

 

 

அவர் ஆம் என்பது போல தலை ஆட்டினார்.. 

 

இப்போ என்னனங்க செய்றது..நாமா வர வரைக்கும் இந்த பொண்ணு இங்க இருந்தா என்னவாம்..பெரியவங்க பேச்சை கேட்க கூடாதுன்னு போயிருக்கா..

 

 

வார்த்தையை விடாத கற்பகம்… நிறை தங்கமான பொண்ணு உன் பையன் தா ஏதாச்சும் சொல்லிருப்பான்… நாம ஏதும் செய்ய வேண்டாம்..உன் பையனே வந்து சொல்லுவான்..இப்போ  நா நிறைய தேடி கூட்டிட்டு வறேன்…என்று ஞாபகம் வந்தவராக அவள் தோழிக்கு கால் செய்ய நிறை இருக்குமிடம் தெரிந்தது..

 

 

பொம்பள பிள்ளையை இப்படி நடு ராத்திரி வீட்டை விட்டு அனுப்பிட்டானே எங்க போச்சோ குழந்தை என்று பயந்தவர் நித்யாவிற்கு பேசினார்..

 

 

ஹலோ..,சொல்லுங்க ப்பா..

 

ம்மாடி..,நிறை வந்தாளா ம்மா

 

ம்ம் ஆமா ப்பா நிறை இங்க தா இருக்கா..இப்போ தான் தூங்குறா காலைல வந்து பாருங்க..

 

கொஞ்சம் பார்த்துகோம்மா..,

 

ம்ம்ம் சரி ப்பா..ப்பா கேக்குறேன்னு தப்பா நினைக்காதீங்க..சாயங்காலம் சந்தோசமா வீட்டுக்கு போனா .ஆனா இப்போ என்ன ஆச்சு..நீங்க ஏன் நிறைய தடுக்கல..,ஒரு தோழியாக கோவம் வரத்தான் செய்தது..

 

நித்யா..நாங்க இப்போ தான் வீட்டுக்கு வந்தோம்..புள்ளைய பார்த்துக்கோமா.. காலைல வந்துறோம்..என்று கூறி விட்டு வைத்து விட்டார்..

 

நிறை எங்கு சென்றாளோ என்று இருவரின் மனமும் பதை பதைத்தது.. நிறைக்கு ஏதோ ஆகி விடுமோ என்று பயந்தனர்…நித்யா மட்டும் இல்லையெனில் இன்று உலகத்தில் பெண் பிள்ளைகளுக்கு நடக்கும் தவறை நினைத்து ஒரு நிமிடம் ராஜேந்திரனுக்கு உயிர் போய் வந்தது.. அந்த இரவில் அவள் வீட்டை விட்டு தனியாக சென்றது இளவேந்தன் மீது கோபத்தை ஏற்படுத்தியது..

 

வேலைக்கரர்களை வர சொல்லி வீட்டை சுத்தம் செய்து விட்டு அறைக்கு சென்றனர்..

 

 

காலை எழுந்ததும்  முதல் வேலையாக இளவேந்தன் அறைக்கு சென்றார்..

 

 

அவன் தன் அறைக்கு அருகில் இருக்கும் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தான்..

 

 

இளா உன்கிட்ட கொஞ்சம் பேசணும் வா..

 

அவரை கண்டதும் வியர்வையை துடைத்து கொண்டு வந்தவன் ..சொல்லுங்க என்ன விஷயம்

 

 

நிறை கிட்ட என்ன பேசுன..,அவ வீட்டுல இல்ல..

 

ஓ ஓ ஓ.. அதுவா டைவர்ஸ் நோட்டீஸ் ல சைன் பண்ண சொன்னேன் அதுக்கு ஓவர் ஆஹ் ஸீன் கிரியேட் பண்ணிட்டு போய்ட்டா..

 

என்ன டைவர்ஸ் பத்தி பேசுனியா. ..உன்கிட்ட நா என்ன சொன்னேன்  எதுக்கு டா இப்படி ஒரு முடிவு எடுத்த..வீட்டுல அப்பா அம்மான்னு உனக்கு சொந்தங்கள் இருக்கு நியாபகம் இருக்கட்டும்.. 

 

 

டேட் ..,இந்த மாதிரி நீங்க பிகேவ் பண்ணுவீங்கன்னு நினைக்கல..மேரேஜ் முன்னாடியே நா சொன்னேன் தான.., மூணு வருஷம் மட்டும் தான் நாங்க ஹஸ்பேண்ட் அண்ட் வைப்..,உங்ககிட்ட அல்ரெடி  நா சொல்லிட்டேன் ..அந்த பொண்ணு கூட சைன் பண்ணி கொடுத்துட்டு போயிருச்சு..

 

என்னது நிறை சைன் பண்ணிட்டாளா..இது அவருக்கு புது அதிர்ச்சி

 

ம்ம் எஸ்..டேட் இதுக்கு மேல என்னோட லைஃப்ல இன்டர்பியர் ஆகாதிங்க.., என்று சொல்லிவிட்டு குளியலறை சென்று விட்டான்..

 

 

தளர்ந்து போய் கீழே வந்தவர் …பொத்தென்று சோபாவில் அமர்ந்து கொண்டார்..கற்பகத்திடம் கூறியவர் ..மனதால் வேதனை பட்டார்.. அந்த பெண்ணை எப்படி எதிர்கொள்வது என்று அவருக்கு தெரியவில்லை..

 

 

கற்பகம் ..,நா நிறைய பார்த்துட்டு வறேன்..

 

நானும் வரேங்க. ..

 

ம்ம்ம் சரி கற்பகம்..இப்போ அவன் கம்பெனி வொர்க் காக இங்க தான் இருக்க போறானாம்…கூடவே ஒரு பொண்ண கூட்டிட்டு வந்துருக்கார் துரை

 

யாருங்க அது..,

 

 

அப்போது அங்கு ஹாய் ஆண்ட்டி.., ஹாய் அங்கிள் ..எங்க கிளம்ப போறீங்க ..

 

ஹேய் வர்ஷா நீயாம்மா ..எப்படி இருக்க எப்போ வந்த

 

 

நா இளா கூட நைட் வந்துட்டேன்..அவனுக்கு கம்பெனியில் பி.ஏ. போஸ்டிங்க்கு ஆள் தேவைன்னு சொன்னாங்க….அதுமட்டுமில்ல அங்கிள் எனக்கு அப்பாவோட தொழில் எடுத்து நடத்த ஆசை அது தா அப்பாகிட்ட கேட்டேன் இளா கூட சேர்த்து கத்துக்கோன்னு சொல்லிட்டாங்க..நானும் வந்துட்டேன் என்றாள் மகிழ்ச்சியாக

 

இளவேந்தன் டைனிங் டேபிள் வந்து அமரவும் ஒரு ஜூஸ் குடித்து விட்டு காரில் ஏறிவிட்டான்..நானும் அவரும் ஆபிஸ் போறோம் ..ஈவினிங் பேசுவோம் ஆண்ட்டி என்று ஓடி விட்டாள்

 

 

தூங்கி எழுந்த நிறை வழக்கம் போல தன் மொபைலில்  இருக்கும் கணவன் போட்டோவை பார்த்தவள்..லவ் யூ புருசா என்று ஒரு முத்தம் வைத்தவள் ..தான் இருக்கும் அறையை பார்க்க அது நேற்றிரவு நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் கூற கையில் வைத்திருந்த போனை தூக்கி உடைத்து விட்டாள்..அடுத்து உடைக்க அவள் தோழி ஆசையாக வளர்த்து கொண்டிருந்த மீன் தொட்டியை உடைக்க தூக்கியவள்

 

 

அடியே மெண்டல் ..உடைச்சு கிடைச்சு வச்சிராத..அது என் லவ்வர் வாங்கி கொடுத்தது..

 

எனக்கு ஆத்திரம் இன்னும் அடங்கல டி..அந்த இளவேந்தனை என்ன பண்ணுறேன்னு பாரு என்று அழுதவள் எழுந்து குளித்து அழகாக அலங்காரம் செய்து கொண்டாள்..

 

நித்தி என்கூட வெளில வா

 

நா வரல டி.. நாளைக்கு இன்டெர்வியூ இருக்கு..

 

இன்னைக்கு பிரீ தான..

 

ப்ரீ தான் ஆனா இன்னைக்கு ஒருத்தியை விசாரிக்கணும் என்றவள் நிறையை உத்துப்பார்க்க ..

 

சந்தேகமா பார்க்காத டி..

 

ம்ம் சொல்லு என்னாச்சு..

 

ஏதும் கேட்காத நித்தி.. எனக்கு மனசு சரி இல்லை ..இப்போ என்கூட வரியா இல்லையா

 

 

சரி நா ஏதும் கேட்கலை நிறை என்று இருவரும் ஷாப்பிங் சென்றனர்…

 

 

ஐ. வி சொலியூஷன்ஸ் என்ற பெயரை தாங்கிய தங்க நிற பலகை இருந்தது…மிக உயரமான ஐம்பது அடுக்கு மாடி கட்டிடம்..,ஆபிஸ் வந்த வேந்தன் அங்கு வேலை நிம்மதியாக வேலை பார்த்து கொண்டிருந்தான்..கூட வந்த வர்ஷாவை கீழ் தளத்தில் இருந்து வேலையை கத்துக்கொள்ளுமாறு கூறி விட்டு தன் கேபினுக்கு வந்தான்..ஒரு சின்ன மீட்டிங் அங்கு வேலை பார்ப்பவர்களுக்காக நடந்து கொண்டிருந்தது..திடீரென ஒரு மெசேஜ்..என்னவென்று பார்க்க தொண்ணூறாயிரம் காலி என்ன என்று பார்ப்பதற்குள் கிட்ட தட்ட பத்து லட்ச ரூபாய் வரை அவனது பணம் கரைந்து கொண்டிருந்தது..

அதை தொடர்ந்து வந்த மெஸேஜ்கள் யாவும் அவன் பணம் முழுவதும் காலி ஆகி கொண்டிருந்தது..

 

ஒஹ்ஹ் ஷீட் எப்படி இது யாரு என்னோட கார்ட் எடுத்தது என்று விசாரிக்க அவன் திருமதி தான் இந்த வேலையை பார்த்து கொண்டிருந்தாள்..

 

இவ எதுக்கு இப்போ இப்படி பண்றா.. அவளுக்கு அமௌண்ட் கொடுத்து அனுப்பி விட்டுட்டோமே என்று யோசிக்க மேற்படி இரண்டு லட்சம் காலி..தன் கார்டை ப்ளாக் பண்ணியவன் அதன் பிறகு தான் மூச்சு விட்டான்..

 

ஏய் எதுக்கு டி இந்த வீட்டுல வந்து இருக்க..என்ன நினைச்சுட்டு இருக்க ..இது எந்த இடம்னு தெரியுமா..

 

 

சும்மா இரு நித்தி..இது என் ஹஸ்பெண்ட் ஓட ப்ரொபெர்ட்டி டி..இது தான் அவர் முதன் முதலில் கட்டிய ஓன் பில்டிங்..அவருக்காகவே இந்த ப்ளோர் வாங்கிருக்கார்..போதுமா

 

அடியே அப்போ எல்லாம் தெரிஞ்சு தான் இங்கே வந்தியா..

 

 

ம்ம்ம் அது மட்டும் இல்ல இனிமே இங்க தான் இருக்க போறோம்..

 

 

இருக்க போறோம் இல்ல இருக்க போறன்னு சொல்லு டி..,எலி காயுதுன்னு இப்போ எலி புலிகையும் காயனுமா..

 

 

ஆமா டி..எலி புழுக்கை..

 

நீ ஆட்டு புழுகைன்னு கூட கூப்பிட்டுக்கோ ஆனா இங்க வேண்டாம்..நாளைக்கு இன்டெர்வியூ அட்டேன் பண்ணிட்டு வேற வீடு பார்த்து போயிரலாம்..

 

ம்ம்ம் சரி டி..ரொம்ப அழாத..நாளைக்கு எந்த ஆபிஸ்ல டி இன்டெர்வியூ நடக்குது….

 

 

உனக்குத்தான் கார்ட் வந்துருக்கு வா போலாம்..

 

 

அடுத்த நாள் காலையில் இளவேந்தன் காசில் வாங்கிய வெஸ்பா பைக்கில் நித்யாவும் நிறையும் இன்டெர்வியூக்காக வந்து இறங்கினர்..

 

நீ வரலையா நிறை..இல்ல நித்தி ராஜேந்திரன் மாமா வரேன்னு சொல்லிருக்கார்..பார்த்து ட்டு ஹாஸ்டல் வறேன்..நீ பார்த்துட்டு என்னனு சொல்லு ஓகேயா..

 

ம்ம்ம் ஓகே டி..பார்த்து போ..

 

 

மனம் முழுவதும் வலி தான் அதிகம் ஆனது நிறைக்கு ..இனிமே என்ன செய்ய போறோம்.. வீட்டுக்கு போக முடியுமா அப்பா அம்மாக்கு நம்ம மேல ரொம்ப நம்பிக்கை இருக்கு.. இப்போ போனா அவங்களுக்கு ஏதாச்சும் ஆயிடுமே..இப்டிலாம் யோசிக்க் வச்சுட்டியே அத்தான்.. 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top