ATM Tamil Romantic Novels

கல்லுக்குள் இதயம் வைத்தாய்

5..கல் 

 

 

 

வர்ஷாவிற்கு அங்கு வேலை என்றவுடன் வந்து விட்டாள்.. ஆனால் அவள் வந்தது வேந்தனை மயக்கி அவனை திருமணம் செய்யும் எண்ணத்தோடு தான் வந்திருந்தாள்.ஆனால் என்ன இளவேந்தன் அவளை கல்லையும் மண்ணையும் பார்ப்பது போல பார்த்து கடந்து சென்று விடுவான்..

 

 

நிறை கோவிலுக்குள் சென்று ஒரு ஓரமாக அமர்ந்து இருந்தாள்..மனது முழுவதும் வலி ஆனால் யாரிடமும் சொல்ல விரும்பாமல் கடவுளிடம் முறையிட வந்து விட்டாள்..

 

அங்கு வந்த ராஜேந்திரன்..அம்மாடி நிறை..

 

 

ஹான்..மாமா என்று கண்ணில் வழிந்த கண்ணீரை துடைத்து கொண்டு திரும்பியவள் .

 

 

என்னைய மன்னிச்சுரும்மா..எல்லாம் என்னால தான்..அவன் கல்யாணத்துக்கு முன்னாடியே சொன்னான்..நா தா உன்கிட்ட சொல்லாம விட்டுட்டேன்..எப்படியும் ரெண்டு பேரும் சந்தோசமா இருப்பிங்கன்னு முட்டாள்தனமான நினைச்சுட்டேன்..

 

நிறைக்கு அதிர்ச்சி தான்..ஆனால் மனதின் ஓரத்தில் என் காதல் புரியல இந்த மூணு வருஷம் என் உயிறா நினைச்சேன் அவரை..,ஆனா அவருக்கு என்ன புடிக்கலன்னு நினைக்கும் போது மனதெல்லாம் வலி தான்..பெருமூச்சை விட்டவள் விடுங்க மாமா நீங்க என்ன பண்ணுவீங்க. அவருக்கு என்கூட வாழ விருப்பம் இல்லை.. என்று ஒரு விரக்தி சிரிப்பை உதிர்த்தவள்..,

 

என்கிட்ட கூட சொல்லாம வீட்டை விட்டு வெளில வந்துட்டியேம்மா..,அப்போ நா வேற்று ஆளா தான் தெரிஞ்சுருக்கேன் அப்படி தான டா..

 

மருமகளா வேண்டாம் நிறை நீ எங்களுக்கு மகளா நம்ம வீட்டுக்கு வா அது போதும்..என்று கற்பகம் கூற

 

 

அத்தை.., மாமா நா உங்கள அப்படி நினைச்சதில்லை.அம்மா அப்பா விட என்னைய நல்லா பார்த்துகிட்டீங்க..,இவ்வளவு வருஷம் பாதுகாப்பு கொடுத்துருக்கிங்க..அதுவே பெருசு..

 

நா இளா கிட்ட பேசுறேன் நிறை..

 

 

வேண்டாம் மாமா..பிடிக்காத ஒன்னா அவர்கூட நா இருக்க விரும்பல..நா தனியா இருந்துக்குறேன்..அப்புறம் மாமா நா வேலைக்கு போலாம்னு இருக்கேன் ..

 

 

வேலைக்கு போக உனக்கென்ன தலை எழுத்தா டா கண்ணா..

 

 

இல்ல மாமா ..,கொஞ்சம் மாற்றம் வேணும் எனக்கு சோ போறேன்..

 

ராஜேந்திரனும் கற்பகமும் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை நிறை..இறுதியில் தனக்கு தெரிந்த ஒரு கம்பெனியில் வேலை வாங்கி தறேன் அதையாச்சும் எங்களுக்காக ஏத்துக்கோ ம்மா..

 

 

ம்ம்ம் சரி மாமா..

 

 

உன்னோட சர்ட்டிபிகேட் எல்லாம் எங்க இருக்கு..அதெல்லம் எனக்கு அனுப்பு நா பார்த்துக்குறேன்..

 

அத்தை மாமாவா இல்ல அப்பா அம்மாவ உன்கூட எப்பவும் நாங்க இருப்போம் என்று கூறி விட்டு சென்றனர்….

 

 

இளா உன்னோட மெயின் ப்ரான்ச் போறேன்னு மேனேஜர்சொன்னார். என்கிட்ட சொல்லவே இல்லை பேபி….

 

 

ஆமா.., இது என்னோட செகண்ட் ப்ரான்ச் ..அது நா முதன் முதலில் ஸ்டார்ட் பன்னது..அண்ட் ஒன் மோர் திங் உனக்கு மூணு மாசம்  ட்ரைனிங் இங்க தான்..அண்ட் என்கிட்ட  இது மாதிரி சில்லி யான கொஸ்டின்ஸ் கேட்கிறது இது தான் லாஸ்ட் ஆஹ் இருக்கணும் புரியுதா என்று மூக்குடைத்து  விட்டு சென்று விட்டான்..

 

 

ராஜேந்திரன் இளவேந்தனையும் நிறையையும் சேர்த்து வைத்தே தீர வேண்டும் என்று எண்ணியவர்..,உடனே தன் ஆஸ்தான மேனேஜர் சிவதாணுவிடம் கேட்டார்..

 

 

அவரிடம்  சில விஷயங்கள் கேட்டு தெளிவு பெற்றவர்..ராஜேந்திரன் சொன்ன வேலையையும் முடித்தார்..

 

 

எப்படியாச்சும் இந்த புள்ள வாழ்க்கை நல்லாருக்கணும்..எப்படியாவது சேர்த்து வை கடவுளே என்று வேண்டிக்கொண்டு தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சென்றார்..

 

 

நித்தி.., என்னாச்சு இன்டெர்வியூ போனியே கிடைச்சதா..

 

 

ம்ம்ம் கிடைச்சது டி..ஆனா 

 

என்ன ஆனா..,ஆனந்த் ஓட அம்மாக்கு உடம்பு சரி இல்லையாம் அதனால மேரேஜ் பண்ணிக்கலாம் நீ ஜாப் போக வேண்டான்னு சொல்லிட்டாரு..அம்மா அப்பாவும் வேண்டான்னு சொல்றாங்க..

ஊருக்கு வர சொல்றாங்க..

 

 

நீ ரொம்ப லக்கி டி..அத்தை பையனையே கட்டிக்க போற..போய்ட்டு சந்தோசமா இரு..சரி அதுக்கு ஏன் மூஞ்ச தூக்கி வச்சிருக்க..

 

இல்ல டி..உன்கூட இருக்க முடியாதே..நீ தனியா இருக்கிறது ஏதோ செய்து டி..

 

லூசா நித்தி நீ..எனக்கு இப்போ பக்கத்துல ஒரு கம்பெனில வேலை கிடைச்சுருக்கு..குவாட்டர்ஸ் குடுத்துருவங்க..தூங்க தான் வீட்டுக்கு வருவேன்..என்ன பத்தி கவலை படாம உன் லைஃப் பாரு நித்தி.. காதலிச்சவனே கல்யாணம் பண்றது ரொம்ப அதிர்ஷ்டம் ..அதுலயும் ஆனந்த் அண்ணா உன்னை தங்கமா பார்த்துப்பார்..எப்போ கிளம்புற.

 

 

ம்ம் மேரேஜ்க்கு வந்துரு டி..கார்ட் கொடுக்குறேன்..என்று ஒரு மாதிரி குரலில் சொல்லவும்

 

 

ஏய் இங்க பாரு அழாத..,நித்தி செல்லம்..வா இப்போ பசிக்குது சாப்பிட போலாம்..

 

எல்லாத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு நித்தியாவும் நிறைநிலாவும் உண்டு விட்டு ஹாஸ்டல் வந்து சேர்ந்தனர்..

 

 

ராஜேந்திரன் நிறைக்கு போன் செய்து..,அம்மாடி நிறை நாளைக்கு நீ உனக்கு கொடுத்த குவாட்டர்ஸ்ல உன்னோட  திங்ஸ் எல்லாம் கொண்டு வந்து வச்சுரேன்..

 

 

உங்களுக்கு எதுக்கு மாமா கஷ்டம்..வேலையும் ஏற்பாடு பண்ணி கொடுத்துருக்கிங்க..

 

என்ன கஷ்டம் நிறை..என் பெண்ணுக்காக செய்றேன்..என்க கூட தா இருக்க மாட்டேங்குற.அட்லீஸ்ட் இதையாச்சும் செய்றனே..

 

 

ம்ம்ம் சரி மாமா..என்று பேசி விட்டு..மாமா அது வந்து இளவேந்தனை பற்றி கேட்க தயங்கியவள்

 

 

சொல்லு ம்மா .

 

அது வந்து நீங்க அத்தை எல்லாம் நல்லருக்கிங்களா..சாப்டிங்களா

 

 

ஹா ஹா என்று சிரித்தவர்..எல்லாரும் நலம்..சாப்பிட்டு தூங்க போயாச்சு.. நீ நாளைக்கு நேர ஆபிஸ் போய்ட்டு எனக்கு போன் பண்ணும்மா..அங்க சிவதான்னு ஒரு மேனேஜர் இருப்பாரு அவரை போய் பாரு..

 

ஓகே மாமா.. என்று வைத்து விட்டு தூங்க சென்றாள்..

 

 

புது ஆபிஸ் எப்பிடி இருக்குமோ என்று பயந்தவள் கனவிலும் அவன் தொல்லையே..என்ன விட்டுட்டு ஏன் டி போன வா நிலா..நீ எனக்கு வேணும் வா டி என்று அவளை இரு முரட்டு கரம் இழுத்து வஞ்சனை இல்லாமல் முத்தம் இட்டு கொஞ்சி அவளில் தன் ஆதிக்கத்தை செலுத்தவும் வேர்த்து போய் கிடந்தாள்..தூக்கம் அதன் பிறகு வருவேணா என்றது.. ச்சை.., என்ன கனவிது அவர நினைச்சுட்டே இருக்க போல அது தான் இந்த மாதிரி கனவு..மனமே அவனை நினையாதே என்று அழுதவள்..படுத்து உறங்கி விட்டாள்.

 

 

 

கனவில் மட்டுமில்லை நிஜத்திலும் அவளை கொள்ளையிட்டு செல்வான்..

 

 

ஐ. வி சொலியூஷன்ஸ் மெயின் ப்ராஞ்சில் நிறைக்கு வேலை கிடைத்து விட்டது…ஒரு மாதம் சென்று விட்டது..,ஆனால் இது தன் கணவனின் ஆபிஸ் என்று தெரியாமல் அவளும் தன் மனைவி இங்கு வேலை பார்க்கிறாள் என்பது வேந்தனுக்கும் தெரியாது..

 

 

நிறை மேடம்.. எம்.டி.சார் நாளைக்கு  இங்க வருவாங்க..உங்களோட ஒர்க் எல்லாம் முடிச்சு அவர் மெயில் க்கு அனுப்பி வச்சிருங்க..

 

 

ம்ம்ம் சரிங்க ..,சார்..நிறைக்கு அவள் படித்த இன்ஜினீரிங்கை விட ஆர்டிபிசியல் இண்டெலிஜென்ஸ் மீது பயங்கர ஆர்வம்..அதை விரும்பியே கற்று கொண்டாள்.. ஆனால் அதில் இன்னும் முறைப்படி கோர்ஸ் எதுவும் படிக்க வில்லை..அது ஒன்று தான் அவளுக்கு இருக்கும் பயம்.

 

இன்று அவளின் பயத்திற்கு காரணம் அவனிடம் சர்டிபிகேட் வெரிபை பண்ண வேண்டும் என்று சொல்லியது தான் இப்போது வரை நடுங்கி கொண்டிருக்கிறாள்..

 

 

வேலை போனாள் பரவாயில்லை ஆனால் அனைவர் முன்னிலையிலும் அவமான படுத்தி விட்டால் என்ன செய்வது..சரி பார்த்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இருந்தாள்..

 

 

 

எம்.டி வந்துட்டாரம்மா ..நீ மெயில் அனுப்பிடியா இல்லையா..

 

அனுப்பிட்டேன் சார்..

 

சரிம்மா..நீ எல்லா பேப்பர்சையும் எடுத்து கொண்டு வா நா முன்னாடி போறேன்..

 

இளவேந்தன் தன் ஆபிஸில் வேலை செய்யும் அனைவரையும் மீட்டிங் அறைக்கு கூப்பிட்டு விட்டான்..அது அவர்களின் தனி திறமை என்னென்ன கம்பெனி முன்னேற்றத்திற்காக புது ஐடியா ஏதும் இருக்கிறதா என்று கேட்க ஒரு ஸ்மால் டிஸ்கஷன்..

 

அனைவரும் மீட்டிங் ஹால் வந்ததும்..அதன் பின்னே நீண்ட எட்டுகளுடன் க்ரீம் கலர் பேண்ட் அதே நிற கோர்ட் என்று பக்காவாக ராயல் லுக்கில் வந்து சேர்ந்தான்..ஆண்மையின் மறு உருவம் வேந்தன் தான் என்று சொல்ல கூடிய அளவில் அவன் இருந்தான்..படிக்கட்டுகள் போன்ற உடல் அமைப்பு தெரியுமாறு சர்ட்டும் கழுத்தில் சின்னதாக ஒரு பிளாட்டினம் செயின் அதில் வைரக்கல் போட்டு இருந்தது.. அங்குள்ள பெண்கள் அனைவரும் அவனை கவர தங்கள் ஆடைகளை தளர்த்தி அவன் பார்வைக்காக காத்து இருந்தனர்..

 

ஹாய் கைஸ்..ஐ ஆம் இளவேந்தன்..என்று பேச ஆரம்பிக்கவும்..

 

ஆத்தாடி இது எங்கேயோ கேட்ட குரல் என்று நிறை நிமிர்ந்து பார்க்க அது சாட்சாத் அவள் கணவன் இளவேந்தன் நின்று கொண்டிருந்தான்..

 

 

இவர் எங்க இங்க வந்தாரு..ஐயோ கனவுல தா இவ்வளவு நாள் வந்தாரு இப்போ நேர்ல நிக்கிறாரே..,என்ன தெரியுமா அவருக்கு..ஒரு வேளை நா படிக்கிற ஆன்டி ஹீரோ ஸ்டோரில வரது மாதிரி  நா இங்க வேலை பாக்குறேன்னு இந்த கம்பெனியை வாங்கிருப்பாரோ.. ம்ஹூம் தெரிஞ்சிட்டாலும் உன் மூஞ்ச நியாபகம் வைக்கிற அளவு ரெண்டு பேரும் காதல் கல்யாணம் செஞ்சு பிரிஞ்சு போய்ட்டீங்க பாரு..உண்ண தேடி வரதுக்கு..என்று அவள் மனசாட்சி கழுவி ஊத்தியது..

 

 

மனதோடு போராடி கொண்டிருந்தவள் முன் அவனே வந்து நின்றான்..அவனுக்கு அவள் அங்கு வேலை செய்யும் ஒருத்தி.. அவ்வளவே..நீ இங்க என்ன பண்ற..அன்று அவன் மீது கேக்கால் அபிஷேகம் செய்தவள் மீது கோபம் வரத்தான் செய்தது..இனி அவளே நினைத்தாலும் அவனை விட்டு விலக முடியாது..

 

கோபமோ தாபமோ இனி இவர்கள் வாழ்வில் காதல் தன் கடமையை செவ்வனே செய்யும்..

 

9 thoughts on “கல்லுக்குள் இதயம் வைத்தாய்”

  1. Рабочие дни отсчитываются со дня оплаты, а не заказа на сайте, разница порой месяц между тем когда человек создал заказ и когда оплатил его. купить Кокаин, Марихуану, Мефедрон, Бошки Хороший магазинчик , рега хорошая , в общем стоит вашего внимания ))) всем удачи !оперативность и качество! И за

  2. магазина в скайпе не поймать?как можно с вами пообщаться? https://sh-ant.ru я не знаю чего тебе делать!Ну мы стараемся

  3. My freind told me about [url=https://babu88-onlinecasino.com/]babu88.com login[/url] like a month ago and I was like whatever but then I finaly checked it out and honestly its pretty solid, no complaints from me, way better than what I was using before it

  4. Quick pros:
    * Fast payouts
    * Mobile friendly
    * Lots of games
    * Customer support responds quick
    * Easy sign up process

    [url=https://nagad88-onlinecasino.com/]nagad88 online[/url]

  5. An interesting discussion is worth comment. I think that
    you need to publish more on this subject matter, it might not be a taboo matter but usually people do not talk about these
    issues. To the next! Many thanks!!

  6. Howdy! I realize this is kind of off-topic but I needed to ask.
    Does managing a well-established blog like yours require a large amount of work?
    I’m completely new to operating a blog but I do write in my journal everyday.
    I’d like to start a blog so I can share my personal experience and feelings online.
    Please let me know if you have any recommendations
    or tips for brand new aspiring bloggers. Appreciate it!

  7. Actually, these days it appears like the virtual
    gambling scene is changing very fast, but discovering a genuinely honest site to hang out has become rather a challenge.
    Personally, the truly critical thing remains the way
    an operator handles its withdrawal timing, since no one enjoys waiting
    for ages to get their hard-earned funds. I’ve also observed how verifying a thorough f7 casino app can truly save you
    against bad decisions or hidden terms. It’s my view how current slots are getting much more unpredictable, which brings massive thrill though requires
    more self-control. By the way, has anyone seen if the latest mobile
    versions run much smoother compared to the desktop ones?
    I’m really interested to hear your take on this, so please to post
    your latest stories here!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top