6.கல் இதயம்..
“நீங்களா?”நிறை வாயை பிளக்க “பைல் கொடுங்க” என்று வேந்தன் முன்னால் நின்றவளை வியப்பாக பார்க்காமல் நார்மல் மோர்டில் கை நீட்டினான்.. ‘என்ன இவருக்கு அடையாளம் தெரியலையா? இல்லை ,என்னையே தெரியலையா.. ஒருவேள அப்படி இருக்குமோ..நல்ல தான் இருக்காரு..ஞாபக மறதிலாம் இவருக்கு வராது..அப்புறம் உண்ண எப்படி கரெக்ட்டா வந்து கேக்கிறான்
ஹலோ மிஸ்..என்ன இங்க என்ன வொர்க் பண்றிங்கன்னு கேட்டேன்..
அது வந்து சார் என்று திக்கி தினறியவள்.., ஏ.ஐ மூலமா ப்ரொஜெக்ட் பண்ற கிரியேட்டிவிட்டி மேனேஜரா இருக்கேன் ..
ஒஓஓ.., குட்..உங்க சர்ட்டிபிகேட் எல்லாம் நா வெரிபை பண்ணனும் கொஞ்சம் என்னோட கேபின் வாங்க…
ஐயோ ..முருகா காப்பாத்து.. இவர மறக்க வேலைக்கு வந்தா இங்கேயும் அவரை பாக்குற மாதிரி வச்சுருக்கியே என்று மனதிற்குள் திட்டி கொண்டாள்..
அங்கு வந்த சிவதாணு..,
சார் அவங்க உங்க அப்பா ரெக்கமண்டேஷன்ல வந்தவங்க சார்..யார் ஏதும் நிறை மேடம்மை கேக்க கூடாது எதுனாலும் அவர்கிட்ட சொல்ல சொல்லிருக்கார்..
உங்களுக்கு சம்பளம் நா தறேனா இல்ல அவர் கொடுக்குறரா சொல்லுங்க..யார் வேலைக்கு இருக்கணும் இருக்க கூடாதுன்னு எனக்கு தெரியும்..
ஐயோ சார் மன்னிச்சுறுங்க..என்று வேறு விஷயங்கள் பேசினார்…அங்கு நிறை பாவமாக முழித்து கொண்டு சிவதாணுவிடம் பேசிக்கொண்டு நின்ற தன் கணவனை ரசிக்க தான் செய்தாள்.. இந்த மூன்று வருடத்தில் இவன் தான் தன் கணவன் என்று ஞாபகப்படுத்த தேவையே இல்லாமல் இவன் ஞாபகம் தினமும் வரும்..
இன்று அவன் தன் முன்னாடி நிற்கவும் பச்சையாக சைட் அடித்தாள்..சிறிது நேரத்தில் அவன் தோழி வர்ஷா வந்தாள் ..வேந்தன் வர்ஷாவை யோசனையாக பார்க்கவும்…
ஹாய் இளா டேடி தான் இங்கே உங்க கூடவே இருக்க சொன்னார்..அது தான் வந்தேன்..இந்த ப்ரொஜெக்ட் முடியுற வரை உங்க கூட வொர்க் பண்ணனுமாம்..
வர்ஷா அவனை விட்டு இம்மி அளவு கூட பிரிய கூடாது என்று சில சித்து விளையாட்டுகள் விளையாடி தன் தந்தை மூலம் அவனுடன் இருக்குமாறு பார்த்துக்கொண்டாள்..வர்ஷா நிறையை இளவேந்தன் ஆபிஸில் எதிர்பார்க்க வில்லை..அவள் அதிர்வை கண்களில் அப்பட்டமாக காட்டினாள்..
ஹேய் நிறைதான நீ இங்க என்ன பண்ற..
நா இங்க தா ஓர்க் பாக்குறேன்..
ம்ம் ..உனக்கு இந்த கம்பெனி பத்தி தெரியும்ன்னு வேலைக்கு வந்துருக்க..உன்னோட தகுதி அந்த கிச்சன் தான்..போ போ எனக்கும் இளாவுக்கும் சூடா காபி எடுத்துட்டு ரூமுக்கு வா போ..
அதுக்கு ஹவுஸ் கீப்பிங் இருக்காங்க மேம்…அவங்கள கொண்டு வர சொல்றேன்..அண்ட் மேம் கொஞ்சம் மரியாதையா பேசுங்க..என்றாள் நிறை
என்ன திமிரா ..நா யாருன்னு தெரியாம ..என்னையவே எதிர்த்து பேசுரியா ..உண்ண என்ன பண்ணுறன்னு பாரு டி என்று போய் விட்டாள்..
நேராக சென்று இளாவிடம் பேபி
அந்த ஸ்டாப் காபி கொண்டு வர சொன்னதுக்கு உனக்கு எதுக்கு செய்யணும்..அந்த எம்.டி கே வேணுனாலும் நா கொண்டு வர மாட்டேன் வேலைகாரங்க கொண்டு வந்து தருவாங்க என்று ஏத்திவிட்டாள்
அவனுக்கு கோபம் வந்தது.. அந்நேரம் நிறை அவன் கேட்ட சர்டிபிகேட் எல்லாம் கொண்டு வந்து கொடுக்க அதை செக் பண்ணியவன் இதெல்லாம் எங்க இருந்து ரெடி பண்ண..பிராடு வேலை பார்த்து என் ஆபிஸ் குள்ள நுழைஞ்சிருக்க..
சார் சார் நிறை மேடம் பண்ணிக்கொடுத்த டிசைன் மூலமா அந்த கே.என் கம்பெனி நமக்கு இந்த மந்த் அந்த நூறு கோடி ப்ரொஜெக்ட் கிடைச்சுருக்கு..அதோட பேப்பர் ஒர்க் எல்லாம் நிறை மேடம் தான் பாக்கிறாங்க சார்.…
ப்ரொஜெக்ட் கிடைச்சா என்ன பண்ணனும் மிஸ்டர் சிவதானு.. எல்லார் போலவும் இவங்க ஒரு ஸ்டாப் தான்..சேலரி வாங்கிட்டு தான் வேலை பாக்கிறாங்க.. சும்மா ஓசில பாக்கல..
அந்த பெரியவர் வாய் தானாக மூடிக்கொண்டது..இதுக்கு மேல பேசுனா என்னைய வேலைய விட்டு தூக்கினாலும் தூக்கிடுவான்..என்று நினைத்து அமைதியாக நின்று விட்டார்..
அவள் ஏ. ஐ சம்மந்தமாக எந்த படிப்பும் படிக்கவில்லை தான்..ஆனால் இவ்வளவு ஈஸியா கண்டுபிடிப்பான் என்று கொஞ்சம் கூட நினைக்க வில்லை..
அவள் திக்கி திணறி அது வந்து என்று ஆரம்பிக்கும் முன் கையை காட்டி தடுத்தவன் எனக்கு இனிமே நீ தா காபி கொண்டு வந்து தரணும்..அண்ட் எப்போ எந்த வொர்க் பண்ண சொன்னாலும் பண்ணி தரணும்..
உன்னோட தகுதிக்கு உனக்கு இப்போ கிச்சேன்ல தான் வேலை போ..,கையை சொடுகிட்டு அழைத்தவன் எனக்கு லேப்டாப்பை க்ளீன ஆ துடைச்சு கொடு என்று கூறி விட்டு தன் லேப்டாப்பை பார்த்து ஏதோ தட்டி அவளிடம் கொடுத்தான்..
அவளை ஒரு கணம் நிமிர்த்து பார்த்து ஆஹ் உன் பெயர் என்ன என்றானே பார்க்கலாம்..
திரும்பி என்னோட பெயர் கூட தெரியதவனையா உருகி உருகி காதலித்தேன்..ப்ச்..,தன் மீதே கழிவிரக்கம் கொண்டாள்.. மை நேம் நிறை நிலா சிவராமன் என்று கூறியவள் அவனிடம் லேப்டாப்பை கொடுத்து விட்டு கலங்கிய கண்களுடன் சென்று விட்டாள்..
மனது ஆற வில்லை தான்..ஆனால் இப்படி எகத்தாளம் பேசும் இருவருக்கும் தக்க பதிலடி கொடுத்தே ஆகணும் என்று முடிவுடன் தகுந்த நேரத்திற்காக காத்திருந்தாள்..
நா ஏன் இவர்களுக்காக அழனும்.., என்று காபி தான கேட்டீங்க கொண்டுவறேன் என்று போட்டு கொண்டு எடுத்து சென்றாள்..
நேராக இளவேந்தன் அறைக்கு சென்றவள் சார் காபி என்று வந்தவள்..
ஏய்..அறிவில்லை..இது தான் மேனர்ஸ் ஆஹ் உள்ள வரும் போது கதவை தட்டிட்டு வர தெரியாதா என்று வர்ஷா கூறினாள்.இளவேந்தன் பதில் ஏதும் கூறாமல் தன் வேலையை பார்த்து கொண்டிருந்தான்..
மனதில் வலித்தாலும் சாரி மேம்..என்று கூறி விட்டு திரும்பவும் வெளியில் சென்று மே ஐ கம் இன் மேம் என்று கேட்டு அதன் பிறகு உள்ளே வந்தாள்..
ஏய்..,இப்போ எதுக்கு வெளில போய்ட்டு உள்ள வந்த..
மேம் நீங்கதான் உள்ள வரும் போது கதவை தட்டிட்டு வர சொன்னிங்க..அதா பெர்மிஷன் கேட்டு வந்தேன்..அவனிடம் காஃபி கப்பை கொடுத்தவள் மேடம் இந்தாங்க என்று வர்ஷாவிடம் கொடுக்க போனவள் வர்ஷா மீது கொட்டி விட்டாள்….
ஸ்ஸ்..,ஏய்..,இடியட் கண்ணை எங்க போடனில வச்சுறுக்கியா..
ஐயோ..,,சாரி மேம்..உங்க அழகான ட்ரெஸ் வீணாகி போச்சே..
அவளை அடிக்க கை ஓங்கியவள் ..,இளவேந்தன் தங்களை பார்த்தவுடன் பாரு பேபி என் மேல காஃபி கொட்டிட்டு திமிரா நிக்கிறா..
ப்ச் வர்ஷா கொஞ்சம் வொர்க் இருக்கு அதை முடிகனும்.. இதுப்போல சில்லியா பிகேவ் பண்ணாத..என்று கூறி விட்டு தனக்கு கொடுத்த காபியை சுவைத்தவன் அதன் சுவையில் நன்றாக குடித்தான்..அது புத்துணுர்வாக இருந்தது என்பது மெய்..
நிறை மாலை ஆபிஸ் முடிந்து அவள் டூ வீலரை எடுத்து கொண்டு வெளியில் வந்தாள்.. வேந்தனும் அதே நேரம் தன் காரை எடுத்து கொண்டு வெளியில் வர இருவரும் எதிர் எதிரே பார்த்தனர்..
எவ்வ்ளவு திமிர் இருக்கணும் அவ வண்டிய குறுக்க வந்து விடுறா..பாரு பேபி..என்க அவனோ அவளை ஒரு ஏளன பார்வை பார்த்தவன்..போய் வண்டிய சீக்கிரம் எடுக்க சொல்லு வர்ஷா..
ஏய்..நிறை உன்னோட மிடில் க்ளாஸ் வண்டிய எடு ..எங்களோட கார் போகணும் ,இடைஞ்சலா இருக்கு..
நிறைக்கு கோபம் வந்தாலும் காதில் வாங்கி கொள்ள வில்லை..இவள் அடங்க மாட்டாள் போலயே..பேபி நீ தான் சொல்லணும் நா சொன்னா கேக்க மாட்டா.
எரிச்சல் தான் வந்தது..காரை விட்டு இறங்கியவன் நேராக நிறை அருகில் சென்றவன் வேகமாக அவன் அவள் யோசிக்கும் முன் வண்டியை தள்ளி விட்டதில் அது ஒரு ஓரத்தில் கிடந்தது.
ஹேய்..ஆ…எதுக்கு இப்படி பண்ணிங்க..அறிவு இல்லையா என்னோட புது வண்டி போச்சு.. உங்கப்பனா காசு தருவான்..
ஓவரா பண்ணாத டி..ஓசில வாங்குன வண்டி தான..ரொம்ப துள்ளுற.. மரியாதையா பேச கத்துக்கோ.. நா உன்னோட எம்.டி
ஹலோ மிஸ்டர் நீங்க மரியாதை கொடுத்தா மரியாதை தானா கிடைக்கும்..ஆபீஸ்ல தா நீங்க எனக்கு எம்.டி.. வெளில சாதாரண ஆள் தான்..வெளில வந்தும் உங்க கிட்ட திட்டு வாங்கணும்னு எனக்கு அவசியம் இல்லை..ஓரமாக நின்ற வர்ஷாவை பார்த்தவள் .
ஏய் ன்னு கூப்பிட இனிமே பேச உனக்கு வாய் இருக்காது..எலி மூஞ்சு என்னடி ஓவர் ஆஹ் பேசுற..புது வண்டினு வாங்கினா ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது..நா என்ன வேணுனா நிக்கிறேன்..உங்க மூஞ்சில் முழிக்க எனக்கு என்ன ஆசையா..என்று முனங்கி கொண்டே வண்டியை விட்டு விட்டு ஆட்டோ பிடித்து சென்று விட்டாள்..
திமிர் திமிர் உன்னை அடக்கி காட்டுறேன் டி..என்று அவனும் கார் எடுத்து கொண்டு சென்று விட்டான்..
எப்படி பேசுரா பாரு ..உனக்காக தன் போய் பேசுனேன் பேபி நீ அவ பேச பேச அமைதியா இருக்க அவ எப்படி எல்லாம் என்னைய பேசுனா தெரியுமா..
ப்ச்.. கொஞ்ச நேரம் அமைதியா இரு வர்ஷா.. என்று கூறவும் அவள் வாயை மூடிக்கொண்டாள்..
,
வீடு வந்து சேர்ந்தவள் .,தெரிந்த மெக்கானிக் மூலம் வண்டியை சரி செய்ய கொடுத்து விட்டு தன் அறையில் யோசித்து கொண்டிருந்தாள்..இவ்வளவு பண்றாங்க இந்த வேந்தனையும் வர்ஷாவையும் சும்மா விட கூடாது..உங்கள் ஓட விடுறேன் என்று படுத்துகொண்டாள்..
தூக்கம் வரவில்லை மனதில் வலி அதிகம் அனுபவித்தாள்..ச்சை என்ன கண்றாவி காதல் இது..இவரை மறக்கவும் முடியல.எதிர்த்து பேசவும் முடியல..என்று தன் மீது கழிவிரக்கம் கொண்டாள்..


Nach all den Jahren bin ich wirklich ewig in der Online-Landschaft dabei und habe festgestellt,
dass sich die Lage gewaltig verändert hat. Damals ging es lediglich um den kurzen Reiz,
aber heutzutage schauen viele Leute deutlich kritischer auf die technische Qualität.
Ein Aspekt für ein stressfreies Resultat ist definitiv, dass die Transaktionen rcasino vegas hero“>vegashero casino erfahrung durch, um schlichtweg zu prüfen, dass der Laden fair agiert. Was mich außerdem total beeindruckt, ist die Darbietung der echten Tische, weil das Ambiente nahezu wie in Las Vegas ist. Nichtsdestotrotz frage ich mich ab und zu, ob die RTP-Werte bei frischen Games tatsächlich vorteilhafter reguliert werden oder ob das einfach Einbildung wäre. Es würde mich wirklich sehr reizen zu wissen, was ihr empfindet und was für VegasHero Erfahrungen ihr persönlich berichten könnt? Setzt ihr eher auf Taktik oder gebt ihr alles komplett Fortuna hin?
Thank you for the good writeup. It in fact used to be a enjoyment account
it. Glance advanced to far delivered agreeable from you! By the
way, how can we communicate?