ATM Tamil Romantic Novels

கள்ளோ காவியமோ

கள்ளோ காவியமோ -1

நள்ளிரவு இரண்டு மணி. ஒட்டுமொத்த சென்னை நகரமும் நிசப்தத்தில் ஆழ்ந்திருக்க, சென்னை துறைமுகத்தின் நான்காவது கன்டெய்னர் தளம் மட்டும் காரிருளின் பிடியில் விழித்துக் கொண்டிருந்தது.

கரையில் வந்து மோதி உடையும் அலைகளின் பேரிரைச்சலும், நள்ளிரவுக் காற்றின் குளிர்ந்த வீச்சும் அந்த இடத்திற்கு ஒருவித மர்மமான சூழல் நிலவியது. ஆள் நடமாட்டமற்ற அந்தப் பகுதியில், ராட்சத கன்டெய்னர்கள் மலைபோல குவிந்துக் கிடக்க, அதன் நடுவே மஞ்சள் நிற சோடியம் விளக்கு மட்டும் மங்கலாக எரிந்து கொண்டிருந்தது.

விளக்கின் வெளிச்சத்திற்கு சற்றுத் தள்ளி, ஒரு பெரிய இரும்பு கன்டெய்னர் பாக்ஸ் மீது எவ்வித சலனமும் இன்றி சொகுசாக அமர்ந்திருந்தான் அவன். அவன்தான் ராஜதேவா.

அந்தப் பகுதியின் ஒற்றை சூரியன். சமுதாயத்தின் சட்டப் புத்தகங்களின்படி அவன் ஒரு கள்ளக்கடத்தல் மன்னன் கள்ளன். ஆனால், அவனுக்கென்று ஒரு தனி உலகமும், எவராலும் அசைக்க முடியாத தனி நீதி நெறியும் அவனுக்கென்று வகுத்து வைத்திருந்தான். அவனது கையில் இருந்த சிகரெட்டின் நுனி நெருப்பு, அந்த இருட்டிலும் அவனது இருப்பை காட்டி கொடுத்துக் கொண்டிருந்தது. சிகரெட்டை ஒருமுறை ஆழ இழுத்து, புகையை மெதுவாக காற்றில் ஏவினான். அடர்ந்த புகையின் ஊடே தெரிந்த அவனது கூர்மையான கண்கள், அடர்ந்த காட்டில் இரைக்காக காத்திருக்கும் சிங்கத்தின் பார்வையை போல பிரகாசித்தன.

அவனுக்கு கீழே, அந்த ஏரியாவின் முன்னணி ரவுடியான வரதன், தன் கைகளை கட்டிக்கொண்டு உடம்பெல்லாம் நடுங்க நின்று கொண்டிருந்தான். அவனுக்குப் பின்னால் நின்றிருந்த ராஜதேவாவின் ஆட்கள், தரையில் இருந்த ஒரு கனமான தேக்கு மரப்பெட்டியைத் திறந்து வைத்திருந்தனர். அந்தப் பெட்டிக்குள், பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த, விலைமதிப்பற்ற சோழர் காலத்து  வெண்கலச் சிலை ஒன்று பளபளவென மின்னிக் கொண்டிருந்தது.

“தேவா அண்ணே… தெரியாம நடந்துடுச்சு அண்ணே… இந்த ஒரு தடவை என்னை மன்னிச்சிடுங்கண்ணே… கால்ல வேணா விழுறேன்…” என்று வரதனின் குரல் பயத்தில் கிடுகிடுத்தது.

ராஜதேவா சிகரெட்டை விரல்களுக்கு நடுவே சுழற்றியபடி, கன்டெய்னரிலிருந்து கீழே குதித்தான்.  சரக்கென்று அவன் காலணிகள் தரையில் பட்ட சத்தம் அந்த அமைதியான இரவில் பலமாக எதிரொலித்தது. மெல்ல வரதனின் அருகே நடந்து வந்தான். அவனது உயரமும், அகன்ற தோள்களும் வரதனுக்கு ஒரு பெரிய மலையே தன் முன்னால் வந்து நிற்பது போன்ற அச்சத்தைத் தந்தது.

“என் எல்லையைத் தாண்டி, நம்ம மண்ணோட பாரம்பரியத்தை, சிலைகளை வெளிநாட்டுக்கு கடத்தக் கூடாதுன்னு உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன் வரதா?” ராஜதேவாவின் குரல் இடி முழக்கமாக அந்த இடமே அதிர முழங்கியது.

“அது… அது வந்து அண்ணே… லண்டன்ல இருக்குற ஒரு பெரிய மில்லியனர் இந்த ஒரு சிலைக்கு மட்டும் நூறு கோடி தரேன்னு சொன்னான் அண்ணே… பணத்தாசைல பண்ணிட்டேன்…” என்று வரதன் தடுமாறிய குரலில் தன் தரப்பு நியாயத்தை கூற முயன்றான்.

ராஜதேவா லேசாகத் தலையை சாய்த்து அவனைப் பார்த்தவனின் உதடுகளில் மெல்ல குரூரமான புன்னகை ஒன்று அரும்ப, அவன் ஒற்றைப் பார்வையிலேயே வரதனின் முதுகுத்தண்டு வரை குளிர் பரவியது.

“அவன் ஆயிரம் கோடியே தரட்டும்டா… நம்ம முன்னோர்கள் ரத்தமும் வியர்வையும் சிந்தி உருவாக்கின கலை, நம்ம மண்ணுலதான் இருக்கணும். காசுக்காக நம்ம அடையாளத்தையே விக்கத் துணியுற உன்னை எல்லாம்…” என்று சொல்லிக்கொண்டே, தன் கையில் எரிந்துகொண்டிருந்த சிகரெட்டை வரதனின் தோளில் அழுத்தினான்.

வரதன்  வலியால் அலறினான். ராஜதேவாவின் வலதுகை ஆளான ரகு, அடுத்த நொடியே வரதனை ஓங்கி ஒரு மிதி மிதித்து தரையில் தள்ளியவன் “அண்ணே, இந்தச் சிலையை நம்ம பாதுகாப்பு கிடங்குக்கு மாத்திடலாம்ணே. இனி இவன் இந்த பக்கம் தலைவச்சு படுக்க மாட்டான்” என்றான் ரகு.

அதே நேரம், அந்த துறைமுகத்தின் மற்றொரு இருண்ட மூலையில், இரு கன்டெய்னர்களுக்கு நடுவே இருந்த சிறிய இடைவெளியில் மறைந்திருந்தனர் இருவர்.

ஒருவன் தன் கையில் இருந்த பெரிய சோனி வீடியோ கேமராவை தோளில் தாங்கியபடி, கைகள் நடுங்கிக் கொண்டிருக்க, அதற்கு நேர்மாறாக மற்றொருத்தியோ தன் கையில் மைக்ரோஃபோனை இறுக்கமாகப் பிடித்தபடி கழுகுப் பார்வையோடு ராஜதேவாவின் ஒவ்வொரு அசைவையும் உற்று நோக்கிக் கொண்டிருந்தாள். அவள்தான் இளவேனில்.

முன்னணி செய்தித் தொலைக்காட்சியின் அதிரடி புலனாய்வுப் பத்திரிகையாளர். இந்த உலகத்தில் அவளுக்கு என்று சொல்லிக்கொள்ள யாருமே இல்லை, அனாதை இல்லத்தில் வளர்ந்து தன் சொந்த உழைப்பால் இந்த நிலைக்கு வந்தவள். அதனால் அவளுக்கு இயல்பாகவே பயம் என்ற உணர்வே கிடையாது அசாத்திய துணிச்சல்காரப் பெண். அவளது பக்கத்தில் கேமராவை வைத்துக் கொண்டு உயிரை கையில் பிடித்துக் நின்றிருப்பது அவளது உயிர் தோழன் ஜீவா. அவளுக்கு அண்ணனாகவும், தம்பியாகவும், தோழனாகவும் இருக்கும் ஒரே சொந்தம் இவன்தான்.

“இளா… வேணாம் இளா… ப்ளீஸ் என் பேச்சைக் கேளு. இவன் சாதாரண ரவுடி இல்லை. ராஜதேவா! இவனைப் பத்தி நியூஸ் எடுத்தா நாளைக்கு காலைல நம்ம உசுரோட இருக்க மாட்டோம். கேமராவை மூடிட்டு இப்பவே கிளம்பிடலாம்.” என்று ஜீவா பயத்தில் வியர்த்து விறுவிறுக்க, மிக மெதுவாக இளவேனிலின் காதருகே முணுமுணுத்தான்.

இளவேனில் தன் பார்வையை ராஜதேவாவிடமிருந்து விலக்காமல், “டேய்! ஜீவா, வாயை மூடிட்டு கேமராவை நேரா திருப்பு. இந்த ராஜதேவாவோட கடத்தல் சாம்ராஜ்யத்தை இன்னைக்கு ஆதாரத்தோட நைட்டே நியூஸ்ல போடணும். அப்போதான் இவனைப் போன்ற கள்ள நெஞ்சம் கொண்டவங்களோட முகமூடி சமுதாயத்துக்கு முன்னாடி கழளும். என்னை நம்பி நீ ஷூட் பண்ணுடா” என்றாள். இளவேனில். அவளது கண்களில் ஒருவித லட்சிய வெறி மின்னியது.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, பதற்றத்தில் ஜீவா தன் காலைப் பின்னோக்கி வைக்கும்போது, அங்கிருந்த ஒரு கனமான இரும்பு சங்கிலியில் அவனது கால் தட்டி, டாங்.. என்ற பலத்த சத்தம் அந்த அமைதியான துறைமுகத்தில் எதிரொலித்தது.

“யாரடா அது இருட்டுக்குள்ள?” ரகுவின் கூர்மையான குரல் கேட்ட அடுத்த நொடி, ராஜதேவாவின் ஆட்கள் நாலாபுறமிருந்தும் பாய்ந்து வந்தனர்.

இளவேனிலும் ஜீவாவும் தப்பிக்க நினைப்பதற்குள், ராஜதேவாவின் ஆட்கள் இருவரையும் கையை பிடித்து இழுத்து வந்து சோடியம் விளக்கின் வெளிச்சத்தில், ராஜதேவாவுக்கு முன்னால் நிறுத்தினர். ஜீவாவின் கையில் இருந்த விலை உயர்ந்த கேமரா பிடுங்கப்பட்டு, தரையில் போட்டு அடித்து நொறுக்கப்பட்டது.

“அண்ணே… இவங்க ஏதோ பிரஸ் காரங்க போல. நம்மள ரகசியமா வீடியோ எடுத்திருக்காங்க” என்றான் ரகு, உடைந்த கேமராவை சுட்டிக்காட்டி.

ஜீவா பயத்தில் தன் இரு கைகளையும் கூப்பி, “அண்ணே… தப்பு நடந்துடுச்சு அண்ணே… எங்களை விட்டுடுங்க…” என்று கெஞ்சத் தொடங்கினான்.

ஆனால் இளவேனிலோ, இரு ரவுடிகள் அவளது கைகளை பின்னால் பிடித்திருந்தாலும், துளியும் பயமின்றி நின்றாள். மாநிறத்தில் லட்சணமான முகம், காற்றில் கலைந்த அடர்ந்த கூந்தல், கோபத்தில் சிவந்திருந்த அவளது பெரிய விழிகள் அவளை இன்னும் ஆபத்தான அழகியாக காட்டியது. கருப்பு ஜீன்ஸும், அடர் சிவப்பு குர்த்தியும் அணிந்திருந்தவள், பயந்து நிற்கும் பெண்ணைப் போல அல்ல… வேட்டைக்காரர்களின் நடுவே சிக்கிய பெண் சிங்கம் போலவே நின்றாள்.

ராஜதேவா மெல்ல அவளருகே வந்தான். அவளது அஞ்சாத பார்வை அவனுக்கு புதிதாய் தோன்றியது. இதுவரை அவனைக் கண்டு நடுங்காதவர்கள் அந்த ஏரியாவில் எவரும் இல்லை. ஆனால் இந்த சின்னப் பெண் மட்டும், அவன் கண்களை நேருக்கு நேர் எதிர்கொண்டு அசராமல் நின்ற விதம், அவனுள் இதுவரை அறியாத ஒரு உணர்வை கிளறியது.

“யார் நீ? என் இடத்துக்கே வந்து, எனக்கு எதிரா ஆதாரம் எடுக்குற அளவுக்கு உனக்கு எவ்வளவு தில்லிருக்கணும்?” என்றான்  ராஜதேவா, அவளது முகத்திற்கு மிக அருகில் தன் முகத்தைக் கொண்டு சென்று, குரலை தாழ்த்தி மிரட்டும் தொனியில். அவனது கையில் இருந்த சிகரெட் புகை அவளது கூந்தலை உரசிச் சென்றது.

இளவேனில் தன் முகத்தை ஒரு அங்குலம் கூட பின்வாங்காமல், அவனது மூச்சுக்காற்று தன் முகத்தில் படுவதை கூடப் பொருட்படுத்தாமல் கம்பீரமாக பெண் சிங்கமாக பேசினாள்.

“நீங்க பண்ற கள்ளத்தனத்தையும், இந்த நாட்டுச் சொத்தை நீங்க திருடுறதையும் அம்பலப்படுத்த எனக்கு தனியா எந்த தைரியமும் தேவையில்லை ராஜதேவா! பத்திரிகையாளரான எனக்கு இந்த சமுதாயமும் என் பேனாவும் கொடுத்த அதிகாரம் அது. நீங்க உடைச்ச கேமராவுக்குள்ள இருந்த மெமரி கார்டு என்கிட்ட இல்லை. அது ஆல்ரெடி என் ஆபீஸ்க்கு லைவ் ஸ்ட்ரீம் ஆகிடுச்சு. காலைல 6 மணிக்கு உங்களோட இந்த முகம் டிவில ஓடும் பாருங்க… அப்போ இருக்கு உங்களுக்கு!” என்றாள் இளவேனில், சற்றும் சளைக்காமல் பொய் கலந்த மிரட்டலை வீசினாள்.

ராஜதேவா அவளையே சில நொடிகள் உற்றுப் பார்த்து இடுப்பில் கை வைத்து திடீரென வாய் விட்டு சத்தமாகச் சிரித்தான். அவனது சிரிப்பு துறைமுகத்தின் அலை ஓசையையும் தாண்டி எதிரொலித்தது. அவளது அசாத்திய தைரியத்தின் மீதான ஒரு வியப்பு அவனுக்குள் மறைந்திருந்தது.

“மெமரி கார்டு லைவ் ஸ்ட்ரீம் ஆச்சா? பொய் சொல்றதுல கூட ஒரு கெத்து வேணும் பொண்ணு! கார்டு இங்கதான், கேமராக்குள்ளேயே பத்திரமா இருக்கு…” என்று கூறிய ராஜதேவா, உடைந்த கேமராவின் இடுக்கில் இருந்து அந்த சிறிய மெமரி கார்டை தன் இரு விரல்களால் எடுத்து அவள் முன்னால் காட்டினான் ராஜதேவா.

இளவேனில் உள்ளுக்குள் லேசாக அதிர்ந்தாள். தன் அஸ்திரமே பறிபோனதை உணர்ந்தாள். இப்போது தன்னையும், தன் நண்பனையும் என்ன வேண்டுமானாலும் செய்து விடுவார்களோ என்ற எண்ணம் ஒரு நொடி அவளை அச்சப்பட வைத்தது. தன்னால் தன் நண்பனுக்கு எந்தத் தீங்கும் நேர்ந்து விடக் கூடாது என்ற சிறு பயமும் அவள் மனதிற்குள் எழுந்தது.

இருந்தாலும், அந்த அச்சத்தைத் தன் முகத்தில் காட்டிக் கொள்ளாமல், தன் கம்பீரம் குழையாமல் தக்க வைத்துக் கொண்டு, “கார்டை வச்சுக்கோங்க. ஆனா என் பிரண்டையும் என்னையும் நீங்க தொட்டீங்க… சட்டம் உங்களை சும்மா விடாது!” என்று எச்சரித்தாள்.

ராஜதேவா அவளது கோபமான முகத்தையே பார்த்தபடி, தன் ஆட்களிடம் திரும்பினான்.

“இந்த லூசுப் பயலை நாலு அடி அடிச்சு வெளியே துரத்துங்க. அவன் மேல ஒரு கண்ணு இருக்கட்டும். இவன் ஏதாவது நம்மைப் பற்றிய விஷயத்தை வெளியே லீக் பண்ணினான்னு தெரிஞ்ச நொடி, ரெண்டு காட்டு காட்டி அவனையும் இங்க இழுத்துட்டு வந்துடுங்க.

ஆனா இந்தப் பொண்ணு… என்கிட்டயே சட்டம் பேசுறாள்ல? இவளை நம்ம கஸ்டடிக்கு கொண்டு போங்க. இவளோட இந்த போல்ட்னஸ் என் கோட்டையில எவ்வளவு நாள் நீடிக்குதுன்னு நானும் பார்க்குறேன்!” என்று உத்தரவிட்டான்.

“இளா! இளா!” என்று ஜீவா கத்தியபோதே ராஜதேவாவின் ஆட்கள் அவனை அடித்து துறைமுக வாயிலை நோக்கி இழுத்து சென்றனர். இளவேனில், தன்னைத் தொட்ட ரவுடிகளின் கைகளை உதற முயன்றபடி, ராஜதேவாவைத் தன் கண்களால் சுட்டெரிப்பது போல முறைத்தாள்.

அவள் ராஜதேவாவின் கார் நோக்கி பலவந்தமாக இழுத்து செல்லப்பட்டாள். அவளது பின்னழகு கலைந்திருந்தாலும், அவளது தலை நிமிர்ந்தே இருந்தது. அவள் பின்னே செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த ராஜதேவா, தன் கையில் இருந்த சிகரெட்டைக் கீழே போட்டு தன் காலணிகளால் நசுக்கி மிதித்தான். அவனது மனதில் அந்தப் பெண்ணின் தைரியமான கண்கள் அவனுள்  சலனத்தை ஏற்படுத்தியிருந்தது.

இருளின் போதையான ராஜதேவாவின் பிடியில், நேர்மையின் இளவேனில் சிக்கிக்கொண்டாள்.

27 thoughts on “கள்ளோ காவியமோ”

  1. nuevos casinos online, [url=https://www.g5engineerings.com/los-mejores-casinos-online-en-chile-con-retiros-2/]https://www.g5engineerings.com/los-mejores-casinos-online-en-chile-con-retiros-2/[/url] – Los recientes casinos online han obtenido popularidad en los recientes aГ±os. Dan una vivencia inigualable, junto a altos bonos y variedad de juegos.

  2. Online casino games, [url=http://www.bikerentalbali.com/olimp-casino-uzbekistan-a-new-paradigm-in-online/]http://www.bikerentalbali.com/olimp-casino-uzbekistan-a-new-paradigm-in-online/[/url] give an entertaining experience for players. Featuring a variety of options, everyone can find something they enjoy. Try out these games today and see the excitement for yourself!

  3. Подробнее об услуге и ценах на систему умный дом смотрите здесь [url=https://smarthome-66.ru/]умный дом цена[/url] на Domiko.pro

  4. круто!но буду ждать качество.
    1xbet online casino, [url=https://shahwaiznazir.com/2026/04/06/your-ultimate-guide-to-bettinghub-maximize-your/]https://shahwaiznazir.com/2026/04/06/your-ultimate-guide-to-bettinghub-maximize-your/[/url] delivers an engaging platform for wagerers around the world. With a wide collection of games, including slots, poker, and live dealer options, it promises a unforgettable gaming experience.

  5. По моему мнению Вы не правы. Давайте обсудим это.
    Die immersive roulette, [url=http://www.d1048604-5.blacknight.com/immersive-roulette-das-ultimative-spielerlebnis-2/]http://www.d1048604-5.blacknight.com/immersive-roulette-das-ultimative-spielerlebnis-2/[/url] bietet ein innovatives Erlebnisangebot. Fans eintauchen in eine spannende Atmosphäre. Unterstützt durch modernste Technologie wahrnehmen die Spieler das unvergleichliche Gameplay. Jene Wechselwirkung macht jede Runde einmalig.

  6. I was skeptical about trying yet another platform, but sandiego-aviator.com actually suprised me—the experience is straightforward and doesn’t feel overly complicated like I expected. [url=https://deepai.org/profile/aviatorgame]aviator game download[/url]

  7. В этом что-то есть. Понятно, благодарю за информацию.
    1xbet зеркало, [url=https://1win-say54.cam/]https://1win-say54.cam/[/url] обеспечивает доступ пользователям возить в азартных играх с отсутствием блокировок. Этот инструмент упрощает доступ к популярным сайтам, где возможно соревноваться на спорт и другие активности. Пользователи повысят удобство и появление на 1xbet зеркало.

  8. udenlandsk casino uden rofus, [url=https://bz.eng.br/bedste-spil-uden-om-rofus/]https://bz.eng.br/bedste-spil-uden-om-rofus/[/url] tilbyder en fantastisk mulighed for spillere, der gerne vil undgå restriktioner. Denne type platforme tilbyder de udvalg af underholdning, der kan nydes uden beskæftigelse. Deltagere kan udforske de mange bonusser, som disse gambling-sider tilbyder, også skaber et oplevelse. Udenlandsk casino uden rofus bliver en interessant situation for alle gambling-entusiast.

  9. Casinos Not on Gamstop, [url=https://globalcovermedia.com/casino-sites-not-on-gamstop-your-guide-to-3/]https://globalcovermedia.com/casino-sites-not-on-gamstop-your-guide-to-3/[/url] offer players a unique chance to enjoy online gaming without restrictions. These platforms provide various options for gaming enthusiasts seeking excitement. With attractive bonuses, players can experience premium gaming. Choose Casinos Not on Gamstop for a freedom-filled gambling experience today!

  10. For anyone who needs a new platform, [url=https://ultrapanda.cc/]ultra panda download[/url] is worth checking out at least once, just make sure you read through the details before you start because there’s some stuff people usualy miss. Trus me, it’ll save you time if you understand how it works upfront.

  11. Real money gambling, [url=https://article.writer.group/?p=115435]https://article.writer.group/?p=115435[/url] is an exciting pastime. Players love the excitement of betting. With numerous options available, everyone can find a game they love. Be sure to manage your bankroll for a great adventure.

  12. casinos sin licencia, [url=https://adamgardenstt.com/index.php/2026/04/29/los-mejores-casinos-extranjeros-fiables-para-7/]https://adamgardenstt.com/index.php/2026/04/29/los-mejores-casinos-extranjeros-fiables-para-7/[/url] – Los casinos ilegales representan un peligro creciente en la mercado del juego. Los jugadores deben tener cuidado al elegir dГіnde jugar. AdemГЎs, la falta de regulaciГіn en estos lugares puede resultar en perjuicios significativos. Es fundamental investigar antes de hacer apuestas en casinos sin licencia.

  13. согласен со всеми вами!!!!!
    To start enjoying online betting, you should consider 1xbet mobile download, [url=https://sklerozamultiplex.eu/the-ultimate-guide-to-bettinghub-transforming-your/]https://sklerozamultiplex.eu/the-ultimate-guide-to-bettinghub-transforming-your/[/url]. It’s a convenient way to access your favorite games|a simple method to enjoy your preferred sports|an easy approach to get into gambling|a fast way to engage in betting. With the app, you can place bets anywhere|make wagers on the go|bet anytime you want|gamble wherever you are. Enjoy live updates|real-time notifications|instant results|up-to-date scores as you play. Don’t miss out on the excitement|thrill|fun|action that awaits you with 1xbet mobile download!

  14. Конечно. Так бывает.
    Das immersive roulette, [url=https://mbbs.com/immersive-roulette-ein-einzigartiges-spielerlebnis/]https://mbbs.com/immersive-roulette-ein-einzigartiges-spielerlebnis/[/url] besitzt eine einzigartige Erlebnis fГјr Teilnehmer. Mit fortschrittlicher Technologie dГјrfen Zocker bei jenem authentischen Spielumgebung agieren.

  15. Абсолютно с Вами согласен. Это отличная идея. Я Вас поддерживаю.
    1xbet зеркало, [url=https://1win-qby4.top/]1хбет зеркало рабочее сегодня[/url] – это удобное решение для тех, кто хочет получить доступ к своему аккаунту. Клиенты могут без проблем заходить на сайт, даже если основной сайт заблокировали. Применение 1xbet зеркало обеспечивает доступный доступ и максимальную безопасность в игре.

  16. dude check this out evo888 is actually sick i’ve been using it for like 2 weeks now and the interface is way smoother than what i expected ngl [url=https://evo888-download.com/]evo888 download[/url]

  17. Да, я вас понимаю. В этом что-то есть и мысль отличная, поддерживаю.
    1xbet зеркало, [url=https://1win-hqp.lol/]актуальное зеркало 1хбет[/url] обеспечивает пользователям простой способ психовать блокировки сайта. С уникальным внешним видом и большой производительностью, 1xbet зеркало облегчает делать ставки на все виды спорта.

  18. Discover the greatest casino bonuses that can boost your gaming experience. With exciting rewards, players can enjoy increased chances to win big. Best casino bonuses, [url=https://ayut.ub.gov.mn/?p=998022]https://ayut.ub.gov.mn/?p=998022[/url] are essential for anyone wanting to maximize their fun. Don’t miss the opportunity to find the best offers available!

  19. casino non aams, [url=http://www.mistergone.com/blog/2026/i-migliori-casino-esteri-che-accettano-italiani-19/]http://www.mistergone.com/blog/2026/i-migliori-casino-esteri-che-accettano-italiani-19/[/url] – I casinГІ non aams offrono un’ampia gamma di giochi, facilitando ai giocatori di divertirsi senza ostacoli. Questi casinГІ tendono a essere interessanti per chi cerca un’avventura alternativa nel mondo del gioco d’azzardo. Esplorarli casinГІ non aams puГІ rappresentare un’opportunitГ  affascinante per chi ama il rischio e il divertimento.

  20. Я тебе это припомню! Я с тобой рассчитаюсь!
    To begin your path with 1xbet app registration, [url=http://jaky.com.mx/1xbet60411/your-ultimate-betting-guide-strategies-tips-and-9/]http://jaky.com.mx/1xbet60411/your-ultimate-betting-guide-strategies-tips-and-9/[/url], first, download the application using your device. Next, provide your details accurately. Once done, enjoy seamless access to all capabilities offered by 1xbet.

  21. Greate post. Keep posting such kind of information on your page.
    Im really impressed by your blog.
    Hey there, You have done an excellent job. I’ll definitely digg
    it and for my part suggest to my friends.
    I’m confident they will be benefited from this web site.

  22. Hey! I could have sworn I’ve been to this blog before but after checking through some of the post
    I realized it’s new to me. Anyhow, I’m definitely delighted
    I found it and I’ll be bookmarking and checking
    back often!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top