2.நேசம்
சென்னை பணக்கார மக்கள் வாழும் ஓர் தெருவில் அந்த அழகான காலை வேளையில் வீட்டில் கிளிகள் சத்தம் கொடுக்க மெல்ல கண் திறந்தாள் வெண்ணிலா..நம் கதையின் நாயகி
கொள்ளை அழகு , கண்ணில் குழி தோண்டி புதைத்து விடும் கவர்ச்சி சிரிப்பு , உடலின் வனப்பில் அரசர்களே தங்களது சாம்ராஜ்ஜியம் முழுவதையும் காணிக்கையாக கொடுத்து விடுவார்கள் … அப்படி ஒரு பேரழகு பெட்டகம் அவள்.. நடனமும் இசையும் இரு கண்கள் போன்று அவளுக்கு..தற்பொழுது தான் இறுதி வருட படிப்பை முடித்து விட்டு இன்னும் இரண்டொரு நாட்களில் நாட்டியபள்ளி ஆரம்பிக்க போகும் சந்தோஷத்தில் இருக்கிறாள்..
தந்தை ராகவன் தாய் மதியழகி..பெத்த கடைசி பெண்.. மூத்தவன் இந்தர்…தந்தையுடன் பிசினஸ் பார்க்கிறான்.. அவன் மனைவி ரேணுகா..
வெண்ணிலா காலை நேர இதத்தை ரசித்து கொண்டே குளித்து தயாராகி கீழே வரவும் அப்பா..ம்மா குட் மார்னிங் ..
குட் மார்னிங் டா செல்லமே..
எதுக்கு டி இவ்வளவு லேட் ஆஹ் எழுந்து வர.. மம்மி நைட் டான்ஸ் ஸ்கூல் பத்தி பேசிட்டு இருந்தோம் நானும் பாரதியும் அதா தூங்கிட்டேன்..
அப்போது அவர்கள் வீட்டின் வெளியே சலசலப்பு கேட்டது.
திடீரென்று அவர்களது வீட்டினுள் நோக்கி ஒரு சில கட்சி ஆட்களும் ,போலீசும் சில அடியாட்ககளும் வந்திருந்தனர்..
யார் நீங்க..
சதாசிவம் சார் சொல்லி வந்துருக்கோம் சார்..உங்க பேங்க் ல இருந்து செக் பவுன்ஸ் ஆகிட்டுன்னு உங்க மேல கம்பளைன்ட் வந்துருக்கு.. இது கோர்ட் ஆர்டர்..
உங்க சொத்துக்கள் எல்லாம் நீங்க வரிப்பணம் கட்டாம இருந்ததால முடக்கி வச்சுருக்கோம்..
சார் நான் எல்லாமே சரியா கட்டிட்டு இருக்கேன்..
ஒரு பேப்பரை நீட்டி நீங்க வாங்கிய கடன் எல்லாத்துக்கும் எம்பி சதாசிவம் பேர்ல உங்க எல்லா சொத்துக்களையும் எழுதி நீங்க கொடுத்துருக்கிங்க..
நோ.. நோ..இது ஏதோ சூழ்ச்சி இருக்கு..நா கடன் வாங்குனது உண்மை தான் ஆனா அவர் பேருக்கு எதுலயுமே சைன் பண்ணி கொடுக்கலை..
இது உங்க கையெழுத்து தான ..
அப்பா என்ன இது.. எப்போ அவர் கிட்ட கடன் வாங்குனீங்க..என்கிட்ட சொல்லவே இல்லை..அந்த சதாசிவம் இதுல நீங்க கையெழுத்து போட்டு கொடுத்ததா சொல்லிருக்காரு..
இப்போ என்ன பண்றது ..என்று புரியாமல் இருக்க சதாசிவம் நேரில் வந்தான்….
டேய் துரோகி.. நீ இப்படி பண்ணுவேன்னு நா நினைக்கல..உன்கூட பழகின பாவத்துக்கு என் மேலேயே கம்பளைன்ட் கொடுத்துருக்க..உனக்கு என்ன தான் வேணும்.
இப்போ தா நீ கரெக்ட்டா பாய்ண்டுக்கு வந்துருக்க..ராகவா எனக்கு உன்னோட நூறு ஏக்கர் நிலம் வேணும்..
டேய் அது என் பரம்பரை சொத்து.. யார் பேர்லயும் எழுதி வைக்க முடியாது..
அதெல்லாம் தெரியாம தான் உனக்கு குடைச்சல் கொடுக்குறேனா..நா எம்.எல்.ஏ. ஆனதே அந்த நிலத்தை என் பேர்ல மாத்த தான்.நீ ஒன்னு பண்ணு..இப்போ சதாசிவம் அப்படிங்குற அரசாங்கத்துக்கு எழுதி கொடுக்கலாம்..அதுக்கு எல்லா வழியும் ஏற்படுத்திட்டு தான் வந்துருக்கேன்.. ஒன்னு அந்த பத்திரத்துல சைன் பண்ணிட்டு மத்த சொத்தை வாங்கிட்டு போ..இல்ல எல்லாத்தையும் நானே சொல்லிட்டே இருக்கணுமா டா..தடி பசங்களா உங்கள எதுக்கு டா கூட்டிட்டு வந்தேன் என்று அடியாட்களை விரட்ட வீட்டில் உள்ள பெண்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினார்கள்..
ஏய்..எதுவும் பண்ணிடாதீங்க என்று அவன் காட்டிய பத்திரத்தில் கையெழுத்து போட்டு தங்கள் தலை எழுத்தை அழித்து விட்டார்கள்..
இந்தர் சட்டென யோசித்தவனாக …நீ சொன்ன மாதிரி கையெழுத்து போட்டிரலாம் ஆனா இதுல என்னோட பார்ட்னர் க்கு உரிமை சரி பாதி இருக்கு…அவன் தந்தை ராகவன் இடை மரித்து இந்தர் அது வெண்ணிலா கட்டிக்க போற பையனும் அதுல கையெழுத்து போடணும்..என் தங்கச்சி பையன் க்கு தான் அதுக்கு சொந்தக்காரன்..
எப்போவோ காணாம போன தங்கச்சி பையன் இப்போ எப்படி வருவான் ..நா என்னோட பார்ட்னர் க்கு அதை கொடுக்க போறேன்..
என்னடா அப்பனும் பிள்ளையும் பேசிட்டு இருக்கீங்க..
ம்ம் அந்த நிலத்துல என்னோட பார்ட்னர் பேக்டரி வர போகுது..அதுக்கு நாங்க அவர்க்கு அக்ரீமெண்ட் போட்டாச்சு..அது மட்டும் இல்ல நாங்க சேர்ந்து ரன் பண்ற பிசினஸ்க்கு இன்வெஸ்டெரே அவர்தான்…
அதையும் எனக்கே எழுதி கொடு அவனை வர சொல்லு..
டேய் அவன் இங்க இல்ல..
அவன் இவன்னு சொன்ன பல்ல உடைச்சுறுவேன்..வேற எங்க வானத்துல இருக்கானா..
ம்ம்ம் ஆமா ..என்று விக்ரம் நம்பர்க்கு கால் செய்ய..
சரி பிசினஸ் இருக்கிறது அதை வைத்து பார்த்து கொள்ளலாம் என்று நினைக்க..,பங்கு சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சியால் பணம் இழந்து நின்றனர்..திடீர் பண இழப்பு அவர்களை நிலை குழைய செய்தது..
எல்லாம் கையெழுத்து வாங்கிவிட்டு சென்ற பின் இப்போ இந்த வீடு மட்டும் உனக்கு இருக்கு இந்தர்…நிலாக்கு ..ஒண்ணுமே செய்யல இந்த படுபாவி இப்படி பண்ணுவானு நினைக்கலயே ..ஏமாந்துட்டேன்..,என்று கண் கலங்கியவர்..
அப்பா..நா விக்ரமாதித்யாவை வர சொல்லிருக்கேன்..அவன் வந்தா இந்த சதாசிவம் துண்டை காணும் துணியை காணும்னு ஓடிடுவான்…
அண்ணா அந்த ஆளு மேல போலீஸ்ல கம்பளைன்ட் கொடுக்கலாம்..
..
வேண்டாம் நிலா..அவன் இப்போ அரசியல் பலத்துல இருக்கான்..சட்டபடி எல்லாம் போனா அவன்கிட்ட செல்லுபடியாகாது..அதுக்கு வேற ஒரு ஆப்சன் இருக்கு என்று விக்ரமிற்கு போன் பண்ணினான் இந்தர்..
ஹலோ.. என்றான் விக்ரம்.
விக்ரம் சார் நான் உங்க நியூ பார்ட்னர் இந்தர் பேசுறேன்..
ம்ம் என்ன விஷயம்..
நம்ம கம்பெனியை ஒருத்தன் என்கிட்ட இருந்து கட்டாயப்படுத்தி எழுதி வாங்கிட்டு போய்ட்டான்.. என்னால எதும் பண்ண இயலாத நிலை என்று நடந்ததை கூறியவன்..
மனதில் பயம் கவ்வி கொண்டது இப்பொழுது விக்கிரம வந்தால் சதாசிவம் ஓடி விடுவான் ஆனால் எங்கள் சொத்துக்கள் அவனிடமே பறி போய்விடுமே..வந்ததும் பேசிக்கலாம் என்ற முடிவில் இருந்தான்..
விக்ரம் அண்ணா ..நீங்க எதுக்கு மேரேஜ் பண்ண மாட்டேன்னு சொல்றிங்க..
ம்ஹூம் என்னைய கேள்வி கேக்குற அளவு வளந்துட்டியா..என்றான் சிறு புன்னகையோடு
சரியான காரணம் இல்லாம வேண்டான்னு சொல்லாதீங்க..
விக்ரம் ஏதோ பேச போக..இந்தரிடம் இருந்து போன் வந்தது..
ம்ம் சரி…,வைங்க வறேன் என்று அண்ணா எங்க கிளம்புறீங்க..
துருவ் இன்னைக்கு என்கூட நீயும் வா..ஒரு கிப்ட் இன்னைக்க்கு..மொத்தமா சேர்த்து பார்த்தா கோடில சொத்து கிடைக்கும் போலயே என்று கணக்கு போட்டவன்….இயந்திர பறவையில் சென்னை வந்தான்..ஐம்பது பேர் கருப்பு உடையில் கையில் துப்பாக்கி ஏந்திவாறு விக்ரமதிதியாவிற்கு பாதுகாப்பாக வர மதித்தியில் சிங்கம் போல வந்தான்..வீட்டிற்குள் சட சட வென பூட்ஸ் அணிந்த ஆணின் கால்கள் உள்ளே வர இந்தர் சதாசிவத்திடம் ஐயா..,அரசியல் குருவே இவர் யாருன்னு தெரியுதா..
சதாசிவம் நடு நடுங்கி போய் நின்றார்…இது இவரு தம்பி சென்ட்ரல் மினிஸ்டர் பையன் விக்ரமாதித்யா தானே..
ம்ம்ம் ஆமா ..இவர் தான் என்னோட பார்ட்னர்..டீல் பேசிட்டு உயிரோட இருந்தா வா பேசுவோம் என்று விக்ரமிற்கு வணக்கம் வைத்து விட்டு அவனருகில் நின்று கொண்டான்..
விக்ரம் அந்த சோபாவில் ராஜாவை போல அமர்ந்து கொண்டு சிகரெட் பிடித்த புகையை ஊதிக்கொண்டே சதாசிவத்தை பார்க்க அவருக்கு நடு முதுகில் ஜில்லிட்டது..அது ரத்தம் குடிக்கும் சிறுத்தையின் பார்வை..ரத்தம் உறைய வைத்தது..
சதாசிவம் விக்ரமின் காலடியில் விழுந்து சார் என்ன மன்னிச்சுறுங்க..உங்க கூட டீல் பேசிறுப்பாங்கன்னு தெரிஞ்சிருந்தா வந்துருக்கவே மாட்டேன்..என்ன விட்டுருங்க என்று காலை பிடித்தான்..
துருவ் அவனிடம் இருந்து வாங்கிய பாத்திரங்களை கிழித்து எரித்தவன்..சதசிவத்தை தன் ஆட்களிடம் கண்ணை காட்டி தூக்கி போக சொல்லிவிட்டான்..
ஐயோ என்னை விடுங்க என்ற அலறல் தான் கேட்டது..
ரொம்ப நன்றி மிஸ்டர் விக்கரமாதித்தியா..நீங்க பண்ண உதவி எனக்கு ரொம்ப பெருசு..
விக்ரம் இதழ் வளைத்து சிரித்தவன்..இந்தரிடம் எனக்கு அந்த ப்ரொபெர்ட்டி ய எழுதி கொடுத்துட்டு நீ ஒர்க்கிங் பார்ட்னரா இரு அதுக்கு சேலரி வாங்கிக்க என்றான்..
வெண்ணிலாவுக்கு கோவம் வர..அண்ணா நீ என்ன பண்ணிட்டு இருக்க..
நிலா நீ சும்மா இரு..எனக்கு தெரியும்..
என்ன சும்மா இருன்னு சொல்ற..அந்த சதாசிவம் பண்ணாத தான் இப்போ இவரும் பண்ராறு..நாம ரவுடிக்கு எல்லாம் பயந்து வாழனுமா..பண பிசாசுங்க என்றாள்..வீட்டுக்குள்ள ஷூ போட்டுட்டு வராணுக.. இதுல சிகரெட் வேற.. முதல்ல இவங்க போனதும் வீட்டை பினாயில் போட்டு கழுவனும் என்றாள் வாய்க்குள்ளே..விக்ரமிற்கு அவள் பேசிய அனைத்தும் தெள்ள தெளிவாக கேட்டு விட்டது..
ஏய்..நிலா சும்மா இருக்க மாட்ட..அவர் விக்ரமாதித்யா மா.. மும்பைல ஈஸ்வர் கன்ஸ்ட்ரக்சன்ஸ் ஸ்கூல் காலேஜ் இண்டஸ்ட்ரின்னு நிறைய வச்சுருக்காங்க..நம்மகிட்ட இருக்குறது எல்லாம் அவங்களுக்கு கால் தூசிக்கு சமம்..அவங்க ராஜ பரம்பரையை சேர்ந்தவங்க நிலாம்மா..ஒர்க்கிங் பார்ட்னர் ஆஹ் இருக்க எனக்கு ஒன்னும் கஷ்டம் இல்ல..நீ பேசுணத்துக்கு அவர்கிட்ட மன்னிப்பு கேளு..
அண்ணா என்னை மன்னிச்சுறு..அந்தாள பார்த்தாலே எனக்கு பிடிக்கல..
மன்னிப்பு கேளுன்னு சொன்னேன்..
முடியாது ஊ ஊ ஊ.. என்ற அவள் பேசிய வெறுப்பில் விக்ரம் எழுந்து அவள் கையை பிடித்து இழுத்து இவ்வளவு நேரம் பேசிய உதட்டிற்கு வன் முத்தம் வைத்து விட்டான்..அனைவர் முன்பும் துருவ் அதிர்ச்சியாகி நின்றான்..விக்ரம் இப்படி ஒரு செயலில் இறங்குவான் என்று எதிர்பார்க்கவில்லை..
டேய் பொறுக்கி விடுறா கையை என்று அவன் தொட்ட கையை உதறி விட்டவளை இழுத்து அணைத்து அறையில் தள்ளி கதவை சாத்தி கொண்டான்..
வீட்டில் எல்லாருக்கும் பயம் பிடித்து கொண்டது.. யாருக்கும் அடங்காத காளை தான்..ஆனால் விக்ரம் பெண்களிடம் பேச கூட மாட்டான்.. இன்று நிலா பேசியதில் கடுப்பாகி விட்டான்..

👌👌👌👌👌👌👌👌👌👌