ATM Tamil Romantic Novels

தீக்கு தென்றலோடு மோகம்

2 – தீக்கு தென்றலோடு மோகம்!

எபி 2

சம்ரித்,”மாம்… மாம்.. எனக்கு டிபன் எதுவும் வேண்டாம்.” ஹைப்ச்சில் கத்தினான்.

அதற்கு அவனுடைய அம்மா கிச்சனில் இருந்து,”இருடா… கொஞ்சம்… உனக்காக தான் அவசரம் அவசரமாக செஞ்சிட்ருக்கேன்.” என பதிலுக்குக் கத்தினார்.

“இல்லம்மா.. எனக்கு டைமாயிடுச்சு… நா தான் முதலாளி… நானே டைம்க்கு போகலனா… முதலாளிய லேட் வருகிறாரு… லேபர்ஸ்கு நாம டைம்க்கு போகனுமா என்னங்கற தாட் வந்திடும்…” என சொல்லிட்டு இருக்கும் போது தன் அசிஸ்டெண்ட் டிபன் கொண்டு வர பின்னால் விமலாவும் வந்தார்.

“ஏப்பா… உனக்காக தானே ஏர்ல் மார்னிங்ல எந்திரிச்சு வேகவேகமாக ப்ரிப்பேர் பண்ணினேன்… இப்படி சுடுதண்ணீர கால் ஊத்திகிட்ட மாதிரி பறக்கர… நா இதுக்காகவ இவ்வளவு ஸ்டெயின் பண்ணி செஞ்சேன்…”

“மாம்… உங்கள யாரு ஏர்லி மார்னிங் எழுந்து எனக்கு டிபன் செய்ய சொன்னாங்க… நா தான் ஏதாவது ஹோட்டல் சாப்பிட்டுகிறேன் சொன்னேன்ல…” என பொரிந்துத் தள்ளிக் கொண்டிருக்கும் போதே

ஈஸ்வர்,“எனக்கெல்லாம் ஒரு நாள் உங்க மாம் இப்படியெல்லாம் கூட செஞ்சதில்ல…” சொல்லிக் கொண்டு மாடிப்படி இறங்கி வந்தார்.

“க்கும்… நீங்க என்றைக்கு எர்லி மார்னிங் எழுந்து இந்த மாதிரி ஹாஸ்பிட்டல் கிளம்பி இருக்கிறிங்களா… இதுல நா வேற உங்களுக்கு நேரமா டிபன் செஞ்சு கொடுக்கலனு குறையா சொல்லறிங்க” தன் முகவாயை தன் தோளில் இடித்துக் கொண்டார் விமலா.

“நா டாக்டர்மா டாக்டர்… எனக்கு என்ன தலையெழுத்தா… உன் மகன் மாதிரியெல்லாம் இன்ஜினியர்கு படிச்சிட்டு பேக்டரில எல்லாம் வேல செய்யல…” ஈஸ்வர் விமலாவிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போது…

சம்ரித் சாப்பிட்டு முடித்து விட்டு,”பை மாம், பைடாட்” சொல்லி விட்டு பேக்டரிக்குகிளம்பிவிட்டான்.

“எனக்கும் டிபன் எடுத்து வைமா…”

“நீங்க தான டாக்டராச்சே… உங்களுக்கு என்ன தலையெழுத்தா… அவனுக்கு தான் தலையெழுத்து நேரமா பேக்டரிக்கு கிளம்பின்னு சொல்லிட்டு கிளம்பிட்டான். உங்களுக்கு என்ன அவசரம் இருங்க…” என சொல்லிட்டு டைனிங்டேபிளில் உட்கார்ந்த தன் கணவனை கண்டுக் கொள்ளாமல் ஹால் சோபாவில் போய் உட்கார்ந்துக் கொண்டார்.

ஈஸ்வர் தான் ‘ஙே’ முழித்துக் கொண்டிருந்தார். பிறகு தன் தர்மபத்தினிய என்ன சொல்லி சமாதானப் படுத்துவது என யோசித்தார். ஒருவழியாக அவள் கன்னத்தை பிடித்து,”என் பட்டுகுட்டில… என் தங்கம்ல… வாம்மா… வந்து எனக்கு டிபன் எடுத்து வைமா…” என தாஜா பிடித்து மலையிறக்கினார்.

“ஏதோ… இவ்வளவு கெஞ்சறதனால போனா போகுதுனு பெரிய மனசு பண்ணி எடுத்து வைக்கறேன்… வாங்க… வந்து உட்காருங்க…” என பேசிக் கொண்டே டேபிளுக்கு போனார். பின்னாலயே ஈஸ்வர் வந்தார்.

சம்ரித் பேக்டரிக்கு வருவதற்கு முன்னால் அம்ரீதா வந்து தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிட்டாள். சம்ரித் அவளை கேபினில் பார்த்தவுடன்,”ஏய்… அம்ரீ… எப்ப வந்த?… நா எவ்வளவு சீக்கிரம் வந்தாலும் எனக்கு முன்னாடியே வந்து வேல செஞ்சுகிட்ட இருக்க… நீ நைட் எல்லாம் தூங்குவியா… மாட்டியா…”

“கொஞ்சம் மூச்சு எடுத்துகிட்டு ஒவ்வொரு கேள்வியா கேளுங்க…” சிரித்துக் கொண்டே சொன்னாள்.

உடனே சம்ரித் பெருமூச்சை வெளியேற்றி,”சரி… சரி… இரு… நா ஒவ்வொன்னா கேட்கறேன். நீ நைட் எல்லாம் தூங்குவியா… மாட்டியா…” சம்ரித் கேட்டான்.

உடனே அம்ரீதா,”ம்ம்ம்… எல்லோரையும் போலவே நானும் நைட்ல தூங்குவேன். ஆனா சீக்கிரமா எழுந்துக்குவேன்.”

“என்ன சொல்ற… புரியல…”

“நா நைட் பத்து மணிக்கு பெட்கு படுக்க போயிவேன். காலைல ஐந்து மணிக்கு எந்திரிச்சுடுவேன்.”

“நா தினமும் ஏழு மணிக்கு எழுந்து ப்ரஸப் ஆகிட்டு ஜிம்கு போயி ஒருமணி நேரம் ஒர்க்-அவுட் பண்ணிட்டு எட்டு மணிக்கெல்லாம் குளித்து முடித்து ரெடியாகிட்டு டைனிங்டேபிளுக்கு டிபன் சாப்பிட்டு ஆபிஸ்கு கிளம்பி வந்துடுவேன். வழக்கத்தை விட இன்னைக்கு ஒருமணி நேரம் முன்னாடியே எந்திரிச்சு கிளம்பினேன். ஆனா எனக்கு முன்னாடியே நீ வந்துருக்கே…”

“ஆமாம் நா எப்பவும் இப்படி தான் எர்லியா வந்துடுவேன்…”

“ஓகே… நா என் கேபினுக்கு போறேன். நீ உன் ஒர்க் கண்டினியூ பண்ணு…” அவள் வேலைக்கு இடையுறுல்லாமல் நகர்ந்துவிட்டான்.

சம்ரித் தன் கேபினில் அமர்ந்து வேலையைப் பார்க்க ஆரம்பித்தவுடன் ஒர்க்கர்ஸ் எல்லாம் ஒவ்வொருத்தராக வந்துச் சேர்ந்தனர். பிறகு எல்லா வேலையும் முடித்து கைகளை மேலே உயர்த்த சோம்பல் முறித்து நிமிர்ந்து கடிகாரத்தைப் பார்த்தான். மாலை ஏழு மணி என காண்பித்தது. நேரமாகிட்டதை உணர்ந்து அவசரம் அவசரமாக ஆலையை விட்டு கிளம்பினான்.

சில மாதங்கள் கழித்து மருத்துவமனை வாசம் முடித்து ஆதிகேசவன் இல்லம் திரும்பினார். அவரைப் பார்க்க வீட்டிற்கு உறவினர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.

வீட்டுக்கு கேட்டிற்குள் நுழையும் போது ஒரு பெண்ணின் குரலைக் கேட்டு யார் இந்த பெண் சற்று வியப்படைந்தான். ஹாலில் இருந்த அந்த பெண் இவனைப் பார்த்தவுடன் ஓடி வந்து கட்டியணைத்துக் கொண்டாள். சம்ரித் புரியாமல் விழிப்பதைப் பார்த்து விமலா தான்,”என்ன பார்க்கிற… இவள் இஷாரா… உன் மாமா பொண்ணு…” அறிமுகப்படுத்தினாள்.

“ஹாய், வெல்கம் மை ஹோம்…” என கை குலுக்கினான்.

அவளோ ஒரு மினி ஸ்கர்டும், தொப்புள் தெரிய அளவுக்கு டாப்ஸ்ம் அணிந்து அல்ட்ரா மாடர்ன் கேர்ளாக இருந்தாள். ஆதிகேசவனைப் பார்க்க மருத்துமனைக்கே தன் பெற்றோருடன் வந்திருந்தாள். அப்பொழுது சம்ரித்தைப் பார்க்கவில்லை. அதனால் ஆதிகேசவனைப் பார்க்கும் சாக்கில் சம்ரித்தைப் பார்க்க வந்துவிட்டாள்.

“ஹாய், மாம்ஸ்… உங்கள தான் பார்க்கனும் போல இருந்தது… அதனால தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.” அதிகாரமாக சொன்னாள்.

யூஎஸ்ஸில் இதைப் போல் பார்த்தவனுக்கு அவள் அந்த தோரனை அவனுக்குப் பிடித்து மிகவும் இரசித்துப் பார்த்திருந்தான்.

முகத்திற்கு நேராக கையை அசைத்தவாறு,”ஹலோ மாம்ஸ்… என்ன அப்படி பார்த்துட்டு இருக்கறிங்க…”

“இல்ல… பேரும் உடையும் அல்ட்ரா மாடர்னில்ல… உன் பேச்சும் யூஸ் கேர்ளை போலவே இருந்தது. அத தான் அதிசயமாக பார்த்திருந்தான்.”

“ஹா…ஹா… நா பொறந்திலிருந்து என்னய அப்படியே வளர்த்திட்டாங்க… அதனால நடை உடை பாவனையெல்லாம் அப்படித் தான் இருக்கும்…” என சொல்லிவிட்டு அவன் தோளில் சாய்ந்துக் கொண்டாள்.

சம்ரித்தும் அவளை அணைத்துக் கொண்டு சோபாவிற்கு அழைத்துச் சென்றான்.அவளையும் அமர வைத்து தானும் அருகில் உட்கார்ந்துக் கொண்டான்.

“டீ, காபி எல்லாமாச்சு….” கேட்டான்.

“யூ நோ ஒன்திங்… நா ஒன்லி ஜீஸ் தான்…”

“ஓ சாரி…”

“உங்களுக்கு தெரியாம தான கேட்டிங்க…”

சற்று நேரம் ஏதோஏதோ பேசிக் கொண்டு இருந்தார்கள். “டைமாச்சு… நா கிளம்பறேன்…” என சொல்லிவிட்டு எழுந்தாள்.

“மாம்… இஷாரா கிளம்பறாளாம்…” என உரக்க குரல் கொடுத்தான்.

விமலா கிச்சனிலிருந்து வெளியே வந்து,”டென்மினிட்ஸ் வெயிட் பண்ணுமா… டிபன் சாப்பிட்டு போகலாமே…” கூறி விட்டு கிச்சனில் புகுந்துக் கொண்டார்.

பிறகு விமலா பரிமாற சம்ரித்தோடு சேர்ந்து அமர்ந்து உணவருந்திவிட்டு தான் சென்றாள்.

அடுத்தநாள் இஷாராவின் தந்தை யோகேஷ் போன் செய்து,”ஹலோ… விமலா நா யோகி பேசறேன். நல்லா இருக்கியா…” கேட்டார்.

“ம்ம்ம்… நல்லா இருக்கேன்…”

“உங்க மாமனார் உடம்பு பரவாயில்லயா…”

“அவரும் நல்லா இருக்கிறார்…”

“ஏன் ண்ணா இத கேட்க தான் போன் பண்ணிங்களா… நேர்லயே வந்து பார்த்துட்டு போயிருக்கலாமே…”

“நேற்று இஷாரா வந்து பார்த்துட்டு சொன்னா… அதான் போன் பண்ணி விசாரிச்சேன். வேற ஒன்னுமில்லயே… நா வச்சுவிடும்மா…” என கூறி போனை வைத்துவிட்டார்.

தினமும் போன் செய்து சம்ரித்தும் இஷாராவும் பேசிக் கொண்டார்கள். என்ன பேசிக் கொண்டார்களோ… தெரியவில்லை… மொத்தத்தில் இருவரும் கடலைப் போட்டார்கள்.

ஒருவாரம் கழித்து இஷாரா சம்ரித்தைப் பார்க்க ஆலையில் இருக்கும் அவனுடைய ஆபிஸ்கு வந்தாள். அப்பொழுது அம்ரீத்தோடு டீப் டீஸ்கஷனில் இருந்தான். அனுமதி கேளாமலேயே இஷாரா உரிமையோடு உள்ளே நுழைந்து,”ஹாய் மாம்ஸ்…” என கைவிரலை ஆட்டினாள்.

இஷாராவின் குரல் கேட்டு திரும்பிய அம்ரீதா. இவள் உடை அணிந்திருக்கும் இலட்சணத்தைக் கண்டு அறுவருப்படைந்தாள். உள்ளாடை தெரியும் அளவுக்கு மெல்லிசான உடை அணிந்தாள். கதவை தட்டிட்டு வராமல் உள்ளே வந்த இஷாராவைக் கண்டு அம்ரீதாவை விட சம்ரித் கோபம் கொண்டான்.

“உனக்கு மேனர்ஸ் இல்லயா… கதவ தட்டிட்டு உள்ளே வரணும்னு அறிவில்லயா…”

“என்ன மாம்ஸ்… நா அனுமதி கேட்டு தான் வரணுமா… திஸ் டூம்மச் மாம்ஸ்…”

“எவ்வளவு குளோஸ் ரிலேடிவ்வாக ப்ரண்ட்ஸாக இருந்தாலும் அனுமதி கேட்டு தான் வரணும். அது கூட தெரியாம எந்த காலேஜ்ல படிச்ச…”

“எந்த காலேஜ்ல படிச்சேனு கூட தெரியாம தான் இவ்வளவு நாள் பழகியிருக்குமா…” சிரிச்சுக்கிட்டக் கேட்டாள்.

“நோ… ஜோக்ஸ் அப்பார்ட்மெண்ட்… பீ சீரியஸ்…” என கோபம் கொண்டான்.

அவன் கோபத்தைக் கண்டு அம்ரீதா கூட பயந்தாள். ஆனால் இஷாரா கண்டுப் பயப்படாமல்,”ஓ மாம்ஸ்… சில்லி விஷயத்துக்கு கோப்ப்டறிங்க…”

அவர்கள் இருவருக்கும் நந்திப் போல குறுக்கே நிற்கிறோம் என நினைத்து,”ஓகே… நீங்க கண்டினியூ பண்ணுங்க… அப்புறம் நம்ம அகௌண்ட்ஸ கண்டினியூ பண்ணிக்கலாம்…”என சொல்லிவிட்டு , சம்ரித் கூப்பிட கூப்பிட நிற்காமல் கிளம்பிவிடாடாள்.

“ஷ்ஷ்… நமக்கு நந்தி போல நிற்காமல் எப்படியோ கிளம்பிவிட்டாள்…” இருகையும் தட்டி முகத்தை ஆசுசையாக வைத்துக் கொண்டு சம்ரித் இருக்கைக்கு நேர் எதிர் இருக்கையில் அமர்ந்துக் கொண்டாள்.

“அடச்சீ… முதல்ல எழுந்திரு…” என கர்ஜித்தான்.

“எதுக்கு இவ்வளவு கோபப்படறிங்க… அவ நமக்கு டிஸ்பர்ன்ஸ் இல்லாம கிளம்பிட்டா…” இளக்காரமாக சிரித்தாள்.

நாம இத்தனை கோபமபடறோமே… அதுக்கு இவகிட்ட ஒரு ரியாக்‌ஷனும் இல்லயே… இவளால நம்ம ஒர்க் கெடுதே… என நினைத்து, “எங்க ஒர்க்கு டிஸ்பர்னஸ் செய்யாம கிளம்பறியா…” எனவும் முகத்தை வெடுக்கென திரும்பிக் கதவை படீர் அறைந்து சாற்றிவிட்டுப் போனாள்.

அடுத்தது அம்ரீதாவுக்கு போன் செய்து,”என் கேபினுக்கு கொஞ்சம் வா…”

“இஷாரா இல்லயா….” எனக் கேட்டாள்.

“இல்ல… அவ நேர்ல பேசிக்கலாம்… ஹரிஹப்…”

சட்டென்று அவள் மனம் நிம்மதியானது. ஏன்னென்று தெரியாமல் விழி்த்தாள். அவன் அவசரப்படுத்தியது அவளை யோசிக்கவிட இல்லை. வேகமாக சம்ரித் அறைக்குச் சென்றான்.

“அந்த அகௌண்ட்ஸெல்லாம் செக் பண்ணிவிட்டயா…” கேட்டான்.

சுற்றிலும் கண்களால் தூழவிய அம்ரீதா அப்போது தான் சம்ரித் பேச்சைக் கவனித்தாள்.

“ஆ… என்ன சொன்னிங்க…” புரியாமல் மறுபடியும் வினவினாள்.

மறுபடியும்,”நல்லா கேட்டுக்கோ… அக்கௌண்ட்ஸெல்லாம் செக் பண்ணினயா…”

“இஷாரா இருந்தாளா… எங்க காணோம்…”

“எதுக்கு இப்ப அவள பத்தி பேச்சு… லெட் வீ வில் டூயிங் ஃஅவர் ஒர்க்…” அதோடு பேச்சை முடித்துவிட்டான்.

இருவரும் அகௌண்ட்ஸைப் பார்த்து முடிக்கவே மதியம் மூன்று மணியாகிவிட்டது. நிமிர்ந்து அமர்ந்து தன் வாட்சைத் திருப்பிப் பார்த்து,”லஞ்ச் டைம் தாண்டிவிட்டது. இருவரும் அது கூட தெரியாமல் ஒர்க்ல மூழ்கிவிட்டோம். சரி லஞ்ச் ஆர்டர் பண்ணறேன். இருவரும் சேர்ந்தே சாப்பிடலாம்…”

“இல்ல சார்… எனக்கு வீட்லயிருந்தே கொண்டு வந்துருக்கேன்…”

“பரவாயில்ல… இன்று ஒருநாள் என் கூட உட்கார்ந்து சாப்பிடு…”

“இருக்கட்டும் சார்… நீங்க சாப்பிடுங்க… நானும் போய் சாப்பிடுறேன்…” என சொல்லி விட்டு கிளம்பயத்தனித்தாள்.

“நில்லு… நா இவ்வளவு டைம் சொல்லிகிட்டே இருக்கேன்… நீ போயிகிட்டே இருக்கே…” என எரிச்சலப்பட்டான்.

“அது வந்து சார்…” என்று சொல்ல முறப்பட்டாள்.

“என்ன வந்துபோயினு… நா சொல்லறத கேட்கறதா இல்ல… அப்படி தானா…”

“அப்படியெல்லாம் இல்ல சார்…”என இழுத்தாள்.

“அப்படி எல்லாம் இல்ல தானா… எனிவே ஓ பே மை ஆர்டர்…” என அதிகாரமாகச் சொன்னான்.

வேறுவழியில்லாமல் அவன் எதிரில் அம்ரீதா அமர்ந்தாள். அவளை முறைத்துக் கொண்டே தன் செல்பேசியில் பிரபல உணவகத்திற்கு ஆர்டர் கொடுத்தான்.

“அப்பாடா… என்ன ஒரு பார்வை…” சலித்துக் கொண்டாள்.

மெதுவான குரலில் தான் சொன்னாள். அதுவும் அவன் காதுகளில் மிக தெளிவாக விழுந்தது.
கேட்டவுடன் பக்கென சிரித்துவிட்டான்.

“முறைத்துவிட்டு… இப்ப சிரிக்கறத பாரு…” செல்லமாக கழுத்தை நொடித்துக் கொண்டாள்.

சம்ரித்தும் சிரித்துக் கொண்டே,”பார்த்து பார்த்து… மெதுவா மெதுவா கழுத்து சுளுக்கிக்க போகுது…”

“சுளுக்கிட்டா வந்து நீங்களா பெயின் பாம் தடவிடப் போறிங்க…”

“நா தடவிடறனு சொன்னாக… நீ ஒத்து கொள்ளப் போறியா…”

“ஒருபோதும் ஒத்து கொள்ள போவதில்ல..” என மிடுக்காக பதில் அளித்தாள்.

அவனும் சிரித்துக் கொண்டே,”அப்புறம் எதுக்கு இந்த பில்டப்…”

ஸ்வீட் ந்த்திங்ஸ் என ஏதோயெதோ பேசிக் கொண்டே இருந்தார்கள்.

பேசிக் கொண்டேயிருக்கும் போதே லஞ்ச் வந்துவிட்டது. இருவருக்குமே அம்ரீதாவே பிரித்து வைத்தாள்.

பின்பு இருவரும் சிரித்துப் பேசிக் கொண்டே சாப்பிட்டார்கள்.

மாலையில் சம்ரித் வீட்டிற்கு வந்தான். விமலாவோ,”இஷாரா காலையில் பேக்டரிக்கு வந்த போது என்னடா அவகிட்ட சண்ட போட்ட… அவ இங்க வந்து புலம்பிட்டு போறா… அவளை நேர்ல போய் சமாதானம் பண்ணிட்டு வா…”

“ம்மா… அவ என்ன பண்ணினா தெரியாம பேசாதிங்க…”

“அவ என்ன பண்ணியிருந்தாலும் அவ உன் மாமா பொண்ணுடா… கொஞ்சம் அட்ஜஸ் பண்ணிக்குடா…”

“ம்மா… “ எனக் கத்தினான்.

தீடிரென அவன் கத்திய கத்தலில் விமலா பயந்துவிட்டார். பயத்தில் நெஞ்சைப் பிடித்துக் கொண்டே,”ஏன்டா… இப்படி கத்தற…” என்றார்

“எனக்கு பேக்டரிக்கு வந்ததே பிடிக்கலனு சொல்லறேன்… அவளால என் வேலயயே கெட்டுதே… அது எனக்கு பிடிக்கல… அதனால நா கத்தினேன். அவகிட்ட சொல்லி வைக்கங்க என் வேலைல யார் குறுக்கிட்டாலும் பிடிக்காது.” என மீண்டும் கத்திவிட்டுப் போய்விட்டான்.

அவன் சத்தம் போட்டதில் விமலா பேய் அறைந்தது போல் ஆகிவிட்டார்.

அம்ரீதா அவனோடு லஞ்ச் சாப்பிட்ட சந்தோஷத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டு வீடு வந்துச் சேர்ந்தாள். அவள் துள்ளலைப் பார்த்து யசோதா கூட,”என்ன அம்ரீ இன்னக்கு உன் நடையில் ஒரே ஆட்டம் பாட்டமும் இருக்குது… என்ன விஷயம்…” கேட்டார்.

“அதுவா சித்தி… என் சந்தோஷத்துக்கு காரணம் நான் எங்க பாஸ் கூட ஒன்னா லஞ்ச் சாப்பிட்டேன்.”

“அதுக்கா இவ்வளவு சந்தோஷப்பட்டியா….”

“ஆமாம்… பின்ன இல்லயா…”

“நா கூட என்னனென்வோ நனைச்சேன்…” அம்ரீதா சிற்றன்னை கூற,

அதற்கு அம்ரீயோ,”நீங்க என்ன நனைச்சிங்க…” எனக் கேட்டாள்.

“நா நனைச்சது சொன்னால் நீ கோபப்படுவே…”

“நீங்க சொல்லுங்க… நா கோபப்படமாட்டேன்.”

“ப்ளீஸ்… ப்ளீஸ்… நீங்க எதாயிருந்தாலும் சொல்லுங்க…” என்று கெஞ்சினாள்.

அவள் எவ்வளவு கெஞ்சியும் யசோதா நினைத்தைச் சொல்லவேயில்லை.

 

சிற்றன்னை எண்ணிய எண்ணம் என்ன…

அந்த எண்ணம் மகவுக்கு தெரிந்தால் என்ன நடந்திருக்குமோ…

தெரிந்திருந்தால் என்ன செய்திருப்பாள்…?

 

 

3 thoughts on “தீக்கு தென்றலோடு மோகம்”

  1. Jackpot Bet DK, [url=http://koma-trade.cz/2026/05/08/jackpot-bet-2026-registrering-sdan-kommer-du-igang/]http://koma-trade.cz/2026/05/08/jackpot-bet-2026-registrering-sdan-kommer-du-igang/[/url] tilbyder exceptionelle muligheder for gamblere i Danmark. Med et væld af spil og fristende bonusser, kan du nyde din spilleoplevelse i dag. Jackpot Bet DK er et valg for spillere, der elsker fornøjelse.

  2. I loved as much as you will receive carried out right
    here. The sketch is attractive, your authored subject matter stylish.

    nonetheless, you command get bought an edginess
    over that you wish be delivering the following.
    unwell unquestionably come further formerly again as exactly
    the same nearly very often inside case you shield this hike.

  3. Great work! This is the kind of information that should be shared around the internet.
    Disgrace on the search engines for now not positioning this publish higher!
    Come on over and consult with my site . Thank you =)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top