ATM Tamil Romantic Novels

கள்ளோ காவியமோ 13

காவியம்  – 13
இரவின் நிசப்தத்தில் தேவா கோட்டையை நோக்கி அவனது கார் அதிவேகமாக விரைந்து கொண்டிருந்தது. ஸ்டீயரிங்கைப் பிடித்திருந்த தேவாவின் பார்வை, சாலையில் இருப்பதை விட பக்கத்து சீட்டில் இருந்த இளவேனிலின் மீதே அதிகம் நிலைத்திருந்தது. காரின் மங்கலான டேஷ்போர்டு வெளிச்சத்தில், அவளது முகத்தில் அலைபாய்ந்த காதலையும் அமைதியையும் அவன் ஆழமாக ரசித்துக் கொண்டே வந்தான்.
 
தான் கடத்தி வந்து சிறை வைத்திருக்கும் ஒரு பெண், தனக்கு அடங்க மறுக்கும் ஒரு திமிர் பிடித்த மீடியா ரிப்போர்ட்டர், தனக்குள் இவ்வளவு காதலானவளா! என்பது அவனுக்குள் ஒரு புதிய போதையைத் தந்தது.
 
அவன் தன்னைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்த இளவேனிலுக்குள், அதுவரை மறைந்திருந்த வெட்கம் சட்டெனத் தலைதூக்கியது. முகம் முழுக்கச் சிவப்பு படர, தன் கைகளை பிசைந்து கொண்டவள், ஒரு கட்டத்திற்கு மேல் அவனது காந்தப் பார்வையைத் தாங்க முடியாமல் செல்லமாகச் சினுங்கினாள். “போதும்… பார்த்தது! வண்டியைப் பார்த்து ஓட்டுங்க ஜங்கிள் கிங்!” என்றாள் காற்றுக்கும் மெல்லிய குரலில்…
தேவாவின் இதழ்களில் ஒரு குறும்புப் புன்னகை அரும்பியது. “எனக்கு என்னவோ உன்னை இப்படியே பார்த்துட்டே இருக்கணும்னு தான் தோணுது… பார்பி டால்!” என்று அவளிடம் வம்புக்கு இழுத்தவன், “உனக்கு இப்போ காப்பகத்துல பசங்களைப் பார்த்ததும் சந்தோஷமா இருக்கா?” என்று கனிவான குரலில் கேட்டான்.
 
“ம்ம்… ரொம்ப.. ரொம்ப.. சந்தோஷமா இருக்கு ஜங்கிள் கிங்!” என்றவளின் கண்கள், குழந்தைகளின் நினைவில் கசிந்த பேரன்போடு மின்னின.
 
“ஏய்…! ஜங்கிள் கிங்கா? அதெல்லாம் வேண்டாம்… நீ மச்சான் இல்ல அத்தான்னு கூப்பிடு, அதுதான் கேக்கவே செம்ம கிக்கா இருக்கு!” என்று அக்மார்க் குறும்போடு சொன்னவன், காரின் கியரை மாற்றுவதற்காகத் தன் இடது கையை நீட்டினான்.
 
 ஆனால், அவனது கைகள் கியர் ராடில் பாய்வதற்கு முன்னால், அங்கே கியருக்குப் பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த இளவேனிலின் மென்மையான கைகளை சட்டெனப் பற்றி சிறைபிடித்தது. அவனது திடீர் தீண்டலில் இளவேனில் சிலிர்த்துப் போக, தேவா அவளது கையை விடாமல் லேசாக அழுத்தி, அவளைத் தொடர்ந்து சீண்டிக் கொண்டே காரைச் செலுத்தியது அவளுக்குள் புதிய காதல் வெப்பத்தைக் கூட்டியது.
 
அந்த வெறிச்சோடிய சாலையில் கார் விரைந்து கொண்டிருக்க, தேவாவின் கண்கள் தற்செயலாக காரின் ரியர் வியூ மிரரைக் கவனித்தன. அங்கே, தங்களின் காரை அதிவேகமாகப் பின்தொடர்ந்து, நான்கு பக்கங்களிலிருந்தும் கருப்பு நிற கார்கள் இடிமுழக்கத்தோடு சூழ்ந்து கொண்டு சீறி வருவது தெரிந்தது! அது வெறும் தேவாவைத் தாக்குவதற்காக மட்டுமல்ல… அவனோடு இருக்கும் இளவேனிலையும் சேர்த்து அடியோடு அழிப்பதற்காகவே தீட்டப்பட்ட சதித் திட்டம் என்பது அந்த வண்டிகளின் ஆக்ரோஷத்திலேயே புரிந்தது.
 
‘என்னால்… தன் கண்ணெதிரே, தன் காதலிக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது! ஏற்கனவே ஒருமுறை இப்படி ஒரு ஆபத்து வந்து அவளைத் தன்னிடம் இருந்து பிரிக்கப் பார்த்தது… அந்தப் பழைய ரணத்தை இந்த முறை நான் அண்டவிட மாட்டேன்!’ என்று தனக்குள்ளே சபதமேற்ற தேவா, கியரை அதிரடியாக மாற்றி காரின் வேகத்தைக் கூட்டினான்.
 
இளவேனில் எதற்கும் அஞ்சாத தைரியசாலிதான் என்றாலும், நான்கு பக்கமிருந்தும் மரணத் தூதுவனைப் போலக் கார்கள் வளைத்த அந்த பயங்கரமான நொடியில், அவளது இதயம் நிலைகுலைந்தது. “மச்சான்…!” என்று அலறியவள், பயத்தின் உச்சத்தில் தன் நெஞ்சை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு சீட்டிலேயே சுருண்டு சாய்ந்தாள்.
 
“இளா… என்னடி ஆச்சு உனக்கு?!” என்று தேவா பதறியபடி அவளைத் திரும்பிப் பார்ப்பதற்குள், எதிரிகளின் கார்கள் இவர்களின் வண்டியை அமுக்கித் தள்ளும் தூரத்திற்கு நெருங்கி வந்தன. மறுவிநாடி தேவாவின் முகத்தில் ரௌத்திரம் குடியேறியது. தன் காதலியை இந்த நிலைமையில் பார்க்க அவனது ஆண்மை கொதித்தெழுந்தது. கியரை அதிரடியாக மாற்றி, காரின் ஆக்ஸிலரேட்டரை தரைவரை மிதித்து, இன்ஜின் அலறும் அளவுக்கு வேகத்தை முடுக்கினான்! முன்னால் வழிமறித்து வந்த காரை ஒரு மயிரிழையில் அசாத்தியமாகத் தாண்டி, காற்றை கிழித்துக் கொண்டு தேவாவின் கார் மின்னல் வேகத்தில் பறந்தது.
 
ஆனால், தேவா நேராகத் தன் கோட்டையை நோக்கிச் செல்லவில்லை. இந்தச் சூழ்நிலையில் கோட்டைக்குத் திரும்பினால் எதிரிகள் தங்களை எளிதாக வளைத்துவிடுவார்கள், அதைவிட முக்கியமாக தன் பக்கத்தில் மயங்கிக் கிடக்கும் தன் உயிர் வேனிலுக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக் கூடாது என்பதில் அவன் தெளிவாக இருந்தான். தன் கூர்மையான மூளையை உபயோகித்தவன், சட்டென ஸ்டீயரிங்கை இடதுபுறமாக அதிரடியாகத் திருப்பினான். கார் பிரதான சாலையை விட்டு விலகி, யாரும் நடமாட்டமே இல்லாத ஒரு அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் சீறிக்கொண்டு நுழைந்தது.
அடர்ந்த அந்த இருட்டு காட்டுக்குள் காரைச் செலுத்திய தேவா, ஒரு பிரம்மாண்டமான மரத்தின் விழுதுகளுக்கு நடுவே, வெளியிலிருந்து பார்த்தால் சற்றும் தெரியாதவாறு காரை சாதூர்யமாக மறைத்து நிறுத்தினான். அடுத்த நொடியே காரின் முகப்பு விளக்குகள் அனைத்தையும் அணைத்துவிட்டு, இன்ஜினையும் ஆஃப் செய்தான். காடே ஒட்டுமொத்தமாய் இருளில் மூழ்கியது.
 
இன்ஜின் ஆஃப் ஆன அடுத்த விநாடி, தேவா தன் சீட் பெல்ட்டை கழற்றிவிட்டு பதற்றத்துடன் பக்கத்து சீட்டிற்குப் பாய்ந்தான். இளவேனிலின் முகம் வெளுத்துப் போயிருந்தது. மூச்சுக்காற்று மிக மெலிதாக, எப்போது நிற்கும் என்றே தெரியாத அளவுக்கு பலவீனமாக இருந்தது. தன் உயிருக்குயிரான வேனிலின் இந்த நிலையைப் பார்த்ததும் தேவாவின் நெஞ்சு துடிக்க மறந்தது.
 
“வேனில்… ஏய்! வேனிம்மா… கண்ணைத் திறடி. அத்தான் இருக்கேன்ல… ப்ளீஸ் கண்ணைத் திறடி…” அவனது குரல் நடுக்கத்தில் உடைந்தது.
 
அவளுக்கு இப்போதே முதலுதவி செய்யாவிட்டால் இதயம் நின்றுவிடும் என்று அவனது மூளை எச்சரித்தது. உடனே அவளது சீட்டை பின்னோக்கிச் சரித்து சாய்மனாமாக இறக்கினான். அவளது சுடிதார் துப்பட்டாவைத் தளர்த்தி, கழுத்துப் பகுதியை ஃப்ரீயாக்கி, அவளது நெஞ்சின் நடுப்பகுதியில் தன் இரண்டு கைகளையும் ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து, மெதுவாகத் தன் எடையைக் கொடுத்து அழுத்தத் தொடங்கினான்.
 
“ஒன்று… இரண்டு..மூன்று…” அவளது நெஞ்சை மென்மையாக, அதே சமயம் அழுத்தமாக பம்ப் செய்தான். ஆனால் அவளிடம் எந்த அசைவும் இல்லை அவளது இதயம் இன்னும் சீராகவில்லை.
 
தேவாவுக்குள் பயம் தலைக்கேறியது. “வேனில், அத்தானை ஏமாத்திடாதடி…” என்று கத்தியவன், சற்றும் தாமதிக்காமல் அவளது தாடையை மெதுவாக உயர்த்தி, ஒரு ஆழமான மூச்சைத் தன் நுரையீரலுக்குள் இழுத்துக் கொண்டவன், நேராக அவளது இதழ்களோடு தன் இதழ்களைப் பதித்தான். தன் வாயோடு வாய் வைத்து, தனக்குள் இருந்த மொத்தக் காற்றையும் அவளது பலவீனமான உடம்பிற்குள் செலுத்தினான். அவளது மார்புக்கூடு லேசாக உயர்ந்து தாழ்ந்தது.
 
மீண்டும் ஒருமுறை… அவளது வெளுத்த இதழ்களில் தன் இதழ்களை அழுத்தி, தன் உயிரையே அவளுக்குள் தருவது போல விசை கூட்டி மூச்சுக் காற்றை செலுத்தினான். “கண்ணைத் திறடி வேனி…” அவனது கண்ணீர் அவளது கன்னத்தில் விழுந்து தெறித்தது.
 
அவனது அந்த அடங்காத காதலின் தவிப்பிற்கும், போராட்டத்திற்கும் பலன் கிடைத்தது! இளவேனில் ‘ஹக்…’ என்று ஒரு நீண்ட பெருமூச்சோடு, உடம்பு சிலிர்த்து அதிர்ந்து கண் விழித்தாள். அவளது இதயம் மீண்டும் சீராகத் துடிக்கத் தொடங்கியது. மங்கலான இருட்டில் தன் அத்தானின் முகம் தனக்கு மிக அருகில் இருப்பதையும், அவனது இதழ்கள் தன் இதழ்களோடு பிணைந்திருந்ததையும் உணர்ந்த வேனிலுக்குள், அந்த பலவீனத்திலும் ஒரு புதிய காதல் வெப்பம் பரவியது.
 
“ஆர் யூ ஆல்ரைட்? உன்னால மூச்சு விட முடியுதா?… சொல்லு?” என்றான் பரிதவிப்பாக.
 
“ம்ம்… ஐ ஆம் ஓகே,” என்றாள் மெதுவாக.
 
அப்போது, தூரத்திலிருந்து எதிரிகளின் கார்கள் காட்டை நோக்கி வரும் சத்தமும், அவற்றின் வெளிச்சக் கீற்றுகளும் மரங்களின் இடுக்கில் தெரியத் தொடங்கின. சற்றும் தாமதிக்காத தேவா, மயக்கத்திலிருந்து சட்டென மீண்டுவிட்ட இளவேனிலைப் பார்த்தான். அவளோ ஒரு மீடியா ரிப்போர்ட்டர்! எத்தனையோ சவாலான களங்களையும், ஆபத்துகளையும் தன் கேமராவுக்கு முன்னால் தைரியமாக எதிர்கொண்டவள் என்பதால், இந்தச் சூழ்நிலையைக் கண்டு அவளுக்குள் பயம் வரவில்லை; மாறாக, ஒரு ரிப்போர்ட்டருக்கே உரிய சாதுர்யமும், சுதாரிப்பும் அவளது கண்களில் மின்னியது.
 
“வேனில்… காரை விட இங்க இருக்கிறது ஆபத்து. வா, மரத்து மேல ஏறிடலாம்…” என்று தேவா ரகசியக் குரலில் உரைக்க, அவளும் சற்றும் தயங்காமல் அவனோடு கைகோர்த்து அந்தப் பெரிய மரத்தின் மீது ஏறினாள். அடர்ந்த இலைகளுக்கு நடுவே, தேவாவின் பக்கத்தில் கச்சிதமாகத் தன்னை மறைத்துக் கொண்டு அமர்ந்தாள். எதிரிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க வேண்டும் என்பதற்காகத் தேவாவின் நெஞ்சோடு ஒட்டிப் பதுங்கியவள், தன் பார்வையை மட்டும் கீழிருக்கும் பாதையின் மீது கூர்மையாகப் பதித்திருந்தாள்.
 
வண்டிகளிலிருந்து கையில் ஆயுதங்களோடு இறங்கிய அந்த ஆட்கள், டார்ச் லைட் வெளிச்சத்தைக் காட்டின் நாலாபுறமும் அடித்து தேடத் தொடங்கினர். “எங்கடா போனாங்க? கார் இங்கதான் எங்கேயோ வந்திருக்கனும்…” என்று அவர்கள் சத்தமிட்டபடி மரத்தின் கீழேயே அலைந்து திரிந்தனர். மரத்தின் மேலே, தேவாவின் மூச்சுக்காற்று இளவேனிலின் கழுத்தில் பட்டுத் தெறிக்க, தன் தொழில்துறை அனுபவத்தால் மூச்சை எப்படிக் கட்டுப்படுத்த வேண்டும் என்று தெரிந்தவளாய், அவளும் சிலையாக உறைந்து நின்றாள். காடு முழுக்கத் தேடியும், இருளின் அடர்த்தியிலும் தேவாவின் சாதுர்யமான மறைவிடத்தாலும் அவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் அந்த எதிரிகள் களைத்துப் போயினர்.
 
“இங்க யாரும் இல்லடா… வாங்க வேற பக்கமா போய் பார்ப்போம்!” என்று சலித்துக் கொண்டவர்கள், தங்கள் கார்களில் ஏறி அங்கிருந்து கிளம்பி வெளியேறிச் சென்றனர்.
 
எதிரிகளின் கார்கள் சென்ற சத்தம் அடங்கியதும், காடே மறுபடியும் நிசப்தத்திற்குள் திரும்பியது. தேவா தன் முதுகுப் பக்கமாக இளவேனிலைத் தாங்கியபடியே, மரத்தின் கிளையிலிருந்து அவளை மெதுவாகக் கீழே இறக்கித் தரையில் நிறுத்தினான். “அப்பாடா, போயிட்டானுங்க…” என்று இருவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்ட அந்த விநாடி, அவர்களுக்கு மிக அருகில் ஒரு மரத்தின் கிளைகள் ‘மடமடவென’ முறிந்து விழும் சத்தம் கேட்டது.
 
திடுக்கிட்டு இருவரும் திரும்பிப் பார்த்தபோது, இருளுக்குள் ஒரு பெரும் மலையைப் போல அங்கே ஒரு ராட்சதக் காட்டு யானை வந்து நின்றுகொண்டிருந்தது! அதன் தும்பிக்கை காற்றில் இவர்களின் வாசனையை மோப்பம் பிடித்தபடி மெல்ல உயர்ந்தது. அந்த பயங்கரமான சூழலில் இருவருக்குமே கணநேரம் என்ன செய்வதென்று புரியவில்லை. “வேனில்… அசையாத! ஓடினா துரத்தும்…” என்று தேவா மிக மெல்லிய குரலில் எச்சரித்தான். எத்தனையோ செய்திகளைச் சேகரித்த மீடியா ரிப்போர்ட்டரான இளவேனிலுக்கும், காட்டில் ஓடினால் யானை இன்னும் வெறி கொண்டு துரத்தும் என்ற ஆபத்து நன்றாகவே தெரிந்திருந்தது.
 
யானை இவர்களை நோக்கி ஒரு அடி முன்னெடுத்து வைக்க, மரணப் பயம் இருவரையும் சூழ்ந்தது. அந்த நொடியில் தேவாவின் கூர்மையான கண்கள், தங்களுக்குச் சற்றுத் தள்ளி மரங்களின் மறைவில் இருந்த ஒரு பெரிய பள்ளத்தைக் கவனித்தன. “வேனில்… அங்க பாரு…!” என்று சைகை காட்டியவன், அடுத்த விநாடி அவளது கையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு, சத்தமில்லாமல் அந்தப் பெரிய பள்ளத்திற்குள் அவளோடு சேர்ந்து கபளீரென இறங்கிப் பதுங்கினான்.
அந்தப் பெரிய பள்ளத்தின் ஆழத்தில், ஈரமண்ணின் வாசனையோடு தேவாவின் நெஞ்சோடு கச்சிதமாக ஒட்டிக் கொண்டு பதுங்கியிருந்தாள் இளவேனில். மேலே, அந்த ராட்சதக் காட்டு யானையின் கனத்த காலடிச் சத்தமும், அது மூச்சை பலமாக உறிஞ்சித் தள்ளும் ‘உஷ்… உஷ்…’ என்ற சத்தமும் இடி முழக்கம் போலக் கேட்டுக் கொண்டிருந்தது.
யானையின் தும்பிக்கை இவர்களின் தலைக்கு சற்று மேலே காற்றில் அலைபாய்ந்து மோப்பம் பிடித்தது. தேவாவின் இடது கை இளவேனிலின் இடுப்பை வளைத்துத் தன் பக்கமாக இறுக்கியிருக்க, அவனது வலது கை அவளது வாயை மென்மையாகப் பொத்தியிருந்தது. அவளது இதயம் தேவாவின் மார்பில் மோதித் துடிப்பதை அவனால் உணர முடிந்தது. கடத்தப்பட்டு வந்த கைதிதான் அவள் என்றாலும், தேவாவின் இந்த அதிரடித் துணிச்சலும், அவளைக் காக்க அவன் காட்டும் வெறியும் அவளுக்குள் ஏதோ ஒரு புதுப் போதையைத் தந்து கொண்டிருந்தது.
 
சில நிமிடங்கள்… யுகங்களாகக் கழிந்தன.
 
இவர்களின் வாசனை முழுமையாகக் கிடைக்காததாலோ என்னவோ, அந்த யானை மெதுவாகத் தன் பிளிறல் சத்தத்துடன் மரக் கிளைகளை மிதித்து சிதைத்துக் கொண்டே மறுபக்கம் நகர்ந்து சென்றது. அதன் சத்தம் தூரத்துப் போவதை உணர்ந்த பிறகுதான், தேவா இளவேனிலின் வாயிலிருந்து தன் கையை எடுத்தான். இருவருக்குமே மூச்சு வாங்கியது.
 
“மச்சான்… போயிடுச்சா?” இளவேனில் மிக மெல்லிய குரலில், தேவாவின் காதருகே தன் மூச்சுக்காற்று படக் கேட்டாள்.
“ம்ம்… போயிடுச்சு. ஆனா, நாம இன்னும் சேஃப் இல்லை வேனில். அந்த ஆளுங்க காட்டை விட்டு முழுசா போயிருக்க மாட்டானுங்க. மெயின் ரோட்ல கண்டிப்பா வாட்ச் பண்ணிட்டு இருப்பானுங்க,” தேவா இருளுக்குள் கண்களை கூர்மையாக்கிக் கொண்டே சொன்னான்.
 
“எனக்கு ஒரு சந்தேகம் மச்சான்!” இளவேனில் ரிப்போர்ட்டராக சுதாரித்தாள். “அந்தக் கார்ல வந்தவங்க கையில் இருந்த ஆயுதங்கள், அவங்க கத்தின விதம்… இதெல்லாம் ஏதோ சாதாரண லோக்கல் ரவுடிங்க மாதிரி தெரியல. ரொம்ப ப்ளான் பண்ணி வந்திருக்காங்க. உங்களோட ‘தேவா கோட்டை’ ரூட் அவங்களுக்கு எப்படித் தெரிஞ்சது?”
 
தேவாவின் முகம் இருளுக்குள் இறுகியது. அவளது கேள்வி அவனது மூளையைக் குடைந்தது. “கோட்டைக்கு வர்ற வழி என் ஆளுங்களைத் தவிர வேற யாருக்கும் தெரியாது. அப்போ… என் கோட்டைக்குள்ளேயே ஏதோ ஒரு எட்டப்பன் இருக்கான்.!”
“அப்போ இப்போ கோட்டைக்குத் திரும்புறது ஆபத்து. நாம வேற எங்கயாவது மறைவான இடத்துக்குப் போகணும்,” என்றாள் இளவேனில்.
 
தேவா அவளை ஆழமாகப் பார்த்தான். அந்தப் பள்ளத்தின் பக்கவாட்டில் இருளுக்குள் நீண்ட ஒரு குகைப்பாதை தெரிந்தது. “இன்னிக்கு நைட் இந்த இடத்துல இருக்குற குகைக்குள்ளதான் தங்க முடியும்,” என்றவன், அவளது கையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டான்.
 
“நாம இப்போ என் கோட்டைக்குத்தான் போகப் போறோம். ஆனா, காரை இங்கேயே விட்டுட்டு, இந்தக் காட்டு வழியா நடந்து, கோட்டையோட பின்வாசல் வழியா உள்ள புகுந்து… அந்தத் துரோகி யாருன்னு நான் இன்னைக்கு நைட்டே பார்க்கணும்.!” தேவாவின் குரலில் ரௌத்திரம் அனலாய்த் தெறித்தது.
 
“சரி, நடங்க ஜங்கிள் கிங்… உங்க காட்டுக்குள்ள நாமும் ஒரு ரவுண்டு வருவோம்!” என்று அவனது கையை தைரியமாகப் பற்றிக் கொண்டு நடந்தாள்  இளவேனில்.
 

27 thoughts on “கள்ளோ காவியமோ 13”

  1. najlepsie slovenske online casino, [url=https://mrtdodsbo.com/slovenske-online-kasina-2026-buducnos-zabavy-a-2/]https://mrtdodsbo.com/slovenske-online-kasina-2026-buducnos-zabavy-a-2/[/url] – Top slovenskГ© online casino ponГєkajГє rozptГЅlenie a capability vyhraЕҐ hotovosЕҐ. Gambleri si mГґЕѕu zvoliЕҐ z rozliДЌnГЅch hier, ktorГ© prinГЎЕЎajГє vzruЕЎenie a napГ¤tie.

  2. I siti non aams italiani, [url=http://www.sobald.de/casino-senza-invio-documenti-gioca-in-tutta/]http://www.sobald.de/casino-senza-invio-documenti-gioca-in-tutta/[/url] offrono un’alternativa interessante per i giocatori. Tali portali forniscono intrattenimenti esclusivi, senza le restrizioni legate alla licenza AAMS. In aggiunta che spesso presentano bonus allettanti e vantaggi. Scegliere simili siti permette ai giocatori di godere nuove esperienze di gioco.

  3. Так не пойдет.
    зеркало 1xbet, [url=https://1xbet-me825.sbs/]https://1xbet-me825.sbs/[/url] позволяет игрокам получать доступ к любимым играм без ограничений. Такое зеркало обеспечивает доступный вход в ресурс. Игроки могут наслаждаться всевозможными функциями, не останавливаясь на высоких результатах.

  4. Бомба смотреть всем!
    1xbet зеркало, [url=https://1xbet-7aqfp.cfd/]1xbet-7aqfp.cfd[/url] предоставляет пользователям доступ к любимым играм и беттингу. Платформы предлагают легкий интерфейс для пользователей. С помощью 1xbet зеркало можно обойти ограничения и наслаждаться любимыми ставками. Обязательно проверяйте актуальные адреса для безопасного доступа к платформе.

  5. Casino Sites Not on Gamstop, [url=https://www.growheim.de/discovering-casinos-not-on-gamstop-uk-a-9/]https://www.growheim.de/discovering-casinos-not-on-gamstop-uk-a-9/[/url] offer players a unique gaming experience which they can enjoy without restrictions. Those platforms provide varied options for wagering, enabling gamblers to explore exciting games. Choosing Casino Sites Not on Gamstop can lead to more opportunities and promotions that are not available on mainstream sites. Discover your favorite games to experience limitless fun.

  6. 1xbet online casino, [url=https://www.lionsroarcapital.com/1xbet-singapore-betting-your-ultimate-guide-to-180/]https://www.lionsroarcapital.com/1xbet-singapore-betting-your-ultimate-guide-to-180/[/url] выпускает широкий каталог азартных развлечений. В данном месте можно открыть разнообразием ставками, блэкджеком и разной игрой. Все выберет что-то интересное.

  7. В этом что-то есть и идея отличная, согласен с Вами.
    1xbet зеркало, [url=https://1xbet-wuzq6.icu/]1хбет официальный сайт[/url] дает доступ к всем функциям сайта. Используя действующее 1xbet зеркало, игроки могут играть без ограничений. Это удобно и доступно.

  8. Теперь стало всё ясно, большое спасибо за объяснение.
    зеркало 1xbet, [url=https://1xbet-npmu1.top/]1хбет официальный сайт вход[/url] – это копия основного сайта, позволяющее игрокам шанс к ставкам. С помощью зеркала можно обходить блокировки и наслаждаться всеми функциями без неудобств.

  9. zahraniДЌnГ© online casino, [url=https://go.imagineschoolsatplantation.com/online-kasino-na-slovensku-vetko-o-potrebujete-8/]https://go.imagineschoolsatplantation.com/online-kasino-na-slovensku-vetko-o-potrebujete-8/[/url] dГЎvajГє hrГЎДЌom moЕѕnosЕҐ zГЎbavy z pohodlia domova. s mnoЕѕstvom hier a akciГ­ sa naДЏalej sГє obДѕГєbenou voДѕbou medzi hrГЎДЌmi.

  10. udenlandsk online casino, [url=http://www.prolocogeracisiculo.it/udforskning-af-fremmede-verdener-en-rejse-gennem-2/]http://www.prolocogeracisiculo.it/udforskning-af-fremmede-verdener-en-rejse-gennem-2/[/url] tilbyder en mulighed for gamblere at opleve et stort udvalg af underholdning. Takket være moderne platforme kan man underholde sig når som helst. Udenlandsk online casino platform leverer fede bonusser og incitamenter.

  11. Casinos Non on Gamstop, [url=https://payment.allskillscollege.com.au/exploring-casinos-non-on-gamstop-a-guide-to-online-6/]https://payment.allskillscollege.com.au/exploring-casinos-non-on-gamstop-a-guide-to-online-6/[/url] offer a unique option for players looking to enjoy wagering without restrictions. These platforms provide access to a selection of games, ensuring a thrilling experience. Enjoy seamless signing up and start winning today!

  12. Nel mondo dei giochi d’azzardo, i casino non aams online, [url=http://www.emagidlondon.com/galleriamarcolini/casi-italiani-i-migliori-casino-esteri-che/]http://www.emagidlondon.com/galleriamarcolini/casi-italiani-i-migliori-casino-esteri-che/[/url] propongono un’esperienza divertente. Gli utenti possono scegliere tra diversi giochi, garantendo intrattenimento senza limiti. Casino non aams online ГЁ l’opzione interessante per chi cerca diversitГ . Inoltre, bonus esclusivi rendono l’esperienza ancor piГ№ coinvolgente.

  13. To start your betting journey, download 1xbet, [url=https://www.jcbailbonding.com/discover-the-excitement-of-1xbet-singapore-aviator-3/]https://www.jcbailbonding.com/discover-the-excitement-of-1xbet-singapore-aviator-3/[/url] and enjoy a wide range of sports events. This platform offers a vast selection of options to bet on. In addition to competitive odds, 1xbet provides intuitive interfaces and excellent customer support.

  14. У меня похожая ситуация. Приглашаю к обсуждению.
    1xbet зеркало, [url=https://1xbet-orkr2.top/]https://1xbet-orkr2.top[/url] обеспечивает доступ к численным играм даже в условиях блокировок. Пользователи могут легко наслаждаться услугами, не беспокоясь о ограничениях. Стоит следить за последними ссылками, чтобы остаться в курсе.

  15. хоть книги не читай…
    зеркало 1xbet, [url=https://1xbet-ukkvx.cyou/]1xbet-ukkvx.cyou[/url] предоставляет возможность игрокам обходить блокировки. Актуальные ссылки обеспечивают доступность к любимым платформам. Просто воспользуйтесь копией, чтобы наслаждаться игрой без ограничений.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top