16.நேசம்
விக்ரம் வேகமாக படிகளில் இறங்கி ஹாலுக்கு வந்தான்.அங்கு பதட்டமாக நின்றிருந்த கங்காதேவியைப் பார்த்து,
“அத்தை… எதுக்கு எனக்குப் போன் பண்ணீங்க?”
கங்காதேவி (கலங்கிய குரலில்)
“மாப்பிள்ளை… காயத்ரி திடீர்னு மயங்கி விழுந்துட்டா. அதான் பயந்து உனக்குப் போன் பண்ணேன்.”
விக்ரமின் முகம் சுருங்கியது.
“வீட்ல வேற யாரும் இல்லையா?”
“என்னப்பா செய்யறது… ரிசப்ஷன் முடிஞ்ச கையோட எல்லாரும் அவங்க அவங்க வீட்டுக்கு போய்ட்டாங்க. உங்க அப்பாவும் அம்மாவும் ஊருக்கு கிளம்பிட்டாங்க. துருவ் ஆபீஸ்க்கு போயிருக்கான். நான்தான் தனியா இருந்தேன்.”
கங்காதேவி பேசிக்கொண்டே அழ ஆரம்பித்தாள்.”எனக்கு ரொம்ப பயமா இருக்கு மாப்பிள்ளை… கண்ணையே திறக்க மாட்டேங்குறா…”
“சரி அத்தை… அழாதீங்க. முதல்ல ஹாஸ்பிடல் போகலாம்.”
என்று சொல்லிவிட்டு உள்ளே ஓடிச் சென்றான்.சில நிமிடங்களில் மயக்க நிலையில் இருந்த காயத்ரியைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்தான்.அவளை காரின் பின்பக்க இருக்கையில் படுக்க வைத்துவிட்டு,
“அத்தை… நீங்களும் வாங்க…”
என்று சொல்லி காரை வேகமாக மருத்துவமனை நோக்கிச் செலுத்தினான்.
அந்த நேரம்…
மாடியில் நின்றிருந்த வெண்ணிலா, காயத்ரியை கைகளில் ஏந்திக்கொண்டு செல்லும் விக்ரமைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.அவளுக்குத் தெரியவில்லை…அது ஒரு சாதாரண உதவி என்று.அவள் மனதில் மட்டும்,
“யார் அவள் அவளுக்காக இவ்வளவு பதறுறார்…?”என்ற கேள்வி விதையாக விழுந்தது.அந்த விதைதான் பின்னாளில் ஒரு பெரிய சந்தேகமாக மாறப் போகிறது…
மருத்துவமனைக்கு விக்ரம் காயத்ரியை அழைத்துச் சென்ற பிறகு…வீட்டில் வெண்ணிலா மட்டும் தனியாக இருந்தாள்.
ரிசப்ஷன் முடிந்து இன்றோடு நான்கு நாட்கள் ஆகி இருந்தது..முதல் நாள் அனைவரும் காயத்ரி செய்த செயலால் மருத்துவமனை கதி என்று கிடந்தனர்…இனியாவது
கணவனோடு நேரம் செலவழிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருந்தாள்.ஆனால் விக்ரம் இன்னும் திரும்பி வரவில்லை.இரவு எட்டு மணி…ஒன்பது மணி…பத்து மணி…கடிகாரம் ஓடிக்கொண்டே இருந்தது.
வெண்ணிலா மட்டும் அந்த பெரிய வீட்டின் வாசலில் தோட்டத்தை பார்த்தவாறு நின்று கொண்டிருந்தாள்.
சரி அவருக்கு போன் செய்வோம் என்று விக்ரமுக்கு போன் செய்தாள்.
போன் ரிங் ஆனது.ஆனால் எடுக்கவில்லை.மீண்டும்அழைத்தாள்..
சில நிமிடங்கள் கழித்து ஒரு மெசேஜ் வந்தது.
“காயத்ரிக்கு இன்னும் உடம்பு சரியில்லை. ஹாஸ்பிடல்ல தான் இருக்கேன்.”
அந்த ஒரு வரியைப் பார்த்ததும் வெண்ணிலாவின் முகம் வாடியது.
“சரி…”
என்று மட்டும் பதில் அனுப்பினாள்.
மறுநாள் காலை தான் விக்ரம் காயத்ரியுடன் வீட்டிற்கு வந்தான்.
ஆனால் வந்தவுடன் நேராக காயத்ரியின் அறைக்குச் சென்றான்.
“இப்போ எப்படி இருக்கு?”
என்று அவளிடம் கேட்டான்.
அதை தூரத்தில் இருந்து பார்த்த வெண்ணிலா அமைதியாக நின்றாள்.
அவளிடம் கூட,
“சாப்பிட்டியா?”
என்று கேட்காதவன், காயத்ரியைப் பற்றித்தான் கவலைப்படுகிறான் என்று தோன்றியது.அந்த நேரத்தில்…கங்காதேவி வெண்ணிலா அருகில் வந்து நின்றாள்.
“எவ்வளவு நல்ல மனசு பாரு மாப்பிள்ளைக்கு…”காயத்ரி மயங்கி விழுந்ததுல இருந்து அவளை விட்டு ஒரு நிமிஷம் கூட நகரல.”வெண்ணிலாவின் முகம் இன்னும் மாறியது.கங்காதேவி (நடிப்பாக)”உண்மைய சொல்லணும்னா… என் பொண்ணு வாழ்க்கையில இப்படி ஒரு நல்லவனை இழந்தது தான் அவளோட துரதிர்ஷ்டம்…”எல்லாம் இவளால் தான்..எதை காட்டி மயக்குனாலோ தெரியல..
என்று வார்த்தையால் புண்படுத்திவிட்டு சென்றார்.
அந்த வார்த்தை வெண்ணிலாவின் மனதில் சிக்கிக் கொண்டது.
“இழந்தது…? அதுக்கு என்ன அர்த்தம்…?”பிறகு இரவானதும்
விக்ரம் வெண்ணிலாவை தேடி அவளை அனைத்து தூங்கிக் கொண்டிருக்க…
அவன் தூக்கத்தில் தெரியாம,
“காயு… கவலைப்படாத…”
என்று முணுமுணுத்தான்.
உண்மையில் அவன் தங்கையைப் போல நினைத்து ஆறுதல் சொன்னதை நினைத்து தூக்கத்தில் பேசியிருந்தான்.
ஆனால் அதை கேட்ட வெண்ணிலாவின் இதயம் திடுக்கிட்டது.
“தூக்கத்துல கூட அவ பேரைத்தான் சொல்றாரா…?”என்று நினைத்தாள்.
அன்றுதான் அவள் மனதில் முதல் முறையாக பயம் பிறந்தது.
“ஒருவேளை… நான் தான் இவர்களுக்குள் நடுவில் வந்தவளா…?” என்று மனதில் உழன்று கொண்டவள் கணவன் அவளை தேட தன்னை தொலைத்தாள்..
அடுத்த நாள் “என்ன வெண்ணிலா என்ன பண்ற..?”
“என்ன வேணும் உனக்கு”? என்று காட்டமாக கேட்க
“கோவப்படாத டி என் அக்கா”
“ச்சி …அக்கான்னு சொல்லாத..அடுத்தவ புருஷன் கூட வாழ நினைக்குற நீ எல்லாம் ஒரு பொண்னே இல்ல”..
“பொண்ணு இல்ல தான் டி..என் விக்ரம் மாமா எனக்கு தான்..ஒழுங்கா மூட்ட முடிச்ச கட்டிட்டு ஓடிடு என காயத்ரி கூறவவும் கோவத்தில் வெண்ணிலா கையை உயர்த்த அங்கு விகரம் வரவும் சரியாக இருந்தது..
ஹே என்னாச்சு ரெண்டு பேருக்கும்
“விக்ரம் மாமா…” என்று காயத்ரி அழுகை கலந்த குரலில் அழைத்தாள்.
அவள் கண்களில் கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது.
“வெண்ணிலா அக்கா… உங்களையும் என்னையும் தப்பா பேசுறாங்க…”விக்ரமின் முகம் உடனே இறுகியது.
“காயத்ரி”
“நா… நமக்குள்ள எதுவுமே இல்லன்னு சொல்ல வந்தேன் மாமா…” என்று அவள் தேம்பித் தேம்பி அழுதாள்.
“நீங்க என்னை ஹாஸ்பிடல் வச்சு பார்த்துகிட்டதால அக்கா மிஸ் அண்டர்ஸ்டேண்டிங் பண்ணிக்கிட்டாங்க…என்னால உங்க லைஃப் சிக்கல் ஆகிட கூடாதில்ல அதான் எக்ஸ்ப்ளெய்ன் பண்ண வந்தேன்…”
வெண்ணிலா அதிர்ச்சியோடு அவளை பார்த்தாள்.
“ஏய்”
ஆனா காயத்ரி அவளை பேச விடவே இல்லை.“ஆனா…” என்று இன்னும் கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.
“அக்கா என்னை ரொம்ப தகாத வார்த்தை பேசுறாங்க…”
“காயத்ரி ஸ்டாப் இட்” என்று வெண்ணிலா கோபமாக கத்தினாள்.
அதை பார்த்த விக்ரம் இன்னும் எரிச்சலானான்.
“வெண்ணிலா!” என்று அதட்டினான்.
காயத்ரி உடனே விக்ரமின் பின்னால் நின்றுகொண்டாள்.
“நா தப்பே செய்யல மாமா…” என்று அவன் கையை பிடித்தாள்.
“நீங்க என் மாமா தான… அதான் உரிமையா பேசினேன்… ஆனா அக்கா என்னை கேவலமா நினைக்குறாங்க…”
வெண்ணிலாவின் கண்கள் நம்ப முடியாமல் விரிந்தது.
“டிராமா பண்ணாத காயத்ரி!”
“நா டிராமாவா…?” என்று அவள் உடனே அழுதாள்.
“சின்ன வயசுல இருந்து உங்கள வீட்டுல வளர்ந்த நான்… உங்களை அப்பா மாதிரி மதிச்சேன் மாமா…”
அவள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் வெண்ணிலாவையே வில்லி போல காட்டியது.
“எனஃப்!” என்று விக்ரம் கோபமாக கத்தினான்.
அவன் கோபமான பார்வை நேராக வெண்ணிலாவை தாக்கியது.
“ஒரு எல்லை இருக்கணும் வெண்ணிலா… எல்லாரையும் சந்தேகப்படுறது நல்லது இல்ல.”
அந்த வார்த்தை வெண்ணிலாவை உள்ளுக்குள் உடைத்தது.
“நீங்களும் அவ சொல்றத நம்புறீங்களா…?” என்று உடைந்த குரலில் கேட்டாள்.
விக்ரம் அமைதியாக நின்றான்.
அதுவே அவளுக்கு பதிலாகிவிட்டது.
வெண்ணிலா கசப்பாக சிரித்தாள்.
“சரி…”
கண்ணீரை துடைத்துக் கொண்டவள் மெதுவாக தலையசைத்தாள்.
“உண்மையா நடிக்கிறவங்க முன்னாடி… உண்மையா காதலிச்சவங்க எப்பவும் தோற்றுதான் போவாங்க…” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வேகமாக அறைக்குள் சென்றாள்.
அவள் சென்றதும்…
காயத்ரியின் அழுகை மெதுவாக நின்றது…விக்ரம் அதை கவனிக்கவில்லை..…அவள் உதட்டோரத்தில் ஒரு சிறிய வெற்றி சிரிப்பு மலர்ந்திருந்தது…
வெண்ணிலா அறைக்குள் வந்தவுடன் கதவை சாத்திக் கொண்டாள்.இதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீர் எல்லாம் வெடித்துக் கொண்டு வெளியே வந்தது.
“என்னதான் நான் சொன்னாலும்… அவர் நம்பப் போறதில்லை…”
என்று கட்டிலில் அமர்ந்து அழுதாள்.
அதே நேரம் வெளியே…
விக்ரம் ஸ்டடி ரூமில் நின்று கொண்டிருந்தான்.வெண்ணிலா பேசிய வார்த்தைகள் அவன் காதில் திரும்பத் திரும்ப ஒலித்தன.அவன் பெருமூச்சு விட்டான்.
அப்போது காயத்ரி மெதுவாக அவன் அருகில் வந்தாள்.
“மாமா… என்னாலதான் உங்க ரெண்டு பேருக்கும் சண்டை வந்துடுச்சு…”
“காயு… நீ இதைப் பற்றி யோசிக்காத.”
“இல்ல மாமா… நான் இங்க இருக்கிற வரைக்கும் அக்கா இப்படி தான் நினைப்பாங்க…”
விக்ரம் எதுவும் பேசவில்லை.
அவன் அமைதியை காயத்ரி தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டாள்.
“ஒருவேளை… நான் இங்க இருந்து போயிட்டா எல்லாம் சரியாகிடுமோ…”அம்மா அப்போவே சொன்னங்க நான் உங்கள காதலிச்சாலும் நீங்க என்ன காதலிக்கவே இல்லையே மாமா..அதான் என்னைய அழிச்சுக்க நினைச்சேன் எல்லாரும் காப்பாத்திட்டிங்க..இன்னைக்க்கு வெண்ணிலா அக்கா உங்க கூட சண்டை போட நான் தான் காரணம் என்று அவன் நெஞ்சில் விழுந்து அழுதாள்..
விக்ரம் உடனே,
“லூசு மாதிரி பேசாத!”அவளை நான் சரி பண்ணிக்கிறேன் என்று அவளை சமாதான படுத்தி கொண்டிருந்தான்..
அப்போது கைதட்டி கொண்டே வாவ்வ்வ்வ் …இதுக்கு தான் என்கிட்ட இந்தளவு நாடகம் நடிச்சிங்களா
வெண்ணிலாவின் குரல் கேட்டதும் விக்ரமும் காயத்ரியும் திரும்பிப் பார்த்தனர்.வெண்ணிலாவின் கண்களில் கோபமும், காயமும், ஏமாற்றமும் கலந்திருந்தது.
“வாவ்… ரொம்ப நல்லாருக்கு. என்கிட்ட வந்து சண்டை போட்டு அறையை விட்டு அனுப்பிட்டு, இங்க அவளை கட்டிப்பிடிச்சுட்டு சமாதானம் பண்ணிட்டு இருக்கீங்க. நல்லாருக்குங்க உங்க நாடகம்…”
விக்ரம் அதிர்ச்சியுடன் எழுந்தான்.
“நிலா… நீ நினைக்கிற மாதிரி இல்ல…”
“அப்போ இப்படி இருக்கிற நிலையில ஒரு பொண்டாடியா நான் என்ன நினைக்கணும்?”வந்ததுல இருந்து உங்க கண்ணுக்கு நான் தெரியவே இல்ல. காலையில இருந்து காயத்ரி… காயத்ரி… காயத்ரி… அவளுக்கு சாப்பாடு, அவளுக்கு மருந்து, அவளுக்கு ஆறுதல். நான் என்ன உங்க வீட்டுல வேலைக்காரியா?”
“நிலா, கொஞ்சம் நான் சொல்றத கேளு…”
“எதைக் கேட்கணும்? என் கண்ணால பார்த்ததையே நம்பக்கூடாதா?”
காயத்ரி உடனே இடையில் வந்தாள்.
“அக்கா… ப்ளீஸ்… தப்பா புரிஞ்சுக்காதீங்க…”
“நீ பேசாத!”
என்று வெண்ணிலா கத்தினாள்.
“உன்னாலதான் இத்தனை பிரச்சனையும். எங்க வாழ்க்கைக்குள்ள வந்து நிம்மதியையே கெடுத்துட்ட .”
காயத்ரியின் கண்களில் உடனே கண்ணீர் வழிந்தது.
அதைப் பார்த்த விக்ரமுக்கு கோபம் வந்தது.”வெண்ணிலா! வார்த்தையை பார்த்து பேசு!”
“ஓஹோ… இப்போ அவளுக்காக என்கிட்ட கத்துற அளவுக்கு வந்துட்டீங்களா?”
“நான் நியாயத்துக்காக பேசுறேன்.
“இல்ல…அவளுக்காக பேசுறீங்க.”
வெண்ணிலாவின் குரல் உடைந்து போனது.”நான் அழுதப்போ கூட நீங்க இவ்வளவு பதறல. ஆனா அவள் அழுதா மட்டும் உங்களுக்கு உலகமே நின்னு போயிடுது.”
அவள் சொன்ன வார்த்தைகள் அவனை காயப்படுத்தின.
“நிலா…”
“அக்கா மாமாவா தப்பா நினைக்காதீங்க”
“உன்னால தாண்டி எல்லாம் என்று அவளை அடித்து விட்டாள்..”
காயத்ரியை “நிலா அடித்தது ம் வெண்ணிலாவை கோபத்தில் அடித்து விட்டான்..
தன் உயிரானவளை அடித்து விட்டோமே என்ற உணர்வில் நிலா என்று அழைக்க
“வேணாம்.”
அவள் கையை நீட்டி தடுத்தாள்.
“இப்போ எனக்கு எல்லாமே புரியுது. உங்க வாழ்க்கையில நான் தேவையில்லாதவளா ஆயிட்டேன்.”
என்று சொல்லிவிட்டு திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.
விக்ரம் அவள் கையை பிடித்தான்.
“நிலா… எங்க போற?”
அவள் அவன் கையை உதறிவிட்டாள்.
“என்னைத் தொடாதீங்க அருவருப்பா இருக்கு..”
அந்த வார்த்தை விக்ரமின் இதயத்தை சுருக்கிப் போட்டது.
“இனிமேல் உங்க அக்கறை யாருக்கோ தேவையோ… அவங்களுக்கே கொடுங்க.”
என்று கூறிவிட்டு கண்ணீரை துடைத்தபடி அறைக்குள் ஓடிச் சென்றாள்.விக்ரம் அங்கேயே நின்று போனான்.காயத்ரி மட்டும் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டாள்.
“இதுதான் எனக்கு வேணும்… இன்னும் கொஞ்ச நாள். நீங்களே ரெண்டு பேரும் பிரிஞ்சுருவீங்க…”
என்ற சந்தோஷத்தில் அவள் அறை சென்றாள்..
விக்ரம் கோபத்தில் காரை எடுத்து கொண்டு எப்போதும் செல்லும் பாரை நோக்கி சென்றான்..
அன்றிரவு…
விக்ரமை துருவ் அறைக்கு அழைத்து சென்று அங்கு நிலாவிடம் “அண்ணி அண்ணா ரொம்ப குடிச்சுறுகங்க..அண்ட் கையில் காயம் ஆகிருக்கு..மருந்து கூட போட விட மாட்டேங்குறான்”..
குடிச்சுறுகாரா..சரி நான் பார்த்துக்குறேன் துருவ் என்று விக்ரமை பிடித்து ஒழுங்கா உக்காருங்க..
”சாரி டி அடிச்சுட்டேன் என் செல்லத்தை..வலிக்குதா என்று துருவ் முகத்தை தொட்டு தடவ
அண்ணா அண்ணி உள்ள ரூமுள்ள இருக்காங்க போ..
ஐயோ என் நிலாவை காணோம்..அங்க இருக்கு உன் நிலா சரியான தொல்லை ண்ணா நீ..
ம்ம் என் நிலா முகம் வழு வழு ன்னு இருக்கும் உன் மூஞ்சு சொர சொரன்னு இருக்கு.. என் நிலா எவ்வளவு அழகு தெரியுமா நான் எத்தனை தடவை கேட்டாலும் கொடுத்துட்டே இருப்பா..நா அடிச்சிட்டேனே..என்று மீண்டும் சுவற்றில் அடிக்க..
ஆஆ ஐயோ ஏங்க.. இப்படி பண்றிங்க..வாங்க என்று அழைத்து பெட்டில் உக்கார வைத்து மருந்து போட்டு விட அவனோ அவளை பார்த்து
“ இங்க இருக்கு என் வட்ட நிலா.”
.எங்க போய் கைய உடைச்சிங்க இவ்வ்ளவு ப்ளீட் ஆகுது..கோபத்தில் கேட்டாலும் கண்ணீர் வந்தது வெண்ணிலாவுக்கு ..எல்லாம் இவர் அவளுக்கு கொடுக்குற இடம்..இனிமே இவர் கிட்ட பேசவே கூடாது..சரியான குடிகாரன்….இப்படி குடிச்சுட்டு வந்து நிக்கிறது பாரு..அவன் ஆடை அவிழ்த்து வேறு ஆடை போட விடவில்லை..
பொண்டாட்டி முன் பிறந்த குழந்தை போல நின்றான்..அவள் கண்டு கொள்ளாமல் துண்டை கட்டி விட அதையும் எடுத்து வீசியவன்..
இப்போ ட்ரெஸ் போட முடியுமா முடியாதா..
“முடியாது டி.. வா வந்து மும்பை மாமாவுக்கு ஒரு முத்தம் கொடு..”இங்க என்று அவளால் பருத்த இடத்தை காட்ட
“சும்மா போய் படுங்க ஆதி.. நானே கோவத்துல இருக்கேன்..”
“அப்போ வா உனக்கு கோவத்தை குறைக்கிறேன் என்று அவள் மீது படர்ந்து முத்த மழை பொழிந்தான்.”.
“வேற பேச்சே பேச தெரியாதா..ஒழுங்கா போய் படுத்து தூங்குங்க நான் தூங்கனும்
என்று வெண்ணிலா தூங்குவது போல படுத்திருந்தாள்.அவன் அருகில் அமர்ந்தான்.அவள் அழுததால் கண்கள் வீங்கியிருந்தன.அதைப் பார்த்த விக்ரமின் மனம் வலித்தது.
நிலா மூணு நிலா இருக்கு என்கிட்ட என்று அவளை போட்டு அமுக்க அவள் தள்ளிவிட்டாள்.. மாமாகிட்ட பேச மாட்டியா..
“ப்ச் கைய கால வச்சுட்டு சும்மா இருங்க..நான் ரொம்ப ஆத்திரத்தில இருக்கேன் ஏதாச்சும் பண்ணிடுவேன்.”.
வா டி..பண்றதா இருந்தா கிஸ் பண்ணு டி..இப்படி என்று அவள் இதழ் கொய்ய ஆரம்பித்தான்.நான் உன்னை எவ்வளவு லவ் பண்றேன்னு தெரியுமா..
ஆமா லவ் பண்றவர் தான் அடுத்தவ முன்னாடி அடிச்சுட்டு போனதா..என்று கோவத்தில் கேட்க..
சாரி டி அம்மூஊஊ…நான் உன்னைய இங்க இருந்து லவ் பன்றேன் என்று நெஞ்சை தொட்டு காட்டி வா எப்படின்னு சொல்றேன் என்று அவளை இழுத்து காதல் பாடம் கற்க ஆரம்பித்தான்..மீண்டும் அவளை நாடி அசைய வெண்ணிலா வெறுத்து போனாள்.. இவருக்கு இதுக்கு மட்டும் நான் வேணுமா என்ற நினைவில் அவன் விதமாக கேட்க அவளை கொடுத்து திருப்தி யாக ஆண்டவன் அவள் நெற்றியில் முத்தம் வைத்து அவளை தன் நெஞ்சில் போட்டு கொள்ள அணைத்தான்…
ஆனால்…வெண்ணிலா அவன் கையைத் தட்டிவிட்டு விலகினாள்.விக்ரம் அதிர்ச்சியாக அவளைப் பார்த்தான்.முதல் முறையாக…
வெண்ணிலா அவனை விட்டு விலகினாள்.அந்த நொடி இருவருக்கும் இடையில் கண்ணுக்குத் தெரியாத ஒரு சுவர் எழுந்தது.அந்த சுவரை உடைக்க இன்னும் பல புயல்கள் வரப்போகின்றன…
விக்ரம் வெண்ணிலாவை இறுக்கி அணைத்து கொண்டு கட்டிலில் படுத்து கொண்டான்..அவள் விடு என்று கத்த அதை பொருட்படுத்தாமல் இறுக்கி அணைத்து கொண்டான்..
“என்ன டி இப்போ இவ்வளவு நேரம் நல்லா தான இருந்த..திடீர்னு பேய் பிடிச்சுருமா..”
“ஆமா பேய் தான் பிடிச்சுருக்கு..உங்களுக்கு தேவையானது கிடைச்சுட்டு இல்ல..அப்பறம் நான் அழுதா என்ன செத்தா என்ன” என்று கூற ‘பளார் ‘என்ற அறைந்து என்னை கோபத்தை அதிக படுத்தாத வெண்ணிலா..
“ஏன் டி ?என்கிட்ட பேச தெரியாம பேசி அடி வாங்குற..”
அவள் எதுவும் கூறாமல் அவனை விட்டு விலகி போனவளை மீண்டும் அனைத்து திமிர முடியாமல் அவன் கைகளுக்குள் அடங்கினாள்…கண்களில் வந்த கண்ணீர் அவன் நெஞ்சை சுட்டது…அன்று இரவு அவளும் தூங்கவில்லை..அவனும் தூங்கவில்லை..ஒரு தர்மசங்கடமான நிலையில் விக்ரமாதித்யா இருந்தான்..

dubai real estate corporation trn palm jumeirah villas for sale arabian ranches 3
zahraniДЌnГ© online casino, [url=https://www.vautron.cz/zahranine-online-kasina-vstupte-do-sveta-zabavy-a/]https://www.vautron.cz/zahranine-online-kasina-vstupte-do-sveta-zabavy-a/[/url] ponГєka hrГЎДЌom vzruЕЎujГєce | zГЎbavnГ© | jedineДЌnГ© | pГєtavГ© moЕѕnosti na hranie. V online svete si mГґЕѕete vychutnaЕҐ | uЕѕiЕҐ | zaЕѕiЕҐ | objaviЕҐ rГґzne hry, od automatov aЕѕ po stolovГ© hry. S bonusmi a vГЅhodami je to lГЎkavГ© miesto pre milovnГkov hazardu.
JGE villas for sale https://subtitledonline.com studio apartment in dubai for rent monthly
Casinos Non Gamstop, [url=http://uunique.top/wordpress/index.php/2026/05/15/discovering-non-gamstop-casinos-your-gateway-to/]http://uunique.top/wordpress/index.php/2026/05/15/discovering-non-gamstop-casinos-your-gateway-to/[/url] provide players with an opportunity to enjoy their favorite games without restrictions. These establishments allow for more choices for those seeking to enjoy various games. Players can look forward to a rich assortment of games to choose from, promising a thrilling experience. With Casinos Non Gamstop, the possibilities are endless, allowing for memorable entertainment!
udenlandsk online casino, [url=http://beot.cl/index.php/2026/05/obcy-wiat-jak-zrozumie-kultur-i-tradycje-innych/]http://beot.cl/index.php/2026/05/obcy-wiat-jak-zrozumie-kultur-i-tradycje-innych/[/url] tilbyder spændende muligheder for gamblere, der ønsker at spille. Mange sites har imponerende bonusser og tilbud, der interesserer nye spillere. Udenlandsk online casino giver tilgang til et bredt udvalg af spil, hvilket tilbyder en uovertruffen spiloplevelse.