17.நேசம்
அடுத்து வந்த நாட்களில் நிலா முற்றும் முழுதாக மாறி போனாள்.. இரவு விக்ரம் தூங்கிய பின்னே அறைக்கு வருவாள் ..
விக்ரமாதித்யா மற்றும் வெண்ணிலா அதிகமாக பேசிக் கொள்ளவில்லை…
ஆனால் அவர்களுக்குள் வார்த்தைகளைக் கடந்து ஒரு அமைதியான பிரிவு உருவாகி இருந்தது.வெண்ணிலா காலை எழுந்து சமையலறைக்கு சென்றால், அவன் கேட்காமல் அவனுக்குப் பிடித்த காபி அவன் முன் வந்து நிற்கும்… விக்ரம் அலுவலகத்திற்கு கிளம்பும் முன் அவளை நேராக பார்த்து எதுவும் சொல்ல மாட்டான்… ஆனால் அவன் பார்வை மட்டும், “சாப்பாடு நேரத்துக்கு சாப்பிடு…” என்று அக்கறையாய் பேசும்.
இரவுகளில் கூட அவர்கள் நீண்ட நேரம் உரையாடவில்லை. விக்ரம் பேச வந்தாலே விலகி ஏதாவது காரணம் சொல்லி விலகி விடுவாள்…ஆனால் ஒரே அறையில் அமைதியாக இருந்த அந்த நிமிடங்கள் இருவருக்கும் பிரிவை அதிகப்படுத்தியது.அது விக்ரமை பாதித்தது..அதையும் வெண்ணிலா உணர ஆரம்பித்தாள்…
காயத்திரி யால் விக்ரம் வெண்ணிலா வாழ்க்கை பிரிவை நோக்கி சென்று கொண்டிருந்தது..அன்று வெண்ணிலாவுக்கு காலையில் இருந்தே மனது சரி இல்லை..காலையில் கணவன் சாப்பிட்டு செல்லவில்லை..அந்த காயத்ரி கூடவே அட்டைப்பூச்சி போல ஒட்டி கொண்டு இருக்கிறாள்…அவர் கண்ணில் எனக்கான ஏக்கம் தெரியுது..நான் தான் அவரை தப்பா நினைக்கிறேன் என்று அவனுக்காகவே சமைத்து அழகாக பிங்க் கலர் புடவை அணிந்து பூ வைத்து சந்தோஷமாக கிளம்பி சென்றாள்… துருவிடம் ஆபிஸ் கொண்டு போய் விட சொன்னாள்..அதனால் விக்ரமை நேரில் பார்த்து லன்ச் கொடுத்துவிட்டு தானும் சாப்பிட்டு கொஞ்ச நேரம் செலவழிக்கலாம் என்று நினைத்து அவனுக்காக ஆசையாக சமைத்து எடுத்து கொண்டு சென்றாள்..
ஆபிஸ் அறை. சென்றவளுக்கு இத்தனை நாள் கழித்து அவனிடம் பேச போவது ஏதோ முதன் முறை காதலை சொல்வது போல ஒரு படபடப்பு கூடிய மகிழ்ச்சியுடன் சென்றாள்..
விக்ரமாதித்யாவின் ஆபிஸ்…மதியம் ஒரு மணியை கடந்தும் அவன் இன்னும் பைல்ஸ் பார்த்துக்கொண்டே இருந்தான்.
கோபமும் அழுத்தமும் சேர்ந்த முகம்… கடந்த சில நாட்களாக வெண்ணிலாவுடன் நடந்த சண்டைகள் அவனை முழுக்க சோர்வடைய வைத்திருந்தது.
அந்த நேரம் கதவை மெதுவாக தட்டிவிட்டு உள்ளே வந்தாள் காயத்ரி.
“விக்ரம் மாமா… இன்னும் வீட்டுக்கு போகலையா…?” என்று மெதுவாக கேட்டாள்.
விக்ரம் தலை கூட நிமிரவில்லை.
“என்ன வேணும் காயத்ரி…?”
அவள் சோகமாக சிரித்தாள்.
“நீங்க இவ்வளவு மாறிடுவீங்கன்னு நான் நினைக்கல… முன்னாடி நான் அழுதா நீங்க தாங்க மாட்டிங்க…”
அந்த வார்த்தை விக்ரமுக்கு எரிச்சலை கொடுத்தது.
“பாஸ்ட் பற்றி பேச வரலனா பேசு… இல்லனா வெளிய போ…”
ஆனா காயத்ரி அதற்காக வந்தவள் இல்லை.
அவள் மெதுவாக அவன் அருகில் வந்து டேபிள் மீது சாய்ந்தாள்.
“நீ ஹேப்பியா இல்ல விக்ரம்… அந்த வெண்ணிலா உன்னை புரிஞ்சுக்கவே மாட்டாளே…”
விக்ரம் உடனே எழுந்தான்.
“எனஃப் காயத்ரி..”
ஆனா அவள் அவன் கையை பிடித்தாள்.“ஒரு தடவை கூட என்னை மிஸ் பண்ணலையா…?” என்று அவனை கட்டி கொண்டு கண்களில் கண்ணீருடன் கேட்டாள்.
அந்த நேரம்…
ஆபிஸ் கதவு சிறிது திறந்தது.
விக்ரமுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வந்த வெண்ணிலா, அந்த காட்சியை பார்த்ததும் உறைந்து நின்றாள்.
காயத்ரி வேண்டுமென்றே இன்னும் நெருங்கி நின்றாள்.
“நீங்க இன்னும் என் விக்ரம் மாமா தானே…” என்று மெதுவாக சொல்ல…
வெண்ணிலாவின் கையில் இருந்த லன்ச் பாக்ஸ் கீழே விழுந்து சத்தம் எழுந்தது.விக்ரமும் காயத்ரியும் திரும்பிப் பார்த்தனர்.
வெண்ணிலாவின் கண்கள் கண்ணீரால் நிரம்பியிருந்தது.
“சாரி…” என்று மட்டும் சொல்லிவிட்டு அவள் திரும்பி நடக்க…
“வெண்ணிலா நில்லு!” என்று விக்ரம் கத்தினான்.ஆனா காயத்ரியின் உதட்டில் அந்த நொடி ஒரு மறைமுக வெற்றி சிரிப்பு இருந்தது…நல்லவேளை அம்மா போன் செய்தாங்க..இவளை விக்ரம் கூட சேரவே விட மாட்டேன்..
வெண்ணிலா ஏதும் பேசாமல் வீடு நோக்கி வந்து விட்டாள்.. அழுது அழுது நெஞ்சே வெடித்து விடும் போல இருந்தது அவளுக்கு..
விக்ரம் வெண்ணிலா பின்னே வீட்டினுள் நுழைந்தான்…
வெண்ணிலா நீ நினைக்கிற மாதிரி நான் தப்பானவன் கிடையாது..
நான் உங்களை ஏதும் கேட்கவே இல்லயே விக்ரம் சார்..நீங்க உங்க முன்னாள் காதலி கூட கூத்தடிப்பிங்க நான் தெரிஞ்சாலும் தெரியாத மாதிரி இருக்கணுமா..
வீட்டின் ஹாலில் இருந்த கண்ணாடி ஜாடி உடைந்த சத்தம் முழு வீட்டையும் அதிர வைத்தது.
“எத்தனை தடவை சொன்னாலும் உனக்கு புரியாதா…?” என்று கோபமாக கத்தினான் விக்ரமாதித்யா..அவனது கண்கள் சிவந்து இருந்தது…
நீ தவறா நினைக்கிற வெண்ணிலா..நான் என்னனு எக்ஸ்ப்ளெய்ன் பன்றேன்..அவள் கொஞ்சம் மன என்று ஆரம்பிக்கும் முன்..
ஒஹ் அப்படியா சரி
கையில் இருந்த மொபைலை நேராக விக்ரமின் மீது வீசினாள்.
“இதையும் எக்ஸ்ப்ளெய்ன் பண்ணுவியா…? தினமும் அவ கிட்ட தான்… தினமும் அவளோட கால்… அவளோட மீட்டிங்… நான் உன் மனைவிதானே… இல்லையா…?”கீப் ஆஹ்
விக்ரமாதித்யா பற்களை கடித்தான்.
“வெண்ணிலா… எனஃப்…”
“இல்ல! இன்னைக்கு பதில் வேணும்… எல்லாரும் என்னை முட்டாள்னு நினைக்குறிங்களா…?
உனக்கும் காயத்ரிக்கும் நடுவுல நடக்குறதை நான் பார்க்கவே இல்லன்னு நினைக்கிறியா…?”
“வாய மூடு…” என்று அவன் கர்ஜித்தான்.இம்முறை வெண்ணிலா பின்வாங்கவில்லை.
கண்களில் கண்ணீருடன் அவன் சட்டையை பிடித்தாள்.
“உண்மைய சொல்லுங்க… என்னை கல்யாணம் பண்ணது இன்னும் பழி வாங்குறதுக்காகவா…? இன்னும் அவளைத்தான் காதலிக்கிறியா…?”எல்லா இடத்துக்கும் அவளை மனைவி மாதிரி கூட்டிட்டு போற நீ ஏன் படுக்குறதுக்கும் அவளை யே கூப்பிட கூடாது என்றாள்.. படுக்க நான் வெளில அவளா உனக்கு
அந்த வார்த்தை விக்ரமின்
கோபத்தை வெடிக்க வைத்தது.
பளார்!பளார்!!!
அவனது கை வெண்ணிலாவின் கன்னத்தில் மாறி மாறி விழ…அவள் அதிர்ச்சியில் இரண்டு அடி பின்னால் தடுமாறினாள்.அறை முழுக்க அமைதி.விக்ரமின் மூச்சு வேகமாக இருந்தது…வெண்ணிலா மெதுவாக கன்னத்தை தொட்டாள்.
கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.
“இப்போ புரியுது…” என்று உடைந்த குரலில் சிரித்தாள்.“நான் கேட்டது உண்மையா இருந்ததால தான் உனக்கு இவ்வளவு கோபம் வந்திருக்கு…”
“வெண்ணிலா”
“தொடாதீங்க!” என்று அவள் கத்தினாள்.
“காதலிச்சவன் நம்ப வைக்க முயற்சி பண்ணுவான்… ஆனா நீ… என்னை அமைதிப்படுத்த கூட முயற்சி
பண்ணல…”
விக்ரம் கோபத்திலும் கில்ட்லயும் அவளை பார்த்தான்.
ஆனா வெண்ணிலா முடிவு எடுத்திருந்தாள்…“ஒரு நாள் நீங்க என்னை நம்பாம அடிச்ச இந்த நிமிஷத்துக்காகவே வருத்தப்படுவீங்க…” என்று சொல்லிவிட்டு அவள் கண்ணீரோடு மேலே சென்றாள்.
அந்த அறை முழுக்க அமைதி இருந்தது.ஆனா அந்த அமைதிக்குள் வெண்ணிலாவின் மனசு மட்டும் சிதறிக்கிடந்தது.அறைக்குள் வந்தவள் மெதுவாக அலமாரியை திறந்தாள்.கண்களில் இருந்து கண்ணீர் தொடர்ந்து வழிந்துகொண்டே இருந்தது.ஒவ்வொரு ட்ரெசை எடுக்கும்போதும்…விக்ரமுடன் இருந்த நினைவுகள் மட்டும் தான் நினைவுக்கு வந்தது.அவன் முதன்முறையாக அவளுக்காக வாங்கிய புடவை அதை காட்டியதும் பின் அவனே கசக்கியதும் …அவன் கோபத்திலும் பொஸஸிவ் ஆக பிடித்து கொண்ட கை…அவன் சிரிப்பு…எல்லாமே அவளை இன்னும் உடைத்தது.“ஏன் இப்படி பண்றீங்க ஆதிஈஈஈஈ…” என்று மெதுவாக அழுதாள்.
கழுத்தில் இருந்த தாலியை பிடித்துக் கொண்டு சில நொடிகள் கண்களை மூடினாள்.அந்த நேரம் கதவு திறந்தது.விக்ரமாதித்யா உள்ளே வந்தான்.அவள் பேகுடன் நிற்பதை பார்த்ததும் முகம் இறுகியது.
“என்ன பண்ணிட்டு இருக்க…?”
வெண்ணிலா அவனை பார்க்காமல் பேசினாள்.
“போறேன்.”
“எங்க?”
“இந்த வீட்டை விட்டு…”
விக்ரம் கோபமாக அவள் அருகே வந்தான்.
“நான் பெர்மிஷன் கொடுத்தேனா?”
அவள் கசப்பாக சிரித்தாள்.
“இங்க இருக்க உரிமை எனக்கு இல்லை..எனக்கு உரிமைகள் இருக்குற மாதிரி பேசுறீங்க…”
“வெண்ணிலா!” என்று அவன் கர்ஜித்தான்.
கண்களில் கண்ணீருடன் நேராக அவனை பார்த்தாள்.“உங்க வாழ்க்கையில நான் வேண்டாதவள்னு தினமும் ஃபீல் பண்ண வைக்கிறீங்க… ஆனா வெளியே மட்டும் மனைவி மாதிரி நடிக்க சொல்றீங்க…”
“நீ ஓவரா திங் பண்ணுற!”
“அப்படின்னா அந்த காயத்ரி உங்களுக்கு என்ன…?” என்று உடைந்த குரலில் கேட்டாள்.
விக்ரம் எரிச்சலில் முகத்தை திருப்பினான்.அதுவே வெண்ணிலாவுக்கு பதிலாகிவிட்டது.
“பாருங்க…“ஒரு தடவை கூட ‘நீ தான் முக்கியம்’ன்னு சொல்ல முடியல
உங்களால…”
ஆதி நான்..“நா உங்களுக்கு முக்கியம் இல்லையா விக்ரம்…?” என்று வெண்ணிலாவின் குரல் உடைந்து வெளியே வந்தது.
அவள் கண்களில் தேங்கியிருந்த கண்ணீர் இப்போது தடுக்க முடியாமல் வழிந்தது.
“என்னோட கூட வாழ்ந்த அந்த நாட்கள் எல்லாம் பொய்யா…? என்னை பார்த்து காதலா சிரிச்சது… என்னை விட்டு ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாத மாதிரி நடந்தது… அது எல்லாமே நடிப்பா…?”
விக்ரமாதித்யா முகத்தை இறுக்கிக் கொண்டான்.
“வெண்ணிலா, இப்போ தேவை இல்லாம பேசாத…”
தேவை இல்லாம பேசுறேனா…?” என்று அவள் வேதனையாக சிரித்தாள்.
அவன் அவளை தொட அருகே வந்ததும் அவள் இரண்டு அடி பின்னால் நகர்ந்தாள்.
“தொடாதீங்க…”
அந்த ஒரு வார்த்தை விக்ரமின் இதயத்தையே குத்தியது.ஆனா
வெண்ணிலா நின்றுவிடவில்லை.
“முதல் நாள் இருந்தே நான் யோசிச்சேன்… என்னை நீங்க ஏன் இவ்வளவு பிடிவாதமா கல்யாணம் பண்ணணும்னு…”அவள் குரல் நடுங்கியது.“இப்போ புரியுது… பழி வாங்கணும்னு தானே…? என்னை தூக்கிட்டு வந்து கல்யாணம் பண்ணீங்க… என்னை காதலிச்சது மாதிரி நடிச்சீங்க…”
“ஷட் அப் வெண்ணிலா!” என்று விக்ரம் கோபமாக கத்தினான்.
“ஏன்…? உண்மை கஷ்டமா இருக்கா…?”அவள் மெதுவாக அவன் கண்களை பார்த்தாள்.
“இன்னைக்கு உங்க அத்தை பொண்ணு அழுதா உடனே அவளுக்கு சப்போர்ட்… அவ கையை பிடிக்கிறீங்க… அவளை சமாதானம் பண்ணுறீங்க…”
“அது அப்படி இல்ல”
“அப்போ எப்படி…?” என்று கத்தினாள்.
“நான் தான் உங்க மனைவி விக்ரம்! ஆனா ஒவ்வொரு தடவையும் என்னை விட்டுட்டு அவள் பக்கம் நிக்கிறீங்க…”
அறை முழுக்க அவளது அழுகை சத்தம் மட்டுமே.“என்ன வெறுக்குறிங்க இல்ல…?” என்று மெதுவாக கேட்டாள்.
அந்த கேள்வியில் கோபம் இல்லை…
முழுக்க உடைந்த காதல் மட்டும் தான் இருந்தது…விக்ரமால் அவள் கண்களை நேராக பார்க்க முடியவில்லை…அதை பார்த்த வெண்ணிலா மெதுவாக தலையசைத்தாள்.
“புரிஞ்சிடுச்சு…“ஒருத்தரை காதலிக்கிறத விட… அவங்க காதலிக்கலன்னு தெரிஞ்சுக்கிற வலி ரொம்ப மோசம் விக்ரம்…”
அவள் வெளியில் செல்வதை தடுத்தவன்..நீ போக கூடாது..இந்த வீட்டுல தான் இருக்கணும்..என்றான்?
சரி நான் வீட்டை விட்டு போகலை ..இங்க இருக்குற எல்லார் சாட்சியாக ஒன்னு கேக்குறேன் அதுக்கு பதில் சொல்லுங்க..
நடு ஹாலில் அனைவரும் இருந்தனர்.ஈஸ்வரமூர்த்தி அமைதியாக அமர்ந்திருந்தார்.
விஜயா முகத்தில் பதட்டம்.
கங்காதேவி மட்டும் உள்ளுக்குள் மகிழ்ச்சியாக இருந்தாள்.துருவ் என்ன நடக்கப் போகிறதோ என்று கவலையுடன் நின்றான்.
அந்த நேரத்தில் வெண்ணிலாவின் கையில் சில புகைப்படங்கள்.
அவள் நடுங்கும் கையால் அந்த புகைப்படங்களை டீப்பாயின் மேல்
வீசினாள்.
“இது என்ன விக்ரம்…?”
ஹாலில் இருந்த அனைவரும் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.
புகைப்படங்களில் விக்ரமும் காயத்ரியும் மிகவும் நெருக்கமாக இருந்தனர்.
விக்ரமின் முகம் உடனே இறுகியது.
“வெண்ணிலா… முதல்ல அந்த போட்டோவை கீழே வை.”
“ஏன்? உண்மை தெரியக்கூடாதா? நான் மட்டும் முட்டாளா இருக்கணுமா?”
காயத்ரி உடனே அழுவது போல நடித்தாள்.
“அக்கா… நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க…”அன்னைக்கு நா ஆபிஸ் ல மயக்கம் போட்டு விழுந்துட்டேன் அப்போ விக்ரம் மாமா தான் என்னை அவர் அறையில் தூக்கி படுக்க வச்சாறு..நீங்க நினைக்கிற மாதிரி இல்ல..
“வாயை மூடு!” என்று வெண்ணிலா கத்தினாள்.இதுவரை அமைதியாக இருந்த அவளின் கோபம் இன்று வெடித்தது.
“என் கணவன் எங்க இருக்கார்னு எனக்கு தெரியாது… ஆனால் உனக்கு தெரியும். அவர் யாரோட நேரம் செலவழிக்கறார்னு எனக்கு தெரியாது… ஆனால் உனக்கு தெரியும். நான் மட்டும் தான் இந்த வீட்டுல அந்நியமா இருக்கேன்!”
விக்ரம் பல்லைக் கடித்தான்.
“போதும் வெண்ணிலா!”
“இல்ல! இன்னைக்கு நான் பேசுவேன்! நான் உங்க மனைவி விக்ரம்! ஆனா நீங்க என்னை விட்டு அவ கூடதான் இருக்கிங்க!”
அந்த வார்த்தை ஹாலையே அமைதியாக்கியது.
ஈஸ்வரமூர்த்தி கூட அதிர்ச்சியாக விக்ரமைப் பார்த்தார்.விஜயாவின் கண்களில் கண்ணீர் வந்தது.
கங்காதேவி மட்டும் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டிருந்தாள்.
விக்ரமின் கோபம் உச்சத்தைத் தொட்டது.
“நீ என்னை சந்தேகப்படுறியா?”
“ஆமாம்! சந்தேகப்படுறேன்! ஏன்னா நீங்க நடந்துக்கிற விதம் அப்படிதான் இருக்கு!”அடுத்த நொடி விக்ரம் டீப்பாயை ஓங்கி தட்டினான்.
அங்கிருந்த பொருட்கள் கீழே விழுந்து சிதறின.
“போதும்!”என்று அவன் கர்ஜித்தான்.
வெண்ணிலா கூட ஒரு நொடி பயந்து பின்னால் நகர்ந்தாள்.
“இவ்வளவு நாள் உன் கோபம், உன் சந்தேகம் எல்லாத்தையும் பொறுத்தேன். ஆனா இனிமே முடியாது.”அவன் விரலை நீட்டி வெண்ணிலாவைப் பார்த்தான்.
“நீ என்னை நம்பவே மாட்டேன்னு முடிவு பண்ணிட்ட? அப்போ என்னோட வாழ்க்கையில நீ இருக்க வேண்டிய அவசியமே இல்லை.”
ஹாலில் இருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
“விக்ரம் அண்ணா !” என்று துருவ் எழுந்தான்.ஆனால் விக்ரம் கேட்கவில்லை.”இனிமே நீ என்னோட கூட வாழணுமா வேண்டாமா என்று நான் தான் முடிவு பண்ணனும்.. தினமும் சந்தேகம்… தினமும் சண்டை… எனக்கு இந்த வாழ்க்கை வேண்டாம்!”நான் உன்னை காதலிச்சது உண்மை..அதை நீ சீக்கிரம் உணருவ..எனக்கு நிம்மதி வேணும் நீ எங்கே வேணுனாலும் போகலாம்..
சரி நான் இந்த வீட்டை விட்டு போறேன்..வெண்ணிலாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
.
“இந்த வீட்டை விட்டு வெளியே போறதா இருந்தா தாராளமா போகலாம்…”
ஒரு நொடி ஹாலே உறைந்தது.
விஜயா அதிர்ச்சியில் எழுந்தார்.
“விக்ரம்! என்ன பேசுற?”
ஆனால் அவன் பார்வை வெண்ணிலாவை விட்டுப் பிரியவில்லை.
“இப்பவே வெளியே போ.”
அந்த வார்த்தை வெண்ணிலாவின் இதயத்தை நொறுக்கிவிட்டது.
அவள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு விக்ரமை நேராகப் பார்த்தாள்.
“சரி…”
அந்த ஒரு வார்த்தையை கேட்டதும் விக்ரமின் கண்கள் கூட ஒரு நொடி துடித்தன.ஆனால் அவன் கோபத்தை மறைக்க முடியவில்லை.வெண்ணிலா மெதுவாக திரும்பி ..அறைக்குள் சென்றவள் அமைதியாக அவன் தூக்கி எறிந்த தன் பேகினை எடுத்து வந்தாள்..
அவள் கதவை நோக்கி நடந்தாள்.
அந்த நொடி விக்ரமின் ஈகோ அவனை அமைதியாக நிற்க வைத்தது.“இந்த வீட்டை விட்டு போனா… திரும்ப வரக்கூடாது…” என்று கடினமாக சொன்னான்.
வெண்ணிலாவின் கால்கள் ஒரு நொடி நின்றது.அவள் மெதுவாக திரும்பி பார்த்தாள்.
கண்ணீர் வழிந்த முகத்துடன்…
“நான் திரும்ப வரணும்னு ஆசைப்படுற அளவுக்கு… நீங்க என்னை காதலிக்கவே இல்ல விக்ரம் சார்…”
அந்த வார்த்தை நேராக அவன் இதயத்தில் இறங்கியது.வெண்ணிலா மெதுவாக கதவை திறந்து வெளியே சென்றாள்.கதவு மூடிய சத்தம்…
அந்த பெரிய வீட்டையே வெறுமையாக்கி விட்டது.
விஜயா டேய் “விக்ரம்! அவ கோபத்துல ஏதோ பேசிட்டா… போய் அவளை கூட்டிட்டு வா.”நம்ம வீட்டுக்கு வாழ வந்த பொண்ணு டா..
“யாரும் அவளை தடுக்க வேண்டாம். போகணும்னா போகட்டும்.”
அதை கேட்ட கங்காதேவியும் காயத்ரியும் உள்ளுக்குள் சந்தோஷப்பட்டார்கள்..
“நான் உங்களை சந்தேகப்பட்டதுக்கு காரணம் நீங்க தான். ஆனா இனிமே உங்க வாழ்க்கையில நான் குறுக்க வரமாட்டேன்.”என்ற உறுதியுடன் வீட்டை விட்டு வெளியில் சென்றாள் வெண்ணிலா..

Этого еще не доставало.
зеркало 1xbet, [url=https://1xbet-d1xp8.top/]https://1xbet-d1xp8.top/[/url] — это отличное решение для использования к сайту букмекера. Оно дает возможность проскочить блокировки и постоянно находиться в игре. Используя этот ресурс, пользователи может легко и быстро зайти на платформу.
Отличный топик
зеркало 1xbet, [url=https://1xbet-t9hsr.cyou/]1xbet-t9hsr.cyou[/url] – это альтернативный доступ к сайту, позволяющий избежать блокировок. Так как основной ресурс временно, пользователи могут использовать зеркало. Это позволяет процесс ставок и игр.
3 bedroom Apartments for sale in Al Barari commercial real estate for sale in dubai dubai international real estate address
I nuovi casino non aams, [url=https://www.pererubi.com/scopri-il-mondo-di-jackpot-veloci-slot-la-tua/]https://www.pererubi.com/scopri-il-mondo-di-jackpot-veloci-slot-la-tua/[/url] stanno guadagnando popolaritГ tra i giocatori. Questi casinГІ offrono bonus allettanti e una varietГ di giochi. Con tecniche di pagamento flessibili, sono ideali per chi cerca divertimento.
1xbet online, [url=https://www.rentavilla.gr/1xbet-360/]https://www.rentavilla.gr/1xbet-360/[/url] представляет широкий варианты ставок. Пользователи могут испытать разнообразными играми. Легкий интерфейс обеспечивает участие комфортным.
dubai property planning body buy a freehold property in dubai studio apartments for purchase in dic dubai
[url=https://777bet-download-free.com/]777 bet online casino[/url] and dive into the world of gambling with unique offers!
Among the various platforms available, 777bet stands out for its unique offerings.
studio apartment for rent dubai marina https://lindyjankura.com r.b.a real estate dubai united arab emirates
najlepsie slovenske online casino, [url=https://www.davecridermusic.com/online-kasino-svet-zabavy-a-vyhier/]https://www.davecridermusic.com/online-kasino-svet-zabavy-a-vyhier/[/url] – NajlepЕЎie slovenskГ© online casino ponГєka ЕЎirokГє ЕЎkГЎlu hier a vГЅhodnГ© bonusy. ДЊlenovia si mГґЕѕu vychutnaЕҐ zГЎbavu z pohodlia domova. SouvislГ© promo akcie a atraktГvne jackpoty poteЕЎia novГЅch zГЎujemcov.
отлично то что надо
зеркало 1xbet, [url=https://1xbet-wfdli.cfd/]1xbet-wfdli.cfd[/url] — это отличный способ сохранить доступ к любимым ставкам. Если основной сайт недоступен, игроки могут воспользоваться заменяющим источником. Регулярно обновляемые ссылки дают возможность избежать проблем.
Это — неправда.
зеркало 1xbet, [url=https://1xbet-3uvbl.cyou/]1xbet-3uvbl.cyou[/url] позволяет пользователям обходить блокировки и продолжать ставить на любимые события. Этот ресурс гарантирует доступ к широкому выбору ставок. Из-за простоты использования, игроки всегда находят удобные решения для стратегической игры.
Exploring new options, players can find Casino Sites Not on Gamstop, [url=https://krestannavidieku.sk/2026/05/exploring-new-non-gamstop-casino-sites/]https://krestannavidieku.sk/2026/05/exploring-new-non-gamstop-casino-sites/[/url] that offer unique experiences. These sites often provide a vast range of games, ensuring entertainment without restrictions. Various platforms prioritize protection, making the gaming experience enjoyable.
udenlandsk online casino, [url=https://unfiltered-adventures.com/2026/05/20/tuja-spletne-igralnice-raziskovanje-svetovnega/]https://unfiltered-adventures.com/2026/05/20/tuja-spletne-igralnice-raziskovanje-svetovnega/[/url] tilbyder fantastiske muligheder for interesserede at nyde forskellige spil. Det præsenterer en verdensklasse gambling oplevelse. Ydermere kan man nyde gode bonusser og fordele.
wasl properties llc https://selfstoragemanagement.org vat dubai real estate