18.நேசம்
வெண்ணிலா அந்த வீட்டை விட்டு வெளியே சென்ற அந்த நொடி, அவளுக்கு பின்னால் கதவு மூடிய சத்தம் மட்டும் இல்லை…
அவள் இதுவரை கட்டிக்காத்த கனவுகளும் மூடப்பட்ட சத்தம் போல இருந்தது.
வீட்டை விட்டு வெளியே வந்த வெண்ணிலா, எங்கு போகிறோம் என்றே தெரியாமல் நடந்தாள்.
கண்ணீரால் பாதை கூட தெளிவாக தெரியவில்லை.
“நான் திரும்ப வரணும்னு ஆசைப்படுற அளவுக்கு நீங்க என்னை காதலிக்கவே இல்ல…”
தான் சொன்ன வார்த்தைகளே மீண்டும் மீண்டும் காதில் ஒலித்தது.
ஆனால் அவளுக்கு தெரியவில்லை…
அந்த வார்த்தை விக்ரமின் இதயத்தை கிழித்துக் கொண்டிருந்தது ..
விக்ரம் மட்டும் கோபமாக அங்கேயே நின்றிருந்தான்.ஆனால் அவனது கை விரல்கள் நடுங்கிக் கொண்டிருந்தன.
“டேய்! போய் கூட்டிட்டு வாடா!” என்று விஜயா கண்ணீருடன் கத்தினார்.
“அம்மா… தயவு செய்து அமைதியா இருங்க …” என்றான் விக்ரம்.
அவன் குரலே உடைந்து போயிருந்தது.”அவளுக்கு நான் வேண்டாம்.”
“விக்ரம் அவ உன்னோட பொண்டாட்டி டா?”நைட் நேரம் வேற ஏதாச்சும் ஆகிட போகுது..
“அவ என்னை நம்பல அம்மா…”
என்று சொன்னவன் மெதுவாக சோபாவில் அமர்ந்தான்.அவன் கண்கள் வெறுமையாக கதவை பார்த்துக் கொண்டிருந்தன.அந்த கதவு இப்போ திறந்து…
“ஆதி…” என்று அவள் ஓடி வந்துவிடுவாள் போல.
ஆனால்…அவள் வரவில்லை.
அதே நேரம்…
கங்காதேவி அறைக்குள் சென்றதும் முகம் மலர்ந்தது.”இப்போ தான் நிம்மதி.”காயத்ரியும் சிரித்தாள்.
“இனி விக்ரம் மாமா எனக்கு தான்.”
ம்ம்ம் ஆமா டி கொஞ்ச நாள் அமைதியா இருப்போம் நீ அந்த விக்ரமை கைக்குள்ள போட்டுக்க. ..
அம்மா அந்த வெண்ணிலா திரும்ப வர மாட்டா இல்ல..
வரமாட்டா டி..அந்த டாக்டரை எவ்வளவு மிரட்டி பொய் சொல்ல வச்சி உன்னை விக்ரம் கூடவே இருக்குற மாதிரி செஞ்சுருக்கேன் …வந்தா அவளை என்ன செய்யணும்னு யோசிச்சு வச்சுருக்கேன்..அவ்வளவு சீக்கிரம் விட்டுருவேனா காயு மா..
லவ் யூ மம்மி…
கதவின் அருகில் நின்றிருந்த துருவ் அனைத்தையும் கேட்டுவிட்டான்.
அவன் முகம் கோபத்தில் சிவந்தது.
“ச்சீ…”
என்று அருவருப்புடன் பார்த்தான்.
“அண்ணி வாழ்க்கையை அழிச்சிட்டு சந்தோஷப்படுறீங்களா?”இப்போவே அண்ணாகிட்ட இதுங்களை பத்தி சொல்லணும்..என்று விக்ரமிடம் வந்தான்.
ஆனால் விக்ரமோ துருவ் இடம் பேசும் நிலையில் இல்லை.. தயவு செஞ்சு எனக்கு தனிமையில் இருக்க விடுங்க ப்ளீஸ் ..என்றான்..
துருவ் அண்ணாவிடம் இந்த காயத்ரி கங்கா பற்றி உண்மைகளை ஆதாரத்துடன் கொடுத்து அண்ணியை அண்ணன் வீட்டிற்கு அழைத்து வர வேண்டும் என்று நினைத்து சென்றான்..
மழை கொட்டிக் கொண்டிருந்தது.
பஸ் நிலையத்தின் ஒரு மூலையில் அமர்ந்திருந்த வெண்ணிலா, குளிரில் நடுங்கிக் கொண்டே இருந்தாள்.மொபைல் பேட்டரி கூட முடிந்து போயிருந்தது.
“எங்க போறது…?”
என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டாள்.அந்த நேரம்…
ஒரு கார் அவள் முன் வந்து நின்றது.
வெண்ணிலா முதலில் கவனிக்கவில்லை.ஆனால் காரிலிருந்து இறங்கிய மனிதனை பார்த்ததும் அதிர்ச்சியில் எழுந்து நின்றாள்.
“கார்த்திக்…?”
கார்த்திக் அவளை பார்த்து அதிர்ந்தான்.”வெண்ணிலா! நீ இங்க என்ன பண்ற?”
அவள் எதுவும் பேசவில்லை.
கண்களில் கண்ணீர் மட்டும் வழிந்தது.அந்த ஒரு பார்வையிலேயே அவள் எவ்வளவு உடைந்து போயிருக்கிறாள் என்று புரிந்துவிட்டது.
“வா… முதல்ல கார்ல ஏறு…”
என்றான்.மழையில் நனைந்து நின்ற
அவளுக்கு வேறு வழியும் இல்லை.
அதே நேரம்…
விக்ரம் மும்பை முழுவதும் வெண்ணிலாவை தேடிக் கொண்டிருந்தான்.ஒவ்வொரு பஸ் ஸ்டாண்ட்…ஒவ்வொரு ரயில் நிலையம்…ஒவ்வொரு ஹோட்டல்…
எல்லா இடத்திலும்.ஆனால் வெண்ணிலா கிடைக்கவில்லை.
இரவு இரண்டு மணி.சோர்ந்து போய் காரில் அமர்ந்திருந்தான்.
அப்போது…
துருவிடம் இருந்து போன்.
“அண்ணா!”
“என்ன துருவ்?”
“ஒரு முக்கியமான விஷயம் தெரிய வந்திருக்கு.”
“சொல்லு!”
“அந்த போட்டோஸ்…”
விக்ரம் புருவம் சுருக்கினான்.
“என்ன போட்டோஸ்?”
“அண்ணி காட்டுன போட்டோஸ் எல்லாமே எடிட் பண்ணதுன்னு தெரிஞ்சிருக்கு.”
விக்ரம் அதிர்ச்சியில் எழுந்து நின்றான்.
“என்ன?!”
“ஆமா அண்ணா… நான் சைபர் டீம்ல இருக்குற என் பிரண்ட்டை வைத்து செக் பண்ணேன்.”
அந்த நொடி…
விக்ரமின் இதயம் நின்றது போல இருந்தது.”யாரு பண்ணது?”
துருவ் சில நொடிகள் அமைதியாக இருந்தான்.பிறகு மெதுவாக சொன்னான்.
“காயத்ரி…”
கோபத்தில் விக்ரமின் கையில் இருந்த போனை போட்டு உடைத்தான் … .வீட்டில்…
காயத்ரி அமைதியாக தூங்கிக் கொண்டிருந்தாள்.திடீரென்று…
அவள் அறை கதவு ஓங்கி திறந்தது.
விக்ரம்.கண்களில் கொலைவெறி.
“வி… விக்ரம் மாமா…”
பளார்!
ஒரே அறை விட்டான்..காயத்ரி கட்டிலில் இருந்து கீழே விழுந்தாள்.
கங்காதேவி அலறி ஓடி வந்தார்.
“விக்ரம்!”
“யாரும் பேசாதீங்க!”
என்று கர்ஜித்தான்.
முழு வீடும் அதிர்ந்தது.அவன் காயத்ரியின் முன் அந்த போட்டோக்களை தூக்கி வீசினான்..”என் பொண்டாட்டியை வீட்டை விட்டு அனுப்புற அளவுக்கு உனக்கு தைரியம் வந்துருச்சா?”
காயத்ரி நடுங்க ஆரம்பித்தாள்.
“நா… நான்…”
“உண்மையை சொல்லு!”கங்காதேவிக்கும் இப்போது பயம் வந்துவிட்டது.. விக்ரமாதித்யாவின் கண்களில் பரிதாபம் இல்லை…கோபம் மட்டும் இருந்தது.
காயத்ரியின் உண்மை முழுவதுமாக வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரிய வந்ததும்..வீட்டில் உள்ள யாராலும் விக்ரமின் கோபத்தை சமாளிக்க முடியவில்லை.காயத்ரி அழுதுகொண்டே,
“விக்ரம் மாமா… நான் உங்களை காதலிச்சேன்… அதான்…”
என்று சொல்ல முயன்றாள்.
விக்ரம் கோபமாக “ச்சீ
“அதை காதல்னு சொல்லாத!”
“ஒரு பெண்ணோட வாழ்க்கையை அழிச்சிட்டு அதை காதல்னு சொல்ல உனக்கு வெட்கமா இல்லையா?”
என்று கத்தியவன், அருகில் இருந்த மேசையை ஓங்கி தட்டினான்.
கங்காதேவி பயந்து போனார்.
காயத்ரியின் கண்கள் சிவந்து எரிந்தன. பல நாட்களாக உள்ளுக்குள் அடக்கி வைத்திருந்த வேதனை, கோபம், ஏமாற்றம் எல்லாம் ஒரே நேரத்தில் வெடித்தது.
அவள் விக்ரமை நேராகப் பார்த்தாள்.
“எனக்கு என்ன வெட்கம்…?
என்னோட வாழ்க்கையை தான் அந்த வெண்ணிலா வாழ்ந்துட்டு இருந்தா…!””சொல்லுங்க மாமா… எப்படி ஒரு பொண்ணு மனசுல, ‘இவர் தான் உன் புருஷன்’ன்னு சொல்லி, கல்யாணத்துக்கு நிச்சயம் பண்ணி, ஆயிரம் கனவுகளோட காத்துட்டு இருப்பா தெரியுமா…?”
அவளது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.
“நானும் அப்படித்தான் காத்திருந்தேன்… நீங்க என்னோட வாழ்க்கையா வரப்போறீங்கன்னு நம்பினேன்… ஒவ்வொரு நாளும் உங்களை நினைச்சு சந்தோசப்பட்டேன்…”
குரல் தழுதழுத்தது.”ஆனா… ஒரு நாள் திடீர்னு நீங்க வேற ஒரு பொண்ணை தூக்கிட்டு வந்து கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க…!”
“அதுவும் என் கண்ணுக்கு முன்னாடியே… அவளை கொஞ்சுவீங்க… அவளுக்காக கவலைப்படுவீங்க… அவளோட வாழ்க்கையை வாழ்வீங்க…”
“அதை எல்லாம் நான் பார்த்துட்டு என்ன பண்ணணும்…? சந்தோசமா வாழ்த்தணுமா…?”அவள் குரல் உயர்ந்தது.”தியாகம் பண்ணுற பெரிய மனுஷி மாதிரி, இல்ல பரவாயில்ல மாமா… நீங்க சந்தோசமா இருந்தா போதும்’ன்னு சொல்லிட்டு ஒதுங்கி நிக்கணுமா…?”
விக்ரம் அதிர்ச்சியாக அவளைப் பார்த்தான்.
காயத்ரி கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.”நான் மனுஷி மாமா… கல்லு இல்ல..”நான் உங்களை காதலிச்சேன்…”வலிக்குது மாமா… ரொம்ப வலிக்குது…”
“நீங்க வெண்ணிலாவை பார்த்து சிரிக்கும்போதெல்லாம்… அவளை என் இடத்துல பார்க்கும்போதெல்லாம்…அவளை கொல்லனும் போல இருக்கும்… நான் கொஞ்சம் கொஞ்சமா செத்துட்டே இருந்தேன்…”ஒரு தடவையாவது என் மனசு எப்படி துடிச்சிருக்கும் என்று யோசிச்சு பார்த்தீங்களா…?”
“நீங்க யோசிக்க மாட்டீங்க அதுக்கு தான் அவளை வீட்டை விட்டு மட்டும் இல்ல உங்களோட வாழ்க்கையை விட்டும் விரட்டி விட்டேன்.., இனிமே நம்ம ரெண்டு பேருக்கும் இடையில் யாரும் வர போறது இல்ல..வாங்க கல்யாணம் பண்ணிக்கலாம் என்றாள் கிட்டத்தட்ட ஒரு பைத்தியத்தை போல..
அந்த நொடியில் அறை முழுவதும் அமைதி மட்டுமே இருந்தது.
விக்ரமின் வார்த்தைகள் ஒவ்வொன்றாக காயத்ரியின் காதுகளில் விழுந்தன.
ஆனால் அவள் கண்களில் இருந்த வெறித்தனம் மட்டும் குறையவில்லை.விக்ரம் ஆழமாக மூச்சை இழுத்துவிட்டு பேசினான்.
“காயத்ரி… உனக்கு உடம்பு சரியில்லாம போனதுக்காகத்தான் நான் உன்கூட இருந்தேன். உன்னை கவனிச்சேன். அதுக்கு மேல வேற எந்த எண்ணமும் இல்லை.”
“ஒரு தடவையாவது நான் உன்கிட்ட ‘நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்’ன்னு சொன்னேனா?”
“இல்ல…”
“உனக்கு எந்த உத்தரவாதமும் நான் கொடுக்கல.”விக்ரம் தொடர்ந்தான்.
“நியாபகம் இருக்கா… வீட்டுல கட்டாயப்படுத்துறாங்கன்னு தான் உன்கூட நிச்சயம் செய்ய சம்மதிச்சேன் அதுவும் என் தப்பு தான்..ஆனா அந்த நிச்சய மேடையில் கூட அந்த மோதிரத்தை நீயே தான் எடுத்துப் போட்டுக்கிட்ட.”நான் உனக்கு மோதிரம் போடவே இல்லை.””அப்படி இருக்கும்போது நான் உன்னை எப்படி ஏமாத்திட்டேன்னு சொல்ற?”
காயத்ரி உதடுகளை கடித்தாள்.
ஆனால் விக்ரம் நின்றுவிடவில்லை.
“ஆனா…”அவன் தலை குனிந்து ஒரு நொடி அமைதியாக நின்றான்.
“உன்னோட விஷயத்துல என் மேலயும் தப்பு இருக்கு.”
காயத்ரி உடனே அவனைப் பார்த்தாள்.”ஆரம்பத்துலயே நான் உன்கிட்ட விலகி இருந்திருக்கணும்.”
“உனக்கு ஒரு நம்பிக்கை வருகிற அளவுக்கு நான் பழகியிருக்கக் கூடாது.””அதை நான் ஒத்துக்கிறேன்.””அதுக்காக நான் மன்னிப்பு கூட கேட்டுக்கிறேன்.”
“ஆனா ஒரு விஷயம் மட்டும் மாறாது.”என் நிலாவை தவிர…”
“இந்த ஜென்மத்தில் எனக்கு வேற யாரும் பொண்டாட்டியா வர முடியாது.”அறையே அமைதியாகியது.”அவ மட்டும் தான் என் மனைவி.””என் வாழ்க்கை.””என் சந்தோஷம்.””அவளை நான் எவ்வளவு காதலிக்கிறேன்னு உன்னால புரிஞ்சுக்க முடியாது.”
காயத்ரியின் கண்களில் மீண்டும் கனல் பெருகியது.
விக்ரம் தொடர்ந்தான்.
“இப்போ கூட…”அவனது குரல் உடைந்தது.”அவ எங்க இருக்கான்னு தெரியாம நான் தவிச்சுட்டு இருக்கேன்.””அவ சாப்பிட்டாளா… தூங்குறாளா… அழுறாளா… சிரிக்கிறாளா… எதுவுமே தெரியல.”
“ஆனா நான் உயிரோட இருக்குற ஒவ்வொரு நிமிஷமும் அவளைத்தான் தேடிட்டு இருக்கேன்.”
அவன் கண்களிலும் ஈரம்மின்னியது.
“அதனால…””இனிமேலும் எனக்கும் உனக்கும் நடுவுல யாரும் வரப்போறது இல்லன்னு சொன்னியே…””அது உண்மைதான்.”
காயத்ரியின் முகத்தில் சிறு நம்பிக்கை தோன்றியது.
“ஏன்னா…”
“எனக்கும் உனக்கும் நடுவுல எதுவுமே இல்லை.””இருந்ததும் இல்லை.””இனிமேலும் இருக்கப் போறதும் இல்லை.”
காயத்ரி உறைந்துபோய் நின்றாள்.
“நிலா திரும்பி வந்தா…”
“அவளோட கால்ல விழுந்து மன்னிப்பு கேட்க நான் தயார்.”
“ஆனா அவளை மறந்துட்டு உன்னை ஏத்துக்கணும்னு மட்டும் எதிர்பார்க்காத.””அது நான் உயிரோட இருக்குற வரைக்கும் நடக்காது.”
என்று கூறினான்..
“வெண்ணிலா உயிரோட இருக்குற வரைக்கும் விக்ரம் எனக்கு கிடைக்க மாட்டான்…”என்ற கெட்ட எண்ணம் அவள் மனதில் விஷமாக பரவத் தொடங்கியது…!
.
ஈஸ்வரமூர்த்தி..உடனே
“விக்ரம்… அவ தெரியாம…”
என்று பேச ஆரம்பிக்க,
விக்ரம் திரும்பி அவரைப் பார்த்தான்.
“தெரியாமா?”
“எல்லாம் தெரிஞ்சும் நீங்க கூட அமைதியா இருந்தீங்க!”
“என் நிலா எவ்வளவு அழுதா… இந்த வீட்டுல யாருமே ஒரு தடவை கூட அவ பக்கம் நின்னு பேசல நானும் தான்..!”என்று உடைந்த குரலில் கேட்டான்.அந்த வார்த்தைக்கு ஈஸ்வரமூர்த்தியால் பதில் சொல்ல முடியவில்லை.விக்ரம் சில நொடிகள் கண்களை மூடி நின்றான்.
பிறகு மெதுவாக,
“இந்த வீட்டுல என் மனைவியை அவமானப்படுத்துனவங்களுக்கு இடம் இல்ல.”என்று சொன்னான்.
காயத்ரி அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள்.
“மாமா…”
“என்னை அப்படி கூப்பிடாத!”
என்று விக்ரம் கோபமாக சொன்னான்.
“இன்னும் அரை மணி நேரத்துக்குள்ள நீங்களும், உங்க அம்மாவும் இந்த வீட்டை விட்டு வெளியே போயிடணும்.”
காயத்ரி கதறி அழ ஆரம்பித்தாள்.
“நான் உங்களை விட்டு எங்க போவேன்?”
விக்ரமின் கண்கள் சிவந்தன.
“அந்த கேள்வியை என் நிலா வீட்டை விட்டு வெளியே போனப்போ
கேட்டுருக்கணும்!”என்று கத்தியவன்.
அரை மணி நேரம் கழித்து…
காயத்ரியும் கங்காதேவியும் தங்கள் பொருட்களுடன் வாசலில் நின்றனர்.
வீட்டில் யாரும் பேசவில்லை.துருவ் மட்டும் அமைதியாக நின்று கொண்டிருந்தான்.காயத்ரி
கடைசியாக விக்ரமைப் பார்த்தாள்.
அவன் முகத்தில் கோபம் மட்டுமே இருந்தது.ஒரு காலத்தில் அவளைப் பார்த்து சிரித்த முகம்…இன்று முழுவதுமாக மாறியிருந்தது.அவர்கள் வெளியே சென்றதும்…விக்ரம் மெதுவாக வீட்டின் கதவை மூடினான்.
பிறகு தங்கள் அறையில் திருமண புகைப்படம் இருந்த சுவரின் அருகே சென்று நின்றான்.அந்த
புகைப்படத்தை கையில் எடுத்தவன்,
“நிலா…”என்று அழைத்தான்.
“உன்னை காப்பாத்த வேண்டிய நானே உன்னை காயப்படுத்திட்டேன்…””ஆனா சத்தியமா சொல்றேன்…””நீ திரும்பி வர்ற நாளுக்காக உன் காதலுக்காக இந்த விக்ரமாதித்யா காத்துட்டு இருப்பான்…..”என்று கண்ணீருடன் சொன்னான்.
விக்ரம் கோபத்தில் காயத்ரியையும் கங்காவையும் வீட்டை விட்டு அடித்து துரத்தி விட்டான்..
கார்த்திக்கின் வீட்டில்…
பல மணி நேரம் அழுது களைத்த வெண்ணிலா தூங்கிக் கொண்டிருந்தாள்.அவள் தூங்கிய பிறகு…கார்த்திக்கின் அம்மா ஒரு விஷயத்தை கவனித்தார்.
வெண்ணிலாவின் கையில் இருந்த சிறிய மருத்துவ ரிப்போர்ட்.
அதை திறந்து பார்த்தவர்
அதிர்ச்சியில் நின்றார்.
“கார்த்திக்…”
“என்னம்மா?”
“இதை பாரு…”
கார்த்திக் ரிப்போர்ட்டை வாங்கி படித்தான்.அடுத்த நொடி அவன் முகம் முழுக்க அதிர்ச்சி.
ஏனெனில்…
அந்த ரிப்போர்ட்டில் எழுதப்பட்டிருந்தது இதோ
ப்ரெக்னேன்சி பாசிட்டிவ் என்று
வெண்ணிலாவுக்கு கூட இன்னும் தெரியாத ஒரு உண்மை…
அவள் வயிற்றில் விக்ரமின் குழந்தை வளர்ந்து கொண்டிருந்தது.
இரண்டு வாரங்கள் கடந்திருந்தது.
வெண்ணிலா பற்றி எந்த தகவலும் இல்லை. நிம்மதியாக இருக்க முடியவில்லை.அந்த மாலை நேரத்தில்…
அலுவலகத்தில் இருந்தவன் திடீரென்று போனை எடுத்தான்.வெண்ணிலாவின் நம்பரை திறந்தான்.சில நொடிகள் பார்த்துக்கொண்டே இருந்தான்.
பிறகு கால் செய்தான்.
“இந்த எண்ணை தற்போது தொடர்பு கொள்ள முடியாது…”
என்ற பதிவு செய்யப்பட்ட குரல் கேட்டது.
விக்ரமின் முகம் இறுகியது.
மீண்டும் அழைத்தான்.
அதே பதில்.
கோபமாக போனை உடைத்து போட்டான்.(அது என்ன புட்பால் ஆஹ் டா கீழே போட்டு விளையாடுற)
“போன் கூட ஆஃப் பண்ணிட்டாளா…?”என்று முணுமுணுத்தான்.ஆனால் அந்த குரலில் கோபத்தை விட கவலைதான் அதிகமாக இருந்தது.அன்று இரவு…
வீட்டிற்கு வந்த விக்ரம் நேராக அறைக்குள் செல்லவில்லை.
வாசலில் நின்றபடியே சுற்றிப் பார்த்தான்.தினமும் அவனை எதிர்பார்த்து காத்திருக்கும் தன் மனைவி வெண்ணிலா இன்று இல்லை.அந்த வெறுமை அவனை வாட்டியது.அப்போது திடீரென்று ஒரு எண்ணம்.”அவ ஒரு வேளை அவங்க அப்பா வீட்டிக்கு போயிருப்பாளா..என்று ராகவனுக்கு கால் செய்தான்..
கோபத்தில் ராகவன் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் விக்ரமின் நெஞ்சில் அம்பாக பாய்ந்தது.
விக்ரம் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு,
“மாமா… நான் நிலாவை எதுவும் பண்ணல. அவ வீட்டை விட்டு போயிட்டா. இப்போ எங்க இருக்கான்னு எனக்கும் தெரியல…”
என்று மெதுவாக சொன்னான்.
ஆனால் ராகவன் கோபத்தில் இருந்தார்.
“தெரியாதா? என் பொண்ணு உன் வீட்டிலிருந்து காணாம போயிருக்கா. உனக்கு தெரியாதுன்னு சொல்றியா? நீ தான அவளை வீட்டை விட்டு தொரத்தி விட்ட ..நீ தான டா அவள் வேணுன்னு தூக்கிட்டு போன…அவ எவ்வளவு நல்ல பொண்ணு தெரியுமா? அவளை அழ வச்சிருக்க டா நீ!”என்று கத்தினார்.
அந்த நேரத்தில் இந்தர் போனை வாங்கிக்கொண்டார்.
“விக்ரம்… உண்மையாவே நிலா அங்க இல்லையா?”என்னாச்சு என்ன பிரச்சனை..அவனது குரலில் கோபத்தை விட பயம் அதிகமாக இருந்தது.
விக்ரமின் கண்கள் கலங்கின.
“இந்தர்… நான் கோபத்தில் நிறைய பேசிட்டேன். ஆனா அவளை காயப்படுத்தணும்னு நினைக்கல. இப்போ அவ எங்க இருக்கான்னு தெரியல. நான் தேடிட்டு இருக்கேன்…”என்று நடந்த பிரச்சனையை உடைந்த குரலில் சொன்னான்.
இந்தரின் கண்களில் கண்ணீர் வழிந்தது.”எங்க பொண்ணு தனியா எங்க போயிருப்பா விக்ரம்? அவ வெளிய உலகமே தெரியாத பொண்ணு…”அந்த வார்த்தை விக்ரமின் இதயத்தை உலுக்கியது.
அப்போது தான் அவனுக்கு உண்மையான பயம் வந்தது.
இதுவரை கோபத்தில் இருந்தவன், இப்போது நடுங்க ஆரம்பித்தான்.
“மாமா… நான் கண்டிப்பா நிலாவை கண்டுபிடிச்சு கூட்டிட்டு வரேன்.”
என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்.போன் வைத்த உடனே,
“நிலா…”என்று அவன் மெதுவாக முணுமுணுத்தான்.வீட்டில் அவள் இல்லாத வெறுமை அவனை மூச்சு முட்ட வைத்தது.அவள் சிரிப்பு… அவள் சண்டை… மோகத்தில் அவள் “ஆதி…” என்று அழைக்கும் குரல்…எல்லாம் காதில் ஒலித்தது.செல்லமாக கடித்து வைக்கும் பொழுது சினுங்குவதும்..மோகம் முற்றி அவன் வேகம் கூட பயந்து அவன் நெஞ்சில் கோழிகுஞ்சாக ஒட்டுவதும் அவன் நியாபகத்தில் வர மனது வேதனை அடைந்தான்..
இருவரும் சேர்ந்து பெட்டில் நடத்திய சின்ன சின்ன சண்டைகள் எல்லாம் நியாபகம் வர அந்த அறை முழுவதும் வெண்ணிலா ஒவ்வொரு இடத்திலும் நிற்பது போல தோன்றியது…அடுத்த நொடியே அவன் காரின் சாவியை எடுத்துக்கொண்டு வெளியே ஓடினான்.
“நிலா… எங்க இருந்தாலும் நான் உன்னை கண்டுபிடிப்பேன். நீ மட்டும் என்கிட்ட திரும்பி வந்துடு…”
என்று கண்களில் கண்ணீருடன் தேட ஆரம்பித்தான்…
கார்த்திக்கின் வீட்டில் இருந்த வெண்ணிலா, ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவள் கண்களில் கண்ணீர்.
திடீரென்று அவளது இடது கண் துடித்தது.”ஏனோ மனசு ரொம்ப பதறுது…”என்று அவள் நெஞ்சை பிடித்துக்கொண்டாள்.
அவளுக்குத் தெரியாது…
அதே நேரத்தில் தன் உயிரானவன் பைத்தியமாய் அவளைத் தேடி அலைந்து கொண்டிருந்தான்.
அவன் மனம் முழுவதும் வெண்ணிலாவைத் தேடிக்கொண்டிருந்தது.
அடுத்த நொடி …
போனை எடுத்தான்.
தன்னுடைய நம்பிக்கையான ஆளுக்கு அழைத்தான்.”நிலாவை கண்டுபிடிக்கணும்.
அவ எங்க இருந்தாலும் கண்டுபிடிச்சே ஆகணும் என்ற கட்டளையிட்டான்..எனக்கு தகவல் வேணும்.”என்று சொன்னான்.பின்
போனை வைத்தவன், மழையில் நின்றபடியே அந்த வானத்தை பார்த்தான்.அந்த வானம் போல இப்போது அவன் வாழ்வும் நிலவை இழந்திருந்தது…
“எங்க இருக்க நிலா…?
சாப்பிட்டியா…?யாராவது கூட இருக்காங்களா…?”என்னை மன்னிச்சுறு டி அவளை மனதிற்குள் நினைத்து மருகினான்…பல மனதுக்குள் கேள்விகள் ஓடின.
அவன் கண்களை மூடினான்.
வெண்ணிலாவின் அழுகை முகம் மட்டுமே தெரிந்தது.அவள் கடைசியாக சொன்ன வார்த்தை காதில் ஒலித்தது.”ஒரு நாள் நான் சொன்னது உண்மைன்னு உங்களுக்கு புரியும் ஆதி…”விக்ரம் திடீரென்று கண்களைத் திறந்தான்.
அந்த வார்த்தை ஏனோ நெஞ்சை குத்தியது.இத்தனை நாளாக அவளை எவ்வளவு துன்ப படுத்தியிருக்கிறோம் என்று நினைக்க நெஞ்சு வெடிப்பது போல வலித்தது.நீயும் நானும் கல்யாணம் பன்னது என்னோட விருப்பத்தினால தான்..ஆனா நா உன்னோட வாழ்ந்த இந்த ரெண்டு மாத வாழ்க்கையில் நீ என்னைய புரிஞ்சுகிட்ட அளவு நான் உன்னை பற்றி புரிஞ்சுகவே இல்லயே டி..என்னைய மன்னிச்சு என்கிட்ட வந்துரு நிலா.லவ் யூ டி என்று அவள் படுத்த அவள் வாசம் வீச தலையணையில் முகம் புதைத்து தூங்கினான்..
நிலாவை கண்டு பிடிப்பானா இல்லை தொலைப்பானா..

fam real estate apartments for sale in dubai marina dubai buy property in usa from dubai
Мне кажется, вы ошиблись
зеркало 1xbet, [url=https://1xbet-jl0lc.cyou/]https://1xbet-jl0lc.cyou[/url] – это отличное решение для доступа к любимым ставкам. Ввиду того, что основной сайт может быть заблокирован, пользователи могут использовать альтернативные ссылки. Это позволяет оставаться в игре без проблем. Зеркало 1xbet работает постоянно, что предлагает бесперебойный доступ к ресурсам.
куда катится мир?
1xbet официальный сайт, [url=https://1xbet-e3cfr.icu/]https://1xbet-e3cfr.icu/[/url] предлагает разнообразный спектр пари для азартных энтузиастов. Удобный функционал и незамедлительная регистрация делают легкость в использовании.
Анапа — жемчужина черноморского побережья, и исследовать её по-настоящему можно только за рулём собственного, пусть и арендованного, автомобиля. Сервис https://auto-arenda-anapa.ru/ предлагает прокат без залога, без ограничения пробега и с неограниченной страховкой ОСАГО, что делает каждую поездку абсолютно беззаботной. Детское кресло и видеорегистратор включены в комплектацию, а оформление занимает три простых шага: выбрать автомобиль, отправить документы и указать место подачи. Команда профессионалов CarTrip всегда на связи в мессенджерах и готова ответить на любой вопрос. Путешествуйте свободно!
To enjoy seamless gaming, you should opt for 1xbet download apk, [url=https://www.paoloferrigato.com/download-the-1xbet-app-your-gateway-to-enhanced/]https://www.paoloferrigato.com/download-the-1xbet-app-your-gateway-to-enhanced/[/url]. This application provides the intuitive interface, enabling players to access their favorite games easily. Additionally, speed is optimized for fluent gameplay.
Я извиняюсь, но, по-моему, Вы не правы. Давайте обсудим это. Пишите мне в PM, пообщаемся.
Se stai cercando i Migliori casino online, [url=https://anaspercortina2021.it/]Migliori casino non AAMS[/url] per scommettere, troverai molte opzioni coinvolgenti. I premi offrono l’opportunitГ di amplificare le tue vincite. Scegli con strategia e goditi l’esperienza!
Casinos Non on Gamstop, [url=http://www.hoge-collegen.de/exploring-the-world-of-online-casinos-not-blocked-8/]http://www.hoge-collegen.de/exploring-the-world-of-online-casinos-not-blocked-8/[/url] offer a unique experience for players looking to explore gaming options beyond restrictions. These locations provide thrilling games without barriers, allowing betters to enjoy their top choices freely.
zahraniДЌnГ© online kasГno, [url=https://itecuk.net/online-kasina-s-nizkym-vkladom-zabava-bez-rizika/]https://itecuk.net/online-kasina-s-nizkym-vkladom-zabava-bez-rizika/[/url] ponГєka atraktГvne moЕѕnosti pre hrГЎДЌov. ГљДЌastnГci majГє prГstup k rozmanitГЅm hrГЎm a prvotriednym vГЅhodГЎm. Progres zabezpeДЌuje sГєkromie a pohodlie poДЌas hrania.
Ervaar de spanning van no CRUKS casino, [url=http://cafadvogados.com.br/goksites-zonder-cruks-vrijheid-in-online-gokken/]http://cafadvogados.com.br/goksites-zonder-cruks-vrijheid-in-online-gokken/[/url], waar geluk en entertainment samenkomen. Maak kennis met een wereld van plezier en ontdek diverse spellen die je zult boeien. Speel veilig en verantwoord!
Bookmakere uden dansk licens, [url=https://engenhocas.com/online-casinoer-uden-dansk-licens-hvad-du-skal-10/]https://engenhocas.com/online-casinoer-uden-dansk-licens-hvad-du-skal-10/[/url] er blevet et populært valg blandt spillere. De platforme tilbyder flere muligheder for væddemål. Mens der er nogle risici, appellerer de innovative bonusser og chancer. Det er vigtigt at vurdere disse platforme grundigt.
property finder dubai map 1 bedroom apartment for sale in international city dubai dream land real estate dubai
Вы не пробовали поискать в google.com?
1хбет зеркало, [url=https://1xbet-a5hbb.xyz/]https://1xbet-a5hbb.xyz[/url] – это отличный способ получить доступ к любимым азартным играм. Оно позволяет обходить блокировки|ограничения|запреты|неудобства, предоставляя стабильный вход в мир ставок. Не упустите шанс пользоваться этим удобным инструментом для удачных ставок и побед.
Своевременный топик
зеркало 1xbet, [url=https://1xbet-syrhi.sbs/]https://1xbet-syrhi.sbs/[/url] — это альтернативный способ доступа к платформе. С помощью зеркало, команды могут проходить блокировки и использовать всеми функциями сайта. Это практично для любого желающих участвовать в букмекерских ставках онлайн.
dubai land department rental https://afasaafrica.com sobha new projects
Хоть пару людей с пониманием нашлось
CasinГІ deposito minimo 5€, [url=https://luminara.it/]Migliori casino con deposito minimo 5€[/url] ГЁ una scelta ideale per chi vuole iniziare a giocare senza spendere troppo. Con questo sistema, i scommettitori possono esplorare diverse opzioni di gioco con un investimento ridotto. Per di piГ№ si ottengono incentivi esclusivi che rendono l’esperienza di gioco ancora piГ№ entusiasmante!
Вы ищете [url=https://www.divan-iz-moduley.ru/]модульный диван купить[/url], чтобы создать уникальный и вместительный интерьер любой площади.
Модульные диваны набирают популярность, поскольку они обладают высокой гибкостью и удобством. Это позволяет каждому владельцу создавать уникальный дизайн, идеально подходящий под его пространство. Модули легко комбинировать, меняя конфигурацию в зависимости от необходимости.
Каждый модуль можно использовать как отдельный элемент интерьера, что расширяет возможности для тех, кто любит менять обстановку.
1xbet download ios, [url=https://servicos.lojaking.com.br/1xbet-app-prilozhenie-kotoroe-izmenit-vash-igrovoj/]https://servicos.lojaking.com.br/1xbet-app-prilozhenie-kotoroe-izmenit-vash-igrovoj/[/url] позволяет игрокам совершать ставки в любой момент. Скачайте приложение и погружайтесь в простой навигацией.
new real estate companies in dubai https://colindrescleaning.com fair deal real estate brokers dubai
zahraniДЌnГ© online kasГno, [url=https://supremegutters.co.za/2026/05/17/slovenske-online-kasino-2026-buducnos-hazardneho/]https://supremegutters.co.za/2026/05/17/slovenske-online-kasino-2026-buducnos-hazardneho/[/url] vytvГЎra mnoЕѕstvo her. HrГЎДЌi mГґЕѕu uЕѕiЕҐ si rГґzne hry a zГskaЕҐ atraktГvne bonusy. Ochrana je tieЕѕ dГґleЕѕitГЎ.