19.நேசம்
காலை பொழுது மெதுவாக விடிந்தது.விக்ரமாதித்யா முழு இரவும் தூங்காமல் இருந்தான்.
கண்கள் சிவந்திருந்தது… முகம் சோர்ந்திருந்தது… ஆனால் மனசு மட்டும் ஒரு இடத்தில் நின்று கொண்டிருந்தது…அவன் நிலாவிடம்..
“நிலா…” என்று அவன் மெதுவாக முணுமுணுத்தான்.
அந்த நேரத்தில் துருவ் ஓடிவந்தான்.
“அண்ணா! அண்ணிய பத்தி ஒரு க்ளூ கிடைச்சிருக்கு!”
விக்ரம் உடனே தன் முழு உயரத்திற்கும் எழுந்து நின்றான்.
“என்னது சொல்லு!”
துருவ் அருகில் வந்து நின்ற ஒரு இளைஞனை காட்டினான்.
“இவர் யாரு? துருவ்..
அண்ணா இவன் நேம் அமீர்..அன்னைக்கு நைட் அண்ணி டாக்டர் அமிர்தம் கிளினிக் பக்கத்துல போயிருக்காங்க……”அண்ணியொட போனும் அங்க தா ஆஃப் ஆகிருக்கு..
விக்ரமின் கண்கள் இறுகின.
“மருத்துவமனையா…?”
அவன் மனசு ஒரு நொடி நின்றது.நோஊஊஊ..
“நிலா…உனக்கு ஏதும் ஆகிருக்காது..” என்று அவன் வேகமாக வெளியே ஓடினான்.
டாக்டர் என்னோட வொய்ப் இங்க வந்தாங்களா.. அவளுக்கு என்னாச்சு..என்று அந்த மருத்துவமனை அதிர கத்தினான்…
சார்..இது ஒன்னும் உங்க வீடு கிடையாது..இங்க ஆயிரக்கணக்கான பேஷண்ட் வராங்க…உங்க ஒய்ப் யாருன்னு சொன்னா தான தெரியும் என்றாள் அங்கு பணி புரியும் பெண்..
அண்ணா கூல்..சிஸ்டர் பேஷண்ட் பேரு மிசஸ்..வெண்ணிலா விக்ரமாதித்யா..
ஒஹ் அந்த பொண்ணா
விக்ரம் கண்ணில் ஒரு எதிர்பார்ப்பு…
“சார் அந்த பொண்ணு நேத்து மார்னிங் மயக்கமா இருக்குன்னு வந்து ப்ளட் டெஸ்ட் கொடுத்தாங்க…பட் ரிப்போர்ட் கூட வாங்க வரல…நேத்து நைட் இந்த ஹாஸ்பிஇடல் பக்கத்துல உள்ள பஸ் ஸ்டாப்பில் கையில் பேகோடு உக்காந்து இருந்தாங்க..நான் தான் ரிபோர்ட்டை கொண்டு போய் கொடுத்தேன்..அதை வாங்கிட்டு ஏதோ அவசரத்துல கிளம்பிட்டாங்க”…
விக்ரம் அந்த மருத்துவமனை வளாகத்தில் மண்டியிட்டு “நிலா “என்று கத்தி அழைத்தான்…
வெண்ணிலா கட்டிலில் படுத்திருந்தாள்..அவள் முகம் அமைதியாக இருந்தாலும்…கண்களில் ஒரு குழப்பம்.“நேத்துல இருந்து என்னோட உடம்பு ஏன் இப்படி இருக்கு…” டாக்டர்ட்ட காட்டும் முன்னாடியே வந்துட்டோமே…,என்று அவள் மெதுவாக சொன்னாள்.தலை சுழல ஆரம்பித்தது.“ஏன் இப்படி…” என்று மெதுவாஅமர்ந்தாள்.கார்த்திக் அருகே வந்து …
“வெண்ணிலா! என்னாச்சு?”
அவள் மெதுவாக தலை உயர்த்தி “எனக்கு… ரொம்ப களைப்பா இருக்கு…”அதே நொடியில் அவள் கண்கள் மூடியது…மயக்கம் அடைய…தண்ணீர் தெளித்து அமர வைத்தார்கள் கார்த்திக்கும் அவன் தாயும்..
வெண்ணிலா தெளிந்த பிறகு கார்த்திக்கின் அம்மா ..நிலா நீ ப்ரெக்னெண்டா இருக்க ம்மா..இதோ நேத்து உன் கைல இருந்த ரிப்போர்ட்..
அதை வாங்கி பார்த்தவள் அதிர்ச்சி யானாள்..அந்த ரிபோராட்டை கை நடுங்க வாங்கியவள் …நா …நான் அம்மாவாக போறேன் ..என்றவள் கண்களில் சந்தோசம் பொங்க கூறினாலும் விக்ரமை நினைக்க கதறி அழுதாள்..
“அழாத நிலா..உன் மேல கோபம் இருக்கு ஆனா ஒரு கர்ப்பிணி பொண்ண கஷ்டப்படுத்துற அளவு நாங்க மோசம் கிடையாது..இன்னைக்கு விக்ரமிற்கு போன் பண்ணி வர சொல்லி உன்னைய கூட்டிட்டு போக சொல்லுறேன்””..
“ஐயோ..வேண்டாம் ஆண்ட்டி..நான் திரும்பவும் அங்க போக விரும்பல..”
“நிலா நீ என்னம்மா பேசுற..!?.இப்போ நீ ரெண்டு ஆளா இருக்க..இந்த நேரத்துல புருஷன் கூட தானே இருக்கணும்..ஆனா நீ இப்படி போக மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கிற!!!!என்னாச்சு நிலா?
வெண்ணிலா தனக்கு நடந்த அனைத்தும் கூற கார்த்திக்கும் அவனது தாயும் அதிற்ச்சி அடைந்தனர்..
இப்போ சொல்லுங்க நான் போகனுமா..!!!??
“எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல..அன்னைக்கு என் பையன் கல்யாணத்துல தாலி கட்ட முன்னாடி தடித்து அந்த விக்ரம் உன்ன கட்டிக்கிட்டான்..அப்போ உன் மேல கோபம் இருந்தது..,ஆனா இப்போ என்னோட பொண்ணா தான் உன்னைய நினைக்கிறேன்..உன்னோட மன நிம்மதிக்காக கொஞ்ச நாள் நீ என் சிநேகிதி தாமரை கூட வந்து இரு….,இங்க இருக்க வேண்டாம் லண்டன்ல இண்டியன் ஸ்கூல் ஒன்னு இருக்கு அங்க டேன்ஸ் டீச்சர் வேணும்..நீ டெலிவரி க்கு அப்புறம் அங்க ஜாயின் பண்ணிக்கோ ..அதுவரைக்கும் அங்குள்ள ஸ்கூல் க்கு மேனேஜரா இருந்து பார்த்துக்கோ அங்கேயே தங்கிக்கோ ம்மா..ஆனா உன் புருஷன் வந்து கூப்பிட்டா நீ போய்டனும்..கோவத்துல வாழ்க்கையை இழந்துறாத நிலா என்றார்..
“ரொம்ப நன்றி ஆண்ட்டி என்று அவர் காலில் விழ தூக்கி கொண்டவர்..நான் விக்ரம் கிட்ட பேசுறேன் ம்மா..
வேண்டாம் ஆண்ட்டி..எனக்காக இந்த ஒரு ஹெல்ப் மட்டும் பண்ணுங்க ப்ளீஸ்… அவர்கிட்ட எக்காரணம் கொண்டும் பேசாதிங்க..என்று கேட்க சரி என்று அவரும் அறை மனதுடன் ஒப்பு கொண்டார்.
விமான நிலையம்.
மாலை நேரம் வெண்ணிலா கையில் ஒரு சிறிய பேக்…,வயிற்றில் அவனுடைய உயிர்.கண்களில் விக்ரமை பிரிந்த வலியால் வந்த கண்ணீர்.“இது தான் கடைசி…” என்று அவள் மனசுக்குள் சொன்னாள்.
“வெண்ணிலா…”
அவள் திடீரென்று திரும்பினாள்.
கார்த்திக்.அவன் மூச்சு வாங்கி ஓடி வந்திருந்தான்.
“நீ இப்படி தனியா போக வேண்டாம்…” என்று அவன் சொன்னான்.வெண்ணிலா மெதுவாக தலை ஆட்டினாள்.
“நான் இங்க இருந்தா… என் வாழ்க்கையே நாசமாயிடும் கார்த்திக்…”அவன் அமைதியாக நின்றான்.“ஆனா நீங்க தனியா போனா… இன்னும் கஷ்டப்படுவீங்க…”அம்மா சொன்னதுக்காக அங்க போக தங்க வேண்டாம்..
வெண்ணிலா “இப்போ எனக்கு கஷ்டம் இல்லாத வாழ்க்கையே இல்லை…”அவள் கையை வயிற்றில் வைத்தாள்.“இந்த குழந்தைக்காக தான் நான் போறேன்…”
விக்ரம்..,”வீட்டில் விக்ரம் கோபத்தில் நின்றிருந்தான்.“எங்க போனா… அவ எங்க என்ற தீவிர யோசனையில் நின்றான்..
வெண்ணிலா போர்டிங் கேட் நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.கார்த்திக் பின்னால் நின்று பார்த்தான்
“வெண்ணிலா…”
“என்ன?”
“ஒரு நாள்… விக்ரம் உன்னை உண்மையா புரிஞ்சுக்கிட்டா… நீ திரும்புவியா?”
வெண்ணிலா ஒரு நொடி அமைதியா இருந்தாள்.
கண்களில் கண்ணீர்.
“விக்ரம் இனி புரிஞ்சாலும்… நான் வர போறது இல்லை..…”அவள் திரும்பி நடந்தாள்.விமானம் புறப்பட்டது…ஜன்னல் வழியா கீழே பார்த்தாள்…இந்த வாழ்க்கை… இங்கயே முடிஞ்சுருச்சு…
“ஆதி… என்னை மன்னிச்சிடுங்க…”உங்க காதல் பரிசோட இந்த நாட்டை விட்டு போறேன்.. என்று கண் மூடினாள்.
வெண்ணிலா வீட்டை விட்டு சென்ற நாள் முதல்…விக்ரமின் வாழ்க்கை மாறிப்போயிருந்தது.வெளியே பார்த்தால் அதே விக்ரம்.
ஆபிஸ் போவது…மீட்டிங் அட்டெண்ட் பண்ணுவது…..எல்லாமே வழக்கம்போல இருந்தது.ஆனால் உள்ளுக்குள்…அவன் தினமும் வருந்தி கொண்டிருந்தான்.
இரவு நேரங்களில் அவளது புகைப்படத்தை பார்த்துக்கொண்டு அமர்ந்திருப்பான்.வெண்ணிலா பயன்படுத்திய பொருட்களை ஏக்க பெரு மூச்சு விட்டு பார்ப்பான்.அவர்கள் அறை அப்படியே இருந்தது.அவள் திரும்பி வருவாள் என்ற நம்பிக்கையில்…காத்து கொண்டிருந்தான் விக்ரமாதித்யா..
குடியும் குடித்தனமாக இருந்தான்..முகமெல்லாம் வழிக்க படாத தாடியுடன் ஏனோ தானோ என்று இருந்தான்…வீட்டில் உள்ள அனைவரும் அவன் நிலை கண்டு வருந்தினர்…
இரவெல்லாம் அவளை நினைத்தே படுத்து கிடந்தான்…அந்த கண்களும் அழகான முகமும்..பயந்த படி தன்னை நேசிக்கும் பார்வையும் அவளை இன்னும் அதிகமாக தேட வைத்தது..
முதலில் விக்ரம் மும்பை முழுவதும் வெண்ணிலாவை தேடினான்.
அடுத்து வெண்ணிலாவின் தோழிகள்…உறவினர்கள்…
பழக்கமான இடங்கள்…அவள் செல்ல விரும்பிய கோவில்…எல்லா இடங்களிலும் தேடினான்.ஆனால்…
வெண்ணிலா இருந்த இடம் மட்டும் தெரியவில்லை.நாட்கள் மாதங்களானது.மாதங்கள் வருடங்களானது.மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டது.ஒருநாள்…
ஆபிஸில் அமர்ந்திருந்த விக்ரமிடம் அவனது நண்பன் அர்ஜுன் ஓடி வந்தான்.
“விக்ரம்…!”
“என்னடா…?”
“நீ தேடுற தகவல் கிடைச்சிருக்கு.”
விக்ரம் உடனே எழுந்து நின்றான்.
“என்ன தகவல்?”
அர்ஜுன் ஒரு புகைப்படத்தை நீட்டினான்.அதை பார்த்த விக்ரமின் கைகள் நடுங்கின.அந்த போட்டோவில் இருப்பது நிலா..அவனின் காதலுக்கு சொந்தகாரி….ஒரு பனி பொழியும் தெரு.அதன் ஓரத்தில் ஒரு காபி ஷாப்.அதன் முன் நின்று கொண்டிருந்தாள் வெண்ணிலா.நீளமான கோட் அணிந்து…கழுத்தில் ஸ்கார்ஃப் சுற்றி…குளிரில் சிவந்த முகத்துடன்…
தன் அருகில் நின்ற சிறுவனின் கையை பிடித்திருந்தாள்.அந்த சிரிப்பு…அந்த முகம்…
அது வெண்ணிலாதான்.
“நிலா…”
என்று விக்ரமின் உதடுகள் நடுங்கின.மூன்று ஆண்டுகளுக்கு பிறகு…
அவளை மீண்டும் பார்த்திருந்தான்.
“எங்க எடுத்தது இது?”
என்று அவசரமாக கேட்டான்.
“லண்டன்.”
விக்ரம் அதிர்ச்சியில் உறைந்தான்.
“லண்டனா…?”
“ஆமா… என்னோட நண்பன் அங்க இருக்கான். தற்செயலா எடுத்த போட்டோல அவளை பார்த்துட்டு எனக்கு அனுப்பியிருக்கான்.”
விக்ரம் அந்த புகைப்படத்தை மீண்டும் பார்த்தான்.
வெண்ணிலா சிரித்துக்கொண்டிருந்தாள்.
அந்த சிரிப்பில் நிம்மதி இருந்தது.
பல வருடங்களுக்கு பிறகு…
அவள் அமைதியாக இருப்பது போல தோன்றியது.ஆனால்…
அவள் அருகில் நின்றிருந்த அந்த சிறுவன்…விக்ரமின் பார்வையை விட்டு அகலவே இல்லை.
“இந்த பையன் யாரு?”
என்று மெதுவாக கேட்டான்.
“தெரியல…”
என்று அர்ஜுன் சொன்னான்.விக்ரமின் இதயம் வேகமாக துடித்தது.அந்த குழந்தையின் கண்கள்…சிரிப்பு…
ஏனோ அவனுக்கே சொந்தமானது போல இருந்தது.
விடியற்காலை…
மேசையில் இருந்த பாஸ்போர்ட்டை எடுத்தான்.விமான டிக்கெட் புக் செய்தான்.அவன் மனதில் ஒரே எண்ணம்.”இந்த தடவை… எதுவானாலும் பரவாயில்லை… என் நிலாவை கண்டுபிடிக்காமல் நான் திரும்ப மாட்டேன்.
“
அதே நேரத்தில்…லண்டனில்…பனித்துளிகள் விழுந்துக்கொண்டிருந்தன.
ஒரு சிறிய பூங்காவில்…
“அம்மா… பிடிங்க…!”
என்று தன் மழலை மொழியில் சிரித்தபடி தத்தி தத்தி நடந்து கொண்டிருந்தான் அந்த சிறுவன்.அவனை பார்த்து சிரித்தாள் வெண்ணிலா.ஆனால்…
எதற்கோ அவளது மனம் அன்று காலையில் இருந்தே அமைதியாக இல்லை.காரணம் தெரியவில்லை.
இடது கண் துடித்துக்கொண்டே இருந்தது.வானத்தை பார்த்தாள்.
மெல்ல அவள் உதடுகள் முணுமுணுத்தன.
“ஏனோ… இன்று நீங்க என் பக்கத்துல இருக்கிற மாதிரி இருக்கு ஆதி…”
அவளுக்குத் தெரியவில்லை…
ஆயிரக்கணக்கான மைல்கள் தூரத்தில்…விக்ரம் ஏற்கனவே அவளை நோக்கி பயணத்தை ஆரம்பித்துவிட்டான்.

Да, действительно. Это было и со мной.
Czy marzysz o odkryciu nowych smaków? Zamów egzotyczne owoce z dostawą, [url=https://ukraineforumm.forumotion.com/t2475-topic]https://ukraineforumm.forumotion.com/t2475-topic[/url] prosto do Twojego domu! Kokos i pawpaw to tylko niektóre z egzotycznych owoców, które możesz doświadczyć. Smakuj ich unikalnym smakiem i aromatem, które zapewnią Twoje zmysły. Działaj i złóż zamówienie pełną ofertę już dziś!
villa to rent in mira dubai 2 bhk apartment for sale in dubai cheapest bed space in dubai
zahraniДЌnГ© online kasГno, [url=https://curator.artracx.com/uncategorized/slovenske-online-kasino-priruka-pre-hraov/]https://curator.artracx.com/uncategorized/slovenske-online-kasino-priruka-pre-hraov/[/url] ponГєka neobyДЌajnГ© zГЎЕѕitky pre hrГЎДЌov. RozmanitosЕҐ hier sГє ЕЎirokГ©, ДЌoЕѕ prilГЎka veДѕa fanГєЕЎikov hazardu. DГґraz na bezpeДЌnosЕҐ a fГ©rovosЕҐ robГ tieto platformy pouЕѕiteДѕnГ©. K dispozГcii sГє aj pobyty, ktorГ© poskytujГє hrГЎДЌom kvalitnejЕЎie ЕЎtartovnГ zisk.
Welcome to your exciting realm of 1xbet casino live, [url=http://www.easenet.jp/wordpress/1xbet-thailand-betting-the-ultimate-guide-to-2/]http://www.easenet.jp/wordpress/1xbet-thailand-betting-the-ultimate-guide-to-2/[/url]! Here, participants can delight in real-time gaming. Take part in thrilling contests and connect with professional hosts. Don’t miss your chance to hit the jackpot while having fun! Leap into the action now!