ATM Tamil Romantic Novels

நிலா நேசம் வானளவு

20.நேசம்

 

 

 

லண்டன்…

பனித்துளிகள் மெதுவாக விழுந்துக்கொண்டிருந்தன.விமான நிலையத்திலிருந்து நேராக அந்த புகைப்படம் எடுக்கப்பட்ட இடத்திற்கே வந்திருந்தான் விக்ரம்.அர்ஜுனின் நண்பன் கொடுத்த முகவரியை கையில் இறுக்கமாக பிடித்திருந்தான்.மூன்று ஆண்டுகள்…மூன்று ஆண்டுகளாக தேடிய அவனது காதல் கிளி..இன்று சில அடிகள் தூரத்தில் இருக்கலாம் என்ற எண்ணமே அவன் இதயத்தை வேகமாக துடிக்க வைத்தது.

அதே நேரம்…வெண்ணிலா பள்ளியில் இருந்து வெளியே வந்தாள்.

 

“மூன் பேபி…!”

என்று தத்தி தத்தி ஓடி வந்தான் ஒரு  இரண்டு வயது குட்டி பையன்.வெண்ணிலா சிரித்தபடி அவனை தூக்கிக் கொண்டாள்.

 

“ஆருஷ்… மெதுவா டா கண்ணா…”

 

“நான் விழ மாட்டேன் மூன்… ஐயம்  சூப்பர் ஹீரோ!” என்றான் தன் மழலை மாறாத குரலில் 

 

“அப்படியா…?”

 

“எஸ் மூன்…!”என்று அவன் சிரிக்க…

வெண்ணிலாவின் முகத்திலும் சிரிப்பு மலர்ந்தது.அவள் வாழ்க்கையில் ஒரே சந்தோஷம்…

அவள் மகன் மட்டுமே..இங்கு வந்த புதிதில் நிறைய நாள் தூங்காமல் அழுதிருக்கிறாள்..அவளின் ஒட்டு மொத்த வாழக்கையையும் மாற்றி போட்டது அவள் மகனின் திருமுகம்..அப்படியே அச்சு அசல் விக்ரமாதித்யா தான்..,குணத்திலும் ..

 

அங்குள்ள பள்ளியில் மேனேஜராக வேலை செய்து கொண்டு தன் மகனை பார்த்து கொண்டு நாட்களை கடத்துகிறாள் …இரவில் விக்ரமை தேடும் மனதை அடக்க பெரும் பாடு படுவாள்..அவன்  மட்டும் போதும் அவன் நெஞ்சு தேடி சாய அவன் தோளில் படுத்து கதை பேச நினைப்பாள்.. ஆனால் எதுவும் அவளால் முடியாது என்றதும் கண்ணீர் விடுவாள்..விக்ரமுடன் இருந்த ஒவ்வொரு நாளும்,எத்தனை நெருக்கமான இரவுகள்.. ஒவ்வொரு முறையும் காதலின் ஆழத்தை கொண்டல்லவா தன்னை தேடுவான்..பழைய நியாபகங்கள் அலை மோத தன் மகனை கவனிக்க ஆருஷ் வா போலாம் என்று அவனுடன் அந்த சாலையில் மறுபுறம் கடக்க …அவளருகில் ஒரு கார் நின்றது.அதிலிருந்து இத்தனை நாள் தான் தேடிய காதலன்..,கணவன் தன் ஒட்டு மொத்த ஜீவனுக்கும் உரிமையானவன் இறங்கினான் விக்ரம்…சாதாரணமாக சுற்றிப் பார்த்தான்.அங்கு .அவனுடைய சரி பாதி வெண்ணிலா நின்றிருந்தாள்..அதே கண்கள்…ஆனால் உயிரில்லை

ஆனால் முன்பை விட இன்னும் அழகாக…நின்று கொண்டிருந்தாள்.

 

“நிலா…”என்று அவன் உதடுகள் நடுங்கின.மூன்று  ஆண்டுகள் கழித்து…முதல் முறையாக…அவளை நேரில் பார்த்திருந்தான்.அவன் மெதுவாக அவளை நோக்கி நடந்தான்.வெண்ணிலா ஏதோ உணர்ந்தது போல திரும்பினாள்.

அவள் பார்வை அவன் மீது விழுந்தது.அந்த நொடி…

காலமே நின்றுவிட்டது.

 

கையில் இருந்த பை கீழே விழுந்தது.

“ஆ…தி…?”அவள் உதடுகள் நடுங்கின.விக்ரமின் கண்கள் கண்ணீரால் நிரம்பின.

 

“நிலா…”என்று அழைத்தான்..மூன்று ஆண்டுகளின் வலி இருந்தது.ஏக்கம்,

காதல் இருந்தது.வெண்ணிலா அப்படியே நின்றாள்.அவள் எதிர்பார்க்காத தருணம் இது.

ஒருநாள் மீண்டும் சந்திப்போம் என்று நினைத்திருந்தாள் தான்.

ஆனால்…இப்படி திடீரென்று அல்ல.

 

“நீங்க…”

என்று அவள் பேச முயன்றாள்.ஆனால் முடியவில்லை..

 

அப்போது…

“மூன்…”என்று ஆருஷ் அவள் கையை பிடித்தான்.விக்ரமின் பார்வை அந்த குழந்தையின் மீது விழுந்தது.

அந்த சிறிய முகம்…அந்த கண்கள்…

அந்த சிரிப்பு…அவன் கண்ணாடியில் தன்னைப் பார்ப்பது போல இருந்தது.

இதயம் ஒரு நொடி நின்றது.

 

“நிலா…”

என்று அவன் மீண்டும் அழைத்தான்.

“இந்த பையன்…”

வெண்ணிலாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

 

மூன் பேபி?”என்று அழைத்துக்கொண்டு ஓடி வந்த அந்த சின்ன சிட்டு தன்னை போல இருக்கும் விக்ரமை பார்த்து “கண்களில் சந்தோசம் மின்ன “ஹை டேடி வந்துட்டாங்க என்று மழலை மொழி பேசி சிரித்தான்..விக்ரமிற்கு அதிர்ச்சி தாங்க முடியாமல் இருந்தான்…விக்ரமால்  பேச முடியவில்லை.

 

 

 

 

ஆருஷிற்கு நிலா தந்தையை தினம் காட்டுவதால் அக்குழந்தை எளிதாக தன் தந்தையை அடையாளம் கண்டு கொண்டு விட்டது..விக்ரம் மெதுவாக குழந்தையின் அருகே மண்டியிட்டான்.அவன் கண்கள் கண்ணீரால் நிரம்பியிருந்தது.நிலவை குற்றம் சாற்றும் பார்வை ஒன்றை பார்த்து வைத்தான்..

 

 

என் மகனா…?”

என்று குரல் உடைந்து கேட்டான்.

வெண்ணிலா அமைதியாக தலை அசைத்தாள்.அடுத்த நொடி…

விக்ரம் அழுதுவிட்டான்.தன் மகனை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.ஆருஷுக்கு ஒன்றும் புரியவில்லை.என் மகன்..என்று சொல்லி மகிழ்ந்து அந்த பிஞ்சு குழந்தையை வாரி அணைத்து கொண்டான்…அவன் பெயர் தெரியாமல் இருக்கவும் வெண்ணிலா மெதுவாக அவன் நேம் ஆருஷ் என்றாள்..

 

“ஆருஷ் கண்ணா…”

 

“எப்படி இருக்க…?”

 

“.நல்லாருக்கேன் டேடி..  என்று மழலை மொழியில்  குழந்தை சிரித்தது.நீ ஏன் எங்களை பாக்க வரல மிஸ் யூ டேடி “என்று விக்ரமை முதமிட்டது அந்த பிஞ்சு இதழ்கள்..

அந்த பதிலைக் கேட்ட விக்ரமின் கண்ணீர் கட்டுப்பாட்டை மீறியது.

 

இரண்டு  வயது இருக்கலாம்…

வெண்ணிலா தன்னை விட்டு பிரிந்து  சென்ற மூன்று ஆண்டுகளில் அவனை போலவே அச்சு அசலாக ஒரு குட்டி உருவத்தில் தன்னை கண்டு புரிந்து கொண்டான்..

அவன் மெதுவாக வெண்ணிலாவை பார்த்தான்.

“நிலா என் குழந்தையை எனக்கு தெரியாமல் மறைச்சு வச்சு வாழ்ந்துருக்க..இது நியாயமா டி ??…”நான் இருக்கேன்னு உனக்கு தோனவே இல்லையா ..செத்து போய்ட்டேன்னு நினச்சு இருந்திட்டியா…நான் தான் அறிவு இல்லாம பண்ணிட்டேன்..அதுக்கு இவ்வளவு பெரிய தண்டனை நீ கொடுப்பன்னு நா நினைக்கல நிலா..என்றான்..

 

“ஆதி…”என்று ஏதோ கூற போனவள்

அவள் கண்களை மூடி கண்ணீரை துடைத்தாள்.

 

மெதுவாக சொன்னாள்.

“உங்க மகன் என் வயிற்றில் இருந்ததே எனக்கு தெரியாது. …”

 

அடுத்த நொடி…

விக்ரமின் உலகமே நின்றுவிட்டது.

அவன் மகன்…அவன் ரத்தம்…அவர்களின் காதலின் உயிருள்ள சாட்சி…அவன் முன் நின்றுகொண்டிருந்தான்..

 

“அப்பா…”

என்று அவன் தெரியாமலே சொன்ன அந்த ஒரு வார்த்தை…விக்ரமின் இதயத்தை நொறுக்கியும்..

நிறைத்தும் விட்டது.

 

 

பூங்காவில் இருந்த பெஞ்சில் வெண்ணிலா அமைதியாக அமர்ந்திருந்தாள்.ஆருஷ் அருகில் பனியில் விளையாடிக் கொண்டிருந்தான்.விக்ரம் அவளுக்கு எதிரே நின்றிருந்தான்..

இருவருக்குமிடையில் அமைதி…

ஆனால் அந்த அமைதிக்குள் ஆயிரம் கேள்விகள்.இறுதியாக வெண்ணிலா தான் பேச ஆரம்பித்தாள்.

 

“இப்போ எதுக்காக வந்திருக்கீங்க ஆதி…?”

அந்த கேள்வியில் கோபத்தை விட நிறைய வலி இருந்தது.

 

விக்ரம் எதுக்கு வருவாங்க டி..

“உன்னை கூட்டிட்டு போகத்தான்…”நீயும் என் பையனும் இல்லாம நா போக மாட்டேன்..

வெண்ணிலா கசப்பாக சிரித்தாள்.

“என்ன உரிமையில…?”

 

அந்த ஒரு கேள்வி விக்ரமின் இதயத்தை கிழித்தது.

“நிலா…”

 

“வேண்டாம்…”

என்று கையை காட்டி நிறுத்தினாள்.

“அன்னைக்கு நான் காயத்ரியை பத்தின உண்மைய சொன்னேன்….”

 

“ஆனா நீங்க என்ன பண்ணீங்க…?”

அவளது கண்களில் கண்ணீர் வழிந்தது.”வீட்டை விட்டு வெளிய போன்னு துரத்துனீங்க…”

“என் காதலை விட…””மற்றவங்கள நம்புனீங்க…”விக்ரமால் பதில் சொல்ல முடியவில்லை.

ஏனெனில்…

அவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் உண்மை.

 

“சாரின்னு ஒரு வார்த்தைல எல்லாம் மாறிடாது நிலா…”நான் சாரி கேட்க கூட தகுதியில்லாதவன்..என்று சொன்னான்.

 

“சாரி…?”

வெண்ணிலா சிரித்தாள்.

“இந்த மூணு வருஷ  வேதனைக்கு ஒரு சாரி கேட்டா எல்லாம் சரி ஆகிடுமா…?”நா அன்னைக்கு கொட்டும் மழையில நனஞ்சுட்டு அடுத்து எங்க போக என்ன பண்றதுன்னு தெரியாம இருந்தேன் ..இன்னொரு விஷயம் தெரியுமா எனக்குள்ள ஆருஷ் இருக்குற விஷயமே எனக்கு தெரியல..எவ்வளவு பெரிய துர் பாக்கியசாலி இல்ல நானு..உங்க கூட வாழ்ந்த ஒவ்வொரு நாளும் நான் உண்மையான காதலை தான் கொடுத்தேன்..ஆனா நீங்க..எனக்காக என்னையும் என் குழந்தையையும் யாரோ ஒருதிக்காக விரட்டி விட்டது தான் நடந்தது..

 

அப்போது…

விக்ரம் பெரு மூச்சொன்றை விட்டு  தனது மொபைலை எடுத்தான்.

ஒரு வீடியோவை ஓடவிட்டான்.

வெண்ணிலா குழப்பமாக பார்த்தாள்.அவள் முகம் மாறியது.

அந்த வீடியோவில்…காயத்ரியும் கங்காதேவியும் பேசிக் கொண்டிருந்தனர்.

 

“விக்ரம் வெண்ணிலாவை திரும்ப வீட்டுக்குள்ள கூப்பிட கூடாது…”நீ அவன் கூட நெருக்கமாவே பழகு..அப்போ தான் உன்னைய அவன் கட்டிக்குவான்..”அவளை வீட்டை விட்டு அனுப்பிட்டான் ..எப்படியோ அந்த விக்ரம் இனிமே வெண்ணிலாவை நினச்சு கூட பாக்க கூடாது அந்த அளவு உன் மயக்கத்துல வை….””நடந்தது எல்லாமே நாம போட்ட நாடகம்ன்னு அவனுக்கு தெரிஞ்சா நம்மளை கொன்னு போட்டுருவான்..”

 

வெண்ணிலாவின் கைகள் நடுங்கின.

 

“இது…”

 

“ஆமா நிலா…”விக்ரம் கண்ணீருடன் சொன்னான்.”எல்லாம் எனக்கு தெரிஞ்சுருச்சு…””நீ கொண்டு வந்து காட்டுன போட்டோஸ் எல்லாம் ஃபேக்ன்னு அதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது..அந்த காயத்ரி வேணுன்னு உன்னை என்கிட்ட இருந்து பிரிச்சுருக்கா..”நான் உன்னை எவ்வளவு பெரிய அளவுக்கு காயப்படுத்திட்டேன்னும் புரிஞ்சுகிட்டேன்…”என்னைய மன்னிச்சுறு டி..

 

வெண்ணிலா கண்களை மூடினாள்.

அவள் அனுபவித்த வலி…சிந்திய கண்ணீர்…அனைத்தும் நினைவுக்கு வந்தது.”இப்போ உண்மை தெரிஞ்சா என்ன…?”என்று அவள் உடைந்த குரலில் கேட்டாள்.”நான் இழந்த வாழ்க்கை திரும்ப வருமா…?”

 

விக்ரம் மெதுவாக அவள் முன் மண்டியிட்டான்.அதை பார்த்து வெண்ணிலா அதிர்ந்தாள்.

“ஆதி… என்ன பண்ணுறீங்க…?”

“தப்புக்கு தண்டனை வாங்குறேன்…”

அவன் கண்ணீருடன் சொன்னான்.

“உன் காதலை சந்தேகப்பட்டேன்…”

“உன் மனசை உடைச்சேன்…”உன்னை அடிச்சு வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டேன்..”நம்ம குழந்தை பிறக்கப் போறதையே தெரியாம இருந்தேன்…””என்ன மன்னிச்சிடு நிலா…”வெண்ணிலாவின் கண்கள் கலங்கின.இந்த மூன்று ஆண்டுகளில் விக்ரமை  வெறுக்க முயன்றாள்..ஆனால்…மறக்க முடியவில்லை.இப்போதும்…

அவன் அழுவதை பார்த்தால்…

அவள் மனசு வலித்தது.

 

அப்போது…

ஆருஷ் ஓடிவந்து நின்றான்.

 

“மூன் பேபி …”

“ஏன் அழற…?”

அவன் சிறிய கையால் வெண்ணிலாவின் கண்ணீரை துடைத்தான்.

பிறகு…

 

விக்ரமை பார்த்தான்.

“மூன் உனக்கு சாக்கி இந்தா என்று கொடுத்து அவனை தூக்க சொல்லி அழகாக சிரித்தது அந்த குழந்தை…..”

 

 

ஆருஷ் இருவரின் கைகளையும் பிடித்தான்.”நீங்க ரெண்டு பேரும் சண்டை போட கூடாது..இனிமே ஃப்ரெண்ட்ஸ் ஓகேயா ..?”

என்று கூற

 

வெண்ணிலாவும் விக்ரமும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

விக்ரம் மெதுவாக சொன்னான்.

சரி டா குட்டி கண்ணா.. இனிமே நோ பைட் ..என்றான்

 

 

மீண்டும் வெண்ணிலா வாழ்க்கைக்குள் விக்ரம் அடி எடுத்து வைத்திருந்தான்..

 

8 thoughts on “நிலா நேசம் வானளவு”

  1. In het toegankelijke online gokken zijn er talrijke opties. Een een de populaire bestemmingen is no CRUKS casino, [url=http://repuestossudamerica.com/boekmakers-zonder-cruks-vrijheid-in/]http://repuestossudamerica.com/boekmakers-zonder-cruks-vrijheid-in/[/url], waarin spelers genieten van een spannende ervaring. Dit platform heeft een collectie aan spellen, van slots tot tafelspellen. Ook is het belangrijk om verantwoord te spelen.

  2. 1xbet online, [url=https://www.upscalejourney.com/experience-thrilling-gaming-at-1xbet-cambodia-153/]https://www.upscalejourney.com/experience-thrilling-gaming-at-1xbet-cambodia-153/[/url] является отличным удачным вариантом для фанатов ставок. Ресурс пresents множество опций для пользователей. Следует сказать, что на платформе легко вычислять интересные мероприятия и делать инвестиции.

  3. najlepsie slovenske online casino, [url=https://www.ameeralbaher.com/nove-online-kasino-slovensko-zabava-vyhry-a/]https://www.ameeralbaher.com/nove-online-kasino-slovensko-zabava-vyhry-a/[/url] – NajlepЕЎie slovenskГ© online casino ponГєka ЕЎirokГЅ vГЅber hier, kde si hrГЎДЌi mГґЕѕu uЕѕiЕҐ vzruЕЎujГєcu zГЎbavu. V hranГ­ stolovГЅch hier a automatov je podstatnГ© vybraЕҐ si spoДѕahlivГ© kasГ­no. ГљДЌastnГ­ci si majГє zГ­skaЕҐ atraktГ­vne bonusy a zvГЅЕЎiЕҐ svoje ЕЎance na vГЅhru!

  4. Casinos Not on Gamstop UK, [url=https://liatahvie.com/discover-the-best-online-casinos-not-blocked-by-83/]https://liatahvie.com/discover-the-best-online-casinos-not-blocked-by-83/[/url] offer players a chance to enjoy gaming without restrictions. These establishments provide those looking for different choices. Numerous players seek fun beyond Gamstop, emphasizing the advantages of being able to play freely.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top