காவியம் – 19
கொத்தாக தூக்கிய பைரவனை தேவா தன் சிம்ம குரலில் மிரட்ட மரண பயம் தொற்றிக் கொண்டது பைரவனின் கால்கள் காற்றில் மிதந்தன. தேவாவின் விழிகளில் தெரிந்த உக்கிரம் அவனது நரம்புகளை நடுங்க வைத்தது.
“தேவா… என்னை வச்சு நீ ஒன்னும் பண்ண முடியாதுடா! என் அண்ணன் போலீஸ் ஆபீசர் ருத்ரன் சாதாரண ஆள் இல்லடா… நீ கோட்டைக்குள்ள இவ்வளவு கெத்தா சுத்திட்டு இருக்கியே, உன்னோட அத்தனை ரகசியங்களையும் வெளிய கொண்டு வர என் அண்ணன் ஆல்ரெடி ஆள் அனுப்பிட்டான்டா!” என்று இகழ்ச்சியாகக் கூறினான்.
“என்னடா உளறுற?!” என்று தேவா ஆத்திரத்துடன் பைரவனின் முகத்தில் பலமாக ஒரு குத்து விட்டான்.
பைரவன் அந்த வலியையும் பொறுத்துக் கொண்டு, “நான் உளறலடா தேவா… நீ காட்டுல இருந்து ஆசையா கூட்டிட்டு வந்திருக்கியே உன்னோட புதுப் பொண்டாட்டி இளவேனில்… அவளை உன் கோட்டைக்குள்ள அனுப்பி, உன்னோட அத்தனை ரகசியங்களையும் திருடிட்டு வரச் சொன்னதே என் அண்ணன் ருத்ரன் தான்டா!” என்று உண்மையை உடைத்தான் பைரவன்.
அவன் சொன்னதைக் கேட்டு தேவா அதிரவில்லை…”எனக்கு எல்லாம் தெரியும்டா! அவளை வச்சு என் ரகசியங்களை உன்னாலயும் உன் அண்ணனாலயும் எப்பவும் கண்டுபிடிக்க முடியாதுடா…” என்று அசால்ட்டாக சொல்லிச் சிரித்தான்.
ஆனால், பைரவன் முன்னாடி கெத்தாக சொல்லிவிட்டுச் சிரித்தாலும், தேவாவின் மூளைக்குள் அந்த சந்தேகம் பலமாகப் புகுந்து கொண்டது. தன் முகத்தில் படர்ந்த அதிர்ச்சியை அடுத்த விநாடியே தன் கம்பீரத்தால் மறைத்துக் கொண்ட தேவாவின் விழிகள், பைரவனை நோக்கி அனலைக் கக்கின. அவனது பிடி பைரவனின் கழுத்தில் இன்னும் இறுகியது.
“அவ என் பொண்டாட்டிடா பைரவா! என் கோட்டைக்குள்ள இருக்குற ரகசியங்கள் வெளியே போனா… அவ இந்த தேவாவோட கைகளாலேயே அழியப்போற முதல் ஆளா இருப்பாடா! அவளை வச்சு உன் அண்ணன் ருத்ரன் விளையாட நினைச்சா… கோட்டையைத் தொடுறதுக்கு முன்னாடி முதல்ல அழியப்போறது உங்க ரெண்டு பேரோட உயிர் தான்டா!” என்று முழங்கிவிட்டு, விறுவிறுவென அந்த அறையை விட்டு வெளியேறினான்.
உண்மையில் இளவேனில் ருத்ரன் சொல்லிவிட்டுத்தான் இந்த கோட்டைக்குள் வந்திருந்தாள். ஆனால், அவளுக்கு என்று ஒரு தனி நீதி இருந்தது. அவள் எப்போதும் யாருடைய கைப்பாவையாகவும் காரியத்தில் இறங்குபவள் கிடையாது.
ஆரம்பத்தில் தேவா ஒரு கெட்டவன், சிலைகளைக் கடத்துகிறவன், அவனோட செயல்களை வெளி உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டணும் என்றுதான் நினைத்திருந்தாள் இளவேனில். ஆனால், அவனுடன் பழகியதில் அவன் சிலைக் கடத்தல் வேலைகளைச் செய்திருக்க மாட்டான், அப்படியே செய்திருந்தாலும் அதில் ஏதாவது ஒரு நியாயமான காரணம் இருக்கும் என்று புரிந்துதான் அவனைக் காதலிக்கவே ஆரம்பித்திருந்தாள். காப்பகத்தில் உள்ள குழந்தைகளிடம் அவன் காட்டிய பாசமும், அவர்களுக்காகப் பணம் கொடுத்து உதவியதையும் கண்டவளுக்கு தேவாவின் மீதான காதலை இன்னும் அதிகமாக்கியது. அவனிடம் உள்ள சிலைகளை அரசாங்கத்திடம் ஒப்படைக்கச் சொல்லவேண்டும் என்று தான் எண்ணியிருந்தாள்.
அவனைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றுதான், அவள் ஜீவாவை வைத்து கோட்டையின் ரகசிய அறைக்குப் போகும் வழியை கண்டுபிடிக்கச் சொல்லியிருந்தாள்.
இப்போது, வேணியைப் போல நான் இருக்கிறேன் என்று மலர்விழி கூறியதும், தேவா தன்னிடம் ஏதோ பெரிய ரகசியத்தை மறைக்கிறான் என்று இளவேனில் யோசித்துக் கொண்டிருந்தாள். அந்த வேளையில்தான் அவளது ஃபோன் அடித்தது.
அவள் மறைத்து வைத்திருந்த தனிப்பட்ட ஃபோனை எடுத்துப் பேசினாள்.
மறுமுனையில் ருத்ரன், “இளா… அங்கே என்ன பண்ணிட்டு இருக்க? நான் உன்னை எதுக்காக அங்கே அனுப்பினேன்? தேவா மறைச்சு வச்சிருக்க கடத்தல் சிலைகள் எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சு என்கிட்ட கொடுக்கச் சொன்னேன்ல! தேவா மாதிரி இருக்குற கிரிமினல்ஸ்க்கு தண்டனை கிடைக்கணும் இளா!” என்றான் நல்லவனைப் போல ஆவேசமாக.
“நிறுத்து ருத்ரன்!” என்று இளவேனில் சீறினாள்.
“உன்னை நல்லவன்னு நம்பித்தான் நான் தேவாவைப் பத்தித் தவறா நினைச்சு இந்த கோட்டைக்குள்ள வந்தேன். ஆனா, நீ நினைக்கிற மாதிரி இங்க எந்தக் கடத்தல் சிலையும் இல்லை. அவரு பாரம்பரியமான சிலைகளை மட்டும்தான் செஞ்சு கொடுத்துட்டு இருக்காரு. இன்னொரு முறை என் தேவாவைப் பத்தித் தவறா கிரிமினல்னு சொல்லாதே! நீ போலீஸ்தானே? தைரியம் இருந்தா நேரா இங்க வந்து சர்ச் பண்ண வேண்டியதுதானே?!” என்று அவனை கடுமையாகக் கெடுபிடி போட்டாள்.
மறுமுனையில் ருத்ரனுக்குக் கோபம் தலைக்கேறியது. “உன்னை நம்பினேன் பாரு, என்னைச் சொல்லணும்! நீ அவனுக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருக்கியா? உன்னையும் சேர்த்துத் தூக்கி உள்ள வைக்கிறேன் பாரு!” என்று மிரட்டினான்.
இளவேனில் துளியும் அசராமல், “தப்பு பண்றவங்கதான்டா பயப்படணும்! நான் தேவாவோட பொண்டாட்டி… யாருக்கும் பயப்பட மாட்டா இந்த இளவேனில்! ஃபோனை வைடா!” என்று ஆக்ரோஷமாக கூறிவிட்டுப் ஃபோனை கட் செய்தாள்.
அவள் ஃபோனை வைத்த அதே விநாடி… சட்டென்று திரும்பியவள் அப்படியே அதிர்ந்து போனாள். அறைக் கதவில் சாய்ந்து கொண்டு, கைகளைக் கட்டியபடி தேவா நின்றிருந்தான். அவளது அத்தனை பேச்சுகளையும் கேட்டுவிட்டு, அவளது முகத்தையே தீர்க்கமாகப் பார்த்துக் கொண்டிருந்த தேவா மெதுவாக இளவேனிலின் அருகே நடந்து வந்தான். அவளது ஃபோன் பேச்சை எல்லாவற்றையும் கேட்டுவிட்டான். ‘என் வேனில் நேர்மையானவள்’ ‘இவளைப் போய் நான் சந்தேகப்பட்டுவிட்டேனே’ என்று அவனது முரட்டு விழிகளில் கோபத்திற்குப் பதிலாக ஒரு தவிப்பும், அளவற்ற காதலும் அலைமோதியது.
“வேனில்…” என்று தேவா அவளது தோள்களைப் பற்ற முயல…
இளவேனில் சட்டென்று அவன் தன்னை தவறாக நினைத்துவிட்டானோ!? என்று பதற்றப்பட்டவள், “எல்லாத்தையும் கேட்டுட்டீங்கதானே ஜங்கிள் கிங்? நான் சொல்லுறதை பொறுமையாகக் கேளுங்க. நான் ருத்ரன் சொல்லிதான் இந்த கோட்டைக்குள்ள வந்தேன். ஆனா அவனுக்காக இல்லை, உண்மை என்னன்னு கண்டுபிடிக்கத்தான் வந்தேன்” என்றாள் உறுதியான குரலில்.
“எனக்கு இப்போ அதைப்பத்தி கவலையில்லை வேனில். நீ என் மேல வச்சிருக்க இந்த நம்பிக்கை போதும். ஆனா, நீ கீழ மலர்விழிகிட்ட வேணியைப் பத்தி கேட்ட இல்லையா? அவளைப் பத்தின உண்மையை இப்போ நான் உன்கிட்ட சொல்றேன்…” என்று நிறுத்தினான்.
“என்மேல உங்களுக்கு கோபமே இல்லையா?”
“கொஞ்ச நேரம் முன்னாடி இருந்துச்சு, இப்ப இல்லைடி” என்றான் அவளது கைகளைப் பிடித்து தன் நெஞ்சில் வைத்துக் கொண்டு.
“சொல்லுங்க… யாரு அந்த வேணி? ஏன் மலர்விழி என்னை அவளைப் போலவே இருக்கேன்னு சொல்றா? எனக்கும் அவளுக்கும் என்ன சம்பந்தம்?” என்று இளவேனில் படபடப்பாகக் கேட்டாள்.
“வேணி என் அத்தை பொண்ணு. அவளைத்தான் போலீஸ் ஆபீசர் ருத்ரனும் அவனோட தம்பி பைரவனும் சேர்ந்து கொன்னாங்க. நீ பாக்குறதுக்கு அச்சு அசல் அப்படியே என் வேணியோட சாயல்லயே இருக்க வேனில்! உன்னோட இந்த முக அமைப்பை வச்சுதான், என் கோட்டைக்குள்ள உன்னை அனுப்பி என்னை ஏமாத்தலாம்னு ருத்ரன் பிளான் பண்ணியிருக்கான்” என்றான் நிதானமாக.
அவன் சொன்ன வார்த்தைகளைக் கேட்ட இளவேனில் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போனாள். தன் முகத்தைத் தொட்டுப் பார்த்தவள், அடுத்த விநாடி அவளுக்குள் ஒரு பெரிய சந்தேகமும் ஏமாற்றமும் தலைதூக்கியது.
தேவாவின் முகத்தை உற்றுப் பார்த்தவள், “அப்போ… நீங்க என்னை நிஜமாவே காதலிக்கலையா ஜங்கிள் கிங்? நான் பாக்குறதுக்கு உங்க அத்தைப் பொண்ணு வேணி மாதிரி இருக்கேன்ற ஒரே காரணத்துக்காகத்தான் என் மேல அன்பு காட்டுனீங்களா? அவளோட முக ஞாபகத்துலதான் என் கழுத்துல மூலிகைத் தாலியைக் கட்டுனீங்களா? உங்களோட காதலும், இந்த அரவணைப்பும் எனக்கு இல்லையா?… இறந்து போன வேணியோட முகத்துக்கா?!” என்று ஏமாற்றத்தோடு அவன் நெஞ்சிலிருந்து தன் கையை எடுத்துக் கொண்டாள்.
இளவேனில் தன் மேலிருந்து கையை எடுத்தது தேவாவின் முரட்டு நெஞ்சைக் குத்தியது. அவளது கண்களில் இருந்த கண்ணீரையும் தவிப்பையும் பார்த்தவன் மெதுவாகத் தன் கடந்த காலப் பக்கங்களை அவளுக்கு முன்னால் விரித்தான்.
“இல்லை வேனில்… நீ நினைக்கிறது தப்பு. நான் உன்னை வேணியோட முகத்துக்காகக் காதலிக்கலை. உன்னோட தைரியம் எனக்குப் பிடிச்சது. உன்னோட உதவி பண்ணுற மனப்பான்மை எனக்கு உன்மேல் ஆசையை வரவச்சது. எல்லாரும் என்கிட்ட எட்டி நிற்பாங்க, ஆனா நீ என்னை எதிர்த்து நின்றபோது உன்னைப் பார்த்து பிரமித்துப் போனேன். பார்பி டால் போல அழகா இருக்க நீ எப்படி என் மனசுக்குள்ள வந்தன்னு தெரியலடி. என் வேணி மேல பாசம் இருந்தது உண்மைதான்” என்றவன், “இப்போ ருத்ரனுக்கும் எங்களுக்கும் என்ன பகை, அவன் ஏன் வேணியைக் கொன்னான்ங்குற விபரம் உனக்குத் தெரியனும். அப்போதான் என்னை பத்தின உண்மைகள் உனக்குப் புரியும்” என்று வேணியுடன் வாழ்ந்த நாட்களைச் சொல்ல ஆரம்பித்தான் தேவா.
“எனக்கு அம்மா, அப்பா கிடையாது. மாமா வீட்டில்தான் வளர்ந்தேன். என்னோட மாமா முத்தரசன் பரம்பரை பரம்பரையாகக் கோயில் சிலைகள் செய்து வரும் தொழில் செய்து வந்தார். அத்தை மரகதம். என் மேல ரொம்ப பாசமா இருப்பாங்க. மாமாவிற்கு இரண்டு மகள்கள். மூத்தவள் கிருஷ்ணவேணி, இளையவள் மலர்விழி.
மலர்விழி அப்போது படித்துக் கொண்டிருந்தாள். நானும் ரகுவும் மாமாவிற்கு உதவியாகச் சிலைகள் செய்யும் தொழிலில் தீவிரமாக ஈடுபட்டு வந்தோம். குறிப்பாக நான் எப்போதும் என் வேலையிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பேன். நான் சிலை செய்வதில் தனி நுணுக்கம் இருக்கும் என்று மாமாவிற்கு ரொம்ப கர்வம். கிருஷ்ணவேணி என் மேல் அளவில்லாக் காதல் கொண்டிருந்தாள். எப்போதும் என் பின்னாலேயே அவளது உலகம் சுழன்று கொண்டிருந்தது.
நான் தொழில்தான் முக்கியம் என்று சொன்னாலும் கிருஷ்ணவேணி அதையெல்லாம் கேட்பதாக இல்லை. நான் பட்டறையில் தீவிரமாக வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போதெல்லாம்,எனது அருகே வந்து ஆசையாகப் பேசிக் கொண்டே இருப்பாள். மதியமானால் எங்களுக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு ஓடி வருவது அவளது வழக்கமாக இருந்தது.
“மாமா… நான் உனக்கு என் கையாலேயே ஊட்டி விடுவேன்” என்று பிடிவாதம் பிடிப்பாள். அவன், “இதெல்லாம் வேணாம் புள்ள” என்று மிரட்டினாலும் அசராமல் அவனுக்கு ஊட்டி விட்டுத் தன் ஆசையைத் தீர்த்துக் கொள்வாள்.
“என் ஆசையெல்லாம் என்ன தெரியுமா மாமா… கல்யாணம் முடிஞ்சதும் ஒரு பத்து நாள் நாம காட்டுக்குள்ள தனியா இருக்கணும். நம்ம ஹனிமூன் அந்தக் காட்டுக்குள்ளதான் நடக்கணும்” என்று என்னுடன் தான் வாழப் போகும் நாட்களைக் கனவாக எண்ணி எண்ணி மகிழ்ந்து கொண்டிருந்தாள் கிருஷ்ணவேணி.
“வேணி… இப்போதைக்குத் நம்ம தொழிலை இன்னும் பெரிய இடத்துக்குக் கொண்டு போகணும். நாம கல்யாணம் பண்ணிக்கிட்டு அப்புறமா காதலிப்போம் புள்ள… இப்போ நீ போய் உன் வேலையைப் பாரு” என்று என் தொழிலில் காட்டிய அதே தீவிரத்தோடு அவளுக்குப் புரிய வைத்தேன்.
அந்தச் சமயத்தில்தான் போலீஸ் ஆபீசர் ருத்ரன் முதன்முதலாக மாமாவின் பட்டறைக்கு வந்தான்.
“நாங்க சொல்லுற சிலைகளை நீங்க செஞ்சு தரணும். அதுக்கு ஏத்த மாதிரி உங்களுக்குப் பணம் வந்து சேரும்” என்று ருத்ரன் தன் போலீஸ் திமிரோடு முத்தரசு மாமாவிடம் கேட்டான்.
முத்தரசன் மாமாவோ, “எனக்குக் கடத்தல் சிலைகள் செய்யத் தெரியாது தம்பி. சட்டத்துக்கு விரோதமான எந்த வேலையையும் நாங்க பண்ண மாட்டோம்” என்று கராராகச் சொன்னார்.
“மரியாதையா நாங்க கேக்குற சிலைகளை நீங்க செஞ்சுதான் ஆகணும்!” என்று ருத்ரன் மாமாவை மிரட்டத் தொடங்கினான்.
அங்கே நின்று கொண்டிருந்த கிருஷ்ணவேணிக்குக் கோபம் தலைக்கேறியது. ருத்ரனுக்கு முன்னால் வந்து நின்று, “நீங்க போலீஸா இருந்தா நாங்க பயப்படணுமா? நீங்க பண்ணச் சொல்லுற தவறான வேலையை நாங்க பண்ணவே மாட்டோம்! ஒழுங்கா இங்கிருந்து ஓடிப் போயிடுங்க!” என்று ருத்ரனையே எதிர்த்து மிரட்டினாள்.
“போலீஸ்காரனையே மிரட்டுறியா?!” என்று கத்தியபடி, ருத்ரன் வேணியை அடிப்பதற்காகத் தன் கையை ஓங்கினான்.
அதே விநாடி… புயலைப் போல அங்கே வந்த தேவாவோ, “யார் மேலடா கையை வைக்கிற?!” என்று சிம்மக் குரலில் கத்தியவன், வேணியின் மீது படவிருந்த ருத்ரனின் கையைப் பிடித்து முறுக்கிப் பிடித்தான்.
“டேய்!… நான் யாருன்னு தெரிஞ்சும் என் மேல கையை வைக்கிறியா?!” என்று ருத்ரன் ஆத்திரமாகக் கேட்டான்.
“நீ யாருன்னு எங்களுக்கு நல்லாவே தெரியும் இன்ஸ்பெக்டர் ருத்ரன்! இப்போ நீ இங்க வந்து எங்கள்கிட்ட சட்டத்துக்கு விரோதமா சிலைகள் செய்யச் சொல்லி மிரட்டுனதை, அப்படியே நாங்க கமிஷ்னர் ஆபீஸ்ல போய் சொன்னா… உன் வேலை போயிடும். எப்படி?!” என்று மிரட்டினேன்.
என்னுடைய பிடியில் இருந்து தன் கையை உதறித் தள்ளியவன், “நான் யாருன்னு உங்களுக்குக் காட்டுறேன்டா!” என்று என்னையும் அங்கே நின்ற கிருஷ்ணவேணியையும் பார்த்து பற்களைக் கடித்தபடி வேகமாகத் தன் ஜீப்பில் ஏறி அங்கிருந்து தப்பினான்.
அடுத்த சில மாதங்களில் வெளிநாட்டிலிருந்து கூட சிலைகள் பண்ண ஆர்டர்கள் குவிந்தது. நானும் ரகுவும் சிலைகள் பண்ணும் பெரிய பட்டறையை வைத்துவிட்டோம். பல ஆட்களுக்கு வேலையும் கொடுத்தோம்.
ருத்ரன் வேறு ஆட்கள் மூலம் மறைமுகமாக வெண்கல சிலைகள் செய்து தரச் சொல்லிக் கேட்டான். நான் மறுத்துவிட்டேன். ருத்ரன் மாமாவிடம் வந்து சிலைகள் செய்து தரும்படி கேட்டதையும், என் குடும்பத்தினரை மிரட்டியதையும் கமிஷ்னரிடம் ஆதாரத்துடன் சொல்லிவிட்டேன். போலீஸ் டிபார்ட்மெண்டில் ருத்ரனை சஸ்பெண்ட் செய்துவிட்டனர். அதனால் என் மீது ஆத்திரத்துடன் சுற்றிக் கொண்டிருந்தான் ருத்ரன்.
அன்று முத்தரசன் மாமா குடும்பத்தினரும் நாங்களும் குலதெய்வம் கோயிலுக்குச் சென்றிருந்தோம் .கோயிலில் எனக்கும் கிருஷ்ணவேணிக்கும் குடும்பத்தினர் முன்னிலையில் திருமண நிச்சயம் நடைபெற்றது. எப்போதும் என் நினைப்பிலேயே இருந்த கிருஷ்ணவேணிக்கு நிச்சயம் முடிந்ததில் சந்தோஷம் தாங்கவில்லை. “நான் ஆசைப்பட்ட மாதிரியே சீக்கிரம் நம்ம கல்யாணம் நடக்கப் போகுது மாமா” என்று என் கையைப் காதலாய் பிடித்துக் கொண்டாள்.
மரகதமோ, “தம்பி எங்களுக்கு அப்புறம் நீதான் எல்லாமுமாக இருந்து பார்த்துக்கணும்” என்றார் ஆனந்தக் கண்ணீருடன்.
“நான் பார்த்துக்குறேன் அத்தை, கவலைப்படாதீங்க” என்றேன். சொந்தங்கள் எல்லாம் இருக்க இரவு வரை கோயிலில் இருந்தோம்.
இரவு சாப்பாடு முடித்துக் கொண்டு முத்தரசன் மாமா, மரகதம் அத்தை, கிருஷ்ணவேணி ஒரு காரிலும், மலர்விழி, ரகு, நான் என எல்லாரும் இன்னொரு காரிலும் ஏறி வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தோம். நிச்சயம் முடிந்த சந்தோஷத்தில் கார் முழுக்கப் பேச்சும் சிரிப்புமாக இருந்தது.
கார் மெதுவாக மெயின் ரோட்டை விட்டு விலகி, காட்டுப் பாதையை ஒட்டிய வளைவில் திரும்பிய அந்த நேரம்… எதிரே எந்த ஒரு விளக்கும் எரியாமல், இருட்டிற்குள் நின்றிருந்த ஒரு பெரிய லாரி அசுர வேகத்தில் முத்தரசன் மாமா சென்ற காரை நோக்கிப் பாய்ந்து வந்தது.
“டேய் ரகு… வண்டியை ஓரங்கட்டுடா!” என்று பின்னால் காரில் நான் கத்துவதற்குள், அந்த லாரி இவர்களது காரின் மீது மிக வேகத்தில் மோதியது.
மரகதம் அத்தையும், முத்தரசன் மாமாவின் அலறும் சத்தம் கேட்க, கார் அப்படியே தூக்கி வீசப்பட்டு தலைகீழாகக் கவிழ்ந்தது. விபத்தின் கோரத்தில் கார் நொறுங்கிப் போயிருந்தது. நாங்கள் வந்த கார் அதிக சேதம் இல்லை என்றாலும், மாமா குடும்பத்தினர் காரின் நிலையைப் பார்த்து பதறியபடி, தலையில் ஏற்பட்ட லேசான காயத்தோடு வெறி கொண்டு காரை விட்டு இறங்கி வேகமாக ஓடி வந்தேன்.
காரின் இடிபாடுகளுக்குள் முத்தரசு மாமாவும், மரகதம் அத்தையும் அசைவற்று இறந்து கிடந்தனர். ரகுவும் மலர்விழியும் காயங்களோடு மயக்கத்தில் இருந்தனர். நான் என் உடம்பில் இருந்த அத்தனை வலியையும் பொறுத்துக் கொண்டு, பக்கத்தில் கிடந்த கிருஷ்ணவேணியின் கையைப் பற்றினேன். அவளது தலையில் இருந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது.
அப்போது அங்கே கையில் டார்ச் லைட்டோடு வந்த அந்த உருவத்தைக் கண்டு எனக்கு கோபம் தலைக்கேறியது. வந்தவன் வேறு யாருமல்ல… இன்ஸ்பெக்டர் ருத்ரன்!
“என்ன தேவா… கமிஷ்னர் ஆபீஸ் போய் என்னை சஸ்பெண்ட் பண்ண வச்ச இல்ல? இப்போ உன் குடும்பமே காலி! என் வழியில குறுக்கே வந்தா இப்படித்தான் சாவு வரும்!” என்று ருத்ரன் கார் அருகே வந்து விகாரமாகச் சிரித்துவிட்டு, தன் போலீஸ் ஜீப்பில் ஏறி அங்கிருந்து தப்பினான்.
தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த கிருஷ்ணவேணி, என் கைகளை தன் பலமிழந்த கைகளால் இறுக்கமாகப் பற்றினாள்.
“மா… மாமா, உங்ககூட வாழணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன் மாமா. இப்படிப் பண்ணிட்டானே… இவங்களைச் சும்மா விடாதீங்க மாமா. உங்களைக் கல்யாணம் பண்ணி வாழணும்னு ஆசைப்பட்டேன்… மு… முடியாமல் போச்சு. இந்த ஜென்மத்துலதான் முடியலை… அடுத்த ஜென்மத்துலயாவது உங்களை நான் கல்யாணம் பண்ணிக்கணும்…” என்று தழுதழுத்த குரலில் கூறிய கிருஷ்ணவேணி, என்னுடைய மார்பிலேயே தன் கண்களை மூடினாள்.
“வேணி உன்னைச் சாக விடமாட்டேன்!” என்று அவளை அணைத்துக் கொண்டு கதறினேன்.
அதற்குள் அங்கே ஆம்புலன்ஸ் வந்துவிட்டது. சுற்றிலும் பார்த்தேன் முத்தரசன் மாமாவும், மரகதம் அத்தையும் உயிரோடு இல்லை என்பது தெரிந்துவிட்டது. உடனே ரகுவையும் மலர்விழியையும் ஆம்புலன்ஸில் ஏற்றிவிட்டு, கிருஷ்ணவேணியைக் எப்படியும் காப்பாற்றிவிடலாம் என்ற தவிப்போடு அவளைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினேன்.
மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைப் பிரிவில் கிருஷ்ணவேணியைச் சேர்த்துவிட்டு வெளியில் தவிப்போடு காத்துட்டுருந்தேன். சற்று நேரத்தில் வெளியே வந்த மருத்துவர் என்னைப் பார்த்துத் தலையசைத்தார்.
“சாரி…அவங்களுக்கு மூளைச்சாவு ஏற்பட்டுடுச்சு. இனிமே அவங்க பிழைக்க வாய்ப்பே இல்லை. ஆனா அவங்களோட இதயம் இன்னும் துடிச்சிட்டே இருக்கு. அவங்களோட உறுப்புகளைத் தானமா கொடுத்தீங்கன்னா, அது மூலமா நாலு பேர் உயிர் வாழ்வாங்க. நீங்க சம்மதிக்கிறீங்களா?” என்று கேட்டார் மருத்துவர்.
அவர் சொன்னதைக் கேட்ட என்னுடைய உலகம் அப்படியே இருண்டது. சுவற்றைப் பற்றிக்கொண்டு என் இதயத்தை கல்லாக்கி கண்கள் முழுக்கக் கண்ணீர் வழிய, “கொடுக்கிறேன் டாக்டர்…” என்று கண்ணீருடன் சம்மதித்து, தாங்க முடியாத துக்கத்தில் சுவற்றில் தலையை பலமாக முட்டி…முட்டி கதறினேன்!”
ஹை பிரண்ட்ஸ் கள்ளோ காவியமோ இன்னும் 3 or 4 எபிசோடில் முடித்து விடுவேன் படிக்காதவங்க படிக்கச் ஆரம்பிங்க கதை முடிச்சவுடன் அடுத்த நாள் கதை எடுத்து விடுவேன்

Casino sider uden ROFUS, [url=http://www.melodieswithmemories.com/casino-sider-uden-rofus-din-guide-til-sikker-3/]http://www.melodieswithmemories.com/casino-sider-uden-rofus-din-guide-til-sikker-3/[/url] tilbyder en verden af underholdning, hvor spillere kan nyde deres favoritspil. Disse sider giver adgang til at spille uden hindre. PГҐ casinospil kan du opdage et variationsrigt udvalg af spil. Det er en fremragende mulighed for dem, der Гёnsker moros uden komplikationer.
Ничего подобного.
1win официальный сайт, [url=https://melbet-kazino.top/]https://melbet-kazino.top/[/url] предлагает своим пользователям широкий выбор ставок и азартных игр. Комфортабельный интерфейс позволяет быстро ориентироваться на платформе. Широкий спектр игровых событий и привлекательные коэффициенты делают его популярным среди игроков.
blue homes properties dubai Palm Jumeirah Homes for Sale
Нужна, где сделать санитарную книжку в течение суток без проблем? На сайте [url=https://muzpo.net]https://muzpo.net[/url] предлагается услуга быстрого получения медкнижки — просто заполните заявку и возьмите паспорт и фотографию. Для сотрудников жилищно-коммунальной сферы, розничной торговли и другого профиля всё проходит без задержек, без толп. https://muzpo.net Заберите справку легально и по правилам — с курьерской доставкой на дом или до метро. Смотрите детали — санитарная книжка срочно, заказ через интернет, курьерская доставка.