ATM Tamil Romantic Novels

நெஞ்சோரம் பூத்தவளே 13

பூ  – 13

மருதப்பன் தன் நடுங்கும் கைகளோடு மெதுவாக எழுந்து வந்து கதவைத் திறந்தார்.

அதே நேரத்தில், கதிரேசனின் ஆட்கள் யாருடைய பார்வையிலும் சிக்காமல் இருக்க சுற்றுமுற்றும் எச்சரிக்கையாக பார்த்துக் கொண்டே மருதப்பன் வீட்டை நோக்கி வந்தனர்.

ஆனால், அவர்களுக்கு முன்னதாகவே அந்த வீட்டின் வாசலில் கம்பீரமாக நின்றிருந்த ஒரு உருவத்தைக் கண்டதும் மருதப்பனின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன.

நெற்றியில் பெரிய திலகம், வெள்ளை வேட்டி சட்டை, அதிகாரம் பொங்கும் தோற்றம், கைகளைக் கட்டிக்கொண்டு நிமிர்ந்து நின்றிருந்த அந்த மனிதர் வேறு யாருமில்லை… வீரமலைப்பட்டி அரண்மனையின் தலைவர் பெரியசாமி தான்!

தன் மனைவி மரகதத்தின் மரணத்திற்கு காரணமான மனிதனை, இருபது ஆண்டுகளுக்குப் பிறகு தன் வீட்டு வாசலில் பார்த்த அந்த நொடி, மருதப்பனின் உடலெங்கும் கோபமும் நடுக்கமும் ஒன்றாகப் பரவின.

அவரது முகம் இறுகியது. கண்கள் சிவந்தன. மனதில் புதைந்து கிடந்த பழைய காயங்கள் மீண்டும் இரத்தம் வடிக்கத் தொடங்கின.

“நீ… நீங்க எதுக்காக இங்க வந்திருக்கீங்க? என் வீட்டு வாசப்படியில  வந்து நிற்க உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்? எந்த முகத்தைக் கொண்டு மறுபடியும் எங்க வீட்டுக்குள்ள வர்றீங்க?” என்று மருதப்பன் ஆத்திரத்தில் கத்தினார்.

அவரது குரலில் பல வருடங்களாக அடக்கி வைத்திருந்த வெறுப்பும், வேதனையும் தெளிவாக வெளிப்பட்டது.

ஆனால் பெரியசாமியின் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை.

 

மருதப்பனின் கோபம் அவரைப் பாதிக்கவில்லை என்பது போல, தன் வழக்கமான அதிகார தோரணையுடன் வீட்டுக்குள் அடி எடுத்து வைத்தார்.

சோபாவில் காலில் கட்டுடன் அமர்ந்திருந்த முல்லையை ஒரு கணம் கூர்ந்து பார்த்தவர், மீண்டும் மருதப்பனை நோக்கித் திரும்பினார். அவரது பார்வையிலேயே ஒரு மிரட்டல் தெரிந்தது.

“உன் வீட்டு வாசலில் வந்து நிற்க எனக்கு எந்தத் தடையும் இல்ல மருதப்பா! ஆனா, என் மகன் செந்தூரன் கிட்ட என்னை பத்தி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி, என் குடும்பத்தையும் அரண்மனைப் பேரையும் அசிங்கப்படுத்த நினைக்கிற உரிமையை உனக்கு யார் கொடுத்தது?” என்று அதிகார குரலில் கேட்டவர், ஒரு நொடி இடைவெளி விட்டவர்  “இன்னைக்கு என்  மகன்  என்கிட்ட வந்து உன்  மகளுக்காக என் முன்னே நின்னு சவால் விட்டுட்டுப் போறான். அதுக்கெல்லாம் காரணம் நீ தான்!” என்றார் பற்களைக் கடித்தபடி.

அந்த வார்த்தைகளில் ஒரு தந்தையின் கோபத்தை விட, தன் அதிகாரம் கேள்விக்குள்ளானதற்கான ஆத்திரமே அதிகமாக இருந்தது.

“நான் எதுவும் பொய் சொல்லலையே! என் பொண்டாட்டியோட உயிரை எடுத்த பாவிகளுக்கு துணையா நின்றது நீங்கதானேன்னு சொன்னேன்!” என்று மருதப்பன் நெஞ்சில் கைவைத்தபடி ஆவேசமாகக் கத்தினார்.

“நிறுத்து மருதப்பா!” என்று பெரியசாமி கையை உயர்த்தி அதட்டினார்.

“அன்னைக்கு நடந்தது என்னன்னு உனக்கு முழுசாத் தெரியாது. தெரிஞ்சுக்கவும் வேண்டாம். நான் இங்க வந்தது உன்கிட்ட நியாயம் பேச இல்லை… எச்சரிக்கை பண்ண வந்திருக்கேன்! உன் பொண்ணு முல்லை இப்போ எங்க ஊருக்கு பள்ளி பிள்ளைகளுக்கு பாடம் சொல்லி கொடுக்க வந்தா பாடம்  மட்டும் சொல்லி கொடுத்திருக்கணும் அதை விட்டு நீதி நேர்மைனு உன் பொண்டாட்டி போல குரல் கொடுத்திட்டு வந்திருக்கா. அவ இனிமே என் மகன் கிட்ட எந்தப் பேச்சுவார்த்தையும் வச்சுக்கக் கூடாது. அதுமட்டுமில்ல… உன் பொண்ணு இனிமே எங்க ஊருக்குள்ள வரக்கூடாது. வரவும் விடமாட்டேன்! ஒழுங்கா அவளை கூட்டிக்கிட்டு இந்த ஊரை விட்டே போயிடு. இல்லன்னா… இருபது வருஷத்துக்கு முன்னாடி உங்க குடும்பத்துக்கு நடந்ததை விட பெரிய விபரீதம் நடக்கும்!” என்று பெரியசாமி தன் அதிகாரக் குரலில் மிரட்டினார்.

அதே நேரத்தில், வீட்டின் வெளிப்புறச் சந்தில் கதிரேசன் அனுப்பிய ஆட்கள் கம்புகளோடு நின்று பெரியசாமியின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

முல்லையையும் மருதப்பனையும் மிரட்டி ஊரைவிட்டு விரட்ட வேண்டும் என்ற எண்ணத்தோடு வந்தவர்கள், அங்கே நின்ற பெரியசாமியின் காரையும் அவரது ஆட்களையும் பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

“டேய்… அண்ணன் கதிரேசன் முல்லை டீச்சரையும், அவங்க அப்பாவையும் நாம மிரட்டணும்னு சொன்னாரு. ஆனா இங்க என்னடான்னா, பெரியசாமி ஐயா நமக்கு முன்னாடி வந்து இவங்களை மிரட்டிட்டு இருக்காரே!” என்று புரியாமல் தங்களுக்குள் முணுமுணுத்தபடி வாசலில் பதுங்கி நின்றனர்.

அதே விநாடி… வீட்டு வாசலில் சடாரென்று வந்து நின்றது செந்தூரனின் புல்லட்!

வெளியே சென்ற செந்தூரன் வீட்டுக்குத் திரும்பியதும், குணவதி பதற்றத்தோடு அவன் முன்னே ஓடி வந்தார்.

“கண்ணு… உன் அப்பா இப்போ தான் டவுனுக்குக் கிளம்பிப் போனாரு. ‘அந்த மருதப்பனும் அவர் பொண்ணு முல்லையும்  இனிமே அந்த ஊர்ல இருக்கக் கூடாது. இப்பவே போய் அவங்களை ஊரைவிட்டு அனுப்பிட்டு வர்றேனு கோபமா சொல்லிட்டு போனாரு. நான் எவ்வளவோ தடுத்துப் பார்த்தேன். அரண்மனை கௌரவம், பரம்பரை, பெருமைன்னு சொல்லி போயிருக்காரு. பண்ணிய பாவங்கள் வரைக்கும் போதும். அந்த முல்லை பொண்ணு பள்ளிக்கூடப் பசங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கத்தானே வந்திருக்கா. அவளை எதுவும் பண்ணாதீங்கனு கெஞ்சினேன். ஆனா அவர் கேட்கவே இல்லப்பா. மரகதத்தோட எல்லாம் முடிஞ்சுடுச்சுன்னு நினைச்சேன். ஆனா இப்போ அவ மக மீண்டும் நம்ம ஊருக்குள் வந்து புதுசா ஒரு கதையை ஆரம்பிக்கப் பார்க்கிறா. இந்த முறை ஆரம்பத்திலேயே முடிச்சிடுறேன்னு சொல்லிட்டுப் போனாரு.

அதோட… உன் மகன் அந்தப் பொண்ணைத் தான் காதலிக்கிறேன், அரண்மனை மருமகளா கொண்டு வருவேன்னு என் முன்னாடியே பயமில்லாம சொல்றான் இதுக்கு நான் சும்மா இருந்தா எல்லாம் கை மீறி போய்டும்‌ நான் அங்க போய் இந்த பெரியசாமி யாருனு காட்டுனா தான் சரிவரும்னு  முல்லை வீட்டுக்குத்தான் போயிருக்காரு கண்ணு. எனக்கு ரொம்ப பயமா இருக்கு. நீ உடனே போய் என்னனு பார்த்துட்டு வா சாமி…” என்று கண்ணீர் மல்க கூறினார்.

அம்மாவின் வார்த்தைகளைக் கேட்ட செந்தூரனின் முகம் இறுகிப் போனது.

“அம்மா…‌ அப்பா இவ்வளவு பெரிய பாவம் பண்ணியிருக்காருன்னு உங்களுக்கு முன்னாடியே தெரியுமா? ஏன் இதுவரைக்கும் என்கிட்ட சொல்லல?” என்று குரல் தழுதழுக்கக் கேட்டான்.

குணவதி ஒரு கணம் கண்களை மூடிக்கொண்டார். “செந்தூரா… இப்போ அதையெல்லாம் பேச நேரமில்லைப்பா. முதல்ல நீ கிளம்பி முல்லை வீட்டுக்குப் போ. அங்கே என்ன நடக்குதுன்னு பாரு. எனக்கு ரொம்ப பயமா இருக்கு…” என்று அவசரப்படுத்தினார்.

அதற்கு மேல் ஒரு நொடியும் தாமதிக்காமல், செந்தூரன் புல்லட்டில் ஏறி புயல் போல் அங்கிருந்து புறப்பட்டான்.

முல்லை வீட்டு முன்னே வண்டியை நிறுத்தியவுடன் அவசரமாக இறங்கிய செந்தூரன் வீட்டுக்குள் பாய்ந்து சென்றான்.

அங்கே தன் தந்தை பெரியசாமி, மருதப்பனை நின்ற இடத்திலேயே மிரட்டிக் கொண்டிருப்பதை கண்ட அடுத்த நொடியே அவனது கண்கள் கோபத்தில் சிவந்தன.

தன் அப்பா இவ்வளவு கீழ்த்தரமாக இறங்கி வந்து, வயதான ஒரு மனிதனை அவரது வீட்டுக்குள்ளேயே நின்று மிரட்டுவார் என்று அவன் கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை.

“அப்பா!” இடி முழங்குவது போலக் கத்தியபடி பெரியசாமியை நோக்கி வேகமாக நடந்தான் செந்தூரன்.

அவனது ஆக்ரோஷமான குரலில் அந்த வீடே ஒரு கணம் அதிர்ந்தது.

திடீரென்று தன் மகன் அங்கே வந்து நிற்பதைக் கண்ட பெரியசாமி லேசாகத் திகைத்தாலும், அடுத்த நொடியே தன் கம்பீரத்தை மீட்டுக் கொண்டு  “செந்தூரா? நான் சொன்ன எச்சரிக்கையை மீறி மறுபடியும் இவங்களைத் தேடி வந்திருக்கியா?” என்று சினம் பொங்க  கேட்டார்.

“நீங்க இந்த வீட்டுல என்ன பண்ணுறீங்கப்பா முதல்ல இங்கிருந்து வெளியே கிளம்புங்க !” என்று தன் தந்தையை நோக்கி விரலை நீட்டினான் செந்தூரன். அவனது தேகம் கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தது.

“செந்தூரா… வார்த்தையை அளந்து பேசு! ஒரு பொண்ணுக்காக உன் அப்பனையே எதிர்த்து நிற்கிறது உனக்கே நல்லா இருக்கா?” என்று பெரியசாமியும் விடாமல் சீறினார்.

“தப்பு செஞ்சது என் அப்பனா இருந்தாலும் தட்டிக் கேட்பேன்னு உங்களுக்கு தெரியும்லப்பா!” என்று செந்தூரன் பதிலுக்கு சீறினான்.

“இந்த வீட்டுக்குள்ள வந்து மிரட்டுற அளவுக்கு நீங்க இறங்கி வருவீங்கன்னு நான் நினைக்கவே இல்ல!”

தன் கண் முன்னாடியே அப்பாவும், மகனும் நேருக்கு நேர் நின்று மோதிக் கொள்வதை கண்ட முல்லையின் நெஞ்சம் பதற்றத்தில் துடித்தது.

ஒருபுறம், நான் அந்த ஊருக்கு பள்ளி ஆசிரியையாக போனதால் தான் செந்தூரனுக்கும் அவரோட அப்பாவுக்கும் நடுவே இவ்வளவு பெரிய பிரச்சனை உருவாகிடுச்சோ?’ என்ற குற்ற உணர்வு அவளை வாட்டியது.

ஆனால் மறுபுறம்… இருபது வருடங்களுக்கு முன்பு தன் அம்மா மரகதத்தின் உயிரை பறித்துவிட்டு, இத்தனை வருடங்களாக ஊருக்குள் நல்லவராக நடமாடும் பெரியசாமியை பார்க்கப் பார்க்க அவளுக்குள் கோபம் பொங்கி எழுந்தது.

தன் காலில் இருந்த வலியைக்கூட மறந்து, சோபாவின் கைப்பிடியைப் பிடித்தபடி மெதுவாக எழுந்து நின்றாள் முல்லை. பெரியசாமியை நேருக்கு நேர் தீர்க்கமாகப் பார்த்த முல்லை, தன் குரலில் சிறிதும் பயத்தைக் காட்டாமல் நிமிர்ந்து நின்றாள்.

அந்த நொடியில் அவள் மரகதத்தின் மகளாக மட்டுமல்ல…  மரகதம் மீண்டும் உயிருடன் வந்து நிற்பது போலவே தோன்றினாள்.

“பெரியசாமி ஐயா!” என்று அழுத்தமாக ஆரம்பித்தவள்,

“நீங்க என்ன மிரட்டினாலும் நான் பயப்பட மாட்டேன்! என்னை பள்ளிக்கூடத்துக்கு வேலைக்கு வரக்கூடாதுன்னு சொல்ல நீங்க யாரு? அதுக்கான அதிகாரம் உங்களுக்கு யார் கொடுத்தது? வீரமலைப்பட்டி அரசுப் பள்ளிக்கூடத்துல தான் நான் வேலை பார்க்கப் போறேன். அங்கே படிக்கிற ஏழைப் பிள்ளைகளுக்கு நான் பாடம் சொல்லிக் கொடுக்கத் தான் போறேன். அதைத் தடுக்க உங்களால என்ன செய்ய முடியுமோ… அதை செஞ்சு பாருங்க!” என்று நிமிர்ந்து நின்றாள்.

முல்லையின் ஒவ்வொரு வார்த்தையும் பெரியசாமியின் முகத்தில் அறைந்தது போல இருந்தது.

அவள் பேசப் பேச, அவரது முகம் கோபத்தில் இருண்டது. ஆனால் அதே நேரத்தில், மகளின் தைரியமான பேச்சைக் கேட்ட மருதப்பன் உள்ளுக்குள் நடுங்கிப் போனார்.

அடுத்த விநாடியே பதறியபடி எழுந்து வந்து முல்லையின் கையைப் பிடித்துக் கொண்டார் மருதப்பன்.

“முல்லை… வேண்டாம்மா!” என்று தவிப்போடு கூறியவர்,

“உன் அம்மாவைப் பிரிஞ்சு நான் இத்தனை வருஷமா படுற வேதனையும், வலியும் எனக்கு மட்டும் தான் தெரியும்மா. அந்த மரண வலியையே என்னால இன்னைக்கும் தாங்க முடியல. இப்போ நீயும் இப்படி இவங்களை பகைச்சுட்டு பேசினா… அவங்க அரண்மனை கௌரவத்துக்காக உன்னை என்ன வேணாலும் பண்ணிடுவாங்கம்மா. தயவுசெஞ்சு பேசாம இரு. உனக்கு எதுவும் ஆகக்கூடாதுன்னு தான் நான் இவ்வளோ காலம் உன்ன பாதுகாத்துட்டு நிழழாய் இருக்கேன்…” என்று கெஞ்சும் குரலில்  கண்கலங்கினார்.

மகளின் கைகளை இறுகப் பிடித்திருந்த அவரது விரல்கள் கூட பயத்தில் நடுங்கின.

செந்தூரனால் அதற்கு மேல் அமைதியாக நிற்க முடியவில்லை. வேகமாக முல்லையின் அருகில் வந்தவன்,

“முல்லை! நீ யாருக்கும் பயப்பட வேண்டாம். உன்  பின்னாடி இந்த செந்தூரன் இருக்கேன்! என்னை நம்பி எங்க ஊருக்கு வா. எங்க ஊரு பிள்ளைகளுக்கு தைரியமா பாடம் நடத்து. என்னை மீறி யாரும் எதுவும் பண்ண முடியாது… ஏன், என் அப்பாவே கூட!” என்றான் உறுதியோடு பெரியசாமியை தீர்க்கமாக முறைத்து பார்த்தபடியே…

தன் மகன் அவர்கள் முன்பு தன்னையே எதிர்த்து நின்று பேசுவதைக் கண்ட பெரியசாமியின் கோபம் எல்லை கடந்தது.

“செந்தூரா! ஒரு பொண்ணுக்காக பெத்த அப்பன் கிட்டயே பகைக்கும்  அளவுக்கு போயிட்டியா?

இந்த வீரமலைப்பட்டி பெரியசாமி யாரு… என்னோட அதிகாரம் என்னன்னு உனக்கு இன்னும் முழுசாத் தெரியலடா!” என்று சீறினார்.

அப்பாவும், மகனும் தங்களுக்காக எதிர்த்து நின்று இப்படி ஆக்ரோஷமாக மோதிக் கொள்வதை கண்ட மருதப்பனின் பொறுமை இப்போது முற்றிலும் எல்லை கடந்தது.

“போதும்!” என்று நெஞ்சு வெடிக்கக் கத்தியவர், நடுங்கும் கால்களோடு இருவருக்கும் நடுவே வந்து நின்றார்.

“ஐயா!?… தயவுசெஞ்சு போதும்! ரெண்டு பெரும் உங்க சண்டையை நிறுத்துங்க!” என்று கண்ணீர் மல்கக் கூறினார்.

அவரது குரலில் கோபம் இல்லை… பல வருடங்களாகச் சுமந்து கொண்டிருந்த வலியும், வேதனையும் மட்டுமே இருந்தது.

“நாங்கள் இங்கிருந்து கிளம்புறோம் ஐயா… எங்களை இன்னும் சோதிக்காதீங்க. நான் என் பொண்ணைக் கூட்டிக்கிட்டு இந்த ஊரை விட்டே தூரமாப் போயிடுறேன். ஆனா ஒன்னு மட்டும் தெரிஞ்சுக்கோங்க…

அநியாயமா உயிரை விட்ட என் பொண்டாட்டியோட சாபமும், நாங்க படுற இந்த வேதனையும் உங்களை என்னைக்குமே சும்மா விடாது. நீங்க எவ்வளவு பெரிய மனுஷனா இருந்தாலும், செய்த பாவத்தோட செயல்ல இருந்து தப்பிக்க முடியாது. ஒருநாள் அந்தப் பாவத்துக்கான தண்டனையை நீங்க அனுபவிச்சே ஆகணும். உங்க பரம்பரையையே அது நிம்மதியா வாழ விடாது!” என்று கண்ணீர் மல்கக் கூறினார்.

அவரது வார்த்தைகள் வீட்டுக்குள் ஒரு கனமான அமைதியை உருவாக்கின.

மருதப்பனின் கண்களில் வழிந்த கண்ணீரைப் பார்த்ததும், ஒரு கணம் பெரியசாமியின் உள்ளத்திற்குள்ளும் ஏதோ ஒரு நடுக்கம் எழுந்தது. ஆனால் அதை வெளியில் காட்டிக் கொள்ள விரும்பாதவர் போல முகத்தை இறுக்கிக் கொண்டு  மருதப்பனை ஒரு பார்வை பார்த்தவர், வேகமாகத் திரும்பி வெளியே நடக்கத் தொடங்கினார்.

அதே நேரத்தில் வாசலில் பதுங்கியிருந்த கதிரேசனின் ஆட்கள், உள்ளே நடந்த சண்டையைப் பார்த்து மிரண்டு போயிருந்தனர்.

“டேய்… அப்பனும் மகனும் பயங்கரமா மோதிக்கிறாங்கடா! இப்போ நாம உள்ள போனா, செந்தூரன் நம்மள உயிரோட விட மாட்டான். வண்டியை எடுங்கடா!” என்று பதறியபடி ஒருவரை ஒருவர் இழுத்துக் கொண்டு அங்கிருந்து நழுவினர்.

பெரியசாமி வெளியேறியதும், செந்தூரன் ஒரு கணம் முல்லையை ஆழமாகப் பார்த்தான்.

அந்தப் பார்வையில் ஆயிரம் வார்த்தைகள் இருந்தன.

‘நான் இருக்கேன் பயப்படாதே…’‌ என்று சொல்லாமல் சொன்னது போல இருந்தது.

முல்லையும் அவனைப் பார்த்தாள். அவளது பதற்றமான மனதிற்குள், அவன் பார்வை மட்டும் பலத்தையும், நிம்மதியையும் விதைத்தது.

எதுவும் பேசாமல் திரும்பிய செந்தூரன், மெதுவாக அங்கிருந்து வெளியேறினான்.

ஆனால் அவன் மனதிற்குள் ஒரு முடிவு உறுதியாக உருவாகி விட்டது. இனி எந்தக் காரணத்திற்காகவும் முல்லையை தனியாக விடக்கூடாது… அவளைப் பாதுகாக்க வேண்டியது தன்னுடைய பொறுப்பு!

அந்த எண்ணத்தோடே இருளை நோக்கி நடந்தான் செந்தூரன்.

அன்று இரவு வீட்டில் மருதப்பனுக்குத் தூக்கமே வரவில்லை.

வீட்டுக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்தபடி, மனதில் ஓடிய பயத்தோடு போராடிக் கொண்டிருந்தார்.

பெரியசாமியின் மிரட்டல் வார்த்தைகள் மீண்டும் மீண்டும் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தன.

“இருபது வருஷத்துக்கு முன்னாடி நடந்ததைவிட பெரிய விபரீதம் நடக்கும்!…” அந்த வார்த்தைகளை நினைக்க நினைக்க அவரது நெஞ்சம் பதறியது.

விடியற்காலையிலேயே யாருக்கும் தெரியாமல் முல்லையை அழைத்துக் கொண்டு இந்த ஊரை விட்டே எங்காவது தூரமாகப் போய்விட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவரது மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

ஆனால்… முல்லையின் மனநிலையோ வேறுவிதமாக இருந்தது.

அவளது நெஞ்சில் பயத்தை விட கோபம் தான் அதிகமாக எரிந்து கொண்டிருந்தது. தன் காலில் இருந்த வலியையும் பொருட்படுத்தாமல் ஜன்னலோரம் வந்து நின்றவள், இருண்ட வானத்தை வெறித்துப் பார்த்தாள்.

அவளது நினைவு முழுவதும் தன் தாய் மரகதத்தைச் சுற்றியே சுழன்றது.

‘என் அம்மாவை அநியாயமா சாகடிச்சவங்களை நான் சும்மா விடமாட்டேன்! என்னை எப்படி பள்ளிக்கூடத்துக்கு வரக்கூடாதுன்னு பெரியசாமி ஐயா சொல்லலாம்? நான் கண்டிப்பா அந்த பள்ளிக்கூடத்துக்குப் போவேன். அங்கே படிக்கிற பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பேன்.

அதுமட்டுமில்ல… என் அம்மாவுக்கு நடந்த அநியாயத்துக்கு நீதி கிடைக்கிற வரைக்கும் நான் ஓயவே மாட்டேன்!’ என்று உறுதியாக நினைத்துக் கொண்டாள்.

வெளியே இருள் இன்னும் முழுவதுமாக விலகாத விடியற்காலையின் அமைதி நிலவிக் கொண்டிருந்தது.

சோர்வில் மருதப்பன் அசந்து தூங்கிப் போயிருந்தார். அந்தச் சமயத்தில் தான் முல்லை நின்றிருந்த ஜன்னலோரம் ஒரு நிழல் வந்து நின்றது.

முதலில் யாரென்று புரியாமல் திடுக்கிட்ட முல்லை, அடுத்த நொடியே அந்த உருவத்தைப் பார்த்து அதிர்ந்து போனாள்.

அது வேறு யாரும் இல்லை… செந்தூரன் தான்!

மெதுவாக ஜன்னல் கம்பிகளைத் தட்டியவன், வெளியே வருமாறு சைகை செய்தான்.

“சின்னையா…?” என்று அதிர்ச்சியோடு முணுமுணுத்த முல்லை, உடனே தன் தந்தையைத் திரும்பிப் பார்த்தாள்.

மருதப்பன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.

மீண்டும் செந்தூரனைப் பார்த்தவள், குழப்பத்தோடு மெதுவாக ஜன்னலருகே நெருங்கினாள்.

“இந்த நேரத்துல இங்க என்ன பண்றீங்க?” என்று மெதுவாகக் கேட்டாள்.

ஆனால் செந்தூரனின் முகத்தில் வழக்கமான புன்னகை இல்லை. அவனது கண்களில் ஒரு தீவிரமான முடிவு தெரிந்தது. முல்லையின் இதயம் காரணமில்லாமல் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது.

“இந்த நேரத்துல இங்க என்ன பண்றீங்க சின்னையா?” என்று பதற்றத்தோடு கேட்டாள் முல்லை.

செந்தூரன் ஒரு கணம் அவளை அமைதியாகப் பார்த்தான்.

“உன்னைப் பார்க்கத்தான் வந்தேன் முல்லை.”

“என்னைப் பார்க்கவா?”

“ஆமா… இவ்ளோ பிரச்சனைகள் நடந்ததுக்குப் பிறகு உன்னை தனியா விட்டுட்டு என்னால நிம்மதியா இருக்க முடியல.” அவன் சொன்ன வார்த்தைகளில் இருந்த அக்கறை, முல்லையின் மனதை கனமாக அசைத்தது.

“எனக்காக நீங்க ஏன் உங்க அப்பாகிட்ட இவ்வளவு சண்டை போட்டீங்க சின்னையா? நான் உங்க  ஊருக்கு வந்ததால தானே உங்க குடும்பத்துல இவ்வளவு பிரச்சனை…” என்று குற்ற உணர்ச்சியோடு சொன்னாள்.

“இல்ல முல்லை. இந்தப் பிரச்சனைக்கு காரணம் நீ இல்ல. பல வருஷமா புதைஞ்சு கிடந்த உண்மை தான் காரணம்.” அவனது குரல் உறுதியாக ஒலித்தது.

“உனக்கு ஏதாவது ஆபத்து வந்துடுமோன்னு தான் எனக்கு பயமா இருக்கு.” முல்லையின் கண்கள் கலங்கின.

“எனக்கும் தான் பயமா இருக்கு சின்னையா… ஆனா என் அம்மாவுக்கு நடந்த அநியாயத்தை நினைச்சா இந்த ஊரை விட்டு ஓடிப் போகவும் மனசு வரல.”

“நீ யாருக்காகவும் எங்கையும் ஓடிப் போக தேவையில்லை.” என்ற செந்தூரனை முல்லை புரியாமல் பார்த்தாள்.

“நீ இங்கயே இருக்கணும். உங்க அம்மாவுக்கு நடந்ததுக்கு நீதி கிடைக்கணும். அதுக்காக நான் உன் கூட பக்க பலமாய் இருப்பேன்.” என அவன் சொன்ன அந்த வார்த்தைகள் முல்லையின் நெஞ்சில் யானைத் தெம்பு வந்தது.

சில நொடிகள் இருவரும் அமைதியாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

அந்த அமைதியை உடைத்தவன் செந்தூரன் தான்.

“முல்லை… ஒரு விஷயம் கேட்கலாமா?”

“என்ன?”

“உனக்கு  என் மேல நம்பிக்கை இருக்கா?”  என்று செந்தூரன் கேட்டதும், முல்லை சில நொடிகள் அமைதியாக அவனைப் பார்த்தாள்.

அவனது கண்களில் ஏமாற்றமோ வஞ்சகமோ இல்லை. அக்கறையும் நேர்மையும் மட்டுமே தெரிந்தது.

“இருக்கு…” என்று மெதுவாகத் தலையசைத்தாள்.

அவள் கூறிய  ஒற்றை வார்த்தையே செந்தூரனின் மனதிற்குள் நிம்மதியை உண்டாக்கியது.

“அப்படின்னா நான் சொல்றதை மட்டும் கேளு முல்லை.”

“என்ன சொல்றீங்க?”

“உன் அப்பா இப்போ பயத்துல இருக்காரு. என் அப்பா பெரியசாமி ஏதாவது பண்ணிடுவாரோன்னு நினைச்சு நாளைக்கே இந்த ஊரை விட்டுப் போக முடிவு பண்ணியிருப்பாரு.” முல்லையின் முகம் வாடியது.

“அவரை நான் ஒன்னும் சொல்ல முடியாது சின்னையா. என் அம்மாவை இழந்த பிறகு அவர் பட்ட கஷ்டம் எங்களுக்குத் தான் தெரியும்.”

“அதான் பிரச்சனையே!.”

“என்ன?”

“இன்னைக்கும் அவர் பயந்துகிட்டே இருக்காரு. ஆனா நீ பயப்படல. உன் அம்மாவுக்கு நீதி கிடைக்கணும் போராடணும்னு நினைக்குற .”  என்றதும்..

“ஆமா… நான் ஓடிப் போக விரும்பல.” முல்லை அமைதியாக தலையசைத்தாள்.

“நானும் அதைத் தான் சொல்றேன்.” என்று அவன் ஒரு ஆழ்ந்த மூச்சை இழுத்துவிட்டான்.

“நீ இந்த ஊரை விட்டு போகக் கூடாது முல்லை. அதே நேரம், உங்களுக்கு எந்த ஆபத்தும் வரவும் நான் விட மாட்டேன்.” என்றான் ஆவேசமாக.

“ஆனா எப்படி?” என்று முல்லை குழப்பத்தோடு கேட்டாள்.

சில நொடிகள் அவளை ஆழமாகப் பார்த்த செந்தூரன், மெதுவாக அவளது கைகளை ஜன்னல் வழியே பற்றிக் கொண்டான்.

“முல்லை… நான் உன்னை  உயிருக்கு உயிரா நேசிக்கிறேன்.” எதிர்பாராத அந்த வார்த்தைகளில் முல்லையின் இதயம் மயிலிறகால் வருடியது போல் அந்த கணம்  துடித்தது.

உனக்கும் உன் அப்பாவுக்கும் ஏதாவது ஆபத்து வரும்னு நினைச்சாலே என்னால தாங்க முடியல.” அவனது குரல் உணர்ச்சியில் கரகரத்தது.

“நீ இல்லாத வாழ்க்கையை என்னால நினைச்சுக்கூட பார்க்க முடியல முல்லை.” என்றான் உயிர் உருகும் குரலில், முல்லையின் கண்கள் தன்னையும் அறியாமல் கலங்கின.

அவள் பதில் சொல்லாமல் நின்றதைப் பார்த்த செந்தூரன் “அதனாலதான் ஒரு முடிவு எடுத்திருக்கேன்.”

“என்ன முடிவு?” என்று பதற்றத்தோடு கேட்டாள் முல்லை.

 

 

 

 

218 thoughts on “நெஞ்சோரம் பூத்தவளே 13”

  1. Конечно Вы правы. В этом что-то есть и я думаю, что это отличная мысль.
    In the vibrant world of Online Casino, [url=https://temporal.jpkrom.com/index.php/2026/05/12/extreme-spins-unleashing-the-thrill-of-high-stakes/]https://temporal.jpkrom.com/index.php/2026/05/12/extreme-spins-unleashing-the-thrill-of-high-stakes/[/url], players can experience a selection of activities. Commencing with slots to virtual dealer games, Online Casino offers extraordinary fun and potential for huge wins.

  2. If you’re looking for popular places to play, a minimum deposit casino uk, [url=https://www.trattorialangolino.it/explore-75-free-spins-no-deposit-bonuses-today/]https://www.trattorialangolino.it/explore-75-free-spins-no-deposit-bonuses-today/[/url] offers excellent options for players. With minimal initial investments, players can enjoy engaging games without breaking the bank. So, choose a minimum deposit casino UK and start your gaming adventure today!

  3. Casinos Not on Gamstop UK, [url=https://tottenhamdiagnosticimaging.com/exploring-non-gamstop-casinos-a-comprehensive-guide/]https://tottenhamdiagnosticimaging.com/exploring-non-gamstop-casinos-a-comprehensive-guide/[/url] offer players a fantastic opportunity to enjoy gaming without restrictions. Such casinos offer a wider selection of games. Participants can explore numerous options. Enjoy the thrill of gaming in a easier constrained environment with Casinos Not on Gamstop UK.

  4. 20bet Casino CZ, [url=http://nekokapuri.s1009.xrea.com/2026/06/17/20bet-casino-cz-zahrajte-si-na-modernim-online-kasinu/]http://nekokapuri.s1009.xrea.com/2026/06/17/20bet-casino-cz-zahrajte-si-na-modernim-online-kasinu/[/url] nabГ­zГ­ variabilnГ­ nabГ­dku her, kterГ© zahrnuje automaty a stolnГ­ hazard. ZГЎkaznГ­ci si takГ© vychutnГЎvajГ­ skvД›lГ© odmД›ny. 20bet Casino CZ se obtГ­ЕѕnД› porovnГЎ s konkurenДЌnГ­mi platformami.

  5. canadian online casino, [url=https://sinhagiricollection.com/sinhagirivilla/discover-the-best-online-casinos-in-canada-for-45/]https://sinhagiricollection.com/sinhagirivilla/discover-the-best-online-casinos-in-canada-for-45/[/url] presents a thrilling experience for betters looking to experience their skills. With various games available, relish the convenience of playing from wherever you are. Players can access a diverse array of options, including slots. Embrace the future of gaming today by joining a Canadian online casino!

  6. Абсолютно с Вами согласен. Я думаю, что это отличная идея.
    Tivoli Casino DK, [url=https://www.e-sicase.com/tivoli-casino-dk-2026-en-uforglemmelig-spiloplevelse-i-hovedstaden/]https://www.e-sicase.com/tivoli-casino-dk-2026-en-uforglemmelig-spiloplevelse-i-hovedstaden/[/url] tilbyder utmærkede spiloplevelser. Her kan du forkæle et væld af spilleautomater og klassiske spil. Besøg Tivoli Casino DK for underholdning.

  7. BC Game Online Casino, [url=http://ozet.jekelabs.com/2026/06/06/bc-game-hack-unveiling-the-secrets-to-winning-big/]http://ozet.jekelabs.com/2026/06/06/bc-game-hack-unveiling-the-secrets-to-winning-big/[/url] offers an engaging gaming experience with multiple games to choose from. Players can enjoy live dealer options, ensuring action at every turn. Join now and explore a world of possibilities!

  8. Вместо того чтобы критиковать посоветуйте решение проблемы.
    Uncover the excitement of free spins no deposit casinos, [url=https://www.moscaelettroimpianti.it/?p=113126]https://www.moscaelettroimpianti.it/?p=113126[/url], where players can enjoy thrilling games without spending a dime. These unique offers permit you the chance toearn real money while having fun. Embrace the opportunity and start your gaming adventure today!

  9. Вы допускаете ошибку. Предлагаю это обсудить. Пишите мне в PM, поговорим.
    Internet casinos have transformed entertainment with exciting choices. Casino Online Games, [url=https://asaaltaconstrutora.com.br/explore-the-thrills-of-fire-scatters-casino-3/]https://asaaltaconstrutora.com.br/explore-the-thrills-of-fire-scatters-casino-3/[/url] offer a thrilling experience for players. With advanced graphics and fascinating gameplay, anyone can enjoy well-loved games from home.

  10. Casinos Non on Gamstop, [url=https://www.stefanobertini.it/exploring-non-gamstop-casinos-your-gateway-to-unrestricted-gaming/]https://www.stefanobertini.it/exploring-non-gamstop-casinos-your-gateway-to-unrestricted-gaming/[/url] offer players a unique experience. Such venues provide access to thrilling games without the limitations of traditional platforms. You can enjoy diverse choices, including fruit machines and table games, ensuring endless fun.

  11. Are you ready to explore the thrill of virtual casinos? With free spins no deposit casino, [url=https://loveyourjester.com/test/2026/06/19/free-spins-no-deposit-casino-unlocking-bonuses-and/]https://loveyourjester.com/test/2026/06/19/free-spins-no-deposit-casino-unlocking-bonuses-and/[/url], players can enjoy entertaining games without risking any personal funds. These special offers allow you to win real money while having fun.

  12. 20bet Casino CZ, [url=https://samanthavance.com/20bet-casino-cz-2026-vstupte-do-sveta-online-hazardu-843774734/]https://samanthavance.com/20bet-casino-cz-2026-vstupte-do-sveta-online-hazardu-843774734/[/url] nabГ­zГ­ rozliДЌnou ЕЎkГЎlu her. UЕѕivatelГ© si mohou objevovat mezi tradiДЌnГ­mi a modernГ­mi hrami. SystГ©m takГ© nabГ­zГ­ ЕЎtД›drГ© bonusy pro novГ© hrГЎДЌe.

  13. online casino canada, [url=https://adamgardenstt.com/index.php/2026/06/11/safe-online-gambling-sites-your-guide-to/]https://adamgardenstt.com/index.php/2026/06/11/safe-online-gambling-sites-your-guide-to/[/url] offers an exhilarating adventure for players. With a wide range of choices, you can delight in thrilling poker variations from the comfort of your home. Don’t miss out!

  14. BC Game Casino, [url=https://www.onlineretailstartup.com/bc-game-mexico-registration-a-comprehensive-guide-4/]https://www.onlineretailstartup.com/bc-game-mexico-registration-a-comprehensive-guide-4/[/url] предлагает множество азартных активностей, где вы можете попробовать свою удачу. Платформа увлекает игроков многообразием акций. Вступайте и получите яркие эмоции!

  15. If you display blonde hair, bright eyes, and porcelain skin, identifying the most suitable clothing colors can absolutely improve your natural features. [url=https://hair-style-ai.com]hair color analysis[/url] Commonly, cool summer hair colors like gentle summer or strong summer tones work with a soft summer color palette, making pastel and toned-down shades your go-to. For folks wondering what tints suit porcelain skin and blonde hair beautifully, shades like rosy pink, mauve, and icy blues work perfectly.

    When looking at hair color evaluation, subtle summer hair color options often involve cool blondes or delicate browns that coordinate well with subdued tones in your wardrobe. Exploring cool winter hair colors can also be interesting if you want a touch of variety without sacrificing the overall balance. For a exciting way to try things, you might consider a online hair color test for nothing tool to learn what suits your skin tone before deciding .

  16. Хотите найти самые дешевые рейсы из Москвы за границу? На сегодня отличным вариантом выступают дешевые перевозчики из европейских столиц, а также прямые авиарейсы из аэропорта Ташкента в европейские города. Регулярно получается найти билеты по акции из Москвы в разные стороны и разобраться, куда выгоднее улететь из московских аэропортов — в частности, из аэропортов Англии или Албании. Для комфорта имеет смысл проверить актуальные цены и маршруты на ресурсе [url=https://fly-lowcost.ru]куда дешево слетать из москвы[/url] , на котором есть актуальные сведения по всем популярным направлениям и рейсам и экономичным авиакомпаниям из Гданьска, Кишинева и Еревана.

    Коли хотите разведать неизведанные маршруты, присмотритесь на прямые авиарейсы от Еревана и Праги, а также доступные билеты из Мюнхена и Хельсинки. Помните про британские аэропорты и пути экономии на авиаперелетах из Стамбула или Дубая. В общем, с целью найти наиболее бюджетный рейс из московских аэропортов или другого мегаполиса — важно сравнивать предложения на популярных платформах и планировать поездку заранее.

  17. Если задумали пеший тур по Калининграду, предлагаю сначала ознакомиться с карту – это поможет не пропустить интереснейшие улицы Калининграда и важные достопримечательности, такие как главный собор Калининград с его увлекательными историями и концертом органной музыки. Не пропустите добраться в Амалиенау — здесь стоит побродить независимо по интересному маршруту и попробовать блюда в местных кафе. Дополнительные сведения о пеших прогулках по Калининграду и нетронутых пляжах Калининградской области доступно тут: [url=https://kaliningradblog-gid.ru]можно ли купаться в калининграде[/url] .

    Для тех, кто любит природу и активных прогулок тихий отдых в Калининградской области — отличная идея: уединённые пляжи в Калининградской области очень хорошо подходят для уединённого отдыха, главным образом если актуален вопрос, купаются ли здесь в Калининграде и в какое время купальный сезон в Калининграде. Если подбираете идеи, куда сходить в Калининграде в вечернее время или в сырую погоду, предлагаю концерт органной музыки в соборе — это поистине особое место. И, безусловно, включите в список Форт 11 Калининград: как доехать туда на городском автобусе и какие объекты посетить — практические советы для индивидуального тура.

  18. Я не понял, что Вы имеете в виду?
    Minimum deposit casinos, [url=https://axis-chile.cl/2026/04/19/us-casinos-accepting-uk-players-a-guide-to/]https://axis-chile.cl/2026/04/19/us-casinos-accepting-uk-players-a-guide-to/[/url] offer players a chance to gamble without a large financial commitment. These types of casinos provide you to play with a small amount of money, making it easier to try out different games. Whether or not you’re a beginner or seasoned player, these options might be a great way to explore your favorite games.

  19. Рекомендую Вам посетить сайт, на котором есть много информации на интересующую Вас тему.
    Casino Online, [url=https://www.911auto.it/web/experience-the-excitement-at-casino-fruity-chance-2/]https://www.911auto.it/web/experience-the-excitement-at-casino-fruity-chance-2/[/url] – In the domain of online gambling, Casino Online offer entertainment at your fingertips. Players can opt for from a selection of games, including slots, poker, and blackjack, offering endless options to win big.

  20. Such environment offers a unique journey for gamblers. BC Game Gambling Platform, [url=https://heflogistics.nl/2026/06/06/understanding-the-bc-game-login-process-your-2/]https://heflogistics.nl/2026/06/06/understanding-the-bc-game-login-process-your-2/[/url] features multiple options and dynamic rewards, providing entertainment for individuals. Join today!

  21. Casinos Not on Gamstop UK, [url=https://staffordmonuments.com/exploring-non-gamstop-casinos-freedom-and-choice-in-online-gaming/]https://staffordmonuments.com/exploring-non-gamstop-casinos-freedom-and-choice-in-online-gaming/[/url] offer players a chance to enjoy gaming without restrictions. Many players seek alternatives that provide better freedom and choices. These casinos often feature engaging games and attractive bonuses, making them a popular choice.

  22. minimum deposit casinos, [url=https://seyedkala.com/2026/06/19/unlock-excitement-with-50-free-spins-no-deposit-11/]https://seyedkala.com/2026/06/19/unlock-excitement-with-50-free-spins-no-deposit-11/[/url] offer players a fantastic opportunity to enjoy gambling without a hefty financial commitment. These kinds of casinos permit players to commence their gaming path with a minimal deposit, making the experience accessible to all. With this approach, fresh players can try out different games without a significant financial risk, ensuring that everyone has a shot to join the fun!

  23. online casinos canada, [url=https://geoequipossrl.com/discover-the-best-online-casinos-in-canada-22/]https://geoequipossrl.com/discover-the-best-online-casinos-in-canada-22/[/url] present a thrilling experience for gamblers. With diverse games and secure payment options, they promise a fun environment for users.

  24. ForBet Casino CZ, [url=http://www.acscaffolds.com.au/forbet-casino-cz-oficialni-vstupte-do-sveta-zabavy-a-vyher/]http://www.acscaffolds.com.au/forbet-casino-cz-oficialni-vstupte-do-sveta-zabavy-a-vyher/[/url] je vГЅjimeДЌnГЎ volba pro obdivovatele online hazardnГ­ch her. NabГ­zГ­ bohatou nabГ­dku her, vДЌetnД› video automatЕЇ. PЕ™ihlaste se a zГ­skejte dary, kterГ© zvyЕЎujГ­ ЕЎance. UЕѕijte si stabilnГ­ hranГ­ s odbornГЅmi podporou zГЎkaznГ­kЕЇ.

  25. В этом что-то есть. Благодарю за информацию.
    free spins no deposit casinos, [url=http://basicauthorization.s1009.xrea.com/x/wp/2026/04/19/no-wagering-casinos-the-future-of-online-gambling-9/]http://basicauthorization.s1009.xrea.com/x/wp/2026/04/19/no-wagering-casinos-the-future-of-online-gambling-9/[/url] – No deposit casinos with free spins offer players a chance to experience casino games without spending their own money. These bonuses are inviting for newcomers seeking to discover online gambling.

  26. online casino, [url=https://dfychief.com/test1a/2026/06/20/explora-el-mundo-de-spins-of-glory-una-revolucion/]https://dfychief.com/test1a/2026/06/20/explora-el-mundo-de-spins-of-glory-una-revolucion/[/url] delivers a exciting experience for punters seeking adventure. With various games and reward offers, everyone can find something exciting to enjoy as they their leisure time.

  27. О ПЃПЊПѓП†О±П„О±, ОјОµОіО¬О»О· О±ПЌОѕО·ПѓО· ПЂО±ПЃО±П„О·ПЃОµОЇП„О±О№ ПѓП„О± ОќО­О± ОљО±О¶ОЇОЅОї ОЈП„О·ОЅ О•О»О»О¬ОґО±, [url=https://astaltd.com/2026/06/09/153660448/]https://astaltd.com/2026/06/09/153660448/[/url]. О‘П…П„О¬ ОµОіОєО±П„О±ПѓП„О¬ПѓОµО№П‚ ПЂПЃОїПѓП†О­ПЃОїП…ОЅ ОґО№О¬П†ОїПЃОµП‚ ОґП…ОЅО±П„ПЊП„О·П„ОµП‚ П€П…П‡О±ОіП‰ОіОЇО±П‚. ОџО№ О»О¬П„ПЃОµО№П‚ О­П‡ОїП…ОЅ ОµОЅО±О»О»О±ОєП„О№ОєО­П‚ ОіО№О± ОЅО± ПЂПЃОїПѓПЂО±ОёО®ПѓОїП…ОЅ ОјОїОЅО±ОґО№ОєО­П‚ ОЅПЌП‡П„ОµП‚.

  28. Какие слова… супер, замечательная мысль
    Enjoying Casino Online Slots, [url=http://flips.kr/2026/05/14/discover-the-thrills-of-frank-online-casino-uk-2/]http://flips.kr/2026/05/14/discover-the-thrills-of-frank-online-casino-uk-2/[/url] offers an option to gain big jackpots. With a wide range of themes and options, players have the opportunity to find their beloved games.

  29. Огромное спасибо Вам за поддержку. Буду должен.
    Грузоперевозки в Минске и Беларуси, [url=https://perevozimgruz.by/gruzovoe-taksi/gruzovoe-taksi-po-belarusi/]https://perevozimgruz.by/gruzovoe-taksi/gruzovoe-taksi-po-belarusi/[/url] производят широкий каталог услуг. Знатоки специалисты обеспечивают высокое качество доставки. Скоростные перевозки важны для бизнеса.

  30. BC Game Online Crypto Casino, [url=https://xs658660.xsrv.jp/jsaas2020/2026/06/06/experience-the-excitement-of-the-bc-game-mobile/]https://xs658660.xsrv.jp/jsaas2020/2026/06/06/experience-the-excitement-of-the-bc-game-mobile/[/url] предлагает уникальные шансы для игроков в пространстве криптовалют. В этом казино, вы получаете шанс наслаждаться играми, используя самые известные криптовалюты. Сайт выделяется своим удобным интерфейсом и шансом выигрывать значительные призы. Присоединяйтесь и познавайте мир игр на деньги с BC Game Online Crypto Casino!

  31. 22Casino Österreich, [url=https://iocdistributor.wpengine.com/entdecken-sie-22casino-osterreich-fur-ein-unvergleichliches-spielerlebnis/]https://iocdistributor.wpengine.com/entdecken-sie-22casino-osterreich-fur-ein-unvergleichliches-spielerlebnis/[/url] bietet eine weite Auswahl an Wettspielen. Seine Plattform ist intuitiv und fesselnd. Gäste können ihren Spaß amüsieren und hohe Gewinne machen.

  32. Casino Utan Svensk Licens, [url=http://tuankiethotel.com/upptack-de-basta-utlandska-casinona-for-en/]http://tuankiethotel.com/upptack-de-basta-utlandska-casinona-for-en/[/url] erbjuder ett alternativ för entusiaster som söker underhållning utan strikta regler. Det möjligtvis kännas mer avslappnat och spännande. Casino Utan Svensk Licens tillhandahåller även fantastiska bonusar och kampanjer som inte alltid finns på certifierade plattformar. Spelare kan njuta av många spelutbud och snabba insättningar, vilket skapar spelet.

  33. Casinos Not on Gamstop, [url=https://starseagallery.com/discover-the-best-casinos-not-on-gamstop-424058500/]https://starseagallery.com/discover-the-best-casinos-not-on-gamstop-424058500/[/url] offer players a chance to enjoy gambling without restrictions. These platforms supply a diverse assortment of games, offering slots, table games, and live dealer options. Players can discover exciting features and promotions.

  34. Finding a great minimum deposit casino, [url=https://alquilertitulotransportista.com/discover-the-benefits-of-5-minimum-deposit-casinos-2/]https://alquilertitulotransportista.com/discover-the-benefits-of-5-minimum-deposit-casinos-2/[/url] allows players to experience the thrill of online gaming without straining their budgets. With minimal deposit options, gamblers can test various games while minimizing risk. This choice attracts both novice and seasoned players. Plus, enticing bonuses often accompany these deposits, enhancing the overall experience. Choose wisely and maximize your enjoyment at a minimum deposit casino today!

  35. посмотрю, темболее с хорошим качеством
    бутиковое SEO агентство, [url=https://t.me/seoetc/]Phoenix Project маркетинговое агентство[/url] предлагает уникальные стратегии для оптимизации вашего онлайн-присутствия. Наша команда предлагает индивидуальные решения, чтобы увеличить посещаемость и продажи. Выбирайте профессионалов для успеха в digital-маркетинге.

  36. When searching for the best online casino, [url=https://dailycashloan.com/index.php/2026/06/20/spins-of-glory-twoje-rodo-informacji-o-najlepszych/]https://dailycashloan.com/index.php/2026/06/20/spins-of-glory-twoje-rodo-informacji-o-najlepszych/[/url], you’ll discover a plethora of options. These sites offer thrilling games and generous bonuses that enhance your experience. Choose wisely!

  37. Finding the greatest online casino can be a tough task, but Canada has many options. The best online casino canada, [url=https://blogs.kritatechnosolutions.com/discover-the-thrills-of-online-casinos-in-canada-11/]https://blogs.kritatechnosolutions.com/discover-the-thrills-of-online-casinos-in-canada-11/[/url] offers exciting games and rewarding bonuses, ensuring an unforgettable gaming experience for all players.

  38. ForBet Casino CZ, [url=http://www.markettheme.com/demo/products/forbet-casino-cz-vse-co-potrebujete-vedet-o-online-hazardu-849740718/]http://www.markettheme.com/demo/products/forbet-casino-cz-vse-co-potrebujete-vedet-o-online-hazardu-849740718/[/url] je ideГЎlnГ­m mГ­stem pro fanouЕЎky hazardnГ­ch her. NabГ­zГ­ ЕЎirokou ЕЎkГЎlu her, mezi slotЕЇ aЕѕ po karetnГ­ hry. Objevte napГ­navГ© bonusy a atraktivnГ­ nabГ­dky.

  39. круть…инетересно было прочесть
    Win Landia Casino dk, [url=http://www.viconion.co.zw/2026/06/14/oplev-spaendingen-pa-win-landia-casino-dk-975033265/]http://www.viconion.co.zw/2026/06/14/oplev-spaendingen-pa-win-landia-casino-dk-975033265/[/url] tilbyder en fremragende sortiment af lege til deltagere. I dette casino kan man opdage alt normale samt moderne slots. Det reelt let at tilmelde sig og nyde de fantastiske tilbud.

  40. ОЈП„О·ОЅ ОµПЂОїП‡О® ОјО±П‚, П„О± ОќО­О± ОљО±О¶ОЇОЅОї ОЈП„О·ОЅ О•О»О»О¬ОґО±, [url=https://restaurate.com.co/148945042-2/]https://restaurate.com.co/148945042-2/[/url] ПЂО±ПЃОїП…ПѓО№О¬О¶ОїП…ОЅ ОµОѕО±О№ПЃОµП„О№ОєО­П‚ ОµП…ОєО±О№ПЃОЇОµП‚ ОіО№О± ОґО№О±ПѓОєО­ОґО±ПѓО· ОєО±О№ ОєО­ПЃОґО·. О•ОґПЋ ПЂПЃОїПѓП†О­ПЃОїП…ОЅ ПЂОїО№ОєО№О»ОЇО± ПЂО±О№П‡ОЅО№ОґО№ПЋОЅ ОєО±О№ ПѓП…ОЅО±ПЃПЂО±ПѓП„О№ОєО¬ ОјПЂПЊОЅОїП…П‚ ОіО№О± П„ОїП…П‚ П‡ПЃО®ПѓП„ОµП‚. О•ОѕОµПЃОµП…ОЅО®ПѓП„Оµ П„О№П‚ ОЅО­ОµП‚ ПЂО»О±П„П†ПЊПЃОјОµП‚ ОєО±О№ ОІОїП…П„О®ОѕП„Оµ ПѓП„О· ОјО±ОіОµОЇО± П„ОїП… П„О¶ПЊОіОїП….

  41. Ну и писанина
    Wagering at an Online Casino, [url=https://vi-rs.com/a-comprehensive-guide-to-golden-lion-casino-uk/]https://vi-rs.com/a-comprehensive-guide-to-golden-lion-casino-uk/[/url] can be exciting. With various games available, players explore unique gaming options. Bonuses often enhance the complete experience, making it even more appealing. Join now and find out the thrill of an Online Casino!

  42. BC Game Online Casino, [url=https://czego-szukasz.pl/bcgame6062/bc-game-login-step-by-step-guide-to-accessing-your/adamzajac]https://czego-szukasz.pl/bcgame6062/bc-game-login-step-by-step-guide-to-accessing-your/adamzajac[/url] provides an entertaining experience for players. With a broad selection of games, including slots, you can effortlessly find something to enjoy and try your luck!

  43. Какая нужная фраза… супер, отличная идея
    Аренда авто в Краснодаре, [url=https://arenda-avto-v-krasnodare.ru/krasnodar/arenda-avto-nedorogo-krasnodar]Аренда авто недорого в Краснодаре — посуточно, без залога и без водителя[/url] позволяет гибкость передвижения. Варианты автомобилей разнообразный, что упростит выбрать соответствующий вариант для поездок.

  44. 22Casino Schweiz, [url=http://www.as-schoeler.com.w01940bf.kasserver.com/22casino-schweiz-ihr-leitfaden-zu-einem-einzigartigen-online-casino-erlebnis/]http://www.as-schoeler.com.w01940bf.kasserver.com/22casino-schweiz-ihr-leitfaden-zu-einem-einzigartigen-online-casino-erlebnis/[/url] stellt eine Vielzahl von Zockerspielen, die fГјr jeden Geschmack geeignet sind. Vor allem die attraktiven Bonusangebote und Aktionen ziehen eine Menge Spieler herbei.

  45. I dagens digitala värld har ett antal spelare börjat utforska Casino Utan Svensk Licens, [url=https://labellebeautysupplyandbraiding.com/casino-utan-svensk-licens-en-guide-till-spel-utan-16/]https://labellebeautysupplyandbraiding.com/casino-utan-svensk-licens-en-guide-till-spel-utan-16/[/url]. Dessa tjänster erbjuder äventyr utan strikta regler, vilket höjer alternativen för spelare. Med anonyma insättningar kan passionerade spelare njuta av sin favoritspel medan de undviker svenska skatter.

  46. online casino game, [url=https://sewarstore.com/discover-the-exciting-world-of-sokabet-your-15/]https://sewarstore.com/discover-the-exciting-world-of-sokabet-your-15/[/url] delivers an exhilarating adventure. Players can savor various options to test their luck. With engaging features and significant payouts, the allure is undeniable. Join now!

  47. Casino Sites Not on Gamstop, [url=https://zaibulnisa.com/discovering-casinos-not-registered-on-gamstop-423045218/]https://zaibulnisa.com/discovering-casinos-not-registered-on-gamstop-423045218/[/url] offer players a unique chance to enjoy their favorite games without restrictions. These platforms provide multiple options, including slots. Players can enjoy a wide range of exciting features and offers. Discovering these non-Gamstop sites can enhance the betting experience for those looking for fun beyond the usual boundaries.

  48. Simply wish to say your article is as amazing. The clarity in your post is just great and
    i can assume you’re an expert on this subject. Well with your permission allow me to grab your RSS feed
    to keep updated with forthcoming post. Thanks a million and please
    carry on the rewarding work.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top