ATM Tamil Romantic Novels

கள்ளோ காவியமோ  – 12

கள்ளோ காவியமோ  – 12
இதுவரை அவளுக்குள் துடிக்காத ஒரு புதிய வேகம்… அவளுக்கே புரியாத ஒரு புதிய ஞாபகம்!
 
தேவா முகத்திற்கு மிக அருகில் வந்து உயிர் உருக முத்தம் கேட்கும்போது, அவளது காதுகளுக்குள் இனம் புரியாத ஒரு குரல், அச்சு அசல் தேவாவின் குரலேதான்… ” உனக்கு வேற வேலையே இல்லையாடி? போ புள்ள… பெரியவங்க நமக்கு முறைப்படி கல்யாணம் பண்ணி வைச்சதுக்கு அப்புறம் தான் இதெல்லாம்! அதுவரைக்கும் அமைதியா இரு,” என்று கறாராகச் சொல்வது போல் ஒரு பிரமை தட்டியது.
 
இளவேனில் உள்ளுக்குள் அப்படியே உறைந்து போனாள். ‘தேவா ஏன் என்னிடம் இப்படிச் சொல்ல வேண்டும்? அவன் எப்போது எனக்கு இப்படி ஒரு கட்டளை போட்டான்? என் ஆயுசில் நான் அவனிடம் முத்தம் கேட்டதே இல்லையே… பிறகு ஏன் இந்த வார்த்தைகள் என் மனதுக்குள் இடிபோல் இறங்குகிறது?’ அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.
 
தனக்குள் நடக்கும் இனம் புரியாத உணர்வின் ரகசியம் புரியாமல், நெஞ்சின் மீது கை வைத்துப் பார்த்தாள். அங்கு அவளது இதயம் அவள் பேச்சைக் கேட்க மறுத்து, அவனது அண்மையின் தவிப்பில் மிரண்டு போய் அடித்துக் கொண்டிருந்தது.
 
அன்று அவளது ஆசையை ஏதோ ஒரு கணத்தில் மறுத்தவன் போல் தெரிந்த அதே தேவாதான், இன்று அவஸ்தை தாங்காமல் காரை ஓரமாய் நிறுத்திவிட்டு, அவளது இதழ்களுக்கு மிக அருகில் வந்து தவித்துப்போய் முத்தம் கேட்டு நிற்கிறான்!
 
அவளது நெஞ்சுக்குள் மறந்துபோன அவனின்  பழைய குரல் கேட்டு இளவேனில் மிரண்டு போய் நிற்க… அவளது உடம்பும் மனசும் அவளது கட்டுப்பாட்டை மீறிப் போயிருந்தது.”
 
தேவாவின் மூச்சுக்காற்று இன்னும் நெருங்கி வந்து அவளது இதழ்களைத் தீண்டும் எல்லையில் நின்ற அந்த நொடி, அவளுக்கே தெரியாமல் அவளது இதழ்கள் மென்மையாக அசைந்தன.
 
“ம்ம்… முத்தம் கொடு மச்சான்… அத்தான்…” என்று மிக மெல்லிய குரலில் அவளது இதழ்கள் முணுமுணுத்தது!
 
அவளின் போதை  வார்த்தைகளைக் கேட்ட அடுத்த நொடி, தேவாவின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தன. அவளது இடுப்பில் இருந்த அவனது கையின் பிடி சட்டென இறுகியது.
 
இளவேனில்  இதுவரை தேவாவை மச்சான் என்று ஒருநாளும் கூப்பிட்டதே இல்லை! எப்போதும் ஜங்கிள் கிங்  என்றோ அல்லது பெயரையோ சொல்லி அழைக்கும் இளவேனிலின் வாயில் இருந்து, இந்த நெருக்குதலான நொடியில் எப்படி மச்சான் அத்தான்  என்ற வார்த்தைகள்  வந்தது? அதுவும் அவளுக்கே உரித்தான  பழைய காதலோடும், உரிமையோடும்!
 
தேவா அவளது முகத்தையே காதலாக உற்றுப் பார்த்தான். இளவேனிலோ தன் இதழ்கள் என்ன பேசின என்று தனக்கே தெரியாதவள் போல், இன்னும் புரியாத மயக்கத்திலும் வெட்கத்திலும் விழிகளை மூடியே கிடந்தாள். அவளுக்குள் இருந்த இதயம், தன் மச்சானைக் கண்டுகொண்டு துடித்துக் கொண்டிருந்தது!
 
அவளது வாயிலிருந்து வந்த மச்சான், அத்தான் என்ற அவளின்  உருகவைக்கும் அழைப்புகள் அவனைக் கிறங்கடித்ததோ என்னவோ… தேவா அதைப் பற்றி மேல்விவரம் கேட்டு அந்த நொடியைக் கலைக்க விரும்பவில்லை. அவளது அந்தப் பேச்சில் அவனுக்குள் காதல் போதை இன்னும் தலைக்கேறியது.
 
தேவா அவளது முகத்தையே காதலாக உற்றுப் பார்த்தான். இளவேனிலோ தன் இதழ்கள் என்ன பேசின என்று தனக்கே தெரியாதவள் போல், இன்னும்  இனம் புரியாத மயக்கத்திலும் வெட்கத்திலும் விழிகளை மூடியே கிடந்தாள். அவளுக்குள் இருக்கும்  இதயம்,  தன்  மச்சானைக் கண்டுகொண்டு துடித்துக் கொண்டிருந்தது!
அவளது வாயிலிருந்து வந்த  மச்சான் அத்தான்  என்ற ஒற்றை அழைப்புகள்  அவனைக் கிறங்கடித்ததோ என்னவோ… தேவா அதைப்பற்றி மேல்விவரம் கேட்டு அந்த நொடியைக் கலைக்க விரும்பவில்லை. அவளது அந்தப் பேச்சில் அவனுக்குள் காதல் போதை இன்னும் தலைக்கேறியது.
 
அவளது இதழ்களுக்கு இன்னும் நெருக்கமாக, தன் மூச்சுக்காற்றால் அவளது முகத்தை வருடியபடி வந்தவன், “முத்தம் கொடுக்கவா வேணில்…?” என்று காதலின் உச்சக் கட்டப் போதையோடு மெதுவாகக் கேட்டான். 
அவன் கேட்ட அந்தக் கேள்விக்கு, இளவேனில் வார்த்தைகளால் பதில் சொல்லவில்லை. தன் மூடியிருந்த விழிகளை லேசாகத் திறந்து, அவனது காதலோடு தவித்த கண்களை நேருக்கு நேராகப் பார்த்தவள்… “ம்ம்…” என்று ஒற்றை வார்த்தையில் முணுமுணுத்தபடி, சம்மதத்திற்கு அடையாளமாய் அழகாகத் தன் கண்ணைச் சிமிட்டினாள்!
 
அவள் தந்த  பச்சைக் கொடியில் தேவாவின் கட்டுப்பாடு மொத்தமாய் உடைந்து போனது.
அடுத்த நொடி, அவனது நீண்ட விரல்கள் அவளது மென்மையான கன்னத்தை காதலோடு வருடி இறங்கின. அவளது இதழோடு தன் இதழை லேசாக உரசி, அவளுக்குள் ஒரு புதிய சிலிர்ப்பை ஏற்படுத்தியவன், அவளது மெல்லிய இடை வளைவை தன் பலமான கைகளால் அழுத்தமாகப் பற்றிக் கொண்டான்.
 
அவனது கைகள் செய்த அந்த மாயா ஜால தீண்டலில், இளவேனில் மொத்தமாய் அவனிடம் மயங்கிப் போனாள். தன் சுயநினைவை இழந்து அந்தக் காதல் போதையின் உச்சத்தில், “மச்சான்…” என்று மீண்டும் ஒருமுறை முணுமுணுத்தபடி தன் இதழ்களை மென்மையாக விரித்தாள்.
 
அவள் இதழ் விரிக்கும்  தருணத்திற்காகவே தவித்து காத்துக்கிடந்தவன் போல  அடுத்த கணமே அவளது இதழ்களைத் தன் இதழ்களால் கவ்வி, அவளது இதழமுதை அள்ளிக் குடிக்கும்  தீராத தாகத்தோடு சுவைக்கத் தொடங்கினான். வெளியே மத்தியான வெயில் தகித்துக் கொண்டிருக்க, காரின் உள்ளே இருந்த ஏசியின் குளிரில் அந்த வெப்பம் மொத்தமாய் மடிந்து போனது காலமும் நேரமும் கடந்து, அந்தச் சின்னஞ்சிறிய காரின் இருப்புக்குள் இரு இதயங்கள் மட்டும் ஒன்றோடொன்று பேசிக்கொள்ள, அவனது ஆழமான முதல் முத்தத்தின் தீவிரத்தில் அவளது வெட்கமும், தவிப்பும் மொத்தமாய் கரைந்து, ஒரு புதிய காவியமாய் அங்கே தொடங்கியது.
ஆனால்,  மயக்கத்தின் உச்சத்தில், அவனது விரல்கள் அவளது மென்மையான அங்கம் தேடி மெல்ல நகரத் தொடங்கிய அந்த நொடி… இளவேனிலின் பெண்மை சட்டென விழித்துக் கொண்டது! தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று அவளுக்குள் தடாலடியாக உதித்தது. அவசர அவசரமாகத் தன் சுயநினைவுக்குள் வந்தவள், சடாரென்று தேவாவினுடைய பிடியிலிருந்து தன் இதழ்களை விலக்கிக் கொண்டு பின்வாங்கினாள். முகத்தில் படர்ந்திருந்த வெட்கம் அப்படியே கோபமாக மாற, வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கத் தொடங்கினாள்.
 
“என்ன பண்ணிட்டு இருக்கீங்க நீங்க? இப்படித்தான் ஒரு பொண்ணை வெளியே கூட்டிட்டு வந்து கார்ல வச்சு முத்தம் கொடுப்பீங்களா? ஜங்கிள் கிங்” என்று தன் ஆள்காட்டி விரலை நீட்டி ஆவேசமாகக் கத்தினாள்.
தேவாவோ அவளது இந்தக் திடீர் கோபத்தைக் கண்டு மிரளவில்லை மாறாக, அவளது அந்த செல்லக் கோபத்தின் அழகை ரசித்தபடியே, தன் ஒரு கண்ணைச் சிமிட்டி, “நானாடி முத்தம் கொடுத்தேன்? நீதானேடி முதல்ல முத்தம் கொடு மச்சான்னு சொன்ன? வேணும்னா என்கிட்ட இருக்குற ரெக்கார்டைக் காட்டட்டுமா?” என்று அக்மார்க் குறும்போடு அவளது மூக்கைப் பிடித்து ஆட்டினான்!
 
“என்னது… ரெக்கார்டா?!”
 
அவன் சொன்ன வார்த்தையில் இளவேனில் அதிர்ச்சியில் கண்ணைப் பெருசாக்கி தேவாவைப் பார்த்தாள். அவளுக்குத் தான் பேசியது எதுவுமே நினைவில் இல்லை என்பதால், உள்ளுக்குள் லேசாக பயம் தொற்றிக் கொண்டது. நிஜமாகவே அவன் போனில் எதையும் ரெக்கார்ட் செய்து வைத்திருக்கப் போகிறான் என்ற பதற்றத்தில், “ஐயோ… வேண்டவே வேண்டாம்! வண்டியை எடுங்க முதல்ல!” என்று அலறியவள், அவன் பாக்கெட்டில் கைவைக்கும் முன்பே அவனது கையைப் பிடுங்கப் பாய்ந்தாள்.
 
அவள் பாய்ந்த வேகத்தில், அவளது கைகள் தேவாவின் பலமான மார்பில் மோதி நிலைதடுமாற… தேவா சட்டென அவளது கைகளைத் தன் ஒரே கையில் சிறைபிடித்து, அவளைத் தன்பக்கம் இழுத்துக் கொண்டான். காரின்  சிறிய இடைவெளியில், இருவருக்கும் மத்தியில் மறுபடியும் ஒரு மெல்லிய நெருக்கம் சட்டென உருவானது.
 
அவளது முகத்திற்கு நேராகத் தன் முகத்தைக் கொண்டு வந்தவன், அவளது தவிப்பைப் பார்த்து சத்தமாக சிரித்துவிட்டான். “ஏண்டி… நான் சும்மா பொய் சொன்னதுக்கே இப்படிப் பதறுற? அப்போ நிஜமாவே நீ என்கிட்ட மச்சான்னு சொல்லி முத்தம் கேட்டதை ஒத்துக்கிறியா?” என்று அவளது தவிப்பை ரசித்தபடி வம்பு இழுத்தான் தேவா.
 
தேவாவின் குறும்புப் பேச்சில் இளவேனிலின் முகம் இன்னும் சிவக்க, அதற்கு மேல் அங்கே நின்றால் தன் வெட்கம் மொத்தமாய் காட்டிக் கொடுத்துவிடும் என்று சுதாரித்தவள், “போதும் வம்பு வளர்த்தது… இப்போ வண்டியை எடுக்குறீங்களா இல்லையா? அங்க காப்பகத்துல  எனக்காக குழந்தைகள்  காத்துட்டு இருப்பாங்க!” என்று அவசர அவசரமாகப் பேச்சை மாற்றினாள்.
 
அவளது தவிப்பைக் கண்டு மெல்லச் சிரித்தவன், “சரிடி…பார்பி கேர்ள் … உன் கோபத்துக்குப் பயந்துதான் வண்டியை எடுக்குறேன்” என்று வம்பு செய்தபடியே காரை ஸ்டார்ட் செய்தான்.
 
மத்தியான வெயிலின் தகிப்புக்கு நடுவே கார் அந்தப் பசுமையான மரங்கள் நிறைந்த காப்பகத்தின் நுழைவாயிலுக்குள் வந்து நின்றது. வண்டியை நிறுத்தியதும், இளவேனில் தன் நெஞ்சில் கையை வைத்து ஒருமுறை ஆழமாக மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டாள். காரில் நடந்த  நடுக்கமும், மச்சான் என்று தனக்கே தெரியாமல் கூப்பிட்ட ரகசியமும் இன்னும் அவளது மனதுக்குள் அலைபாய்ந்து கொண்டுதான் இருந்தது.
 
காரிலிருந்து இருவரும் இறங்கியபோது, காப்பகத்தின் வளாகமே அமைதியாகவும், அதே சமயம் அங்கே விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளின் மெல்லிய சிரிப்புச் சத்தத்தோடும் அமுதம் போல் நிறைந்து காணப்பட்டது.
 
அவர்களைக் கண்டதும் அங்கிருந்த ஃபாதர்  முகமலர்ச்சியோடு எதிர்கொண்டு வரவேற்க நடந்து  வந்தார். தேவாவும் இளவேனிலும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு, தங்களின் மனக் குழப்பங்களை விடுத்து அந்த மழலைகளின் உலகத்திற்குள் காலடி எடுத்து வைத்தனர்.
 
 அவர்களைக் கண்டதும், அங்கிருந்த ஃபாதர் முகமலர்ச்சியோடு எதிர்கொண்டு  தேவாவையும் இளவேனிலையும் பார்த்தவர், “வாங்க சார்… வாமா  இளா …” என்று இன்முகத்தோடு வரவேற்றார்.
 
அவர் கூப்பிட்ட குரலைக் கேட்டு, அங்கே விளையாடிக் கொண்டிருந்த அந்தக்குட்டிப் பெண் யாழினி சட்டெனத் திரும்பிப் பார்த்தாள். இளவேனிலை பார்த்ததும் தன் கையில் இருந்த பொம்மையைக் கீழே போட்டுவிட்டு, இளா அக்கா… என்று மழலை மாறாத குரலில் கூச்சலிட்டபடி ஓடி வந்தாள். ஓடி வந்த வேகத்தில் இளவேனிலின் காலைத் தன் பிஞ்சுக்கரங்களால் அப்படியே கட்டியணைத்துக் கொண்டது அந்தப் பாசக்குட்டி. இளவேனிலின் முகம் மொத்தமாய் மலர, அவளது உதடுகளில் ஒரு தாய்க்குரிய பேரன்பும் புன்னகையும் வந்து குடியேறியது.
யாழினியை  தொடர்ந்து, அங்கிருந்த இன்னும் பல மழலைகளும், “ஹே!..இளா அக்கா வந்துட்டாங்க… இளா அக்கா…!” என்று உற்சாகக் குரல் எழுப்பியபடி நாலாபுறமிருந்தும் ஓடி வந்தவர்கள் வண்ணத்துப் பூச்சிகள்  மலரைச் சூழ்ந்து கொள்வதைப் போல, அத்தனை குழந்தைகளும் இளவேனிலைச் சூழ்ந்து நின்றுகொண்டனர். இளவேனிலும் அவர்களோடு ஒரு குழந்தையாகவே மாறிப்போனாள். தான் கொண்டு வந்திருந்த வெளிநாட்டு சாக்லேட்டுகளைத் தன் பையிலிருந்து எடுத்து, அவர்களின் பிஞ்சுக்கரங்களில் அள்ளிக் கொடுத்து கொஞ்சியபடி, மழலைத் தமிழில் பேசத் தொடங்கினாள்.
 
அப்போது, யாழினி  “இளா  அக்கா… நீங்க ஏன் ரெண்டு நாளா வரல? நீங்க வருவீங்கன்னு நான் வாசலையே பார்த்துட்டு இருந்தேன் தெரியுமா?” என்று தன் மழலையில் நியாயம் கேட்டாள். 
 
யாழினியின் கன்னத்தை கிள்ளி முத்தமிட்டவள், “அக்கா வேலை விஷயமா வெளியூருக்குப் போயிருந்தேன்டா செல்லம்… இனிமே அடிக்கடி வர்றேன், சரியா?” என்று சமாதானம் செய்தாள். தன் பின்னே தேவா என்றொருவன் நின்றுகொண்டிருக்கிறான் என்பதையே முற்றிலும் மறந்து, அந்தக் குழந்தைகளின் உலகத்திற்குள் தன்னை முழுமையாக தொலைத்துவிட்டு பேசிக் கொண்டிருந்தாள் இளவேனில்.
 
இளவேனில் குழந்தைகளோடு மூழ்கியிருப்பதை ரசித்தபடி நின்ற தேவாவின் பார்வை, அங்கே கனிவோடு நடந்து வந்துக் கொண்டிருந்த ஃபாதரின் மீது விழுந்தது.
 
“வாங்க தம்பி… நான் தான் இந்த காப்பகத்தோட ஃபாதர்,” என்று இன்முகத்தோடு அறிமுகப்படுத்திக் கொண்டவரிடம், “வணக்கம் ஃபாதர்! இங்க மொத்தம் எத்தனை குழந்தைகள் இருக்காங்க?” என்று தேவா விசாரித்தான்.
 
“மொத்தம் நாற்பது குழந்தைகள் இருக்காங்க தம்பி. பிறந்தநாள், கல்யாண நாள்னு வர்றவங்க அவங்களால முடிஞ்ச பண உதவியோ, இல்ல அன்னதானமோ செஞ்சுட்டு போவாங்க. நானும் என்னால முடிஞ்ச வரைக்கும் ஓடி ஓடி பார்த்துட்டு இருக்கேன்,” என்று பெருமூச்சோடு சொன்னவர், சட்டென இளவேனிலைப் பார்த்து புன்னகைத்தார்.
 
“நம்ம இளாவும் இங்கதான் வளர்ந்தா தம்பி! இப்போ நல்லா படிச்சு பெரிய மனுஷியாகி, அவ கை நிறைய சம்பாதிக்க ஆரம்பிச்சதுல இருந்து இந்த காப்பகத்துக்குத் தேவையான உதவிகளை அவதான் தாங்கிப் பிடிக்கிறா. ஆனா… சரியான கோவக்காரி! அவ பார்க்குற வேலையில கருத்து வேறுபாடு வந்துட்டா, எதிர்ல நிக்கிறது யாருன்னே பார்க்க மாட்டா… அவ கண்ணோட்டத்துல தப்புன்னா தப்பு தான்! சரி தம்பி… நீங்க என்ன வேலை பார்க்குறீங்க?” என்று  கேட்டார்.
 
தேவா சற்றும் தயங்காமல், “நான் பாரம்பரிய சிலைகள் செஞ்சு கொடுக்கிறேன் ஃபாதர்,” என்றவன், சற்றுத் தள்ளி குழந்தைகளோடு குழந்தையாக விளையாடிக் கொண்டிருக்கும் இளவேனிலை ஒரு நொடி ஆழமாகப் பார்த்துவிட்டு, “இனிமேல் இந்த காப்பகத்துக்குத் தேவையான பணத்தை மாசம் மாசம் ஒரு குறிப்பிட்ட தொகையா நான் அனுப்பி வச்சிடுறேன் ஃபாதர். இனி நீங்க பண உதவிக்காக மத்தவங்களை எதிர்பார்த்து நிக்க வேண்டாம். இது என் கடமை,” என்றான் அவனது அக்மார்க் கம்பீரத்தோடு.
 
அவனது பெருந்தன்மையைக் கண்டு ஃபாதரின் கண்கள் கலங்கின. “ரொம்ப தேங்க்ஸ் தம்பி… கடவுள் உங்களை நல்லா வைப்பார்!” என்று நெகிழ்ச்சியோடு தேவாவின் கைகளைப் பற்றிக் கொண்டார்.
அப்போது, தேவாவின் குரல் கேட்டு அங்கே ஓடி வந்த யாழினி, அவனது ஜீன்ஸை உலுக்கி, “ஏய்!… நீங்கதானே ஃபோன்ல அம்பாரி யானை சவாரி கூட்டிட்டுப் போறேன்னு சொன்னீங்க?” என்று தன் மழலை மாறாத குரலில் செல்லமாய் மிரட்டினாள்.
 
அவளது மிரட்டலில் தேவாவின் கம்பீரம் மொத்தமாய் உதிர்ந்து போனது. “ஆமாடா செல்லம்… வா விளையாடலாம்!” என்றபடி, அடுத்த நொடியே தரையில் மண்டியிட்டு யானையாக மாறினான் தேவா. யாழினியைத் தன் பலமான முதுகில் தூக்கிச் சுமந்து கொண்டு, “யானை… யானை… அம்பாரி யானை…” என்று காப்பக வளாகம் முழுக்க அவளோடு குழந்தையாக மாறி ஓடி விளையாடினான்.
 
அவன் யானையாக மாறி யாழினியை சுமப்பதையும், மதியத்தில் இருந்து மாலை வரை அங்கேயே கிடந்து குழந்தைகளோடு குழந்தையாக உணவருந்துவதையும் பார்த்த இளவேனிலின் நெஞ்சம் அடியோடு உருகிப் போனது. இரவு நெருங்கும் வேளையில்தான், அங்கிருந்தவர்களின் பாசப் பிடியிலிருந்து மனமே இல்லாமல் இருவரும் காரை நோக்கிக் கிளம்பினார்கள். இன்னும் கொஞ்ச  நேரத்தில் வரப் போகும் ஆபத்து தெரியாமல்.
 

5 thoughts on “கள்ளோ காவியமோ  – 12”

  1. Looking back, I have spent quite a energy checking out different venues recently, and it is plain that the present landscape is changing so
    fast. The main observation I’ve seen is that even though most brands guarantee massive wins, only a
    few genuinely offer the seamless layout everyone all crave.
    I was lately reading the spinmama to fully see how some brands
    try to maintain the level so high these days. Another thought would be that phone access isn’t only
    a bonus yet the absolute must for anyone that enjoys gambling on the
    go. Plus, one truly believe that clarity concerning payout times stays the critical security point now.
    Do you agree that the focus is moved away starting
    from slot quantity towards better player security?
    And, exactly which platform have offered the community that top overall atmosphere this
    year?

  2. Hello just wanted to give you a brief heads up and let you know
    a few of the images aren’t loading correctly. I’m not sure why
    but I think its a linking issue. I’ve tried it in two different browsers and both show the same results.

  3. If I’m being real, I have passed quite some bit of time this month
    trying out diverse methods in various platforms, but the
    whole concept of path-based games actually stays things unique.
    A single observation I’ve witnessed remains that staying
    calm matters way greater rather than blind fortune if someone decide to chicken road 2
    for aim for those massive returns. It feels much
    more repetitive compared to standard slots, primarily because
    you actually get to select your risk mode which
    matches your present style. I have additionally realized that minor payouts built up across extended games generally point to safer outcomes instead of going full in for every individual
    turn. Do you think if modern algorithms are highly fair lately, or
    is it only a smart marketing trick for to keep the focus longer?
    I’d love to know if anybody in this thread is actually discovered a reliable pattern to handle this swing during a full haul.

  4. Hey there! This is my 1st comment here so I just wanted to give a quick shout out and say
    I truly enjoy reading through your articles.
    Can you suggest any other blogs/websites/forums that deal with the same subjects?
    Appreciate it!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top