2.கல்லுக்குள் இதயம்
அதிர்ச்சி மாறாமல் நின்றான் இளவேந்தன்.. என்னடா இது நம்ம அக்ரீமெண்ட் காக கல்யாணம் பண்ணினோம்..இந்த பொண்ணு இப்படி பண்ணிட்டு போகுது..ப்ச் ஸச் அ இடியாடிக் கேர்ள்..அவள் மீது கோபம் தான் இப்படி ஒரு வியூவில் அவளை பார்த்தது இல்லை நம்மாள்..அவனிடம் பேசவே தயங்கும் ஆட்கள் முன் இப்படி ஒரு பெண் நடந்து கொண்டாளே என்ற ஆண் கர்வம் வேறு அவனுக்கு வந்ததது…அவன் வீட்டில் வேலைக்காரர்கள் அனைவரும் அவனுக்கு பணிவிடைகள் செய்வது பார்த்து பழகியவன்…அவர்கள் செய்யும் வேலை தானே அவன் மனைவியாக வந்தவளும் செய்தாள் என்று நினைத்து கொண்டான்..இதில் வேற்றுமை கண்டறிய தெரியவில்லை போலும்..
ஒரு பெண்ணை அந்த இரவில் வீட்டை விட்டு வெளியில் அனுப்பிருக்கிறோம் என்ற குற்ற உணர்வு கொஞ்சமும் இல்லாமல் நிம்மதியாக தூங்க போயாச்சு..
நிறை வீட்டை விட்டு வந்தவள் ..,கோபத்தில் தன் தோழி நித்யா வுக்கு போன் செய்து மானவாரியாக பேசிவிட்டாள்..
ஆஆ..ஹலோ.. கொஞ்சம் அமைதியா இரு டி..
என்னடி இந்த நேரத்துல போன் பண்ணிருக்க..,என்னாச்சு நிறை இவ்வளவு பாசமா பேசுற
ம்ம்ம் னொன்னாச்சு..உன் ஹாஸ்டல் முன்னாடி தான் நிக்கிறேன்..வா வந்து என்னைய கூட்டிட்டு போ..நீ வரல நா எங்கயாச்சும் போய்டுறேன் என்று கூறினாள்..
என்னது இரு இரு வரேன் என்று தோழியை பார்த்ததும் அனைத்து கதறி விட்டாள்..
ஏய்..எதுக்கு டி அழகுற என்னாச்சு..சொல்லிட்டு அழு நிறை..ஏதோ பிரச்சினை என்பது மட்டும் தெரிந்தது…சரி கணவன் மனைவி சண்டையாக இருக்கும் நாம போய் கேட்க கூடாது என்று ஒதுங்கி கொண்டாள்.. அதே நேரத்தில் தோழிக்கு உறுதுணையாக நின்றாள்..
நிறை நிலா ஏதும் கூறவில்லை அவர்கள் ஹாஸ்டல் வார்டனிடம் கூறிவிட்டு தன்னுடைய அறையிலேயே தங்க வைத்து கொண்டாள்..
நிறை நிலா அறை வந்ததும் ..கட்டிலில் படுத்துக்கொண்டு அழுது கொண்டே இருந்தாள்..தனக்கு திருமணம் எப்படி நடந்தது என்று நினைத்து கொண்டு இருந்தாள்.
ஈரோட்டில் இருக்கும் சிவராமன் பார்வதி தம்பதியின் இளைய மகள் தான் நிறை நிலா..மூத்தவள் ராகினி ..ரைஸ்மில் மற்றும் சில ஏக்கர் கணக்கில் உள்ள சொத்துக்களும் சொந்தமாக வைத்திருக்கும் நபர்..ஓரளவு வசதி படைத்தவர்கள் தான்..இருக்கும் சொத்துக்களை விற்று ஒரு புது தொழில் தொடங்க ஆசைப்பட்டார் சிவராமன்..அங்கு தான் விதியும் தன் விளையாட்டை தொடங்கியது..
பார்வதி ..இந்த புது தொழில் மூலமா நமக்கு ஏகப்பட்ட பணம் வருது…இன்னும் நிறைய வர போகுது..
எனக்கு என்னமோ மனசு இது சரியா வரும்னு தோணலங்க..ஏதோ தப்பா படுது.. நமக்கு எதுக்குங்க புது தொழில் எல்லாம் இருக்குற சொத்துக்கள் எல்லாம் போதாதா.. ..நம்ம பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டு இருக்குற விவசாய நிலத்தை பார்த்துக்கலாம்..
உனக்கு என்ன தெரியும்..பிசினஸ் பத்தி..படிக்காத பட்டிக்காடு இதுல வர லாபம் எதுலயுமே நமக்கு கிடைக்காது ..,என்று பேராசை கொண்ட மனதோடு அதில் இறங்கினார்..
ஏங்க அப்போ உங்க தங்கச்சி வூட்டுக்காரர் கூட வேண்டாமுங்க.. நீங்களே தனியா பண்ணுங்க..நம்ம பொண்ணுங்க தா படிச்சுருக்கே..சிவராமன் தங்கை கோமதியின் கணவன் ரத்தினம் மிகவும் மோசமனவன் ..கோமதி அடி உதை தாங்காமல் தன் கணவனிடம் ஏதும் பேசாமல் அமைதியாக தன்னை மாறிகொண்டார்…பெற்ற மகனை நல்வழி படுத்த நினைக்க அவர்களது மகனும் தந்தை வழி செல்ல நொந்தாள்..,அதை விட பணத்திற்காக எதையும் செய்யும் கேடு கெட்ட பிறவி..அது இதுவரை சிவராமனுக்கு தெரியாதவாறு நடித்து கொண்டிருக்கிறார்..
அவங்க ரெண்டு பேருக்கும் என்ன தெரியும்..என் மச்சானுக்கு எல்லாம் தெரியும்..அவனால தான் இன்னைக்கு இவ்வளவு லாபம் தெரியுமா…நம்மள விட பெரிய இடத்துல கல்யாணம் பண்ணனும்..அதுக்கு நம்மகிட்ட இருக்க சொத்து பல மடங்கு அதிகமாகனும்…ஆமா பெரியவள் ராகினி எங்க ..சின்னகுட்டி எங்க போனாள்.
பெரியவ கோவில் போயிருக்கா..நிலா இன்னைக்கு கடைசி பரீட்ச்சை எழுத போயிருக்கா..
இந்தா இது நம்ம புது தொழில்ல கிடைச்ச லாபம் ஏழு கோடி..உள்ள வை..
என்னது ஏழு கோடியா.. ஏங்க இது எனக்கு ஏதோ பயமா இருக்கு..
நல்ல வழில சம்பாதிச்ச பணம் தான்..என்னோட பங்கு இது….
இந்த வருஷம் நம்ம ராகினிய நல்ல பையனா பார்த்து கட்டிக்கொடுத்து பக்கத்துலயே வச்சிக்கணும்ன்னு நினைச்சேன் ஆனா ..,அவளுக்கு நாளைக்கு மறுநாள் ஒரு பையனை பார்க்க வீட்டிற்க்கு வர சொல்லிருக்கேன்…நல்ல குடும்பமா இருக்காங்க..என்று கூறிக்கொண்டார்..
யாரு அது..என்று பார்வதி கேட்க
என்னோட பிசினஸ் பார்ட்னர் தான்..இளவயது பையன் தான்..நல்ல நிறைய சொத்து சேர்த்து வச்சிருக்கான்.
வேண்டாமுங்க இந்த தொழில் ல நம்ம பொண்ணோட வாழ்க்கை
நீ ஆரம்பிக்காத எனக்கு எல்லாம் தெரியும்..என் பொண்ணு வாழ்க்கை நல்ல படியா அமைச்சு கொடுப்பேன்..
இதை வாசலில் நின்ற ராகினி கேட்க மனதால் நொந்து போனாள்..அவள் மனதில் விரும்பும் ஒருவன் இருக்க தந்தை இப்படி கூறியதும் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி போனாள்..
மாலை நிறை நிலா..,தன் கடைசி தேர்வை எழுதி முடித்து சந்தோஷமாக வீட்டிற்கு வரவும்..,
தன் அக்கா ராகினி அழுத முகத்தோடு இருக்கவும் ..ப்ப்பூ இதுக்கா அக்கா அழற அப்பா நாம சொன்ன கேட்டுப்பாறு.. நீ அழுமூஞ்சியாட்டம் நிக்கமா சாப்பிட வா..
இல்ல நிறை அப்பா என்கிட்ட சொல்லிட்டாங்க..என்று கேவி கேவி அழவும்.. அக்கா நீ நிரஞ்சன் மாமாவ வந்து பேச சொல்லு.. ..இது மாதிரி அழாத அக்கா…நிறைக்கு எப்பொழுதும் தன்னை சுற்றி இருப்பவர்கள் அனைவரது முகத்திலும் மகிழ்ச்சியை மறைய செய்யாமல் பார்த்து கொள்வாள்..
நாளைக்கே வர சொல்றேன் ..என்று அவசர அவசரமாக நிரஞ்சனு க்கு போன் செய்து விஷயத்தை கூறவும்..
ராகினி நீ கவலைப்படாத ..நாளைக்கு வீட்டுல வந்து பேசுறேன்..உங்க அப்பாவோட பதில் எதுவாக இருந்தாலும் என்ன ஆனாலும் எனக்காக நிற்ப தான..
அத்தான் நீங்க மட்டும் தான் என் உயிர்..உங்களை விட்டு இன்னொருதரை என்னால கல்யாணம் செய்துக்க முடியாது..என்ற உறுதி வரவும் நிம்மதியாக உறங்க சென்றனர்..
நிரஞ்சன் அவ்வூரின் சிலம்பம் வாத்தியார் மகன்..படித்தவன்..,பண்புள்ளவனும் கூட..இவர்கள் அளவு பணம் வசதி அற்றவன்..ஆனால் அடிக்கடி ஊர் சண்டை நடக்கும் போது ஊர் பெரியவாரக இருக்கும் சிவராமனை எதிர்த்து நிற்கவும் அவனை சுத்தமாக புடிக்காமல் போயிற்று…
அதன் பிறகு மாப்பிள்ளை வீட்டினர் வர வில்லை என்ற செய்தி வந்தது..
நிறை அப்பாடி அக்கா இனிமே அழ மாட்டா சந்தோசமா இருப்பா..… என்று அறைக்கு வரவும் ஒரு காகிதம் மட்டும் இருந்தது..
நிறைக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை..
ஆனால் அதற்கு முன் ராகினி அவசரப்பட்டு நிரஞ்சனுடன் ஓடி விட்டாள் என்ற செய்தியும் சேர்ந்தே வந்தது..
அது மட்டுமில்லாமல் வேறொரு செய்தி வந்தது..அது சிவராமனின் அனைத்து சொத்துக்களும் அவரின் புது தொழிலும் முடக்கப்பட்டு விட்டதாக கோர்ட் மூலம் ஆட்கள் செய்தியை கொண்டு வந்திருந்தனர்…என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி கொண்டிருந்தனர் ..அவர்கள் வீடு பறிக்கப்பட்டது..சொத்துக்கள் மற்றும் வங்கிகணக்கு என அனைத்தும் முடக்கப்பட்டது..ஏன் என்று கேட்டதுக்கு இதில் சட்டத்திற்கு புறம்பான தொழில் செய்வதாக பொய்யாக ஒரு கம்பளைன்ட் சிவராமன் மேல் போட பட்டிருக்கிறது..மனதளவில் நொந்து போனார் சிவராமன்..இதற்கு பின் ரத்தினம் தான் இருக்கிறான் என்பது அனைவருக்கும் தெரியும்..ஆனால் தெரிய வேண்டிய சிவராமனுக்கோ பயத்திலும் வேர்த்து போய் நின்றிருந்தார்..
சிவராமனின் ஆருயிர் நண்பன் தான் ராஜேந்திரன் இந்த நிலையில் தன் நண்பனை விட்டு செல்வது முறையல்லவே..அதனால் அவருக்கு துணையாக நின்றார்..
டேய்..,ராஜேந்திரா என் பெரிய பொண்ணு என்னைய இப்படி ஏமாதிட்டு போவான்னு நா கொஞ்சம் கூட நினைக்கல..என்னோட எல்லா சொத்தும் போச்சே என்று கதறினார்..
சிவராமா பூர்விக சொத்துக்கள் மட்டும் இப்போ உன்கிட்ட இருக்கு..அதை ஏதும் செய்ய முடியாது..
யார் இப்படி பண்ணங்கன்னு தெரியலையே…
வேற யாரு உங்க தங்கச்சி புருஷன் தான் என்று பார்வதி கூறவும் அவரை முறைத்தவர்.. உண்மைய தான் சொல்றாங்க அண்ணா எம் புருஷனால தான் உனக்கு இந்த நிலைமை..அந்த மனுசன் நைட் யார்ட்டையோ பேசிட்டு இருந்தத கேட்டேன்..நிறைக்கும் ராகினிக்கும் எல்ளா சொத்தும் எழுதி வைக்க போறதா நீ சொன்னனு கோவாமா பேசிட்டு இருந்தார்…ராகினியையும்,நிறையைம் அவர் பையனுக்கே கட்டி வச்சி சொத்தை பரிக்கலாம்னு நினைச்சாறு..இன்னைக்கு ராகினிய பொண்ணு பாக்க வரங்கன்னு சொன்னதும் இந்த வேலைய பார்த்துட்டு எங்கேயோ ஓடி ஒழிஞ்சுகிட்டார்..ஆனா அந்தாள் சும்மா இருக்க மாட்டான் ராகினி இல்லனதும் நிறையை ஏதாச்சும் செஞ்சு என் பையனுக்கு கட்டி வைக்க நினைப்பர்..அந்த பாவி பெத்த புள்ளைக்கு என் நிறை வேண்டாம் அண்ணே.. எப்படியாச்சும் புள்ளைய வெளில அனுப்பி விட்டுரு..,என்று கோமதி அழுது கொண்டே சொன்னார்..
சிவராமா விடு இப்போ எவ்வளவு பணம் கொடுக்கனுமன்னு சொல்லு நா தறேன்..நீ முதலில் தைரியாமா இரு..
இவ்வளவு நாள் ஒருவனை நல்லவன் என்று நம்பினேன் என் மீது தான் தவறு இருக்கு..,என்று தன்னையே நொந்தவர் தன் மகள் நிறை வாழ்க்கையை கேள்விகுறி ஆக்கி விட்டோமே என்று குற்ற உணர்ச்சியில் நெஞ்சை பிடித்து கொண்டு விழுந்தார்..
அப்பா..,அம்மா..,என்று நிறை அழவும்.. பார்வதி மயங்கிய நிலையில் இருந்தார்
உடனடியாக மருத்துவமனை சேர்த்து இருவரும் பிழைக்க வைக்க பட்டனர்..
இதில் இருந்து தப்பிக்க ஒரே வழி தன் மகளை ராஜேந்திரா எனக்காக ஒரு உதவி பண்ண முடியுமா..
சொல்லு சிவராமா..,
என் பொண்ண நீ மருமகளா ஏதுப்பியா..
டேய்..என்னடா சொல்ற
இந்த நேரத்துல இதை சொல்றது தப்பு தான்..எனக்கு என் பொண்ண காப்பாத்த வேற வழி தெரியல ..என்னோட பூர்விக சொத்துக்கள் எல்லாம் என்னோட அப்பா நிறை பேர் ல தான் எழுதி வச்சிருக்கார்..அது ஒரு இரண்டு கோடி வரும்…அதை சீதனமா ஏத்துக்கோ டா என்று காலில் விழவும்..
டேய் அதெல்லம் ஒன்னும் வேண்டாம்..என் மருமக நிறை தான்..
அடுத்த ஒரு மாதத்தில் நிறைக்கும் இளவேந்தனுக்கும் பெரிய மண்டபத்தில் திருமணம் நடந்தது..
