35 – ஆடி அசைந்து வரும் தென்றல் நிறைவு பகுதி
நாற்பதைந்து நாட்களில் ஸ்கேன் செய்து பார்த்து விட்டு.. கேட்டவுடன் அனிவர்த்துக்கு அளவில்லா மகிழ்ச்சி.. மகிழ்ச்சி சில நிமிடங்களில் மறந்து அந்த இடத்தை பயம் ஆக்கிரமித்துக் கொண்டது. தேவர்ஷி மெல்லிய தேகம் எப்படி தாங்குவாள். அவளுக்கு சிக்கலாகிவிட்டாள்.
மருத்துவமனையில் இருந்து வீடு வந்தவன் சரியாக உண்ணாமல்.. உறங்காமல்.. ஏதோ யோசனையிலேயே இருந்தான். தேவர்ஷி எவ்வளவோ கேட்டும் ஒன்றும் சொல்லவில்லை. ஏதாவது சொல்லி அவளை பயமுறுத்த வேண்டாம் என நினைத்தான். ஆனால் அந்த பயம் எல்லாம் இல்லாமல் தேவர்ஷி சந்தோஷமாகவே இருந்தாள் கணவன் ஆசைப்பட்டது போல மூன்று குழந்தைகள்.. அதுவும் ஒரே பிரசவத்தில் என மனம் கொள்ளா மகிழ்ச்சி அவளுக்கு..
கங்கா அதட்டி கேட்கவும் தான்… தேவர்ஷி உறங்க சென்றிருக்க..
“ம்மா.. மூனு குழந்தைங்க வர்ஷி எப்படிமா தாங்குவா.. எனக்கு பயமாயிருக்கு.. இந்த குழந்தைங்க வேண்டாம்மா.. எனக்கு ஷாஷிகாவே போதும்.. வர்ஷிக்கு ஏதாவது ஆகிட்டா.. நான உயிரோடவே இருக்கமாட்டேன்.” என்றான் கண்களில் நீர் வழிய..
மகனின் கவலை புரிந்தது கங்காவிற்கு.. அவனை போல கவலைப்பட்டு கொண்டிருந்தால் அவர் கங்கா இல்லையே..
“அனிவர்த்.. இங்க பாரு.. நம் குடும்பத்தில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் என்பது புதுசு இல்ல…” என கங்கா சொல்ல..
தாயை நம்பாமல் பார்த்தான். ஏனென்றால் அவனுக்கு தெரிந்து அவன் தாத்தா அப்பா இவன் எல்லோரும் ஒற்றை ஆண் வாரிசு தான். அதனாலேயே இவர்கள் குடும்பம் நெருங்கிய இரத்த சொந்தங்களின்றி சிறு வட்டத்திற்குள் அடங்கிவிட்டது.
“ம்மா.. என்ன சொல்லறிங்க நீங்க.. எனக்கு தெரிஞ்சு நம்ம குடும்பத்தில் எல்லாம் ஒற்றை ஆம்பள பசங்க தான்.. அதை பிரேக் பண்ணி தான் ஷாஷி பிறந்திருக்கா..”
“ஆமாம் அனிவர்த. நீ சொல்றது கரெக்ட் தான்..ஆனால் உனக்கு உங்க தாத்தா வரைக்கும் தானே தெரியும். உங்க தாத்தாவோட அப்பா கூட இரண்டு பொண்ணுங்க என மூவரும் ஒரே பிரசவத்துல பிறந்திருக்காங்க.. இது ஒன்னும் நம்ப குடும்பத்தில் புதுசு இல்ல.. நடந்தது தான் அதுவும் இன்று போல அவ்வளவாக எந்த மருத்துவ வசதி இல்லாத காலகட்டம்.. அவங்க மூனு பேரும் வீட்ல தான் பிறந்தாங்க.. அந்த குழந்தைகளின் அம்மா நல்ல ஆரோக்கியமாக நாலு தலைமுறையை பார்த்துட்டு அதாவது உங்கப்பா பிறந்த பிறகு தான் இறந்திருக்காங்க.. “
“அது மட்டுமில்லாமல் அந்த தாத்தா கூட பிறந்த பெண்களின் உறவுகள் எல்லாம் நம் ஊரிலும் இங்கு சென்னையிலும் இருக்காங்க.. உன் ரிசப்ஷனுக்கு கூட வந்தாங்க.. உனக்கும் அவங்களை தெரியும்” என சில உறவு முறைகளை சொல்ல..
“அட ஆமாம் மா.. அவங்களா எனக்கு நல்லாவே தெரியும்..” என்றான்
“இருந்தாலும் எனக்கு பயமாயிருக்கு ம்மா..” என கங்காவிடம் சொல்ல..
“நான் இருக்கேன் தேவா அம்மா இருக்காங்க.. எல்லாம் பார்த்துக்கலாம்.. சத்தான ஆகாரமா கொடுத்து ஊட்டம் கொடுத்துக்கலாம்.. நீ இப்படி இருக்கறத தேவா பார்த்தா அவளும் கவலை படுவா.. அது அவளையும் குழந்தைகளையும் பாதிக்கும்” என கண்டித்தார்.
தாயின் வார்த்தைகளில் கொஞ்சம தைரியம் வந்திருந்தது. தனியாக மருத்துவரிடம் சென்று தன் சந்தேகங்களையும் முன் எச்சரிக்கைகளையும் கேட்டு கொண்டவன் அதன்படி தேவர்ஷியை இரவும் பகலும் கண்ணுக்குள் வைத்து பார்த்துக கொண்டான்.
அனிவர்த் தேவர்ஷிக்கு சுகப்பிரசவமாக இருந்தால் பரவாயில்லை என நினைத்தான். ஷாஷிகாவே சிசேரியன் தான்… தேவர்ஷியின் அடி வயிற்றில் அந்த தழும்புகளை பார்க்கும் போது வேதனையாக இருக்கும். ஆனால் அதற்கான சாத்தியகூறுகள் இல்லை என டாக்டர கூறிவிட… அந்த கவலையும் சேர்ந்து மனதில் பாரம் கூடிக் கொண்டது. அதை தேவர்ஷியிடம் காட்டாமல் மறைக்க அவன் பாடு பெரும்பாடாக இருந்தது.
தேவர்ஷிக்கு அந்த கவலை எல்லாம் இல்லை அனிவர்த்தின் காதல் அவளை உற்சாகமாக வைத்திருக்க.. அனிவர்ததின் காதலை தன் பலமாக நினைத்தாள்.
பிரசவ நாளும் நெருங்கி விட.. அனிவர்த் தேவர்ஷிய மருத்துவமனையில் சேர்த்து விட்டு விடிந்தால் ஆப்ரேஷன் என்ற நிலையில் இரவோடு இரவாக தங்கள் குலதெய்வ கோயிலுக்கு சென்று வந்தான்.
தியேட்டரில் அனிவர்த் தேவர்ஷியின் அருகில் அவள் கை பிடித்து நின்றிருந்தான். அனஸ்தியா கொடுக்கும் முன்பு பார்த்தது புதர் மண்டி கிடந்த அனிவர்த்தின் முகத்தை தான்..தேவர்ஷி கர்ப்பம் என தெரிந்த நாளில் இருந்து பிரசவம் நல்லபடியாக முடிந்து தாயும் பிள்ளைகளும் நல்லபடியாக இருக்க வேண்டும் என திருப்பதி கோவிலுக்கு முடி காணிக்கை கொடுப்பதாக வேண்டி இருக்க… தலைமுடி கழுத்து வரையும்… தாடியும் நெஞ்சு வரைக்கும் வளர்நதிருந்தது.
அவன் முகத்தை வாஞ்சையுடன் பார்த்து சிரி்த்தவள் சிரிப்பு மறையும் முன்பே மயக்கத்திற்கு சென்றிருந்தாள் அவள் மயங்கும் வரை அவளுக்காக சிரித்த முகமாக இருந்தவன் அவள் இமை மூடியதும் அவனுக்குள் மறைத்து வைத்திருந்த பயம் வெளிப்பட. கைகால் நடுங்க கண்கள் கலங்கி நிற்க.. டாக்டரே இவனைப் பார்த்துவிட்டு..
“சார் உங்களுக்கு பயமா இருந்த வெளில இருங்க..” என்றார்.
கூடவே இருப்பேன் என்று தேவர்ஷியிடம் சொன்னதற்காக முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு..
“இல்ல… ஒன்னுமில்ல.. இருக்கேன்..” என்றான்.
டாக்டர் அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு தன் வேலையை தொடர.. முதலில் ஒரு சிங்ககுட்டி…அடுத்து ஒரு அரிமா… கடைக்குட்டி சிங்கம்… மூன்றையும் இரத்தமும் கோழையுமாக பார்த்தவன் முகம் முழுக்க ஆனந்தமும்.. கண்களில் நீருமாக நின்றான்.
“சார்..குழந்தைகளை கொண்டு வந்து தருவாங்க.. வெளியே இருங்க.. “ என டாக்டர் சொல்ல…
“டாக்டர் வர்ஷி… “ என கேட்க..
“அவங்க நல்லா இருக்காங்க.. கொஞ்ச்நேரத்தில் ரூமுக்கு ஷிப்ட் பண்ணிடுவாங்க.. வெயிட் பண்ணுங்க..” என சொல்லவும் வெளியே வந்தவன் கங்காவின் கைகள பிடித்துக் கொண்டு..
“ம்மா.. உங்களுக்கு இரண்டு பேரன் ஒரு பேத்தி..” என சொன்னதும்.. கங்காவிற்கே கண்கள் கலங்கிவிட்டது.
“தேவாடா..”
“நல்லா இருக்கா..”
மகளின் நலத்தை அறிந்த பிறகே திருகுமரனும் கௌசல்யாவும் சந்தோஷம் கொண்டனர்.
“அய்.. அப்ப எனக்கு டூ தம்பி.. ஒன் தங்கச்சி..” என ஷாஷிகா குதூகலிக்க…
அந்த குடும்பத்தில் நீண்ட வருடங்களுக்கு பிறகு எல்லயில்லாத ஆனந்தம்…
கங்காவும் கௌசல்யாவும் சொல்ல சொல்ல கேட்காமல் குழந்தைகளுக்கு இரண்டு கேர்டேக்கர்களை வைத்தான்.தேவர்ஷியை மட்டும் தன் கவனிப்பில் வைத்துக் கொண்டான்.
தேவர்ஷி பொறுப்பான அம்மாவாக இருந்தாலும்.. அனிவர்ததிடம் மட்டும் பழைய தேவர்ஷியாக அவனிடம் சேட்டைகள் செய்யும் தேவர்ஷியாக மாறி இருந்தாள். அனிவர்த்தும் அந்த தேவர்ஷியிடம் தானே மயங்கியிருந்தான். இப்போதும் அப்படியே.. அனிவர்த்தும் அவளோடு சேர்நது சேட்டைகள் செய்ய கற்றுக் கொண்டான் அவளிடம் தனி ஆவர்த்தனம் செய்யும் வேளையில்….
இதோ குழந்தைகள் பிறந்த ஒரு வருடம் ஆகிவிட்டது. முதல் பிறந்தநாள் விழா.
“ப்பா.. ம்மா.. நீங்க இப்ப சண்டையை நிறுத்த போறிங்களா இல்லையா… டைம் ஆச்சு.. இப்ப கிளம்பல.. கங்கா பாட்டிக்கு கால் பண்ணிடுவேன்..” என அதட்ட..
கங்கா பேரை கேட்டதும் இருவரும் அமைதியாக குழந்தைகளை கவனிக்க.. ஷாஷிகா அப்பாடா என ஆசுவாசமானது.
அனிவர்த் குடும்பம் கிளம்பி வந்தனர் பங்ஷன் நடக்கவிருக்கும் ஹாலிற்கு.. அனிவர்த் நிகித்தையும் நிதிலாவையும் இரு கைகளில் ஏந்தியிருக்க.. தேவர்ஷி நிகிலை ஒரு கையில் வைத்திருக்க.. இன்னொரு கையில் ஷாஷகாவின் விரல் பற்றியிருக்க.. அனிவர்த்தும் மகன்களும் ரோஜா நிறத்தில் ஒரே மாதிரியான ஷெர்வானியில்… தேவர்ஷியும் மகள்களும் அதே ரோஜா நிறத்தில் பட்டாடையில்..
எல்லோர் கண்ணும் இவர்கள் மேலே தான்.. குடும்பத்தினர் பார்வை பாசமாக.. வாத்சல்யமாக… சிலர் பார்வை நட்புடன்.. பலர் பார்வை பொறாமையுடன்..
ஒரே டேபிளில் மூன்று கேக்கள் அணிவகுத்திருக்க… அனிவர்த் நிகித்தை ஷாஷிகா கையில் கொடுத்தான். மூவரும் குழந்தைகளின் கை பிடித்து ஒரே நேர்த்தில் கேக்கை கட் பண்ண… தேவர்ஷயின் உடன் பிறப்புக்கள் வண்ண காகிதங்கள் வெடிக்க.. உறவுகளின் நட்புகளின் வாழ்தது ஒலியில் அரங்கம் அதிர.. அழகாக படம் பிடிக்கப்பட்டது அந்த குடும்பத்தின் மகிழச்சியான தருணங்களை..
விருந்தும் அமர்களப்பட்டது. எல்லாம் முடிந்து வீடு வந்ததும் எப்பவும் போல மகன் குடும்பமாக நிற்க வைத்து திருஷ்டி கழித்தார் கங்கா. பிள்ளைகளுக்கென தனியறை.. தங்கள் அறைக்கு அடுத்த அறை. தேவர்ஷி கேர்டேக்கர்களோடு சேர்ந்து குழந்தைகளை வெந்நீரில் குளிக்க வைத்து உறங்க வைத்து விட்டே தங்கள் அறைக்கு வந்தாள்.
அனிவர்த் அறையில் கைகளில் மல்லிகை சரத்தை சுற்றிக் கொண்டு அதை வாசம் பிடித்தவாறு மேல் சட்டை இல்லாமல் மினி டிரங்கோடு தலையணையை முதுகுக்கு அண்ட கொடுத்து உட்காரந்திருந்தான் தேவர்ஷியை எதிர்பார்த்து..
தேவர்ஷி வந்தவள் இவனை முழுதாக ஒரு நிமிடம் நின்று பார்ததவள் ஒன்றும் கண்டு கொள்ளாமல்.. நைட் டிரஸ் எடுத்துக் கொண்டு குளிக்க சென்றுவிட்டாள். குளித்து விட்டு ப்ரஷ்ஷாகி வரட்டும் என அனிவர்த் காத்திருக்க… வந்தவளோ படுக்கையில் தன் இடத்தில் போய் படுத்துக் கொண்டாள்.
“குடி கெட்டுது போ..”என புலம்பியவன்…
“வர்ஷிம்மா…”
அவளோ கண்களை திறக்காமல்”என்னங்க..”
“உன்கிட்ட கொஞ்சம் பேசனும்..”
“காலையில் பேசிக்கலாம்.. டயர்டா இருக்கு தூங்க விடுங்க..”
“ஊகூம்…இது வேலைக்கு ஆகாது..” என அவளை கோழி அமுக்குவது போல ஒரே அமுக்கு…
கையில் சுற்றியிருந்த மல்லிகைப் பூவை நுகரந்நவன் “ம்ஹா…” ஆழ மூச்சிழுத்து அதன் வாசத்தை உள்ளே செலுத்தி.. அவளின கழுத்தடியில் அவளின் வாசனையும் அதே போல நுகர்ந்து வாசம் பிடிக்க.. மல்லியின் வாசமும் அவளின் வாசமும் கலந்து புது தினுசான வாசனையாக அவனை கிறங்க செய்ய.. மீண்டும் மீண்டும் அதே மாதிரி வாசம் பிடித்து மதி மயங்கி நின்றவனை பார்தது…
தேவர்ஷி..”என்னங்க பண்றிங்க.. இதுக்கு தான் ஒரு வாரமா பாக்யராஐ் படமா பார்த்திங்களா.. கருமம்.. கருமம்.. எயிட்டீஸ் படத்துல வர வில்லன் மாதிரி பண்ணிட்டிருக்கிங்க..” எரிச்சலாக பேசி தலையில் அடித்துக் கொண்டாள்.
“என்னது கருமமா.. ஏன்டி மனுசன் எவ்வளவு மூடாகி.. மூளை சூடாகி இருக்கேன்.. மாமன கொஞ்சமாச்சும் கவனிப்போம்னு நினைக்கறியா… அடுத்து ரிப்லெட்ஸ்.. இல்லைனா ட்வின்ஸாவது ரீலிஸ் பண்ணனும்னு நினைச்சுட்டு இருக்கேன்… இப்படி பண்ணினா எப்படி டீ..”
“நீங்க நினைக்க மட்டும் தான் முடியும். இனி புள்ள பொறக்கிறதுக்கான வாய்ப்பில்லை ராஜா..”
“ஏன்டி..” என புரியாமல் கேட்டான்.
“பேமிலி ப்ளானிங் பண்ணியாச்சு..” என அழுங்காமல் குண்டை தூக்கிப் போட்டாள்.
“அதெப்புடி.. இன்னொரு சிசேரியனுக்கு சான்ஸ் இருக்குனு தெரிஞ்சுகிட்டு.. நான் தான் பண்ண வேண்டாம் என டாக்டருகிட்ட சொல்லியிருந்தேனே..”
“அத்தை.. உங்களுக்கு தெரியாம டாக்டர்கிட்ட என் மருமக உடம்பு தாங்காது.. பண்ணிடுங்க.. என் மகன்கிட்ட சொல்ல வேண்டாம் என சொல்லிட்டாங்க..”
“டெலிவரியப்ப… நான் கூடவே தான இருந்தேன். அப்படி எல்லாம் பண்ணல..” உறுதியாக சொன்னான்.
“குழந்தைகளை கொண்டு வந்து தருவாங்க வெளியே இருங்கனு அனுப்பிவிட்டுட்டு பண்ணிட்டாங்களாம்..” என சொல்ல..
அதிரந்து போய் நெஞ்சை பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டான். தேவர்ஷியோ அவனின் அதிர்ச்சியில் வந்த சிரிப்பை அடக்க பெரும்பாடு பட..
அடுத்து அவன் பேசியதில் அடக்கமாட்டாமல் சிரித்துவிட்டாள்.
“அடிப்பாவி கங்காம்மா.. என் வாழ்க்கைக்கே சூனியம் வச்சிட்டியே.. நான் சுஜா ஹீரோவுக்கே டஃப் கொடுக்கலாம்னு நினைச்சேனே.. என் நினைப்புல மண் அள்ளிப போட்டுட்டியே..” என புலம்பியவன்..
அவள் சிரிப்பில் கோபம் துளிர்க்க….
“நீயும் சேர்ந்து கூட்டுகளவாணியா.. ஒரு வருசமா எங்கிட்ட செல்லாம மறைச்சுட்டில்ல.. உனக்கு எப்பவும் என்னை விட எங்கம்மா தான் உசத்தி…போடி..” என தள்ளி விட்டு திரும்பிப் படுத்துக் கொண்டான்.
அவனின் கோபத்தில் மனம் சுணங்க… அவனை சமாதானம் பண்ணும் முயற்சியில் இறங்கினாள்.
“ஏங்க…”அவனின் தோள் தொட்டு திருப்ப..
“வேணாம் போடி..”
“ப்ளீஸங்க.. சாரி..”
“ஒன்னும் வேணாம் போடி..”
அவன் வேண்டாம்.. வேண்டாம்.. என சொல்ல.. சொல்ல.. இவளுக்கு வேண்டும் என்ற காதல் உணர்வு இம்சித்தது..
“வர்தா… ம்ம் வர்தா..” அவனை நெருங்கி முதுகில் ஒட்டி ஒரசி சரசமாட.. வர்தா என்ற கொஞ்சலிலும் அவளின் உடல் அழுத்தத்திலும் மொத்தமாக வீழ்ந்தான். டக்கென அவள் புறம் திரும்பியவன்.. அவளை இறுக்கி அணைத்து தன்னுள் புதைத்துக் கொண்டான். தன் வாழ்வின் தேவதையை கொண்டாடி திண்டாடி போனான்..
சுபம்
வாழ்க வளமுடன்.