ATM Tamil Romantic Novels

7911868A-2E61-431E-BD0A-B8C6423266D2

31 – ஆடி அசைந்து வரும் தென்றல்

31 – ஆடி அசைந்து வரும் தென்றல்

உன் மனதிலும் எனக்கான காதல் உண்டு… அதை நீ உணர்ந்து என்னிடம் வந்து சேரும் வரை என் காதலும் காத்து கிடக்கும்.. என்ற மனநிலையில் தான் எப்போதும் அவள்…

கோபமாக இருப்பாள்.. எப்படியாவது பேசி சரி கட்டி விடலாம் என நினைத்து வந்தவனுக்கு அவளின் அழுகையை எதிர்பார்க்கவில்லை. அவனுக்கும் வலிக்கவே.. கொஞ்சி கெஞ்சி சமாதானம் பண்ண ஆரம்பித்தான். அப்பவும் உதடு பிதுக்கி தேம்பிக் கொண்டு அழுதாள்.

பிதுங்கிய உதடுகளை பார்த்ததும் அவனுள் காதல் ரசவாதம்… இழுத்து வைத்து தன் வாய்க்குள் அதக்கி கடித்து வலிக்க சப்பினான். மெல்ல விசும்பல் குறைந்து சின்ன காதல் ஒசும்பல் அவளிடம்… அவளின் அணைப்பு இறுகி.. மனம் இளக.. இப்பவும் தன்னிடம் கிறங்கி போகும் தன் கந்தர்வ காதலியை கண்டு கர்வம் தான்..

தேவர்ஷியின் உடலும் மனதும் அனிவர்த்தின் காதலில் சற்று இளைப்பாற.. மனம் தெளிவுற…சட்டென அவனை பிடித்து தள்ளிவிட்டாள்.

“என்னடி..” என்றான் மனத்தாங்கலோடு..

“அத்தையை கேட்கனும்..” என்றாலே பார்க்கலாம்…

“என்னாது.. அத்தையை கேட்கனுமா…” என்றான் அதிர்ந்து..

“ஆமாம்.. ஊருக்கு வந்ததும் நேரா உன்னை தேடி தான் வருவான்.. பேசி மயக்கி அவன் பாட்டுக்கு உன்னை தாளம் போட வைப்பான்… நம்பிடாத.. இத்தனை வருஷம் உன்னை கஷ்டப்பட விட்டான்ல.. கொஞ்ச நாளைக்கு அவனை தாராட்டுல விடுவோம்.. என்னை கேட்காம அவன்கிட்ட பேசக்கூடாது.. கிட்ட கூட சேர்க்ககூடாதுனு சொல்லிருக்காங்க..” என சொல்லி அவனை விட்டு இரண்டடி நகர்ந்து உட்கார்ந்தாள்.

அனிவர்த் கடுப்பாகி போனான். என்ன ஒரு கொழுப்பு…மாமியாருக்கும் மருமகளுக்கும்… கங்காம்மா… ஒன்னும் தெரியாத என் பொண்டாட்டிக்கு இல்லாததும் பொல்லாததும் சொல்லி கொடுத்து கெடுத்து வச்சிருக்கறியே…

“உனக்கு ஏத்தம் அதிகமாகி போச்சுடி.. இந்நேரம் வரைக்கும் கட்டி பிடிச்சு அழுகும் போது உங்க அத்தை சொன்னது நினைப்பு வரல.. பொண்டாட்டி அழுகறாளே.. ஏதோ நமக்கு தெரிஞ்ச மாதிரி நம்ம ஸ்டைல்ல சமாதானப்படுத்தலாம்னு பார்ததா.. இப்ப தான் உங்க அத்தை சொன்னது மண்டைல மின்னுச்சாக்கும்..” என திட்டினான்.

முகத்தை துக்கி வைத்து கொண்டு திரும்பி உட்கார்ந்து கொண்டாள். அவள்கிட்ட நெருங்கி அவளை வலுகட்டயமாக இழுத்து தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்.

“ம்ம் சொல்லு.. எனக்கு தெரியாம நானே கட்டின தாலியை பத்தி..”

தேவர்ஷி கழுத்து வரை மூடியிருந்த பிளவுஸிற்குள் இருந்த செயினை எடுத்துக் காட்டினாள்.

“ஹேய்.. இது பொன்முடில நான் உனக்கு போட்ட செயின் தான..”

ஆமாம் என தலை அசைத்தாள். செயினை கையில் எடுத்துப் பார்த்தவன்..

“இதையா.. தாலிங்கற..” என்றான் சந்தேகமாக..

அவனையே பார்த்தவாறு…”இது மங்கள்சூத்ரா..”

அவளை புரியாமல் பார்த்தான்.

“இது கேரள தாலி..”

ஒரு நிமிடம் அவனுக்கு என்ன சொல்வது என தெரியவில்லை.ஆச்சரியம்.. ஆசுவாசம்..ஒரு நிம்மதி.. என.. எல்லாம் கலந்த ஒருகலவையான உணர்வு.. மெல்ல மெல்ல இதை எல்லாம் அழுத்திக் கொண்டு வந்தது கோபம் கொஞ்சம் கொஞ்சமாக நீரில் மூழ்கா தக்கையாக..

எப்பவும் அனிவர்த் பொறுப்பானவன். தன் பொறுப்புகளையோ கடமைகளையோ தட்டி கழிப்பவன் அல்ல.. அவனின் தனிப்பட்ட பழக்கவழக்கங்கள் எப்படி இருந்த போதும் மகனாக தன் பெற்றவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் இருந்து தவறியதில்லை. ஒரு தகப்பனாக தன் மகளுக்கு செய்ய வேண்டியதை செய்யவிடாமல் தன் மகளை எத்தனை இடங்களில் தவிக்க விட்டோமோ.. அது எல்லாம் இவளால் தானே.. கர்ப்பம் என சொல்லியிருந்தால் விட்டு இருக்கமாட்டேனே.. எல்லாம் மறைத்து ஆறு வருடங்கள் கண்ணில் படாமல் இருந்து கொண்டு என்னை குற்றம் சொல்லுகிறாள்… என நினைக்க நினைக்க கோபம் மிகுந்தது.

“ஏன்டி.. என்னை ஏமாத்தி தாலிய கட்டிட்டு.. எனக்கு தெரியாம புள்ளையும் பெத்துட்டு.. ஆறு வருசமா அதையும் மறைச்சிட்டு நான் உன்னை ஏமாத்திட்ட மாதிரி பில்டப்பு பண்ணி வச்சிருக்க.. உன்னை வர கோபத்துக்கு..” என அடிக்க கையை ஓங்க.. பயந்து சுவற்றோடு ஒட்டிக் கொண்டாள்.

அவள் பயத்தில் ஓங்கிய கையை சுவற்றில் இறக்கினான்.

“ஏன்டி.. இப்படி பண்ண.. சொல்லு.. என் பிள்ளைய அப்பன் பேரு தெரியாத பிள்ளைனு எத்தன இடத்துல அசிங்கபட விட்ட.. என் பொண்ணு அப்பாங்கற உறவுக்காக ஏங்க வைச்சுட்டில்ல.. என்கிட்ட ஒருதடவை பேசியிருக்கலாம்ல… எதையும் என்கிட்ட சொல்லாம எதுக்குடி மறைச்ச சொல்லு.. என்கிட்ட சொல்லாம நீயா எப்படி முடிவு பண்ணலாம்… எனக்கு கல்யாணம் பிடிக்கலைனு சொன்னேன் தான்.. அதுக்காக குழந்தை இருக்குனு தெரிஞ்சா.. வேண்டாம்னு கை கழுவ நான் என்ன அவ்வளவு தரங்கெட்டவனா… அவ்வளவு தூரம் பழகி என்னை பத்தி நீ தெரிஞ்சுகிட்டது இவ்வளவு தானா.. ஏன் இப்படி பண்ண சொல்லு..” மகளை பற்றி பேசும் போது இயலாமையில் தவிப்பாக பேசியவன்.. கடைசியாக அவள் மீது கொண்ட கோபத்தில் உறுமினான்.

அவனின் கோபம் கண்டு அரண்டு போனாள். பயத்தில் அவனிடம் எல்லாம் ஒப்புவித்தாள். அவனோடு சண்டை போட்டு வந்த பிறகு அவனை பற்றி தான் நினைத்தது.. அதன் பிறகு வீட்டில் நடந்த எல்லாவற்றையும் வேகமாக சொல்லி முடித்தாள்.

“இது வரைக்கும் நீ நினைச்சது.. பண்ணியது எல்லாம் போதும்… இனி நான் சொல்லறது மட்டும் தான் கேட்கற.. செய்யற…” என விரல் நீட்டி மிரட்டினான். தன் போல் அவள் தலை சம்மதம் சொன்னது..

அறையை விட்டு வெளியே வந்தவன் திருகுமரனிடம் “அப்பா அம்மாவை கூட்டிட்டு கொஞ்ச நேரத்தில் வரேன்.. உங்க வீட்ல போய் பேசலாம் மாமா..” என சொன்னவன் மகளையும் கூட்டிக் கொண்டு கிளம்பிவிட்டான்.

மகளோடு வீட்டிற்கு வந்த அனிவர்த்தை கண்டு கங்காஆசையாக மகனையும் மகன் கைகளில் தாங்கி நின்ற பேத்தியையும் கண்கள் கலங்கி முகம் விசிக்க வாத்சல்யமாக பார்த்து நின்றார். வீட்டின் உள்ளே கால் எடுத்து வைக்கப் போனவனை…

“அங்கயே நில்லுடா..” என்றார்.

புரியாமல் தாயை பார்க்க.. வேகமாக வாசலுக்கு வந்தவர்…

“எங்கடா.. என் மருமக.. உன் புள்ளைய மட்டும் கூட்டிட்டு வந்திருக்க..” என்றார் கோபமாக…

“உன் பாட்டிக்கு கோபத்தை பாருடா.. உன் அம்மாவ விட்டுட்டு வந்துட்டமாம்..” தாயின் கோபத்தில் சற்று மிரண்டு பயந்து போயிருந்த மகளை சமாதானம் செய்யும் பொருட்டு.. முதுகை நீவி கொடுத்தவாறே பேசினான்.

பேத்தியின் முகத்தை பார்த்து அமைதியான கங்கா.. அனிவர்த்தை முறைப்பதை மட்டும் விடவில்லை.

“கங்காம்மா என் பொண்டாட்டிக்கு நல்லா தூபம் போட்டு ஏத்தி விட்டு எங்களுக்குள்ள பத்த வச்சிட்டு இப்ப எங்கடா என் மருமகனு ஒன்னும் தெரியாத மாதிரி கேட்கறிங்க..” என்றான் பதிலுக்கு முறைத்தவாறே..

“ஆமாம்டா.. நீ ரொம்ப நல்லவன்.. உன் பொண்டாட்டி கூட குளுகுளுனு குடும்பம் நடத்தின..நாங்க வில்லி வேல பார்த்து பிரிச்சு வச்சுட்டமோ..”

“குடும்பம் நடத்தாமயா புள்ளை இருக்கு..” என முணுமுணுத்தான்.

“இப்ப என்னடா சொன்ன..”

“கங்கா.. அவனை வாசல்லயே நிறுத்தி எல்லாம் பேசனுமா.. உள்ள வந்ததுக்கு அப்புறம் பேசகூடாதா..” என சிதம்பரம் லேசாக அதட்ட…

“வாசல்லயே வச்சு பேசனும்னு எனக்கு மட்டும் என்ன வேண்டுதலையா.. அவனை குடும்பமா நிக்க வச்சு ஆரத்தி எடுத்து உள்ள அழைக்கனும்னு பார்த்தா.. மருமகளோடு இல்லாம பேத்திய மட்டும் கூட்டிட்டு வந்திருக்கான்..” என ஆதங்கப்பட..

“இப்ப என்ன.. பேத்தியோடு எடு.. மருமக வரும் போது இன்னொருக்கா எடுத்துகிட்டா போகுது..” என சிதம்பரம் சொல்லவும்..

வள்ளி கொண்டு வந்து கொடுத்த ஆரத்தியை ஆலம் சுற்றி மகனை பேத்தியோடு அழைத்துக் கொண்டார்.

உள்ளே வந்தவன் ஷோபாவில் மகளை மடியில் வைத்து கொண்டு அமர்ந்தவன் அவனை கோபமாக பார்த்துக் கொண்ட வந்த கங்காவிடம்…

“போங்க… போய் உங்க பேத்திக்கு ஏதாவது குடிக்க கொண்டு வாங்க..” என விரட்டினான்.

அவனின் ஏவலுக்கு எல்லாம் செவி சாய்த்தால் அவர் கங்கா இல்லையே..

அனிவர்த் அருகில் அமர்ந்தவர் மெல்ல ஷாஷிகாவிடம் பேச்சு கொடுத்தார்.

“ஷாஷிகா.. செல்லம்.. உனக்கு என்ன வேணும்.. பூஸ்ட்.. ஹார்லிக்ஸ.. என்ன வேணும்.. அம்மா என்ன கொடுப்பாங்க..”

“எனக்கு ஐஸ்கீரிம் தான் வேணும்..”

இப்ப என்ன பண்ணுவிங்க என கங்காவை பார்த்தான் அனிவர்த்.

அதை எல்லாம் அவர் எங்கு கவனித்தார் பேத்தியோடு ஒன்றி போயிருந்தார்.

“தாத்தாவை வாங்கிட்டு வர சொல்றேன். ஆனால் ஐஸ்கீரிம் சாப்பிட்டால் உனக்கு கோல்ட் வராதா.. அம்மாவை கேட்கனும்.. அம்மா வரல..” என மெல்ல போட்டு வாங்கினார்.

அனிவர்த் கங்காவை முறைத்து கொண்டே.. “ம்மா..” என மறுப்பாக ஏதோ சொல்ல வருவதற்குள்..

ஷாஷிகா.. ”ப்பா.. அம்மா கூட சண்டை போட்டாங்க.. அம்மா ஒரே அழுவாச்சி.. அம்மா அதான் வரல..” என உதட்டை பிதுக்கி கைகளை விரித்து பேசிய தோரணையில் லயித்து போயினர்.

“என்னடா.. பண்ணின என் மருமகள..” என பாய்ந்தார்.

“நீங்க என்ன சொல்லி கொடுத்திங்க என் பொண்டாட்டிக்கு..”

“ஆமாம்டா.. சொல்லி தான் கொடுத்தேன்.. நீ பண்ணறது எல்லாம் பண்ணிட்டு என் மருமகள கூட்டிட்டு வானு சொன்னா நான் போய் கூட்டிட்டு வரனுமா..”

இவர்கள் சண்டையில் ஷாஷிகா பயந்து அழுகைக்கு தயாராக.. சிதம்பரம் சட்டென பேத்தியை அள்ளிக் கொண்டு..

“செல்லகுட்டி.. நாம ஐஸ்கீரிம் வாங்க போகலாமா..” என கேட்க..

அப்போது தான் ஷாஷிகாவை கவனித்தனர் இருவரும்.. இருவரையும் கண்டிக்கும் பார்வை பார்த்த சிதம்பரம்..

“நான் பாப்பாவை கூட்டிகிட்டு கடைக்கு போறேன். நாங்க வரதுக்குள்ள பேசி முடிச்சிருங்க..” என சொல்லி விட்டு கிளம்பிவிட..

மீண்டும் இருவரும் மோதிக் கொண்டனர். வாக்குவாதங்கள் முற்று பெறாமல் போக…. கங்கவால் மகனின் செயலை மன்னிக்கவே முடியவில்லை. கடைசியில் அனிவரத் தான் கங்காவிடம் தழைந்து போனான்.

“நான் பண்ணினது எல்லாம் தப்பு தான்.. இப்ப என்ன உங்க கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கனுமா..” என்றவன் சட்டென ஷோபாவை விட்டு இறங்கி தாயின் காலடியில் அமர்ந்து காலை கட்டிக் கொள்ள..

மகனின் செயலில் கங்காவிற்கு தாளவில்லை. மகனின் சிகையை கோதிவிட்டு அழுக ஆரம்பித்துவிட்டார்.

அன்னையின் அழுகையில் அனிவர்த் முகமும் கசங்கியது. சடுதியில் தன்னை மீட்டுக் கொண்டவன் எழுந்து மண்டியிட்டவன் கங்காவின் கண்களை துடைத்து விட்டான்.

“மன்னிச்சிடுங்கமா… நான் தேவையில்லாத பழக்கவழங்களால உங்களை ரொம்ப கஷ்டபடுத்திடேன்ல… எனக்கு அது பெரிய தப்பா தெரியல.. ஆனால் எனக்கு வர்ஷி மேல காதல் வந்த பிறகு தான் நான் எவ்வளவு முட்டாள்தனமா நடந்திட்டு இருந்திருக்கேன்.. என புரிஞ்சுது.. அவ என்கிட்ட காதல் சொன்ன போது நான் அவளை தூக்கி எறிஞ்சு மடத்தனமா என் வாழ்க்கையை நானே சிக்கல் பண்ணிகிட்டேன்.. இப்போ என் பொண்ணை பார்க்கும் போது வாழ்க்கைல எவ்வளவு சந்தோஷங்களை தொலைச்சிட்டேனு இப்ப ரொம்ப வருத்தமா இருக்கு.. எனக்கு என் மனைவியும் மகளும் வேணும்மா…” என கேட்ட அனிவர்த்.. பள்ளி படிக்கும் போது சைக்கிள் வேணும்மா என கேட்ட சிறு பையனாக தெரிந்தான் கங்காவிற்கு…

மகனின் வாயில் இருந்து இந்த வார்த்தை வருவதற்கு தானே இவ்வளவு போராடினார். இருந்த போதிலும் அவருக்கு இன்னும் தெளிவு பெற வேண்டி இருந்தது. அனிவர்த்தை பார்த்து..

“உன்னை நம்பலாமா.. பொண்டாட்டி புள்ளைனு குடும்பமாகிட்டா உன்னோட இந்த பழைய வீணான போன கொள்கைய பிடிச்சிட்டு தொங்ககூடாது.. உன் பொண்டாட்டிக்கு நல்ல புருஷனா.. உன் புள்ளைக்கு ஒரு நல்ல தகப்பனா.. இருப்பியா.. எல்லா புள்ளைகளுக்கும் அவங்க அப்பா தான் ஹீரோ.. உன் பொண்ணுக்கு நீ ஒரு ரோல்மாடலா இருக்கனும் இருப்பியா.. “ என மகன் முன் கையை நீட்டினார்.

அன்னை நீட்டிய கையில் தன் கையை வைத்து அழுத்தியவன்…

“சத்தியமா இருப்பேன் மா.. வர்ஷி தான் என் வாழ்க்கைனு உணர்ந்த போதே.. என்னோட எல்லா கெட்ட பழக்கவழக்கங்களையும் விட்டுட்டேன்.. உங்களுக்கே தெரியும் தான.. இனி இதுல இருந்து மாறமாட்டேன்..”

இப்போது தான் கங்காவின் மனதில் எல்லையில்லாத நிம்மதி..

“சரி.. நான் போய் நைட் டின்னருக்கு என்னனு வள்ளிகிட்ட சொல்லிட்டு வரேன்..” வேண்டும் என்றே அவனிடம் வம்பு பண்ணும் நோக்கில் சொல்லி விட்டு செல்ல..

“ம்மா.. நாம வர்ஷி வீட்டுக்கு போகனும்..” என பின்னாலயே வந்தான்.

“வள்ளி நீ என்ன பண்ற நைட்டுக்கு சப்பாத்தியும் வெஜிடபிள் குருமாவும் பண்ணிடு.. அப்படியே பாப்பாவுக்கு இட்லியும் காரமில்லாம தக்காளி குழம்பும் வச்சிடு..”

வள்ளியோ தாயும் மகனையும் பார்தது சிரித்து கொண்டிருந்தார்.

“வள்ளிக்கா.. எதுவும் செய்ய வேண்டாம் நீங்க கிளம்புங்க…” என்க அதற்கும் அவர் சிரித்து கொண்டே நின்றார்.

“தம்பி.. அம்மா சும்மா உங்ககிட்ட விளையாடறாங்க..”

“ம்மா.. உங்களை..” என்றான் சலுகையாக..

“போடா.. நீ வரங்காட்டிமே சம்மந்தி போன் பண்ணி சொல்லிட்டார். நைட் அங்க தான் சாப்பிடனும்னு..”

“சீக்கிரம் கிளம்புங்கம்மா.. வர்ஷி தாத்தாவை வேற சரி கட்டனும்.. இன்னும் யாரை எல்லாம் சமாளிக்கனுமோ..” என புலம்ப…

“மகனே உன் திருவிளையாடல் மகிமை அப்படி..” என நக்கலடிக்க..

தாயிடம் “எல்லாம் என் நேரம்..” சடைஞ்சு கொள்ள… அந்த நேரம் சிதம்பரமும் ஷாஷிகாவும் கை நிறைய பொருட்களோடு வந்தனர். ஒரு வழியாக அனிவர்த் தன் பெற்றவர்களையும்.. தான் பெற்றவளையும் அழைத்துக் கொண்டு தேவர்ஷி வீடு வந்து சேர்நதான்.

அனிவர்த் குடும்பம் வரும் முன்பே திருகுமரன் தனது தந்தையும் தனது உடன்பிறந்தவர்களையும் வரவழைத்திருந்தார்.

சற்று சங்கடமான சூழ்நிலை தான்.. அறிமுகம் ஆவதற்க்கே சற்று தயக்கமான நிலை..

அனிவர்த் மகளை தோளில் சுமந்து கொண்டு வந்ததை பார்த்தவர்களுக்கு பார்த்ததும் ஒரு மனதிருப்தி..

31 – ஆடி அசைந்து வரும் தென்றல் Read More »

8F1167FA-10C7-4040-A577-BE730EEB61BA

30 -ஆடி அசைந்து வரும் தென்றல்

30 – ஆடி அசைந்து வரும் தென்றல்

உடனே திருகுமரனுக்கு அழைத்தான் அனிவர்த். அவர் கடமை தவறாத மாமனாராக சிதம்பரம் கங்கா வந்தது.. கங்கா மயங்கியது.. அப்புறம் கங்காவும் தேவர்ஷியும் தனி அறையில் பேசியது. அதன் பிறகு அனிவர்த் வந்த பிறகு அழைத்து கொள்வதாக சொன்னது எல்லாம் ஒப்புவித்துவிட்டார்.

அனிவர்த்டோ எண்ணம் ‘தான் போய் அழைத்தால் தேவர்ஷி வரமாட்டாள். மருமகள் வேண்டும் என ஆசையில் இருக்கும் தாயை வைத்து தன் வீட்டிற்கு வரவழைத்துவிட்டாள் எப்படியாவது அவளோடு வாழ்ந்து விடலாம். அதான் தன் பார்வைக்கே மயங்குவாளே.. ஈசியாக சரி கட்டி விடலாம்’ என நினைத்திருக்க..

‘மாமியாரும் மருமகளும் புது திட்டம் தீட்டி என்னையே மடக்குகிறார்களா.. வரேன் வந்து பாரத்துக்கிறேன்.. என் பொண்டாட்டிக்கு ஒன்னும் தெரியாது. இந்த கங்கா தான் வில்லி வேலை பார்த்திருக்கு.. கங்காம்மா வந்து பேசிக்கிறேன்… அதற்கு முன்பு தேவர்ஷியை கொஞ்சமாவது மலை இறக்கனும்’

எப்படி என யோசித்தவனுக்கு மகள் தான் கண் முன்னால் வந்தாள். இந்த ஒரு வாரமாக திருகுமரனின் போனில் மகளிடம் பேசிக் கொண்டு தான் இருந்தான். அங்கிள் இல்லை அப்பா என மாற்றவே மகளிடம் நிறைய போராடினான். புத்திசாலி குழந்தை… மற்ற குழந்தைகளின் தந்தையோடான உறவை பார்த்து ஏங்கி போயிருந்தது. நிறைய கேட்டது..அத்தனையும் சமாளித்தே பிள்ளை பாசத்தை வென்றான்.

தேவர்ஷியின் முகம் பார்க்காமல் அவள் குரல் கேட்காமல் இருக்க முடியவில்லை. அதற்காக அவன் திட்டம் வகுத்து மகளை கொண்டே செய்தான். மகளிடம்..

“ஷாஷி செல்லம் அப்பாவுக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவியாடா..” என்றான் பாவம் போல முகத்தை வைத்து..

“சொல்லுங்கப்பா.. நான் செய்யறேன்..” என்றது தந்தை தன்னிடம் உதவி கேட்கிறார் என்ற மகிழ்ச்சியில்..

“என் கூட அம்மா டூ விட்டுட்டா.. பேசமாட்டங்கறா.. அப்பா பாவம் தான.. நீ தினமும் நைட்ல அம்மா போன்ல இருந்து வீடியோ கால் பண்ணறயா.. அம்மா மடில உட்கார்ந்து தான் பேசனும்.. அப்ப தான் அம்மாவ சமாதானம் பண்ண முடியும்” என சொல்ல..

அன்றிலிருந்து அப்பாவின் பேச்சை தட்டாமல் சரியாக செய்து வருகிறது. ஜெர்மன்ல இருந்து கிளம்பி வருதற்கு முந்தைய நாள் வழக்கம் போல..மகளுடன் வீடியோ காலி்ல்..

“செல்லகுட்டி.. அப்பா ஊரில் இருந்து வரும் போது உனக்கு என்ன வாங்கிட்டு வரட்டும்..”

“ப்பா.. டாய்ஸ்.. சாக்லேட்.. டிரஸ்.. சைக்கிள் அப்புறம்..” என தாடையை தட்டி யோசித்தது..

“ம்ம் அப்பா.. எஃப் ப்ளாக் வீராட் ஒரு ரோபோ டாய் வச்சிருக்கான். அது அவங்க அப்பா டெல்லி போனப்ப வாங்கி வந்ததுனு சொல்லி எனக்கு தரமாட்டான் ப்பா.. எனக்கு அது மாதிரி வாங்கிட்டு வாங்க..அவன்கிட்ட எங்கப்பா வாங்கி தந்ததுனு காட்டனும்” என்றது..

மகளின் ஏக்கம் புரிந்து இருவருக்கும் கண்களில் கண்ணீர்.

‘அழுகறியா.. எல்லாம் உன்னால தான்..’ என கண்களை மகள் அறியாமல் துடைத்து கொண்டு அவனை முறைத்தாள்.

‘ஆத்தா.. உக்கிரமா பார்க்கறாளே.. அனிவர்த் ரூட்ட மாத்து..’

“ஷாஷி குட்டி.. லவ் யூ டா.. பட்டுகுட்டி லவ் யூ டா.. செல்லகுட்டி லவ் யூ டா..” என மகளைப் பார்த்து கொஞ்சி கொண்டிருந்தான்.

அதுவும் “லவ் யூ ப்பா.” என சொல்லி கொண்டிருந்தது.

கடைசியாக “குட்டிம்மா.. லவ் யூ டா..” என்றான்

ஷாஷிகா “ ம்மா.. அப்பா உனக்கு தான் சொல்றாங்க.. நீயும் சொல்லும்மா..” என ஒரே போடாக போட்டது.

“ஷாஷி.. பேசாம இரு..” என்றாள். அவளுக்கும் தெரியும் தனக்கு தான் என… வெட்கத்தில் முகம் சிவந்து விட.. அதை அவனிடம் காட்டமால் இருக்க முகத்தை திருப்பிக் கொண்டாள்.

“ம்மா.. அப்பா குட்டிம்மா சொன்னா.. உன்னை தான் மா.. நீயும் சொல்லுமா..” என்றது.

மகள் கண்டுபிடிக்கும் அளவிற்கா பேசி இருக்கேன்..என தலையை கோதிக் கொண்டு அசடு வழிந்தான்.

“ஷாஷி பேசாம இருக்கல.. அடி போட்டுருவேன்..” என கையை ஓங்கி கொண்டு செல்ல…

“ஏய்.. பிள்ளையை அடிக்காதடி..” என சத்தமிட்டான்.

“எல்லாம் உங்களால் தான்.. அவளையும் கெடுத்து வைச்சிருக்கிங்க.. இனி அவ முன்னால இப்படி எல்லாம் பேசாதிங்க..”

“நீ என்கிட்ட தனியா பேசமாட்டேங்கற.. நான் என்ன பண்ண..” என அவளையே குறை கூறினான்.

அவனை முறைத்து கொண்டு.. முணுமுணு என சத்தமில்லாமல் அவனை திட்டி விட்டு போனை அணைத்துவிட்டாள்.

“ரொம்ப கோபமாக இருக்கா போல.. இவளை எல்லாம் சமாதானம் பண்ண முடியாது.. ஆக்‌ஷன்ல இறங்கிட வேண்டியது தான். இருடி வரேன்”என சொல்லி கொண்டான்.

மகள் கேட்டது மட்டுமில்லாமல் தனக்கு பிடித்ததை எல்லாம் மகளுக்காவும் மனைவிக்காவும் வாங்கி கொண்டான். இது தான் முதல் முறை இப்படி தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு வாங்கி செல்வது.. இது கூட பிடித்திருந்தது..

அனிவர்த் இந்தியா வந்துகொண்டிருக்கிறான்.. கங்கா.. தேவர்ஷி இருவரையும் எப்படி சரி பண்ணுவானோ…

அனிவர்த் அந்தி சாயும் நேரம் வந்திறங்கினான். திருகுமரன் தம்பதியர் ஷாஷிகாவோடு விமானநிலையம் வந்திருந்தனர். சிதம்பரம் மட்டுமே வந்திருந்தார். தேவர்ஷியும் வரவில்லை. கங்காவும் வரவில்லை. திருகுமரன் மகளை அழைத்தார் தான். தேவர்ஷிக்கு நான் ஏன் போகவேண்டும்.. அவனே வரட்டும் என்ற வீம்பு. இப்பயாவது வருவானா பார்க்கலாம்… அது மட்டுமில்லாமல் கங்காவும் அழைத்து நானும் போகமாட்டேன் நீயும் போககூடாது என கட்டளையாக சொல்லிவிட.. இப்போதைக்கு தனக்கு இருக்கும் ஒரே ஆதரவையும் வாகாக பற்றிக் கொண்டாள். மாமியார் மருமகளும் கூட்டணி அமைத்து இருவரும் விமானநிலையம் போகவில்லை.

அனிவர்த் இதை எதிர்பார்த்தான் தான். இவனை பார்த்ததும் ஷாஷிகா ஓடி வந்து “அப்பா..” என காலை கட்டிக் கொண்டது. மகளை சந்தோஷமாக அள்ளி தூக்கி தோளோடு அணைத்துக் கொண்டான். அவன் கன்னத்தில் முத்தம் வைத்து கிளுக்கி கொண்டு சிரித்தது. மகளின் சிரிப்பை கண்டு மனம் பூரித்து போனான். மகளாக உணர்ந்த பிறகு கொடுக்கும் முதல் முத்தம்… ஒரு அப்பாவாக முழுதாக உணர்ந்த தருணம்.. அதை சில நிமிடங்கள் ஆழ்ந்து அனுபவித்தான்.

மகளின் காதில் “அம்மா எங்க..” என்றான் கிசுகிசுப்பாக..

அந்த சின்ன சிட்டும் அப்பாவின் காதருகே போய் ரகசியமாக..”அம்மா வரல.. தாத்தா கூப்பிட்டாங்க.. வரலைனு சொல்லிட்டாங்க…” என்றது. பார்க்கவே அழகோவியமாக இருந்தது. அப்பா மகள் பாசம் கண்டு மற்றவர்கள் நெகிழ்ந்து போயினர். சிதம்பரம் தன் போனில்இதை எல்லாம் நிழல்படமாக பதிவு செய்து கொண்டார் கங்காவிடம் காண்பிப்பதற்காக..

அனிவர்த் தனது காரை எடுத்துக் கொண்டு அசோக்கை வர சொல்லியிருந்தான். இதை எல்லாம் பார்த்த அசோக் ‘என்னது அப்பாவா.. இவருக்கு இன்னும் கல்யாணமே ஆகலைனு சொன்னாங்க… அப்புறம் எப்படி பொண்ணு..’ என நெஞ்சை பிடித்து கொண்டு சாய்ந்துவிட்டான்.

எல்லோரிடமும் ஓரிரு வார்த்தை பேசினவன்.. அசோக்கிடம் வந்து கார் சாவி கேட்க.. அவனோ பேந்த பேந்த முழித்தான். அவன் சட்டை பாக்கெட்டில் கை விட்டு சாவியை எடுத்துக் கொண்டு அனிவர்த கிளம்ப..

ஷாஷிகா அனிவர்ததிடம் “அப்பா.. அந்த அங்கிள் ஏன் அப்படி முழிக்கிறாரு..” என்றது.

“அவன் அப்படி தான்.. அப்பப்ப லூசு மாதிரி பிகேவ் பண்ணுவான்.. அவன் கிடக்கறான்… நீ வாடா செல்லகுட்டி..” என மகளை அழைத்துக் கொண்டு கார் இருக்குமிடம் சென்றான்.

“என்னது நான் லூசாகிடறனா.. என்னை பைத்தியமாக்கறதே நீங்க தான்டா.. நல்ல குடும்பத்துல வந்து மாட்டிகிட்டு முழிக்கிறேன்.. இவங்க கொடுக்கற சம்பளம் வெளிய கிடைக்காதேனு பார்க்கறேன்.. இல்லனா நீங்களாச்சு.. உங்க வேலையாச்சுனு தூக்கி எறிஞ்சிட்டு ராஜ நடை போட்டு போயிட்டே இருப்பேன்..” என புலம்பி முடித்து பார்க்க.. ஒருவரும் இல்லை. அவனை அம்போனு விட்டுட்டு போயிட்டர்கள்.

அனிவர்த் மகளோடு திருகுமரன் வீட்டிற்கு தான் சென்றான். திருகுமரன் தம்பதியர் வருவதற்குள் அனிவர்த் சென்றுவிட்டான் அவனுக்கு தேவர்ஷியிடம் பேச வேண்டும். காலிங்பெல் அடித்தான். தேவர்ஷி வந்து கதவை திறந்தவள் அனிவர்த்தை கண்டு கொள்ளாமல் தனது அறைக்குள் சென்று கதவடைக்க போக..

அவள் கதவை தாழிடும் முன் மகளை இறக்கி விட்டு.. வாயு வேகத்தில் உள்ளே நுழைந்து கதவை அவனே தாழிட்டான்.

அவனை பார்க்காமல் சுவற்றுப் பக்கம் திரும்பி நின்று கொண்டாள். அவளின் பின்புறம் பார்த்தவனுக்கு ஏக்க பெருமூச்சு.. ‘இந்த ஆறு வருடத்தில் கொஞ்சம் அபரிதமான வளர்ச்சி தான்..’

அவன் அழுத்தமான நடையோடு அவளை நெருங்க.. அவனின் காலடியோசை சத்தத்தில் அவன் தன்னை நெருங்கி வருவதை உணர்ந்து கோபத்தில் வேகமாக திரும்பினாள்.

அவனும் நெருங்கியிருக்க.. திரும்பிய வேகத்தில் அவளின் மெத்தனங்கள் அவனின் மார்பில் மோத.. அவனுள் மொத்தமும் கனமாகி போனது. ஆறு வருடங்களுக்குப் பிறகு கிடைத்த அரிய பொக்கிஷங்கள்.. தீண்டாமல் தீண்டி அவனுள் உணர்வை கடத்த.. அவள் வேண்டும் என்ற உணர்வுகளின் உந்துதலில் இறுக அணைத்தான்.

அவளோ அவனுள் அடங்காமல் திமற.. அவனோ அவளை அடக்கி ஆண்டுவிடும் வேட்கையில்..

“ம்ப்ச்.. என்னடி உன் பிரச்சினை..” என்றான் சலிப்பாக..

“இதோ.. இது தான் பிரச்சினை..” என அவளை வளைத்திருக்கும் அவன் கைகளை காண்பித்தாள்.

“எப்ப பாரு உங்கள பத்தி மட்டும் தான் நினைப்பிங்களா.. என்ன பத்தி யோசிக்கவே மாட்டிங்களா… இன்னும் நம்ம உறவு நாலு சுவத்துக்குள்ள தான் இருக்கனுமா.. எனக்கான அங்கீகாரத்தை கொடுக்க மாட்டிங்களா.. இப்பவும் வானு கூப்பிட்டா வந்து படுக்கனுமா.. படுக்கைக்கு மட்டும் தான் என் உறவா.. “ என பேச..

பட்டென் கைகளை விலக்கிக் கொண்டான். அவன் கைகளை விலக்கிய வேகமும் அவளின் மனதிற்கு ஒப்பவில்லை. இருந்த போதும் அவனிடம் தெளிவாக பேசி முடிவு எடுத்த பின் தான் தீண்டலும் சீண்டலும்.. ஊடலும் கூடலும்… ஒரு தடவை பட்டது போதும்.. அவனிடம் தனக்கான உறவின் உரிமையை நிலைப் படுத்தாமல் எதுவும்.. எதுவும் இல்லை என்பதில் தீர்க்கமாக இருந்தாள்.

அனிவர்த பேசாமல் கைகளை கட்டிக் கொண்டு அவள் பேசட்டும் என அமைதியாக பார்த்தான். ஆனால் உள்ளுக்குள் கோபம் குமிழிட்டு கொண்டிருந்தது. அவள் பேசிய பேச்சிற்கு அவளை அடித்து விட துடித்த கைகளை இறுக கட்டிக் கொண்டான்.

‘பேச்சை பாரு.. பேசுடி இன்னும் எவ்வளவு தூரம் பேசறினு பார்க்கறேன்’ என அவளையே பார்த்திருந்தான்.

அவன் பேசாமல் தன்னையே பார்த்திருக்கவும் தேவர்ஷிக்கு ஆத்திரம் அதிகமாகியது.

“நான் பேசிகிட்டு இருக்கேன்.. இப்பவும் எனக்கென்னனு அமைதியா இருப்பிங்களா.. இப்ப கூட கல்யாணம் பண்ணிக்கலாமானு கேட்க தோனலைல…”

‘அப்படி வாடி வழிக்கு..’ என நினைத்தவன் “நமக்கு தான் கல்யாணம் ஆகிடுச்சுல்ல.. அப்புறம் எதுக்கு நான் கேட்கனும்..”

இவன் என்ன சொல்லுகிறான் என விழித்தாள். ‘கல்யாணம் எப்ப எங்க ஆச்சு.. நான் தானே இவருக்கு தெரியாம் தாலி செயின் போட வைச்சேன். இவர் என்ன இப்படி சொல்றாரு..’

அவள் விழிப்பதை பார்த்து கோபம் குறைந்து சிரிப்பு வர அதை கன்ன கதுப்புக்குள் அடக்கி வைத்தான்.

“எப்ப கல்யாணம் ஆச்சு.. ஊரை கூட்டி மண்டபம் பாரத்து.. பெத்தவங்க.. பெரியவங்க.. ஆசிர்வாதத்தோடு.. அய்யர் மந்திரம் சொல்லி தாலி எடுத்து கொடுக்க.. நீங்க கட்டினிங்களா..” என்றாள் கோபமாக…

“நீ சொன்ன இது எல்லாம் நடக்கலை தான்.. இன்ஃபேக்ட்.. எனக்கு தெரிஞ்சு நான் உனக்கு தாலியே கட்டல தான்.. ஆனா நீ தான் நான் தாலி கட்டினதா சொல்லி எல்லோரையும் ஏமாத்தியிருக்க… என்னையும் ஏமாத்திட்டு இருக்க..” என குற்றம் சாட்டினான்.

அவளுக்கு கோபம் பற்றி கொண்டு வந்தது.. எல்லாம் இவர் பண்ணிட்டு என்னை குத்தம் சொல்வதா.. அவனை எதை கொண்டு அடிக்கலாம் என சுற்றியும் தேடினாள். அவள் கண்களுக்கு ஷாஷிகா விளையாடும் பிளாஸ்டிக் பேட் கண்ணில் பட.. அதை எடுத்து வந்து அவன் முதுகில் நாலு சாத்து சாத்தினாள். சிரித்துக் கொண்டு அடிகளை வாங்கினான். அவன் சிரிக்க.. சிரிக்க.. அவளுக்கு ஆத்திரம் அதிகமானது. ஒரு கட்டத்தில் பேட்டை தூக்கி எறிந்து விட்டு மடிந்து அமர்ந்து முகத்தை மூடி கொண்டு அழுதாள்.

அவனை பார்க்காத போது எல்லாம் அவன் உனக்கு வேண்டாம் என உருப் போட்டு.. உருப் போட்டே காதல் மனதை கட்டுக்குள் வைத்திருக்க…அவனை பார்த்த நொடி உருவேற்றி வைத்தது எல்லாம் உருத் தெரியாமல் போக… கட்டுக்குள் அடங்கா காதல் உடைப்பெடுத்து மனதை பலஹீனப்படுத்த.. ஆற்ற முடியாத அழுகை…

கீழே அமர்ந்து முகத்தை மூடிக்கொண்டு அழுதவளை கண்டு அவனுள்ளும் வேதனை.. அவள் அருகில் மண்டியிட்டு அமர்ந்தவன் அவள் கைகளை விலக்க.. அவனின் கையை தட்டிவிட்டாள்.

“குட்டிம்மா.. இங்க பாருடா.. ம்ப்ச்.. பாரு சொல்றேன்ல..”

மெல்ல இடது கையால் தாடையை உயர்த்தி வலது கையால் அவளின் கண்ணீரை துடைத்துவிட்டான். சுவற்றில் சாய்நது அமர்ந்தவன் அவளை இழுத்து மாரோடு அணைத்துக் கொண்டான். அப்பவும் அவள் அவனின் அணைப்பில் இருந்து திமிறிக் கொண்டு விலகப் பார்க்க…

“ப்ச்ச்.. வர்ஷி.. வர்ஷிம்மா.. சாரிடி.. எல்லாத்துக்கும் சாரிடி…” என அடி மனதில் இருந்து உணர்ந்து சொன்னான்.

அவனை கட்டிக் கொண்டு கதறி அழுதாள். அவளின் கதறல் அவனின் மனதை பிசைய.. அவளிடம் இன்னும் அணைப்பை இறுக்கினான். இது வரை அவள் பட்ட துன்பங்கள் எல்லாம் கண்ணீராய் ஊற்றெடு்க்க.. ஒரே அழுகை தான். அழுது அழுதே அழுத்தங்களை கரைத்தாள்.

அனிவர்த்க்கே அவளை எப்படி சமாதானம் செய்வதே என தெரியவில்லை.. என்ன இப்படி அழுகிறா..என நினைத்து வருத்தப்பட்டான்.

தேவர்ஷிக்கு அனிவர்த் மேல் கோபம் ஆத்திரம் எல்லாம் இருக்கு தான். ஆனால் அதை எல்லாம் விட அவள் மனதில் அவன் மேலான காதல் தான் அதிகமாக இருக்க.. அவளால் அவன் மீது கோப படவோ.. அவனை வெறுத்து ஒதுக்கவோ முடியவில்லை… அவனை பார்த்தும் கோபத்தை மீறி இயலாமையில் அழுகை தான் வந்தது..

அப்படி தானே பெண்களே.. புருஷன் என்ன தவறு செய்தாலும்.. அவன் மீதான சிறுதுளி அன்பு மனதின் எங்கோ ஒரு மூலையில் ஒட்டி கிடந்தாலும்.. அத்துளி அன்பு எத்தவறையும் மன்னிக்கும் மாட்சிமை பெற்றுவிடும்.

30 -ஆடி அசைந்து வரும் தென்றல் Read More »

images (87)

மையல் கொண்டேன் மாதீரா 3

மாதீரா 3   மயங்கி கிடந்தவளை மாலையென தன் தோளில் தூக்கி போட்டுக் கொண்டு நடந்து சென்ற ஈசா தான் அன்றைய ட்ரெண்ட் திருநெல்வேலி முழுவதும்!! அதிலும் அவளது முகம் சரியாக தெரியாமல் இருந்தது தஷா செய்த புண்ணியமா இல்லை சந்திரமதி செய்த புண்ணியமா தெரியவில்லை!!   ஏதோ பஞ்சுப்பொதியை தூக்கி செல்வது போல அலேக்காக அவளை தூக்கி சென்றவன், அங்கு வந்து நின்ற அவனது ஜாக்குவாரின் பின்னால் அசால்ட்டாக படுக்க வைக்க.. மொத்த விழுதுகளும் தங்கள்

மையல் கொண்டேன் மாதீரா 3 Read More »

images (88)

மையல் கொண்டேன் மாதீரா 2

மாதீரா 2     “தஷா… அடியே தஷா.. சீக்கிரம் கிளம்பு டி. நாழியாகிறதோனோ?” என்ற சந்திரமதியின் புலம்பலில் தலைவாரிக் கொண்டிருந்தவள் “இதோ மா!!””என்று குரல் கொடுத்தாள், குரலே அவ்வளவு மென்மையாக வந்தது.   “கோதை கோதை… அடியே.. உங்க அக்கா கிளம்பிட்டா. நீ இன்னும் அந்த பாத்ரூமை கட்டிண்டு அழு!! குளிக்க போனா ஒன்றரை மணி நேரம் ஆறது நோக்கு. அப்படி அதுக்குள்ள என்னதான் செய்வியோ? சீக்கிரம் வந்து தொலையடி!” என்று சின்ன மகளிடம் கடிந்து

மையல் கொண்டேன் மாதீரா 2 Read More »

images (86)

மையல் கொண்டேன் மாதீரா 1

மாதீரா 1   வீரத்திற்கும் தியாகத்திற்கும் பேர் போன.. பல மறவர்களை தன்னுள் பொதித்து புதைத்து நிற்கும் வீரம் விளைந்த திருநெல்வேலி!!   திருநெல்வேலிக்கு ‘வேணுவனம்’ என்பது பண்டைய பெயர். ‘வேணு’ என்னும் சொல் மூங்கிலைக் குறிக்கும். பண்டைக் காலத்தில் மூங்கில் காடாக விளங்கிய இந்த ஊர், மூங்கில்-நெல்லால் பசியைப் போக்கிய காரணத்தால், இந்த ஊரை ‘நெல்வேலி’ என்றனர்.   திருநெல்வேலியும் அதனை அடுத்த பாளையங்கோட்டையும் இரட்டை நகரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. தாமிரபரணி ஆறானது இவ்விரு நகரங்களுக்கிடையே

மையல் கொண்டேன் மாதீரா 1 Read More »

2DF8403F-07E9-47AA-98D5-0F3C8B0EDA3C

29 – ஆடி அசைந்து வரும் தென்றல்

29 – ஆடி அசைந்து வரும் தென்றல்

“அப்பா..” என்றது அழுத்தமாக ஷாஷிகா..

“சொல்லுடா.. ஷாஷி என்ன பண்ணிட்டு இருக்கறிங்க.. சாப்பிட்டிங்களா..”

“ம்ம்.. அப்பா.. டூ தோசை.. நீங்க ப்பா..”

“நான் இன்னும் சாப்பிடலை..”

“ஏன் பா..”

“எனக்கு புட் கொடுக்க யாருமே இல்லை..” என்றான் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு ஸ்கீரினின் ஓரத்தில் தெரியும் தேவர்ஷியை பார்த்தவாறு சொன்னான். தேவர்ஷி மடியில் மகளை இருத்தி முகத்தை திருப்பி கொண்டு உட்கார்ந்திருந்தாலும் ஓர விழிப்பார்வை இவனிடம்…

மகளோடு வீடியோ காலில் அனிவர்த்…

”உலக மகா நடிப்புடா சாமி.. மூஞ்சை பாரு.. இந்த பூனையும் பால் குடிக்குமானு.. போர் ட்வென்டி..” தேவர்ஷி உதட்டை சுழித்தாள்..

அவள் உதட்டு சுழிப்பை கண்கள் தெறிக்க பார்ததான் அனிவர்த்.. கொய்யாவை கடித்து தின்றும் அணிலாக அவள் உதட்டை கடித்து தின்ன ஆசை கொண்டான். எத்தனை நாட்களாச்சு… அவள் இதழ் சாறின் ருசி.. அம்மம்மா… ஹா… நினைவே தித்திப்பா இருக்குதே… வேண்டும் என துடிக்குதே… ஆனால் முடியாதே என ஏக்க பெருமூச்சு.. அவள் உதட்டு அசைவிலேயே.. அவள் வாய் வார்த்தைகளை கண்டு கொண்டான். அவளை சீண்டி பார்க்க ஆசை தான்.. ஆனால் மகள் முன்னிலையில் செய்ய முடியாமல்…

‘இருடி இதுக்கு எல்லாம் நேர்ல வந்து பதில் கொடுக்கறேன் நான் போர ட்வென்டியா.. போர் ட்வென்டி என்ன செய்வானு காமிக்கறேன்…‘ மனதுள் சொல்லி வைத்தான்.

“ப்பா நீங்க இண்டியா வாங்க நான் ஊட்டி விடறேன்..” என்றது அந்த சின்ன குட்டி..

“சரிடா..க்யூட்டி.. உன்னை விட்டா எனக்கு யாருமில்ல.. என்கிட்ட யாரும் பேசறதில்ல.. நான் இங்க கேட்க ஆளில்லாம தனியா கிடக்கறேன்.. நீயாவது என் மேல பாசமா இருக்கியே.. அப்பா பாவம் தான மா..”

இது எல்லாம் தேவர்ஷியிடம் பரிதாபத்தை சம்பாதித்து கொள்ள.. ஷாஷிகாவிடம் சொல்வது போல தேவர்ஷியிடம் சொல்லப்பட்டது..

தேவர்ஷியோ அவனின் பேச்சில் எரிச்சல் அடைந்தாள்.. மகளுக்கோ என்ன புரிந்ததோ…

“அப்பா.. டோன்ட்ஒரி.. ஷாஷிகா இருக்கேன்..” தந்தையின் பரிதாப நாடகத்தை நம்பி சாமாதனம் செய்தது..

“ஆமாம் நீ மட்டும் தான் இருக்க..” அவனின் மாய்மாலத்தை அவனின் இளையாட்டி தான் நம்பியது.. அவனின் இணையாட்டியோ எரிச்சல் தாளாமல் மடியில் இருந்த மகளை இறக்கி படுக்கையில் உட்கார வைக்க போக..

“ம்மா..” என்றாள் கண்டன குரலில்..

“ஷாஷி.. எனக்கு வேலை இருக்கு..”

“ம்மா நைட் தான என்ன வேலை.. “ என்றது விவரமாக..

“அப்பா மாதிரியே.. கேட்குது பாரு..” என முணுமுணுத்தவள்.. மகளை சமாளிக்க முடியாமல்…

“இப்ப தூங்க வரியா… என்ன.. காலைல ஸ்கூல் போக எழுந்திரிக்க மாட்ட.”

“ம்மா இன்னும் டைம் இருக்கு…” என முறைத்து நின்றது..

மனைவி மகளுக்கு இடையேயான சண்டையை ரசித்து பார்த்து கொண்டிருந்தான் அனிவர்த்..அது இன்னும் எரிச்சலை கொடுத்தது தேவர்ஷிக்கு..

“இப்ப போனை வச்சிட்டு தூங்க வரல.. அடி விழுகும் பார்த்துக்கோ..”

தேவர்ஷியின் கோபத்தின் அளவீடு அதிகமாகி கொண்டிருப்பதை கண்ட அனிவர்த் இன்னைக்கு இது போதும் என.. மகளிடம்..

“ஓகே.. ஷாஷிமா.. நாளைக்கு பேசலாம்.. பை..”

“ப்பா.. “ எனவும்..

“என் செல்லகுட்டி.. என் பட்டு குட்டி.. என் புஜ்ஜூ குட்டி..” என ஒவ்வொரு கொஞ்சலுக்கும் மகளை தொட்டு முத்தம் வைத்தவன்.. கடைசியாக..

“என் குட்டிம்மா..” என மனைவியை பார்த்தவாறே மகளை முத்தம் வைக்க.. தேவர்ஷி முகத்தில் பொறாமையில் எள்ளும் கொள்ளும் வெடித்தது… அனிவர்த் அடக்கமாட்டாமல் வாய் விட்டு சத்தமாக சிரிக்க…

“பேசினது.. போதும் வந்து படுடி..” என போனை பிடுங்கி அணைக்க.. அணைக்க போகும் முன அவள் முகம் அருகில் தெரியும் அந்த நொடிக்காகவே அவளை சீண்டி வம்பிழுப்பான்..

அனிவர்த் ஜெர்மனில் தன் நணபர்களோடு படித்து முடித்ததும் ஆரம்பித்த கம்பெனியில் இன்னும் பங்குதாராக இருக்க.. ரெனவேஷன் ஒர்க் நடப்பதால் அவன் ஒரு மாதம் ஜெர்மன் போயே ஆக வேண்டிய கட்டாயம்.. இதை சாக்காக வைத்து தேவர்ஷியை தன் வீடு வர வைக்க பிளான் பண்ணி கங்காவிடம் சொல்லி விட்டு ஜெர்மன் சென்றுவிட்டான்.

கங்காவும் என்ன வில்லங்கத்தை பண்ணி வைத்து இருக்கானோ என பயத்துடன் தான் சிதம்பரத்துடன் சென்றார்.

அவர்கள் சென்றது ஒரு மாலை பொழுது.. அழைப்பு மணியை அடிக்கவும் தாத்தாவிற்கு முன்பு ஓடி வந்து எக்கி கொண்டு கதவை திறந்தது பேத்தி..

அழகான பெண் குழந்தை கதவை திறக்கவும் தன்னால் முகத்தில் ஒரு மலர்ச்சி கங்காவிற்கு..

திருகுமரனுக்கு வந்தவர்கள் யார் என்று தெரியவில்லை என்றாலும் அவர்களின் மதிப்பான தோற்றம் வரவேற்க செய்தது.

“வாங்க.. உட்காருங்க..”என்றவர்

அவர்கள் அமர்ந்ததும் கேள்வியாக பார்க்க…

“நாங்க அனிவர்த் பேரண்ட்ஸ்..” என்றதும்..

திருகுமரன் சந்தோஷமாக..” வாங்க சம்பந்தி..” என மறுபடியும் வரவேற்க..

‘என்னது சம்மந்தியா.. இன்னும் ஒன்னும் கல்யாண பேச்சு வார்ததையே ஆரம்பிக்கலயே..’ கங்கா லேசாக அதிர்ந்தார்.

“கௌசி இங்க வாம்மா.. சம்மந்திங்க வந்திருக்காங்க பாரு..” என குரல் கொடுக்க..

கௌசல்யாவும் வந்தவர்களை வரவேற்று.. காபி ஸ்நாக்ஸ் எல்லாம் கொடுத்து உபசரிப்புகள் முடிய..பேச்சு வார்த்தை ஆரம்பமானது.. கங்காவிற்கு தொடர் அதிர்ச்சிகளும் ஆரம்பமானது…

“அப்புறம் சம்மந்தி மாப்பிள்ளை சொன்னார். நீங்க வருவிங்கனு.. ரொம்ப சந்தோஷம்..” என திருகுமரன் சிதம்பரத்திடம் சொல்ல..

ஒன்றும் புரியாமல்… என்ன பேச என தெரியாமல் ஒரு சிரிப்பை உதிர்த்து வைத்தனர் இருவரும்..

திருகுமரனை தொடர்நது கௌசல்யாவும..” அன்னைக்கு மாப்பிள்ள வீட்டுக்கு வந்தப்ப நான் கோயிலுக்கு போயிட்டேன்.. என்னால மாப்பிள்ளையை பார்க்க முடியாம போச்சு..” என வருத்தப்பட்டு சொல்ல..

‘அவ்வளவு நல்லவனா.. எம்மகன்.. எனக்கே தெரியலையே.. பயபுள்ள.. ஓவர் பெர்மான்ஸ் பண்ணி இருக்கும் போல.. அதை போய் நம்பி இருக்காங்களே.. ரொம்ப அப்பாவிங்க போல..’ கங்காம்மா மைண்ட் வாய்ஸ்…

கங்கா”உங்க பொண்ண பார்க்கலாமா..”என கங்கா கேட்க..

கௌசல்யா “தேவாம்மா..” என அழைக்க..

தேவர்ஷி மகளை கையில் பிடித்து கொண்டு வந்தாள். அனிவர்த் வந்து சென்ற அன்றே கௌசல்யாவிடம் சொல்லி தேவர்ஷியிடம் பேச சொன்னார் திருகுமரன். இருவரும் அனிவர்த்தை தாங்கி பேசவும் பொறுக்கவில்லை தேவர்ஷிக்கு.. அதை அவர்களிடம் காட்டவும் முடியவில்லை. நடந்த உண்மையை சொன்னால் தாங்கமாட்டார்கள் என்பதால் அவர்களிடம் ஒன்றும் சொல்ல முடியவில்லை. அத்தனையும் அனிவர்த் மேல் கோபமாக வளர்த்தாள்.

எந்த புருஷன் பொண்டாட்டிக்குள் சண்டை இல்லை. இதற்காக எல்லாம் கோவித்து கொண்டு பிரிந்து வாழ்வார்களா.. ஆம்பளைகள் முன்னபின்ன இருந்தாலும் பொம்பளைங்க தான் அனுசரிச்சு போகனும்.. அவரே சமாதானமாகி இறங்கி வரும் போது.. நீ பண்ணுவது சரியில்ல.. உன் மகளுக்காக வேணும் சேர்ந்து வாழனும் என பெற்றவர்கள் மாற்றி மாற்றி பேசி பேசியே தேவர்ஷியை கரைத்தார்கள்..அவர்களிடம் ஒன்றும் பேச முடியாமல் அவர்கள் பேச்சிற்கு தலையாட்டி வைத்தாள்…

தேவர்ஷி வந்தவள் ஒன்றும் பேசாமல் கங்காவிற்ககு எதிரே இருந்த ஷோபாவில் மகளை மடியில் வைத்து அமர்ந்து கொண்டாள். இருவரையும் பார்ததவுடன் முக ஜாடையே எல்லாம் சொல்லிவிட.. கங்கா சிதம்பரம் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அவர்களின் அதிர்ந்த முகமே அவர்களுக்கு எந்த விவரமும் தெரியாது என்பதை காட்டி விட..

பக்குவப்பட்ட திருகுமரனுக்கு புரிந்தது. அனிவர்த் அவரிடம் என்ன சொன்னானோ.. அதையே அவரும் சொல்ல.. கங்காவால் தாங்கமுடியாமல் பிபி அதிகமாகி மயக்கம் வந்துவிட்டது. அவர் மயங்கவும் பதறி போயினர். சிதம்பரம் கங்காவின் பேகில் இருந்து ஒரு பிபி மாத்திரையை எடுத்து தண்ணீர்கொடுத்து விழுங்க செய்தார். சற்று நேரத்திற்கு எல்லாம் மயக்கம் தெளிந்து சரியாக.. கௌசி கொடுத்த ஜூஸை வாங்கி குடிக்கவும் சற்று திடமாக உணர்ந்தார். உண்மையை ஜீரணித்து கொள்ள ஒரு மணி நேரம் பிடித்தது இருவருக்கும்.. அது வரை அங்கு கனத்த அமைதி.. ஷாஷிகா போனில் கேம் விளையாடி கொண்டிருந்தது.

“நான் உங்க பொண்ணுகிட்ட கொஞ்சம் தனியாக பேசலாமா..” திருகுமரனிடம் கங்கா கேட்டார்.

“தேவாம்மா…அவங்கள உன் ரூம்கு கூட்டிட்டு போம்மா..” என திருகுமரன் சொல்ல..

கங்காவை அழைத்து கொண்டு தன் அறைக்கு சென்றாள். உள்ளே நுழைந்ததும் கதவை அடைத்த கங்கா..

“என்ன செய்தான் என் மகன்..” என தேவர்ஷியை நேருக்கு நேர் பார்த்து பார்த்து கேட்டார்.

எப்பவும் தங்கள் மகன்கள் மேல் தவறு இருந்தாலும் பெண்ணை தானே குற்றம் சொல்லும் தாய்மார்களை தானே பார்ததிருக்கிறோம்.. ஆனால் கங்கா தன் மகன் மேல் தான் தவறு இருக்கும் என சொல்லவும்.. தேவர்ஷி வியப்பாக பார்த்தாள்.

அவளின் பார்வையை வைத்தே அவளை படித்தவர்.. “எனக்கு தெரியும் என் மகனை பற்றி.. ஆனால் ஒரு குழந்தை இருக்கு என தெரிந்த பிறகு கை விடும் அளவிற்கு மோசமானவன் இல்லை.. நான் அந்தளவிற்கு மோசமாக வளர்க்கவில்லை” சொல்லும் போதே அவர் முகம் கசங்கி போனது…

“எனக்கு எல்லாம் எல்லாமே சொல்லி விடும்மா ப்ளீஸ்..” என்றார் அழுத்தமாக..

தேவர்ஷி தங்களுக்கான அந்தரங்கத்தை தவிர்த்து எல்லாம் சொல்லிவிட்டாள். கேட்டிருந்த கங்காவிற்கு மீண்டும் பிபி ஏறியது.. ஆனால் மயங்கும் அளவிற்கு இல்லை.. அடுத்தடுத்த அதிரச்சி அவரிற்கு பழகிவிட்டது.

“பரதேசி நாயி.. பண்றது எல்லாம் பண்ணிட்டு.. என்கிட்ட ஒன்னும் சொல்லாம இங்க உங்க மருமக இருக்கா.. போய் கூட்டிட்டு வாங்கனு எங்களையும் சேர்த்து ஏமாத்தி இருக்கான்.. வரட்டும் அவனை பேசிக்கிறேன்.. அப்பவும் நினைச்சேன் கல்யாணம் பேசிட்டு வாங்கனு சொல்லாம.. என்னடா கூட்டிட்டு வர சொல்றானே.. என்ன வில்லங்கம் இருக்ககுமோ.. என பயந்தேன். பயந்த மாதிரியே பண்ணி வச்சிருக்கானே..”அங்கலாய்ப்பு அவருக்கு..

அனிவர்த்தை மேலும் சில பல நிமிடங்கள் திட்டி தீர்த்த கங்கா தேவர்ஷி அருகில் வந்து அவள் கழுத்தில் இருந்த தாலியை உள்ளே இருந்து எடுத்து வெளியே எடுத்துப் பார்த்தார். பின்பு தேவர்ஷியிடம்..

“என் மருமகளை சொந்த பந்தங்களோடு ஊரறிய முறையா அழைச்சிட்டு தான் போவேன்.. தப்பு எல்லாம் இவன் பண்ணிட்டு.. எங்கயோ போய் உட்கார்ந்து கிட்டு கூட்டிட்டு வாங்கனு சொல்வானா.. அவ்வளவு ஈசியா நீ கிடைச்சிட்டா அவன் தன் தப்பை உணரமாட்டான்.. நாம தான் உணர வைக்கனும்.. அவன் வரட்டும் பேசிக்கறேன்.. அதுவரைக்கும் நீ அவன்கிட்ட பேசாத.. யாருகிட்ட.. இந்த கங்காகிட்டயே அவன் வேலையை காமிக்கறானா.. அவன் வந்து உன்கிட்ட பேசி மன்னிப்பு கேட்கட்டும்.. அப்புறம் பேசிக்கலாம்.. அதுவரைக்கும் அவன் பேசினா கூட நீ பேசாத..” என சொல்லி அவள் அறையை விட்டு வெளியே சென்றவர் பேத்தியுடன் ஆசையாக பேசிக் கொண்டிருந்த சிதம்பரத்திடம் சென்று தானும் ஷாஷிகாவோடு பேச..

ஷாஷிகாவை தொட்டு தடவி வாஞ்சையாக பேசிக் கொண்டிருந்த இருவரின் ஏக்கத்தை பார்த்தவர்களுக்கு கஷ்டமாக இருந்தது.. இரவு வரை பேத்தியுடன் இருந்து இரவு உணவையும் முடித்துக் கொண்டு சென்றனர்.

போகும் முன்பு திருகுமரனிடம் அனிவர்த் வந்த பிறகு முறைப்படி மருமகளையும் பேத்தியையும் அழைத்து கொள்வதாக சொல்லி சென்றனர்.

ஏற்கவே அனிவர்த் மேல் கடுங்கோபத்தில் இருந்தாள் தேவர்ஷி. அப்போ தான் இங்கு வா.. அங்கு வா என்பார். இப்பவும் வா என்றால்.. அதுவும் இவர் வராமல் பெற்றவர்களை அனுப்பி வைத்தால் போகனுமா… முடியாது நடையா நடக்க வச்சு சங்க வைத்து தப்பை உணர்ந்து மன்னிப்பு கேட்கும் வரை சும்மா விடுவதில்லை என்ற முடிவுடன் இருந்தாள்.

கங்கா மற்ற தாய்களை போல மகன் தப்பை மறைத்து மருமகளை ஏசவில்லை. மகனை திட்டி மருமகளை தாங்கி நிற்கவும் அவளின் கோபம் சற்று குறைந்தது. மாமியாரையும் மிகவும் பிடித்துவிட்டது. மாமியாரின் பேச்சே அவளின் கோபத்தை கொஞ்சம் இளக்க வைத்தது. எதுனாலும் மாமியார் பார்த்து கொள்வார் என்ற தைரியமும் நம்பிக்கையும் வந்தது.

கங்கா அனிவர்த்திடம் தானும் பேச போவதில்லை.. சிதம்பரத்தையும் பேசகூடாது என சொல்லிவிட்டார கண்டிப்புடன்.. மகன் செய்ததை அவரால் ஏற்று கொள்ள முடியவில்லை. மனது சமாதானம் ஆக மறுக்கிறது. அவனின் பழக்கங்கள் அறிந்தவர் தான்.. நல்ல குடும்பத்து பெண்ணிடம் பழகி ஒரு குழந்தையை கொடுத்து.. அது கூட தெரியாமல் ஆறு வருடங்கள் வேறு பெண்களோடும் தொடர்பில் இருந்திருக்கிறான். என்ன மனுஷன் இவன் என்ற கோபம்..

ஒருவாரம் பொறுத்துப் பார்த்தவன் எந்த தகவலும் வரவில்லை.. பெற்றவர்களும் பேசவில்லை எனவும்…தாய்க்கு அழைத்தான். அழைப்பு போய் கொண்டே இருந்தது எடுக்கவில்லை எனவும் தந்தைக்கு அழைத்தான். அவரும் எடுக்கவில்லை எனவும் என்னவோ என பயந்து அசோக்கிற்கு அழைத்தான்.

“ஹலோ.. சொல்லுங்க பாஸ்..”

“அசோக் அம்மா.. அப்பா.. இரண்டு பேருமே போனை எடுக்கலை.. நல்லா இருக்காங்கல்ல.. அம்மாவுக்கு ஹெல்த் ப்ராப்ளம் ஒன்னும் இல்லையே.. “

“இல்ல பாஸ்.. சிதம்பரம் சார் நேத்து கூட ஆபிஸ் வந்தாரே.. ஒன்னும் சொல்லையே..”

‘அப்போ நல்லா தான் இருக்காங்க.. தேவர்ஷி வீ்ட்டுக்கு போயிருக்காங்க.. அங்க தான் ப்ராப்ளம் போல..’

“கான் கால் அம்மாவுக்கு கனெக்ட் பண்ணு… ஆனா நான் லைன்ல இருக்கேனு சொல்லாத

“ம்ம்.. ஓகே பாஸ்..”

அசோக் உடனே கங்காவிற்கு அழைத்தான்.

எடுத்த எடுப்பிலேயே.. “சொல்லுங்க அடிமை சார்..” என குதர்கமாக பேச..

ஆரம்பமே அனர்த்தமா இருக்கே என ஜெர்க் ஆனான் அசோக்.. ம்ம் சமாளிப்போம்..

“ஹீஹீ.. நல்லா இருக்கறிங்களா ம்மா.. உடம்புக்கு ஒன்னும் இல்லையே..”

“நீ கேட்கறத பார்த்தா.. என் உடம்புக்கு ஏதாவது வரனும்னு வேண்டிக்கற மாதிரி இருக்கே…”

“அய்யோ… அப்படி எல்லாம் எதுவும் இல்லைங்க ம்மா..” என அலறினான்.

“சரி அதை விடு.. இப்ப எதுக்கு கூப்பிட்ட.. நான் பெத்த மவராசன் என்னனு கேட்க சொன்னானா..”

“அய்யோ.. அப்படி எல்லாம் இல்லைங்க ம்மா..நானே தான் பேசலாம்னு கூப்பிட்டேன்..”

“அவன் குடுக்கற சம்பளத்துக்கு மேல ஓவரா நடிக்காதடா.. நானா கூப்பிட்டாவே நீ எடுத்து பேசமாட்ட.. இதுல நீ பேச தான் கால் பண்ணினேன் சொன்னா சின்ன புள்ள கூட நம்பாதுடா..”

கேட்டுக் கொண்டிருந்த அனிவர்த்துக்கு சிரிப்பை அடங்க பெரும் பாடாகி போனது…

“அப்படி எல்லாம் இல்லைங்க ம்மா..”

“டேய் டேய்.. ஓவர் சீன் போடாத.. நீ எதுக்கு கால் பண்ணியிருக்கனு எனக்கு தெரியும். உன் கொள்ளை கூட்டத் தலைவன் சொல்லி இருப்பான்.. அதான.. அவன்கிட்ட சொல்லிரு அவன் பண்ணின வேலைக்கு அவன்கிட்ட பேசனும்னு எதிர்பார்க்க வேண்டாம்னு .. அவன் சொன்னதை செய்ய முடியாது.. அவனுக்கு வேணும்னா அவனே வந்து கூட்டிட்டு வரட்டும்.. அப்புறம் இன்னொன்னு எனக்கு கால் பண்ணினா நான் அட்டென்ட் பண்ணமாட்டேன் சொல்லிரு.. நீ என்ன சொல்லறது.. கேட்டுகிட்டு இருக்கற அவனுக்கு புரியும்..” என அழைப்பை துண்டித்து… நான் அனிவர்ததின் அம்மாவாக்கும் என நிருபித்தார்.

அனிவர்த்கு அது வரை அடக்கி வைத்திருந்த சிரிப்பு பீறிட்டு கொண்டு வந்தது. சத்தமாக சிரித்தான்

‘பாஸ் என்ன செஞ்சாரு.. இந்தம்மா பேசமாட்டேங்குது.. இவரு என்ன செய்ய சொன்னாரு.. செய்யமுடியாதுனு சொல்லிட்டாங்க.. இவரு வந்து யாரை கூட்டிட்டு வரனும்.. இவரு சிரிக்கறாரு… அய்யோ.. தலையும் புரியல.. வாலும் புரியல..’ என தலைமுடியை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டான்.

“டேய் தகப்பா.. நல்லா லூசு குடும்பத்துல சிக்க வைச்சிட்டு போயிட்டடா..” என வழக்கம் போல புலம்பினான்.

29 – ஆடி அசைந்து வரும் தென்றல் Read More »

6886A170-EE8B-40BF-B421-94AD0BC57D23

28 – ஆடி அசைந்து வரும் தென்றல்

28 ஆடி அசைந்து வரும் தென்றல்

மூன்று நாட்கள் கழித்து ரிப்போர்ட் வந்தது.. அதில் ஷாஷிகா தனது மகள் என இருக்க..தான் நினைத்தது போல ஷாஷிகா தன் மகள் தான்.. ஆனந்தத்தில கண்கள் கலங்கி விட்டது. ரிப்போர்ட் எடுத்து கொண்டு தேவர்ஷி வீடு வந்தான்.

முன் அறிவிப்பின்றி வந்து நின்ற அனிவர்த்தை ஷாஷிகாவை பார்க்க வந்திருப்பதாக நினைத்து..

“ஷாஷிகா ஸ்கூலுக்கு போயிருக்கா..” என்றார்.

“இல்லை.. உங்களை தான் பார்க்க வந்தேன்.” என உள்ளே வந்து உட்கார்ந்தவனை கேளவியாக பார்த்தார்..

அனிவர்த் திருகுமரனிடம் “ஷாஷிகா பெர்த் சர்டிபிகேட் பார்க்க முடியுமா..” என கேட்டான்.

திருகுமரன் “ அது எதுக்கு உங்களுக்கு..” என்க

அவரை நேருக்கு நேர் பார்த்து..” மாமா.. எடுத்திட்டு வாங்க..” என மாமாவில் ஓர் அழுத்தம் கொடுக்க..

அவருக்கும் ஏதோ புரிவது போல இருக்க… மாமா என்ற சொல் திருகுமரனுக்கு அவ்வளவு சந்தோஷத்தை கொடுத்தது.

வேகமாக சென்று எடுத்து வந்து அவன் கைகளில் கொடுத்தார். ஒரு பரபரப்புடன் கைகள் நடுங்க…அதை வாங்கி பார்த்தான்.

அப்பா பெயர் வர்தா என்றிருந்தது. பார்த்தவுடன் அப்படி ஒரு ஆனந்தம்.. என்னவோ ஷாஷிகா இப்போ தான் பிறந்தது போல அப்படி ஒரு பரவசம்..

“மாமா.. மாமா.. வர்தா..” அவனுக்கு கோர்வையாக பேச்சு வராமல் தொண்டை அடைத்தது.

“வர்தா.. நான்” என தன் நெஞ்சில் கை வைத்து சொல்ல..

திருகுமரனுக்கும் ஒன்றும் பேச முடியவில்லை. தன் மகளை நினைத்து தானும் மனைவியும் கவலையில் தூங்காமல் விழுத்திருந்த இரவுகள் எத்தனை எத்தனை.. மகள் வாழ்க்கை சீராகிடாதா என எத்தனை வேண்டுதல்கள்..

இன்று அதற்கு எல்லாம் விடிவெள்ளியாக அனிவர்த் தெரிந்தான்..

“என்ன சொல்லறிங்க நீங்க..” என உண்மை தானா என்ற பரிதவிப்புடன் கேட்டார்.

“ஆமாம்.. நான் சொல்றது உண்மை தான் நம்புங்க..” என்றவன் டிஎன்.ஏ.டெஸ்ட் ரிப்போர்ட்டையும் காண்பித்தான்.

“ஆனால்.. நீங்க சண்டை போட்டு.. வேணாம்னு விட்டுட்டு வெளிநாடு போயிட்டதா.. தேவா சொன்னாளே..”

இதற்கு என்ன பதில் சொல்வான். அதுவும் ஒரு தந்தையிடம் உன் மகளை உறவுக்கு மட்டுமே அழைத்தேன் என எப்படி சொல்வான். தன் மேலும் தவறு இருக்கு தானே.. இப்ப உணர்ந்த காதலை அவளோடு வாழந்த கார்கால பொழுதில் உணரந்திருந்தால்.. எப்படி எல்லாம் இருந்திருக்கலாம்.. இப்ப வருத்தப்பட்டு என்ன பயன்..ஆனால் சொல்லி தானே ஆகவேண்டும். மனைவி மகள் என குடும்பமாக ஆக வேண்டுமே.. மனைவி என்றதும் தான் தாலி ஞாபகம் வந்தது. தாலி எப்படி அதை அவளிடம் தான் கேட்க வேண்டும்.. எப்படி எல்லாம் மறைத்து ஏமாற்றியிருக்கிறாள்..

பிள்ளை உண்டானதை சொல்லியிருந்தால் அப்பவே கல்யாணம் செய்திருக்கலாம் இப்போ பெரியவர்களிடம் எதை எப்படி சொல்லி விளக்கம் கொடுத்து சமாளிக்க வேண்டிய நிலையில் இப்படி கொண்டு வந்து நிறுத்திவிட்டாளே.. என தேவர்ஷி மேல் கோபம் கொண்டான்.

‘இருடி உன்னை நல்லா வச்சு செய்யறேன்.. என்னையவே பைத்தியகாரனாக்கிட்டல்ல… கொசு மாதிரி இருந்துகிட்டு என்ன என்ன வேலை செஞ்சு வச்சிருக்கா.. இரு நீயா என்னை தேடி வர மாதிரி பண்ணல நான் அனிவர்த் இல்லடி..’

திருகுமரன் “மாப்பிள்ளை.. என்னாச்சு..”

“இரண்டு பேருக்கும் பிடிச்சிருந்துச்சு.. லவ் பண்ணினோம்.. கொஞ்சம் மிஸ்
அண்டர்ஸ்டேன்டிங் வந்து ஈகோல பிரிஞ்சிட்டோம்.. “ என இரத்தின சுருக்கமாக முடித்துக் கொள்ள..

பெண்ணை பெற்றவராக அவருக்கு இன்னும் விளக்கம் தேவைப்பட..

“நான் கேட்கறேனு தப்பா எடுத்துக்காதிங்க.. உங்க வீக் எண்ட் பார்ட்டி எல்லாம் நானும் கேள்வி பட்டு இருக்கேன்…அது தான் தேவாவுக்கும்… உங்களுக்கும்…. பிரச்சினையா..” என தயங்கி கேட்க..

மற்ற பெண்களை போல தான் என் பெண்ணிடமும் பழகினாயா.. என நியாயப்படி சட்டையை பிடித்து கேட்கவேண்டும்.. ஆனால் பெண்ணையும் பேத்தியையும் மனதில் கொண்டு பொறுமையை கையில் எடுத்துக் கொண்டார்.

அவரின் எண்ணத்தை புரிந்தவனாக வேகமாக மறுத்தான்…

“ச்சேச்ச.. அப்படி எல்லாம் இல்லை.. மற்ற பெண்ளை போல நான் வர்ஷியை நினைத்து பழகவில்லை.. அவளை மிகவும் பிடித்துப் போய் தான் பழகினேன்.. அவளின் சிறுபிள்ளைதனம்.. சேட்டைகள் இது எல்லாம். ஆரம்பத்தில் மிகப் பிடித்திருந்தது.. ஆனால் நாளடைவில் அதுவே இன்னும் கொஞ்சம் பொறுப்பாக இருக்கலாம் என தோன்றியது.. அவள் தன் குடும்பத்திறகு கொடுத்த இம்பார்ட்ன்ஸ் எனக்கு கொடுக்கவில்லை.. இன்னொன்று எனக்கும் அவளுக்கும் ஸடேட்டஸ் ஒத்துவராது என நினைத்தேன் எங்களுக்குள் அதுவே சண்டை ஆகி பிரிஞ்சிட்டோம்”

“தேவா எங்க குடும்பத்தை பற்றிய விவரம் எதுவும் உங்களிடம் சொன்னதில்லையா…” என கேட்டார்.

“இல்லை… ஒன்றும் சொன்னது இல்லை.. ஏன் மாமா..”

“இல்லை.. சுந்தரமூர்த்தி அன் சன்ஸ் நிறுவனம் கேள்விபட்டிருக்கிங்களா..”

“ம்ம்.. தெரியும்.. ரொம்ப பெரிய ஸ்தாபனம்..”

“அந்த சுந்தரமூர்த்தியோட பேத்தி தான் தேவா..” என்றார் அமைதியாக…

அனிவர்த்தால் நம்பவே முடியவில்லை.. அந்தஸ்த்தில் தங்களை விட பல படிகள் உயர்ந்தவர்கள்.. மூன்று தலைமுறையாக பேர் சொல்லும் குடும்பம்.. அந்த குடும்பத்து பெண் தன்னிடம் வேலை செய்ய வேண்டிய அவசியமே இல்லை.. இதையும் தன்னிடம் இருந்து மறைத்திருக்கிறாள்… அந்த கடைசி நாள் நான் அந்தஸ்த்தை பற்றி பேசிய போது கூட ஒன்றும் சொல்லாமல் அமுக்கமாக இருந்துவிட்டாளே… எத்தனை என்னிடம் இருந்து மறைத்திருக்கிறாள்… இன்னும் தாலி அதற்கான விடை தெரிவில்லை.. இருடி அதையும் கண்டுபிடித்து விட்டு உன்னை பேசிக்கிறேன்..என தேவர்ஷியின் மீதான அனிவர்த்தின் கோபத்தின் அளவு எகிறி கொண்டிருந்தது.

அத்தனையும் இவள் செய்துவிட்டு.. என்னை ஏமாத்தி விட்டு.. நான் இவளை விட்டுட்டு போய்விட்டதாக சொல்லி என்னை வில்லனாக்கி வச்சிருக்கா.. நீயே என்கிட்ட வர மாதிரி பண்ணல நான் அனிவர்த் இல்ல..என முடிவு செய்து உடனே செயல்படுத்தவும் ஆரம்பித்தான்.

திருகுமரனிடம் “மாமா.. ஏதோ இரண்டு பேருமே தப்பும் தவறுமா புரிஞ்சுகிட்டு.. பிரிஞ்சிட்டோம்.. வர்ஷி கர்ப்பமா இருக்கானு தெரிஞ்சிருந்தா.. நான் எப்படியாவது வர்ஷியை சமாதானம் பண்ணி பிரிஞ்சி போக விட்டு இருக்கமாட்டேன். உங்க குடும்பத்தை பற்றி சொல்லியிருந்தா.. நானே உங்ககிட்ட வந்து பேசி சேர்ந்து வாழ முயற்சி செய்திருப்பேன்.. எல்லாமே எங்கிட்ட இருந்து மறைச்சிட்டா.. எனக்கு ஒரு பொண்ணு இருக்கானு தெரிஞ்சதில இருந்து என் பொண்ணோட ஆறு வருடங்களை நான் வாழ முடியவில்லையே என எவ்வளவு தவிப்பா இருக்கு தெரியுமா உங்களுக்கு.. “என கேட்கும் போதே கண்கள் கலங்கி விட..

திருகுமரனுக்கு நொடியில் மருமகன் உசந்து தான் போனான். தன் மகள் தான் தவறாக புரிந்து கொண்டு தப்பு செய்துவிட்டதாக நினைத்தார். மருமகனை சமாதனம் செய்யும் விதமாக..

“அவளுக்கு அப்போ அவ்வளவு விவரம் பத்தவில்லை மாப்பிள்ள.. அதான் ஏதோ தப்பா புரிஞ்சுகிட்டு பண்ணிட்டா.. விடுங்க நீங்க வருத்தப்படாதிங்க..” என்றவர்.. மேற்கொண்டு என்ன செய்லாம் என கேட்க..

தன் பெற்றவர்களை அனுப்புவதாக சொல்லி கிளம்பிவிட்டான்.

வீட்டிற்கு சென்றவன் ஷோபாவில் உட்கார்ந்திருந்த கங்காவின் அருகில் அமர்ந்து தோளில் கை போட்டான்.

கங்கா என்னடா இது இவன் தீடீரென பாசப்பயிரை வளர்க்கறான்… என உஷாராகி அவன் கையை தட்டிவிட்டார்.

“கங்கா ப்யூட்டி.. பெத்த பையன் பாசமா தோளில் கை போட்டா இப்படியா தட்டிவிடறது.. இது நியாயமா இது தர்மமா..” என வீரவசனம் பேச…

“என்னால உனக்கு ஆக வேண்டியது என்னவோ.. அத முதல்ல சொல்லு..” என்றார் விறைப்பாக..

“எதுக்கு இப்படி இரண்டு சோல்டரையும் தூக்கிட்டு இருக்கறிங்க.. இறங்குங்க..” என இரண்டு தோள்களையும் இதமாக அழுத்திவிட்டவன்…

“இந்த அட்ரஸல உங்க மருமக இருக்கா.. ஒரு நல்ல நாள் பார்தது கூட்டிட்டு வந்திடுங்க..” என விசிட்டிங் கார்டை நீட்டினான்.

கங்கா சிதம்பரம் இருவரும் அதிர்ந்து போயினர். இவன் பணத்திற்காக சுற்றும் எதாவது ஒன்றை பிடித்துவிட்டானா.. மருமகள் வரமாட்டாளா கவலை பட்டவர்கள்.. இப்ப இந்த வீட்டிற்கு ஒரு மருமகள் வர போகிறாள் என சந்தோஷமும் பட முடியாமல் பயந்தனர்.

விசிட்டிங்கார்டை வாங்கி பார்த்த சிதம்பரம்.. “ இந்த வீட்டு பொண்ணா… நாம் போய் கேட்டா தருவாங்களா..” என சந்தேகத்துடன் கேட்டார்.

“எல்லாம் நடக்கும்.. நீங்க போய் பேசி கூட்டிட்டு வந்திடுங்க.. நான் இன்னைக்கு நைட் ஜெர்மன் போறேன். அங்க கம்பெனில எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு வர ஒரு மாசம் ஆகும். நான் வரும் போது உங்க மருமக வீட்ல இருக்கனும்..” என்க…

“ஏதே.. கூட்டிட்டு வரதா.. டேய் அப்படி எல்லாம் கூட்டிட்டு வர முடியாது.. முறைப்படி கல்யாணம் பண்ணி தான் கூட்டிட்டு வரனும்..”

“நீங்க நேர்ல போய் பாருங்க… உங்களுக்கே எல்லாம் புரியும்…” என சொல்லி விட்டு சென்றுவிட்டான்.

“என்னங்க… இவன் இப்படி குழப்பி விட்டுட்டு போறான்…”

“தெரியலையே… கங்கா போய் பார்ப்போம் விடு.”

“போனா தானே தெரியும்… என்ன வில்லங்கம் பண்ணி வச்சிருக்கானு… எப்படியோ நம்மள சிக்க வச்சுட்டு தர்ம அடி வாங்கி கொடுக்க ப்ளான் பண்ணிட்டான். அது மட்டும் நல்லா தெரியுது…” என வழக்கம் போல மகனால் புலம்பினார்.

தன் அன்னையிடம் சொல்லிவிட்டோம்… எப்படியும் தேவர்ஷியை கூட்டிக் கொண்டு வந்திடுவார் என்ற நம்பிக்கையில் அன்றிரேவ ஜெர்மன் பறந்துவிட்டான்.

அனிவர்த் நினைத்து எல்லாம் நடத்திடுமா..? கங்காவால் நடத்திட முடியுமா..? தேவர்ஷி நடக்கவிடுவாளா..?

28 – ஆடி அசைந்து வரும் தென்றல் Read More »

b2eec4d2-f6fd-46fa-a29f-b09d7e4d44d8

எங்கேயும் காதல்! – 19&20 (விஷ்ணுப்ரியா)

எங்கேயும் காதல்!        [19]   விக்னேஷின் தெளிந்த கண்கள் கொஞ்சம் கொஞ்சமாக செந்நிறங் கொள்ளத் தொடங்கியது.  தன்னை கண்ணாடி வழியாக குழம்பிய முகத்துடன் பார்க்கும் நண்பனின் மனைவியைப் பார்த்தவன்,  அழுந்த மூடிய இதழ்களைத் திறந்து சொன்னான்,  “நான் இதுநாள் வரை சொன்னதுலாம் தான் பொய்!!! .. இப்போ..இந்த நிமிஷம்..சொல்றது தான் உண்மை.. என் மச்சி த்தேவ் உயிரோட இல்ல.. உனக்கு ஆபரேஷன் நடக்குறது.. ஒரு நாள் முன்னாடியே அவன் போய் சேர்ந்துட்டான்..!இதோ இப்போ

எங்கேயும் காதல்! – 19&20 (விஷ்ணுப்ரியா) Read More »

error: Content is protected !!
Scroll to Top