27 – ஆடி அசைந்து வரும் தென்றல்
27 – ஆடி அசைந்து வரும் தென்றல்
அனிவர்த்திடம் பேசவிடாமல் தடுக்கவே தன்னை கிளப்பியுள்ளாள் என தெளிவாகிற்று.. ஆனால் ஏன்.. அவரை கண்டு தடுமாறுவதேனோ…
அவரின் கம்பெனி பேர் என்னவோ சொன்னாரே..சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டோமே.. என வெகு நேரம் யோசித்து கண்டுபிடித்தார்.. சி. கே டிரேடர்ஸ்.. ஆமாம் சி்.கேடிரேடர்ஸ. இது.. இது… தேவர்ஷி முன்பு வேலை செய்த கம்பெனி அல்லவா.. அங்கு சென்ற வந்த போது தானே.. காதல் குழந்தை என வந்து நின்றாள்.
ஒரு வேளை அந்த சமயத்தில் கூட வேலை செய்த யாரிடமாவது ஏமாந்து போயிருப்பாளா.. அனிவர்த்தை விசாரித்தால் ஏதாவது தகவல் கிடைக்கலாம் அதை கொண்டு மகளி்ன் வாழ்க்கையை சீரமைக்க முடியுமா.. பேத்தி அந்த சின்னசிட்டின் தந்தை ஏக்கத்தை போக்கி விட முடியாதா.. என நினைத்தவர் போன் நம்பர் வாங்கி வைக்காது விட்டமோ என வருந்தியவர்…
கூகுளில் அனிவரத் பேர் கம்பேனி பேர் போட்டு அனிவர்த்தின் செல் நம்பரை எடுத்துக் கொண்டார். மாலையில் போன் பண்ணி அனுமதி வாங்கி கொண்டு நேரில் சந்திக்க வேண்டும் என முடிவு செய்தார்..
இங்கோ அனிவர்த்திற்கு ஆபிஸில் வேலையில் கவனம் வைக்க முடியாமல் திண்டாடினான். அவனுள் பல யோசனைகள்…ஏனோ அவளின் கணவன் யார் என தெரிந்து கொள்ள வேண்டும் என துடித்தான். இன்னும் தன் தீண்டலில் மயங்குகிறாள் என்றால் தன் மீதான் காதல் அப்படியே தான் இருக்கிறது என்று தானே அர்த்தமாகிறது. அப்படி இருக்கும் போது எப்படி இன்னொருவனை மணந்திருப்பாள்… ஷாஷிகா எப்படி..
தன்னை விட்டு பிரிந்த பிறகு தேவர்ஷி வாழ்க்கையில் நடந்தவற்றை அறிந்தே ஆகவேண்டும் என மண்டையை குடைந்தது. ஏன் மனம் இப்படி அலை பாய்கிறது.. அப்படி என்ன ஸ்பெஷல் இவள் எனக்கு என நினைக்க.. ஸ்பெஷல் இல்லையா.. எத்தனை பெண்களை இப்படி நினைவுல் வைத்திருக்கிறாய்.. அவளோடு இருந்த கார்கால பொழுதுகளை மறக்காமல் அதை ஏன் மற்ற பெண்களிடம் தேடி அலைந்தாய் என மனம் கேட்க..
ஆமாம் அப்படி தானே இருக்கிறேன்.. அப்போ எனக்கு ஸ்பெஷல் தான் அவள்… அது தான் காதலா.. நான்அவளை காதலித்திருக்கிறேனா.. அதை உணராமல் தான் இப்படி எல்லாம் கெடுத்து வைத்திருக்கிறேனா.. அவள் காட்டிய காதலை காசு கொடுத்து தேடியிருக்கிறேனே முட்டாளாட்டம் என தலையில் அடித்துக் கொண்டான்.
இப்போ உணர்ந்து என்ன பண்ண… அவளுக்கு கல்யாணம் ஆகிவிட்டதே.. என வருத்தப்பட்டான். அப்போது அவன் போன் சிணுங்கியது. புது எண்ணில் இருந்து அழைப்பு..
“ஹலோ.. மிஸ்டர் அனிவர்த்..”
“எஸ்.. நீங்க..”
“ஷாஷிகாவின் தாத்தா திருகுமரன்..”
“சொல்லுங்க சார்..” குரலில் ஒரு மரியாதை..
“நான் உங்களை மீட் பண்ணனுமே..”
“பண்ணலாம் சார்.. எனக்கும் உங்ககிட்ட பேசனும்..”
“ஓ.. பேசலாமே.. என்ன பேசனும்.. “என திருகுமரன் கேட்க..
“ஷாஷிகா பாதர் பற்றி…”
‘எனக்கு தான் என் மகள் வாழ்க்கைகாக தெரிந்து கொள்ள வேண்டும்.. இவர் எதற்காக கேட்கிறார்..’ என குழம்பினார். பாவம் அன்று அவருக்கு குழப்பம் தொடர்கதையாகி போனது…
“உங்களுக்கு எதுக்கு அந்த விபரம்..”
“நேரில் பேசலாமே..” அனிவர்த் கேட்க..
“ஓகே.. எங்க மீட் பண்ணலாம்” என திருகுமரன் கேட்க…
“வீட்டிற்கே வருகிறேன் ..” என சொல்லி வைத்துவிட்டான்.
வரவா.. என அனுமதி கூட கேட்கவில்லை பாரேன் என மெல்ல சிரித்தார் திருகுமரன்…
இருவரும் சந்தித்து பேசி கொண்டால் எல்லாம் தெளிவாகி விடும்.. தேவர்ஷி என்ன பண்ண போகிறாளோ…
மதிய உணவு கூட இறங்கவில்லை அனிவர்த்துக்கு உண்மை அறியாமல்.. தன் காதலை காலம் கடந்து உணர்ந்த தன்னை தானே மனதார திட்டி தீரத்தான். இதற்கு மேல் உண்மை அறியாது தலை வெடித்திடும் போல இருக்க… உடனே தேவர்ஷி வீட்டிற்கு கிளம்பிவிட்டான்.
அனிவர்த் மாலை வருவான் என திருகுமரன் நினைத்திருக்க… மதியமே வருவான் என எதிர்பார்க்கவில்லை அவர். அவன் பாடு அவனுக்கு தானே தெரியும்.. இன்னொன்று தேவர்ஷி மாலையில் இருந்தால் பேசவிடாமல் துரத்தி விடுவதிலேயே குறியாக இருப்பாள். அதை எல்லாம் மனதில் கொண்டே உடனே கிளம்பி வந்துவிட்டான்.
அனிவர்த் வந்து அமர்ந்ததும் நேரடியாக விசயத்திற்கு வந்துவிட்டான்.
“ஷாஷிகா பாதர் யார்… உங்க மருமகன் எங்க இருக்கார்..”
அவனின் பரபரப்பு கண்ட திருகுமரனுக்கு ‘இவர் ஏன் இப்படி பரபரப்பாக கேட்கிறார்.. எனக்காவது என் பொண்ணு.. இவருக்கு இதில் என்ன இருக்கு..’ என யோசனை ஓடியது…
“சொல்லுங்க.. ஏன் அமைதியாக இருக்கறிங்க..” என்றான் அனிவர்த்..
“அது உங்களுக்கு எதுக்கு.. நீங்க எதுக்கு தெரிஞ்சுக்கனும்..”
“இல்லை என் ஆபிஸ்ல வேலை செஞ்சாங்க.. நல்ல திறமையான பொண்ணு.. அவங்க மேல உள்ள அக்கறைல தெரிஞ்சுக்கலாம்னு..” என சாமர்த்தியமாக பேசினான்.
அவனின் சாதுர்யமான பேச்சை நம்பி எல்லாம் ஒப்புவித்துவிட்டார்.
“உங்க ஆபிஸில் வேலை செய்யும் போது தான் யாரையோ காதலித்திருப்பா போல… ஒருநாள் அழுதழுது ஓஞ்சு போய் உயிரை கையில பிடிச்சு கிட்டு வந்து நின்னா.. நாங்க எவ்வளவோ கேட்டோம் வாயே திறக்கல.. அப்புறம் ஒருநாள் மயங்கி விழுந்துட்டா.. தூக்கிட்டு ஓடினோம்.. அங்க டாகடர் பார்த்துட்டு சொல்லவும் தான் கர்ப்பமா இருக்கறதே எங்களுக்கு தெரியும்.. அப்பவும் கேட்டோம்… நான் ஒருத்தர லவ் பண்ணினேன்.. நாங்க கல்யாணம் பண்ணிகிட்டோம். கொஞ்சநாள் வாழ்ந்தோம்.. ஒத்து வரல.. பிரிஞ்சிட்டோம்னு சொன்னா.. யாருனு சொல்லு நாங்க வேணா பேசி பார்க்கிறோம்னு எவ்வளவு தூரம் கேட்டோம்… சொல்லவே இல்லை.. மீறி கேட்டா எங்கயாவது போயிடுவேனு சொல்லிட்டா.. நாங்களும் பயந்து போய் எங்க கண் முன்னாடி இருந்தா போதும்னு அமைதியாகிட்டோம்..” என சொல்லியவர் கண்கள் கசிந்தது..
அதை கேட்ட அனிவர்த்துக்கோ சர்வமும் நடுங்கியது… உடல் வியர்க்க.. மூளை மரத்துப் போய்… மனம் ஸ்தம்பித்த நிலை..
“தம்பி என்னாச்சு.. இந்தாங்க தண்ணீ குடிங்க..” திருகுமரன் அனிவர்த்தை பார்த்து பதறி பருக தண்ணீர் கொடுத்தார்.
தண்ணீரை குடித்து கொஞ்சம் ஆசுவாசமானவன்.. யோசிக்க ஆரம்பித்தான்…
என்னோட வேலை செய்த போதுனா.. அது நான் தானே.. என்னை தான் காதலித்தாள்.. அப்போ ஷாஷிகா என் குழந்தையா.. ஆனால் கலயாணம் செய்து கொண்டோம் என சொல்லியிருக்காளே.. அது தானே இடிக்குது…
“தேவர்ஷி கல்யாணம் ஆகிடுச்சு சொன்னாளா..”
“ஆமாம் தம்பி தாலியை காண்பித்தாளே.. இன்னும் அந்த தாலி அவ கழுத்தில தான் இருக்கு..”
‘என்னது தாலியா.. நான் அப்படி எதுவும் கட்டலையே..’ குழம்பத்துடனே திருகுமரனிடம் கூட விடை பெறாமலேயே எழுந்து சென்றுவிட்டான்.
திருகுமரனும் இவருக்கும் ஒன்னும் தெரியலை போல.. எப்படி கண்டுபிடிக்கறது.. கடவுளே என் பொண்ணுக்கு ஒரு வழி காட்டேன் என கடவுளிடம் தனது கவலைகளை கொட்டினார்…
குழப்பத்துடன் வீட்டிற்கு வந்தான் அனிவர்த்…
மகனின் முகத்தை பார்த்த கங்காவிற்றகு ஏதோ சரியில்லை என தோன்றியது. காலையில் கிளம்பி சென்ற உற்சாகம் என்ன.. இப்போ மகனின் இருண்ட முகத்தை பார்தது சற்று பயம் தட்டியது.
சிதம்பரத்திடம் “என்னன்னு கேளுங்க.. நான் கேட்டா சொல்லமாட்டான்..” என்க..
சிதம்பரம் கேட்பதற்குள் தன் அறைக்கு சென்று கதவடைத்துக் கொண்டான். தன அறைக்கு வந்தவன் தலையை தாங்கி கொண்டு அமர்ந்துவிட்டான்.
கங்கா முறைக்க.. சிதம்பரம் அவசரமாக “கீழே இறங்கி வருவான்ல கண்டிப்பா கேட்கிறேன்” என சொல்லி தப்பித்து கொண்டார்.
‘தாலி என எதுவும் நான் கட்டவில்லையே.. என்னோடு வேலை பார்த்த சமயம் என்றால என்னோடு தானே பழகினாள். அவள் என்னை தானே லவ் பண்ணியதாக சொன்னாள். அப்போ ஷாஷிகா என் குழந்தையா.. ‘
சில கணக்குகள் போட்டவன் ‘ஷாஷிகா வயதை பார்த்தால் என்னோடு இருந்த நாட்களோடு ஒத்துப் போகிறதே.. அப்போ ஷாஷிகா என் பொண்ணா.. எனக்கு ஒரு பொண்ணா..’ மனதில் ஆனந்தம் கூத்தாட.. கண்களில் மகிழ்ச்சி பெருக்கு நீராக உகுக்க.. கைகள் நடுங்க.. தாளமுடியாமல் அப்படியே படுக்கையில் மல்லாக்க சாய்ந்துவிட்டான்.
எதேதோ உணர்வு அவனுள் கத்தவேண்டும் போல.. குதிக்கவேண்டும்போல.. சத்தமாக சிரிக்கவேண்டும் போல.. வாய் விட்டு அழுகவேண்டும் போல… அது எல்லாம் அவன் இயல்பு இல்லை என்பதால்.. சிறுபிள்ளைதனமாக இருக்கும் என வெகு பாடுபட்டு தன்னை அடக்கிக்கொண்டான்.
தன் உணர்வுகளோடு சில மணிதுளிகள் போராடியவன் முதலில் ஷாஷிகா தன் பெண் தானா உறுதியாக தெரிந்து கொள்ள வேண்டும் என முடிவு செய்தான். எப்படி எனவும் முடிவு செய்தவன்.. எதையும் நினைத்தவுடன் செய்து முடிக்கும் பழக்கம் கொண்டவன் என்பதால் உடனே கிளம்பிவிட்டான்.
ஷாஷிகா பள்ளி விடும் நேரம் என்பதால் நேரே பள்ளிக்கே சென்றான். பள்ளி வாசலில் திருகுமரன் பேத்திக்காக காத்திருந்தவர் அனிவர்த்தை பார்த்தும் இவர் எதற்கு இங்கே வந்திருக்கார் என்ற கேள்வி தான் தோன்றியது.. அனிவர்த் திருகுமரனின் பார்வையை கொண்டே அவரின் மனதை படித்தவன்..
“ஷாஷிகா நினைப்பாகவே இருக்கு.. அதான் அவ கூட கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ணலாம்னு வந்தேன்.. ப்ளீஸ் சார்.. நான் கொஞ்சம் அவளை வெளியே கூட்டிட்டு போய் வருகிறேனே.. ஒரு ஹாப்னவர் சார்..” என கேட்க..
திருகுமரனுக்கே என்ன சொல்வது என தெரியவில்லை. அதிக பழக்கமும் கிடையாது… அதற்காக தெரியாதவரும் கிடையாது.. என்ன செய்வது என தெரியவில்லை..
“ப்ளீஸ் அங்கிள்..” என நெருக்கத்தை கூட்டினான். மாமா என சொல்லிவிடலாம் என நினைத்தான் தான் அவனுக்கே உறுதியாக தெரியாமல் எப்படி என விட்டுவிட்டான்.
கண்களில் இறைஞ்சுதலுடன் கேட்கவும் திருகுமரனும் சரி என தலையை அசைத்துவிட்டார்.
பள்ளி மணி அடிக்கவும்.. குழந்தைகள் வெளியே வரவும் ஷாஷிகாவை மிகவும் ஆர்வமாக துழாவினான். ஷாஷிகா இவனை பார்த்ததும்..
“ஹாய் அங்கிள்..” என துள்ளலாக ஓடி வந்தது..
ஷாஷிகாவை தூக்கி இரு கன்னத்திலும் முத்தம் வைக்க.. அவனின் செயல் எல்லாம் பார்த்து கொண்டிருந்த திருகுமரனுக்கு ஒன்றும் புரியவில்லை..
ஷாஷிகாவை தூக்கி தோளோடு அணைத்து கொண்டு திருகுமரனிடம் தலை அசைத்து விடை பெற்றவன் காருக்கு சென்று முன் சீட்டில் அமர வைத்து காரை எடுத்தவன் நேராக சென்றது ஒரு மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல்..
ஏற்கனவே டி.என்.ஏ. டெஸ்ட்கு தன் மருத்துவ நண்பனிடம் முன்பதிவு செய்திருந்தான். உடனே அனிவர்த்துக்கும் ஷாஷிகாவிற்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முடிவுகள் வர மூன்று நாட்களகும் என சொல்லிவிட.. மூன்று நாளா என மலைத்து போனான். ஏனோ அவன் மனம் ஷாஷிகா தன் மகள் தான் நம்ப.. ஆதாரபூர்வமாக தெரிந்தால் தான் அடுத்து செய்யவேண்டியதை செய்ய முடியும்…
ஷாஷிகா அவனை கேள்வியாக கேட்டது..
“எதுக்கு இங்க என்னை கூட்டிட்டு வந்திங்க..”
“ஊசி போடுவாங்களா..”
“எனக்கு பீவர் கூட இல்லையே அங்கிள்..”
“எதுக்கு ப்ளட் எடுத்தாங்க..”
“எனக்கு வலிக்குது..”
“அம்மாவும் தாத்தாவும் தானே எப்பவும் ஹாஸபிட்டல் கூட்டிட்டு போவாங்க..”
“நீங்க ஏன் கூட்டிட்டு வந்திங்க..”
‘ஹப்பா.. எத்தனை கேள்வி..’ மகளின் புத்திசாலிதனத்தில் மெச்சி போனான்..என் மகள் என்னை போல கர்வம் வேறு…
“அங்கிள்.. நான் கேட்டுட்டே இருக்கேன்.. சைலண்ட்டா இருக்கறிங்க..”
மகளின் அதட்டலில் சிரிப்பு வந்திட..
“ஷாஷிமா.. ஒன்னும் இல்ல சும்மா.. நாம ஐஸ்கிரீம் சாப்பிட போலாமா..” என்க..
ஐஸ்கிரீம் என்றதும் அந்த சுட்டியும் குஷியாகிவிட்டது.
ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து சாப்பிட வைத்து வீடு வர ஒருமணி நேரம் கடந்துவிட்டது. வீட்டிற்கு வந்தனர். இவர்களுக்காக திருகுமரன் காத்திருந்தார். ஷாஷிகாவை கொண்டு வந்து விட்டு சென்றுவிட்டான்.
27 – ஆடி அசைந்து வரும் தென்றல் Read More »