அனிவர்த் தன் வாக்கின் மூலம் பெற்றவர்களின் மன சஞ்சலத்தை போக்கி சந்தோஷத்தை மீட்டு கொடுத்துவிட்டான்.கொஞ்சநேரம் அன்னையோடு சந்தோஷமாக பேசிக் கொண்டு இருந்தவன் மருத்துவமனையில் கங்காவிற்கான பத்திய உணவு வரவும் தானே அவருக்கு ஊட்டிவிட்டான். சாப்பாடு பிடிக்காமல் கங்கா முகத்தை சுழித்த போதும் கட்டாயப்படுத்தி கொடுத்தான்.கங்காவின் முகத்தை பார்க்க.. பார்க்க சிதம்பரத்திற்கு சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
கங்கா கண்களால் மகனை காண்பித்து அமைதியாக இருங்க என எச்சரித்துக கொண்டு இருந்தார். அனிவர்த் இரண்டு நாட்களாக ஆபீஸ் செல்லாததால் போய் விட்டு மாலை வருவதாக சொல்லி கிளம்பிவிட்டான்.
அவன் கிளம்பியதும் கங்கா..”ஷ்ஷப்பா.. இந்த பத்திய சாப்பாடு எல்லாம் கொடுமை.. எனக்கு மட்டன் பிரியாணி டிரைவரை விட்டு வாங்கி வர சொல்லுங்க..”என்றார் எழுந்து படுக்கையில் கால்களை நீட்டி அமர்ந்து கொண்டு..
மட்டன் பிரியாணி வாங்கி வரவும்.. அதை அவசர அவசரமாக பிரித்து வாயில் அடைத்து் கொண்டே..
“அந்த ஐசியூவுல உப்பு இல்லாத கஞ்சிய கொடுத்து அந்த நர்ஸ் புள்ள குடிங்க குடிங்கனு உசிர வாங்கிட்டா.. ரூம்கு வந்த பிறகாவது இட்லியும் குடல்கறியும் வாங்கி சாப்பிடலாம்னா.. உங்க மகன் பக்கத்திலேயே உட்கார்ந்து கிட்டு சென்டிமென்ட்டா பேசிக் கொல்றான். நானே உடம்பு சரியில்லாத மாதிரி நடிக்க எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா.. நடிப்பு தானேனு இல்லாம உங்க ப்ரண்ட் அந்த டாக்டரு சும்மா நடிப்புக்கு ஊசி குத்த சொன்னா.. நிசமாலுமே குத்தி வச்சிட்டாரு.. எனக்கு ஒரு மருமகள கொண்டு வரதுக்குள்ள.. நான் என்ன எல்லாம் பாடுபட வேண்டி இருக்கு..” சாப்பிட்டு கொண்டே பேச புரையேறி இருமி கண் எல்லாம் கலங்கிவிட்டது.
சிதம்பரம் தண்ணீர் ஊற்றி கொடுப்பதற்குள் ஷாஷிகா ஓடி வந்து பெட்ல ஏறி மண்டியிட்டு அமர்ந்து தலையை தட்டி கொடுக்க.. யார் இந்த சிறுமி.. எங்கிருந்து வந்தாள்.. என இருவரும் பார்த்தனர்.
“சாப்பிடும் போது பேசக்கூடாது என உங்களுக்கு யாரும் சொல்லி தரலையா..” விழி மலர்த்தி தலையை ஆட்டி ஆட்டி பேச… அவளின் சுருள்முடி முன் நெற்றியை மறைக்க.. அழகாக தலையை சிலுப்பி அதை ஒதுக்கி விட்டு கொண்டாள்.
வெள்ளையில் இளஞ்சிவப்பு கரை கட்டிய ரோஜாப்பூ இருக்குமே அது போல நல்ல பால்வண்ணத்தில் தோலின் நிறமிருக்க… கண் இமை,கன்னக்கதுப்பு, மூக்கு நுனி. உதடு, கைகால் விரல்கள் எல்லாம் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்க.. அதற்கு எல்லாம் மகுடம் வைத்தாற் போல அடர்த்தியான சுருள் சுருளான கேசம்…
தீடீரென ஒரு குழந்தை வந்து பேசவும்… கங்காவும் சிதம்பரமும் அதன் அழகிலும் அழுத்தம் திருத்தமான பேச்சிலும் தங்களை மறந்து பார்த்தபடியே இருந்தனர்.
“அச்சோ… நீங்க பேஷன்ட் தான.. உடம்பு நல்லா இல்லைனா நான்வெஜ் சாப்பிடகூடாது தெரியாதா..” கையை ஆட்டி பேச…
இளையாளின் கேள்வியில் கங்கா திரு திருவென முழிக்க… சிதம்பரம் நன்றாக வாய்விட்டு சிரி்த்துவிட்டார்.
வாய் மேல் தன் சுட்டுவிரலை வைத்து “ஷ்ஷ்.. இது ஹாஸ்பிட்டல் இங்கு சைலண்ட்டா இருக்கனும்.. டோன்ட் சவுட்..” என கிசுகிசுப்பான குரலில் சொல்ல.. சொக்கி தான் போயினர் பெரியவர்கள் இருவரும்…
“ஐயோ..” என தனது உள்ளங்கையால் உச்சஞ்தலையில் தட்டி கொண்டவள்..
“பாட்டி தேடுவாங்க.. பை..” என சொல்லி அந்த அழகு புயல் அவர்களை கரை கடந்து சென்றது.
இருவருக்கும் இனிமையான பொழுது அது.. பேச்சற்று அந்த இனிமையில் கரைந்து கொண்டு இருந்தனர்.
நர்ஸ் வரவும் தான் அதில் இருந்து மீண்டனர். நர்ஸ் ஒரு இன்செக்ஷன் போட்டு விட்டு செல்ல..
“நடிப்ப நிஜமாக்க பார்க்காரு…. உங்க ப்ரண்டுகிட்ட சொல்லி வைங்க… பில் எவ்வளவு வேணும்னாலும் கட்டிடலாம்.. இப்படி சதக் சதக்குனு குத்த வேணாம்.. சொல்லுங்க..” என்றார் முகத்தை சுழித்தபடி…
“செய்வன திருந்த செய் என பழமொழி இருக்குல்ல.. உன் மகன் படுபுத்திசாலி. உன் தில்லாலங்கடி எல்லாம் உம் மகனுக்கு தெரிஞ்சுது.. அவன் கல்யாணம் நமக்கு கனவாவே போயிடும். அத முதல்ல புரிஞ்சுக்கோ..”
கணவனின் பேச்சில் உள்ள உண்மை உரைக்க அமைதியாகவே தலை அசைத்தார்.

சிதம்பரத்திற்கு கங்காவிடம் வம்பு செய்யும் எண்ணம் தோன்ற…
“கங்காம்மா… உன் உடம்புல ஏகப்பட்ட கம்ப்ளைன்ட்… அதான் ஒரு சர்வீஸ் பண்ணிடுடானு என் நண்பன்கிட்ட சொன்னேன்.. அதான் புல் சர்வீஸ் பண்றான் போல…” என சிரிக்காமல் சொல்ல..
“என்னது… சர்வீஸா.. நான் என்ன உங்க வண்டியா.. சர்வீஸ் விட..”என கோபமாக கேட்க..
“என் வாழ்க்கை ஓட உதவியா இருக்கற வண்டியே நீ தானே…”என கிண்டலடிக்க…
கங்கா தலையணையை தூக்கி சிதம்பரத்தை நோக்கை வீச… அந்த சமயம் பார்த்து அனிவர்த் உள்ளே வந்தான்.
அனிவர்த்தை பார்த்தும் கங்கா ஆடு திருடிய திருடனாய் முழித்தார். அனிவர்த்தின் முகத்தை பார்க்க.. அவன் முகமோ கோபத்தில்…
“ம்மா.. நீங்க பண்றது எல்லாம் சரியில்ல.. என்ன முழிக்கறிங்க.. எனக்கு தெரிஞ்சு போச்சுனா…” என சத்தம் போட…
ஐய்யய்யோ… கண்டுபிடிச்சிட்டானா.. என பயத்துடன் பார்க்க…
“உங்க உடம்பு இருக்கற இந்த கண்டீசன்ல கூட.. நீங்க அடங்கவே மாட்டிங்களா… சின்ன புள்ளையாட்டம் சேட்டை பண்ணாம தூங்குங்க..” என அனிவர்த் திட்ட..
சிறுபுள்ளை போல உதட்டை பிதுக்கி முகத்தை திருப்பிக் கொண்டு படுத்து கண்களை இறுக்க மூடிக் கொண்டார். தந்தையிடம் டாக்டரை பார்த்து விட்டு வருவதாக சொல்லி அனிவர்த் சென்று விட… அவன் சென்றதும் கண்களு திறந்த கங்கா…
“என்னால இவன சமாளிக்க முடியல.. நாம இன்னைக்கே வீட்டுக்கு போகலாம்.. உங்க ப்ரண்ட்டுகிட்ட கேளுங்க..”
“ஏம்மா.. உன் நடிப்புல ஒரு லாஜிக் வேணாமா.. ஹார்ட் அட்டாக் வந்த பேசன்ட.. குறைந்தது இரண்டு நாளாவது ஐசியூவுல இருக்கனும்.. நீ அடமா அங்க இருக்கமாட்டேன். மானிட்டர் ஆக்சிஜன் சிலிண்டர் எல்லாம் பார்த்தா பயம் இருக்குனு ரூம்கு வந்துட்டா…இங்கயாவது இரண்டு நாள இருக்காம..உடனே கிளம்பனும்னு சொல்லி எங்க அப்பன் குதிருக்குள்ள இல்லனு நீயே காட்டிக் கொடுத்துடுவ போல… இப்ப தான் உன் மகன் கல்யாணத்துக்கு சரி சொல்லி இருக்கான்..பாரத்துக்க… பத்திரம்..”
“சரி.. சரி.. அதையே சொல்லி மிரட்டாதிங்க.. நைட்டுக்கு பரோட்டாவும் மட்டன் சால்னாவும் வாங்கிடுங்க…”
“ஏம்மா டாக்டருக்கு தெரிஞ்சுது அவ்வளவு தான்….. மூனு வேளையும் நான்வெஜ் சாப்பிட்ட.. உன் நடிப்பு நிஜமாக சான்ஸஸ் உண்டு.. அதையும் பார்த்துக்கோ..”என்றுவிட்டு அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டார்.
“வாழை பழத்தில் ஊசிய ஏத்தற மாதிரி பேசிட்டு.. அப்பாவி போல பாவ்லா காட்ட வேண்டியது..” என சத்தமாகவே முணுமுணுத்தார். சிதம்பரம் காதில் வாங்காது போல செய்திதாளில் புதைந்து கொண்டார்.