ATM Tamil Romantic Novels

IMG-20240503-WA0001

வானவில்லே எனை வளைத்ததேனடி.. 5

வானவில் 5     செய்யோனின் செங்கதிர்கள் மெல்ல தன் கைகளைப் படரவிட்டு பூமி பெண்ணவளை தழுவிக்கொண்ட நேரமது!!   அந்த இளங்காலை பொழுதில் தன் ஒளிக்கற்றை எனும் ஆயிரம் கரங்களால் நங்கையவளை கொள்ளை கொள்ள.. அக்கதிரவனின் கரங்கள் துடிக்க.. அவளோ “காலையிலே வந்திட்டான் கடன்காரன் கதிரவன்!” என்று அர்ச்சித்து கொண்டு போர்வையால் தன் முகம் மறைத்துக் கொண்டாள்.  தன் தலை வரை இழுத்துப் போர்த்திக்கொண்டு அவள் தூங்கினாள். அவளுக்கு தான்  அதிகாலை விழித்துக் கொள்ளும் பழக்கமே

வானவில்லே எனை வளைத்ததேனடி.. 5 Read More »

1D36D68A-326B-4B1E-B65E-88BF2529476E

ஆடி அசைந்து வரும் தென்றல் – 4

இதற்கு முன்பும் மகன் வீடு வராமல் இருந்திருக்கிறான் தான். ஆனால் அதெல்லாம் வார இறுதி நாட்களில் தான். அதுவும் மேற்படிப்புக்காக ஜெர்மன் சென்று வந்த பிறகு தான்.. அதற்கு முன்பு எல்லாம் அனிவர்த் அம்மா பிள்ளை தான். இருவரும் நண்பர்கள் போல தான் இருப்பர்.

இப்படி வார நாட்களில் வராமல் இருக்கவும் கொஞ்சம் கவலை வந்தது தான். இருந்தாலும் எத்தனை நாளைக்கு பார்த்துவிடலாம் என அலட்சியமாக இருந்தார். இரண்டு நாட்கள் என்பது பதினைந்து நாட்களானது. கங்காவிற்கு பெரிதாக கவலை ஆட்கொண்டது.

அனிவர்த்தோ தனது ப்ளாட்டிற்கு வந்து பதினைந்து நாட்களாகியும் தன் அம்மா தன்னை அழைக்கவில்லையே என கோபத்தில் இருந்தான். இவன் வந்த மூன்றாம் நாள் சிதம்பரம் தான் அழைத்து என்ன.. எங்க இருக்கிறாய் என விவரம் கேட்டறிந்தவர் அதன் பின்பு அவரும் தொடர்பு கொள்ளவில்லை. கங்கா தான் வேண்டாம் என கண்டிப்புடன் சொல்லிவிட்டார்.

இதற்கு முன்பும் மகன் வீடு வராமல் இருந்திருக்கிறான் தான். ஆனால் அதெல்லாம் வார இறுதி நாட்களில் தான். அதுவும் மேற்படிப்புக்காக ஜெர்மன் சென்று வந்த பிறகு தான்.. அதற்கு முன்பு எல்லாம் அனிவர்த் அம்மா பிள்ளை தான். இருவரும் நண்பர்கள் போல தான் இருப்பர்.

இப்படி வார நாட்களில் வராமல் இருக்கவும் கொஞ்சம் கவலை வந்தது தான். இருந்தாலும் எத்தனை நாளைக்கு பார்த்துவிடலாம் என அலட்சியமாக இருந்தார். இரண்டு நாட்கள் என்பது பதினைந்து நாட்களானது. கங்காவிற்கு பெரிதாக கவலை ஆட்கொண்டது.

அனிவர்த்தோ தனது ப்ளாட்டிற்கு வந்து பதினைந்து நாட்களாகியும் தன் அம்மா தன்னை அழைக்கவில்லையே என கோபத்தில் இருந்தான். இவன் வந்த மூன்றாம் நாள் சிதம்பரம் தான் அழைத்து என்ன.. எங்க இருக்கிறாய் என விவரம் கேட்டறிந்தவர் அதன் பின்பு அவரும் தொடர்பு கொள்ளவில்லை. கங்கா தான் வேண்டாம் என கண்டிப்புடன் சொல்லிவிட்டார்.

வீட்டிற்கு போகாமல் இருந்தால் பயந்த போய் கல்யாணத்தை நிறுத்தி விடுவார்கள் என நினைத்திருக்க.. அவர்களின் அமைதி அவனின் கோபத்திற்கு தூபம் போட்டது போல் ஆனது. பெண் பார்த்து இருக்கிறார்கள் பாரு.. ஒரு முக லட்சணம் உண்டா.. கலரும் கறுப்பு.. குட்ட வாத்து மாதிரி படிக்காத பட்டிக்காடு போல…

இவங்க அழகு படிப்பு நாகரிகத்துல பாதியாவது இருக்கற மாதிரி பார்க்க கூடாது. சி். கே எண்டர்பிரைசஸ் எம்டிக்கு ஒய்பா இருக்கறதுக்கு ஒரு தகுதி வேணாமா.. இந்த மாதிரி பொண்ணை என்ஆபீஸ் ப்யூன் கூட மேரேஜ் பண்ணிக்க யோசிப்பான். ச்சே எனக்கு போய் இப்படி ஒரு பெண் லைப் பார்ட்னரா என கடுங் கோபம் கொண்டான்.

அவன் மேல் ஒரு பந்து வந்து விழுகவும் திடுக்கிட்டு சுற்றுபுறம் உணர்ந்து பந்தை கையில் எடுக்கவும்.. பந்தை வாங்க வந்தாள் ஷாஷிகா. அனிவர்த்தை பார்த்தும்…

“ஹாய் அங்கிள்” என அவனருகே அமர்ந்து கொண்டது.

அனிவர்த்துக்கும் ஷாஷிகாவை பார்த்தும் அவன் மனதில் இருந்த அழுத்தங்கள் எல்லாம் வடிந்து ஒரு புது உற்சாகம் தொற்றிக் கொள்ள…

“ஹேய்.. பேபிடால்..” என்றான்.

ஷாஷிகா அவனை பார்த்து முறைக்க.. அதை பார்க்க அனிவர்த்துக்கு அன்று அவள் சொன்னது நினைவில் வர…

“ஹே…சாரி சாரி ஷாஷிகா..” என தன்னை திருத்திக் கொள்ள..

“அஃது” விரலை நீட்டி எச்சரிப்பது போல மிரட்டினாள் குட்டி பொண்ணு..

அவளும் ஏதோ கேட்க இவனும் பதில் சொல்ல.. நெடுநேரம் குட்டி கைகளை ஆட்டி… கண்ணை உருட்டி….சலசலத்து கொண்டிருக்க.. இவனும் பதிலுக்கு வாயாடி கொண்டு இருந்தான். நடுவே அவளின் தோழர்கள் வந்து அழைத்த போது கூட.. செல்லாமல் நீங்க விளையாடுங்க.. என அனுப்பிவிட்டாள் பெண்.

மாலை மங்கும் நேரத்தில் “ஏய்… ஷாஷி வீட்டுக்கு போகலாம் வா..” என வந்து நின்றான் ஒரு சிறுவன்.

“இரு ரித்தீஷ் வரேன்.. இவன் என் கஷின் பிரதர் ரித்தீஷ்.. “

ரித்தீஷோ..”நீ இப்ப வரையா இல்லயா..” என மிரட்ட..

“சாரி அங்கிள்.. இவன் இப்படி தான் யார்கூடயும் பேசமாட்டான். சிடுசிடுனுனே இருப்பான்..” என ஷாஷிகா சொல்ல..

ரித்தீஷ் முறைக்க.. “பை அங்கிள்.” என சொல்லி விட்டு நிற்காமல் ஓடிவிட்டாள் குட்டி..

வந்த போது இருந்த மனநிலைக்கு நேர்மாறாக சந்தோஷமாக… உற்சாகமாக திரும்பி சென்றான்.

அனிவர்த் வீட்டிற்கு வராததில் கங்கா மனம் நிம்மதி இல்லாமல் தவித்தது. கங்காவிற்கு மட்டும் என்ன ஆசையா மகனிற்கு இப்படி ஒரு பெண்ணை மணமுடித்து வைக்க.. அழகாக இல்லைனாலும் படிப்பாவது இருக்க வேண்டும் என நினைத்தார் தான். ஆனால் திருமணத்திற்கு பிறகும் மகனின் வீக் என்ட் பழக்கம் தொடருமேயானால் படித்த பெண்ணாக இருந்தால் நியாயம் கேட்டு நின்றால் குடும்ப மானம் போகப் போவது உறதி.

அழகு இல்லைனாலும் படிக்காத வெகுளியான கணவனே கண் கண்டதெய்வம் என்ற பத்தாம் பசலி நாகரிகத்தில் ஊறிப் போன பெண் தான் தன் மகனுக்கு சரி. அப்போது தான் குடும்பம் உடையாது என கல்யாண தரகருக்கு பத்து மடங்கு கமிஷன் கொடுத்தது தான் நினைத்தது போல பெண் பார்த்து முடித்தார். கங்காவிற்கு மனதே ஆறவில்லை தான். தன் மகனின் அழகிற்கும் படிப்புக்கும் இணையாக பெண் பார்த்து கண் நிறைவாக மணமுடித்து… மனம் நிறைவாக வாழ்வதை பார்க்க ஆசை தான் ஆனால் என்ன செய்ய அப்படி பட்ட பெண் வீட்டிற்கு இவர் செல்லும் முன்பே மகனின் அருமை பெருமைகள் போய் நின்று விடுகிறதே…

இதை எல்லாம் நினைத்து கொண்டு தூக்கம் வராமல் படுத்திருந்தவருக்கு நடு இரவில் மாரடைப்பு வந்து விட சிதம்பரம் பதறி போனார். உடனே ஆம்புலன்ஸை வரவழைத்து கங்காவை அள்ளி போட்டு கொண்டு சென்றார்.

அனிவர்த்கு சிதம்பரம் அழைக்க.. அனிவர்த்தோ நல்ல உறக்கத்தில்…

ஷாஷிகாவோடு பேசியதில் மனதின் இறுக்கம் எல்லாம் தளர்ந்து மனம் இலகுவாகிட.. ரொம்ப நாள் கழித்து நிம்மதியான உறக்கம்..

சிதம்பரம் மகனுக்கு விடாமல் அழைக்க… ஒரு கட்டத்தில் போனை எடுத்தான் அனிவர்த் ஒரு வழியாக… நல்ல உறக்கத்தில் இருந்தவனுக்கு எங்கோ போன் மணி அடிப்பது போல இருக்க..
கண்களை கசக்கி கொண்டு எடுத்துப் பார்த்தான்.

அதில் தந்தையின் எண்ணை பார்த்ததும் பதறி போய் எடுத்துப் பேசினான். அவர் கூறிய செய்தில் அதிர்ந்து போய் அரக்கப் பறக்க காரை ஓட்டி கொண்டு வந்தவன் தன் அம்மாவை பார்த்ததும் மொத்தமாக உடைந்து போனான்.

தீவிர சிகிச்சை பிரிவில் கைகள் மூக்கில் நெஞ்சில் என நிறைய ஒயர்களோடு.. மயக்கத்தில் இருந்தார் கங்கா.. தன் தாயின் கைகளை பிடித்துக் கொண்டு கண்ணீர் விட்டான் அனிவர்த்..

எந்த உறவுக்கும் கட்டுப்படாதவர்கள் அம்மா என்ற உறவுக்கு கட்டுப்பட்டு தான் ஆகனும்…

அத்தனை ட்யூப் ஒயர்களுக்கு நடுவே தனது அம்மாவை பார்க்கவும் ஆடி போய்விட்டான் அனிவர்த். எப்பவும் அவன் அம்மாவை தான் அதிகம் தேடுவான். நடுவில் கொஞ்ச காலம் தேவை இல்லாத பழக்கவழக்கங்கள் அவனை தள்ளி நிறுத்தி இருந்தது. தன் கல்யாணம் தான் அவர்களை அதிகம் பாதிக்குது போல அம்மாவிற்காக அவர்கள் கைகாட்டும் பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம் என அந்த நொடி முடிவு செய்தான்.

கங்கா கண் விழித்திருக்க காத்திருந்தனர். காலையில் ஒரு ஏழு மணி போல கண் விழித்தவரை பல டெஸட்கள் அப்சர்வேசன் என ஒரு நாள் வைத்திருந்து அடுத்த நாள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து அறைக்கு மாற்றப்பட்டார்.அறைக்கு மாற்றப்பட்டதும் தன்அம்மாவின் கையை பிடித்து கொண்டு…

“உங்க விருப்பப்படி கல்யாணம் பண்ணிக்கிறேன்” என கையை பிடித்து கண்களில் ஒத்திக் கொண்டு அழுதான். மகனி்ன் அழுகையை கண்டு கங்காவின் மனம் துடிக்க.. அவர் கண்களிலும் கண்ணீர் திரை.

“அனிவர்த் கல்யாணம் பண்ணினா நீ அந்த பொண்ணுக்கு உண்மையா இருக்கனும். உன்னோட வீக் எண்ட் பார்ட்டி எல்லாம் விட்டுடனும்”அதை சொல்லும் போதே அவர் முகத்தில் அவ்வளவு வேதனை..

அவரின் முகத்தையே பார்த்துகொண்டு இருந்தவனுக்கு அந்த வேதனை எல்லாம் தன்னாலே தான். அவனுக்கு தெரிந்து அவன் அன்னை என்றும் கவலையாகவோ வருத்தப்பட்டோ பார்த்ததில்லை. எப்பவும் சிரிப்புடன் கலகலப்பான டைப் தான்.எதற்கும் பெரிதாக அலட்டி கொள்ள மாட்டார்.

கங்கா சிதம்பரத்தை கல்யாணம் செய்யும் போது சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சாதாரண கிளார்க்காக தான் இருந்தார். குரூப் தேர்வுகள் எழுதியும் சர்வீஸ் அடிப்பையிலும் தாசிலதார், சப் கலெக்டர் என பதவி உயர்வு பெற்று ரிடையர் ஆகிவிட்டார். இருவருக்கும் கூடப் பிறந்தவரகள் யாரும் கிடையாது. ஒன்றுவிட்ட சொந்தங்கள மட்டுமே.. இருவருக்குமே பூர்வீக சொத்துக்கள் சில இருந்தது. அனிவர்த் பிறந்த சில வருடங்களிலேயே இவர்களின் பெற்றவர்களும் அடுத்தடுத்து இறந்து விட.. கங்காவிற்கு உறவுகளாலோ வருமானத்திலோ எந்த பிக்கல் பிடுங்கல் இல்லை.

கங்காவின் ஒரே கவலை.. அனிவர்த் தங்களை போலவே ஒற்றை பிள்ளையாக போய் விட்டது தான். எப்பவும் கங்கா எதற்காகவும் கவலை பட்டதில்லை. அப்படிபட்டவரை அனிவர்த் தன் செயலால் வருத்தி கொண்டு இருந்தான்.

அனிவர்த் தன் தாயின் கைகளின் மேல் தனது கைகளை வைத்து…

“இந்த பதினைந்து நாட்களில் ப்ளாட்டில் தனியாக தான் இருந்தேன். பப் கூட போகல.. யாரையும் வீட்டிக்கு வரவைக்கல.. இனியும் இப்ப எப்படி இருக்கேனோ அப்படி தான்..” என்றான் சின்ன குரலில்… பெற்றோரை பார்க்க இயலாமல் தலையை குனிந்து கொண்டான்.

மகனை பார்க்க பார்க்க… பெற்றவர்கள் இருவருக்கும் மனது துடித்தது. சிதம்பரம் மகனின் தோளில் தட்டி கொடுக்க… அவரின் கையை பிடித்து புறங்கையில் முத்தம் கொடுத்தான். அவனின் இந்த பழக்கங்கள் பிடிக்காத போதும் கங்கா தான் அவ்வப்போது பிடிக்கவில்லை என எதிர்ப்பை காட்டுவாரே தவிர செய்யாதே என கண்டித்தது இல்லை.. அதிலும் சிதம்பரம் அந்த எதிர்ப்பை கூட காட்டியது இல்லை.

சிதம்பரத்தை பொறுத்த வரை மகன் புத்திசாலி படிப்பு தொழில் எல்லாம் சுய முயற்சியில் ஏற்படுத்திக் கொண்டான். அவன் தப்பு என உணர்ந்து விட்டால் அதை செய்யமாட்டேன். உணரும் காலத்திற்காக தான் அமைதியாக இருந்தார்.

அவனுக்கு தெரியவில்லை அழகு படிப்பு இதை எல்லாம் விட பெண்ணை பெற்றவர்களுக்கு பையனின் நல்ல ஒழுக்கம் பழக்க வழக்கங்கள் தான் முன் வந்து நிற்கும என்று..

ஆபீஸ் சென்று வந்த பின்னால் ப்ளாட்டில் தனிமை இவனுக்கு ஒரு வித எரிச்சலை தான் கொடுத்தது. இங்கு வந்த பின்பு பப்பிற்கு சென்றவனுக்கு ஏனோ மனதில் இருந்த அழுத்தம் பெண்கள் துணையையும் நாட அனுமதிக்கவில்லை. அதற்கு அடுத்த வாரம் பப்பிற்கு போக கூட ஏனோ பிடிக்கவில்லை. வீட்டிலேயே இருக்க முடியாமல் சற்று காலார நடக்கலாம் என நினைத்தவன்… தனது ப்ளாட்டுல் இருந்து கிளம்பி கால் போன போக்கில் நடக்க.. வழியில் ஒரு பார்க் தென்பட உள்ளே சென்று அங்கு உள்ள கல் பெஞ்சில் அமர்ந்து தன்னை மறந்து ஏதோ யோசனையில் இருந்தான்.. ஏதோ யோசனை என்ன.. தன் திருமணத்தை நிறுத்தும் யோசனை தான்..

ஆடி அசைந்து வரும் தென்றல் – 4 Read More »

IMG-20240502-WA0000

வானவில்லே எனை வளைத்ததேனடி.. 4

வானவில் 4     ஒரு மாதம் வெறும் வெறுமையாக தான் சென்றது வர்ணாவுக்கு. புது வேலை என்றாலும் இவள் ஜூனியர் என்பதால் பெரிதாக யாரும் வேலை கற்றுக் கொடுக்கவில்லை. இவளே ஏதும் செய்தாலும்..   “இதெல்லாம் உனக்கு தெரியாது!!”    “எடுத்தவுடனே இந்த இடத்துக்கு எல்லாம் வர முடியாது பாப்பா கொஞ்சம் வெயிட் பண்ணு!!” என்று நக்கலாக பேசுபவர்களும்..   “மெது மெதுவா தான் கத்துக்கிட்டு வரணுமா வந்தவுடனே டைரக்ட்டா சீட்டில் உட்கார முடியுமா?” என்று

வானவில்லே எனை வளைத்ததேனடி.. 4 Read More »

IMG-20240425-WA0003

வானவில்லே எனை வளைத்ததேனடி.. 3

வானவில் 3     அத்துமீறி அறைக்குள் நுழைந்தவளை ஆக்கிரமித்திருந்தான் ஆணவன்!!   இதழ்களினாலும்.. பற்களினாலும் சற்றே வன்மையாக!!   நொடி பொழுது.. நொடி பொழுதில் தோன்றிய கோபம் மட்டுமே காரணம். அது என்ன.. கோபம் கொண்டால் இப்படித்தான் வன்முறையில் இறங்க வேண்டுமா? அது என்னவோ.. காலம் காலமாக இந்த ஆண்மகன்களுக்கு பெண்களைத் தண்டிக்க வேண்டும் என்றால் இதுதான் வழிமுறையாக இருக்கிறது. ஆனால் அந்த தண்டித்தலுக்கு பின்னே இருப்பது என்ன? அவர்களின் ஆண்‌ என்ற திமிரா?? இல்லை

வானவில்லே எனை வளைத்ததேனடி.. 3 Read More »

என் மோகத் தீயே குளிராதே 10

அத்தியாயம் 10   “ம்ம்.. ப்ச்.. தலையெல்லாம் ஒரே  வலி..” என்றவாறே எழுந்த ஹரிஷான்த், தான் இருக்கும் கோலத்தை உணர்ந்ததும், அருகினில்  இருப்பது யார் என்று பார்க்க, அங்கே யாரும் இல்லாது குழம்பிப் போனான்.    “ஹாசி.. ஹாசி..” என்று குரல் கொடுத்தவாறே தனது ஆடைகளை அணிந்தவன்,   “எங்க போனா இவ?” என்று தன் வாயிற்குள் முணுமுணுத்தவாறே ஹாலிற்கு வந்தவனின் கண்ணில், இன்னும் தூக்கம் கலையாது தூங்கிக் கொண்டிருந்த நண்பர்கள் பட,   “டேய்.. எந்திரிங்கடா..

என் மோகத் தீயே குளிராதே 10 Read More »

IMG-20240430-WA0004

கள்ளூறும் காதல் வேளையில்… 1

கள்ளூறும் காதல் வேளையில்…   1   ஜியா ஜானவி ❤️   சென்னை.. பரபரப்புக்கு பழகிவிட்ட நகரம்..! தமிழகத்தின் தலைநகரம் மட்டும் அல்லாமல் தமிழ் மக்களின் வாழ்வாதாரம் பெரும்பாலும் அச்சென்னையை சுற்றியே.. இதுதான் வழக்கம்.. இதுதான் பழக்கம்.. இதுதான் பேச்சு வழக்கு.. என்று இல்லாமல் அனைத்து மாவட்டங்களும் கலந்த கலவையின் அழகிய நிறம் சென்னை..!!   சென்னையில் பரபரப்புக்கு மட்டுமல்லாமல் அதனின் வெயிலுக்கும் மாசுவுக்கும் பழகியிருந்தனர் நம் மக்கள்.   சென்னை உயர்நீதிமன்றம்..   பிரபல

கள்ளூறும் காதல் வேளையில்… 1 Read More »

images (60)

வானவில்லே எனை வளைத்ததேனடி.. 2

வானவில் 2       தன் விவிஆரின் தடத்தை தளத்தை பதிக்க சிங்காரச் சென்னையில் கால் பதித்தான் விநாயக் ரணசிங்க!!     கூடவே அவனது பிஏ ரபின்!! தமிழும் சிங்களமும் தெரிந்த தமிழன்!! விநாயக்கிடம் கடந்த இரண்டு வருடமாக நிலைத்து நிற்கும் ஒரே பிஏ. விநாயக்கின் அதிரடிக்கும் வேகத்திற்கும் வந்த இரண்டே மாதத்தில் ஒவ்வொருவரும் பிய்த்துக் கொண்டு செல்ல.. இது வரை தாக்கு பிடித்தவன் இவன் மட்டுமே!!     விநாயக்கிடம் ஒரு பழக்கம்!!

வானவில்லே எனை வளைத்ததேனடி.. 2 Read More »

C1D6F803-2A1B-417F-924C-532BB0E3F042

ஆடி அசைந்து வரும் தென்றல் – 3

3 -ஆடி அசைந்து வரும் தென்றல்

தனது ப்ளாட்டிற்கு செல்லப் பிடிக்காமல் வீட்டிற்கு சென்றான்.இவன் போன நேரம் சிதம்பரமும் கங்காவும் சாப்பிட்டு கொண்டு இருந்தனர். கங்கா தான் இவனை முதலில் கவனித்தார்.
தனது தட்டில்இருந்த மட்டன் பிரியாணியை படுமும்மரமாக சாப்பிட்டு கொண்டு இருந்த சிதம்பரத்திடம்…

“ஏங்க மழை வருதானு பாருங்க..” என்றார் கங்கா.

அப்போதும் மகனை கவனிக்கவில்லை சிதம்பரம்.

“ஏன் கங்கா வெளியே துணி காயப் போட்டு இருக்கறியா..வள்ளிய விட்டு எடுக்க சொல்லு..”

“ம்ம்ம.. நீங்க மழைல கரைஞ்சிடுவிங்களானு செக் பண்ணனும்”என்றார் கடுப்புடன்..

“என்னது..” கங்காவை பார்க்க…

கங்கா இவரை கண்டு கொள்ளாமல் “அனிவர்த்… இன்னைக்கு சன்டே மறந்துட்டு வீட்டுக்கு வந்துட்டியா.. அச்சச்சோ..” என நக்கலாக கேட்க…

அனிவர்த் கடுப்பாகி தனது அம்மாவை பார்த்து முறைத்தவாறு..

“தெரிஞ்சு தான் வந்துருக்கேன்… ஏன் இந்த வீட்டுக்கு நினைச்ச நேரம் வர எனக்கு உரிமையில்லயா…”

“அப்போ உன்னோட உருப்படாத பழக்கவழக்கத்தை எல்லாம் விட்டு ஒழிச்சிட்டியா.. அப்ப பொண்ணு பார்க்கவா..” என்றார்.

கங்காவிற்கு தெரியும் தன் மகன் பிடிவாதக்கரன். அப்படி எல்லாம் உடனே மாறி விடமாட்டான்என…

“எப்ப பாரு இதே பேச்சு தானா… எனக்கு மேரேஜ் பண்ணி வச்சு ஒருத்தி வந்து என் தலைல ஏறி உட்கார்ந்து என்னை ஆட்டி படைக்கனும்… அத பார்த்து ரசிக்கனும் உங்களுக்கு அதானே..”

“ஆமாம்டா மகனே… வர வர லைப் திங்க தூங்கனு ரொம்ப போரிங்கா போகுது.. உங்கப்பாவும் என் கூட சண்ட போடமாட்டேங்கறாரு.. நான் எது பேசினாலும் வாயை கப்னு மூடிக்கிறாரு.. இப்ப நீ கல்யாணம் பண்ணிகிட்டேனு வை..பகல்ல உன் பொண்டாட்டி கூட சண்ட போடுவேன். அப்படியே ஜாலியா பொழுது போயிடும். இராத்திரி நீ வந்ததும் உன் பொண்டாட்டி என்னை பத்தி புகார் வாசிப்பா.. நானும் என் மருமகளும் உனக்கு நாட்டாமை பதவி எல்லாம் கொடுப்போம். நீயும் பஞ்சாயத்து பேச.. அப்படியே நைட் சாப்பாட்டு நேரம் வந்திடும். சாப்பிட்டு நிம்மதியா தூங்கிடுவேன்..” என கங்கா சிரிக்காமல் பேச…

சிதம்பரத்தால் சிரிப்பை அடக்க முடியாமல் திணறினார். ஏற்கனவே கங்காவின் பேச்சால் அனிவர்த் கடுங்கோபத்தில் இருக்க.. தானும் சிரித்தால் சிவபெருமானைப் போல நெற்றிகண்ணை திறந்து பஸ்பமாக்கிடுவான் என உதடுகளை மடித்து சிரிப்பை அடக்க முடியாமல் தலையை குனிந்து கொண்டார்.

“உங்களுக்கு பொழுது போக… எனக்கு கல்யாணம் பண்ணி வச்சு… என்னை நிம்மதி இல்லாம பண்ணனும் அப்படி தான..” என்று கத்த…

“அது அப்படி இல்லடா மகனே..”

“கங்கா..போதும் அவன் சாப்பிட்டானா என்னனு தெரியல..அதப்பாரு முதல்ல..” சிதம்பரம் அப்போதைக்கு மகனையும் மனைவியையும் விலக்கிவிட்டார்.அப்போதைக்கு அமைதியாகிவிட்டார் கங்கா. ஆனால் அதற்காக எப்போதும் அமைதியாகவா இருப்பார். தனக்கு ஒரு மருமகளை கொண்டு வராமல் ஓய்வதில்லை என உறுதியாக இருந்தார்.

ஒரு வாரம் பிரச்சனை இல்லாமல் சென்றது. மகனை ரொம்ப படுத்த வேண்டாம் ஒரு வாரம் கேப் விட்டு செய்யலாம் என விட்டுவிட்டார்.

அடுத்த வாரத்தின் மத்தியில் ஒரு நாள் கங்கா அனிவர்த்கு போன் பண்ணி மாப்பிள்ளை பார்க்க பெண் வீட்டார் ஒரு ஹோட்டல் பெயர் சொல்லி அங்கு வந்திருப்பதாகவும் உடனே கிளம்பி வா.. என சொன்னார்.

அனிவர்த் தனது தொழில் துறை மீட்டிங் ஒன்றிற்காக அசோக் கூட காரில் சென்று கொண்டு இருந்தான். அப்போது அனிவர்த் போன்அடிக்க.. பாக்கெட்டில் இருந்து எடுத்தவன் தனது தாய் தான் என தெரிந்ததும் சைலண்ட் மோடில் வைத்துவிட்டான்

அனிவர்த்கு கங்கா எதற்கு அழைக்கிறார் என தெரியும். காலையில அனிவர்த் அலுவலத்துக்கு செல்லும் முன் சாப்பிட வந்தவனிடம் …

“அனிவர்த்…. சாயங்காலம் நாம ஒரு இடத்துக்குபோகனும்… சீக்கிரம் வந்துடு…”என இட்லியை தட்டில் வைத்துசாம்பார் ஊற்றிக் கொண்டே கூறினார்.

உடனே உஷாராகிய அனிவர்த்”எதுக்கு.. எனக்கு ஈவ்னிங் ஒரு மீட்டீங் இருக்கு…”

“எந்த மீட்டிங்கா இருந்தாலும் கேன்சல் பண்ணிடு.. உன்னை மாப்பிள்ள.. பார்கக வராங்க..”

“என்னது மாப்பிள்ள பார்க்க வராங்களா.. எல்லாம் பொண்ணு தான பார்ப்பாங்க…”

“நீ ஒரு பொண்ணப் பார்த்து ஓகே சொல்லி.. கல்யாணம் பண்ண முடியுமானு..எனக்கு தெரியல… அதான் பொண்ணு ஓகே சொன்னா கல்யாணம் தான்..” கங்கா சொல்ல.. சொல்ல..அனிவர்த்கு கோபம் ஏறிக் கொண்டே போனது.

“என் பெர்மிஷன் இல்லாம மேரேஜ் எப்படி பண்ணுவிங்க.. நான் தான் வேணாம்னு சொல்றேன்ல.. புரிஞ்சுக்கவே மாட்டிங்களா..
எப்ப பாரு கல்யாணம்..கல்யாணம் இதை தவிர வேற பேசமாட்டிங்களா..இட்லிய தட்டுல போட்டுட்டு இடியை தலைல போடறிங்க..”

“இனி இட்லிக்கு பதிலா இடியாப்பம் போடறேன்..”

“என்னது..” என ஒரு நிமிடம் புரியாமல் விழித்தான்.

“இட்லிய தட்டுல போட்டு இடியை தலைல போடறே..ஏ..ஏ.. னு சொன்னில்ல..ல..ல.” என இழுக்க..

“அதுக்கு..” என்றான் இன்னும் புரியாமல்..

“இல்ல.. இனி இட்லிக்கு பதிலா.. இடியாப்பம் போடறேன்.. இட்லி மாதிரி இல்லாம இடியாப்பம் சாப்ட்டா இருக்கும்..”

“ச்சே.. உங்ககிட்ட மனுசன் பேசுவானா..”என கோபமாக கத்தி விட்டு சாப்பிடாமல் கிளம்பி சென்றுவிட்டான்.

அதை கண்டு கொள்ளாத கங்கா தட்டில் அரை டஜன் இட்லிகளை வைத்து சாப்பிட ஆரம்பித்தவர் சிதம்ரம் சாப்பிடாமல் தன்னையே பார்ப்பதை பார்த்தவர்….

“என்னை பார்க்காம நல்லா தட்டு நிறையா வச்சு சாப்பிடுங்க.. இந்த வீட்டுக்கு மருமக வரனும்னா இவன்கிட்ட காவடி எடுத்து நடையா நடக்கனும்.. அதுக்கு தெம்பு வேணாம்.. ம்.. நல்லா சாப்பிடுங்க..”

“ஏன் கங்கா கொஞ்சம் விட்டு புடிக்காலாம்ல..”

“ரொம்ப விட்டாச்சுங்க… அதான் புடிக்க முடியாத தூரத்துக்கு போயிட்டான். இனிமே விட்டா நமக்கு அப்புறம் அவனுக்கு குடும்பம்னு ஒன்னு இருக்கவே இருக்காது.. நான் கண்ணை மூடறதுக்குள்ள அவன் குடும்பமா வாழறத பார்த்துடனும்..” என்ற கங்கா கண்களில் சிறு துளி கண்ணீர்…

“கங்கா அழுகறாளா.. என் கங்காவுக்கு அழுக கூட தெரியுமா..” கங்காவின் மனதை மாற்றும் விதமாக சிதம்பரம் சிறு கிண்டலுடன் பேச…

“அதானே கங்கா.. நீ இதுக்கே அழுகளாமா..இன்னும் எவ்வளவு பார்க்க வேண்டி இருக்கு.. செய்ய வேண்டி இருக்கு..” தன்னை தானே தேற்றிக் கொள்ள…

பார்த்து இருந்த சிதம்பரம் கங்காவின் கையை ஆறுதலாக பிடித்து “சாப்பிடு..” என்றார்.கணவரின் ஆறுதலில் இன்னும் கொஞ்சம் திடமாக உணர்ந்தார்.

மீண்டும்.. மீண்டும் கங்கா அழைக்க.. ஒரு கட்டத்தில் வழக்கம்போல் சுவிட்ச்ஆப் பண்ணிவிட்டான். உடனே அசோக் போனையும் அணைத்து வைக்க சொல்லிவிட்டான்.

இரண்டு மணிநேரம் கழித்து மீட்டிங் முடிந்து கார் பார்க்கிங் வந்தான். இவனின் கார் அருகில் கங்கா நின்று கொண்டு இருந்தார்.

அனிவர்த் அம்மாவை பார்த்தவன் இவங்க எங்க இங்க..என பார்த்தவன்.. திரும்பி அசோக்கை பார்த்து முறைத்தான்.

“நோ பாஸ்.. அம்மா தான்..”

தனது அம்மாவை பார்ததவன் “ இங்க எதுக்கு வந்திங்க..”

“நீ வரல.. அதான் நான் வந்துட்டேன்..”

சற்று தள்ளி நின்று இருந்தவர்களை “இங்க வாங்க” என கூப்பிட்டார் கங்கா..

ஒரு இளம்பெண் அந்த பெண்ணின் பெற்றோர் வந்தனர். அவர்களிடம் கங்கா..

“இது தான் என் மகன்.. நல்லா பார்த்துக்குங்க..”

அந்த பெண்ணோ அனிவர்த்தை விடாமல் பார்த்தது மேலிருந்து கீழாக… அந்த பார்வையில் அனிவர்த்கு தான் கூச்சமாகி போனது. அந்த பெண் ரொம்பவே சுமாரான ரகம்.

ஐயோ இது தான் பொண்ணா.. எங்க பாஸ் அழகென்ன.. அறிவென்ன.. அவர் கூட வீக் என்ட்ல பார்ட்டி பண்ண வரவளுகங்க கூட மாடல் ரேஞ்சுக்கு இருப்பாளுக..இந்த கங்காம்மாவுக்கு ஏன் தான் புத்தி இப்படி போகுதோ.. என அசோக்கின் மைண்ட் வாய்ஸ்..

அசோக் நினைப்பது போல தான் அனிவர்த் நல்ல கலராக… அடர்த்தியான அலை அலையாக அவனை போலவே அடங்காமல சிலிர்த்து கிட்டு நிற்கும் கேசம்… பட்டை மீசை.. தினமும உடற்பயற்சி செய்வதால் உறுதியான பரந்த தோள்களை கொண்ட ஆறடி உயர தேகம்… பார்த்தவுடன் யாரையும் ஈர்க்கும் வசீகரமான முகம்.. அதுவும் ஜெர்மன வாசம் அவனை இன்னும் வசீகரனாக்கி இருந்தது.

கங்கா “ பார்த்துட்டிங்கல்ல்.. ஏம்மா உனக்கு என் பையனை பிடிச்சருக்குல்ல…” என கேட்க..

அந்த பொண்ணு எல்லா பக்கமும் தலையை ஆட்டி வைத்தது.

“சரி வாங்க..” என தான் வந்த காரிலேயே அவர்களை கூட்டி கொண்டு சென்றுவிட்டார்.

கங்காவின் செயலை அனிவர்த்தால் ஜீரணிக்க முடியவில்லை. அசோக்கோ என்னடா நடக்குது என முழித்தான். வந்தாங்க.. பார்த்தாங்க.. போயிட்டாங்க.. அந்த பொண்ணு இருக்கற லட்சணத்துக்கு பாஸை பார்த்து போனா போகுது கட்டிங்கற மாதரி மண்டைய ஆட்டுது.. பாஸ்க்கு சம்மதமானு கேட்கல.. போயிட்டாங்க.. கேட்டாலும் இவரு சம்மதிக்க போவதில்லை.. அதான் அதிரடியாக கங்காம்மா களத்துல இறங்கிட்டாங்க போல.. என நினைத்தவாறே நின்று கொண்டு இருந்தவனை அனிவர்த்தின் கார் ஹாரன் சத்தம் கலைக்க..

“இப்ப காருல ஏறியா.. இல்ல உன் டீரிம் எல்லாம் முடிச்சிட்டு கேப்ல வந்துடு..” என அனிவர்த்தின் மிரட்டலில்… அடித்து பிடித்து ஏறினான். அசோக் ஏறியதும் கார் தாறுமாறாக பறந்தது. அன்னை மேல் இருக்கம் கோபத்தை எல்லாம் காரை ஓட்டுவதில் காண்பித்தான்.

அனிவர்த் வீடு வந்தவன் ஒன்றும் தெரியாத சாது போல அமைதியாக உட்கார்ந்து இருந்த கங்காவை பார்த்ததும் தன் கைகளில் இருந்த கார்கீ மொபைல் இரண்டையும் விசிறி அடித்தான். மொபைல் தரையில் சிதறி விழுந்தது.

அவனின் கோபம் கண்டு சிதம்பரம் தான் பதறினார். கங்காவோ அமைதியாக “ வாங்க வந்து படுங்க.. இன்னும் கல்யாண வேலை நிறைய இருக்கு.. நாளைக்கே போய் பாலப்பட்டி ஜோசியர பார்த்து நாள் குறிச்சிட்டு வரனும்..” என சிதம்பரத்தை கூப்பிட..

சிதம்பரமோ மகனையும் மனைவியையும் பார்த்துக் கொண்டே நின்றார்.

“மாம்.. என்னை கட்டாயப்படுத்தி எல்லாம் மேரேஜ் பண்ணி வைக்க முடியாது..”

“கண்டிப்பா உன் கல்யாணம் ஜோசியர் சொல்லற தேதில நடக்கும்.. நடத்தி காட்டுவேன்”

“நான் இருந்தா தான கல்யாணம் பண்ணுவிங்க.. நீங்க இத ஸ்டாப் பண்ணல நான் வீட்டுக்கே வரமாட்டேன்..”

அவன் பேசும் வரை அமைதியாக இருந்த கங்கா எதுவும் சொல்லாமல் தங்கள் அறைக்கு சென்றுவிட…தன் பேச்சில் பயந்து போய்விட்டார் கங்கா.. இத்தோடு கல்யாண பேச்சை விட்டுவிடுவார் என நினைத்தான். அப்படி எல்லாம் விட முடியாது என காலையிலேயே நிருபித்தார் கங்கா

காலையில் அனிவர்த் தனது ஜிம்மில் உடற்பயிற்சி முடித்துக் கொண்டு வந்து சோபாவில் அமர்ந்தவன்…

“மாம் காபி..”

பேப்பர் படித்துக் கொண்டு இருந்தவனிடம்.. “தம்பி காபி “ என வள்ளி நீட்ட..

“அம்மா.. எங்க க்கா..” என கேட்டுக் கொண்டே வாங்கியவன்…

“அம்மாவும் அப்பாவும் பாலப்பட்டி ஜோசியர பார்க்கப் போயிருக்காங்க தம்பி..” சொல்லி விட்டு அவர் சென்று விட..

காபியை குடிக்காமல் வைத்து விட்டு தனது அறைக்கு சென்று குளித்து கிளம்பி சாப்பிடாமலேயே ஆபீஸ்கு கிளம்பிவிட்டான்.

அன்று சென்றவன் தான் இரண்டு நாட்களாகியும் வீட்டிற்கு வரவில்லை. ஜோசியரை பார்த்து விட்டு மாலை தான் வந்தனர். வந்ததும் வள்ளி மூலம் அனிவர்த் சாப்பிடாமல் சென்றதை அறிந்தவர் பெரிதாக கவலை கொள்ளவில்லை அப்போது.. ஆனால் இரண்டு நாட்களாகியும் வீடு வராமல் போகவும் மெல்ல கவலை எட்டிப் பார்த்தது.

ஆடி அசைந்து வரும் தென்றல் – 3 Read More »

என் மோகத் தீயே குளிராதே 9

அத்தியாயம் 9   “அது.. அது வந்து..”    “ப்ச்.. இவளுக்கு இப்ப தான் மேரேஜாச்சு.. திடீர் மேரேஜ்.. சோ, யாரையும் கூப்பிட முடியல..”   “ஹஸ்பெண்ட்..”   “இப்போதைக்கு ரெண்டு பேரும் தனித்தனியா இருக்காங்க.. எப்போ, ஒருத்தருக்கொருத்தர் புரிஞ்சுக்குறாங்களோ.. அப்போ சேர்ந்திருப்பாங்க.. போதுமா? இப்ப வந்த வேலைய பாருங்க.. எப்பப்பாரு தொணத்தொணன்னு..”   “சரி அதை விடுடா.. அவ‌ ஏன் உன் கூட இருக்கா?”   “அவளோட ஜாப் இங்க தான்.. சோ, என் கூட

என் மோகத் தீயே குளிராதே 9 Read More »

error: Content is protected !!
Scroll to Top