ATM Tamil Romantic Novels

8F4BD7E1-38EF-47A3-A4E2-40C72D29E7CD

6 – புயலோடு பூவுக்கென்ன மோகம்

6 – புயலோடு பூவுக்கென்ன மோகம

அன்று பௌர்ணமி… ஏகாந்தமான இரவு வேளை…. மிதமான ஏசி குளிர் அந்த அறையை நிறைத்திருக்க…. வீராவும் நிகிதாவும் தங்கள் சுயக்கட்டுப்பாட்டில் இருவருமே இல்லை.

படுக்கைக்கு வரும்போது சரி வந்த பின்பும் சரி இருவரும் ஒருவரை ஒருவர் இம்மியளவு கூட இடைவெளியின்றி இணைந்து பிணைந்து தான் இருந்தனர்.

வீரா அவள் இதழ் ரச போதையில் நீண்ட நேரம் திளைத்திருக்க..அவள் இதழின் தித்திப்பு எல்லாம் திகட்டி போக.. அவன் உதடுகள் நிகிதாவின் முகமெங்கும் முத்தங்களாக இன்றி இதழ் தீண்டலாக… உலா செல்ல…

அவனின் இதழ் தீண்டல் அவளின் காதல் உணர்வின் முடிச்சுக்களை எல்லாம் மொட்டவிழ்க்க… நிகிதா முதன்முதலாக காதல் என்ற உணர்வுக்குள் இழுத்து செல்லப்பட்டாள் வீராவால்..

பெண்ணவளின் தேகமோ…மலரினும் மெல்லிய தேகம்.. பார்லரின் உபயோகத்தில் மேலும் பட்டு போல வளவளக்க… கண்ணாளனுக்கோ.. மலர் தேக ஸ்பரிசமோ பித்துக் கொள்ள செய்தது

வீரா நிகிதாவை மெல்ல மெல்ல… மிக மிக மென்மையாக…நிதானமாக… பூவை போல… தயங்கி தாங்கி… ஒவ்வொரு அடியாக முன்னேறி அவள் அழகில் திளைத்து… திக்குமுக்காடி… காதலாடி கொண்டாடி தீர்த்தான் தன் இணையை…

ஒவ்வொரு தீண்டலுக்கும் “அமுல் பேபி” “அமுல் பேபி” என கொஞ்சி கொஞ்சியே காரியம் சாதித்து கொண்டான். போதைக்கு அடிமையாக இருந்தாலும் பெண்மையை மென்மையாக தான் கையாண்டான்.அவனின் மென்மையான நிதானமான தொடுகையே…நிகிதாவிற்கு வீராவின் மேல் ஈர்ப்பு கூட காரணமானது.

அவனோ காமத்தின் பிடியில்… இவளோ காதலின் சுவடில்….விடிய விடிய…. மன்மத தேசத்தில் இந்திர விழா அரங்கேறியது.

மன்னவன் தான் சுய நினைவின்றி போதையின் மயக்கத்தில்… மங்கையவளோ சுய நினைவோடே மன்னவனை தாங்கி கொண்டாள்.

காதல் அவளை ஆட்கொண்ட நொடி வீராவின் மேல் அவள் கொண்ட அபத்தம் எல்லாம் பிடித்தமாக மாறின. வீராவின் மேல் கொண்ட வெறுப்பு எல்லாம் விருப்பமாக மாறிய தருணம் அது.

“வீரா” என்று உருகியவளை “மாமா சொல்லுடி அமுல் பேபி” என படுத்தி எடுத்தான். அவளின் “மாமா” என்ற ஒவ்வொரு அழைப்பிற்கும் அவன் அணைப்பின் வேகம் கூடியது.

விடியலின் நெருக்கத்தில் பெண்ணவளை விட்டு நீங்கியவன் அமுல் பேபி அமுல் பேபி என பிதற்றி கொண்டே நிகிதாவை அள்ளி தன் மாரின் மேல் போட்டு அணைத்தவாறே உறங்கி போனான்.

கணவனின் ஆளுமை நிகிதாவின் மனதிற்கு நிறைவாக பூரிப்பாக இருக்க… இது நாள் வரை ஆண் பெண் பேதமின்றி எல்லோரிடமும் விகல்பமில்லாமல் பழகியவளுக்கு… தன் ஆண் தன்னிடம் கொண்ட மோகம் எல்லாம் புதிதாக இருக்க.. பிடித்தும் இருந்தது. அவனோடு ஒன்றி இறுக அணைத்து களைப்போடு உறங்கினாள்.

விடிந்து வெகுநேரம் ஆன போதும் இருவரும் கீழே இறங்கி வராததால் பெரியவர்கள் இருவரும் கவலையுடன் மாடியையே பார்த்து கொண்டு இருந்தனர்.

எப்பவும் நிகிதா நேரம் கழித்து தான் எழுந்து வருவாள். வீரா விடியலில் எழுந்து தனது உடற்பயிற்சி முடித்து குளித்து தயராகி தனது அலுவலை பார்க்க சென்று விடுவான். இன்று அவனும் வராததால் இரவு அவன் எப்போது வந்தான் என்பதும் தெரியாததால் பாட்டி தான் மிகவும் கவலை கொண்டார்.

மங்களம் பாட்டி எப்பவும் வீரா விசயத்தில் மிகவும் கவனமாக இருப்பார். விருப்பமில்லாமல் தான் இங்கு இருக்கிறான்.. எதையும் அவனாக கேட்கமாட்டான்… எனவே அவனுக்கு எந்த ஒரு சவுகரியம் குறைவான.. சங்கடமான நிலை ஏற்படகூடாது என்பதில் தெளிவாக இருந்தார்.

வீரா விழித்து எழுந்த போது வழக்கம் போல நிகிதா அவனை அணைத்து படுத்திருக்க…அவளை பிடித்து தள்ளிவிட்டான். அதில் உறக்கம் கலைந்து எழுந்தவள்.. இருவரின் நிலை கண்டு நாணம் கொண்டு அவசரமாக திரும்பி அமர்ந்து கொண்டாள்.

அப்போது தான் வீராவும் கவனித்தான் இருவரையும்…படுக்கையும்… நடந்ததை ஊகித்தவன் தன் மேலேயே எரிச்சல் கொண்டான்.இரவு என்ன நடந்தது என்று யோசிக்க.. யோசிக்க…தலைவலி மண்டையை பிளக்க ஆரம்பித்தது.

தலையை கையில் தாங்கியவாறு உட்கார்ந்திருந்தவனை கண்ட நிகிதா…அவனின் தலைவலிக்கான காரணம் அறிந்து.. தன் உடையை சரிபடுத்தி கொண்டு கீழே வேகமாக சென்றாள்.

இவர்களின் அறையையே பார்த்து கொண்டு இருந்த பாட்டி நிகிதா வேகமாக இறங்கி வந்து கிச்சனுக்கு செல்வதை பார்த்தவர்.. என்ன என தெரியவில்லையே
பதறி பின்னோடு சென்றார்.

அங்கு நிகிதா லெமன் ஜீஸ் செய்து கொண்டு இருப்பதை கண்டவர்.. புரியாமல்..

“என்ன பண்ணிட்டு இருக்க.. எதுக்கு காலங்கார்த்தால லெமன் ஜீஸ்..”

என்ன சொல்வாள். சொன்னால் அவ்வளவு தான்.. தொலைத்துவிடுவார்கள். செல்ல பேரன் அவனை குடிக்க வைத்தது தெரிந்தால்.. போச்சு வசமாக மாட்டிக் கொண்டேன் என பதட்டத்துடன் நின்றாள்.

“கேட்கிறேன்ல.. சொல்லு” என அதட்டி.. அவள் முகம் பார்க்க… அவளோ பார்வையை தழைத்து கொண்டு எங்கோ பார்த்தாள்.

அவள் முகத்தில் கழுத்தில் சில இடங்களில் வீராவின் பல் தடயங்கள்.. அவளின் உடல்மொழி எல்லாம் வேறு சொல்ல… நடந்தவற்றை ஒருவாறு யூகம் செய்தவர் மேற்கொண்டு அவளை எதுவும் கேளாமல் “சரி போ..”என்றிட..

விட்டால் போதும் என அடித்து பிடித்து ஓடி வந்துவிட்டாள்.வீராவிடம் லெமன் ஜீஸை நீட்ட..என்ன என்பது போல அவளை நிமிர்ந்து பார்த்தான்.

“இல்ல.. உங்களுக்கு கொஞ்சம் ஹேங்ஓவர் ஆகிடுச்சு.. அதான் லெமன் ஜீஸ் எடுத்து வந்தேன்”என தயங்கியவாறு சொல்ல…

சடாரென வேகமாக எழுந்தவன்”ஏன்டி என்னை உசுப்பேத்தி குடிக்க வச்சதும் இல்லாம.. இப்ப லெமன் ஜீஸ் வேற தரீயா…என்ன நெஞ்சழுத்தம்டி உனக்கு..”

அவன் கோபமாக எழுந்த போதே பயத்தில் ஓரடி பின்னால் நகர்ந்தவள் பயத்துடனே..

“இது குடிச்சா… சரி.. ஆகிடும்..” சொல்ல…அவளிடம் இருந்து பிடுங்கி ஒரே மிடறாக குடித்து முடித்தான்.

டிரிங்க்ஸா இருந்தாலும்.. ஜீஸா இருந்தாலும் கல்ப்பா தான் அடிப்பாரா.. என அவனை ஆவென வாயை பிளந்து பார்த்து கொண்டு இருந்தாள்.

குடித்திருந்த ஜீஸ் அவனை கொஞ்சம் தெளிய வைத்திருக்க..நடந்தது எல்லாம் ஓரளவுக்கு நிழலாக அவனுக்கு தெரியப்படுத்த… ச்சே நானா இப்படி இவளை பிடிக்கலைனு சொல்லிட்டு இவகிட்டேயே இப்படி நடந்து இருக்கேனே… என தலையில் அடித்து கொண்டான்…. ஏற்கனவே கோபத்தில் கனன்று கொண்டு இருந்தவனுக்கு அவள் பார்வை மேலும் தூபம் போட…

எல்லாம் இவளால் தானே..இவள் தானே அந்த கருமத்தை வீடு வரைக்கும் கொண்டு வந்தாள். வந்தது மட்டுமில்லாமல் என்னிடம் சண்டை போட்டு என்னையவே குடிக்க வைத்துவிட்டாள் என தன் இயலாமையை எல்லாம் கோபமாக அவள் புறமே திருப்பினான்.

“என்னடி என்னை அப்படி பார்க்கற.. என்னையும் உன்ன மாதிரி குடிகாரனா ஆக்கிடலாம். அப்ப தான் உனக்கு வசதியா இருக்கும்னு பார்க்கறியா…”

“இல்ல.. அப்படி எல்லாம்..” அவளை பேசவிடாமல்..

“இல்லைனா.. எதுக்குடி அதை ரூம் வரைக்கும் எடுத்திட்டு வந்த.. எனக்கு தெரியும் என்கிட்ட சண்டை போட்டதே என்னை குடிக்க வைக்கத் தான..”

ஐயோ கண்டுபிடிச்சிட்டானே.. திரு திருவென முழித்தாள்.

“என்னடி முழிக்கற.. அப்ப எல்லாமே ப்ரீ பிளேனிங்கா தான் செஞ்சிருக்க.. என்னை குடிக்க வச்சு.. என்னை மயக்கி… உன் இஷ்டத்துக்கு என்னை ஆட்டி படைக்க பார்த்திருக்க..”

அடப்பாவி நானாடா உன்னை மயக்கினேன்.. நீ தானடா இங்க வலிக்குதுனு நெஞ்ச தொட்டு புலம்பின.. வலிக்கு ஒத்தடம் கொடுத்தது ஒரு குத்தமாடா என நினைத்து அவனை முறைத்துக் கொண்டு நின்றாள்.

அவளின் முறைப்பு மேலும் கோபத்தை தூண்ட.. நிதானம் இழந்து வார்த்தையை தவறவிட்டான்

“எவ்வளவு திமிரா முறைக்கிற.. என்ன குடிக்க வச்சு.. காரியம் சாதிச்சுகிட்டே இல்ல.. நானும் புத்தி கெட்டு போயி.. உன்னைய தொட்டு இருக்கேன் பாரு.. நினைச்சாவே அருவருப்பா இருக்கு…”என தோளை குலுக்கி கொண்டு சொல்ல…

பங்குனி மாதத்தில் பூக்கும் வேப்பம்பூ சிறியதாக இருந்தாலும் அதன் வாசனை அதிகமாக இருக்கும் அதுபோல பெண்ணவளின் மனதில் பூத்திருந்த காதல் ஒரு இரவில் பூத்ததாக இருந்தாலும்..மனம் முழுவதும் வியாபித்து மணம் பரப்பிக் கொண்டு இருந்தது.

வீராவின் அருவருப்பு என்ற வார்த்தையிலும்… பாவனையிலும் அவளின் மண(ன)ம் நிறைந்த காதல் அடி வாங்கியது.

அவள் கண்களில் கரகரவென கண்ணீர் இறங்கியது. இது நாள் வரை கண்ணீரே அறியாத அவள் கண்கள் வெந்நீரை சிந்தின..

அதையும் நடிப்பு என அவளை சாடினான். “என்னடி நீலி கண்ணீர் வடிக்கற..அழுதா நல்லவனு நம்பிடுவேனா..” என அவளை பிடித்து தள்ளி விட்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.

குளித்து அலுவலகம் செல்ல தயராகி வந்தவன் அவளை திரும்பியும் பாராமல் வேகமாக சென்றுவிட்டான்.

அவன் தள்ளிவிட்டதில் படுக்கையில் குறுக்காக விழுந்தவள் அழுது கொண்டு இருக்க.. அவன் தன்னை பாராமல் சென்றதில் மேலும் அழுகை கூடியது.

வீரா சாப்பிட டைனிங்கிற்கு வரவும் பாட்டி பரிமாற சென்றார். அருகே அமர்ந்து அவனுக்கு பரிமாறியவர் அவனையே கூர்ந்து பார்த்து கொண்டு இருந்தார்.

காலையில் பேத்தியை கவனித்ததில் அவர் மனதில் ஏற்பட்ட சந்தோஷம் வீராவின் முகத்தில் தெரிகிறதா… என பார்க்க.. அவன் முகம் இறுகி கடுகடுப்பாக இருக்க…

என்ன என தெரியாமல்..குழம்பி.. அவனை எதுவும் கேட்டு சங்கடபடுத்தாமல் அமைதியாக அவனுக்கு பரிமாறினார்.

எப்பவும் பெரியவர்களிடம் சொல்லி விட்டு கிளம்புபவன்.. தான் நடந்து கொண்டதை நினைத்து குற்றவுணர்வில் இருந்தவன் சொல்லாமலயே சென்றுவிட…

சொக்கலிங்கம் பேரன் சொல்லாமல் செல்வதை கண்டவர் மங்களத்திடம்

“மங்களா.. என்னாச்சு பேராண்டி சொல்லாம கிளம்பிட்டான். முகமே சரியில்லை..”என கேட்க…

மங்களம் கணவரின் அருகே அமர்ந்து மெல்லிய குரலில் காலையில் பேத்தி வந்ததையும்.. வீராவின் கடுகடுப்பையும் சொல்லி தான் ஓரளவு நடந்ததை கணித்தவர்

“நடந்தது சந்தோஷமான விசயமா இருந்தாலும்.. இருவரும் சந்தோஷமா இல்லை.. என்ன சொல்ல.. புரிஞ்சுகாத புள்ளைகளா இருக்காங்களே..”என சலிப்பாக பெருமூச்சு விட்டார்.

“விடு மங்களா..எல்லாம் சரியாகும்.. வீரா எல்லாம் சரி பண்ணிடுவான்”என சமாதானம் செய்தார் சொக்கலிங்கம். வீராவை தான் சரி பண்ணனும் என அவருக்கு தெரியவில்லை பாவம்.

அழுது கொண்டு இருந்தவள் மதிய உணவுக்கு கூட கீழே இறங்கி வரவில்லை.நிகிதா வராததால் மங்களம் பாட்டி அவளை பார்க்க அவர்கள் அறைக்கு சென்றார்.

நிகிதா அழுதழுது கண்கள் சிவந்து முகம் எல்லாம் வீங்கி ரோஜா நிறத்தில் கன்றி போய் இருக்க.. தேம்பிவாறு குப்புற படுத்திருந்தாள்.

பார்த்ததும் கோபம் தான் வந்தது பாட்டிக்கு.. என்ன பெண் இவள் என…

“ஏய் நிகிதா.. எதுக்கு இப்படி அழுதுகிட்டு இருக்க… எந்திரி முதல்ல..” என்றார் அதிகாரமாக..

எப்பவும் பாட்டியின் அதிகாரத்தில் சிலிர்த்து கொண்டு நிற்பவள்.. எழுந்து அமைதியாக அமர்ந்தாள்.

“என்ன நடந்துச்சுனு இப்படி அழுதுகிட்டு இருக்க…”

“கேட்கறன்ல பதில் சொல்லு”

அதற்கும் அவள் அமைதியாக இருக்க…

இவளுக்கு பிடிக்காமல் பேரன் வலுகட்டாயமாக ஏதாவது செய்து விட்டானா..அப்படி செய்யகூடியவன் இல்லை.என்ன நடந்தது என தெரியலையே இப்படி அழுகறாளே.. எப்படி கேட்பது..என யோசித்தவர்….

“வீரா.. உன்கிட்ட.. உனக்கு பிடிக்காம.. தப்பா நடந்துகிட்டானா..”என தயக்கமாக கேட்க…

இல்லை என தலை அசைத்தாள்.

“அப்புறம் எதுக்கு அழுகற..இப்ப என்ன நடந்துச்சுனு சொல்ல போறியா இல்லையா..” என்று சத்தமிட..

பயத்துடன் தலை குனிந்து ரூபேஷ் ட்ரிங்ஸ் வாங்கி கொடுத்தது.. வீட்டுக்கு கொண்டு வந்தது.. வீராவிடம் வம்பு செய்து அவனை குடிக்க வைத்தது.. என எல்லாம் சொன்னவள்.. அதற்கு மேல் நடந்தவற்றை சொல்ல தயங்கி..

“ம்ம்..அப்புறம் அவங்க.. என்கிட்ட..”

இதை எல்லாம் கேட்ட பாட்டிக்கு கோபம் தாறுமாறாக ஏற..

“ஏய் உனக்கு எவ்வளவு கொழுப்புடி.. அவனை குடிக்க வச்சிருக்க.. குடிச்சிட்டு அவன் தப்பா நடந்துகிட்டானு புகார் வாசிக்கறியா.. உன்னை.. “என அடிக்க கை ஓங்கி கொண்டு போக..

சட்டென அவரை கட்டி கொண்டு “தப்பா எல்லாம் நடந்துக்கல.. எனக்கு பிடிச்சிருக்கு.. மாமாவ எனக்கு பிடிச்சிருக்கு..” என தோள் சாய்ந்து அழுக…

அவள் சொன்னது புரிய ஓரிரு நிமிடங்கள் ஆக… புரிந்ததும் கோபம் போய் அடக்கமாட்டாமல் உல்லாசமாக சிரிக்க…

“கீரேனீ நான அழுதுகிட்டு இருக்கேன்.. நீங்க சிரிக்கறிங்க..”என சிணுங்கினாள்.

“அடியே ராஜாத்தி…இப்ப தான் பார்க்க அழகா இருக்க..” நெட்டி முறித்து திருஷ்டி கழிக்க…

“எது.. நா..அழுது வீங்கி இருக்கறதா..” என பொய் கோபம் கொண்டு முறைக்க..

“அதான் உன் மாமன.. பிடிச்சிருக்குல்ல.. அப்புறம் எதுக்கு அழுகறவ..”

“எனக்கு பிடிச்சிருக்கு..ஆனா மாமா.. என்னை பார்த்து அருவருப்பா இருக்குனு சொல்லி.. தள்ளிவிட்டு போய்டாங்க..” என மீண்டும் தேம்பி கொண்டு அழுக..

“முதல்ல அழுகையை நிறுத்து.. நீ செஞ்ச வேலைக்கு வச்சு கொஞ்சுவானா.. “என திட்டியவர் பின்பு கொஞ்சம் பொறுமையாக..

“நீ செஞ்சது தப்பு தான.. அத நீ தான் சரி பண்ணனும். உனக்கு அவனை பிடிச்சிருக்குனு நீ தான் அவனுக்கு புரிய வைக்கனும்” என சொல்ல..

“புரிஞ்சுப்பாங்களா.. மாமாவுக்கும் என்னை பிடிக்குமா..கீரேனீ” என ஏக்கமாக கேட்க..

“எங்க போயிடறான். எல்லாம் புரிய வைப்போம். நீ மட்டும் நான் சொல்றபடி கேட்டு செய்.. அவன உன் வழிக்கு கொண்டு வந்திடலாம்” என்றார்.

உடனே அவரை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் ஒன்று வைத்து.. “என் செல்ல கீரேனீ” என்றாள்.

அவளின் முத்தத்தில் கூச்சம் கொண்டு “சீ.. எச்சில் பண்ணிகிட்டு.. பாரு படுக்கை எல்லாம் அலங்கோலமா கிடக்கு.. நீயும் எப்படி இருக்க பாரு.. ஆள அனுப்பி வைக்கறேன். எல்லாம் சுத்தம் பண்ண சொல்லிட்டு நீயும் குளிச்சிட்டு ரெடியாகி அவன் மதிய சாப்பாட்டிற்கு வரங்காட்டி வா..”

“புடவை கட்டிட்டு வா..”

எனக்கு சேரி கட்ட தெரியாது கீரேனீ” என்றாள் பயத்துடன்..

“உன்னை சொல்லி குத்தமில்லை.. எல்லாம் உன் அம்மாவ சொல்லனும்.. சரி இனி பேசி என்னாக போகுது.. நல்ல சுடிதாராவது போட்டுகிட்டு வா..” என சொல்லி சென்றார்.

நிகிதாவும் பாட்டி சொன்னது போல குளித்து நல்ல காட்டன் சுடிதார் அணிந்து வழக்கமான மேக்கப் செய்து கீழே சென்று பாட்டியோடு அமர்ந்து வீராவின் வருகைக்காக காத்திருந்தாள்.

ஆனால் வீராவோ இவள் முகம் பார்க்க பிடிக்காமல் உணவை தவிர்த்து வீட்டுக்கு வரவில்லை.

மாயவன் செய்த மாயங்கள் எல்லாம்

மங்கை நெஞ்சை கொள்ளை கொள்ள..

கள்வனாய் உள்ளம் கவர்ந்தது தெரியாமல்..

கள்ளியின் நேசத்தை அறியாமல்..

பேதையை தள்ளி நிறுத்தி எட்டி நின்று

வாட்டி வதைப்பானோ..

இந்த மாய கண்ணன்….

6 – புயலோடு பூவுக்கென்ன மோகம் Read More »

tamil story 1

என்னவளே! எனக்காக பிறந்தவளே!

அஜய் சென்னையில் சாப்ட்வேர் என்ஜினீயர். பாத்துட்டே இருக்கலாம் போன்ற முகம் , குணத்தில் அவன் அம்மாவை போல தங்கம் , மிகவும் திறமைசாலி, ஆனால் கோவக்காரன்.அழகான குடும்பம் – அப்பா ராஜ், அம்மா – மீனா , தங்கை – சரண்யா மற்றும் இவன். அவன் அம்மா தான் அவனுக்கு எல்லாம். அவன் அம்மா மீனுக்கு சின்ன ஹோட்டல் வெக்கணும்னு சின்ன வயசில் இருந்தே ஆசை ஆனால் மிடில் கிளாஸ் பேமிலி சோ ஆசையாவே இருக்கு இன்னும்.

என்னவளே! எனக்காக பிறந்தவளே! Read More »

tamil story 1

என்னவளே! எனக்காக பிறந்தவளே!

அஜய் – திறமையான மற்றும் புத்திசாலியான சாப்ட்வேர் என்ஜினீயர் , படிப்பு, விளையாட்டு, அன்பு, பாசம், கோவம் அனைத்திலும் டாப் ஆனால் சமையல் ரொம்ப ஒர்ஸ்ட். குடும்ப சூழ்நியால் தனது தாயின் ஹோட்டல் பொறுப்பை ஏற்கிறான்.   நிஷா – மாடர்ன் யூடூப் பிளாக்கர். பெரிய வாயாடி, சுட்டி, மற்றும் கோவக்காரி ஆனால் பாசக்காரி.   சமையலே தெரியாத நம்ம ஆளு எப்படி ஹோட்டலை நடத்துவார்? நிஷா அஜய்க்கு யூடூப்பில் பாஸ்டிவ் ரெவியூஸ் குடுத்து உதவுவாளா? அஜய்

என்னவளே! எனக்காக பிறந்தவளே! Read More »

A429FEE1-560B-44DA-BB03-EF84029FDD39

5 – புயலோடு பூவுக்கென்ன மோகம்

5 – புயலோடு பூவுக்கென்ன மோகம்

வீரா மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தான். விருப்பம் இல்லாமல் வலுகட்டாயமாக திணிக்கப்பட்ட வாழ்க்கை. தொழிலும் அவ்வாறே.. அவன் படிப்பிற்கும் வேலைக்கும் சம்மந்தம் இல்லாத தொழில். அதன் அரிச்சுவடி புரியவே அவனுக்கு நாட்கள் எடுத்தது.

இருந்த போதிலும் முயன்று ஈடுபாட்டோடே கற்று கொள்ள முயன்றான். இதுவே அவனுக்கு ஒரு மன அழுத்தத்தை கொடுத்திருக்க…இன்று நடந்த குளறுபடியால் ஏகப்பட்ட டென்ஷன்.

அவனின் மனநிலை புரியாமல் நிகிதா அவனுக்காக காத்திருந்தாள். வீடு வந்து சேர்ந்தவனை அமைதியான யாருமற்ற வரேவேற்பறையே வரவேற்றது.

அந்த வீட்டில் உள்ளவர்கள் தனித்தீவு போல தான் வாழ்ந்தார்கள். எப்பவும் இவனுக்காக பாட்டி காத்திருந்து இவன் வந்து சாப்பிடும் வரை கூட இருந்து கவனிப்பார் தான் ஆனால் இன்று அவன் வழக்கத்தை விட அதிக நேரம் கடந்து வந்திருக்க…

பாட்டியும் வயதின் தள்ளாமை மாத்திரையின் உபயோகம் என உறங்க சென்றிட.. தனியே உணவு உண்ணும் நிலை.

பரிமாற வந்த வேலைக்காரர்களை வேண்டாம் என சொல்லி விட்டு தானே எடுத்து வைத்து சாப்பிட்டான்.

ஊரில் என்றால் அவன் அம்மா அருகில் இருந்து அவன் பசியறிந்து பரிமாறுவார். வேலைக்காக சென்னை வந்த பிறகு வீராவும் அவன் நண்பர்கள் என நான்கு பேர் சேர்ந்து வீடு எடுத்து தங்கியிருந்தனர். முடிந்தால் சமைத்து உண்பர். இல்லை என்றால் வெளியே வாங்கி கொள்வர்.

ஆனால் சமைத்ததோ பார்சல் உணவோ நைட் ஷிப்ட் செல்பவர்களை தவிர மற்றவர்கள் இரவு நேரங்களில் விடுமுறை நாட்களில் கேலியும் கலாட்டாவுமாக பேசிக் கொண்டே சாப்பிடுவர்.

அப்படி இருந்தவனுக்கு இந்த சூழ்நிலை ஒவ்வாமை தான். இந்த ஒவ்வாமை மனதில் ஒரு வெறுமை என அன்று வீரா கொஞ்சம் எரிச்சல் கொஞ்சம் சலிப்பு என அவன் மனம் சற்று நிலை பிறழ்ந்து தான் இருந்தது.

அவன் அறைக்கு வந்து உடை மாற்றி குளியலறை சென்று வரும் வரை சோபாவில் அமர்ந்து அவனையே பார்த்து கொண்டே எப்படி ஆரம்ப்பிப்பது என யோசித்து கொண்டு இருந்தவள் அவன் படுக்க செல்லவும்…

மறைத்து வைத்திருந்த பாட்டிலை எடுத்து வந்தவள் அவனை பார்த்தப்படியே டீப்பாய் மேலே வைத்தாள். அவள் என்னமோ செய்கிறாள் என அவளை சட்டை செய்யாமல் படுக்க சென்றவன் பாட்டிலை பார்த்ததும் அதிர்ந்து விட்டான்.

அவன் பார்க்கும் போதே பாட்டிலை திறந்து கண்ணாடி டம்ளரில் உற்ற… வீராவிற்கோ மேலும் அதிர்ச்சி.

நிகிதா குடிப்பாள் என்று தெரியும். அதுவும் எப்போவதாவது நண்பர்களின் வற்புறுத்தலில் இரண்டு மூன்று தடவை அவ்வளவே..

வீட்டிலேயே இவ்வாறு அதுவும் கல்யாணத்திற்கு பின்பும் செய்வாள் என அவன் எதிர்பார்க்கவில்லை.

அவனின் அதிர்ந்த முகத்தை பார்த்தவாறே அவள் எடுத்து குடிக்க… வேகமாக அவளிடம் வந்தவன்

“என்னடி பண்ணிட்டு இருக்க..”

“பார்த்தா தெரியலையா.. ட்ரிங் பண்றேன்”

“வீட்ல வச்சு குடிக்கிறது இல்லாம… அதை என்கிட்டயே சொல்லற.. என்ன தைரியமடி உனக்கு” என்று கோபமாக பேச..

அவனை கோபப்படுத்தி குடிக்க வைக்க வேண்டும். அவனை தாத்தா பாட்டியிடம் காட்டி பெரிய பேரன்… ஒழுக்கசீலன்… என சொன்னிங்கல்ல பாருங்க…. அந்த நல்லவனை.. என அவன் மதிப்பை கெடுக்க வேண்டும் என எண்ணி செய்து கொண்டு இருந்தாள்.

“குடிப்பேனு தெரிஞ்சு தான கட்டிகிட்ட.. அப்புறம் என்னமோ புதுசா அதிர்ச்சியாகி கத்தற..” என்று எடுத்தெறிந்து பேசினாள்.

பேசியதோடு அல்லாமல் டம்ளரில் உள்ளவற்றை ஒரே மடக்கில் குடித்து முடித்தாள்.

“சொல்லிகிட்டே இருக்கேன்.. குடிக்கிற.. உன்னைய..”என அடிக்க கை ஓங்க..

அவன் முன்னால் திமிறி கொண்டு நின்றவாறே..

“அடிப்பியா.. எங்க அடி.. அடி பார்க்கலாம்” என்க…

“ச்சை உன்னைய அடிச்சா எனக்கு தான் அசிங்கம்”என்றான் முகத்தில் அருவருப்புடன்..

இதுவரை அவளை யாரும் அப்படி சொன்னதோ.. பார்த்ததோ இல்லை வீட்டிலும்… நண்பர்களும் அவளை கொண்டாடி தான் பார்த்திருக்கிறாள்.அதில் மேலும் கோபம் கொண்டவள்

“நான் அசிங்கமா உனக்கு..நீ பெரிய ஆணழகனா.. ரொம்ப நல்லவனா.. நீயும் கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி இருந்தியோ… யாருக்கு தெரியும். நல்லவன் மாதிரி நடிச்சு எல்லோரையும் நம்ப வச்சு ஏமாத்திட்ட..” என்றாள் ஏளனமாக…

அவளின் ஏளனகுரலில் கோபத்தின் உச்சிக்கே சென்றவன்

“ஆமாண்டி நான் ஆணழகன் இல்லை தான் ஆனால் எந்த கெட்ட பழக்கமும் இல்லாத நல்லவன்டி.. நான் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழனும்னு ஆசைப்பட்டேன் தெரியுமா..போயும் போய் உன்னைய என் தலைல கட்டி வச்சிட்டாங்க..”

எப்படிபட்ட மனைவி.. எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ ஆசை கொண்டான் என சொல்ல.. சொல்ல.. நிகிதாவின் கர்வம் திமிர் எல்லாம் அடி வாங்கியது.

“கடைசியில் என் வாழ்க்கை உன்னோடனு சேர்த்து வச்சிட்டாங்க.. எல்லாம் என் தலையெழுத்து” என்றான் வேதனையான குரலில்

எல்லோரும் கொண்டாடும் தன்னை ஒருவன் தலையெழுத்தே என சகிப்பதா..என ஆத்திரம் கொண்டவள்.

மேலும் அவனை உதாசீனப் படுத்தி பேச.. இவன் பதிலுக்கு அவளிடம் மல்லுக்கட்ட…சண்டை வளர்ந்து கொண்டே சென்றது..

ஏற்கனவே ஒரு வித மன அழுத்தத்தில் வந்தவனிடம் நிகிதா பெரிய சண்டையை செய்ய.. மன அழுத்தம் அதிமாகி.. தன்நிலை மறந்து.. தன் குணத்தில் இருந்து தடுமாறி.. தன் பழக்கத்தில் இருந்து தடம் புரண்டு.. எதிரில் இருந்த பாட்டிலை எடுத்து மொத்தமாக வாயில் சரித்தான்.

நிகிதாவோ ஆவென வாயை பிளந்து பார்த்து கொண்டு இருந்தாள். அடப்பாவி என்னைய குடிகாரினு சொல்லிட்டு இவன் பெரிய இவனாட்டம் பேசினான். இப்ப என்னடானா.. மொத்தமா வாயில் ஊத்திக்கிட்டானே.. என அவனை பார்த்து கொண்டு இருந்தாள்.

குடித்து முடித்தவன் பாட்டிலை வேகமாக டீப்பாய் மேல் வைத்தவன்.. சோபாவில் தொப்பென அமர்ந்து தலை மேல் கை வைத்து..

“நானூ..உ..உ.. எப்படீடீ…பட்டவனு.. தெரியுமா… இந்த கருமத்தை. …ஐஐஐ….எல்லாம் மோந்தூ கூட பார்த்ததில்ல… எல்லாம் சகவாச… தோஷம்… உன்னோட சேர்ந்தூ.. நானும் குடிகாரனா…ஆகிட்டேன்”என மேலும் மேலும் ஏதேதோ அழுகையான குரலில் புலம்ப…

நிகிதாவும் குடித்திருந்ததால் லேசான மயக்கத்தில் இருந்தவள் அவன் புலம்பவும் மனது கேளாமல் அவனருகே அமர்ந்து..

“அழுகாத.. வீரா..” என அவன் கையை பிடித்துக்கொண்டு சொல்ல..

“போடி…அழுகாத.. னு.. சொல்ற… இங்க…இங்க… வலிக்குதடீடீ… ரொம்ப…”என தனது நெஞ்சை தொட்டு காட்ட…

“இரு நான் உனக்கு அங்க முத்தா.. வைக்கறேன்.. முத்தா வைச்சா.. வலி.. எல்லாம்.. பறந்து போயிடும்” என கையை விரித்து பறந்து போவது போல சைகை செய்ய…

“ம்ம்ம்… அப்படியா… சொல்ற… அப்ப… முத்தா …வை..”

அரை மயக்கத்தில் நிகிதாவும் முழு போதையில் வீராவும் சுய நினைவின்றி இரண்டும் பிதற்றி கொண்டு இருந்தன.

வீராவின் அருகே நெருங்கி அமர்ந்து தன் மொத்த உடலையும் அவன் மேலே உரசியவாறு.. அவன் போட்டு இருந்த உள் பனியன் மேலேயே முத்தம் கொடுக்க…

“இப்ப சரியா போச்சா…வலி எல்லாம் போச்சா..” என அவன் முகம் பார்த்து கேட்க…

சிறு குழந்தையாக உதட்டை பிதுக்கி கொண்டு “நீயி… பொய் சொல்லற… என்ன..ஆ…ஏமாத்தற…”

“இல்ல…நா.. கொடுத்தே…இரு..மறுபடியும் தரேன்..” என அவனை இன்னும் நெருங்கி முத்தம் கொடுக்க போனவள் தாடையில் தன் ஆள்காட்டி விரலால் தட்டி யோசித்தவாறே…

“வீரா..ரா..இந்த பனியன கழட்டிடூ…இது மேல கொடுத்தேனா ஆ.. அதான் உனக்கு ஒன்னுமே தெரியல..”

“ஆங்..அப்படியா..சொல்ற..”என சாதுவாக அவன் கேட்க.. ஆமாம் என இவளும் அப்பாவியாக தலையை ஆட்ட..

பரபரவென பனியனை கழட்டி எறிந்தான்.

“இப்ப.. கொடு..”

நிகிதா கண்களை சுருக்கி உதட்டை குவித்து அவன் நெஞ்சில் அழுத்தமான முத்தம் ஒன்று வைக்க….

அந்த முத்தத்தின் குளிர்ச்சி அவன் நெஞ்சில் இருந்து உடல் முழுவதும் பரவி அவன் உடல் ஒரு நொடி சிலிர்த்து அடங்கியது.

“ம்ஹா..” கண்மூடி அதை அனுபவித்தான். அவனின் செய்கை இவளை மேலும் தூண்டிவிட.. அவன் நெஞ்சமெங்கும் குட்டி முத்தங்கள் வைத்தாள்.

வீரா குடும்பத்திற்கு கட்டுப்பட்டவன். இது வரை எந்த பெண்ணையும் காதல் என்ற பார்வையில் பார்த்ததில்லை.. விடலை பருவத்தில் பெண்களை சைட் அடித்திருக்கிறான். ஆனால் தனது தந்தையின் உழைப்பை பார்த்து வளர்ந்தவன் சிறு வயதில் இருந்தே பொறுப்பானவன் தான்.

எனவே தனது கல்யாணம் பெற்றவர்கள் பொறுப்பு என சுயக்கட்டுப்பாடோடு இருந்தவன் அதனால் தான் பிடிக்காமல் போனாலும் பெற்றவர்கள் தேர்வு நிகிதா எனவும் மறு பேச்சின்றி தாலி கட்டினான்.

இன்று அவளின் முத்தம்… அவன் வாழ்வில் முதல் முறையாக ஒரு பெண்ணின் முத்தம்… அவனின் காதல் உணர்வுகளை தட்டி எழுப்ப…

அந்த முத்தம் தன் உடலெங்கும் வேண்டும் என்ற வேட்கையை தூண்ட.. அவளை காதல் மிகுந்த ஏக்கப் பார்வையோடு பார்த்தவன்.. இங்கு இங்கு என நெஞ்சில் இருந்து மேல் நோக்கி கழுத்து கன்னம் என தன் சுட்டுவிரல் கொண்டு தொட்டு காண்பிக்க…

நிகிதாவிற்கும் ஆண் நண்பர்கள் உண்டு தான். அவளுக்கு நட்பில் ஆண் பெண் பேதம் கிடையாது.எல்லோரிடமும் விகல்பமில்லாமல் தான் பழகுவாள்.

வீட்டில் கிடைக்காத அன்பை வெளியில் தேடிய பொழுது அமைந்த நண்பர்கள் அவர்கள். எல்லாம் மேல் வர்க்க பிள்ளைகள். அவர்களை பொறுத்தவரை குடிப்பது தவறில்லை. சிறு வயதிலேயே வீட்டில் பார்ட்டிகளில் பார்த்து வளர்ந்தவர்கள். அவர்களின் போதனைகள் தான் நிகிதாவின் இந்த பழக்கம். இது வரைக்கும் அவளுக்கும் காதல் உணர்வுகள் யாரிடமும் தோன்றியதில்லை.

வீரா தன் சுட்டுவிரலால் ஒவ்வொரு இடமாக கழுத்து கன்னம் என சுட்டிக் காட்ட.. அவள் குட்டி குட்டி ஐஸ் முத்தங்களை வைக்க.. ஒவ்வொரு முத்தத்திற்கும் ஹா.. என தலையை உயர்த்தி சிலிர்த்து அடங்கினான். முத்தத்திற்கே இப்படியாடா.. மொத்தமும் அவள் கொடுத்தால்.. என்னாவியோ….

இறுதியாக அவனின் உதட்டில் தட்ட.. ஒரு நொடி யோசித்தாள். மறு நொடி அவன் உதட்டில் ஒரு சில் முத்தத்தை வைத்து விலக… விலக எத்தனித்த… நொடிக்கும் குறைவான நேரத்தில் அவள் இதழை தன் இதழால் மடக்கி இழுத்து சுவைக்க… அவன் பருகிய பழ ரசத்தால் உண்டான போதையை விட இவளின் இதழ் ரசம் தந்த போதை அவனின் உச்சி மண்டை வரை சுரீரென கிறு கிறுக்க வைக்க..

அடுத்து முத்தத்தை எல்லாம் அவன் கைவசமாக்கி கொண்டான். அவள் நெஞ்சில் இருந்து உதடு வரை கொடுத்ததை … இவன் உதட்டிலிருந்து கீழ் நோக்கி முத்த தடம் பதிக்க… நிகிதாவிற்கும் ஒரு பரவச உணர்வு ..அவளுக்கு இந்த புது வித உணர்வு பிடித்திருக்க…அவனோட ஆன நெருக்கத்தை இன்னும் அதிகப் படுத்தினாள்.

இருவரும் ஏப்பொழுது சோபாவில் இருந்து படுக்கைக்கு இடம் பெயர்ந்தார்கள் என்று அவர்களே அறியவில்லை.

இருவருமே சுய நினைவில் இல்லை. அவர்களை அறியாமல் உள்ளத்தால் அன்றி உடலால் நெருங்கியவர்கள் மேற் கொண்டு என்ன செய்ய போகிறார்கள்…?

5 – புயலோடு பூவுக்கென்ன மோகம் Read More »

5697C917-9D02-4D18-9A75-F502FF13CB26

4 – புயலோடு பூவுக்கென்ன மோகம்

4 – புயலோடு பூவுக்கென்ன மோகம்

காலையில் எப்பவும் விடியலுக்கு முன்பு எழும் பழக்கம் உள்ளவன் என்பதால் தன் வழக்கமான நேரத்திற்ககு விழித்தவன் தன்னை அணைத்து படுத்திருக்கும் நிகிதாவை பார்த்ததும் இரவு நடந்தது ஞாபகம் வர மெல்ல தலையை தூக்கி அவள் கன்னத்தை பார்த்தான்.

நிகிதாவின் தேகமோ ரோஜாப்பூ போன்று மென்மையான தேகம். எந்த வேலையும் செய்யாமல் வெயில் படாமல் பட்டு போன்று வழுவழுப்பான தேகம். இவனுக்கோ படிக்கும் காலத்திலும் சென்னைக்கு வேலைக்கு வந்த சமயங்களில் ஊருக்கு செல்லும் காலத்திலும் ஓய்வாக இருக்கும் போது தன் தந்தைக்கு உதவியாக பட்டு கைத்தறி நெய்ய சென்று விடுவான்.

அதனால் அவன் கை சற்று காய்ப்பு காய்ந்து இருக்கும். அவனின் முரட்டு கைகளால் அறைந்திருக்க.. அவள் ரோஜா நிறம் கன்னம் மேலும் சிவந்து கன்னி போய் லேசாக வீங்கி இருந்தது.

அவள் கன்னத்தின் கன்றலை பார்த்தவனுக்கு மனதில் ஒரு வலி. மெல்ல கன்னத்தை வருடி கொடுத்து

“ஏன்டி எனக்கு கோபம் வர மாதிரி நடந்துக்கிற.. நான் தான் மரியாதை இல்லாம பேசாதேனு சொல்லறன்ல கேட்காம இப்படி பண்றயே..” என மிக மெல்லிய குரலில் அவளுக்கு கேட்காதவாறு சொல்லிவிட்டு… அவள் தூக்கம் கலையாதவாறு தன் நெஞ்சில் இருந்து தலையணைக்கு அவளை இடம் மாற்றி விட்டு… வெளியே சென்றான்.

அந்த அதிகாலை வேளையிலேயே வீடு பரப்பரப்பாக இருந்தது. அன்று அசைவ விருந்து.ஞாயிறு விடுமுறை வேறு.

வீரா கொல்லைப்புறம் கிணற்றடியில் பல் விளக்கி கொண்டு இருக்க…. அங்கு வந்த ஆரா “மாமா குளத்துக்கு போலாமா..” என கேட்க..

“போலாமே..”என்றான். சின்ன பெண் எவ்வளவு அழகாக தங்களோடு பொருந்தி போகிறாள். இவளும் இருக்காளே என மனைவியை மனதுள் வசை பாடினான்.

விசாலா கொடுத்த காபியை குடித்து விட்டு இருவரும் குளத்திற்கு சென்று விட..

வீரா வீடு வருவதற்குள் நிகிதா அவன் மேல் ஒரு பெரிய பஞ்சாயத்தே வைத்திருந்தாள்.

வீரா சென்ற சிறிது நேரத்தில் நிகிதா எழுந்துவிட்டாளா.. என விசாலா சென்று பார்க்க..

நிகிதா வீராவின் தலையணையை கட்டி பிடித்து உறங்கி கொண்டு இருந்தாள். சிறு பிள்ளையென உறங்குபவளை கண்டு புன்னகையுடன் அருகில் சென்றவர் அவளின் கன்னத்தைப் பார்த்து அதிர்ச்சியாகிவிட்டார்.

இருவருக்கும் பிடிக்காத கட்டாய கல்யாணம் தான் இருந்த போதும் கல்யாணமாகி ஓரிரு தினங்களே கடந்த நிலையில் இதை அவர் எதிர்பார்க்கவில்லை.

தன் மகனே ஆனாலும் மனைவியை அடித்தது பிடிக்கவில்லை. அய்யாவு இத்தனை ஆண்டுகளில் எப்போதாவது கோபப்படுவாரே தவிர அடித்தது எல்லாம் இல்லை. விசாலா அய்யாவு இருவருக்கும் ஒத்த எண்ணங்களே… அதனால் இவர்களிடையே பெரிய கருத்து வேறுபாடு இருந்ததில்லை.

விசாலாவிற்கு மகனின் செயலில் மிகவும் வருத்தம். மெல்ல நிகிதாவின் அருகில் அமர்ந்து அவளின் கன்னத்தை நீவிக் கொடுக்க…

அந்த மெல்லிய ஸ்பரிசம் கூட வலியை தவிர..

“ஷ்ஷ்..ஷ்.. வலிக்குது” என நிகிதா விசாலாவின் கையை தட்டி விட..

“வலிக்குதா.. நிகிதா கண்ணு..” என தலையை கோதியவாறே கேட்க…

ஏற்கனவே விசாலா கன்னத்தை நீவும் போதே.. தூக்கம் கலைந்தவள் விசாலாவின் கேள்வியில் முழுதாக விழிப்பு வந்திட.. எழுந்து அமர்ந்து விசாலாவை பார்த்து..

“வீரா அடிச்சிட்டான்.. அத்தை..” என உதட்டை பிதுக்கி சொல்ல..

“புருஷனுல்ல.. அப்படி மரியாதை இல்லாம பேசகூடாது தங்கம்”என்று கனிவாக சொல்ல..

மகளும் பேத்தியும் என்ன பேசுகிறார்கள் என பார்க்க வந்த மங்களத்திற்கு பேத்தியின் கன்னத்தை பார்த்ததும் புரிந்து விட்டது. இவ ஏதோ வில்லங்கமா பேசியிருப்பா.. அதான் செவுட்லயே ஒன்னுவிட்டுட்டான் போல..

“பாருங்கம்மா உங்க பேரன.. எப்படி அடிச்சிருக்கான்.. புள்ள கன்னமே வீங்கி போச்சு..”

“இவ என்ன பண்ணி வச்சாளோ..”

“எதுவா தான் இருக்கட்டும்.. அதுக்கு அடிக்கிறதா..” என்றவாறே சொக்கலிங்கமும் வந்துவிட…

தாத்தாவா நமக்கு சப்போர்ட் பண்ணுவது என நம்பாமல் பார்த்தவள்.. ஏற்கனவே விசாலாவின் பரிவான பேச்சில் சோகம் போல முகத்தை வைத்திருந்தவள்.. இப்போதும் இன்னும் சோகமாக அடிவாங்கிய குழந்தையாக முகத்தை வைத்து கொண்டாள்.

சொக்கலிங்கத்தின் சத்தத்தில் அய்யாவு வெங்கட் ரோகிணி என எல்லோரும் அங்கு வந்திட.. வெங்கட் ரோகிணி இருவரும் மகளை பார்த்ததும் மன வருத்தப்பட.. அதிலும் ரோகிணிக்கு கண்களில் நீர் திரண்டிட ..

விசாலா அய்யாவு இருவருக்கும் தர்ம சங்கடமான நிலை. நிலைமையை சமாளிக்கும் பொருட்டு மங்களம் தான்நிகிதாவிடம்

“ம்ம் சரி சரி போ.. போய் முகம் கழுவிட்டு வா.. விசாலா அவளுக்கு ஏதாவது குடிக்க கொண்டு வா..”

தாத்தாவோ..”அவன் வரட்டும் நான் கேட்கிறேன் ராஜாத்தி.. நீ போ ஏதாவது குடி” என்று சொல்லிவிட்டு சென்றார்.

“ரொம்ப வலிக்குதா பேபி ஐஸ் க்யூப் வைக்கவா..”என ரோகிணி கேட்க..
எல்லோரும் தாங்கவும் இரு.. இரு.. என்னைய அடிச்சில்ல..உனக்கு இருக்கு எல்லார்கிட்டயும் என மனதுக்குள் குதூகலமாக எள்ளி நகையாடினாள்.

வீரா வீட்டிற்கு வரும் போது எல்லோரும் இவனை கோபமா வருத்தமா என சொல்லமுடியாத பாவனையில் பார்க்க..

அட என்னங்கடா இது எல்லோரும் என்னை இப்படி பார்க்கறாங்க..என யோசித்து கொண்டு நிற்க..

விசாலாவோ மருமகள் வழக்கமாக குடிக்கும் ஹெல்த் ட்ரிங்க்ஸை அருகில் அமர்ந்து மெதுவாக அவளுக்கு புகட்டி கொண்டு இருந்தார்.

அதை பார்த்தவனோ இவ ஏதோ சீன் கிரியேட் பண்ணிட்டா.. என நினைத்து பல்லை கடித்து கோபத்தை அடக்கினான்.

தாத்தா “வீரா.. என்ன தான் கோபமாக இருந்தாலும்.. பொம்பள புள்ளய கை நீட்டி அடிக்ககூடாது. தப்பு ய்யா..” என்றார் கண்டனத்துடன்..

அய்யாவு “நீ இப்படி செய்வேனு எதிர்பார்க்கல ய்யா”என்று சொல்லி விட்டு எழுந்து சென்றுவிட..

வெங்கட் வீரா அருகே வந்து அவனின் கைகளை பிடித்து கொண்டு “மாப்ளே.. எத்தன கோபமா இருந்தாலும் நாலு வார்த்தை சேர்த்து வேணாலும் திட்டு.. அடிக்காத.. செல்லமா வளர்த்த பொண்ணு பார்க்கவே மனசு ரொம்ப வலிக்குது”

ஏற்கனவே அடித்து விட்டோமே என்ற குற்ற உணர்ச்சியில் இருந்தவன் பெரியவர்களின் பேச்சில் மனம் குன்ற … தலை குனிந்து கொண்டான்.

“சாரி மாமா.. இனி இது போல நடக்காது” என சொல்லிவிட்டு தனது அறைக்கு செல்ல..

நிகிதாவை குடிக்க வைத்துவிட்டு வெளியே வந்த விசாலா தன் பங்கிற்கு..

“பாவம் புள்ள..இனி இப்படி பண்ணாத ராசா.” என சொல்லி செல்ல..

உள்ளே சென்றவன் அவளை பார்த்து எல்லாம் இவளால வந்தது என கோபமாக பார்க்க..

எல்லோரும் அவனை திட்டிய குஷியில் நிகிதாவோ உதட்டை சுழித்து நாக்கை மடித்து அவனுக்கு பழிப்பு காட்டினாள்.

அதில் மேலும் கடுப்பானவன் “போடி” என சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியே சென்றுவிட்டான்.

விசாலா நிகிதாவிற்கு என்ன பிடிக்கும் என்ன எப்படி சாப்பிடுவாள் என அவளிடமே கேட்டு முன்தினமே அய்யாவிடம் சொல்லி வாங்கி வைத்தார்.

நிகிதாவிற்காக தனியாக அவளுக்கு பிடித்த மாதிரி சமைக்கவும் செய்தார். இது எல்லாம் நிகிதாவிற்கு விசாலாவை பிடித்து விட அத்த.. அத்த.. சலுகை கொண்டாடினாள்.

விசாலாவும் மருமகள் தன்னிடம் இழையவும் தாங்கினார்.வீராவோ என்னமா நடிக்கிறா.. இவ நடிப்புல எங்க அம்மா கவுந்திடுச்சே என பொருமினான்.

இப்படியாக அன்று விருந்தை முடித்து கொண்டு.. இரவே சென்னை திரும்பினர்.

அடுத்த நாளில் இருந்து வீரா வெங்கட்டோடு பேக்டரிக்கு செல்ல ஆரம்பித்தான். வெங்கட்டின் தொழிற்சாலை கார் லாரி பஸ் போன்றவை தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சில உபரி பாகங்களை தயாரித்து கொடுப்பது ..

வீராவின் படிப்பு வேலை எல்லாம் ஐடி துறை . அவனுக்கு இந்த தொழிலை புரிந்து கொள்ளவே மிகவும் சிரமப்பட்டான். வெங்கட் சொல்லி கொடுப்பதை வைத்தும் தன் சுய முயற்ச்சியிலும் முயன்று கற்றுக்கொள்ள.. அவனுடைய சிந்தனை நேரம் எல்லாம் அதிலேயே செலவிட..

நிகிதாவிற்கும் வீராவிற்கும் இடையே சாதரண பேச்சுகளோ.. ஏன் சண்டை கூட இல்லை. காலேஜ் ப்ரண்ட்ஸ் என சுற்றி கொண்டு இருந்தவளுக்கு வீட்டில் தனிமை மிகவும் சிரமாக இருந்தது.

திருமணத்திற்கு வந்த நண்பர்களை மறுபடியும் சந்திக்காததால் இவளே அவர்களுக்கு போன் செய்து பேசினாள்.அவர்கள் இவளை வெளியே போகலாம் வா என வற்புறுத்த.. பாட்டிக்கு பயந்து மறுத்து கொண்டு இருந்தாள்.

ஒரு வாரம் அவர்களிடம் மறுத்து கொண்டு இருந்தவளிற்கு போனால் என்ன என்று தோன்றிவிட.. எப்படி வீட்லயே முடங்கி இருப்பது போரிங் என நினைத்தவள் வெளியே செல்லலாம் என முடிவு எடுத்து வருவதாக நண்பர்களிடமும் சொல்லிவிட்டாள்.

ஆனால் வீட்டில் என்ன சொல்லி செல்வது என யோசனை. பாட்டிக்கு தான் மிகவும் பயந்தாள். ஓல்டி எப்படியும் கண்டுபிடிச்சிடுமே என யோசித்தாள்.

எப்படியோ ஷாப்பிங் போறேன் தனக்கு சில பொருட்கள் வாங்க வேண்டும் என சொல்லி சமாளித்து சென்றாள். கல்யாணம் ஆகிவிட்டது எதுனாலும் வீரா பார்த்து கொள்வான் என தாத்தாவும் பாட்டியும் ஒன்றும் சொல்லவில்லை.

இதையே தினமும் வழக்கமாக்கி கொள்ள.. அவளும் எந்த வம்பும் இன்றி நேரமாகவே வீடு வந்திட.. இவர்களும் அனுமதித்தனர்.

பேக்டரி வேலை என வீரா அவன் போக்கிலும்.. நிகிதா நண்பர்களோடு வெளியே செல்வது அரட்டை என இவள் போக்கிலும் இவர்கள் வாழ்க்கை எண்ணெய்யும் தண்ணியும் போல ஒட்டாமல் சென்று கொண்டு இருந்தது.

வார இறுதி நாட்களில் மாலையில் பப்பிற்கு சென்று இரவு வரை கும்மாளம் போடுவது நண்பர்களின் வழக்கம். வார இறுதி நாட்களும் வந்திட.. நண்பர்கள் பப்பிற்கு வற்புறுத்த.. அவள் வீட்டில் சொல்ல மிகவும் பயந்தாள்.

அன்றும் வழக்கம் போல ஷாப்பிங் செல்வதாக கூற.. பாட்டியோ..

“தினமும் என்ன ஷாப்பிங்.. காசு இருந்தா இஷ்டப்படி செலவு செய்யனுமா… தேவையில்லாம ஆடம்பர செலவு பண்றத முதல்ல நிறுத்து..” என திட்ட..

அச்சோ இப்ப என்ன சொல்லி சமாளிக்கறது என அவசர ஆலோசனை நடத்தினாள் மனதினுள்..

ஹாங் இப்படி சொன்னா பர்மிஷன் வாங்கிடலாம் என திட்டமிட்டு

“இல்ல பாட்டி வீராவுக்கு கொஞ்சம் டிரஸ் பர்சேஸ் பண்ணலாம்னு…”என இழுக்க..

புருஷனுக்கு வாங்க போகிறாள் என்றதும் மகிழ்ந்தனர் பெரியவர்கள்.

அந்த சந்தோஷத்திலேயே “நிகிதா கண்ணு புருஷன பேர் சொல்லி கூப்பிட கூடாதுடா..”என தன்மையாக சொல்ல..

சாதுவாக தலையாட்டிக் கொண்டாள்.

“சரி.. சரி.. போயிட்டு வா..” என்றதும் சிட்டாக பறந்துவிட்டாள்.

வீட்டில் டிரைவரோடு கார் இருந்தாலும் அதிகம் இவளை நண்பர்கள் யாராவது பிக்அப் செய்வது தான் வழக்கம். அன்று ரூபேஷ் வந்திருக்க..

ரூபேஷை கண்டால் பெரியவர்களுக்கு ஆகாது.அவன் நல்ல பையன் இல்லை என்பது அவர்களின் கருத்து. எங்கே தெரிந்தால் வேண்டாம் என சொல்லிவிடுவார்களோ என கேட்டிற்கு வெளியேவே நிற்க சொல்லி ஏறிக் கொண்டாள்.

பப்பில் எல்லாம் ஒன்று கூடினர். ரூபேஷ் எல்லோருக்கும் தேவையான ட்ரிங்ஸ் ஆர்டர் செய்ய.. நிகிதா தனக்கு எதுவும் வேணாம் என சொன்னாள்.

ரூபேஷ் “ஏன் நிக்கி.. வேணாம்னு சொல்ற.. ஒரு ஸ்மால் எடுத்துக்க.. பேபி..”

“வேணான்டா..வீட்ல திட்டுவாங்க..”

தனுஷாவோ”எப்பவும் திட்டறது தானடி.. புதுசா என்ன..”

சொல்லமுடியாமல் வேணாம் என மறுக்க…

ரூபேஷ்”நிக்கி பேபி.. ஏதோ மறைக்கற… என்னன்னு சொல்லு”

“ஒன்னுமில்லடா”

“மேரேஜ்கு அப்புறம் உன்கிட்ட நிறைய சேஞ்சஸ் தெரியுது பேபி.. எப்பவும் எதையும் எங்ககிட்ட தான் ஷேர் பண்ணிக்குவ..இப்ப ஏன் மறைக்கிற..”

எங்கோ பார்த்தவாறு கண்களில் நீர் திரள..
“என்னை அவன் அடிச்சிட்டான்டா..”

“என்ன பேபி சொல்ற..”

நண்பர்களும் பதறி போய் கேட்க நடந்தவற்றை சொன்னாள்.

“என்னடி சொல்ற.. இதற்கா அடிச்சான்..சுத்த பட்டிக்காடா இருப்பான் போல..” என்றாள் தனுஷா..

ரூபேஷோ”நிக்கி அவன் ஐடி பீல்ட் தானா.. ஐடி பீல்ட்ல இருந்துட்டு லிக்கர் எடுக்காம இருக்கமுடியாது.சம்திங் ராங்.. ஐ திங் .. அவன் பொய் சொல்லி நடிக்கிறானு நினைக்கிறேன்”

இவளோ அப்படியும் இருக்குமோ என அவனின் பேச்சை நம்பி”அப்படியா சொல்ற ரூப்.. ஆனா அவன பார்த்தா அப்படி தெரியலடா..”

“எதுக்கு சந்தேகம் இன்னைக்கு டெஸ்ட் பண்ணி பார்த்துடலாம் விடு..” என ரூபேஷ் சொல்ல..

அவனின் பேச்சை நண்பர்கள் அனைவரும் ஆமோதிக்க.. ரூபேஷ் திட்டம் தீட்ட அதை கேட்ட நிகிதாவுக்கோ உதறல் எடுத்தது.

“டேய் ரூப் வீட்டுக்கு எல்லாம் எடுத்து போகமுடியாது. வீட்ல தெரிஞ்சா கொன்னே போட்ருவாங்க..”

அதற்குள் இவர்கள் ஆர்டர் செய்த ட்ரிங்ஸ் வந்திட.. நிகிதாவுக்கு மட்டும் லைட்டா ரம் கலந்த மொஜீட்டோ வாங்கி கொடுக்க.. எப்பவும் போல நண்பர்களின் பேச்சிற்கு இணங்கி அவர்களோடு சேர்ந்து கொண்டாள்.

வெகு நேரம் பேசி மகிழ்ந்து கொண்டாடி விட்டு கிளம்பினர். போகும் போது மறக்காமல் தான் ஆர்டர் செய்த பார்சலை வாங்கி கொண்டு நிகிதாவோடு கிளம்பினான்.

நிகிதாவை வீட்டில் வாசலில் இறக்கி விட்டு பார்சலை கையில் கொடுத்து

“பேபி அவன எப்படியாவது இதை குடிக்க வச்சிடு.. அவன் ஆக்டிங் தெரிஞ்சிடும். இதை வைத்தே அவனை துரத்தி விட்டுடலாம்”என சொல்ல..

பயத்தில் கைகள் நடுக்க.. அதை வாங்கி கொண்டு உள்ளே வந்தாள். தாத்தா பாட்டி இருவரும் சோபாவில் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்க..

அவர்களைப் பார்த்தும் இவளுக்கோ பயத்தில் வியர்த்து கைகால் எல்லாம் உதறல் எடுக்க ஆரம்பித்து விட்டது.

பாட்டி தான் இவளை கவனித்துவிட்டு “வாம்மா.. நிகிதா.. வீராவுக்கு ஏதோ வாங்கனும் சொன்னயே.. வாங்கிட்டயா.. என்ன வாங்கின காமி..”

நிகிதாவுக்கோ பயம் அதிகமாகி மயக்கம் வருவது போல ஆகிவிட..

தாத்தாவோ”சின்ன சிறுசுக.. ஏதோ புருஷனுக்கு ஆசையா வாங்கி இருப்பா.. அதை போய் காமிக்க சொல்ற..நீ போடாமா..” காப்பாற்றி விட

“நிகிதா சாப்பிட்டு போ” என்ற பாட்டியிடம் “நான் சாப்பிட்டேன் கிரேனீ என சொல்லி விட்டு நிற்காமல் தங்கள் அறைக்கு ஓடிவிட்டாள்.

நிகிதா எப்படி வீராவை குடிக்க வைப்பதென யோசித்து கொண்டு இருக்க… இவளின் திட்டம் அறியாமல் அன்று பேக்டரியில் வீரா தெரியாமல் செய்த சிறு பிழை அக்கௌண்ட்ஸ்ல பெரிய குளறுபடி ஆகிவிட..வெங்கட்டோடு சேர்ந்து அதை கண்டு பிடித்து சரி செய்வதற்குள் ரொம்ப டென்ஷன் ஆகிவிட்டான்.

சரி செய்துவிட்டாலும் இவனுக்கு அது ஒரு மன உளைச்சலை கொடுத்து இருக்க.. அது குறையாமலேயே வீடு வந்து சேர்ந்தான்.

நிகிதாவின் செயலால்.. நிகிதா வீரா இவர்களுக்கு இடையே அடுத்து என்ன நடக்குமோ…. நிகிதா மீண்டும் மீண்டும் தவறு செய்ய.. பிரச்சினை பெரிதாகி பெரியவர்கள் வரை செல்லுமோ..?

4 – புயலோடு பூவுக்கென்ன மோகம் Read More »

A55E16EC-6F10-471D-B2EE-56992E98002D

3 – புயலோடு பூவுக்கென்ன மோகம்

3 – புயலோடு பூவுக்கென்ன மோகம்

சென்னையில் நிகிதா வீட்டில் விருந்து முடிந்து காஞ்சிபுரம் தாமரையூர் சென்றனர் வீரா நிகிதா தம்பதியர்.

அங்கு இரண்டு நாள் விருந்து. குடும்பமே கிளம்பி இருந்தனர். வீடு மிக எளிமையான கான்கிரீட் வீடு தான். இரண்டு படுக்கையறை சின்ன சமயலறை ஒரு ஹால் முன்னால் கொஞ்சம் வாசல். பின்புறம் கிணறு பாத்ரூம் சிறிய தோட்டம் என இருந்தது.

சொக்கலிங்கத்திற்கு பக்கத்து ஊர் தான். அங்கு அவருக்கு வீடு நிலபுலன் எல்லாம் உண்டு. வெங்கட் சில வருடங்களுக்கு முன்பு தான் ஓட்டு வீட்டை இடித்து நவீன வசதிகளோடு கூடிய இரண்டு அடுக்கு வீடாக கட்டியிருந்தார்.

இருந்த போதும் அனைவரும் வீரா வீட்டிலேயே தங்கிக் கொள்ளலாம் என முடிவு செய்து கிளம்பி வந்திருந்தனர்.

அய்யாவுக்கு தான் அவர்களுக்கு வசதி போதுமா என்று பெரிய கவலை. ஆனால் விசாலாவிற்கு தன் தம்பி வெகு வருடங்களுக்கு பிறகு குடும்பத்தோடு தன் வீட்டிற்கு வந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.

நிகிதாவிற்கு அந்த வீட்டை பார்த்ததும் பிடிக்கவில்லை. அவளால் அங்கு இருக்க முடியவில்லை. அட்டாச்டு பாத்ரூம் இல்லை. வெஸ்டர்ன் டாய்லெட் இல்லை. ஏசி இல்லை என எத்தனையோ இல்லைகள்.இதை அனைத்தையும் ரோகிணியிடம் தான் சொல்லி புலம்பிக் கொண்டு இருந்தாள்.

சென்னையில் இருந்து கிளம்பும் போதே சொக்கலிங்கம் சொல்லிவிட்டார் வீரா வீட்டில் தான் தங்குவது என..

மங்களமும் வீரா அறியாமல் ரோகிணியிடமும் பேத்திகளிடமும் வீடு வசதி குறைவாகதான் இருக்கும் பொறுத்து போக வேண்டும் என கண்டிப்புடன் சொல்லிவிட.. வேறு வழியின்றி யாரும் அறியாமல் தாயிடம் எரிச்சல் பட்டாள்.

வந்ததும் அனைவருக்கும் வீட்டின் பின்புறம் உள்ள தென்னையில் இளநீர் சீவி குடிக்க கொடுத்தார் அய்யாவு. உள்ளூரிலேயே இருக்கும் பொன்னியும் வந்துவிட விருந்து வீட்டிலேயே தடபுடலாக பெண்களே செய்தனர்.

ரோகிணியும் அவர்களோடு இணைந்து கொள்ள..பேச்சும் சிரிப்புமாக சமையல் வேலை நடந்தது

வீட்டில் இருந்து சிறிது தொலைவில் அய்யாவின் தறிப்பட்டறை இருந்தது. பெரிதாக இல்லை பத்து கைத்தறி ஆட்கள் போட்டு இவரும் கூட செய்வார்.சொக்கலிங்கத்தையும் வெங்கட்டையும் பட்டறைக்கு கூட்டி கொண்டு சென்றார் அய்யாவு.

நிகிதாவிற்கு தான் பிடிக்கவில்லையே தவிர ஆராத்யாவிற்கு அந்த வீடும் ஊரும் மிகவும் பிடித்தது.வீட்டையே சுற்றி சுற்றி வந்தாள்.

விசாலாவிற்கு தன் தம்பி மகளே மருமகளாக வந்ததில் அவ்வளவு ஆனந்தம். அவருக்கு சிறு வயதில் இருந்தே நிகிதா மேல் பிரியம் அதிகம்.

யாருடனும் ஒட்டாமல் தனியாக போனோடு இருந்த நிகிதாவிடம்

“நிகிதா.. தங்கம் ஏன்டா தனியா இருக்க..”

நிகிதா அவர்களிடம் அதிக ஒட்டுதல் இல்லை என்பதால் என்ன சொல்ல என தெரியாமல் அமைதியாக இருக்க..

“காருல வந்தது களைப்பா இருக்கா.. கொஞ்ச நேரம் ஓய்வா படுத்துக்கறியா..” என்றார்.

எவ்வளவு நேரம் தான் சும்மா இருப்பது பேசாமல் தூங்கலாம் என அவளும் சரி என தலையாட்ட..

வீராவின் அறைக்கு கூட்டி சென்று படுக்க வைத்தவர்

“நிகிதா கண்ணு எது வேணாலும் கூச்சப்படாம அத்தைகிட்ட கேட்கனும் சரியா..” என்று குழந்தையிடம் சொல்லும் பாவனையில் சொல்ல.. அதற்கும் அவள் தலையசைப்பையே பதிலாக தந்தாள்.

அவள் உறங்குவதற்கு தேவையானதை செய்து கொடுத்து கதவை மூடி விட்டு சென்றார்.

ஆராத்யா வீராவிடம் “மாமா..கிணத்துல தண்ணி இறைச்சு காமிங்க” என்க

வீரா லுங்கியை மடித்து கட்டி கொண்டு நீர் இறைக்க.. அதை பார்த்து குதூகலித்தவாறே..

“மாமா..மாமா.. நான் இறைக்கவா..”

“ம்ம்ம்.. சரி” என்றிட..

கிணற்றில் நீர் ஒரு தடவை இறைப்பதற்குள் சின்ன பெண்ணின் மென்மையான கை கயிற்றை இறுக்கி பிடித்தில் காந்தல் எடுத்து விட்டது.

வீரா தான்”போதும் ஆரா உள்ள வா”என்க..

ஆனால் ஆராவிற்கு தான் ஆர்வம் குறைந்தபாடில்லை.

“மாமா.. இந்த கிணத்துல ஸ்விமிங் பண்ணாலாமா.. நீங்க பண்ணுவிங்களா..”

“எனக்கு ஸ்விமிங் பண்ண தெரியும். ஆனால் இது வீட்டு கிணறு சின்னது இதுல பண்ணமுடியாது. இங்க குளம் இருக்கு அதுல நீச்சலடிப்பேன்”

“ஹை.. சூப்பர்… சூப்பர்.. வாங்க இப்பவே போலாம் நானும் ஸ்விம் பண்றேன்” என்றாள் ஆர்வமாக..

“ஆரா..ஆ.. இப்ப வெயில் நேரம். நாளைக்கு காலைல கூட்டிட்டு போறேன் ஓகே வா”

சற்றே ஏமாற்றத்துடன் “சரி மாமா” என்று உள்ளே சென்றவள் உடனே பாட்டியிடம்

“கிரேனீ.. மாமா என்னை நாளைக்கு ஸ்விம் பண்ண குளத்துக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லியிருக்காங்க..” என்றாள்.

மங்களத்திற்கு பேத்தியின் சந்தோஷத்தை பார்த்து அவரின் உள்ளம் கனிந்து போனது.

“சரிடி ராஜாத்தி”என கன்னம் வலித்து கொஞ்சினார்.

தறிபட்டறையில் இருந்து மூவரும் வரவும் விருந்தும் தயராகி இருந்தது.வரும் போதே அய்யாவு பதநீரில் நொங்கு போட்டு வாங்கி வந்திருந்தார்.பொன்னியின் கணவன் கணேசனும் வந்திட..

பந்தி பாய் விரித்து தரையில் அமர்ந்து ஆண்கள் அனைவரும் சாப்பிட.. நிகிதாவை வீராவின் அருகில் அமர வைத்தனர். அவளால் பழக்கம் இல்லாததால் தரையில் அமர்ந்து குனிந்து இலையில் சாப்பிட மிகவும் சிரமப்பட்டாள்.

வீராவிற்கு அதைப் பார்க்க அவள் மேல் இன்னும் எரிச்சல் கூடியது.அவளை பார்த்து முறைக்க..

ஏற்கனவே அந்த வீடு சூழ்நிலை பழக்கவழக்கம் எல்லாம் ஒவ்வாமையாக இருக்க…அவனின் முறைப்பும் சேர்ந்து கோபத்தை கிளப்ப.. சாப்பிடாமலேயே எழுந்து கொண்டாள்.

விசாலா பதறி கொண்டு”ஏங்கண்ணு சாப்பாடு புடிக்கலையா..ஏன் எந்திரிச்சிட்ட.. வேற எதாவது செய்து தரவா..” என கவலையுடன் கேட்க..

ஒன்றும் பேசாமல் முகத்தை திருப்பி கொண்டு நின்றாள்.தன் தாயை அவமதிக்கிறாள் என நினைத்த வீரா பெரியவர்கள் முன் எதுவும் பேச முடியாமல் பல்லை கடித்து பொறுத்துக்கொண்டான்.

அவளின் செயல் யாருக்கும் பிடிக்கவில்லை என்பதை அவர்கள் முகமே சொன்னது.ரோகிணிக்கோ மகளை என்ன செய்வது என தெரியாமல் முழித்தார்.

மங்களம் பாட்டி”ஏய் நிகிதா இப்ப எதுக்கு பாதி சாப்பாட்டுல எந்திரிச்சா.. அத மொதல்ல சொல்லு”

அதற்கு கொஞ்சம் பயந்தவாறு”இல்ல கிரேனீ கொஞ்சம் காரமா இருக்கு.. “என்று இழுக்க..

காரம் அதிகம் சாப்பிடாத பிள்ளைகள் என்பதால் உண்மை என நம்பினர்

“நீ போய் ரெஸ்ட்டு எடு கண்ணு”என விசாலம் அனுப்பி வைத்தார்.

“ஆமாம் இவ என்ன வெட்டி முறிச்சா.. இந்தம்மா… ரெஸ்ட் எடுக்கசொல்லுது” என வாய்குள்ளே முனுமுனுத்தான்.

அவள் வீராவின் அறையில் சென்று முடங்கி கொண்டாள். எல்லோரும் சாப்பிட்டு முடிக்க.. விசாலா எல்லோருக்கும் நொங்கு சிறு துண்டுகளாக சீவிப் போட்ட பதநீர் கொடுத்தார்.

ஆராவுக்கு அதன் சுவை பிடித்துப் போக அதை தெரிந்து கொள்ள அத்தனை கேள்விகள் கேட்டாள் அய்யாவுவிடம்.

விசாலா நிகிதாவிற்கும் கொண்டு போய் கொடுத்தார்.

“நிகிதா கண்ணு.. இந்தா கண்ணு பதநீரு சாப்பிடுமா..” என்க

அவர் கையில் இருந்த கிண்ணத்தை வாங்கி ஒரு ஸ்பூன் சாப்பிட்டு விட்டு

“உவ்வே… தூ..தூ… ச்ச்சீ..நல்லாவே இல்லை. எப்படியோ ஸ்மெல் அடிக்குது”என்றாள் முகத்தை சுழித்து..

உடனே விசாலா முகம் வாடிவிட்டது.

“ஏங்கண்ணு இதுவும் பிடிக்கலையா…உனக்கு என்ன பிடிக்கும்னு சொல்லு.. அத்தை செஞ்சு தரேன்”

“எனக்கு எதுவும் வேணாம்” என்றுவிட்டாள் பட்டென்று..

விசாலா மருமகள் சரியாக சாப்பிடாததால்.. மனம் சுணங்க வெளியே வந்தார்.

தனது சார்ஜரில் போட்டு இருந்த போனை எடுக்க வந்த வீரா தன் அறைவாசலில் நின்று எல்லாம் கேட்டு கொண்டு தான் இருந்தான்.

விசாலா வீராவிடம் “இந்த பொண்ணு எதுவுமே சாப்பிடமாட்டேங்குது தம்பி.அதுக்கு நம்ம சாப்பாடு புடிக்கல போல..காஞ்சிபுரம் டவுனுல இருந்து அதுக்கு பிடிச்சமாதிரி எதாவது வாங்கியாறியா..” என்றார்.

அம்மாவின் முகவாட்டம் வீராவுக்கு நிகிதாவின் மேல் இன்னும் கோபத்தை அதிகரிக்க செய்தது.

“அம்மா நான் பார்த்துக்கறேன். நீங்க போங்க”என்று அனுப்பி வைத்தவன் உள்ளே வந்து நிகிதாவை தீப்பார்வை பார்க்க..

அவனை அலட்சியமாக பார்த்துவிட்டு தனது போனை எடுத்து அதில் தலையை நுழைத்து கொண்டாள். அவளின் செயல் அவனை அவமானப் படுத்த…கோபத்துடன் அவளை நெருங்க…

அவனுக்கு முன்பு பாட்டி அவளின் முன்னால் வந்து நின்றார்.

“ஏய்.. என்ன.. திமிரா…எதுவும் சாப்பிட மாட்டேங்கற..இழுத்து வச்சு இரண்டு அப்பு அப்புனேன் வையி.. கன்னம் பழுத்து போயிடும் பார்த்துக்க”

பெற்றவர்கள் செல்லத்தால் பிடிவாதகுணம் நிகிதாவிடம் அதிகம்.எப்போதும் பாட்டி தான் மிரட்டி அதட்டி என அவளை வழிக்கு கொண்டு வருவார். அதனால் பாட்டியிடம் அவளுக்கு கொஞ்சம் பயமுண்டு.

“விசாலா சாப்பாடு கொண்டு வருவா.. சாப்பிடற நீ அவ்வளவு தான்”

வெளிப்புறம் திரும்பி “விசாலா” என குரல் கொடுக்க.. விசாலா உணவுத் தட்டோடு வந்தார்.

“அம்மா நீங்க போங்க.. நான் பார்த்துக்கறேன்” விசாலா சொல்லிட..

பாட்டியும் பேரனும் நிகிதாவை எரித்து விடுவது போல பார்த்து விட்டு வெளியேறினர்.

ரோகிணி இதை எல்லாம் பார்த்தும் பார்க்காது போல இருந்து கொண்டார். மகளின் கஷ்டம் புரிந்தும் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. மகளின் ஒரு செயல் தான் சரியாக பிள்ளைகளை கவனிக்கவில்லையோ என குற்றவுணர்ச்சி அதுமட்டுமின்றி மகள் வாழ்க்கைக்கு இது தான் சரி என அமைதியாக இருந்து கொண்டார்.

விசாலா நிகிதாவிடம்”ஏங்கண்ணு சாப்பாடு காரமா இருக்கா..அதுக்காக சாப்பிடமா இருப்பியா.. தயிர் சாதம் பிசைஞ்சு எடுத்துட்டு வந்திருக்கேன் சாப்பிடறியா”

கோபத்தில் எழுந்து வந்துவிட்டாளே தவிர அவளுக்கு நல்ல பசி.எதுவும் சொல்லாமல் வாங்கி அமைதியாக சாப்பிட்டாள்.

அதற்கு பிறகு எது செய்தாலும் விசாலா மருமகளை கேட்டு கேட்டு அவளுக்கு பிடித்த மாதிரி செய்து கொடுத்தார்.

பதினைந்து வயதான ஆராவிற்கு வீட்டில் எப்பவும் தனிமை தான். தந்தை பிசினஸ் என இரவு வெகு தாமதமாக தான் வருவார். ரோகிணி ப்ரண்ட்ஸ் கூட மீட்டிங் கிளப் என வெங்கட் வரும் தாமதமாகத் தான் வருவார். நிகிதாவும் காலேஜ் வீட்டு வீடு வந்து சிறிது நேரத்தில் ப்ரண்ட்ஸ் கூட ஷாப்பிங் சினிமா மால் வீக் எண்ட் பப் என அவள் பொழுதுகள்…

பாட்டி தாத்தா வீட்டில் இருந்தாலும் அவளுக்கு என சில ஏக்கங்கள் உண்டு. வீரா வீட்டில் அனைவரும் ஒன்றாக சேர்ந்து சிரிப்பும் கொண்டாட்மாக இருப்பது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.

கலகலப்பாக பேசும் பொன்னியோடும் ஆயிரம் கேள்விகள் கேட்டு வீராவோடு ஒட்டிக் கொண்டாள்.

நிகிதா எவரோடும் ஒட்டாமல் ப்ரண்ட்ஸ் கூட பேசுவதும் சாட் பண்ணுவதும் என ஒதுங்கியே இருந்தாள்.

வீரா அறையில் இருந்தது சராசரியான டபுள்காட் கட்டில் இருவருக்கும் படுக்க இடம் போதவில்லை. ஒருவரை ஒருவர் இடித்து கொண்டு முறைத்துக் கொண்டு படுத்திருந்தனர்.

நிகிதாவிற்கு எப்பவும் டெட்டிபேர் கட்டி பிடித்து தூங்கினால் தான் தூக்கம் வரும்.அட்லீஸ்ட் கட்டிபிடிக்க ஒரு தலையணையாவது வேணும். தூக்கம் வராமல் கைகாலை உதறிக் கொண்டு படுத்திருக்க…

இவள் அழிச்சாட்டியத்தால் வீராவிற்கு தூங்க தொந்தரவாக இருக்க.. சிறிது நேரம் பொறுத்தவன்.. எழுந்து அமர்ந்து..

“எதுக்குடி இப்படி நெளிஞ்சுகிட்டே இருக்கே.. மனுசன் தூங்க வேணாம்”

எப்பவும் அவனிடம் ஏட்டிக்கு போட்டியாக பேசுவது போல இப்பவும்

“நான் அப்படி தான் பண்ணுவேன். உனக்கு டிஸ்டர்ப்பா இருந்தா கீழே போய் படு”

“மரியாதை இல்லாம பேசாதேனு சொல்லிஇருக்கேன்ல.. வந்ததுல இருந்து யாரையாவது மதிச்சு பேசியிருக்க.. தனியா வந்து உட்கார்ந்துகிட்டு உன்னை தேடி தேடி வந்து எல்லோரும் பேசனுமோ பெரிய மகாராணி இவங்க..”

“நீ சொன்னாலும் சொல்லாட்டியும் நான் ராணி தான் என் பேரண்ட்ஸ் என்னை அப்படி தான் வெச்சிருக்காங்க..இந்த ஓல்டி பேச்சை கேட்டுகிட்டு உனக்கு கட்டி வச்சிட்டாருஎங்க அப்பா.. இதை ஒன்னு தான் எனக்கு பிடிக்காம அவங்க செஞ்சது”

“ஏன் செஞ்சாங்க.. நீ பண்ணி வச்ச வேலை அப்படி… ஏன்டி ஒரு பொம்பள புள்ள செய்யற காரியமா நீ செஞ்ச..”

“எங்கம்மா பதநீர் கொண்டு வந்து கொடுத்தா பிடிக்கலைனு துப்பற… நல்லா குடிச்சிட்டு வந்து நடுவீட்டில் மட்டையாகி கீழே விழுந்த உனக்கு பதநீர் புடிக்கலைனா ஆச்சரியம் தான்டி.. ஒரு வேளை சுண்ணாம்பு தடவாம கள்ளா கொடுத்து இருந்தா குடிச்சிருப்பியோ..”

“ஏய்… நான் ஒன்னும் வேணும்னே அப்படி குடிக்கல.. அது ப்ரண்ட்ஸ்குள்ள ஒரு போட்டி… அதான் அப்படி..” என இருக்க இருக்க அவள் பேச்சில் ஸ்ருதி குறைந்தது.

“என்னடி ஏய்.. சொல்ல சொல்ல மரியாதை இல்லாமல் பேசற..”

“போட்டியாம் போட்டி.. இல்லைனா மட்டும் இவ குடிக்கவே மாட்டா..”

“சும்மா என்னை மொடா குடிகாரி மாதிரி பேசாத.. நான் முதல்ல மொஜீட்டோ தான் குடிச்சிட்டு இருந்தேன். என் ப்ரண்ட்ஸ் தான் இதுல கொஞ்ச கொஞ்சம் ரம் கலந்து காக்டெய்ல் மாதிரி குடிச்சா நல்லா இருக்கும்னு சொன்னாங்க.. அது அப்படியே பழகி எப்பாவது கொஞ்சம் ஒயின் சாப்பிடுவேன். அதுவும் ஓயின் சாப்பிட்டா அழகா இருப்போம்னு தனுஷாவும் ரூபேஷீம் சொன்னாங்க அதான்”

“அது ஒரு குத்தம்னு உன்னைய போய் கட்டி வச்சிட்டாங்க.. என் கலர்க்கு அழகுக்கும் கொஞ்சம் கூட மேட்சாகாத உன்னைய என் லைப் பார்ட்னரா.. நினைச்சாவே டிஸ்கஸ்டிங்கா இருக்கு”

அவள் குடித்தது குற்றமே இல்லை என்பது போல விளக்கம் கொடுத்ததிலேயே கோபத்தில் இருந்தவனுக்கு தன்னை தரக் குறைவாக பேசுவும் சுருசுருவென ஏறவும்..

“ஏன்டி குடிச்சதை தப்பில்லைனு பேசினது மட்டுமில்லாம..என்னையவே டிஸ்கஸ்டிங்னா சொல்ற” என பளார் என அறைந்தான்.

அவன் அடிப்பான் என எதிர்பார்க்காதவள்.. அவன் அறைந்ததில் அதிர்ச்சியாகி அப்படியே அவனை பார்க்க.. கண்ணில் இருந்து கண்ணீர் கரகரவென இறங்கியது.

“ஆம்பள குடிக்கறதே தப்புனு நினைக்கறவன் நான்.. எனக்கு இப்படி ஒருத்திய கட்டி வச்சிடாங்க..நான் அமைதியா நிம்மதியான வாழ்க்கை தான் ஆசைப்பட்டேன்.ஆனா எனக்கு உன்னோடு மல்லுகட்டியே காலம் போயிடும் போல..”

“பெண்களே அடிக்கறது பாவம்னு நினைப்பேன். ஆனா அப்படி பட்ட என்னையவே அடிக்க வச்சிட்ட.. இருந்தாலும் நான் அடிச்சது தப்பு தான்… சாரி…சாரி… வெரி சாரி..” என சங்கடத்துடன் சொல்லி விட்டு திரும்பி படுத்து கொண்டான்.

இதுவரை அவளை யாரும் அடித்ததே இல்லை. ஏன் குடித்து மயங்கி விழுந்த போது கூட யாரும் அடிக்கவில்லை. பெற்றவர்கள் மகளின் நடவடிக்கையில் வருத்தம் தான் கொண்டனர். பாட்டி தாத்தா தான் திட்டி தீர்த்தனர்.

நிகிதா எதுவும் பேசாமல் சுவற்றின் பக்கம் ஒருக்களித்து கைகாலை குறுக்கி கொண்டு விசும்பியபடியே படுத்திருந்தாள். இருவரும் வெகு நேரம் வரை உறங்கவில்லை.

பொருந்தா வாழ்வில்

பொருத்தி வைத்து

சேர்த்து வாழ

கட்டாயப்படுத்தினால்

கட்டாயத்தினால்

காதல் மலருமா..

வாழ்வு சிறக்குமா…

3 – புயலோடு பூவுக்கென்ன மோகம் Read More »

B3E258E9-2585-4688-849D-A9DE61D9E78D

2 – புயலோடு பூவுக்கென்ன மோகம்

2 – புயலோடு பூவுக்கென்ன மோகம்

அதிகாலையிலேயே எழும் பழக்கம் உள்ள வீரா விடிந்து வெகு நேரம் கழித்தே கண்விழித்தான். விழித்தவன் தன் மேலே கனமாக உணர்ந்தான்.

நிகிதா.. தான் அவன் மேலே கைகால்களை போட்டு கொண்டு கட்டி பிடித்து தூங்கி கொண்டு இருந்தாள்.

“ச்சே இது வேறயா..” என எரிச்சலில் அவளை வெடுக்கென பிடித்து தள்ளி விட்டான்.

நன்றாக தூங்கி கொண்டு இருந்தவள் அவன் தள்ளிவிட்டதில்.. எழுந்து மலங்க.. மலங்க.. விழிக்க..

அதை பார்த்து வீராவுக்கு இன்னும் எரிச்சல் அதிகமானது. “முழிக்குது பாரு தேவாங்கு மாதிரி” என முணுமுணுக்க… அந்த முணுமுணுப்பில் தெளிவானவள்..

“ஏய்.. ஏய்.. என்ன..என்ன சொன்ன..”

“என்ன சொன்னேன் ஒன்னும் சொல்லலையே..”

“இல்லல்ல.. நீ என்னமோ சொன்ன.. தேவாங்கு.. ஆங்..தேவாங்குனு சொன்ன..”

“ஆமாண்டி அப்படி தான் சொன்னேன். இப்ப அதுக்கு என்னங்கற…”

“அப்புறம் இன்னொன்னு நேத்தே மரியாதை இல்லாம பேசாதேனு சொன்னேன். மறுடியும் அதே மாதிரி தான் பேசற..சொல்லிட்டு இருக்கமாட்டேன். ஒரு காட்டு காட்டிருவேன் நெனைப்பு வைச்சுக்கோ ஆமாம்”

“அப்படி தான் பேசுவேன். என்ன பண்ணுவ” என்றாள் திமிராக… வீரா ரொம்பவே மரியாதையை எதிர்பார்ப்பவன். ரோசக்காரன்.கோபக்காரனும் கூட…

கிட்ட நெருங்கியவன் அவள் கையை பிடித்து பின்புறமாக திருப்பி முறுக்க…
வலி தாளாமல் கத்த ஆரம்பித்தாள்.

“ஐயோ.. ஐயோ விடு வலிக்குது”

மேலும் கையை இறுக்கி பிடித்து முறுக்க..வலி வேதனையில் அவள் வாயிலிருந்து தன்னாலே மரியாதை வந்தது.

“வலிக்குது விடுங்க…இனி இப்படி பேசல..” என்கவும்… அவளை உதறிவிட்டு எழுந்து குளியலறைக்கு சென்றுவிட்டான்.

நிகிதா கடிகாரத்தைப் பார்க்க அது எட்டு என காட்டியது. “ஓஎம்ஜி..எயிட் ஓ கிளாக் தான் ஆகுது. இப்பவே எழுப்பி விட்டுட்டான் டெவில்” என திட்டிக் கொண்டு இருந்தவள் குளியலறை கதவு திறக்கும் சத்தத்தில் கப்பென வாயை மூடிக் கொண்டாள்.

அவள் திரு திருவென முழித்து கொண்டு இவனைப் பார்க்க.. இவ ஏன் இப்படி முழிக்கிறா.. என அவளை ஒரு மார்க்கமாக பார்த்தவாறே தன் உடையோடு குளிக்க சென்றுவிட்டான்.

குளித்துவிட்டு வந்து அங்கே ஒருத்தி இருப்பதை கண்டு கொள்ளாமல் தயாராகி கீழே சென்றுவிட்டான்.

இவன் கீழே சென்ற போது பாட்டி தாத்தா இருவரும் இவர்கள் அறையை பார்த்தவாறே அமர்ந்திருந்தனர். அவர்கள் முகம் கவலையாக இருப்பதை பார்த்தவன் அவர்கள் அருகில் சென்று முகத்தில் வலிய வைத்த சிரிப்புடன் அமர…

“கண்ணா சந்தோஷமா இருக்கறியா… உன்னை கஷ்டப்படுத்தறோமோ..”என வீராவின் கன்னத்தை வாஞ்சையாக தடவியவாறே கவலையுடன் கேட்க..

“அம்மாச்சி.. எதுக்கு வருத்தப்படறிங்க..எல்லாம் நான் பார்த்துக்கறேன்” என்றான்.

தங்களின் ஒரே பேரன்… செல்ல பேரன்… அவன் வாழ்க்கையை வீணாக்கி விட்டோமோ என்ற குற்றவுணர்வு ஏற்கனவே மனதில்… ஆனாலும் தங்கள் பேத்தியின் வாழ்க்கையை சரி பண்ண வீராவால் மட்டுமே முடியும். வேற வழியில்லையே.. என்ற சிந்தனையில் கண்கள் கலங்கி விட…

“அச்சோ அம்மாச்சி.. என்னது இது”அவர் கைகளை பிடித்து கொண்டு

“என் பியூட்டி அழுதா நல்லாவே இல்லை. பாருங்க.. நீங்க அடிச்சிருந்த ஒரு கோட் பவுடரும் கரைஞ்சிடுச்சு..” என கேலி பேச..

“போடா படவா..”என லேசாக சிரித்தவாறே சேலை தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொள்ள..

“மங்களா.. வீராவுக்கு காபி எடுத்துட்டு வா போ”என சொக்கலிங்கம் சொல்ல.. பாட்டி எழுந்து சென்றார்.

தங்கள் பேச்சு மனைவியின் காதில் விழாத தூரம் சென்றதை உறுதி படுத்திக் கொண்டு

“வீரா.. தாத்தா தப்பு பண்ணிட்டேன் நினைக்கறியா..” என சொல்ல இடையிட்டவாறு..

“தாத்தா என்ன நீங்க.. இப்படி எல்லாம்”

“வீரா உன் பாட்டி வரங்காட்டி நான் கொஞ்சம் பேசனும். பேசிடறேன் குறுக்கிடாம கேளு”

“சொல்லுங்க தாத்தா”

“எனக்கு தெரியும் உங்க மாமன் வீட்டோட மாப்பிள்ளையா வந்தது உனக்கு பிடிக்கல.. அதுல உன்னையும் அதே மாதிரி கொண்டு வந்துட்டமேனு உனக்கு கோபம்..ஆனா எனக்கு வேற வழி தெரியல..உங்க மாமன் தொழில் பின்னாடி ஓட.. உங்க அத்தையோ ப்ரண்ட்ஸ் கிளப்னு.. பிள்ளைகள இவங்க பார்க்கல.. பாசத்தை பணமா கொடுத்து அதுங்க நடவடிக்கை சேர்க்கை எதையும் கவனிக்கல..”

“நாகரிகம் சுகந்திரம்னு அதுங்க பாதை மாறி போகும் போது தான் உங்க மாமன் அதுங்கள பார்த்துக்க எங்கள ஊரில் இருந்து கூட்டிட்டு வந்தான்”

“ஏதோ எங்க கண்டிப்புலயும் பாசத்துலயும் ஓரளவுக்கு சரி பண்ணினோம். நாங்க வந்தப்ப ஆராத்யா சின்ன புள்ள அதனால நாங்க ஈசியா எங்க வழிக்கு திருப்பிட்டோம். ஆனா நிகிதா இரண்டு கெட்டான் வயசு கொஞ்சம் பிடிவாதம் என எங்களால அவள தான் சரி பண்ண முடியல.. ஆனா நல்ல புள்ள… சேர்க்கை தான் சரியில்ல..”

“வெளிய மாப்பிள்ளை பார்த்தா.. வரவன் எப்படி.. என்ன… என தெரியாது. நாங்க இருக்கற வரை இந்த குடும்பத்தை பார்த்துப்போம் எங்களுக்கு பிறகு..” என சொல்லி கொண்டே வந்தவர் தொண்டை அடைக்க..

எதுவும் பேசாமல் வீரா தாத்தாவின் கைகளை பிடித்து தட்டி கொடுக்க..

தொண்டையை செருமிக் கொண்டு “நம்ம இரத்தமா இருந்தா வேறயா நினைக்காது. ஆண்வாரிசு இல்லாத இந்த குடும்பத்தையும் உங்க மாமனையும் தொழிலையும் கவனிக்க உரிமையான உறவால தான் முடியும் னு நினைச்சு தான் உன்ன மாப்பிள்ளையாக்கினேன்”

“தாத்தா எல்லாம் நான் பார்த்துக்கறேன். நீங்க நிம்மதியா இருங்க”

“இதை தான் கல்யாணத்திற்கு முன்பு சொல்ல வந்தேன் கோபத்துல கேட்கல”என வருத்தப்பட..

அவனுக்கு இப்போதும் உள்ளுக்குள் கோபம் இருந்தது. ஆனால் வருத்தத்தில் இருக்கும் பெரியவர்களை பேசி நோகடிக்க வேணாம். இனி பேசி என்னாக போகுது என அமைதியாகிவிட்டான்.

பேரன் பேசாததிலேயே அவன் மனவோட்டம் புரிந்தவர் எதுவும் கோபமாக பேசாமல்.. தான் பேசியதையாவது காது கொடுத்து கேட்டானே.. பெரும் மூச்சுவிட்டார்.

அதற்குள் மங்களம் பாட்டி காபியோடு வர..

“அம்மாச்சி காபி கொண்டு வர இவ்வளவு நேரமா..”

“இந்த வீட்ல எது வேணும்னாலும் சொன்னா இருக்கற இடத்துக்கு வந்திடும்.அப்படி இருந்தும் உங்க தாத்தா என்னைய காபி கொண்டு வானு சொல்லும் போதே உங்கிட்ட தனியா பேச நினைக்கிறாருனு புரிஞ்சுகிட்டேன். அதான் கொஞ்சம் தாமசமா வந்தேன்”

இந்த புரிதல் இதை தானே அவனும் எதிர்பார்த்தான். எளிமையான வாழ்க்கை தன்னை புரிந்து கொண்டு தன் சம்பளத்திற்குள் குடும்பம் நடத்தும் அமைதியான மனைவி என ஒரு மிடில் கிளாஸ் வாழ்க்கை தான் அவனின் எண்ணமாக இருக்க… அவனின் எண்ணம் எல்லாம் வண்ணமாக மாறாமல்.. அழிந்து போன கோபம் அவனின் அகத்துள்..

தன் எண்ணத்திலிருந்து விடுபட்டு பெரியவர்களை கவனிக்கலானான்.

“அம்மாச்சி உங்களுக்கு”

“நாங்க குடிச்சிட்டோம் நீ குடி பா”

அவன் குடித்து முடிக்கவும் வெங்கட் தயராகி கீழே வரவும் சரியாக இருந்தது. தன் பெற்றோரின் அருகில் அமர்ந்து இருந்த வீராவைப் பார்த்ததும் மெலிதான புன்னகையோடு

“குட்மார்னிங் மாப்ள” என்க..

“மாமா மாப்ள எல்லாம் வேண்டாம். எப்பவும் போல வீரானே கூப்பிடுங்க..”

“இருக்கட்டும் மாப்ளே…எப்ப நம்ம பேக்டரிக்கு வரிங்க.. உங்க வேலைக்கு ரிப்போர்ட் கொடுத்துட்டிங்கல்ல..”

“ம்… கொடுத்துட்டேன். இன்னைக்கே வேணாலும் வரேன்” என்றான் சற்று தயக்கமாக…

அவன் சுயமரியாதைகாரன். வீட்டோடு மாப்பிள்ளை அவனின் சுயமரியாதைக்கு பெரிய அடி. அதை ஏற்றுக் கொள்ள முடியாமல்… அதிலிருந்து விடுபடவும் முடியாமல்… அவனின் மனம் நெருப்பை போல தகதகவென எரிந்து கொண்டு இருந்தது.

“இன்னைக்கே வேணாம் மாப்ள..சடங்கு விருந்து இதெல்லாம் இருக்கு.. ”

கொஞ்சம் தயங்கியவாறே “ஹனீமூன் டிரிப் எங்கயாவது போறிங்களா.. அரேஞ்ச் பண்ணவா..”என்றார் வீராவின் முகத்தை சங்கடத்துடன் பார்த்தவாறே..

ஆமாம் அது ஒன்னு தான் குறைச்சல் என மனதினுள் நொடித்து கொண்டு”இல்ல. மாமா அதெல்லாம் எதுவும் வேணாம்” என்றான் பட்டென்று..

பேச்சை மாற்றும் விதமாக பேக்டரி சம்மந்தமாக தனக்கு தெரியாதவற்றை பற்றி கேட்டான்.

வெங்கட்டிற்கு தனது தொழில் தான் எல்லாமே குடும்பம் கூட அடுத்த நிலை தான். வீரா கேட்கவும் அவன் பேச்சை திருப்பும் வித்தையை அறியாமல் வெகு சுவராஸ்யமாக அவனுக்கு விளக்க ஆரம்பித்துவிட்டார்.

இனி இது தான் வாழ்க்கை என மனதில் நிறுத்தி கொண்டு அவனும் கர்ம சிரத்தையாக கேட்க ஆரம்பித்தான்.

அதற்குள் மங்களம் பாட்டி நிகிதாவின் அறைக்கு சென்று அவளை கிளப்பி கொண்டு கீழே இழுத்து வந்தார்.

பாட்டி சென்று பார்த்த போது நிகிதா மறுபடியும் படுத்து நன்றாக உறங்கி கொண்டு இருந்தாள்.

என்ன இந்த பொண்ணு இப்படி பண்றாளே.. புருஷன் எழுந்து குளித்து ரெடியாகி வந்துட்டான். இன்னும் தூங்கறாளே.. இப்படி இருந்தா எப்படி.. என வேதனைப்பட்டவர்.

“நிகிதா… ஏய் நிகிதா.. எழுந்திரு” என முதுகில் இரண்டு போட்டார்.

“ஐயோ கிரேனீ வலிக்குது” என முதுகை தேய்த்து கொண்டு எழுந்து அமர்ந்தாள்.

“எழுந்து குளிச்சிட்டு வா.. வந்து உன் புருஷன கவனி”

“நான் என்ன அவனுக்கு சர்வென்டா.. அதெல்லாம் முடியாது”

“மரியாதை இல்லாம பேசாதேன் சொல்லியிருக்கேனா இல்லையா..” என மிரட்ட..

“பாட்டிக்கும் பேரனுக்கும் இதுல ஒன்னும் குறைச்சல் இல்ல…மரியாதை வேணுமா.. மரியாதை” என்று அவள் முணுமுணுக்க..

“என்ன முணுமுணுப்பு… போய் குளி”என்றார் அதட்டலாக..

அவள் குளித்து வருதற்குள் அவளுக்கு ஒரு சாப்ட் சில்க் புடவையை எடுத்து வைத்தார்.

குளித்து வந்தவள் புடவையை பார்த்தும் எரிச்சலாகி..

“நான் சேரிலாம் கட்டமாட்டேன்”

“நீ புடவை தான் கட்டற..”

“எனக்கு பிடிக்கல..கட்டமாட்டேன்”

“நேத்து தானே கல்யாணம் ஆகியிருக்கு.. இன்னைக்கு வீட்ல விருந்து. சொந்தகாரங்க வருவாங்க.. புடவை கட்டி தான் ஆகனும்” என்றார் கோபத்துடன்..

“அதெல்லாம் முடியாது. முடியவே முடியாது”

“சொல்லறத கேளு கொஞ்ச நேரம் கட்டியிரு.. அப்புறம் மாத்திக்கலாம்”

“நோ வே என்னால முடியாது” என பிடிவாதமா சோபாவில் அமர்ந்து கொண்டாள்.

பாட்டி எவ்வளோ கெஞ்சி கொஞ்சி அதட்டி பார்த்தும் வேலை ஆகவில்லை. கடைசியில் அவர் தான் அவள் வழிக்கு செல்ல வேண்டி வந்தது.

த்ரெட் ஒர்க் பண்ணின அழகான ஒரு சுடிதாரை கையில் கொடுத்து..

“இதையாவது போடு” என்க

“இதா..”என்றவளை முறைத்து

“இதான். பின்னே எப்பவும் போல ஆம்பள புள்ள மாதிரி ஜீன்ஸ் சட்டை போடலாம்னு நினைச்சியா… இது போடு இல்லைனா புடவைய கட்டு.. என்ன பண்ற..”

நிகிதா முகத்தை சுளித்தவாறு சுடிதாரை வாங்கி கொண்டு

“நீங்க போங்க நான் ரெடியாகி வரேன்”

“இல்ல நான் பெட்ரூம்ல இருக்கேன். நீ வா.. அப்புறம் இன்னொன்னு தலைவிரி கோலமா வராதே.. பின்னல் போட்டு இந்தா இந்த பூவை வச்சுகிட்டு வா” என மல்லிகை சரத்தை கையில் கொடுத்தார்

பாட்டியை முறைத்துக் கொண்டே”இந்த ஹேர்ஸ்டைலுக்கு பின்னல் எல்லாம் போடமுடியாது” என்றாள் வெடுக்கென..

“எப்படியோ முடிய விரிச்சு போடாம அது ஏதோ… ஆங்.. கிளிப்பு போட்டு பூ வச்சுகிட்டு வா..கண்டிப்பா பூ வச்சிருக்கனும்” என்று சொல்லி விட்டு டிரஸ்ஸிங் அறையில் இருந்து வெளியேறினார்.

அவர் வெளியே சென்றதும் கதவை அடைத்தவள் “ஓல்டு லேடி டார்ச்சர் தாங்க முடியல… அந்த கருவாயனுக்காக இவ்வளவு மேக்கப் ஓவர் தான். ஓல்டிய அனுப்பிட்டு இந்த மம்மி என்ன பண்றாங்க” என்று புலம்பியவள்

எப்பவும் அவள் போடும் மேக்கப் குறையாமல்.. கிளிப் போட்டு சரமாக மல்லிகை பூவை வைத்து கொண்டு வெளியே வந்தாள்.

படுக்கை அறையில் பாட்டி இல்லை என்றதும் ஊப் என வாயை ஊதி ஒரு பெருமூச்சு விட்டவள் கீழே சென்றாள்.

ஆண்கள் மூவரும் தொழில் விசயமாக பேசி கொண்டு இருந்தனர். மெல்லிய கொலு ஒலியில் வீரா திரும்பி பார்த்தான். நிகிதா இரு தோள்களிலும் மல்லிகை சரம் தொங்க..அவள் நிறத்தை தூக்கி காட்டும் வண்ணம் கருநீல சுடிதாரில் இறங்கி வந்தவளை ஒரு நொடி அசந்து போய் தன்னை மறந்து பார்த்திருந்தான் வீரா.

அடுத்த நொடியே தலையை லேசாக உலுக்கி யப்பா… மேக்கப் கொஞ்சம் ஓவர் தான் என நினைத்து சட்டென பார்வையை திருப்பிக் கொண்டான்.

நிகிதா தாயை தேடி கிச்சனுக்கு சென்றாள். அங்கு ரோகிணி இன்றைய விருந்துக்கு சமைக்க வந்திருந்த ஆட்களை வேலை வாங்கி கொண்டு இருந்தார்.

மகளின் மம்மி என்ற அழைப்பில் திரும்பி பார்த்தவர் மகளின் அழகில் கண்கள் கலங்க அருகே வந்து கன்னம் கிள்ளி கிள்ளு முத்தம் ஒன்று வைத்தார்.

“டின்னர் ரெடியாகிடுச்சு போ எல்லோரையும் கூப்பிடு சாப்பிடலாம்”

“அவங்களுக்கு பசிச்சா வந்து சாப்பிடட்டும் நான் எதுக்கு கூப்பிடனும்”என்றாள்.

அந்த வீட்டில் யாரும் யாருக்காகவும் காத்திருக்காமல் சாப்பிட்டு விட்டு அவரவர் வேலையை பார்க்க சென்று விடுவர். தாத்தா பாட்டியை தவிர..

“நிக்கி பேபி அப்படி சொல்லகூடாது. போ கூப்பிடு”

“மீ…. ” என்று சிணுங்கியவாறு சென்றாள்.

அதற்குள் பாட்டியே ஆண்களை சாப்பிட அழைத்திட.. சாப்பிட வந்தனர். வீராவுக்கு அருகில் நிகிதாவை அமர வைத்து வெங்கட் சொக்கலிங்கம் அமர.. ஆராத்யாவும் இவர்களுடன் இணைந்து கொண்டாள்.

வேலையாளை விடுத்து மங்களமும் ரோகிணியும் பரிமாறினர்.

ஆராத்யா “கிரேனி இப்படி எல்லோரும் சேர்ந்து சாப்பிடறது கூட நல்லா இருக்குல்ல..இப்படியே தினமும் சாப்பிடலாம்”

“அதுக்கென்ன சாப்பிடலாம் ஆரா” பாட்டி சொல்ல.. வீரா ஆராத்யாவை பார்த்து சிரித்தான்.

வீராவின் பக்கத்தில் இருந்தவளோ எதையும் கண்டு கொள்ளாமல் சாப்பாட்டை கொறித்து கொண்டு இருந்தாள். அவளுக்கு வீராவின் பக்கத்தில் உட்கார வைத்த கோபம்.

இவள் என்ன இப்படி கொறித்து கொண்டு இருக்கிறாள் அதனால தான் ஒட்டடை குச்சி மாதிரி இருக்காளோ என நினைத்தவன் அவ எப்படி சாப்பிட்டா நமக்கென்ன என்று தான் சாப்பிட்டான்.

வீரா எப்பவும் கொஞ்சம் நன்றாக சாப்பிடகூடியவன். பேரனை பற்றி அறிந்த பாட்டி அவனுக்கு பார்த்து பார்த்து பரிமாற.. நிகிதாவோ என்ன இவ்வளவ சாப்பிடுகிறான். அதனால் தான் பாக்சர் மாதிரி இருக்கான் என நினைத்தாள்.

இருவரும் எல்லாவற்றிலுமே எதிரும் புதிருமாக இருக்க.. இவர்கள் எப்படி இணைந்து வாழ்வார்களோ…?

இயல்பும் மனமும்

எதிரெதிர் திசையில்

பயணிக்க..

எதிரெதிர் துருவங்களாய்

நிற்கும் இருவரும்

வாழ்க்கை பாதையில்

ஒரே நேர்கோட்டில்

இணைவார்களா…

பயணிப்பார்களா…

பயணம் சுகமாக

சுமூகமாக இருக்குமா…..

2 – புயலோடு பூவுக்கென்ன மோகம் Read More »

error: Content is protected !!
Scroll to Top