காதல் கருவாயா07
அத்தியாயம் 7 ஆஸ்பிட்டலில் இருந்தபோதும் சரி.. வீட்டிற்கு டிஸ்சார்ஜ் ஆகி வந்தபோதும் சரி.. அர்ஜூன் மற்றும் கீர்த்திவர்மனின் கேள்விகளுக்கும் உபசரனைகளுக்கும் மெல்லியக்கீற்று புன்னகையே ஆர்த்தியிடமிருந்து பதிலாக வந்தது. கௌதம் முன்பை விட தன்னிடம் மிகவும் தணிந்து போவது புரிந்தாலும் அதைக் கண்டு கொள்ளும் மனநிலையில் அவள் அப்போது இல்லை. மாறாக ஏதோ யோசனையில் மட்டுமே அவளது புருவங்கள் சுருங்கியிருந்தன. மாலைநேரத்தில் ஒருநாள் அவளது யோசனை முகத்தைக் கண்டு புன்சிரிப்புடன் அவளது அருகில் வந்தவன், […]