எங்கு காணினும் நின் காதலே… 17
சொக்கன் தன்னை சொக்க வைத்த சுந்தரியான மீனாட்சியை கைபிடிக்கும் நன் நாளில் மதுரை மாநகரமே பெருங்கோயிலில் கூடி இருந்தது. ஒரு பக்கம் சுமங்கலிகள் அந்நாளில் தங்கள் தாலிக்கயிற்றை புது மஞ்சள் கயிற்றில் மாற்றிக் கொண்டிருந்தனர். மற்றொரு பக்கம் தங்கள் கணவன் நெடுநாள் வாழ வேண்டி தாலி கயிறு மஞ்சள் குங்குமம் அடங்கிய சிறு சிறு பாக்கெட்டுகளை சுமங்கலிகள் மற்ற சுமங்கலிகளுக்கு கொடுத்துக் கொண்டிருந்தனர்.. மனிதர்களின் திருமணத்திற்கே மொய் எழுதும்போது மகேசனின் திருமணத்திற்கு இல்லையா என்ன? […]





