10.கல்
இளவேந்தணுடைய தொழிற்சாலையில் பழைய மிஷின்களை அகற்றி விட்டு புதிய மிஷினை மாற்ற சொல்லி ஒரு மாதத்திற்கு மேல் ஆனது..ஆனால் அது அவனுடைய கவனத்துக்கு வர வில்லை..அவன் கூறியது போல் எதிலும் நடக்க வில்லை என்று கோபத்தில் இனி ஒரு தரம் எந்த இடத்திலும் இதுபோல் நடக்கக்கூடாது என்று அனைவரையும் பிடித்து மிரட்டி மண்டகபிடி கொடுத்து அனுப்பி வைத்து விட்டான்..
நிறை அதெல்லாம் கணக்கில் கொள்ளாமல் வந்த வேலை முடிந்தது என்பதை போல வெளியில் சென்று சூடாக டீயும் சமோசவும் சாப்பிட்டு கொண்டிருந்தாள்…
ஆபிஸ் மேல் தளத்தில் இருந்து இதை எல்லாம் பார்த்தவன் கடுப்பாகி இருந்தான்..
இடியட்..,என்ன வந்து பாருன்னு சொல்லி எவ்வளவு நேரம் ஆகுது..இன்னும் வராம நின்னுட்டு இருக்கா…டிஸ்கஸ்டிங் கேர்ள்..இப்படி லோக்கல் புட் எல்லாம் சப்படுறா..நமக்கு எல்லாம் இது அலர்ஜிப்பா என்று தலையை உலுக்கி கொண்டவன் ..போகாமல் அவளையே பார்த்து கொண்டு தான் இருந்தான்..இவ நமக்கு செட் ஆக மாட்டா..நீ எடுத்த முடிவு தன் கரெக்ட்..என்னமோ சில நாட்களாக இளவேந்தன் கண்கள் நிறையை தொட்டு தொட்டு மீள்கிறது..கேட்டால் காதல் இல்லை ஆனால் அவள் சுட்டி தனத்திற்கு ரசிகன் ஆனான்..
நிறை தன் சேரில் அமர்ந்து கொண்டு ஏதோ வேலை செய்து கொண்டிருந்தாள்..
பரவால எனக்கு தான் மரியாதை கொடுக்க மாட்டா..மத்த வேலை எல்லாம் ஒழுங்கா செய்றா.. ஏதோ கரெக்ட்டா வேலைய பார்த்தா நல்லது தான்..என்று நினைத்து முடிக்கவில்லை..
ஏய்..ஏய்…ஹூரேஏ ஏ ஏ ஏ ஏ ஏ.… ….என்று கதவும் ஏதோ தவறாகிவிட்டது என பதறி ஓடிவந்து பார்த்தவன் வெறியாகி விட்டான்..
அவள் அருகில் வந்து தொண்டையை கணைத்தவன் ..மக்கும்..ம்ம்ம்..
அவள் கவனிக்கவில்லை அது வேறு விஷயம்.
ஏய் ஸ்வீட்டி உன் வாய்ஸ் என்ன கரகரன்னு இருக்கு..ஒழுங்கா தண்ணிய குடிச்சுட்டு அமைதியா இரு..
ஏய்..என்று அவள் போனை பிடுங்கவும்..அவனை பார்த்தவள் ஒஹ் நீங்களா என்ன என்றாள்..
வேலைய விட்டுட்டு இப்படி நான்சென்ஸ் மாதிரி பண்ணிட்டு இருக்க..உன்னை எல்லாம் வேலைக்கு வச்சா என் உயிரை வாங்குற..சலித்தான் முடியல யப்பா..இவளோட
.ப்ச்..என்ன என் போனை கொடுங்க. என் ஒர்க் முடிச்சுட்டு தான் அடுத்த வேலை பாக்குறேன்..அடுத்தவங்க போன இப்படி கேக்காம எடுக்கிறது தப்பு மிஸ்டர்..என்று கூறினாள்…
கோபம் தாறுமாறாக வந்தது..
அமைதியா ஒர்க் பாக்குறதா இருந்த பாருங்க ..,இல்ல லீவ் போட்டு வீட்ல போய் கத்துங்க..இது கேம் விளையாடுற இடம் இல்லை..,என்று பேசினான்..ஆனால் அழுத்தமாக கூறினான்..
போடா பல்லாரி மண்டையா..எனக்கே ரூல்ஸ் போடுறியா..என்று நினைத்தவள்..இப்போ பாரு டா என் டோமடோ என்று அவனை பார்த்து கொண்டே ..,ஸ்வீட்டி இன்னைக்கு மதியம் நா லீவ் நம்ம சாரே போக சொல்லிட்டாரு..வரும் போது அந்த ராம்சேட் கடைல சூடா பஜ்ஜி காளான் எல்லாம் போடுவான்..மறக்காம வாங்கிட்டு வந்துரு டி..என்று கூறி விட்டு சார் நீங்க சொன்ன மாதிரி நா போறேன்…இந்க் கேம்ல நா ஜெய்ச்சுட்டேன்..என் பிரென்ட் எனக்கு டின்னர் வாங்கி தரணும்னு ஒரு டீல்..ஆனா அந்த பண்ணி நா ஏமாத்தி ஜெய்ச்சுட்டேன்னு சொல்றா..இந்த கேம் ல எப்படி ஏமாத்த முடியும்.. நம்ப மாட்டேங்குறா..நீங்களே சொல்லுங்க சார்.., என்று கூறியவளை அடிக்க தோன்றியது..இவ்வளவு கூறியும் திமிர் எடுத்து திரியும் அவளை சுட்டெரிக்கும் பார்வை பார்த்தவனுக்கு தலை வலி எடுத்தது..இது தேராத கேஸ் என்று கடுப்பில் சென்று விட்டான்..
மிஸஸ்..நிறை இது ஒன்னும் உங்க அப்பா வீட்டு ஆபிஸ் கிடையாது..எப்படி வேணுனாலும் இருக்க..கொஞ்சமாச்சும் வாங்குற சம்பளத்துக்கு உண்மையா வேலை செய்ங்க..இது தான் லாஸ்ட் வார்னிங்..என்று வர்ஷா பின்னாடி வந்து குடை பிடிக்கவும் ஸ்ஸ்ஸ் ஆஹ் ஓகே மேடம் நீங்க சொன்ன மாதிரி இது என்னோட அப்பா ஆபிஸ் இல்ல தான்..ஆனால் என்று கூற வேந்தன் அவளை பார்த்து ஏதோ எதிர்பார்ப்பது போல இருந்தது..உங்களுக்கும் தான் மிஸ் வர்ஷா சுகுமாறன்.. இது ஒன்னும் உங்க ஆபிஸ் இல்ல..எல்லாரையும் ஆர்டர் போட்டு அடக்க….மத்த எல்லாரும் வேணுனா கேப்பாங்க..நா கேக்க மாட்டேன்னு தெரிஞ்சும் இப்படி வந்து மொக்க வாங்குறிங்களே ஹையோ ஹையோ என்று நக்கலாக.பே.பே.பே..என்று கூறிக்கொண்டு சிரித்து விட்டு சென்று விட்டாள்..
வர்ஷாவிற்கு அவமானமாக இருந்தது.. நிறையை ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று நினைத்து தன் வேலையை பார்க்க சென்று விட்டாள்..
அடுத்த நாள் மதியம் வரை நல்ல தூக்கம் போட்ட நிறை போனால் போகுது என்று ஆபிஸிற்கு வந்தாள்..
நிறை..,நீ வந்ததும் உன்னை இளா சார் வர சொன்னாரு.
எதுக்கு டி அந்த மங்கி மண்டை வர சொல்லுது
அமைதியா பேசு டி..கேட்டுற போவுது..
கேட்டா கேக்கட்டுமே டி..என்ன செய்ய முடியும் வேலைய விட்டு தூக்க முடியும் வேறென்ன பண்ணுவான்..என்று கூறியவள். சரி சரி முறைக்காத போறேன்..
மே ஐ கம் இன் சார்..எஸ் உள்ள வாங்க..
கூப்பிட்டு விட்டீங்களாமே..,என்ன விஷயம்
ஏன் சொன்னாதான் மகாராணி வருவிங்களா..
வெட்டி பேச்சு பேசாம என்னதுக்கு கூப்பிட்டு விட்டீங்க
ம்ம்ம் நா வெட்டிய பேசுறேன்..சரிதான்..உணக்கெல்லாம் என்னோட அப்பா கொடுக்கிற இடம் டி..அதுனால இந்த ஆட்டம் போடுற..இது என்னனு தெரியுமா..எல்லோரா கம்பெனி ப்ரொஜெக்ட் ..
ஆமா சார்..அதுக்கென்ன…அத சொல்ல தான் கூப்பிட்டிங்களா…ஓகே பை ..பை
அதுக்குள்ள போனா எப்படி மேடம்..இது ஆயிரம் கோடி காண ப்ரொஜெக்ட்ன்னு தெரிஞ்சும் இதுல வடையை பிழிஞ்சு தின்றுக்க.. இது ரெடி பண்ண எனக்கு ஒன் மந்த் ஆச்சு.. நீ என்னடான்னா ஆயில் பிழிய எடுத்துருக்க..யூ யூஸ்லெஸ் இடியட்..
சரி இப்போ என்ன பண்ணனும்.. என்றாள் கூலாக..
செய்வதையும் செய்து விட்டு தப்பை உணராமல் நிற்கும் நிறை மீது கோபம் வந்தது..பளார் என ஒரு அறை விட்டான்..
நிறை அப்பொழுது தான் பார்த்தாள்.. நேற்று காலை வர்ஷா கொண்டு வந்த பைலை எடுத்து வடை சாப்பிட பேப்பரை கிழித்தது நியாபகம் வந்தது..அவள் வேண்டுமென்று பண்ணவில்லை தான்..தன் முட்டாள் தனத்தை எண்ணியவளுக்கு அவன் அடித்தது வலிக்கவில்லை போலும்..ஆனால் கண்ணீர் வழிந்தது ..அமைதியாக அவன் கண்களை பார்த்து ஐயம் ரியலி சாரி சார்..நானே சரி பண்ணி கொடுக்குறேன்..
கிழிப்ப.. திங்க தெரியும் நல்லா வாய் கிழிய பேச தெரியும்.. ஒரு வேலை கூட தெரியல..உனக்கு சம்பளம் ஒரு கேடு..கெட் லாஸ்ட்..என் முன்னாடி நிக்காத..என்று கோபத்தில் கத்தினான்..
நிறை அந்த ப்ரொஜெக்ட் பேப்பரை எடுத்து கொண்டு வெளியில் சென்று விட்டாள்..
சரியாக ஒரு வாரம் ஆபிஸிற்கு நிறை விடுப்பு எடுத்திருந்தாள்..அவள் செய்ததாக கூறிய அனைத்து தவறுகளையும் ஒன்று விடமல் சரி செய்தவள் அவன் முன் செல்லாமல் ஸ்வீட்டியை கொண்டு கொடுக்க சொல்லி விட்டாள்…
நீ கொடுக்க வேண்டித்தான டி நிறை
ப்ச்..அதெல்லாம் வேண்டாம்..அவனை பார்த்தாலே கடுப்பு ஆகுது.. நீ போய் கொடுத்துரு..அப்புறம் இது என்னோட ரெசிக்னேஷைன் லெட்டர் இதையும் கொடுத்துரு..
நிறை வேலைய விட்டு போறியா..
ம்ம்ம் ஆமா டி..என்னோட சொந்த ஊருக்கு போலாம்னு இருக்கேன்.. அப்பா அம்மா கூட இருக்க போறேன்…
ம்ம்ம் சரி நிறை என்று அவள் கொடுத்த டாகுமெண்ட்ஸ் எல்லாத்தையும் இளவேந்தனிடம் கொடுத்தவள்..
சார் இது நிறை கொடுக்க சொன்னங்க..
நீங்க அவங்களுக்கு வேலை செய் ரிங்களா இல்ல ஆபிசுக்காக வேலை செய்யறீங்களா..
அவங்க பண்ண தப்ப அவங்க தா சரி பண்ணனும்..போய்ட்டு அவங்கள வர சொல்லுங்க..
ஓகே சார்..சாரி..என்று வெளியில் நிறையிடம் அவன் கூறியதை சொன்னவள்..நீ போய் என்னனு கேளு நிறை…
ம்ம் சரி போறேன்..என்று அவன் அறைக்கு சென்றவள்..
நீங்களா வாங்க வாங்க மேடம் ஒரு வார லீவ் போதுமா..பார்த்தேன் செஞ்ச தப்ப சரி பண்ணிட்டீங்க போல..
ப்ச் சலித்தவள்.. இது என்னோட ரிசைன் லெட்டர் ..இனிமே நா வேலைக்கு வர மாட்டேன் ..என்று கூறினாள்..


apartment hotel near burj khalifa Commercial properties for rent Dubai 7 bedroom Villas for rent in Dubai