ATM Tamil Romantic Novels

Author name: Vishnu Priya

a77c4364-29a2-43d4-90f8-fcebe44666d4

ஏகாந்த இரவில் வா தேவதா! – 26&27 (விஷ்ணுப்ரியா)

ஏகாந்த இரவில் வா தேவதா  [26] யௌவனாவின் உடலெங்கிலும்… உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடி வந்தமையினால், ஓர் துணுக்கம் ஓடிக் கொண்டேயிருந்தது.  தன் விலா என்புகள் ஏகத்துக்கும் ஏறி இறங்க, தொண்டைக்குழியில் வியர்வை மணியொன்று சரேலென்று வழிய நின்றவள், தன்னையே பார்த்தபடி நின்றிருந்த கணவனை நோக்கி,  உயிர் உருக்கும் குரலில், “சத்சத்… யா..”என்றாள் யௌவனா.  ஏற்கனவே அந்தப் பொல்லாத பிரபாகரிடம் அகப்பட்டு நின்றிருப்பவனுக்குள்.. முருகேசுவை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற பதகளிப்பான எண்ணம் ஊறிக் கொண்டிருந்த […]

ஏகாந்த இரவில் வா தேவதா! – 26&27 (விஷ்ணுப்ரியா) Read More »

Pictures of Shiva

ஏகாந்த இரவில் வா தேவதா! – 24&25 (விஷ்ணுப்ரியா)

ஏகாந்த இரவில் வா தேவதா  [24] மனைவி கருவுற்றிருப்பது அறிந்த கணம்… சத்யாதித்தனோ ‘சின்ராசைக் கையிலேயே பிடிக்க முடியாது’ என்பதைப் போலத் தான் நடந்து கொண்டான்.  விளைநிலத்திற்கு வெகு அருகாமையில் இருக்கும் வீட்டில் தங்கியிருந்த வேல்பாண்டி – வாசுகி தம்பதியினருக்கு விஷயம் சொல்லப்பட.. அடுத்த நொடி.. தம்பதிவனத்தின் டவுன் சந்தைக்குச் சென்று,  அரை டஜன் பட்டுப்புடவை, தங்க வளையல், மோதிரம் என்று வாங்கி வந்து.. தங்கைக்கு அணிவித்து…. அந்த வீட்டையே அல்லோலகல்லோலப்படுத்திக் கொண்டிருந்தார் அந்த வெள்ளந்தி வேல்பாண்டி. 

ஏகாந்த இரவில் வா தேவதா! – 24&25 (விஷ்ணுப்ரியா) Read More »

Balenath photo

ஏகாந்த இரவில் வா தேவதா! – 23 (விஷ்ணுப்ரியா)

ஏகாந்த இரவில் வா தேவதா  [23] மூன்று மாதங்களுக்குப் பிறகு,  ஓர் இரவில், தம்பதிவனம் எங்கிலும் அடித்து ஊற்றிப் பெய்து கொண்டிருந்தது அடாவடியான மழை. அந்த சமயத்தில் தான் .. இரவு, பகல் பாராமல்.. அகழ்வாராய்ச்சி நடந்து கொண்டிருக்கும் பகுதியில் ஓர் அதிசயமும் நிகழ்ந்தேறியது.  வானின் மழை.. அந்தத் தம்பதிவனக் கிராமத்தின் ‘செம்பாட்டு’ மண்ணோடு இரண்டறக் கலந்து… பள்ளத்தை நோக்கி கரைபுரண்டு ஓடும் அளவுக்கு, அகோரமான மழை அது.  காதல் செய்யும் கன்னிப்பெண், வெட்கம் விட்டு இடைக்கிடை

ஏகாந்த இரவில் வா தேவதா! – 23 (விஷ்ணுப்ரியா) Read More »

a77c4364-29a2-43d4-90f8-fcebe44666d4

ஏகாந்த இரவில் வா தேவதா! – 22 (விஷ்ணுப்ரியா)

ஏகாந்த இரவில் வா தேவதா  [22] சத்யாதித்தன்.. அந்தக் கல்லுமலையின் உச்சிக்கு ஏறி வந்ததும், தன்னிரு முழங்கால்களைப் பிடித்துக் கொண்டே, குனிந்து மூச்சு வாங்கிக் கொண்டே, தன்னவளை நாடிப் போனான்.  அவள் இல்லாத போது அவனில் உருவாகியிருந்த பதற்றம்..அவளைக் கண்டதும்.. கொஞ்சம் கொஞ்சமாக அவனை விட்டும் அகல்வது போல இருக்க, இரவில் கானகம் தேடி அநாயசமாக வந்திருக்கும் மனைவியின் மீது.. பொல்லாத கோபம் எழுந்தது அவனுக்கு.  இருந்தாலும் அவனது கோபத்துக்கும் மேலாக அவன், அவள் மேல் வைத்திருந்த

ஏகாந்த இரவில் வா தேவதா! – 22 (விஷ்ணுப்ரியா) Read More »

a77c4364-29a2-43d4-90f8-fcebe44666d4

ஏகாந்த இரவில் வா தேவதா! – 21 (விஷ்ணுப்ரியா)

ஏகாந்த இரவில் வா தேவதா  [21] அன்று மதியம், தான் ஏற்கனவே திட்டமிட்டது போல இந்தியா செல்ல நாடியவன், தன் லக்கேஜில்.. உடைகளை அடுக்கி வைப்பதிலேயே மும்முரமாக இருந்தான்.  அவனுடைய லக்கேஜ்.. யௌவனாவின் மஞ்சத்தில் , “ஆ”வென்று திறந்திருக்க, வார்ட்ரோப்பிலிருந்து அவனது உடைகளை எடுத்து வந்து.. லக்கேஜிக்குள் திணிப்பதும், மீண்டும் வார்ட்ரோப்பை நோக்கி நடைபயில்வதுமாக இருந்தான் சத்யன்.  இன்று மாலை அவன் இலங்கையை விட்டும் இந்தியா செல்லப் போகிறான். அதுவும் தனக்கென்று சொந்தமான ‘பீகாக் ஏர்லைன்ஸ்” விமானத்தில். 

ஏகாந்த இரவில் வா தேவதா! – 21 (விஷ்ணுப்ரியா) Read More »

d4a03913-c6ff-4025-b45f-c98ff3d8e7bc

ஏகாந்த இரவில் வா தேவதா! – 20 (விஷ்ணுப்ரியா)

ஏகாந்த இரவில் வா தேவதா [20]அடுத்த நாள் காலை. முந்தைய நாள் இரவு மனைவி.. பித்துப் பிடித்தவள் போல நடந்து கொண்டதில்… இன்னும் அவள் பால் ஊடலுற்றவனாக, முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு தான் திரிந்து கொண்டிருந்தான் சத்யாதித்தன். தன் அன்புக் கணவனின் கோபத்தின் காரணம் இன்னதென்று அறியாமல்.. அவனை மலையிறக்குவதற்காக.. முன்பு போல் அவளை கண்களாலேயே காதல் செய்யும் அந்தப் பழைய சத்யாதித்தனை மீளவும் வரவழைப்பதற்காக படாதபாடு பட்டுக் கொண்டிருந்தாள் யௌவனா. சத்யனோ.. இன்னும் சீற்றம்

ஏகாந்த இரவில் வா தேவதா! – 20 (விஷ்ணுப்ரியா) Read More »

759dbac65bca78457ba41212582adf60

ஏகாந்த இரவில் வா தேவதா! – 18&19 (விஷ்ணுப்ரியா)

ஏகாந்த இரவில் வா தேவதா  [18] மஞ்சத்தில் அமர்ந்திருந்த நந்தினிக்கோ, அவன் தொடுகை அவளது ஆத்மா உள்ளூற ஓர் அருவெறுப்பைக் கொடுக்கலானது.  அவள் அருகே அமர்ந்திருப்பது… இருநூறு வருடங்களாக அவள் வன்மம் வைத்து காவு வாங்கக் காத்திருக்கும்.. அதே இராஜசிங்கன்!!  அவளுக்கென்றிருந்த ஒரே உறவான அவள் கணவனை, அவளிடம் இரு‌ந்து பிரித்து, கணவன் காட்டிய உன்னத அன்பில் விளைந்த முத்தான வாரிசையும் அழித்த.. அவளது பரம எதிரி இராஜசிங்கன்.  சத்யாதித்தன் வேறு.. அரசன், ‘ஸ்ரீ விக்கிர இராஜசிங்கனி’ன்

ஏகாந்த இரவில் வா தேவதா! – 18&19 (விஷ்ணுப்ரியா) Read More »

9b472f10-c28b-4882-a3ad-19d5928eb98a

ஏகாந்த இரவில் வா தேவதா! – 16 & 17 (விஷ்ணுப்ரியா)

ஏகாந்த இரவில்..                    வா தேவதா                        [16] தலைக்கு குளித்து விட்டு வந்து.. கையில்லாத வெறும் பெனியன் மற்றும் வேஷ்டியில், மஞ்சத்தில் அமர்ந்திருந்தவனின் ஈரத்தலையைத் துவட்டிக் கொண்டிருந்தாள் யௌவனா.  இந்தியாவிலிருந்து.. திருமணமான ஒரே மாதத்தில், ‘கணவன் தனக்கு துரோகம் இழைத்து விட்டான்’ என்றழுது கொண்டு, ‘ஊடல் உற்றவளாக வந்து நின்ற

ஏகாந்த இரவில் வா தேவதா! – 16 & 17 (விஷ்ணுப்ரியா) Read More »

The mistress

ஏகாந்த இரவில் வா தேவதா! – 14&15 (விஷ்ணுப்ரியா)

ஏகாந்த இரவில் வா தேவதா  [14] யௌவனா வீட்டின் நடுக்கூடத்தில் இருக்கும், சொகுசான ஒற்றை சோபாவில், தன் முள்ளந்தண்டு முதுகு கூனாமல், அமர்ந்து,  கைகளில் புத்தகத்தை ஏந்திப் பிடித்திருப்பதைப் போல ‘ஐபேட்டினை’ ஏந்திப்பிடித்த வண்ணம்.. அசத்தலான வெள்ளை வேஷ்டி, சட்டையில்…  பார்ப்பவர் கண்களை கவரும் வகையில்.. வெகு வெகு ஸ்மார்ட்டாக அமர்ந்திருந்தான் சத்யாதித்தன். அவன் அமர்ந்திருக்கும் தோரணையைப் பார்க்கும் பொழுதினிலே, ‘ராம்ராஜ’வேஷ்டிகள் விளம்பரத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல் போல.. அத்தனை நேர்த்தியாக இருந்தது சத்யாதித்தனின் ஒவ்வொரு அங்க அசைவுகளும். 

ஏகாந்த இரவில் வா தேவதா! – 14&15 (விஷ்ணுப்ரியா) Read More »

7d1f69a0-24d8-46c4-9b2e-1c59dc7ea7f8

ஏகாந்த இரவில் வா தேவதா! – 12 & 13 (விஷ்ணுப்ரியா)

ஏகாந்த இரவில்.. வா தேவதா [12] சுமார் இற்றையிலிருந்து இருநூறு வருடங்களுக்கு முன்னர்.. இப்போதிருப்பதையும் விட வெகு அழகாக இருந்தது ‘கண்டி சமஸ்தானம்’.  நாடுபிடிக்க வந்த வெள்ளையனுக்கு நாட்டின் இதர பிரதேசங்களை விடவும் மத்தியிலுள்ள குறிஞ்சி நில எழில் சொட்டும்.. கண்டி பிடித்துப் போனதுக்கு காரணமே அதன் நிறைவான அழகே.  வானெங்கிலும் புகைமண்டலம் எழுந்து கிளம்பினாற் போன்று.. வெண்பஞ்சு மேகங்கள் பவனி வந்து கொண்டிருக்க, அற்றைக்கும் எற்றைக்கும் யௌவனம் குன்றாத நிலவும்.. தன் பால் வண்ண ஒளியை..

ஏகாந்த இரவில் வா தேவதா! – 12 & 13 (விஷ்ணுப்ரியா) Read More »

error: Content is protected !!
Scroll to Top