ATM Tamil Romantic Novels

Author name: Vishnu Priya

759dbac65bca78457ba41212582adf60

ஏகாந்த இரவில் வா தேவதா! – 18&19 (விஷ்ணுப்ரியா)

ஏகாந்த இரவில் வா தேவதா  [18] மஞ்சத்தில் அமர்ந்திருந்த நந்தினிக்கோ, அவன் தொடுகை அவளது ஆத்மா உள்ளூற ஓர் அருவெறுப்பைக் கொடுக்கலானது.  அவள் அருகே அமர்ந்திருப்பது… இருநூறு வருடங்களாக அவள் வன்மம் வைத்து காவு வாங்கக் காத்திருக்கும்.. அதே இராஜசிங்கன்!!  அவளுக்கென்றிருந்த ஒரே உறவான அவள் கணவனை, அவளிடம் இரு‌ந்து பிரித்து, கணவன் காட்டிய உன்னத அன்பில் விளைந்த முத்தான வாரிசையும் அழித்த.. அவளது பரம எதிரி இராஜசிங்கன்.  சத்யாதித்தன் வேறு.. அரசன், ‘ஸ்ரீ விக்கிர இராஜசிங்கனி’ன் […]

ஏகாந்த இரவில் வா தேவதா! – 18&19 (விஷ்ணுப்ரியா) Read More »

9b472f10-c28b-4882-a3ad-19d5928eb98a

ஏகாந்த இரவில் வா தேவதா! – 16 & 17 (விஷ்ணுப்ரியா)

ஏகாந்த இரவில்..                    வா தேவதா                        [16] தலைக்கு குளித்து விட்டு வந்து.. கையில்லாத வெறும் பெனியன் மற்றும் வேஷ்டியில், மஞ்சத்தில் அமர்ந்திருந்தவனின் ஈரத்தலையைத் துவட்டிக் கொண்டிருந்தாள் யௌவனா.  இந்தியாவிலிருந்து.. திருமணமான ஒரே மாதத்தில், ‘கணவன் தனக்கு துரோகம் இழைத்து விட்டான்’ என்றழுது கொண்டு, ‘ஊடல் உற்றவளாக வந்து நின்ற

ஏகாந்த இரவில் வா தேவதா! – 16 & 17 (விஷ்ணுப்ரியா) Read More »

The mistress

ஏகாந்த இரவில் வா தேவதா! – 14&15 (விஷ்ணுப்ரியா)

ஏகாந்த இரவில் வா தேவதா  [14] யௌவனா வீட்டின் நடுக்கூடத்தில் இருக்கும், சொகுசான ஒற்றை சோபாவில், தன் முள்ளந்தண்டு முதுகு கூனாமல், அமர்ந்து,  கைகளில் புத்தகத்தை ஏந்திப் பிடித்திருப்பதைப் போல ‘ஐபேட்டினை’ ஏந்திப்பிடித்த வண்ணம்.. அசத்தலான வெள்ளை வேஷ்டி, சட்டையில்…  பார்ப்பவர் கண்களை கவரும் வகையில்.. வெகு வெகு ஸ்மார்ட்டாக அமர்ந்திருந்தான் சத்யாதித்தன். அவன் அமர்ந்திருக்கும் தோரணையைப் பார்க்கும் பொழுதினிலே, ‘ராம்ராஜ’வேஷ்டிகள் விளம்பரத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல் போல.. அத்தனை நேர்த்தியாக இருந்தது சத்யாதித்தனின் ஒவ்வொரு அங்க அசைவுகளும். 

ஏகாந்த இரவில் வா தேவதா! – 14&15 (விஷ்ணுப்ரியா) Read More »

7d1f69a0-24d8-46c4-9b2e-1c59dc7ea7f8

ஏகாந்த இரவில் வா தேவதா! – 12 & 13 (விஷ்ணுப்ரியா)

ஏகாந்த இரவில்.. வா தேவதா [12] சுமார் இற்றையிலிருந்து இருநூறு வருடங்களுக்கு முன்னர்.. இப்போதிருப்பதையும் விட வெகு அழகாக இருந்தது ‘கண்டி சமஸ்தானம்’.  நாடுபிடிக்க வந்த வெள்ளையனுக்கு நாட்டின் இதர பிரதேசங்களை விடவும் மத்தியிலுள்ள குறிஞ்சி நில எழில் சொட்டும்.. கண்டி பிடித்துப் போனதுக்கு காரணமே அதன் நிறைவான அழகே.  வானெங்கிலும் புகைமண்டலம் எழுந்து கிளம்பினாற் போன்று.. வெண்பஞ்சு மேகங்கள் பவனி வந்து கொண்டிருக்க, அற்றைக்கும் எற்றைக்கும் யௌவனம் குன்றாத நிலவும்.. தன் பால் வண்ண ஒளியை..

ஏகாந்த இரவில் வா தேவதா! – 12 & 13 (விஷ்ணுப்ரியா) Read More »

7d1f69a0-24d8-46c4-9b2e-1c59dc7ea7f8

ஏகாந்த இரவில் வா தேவதா! – 10 & 11 (விஷ்ணுப்ரியா)

ஏகாந்த இரவில் வா தேவதா  [10] மரம் வீழப் போன யௌவனாவும் சரி, அவளைக் காப்பாற்ற தன் இன்னுயிரை துச்சமாகத் துறந்து.. தன் உள்ளங்கவர்ந்த பெண்ணின் உயிரைக் காப்பாற்ற வீரமாக செயற்பட்ட சத்யாதித்தனும் சரி.. அந்த அகோர நினைவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்து கொண்டிருக்க,  அதன் தாக்கத்திலிருந்து மீளவே முடியாமல் நின்றிருந்தது என்னவோ வசுந்தரா தேவியம்மாளே தான்.  பெற்ற மனம் அல்லவா?  மகன்.. தன் இதயம் கவர்ந்த பெண்ணின் உயிர் காக்க.. இடையிட்ட கணம்.. அவன்

ஏகாந்த இரவில் வா தேவதா! – 10 & 11 (விஷ்ணுப்ரியா) Read More »

7d1f69a0-24d8-46c4-9b2e-1c59dc7ea7f8

ஏகாந்த இரவில் வா தேவதா! – 7,8 & 9 (விஷ்ணுப்ரியா)

ஏகாந்த இரவில் வா தேவதா!!  [7] அடுத்தநாள் காலை,  தன்னையொரு பிரேதாத்மா.. இருநூறு வருஷங்களாக நெஞ்சில் சுமந்திருந்த பழிவெறியுடன்.. உயிரைக் காவு கொள்ள வந்ததையும்,  தன் வம்சத்துக்கென்றே உரித்தான காவல் அடிமையின் ஆத்மா அவனைக் காத்ததையும்.. கூட அறியாமல்… இரவில் அவள் பற்றிய கற்பனைகளுடனேயே துயின்று எழுந்திருந்த இராஜகுல சத்யனுக்கு.. காலை நற்காலையாகவே அமைந்திருந்தது.  எப்போதும் இந்தியாவின் தலைநகரான தில்லியில்.. காலை புலர்ந்ததும்.. இயந்திரத்தனமாக எழுந்து.. வாகனங்களின் புகைக்கும் , தூசுதும்பட்டைகளுக்கும் மத்தியில்தன் அலுவலகம் செல்பவனுக்கு,  குறிஞ்சி

ஏகாந்த இரவில் வா தேவதா! – 7,8 & 9 (விஷ்ணுப்ரியா) Read More »

Elevate Your Aesthetic Experience_ Devi Ambika AI Images Unveiled

ஏகாந்த இரவில் வா தேவதா! – 5&6 (விஷ்ணுப்ரியா)

ஏகாந்த இரவில்… வா தேவதா  [5] பஞ்சாயத்து நடந்து முடிந்த அதே இரவு!  என்ன தான் கொழும்பு மாநகரத்தில் அவள் மாடர்ன் பெண்ணாக திரிந்து கொண்டிருந்தாலும் கூட,  சொந்த ஊருக்கு வந்ததும் கொஞ்சம் அடக்க ஒடுக்கமாகவே அமைந்திருந்தது அவளது ஆடைகள் எல்லாம்.  கண்டியின் குளிரைத் தாக்குப் பிடிக்கும் வகையில் தன் மணிக்கட்டு வரை மறக்கும் கை நீண்ட டீஷேர்ட்டும், இடுப்புக்கு கீழே ஒரு பிலோசோபேன்ட்டும் அணிந்து, தன் சொந்த வீட்டில் நடமாடிக் கொண்டிருந்தவளுக்கோ,  ஏனோ முன்பின் தெரியாத

ஏகாந்த இரவில் வா தேவதா! – 5&6 (விஷ்ணுப்ரியா) Read More »

Elevate Your Aesthetic Experience_ Devi Ambika AI Images Unveiled

ஏகாந்த இரவில் வா தேவதா! – 3&4 (விஷ்ணுப்ரியா)

ஏகாந்த இரவில்.. வா தேவதா!  [3]   அன்று மதியம் உணவினை முடித்து விட்டு அப்படியே வாஷ் ரூம் சென்றவள், தன்னுடைய உடையினை இலேசாக சரி செய்த வண்ணம்,  ஆடையின் நேர்த்தி பிசகாமல் வெளியே வந்த போது.. அலுவலகமே பரபரப்பாக இருப்பதை உணர்ந்தாள்.  அதிலும் குறிப்பாக அவளுடன் பணி புரியும் பெண் அலுவலகர்கள், அந்த வெண்மையான டைல்ஸ் தரையில் ஹீல்ஸ் பாதங்களை தடதடவென பதித்த வண்ணம்,  இவளொருத்தி இருப்பதைக் கூட கணக்கில் எடுக்காமல், போகிற போக்கில் யௌவனத்தமிழ்ச்செல்வியையும்

ஏகாந்த இரவில் வா தேவதா! – 3&4 (விஷ்ணுப்ரியா) Read More »

Screenshot_20240422-194056_Copilot

ஏகாந்த இரவில் வா தேவதா! – 2 (விஷ்ணுப்ரியா)

 ஏகாந்த இரவில்.. வா தேவதா!  [2]   இந்தியா, தில்லி.  டெராஸிலிருந்தும் வந்து கொண்டிருந்த மெல்லிய மஞ்சள் நிற மின்விளக்கொளி அங்கிருந்த நீச்சல் தடாகத்தில் பட்டுத் தெறிக்க,  கரை தட்டிக் கொண்டிருந்த நீர் அலைகளோ பொன் வண்ணமாக காட்சி தருவது… பார்ப்பதற்கு அத்தனை இரம்மியம்.  சீமெந்திலான மூன்று பக்கச் சுவர்களும், இன்னொரு பக்கம் பாரிய கதவுகள் கொண்ட ஓர் கண்ணாடிச் சுவரும்…  அதனையொட்டி அமைந்த டெராஸூம்… டெராஸோடு மினுங்கும் நீச்சல் தடாகமும் என… வெகுசொகுசான அறை தான்

ஏகாந்த இரவில் வா தேவதா! – 2 (விஷ்ணுப்ரியா) Read More »

Screenshot_20240421-181033_Copilot

ஏகாந்த இரவில் வா தேவதா! – 1 (விஷ்ணுப்ரியா)

ஏகாந்த இரவில்… வா தேவதா!![1] கிபி 1815, பங்குனி மாதம், 01,நிலத்தின் ஆழத்தில் இருந்து.. உச்சியை நோக்கி.. அசைக்கவே முடியாத திடகாத்திரத்துடன் வளர்ந்திருந்தன கரும்மலைகள்!! பேருந்தின் நெரிசலில் போகிற போக்கில் கன்னிப்பெண்களிடம் சில்மிஷம் புரியும் விடலைப் பையன்கள் போல, அந்தக் கரும்மலைகளின் முகடு தொட்டு.. உரசிப் போய்க் கொண்டேயிருந்தன வெண்பஞ்சு மேகங்கள்!! மலைமுகடுகள் தொட்டு உரசி வந்த வெண்பஞ்சு மேகங்கள், முழுமதி நிலவையும் உரச வருவது பிடிக்காத தென்றல் காற்றோ, அவை நிலவை நாடி வந்த போதெல்லாம்..

ஏகாந்த இரவில் வா தேவதா! – 1 (விஷ்ணுப்ரியா) Read More »

error: Content is protected !!
Scroll to Top