ATM Tamil Romantic Novels

எங்கேயும் காதல்! – 7&8 (விஷ்ணுப்ரியா)

எங்கேயும் காதல்!        [7] “இது தான்தான் பீலியா?”-கோர்த்திருந்த விரல்களை அவனிலிருந்தும் பிரிக்காமல் கேட்டாள் அக்னிமித்ரா.  அதிமன்யுவின் வீடிருக்கும் மேடான இடத்திலிருந்து, கொஞ்சம் பள்ளமாகச் செல்லும் சாலை வழி இறங்கி வந்தால்.. சாலையின் இருமருங்கிலும் பூதாகரமாக வளர்ந்திருந்தது காட்டு மரங்கள்.  இடது பக்க காட்டு மரங்களின் ஒற்றையடி மண்பாதை வழியே சென்றால்.. அவன் சித்தரித்த பீலி!!  தன் தலைவியின் நீண்ட கண்ணிமைகள் படபடப்பதை இரசித்துப் பார்த்துக் கொண்டே சொன்னான் அவன், “ம்.. ஆமா..”என்று.  அவன் […]

எங்கேயும் காதல்! – 7&8 (விஷ்ணுப்ரியா) Read More »

என் மோகக் தீயே குளிராதே 24&25

அத்தியாயம் 24   “ஆஆஆ..அச்.. அஅச்..”   “நேத்தே சொன்னேன்.. தலைய துவட்டிட்டு தூங்கு.. சளி பிடிச்சுக்கும்னு.. என் பேச்சை எங்க கேட்குற? இப்ப அச்.. ஆச்சுன்னு தும்மிக்கிட்டு திரியுற.. இந்தா.. இந்த கஷாயத்தை குடி..” என்ற ஹாசினி, ஹர்ஷவர்தனின் கையில் டம்ளரை திணிக்க, அதனை எட்டிப் பார்த்தவனின் முகம் அஷ்டகோணலாகியது.    “இது கஷயமா?”   “பின்ன இல்லையா? ம்ம்.. சீக்கிரம் குடி..”   “பார்க்கவே கருப்பா.. பயங்கரமா இருக்குடி.. வேணான்டி.. நான் டாக்டர்கிட்ட போய்

என் மோகக் தீயே குளிராதே 24&25 Read More »

95E8643E-491E-4D59-A677-DB1F80061AEF

25 – ஆடி அசைந்து வரும் தென்றல்

25 – ஆடி அசைந்து வரும் தென்றல்

மொத்த குடும்பமும் திருகுமரன் வீட்டில் கூடியிருந்தனர். இளையவர்களில் சரண் தவிர மற்றவர்கள் கண்ணன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பெரியவர்கள் நிலைகுலைந்து போயிருந்தனர். என்ன செய்வது…என தெரியாமல் ஆளுக்கொரு சிந்தனை. ஏதாவது செய்து.. எப்படியாவது தங்கள் குடும்பத்திற்கு இழுக்கு வராது செய்தாக வேண்டிய கட்டாயம்.சுந்தரமூர்த்தியோ கோபத்தின் உச்சத்தில்…. கோபம் இருக்க தானே செய்யும்.. ஆணோ.. பெண்ணோ.. ஒழுக்கம் என்பது அவசியம். அந்த ஒழுக்கம் தவறும் போது அந்த குடும்பத்தின் மேல் சமூகத்தின் பார்வையே மாறி் தானே போகிறது.

தேவர்ஷியை நடுவில் நிறுத்தி அவளை கேள்விகளால் கார்னர் பண்ணினர்.

“லவ் பண்ணினியா.. யாரை..”

“இல்ல.. லவ் பண்ணறேனு சொல்லியிருந்தா.. நாங்களே கல்யாணம் பண்ணி வச்சிருப்போம்ல.. “

“எதுக்கு இப்படி பண்ணின..”

“இப்பவாவது சொல்லு.. யார் என்னனு.. “

“எவனாவது உன்கிட்ட முறை தவறி நடந்துகிட்டானா..”

“அப்படி இருந்திருந்தா.. யார் அவன்.. எங்ககிட்ட சொல்லியிருக்கலாமல… கட்டி வச்சு வெளுத்திருப்போம்..”

எதுவும் பேசாமல் அமைதியாக அழுது கொண்டிருந்தாள். என்ன சொல்லுவாள்.. அனிவர்த்.. அவன் தெளிவாக தான் இருந்தான். விருப்பம் உள்ள வரை தான் இந்த உறவு.. இதில் காதல் கல்யாணம் என்ற பேச்சிற்கு இடமில்லை இதை சொல்லி தானே… அவன் உறவுக்கு அழைத்தான். கடைசி வரை அவன் முடிவில் அவன் உறுதியாக தானே இருந்தான்.

அவன் மேல் உள்ள காதல் பித்தில் அவனோடு பழகியது நான் தானே.. தன் மேல் அவன் காட்டும் அதீத ஆர்வம்.. நாளடைவில் தன்னை இழக்க விரும்பாமல் கல்யாணம் செய்து கொள்வான் என நினைத்தது எல்லாம் தன் தவறு தானே.. இதில் எங்கிருந்து அவனை சொல்லமுடியும். அதுவும் அவன் சொன்னதும்.. அதையும் ஏற்று கொண்டு தான் பழகியது தெரிந்தால் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என மிகவும் பயந்தாள்.

குழந்தை என கேட்டதும் அதிர்ந்தவள்.. முதலில் எப்படி எடுத்து கொள்வது என அவளுக்கு தெரியவில்லை. தன் காதலின் கிறுக்குதனத்தின் உச்சம் தான் இந்த குழந்தை அப்படி தான் அவளால் நினைக்க முடிந்தது. அவனை எப்படி இதில் பொறுப்பாக்க முடியும். அவன் கண்டிசன்களுக்கு எல்லாம் கட்டுப்பட்டு தானே அவனுக்கு இணங்கினேன்.. அப்போ பிள்ளைக்கும் நான் தானே பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

என்ன ஆனாலும் அது என் குழந்தை.. என் உதிரத்தில் உதித்தது… என் குழந்தை.. என் காதலுக்கு கிடைத்த அன்பு பரிசு.. நான் காதலித்தேன் என் காதலில் விளைந்த முத்து…என் காதலின் சின்னம் என நினைக்க.. நினைக்க… அவளுள் தாய்மை பெருகி உவகை கொண்டது. எனக்கு மட்டுமே குழந்தை.. இந்த குழந்தை போதும் என் வாழ்க்கைக்கு… என குழந்தையை வாழ்வாதரமாக பற்றி கொண்டாள்.

எந்நேரமும் எதோ யோசனையில் இருக்கும் மகளிடம் கௌசல்யா என்ன கேட்டும் பதிலில்லை. இரண்டு நாட்கள் இவர்களாக சொல்வார்கள் என காத்திருந்த குடும்பத்தினர் ஒன்றும் சொல்லாமல் இருக்கவே.. காலையிலேயே வந்து.. விசாரணையை ஆரம்பித்துவிட்டனர்.

அவள் எதுவும் பேசாமல் இருக்கவும்.. எல்லோருக்கும் கோபம் வந்தது. சுந்தரமூர்த்தியோ..

“குமரா.. உன் பொண்ணு உங்ககிட்டயாவது ஏதாவது சொன்னாளா…” திருகுமரனைப் பார்க்க…

அவருக்கே தெரியாததை அவர் என்ன என்று சொல்வார். இல்லை எனும் விதமாக தலையை ஆட்டினார்.

ஆடிட்டிங் படித்து கவர்மெண்ட் வேலை தேடிக் கொண்டதோடு தங்கள் குடும்ப தொழிலுக்கும் ஆடிட்டிங் செய்யும் தன் சித்தப்பாவின் மேல் எப்போதும் தனி மதிப்பு உண்டு சரணுக்கு… எல்லோர் முன்பும் அவர் தலை குனிந்து நிற்பதை பாரத்தவனுக்கு தேவர்ஷியின் மேல் கோபம் அதிகமானது. கோபத்தில் தேவர்ஷியை ஓங்கி ஒரு அறைவிட்டான்.

சரண் அடிப்பான் என யாரும் எதிர்பார்க்கவில்லை.. வீட்டின் முதல் பெண் வாரிசு அதுவும் இரண்டு தலைமுறையாக பெண் வாரிசு இல்லாமல் பிறந்தவள்.. என அவள் மேல் எல்லோருக்கும் பாசம் தான். அவளிள் துடுக்குத்தனமும்… அசட்டு தனமும் தான் அவர்களுக்கு பிடிக்காமல் போனது.

“டேய் சரண் வேண்டாம்..” கண்ணன் வந்து தடுத்தார்.

“அது என்ன பழக்கம் .. பொம்பள புள்ளைங்க மேல கை வைக்கிற பழக்கம்..” என மீனாட்சி மகனை கண்டிக்க…

என்ன தான் மகள் தவறு செய்திருந்தாலும் தாயாக கௌசல்யாவின் மனம் துடித்து தான் போனது. புடவை தலைப்பால் வாயை மூடிக் கொண்டு அழுதார்.

திருகுமரன் என்ன சொல்லுவார்.. அவருக்கு மகள் தேவதை..கள்ள கபடமில்லா குழந்தை…என நினைத்திருக்க… மகள் எவ்வளவு பெரிய தப்பை மறைத்திருக்கிறாள் என அறிந்த நொடி ஒரு தகப்பனாக மரித்து போனார்.

“பின்னே என்ன சித்தப்பா… குமரன் சித்தப்பாவை பாருங்க.. எப்படி வேதனையோடு நிற்கிறாரு.. எல்லாம் இவளால தான.. இத்தனை பேர் கேட்கிறோமே.. ஏதாவது வாய் திறந்து சொல்றாளா பாருங்க..”

“சரண் வேண்டாம்.. அவளை தொடாத இந்த தரங்கெட்ட நாய தொட்டா நமக்கு தான் அசிங்கம்.. உடம்பு அரிப்பெடுத்து போய் எவன்கிட்டயோ வயித்துல வாங்கிட்டு வந்திருக்கா.. ச்சை.. இந்த …. நாய இனி நம்ம குடும்பத்துல வச்சுக்க முடியாது. இவளுக்கு இந்த வீட்ல இடமில்லை.. கழுத்தை பிடித்து வெளிய தள்ளு…”என சுந்தரமூர்ததி கர்ஜிக்க..

அவர் வீட்டை விட்டு போக சொல்வார் என எதிர்பார்க்காமல் எல்லோரும் அதிர்ந்து நின்றனர். தேவர்ஷியோ கிளம்ப எத்தனிக்க… திருகுமரன் வேகமாக வந்து மகளின் கை பிடித்து தடுத்து நிறுத்தினார். அதற்குள்

“அப்பா.. என்ன இப்படி பேசறிங்க.. போ சொன்னா எங்க போவா அவ..” என கண்ணன் பேச…

“எங்கயோ போகட்டும்.. இவளால நம்ம குடும்ப கௌரவம் போயிடும்.. இந்த தறுதலையால மத்த புள்ளைங்க கெட்டு போயிடும் .. அதனால இவளை துரத்தி விடறது தான் நமக்கு நல்லது..”

அது வரை தவறு தன் மகள் மேல் இருக்க.. தந்தையின் கோபத்திற்கு கட்டுப்பட்டு இருந்தவர்.. தன் மகளை வெளியே அனுப்ப சொல்லவும்… தந்தையை எதிர்த்து நின்றார்.

“அப்பா என் பொண்ண நான் எங்கயும் அனுப்பமாட்டேன். அவ இங்க தான் இருப்பா..”

“அவள இங்க வச்சிருந்தா நம்ம சொந்தங்களுக்கு எல்லாம் தெரிஞ்சிடும்.. எனக்கு ஒரு பேரு… ஒரு மரியாதை இருக்கு.. எனக்கு தான் அவமானம்… இவள எங்கயாவது அனுப்பிடு.. கேட்டா வெளிநாட்ல படிக்கறா.. இல்ல வேல பார்க்கிறா.. சொல்லிக்கலாம்..”

“இல்லப்பா அப்படி பண்ண முடியாது.. என் மக சொல்ற மாதிரிஇருந்தா சொல்லியிருப்பா.. அவளே உள்ளுக்குள்ள என்னத்தையோ போட்டு மறுகிட்டு இருக்கா.. இந்த நிலைல என் பொண்ண என்னால தனியா விடமுடியாது..”

சுந்தரமூர்த்தியோ “குமரா.. அந்த சனியனோட நீயும் போனா என் சொத்துல் ஒரு சல்லி பைசா தரமாட்டேன். இந்த வீடு கூட இன்னும் என் பேர்ல தான் இருக்கு.. அத மறந்திடாத.. உன் பொண்ணு தான் வேணும்னா நீங்களும் இந்த வீட்டை விட்டு போகனும்..” என்றார் ஆவேசமாக..

உடனே சற்றும யோசிக்காமல் மகளுக்காக சட்டென குடும்பம் சொத்து எல்லாவற்றையும் நொடியில் தூக்கி எறிந்தார்.

“தப்பு பண்ணி இருந்தாலும் என் பொண்ண நான் எப்படியோ போனு தெருவுல விடமுடியாது. உங்க பேர் என் பொண்ணால கெட வேண்டாம். நாங்க குடும்பத்தோட வேற ஊருக்கு போயிடறோம்..” என ஒரு தந்தையாக தன மகளை அந்த நிலையிலும் விட்டு கொடுக்கவில்லை.

“அண்ணா.. வேண்டாம்..” என கண்ணனும்..

“என்ன சித்தப்பா..” என சரணும் தடுக்க..

விஸ்வநாதன் தந்தையின் பேச்சை ஆமோதிப்பது போல அமைதியாக இருந்து கொண்டார்.

“இல்ல வேண்டாம்.. அப்பானு நான் இருக்கும் போது என் பொண்ணு அநாதை மாதிரி எங்க போவா.. அவளுக்கு கடைசி வரைக்கும் நான் துணை இருப்பேன்.. ஒரு பத்து நாள் டைம் கொடுங்க.. நாங்க கிளம்பிடறோம்”

கண்ணன் எதோ சொல்ல வர.. எல்லோரையும் பார்த்து கை எடுத்து கும்பிட்டவர்.. மகளையும் மனைவியையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றுவிட்டார்.

சொன்னது போலவே திருகுமரன் டிரான்ஸபர் வாங்கி கொண்டு டெல்லி சென்றுவிட்டனர். பிரவீனின் படிப்புக்காக ஹாஸ்டலில் சேர்க்க பாரக்க.. கண்ணன் கோமதி தம்பதியர் “ நாங்க பார்த்துக்கமாட்டோமா.. எங்களை எதுக்கு தள்ளி வைக்கறிங்க..” என கோபப்பட..

தன் மகளை வேண்டாம் என சொன்ன இடத்தில் மகனை விட்டு வைக்க.. தன்மானம் இடம் கொடுக்காததால்.. மகனை பிடிவாதமாக ஹாஸ்டலில் சேர்த்துவிட்டார்.

பெற்றவர்கள் தன்னிடம் எதுவும் கேட்கவில்லை என்றாலும் தன்னை பார்த்து வருந்துவதை கண்டு தேவர்ஷி பொறுக்க முடியாமல்… தான் முறை தவறி எல்லாம் போகவில்லை. எனக்கு ஒருவரை பிடித்திருந்தது. ரகசிய கல்யாணம் செய்து கொண்டோம். சில நாட்கள் வாழ்ந்தோம். ஒத்துவரவில்லை.. பிரிந்துவிட்டோம்.. என சொல்ல..

திருகுமரன் யார் என சொல்… வேண்டுமானால் நான் பேசி பார்க்கிறேன்.. என கேட்க பிடிவாதமாக மறுத்துவிட்டாள். இனி இதை பற்றி பேசினால் கண்காணாமல் எங்கயாவது போயிடுவேன் என மிரட்ட.. அதன்பின் அதை பற்றி பேசுவதே இல்லை. இருவரும் அமைதியாக மகளை தாங்கி கொண்டனர்.

தேவர்ஷி எதிலும் பிடிப்பு இல்லாமல் இருக்க… அவளை கவனித்துக் கொள்வதே பெரும் பாடாகி போனது. ஷாஷிகா பிறந்து பால்குடி மறக்கும் வரை அமைதியாக இருந்த திருகுமரன் மகளை படிப்பின் பக்கம் திசை திருப்பிவிட்டார்.

தனது பொல்லாத கணவனின் நினைவுகளை மறக்க.. படிப்பில் தன்னை வலுகட்டயமாக துணித்து கொண்டாள். ஏற்கனவே நன்றாக படிக்க கூடியவள் என்பதால் படிப்பு அவள் வசமாகி போக…படித்து அரசு தேர்வும் எழுதி தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் நல்ல பதவியில் வேலை கிடைத்துவிட்டது. அவளுடைய வேலையே அவளுக்கு ஒரு மதிப்பை ஈட்டு தந்திருந்தது.

இந்த ஏழு வருடங்களில் அவள் படிப்பும் பதவியும் அவளுக்கு ஒரு ராஜகம்பீரத்தை கொடுத்து இருந்தது. உறவுகளிடையே தேவர்ஷியின் கணவர் வெளிநாட்டில் இருக்கிறார் என சொல்லி சொல்லி நம்ப வைத்து இருந்தனர்.

சுந்தரமூர்த்தி எந்த பேத்தியை குடும்பத்தின் அவமானசின்னம் என நினைத்தாரோ.. இன்று அந்த பேத்தியின் வேலையும் அவளின் கம்பீரமும் அவரை மாற்றி இருந்தது. வயதின் தள்ளாமையும் அவரின் மாற்றத்திற்கு ஒரு காரணம்.. பேத்தியை சற்றே குடும்பத்திற்குள் அனுமதித்தார் தான். ஆனால் தேவர்ஷி குடும்ப நிகழ்வுகளுக்கோ.. உறவுகளின் விழாவிலோ அதிகம் கலந்துக்கமாட்டாள். எதற்கும் பெற்றோரை அனுப்பிவிடுவாள். அவர்களும் ஷாஷிகாவோடு சென்று வருவர்.

டெல்லியில் இருந்து தேவர்ஷிக்கு கொல்கத்தாவிற்கு மாற்றலாக.. திருகுமரன் விருப்ப ஓய்வு வாங்கி கொண்டார். இன்றும் அவர்கள் தொழிலுக்கு அவர் தான் ஆடிட்டர்.கொல்கத்தாவில் இரண்டு வருடங்கள் இருந்து விட்டு சென்னைக்கு மாற்றலாகி விட.. இப்போ தேவர்ஷி சென்னை வந்து மூன்று மாதங்களாகிவிட்டது.

அவர்கள் வீட்டிற்கே சுந்தரமூர்ததி அழைத்தும் கூட தேவர்ஷி போகாமல் வைராக்கியமாக ஒரு லக்ஸரி ப்ளாட் வாங்கி குடியேறிவிட்டாள். இப்பவும் தேவர்ஷியோடே இருந்து கொண்டனர் அவளின் பெற்றவர்களும் பிரவீனும்…

சென்னை வர அவளுக்கு இஷ்டமில்லை தான். அவளின் காதல் குளத்தின் அடியில் தங்க விட்ட பாசியாக.. அடிமனதில் தேங்கிவிட்டது. எங்கே அனிவர்த்தை மீண்டும் பார்க்க வேண்டி வந்தால்… மேலெழும்பி அவன் பாதத்தில் தன்னை மண்டியிட்டு முத்தமிட வைத்திடுமோ.. தன்மானம் அடிபட்டுவிடுமோ.. என்ற பயம்

பெற்றவர்களால் முன் போல் சென்னைக்கு அலைய முடியவில்லை. ஷாஷிகாவும் பெற்றவர்களுடன் சென்று வந்ததில் அவளும் உறவுகளை தேட…. அதிலும் அந்த புத்திசாலி குழந்தை கேட்கும் கேள்விகளில் அவளின் தந்தையின் தேடலை கண்டு கொண்டவளுக்கு இன்னும் இன்னும் பயம் மகளும் தந்தையும் சந்திக்க கூடாது என…

அதை எல்லாம் விட ஒரு வலி அவள் மனதில் முணுமுணுவென.. அவனின் நினைவு பெட்டகத்தில் எந்த இடத்திலும் என் காலசுவடிகள் இருக்காதே.. எனக்கு பின் எத்தனை எத்தனை தேனீக்கள் தேனடையை நாடி.. என் மனம் தான் தூக்கி சுமந்து கொண்டு பாரம் தாங்காமல் கனத்து போய் கிடக்கிறதோ…

எதை எல்லாம் நினைத்து பயந்தாலோ.. இதோ கண் முன் நடந்து கொண்டிருக்கிறது. இருவருக்கும் எப்படி பழக்கம்.. மகள் என அறிந்து வந்தானோ.. இல்லை தெரியாமல் தேடி வந்தானோ.. மேலும் என்ன நடக்கும்.. அவனுக்கு மகள் தேவை படாமல் போகலாம்… ஆனால் தந்தையை போலவே பிடிவாத குணம் கொண்ட மகள் தந்தை என தெரிந்தால் விடமாட்டாள். தன் காதலையும் மகளையும் நினைத்து விடிய விடிய தூக்கத்தை தொலைத்தாள் தேவர்ஷி..

அனிவர்த்தோ மனதில் ஆழத்தில் பதிந்துவிட்ட அவளோடு நடந்த வில்விழா காலங்களை அடி கரும்பின் தித்திப்போடு அசை போட… நாட்டம் குறைந்திருந்த இளமை தேடல்கள் எல்லாம் வீறு கொண்டு காம கணைகளை செலுத்த தயாராக தன் மனையாளை மாற்றான் மனைவியாக நினைத்து அடக்க இயலாமல் போராடிக் கொண்டிருந்தான்…

தேவர்ஷி தள்ளி வைக்க நினைக்க.. அனிவர்த்தோ அவளால் தட்டி எழுப்ப பட்ட உணர்வுகளோடு போராட.. தாய் தந்தையை இணைக்கும் முல்லை மொட்டோ அமைதியாக உறங்கி கொண்டிருந்தது.

25 – ஆடி அசைந்து வரும் தென்றல் Read More »

6d755db8-2be1-4185-97f8-15ee7e5d68eb

எங்கேயும் காதல்! – 5&6 (விஷ்ணுப்ரியா)

எங்கேயும் காதல்! [5]  அடுத்த நாள் காலை…  அவளுடைய மூடிய விழித்திரையில் தீடீரென வந்தது ஓர் வெள்ளை வெளேரென்ற பிரகாசம்!!  கண்களுக்குள் அனல் ஜூவாலைகள் உருண்டு வருவது போலத் தோன்ற, உடலெல்லாம் தகிக்கத் தொடங்கியது அக்னியின் மித்ரையிற்கு.  அவளுடைய கைகள் எதையோ ஒன்றைத் தேடிப் பயணிக்க, கண்ணைப் பறிக்கும் அந்தப் பிரகாசத்திலும் கூட அவள் இதயம் அவளது தாத்தாவைத் தான் தேடலாயிற்று.  வரண்ட இதழ்கள் திறந்து, தன் தாத்தாவை அழைக்க முற்பட்ட நேரம்.. அவளுடைய வெண்சங்குக் கழுத்தை

எங்கேயும் காதல்! – 5&6 (விஷ்ணுப்ரியா) Read More »

ba034a6c-a4fe-4b36-8300-41a757cf2eea

எங்கேயும் காதல்! – 4 (விஷ்ணுப்ரியா)

எங்கேயும் காதல்!              [4] இருபது நாட்களுக்குப் பிறகு, தன் கேனைத் தரையில் மெல்லத் தட்டித் தட்டி நடந்தி வந்து கொண்டிருந்தவளின் நாசி, குப்பென்று ‘ரீபோர்ன்’ ஜெல்லின் நறுமணத்தை முகரலானது. அந்த மணத்திற்கு சொந்தக்காரன் யாரென்று தெரிந்து விட, அக்னிமித்ராவின் இதழ்கள், தன் முத்துமூரல்கள் வெளித்தெரியும் வண்ணம் அழகாக விரிந்தது. ஆம், அவளெதிரே நின்றிருந்தது ஊருக்கு ‘பீஷ்மர்’ வேஷம் போடும் பொல்லாத சந்துருவே தான். அன்று, டீஷேர்ட் மற்றும் டெனிமில்

எங்கேயும் காதல்! – 4 (விஷ்ணுப்ரியா) Read More »

❤️🪷💕

எங்கேயும் காதல்! – 3 (விஷ்ணுப்ரியா)

எங்கேயும்  காதல்!                       [3] கண்டி மாநகரத்தின் பிரதான வீதி… குறிப்பாகச் சொல்லப் போனால் கண்டியின் “பேராதனைப் பல்கலைக்கழகத் தெருவுக்கு சற்றுத் தள்ளி இருக்கும் பெருவீதி அது!! கண்டியின் காலை நேர குளிர் காற்று, அலை அலையாக கேசத்தைப் பறக்கச் செய்ய வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தான் அந்நெடியவன்!! அந்நெடியவனுக்கு முன்னாடி கைலி சகிதம் வண்டியோட்டிக்  கொண்டிருந்தான் நெடியவனின் நண்பன் விக்னேஷ்!! பளபளவென பல மாடர்ன் ஃபிகர்கள் நடமாடும் பல்கலைக்கழக வீதியில்..  கைலியோடு..வண்டியோட்டுவது விக்னேஷூக்கு அவமானமாகவே இருந்தது.

எங்கேயும் காதல்! – 3 (விஷ்ணுப்ரியா) Read More »

D93D4BE8-8DB9-43D0-B408-739324BF6B66

24 – ஆடி அசைந்து வரும் தென்றல்

4 – ஆடி அசைந்து வரிம் தென்றல்

எப்படியோ வீடுவந்து சேர்ந்துவிட்டாள் தேவர்ஷி.. அவளை பாரத்ததும் உடன்பிறப்புகள் பயந்து போயினர். அழுகை அவமானம் கோபம் ஆங்காரம் என கலவையான உணர்வுகளால் அலைகழிக்கப்பட்டு தளர்ந்த நடையுடன் வந்தவளை கண்டு… “என்னாச்சு.. ஏன் இப்படி இருக்க…” இளையவர்கள் கேட்க…

சரண் மட்டும் அமைதியாக.. ஆனால் ஆழ்ந்து பார்த்திருந்தான். அவன் உள்மனம் சொல்லியது ஏதோ சரியில்லை என்று… “அவளை விடுங்க.. தேவா போய் ரெஸட் எடு.. ஈவ்னிங் பேசிக்கலாம்..” அவர்களிடம் என்ன சொல்வது என தெரியாமல்… அதைவிட தன் செயலை எப்படி சொல்வது என பயந்தவள் விட்டால் போதும் என தங்கள் வீட்டிற்கு சென்று தன் அறையில் சென்று படுத்தவளுக்கு ஒரே அழுகை..

அழுது கொண்டே இருந்தால்.. சோர்ந்து போய் தன்னை மறந்து தூங்கும் வரை..மதிய உணவுக்கு ஸ்வாதி வந்து பார்க்க… தேவர்ஷி நன்றாக உறங்கி கொண்டு இருந்தாள். அழுது ஓய்ந்து போனதால் நல்ல உறக்கத்தில் இருந்தாள். ஸ்வாதியும் எழுப்பி பார்த்தாள். எழுந்திருக்கவில்லை எனவும் விட்டுவிட்டாள்.

பெரியவர்கள் இரவு உணவிற்கு வீட்டிற்கு வந்துவிட… சரணிடம் தெரிவித்திருக்க.. அவனும் சமையலாளிடம் செய்ய சொல்லியிருந்தான்.

பெண்கள் பரிமாற.. ஆண்களும் பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர். எப்பாவது பண்டிகை விசேச நாட்களில் விஸ்வநாதன் வீட்டில் ஒன்று கூடுவர் தான்.அன்று விருந்து அமர்களப்படும்.

கௌசல்யா வந்தவுடன் மகளை காணாது கேட்க.. சரண். “அவ ப்ரண்டுக்கு பீவர்னு ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போனா சித்தி.. வரும் போதே ரொம்ப டயர்டா வந்தா.. அப்ப போய்படுத்தவ தான்.. இன்னும் எந்திரிக்கவே இல்ல. லஞ்ச்கு ஸ்வாதி போய் எழுப்பியும் எந்திரிக்கல சித்தி..”

“என்ன சொல்ற சரண்.. சாப்பிடாம தூங்கறாளா.. இவளுக்கும் காய்ச்சல் வந்திடுச்சா.. பாரத்திங்களா.. டேப்லெட் எதாவது குடுத்திங்களா..”

“பீவர்லாம் இல்லை சித்தி..”

”ஆமாம் பெரியம்மா.. நான் எழுப்பும் போது அக்கா உடம்புல சூடு இல்ல..” “இருங்க நான் போய் பார்த்திட்டு வரேன்..” என கௌசல்யா கிளம்ப.

“கௌசல்யா.. தூங்கிட்டு தான இருக்கா.. சாப்பிட்டு அவளுக்கும் எடுத்திட்டு போ..” சுந்தரமூர்த்தி சொல்ல்…

மகளை பார்க்க உடனே கிளம்ப பார்க்க.. சுந்தரமூர்த்தி சாப்பிட்டு தேவர்ஷிக்கும் எடுத்திட்டு போக சொல்லிவிட…

கௌசல்யாவிற்கு இருப்பு கொள்ளவில்லை. மாமனார் பேச்சையும் மீற முடியவில்லை. சிட்டுகுருவி போல ஒரு இடம் அமராமல் சுற்றி திரிபவள் பகல் போய் இரவு வந்தது கூட தெரியாமல் தூங்குகிறாள் என்றதும் மனம் பதறியது.

திருகுமரனைப் பார்க்க அவருக்கும் மகளை நினைத்து கவலை தான்.. இருந்த போதும் தந்தை சொன்ன பிறகு அவர் பேச்சை மீறினால் அதற்கும் ஏதாவது பேசுவார். எனவே மனைவியை கண்களால் சமாதானம் செய்தார்.

ஏதோ கொஞ்ம் சாப்பிட்டு விட்டு மகளுக்கும் எடுத்துக் கொண்டு தங்கள் வீட்டிற்கு ஓடினார்.

கௌசல்யா தேவர்ஷியை எழுப்ப.. அவளால் கண்களை பிரிக்க கூட முடியவில்லை. தொடர்ந்து அழுதது நீண்ட நேர தூக்கம் என முகம் வீங்கி சிவந்து போய்… கண்கள் தடித்து… பார்க்க பயமுறுத்தினாள். கௌசல்யா மகளை கண்டதும் கலங்கிவிட்டார்.

“தேவாம்மா.. என்னடா ஆச்சு.. ஏன் இப்படி இருக்க..” ஒன்றும் சொல்லாமல் தாயை கட்டி கொண்டு ஓவென ஒரே அழுகை..

.கொஞ்ச நேரம் தலை கோதி கொடுத்தவர்.. வற்புறுத்தி இரண்டு இட்லிகளை சாப்பிட வைத்தார். திருகுமரன் மகளை பார்க்க வந்தார். அவருக்கும் மகளை பார்த்தும் பதைபதைப்பு.. “தேவாம்மா என்ன ஆச்சு..” என கேட்க…

தந்தையை பார்த்ததும் மீண்டும் அழுக ஆரம்பித்தாள். மகளின் அழுகையில் துடித்து போனவர்… “அழுகாத பாப்பா.. எதுனாலும் காலையில் பேசிக்கலாம்..” மகளின் கண்களை துடைத்து விட்டவர்…

“கௌசி.. இன்னைக்கு பாப்பா கூடவே படுத்துக்கோ..” “எதுவும் நினைச்சு பயப்படாம தூங்குடா.. அப்பா இருக்கேன்.. எதுனாலும் பார்த்துகலாம் விடு..”என்ன என்று தெரியாமலேயே மகளுக்கு நம்பிக்கை கொடுத்தார்.

கௌசி மகளை அணைத்து கொண்டு படுத்துக் கொள்ள.. தாயின் அணைப்பு சற்று ஆறுதலாக இருந்தது. காலையில் திருகுமரன் தேவர்ஷியிடம் “தேவாம்மா.. இன்னைக்கு லீவ் போட்டுட்டு ரெஸ்ட் எடுடா..”. என்க.

தேவர்ஷியோ தயங்கிவாறே.. “இல்லப்பா நான் ரிசைன் பண்ணிடலாம்னு இருக்கேன்… எனக்கு வேலைக்கு போக பிடிக்கல…” மகளை ஒரு நிமிடம் அமைதியாக பார்த்தவர்…

“உன் இஷ்டம் பாப்பா.. நீ வேலைக்கு போய்தான் இங்க நிறையனும்னு ஒன்னும் இல்ல.. உன்னை வருத்திக்காம வீட்லயே ஜாலியா இரு..”

தன் அறைக்கு வந்தவள் அனிவர்த்துக்கு ரெசிகனேஷன் மெயில் அனுப்பினாள். அப்போதும் அழுகை வர பார்க்க… போதும் இந்த கண்ணீருக்கு கூட அவன் தகுதியில்லாதவன் என கண்களை அழுந்த துடைத்து கொண்டாள்.

அனிவர்த் தன் அறைக்கு வந்தவுடன் தேவர்ஷியின் கேபினை தான் பார்ததான்.

. வெற்றிடமாக இருக்கவும் கோபம் துளிர்த்தது.அவள் வந்திடமாட்டாளா.. நான் பேசியது எல்லாம் தப்புதான் வர்தா.. மன்னிச்சிடுங்க..என கேட்டு தன் முன் நிற்கமாட்டாளா.. என ரொம்ப எதிர்பார்த்து வந்தான்.

அவள் அனிவர்த்திடம் சண்டை போட்டு விட்டு அந்த பங்களாவில் இருந்து போன பிறகு.. அனிவர்த்திற்கு எல்லை கடந்த ஆத்திரம் கோபம் ஆங்காரம் எல்லாம்… எவ்வளவு ஆசையோடு அவளிடம் சரசமாட வந்தான். பார்த்ததும் கட்டி கொண்டு முத்தமிட்டு முத்தமிட்டே கிறங்க வைப்பாள்.. என்ற அவனின் எதிர்பார்ப்பு எல்லாம் காற்றுபட்ட நீர்குமிழியாக உடைந்து போனது. அவள் போனதும் அவள் கொளுத்திய வெப்பம் தணியாமல் வாட்ட…அங்கிருக்க பிடிக்காமல் பப்பிற்கு சென்றான். தனதுவிருப்பமான ட்ரிங்கை வாங்கி சிப் சிப்பாக உள்ள இறக்கி தன் கோபத்தை எல்லாம் தணித்து கொள்ள முயன்று கொண்டிருந்தான்.

அல்டாப்பு ராணி ஒருத்தி அவன் தேவையை பூர்த்தி செய்து தன் தேவையை நிறைவேற்றி கொள்ள வந்தாள். இருவரும் இடம் பார்த்து ஒதுங்கினர். ஏனோ அந்த உறவு அவனை சாந்தப்படுத்தவில்லை. மாறாக தகிக்க வைத்தது..

அவனின் தகிப்பு தவிப்பு தாபம்எல்லாம் அவள் ஒருத்தியிடம் மட்டுமே அடங்கும் என உணரும் காலம் வெகு தொலைவில் இருக்கும் போது எப்படி உணரமுடியும்.

மனதில் காதல் தளும்ப உரிமையோடு உறவை கொடுத்தவளின் சுகத்திற்கு ஈடாகுமா… உடல் வேட்கையை மட்டும் தீர்த்து கொள்ள வருபவளிடம் கிட்டும் சுகம்..

வண்ணம் பூசிய கிளி எல்லாம் பஞ்சவர்ணகிளி ஆகிவிடுமா என்ன..

இன்னும் அவனை எரிச்சல் படுத்த… அத்தனைக்கும் அவன் மனம் அவளையே குற்றம் சாற்றி நின்றது.அவளின் மெயிலை பாரத்தவனுக்கு தன் தவறை உணராத ஆணவ புத்தி ‘என்ன ஆட்டம் காட்டறாளா.. இந்த சால்ஜாப்புக்கு எல்லாம் நான் பயப்படுவேனா.. பார்க்கறேன் எவ்வளவு தூரம் போகறேனு.. இந்த உலகத்துலேயே நீ ஒருத்தி தான் பொண்ணா.. போடி..’ இப்படி தான் நினைத்தது.

தேவர்ஷியால் அனிவர்த்தின் வார்த்தைகளை ஜீரணிக்க முடியவில்லை. தன்னை பார்த்து இப்படி சொல்லிவிட்டானே… இத்தனை நாள் பழகியும் தன்னை புரிந்து கொள்ளவில்லையே.. நான் என்ன இவனின் பணத்துக்காகவா இவன் பின்னால் போனேன்..எப்படி பேசிவிட்டான். வேசி என சொல்லாமல் சொல்லிவிட்டானே.. நான் வேசியா.. நான் அப்படி பட்ட பொண்ணா நினைக்க… நினைக்க.. உடல் எல்லாம் காந்தியது. நிற்காமல் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது.

இரண்டு நாட்களாக சரியாக உண்ணாமல்.. வெறித்த பார்வையுடன் எதையோ மனதில் நினைத்து மறுகி கொண்டு அறைக்குள்ளயே முடங்கி கிடக்கும் மகளை கண்டு பயந்து போய் மந்திரித்து தாயத்து கட்டி கூட்டி வந்தார் கௌசல்யா.

அப்பவும் அவள் தன் அம்மாவிடம் எதுவும் சொல்லவில்லை. சொல்ல மனம் கூசியது.. தன்னை போல உண்மையான அன்போடு பழகவில்லையா.. தன் உடல் இச்சைக்காக தான் பழகினானா…அதான் கல்யாணம் பண்ணிக்கலாம் என கேட்டதும் தட்டி எறிந்துவிட்டானா.. நான் தான் இவனை நம்பி ஏமாந்து போயிட்டேனா.. காதலை காதலாக உணராமல் காமமாக உணர்ச்சியின் பிடியில் நின்றுவிட்டானா.. எந்த இடத்திலும் எந்த நிலையிலும் என் காதலை ஒரு நொடி கூட உணரவில்லையா.. என தன்னிலேயே உழன்று தன்னையே வருத்திக் கொண்டாள்.

ரோஜா இதழ்களால் இதயத்தை வருடியவனே.. ரோஜா முட்களால் கீறியும் விட்டுவிட்டான். ஊமையாக இரத்தம் சிந்துகிறது… அவளை பார்த்து என்ன என தெரியாமல் குடும்பமும் தவித்து நின்றது. என்ன கேட்டும் வாயே திறக்கவில்லை. நேரத்திற்கு உண்ணவில்லை.. உறங்கவில்லை… துஷ்யந்தன் புறக்கணித்த சகுந்தலையின் நியூ வெர்சனாகி போனாள்.

இப்படியே ஒரு வாரம் கடந்த நிலையில் ஒருநாள் நண்பகல் வேளையில் மயங்கி விழுந்தாள். குளித்து விட்டு பாத்ரூமில் இருந்து வெளியே வந்தவள் மயங்கி விழுக… சத்தம் கேட்டு வந்த கௌசல்யா மகளின் நிலையைபார்தது பயந்து அழுது திருகுமரனுக்கு அழைத்தார். அவரும் பதறி வந்து மகளை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர்.

அதற்குள் தேவர்ஷியின் பெரியப்பா சித்தப்பா குடும்பத்திற்கும் தெரிந்துவிட.. அவர்களும் வந்துவிட்டனர். டாக்டர் பரிசோதித்து விட்டு அதிக மன அழுத்தம் தான் மயக்கத்திற்கு காரணம் என சொல்ல.. இந்த வயதில் மன அழுத்தம் கொள்ள என்ன என்று தெரியாமல் கலங்கி போயினர். அதற்குள்இரத்தபரிசோதனை முடிவுகளும் வந்துவிட.. பார்த்த டாக்டரே அதிர்ந்து போனார். குடும்ப டாக்டர் என்பதால் அவர்கள் குடும்ப விவரம் தெரியும் என்பதால்.. என்ன இது..என.. பெரிவர்களை அழைத்து சொல்லியும் விட்டார்.

நம்பமுடியாமல் அதிர்ச்சியாக இருந்தது. கௌசல்யா மனம் ஒடிந்து போய் அழுக.. திருகுமரனுக்கோ ஒரு சின்ன விசயத்தை கூட மறைக்காமல் தன்னிடம் சொல்லும் மகள் இவ்வளவு பெரிய விசயத்தை மறைத்துவிட்டாளே.. இன்று செய்திகளில் எல்லாம் வருவது போல மகளுக்கு ஏதேனும் கொடுமை நடந்துவிட்டதா.. தன் அப்பாவி பெண்ணை எவனாவது ஆசை வார்த்தை பேசி கெடுத்துவிட்டானா.. என பல சிந்தனைகள் ஓட மிகவும் கலங்கி போனார்.

சுந்தரமூர்த்திக்கு குடும்ப கௌரவத்தை கெடுத்துவிட்டாளே… என தாங்க முடியாத கோபம்.

“குமரா.. உன் பெண்ணை அடக்கி வைனு எவ்வளவு தூரம் சொன்னேன்… என் பேச்சை கேட்டியா… உன் பொண்ணால நான் இத்தனை நாளா காப்பாத்தி வந்த குடும்ப கௌரவமே போச்சு..” என சத்தமிட ..

சரண் “தாத்தா.. இங்க எதுவும் பேச வேண்டாம் வீட்டுக்கு போய் பேசிக்கலாம்.. “ என சொல்லவும் தன்னை முயன்று அடக்கி கொண்டார். சரணுக்கும் கோபம் தான் எப்பவும் தேவர்ஷியை பிடிக்காது. அவனை பொறுத்தவரை பொறுப்பில்லாதவள்.. இப்பவும் பொறுப்பில்லாமல் குடும்ப பேரை கெடுத்துவிட்டாள் என அவனுக்கும் ஆத்திரம் தான்.

தூங்குவதற்கு மருந்திட்டு இருக்க.. அடுத்த நாள் காலையில் தான் கண்விழித்தாள் தேவர்ஷி. பெற்றவர்களை தவிர மற்றவர்கள் யாரும் இல்லை. தேவர்ஷி கண்விழித்ததும் கௌசல்யா அழுது கொண்டே…

“யாராவது உன்கிட்ட தப்பா.. உனக்கு பிடிக்காம மிரட்டி.. கட்டாயபடுத்தி ஏதாவது செஞ்சிட்டாங்களா..” எங்கே மகளை கற்பழித்துவிட்டார்களோ என பயத்தில் பதட்டத்துடன் கேட்டார்.

மனைவி கேட்கவும் திருமரனுக்கும் நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது

. “அப்படி எல்லாம் இல்லம்மா..”என்றாள் இன்னும் ஒன்றும் தெரியாமல் அப்பாவியாக….

“அப்போ… யாரையாவது லவ் பண்ணனியா..உன் விருப்பத்த சொல்லியிருந்தா.. நாங்க வேண்டாம்னா சொல்ல போறோம்.. ஏன்இப்படி பண்ணின…” என் கோபம் கொண்டு அடிக்க..

அனிவர்த் கூட பழகியது தெரிஞ்சிடுச்சா… எங்கே எல்லாம் தெரிஞ்சிடுச்சா.. என விழித்தாள்.

“கௌசி.. பொறுமையா விசாரி..” என்றார் திருகுமரன் ஒரு ஒட்டாத தன்மையுடன்..

எப்பவும் அடிக்காத தாய் தன்னை அடிக்கவும் அதிலேயே பயந்து போயிருந்தவள்…

தனக்கு எதாவது என்றால் தாயை விட அதிகம் துடித்துப் போகும் தந்தை கிட்ட கூட வரவில்லை.. அவருடைய முகத்தில் ஒரு அந்நியதன்மை தெரியவும்… துடித்து போனாள்.

“என்னத்த விசாரிக்க சொல்லறிங்க… புள்ளய வயித்துல வாங்கிட்டு வந்திருக்கா.. அந்த கேவலத்த என்னனு கேட்க சொல்லறிங்க…

” என்னது வயித்துல புள்ளயா… என அதிர்ந்தாள். அழுவதா… சந்தோஷப்படுவதா.. என்ன செய்வது என அவளுக்கே தெரியவில்லை.

தேவர்ஷி என்ன செய்யப் போகிறாளோ????

24 – ஆடி அசைந்து வரும் தென்றல் Read More »

Engagement photos

எங்கேயும் காதல்! – 2 (விஷ்ணுப்ரியா)

எங்கேயும்   காதல்!                       [2] இரண்டு வருடங்களுக்குப் பிறகு, “ஹலோ வெல்கம் பேக் டூ தி ஷோவ்.. நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது.. உங்கள் “இசை” எஃப். எம்… தொண்ணூற்று மூன்று தசம் மூன்று அலைவரிசையில் நம்ம “இசை” எஃப்.எம் வானலையைக் கேட்டு மகிழலாம்… இது “நீங்கள் கேட்டவை”.. வித்  ஆர். ஜே மித்ரா!! ..”என்று காதுகளில் ஒரு ஹெட் ஃபோனுடன், அந்த “இசை எஃப். எம் ரேடியோ ஸ்டேஷனில்”இருந்து ஆளை மயக்கும் இனிய குரலில் இருந்து

எங்கேயும் காதல்! – 2 (விஷ்ணுப்ரியா) Read More »

error: Content is protected !!
Scroll to Top