உரசி மலர்த்தாதே மாறா !-21&22 (விஷ்ணுப்ரியா )
மலர்தல்-21 தன் அன்புப் பாட்டி , ‘மீராவைக் கட்டிக்கொள்’ என்று சொன்ன பிற்பாடு ..அலுவலகம் வந்து சேர்ந்தவன்.. அவன் அவனாகவே இல்லை !! எப்போதும் தன் அலுவலக ஊழியர்களின் ‘குட்மார்னிங்’குகளை சின்னத் தலையசைப்புடன் ஏற்றுக் கொள்பவன்..இன்று யாரையும் நிமிர்ந்து பார்த்தானில்லை. கால்களில் சக்கரம் கட்டியது போல அப்படியொரு வேகம் அவனுக்குள். விறுவிறுவென்று சென்று நேரே..தன் அறைக்குள் புகுந்திருந்தான். அவனது அறை ஏழாம் மாடிக் கட்டிடத்தில் உண்டு. அறையின் ஒரு பக்கச்சுவர் முழுவதும் கண்ணாடியால் […]
