ATM Tamil Romantic Novels

17 – இத இதமாய் கொன்றாயடி

17 – இத இதமாய் கொன்றாயடி

மின்சார ரயிலைப் போல் யாருக்கும் காத்திருக்காமல் நாட்கள் வெகுவிரைவாகச் சென்றது. தமிழும் வசந்தாவும் இப்பொழுது தான் மந்தாகினி வீட்டுக்கு வந்தது போல இருந்தது. அதற்குள் ஒருமாதம் சென்றுவிட்டது. மகிழுக்கு எட்டாம் மாதம் முடிந்து ஒன்பதாம் மாதம் தொடங்கியது.

மகிழோ இடுப்பில் ஒருகையைக் கொடுத்து வயிற்றை நிமிர்த்திக் கொண்டு நடந்தாள். தன்ராஜ் பற்றிய கவலை ஒருப்பக்கம் மனதை அரித்துக் கொண்டே இருந்தாலும், அதையெல்லாம் புறந்தள்ளி வாழ பழகிக் கொண்டாள். தமிழும் அவளை கவலையின்றி ஆசைப்பட்டது எல்லாம் வாங்கிக் கொடுத்து சந்தோஷமாக வைத்துக் கொண்டான்.

ஒன்பதாம் மகவு வயிற்றிலிருக்க…

இடுப்பை தாங்கி நடந்தாள் மாது…

எக்கவலையின்றி மனதை லேசாக…

சோலைகிளிகளாக பாடி திரிந்து…

ஜோடியாக இருவரும் பறந்தனர்.

ஒருநாள் இரவில் எல்லாரும் உறங்கிய பின்பு வாசல் கதவு படபடவென்று தட்டும் சத்தம் கேட்டது. அந்த சத்தத்தில் அனைவரும் விழித்துக் கொண்டனர்.

மந்தாகினி,“ஆருன்னு தெரியல… கதவ இப்படி ஒடைக்கறது…” என்று கதவைத் திறக்கப் போனாள்.

வேலாயுதம் அவளை தடுத்து நிறுத்தி,”இரு… நாங்க போயி பார்க்கறோம்…” என்றார்.

மாமனாரும் மருமகனும் ஆளுக்கொரு கட்டையை எடுத்துக் கொண்டுப் போய் கதவை நீக்கினர். ஒரு ஆணும் பெண்ணும் பயந்து திரும்பி திரும்பிப் பார்த்து கொண்டிருந்து நின்றிருந்தனர். இவர்கள் கையில் கட்டையைப் பார்த்ததும், ஏற்கனவே பயந்திருந்த அவர்கள் இருவரும் நடுங்கிப் போய் அலற ஆரம்பித்துவிட்டனர்.

அவர்களைப் பார்த்தும் ஏதோ அடைக்கலம் நாடி வந்திருக்கின்றார்கள் என்பது புரிந்துவிட்டது. உடனே கையில் இருந்த கட்டையை போட்டுவிட்டு யார் என்னவென்று விசாரிக்க ஆரம்பித்தனர். அவர்கள் இருவரும் வெளியூர் என தங்கள் கதையை சொல்ல ஆரம்பித்தனர்.

சூர்யா – நிலா இருவரும் ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக காதலித்தனர். சூர்யா பண்ணையார் வீட்டு பையன். எல்லா சொத்திற்கும் ஏகப்போக வாரிசு. ஆசைக்கும் அவன் தான் அஸ்திக்கும் அவன் தான். சூர்யா அப்பா வேணுகோபால் மீசையை முறுக்கி விட்டு தெருவில் இறங்கி நடந்தால் அவ்வளவு கம்பீரமாக இருக்கும். தாயார் மங்களம் பெயருக்கேற்றார் போலவே மங்களரமாக இருப்பார். இருவரும் ஜோடியாக நடந்தால் அந்த சிவனும் பார்வதியும் போல இருக்கிறார்கள்.

நிலா கீழ்ஜாதியில் மூன்றாவதாக பிறந்த ஏழைப் பெண். தந்தை முத்துவோ மொடா குடிகாரன். மூச்சு முட்ட குடித்துவிட்டு தெருவில் விழுந்துகிடப்பவன். தாய் அலமேலு கூலி வேலை செய்து அதில் வரும் வருமானத்தில் பிழைப்பை நடத்துபவள். இவளுக்கு இருமூத்த சகோதரிகள் இன்னும் திருமணமாகவில்லை. இவர்களுக்கு திருமணமாகல் இருப்பதற்கு வசதி குறைவு என்பது மட்டுமில்லாமல் அழகில் படு சுமார் தான். நிலா அந்த மாதிரியல்லாமல் எதுயெது எங்கெங்கு இருக்குமோ அதுயது அந்தயந்த இடத்தில் கனகச்சிதமாக பொருந்தியிருந்தது. மொத்தத்தில் வெகு அழகாக இருந்தாள். இந்த அழகு தான் சூர்யாவை அடித்து வீழ்த்தியது.

அலமேலு பருப்பு டப்பாவை தூழாவிக் கொண்டே,”இங்க தான் அம்பது ரூவா வச்சேன் காணோமே. ஒருவேள அந்த குடிகாரப்பயல் எடுத்துகீனு போயி குடித்து ஏப்பம் விட்டானோ… என்னவோ… இவன நம்பி காசை ஒரு இடத்தில வக்கமுடியாது என்ன…” புலம்பிக் கொண்டே இருந்தார்.

நிலா,”என்னமா… புலம்பிகிட்டே இருக்கே…”

“என்னத்த… சொல்றது… டப்பாவுல ரூவா காணலியே… அந்த குடிகாரபய தான் குடிக்க எடுத்திருக்கணும்… அததான் சொல்லிகிட்டு இருந்தே…”

“ஏம்மா… ரூவா காணோமனா… அத அப்பா தான் எடுத்ததா…”

“வாடியம்மா… வாடி என் புருச பெத்த சீமந்தபுத்திரி… என்னடா இன்னும் சப்போர்ட்டுகு வரலியேனு நனச்சேன்…வந்துட்டியா…”

“ஏம்மா… இந்த வூட்ல எது நடந்தாலும் அதுக்கு அப்பா தான் காரணமா…” சண்டைக்கு வந்தாள்.

அதற்கு அலமேலு,“அப்ப அந்த அம்பது ரூவா எங்க போச்சு…” கேட்டார்.

அப்பொழுது அங்கே வந்தாள் இளைய சகோதரி மீனா,”ஏம்மா… எனக்கு இந்த கண்ணாடி வளையல் அழகா இருக்குல்ல…” என கைகளை ஆட்டிக் கொண்டு சொன்னாள்.

“வளையல் வாங்க உனக்கு ஏதுடி காசு…” அலமேலு கேட்டார்.

“அதான் நீ பருப்புடப்பாவுல வச்சிருந்தில…” எப்பொழுதும் அலங்காரம் பண்ணிக் கொள்வதில் ஆர்வம் உள்ள மீனா சொன்னாள்.

“அடிப்பாவி… நீ தான் எடுத்தியா… நாங்கூட உன் அப்பா தான எடுத்திட்டாரோனு தப்பா நனச்சிட்டேன்.”

இந்த சம்பாஷனைக் கேட்டிருந்த நிலா இருவரையும் தீப்பார்வை பார்த்தாள்.

“என்ன முறைக்கறே… ஒருநிமிசம் உங்கப்பாவ தப்பா நனச்சிட்டே…” அசட்டையாக சொன்னார்.

“ஒருநிமிசம் அப்பா மேல பழி போட்டுட்டே… அவர் குடிகார் தான் இல்லனு சொல்லல்ல… அதெல்லாம் காச திருடிகிட்டு போயி குடிக்கற ஜென்மமில்ல தெரிஞ்சிக்கோ…” தாயை திட்டிவிட்டு, தன் தமக்கையும் முறைத்து விட்டுச் சென்றாள்.

“என்ன இப்படி முறச்சிட்டு போறா… என்னவோ இவ காச சொல்லாம கொள்ளாம எடுத்துகிட்டு போயி வளையல் வாங்கிட்ட மாதிரியில்ல பேசாற…” என நொடித்தாள்.

“எடிப்பட்ட நாயே! ரேஷன் வாங்க வச்சிருந்த காச எடுத்திட்டு போயி அப்படி அந்த வளையல் வாங்கி போட்டு மினுக்கிட்டு ஆரை மயக்குப்பாக்கற…” அலமேலு எரிந்து விழுந்தார்.

“தங்கவளையலா போட்டுகிட்டேனு கண்ணாடி வளையல் தான். அந்த வளையலுக்கு மயங்கி எவனாவது பொண்ணு கேட்டு வந்திட்டாலும்… அப்படியே நீ கட்டி கொடுத்துருவ பாரு” என நொடித்தாள்.

“மூத்தவ இருக்கும் போது உனக்கு என்ன அவசரம்…”

“மூத்தவளுக்கு நீ எப்ப கண்ணாலம் பண்ணி எனக்கு எப்ப கண்ணாலம் பண்ணறது… நா பார்த்து எவனயாவது இழுத்திட்டு போயி கண்ணாலம் கட்டிகிட்டாவது உண்டு…”

“அடிசெருப்பால… மூத்தவ இருக்கிற இடம் தெரியாம இருக்கா… உனக்கு இ்ப்பவேயா புருச சுகம் கேக்குதா…” சீவகட்டையை எடுத்துக் கொண்டு அடிக்க வந்தார்.

“ஆடியாத்தி… கைல கிடைச்சா அக்கு வேறா ஆணி வேறா பிச்சுப்பிடுவா…” சொல்லி முதலளாய் ஓடியேவிட்டாள்.

“ஓடியாற ஓடு… எங்க போயிடுவ இராவுக்கு இங்க தான கொட்டிக்கற வருவ… அப்ப உன்ன ஒரு கை பார்த்துக்கிடேன்…” கையில் இருந்த சீவக்கட்டையை தூக்கி வீசினார்.

முறைச்சிகிட்டு போன நிலா ஒருபூங்காவில் அங்கிருந்த காலி இருக்கையில் அமர்ந்தாள். சற்று தூரத்தில் ஒருபெண் எதிரில் நின்றிருந்த ஆணிடம் சண்டைப் போட்டுக் கொண்டிருந்தாள்.

அந்த ஆணோ அவளிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடிக் கொண்டிருந்தான். இதைப் பார்த்ததும் நிலா அந்த ஆணை தவறாக நினைத்துக் கொண்டாள்.

அந்த ஆணோ வசதியான வீட்டு பையன் மாதிரி இருந்தான். அந்த பெண்ணோ சராசரி குடும்பத்தைச் சேர்ந்தவள் மாதிரி இருந்தாள். அந்த பெண் சண்டை போட்டத்தைப் பார்த்தால் அந்த பெண்ணை காதலித்து ஏமாற்றியது போல நினைத்துக் கொண்டாள்.

ஏற்கனவே கோபமாக இருந்த நிலா அந்த நினைப்பிலேயே போய் அந்த ஆணின் சட்டையைப் பிடித்து,”ஏய் மிஸ்டர்… இந்த பொண்ணிடம் வம்பு பண்ணிகிட்டு இருக்கறியா…” ஓர் அறைவிட்டாள்.

என்ன ஏதுனு கேட்டகாமல் தீடிரென்று ஒருபெண் தன்னை அறையவும் அதிர்ந்துப் போய் நின்றான். நிலா அந்த பெண்ணிடம்,”காதலித்து உன்னய ஏமாற்றிவிட்டானா சொல்லும்மா… இவனயெல்லாம் போலீஸ்ல புடிச்சுக் கொடுத்து முட்டிமுட்டி தட்டினால் தான் இந்த மாதிரி ஆளயெல்லாம் அடங்குவாங்க…”

உடனே அந்த பெண்ணோ,”ஆமாம்கா… என்னய காதலித்து ஏமாற்றிவிட்டு விட்டுட்டு ஓடி போக பார்க்கிறாரு… “ என்று கல்யாணி சொன்னாள்.

“இல்லல்ல… அவ பொய் சொல்றா… அவ பேச்ச கேட்காதே…” என பதட்டத்துடன் சொன்னான். அந்த ஆணின் பெயரோ சூர்யா.

நிலா,“எந்த பொண்ணாவது இந்த விசயத்தில் பொய் சொல்வளா? யார நம்ப சொல்ற…” என்று கேட்டாள்.

“சத்தியமா நா சொல்றதா உண்மை… அவ பேச்ச கேட்காதே… ஏமாற்றுக்காரி” என்றான் சூர்யா.

கல்யாணிக்கு யாரும் இல்லாததால்,எப்படியாவது கல்யாணம் நடந்தால் போதும் என்ற நிலையில் அவள் இருந்ததால்,”நா ஒரு அநாதைகா… ஒரு விடுதி ஒரு டிபார்மெண்ட் ஸ்டோரில வேல செய்றேனு… இவர் அங்க சாமானம் வாங்க வரும் போது பழக்கம் ஏற்பட்டு அந்த பழக்கமே நாளடைவில் காதலாக மாறி போச்சுகா… அப்போதெல்லாம் தோன்றாத விசயம் கண்ணாலத்துக்கு கேட்கும் போது நீ ஒரு அநாதை. அதனால உன்ன கண்ணாலம் பண்ணிக்க முடியாதுனு சொல்றாரு… நா என்ன பண்ணுவே…” என்று அழுதாள்.

“நா இவள் வேல செய்ற கடைக்கு எப்பவும் போறது தான். இவள அங்க பார்த்திருக்கேன். ஒன்றிரண்டு தடவ பேசியிருக்கேன். இவ சொல்ற மாதிரியெல்லாம் காதலித்து கல்யாணம் பண்ணிக்கறேனு சொல்லவேயில்ல…”

உடனே கல்யாணியோ மீண்டும் அழுதுக் கொண்டே,”ஐயோ… இல்லக்கா நா அப்படிப்பட்ட பொண்ணுல்ல… எனக்கு இவர்கிட்ட பேசி நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுகா” என்றாள்.

ஆராய்ந்துப் பார்க்காமலே சூர்யா தவறானவன் என்ற முடிவுக்கு வந்தாள் நிலா. அந்த முடிவுடன்,”அது சரி… அப்படினா அவள நீ கண்ணாலம் பண்ணிக் கொள்வது தான் முறை. இருவர் வூட்லயும் பேசி நா கண்ணாலத்துக்கு ஏற்பாடு பண்ணறேன். சரி இருவர் வூட்டு அட்ரஸயும் கொடுங்க…” என்றாள்.

சூர்யா தன்னைப் பற்றி இந்த பொண்ணு இல்லாதையும் பொல்லாதையும் சொல்லி குட்டையை குழம்பிவிடுவாள் என நினைத்து முகவரியை கொடுக்க தயங்கினான். கல்யாணியோ இவனை ஏமாற்றின மாதிரி இவன் குடும்பத்தையும் ஏமாற்றி உள்ளே நுழைந்துவிட்டாள் அந்த வீட்டில் உள்ள கிழம்கட்டைகளை ஆட்டிப் படைக்கலாம் என நினைத்தாள். அவள் நினைப்பை சரியாக புரிந்துக் கொண்ட சூர்யா கல்யாணி முன்பு நிலாவிற்கு வீட்டு முகவரியை சொல்ல மறுத்துவிட்டான். சூர்யா முகவரி சொல்லாததால் நிலா அவன் மீது தவறு இருப்பதாக என புரிந்துக் கொண்டாள்.

எனவே நிலா சூர்யாவை,”ஏய் மிஸ்டர்… ஒழுங்கு மரியாதகாக அட்ரஸ் சொல்லிடு… இல்லனா இங்க இருங்கறவங்கள கூப்பிட்டு உன் மானத்த வாங்கிடுவேன்…” மிரட்டினாள்.

கூட்டம் கூடிவிட்டால் எல்லாரும் அவள் ஒருபெண் என்பதால் கண்மூடித்தனமாக கல்யாணிக்கு தான் ஆதரவாக பேசுவார்கள். தனக்கு யாரும் ஆதரவாக பேசமாட்டார்கள் என்ற உண்மையை புரிந்துக் கொண்டு,”அப்பா பேருவேணுகோபால், நம்பர் மூணு, அழகர் கோவில் தெரு, திருநெல்வேலி.” என முகவரியைச் சொன்னான்.

அடுத்தநாள் நிலா கல்யாணியை அழைத்துக் கொண்டு சூர்யா வீட்டிற்கு வந்தாள். நிலா வரும் போது வீட்டில் அவனுடைய தந்தை இருந்தார். நிலா அவன் தந்தையிடம்,”உங்க மகன் வூட்ல இல்லயா…”

“வீட்ல தான் இருக்கான். அவனய ஏன் கேட்குற…”

“இல்ல… அது வந்து உங்க மகன் சூர்யா இந்த பொண்ணய காதலிச்சு கண்ணாலம் பண்ணிக்கறேனு சொல்லிவிட்டு, இப்ப முடியாதுன ஏமாத்திட்டு போக பார்க்கிறான்.” என அருகில் இருந்த கல்யாணியை காண்பித்து சொன்னாள்.

இதற்கு நடுவில் அவன் தாயார் இடையிட்டு,“எம் மகன் பத்தரமாட்டு தங்கம்… அவன் மேல வீணா பழி போடாதே…” கூறினாள்.

இதையெல்லாம் கேட்டு கல்யாணியோ நீலிக்கண்ணீர் வடித்தாள். உடனே அவன் தாயார்,”சூர்யா… சூர்யா…” என அழைத்தார்.

சூர்யா,”என்னம்மா…” என்றவாறு வந்தான். இவர்களைப் பார்த்ததும் ,”இவங்கள இங்க யாரு வர சொன்னது…”என்றான்.

“ஏன் நாங்க வரது உனக்கு தெரியாதா… நீ தான் எங்கள வர சொல்லி உன் வூட்டு அட்ரஸ் கொடுத்தா… ஒன்னும் தெரியாத மாதிரி கேட்கற…”

“நீ என்னய மிரட்டி கேட்டதால அட்ரஸ கொடுத்தேன். நீ சொல்ற மாதிரி நா ஒன்னும் இவள காதலிச்சு ஏமாத்தல… இவள் சொல்றதெல்லாம் நம்பாதே…”

இதையெல்லாம் கேட்டு கல்யாணியோ நீலிக்கண்ணீர் வடித்தாள்

யார் சொல்வது உண்மை என புரிந்துக் கொள்வாளா…

17 – இத இதமாய் கொன்றாயடி Read More »

இரகசிய மோக கனாவில் 28,29&30

அத்தியாயம் 28   அடுத்த நாள் காலையில் அமைதியாக நடந்தது சின்னா மற்றும் அனுராகாவின் திருமணம். எல்லாவற்றையும் தானே முன்னால் நின்று செய்தான் ராக்கி. திருமணம் முடிந்ததும் வீட்டிற்கு வந்த மணமக்களை மைதிலியின் படத்திற்கு முன்னால் நிற்க வைத்து,   “சின்னா இது அனுவோட அம்மா மைதிலியக்காவோட சொத்து பத்திரங்கள். இத்தனை நாள் இதை அனுவோட கார்டியனா பத்திரமா பார்த்துக்க வேண்டியதா இருந்துச்சு. எப்போ அனுவிற்கு கல்யாணம் ஆகிடுச்சோ இனி அவளோட புருஷங்குற முறையில நீதான் இனிமே

இரகசிய மோக கனாவில் 28,29&30 Read More »

எங்கு காணினும் நின் காதலே… 27

27   வெற்றிவேந்தன் நிவேதிதா, திருமணம் முடிந்த பதினைந்து நாட்களில் அனைவரையும் அழைத்துக்கொண்டு ஆஸ்திரேலியாவுக்கு சென்றார் சுவாதி. அங்கே தன்னுடைய தொழில்துறை நண்பர்களுக்காக ஒரு திருமண வரவேற்பு ஏற்பாடு செய்திருந்தார். அதே மிடுக்கான தோற்றம் நிமிர்ந்த பார்வையோடு வளைய வந்தவரை பார்த்தவர்களுக்கு சற்றே நிம்மதி..     மேகநாதனை கேட்டவர்களுக்கு “ஹீ இஸ் நோ மோர்!!” என்றே பதிலளித்தார். அவர் வாழ்க்கையில் இனி அவர் ‘நோ மோர் தான்!!’ யார் எந்த அர்த்தத்தில் எடுத்துக் கொள்கிறார்களோ எடுத்துக்

எங்கு காணினும் நின் காதலே… 27 Read More »

இரகசிய மோக கனாவில் 26&27

அத்தியாயம் 27   இறுதியாக தன் கணவனை நினைத்துக் கொண்டே கண்களை மூடியவளின் கைகளைப் பிடித்து யாரோ வெளியே பிடித்து இழுப்பதைப் போல் உணர்ந்தவள், தன் கண்களை திறந்து பார்க்க, அவளின் எதிரே அசாதாரண சூரனாக நின்றிருந்தான் ராக்கி.    “எனக்கு தெரியும் டி. நீ இப்படி தான் ஏதாவது கிறுக்குத்தனம் பண்ணுவேன்னு. இந்த பெட்டிக்குள் போனா நீ உன்னோட காலத்துக்கு போயிருவேன்னு சொன்னேல. லூசு.. லூசு.. கடந்த காலத்துக்கு போக மாட்ட இறந்து இறந்தகாலத்துக்கு போயிடுவ.

இரகசிய மோக கனாவில் 26&27 Read More »

எங்கு காணினும் நின் காதலே… 26

26     மறுநாள் காலை மேகநாதனை வெளியில் அழைத்து வந்தார் சுவாதி.. மாடியிலிருந்து அவரை தனியாக அழைத்து செல்வதற்கு லிஃப்ட் ஒன்று இருக்கும். அதன் வழியே மேலே வந்த மருதுவோ “சித்தி உங்கள அம்மா அவசரமாக கீழே கூப்பிட்டாங்க.. நீங்க போங்க நான் சித்தப்பாவை மெல்லமா கூட்டிட்டு வரேன்” என்று சொல்ல அவரும் சரி என்று கீழே சென்று விட்டார்.     மெல்ல சக்கர நாற்காலியை உருட்டிக் கொண்டே வந்த மருது அன்று அழகுமீனாள்

எங்கு காணினும் நின் காதலே… 26 Read More »

இரகசிய மோக கனாவில் 25&26

அத்தியாயம் 25   “நாளைக்கு காலைல நம்ம முருகன் கோயில்ல உனக்கும் சின்னாக்கும் கல்யாணம்.”   “டேய் ராக்கி! உனக்கென்ன பைத்தியம் கியித்தியம் பிடிச்சுருச்சா? இன்ஸ்டென்ட் சாப்பாடு மாதிரி திடீர்னு கல்யாணம் பண்ணி வைக்கணும்குற?! நாள், நட்சத்திரம் எதுவும் பார்க்க வேண்டாமா? கல்யாணத்துக்கு நகை புடவை எல்லாம் எடுக்கணும், நாலு பேரை கூப்பிட்டும், பந்தல் போடணும், பந்தி பரிமாறணும். வர்றவங்க மனசார வாழ்த்தணும். இவ்வளவு இருக்குடா. நீ என்னமோ ஃபாஸ்ட் ஃபுட் ரெடிங்குற மாதிரி பொண்ணு மாப்பிளைய

இரகசிய மோக கனாவில் 25&26 Read More »

error: Content is protected !!
Scroll to Top