28 , 29 – புயலோடு பூவுக்கென்ன மோகம்
28 – புயலோடு பூவுக்கென்ன மோகம்
வெகு நேரம் கழித்து வந்த நிகிதா தங்கள் அறையில் வீராவை பார்த்தும்..
“என்ன மாமா.. லஞ்ச்கு நேரமா வந்துடிங்களா…”என கேட்க..
அவன் பதில் ஏதும் சொன்னானில்லை. அவனின் முகத்தை பார்த்தவள் அவன் கோபத்தில் இருப்பதை கண்டு பேக்டரில் ஏதோ பிரச்சினை என நினைத்து அவனருகே சென்று அவன் தோளை தொட்டு..
“என்னாச்சு.. மாமா..பேக்டரில ஏதாவது ப்ராப்ளமா..”
வீரா நிகிதாவை தீவிரமாக பார்த்தவாறே.. நிகிதாவின் போனில் கல்யாணி சேட்டிங்கை அவள் முகத்திற்கு நேராக காட்டினான்.
“ஓஓ.. தெரிஞ்ருசிச்சா..” என்று அசால்ட்டாக சொல்லி அவனருகே அமர்ந்தவளை கண்டவனுக்கு கோபம் தலைக்கேற..
“என்னடி.. திமிரா..எதுக்கு இப்படி பண்ணின..”
“என்ன பண்ணினேன்..”
“என்னபண்ணினியா.. பண்றதையும் பண்ணிட்டு எவ்வளவு திமிரா பேசற..”
“எனக்கு என்ன திமிரு.. நான் என்ன தப்பா பண்ணினேன்” என்றாள் அவனை விட கோபமாக…
“நீ செஞ்சது தப்பில்லைங்கறியா.. கல்யாணியா டிராமா பண்ணி என்ன ஏமாத்தினது தப்பில்லையா…”
“தப்பில்லை.. நீங்க பண்ணினது தப்பில்லைனா..நான் பண்ணியதும் தப்பில்ல..”
“ஏய்.. நான் என்னடி தப்பு பண்ணினேன்..”
“ஓஹோ.. நான் கல்யாணியா பேசினது தப்பு.. நீங்க சிரிச்சு சிரிச்சு பேசினது தப்பில்ல..”
“அது.. நான் ஒரு ப்ரண்டா நினைச்சு தான் பேசினேன்”
“எப்படி.. ஒரு ப்ரண்டா நினைச்சு.. முன்ன பின்ன தெரியாத பொண்ணுகிட்ட பேச முடியும். கட்டின பொண்டாடிகிட்ட பேச முடியல…”
“அது.. அது வந்து.. உன்னை விட்டுட்டு போனதுல ஒரு கில்டியா இருந்துச்சு… அதுவே எனக்கு ஒரு ஸ்ட்ரஸ்ஸா இருந்துச்சு.. அந்த சமயத்துல அந்த சாட்டிங் எனக்கு ஒரு ரீலிப்பா இருந்துச்சு…”
“விட்டுட்டு போன உங்களுக்கே அப்படி இருக்கும் போது… அப்ப தான் வாழவே ஆரம்பச்சிருந்தோம். ஏன் போனிங்க… எதுக்கு போனிங்கனு தெரியாம.. யார கேட்கறதுனு புரியாம…அதுவும்.. அதுவும் உங்க மேல… நான்….” என கண்கள் கலங்க… தொண்டை கமற… உதட்டை மடித்து வாய்க்குள் அடக்கியவள்… உணர்வுகளை அடக்க முடியாமல் திணறினாள்.
நிகிதாவை அணைத்து தன் நெஞ்சில் சாய்த்து கொண்டவன்….
“வேணாம் பேபி.. சிரமப்படாதே…. இந்த முட்டாள் புருஷன மன்னிச்சுடு அமுல்பேபி.. உன்னை விட்டு போனது தப்பு தான்… அந்த தப்பு எனக்கு வாழ்நாள் குற்றவுணர்ச்சி பேபி.. நீ கோவிச்சிகிட்டாலும் பரவாயில்லை.. நான் சொல்றது உண்மை கல்யாணியோட ப்ரண்ட்ஷிப் மட்டும் இல்லைனா.. அந்த ஊர்ல தனிமை விரக்தி குற்றவுணர்வு இது எல்லாம் என்னைய பைத்தியமாக்கி இருக்கும்”
நிகிதா அமைதியாக இருக்க.. அவன் தொடர்ந்து தனது மனதில் உள்ளதை மனைவியிடம் கொட்டி கொண்டு இருந்தான்.
“நீ கேட்ட மாதிரி உன்கிட்ட பேசல தான்.. அது உன்ன அவாய்ட் பண்ணனும் நினைக்கல.. உன்கிட்ட பேசற தைரியம் எனக்கில்லை. உன் மேல லவ் இல்ல.. கட்டாயத்துக்காக வாழறமோனு எனக்கு அப்ப தோணுச்சு..”
நிகிதா தலையை உயர்த்திஅவன் முகத்தை பார்த்தாள். அவள் பார்வையை புரிந்தவன் போல…
“அப்ப தான்.. அப்ப மட்டும் தான் பேபி.. கனடா போன சில நாட்களில் நீ இல்லாம இருக்க முடியாதுனு உணர்ந்துட்டேன். உன்னையும் கூட்டிட்டு வந்திருக்கலாம்னு தோனுச்சு.. நான் கூப்பிட்டா நீ வந்திருப்ப தான்.. ஆனா உன் அப்பா மாதிரி என்னால உன்ன வாழ வைக்க முடியாது.. உன்னை கஷ்டப்படுத்த வேணாம்னு நினைச்சேன்..”
நிகிதா மறுப்பாக தலை அசைக்க.. அவள் உச்சந்தலையில் முத்தமிட்டவன்…
“ஆனால் எது எல்லாம் நான் நெகட்டிவ்னு நினைச்சேனோ.. அதை எல்லாம் இங்க இருந்து பாசிடிவ்வா மாத்தி காமிச்சு இருக்க.. ஆனா எனக்கு அது தோனவே இல்ல பாரு… ”
அவன் புறம் திரும்பி படுக்கையில் கால்களை மடித்து சம்மணமிட்டு அமர்ந்தவள்….
“அன்னைக்கு காலையில் எழுந்த போது நீங்க என் பக்கத்துல இல்லைங்கறதே ஒரு மாதிரி இருந்துச்சு… கொஞ்ச நேரத்திலேயே நீங்க என்னை விட்டுட்டு கனடா போயிட்டிங்கனு தெரிஞ்சதும் என்னால தாங்க முடியலை. நான் உணர்ந்த காதலை நீங்க உணரலையா… முழுமையா மனசு இணைஞ்சு தான் வாழ்ந்தோம்னு நான் நினைச்சிருக்க… அப்படி இல்லைங்கறத உங்க செயல் நடு மண்டைல அடிச்சு சொல்லுச்சு…”
“அப்படி இல்லைடி அமுல் பேபி…” என்ற வீராவை பேச விடாமல் தொடர்ந்து பேசினாள்.
” நான் முதல்ல பேசிடறேன். அப்புறம் நீங்க எதுனாலும் சொல்லுங்க…ஆளாளுக்கு உங்கள திட்டுனாங்க… எனக்கு அதுவும் பிடிக்கல… அங்க இருந்தா எங்க அப்பா உங்களை பேசறத கேட்க முடியாதுனு தான் அத்தை கூட இங்க வந்தேன். எனக்கு தான் வாழ தெரியலையோ.. புருஷன புரிஞ்சுக்க தெரியலையோ.. என்னை நினைச்சே எனக்கே ஒரு கழிவிரக்கம்..”
நிகிதா முகத்தில் சொல்ல முடியாத வேதனை.. அதை கண் கொண்டு பார்க்ரக முடியாமல் வீரா கலங்கி போனான்.
“நான் பொறுப்பு இல்லாமல் இருந்ததால தானே.. நமக்கு பிடிக்காம கல்யாணம் பண்ணி வச்சாங்க.. அதனால தான நாம பிரிஞ்சோம்.. இனி இப்படி இருக்க கூடாது. பணம் அந்தஸ்து பேதம் இது தானே நமக்கு இடையே பிரச்சினையாக இருந்தது. அந்த பணம் அந்தஸ்து எல்லாம் எங்க அப்பாவோடதா இல்லாமல் என் உழைப்பால உண்டானதா இருக்கனும்னு நினைச்சேன்”
“இந்த ஊர் பொம்பளைகளும் புருஷன வச்சு பொழைக்க தெரியல என ஜாடை மாடையாக பேச… நான் என்ன தப்பு பண்ணினேன்.. ஆண்கள் செய்யும் தப்பிற்கும் பெண்களையே பொறுப்பாக்கி பேசும் ஊர் தானே… எது எல்லாம் நீங்க செய்ய முடியாதுனு நீங்க நினைச்சிங்களோ..அது எல்லாம் இங்க இருந்தே செய்யனும்னு வைராக்கியத்தை வளரத்துகிட்டேன்..”
நிகிதா பேச பேச.. வீரா வாயடைத்து போய் மௌனமாக அவள் வேதனைகளை தனக்குள் துளிதுளியாக இறக்கி கொண்டு இருந்தான்.
“அதுக்காக நிறைய அலைஞ்சு திரிஞ்சு தெரிஞ்சுகிட்டேன்.அதுக்கு நடுவுல என் வயித்துல நம்ம பேபி.. அப்படி ஒரு சந்தோஷம். அது உங்கிட்ட ஷேர் பண்ணிக்க கூட நீங்க என் பக்கத்துல இல்லை.. அப்ப அந்த நிமிசம் ஒரு சாதாரண கணவன் மனைவி உறவு கூட நமக்குள்ள இல்லயேனு பேபி வந்த சந்தோஷத்தை விட வருத்தம் தான் அதிகமா இருந்துச்சு.. நீங்களா என்கிட்ட பேசற மாதிரி தெரியல.. இப்படியே இருந்தா நமக்குள்ள பிரிவு நிரந்தரமாகிடுமோனு பயம் வநந்துருச்சு எனக்கு.. பேபியும் வந்துடுச்சு நம்ம வாழ்க்கைய சரி பண்ணனும்.. உங்கள இங்க வர வைக்கனும்… அதுக்காக தான் கல்யாணினு இல்லாத ஒரு கேரக்டரை உருவாக்கினேன். எனக்கு தெரியும் எடுத்தவுடன் கல்யாணினு சொல்லி இருந்தா.. நீங்க ரீஜெக்ட் பண்ணி இருப்பிங்க.. அதான் கல்யாண்ங்கற பேர்ல பர்ஸ்ட் சாட்டிங் பண்ணினேன். நீங்களும் ப்ரண்ட்ஷிப்ப மெயின்டென் பண்ணவும் தான் கல்யாணியா மாற்றினேன். இருந்தும் ஒரு பொண்ணானு கோபமா பேசி போனை வச்சிட்டிங்க..” எனசொல்லி சிரிக்க…
அவள் கன்னத்தை கிள்ளி “நீ ரொம்ப பெரிய கேடி டி…” வீராவும் சிரித்தான்.
“அப்புறம் உங்களை பேசி பேசியே சமாதானம் பண்ணங்காட்டி..நான் பட்டபாடு அம்மாடி..”
“நீங்க கல்யாணிகிட்ட பேசும் போது தான் ப்ரியா உங்க மனசுல உள்ளதெல்லாம் பேசினிங்க.. அப்ப தான் உங்கள பத்தியும்.. நீங்க என்மேல வச்சிருக்க லவ்வ பத்தியும் தெரிஞ்சுகிட்டேன்.. எனக்கும் பேசறதுக்கு ஜாலியா இருந்துச்சு.. என் மனசுக்கும் ஒரு ரீலிப்பா இருந்துச்சு.. ஆனால் யாரோ ஒரு பொண்ணுகிட்ட இவ்வளவு ப்ரீயா பேசற நீங்க என்கிட்ட அப்படி பேசலயே.. நாம மனசளவுல கூட மாமாக்கு நெருக்கமா இல்ல போலனு நினைச்சு அழுதிருக்கேன்…” என வருத்தத்துடன் பேச…
“அப்படி எல்லாம் இல்லடி.. உன் மாமன் மக்குடி.. அவனா தேவையில்லாம கண்டதையும் நினைச்சு.. தானும் குழம்பி.. உன்னையும் கஷ்டப் படுத்திட்டான். அவன் பாவம் பொழைச்சு போகட்டும் என மன்னிச்சு விட்டுரு..”என சொன்னவன்..
அவளை தூக்கி தன் மடியில் அமர்த்தி பின்பக்கம் இருந்து அவளை அணைத்து இரண்டு கன்னங்களில் மாறி மாறி முத்தமிட்டான். முத்தங்கங்களை நிரப்பி தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டு மனைவியிடம் மானசீகமாக மண்டியிட்டு… சாந்தப் படுத்த முயற்சித்தான்.
நிகிதா மேலும் பேச முற்பட… “வேணாம் போதும்டி.. நான் உன்ன புரிஞ்சுகிட்டேன்..”
“இல்ல மாமா.. இன்னைக்கு என் மனசுல உள்ளத பேசிடறேன்.. என்னவோ எனக்கு உங்ககிட்ட எல்லாம் சொல்லிடனும்.. இனி நமக்குள்ள எந்த ஒளிவு மறைவும் வேணாம்..”என்றவள் தொடர்ந்து தன் மனதில் உள்ளதை பேச ஆரம்பித்தாள்.
“எனக்கு மாமாவோட பட்டறை மட்டும் போதாது.. இன்னும்… இன்னும் வேற ஏதாவது செய்யனும்.. நிறைய தெரிஞ்சுகிட்டேன். என்ன எப்படி செய்யயலாம்னு யோசிச்சேன்.எந்த தொழில் இங்கு செய்வதற்கு சாத்திய கூறுகள் இருக்குனு நிறைய தேட ஆரம்பிச்சேன்.அந்த தேடல் எனக்கு பிடிச்சு போச்சு. சும்மா சோம்பி இருக்காம.. இப்படி ஓடற ஓட்டம் பிடிச்சிருந்துச்சு…அதுதான் பேக்டரி ஆரம்பிச்சேன். அடுத்தது என்னனு யோசிச்சேன். நிற்காம ஓடனும்னு.. ஒரே இடத்தில் தேங்கிற கூடாதுனு நினைச்சேன்.எனக்கு வயல்களையும் தோப்புகளையும் பார்க்கும் போது விவசாயம் பண்ணனும் ஆசை வந்துச்சு.. அதான் இந்த வயலும் தோப்பும்… இப்ப எனக்கு பேக்டரிய விட விவசாயம் தான் பிடிச்சிருக்கு…” என மலர்ந்த முகத்துடன் அவள் கனவுகள்.. அதை செயல்படுத்தியது எல்லாம் பேச.. பேச.. பாவையவள் இமயமாக தெரிந்தாள்.
நிகிதா தன் தொழில்களை பற்றி வேலையை பற்றி பேசும் போது அவளிடம் அப்படி ஒரு ஆர்வம்.. ஆனந்தம்.. சாதித்த பெருமிதம்… அதுவே வீராவுக்கு உணர்த்தியது அவளின் முயற்சியும் உழைப்பும்.. வீராவுக்கு மனைவியை நினைத்து பெருமையாக இருந்தது.
சற்று நேரம் வீரா பேசவில்லை. அவள் பேச்சின் தாக்கம் அவனால் பேச முடியவில்லை. தன் மனைவியின் விஸ்வரூபம் அவனை மலைக்க வைத்தது. ஒன்று புரிந்தது வீராவிற்கு நிகிதாவை கல்யாணம் செய்யாமல் இருந்தால் பட்ஜெட் போட்டு வாழும் மிடில்கிளாஸ் வாழ்க்கை தான் வாழ்ந்திருப்போம். பணம் என்பதை தாண்டி இயந்திரதனமான வாழ்க்கை தான் இருந்திருக்கும்.. இப்படி தேடலான சவாலான வாழ்க்கையாக இருந்து இருக்காது. தன் வாழ்வை இரட்சிக்க வந்த யட்சிணியாக நினைத்தான்.
கணவனின் அமைதி கண்டு அவளும் அமைதியாகவே இருந்தாள். சில மணிதுளிகள் கழித்து அவள் கணவனே அந்த அமைதியை களைத்தான்.
“ஐயோ கால் வலிக்குது.. எந்திரிடி அமுல்பேபி.. ம்மா என்னா வெயிட்டா இருக்க..”
அவனை விட்டு இறங்கி நின்றவள் இடுப்பில் கை வைத்து முறைத்தவாறே…
“நானா மடில உட்கார்ந்தேன்.. நீங்க தான தூக்கி உட்கார வச்சிங்க… ” என அவன் முகத்தின் முன் விரலை நீட்டி பேச.. அந்த நீளமான விரல்களை பிடித்து கடித்து வைத்தான்.
கையை உதறி… “ஆ.ஆ.. வலிக்குது…” செல்ல சிணுங்கலாக..
“அச்சோ அமுல்பேபிக்கு வலிக்குதா..” என கேட்டவனுக்கு அவளிடம் வம்பு செய்யும் பொருட்டு…
விரலை பிடித்து மெல்ல ஊதிவிட.. அவளுக்கு உடல் சிலிர்த்தது. அவளின் சிலிர்ப்பை உணர்ந்தவனுக்கு குறும்பு செய்யும் எண்ணம் தலை தூக்க… அவளின் விரலை தன் உதடுகளால் உரச.. மீசை குறுகுறுப்பு உராய்வில் அவளுள் காதல் ஹார்மோன்கள் பேயாட்டம் போட… அவளின் முகத்தை ஓரவிழிப் பார்வையால் பார்த்துக் கொண்டே… தன் உதடுகளையும் அவள் விரலையும் சிக்கி முக்கி கல்லாய் உரசி உரசியே காதல் மோகத்தீயை பற்ற வைத்தான்.
அவளின் மோகத்தீயை வளர்த்து.. அதில் சுகமாக குளிர் காயும் எண்ணம் கொண்டு.. விரலிருந்து மேல் நோக்கி கை கழுத்து.. கன்னம் என முன்னேறியவன் மனையாளின் இதழில் சற்று இளைப்பாறினான்.
கணவனின் காதல் சாகசங்களை தாளாமல் அவன் மேல் மொத்தமாக சரிந்தாள். காதல் அமுதம் கேட்பவனிடம்.. பிச்சு.. பிச்சு தின்னாதடா.. முழுவதுமாக அள்ளிகொள்.. என தன்னைய அவனிடம் ஒப்புவித்துவிட்டாள்.
தன் இணையாளின் சம்மதம் கிடைத்த நொடி… அவனோ கள்ளு உண்டவனாய் மயங்கி கிறங்கி.. பெண்ணுள் புதைந்து சுகம் தேடி.. சுகம் கண்டு… கண்ட சுகத்தை எடுத்து… எடுத்ததை திருப்பி தந்து… தானும் சுகித்து… அவளையும் சுகம் பெற செய்தான் அந்த காதல் சுகவாசி….
பகல் பொழுது முடிந்து மாலை மங்கிய நேரம் தான் இருவரும் உறக்கம் கலைந்தனர். கணவனின் அணைப்பில் உறங்கி இருந்த நிகிதா தான் முதலில் கண்விழித்தாள். வீரா களைத்து போய் நன்றாக உறங்கி கொண்டு இருந்தான். தன் தலையில் இருந்த பூ எல்லாம் உதிர்ந்து.. அவன் கன்னம் மார்ப்பில் எல்லாம் ஒட்டி இருக்க.. விலகி இருந்த தன் புடவை முந்தானையை எடுத்து அவன் முகத்தை எங்கே விழித்து கொள்வானோ… மெல்ல துடைக்க…
அவளின் ஸ்பரிசமோ… அவளின் வாசம் சுமந்திருந்த புடவை வாசமோ.. வீராவும் விழிப்பு கொண்டான். கண் விழித்ததும் கண்டது மோகன புன்னகையோடு இருந்த தன்னவளின் வதனமே…
அவளை இழுத்து இதழை சிறை செய்து மீண்டும் ஒரு கூடலுக்கு அழைப்பு விடுக்க… அவனில் இருந்து வலுகட்டயமாக பிரிந்தவள்…
“போங்க பகல்லயே இப்படி பண்ணறிங்க… ஈவ்னிங் ஆயிடுச்சு.. அத்தை மாமா வரங்காட்டி நான் குளிக்கனும். அவங்க வந்திட்டா எனக்கு சங்கடமா இருக்கும்..”
சொல்லி கொண்டு தனக்கு மாற்றுடையை எடுத்து கொண்டு பின்பக்கம் குளிக்க சென்றாள்.
வீரா வீட்டை இடித்து சகல வசதிகளோடு வீடு கட்ட வேண்டும் என நினைத்தான்.
29 – புயலோடு பூவுக்கென்ன மோகம்
பிரசவ நாளும் நெருங்கிட பிரசவத்திற்கு கூட நிகிதாவை சென்னைக்கு அனுப்பவில்லை வீரா… வெங்கட் வற்புறுத்தி கூப்பிட்டும் நிகிதா அசையவில்லை.
பிரசவம் வரைக்கும் எங்கயும் வேலை என்று வெளியே செல்லகூடாது. எல்லாம் தான் பார்த்து கொள்வதாக வீரா கண்டிப்புடன் சொல்லிவிட்டான். பற்றாகுறைக்கு விசாலாவிடமும் எனக்கு தெரியாம உங்க மருமக வேலைனு வெளிய போயி உடம்புக்கு இழுத்து விட்டுகிட்டா… நீங்க தான் அதுக்கு பொறுப்பு என சொல்லிட.. விசாலாவும் நிகிதாவை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை.
நிகிதாவால் எப்பவும் வேலை வேலை என இருந்து விட்டு வீட்டில் சும்மா இருக்க முடியவில்லை.
“மாமா… என்னால வீட்டில் இருக்க… போரடிக்குது… நான் உங்களோட காலைல மட்டும் பேக்டரிக்கு வரவா.. வந்து எதுவும் செய்யமாட்டேன். சும்மா உட்கார்ந்து இருக்கேன்..”
“ஒன்னும் வேண்டாம். அங்க சும்மா இருக்கறதுக்கு வீட்ல தூங்கி ரெஸ்ட் எடு” என்றிட…
முகத்தை தூக்கி வைத்து கொண்டாள். அவளின் சிறுபிள்ளதனமான செயலில் வீரா சிரித்து விட…
“என்னை பார்த்தா உங்களுக்கு சிரிப்பா இருக்கா..” இன்னும் முறுக்கி கொள்ள…
“அடியேய்… அமுல்பேபி…” முகத்தை திருப்பி சுவற்றை பார்த்து கொண்டு இருந்தவளை தன் பக்கம் திருப்பி தாடையை பிடித்து கொஞ்சியவன்….
“இவ்வளவு நாள் தான் வேலை வேலைனு ரெஸ்ட் இல்லாமல் சுத்திகிட்டு இருந்த…டெலிவரிக்கு கொடுத்த டைம்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு.. நம்ம பேபிக்காக கொஞ்சம் ரெஸ்ட்ல இருனா.. புரிஞ்சுக்காம பேசற…”என சலிப்பாக சொல்ல…
வீராவின் பேச்சில் இருந்த அக்கறை நிகிதாவின் அகத்தை குளிர்விக்க…
“சரி மாமா.. நான் வீட்லயே இருக்கேன்..” அவன் கன்னத்தில் முத்தமிட்டு அவனின் ஆற்றாமையை ஆற்றிட… அணைத்து கொண்டான் அவளை…
அந்த வாரத்திலேயே ஒரு நாள் வீரா பேக்டரிக்கு சென்ற சிறிது நேரத்திலேயே… நிகிதாவிற்கு பிரசவ வலி எடுக்க….வீராவை தவிர அனைவரும் வீட்டில் இருந்தனர். நிகிதா வரவில்லை என்றால் என்ன நாம் அங்கே போலாம் வீட்டினரை கிளப்பி கொண்டு வந்திருந்தார் மங்களம் பாட்டி.
ஒரே வீட்டில் விசாலா கவனிப்பில் நன்றாக உண்டு.. ஒரே கூடத்தில் அனைவரும் உறங்கி சந்தோஷமாகவே இருந்தனர். வெங்கட் கூட ஏதும் பேசாமல் அக்கா வீட்டில் பிசினஸ் டென்ஷன் ஏதுமின்றி நன்றாக உண்டு இயற்கை காற்றில் உறங்கி என அனுபவித்தார்.
நிகிதாவிற்கு பிரசவ வலி எடுக்கவும் வெங்கட் காரில் நிகிதாவை காஞ்சிபுரம் அவள் வழக்கமாக பார்க்கும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். போகும் போதே வீராவிற்கு அழைத்து சொல்ல… வீராவும் பேக்டரியில் இருந்து கிளம்பி விட்டான்.
நிகிதா வலியில் துடிக்க…. டாக்டர் பிரசவம் ஆவதற்கு நேரமாகும் என்று சொல்லி விட… அவளின் துடிப்பை பார்த்து கொண்டு எதுவும் செய்ய முடியாத வருத்தத்தோடு லேபர் வார்டு வாசலில் அமர்ந்திருந்தனர்.
நிகிதாவின் அலறலை காது கொண்டு கேட்க முடியாமல் வீரா முன்னால் லாபியில் போய் கண்களை மூடி உட்கார்ந்து கொண்டான்.
நிகிதாவை படுத்தி எடுத்து.. எல்லோரையும் தவிக்க வைத்து தான் பிறந்தான் வீராவின் மகன். பூக்குவியலாக… கைகால் விரல்கள் எல்லாம் நீளமாக…மகனை பார்த்ததும் வீராவுக்கு அளவில்லா ஆனந்தம். தந்தை ஆகிவிட்ட கர்வம் மனதினுள்…. நிகிதா களைத்து அயர்ந்து போய் படுத்து இருக்க… மனைவியின் வியர்வையால் நனைந்து கலைந்திருந்த முடிகளை காதோரம் ஒதுக்கி விட்டு நெற்றியில் பூத்திருந்த வேர்வை முத்துக்களை தன் புறங்கையால் துடைத்து விட்டவன்… சுற்றியும் இருந்த குடும்பத்தினரை பற்றி கண்டு கொள்ளாமல்…. நெற்றியில் அழுத்தமாக முத்தம் பதித்து….
“ரொம்ப கஷ்டப்பட்ட இல்ல… அமுல்பேபி…. டயர்டா இருக்கே.. ஏதாவது ஜீஸ் குடிக்கிறயா.. இல்ல கேன்டின்ல பால் சூடா வாங்கிட்டு வரவா..” என அவள் கையை பிடித்து கொண்டு கேட்க… மெலிந்த புன்னகையோடு அவனின் அன்பை காதலோடு பாரத்து கொண்டு இருந்தாள்.
அவளின் பார்வையில் வெட்கமாக…. “ச்ப்ப்… என்னடி… நீ” என்று செல்லமாக சலித்து கொண்டான். அதற்கும் ஒரு காதல் பார்வை தான் அவளிடம்….
களைத்து கலைந்து போயிருந்த அவளின் முகத்தில் அந்த பார்வையும்.. புன்னகையும்… பார்க்க அப்படி ஒரு அழகோவியமாக இருந்தது.
மனைவியை அணைத்து கொள்ள பரபரத்த கைகளை சுற்றி இருந்தவர்களை கருத்தில கொண்டு அடக்கி கொண்டான்.
மூன்று நாட்கள் மருத்துவ மனையில் இருந்து விட்டு நிகிதாவை சென்னைக்கு அழைத்து சென்றுவிட்டனர். வீராவின் மறுப்பை யாரும் கண்டு கொள்ளவில்லை நிகிதா உட்பட..
வீராவிடம் சொல்வதற்கு முன்பே எல்லோரிடமும் மங்களம் பாட்டி சொல்லிவிட்டார். மூன்று மாதமாவது கவனித்து தான் அனுப்புவோம் என… மகனுக்கும் தன் மகளை வைத்து பார்த்து கொள்ளும் ஆசையை அறிந்தவராயிட்டே… அப்பாவின் முகத்தை பார்த்த நிகிதாவும் அமைதியாக சரி என்றுவிட்டாள்.
வீராவோ அனுப்ப மாட்டேன் என்று சொல்ல… கண்டு கொள்ளாமல் வீட்டினர் நிகிதாவை அழைத்து செல்லும் முனைப்பில் இருக்க…. மற்றவர்களிடம் பேச முடியாத கோபத்தை எல்லாம் நிகிதாவிடம் காண்பித்தான்.
“என்னடி.. எல்லோரும் சொல்லறாங்க.. நான் மட்டுமே பேசிட்டு இருக்கேன். நீயும் அமைதியா இருக்க… என்னைய விட்டுட்டு நீ இருந்துருவியாடீ..”என சண்டை போட…
நிகிதா வீராவை பார்த்து மெல்ல சிரிக்க… அதற்கும் வீரா எகிறி கொண்டு வந்தான்.
“என்னடி நக்கலா… நானே உன்னய விட்டுட்டு எப்படி இருக்கறதுனு கவலைல கத்திகிட்டு இருக்கேன்… நீ சிரிச்சுகிட்டு இருக்க..”
“கனடா போனப்ப எப்படி இருந்திங்களோ… அப்படி தான்..” என நிகிதா சொல்லி காட்ட…
வீராவின் கோபம் எல்லாம் நீர் தெளித்த கனலாக அடங்கி… முகம் தொங்கி போய் நிகிதாவின் படுக்கையில் அவளின் தலை பகுதியில் அமர்ந்து இருந்தவன் விலகி அருகே இருந்த நாற்காலியில் போய் உட்கார்ந்து கொண்டான்.
இந்த பேச்சு எல்லாம் மருத்துவமனையிலேயே.. இவர்களுக்கு கிடைத்த கொஞ்ச நேர தனிமையிலேயே நடக்க… வீராவின் முகத்தை பார்த்ததும் நிகிதாவிற்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது.
“சாரி மாமா… வெரி சாரி… நான் வேணும்னு சொல்லி காட்டல… அது என்னை அறியாம வந்திடுச்சு… சாரி ப்ளீஸ்..” என கண்களை சுருக்கி கணவனை காயப்படுத்தி விட்டோமே என்ற கவலையில் வருத்தத்துடன் கேட்க…
மனைவியை உயிராய் நேசிப்பவனுக்கு அவள் வருத்தபட்டால் மனசு தாங்குமா… எட்டி அவள் கையை பிடித்தவன்…
“ப்ச்ச்.. அத விடு… போயே தான் ஆகனுமா… வேற ஆப்சனே இல்லையா… என்னால இருக்கமுடியாதுடி…”என்றான் கவலையாக..
“நீங்க வளைகாப்பு முடிஞ்ச அடுத்த நாளே கூட்டிட்டு வந்துட்டிங்க… அவங்களுக்கும் என்னைய வைத்து பார்க்கனும் ஆசை இருக்கும்ல… இப்பவும் வேணாம்னா எப்படி மாமா.. இங்க இருக்கற சென்னை தான.. நீங்க நினைச்சா வந்து பார்த்துக்கலாம். என்ன ஒன்றரை மணிநேரத்தில் வந்திடலாம்.. ஒரு மூனு மாசம் தான். அப்புறம் நானே அங்க இருக்கமாட்டேன்.வந்துடுவேன்.. என்னால பண்ணைத் தோட்டத்த பார்க்காம இருக்க முடியாது..” என்றிட…
வீரா அவளை எரிப்பது போல பார்த்தான்.
“ஏண்டி.. நான் உன்னைய விட்டு இருக்கமுடியலனு சொல்றேன்.. நீ பண்ணைய விட்டு இருக்கமுடியாதுனு சொல்ற.. எவ்வளவு கொழுப்புடி…” என்றான் இடுப்பில் கை வைத்து அவளை முறைக்க…
“ஹீஹீ.. சும்மா மாமா.. எனக்கும் உங்கள விட்டு இருக்க முடியாது..” என சிரித்து மழுப்பி சமாளித்தாள்.
மனமே இல்லாமல் தான் நிகிதாவை சென்னைக்கு அனுப்பி வைத்தான் வீரா. மூன்று மாதமும் ஞாயிற்று கிழமைகளில் மட்டும் சென்று மனைவியையும் மகனையும் பார்த்து விட்டு வந்தான்.
மூன்று மாதாம் குடும்பத்தினரை பாடாய் படுத்தி நிகிதாவை அழைத்து வந்துவிட்டான். வீரா காலையில் பேக்டரிக்கு போகும் முன்பு மகனை தூக்கி வைத்து கொண்டே இருப்பான். பேக்டரியில் வந்த பிறகும் மகனோடு தான்.
சென்னையில் கிளம்பும் முன் வெங்கட் பேரனுக்கு பெயர் சூட்டும் விழா வழக்கம் போல் அவருடைய பாணியில் வெகு விமர்சையாக செய்தார்.
வீரா மகனுக்கு இஷாந்த் என பெயர் வைத்தான். இஷாந்த்கு ஆறு மாதங்கள் ஆகும் வரை வீட்டில் இருந்த நிகிதா அதற்கு பிறகு மகனை விசாலாவிடம் ஒப்படைத்து விட்டு பண்ணைக்கு செல்ல ஆரம்பித்தாள்.
வீரா பேக்டரிக்கும் நிகிதா பண்ணைக்கும் சென்றால்… இருவரும் மதிய உணவுக்கு வந்து விட்டு மகனோடு சிறிது நேரம் இருந்து விட்டு சென்று மாலை இருவரும் மகனுக்காக சீக்கிரம் வீடு திரும்பி விடுவர்.
நிகிதா பழ மரங்கள் நிறைந்த பண்ணையை தான் முதலில் வாங்கினாள். ஏற்கனவே மா வாழை எலுமிச்சை மாதுளை இருந்தவற்றை வாங்கி இயற்கை விவசாய முறையில் மாற்றி அமைத்தாள். அதற்கான பயிற்சியும் எடுத்து கொண்டதால் நல்ல விளைச்சலை எடுத்தாள்.
நேரடியாக வியாபாரிகளுக்கு விற்பனை செய்து நல்ல இலாபம் பார்த்தாள். இலாபத்தை மேலும் விவசாய பூமி வாங்க சேமித்து வைத்தாள். ஊரில் உள்ள பெண்களை ஒன்று சேர்த்து மண்புழு தயாரிப்பு, காளான் வளர்ப்பு ,தேனீ வளர்ப்பு என அவரவர் விருப்பத்திற்கேற்ப தங்கள் ஊரில் அதற்கான வல்லுனர்களை கொண்டு பயிற்சி பட்டறை ஏற்பாடு செய்து கற்றுக்கொள்ள வைத்தாள். சிறுகுறு தொழில் வங்கி கடனை பெற்று தந்து பெண்கள் தங்கள் சுயத்தில் நிற்பதற்கு உதவினாள்.
மூன்று வருடங்கள் கடந்த நிலையில்…
டெல்லி மாநகரம்
ராஷ்டிரபதி பவன்
நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து வந்த மக்கள் கூடி இருந்தனர்.ஒவ்வொரு துறையிலும் இளம் சாதனையாளர்களை தேர்ந்தெடுத்து தேசிய விருது வழங்கும் விழா நடை பெற்றது கொண்டு இருந்தது. நிகிதா இளம் இயற்கை விவசாயி என்ற விருதுக்கு தேர்ந்து எடுக்கப்பட்டிருந்தாள்.
மைக்கில் “ஶ்ரீமதி நிகிதா வீராசாமி இளம் இயற்கை விவசாயி” என்று இந்தியில் அறிவிக்கப்பட.. நிகிதா கம்பீரமாக மேடை ஏறினாள். அழகான கருநீல சாப்ட் பட்டு சேலையில் தாலி கொடியோடு கழுத்தை ஒட்டி சிறு சங்கிலி மட்டுமே அணிந்திருக்க.. எளிமையான அலங்காரத்தில்.. தனித்து சாதித்ததில் இயற்கையாகவே அவள் உடல் மொழியில் ஒரு நிமிர்வும்.. நேர் பார்வையும் வந்திருக்க… சாதனை பெண்ணாக மிளிர்ந்தாள்.
கீழே பார்வையாளர்கள் பகுதியில் தன் குடும்பத்தினரோடு அமர்ந்திருந்த வீரா மனைவியை அணு அணுவாக ரசித்து கொண்டு இருந்தான்.குடியரசு தலைவர் நிகிதாவிற்கு பதக்கம் அணிவித்து பட்டயம் வழங்க… அரங்கம் கைதட்டல்களால் நிறைந்திருக்க…வீரா அமைதியாக அமர்ந்து தன் மனைவியை பெருமிதமாக பார்த்து கொண்டு இருந்தான்.
வெங்கட்டிற்கோ தன் மகளை நினைத்து பெருமை தாங்கவில்லை. அரசாங்க அறிவிப்பு வந்த நாளிலிருந்து தனது காமர்ஸ் அசோசியேசன், ரெக்கரேஷன் கிளப் என எல்லா இடங்களிலும் மகளை பற்றி பேசி பேசியே ஓய்ந்து போனார்.
வீராவுக்கு மாமனார் இதற்கு மேல் செய்ய போகும் அட்டகாசங்களை நினைத்து மெலிதான சிரிப்பு வந்தது.
ஆமாம் வெங்கட் அப்படி தான்.. போன வருடம் சிறந்த தொழில் முனைவோருக்கானமாநில அரசு விருதை வீராசாமிக்கு தமிழக அரசு வழங்கியது. அதற்கே ஒரு பெரிய ஸ்டார் ஹோட்டலில் தொழில் சார்ந்த நண்பர்கள் அரசியல் பிரமுகர்கள் என அழைத்து பார்ட்டி வைத்து கொண்டாடினார்.
வீரா நினைத்து சிரித்தது இது தான்.. நான் மருமகன்.. நான் வாங்கியதோ தமிழக அரசு விருது.. இன்றோ அவர் மகள் வாங்குவதோ தேசிய விருது.. என்னன்ன அட்டகாசங்களை அரங்கேற்றுவாறோ….என நினைத்து தான்..
அவன் நினைத்தது போலவே தான் வெங்கட் செய்தார் எல்லாம் ஆடம்பரமாக.. ஆர்ப்பாட்டமாக…
28 , 29 – புயலோடு பூவுக்கென்ன மோகம் Read More »