ATM Tamil Romantic Novels

என் மோகத் தீயே குளிராதே 07

அத்தியாயம் 7   “ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்.. எனக்கொரு கவலையில்லை.. நான் தான்டா.. என் மனசுக்கு ராஜா.. வாங்குகடா வெள்ளில கூஜா..” என்று பாடியபடியே இறங்கி வந்தான் அகில்.    “என்னடா பாட்டெல்லாம் பலமாயிருக்கு..” என்றவாறு அவனை வழிமறித்து நின்ற நகுலனை ஏன் இறங்க பார்த்த அகில்,   “பின்ன உங்களை மாதிரி வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்து அடைகாக்க சொல்றியா? என்னால முடியாதுப்பா.. நான் ஊட்டிய சுத்திப் பார்க்க போறேன்.. சரி.. சரி வழிய விடு.. நரி […]

என் மோகத் தீயே குளிராதே 07 Read More »

26019B55-102A-4D00-9D07-ED3CEE1CACC4

புள்ளி மேவாத மான் – 16

16 – புள்ளி மேவாத மான்

கோயிலுக்கு செல்லும் போதே எழிலுக்கு உடம்பு ஒரு மாதிரி இருந்தது. வயிற்றை பிரட்டி கொண்டு வருவது போல இருக்க.. அதிகாலையில் எழுந்தது.. அதோடு கார் பயணம்.. அதனால் அப்படி இருக்கிறதோ.. என நினைத்து கொண்டாள்.
கோயிலுக்கு சென்று பூஜைக்கான வேலைகள் செய்ய மிகவும் களைத்து போனாள். கனிமொழியை பொங்கல் வைக்க சொல்லி எழிலை உதவிக்கு வைத்து விட்டு திலகாவும் தேவியும் உரலில் மாவு இடிக்க சென்றனர்.
அடுப்பின் அருகே உட்கார்ந்து வெல்லம் உடைத்து கொண்டு இருந்தவளுக்கு விறகு புகையால் இருமி ஓக்கரித்து கொண்டு வர ஓடிப்போய் வாந்தி எடுத்தாள்.
கனி பதறி “அத்த.. அத்த.. இங்க வாங்க..”என கூப்பிட.. கனியின் சத்தத்தில் அனைவருமே வந்தனர். திலகாவும் தேவியும் எழிலை அருகே சென்று தண்ணீர் கொடுத்து வாய் கொப்பளித்து முகம் கழுவி கூட்டி வந்து கோயில் மண்டபத்தில் உட்கார வைத்தனர். அதற்குள் அனைவரும் என்ன என வந்துவிட்டனர்.
திலகா “என்ன அரசி என்ன பண்ணுது காலைல சாப்பிட்டது ஏதாவது ஒத்துக்கலையா…”
“இல்லைங்க அத்த இட்லி தான சாப்பிட்டேன். புகை தான் ஒத்துக்கல போல..”
“ஏன் அண்ணி புகையால கண் எரிச்சல்னா கூட பரவாயில்ல… வாந்தி வருதுனா லாஜிக் இடிக்குதே…” என பிரசாத் நக்கல் பேச…
“டேய் தம்பி… உனக்கு நேரம் சரியில்லடா….”என்ற திரு சொல்லிவிட்டு தலையை குனிந்து கொண்டு சிரிக்க…
சுந்தரம் இவர்களை பார்த்து முறைக்க… கண்ணன் அமைதியா இருங்களேன்டா என கை ஜாடையாக பேச…
மகன் சொன்னதை யோசித்த தேவி திலகாவின் காதில் ஏதோ சொல்ல.. திலகாவும் எழிலிடம் மெதுவான குரலில்,
“கடைசியா எப்ப பீரியட்ஸ் ஆன..”
முதலில் முழித்தவள்… பின்பு எப்போ என யோசித்தாள்.
இரண்டு மாதத்திற்கு முன்பு… தனாவின் விபத்திற்கு முன்பு… தனாவை கவனிப்பதில் தன்னை கவனிக்க மறந்துவிட்டாள்.
“அத்த இரண்டு மாசாமாச்சு”சொல்லும் போதே எழிலுக்கு ஏதோ புரிவது போல இருந்தது. நிஜமா… தனக்கா… கடவுள் கருணை காட்டிட்டாரா… என உள்ளம் பூரித்து போக..
“நாளு தள்ளி போயிருக்கு தேவி” என சொன்னவர் வேகமாக கடவுளின் முன் போய் நின்று,
“ஆத்தா… அங்காளம்மா… குலம் தழைக்க வச்சிருக்க.. சந்தோஷமா இருக்கு.. தாயும் பிள்ளையும் நல்லா இருக்கனும்” என மனதார வேண்டி கொண்டு விபூதி எடுத்து வந்து எழிலின் நெற்றியில் இட்டுவிட்டார்.
பெண்கள் அவர்களுக்குள்ளேயே ரகசியமாக பேசிக் கொள்ள ஆண்களுக்கு ஒன்றும் புரியவில்லை. சுந்தரம் திலகாவிடம் என்னவென்று கேட்க.. திலகா சொல்லவும் குடும்பத்திற்கே மகிழ்ச்சி.
திலகா மருத்துவமனைக்கு சென்று உறுதி செய்யும் வரை வெளியில் யாரிடமும் சொல்லவேண்டாம் என்றிட… சுந்தரம் சீக்கிரம் பூஜையை முடித்துவிட்டு கிளம்பலாம் சொல்லவும்,
விரைவாக பூஜையை முடித்து கொண்டு வந்திருந்த மதிய உணவை சாப்பிட்டு ஊர் திரும்பினர்.எழிலை வீட்டில் கொண்டு வந்து விட்டு திலகாவும் தேவியும் ஆயிரம் பத்திரங்கள் சொல்லி சென்றனர்.
தனா இதை எல்லாம் பார்த்து கொண்டு தான் இருந்தான். வர லேட்டாகும் என நினைத்திருக்க..சீக்கிரம் வந்ததோடு இல்லாமல் தன் சித்திகள் எழிலிடம் ஏதோ மெதுவாக சொல்லிவிட்டு செல்வதையும் பார்த்தான். அதைவிட எழில் வழக்கத்துக்கு மாறாக இட்ட அடி நோகுமோ என மெல்ல நடந்து வருவதை பார்த்து இவளுக்கு என்னாச்சு என குழம்பி தான் போனான்.
தனாவிடம் எதுவும் பேசாமல் அறைக்குள் சென்றுவிட… எப்பவும் மாமா என்ற அழைப்போடு தனது டிரேட் மார்க் புன்னகையோடு வருபவள் அமைதியாக செல்ல… எதாவது பிரச்சினையா என யோசித்து டிவியை அணைத்து விட்டு அறைக்கு வந்தான்.
எழில் கட்டிலில் உட்கார்ந்திருக்க…தனா அவளின் அருகே சென்று தோளில் தட்டி
“ஹேய்…எழில் என்னாச்சு ஏன் இப்படி இருக்க..”என கேட்கவும்… அவனை இடுப்போடு கட்டி கொண்டு மௌனமாக கண்ணீர் வடிக்க….
அவள் அழுகையில் இவன் கவலையுடன் “ஏம்மா அழுகற… யாராவது ஏதாவது சொல்லிட்டாங்களா”
தனாவை இழுத்து தன் அருகே அமர வைக்க.. சற்று தடுமாறி அமர்ந்தவனின் நெஞ்சில் சாய்ந்து கொண்டு
“மாமா.. நமக்கு பாப்பா…”
தான் கருவுற்றிருப்பதை அவனிடம் கிசுகிசுப்பான குரலில் சொன்னாள்.
அவள் சொல்ல வருவது சரியாக புரியாமல் அவள் முகம் நிமிர்த்தி பார்க்க… அவனின் கண்கள் வழி விடுத்த கேள்விக்கு பதிலாக அவன் கைகளை எடுத்து தன் வயிற்றில் வைத்து
“நம்மள அப்பா அம்மானு கூப்பிட பாப்பா வர போகுது மாமா…”
அவளின் செய்தியில் அவனுக்கு சொல்லமுடியாத சந்தோஷம். அவளை அணைத்து கொள்ள.. இருவரும் ஆர்பாட்டமின்றியே அந்த மகிழ்ச்சியை அமைதியாக அனுபவித்தனர்.
குழந்தைக்காக எவ்வளவு எதிர்பார்த்து ஏங்கி தவித்தாள் என அவனுக்கு தானே தெரியும். அதற்காக அவள் பட்ட கஷ்டங்கள்… ஏச்சுபேச்சுக்கள்…
கோவிலில் நடந்தவற்றை சொல்லி முடிக்க.. சிறிது நேரம் அப்படியே இருந்தவர்கள் இருளாயின் குரலில் தான் வெளியே வந்தனர்.
எழிலரசியை தன் கைகளால் நெட்டி முறித்து திருஷ்டி கழித்தவர்,
“இப்ப தான் திலகாத்தா… சொல்லுச்சு… ரொம்ப சந்தோஷம் தாயி.. ஐய்யா.. ராசா… ஐயனும் அம்மாவுமே உனக்கு புள்ளையா பிறப்பாங்க ராசா… இனி நீ கொப்பும் குலையுமா.. இருப்ப எனக்கு அது போதுமய்யா.. இனி இந்த கட்டை சந்தோஷமா வேகும்..” என கண் கலங்க… பொக்கை வாய் கொள்ளா சிரிப்புடன்..
“ப்ச்ச் ஆயா..என்னை வளர்த்த மாதிரி என் பிள்ளையும் நீ தான் வளர்த்துவ.. இப்ப குடிக்க எழிலுக்கு ஏதாவது கொண்டு வா” என்க.. தள்ளாத வயதை மறந்து சிறுபிள்ளை போல சுறுசுறுப்பாக சென்றார்.
“எழில் உங்க வீட்ல சொல்லிட்டியா” என்று தனா கேட்க..
“இல்ல மாமா.. உங்ககிட்ட சொல்லிட்டு சொல்லலாம்னு இருந்தேன்”
தனா தனது போனில் இருந்தே அழைத்து எழிலின் கையில் கொடுக்க தன் தாயிடம் விபரம் சொல்ல..
உடனே எழிலின் குடும்பம் எழிலை பார்க்க வந்துவிட்டனர். முத்துக்குமார் மகளுக்கு பிடித்த பலகாரங்கள் பழவகைகள் என அத்தனை வாங்கி வந்திருந்தார்.
தனா அதை பார்த்து ஏன் என் பொண்டாட்டிக்கு நான் வாங்கி தரமாட்டனா… என கடுப்பானான்.
சற்று நேரத்தில் சுந்தரம் குடும்பமும் கண்ணன் குடும்பமும் வர பேசி சிரித்து.. திலகா தேவி கற்பகம் மூவரும் இரவு விருந்து தடபுடலாக சமைக்க… எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டு….என அடுத்த தலைமுறை வருகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.
எல்லோரும் கிளம்பி சென்றதும் தங்கள் அறைக்கு எழிலோடு வந்தவன் அவளை நெருங்கி அவள் வயிற்றில் புடவையை விலக்கி முத்தம் தொடர்ந்து கொடுத்து கொண்டே இருக்க… அவனின் மீசையின் குறுகுறுப்பு தாங்காமல் நெளிந்தவள்..
“மாமா.. கூசுது… போதும் விடுங்க”
“என் புள்ளைக்கு கொடுக்கறேன் உனக்கென்னடி பொறாமையா..”
“ஆமாம் எங்களுக்கு பொறாமையாம் பொறாமை.. ஒரு ஆமையும் இல்ல..”படபட பட்டாசாய் வெடிக்க..
தனா சத்தமாக சிரிக்க.. அவனின் சிரிப்பை கண்டு உதட்டை சுழிக்க.. சுழித்த உதட்டை தன் உதடு கொண்டு அடக்க… அவள் மாமனை இறுக்கி அணைக்க.. இவனுக்கு தான் அடங்காமல் தாபம் கிளர்ந்தெழ.. தன் தாபத்த தீர்த்துக் கொள்ள மேலும் முன்னேறியவனுக்கு குழந்தையின் ஞாபகம் வர.. சட்டென தாப அலை ஓய்ந்தது. அவன் நெற்றியில் முத்தமிட்டு விலகி படுத்துக் கொண்டான்.
கேள்வியாக மாமனை பார்க்க.. அவளை எடுத்து தன் நெஞ்சில் போட்டு கொண்டு
“பாப்பாவுக்கு ஏதாவது ஆகிடுமோனு பயமா இருக்கு”
அவளுக்கும் ஒன்றும் தெரியாததால் அவனின் பயம் அவளுக்கும் தொற்றிக் கொள்ள… பயத்தில் அமைதியாக இருவரும் அணைத்து கொண்டு படுத்திருந்தனர்.
இதற்கு நடுவே தமிழரசன் கீர்த்தியை யாரும் அறியாமல் சைட் அடிக்க.. கீர்த்தி மனசில் ஒரு சின்ன தடுமாற்றம்.. அதை மீறி தன் குடும்பத்தினரை நினைத்து பயம்.
எழிலின் கல்யாணத்தின் போது தமிழரசனுக்கு கீர்த்தி மீதான பார்வை சிறுபிள்ளை என இருக்க… வெற்றியின் கல்யாணத்தில் சிறு சலனம்.. சலனம் சஞ்சலமாகி.. காதலாகி… இப்போ உரிமையோடு அவள் மீது பார்வையை பதிக்க…
கீர்த்தியை பொறுத்த வரை தமிழரசன் அண்ணியின் அண்ணன் அவ்வளவே… விபத்து பிறகு தமிழரசன் தனாவை பார்க்க வரும் சமயங்களில் கீர்த்தியை சந்திக்க நேர்ந்த போது அவன் கண்களில் தெரிந்த ஏதோ ஒன்று அவளை தடுமாற செய்தது தான்.
சிறுபெண் தானே ஏற்பதா.. எதிர்பார்ப்பதா.. என புரியாத நிலை.
எழிலின் கர்ப்பம் தனாவுள் பல மாற்றங்கள். தன் மனைவி தன் குடும்பம் அதனுள் ஒரு புது வரவு பொறுப்புகள் கூடி போக.. இயலாமையை எரிச்சலாக காண்பிக்காமல்… எழிலை கஷ்டப்படுத்த விரும்பாமல்… அப்பா என்ற பதவி உயர்வு புத்துணர்ச்சியோடு ஓடும் வேகத்தை கொடுக்க… முன்பைவிட முனைப்பாக தன் உடலை நிலைப்படுத்த அனைத்தும் செய்தான்.
ஒருமாதம் ஓய்வு மீதமிருக்க… தன் முயற்சியில் பதினைந்து நாளில் முடித்து கொண்டு… டாக்டரிடம் முழுபரிசோதனை பண்ணிக் கொண்டு பேக்டரிக்கு கிளம்பிவிட்டான்.
கோவிலுக்கு சென்று வந்த அடுத்தநாளே மருத்துவமனைக்கு சென்று கர்ப்பத்தை உறுதி செய்து வந்தனர் பெண்கள்படை.
இதுநாள் வரை தனாவை கவனிக்க நேர்ந்ததால்… சரியான நேரத்திற்கு சரியான உணவு எடுத்து கொள்ளவதில் அசட்டை. அதனால் எழிலின் உடலில் கொஞ்சம் பலவீனம். மருத்துவரிடம் அதற்கான அறிவுரையோடு மருந்து மாத்திரைகளோடும் வீடு வந்தனர்.
தாய்மார்கள் இருவருக்கும் சேர்த்தே இதை செய் அதை செய்யாதே என பட்டியலிட்டனர். ஒரு குழந்தை பிறப்பில் இவ்வளவு இருக்கா… என்ற மலைப்பே தனாவின் உத்வேகத்திற்கு காரணம்.
தனாவுக்கு எழில் செய்தது போய் எழிலுக்கு தனா செய்தான். எழில் சமைத்தாளா என பார்க்காமல் திலகாவும் தேவியும் செய்து கொடுத்தனுப்பி விடுவர்.
அவளை வேளைக்கு சாப்பிட வைக்கும் வேலை தனாவின் பொறுப்பாக்கி கொண்டான்.
“எழில் சொன்னா கேளும்மா.. இந்த ஒரு இட்லி மட்டும் சாப்பிடு…”
“மாமா… ப்ளீஸ் மாமா வேணாம் மாமா..”
“சொன்னா கேளுடி.. கொஞ்சம் சாப்பிடு” என வலுகட்டயாமாக ஊட்ட…
ஓடிப்போய் அத்தனையும் வாந்தி எடுத்தாள். சோர்வுடன் வந்தவளை லேசாக அணைத்து முகம் துடைத்து கைவளைவிலேயே அறைக்கு கூட்டி சென்று படுக்க வைத்து அவனும் அவளை நெருங்கி படுத்துக் கொண்டான்.
அவன் நெஞ்சில் தலை வைத்து படுத்திருந்தவள் சிறிது நேரத்தில் அவனின் மீசையை பிடித்து இழுக்க… காதை கடிக்க… இதழோடு இதழ் உரச.. என சேட்டைகள் செய்ய…
எதற்கு இந்த சேட்டை என அறியாதவனா தனா… ஆனால் அவள் உடல்நிலை கருதி அமைதியாக இருந்தான். அவள் அவனை சீண்டிக் கொண்டே இருக்க…
“ஹேய்.. பேசாம இருக்கமாட்டியா…”
“மாமா..மாமா” சிணுங்க…
“வேணான்டி சொன்னா கேளு..மனுசன உசுப்பேத்திகிட்டு இருக்காதே…பாப்பாவுக்கு ஏதாவது ஆகிட போகுது..”
“அதெல்லாம் ஒன்னும் ஆகாது”
“அதெப்படி உனக்கு தெரியும்.எல்லாம் தெரிஞ்சவ மாதிரி பேசாதே…”
“எல்லாம் தெரிஞ்சிகிட்டு தானே சொல்றோம்”
“யாரு சொன்னா.. டாக்டரா…”
“என் மாமியார்களும் உங்க மாமியாரும் நடத்தின பாடத்துல இதுவும் தான் அடக்கம்”
“நிஜமாவா… ஒன்னும் ஆகாதா”
“ஹூம்ம்…”என தலையாட்ட..
அதற்கப்புறம் அங்கு பேச்சுகளற்ற மௌனபாஷை தான் ஆட்சி செய்தது. அவளுக்கு வலிக்குமோ குழந்தைக்கு பாதிக்குமோ என பயந்து பயந்து மென்மையாக அவளை ஆட்கொண்டான்
பயத்துடனே இருந்தாலும் நிறைவான தாம்பத்தயமாக தான் இருந்தது இருவருக்குமே.. அவளிடமிருந்து பிரிந்தவன் அவளருகே படுத்து வயிற்றை வருடி கொடுத்து

“வலிக்குதாடி… ஏதாவது பண்ணுதா…டையர்டா இருக்கா… ஒன்னும் ஆகாதுல்ல..” என்றான்.
“ஒன்னும் ஆகாது மாமா..எதுக்கு இவ்வளவு பதட்டப்படறிங்க..” என்க
இருந்தாலும் அவன் முகம் தெளியவில்லை. கொஞ்ச நேரத்தில் அவள் தூங்கிவிட.. இவனுக்கு தான் வெகுநேரம் உறக்கம் வரவில்லை. அவளிடம் சிறு அசைவு ஏற்பட்டாலும் என்னவோ என பதறிப்போய் பார்த்தான்.
காலையில் எழுந்த பிறகும் அவளை பார்த்து கொண்டே அவள் பின்னாடி சுற்றி கொண்டு வயிறு வலிக்குதா… என்னாவது பண்ணுதா… கேட்டுகிட்டே இருக்க…
எழிலுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரிக்க… அதற்கும் பயந்தான்.
ஒரு கட்டத்திற்கு மேல் அவளுக்கே எரிச்சலாகிவிட… போய்யா போய் பொழப்ப பாரு.. என திட்டிய பிறகே கிளம்பி பேக்டரிக்கு சென்றான்.
செல்லும் போது எதுனாலும் எனக்கு கூப்பிடு என சொல்ல.. இவள் இடுப்பில் கை வைத்து அவனை முறைக்கவுமே.. கிளம்பி சென்றான்.
வீட்டில் கூடவே இருந்து கவனித்துக்கொள்ள பெரியவர்கள் இல்லாத நிலை.. இருளாயி இருந்தாலும் வேலைக்கு என இருப்பவர் உரிமையாக முடியாதல்லவா.. அதுமட்டுமின்றி வயதாகி தள்ளாமை வேற…
அதனால் தான் தான் அவளை கவனித்து கொள்ள வேண்டும். அவளுக்கும் குழந்தைக்கும் தானே பொறுப்பு என்ற எண்ணமே.. அவனுடைய இந்த பதட்டத்திற்கு காரணம்.
தன்னை எப்படி எழில் கவனித்து கொண்டாள். அதைவிட இருமடங்கு அவளை கவனித்து கொள்வது தனது கடமை என நினைத்தான். கடமையாக தான் செய்ய நினைத்தான். காதலாக இல்லை. கடமைவுணர்ச்சி அதிகமாகி எழிலின் சீற்றத்துக்கு ஆளானான்.

புள்ளி மேவாத மான் – 16 Read More »

என் மோகத் தீயே குளிராதே 06

அத்தியாயம் 6   “என்ன ஹாசி.. ஊர்ல இருந்து எப்ப வந்த?”    “நேத்து தான் வந்தேன் சிந்து..”   “நீ பாட்டுக்கு ரெண்டு வாரம் லீவ் போட்டுட்டு ஊருக்கு போயிட்ட.. அதுக்குள்ள இங்க என்னென்னமோ நடந்துடுச்சு..”   “என்ன சொல்ற சிந்து? அப்படி என்ன நடந்துச்சு?”   “என்ன நடந்துச்சா? நம்ம கம்பெனிய ஏஹெச் கம்பெனியோட ஜாயின் பண்ணிட்டாங்க..”   “என்னது ஏஹெச்சா?”   “ஆமா.. அதுக்கு நீ ஏன் இவ்ளோ சாக்காகுற?”   “ஒன்னுமில்ல..

என் மோகத் தீயே குளிராதே 06 Read More »

B658A867-BAE8-41C3-BE68-4008F2C08441

புள்ளி மேவாத மான் – 15

15 – புள்ளி மேவாத மான்

என்ன தான் வெற்றியும் கருணாவும் பேக்டரியை பார்த்து கொண்டாலும் தன் சொந்த முயற்சியால் ஆரம்பித்து அதை இரவு பகல் என பாராது வாலிப வயதுக்கு உண்டான சந்தோஷங்களை தியாகம் செய்து அதை உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்தான். இரவில் தூக்கத்தில் கூட பேக்டரியை பற்றிய நினைவோடு தான் தூங்குவான்.
அவனின் லட்சிய தொழிலான் சுகர் பேக்டரியை பார்க்க முடியாமல் வீட்டுக்குள் அடைந்து கிடக்கும் நிலையை தனா அறவே வெறுத்தான். அதனால் சில சமயங்களில் எழிலிடம் எரிச்சலை காண்பித்து விடுவான். பிறகு அதற்காக வருத்தம் கொண்டு எழிலிடம் சமாதானமும் பேசுவான்.
அவனை புரிந்து கொண்டு இருக்கும் எழில் அவனின் கோபத்தையும் எரிச்சலையும் தன் வழக்கமான சிரிப்புடன் கடந்து விடுவாள். அவனை தன் அன்பாலயே இயல்புநிலைக்கும் கொண்டு வந்துவிடுவாள் .
விபத்து முடிந்து இரண்டு மாதங்கள் ஆன நிலையில் தனா ஓரளவு யாரையும் எதிர்பார்க்காமல் வாக்கரின் உதவியோடு தன் வேலைகளை தானே செய்து கொண்டான். திடகாத்திரமான உடல் என்பதாலும் எழிலின் ஆரோக்கியமான கவனிப்பாலும் அவனின் எலும்புகள் விரைவாக கூடிவிட… டாக்டர் அறிவுரைப்படி காலையிலும் மாலையிலும் வாக்கிங் ஸ்டிக் வைத்து நடக்க பழகினான். முதலில் காலை ஊன்றி நடக்க சிறிது தடுமாறினாலும் அவனின் தொழில் வெறியே அவனை நடக்கும் உத்வேகத்தை கொடுத்தது.
தினமும் வேலை முடிந்து தங்கள் வீட்டிற்கு செல்லும் முன் சுந்தரமும் கண்ணனும் தனாவை வந்து பார்த்து விட்டு தான் செல்வர். அன்றும் அது போல வந்தவர்கள் தனாவிடம்,
“தம்பி வெற்றி கல்யாண படி அரிசிய கொண்டு போய் குலதெய்வத்துக்கு பச்சப் போடனும். இப்பவே ரொம்ப தள்ளி போயிடுச்சு.. வர வெள்ளிக்கிழமை போலாமா.. உன்னால வரமுடியுமாய்யா… மெதுவா அலுங்காம காருல போயிட்டு வந்திடலாமா..”
“நீங்க போயிட்டு வாங்க சித்தப்பா.. என்னால ரொம்ப நேரம் உட்கார்ந்துட்டு வரமுடியாது. அது இல்லாம அங்கயும் வந்து உட்கார்ந்து தான் இருக்கனும் கால்வலி எடுத்துக்கும்”
“நீ இல்லாம எப்படிய்யா.. உன்ன விட்டு எதுவும் செஞ்சதில்லையே… வேணா பூசைய அடுத்த மாசம் வச்சுக்கலாமா..”
“அதனால என்ன சித்தப்பா சந்தர்ப்ப சூழ்நிலை… எனக்காக பண்ண வேண்டிய பூசைய தள்ளி போட வேணாம். நான் வேணா எழில அனுப்பி வைக்கறேன்”
சுந்தரம் என்ன செய்ய என யோசனையில் ஆழ்ந்து விட கண்ணன் தான் “அண்ணா….அதான் தனா சொல்றான்ல… அவன் உடம்பையும் பார்க்கனும்ல.. அரசிய அனுப்பறான்ல.. தம்பிக்காவும் வேண்டிக்கலாம் ண்ணா..சாமி காரியத்த தள்ளி போட வேணாம்” என்க
சுந்தரமும் ஒருவழியாக சமாதானமாகி வெள்ளிக்கிழமை போவது என முடிவு செய்து எழிலை வருமாறு அழைத்து விட்டு கிளம்பினர்.
அவர்கள் சென்று சிறிது நேரம் தனா டீவி பார்த்து கொண்டு இருக்க… எழிலின் சத்தமே இல்லை. முதலில் தனா கவனிக்கவில்லை. ஏதாவது கொண்டு வந்து சாப்பிட சொல்லி நச்சரிப்பா.. இல்லையா இப்படி உட்காரதிங்க.. நடங்க.. என படுத்துவா.. இபப என்னடா ஆளையே காணோம் என கொஞ்ச நேரம் கழித்தே உணர்ந்தவன்
“எழில்.. எழில் எங்க இருக்க… இங்க வா” என கூப்பிட்டான்.
எப்ப கூப்பிட்டாலும் சொல்லுங்க மாமா என வருபவள் அமைதியாக வந்து நின்றாள். என்னடா இது என முகம் பார்க்க.. முகத்தை தூக்கி வைத்து கொண்டு எங்கோ பார்த்து கொண்டு நின்றாள்.
“எழில்.. என்னாச்சு”
அதற்கும் பேசாமலே முறுக்கி கொண்டு நிற்க… எரிச்சல் அடைந்தவன்…
“ஏய்… இப்ப எதுக்குடி இப்படி நிற்கற… சொல்லப் போறியா இல்லையா” சத்தம் போட…
” நீங்க எப்படி பெரிய மாமாட்ட அப்படி சொல்லலாம். என்னைய அனுப்பி வைக்கறேனு.. நீங்க வராம நான் மட்டும் எப்படி போவேன். அதுவும் இப்படி உங்களை விட்டுட்டு என்னால எல்லாம் போக முடியாது…” படபடவென பொரிந்தாள்.
அவள் பொரிந்து கொட்டியதில் கலகலவென சிரித்துவிட்டான்.
“நான் என்ன சொல்லிட்டு இருக்கேன். நீங்க சிரிச்சிட்டு இருக்கறிங்க… என்னய பார்த்தா உங்களுக்கு சிரிப்பா இருக்கா…”
“அது இல்லடி குலதெய்வ கோயிலுக்கு தான கூப்பிடறாங்க.. நம்ம வீட்டு சார்பா யாராவது போகனும் தான…”
“உங்கள தனியா விட்டுட்டு என்னால போகமுடியாது. உங்களுக்கு ஏதாவது தேவைனா யார் செய்வா.. இல்லையா வாங்க இரண்டு பேருமே பூசை நேரத்துக்கு போயிட்டு முடியவும் வந்திடலாம்”
“சொன்னா கேளு எல்லாரும் பார்க்க ஸ்டிக் வச்சு நடக்க சங்கடமா இருக்கு…. ஆயா இருக்குது எதுனா அதுகிட்ட கேட்டு வாங்கிகறேன்”
அப்பவும் எழில் ஏதும் பேசாமல் இருக்க…
“கண்டிப்பா நீ போற..” என்றான் கட்டளையாக..
இரவு வரை முகத்தை தூக்கி வைத்து கொண்டே எல்லாம் செய்தாள். அறைக்கு வந்கவள் பாயை விரித்து போட்டு படுத்தாள். அன்றைய இரவுக்கு பிறகு அவனை லேசாக அணைத்தவாறு படுப்பவள் இன்று வேண்டும் என்றே செய்ய….
பார்த்ததும் தனா எரிச்சலுடன்
“எழில் மேல வந்து படு”
சுவற்று பக்கம் திரும்பி படுத்திருந்தவள்அமைதியாகவே இருக்க…”ப்ச்ச் இப்ப மேல வரயா இல்ல நான் உன்கூட கீழ படுக்கவா..”
அப்பவும் அமைதி அமைதியோ அமைதி.
தனா எழுந்து வாக்கிங் ஸ்டிக் எடுக்க… அந்த சத்தத்தில் அடித்து பிடித்து எழுந்து அவனுக்கு அந்தபுறமாக சென்று படுத்துக் கொண்டாள்.
இப்பவும் தனாவிற்கு முதுகு காட்டி படுத்திருந்தவளை பார்க்க எரிச்சல் போய் சிரிப்பு தான் வந்தது. இவனே இழுத்த அணைக்க.. அவள் திமிற…. கொஞ்ச நேரம் இழுபறியாக இருக்க…
“ஆ…ஆ.. அம்மா வலிக்குது” என தனா கத்த..
“ஐயோ.. மாமா.. எங்க வலிக்குது” என பதறி போய் முதுகு இடுப்பு என ஆராய்ந்தவளை பார்த்து கடகடவென சிரிக்க..
“எல்லாம் நடிப்பா.. உங்கள..” என சிணுங்கி கொண்டே நெஞ்சில் குத்த…
அவளை மேலே இழுத்துப் போட்டு கொண்டான்.
“வேணாம் மாமா வலிக்கும்”
“வேணும்டி” என்றான் விசமமாக…
“மாமா ப்ளீஸ் ஆப்ரேஷன் பண்ண உடம்பு ஏதாவது பிரச்சினையாகிட போகுது”
“ப்ளீஸ்டி ப்ளீஸ்டி”என கெஞ்சி கெஞ்சியே அவளை மசிய வைத்தான்.மெது மெதுவாக அவளை ஆக்ரமித்தான். நிதானமாக அவளை ஆட்கொண்ட போதும்.. அவனுக்கு அவள் ஒத்துழைத்த போதும்… அவள் மனதில் பயம் இருக்க தான் செய்தது.
ஆனால் அவனுக்கோ தொழிலை பார்க்காமல் வீட்டில் முடங்கி கிடந்ததால் மனதில் மண்டி கிடந்த எரிச்சல் மறைந்து மனம் இறகு போல லேசான உணர்வு.
அவன் முகத்தில் இருந்த மலர்ச்சியை கண்ட பிறகே அவளுக்கு நிம்மதியும் சந்தோஷமும்… அவளுக்கும் நீண்ட நாட்களுக்கு பிறகு கிடைத்த கணவனின் அருகாமையல்லவா…
ஊடலை கூடலில் முடித்து வைத்தவன்”எழில் நாளைக்கு கோயிலுக்கு போற தான” என்க
“மாமா நீங்க இல்லாம..” என மெல்ல இழுக்க..
“அடம் பண்ணாத எழில் கோயிலுக்கு போகலைனு சொல்லகூடாது. எனக்காக.. நமக்காக போயிட்டு வா”என மேலும் ஏதோ சொல்லி சமாதானப் படுத்தினான்.
வெள்ளிகிழமை காலையிலேயே எல்லோரும் கோயிலேக்கு கிளம்பினர். எப்போதும் எல்லோருக்கும் முன்ன கிளம்பி மாமியார்களிடம் என்ன செய்ய ஏது செய்ய என கேட்டு எல்லாம் இழுத்து போட்டு கொண்டுசெய்பவள்…
இன்று தனாவையே சுற்றி சுற்றி வந்தாள். விடியும் முன்பே எழுந்து அவனுக்கு சமைத்து எடுத்து வைத்து…அவனுக்கு தேவையான எல்லாம் செய்து என…
மாமா காலைலயும் மதியமும் டைமுக்கு சாப்பிடுங்க.. டேப்லெட் எடுத்து வச்சிருக்கேன்… அதிகம் நடக்காதிங்க…எதுனாலும் ஆயாகிட்ட கேளுங்க… என எதாவது நிமிடத்துக்கு ஒரு தரம் சொல்லி கொண்டே இருந்தாள்.
இருளாயி பாட்டி கூடநான் இருக்கேன்ல நான் பார்த்துக்கிறேன் ராசாவ என சொல்ல…
தனாவிற்கே சலித்து போய் முதல்ல கிளம்புடி என சத்தம் போட.. அப்போதும் மாமா பத்திரமா இருங்க.. என சொல்லி அவனின் முறைப்பை வாங்கி கொண்டு தான் சென்றாள்.
காலை உணவை சாப்பிட்டு விட்டு டீவி பார்த்து கொண்டு இருந்தான் தனா. கொஞ்ச நேரத்திலேயே அவனுக்கு எழில் இல்லாது ஏதோ போல இருந்தது. எந்நேரமும் மாமா மாமா என நாய்குட்டிபோல பின்னாலயே திரிவாள். இப்ப வீடே வெறிச்சோடி போனது போல இருந்தது தனாவிற்கு…
அவளை பற்றி அசை போட்டு கொண்டு இருக்க… அதை கலைக்கவென பேக்டரி மேனேஜர் வந்தார்.
“குட்மார்னிங் சார்”
“குட்மார்னிங்.. சொல்லுங்க குமார் ”
“சார் ஜி எஸ் டி பைல் பண்ணனும் சார். அந்த பைல் உங்ககிட்ட தான் இருக்குனு கருணா சார் சொன்னார் இன்னைக்கு ஆடிட்டர் கிட்ட சப்மிட் பண்ணனும்” என சொல்ல..
விபத்துக்கு முன்பு அக்கௌன்ட் செக் பண்ண வீட்டுக்கு எடுத்து வந்து மேலே தங்கள் அறையில் வைத்தது ஞாபகம் வந்தது . மேலே செல்லவேண்டும். வேறு வழியின்றி தானே வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் ஒவ்வொரு படியாக மெல்ல ஏறி சென்றான்.
எங்கு வைத்தோம் என ஞாபகம் இல்லாமல் எல்லா கப்போர்டிலும் தேடினான். அப்படி தேடும்போது எழிலின் துணிகளுக்கு இடையே ஒரு டைரி இருப்பதை கண்டவன் என்ன இது என அதையும் பைலையும் தேடி இரண்டையும் எடுத்து கொண்டு கீழே வந்தான்.
மானஜேரிடம் பைலை கொடுத்து அனுப்பி விட்டு டைரியோடு
அறைக்கு வந்தான். டைரியை பிரிக்க முதல் பக்கத்தில் நட்ட நடுவே ஜெய் மாமா என்று பெரிய எழுத்தில் எழுதி இருந்தாள்.
அடுத்த பக்கத்தில்….
மார்ச் மாதம்
கடைசி எக்ஸாம் அப்பாடா முடிச்சிட்டா.. நாளைல இருந்து ப்ரீபேர்ட் தான். பத்மா கலையோட பாண்டி தாயம் அஞ்சாங்கல் எல்லாம் விளையாடனும். டிவி பார்க்கனும்.. தூங்கனும்..என நினைத்துக் கொண்டே எக்ஸாம் எழுதினேன். வீட்டுக்கு வந்து சாப்பிட்டு சீக்கிரம் தூங்கிவிட்டேன்.
அடுத்த நாள்
காலையிலேயே அம்மா என்ன எழுப்பி தாத்தா இறந்துட்டாராம் மலையனூர் போகனும்னு சொன்னாங்க.
என் ஆசையெல்லாம் புஷ்வானமாகிவிட்டது. இந்த தாத்தா லீவுல தான் சாககனுமா.. என எரிச்சலாக வந்நது.
நாங்க எல்லோரும் மலையனூர் போனோம். அம்மா தாத்தாவை பார்த்ததும் கதறி அழுதாங்க. யார் யாரோ வந்தாங்க பாட்டியையும் அம்மாவையும் கட்டி பிடிச்சு அழுதாங்க… நேரமாக ஆக எனக்கு பசிச்சுது.. யாருகிட்ட கேட்க என தெரியலை… பின்புற திண்ணைல உட்கார்ந்து இருந்த என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாங்க லட்சுமி அத்தை. அப்ப எனக்கு அவங்களை தெரியாது.
“பாப்பா.. உன் பேரென்ன..”
“எழிலரசி”
“முகம் வாட்டமா இருக்கு… பசிக்குதா…” என முகத்தை வாஞ்சையடன் தடவி கேட்க…
உதடு பிதுக்கி.. கண்களில் கண்ணீர் தேங்க…ஆமாம் என தலையாடட்டினேன்.
“பக்கத்து வீடு தான் அத்தை வீடு. வரயா… அத்தை சாப்பாடு கொடுக்கறேன்”
கண்களில் சாந்தமும் புன்னகை நிறைந்த முகத்தோடு அன்பாக பேசும் லட்சுமி அத்தையை பார்த்தவுடன் எனக்கு பிடித்திருந்தது.
“ம்ம்.. வரேன்” என தலையாட்டிய என்னை கூட்டிக்கொண்டு போனார் அத்தை. துக்கவீட்டிற்கு திரும்பவும் போகனும்ங்கறதால வீட்டுக்குள் போகாம பின்வாசலுக்கு தான் போனோம்.
அங்க தொழுவத்துல புசுபுசவென குட்டி குட்டி முடியோடு நல்ல ப்ரௌன் கலர்ல பெரிய முழியோடு அழகா இருந்தா செல்லா…
“இருளாயி.. இருளாயி.” என அத்தை குரல் கொடுக்க…
உள்ள இருந்து குள்ளமா கருப்பா பேருக்கு ஏத்த மாதிரி ஒரு கிழவி வந்துச்சு…
“ஏன் தாயி அதுக்குள்ள வந்திட்ட.. எடுத்திட்டாங்களா..” என்றது என்னை பார்த்து கொண்டே…
“பாப்பா யாரு தாயி”
“நம்ம கற்பகத்தோட புள்ள.. துக்கத்துல இவள யாரும் கவனிக்கல.. பசி போல வாட்டமா இருந்தா.. அதான் கூட்டிட்டு வந்தேன். சாதம் போட்டு எடுத்துட்டு வா”என அத்தை சொல்ல…
இருளாயி கொண்டு வந்து கொடுக்கவும் அத்தையே எனக்கு ஊட்டிவிட்டாங்க.. இப்ப எல்லாம் அம்மா எனக்கு ஊட்றதில்ல… அதனால எனக்கும் பிடிச்சிருந்துச்சு…
யாராவது வந்து போயிட்டு இருக்க என்ன கவனிக்க யாருக்கும் நேரமில்ல… அதனால நான் அத்தையை தேடி அவங்க வீட்டுக்கு போயிடுவேன்.
காரியங்கள் முடிந்து துக்கவீடு இயல்புக்கு திரும்புவும் பாட்டி தனியா இருப்பதால் தாத்தாவின் இழப்பில் இருந்து மீள்வதற்காகவும் என்னை அங்கேயே விட்டுட்டு போக சொல்லி எல்லோரும் சொல்ல.. அப்பாவும் சரி என்றுவிட்டார்.
தாத்தா இறந்தது சிக்ஸ்த் முடிந்து லீவ் என்பதால் செவன்த் அங்கேயே சேர்த்து விட்டு அப்பா அம்மா அண்ணனோடு ஊருக்கு போயிட்டாங்க…கொஞ்ச நாள் அம்மா விட்டுட்டு இருக்க கஷ்டமா இருந்துச்சு.

ஜீன் மாதம்

லீவ் முடிந்து ஸ்கூலுக்கு போனேன். புதுஸ்கூல் எல்லாம் புதுசு ஒருபயம்.. பாட்டிக்கு வயசாயிட்டதால ஏதோ அவங்க முடிந்தளவு செய்வாங்க.. அத்தகிட்ட சடை போட்டு கொள்ள போவேனா அப்ப தான் ஜெய் மாமா ஸ்கூலுக்கு கிளம்பிட்டு இருப்பாங்க..
அம்மாடி மாமா எவ்வளவு உசரம்..குட்டி மீசை வச்சுகிட்டு… சிரிக்கவே மாட்டாங்களா பார்க்க கொஞ்சம் பயமாயிருக்கும்.
மாமா ப்ளஸ்டூவாம்… நல்லா படிப்பாங்களாம்.. அத்தை சொன்னாங்க…
ஸ்கூலுக்கு போயிட்டு வந்ததும் அத்தை வீட்டுக்கு ஓடிடுவேன். பெரிய கண்ண உருட்டி உருட்டி பார்த்துகிட்டு என்ன பார்த்தும் துள்ளிகிட்டு என்னைசெல்லமா முட்டி விளையாடும் செல்லாகூட விளையாடி…ஹோம்ஒர்க முடிச்சிட்டு நானும் அத்தையும் முத்தத்துல படுத்துகிட்டு நட்சத்திரலாம் எண்ணுவோம்.
மாமா கோச்சிங் கிளாஸ் முடிச்சிட்டு வரதுக்குள்ள நான் வீட்டு வந்துடுவேன்.அத்தைகூட சாப்பிட்டு போனு சொல்வாங்க.. மாமா வந்துட்டா.. பயந்து ஓடி வந்துடுவேன்.
மாமா ப்ளஸ்டூ முடிச்சிட்டு மேல படிக்க குவாலியர் போயிட்டாங்க. ஜெய் மாமாவ பிரிஞ்சு அத்தையால இருக்க முடியல.மாமா தினமும் நைட்டு போன் பண்ணுவாங்க… இருந்தாலும் அத்தை புலம்பிட்டே இருப்பாங்க.. மாணிக்க மாமா கூட அத்தைய திட்டுவாங்க.
அதனால மாமவ பத்தி என்கிட்ட தான் நிறைய… நிறையா சொல்வாங்க… ஜெய் மாமாவுக்கு செய்ய முடியாத ஆதங்கத்தை எனக்கு செஞ்சு கொடுத்து தீர்த்துகுவாங்க..
எழிலின் சிறுவயதில் எழுதியதை படித்து கொண்டு இருந்தவன் போன் அடிக்கவும்.. போன் பேசிவிட்டு சின்னவயசுல ஏதோ பொழுது போகாம கிறுக்கி வச்சிருக்கா… என நினைத்து மேற்கொண்டு படிக்காம அங்கிருந்த கப்போர்டின் மூலையில் தூக்கி போட்டுவிட்டான்.
அவனுடைய துரதிர்ஷ்டம் அடுத்தடுத்த பக்கங்களை படிக்காமல் போனான். படித்து இருந்தால் எழிலின் காதலை தெரிந்து கொண்டு இருப்பான். பின்னாளில் எழிலை பிரிய நேர்ந்திருக்காது….

புள்ளி மேவாத மான் – 15 Read More »

E5D21CD5-4C0D-4C0A-ADB0-EBC045F16155

புள்ளி மேவாத மான். – 14

புள்ளி மேவாத மான் -14

தனாவிற்கு விபத்து என கருணா போன் செய்யவும் சுந்தரம் பதறி கண்ணனையும் மற்றவர்களையும் அழைத்து சொல்ல எல்லோரும் சுந்தரம் வீட்டிற்கு வந்துவிட்டனர். ஆனால் எழிலிடம் யாரும் சொல்லவில்லை. சொல்லவில்லை என்ன யார் சொல்வது எப்படி சொல்வது என தெரியவில்லை. ஏற்கனவே தனா விபத்தே நிலை குலைய செய்திருக்க… எழிலிடம் சொல்லி அவள் நிலையை பார்க்க யாருக்கும் தைரியம்இல்லை.
ஆனால் யாராவது சொல்லித் தானே ஆகவேண்டும். திருவை காரை எடுத்திட்டு வா என சொல்லிவிட்டு தனா வீட்டிற்கு சுந்தரம், கண்ணன், திலகா ,தேவி நால்வரும் சென்றனர்.
இவர்களைப் பார்த்ததும் எழில் வாங்க என வரவேற்க… தலைநிறைய பூ வைத்து சற்றுமுன் தான் சாமி கும்பிட்டு இருப்பாள் போல அதன் விளைவாக நெற்றியில் விபூதி வகிட்டில் குங்குமம் என பார்க்க மங்களகரமாக எப்பவும் அவள் உதட்டில் நிறைந்திருக்கும் புன்னகையோடு இருந்தவளை பார்த்து சொல்ல தயங்கி ஒருவரை ஒருவர் பார்க்க…
ஆனால் அதற்கும் நேரமில்லையே மருத்துவமனைக்கு செல்லவேண்டுமே என்ற பதற்றமும் அனைவரிடமும்… இவர்கள் முகத்தை பார்த்தே ஏதோ சரியில்லை என ஊகித்தவளாக…
“என்னாச்சு மாமா.. ஏன் எல்லாரும் ஒரு மாதிரியா இருக்கறிங்க.”
கண்ணன் தான் ” ஒன்னுமில்லமா அரசி தனாவுக்கு ஒரு சின்ன ஆக்சிடென்ட்…. ஹாஸ்பிட்டலில் இருக்கான்” என சொன்னது தான் தாமதம்…
“மாமாவுக்கா” என கேட்டவள் மயங்கி விழுந்தாள். அவளை திலகாவும் தேவியும் தாங்கிப் பிடிக்க… கண்ணன் உள்ளே சென்று இருளாயிடம் தண்ணீர் வாங்கி வந்து தெளித்து தெளிய வைக்க…
“மாமாவுக்கு ஒன்னும் இல்லை தான” என எழில் கதற அதைப் பார்த்து திலகாவும் தேவியும் அழுக.. இருளாயி பாட்டி வேற ராசா.. ராசா… என புலம்ப… சூழ்நிலையே பதட்டமாக…. எப்படி சமாளிக்க என ஆண்கள் கலங்கி முழி பிதுங்கி நிற்க… எப்பவும் போல் சுந்தரம் தான் குடும்ப தலைவனாக தன்னை நிதானப்படுத்தி கொண்டு….
“என்ன ஏதுனு தெரியாம இங்கயே இப்படியே அழுதுகிட்டு இருந்தா சரியா…அவன போய் பார்க்க வேண்டாமா…” என ஒரு அதட்டல் போட…
அது நன்றாக வேலை செய்தது. திருவும் காருடன் வந்துவிட கிளம்பி சென்றனர். போகும் வழி எல்லாம் எழில் அழுதவாறே வர… சின்னதாக என சொன்னதற்கே இப்படி இன்னும் தனாவை பார்த்தால் என்ன செய்வாளோ.. தனாவின் கவலை கூட சேர்ந்து வீட்டினரிடம் பதைபதைப்பு தான் அதிகமானது.
மருத்தவமனைக்கு சென்று ஐசியூவில் உடல் முழுவதும் கட்டுகள் டியூப்கள் என இருந்த தனாவை பார்த்ததும் மறுபடியும் மயங்கி விழுந்தாள். மயக்கம் தெளியாமல் போக இவளை ஒரு அறையில் படுக்கவைத்து டிரிப்ஸ் இறக்க… வீட்டினருக்கே ஒரு சலிப்பு. தனாவை நினைத்து கவலைப்படுவதா.. இந்த புள்ளய பார்ப்பதா என…
கருணா முத்துக்குமாருக்கும் சொல்லி இருக்க.. எழில் வீட்டாரும் அடித்து பிடித்து வந்தனர். ஐசியூ வாசலிலேயே காத்திருக்க.. சிலமணிநேரம் கழித்து வெளியே வந்த டாக்டர் சொன்னதை கேட்டு குடும்பமே கதி கலங்கி தான் போனது.
ஹெல்மெட் போட்டு இருந்ததால் தலையில் ஒன்றும் அடிபடவில்லை.ஆனால் தூக்கி எறியப்பட்டு மரத்தில் மோதி விழுந்ததில் முதுகெலும்பில் பலமாக அடிப்பட்டு ப்ராக்சர் ஸ்டீல் வைத்து ஆப்ரேஷன் செய்தாலும் இயல்பு நிலைக்கு வர மூன்று மாதங்கள் ஆகும் என சொல்ல… இதை கேட்டு வீட்டினர் நிலைகுழைந்து போக… இதில் எழிலை சமாளிக்க தான் பெரும் பாடாகியது. அழுது அழுது சோர்ந்து போய் மீண்டும் மயங்கி விடுவாளோ என பயப்படும் அளவிற்கு செய்தாள். யாருடைய சமாதானமும் எடுபடவில்லை.
ஒருகட்டத்தில் பொறுமை இழந்து கற்பகம் தான் “என்ன நினைச்சிட்டு இருக்க… இப்படியே அழுது உடம்ப கெடுத்துக்க போறியா… மாப்பிள்ளையை நினைத்து கவலைபடுவதா… உன்னய கவனிப்பதா… எத்தன தான் நாங்க இருந்தாலும் நீ தான அவர பார்க்கனும்… முதல்ல நீ தைரியமா இருந்தா தான அவர தேத்தி கொண்டு வர முடியும். அதுக்கு உனக்கு மனசுலயும் உடம்புலயும் பலம் வேண்டாமா…”என ஒரு தாயாக மகளைஅதட்டி உருட்டி மிரட்டி வழிக்கு கொண்டு வந்தார்.
அதன் பிறகே தாயின் பேச்சில் உள்ள நிதர்சனம் உறைக்க எழில் அமைதியானாள். ஆப்ரேஷன் முடிந்து தனாவை ஐசியூவில் இரண்டு நாள் வைத்து நார்மல் வார்டிற்கு கொண்டு வந்த பிறகே எல்லோரும் பார்க்க அனுமதிக்கப்பட்டனர்.
பதினைந்து நாட்கள் இடுப்பிற்கு அசைவு கொடுக்க்கூடாது என்பதாலும்… பெரும்பாலான நேரம் வலி அறியாமல் இருக்க தூக்கத்திலேயே வைத்திருக்க…. அவனிடம் பேச முடியவில்லை . அறைக்கு வந்ததும் தனா முதலில் கண்விழித்ததும் களைத்து சோர்ந்து இருந்த எழிலை கண்டு
“ரொம்ப பயந்திட்டியா எழில்…. பயப்படாதமா… எனக்கு ஒன்னுமில்ல..நான் நல்லா இருக்கேன்” தனா எழிலுக்கு தைரியம் சொல்ல..
எழிலுக்கு தான் சங்கடமாகி போனது. நாம தான் மாமாவுக்கு ஆறுதல் சொல்லி நம்பிக்கை கொடுக்கனும். மாமா நமக்கு தைரியம் சொல்லிட்டு இருக்காங்க… அவ்வளவு பலவீனமாவே இருக்கேன். அம்மா சொல்றமாதிரி நாம தான மாமாவ பார்க்கனும். அப்ப நான் தான் முதல்ல சரியா இருக்கனும் என யோசித்து தெளிந்தவள்
“மாமா உங்களுக்கு என்ன நீங்க சீக்கிரமே குணமாயிடுவிங்க… நான் இருக்கேன் என் மாமாவ பார்த்துக்க…எல்லாம் சரியாகி நீங்க ராஜா மாதிரி பழையபடி நடப்பிங்க பாருங்க…” என அவன் அடிபடாத இடது கையை எடுத்து தன் நெஞ்சில் வைத்துக்கொண்டு நம்பிக்கை கொடுக்க அவளை பார்த்து லேசான புன்னகையோடு உறங்கி போனான்.
தனா வீடு வர ஒரு மாத காலம் ஆகிற்று. தனாவை வீட்டுக்கு அழைத்து கொண்டு தான் எழிலும் வீடு வந்து சேர்ந்தாள். அதுவரை அவளும் ஹாஸ்பிடல் வாசம் தான். குடும்பத்தினர் யாரவது ஒருத்தர் எழிலுக்கு உதவியாக வந்து இருந்து கொண்டனர்.
பதினைந்து நாட்கள் கழித்து தனாவின் உடலுக்கு
அசைவில் இருந்து படிப்படியாக மெல்ல எழுந்து உட்கார்ந்து.. நடை பழகும் குழந்தை போல வாக்கரின் உதவியோடு நடக்க ஒருமாதம் பிடித்தது. அதன் பிறகே மருத்தவமனையில் இருந்து வீடு வந்து சேர்ந்தான்.
எழிலின் கூடுதலான கவனிப்பிலும் அன்பிலும் அக்கறையிலுமே வெகு விரைவில் மீண்டு வந்தான் தனா.
அப்போதும் அவன் சில பல கண்டீசன், அறிவுரைகள் , பிசியோதெரபி , டயட் ,மருந்து மாத்திரைகள் இத்யாதியோடு தான் அனுப்பப்பட்டான்.
அதிலும் இரண்டு மாதம் கட்டாய ஓய்வு தான். குனிந்து நிமிரகூடாது… வெயிட் தூக்ககூடாது.…வண்டி ஓட்டகூடாது…தாம்பத்தியம் கூடாது…. என பல கூடாதுகள்…
மேலே படியேற முடியாததால் கீழேயே ஒரு அறையில் தனாவின் ஜாகை…
காலையில் கருணா வெற்றி வந்து அவனை குளிக்க வைத்து அவனுக்கு உடை அணிவித்து தயார் செய்தால்…. அடுத்து பிசியோதெரபிஸ்ட் வந்துவிடுவார்..அவர் ஒருமணி நேரம் எக்சர்சைஸ் என படுத்தி எடுக்க வழியில் சோர்ந்து போய்விடுவான் தனா…
அவர் சென்றதும் காலை உணவு சிறிது தூக்கம் பிறகு மதிய உணவு மீண்டும் தூக்கம்… மாலை பிசியோதெரபி… நடுவே நலம் விசாரிக்க வருபவர்கள்….பிறகு கருணா வெற்றி வந்து அன்றைய தொழில் நிலவரம் பற்றிய பேச்சு… கொஞ்சம் நேரம் வாக்கரின் உதவியோடு நடை பழக.. மீண்டும் இரவு உணவு தூக்கம்.. பகலில் தூங்கிவிடுவதால் நடுஇரவில் விழிப்பு வந்து விடும்.தேவையில்லாத சிந்தனைகள்…
கொஞ்சம் அசைந்தாலும் எழில் ஓடி வந்து என்ன மாமா.. என்ன வேணும் என்பாள்.. நடுநடுவே இதை சாப்பிடுங்க அதை சாப்பிடுங்க மாமா… அவளின் அதீத அன்பு கூட அவனுக்கு எரிச்சலாகி போனது..
ரொம்பவே மலைத்து போனான் தனா… ஒருநாள் ஓரிடத்தில் ஓய்வு எடுத்ததில்லை. நிற்காமல் ஓடும் காட்டாறு தான். விபத்து அவனை ஒரு அறையில் முடக்கி போட…. மனதில் ஒரு இறுக்கம்… இறுக்கம் அழுத்தமாகி… அந்த அழுத்தம் எந்த நிமிடம் வேணாலும் வெடித்து சிதறும் நிலையில்…..
அன்றும் வாக்கரின் உதவியோடு நடக்க…வந்து எப்பவும் போல எழில் கூடவே வந்து கொண்டு இருக்க… தீடிரென தனா தடுமாற.. பதறிப்போய் எழில் சட்டென தாங்கி பிடித்து “பார்த்து மாமா… மெதுவா நடங்க..”என சொல்ல… நடந்ததால் உண்டான வலியில் எரிச்சலில் இருந்தவன்…
“ப்ச்ச் விடு என்னைய… நான் என்ன குழந்தையா.. எனக்கு நடக்க தெரியாதா… விழுந்திடுவேனோனு பின்னாடியே வர… இதை செய் அதை செய்யாதே…. அது சாப்பிடு.. இது சாப்பிடு என நச்சரித்து கொண்டு கொஞ்ச நேரம் என்னை தனியா விடு” என கொஞ்சம் வேகமாகவே எட்டி நடந்து அறைக்கு சென்றுவிட்டான்.
அவன் பேசியதே அதிர்ச்சி என்றால் அவனின் கோப நடை எழிலுக்கு பயத்தை கொடுத்தது. கீழே விழுந்தால் ஆபத்து என டாக்டரின் எச்சரிக்கை வேற பயப்பட போதுமானதாக இருந்தது.
சிறிது நேரம் அவனை தனியாக இருக்கட்டும் பிறகு பேசலாம் என அவனுக்கு தனிமை கொடுத்து ஒதுங்கி கொண்டாள். கருணாவும் வெற்றியும் வரவும் கொஞ்சம் சகஜநிலைக்கு வந்தான் தனா. அவர்கள் சென்ற பின் இரவு உணவு கொண்டு வந்து கொடுத்தாள்.
அவளை திட்டியதால் கோபமாக…வருத்தமாக இருப்பாளா என அவள் முகம் பார்க்க எப்பவும் போல அவள் முகம் அவன் மீதான காதலில் அன்பான பார்வையை தான் தாங்கி நின்றது. அந்த பார்வை அவனுக்கு தப்பு செய்த உணர்வை தர… சாப்பிடாமல் தலை குனிந்து அமைதியாக இருந்தான்…
அவனின் எண்ணத்தை புரிந்து கொண்டவள் அவனின் தலைமுடியை பிடித்து மெல்ல அவன் முகத்தை நிமிர்த்தி தன்னை பார்க்க செய்தவள்
“என்ன மாமா… எதுக்கு பீல் பண்ணறிங்க…என்கிட்ட கோபப்பட உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு.. நான் வருத்தப்படலாம் மாட்டேன். எதுனாலும் கொட்டித் தீர்த்திடுங்க.. ரிலாக்ஸாக இருங்க..”என தலை கோதி உச்சந்தலையில் முத்தம் வைக்க… அவளை இடையோடு கட்டி அணைத்து அவள் வயிற்றில் முகம் புதைத்து ஆறுதல் தேட….
சற்று நேரம் அவன் போக்கில் விட்டவள் “சாப்பிடுங்க மாமா” சொன்னவள் தானே சாப்பாட்டை பிசைந்துமெல்ல ஒவ்வொரு கவளமாக ஊட்டிவிட்டாள். மருந்துகளை கொடுத்து முகம் துடைத்து படுக்க உதவி செய்து விட்டு வெளியே செல்ல….
தனா அவளின் முந்தானை சேலை மெல்ல பிடித்து இழுத்து “கொஞ்ச நேரம் பக்கத்துல படுக்கறியா..” என்றான் தயங்கியவாறே…
அவனின் உடல்நிலை கருதி ஒரே அறையில் தனித்தனி படுக்கை தான். அவன் அவ்வாறு கேட்கவும் எழிலுக்கே ஐயோ என்றானது.
“சாப்பிட்டு வரவா மாமா..” என்றாள் மென்மையாக..
“ம்ம்ம்” தலையாட்டினான். தாயின் மடி தேடும் குழந்தையாக எழில் கண்ணுக்கு தெரிந்தான். சென்று வேகமாக சாப்பிட்டு எல்லாம் ஒதுங்க வைத்து வந்தவள். அவனுக்கு வலிக்காத மாதிரி லேசாக அணைத்து படுத்தாள்.
அவளின் அணைப்பில் உடனே தூங்கிவிட்டான். அவனை பார்த்துக் கொண்டே…அவனின் இன்றைய நடவடிக்கையை அசை போட்டவள் தன்னை அறியாமல் மெல்ல கண்ணயர்ந்தாள்.
பசி தூக்கம் மறந்து அவள் எண்ணம் முழுவதும் மாமனின் உடல்நலமே வியாபத்தி இருக்க… தன்னை கவனிக்க மறந்தாள். தன் உடல்நிலையை கவனிக்க தவறினாள்….

புள்ளி மேவாத மான். – 14 Read More »

C0CD89CB-E62D-4029-B864-CE7B584FE6B5

புள்ளி மேவாத மான் – 13

புள்ளி மேவாத மான்-13

பலநாள் தன்னுள் அழுத்திக்கொண்டு இருந்ததை கொட்டிவிட்டதால் மனசு இறகு போல லேசாகிவிட அப்படி ஒரு தூக்கம் தனாவுக்கு…
விடிந்து வெகு நேரமாகியும் தனா எழும்பவில்லை. வழக்கமான நேரத்திற்கு எழுந்த எழில் இறுக்கம் தளர்ந்து குழந்தை போல் பேபி ஸீலீப் பொசிஷனில் தூங்கும் தன் மாமனை கண்டவள் கலைந்திருந்த அவன் பெட்ஷுட்டை போத்தி விட்டு சற்று நேரம் நின்று பார்த்தவள் நேரமாவதை உணர்ந்து குளித்து கிளம்பி வந்தாள். பூஜையறையில் விளக்கேற்றி கடவுளிடம் கணவனுக்கு நிம்மதியும் அமைதியும் கொடு என வேண்டிக்கொண்டு மாமனுக்கு பிடித்ததை சமைக்க சென்றாள்.
அந்தோ பரிதாபம் கடவுள் அவள் வேண்டுதலை நிராகரித்து விட்டதை அறியாமல் மாமனின் மனதை வயிற்றின் மூலம் நிறைக்கும் வேலையில் இறங்கிவிட்டாள்.
சுற்றுச்சூழல் சத்தத்தில் விடிந்ததை உணர்ந்து எழுந்தவன் மணியை பார்த்து விட்டு அவசர அவசரமாக குளித்து கீழே வந்தான்.
அவனைப் பார்த்தும் சாப்பிட எல்லாம் எடுத்து வைத்து தட்டில் பரிமாற அவனுக்கு பிடித்ததாக இருக்கவும் எழிலின் அரவணைப்பு இரவின் நிம்மதியான தூக்கம் என எல்லாம் சேர்ந்து புது தெம்பைக் கொடுக்க…. சாப்பிட்டு விட்டு எழிலிடம் புன்னகை முகமாகவே சொல்லி கொண்டு கிளம்பினான்.
தனாவின் புன்னகை மழைநீரை உறிஞ்சி மணம் பரப்பும் நிலம் போல எழிலிடமும் உற்சாகத்தைக் கொடுக்க… மாமனுக்கு மதியம் ஆட்டுக்கறியா… கோழிக்கறியா…. எதை சமைக்கலாம் என சிந்தனையில் ஆழ்ந்துவிட்டாள்.
அவ்வளவு தான் பெண்களின் சிந்தனைப் போக்கு. கணவனின் கோபமோ.. வருத்தமோ..சிறிதாக இருந்தாலும் பூதாகரமாக கற்பனை செய்து அதிலேயே ஒலண்டு ஒலண்டு மூழ்கிவிடுவர் சோக பதுமையாக…
ஆண்கள் தெளிந்து ஒரு புன்னகை போதும்… அடுத்த விநாடி இவர்களின் எண்ணம் அஞ்சறை டப்பாக்குள் அடங்கி விடும்.
தனா நேராக வயலுக்கு சென்று மேற்பார்வை பார்த்து விட்டு பேக்டரிக்கு சென்றான். முன்பே வந்திருந்த கருணாவும் வெற்றியும் வேலையில் இருக்க…
இவனைப் பார்த்ததும் கருணா தான் அவனின் அலுவலக அறைக்கு வந்து “வா மாப்புள்ள… இப்ப பரவாயில்லையா…. நேத்து நான் வீட்டுக்கு வந்தேன். அரசி எல்லாம் சொல்லுச்சு… நீ கண்டதையும் நினைச்சு ஒலப்பிக்காதே. நாமல்லாம் எதுக்கு இருக்கோம்… அந்த புள்ளய இப்படியேவா விட்டுருவோம். அதுக்கு ஏதாவது செய்யலாம். அதுக்காக உன்ன வருத்திக்காத… அரசி முகத்த பார்க்கவே முடியல…. நீ சந்தோஷமா இருந்தா தான் அதுவும் சந்தோஷமா இருக்கும்… உன் முகத்தப் பார்த்து வாழறவ அது முகம் வாடி போகாம பார்த்துக்க… கண்டிப்பா ஏதாவது செய்வோம் சரியா…” என ஒரு நண்பனாக தோள் கொடுத்து நிற்பேன் என நம்பிக்கை அளித்துவிட்டு சென்றான்.
கருணாவின் பேச்சு புது நம்பிக்கை கொடுக்க.. விடுப்பட்ட வேலை இழுத்து கொள்ள… மதிய உணவு நேரம் கடந்ததை கூட அறியாது மூழ்கிவிட…
அவனின் அலைபேசி ஒலிக்க எழில் தான் அழைத்திருந்தாள். எடுத்ததும் “மாமா… சாப்பிட வரல.. நேரம் தாண்டி போச்சு”
“எனக்கு இன்னும் கொஞ்சம் வேலையிருக்கு வர லேட்டாகும். நீ சாப்பிடு”
“சாப்பிட்டு போய் வேலை செய்ங்க மாமா..”
“ப்ச்ச்… முக்கியமான வேலை பாதில விட்டுட்டு வரமுடியாது”
“நான் வேணா சாப்பாடு எடுத்துட்டு வரவா”என்றாள் மிக உற்சாகமாக…
“ஒன்னும் வேண்டாம். சொன்னா கேளு… நான் வந்து சாப்பிடறேன். உனக்கு பசிச்சா நீ சாப்பிடு”என்று கடுப்புடன் போனை வைத்துவிட்டான்.
போனை வைத்தது தெரிந்ததும் “க்கும் ரொம்ப தான் பண்றாங்க… சாப்பிட தான வரச் சொன்னேன்… நான் அனுப்பற போட்டோவ பார்த்து வேலயாவது ஒண்ணாவதுனு ஓடியாறனும்…”
தட்டில் மட்டன் பிரியாணி சிக்கன் வறுவல் முட்டை என அழகுற பரப்பி அவனுக்கு வாட்சப்பில் ஒரு போட்டோ அனுப்ப… பார்த்ததிற்கான அறிகுறி காட்ட.. பதில் மட்டுமில்லை.
மாமா உங்களை…. என பல்லைக் கடித்தவள் ‘ம்கூம் எழிலு.. உன் ஸ்டைலு தான் ஒர்க்அவுட் ஆகும். எடு ஒரு ஷெல்பிய… அனுப்பு மாமாவுக்கு…’ என தட்டை தன் முன் நகர்த்தி பசியால் வாடும் பச்சபுள்ள போல முகத்தை வைத்து ஒரு போட்டோ..
முக்கியமான பர்சேஸ் கணக்கை சரிபார்த்து கொண்டு இருந்தவன் வாட்சப் ஒலியில் எடுத்து முதல் போட்டோவை பார்த்து விட்டு பேசாமல் தன் வேலையைப் பார்க்க….
அடுத்த இரண்டு நிமிடத்தில் அடுத்ததற்கான சவுண்ட் கேட்க…. எடுத்துப் பார்த்தவன் பக்கென சிரித்துவிட்டான். நேற்று தான் இருந்தது என்ன… இன்னைக்கு சிரிப்பதென்ன… இதெல்லாம் இவளால மட்டும் தான் முடியும்.
பருக பருக தெவிட்டாத அமிர்தம் தந்து மோட்சம் அளிக்கும் யட்சிணியோ… தண்மை கொண்டு வாழ்வை குளிர செய்யும் தண்ணிலவோ….. தனாவில் வாழ்வில் இல்லாததை எல்லாம் இல்லாததாகச் செய்ய இல்லாளலாக வந்தாள் எழில்.
சட்டென கணக்கை மூடி வைத்தவன் உடனே கிளம்பிவிட்டான். இவன் வீட்டிற்கு வந்த போது பார்த்தது இது தான். போனில் ஒரு பார்வை தட்டில் ஒரு பார்வை ஏக்கத்தோடு…… மீண்டும் ஒரு சிரிப்பலை தனாவிடம்.
விடுவிடுவென அவளிடம் சென்றவன் அவள் தலையில் லேசாக தட்டி “எனக்கும் தட்டு எடுத்து வை… வரேன்” என்க
“வந்துட்டிங்களா மாமா… நான் கூட நீங்க வர லேட்டான என்ன பண்றது… பிரியாணி ஆறி போயிடுமேனு பயந்தேன்”
“நான் தான் உன்னைய சாப்பிட சொன்னல்ல… சாப்பிடாம போட்டோவா போட்டு அழிச்சாட்டியம் பண்றடி…”
“போட்டோ போடவும் தான பிரியாணிய பார்த்ததும் வேலைய விட்டுட்டு ஓடியாந்துட்டிங்க… எப்பூடி எழிலோட ஐடியா..”
“அடியேய் என் மக்கு பொண்டாட்டி பிரியாணிய பார்த்துட்டு ஒன்னும் நான் வரல…. பிரியாணி திங்க முடியாத ஏக்கத்தை போட்டோ எடுத்து அனுப்பின பாரு… இந்த கேடிபுள்ள கொடுத்த பச்சபுள்ள லுக்க பார்த்து விட்டு வந்தேன்” என்றான் சிரிப்புடன்.
“கண்டுபுடிச்சிடிங்களா… என் ஜெய்மாமா புத்திசாலியில்ல”அவன் தாடையை பிடித்து கொஞ்சினாள்.
“சரிடி போதும்… நான் போய் ப்ரஷ்ஷாகிட்டு வரேன். எல்லாம் எடுத்து வை” என
தங்கள் அறைக்கு சென்றவன் உடை மாற்றி முகம் கழுவி வந்தான்.
அவன் வந்ததும் அவனுக்கு பரிமாறி பேசியபடியே தானும் உண்டாள். தனா சாப்பிட்டதும் கிளம்பிவிடுவான் என நினைத்து இவள் சாப்பிட்டதை சுத்தம் செய்து கொண்டு இருந்தாள்.
தனா மேலே சென்றவன் எழிலின் அடாவடியில் மனம் உல்லாசமாக இருக்க… எழிலின் அருகாமையை வேண்ட … படுக்கையில் சாய்ந்து கால்களை ஆட்டிக்கொண்டு எழிலுக்காக காத்திருக்க….
எழில் வருவாள் என சிறிது நேரம் பார்த்தவன் அவள் வராமல் போக “எழில்… எழில்…”என சத்தமாக அழைக்க…
அவன் சத்தத்தில் நேற்று போல எதுவோ என நினைத்து அவள் அடித்து பிடித்து மேலே ஓட.. அவன் படுத்திருந்த நிலையைப் பார்த்து கடுப்பாகி….
“எதுக்கு மாமா கூப்பிட்டிங்க”

“வா வா.. இங்க என் பக்கத்துல வா” என தன் அருகே படுக்கையில் தட்டியவாறே சொன்னான் உற்சாகத்துடன்..
“கீழ வேலையிருக்கு என்னன்னு சொல்லுங்க”
“முதல்ல மாமன கவனிடி… அப்புறம் வேலையை பார்க்கலாம்” என்றான் கள்ளத்தனமாக…
அவனை முறைத்தவாறே “இருங்க வரேன்” என திரும்பி செல்ல…
அடுத்த நொடி தனாவின் அணைப்பில் எழில். திமிறி விலகப் போனவளை தன் வலிய கரங்கள் கொண்டு அடக்கியவன் அவள் ஊடலை முடித்து வைத்து அழகான கூடலை நிறைவேற்றி கொண்டான்.
மாலை வரை நன்கு உறங்கி எழுந்தவன் பேக்டரிக்கு தயாராகி வரும் போது எழில் சமயலறையில் ஏதோ செய்து கொண்டு இருந்தாள்.
எட்டிப் பார்த்தவாறே “எழில் நான் கிளம்பறேன்”
“மாமா இருங்க வரேன்” என குரல் கொடுத்தாள் .
டீவியை போட்டுக்கொண்டு அமர்ந்துவிட்டான் தனா. சிறிது நேரத்தில் தட்டில் வடையோடும் டீயோடும் வந்த எழில்
“மாமா இத சாப்பிட்டு கிளம்புங்க….” என அவனருகே அமர்ந்த கொள்ள… இருவரும் பேசியபடியே சாப்பிட்டனர். தனா எழிலிடம் சொல்லி கொண்டு பேக்டரிக்கு கிளம்பினான்.
பேக்டரிக்கு போய் மேற்பார்வை பார்த்து விட்டு வாரகூலி நாள் என்பதால் கூலி கொடுக்க வயலுக்கு சென்றான். வண்டியை தோப்பில் நிறுத்தி விட்டு வரப்பு வழியாக நெல்லங்காட்டிற்கு நடந்து செல்ல…. அங்கே வேலை செய்து கொண்டு இருந்தவர்கள் இவன் வந்ததை அறியாமல்…
“ஏன்டி சரோஜா உனக்கு ஒரு சேதி தெரியுமா..”
“என்னடி வசந்தா… என்ன சொல்லறவ…”
“கோவிந்த மவ பூங்கொடி இருக்கால்ல புருஷங்கூட வாழமா வந்துட்டா…”
“என்னது… வாழாவெட்டியா வந்துட்டாலா… இத எப்ப…”
“நீ உங்க ஊரு திருவிழாவுக்கு போயிருந்தெல்ல அப்பதான்”
“சர்காரு உத்தியோகத்துல இருக்கானு சொன்னாங்க.. அவங்கூட பொழைக்க கசக்குதா..”
“இவளோட புழவாக்கு தெரிஞ்சு அடிச்சு துரத்திவிட்டுட்டான்ல…”
“இழுக்காம விளங்கச் சொல்லுடி…”
“இவ தான் நம்ம முதலாளி அய்யாகூட காடு கழனில்லாம் சுத்துனால… ஊருல அரசபுரசலா தெரிஞ்சி போயி தான கோவிந்த அவசர அவசரமா அசலூருல கொடுத்தான்”
“எத்தன நாளைக்கு தான் மூடிமூடி வைக்கமுடியு… ஒரு நாள் நாத்த தாங்காம வெளிய வரத்தான செய்யு….”
“பொஞ்சாதி கட்டிக்கறது முன்னாடி வேற ஒருத்தனோட சுத்திக்கிட்டு இருந்தா எந்த ஆம்பள தான் பொறுப்பான் அதான் தொரத்திவிட்டுட்டான் ரோசக்கார…”
இதை கேட்டு தனா ரொம்பவே துடித்துப் போனான். எந்த பழிபாவத்துக்கு அஞ்சினானோ… எந்த சொல்லுக்கு ஆளாககூடாது ஒதுங்கி போனானோ… எதை ஊர் வாயால கேட்ககூடாது என நினைத்தானோ…
அது இப்ப அவன் காது வழியா கேட்க நேர்ந்த போது நிவார் புயலை போல சுழன்று சுழன்று அடிக்க…. அவன் மனமும் புத்தியும் அங்கேயே நின்றுவிட… தன் போக்கில் வந்த வழியே திரும்பி சென்றவன் சுயநினைவின்றி எங்கே செல்கிறோம் என்பதில்லாமல் வண்டியை எடுத்து ஓட்டிக்கொண்டு வந்தவன்….
பேக்டரியின் கிளை சாலையில் இருந்து பிரதான சாலை சந்திக்கும் வளைவில் எதிரே லாரி ஒன்று வருவதை கவனிக்காமல் சென்று நேராக லாரியின் மீது மோதி தூக்கி எறியப்பட்டு சாலையின் எதிர்புறம் இருந்த மரத்தில் மோதி கீழே விழுந்தான்.
ஊரின் எல்லையிலேயே விபத்து நடந்து இருக்க… தனா மோதிய லாரியோ இவன் பேக்டரிக்கு கரும்பு ஏற்றி கொண்டு வந்த வண்டி.. தனா ஒதுங்கி கொள்வான்என டிரைவர் நினைத்திருக்க…. இப்படி நேருக்கு நேர் மோதுவான் என நினைக்கவில்லை அவர்.
பொழுது சாய்ந்து இருள் சூழ்ந்து ஜனநாட்டமும் அதிகமில்லாமல் இருக்க… இருந்த ஒரிருவரும் என்ன இப்படி வருகிறார் என நினைப்பதற்குள் தனா தூக்கி எறியப்பட்டு இருந்தான்.
அங்கிருந்தவர்கள் ஓடிச்சென்று பார்த்த போது தனா இரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தான். லாரி டிரைவர் உடனே வெற்றிக்கு அழைத்து சொல்ல..
வெற்றி மில்லில் இருந்தவன் குடும்பத்தாரிடம் சொல்லக்கூட தோன்றாமல் அங்கிருந்த கருணாவை கூட்டிக்கொண்டு வர தனாவை ஆம்புலன்ஸில் ஏற்றி இருந்தனர். பார்த்ததும் இருவருமே அழுதுவிட்டனர்.
தனா ஐசியுவில் அனுமதிக்க பட்டு சிகிச்சை நடந்து கொண்டு இருக்க… கருணா தான் சுந்தரத்திற்கு அழைத்து சொன்னான்.
தனாவின் நிலையை அறிந்து குடும்பமே கதறி அழுக… சுந்தரத்திற்கோ எழிலிடமும் எப்படி சொல்வது… அதை தாங்கி கொள்வாளா.. என கவலை.
எப்படியும் சொல்லி தானே ஆகவேண்டும். கேட்ட விநாடி அதிர்ச்சியில் எழில் மயங்கி விழுந்தாள்.
தனா உயிர் பிழைத்து வருவானா… எழில் என்ன செய்யப் போகிறாள்?

புள்ளி மேவாத மான் – 13 Read More »

E56655E5-CF35-478F-ABAC-326A217168EA

புள்ளி மேவாத மான் – 12

புள்ளி மேவாத மான் – 12

எழில் தான் பூங்கொடியை பார்த்து வந்தாள். தனா ஊர் திரும்பிய பின் பூங்கொடியை பார்க்க என கோவிந்தன் வீட்டுக்கு செல்லவில்லை. தனாவின் காதல் ஊருக்குள் முன்பே ஓரளவு தெரிந்திருக்க….. இப்போது தான் அவளைப் போய் பார்த்தால் தவறான பேச்சிற்கு இடமாகி விடும் என்பதோடு மட்டுமில்லாமல் மதுரை போகாமல் இருந்திருந்தால் பூங்கொடிக்கு இந்த நிலைமை வந்து இருக்காதோ என்ற எண்ணம் அவன் மனதை வாள் கொண்டு அறுப்பது போல இருந்தது.
இதில் சுந்தரத்திடம் தனா சந்துருவை பார்த்து விட்டு வந்ததை சொல்ல.. சுந்தரம் பிடிபிடியென பிடித்துவிட்டார். பெரியவங்களை கேட்காமல் தனியாக எதுக்கு போன… நீ போனதால தான பிரச்சினை முத்திடுச்சு…பெரியவங்க பார்த்து எதுவும் செய்யமாட்டோமா…. என்க அதுவும் சேர்ந்து கொள்ள.…
தனாவின் மனதில் பல குழப்பங்கள்.அதனால் அவனின் இயல்பில் அவனில்லை. அவனை அவ்வாறு பார்க்க எழிலுக்கோ வேதனையாக இருந்தது. எழிலை வேதனைப் படுத்துக்கிறோம் என அறியாமல் வேதனைப் படுத்திக் கொண்டு இருந்தான்.
கோவிந்தனுக்கு மகளைப் பார்க்க பார்க்க சந்துருவை கொன்று விடும் வெறி. கிளியை வளர்த்து பூனை கையில் கொடுத்துவிட்டேன் என புலம்பித் தீர்த்தார்.
பூங்கொடி படுக்கையில் இருந்து எழவே பத்து நாட்களானது. சந்துருவின் மேல் வழக்கு பதிவு செய்து இருக்க…. சந்துருவிடம் இருந்து விவகாரத்து வாங்கிடனும். போதும் மகள் வாழ்ந்தது. உயிரோடு இருந்தால் சரி என்ற முடிவுக்கு வந்து இருந்தார் கோவிந்தன்.
சுந்தரம் வீட்டில் ஊர் பெரியவர்களை வைத்து மேற்கொண்டு என்ன செய்யலாம் என முடிவு செய்ய கோவிந்தன்அழைப்பின் பேரில் எல்லோரும் ஒன்று கூடினர். ஊர் பிரசிடென்ட் என்ற முறையில் தனாவையும் அழைத்திருக்க…. தனாவுக்கோ மிகவும் தயக்கம். அதனால் போகலாமா வேண்டாமா என யோசனையில் இருக்க… சுந்தரம் பேசியில் அழைத்துவிட்டார்.
சுந்தரத்திற்கு தனாவின் மனது புரிந்த போதும் அவன் வரட்டும் பேசலாம் என எல்லோரும் காத்திருக்க வேறு வழியின்றி அழைத்தவர்.…
“தனா எல்லோரும் உனக்காக தான் வெயிட் பண்றாங்க வரய்யா தம்பி”
வேறு வழியின்றி வருவதாக சொல்லி அழைப்பை துண்டித்து விட்டு எழிலிடம் கூட சொல்லிக் கொள்ளாமல் கிளம்பி சென்றான்.
தனா ஏதும் எழிலிடம் சொல்லவில்லை என்றாலும் வெற்றி தன் அண்ணிக்கு சொல்லி இருந்தான். தனா சொல்லாமல் சென்றது எழிலுக்கு வருத்தமாக இருந்தது. ஆனாலும் தனா மீது கோபம் எல்லாம் இல்லை. அவனுக்காக தான் வருத்தப்பட்டாள்.
தனா வரவும் எல்லோரும் வயது வித்தியாசம் பார்க்காமல் எழுந்து நின்று கை கூப்பினர். இதைப் பார்த்த கோவிந்தனுக்கு தான் செய்த முட்டாள்தனம் புரிந்தது.
எல்லோரின் வணக்கத்திற்கு பதில் வணக்கம் வைத்தவன் அமைதியாக அமர்ந்து கொண்டான். என்ன செய்வது என ஆளுக்கு ஒன்றாய் பேச எதிலும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருந்து வேடிக்கை மட்டுமே பார்த்தான்.
இறுதியில் சந்துருவின் வழக்கை வாபஸ் வாங்கி விட்டு விவகாரத்து மட்டும் வாங்கி கொள்ளலாம் என முடிவு செய்தனர். தனாவிடம் கேட்க ஒப்புதலாக தலையை மட்டுமே அசைத்தான். தனாவிற்கோ பூங்கொடி விசயத்தில் எதை பேசவும் ஒரு பயம்.அதனால் கடைசி வரை பேசாமல் இருந்து விட்டு விடைபெற்று கிளம்பிவிட்டான்.
சுந்தரமே தனக்கு தெரிந்தவக்கீல் மூலம்சந்துருவிடம் இருந்து விவாகரத்து பெற ஏற்பாடு செய்து கோவிந்தனுக்கு எல்லா உதவிகளையும் செய்தார்.
ஒரு மாதம் கடந்த நிலையில் வழக்கம் போல அன்று தனா கோயிலுக்கு செல்ல… அங்கு பூங்கொடி வந்திருக்க…. அவளைக் கண் கொண்டு தனாவால் பார்க்க முடியவில்லை.
பூங்கொடி ஆள் இளைத்து கருத்து கண்களில் ஜீவனே இல்லாமல் கருவறையின் எதிரே நின்று கடவுளை தன்னிலை மறந்து வெறித்து பார்த்தபடி இருந்தாள்.
எப்படி இருந்தவள் கல்லூரிக்கு செல்லும்போது பார்த்திருக்கிறானே…துறுதுறுனு தன் தோழிகளோடு கலகலனு சிரித்து பேசிக் கொண்டு… அப்போது அவள் சிரிப்பில் கண்களும் மலர்ந்து முகம் விகசித்து அது ஒரு தனி சோபையோடு அன்று அலர்ந்த மலர் போல இருக்க… அந்த அழகில் தலை சுற்றிப் போய் தான் தனா அவளிடம் காதலில் வீழ்ந்தான்.
இன்று அந்த கண்கள் ஜீவனற்று ஏதோ உயிரை கையில் பிடித்து கொண்டு இருப்பது போல கடவுள் முன் நின்று இருக்க….
அவளின் அந்த நிலை தனாவை உயிரோடு மரித்துப் புதைக்க… செய்வதறியாத குழப்பத்திலும்….ஒன்றும் செய்ய முடியாத தன் கையறுநிலையையும் அறவே வெறுத்தான்.
சாமி தரிசனம் கூட முடிக்காமல் வீட்டிற்கு சென்றவன் வழக்கம் போல தன் பெற்றோர் அறையில் நுழைந்து கொள்ள…. சாப்பிட வராமல் செல்வதை பார்த்து ஏதோ சரியில்லை என நினைத்த எழில் சென்று பார்க்க… பெற்றவர்கள் படுக்கையில் ஒருக்களித்து படுத்திருந்தான்.
அவன் படுத்திருந்த நிலை எழிலை பதற செய்ய… வேகமாக அவனருகில் சென்றவள் தன் பதற்றை விடுத்து நிதானத்தை கைக்கொண்டு அவன் தலைமாட்டில் அமர்ந்து மெதுவாக தலைமுடியை ஒதுக்கி நெற்றியில் மென்மையாக முத்தமிட்டு
“என்னாச்சு மாமா… ஏன் இங்க வந்து படுத்துக்கிட்டிங்க… பேக்ட்ரிக்கு போகல… உடம்புக்கு ஏதாவது பண்ணுதா… தலைவலிக்குதா… தைலம் தேச்சுவிடவா…”
எழிலின் மடியில் கவிழ்ந்து படுத்தவன் பேசவே இல்லை சிறிதுநேரம் கழித்து தன் மடியில் ஈரத்தை உணர்ந்தவள் துடித்து போய் அவன் முகத்தை நிமிர்த்தி அவனின் கன்னத்தை தன் கைளால் தாங்கி தன் முகம் பார்க்க செய்தவள்…
“மாமா.. மாமா என்னாச்சு… எதுக்கு அழுகறிங்க… என்னன்னு சொல்லுங்க….எதுனாலும் பார்த்துக்கலாம்” என்க..
அவளின் முகம் பார்த்து “உன் காதல் போல என் காதல் இல்லையா…” தவிப்புடன் கேட்டான்.
“என்ன மாமா சொல்லறிங்க…” என புரியாமல் அவன் முகத்தை பார்க்க…
“உன் காதல் என்னை வாழ வச்சுது… ஆனால் என் காதலால் பூங்கொடி வாழ்க்கை ஒன்றும் இல்லாமல போச்சு அது மட்டுமில்லாமல் அப்பா அம்மாவையே நிரந்தரமா என்கிட்ட இருந்து பிரிச்சிடுச்சு…”
“உங்க மேல எந்த தப்பும் இல்லையே. உங்களுக்கு பிடிச்சு இருந்துச்சு காதலிச்சிங்க… முறைப்படி பொண்ணும் கேட்டிங்க… கோவிந்தன் சித்தப்பா தான முடியாதுனு சொல்லிட்டாரு… சரியா விசாரிக்காம அவசர அவசரமாக கல்யாணம் சித்தப்பா பண்ண வச்சாரு…இதுல உங்க தப்பு என்ன மாமா இருக்கு… எல்லாமே சித்தப்பாவோட அவசரபுத்தி தான் பூங்கொடிக்கா வாழ்க்கை இப்படி ஆனதுக்கு காரணம்”
“இல்ல அவள் வாழ்க்கை கெட என் காதல் தான காரணமாகிடுச்சு…”என சொன்னவன் மீண்டும் கண் கலங்க…
இதற்கு என்ன சொல்வது என எழிலுக்கு தெரியவில்லை. அவள் அமைதியாக இருக்க…..
தனா நிமிர்ந்து அவளின் முகம் பார்க்க…. அவன் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டு….
“மாமா… உங்களை நீங்களே வதைச்சுக்காதிங்க.. இப்பவும் சொல்றேன் இதுல உங்க தப்பு எதுவுமல்ல….”
“ஆனா அப்பா அம்மா சாவுக்கும் நாந்தான காரணம். எல்லாம் என்னால தான…”என தலையில் அடித்துக் கொள்ள….
தனாவை எழில் தன் மார்போடு சேர்த்து அணைத்துக்கொள்ள..அவள் தோளில் சாய்ந்து கொண்டு இதுவரை யாரிடமும் சொல்லாத தன் மனசஞ்சலங்களை அவளிடம் கொட்டித் தீர்த்தான்.
“என் விருப்பத்துக்காக பூங்கொடி வீட்டுக்கு போயி அவமானப்பட்டு வந்தாங்க… அதை அப்பாவால தாங்கிக்க முடியல… ரொம்ப வருத்தமா இருந்தார். அப்பாவ பார்த்து பார்த்து அம்மாவும் வேதனைப்பட்டாங்க….”
“இவங்க இரண்டு பேரையும் பார்க்க பார்க்க எனக்கே என்ன நினைச்சு அசிங்கமா இருந்துச்சு… எப்படி இருந்த வீடு…. நான் தான் அவங்கள வற்புறுத்தி ஹரித்துவார் ரிஷிகேஷ் போயிட்டு வாங்கனு அனுப்பி வைச்சேன். அவங்களுக்கு ஒரு மனமாற்றமா இருக்குமே அப்படினு…”
“போன முதல் நாள் தான் ஒரு மாதிரி டல்லா பேசினாங்க. அதுக்கப்புறம் தினமும் நைட் போன் பேசும்போது அன்னைக்கு போன இடம் பார்த்தது என அவ்வளவு சந்தோஷமா பேசினாங்க.”
“கடைசியா அன்னைக்கு காலைல வெளியே கிளம்பும் முன்ன அம்மா எவ்வளவு நேரம் பேசிட்டு இருந்தாங்க தெரியுமா… அது தான் கடைசி பேச்சு என தெரியாமயே அம்மா என்கிட்ட கண்ணு… ராசா… சாப்பிடயா தங்கம்… வேல வேலைனு அலையாம நேரத்துக்கு வீடு வந்திடு சாமி…. சீக்கிரம் தூங்குய்யா…. எல்லாம் சரியாயிடும். நான் எல்லா சாமிகிட்டயும் உனக்காக வேண்டி இருக்கேன் கவலைப்படாதய்யா… கடைசி வினாடில கூட அவங்களுக்கு என் நினைப்பு தான். அம்மாவோட குரல் இன்னும் என் காதுல கேட்டுகிட்டே இருக்கு…”
தன் தோள் சாய்ந்திருந்த தனாவின் முடியை மெல்ல கோதிவிட்டாள் எழில். அவளுக்கு தான் எல்லாம் தெரியுமே….இருந்தபோதும் அவன் மனதில் உள்ளதை கொட்டி தீர்க்கட்டும் என அமைதியாக செவி சாய்த்தாள்.
“அப்போ அங்க தீடிருனு பயங்கர மழை. இவங்க போன வண்டி நிலச்சரிவுல மாட்டிக்குச்சு… அந்த வண்டில இருந்த பதினைஞ்சு பேரும் ஸ்பாட் அவுட்… ஐந்து நாள் கழிச்சு தான் மீட்க முடிந்தது…இங்க கொண்டு வர முடியாம நானும் கருணாவும் சுந்தரம் சித்தப்பாவும் கண்ணன் சித்தப்பாவும் மட்டுமே போயி அங்கயே எல்லா காரியமும் செஞ்சிட்டு வந்தோம். அவங்க வாழ்ந்த ஊருல எதையும் செய்ய முடியாம போச்சு..”
“இதை நினைச்சு நினைச்சே எனக்கு பைத்தியம் பிடிக்காத குறை தான்… உன்னால தான் கொஞ்சம் அதுல இருந்து மீண்டு வந்தேன். இப்ப பூங்கொடி விசயம் என் மனச அறுக்குது… எல்லாம் என்னால தாங்கற பழி பாவத்துக்கு ஆளாகிடுவேனோனு பயமா இருக்கு எழில்”என அவளை கட்டி கொண்டு கண்ணீர் சிந்தினான்.
எழிலோ”அப்படி எல்லாம் எதுவும் ஆகாது மாமா… உங்க காதல் கண்ணியமானதான இருந்துச்சு. உங்க குணம் ஊருக்கே தெரியாதா ? யாருக்கு தைரியமிருக்கு உங்கள சொல்ல….” என்றவள்..
தன் சேலை தலைப்பால் அவன் முகத்தை துடைத்துவிட்டு அவனை படுக்க வைத்து தானும் அவனை அணைத்தாற் போல படுத்தாள். எழிலின் அணைப்போ…. இல்லை நெடுநாளாக தன் மனதில் இருந்த பாரத்தை இறக்கி வைத்த ஆசுவாசமோ… சிறிது நேரத்திலேயே ஆழ்ந்த தூக்கம் அவனுக்கு.
அவன் மனபாரத்தை இறக்கி வைத்துவிட்டான். இவள் மனதில் அதை ஏற்றிவிட்டான்.
அவன் தூங்குவதை உறுதி செய்து கொண்டு மெல்ல வெளியே வந்து சோபாவில் அமர்ந்து தன் போக்கில் சிந்தனையில் மூழ்கிவிட்டாள்.
எவ்வளவு நேரம் அப்படி அமர்ந்து இருந்தாளோ… கருணா வந்து அழைக்கவும் தான் சுயம் பெற்றாள்.
“அரசி… அரசிம்மா… கூப்பிட்டு இருக்கேன். அது கூட தெரியாம அப்படி என்ன யோசனை”
“ம்ம்ம்… என்ன அண்ணா கேட்டிங்க”
“தனா எங்கம்மா… பேக்டரிக்கும் வரல.. போன் சுவிட்ஆப்னு வருது”
“மாமா தூங்கறாரு.. நான் தான் அவர் போன ஆப் பண்ணி வச்சிட்டேன்”
“என்னாச்சு உடம்பு சரியில்லயா எங்க மேல படுத்து இருக்கறானா”
“இல்லண்ணா அத்தை மாமா ரூம்ல படுத்து இருக்காரு”
அதை கேட்டவுடன் பதட்டத்துடன் “என்ன பிரச்சனை உன் முகமும் சரியில்லை..” என கேட்டு கொண்டே தனாவை பார்க்க சென்றான்.
முகம் சோர்வாக இருக்க.. நிராதவரான குழந்தை போல தூங்கி கொண்டு இருந்தவனைப் பார்த்து வேதனையாக இருக்க…
சப்தம் செய்யாமல் வெளியே வந்த கருணா எழிலிடம் என்ன என கேட்க எல்லாம் சொல்லிவிட்டாள்.
“அவன் யார்கிட்டயும் சீக்கிரம் மனசு விட்டு பேசமாட்டான். அவனுக்கா ஏதோ சரியில்லாம போகவும் சொல்லிட்டான் போல… பார்த்துக்கம்மா… அவன் நல்லா தூங்கட்டும். நாங்க பேக்டரி வேலையை பார்த்துக்கறோம் வரேன்” என்று விடைபெற்று சென்றான்.
வெகுநேரம் கழித்து எழுந்தவனிடம் எழில் சாப்பிட வருமாறு அழைக்க…. மனதும் சற்று தெளிவாக இருக்க…. சாப்பிட அமர்ந்தான். எழில் பரிமாற இரண்டு வாய் உண்டவன் அவள் கையை தன்னருகே அமர வைத்து அவளுக்கு ஊட்டி விட
“நீங்க சாப்பிடுங்க மாமா…”
“எனக்கு தெரியும் நான் சாப்பிடாம நீ சாப்பிடமாட்டே.. பேசாமல் சாப்பிடு”என்ற ஊட்ட…. அவனின் அந்த செயல் காலையில் இருந்த மனநிலைக்கு சற்று இதமாக இருந்தது.
சாப்பிட்டு முடித்ததும் தனா எழிலின் கைகளை புடித்துக் கொண்டு “தேங்க்ஸ் எழில்… உன்கிட்ட எல்லாம் சொல்லவும் மனசுல பாரம் குறைஞ்ச மாதிரி இருக்கு…. உன்னோட ஆறுதல் தான் எனக்கு கொஞ்சம் ஒரு தெளிவ கொடுத்திருக்கு”என்று பிடித்திருந்த அவள் புறங்கையில் முத்தம் கொடுத்து தன் நெஞ்சில் வைத்து அழுத்திக் கொண்டான்.
மாலை வரை எழிலோடு இருந்து விட்டு பேக்டரிக்கு போயிட்டு வந்து நேரமாகவே வந்து சாப்பிட்டு எழிலை அணைத்து கொண்டு நிம்மதியாக தூங்கினான்.
விடிந்ததும் அவன் நிம்மதி தொலைந்து….. எந்த பழி பாவத்து அஞ்சினானோ…. அதுவும் நடந்து உயிருக்கு போராடும் நிலை வரும் என தெரியாமல் நிம்மதியான உறக்கம் கொண்டான்.

புள்ளி மேவாத மான் – 12 Read More »

45C9D1FD-587A-41EA-B22B-AB066269B12E

புள்ளி மேவாத மான் – 11

புள்ளி மேவாத மான்-11

வெற்றி கனி திருமணம் அதன் ஆரவாரங்கள் எல்லாம் முடிந்துசில நாட்களில் பூங்கொடியின் கணவன் சந்துருவை சந்திக்க மதுரைக்கு சென்றான் தனா. அவனை சந்தித்து பேசி புரிய வைக்க வேண்டும் என முடிவு செய்திருந்தான்.
எழிலிடம் ஒரு வேலையாக மதுரை செல்வதாக கூறி விட்டு சென்றான். மற்றவர்களிடமும் அப்படி தான் சொன்னான். கூட வருவதாக சொன்ன கருணாவை வேணாம் என மறுத்துவிட்டான்.
முதலில் பூங்கொடி வீட்டுக்கு செல்லலாம் என நினைத்தவன் பூங்கொடி கணவனிடம் பேசவேண்டும். ஆனால் பூங்கொடியை வைத்துக்கொண்டு பேசினால் தனக்கும் அவளுக்கு தேவையில்லாத மனசங்கடம் எதற்கு என நினைத்து சந்துரு வேலை செய்யும் அலுவலகத்திற்கு சென்றான்.
தனா சென்ற நேரம் மதிய உணவு வேளையாக இருக்க…. அலுவலக பியூனிடம் சொல்லி அனுப்பினான். பியூன் சொல்ல யாராக இருக்கும் என வந்த சந்துருவை பார்த்தவுடன் தனாவிற்கு அவ்வளவு ஆற்றாமையாக இருந்தது.
ஆள் கறுப்பாக நோஞ்சான் உடம்பு போல ஒல்லியாக கன்னம் எல்லாம் டொக்கு விழுந்து எலும்பு துருத்திக் கொண்டு வயது முதிர்ந்து ஒரு அரைகிழவனாக இருந்தவனை பார்த்ததும் மனது ஆறவில்லை.
தனாவே தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு தனியாக பேசவேண்டும் என அழைக்க….. தனா யார் என்று தெரிந்தவுடன் சந்துரு ஒன்றும் பேசாமல் சொல் என்பது போல கை அசைத்தான்.
தனா “சார் நான் தான் பூங்கொடிய விரும்பினேன். நான் முறைப்படி பொண்ணு கேட்டேன். அவங்க அப்பாவுக்கு இஷ்டமில்ல. அதனால எனக்கு தர சம்மதிக்கல. மத்தபடி
பூங்கொடி மேல எந்த தப்புமில்ல. ரொம்ப நல்ல பொண்ணு. நீங்க தப்பா நினைச்சிட்டு சண்டை போடறதா மாமா சொன்னாரு அதான் நேருல பார்த்து நீங்க நினைக்கற மாதிரி எதுவும் இல்லை என சொல்லிட்டு போகலாம்னு தான் வந்தேன்” என்றான் தணிவாக…
அவன் சொல்லி முடிக்கும் வரை எதுவும் பேசவில்லை சந்துரு. தனா பேசி முடிக்கவும் “ஓ…. அப்ப நீதான் லவ் பண்ண…அவ உன்ன லவ் பண்ணல… இரண்டு பேரும் வெளிய பார்த்து பேசிக்கல…. ஊர் சுத்தல…. என்னைய பார்த்தா கேனையன் மாதிரி இருக்கா… நீ என்ன சொன்னாலும் நம்பறதுக்கு…” என்று மரியாதை இல்லாமல் ஒருமையில் கோபமாக பேசினான்.
இதுவரை தனாவை யாரும் மரியாதை குறைவாக பேசியதும் இல்லை. தனாவும் யாரிடமும் தணிந்து பேசியதுமில்லை. தனாவிற்கு சந்துருவின் பேச்சால் கோபம் வந்த போதும் பூங்கொடி வாழ்க்கைக்காக பொறுத்து போனான்.
“நீங்க தப்பா நினைச்சிகிட்டு இருக்கறிங்க சந்துரு. பார்த்தோம் பேசினோமே தவிர நாங்க எல்லை மீறினதில்ல.. ஏன் நாங்க தொட்டு கூட பேசினதில்ல.. எதுவாக இருந்தாலும் கல்யாணத்துக்குப் பிறகு தான் கட்டுப்பாடோ தான் இருந்தோம். நீங்க சந்தேகபடற அளவுக்கு ஒன்னுமில்ல”
சந்துரு எகத்தாளமாக சிரித்தபடி “லவ் பண்றுவங்க எவன்டா உண்மையை ஒத்துகிட்டு இருக்கறிங்க… லவ் பண்ணாங்களாம்… ஆனா ஒன்னுமே நடக்கலையாம்…. நம்பற மாதிரியா இருக்கு கல்யாணத்துக்கு முன்னால என்ன எல்லாம் கொட்டம் அடிச்சிங்களோ… அதை எல்லாம் மறைச்சு அவ அப்பன் என் தலைல கட்டிட்டான். என்னைய என்ன எச்சிலையை நக்கற நாயினு நினைச்சியா….”
அவன் பேச்சில் தனாவிற்கு கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் சந்துருவின் சட்டையை பிடித்து “என்னடா சொன்ன.. யாரைடா எச்சிலைங்கற… பூங்கொடி எப்படிப்பட்ட பொண்ணு தெரியுமா…. ச்சீ அதைப் போய் தப்பா பேசற நீயெல்லாம் மனுசனாடா….”
“என்னடா அவள சொன்னா நீ பொங்கற… இன்னும் தொடர்பு இருக்கோ…. நான் அவள ஊருக்கு கூட அனுப்பறதில்லையே… எங்க சந்திப்பிங்க மதுரைலயேவா….இருக்காதே நாந்தான் விஷயம் தெரிஞ்சதுல இருந்து வீட்டுக்குள்ள வச்சு பூட்டி வச்சிட்டு தான வரேன்… கள்ளசாவி போட்டு திறந்து சந்திப்பிங்களோ… இருந்தாலும் இருக்கும் யார் கண்டா….”
அவனின் பேச்சில் அவனை பிடித்து கன்னத்தில் பளார் என அறைய… சந்துரு திருப்பி அடிக்க பெரிய சண்டையாகி சுற்றி இருந்தவர்கள் பிரித்து விட்டு பேசி ஆளுக்கு ஒரு புறமாக அனுப்பி வைத்தனர்.
தனாவிற்கு இருந்த கட்டுங்கடாத கோபத்தில் காரை புயல் போல ஓட்டி வந்தவன் கொடைரோடு வந்தவுடன் தலைவலி மண்டையைப் பிளக்க ஒரு ஓட்டலில் வண்டியை நிறுத்தி காபி வாங்கி குடித்து விட்டு கிளம்பினான்.
காபி குடிக்கவும் மனதும் உடலும் சற்று ஆசுவாசப்பட இன்னும் கொஞ்சம் பொறுமையாக பேசி இருக்கலாமோ…. என்ன இருந்தாலும் பூங்கொடியின் வாழ்க்கைக்காக தான் கொஞ்சம் பொறுத்து போயிருக்கலாமோ என தன்னையே திட்டிக் கொண்டான்.
என்ன செய்தாலும் சந்தேக புத்தி உள்ளவனையும் குடிகாரனையும் திருத்த முடியாது என தனா அறியவில்லை. அவன் வீடு வந்து சேர நள்ளிரவு ஆகிவிட …..
அவனை பார்த்த எழில் பதட்டத்துடன் “என்னாச்சு மாமா முகம் வீங்கியிருக்கு… சட்டை எல்லாம் கிழிஞ்சிருக்கு….”
“ஒன்னுமில்ல… உள்ள போய் பேசலாம். வாசல்லயே வச்சு தான் எல்லாம் கேட்பியா…” என்றான் எரிச்சலுடன்.
கொல்லைப்புறம் சென்று கைகால் கழுவி வந்தவன் சோர்வாக சோபாவில் சாய… எழில் அவனுக்கு பால் கொண்டு வந்து கொடுத்து அவன் அருகில் அமர்ந்தவள் அவன் குடிக்கும் வரை பொறுத்தவள் அவன் கையை ஆதரவாக பற்றி “என்னாச்சு மாமா…. ஏன் இப்படி இருக்கறிங்க” என கேட்டாள்.
அமைதியாக அவள் தோள் சாய்ந்தவனை அணைத்துக் கொண்டாள். சிறிது நேரம் கழித்து தனா நிமிர்ந்து அமர்ந்து ,
“நான் ஒரு வேலையாக மதுரைக்கு போனேன் இல்லையா அது பூங்கொடி புருஷனைப் பார்க்கத் தான்”என சொல்லி விட்டு எழில் ஏதாவது சொல்வாளா என அவளைப் பார்க்க…
எழிலோ ஏன் எதற்கு என கேட்காமல் தனாவின் முகத்தையை பார்த்திருக்க……
“ஏன் என்னனு கேட்கமாட்டியா” தனா அவளிடம் கேட்க…
“நான் எதுக்கு மாமா கேட்கனும் சொல்ல வேண்டியதா இருந்தா நீங்களே சொல்லுவிங்க…..”என்றாள் பளிச்சென்று…
எழிலின் பேச்சில் பொறாமையோ கோபமோ இல்லை மாறாக தனாவின் மீதான நம்பிக்கையே தெரிந்தது. இந்த நம்பிக்கை ஏன் பூங்கொடி கணவன் சந்துருவிடம் இல்லை என தனா யோசித்தான்.
ஒரு பெருமூச்சு விட்டவாறே எழிலிடம் பூங்கொடி தந்தை சொன்னது தன்னால் தானோ என மனம் வருந்தியது அதனால சந்துருவை பார்க்க போனது அங்கு நடந்த சண்டை என எல்லாவற்றையும் சொன்னான்.
கேட்டிருந்த எழில் தனாவிடம் “கவலைப்படாதிங்க மாமா… யோசிக்கலாம்….. ஏதாவது செய்யலாம். நேரமாகுது வாங்க வந்து படுங்க” என்றாள் ஆறுதலாக
எழிலின் புரிதலும் ஆதரவான பேச்சும் தனாவிற்கு யானைபலம் தந்தது. அதுவே ஒரு நம்பிக்கையும் கொடுத்தது. ஆனால் அந்த நம்பிக்கையும் உடைந்து போகும் நாள் வரும் அதுவும் இன்றே வரும் என அவனுக்கு யார் சொல்வது….
தனாவிடம் சண்டை போட்டு விட்டு வீட்டிற்கு வந்த சந்துருவை பார்த்ததுமே பூங்கொடிக்கு உதறல் எடுக்க ஆரம்பித்துவிட்டது. முகம் அப்படி ஒரு கோரமாக இருந்தது. உதடு கிழிந்து இடது கண் வீங்கி முகமே தனா அடித்ததனால் கன்றி சிவந்து போய் இருந்தது. இதில் மூச்சு முட்ட வேற குடித்திருந்தான்.
“என்னடி பார்க்கற… இப்ப சந்தோஷமா இருக்குமே… ஆள் வச்சு அடிக்கறியா… சொல்லுடி நாயே…”
“நீங்க என்ன சொல்லறிங்க எனக்கு எதுவும் தெரியாது” என்றாள் பயத்தில் கைகால் நடுங்க…
“ஆஹா… என்ன ஒரு நடிப்பு உனக்கு ஒன்னும் தெரியாது. அதை நான் நம்பனும். நீ சொல்லாமயா அவன் வந்தான்”என்றான் ஆங்காரமாக….
“யாரு வந்தா… நிஜமாகவே எனக்கு தெரியாதுங்க”
“என்னடி தெரியாதுனு திரும்ப திரும்ப பொய் சொல்லறியா… அதான் உன் மாஜி காதலன் அந்த தனஞ்ஜெயன் வந்து என்கிட்டயே பூங்கொடி நல்லவ… ஒழுங்கா வச்சிக்கனும்னு மிரட்டறான்… அடிக்கறான்…”
“சத்தியமா எனக்கு தெரியாதுங்க” என்றாள் முகம் வெளிற…
“வாடி என் பத்தினி தெய்வம் நீ சொல்லறத நான் நம்பனுமா… அவன் நான் உன்னை கொடுமைப் படுத்தறதா சொல்றான். நீ சொல்லாம அவனுக்கு எப்படி தெரியும். உன் போன் என்கிட்ட தான இருக்கு. எனக்கு தெரியாம வேற போன் ஏதாவது வச்சிருக்கறியா…” என கேட்டுவாறே வீடு முழுவதும் பொருட்களை இரைத்துப் போட்டு தேடினான்.
ஒன்றும் கிடைக்கவில்லை என்ற ஆவேசத்தில் தன் இடுப்பு பெல்டை உருவி அடி விளாசினான்.
“வேணாங்க.. வலிக்குதுங்க.. சத்தியமா நான் எந்த தப்பும் பண்ணலைங்க..” என கெஞ்சினாள்.
“நீ சொல்லறத கேட்க நான் என்ன பைத்தியக்காரனா…”என ஆவேசம் கொண்டவனாக அவள் தலைமுடியை பிடித்து இழுத்து சுவற்றில் அடித்தான்.
சைக்கோ போல நடந்து கொண்டான்.மீண்டும் மீண்டும் சுவற்றில் அடித்தான். ஒரு கட்டத்தில் தலையிலிருந்து இரத்தம் வடிய மயங்கி விழுந்தாள் பூங்கொடி.
அவள் மயங்கி விழுகவும் முதலில் சந்துருவுக்கு ஒன்றும் புரியலை.
“ஏய் எழுந்திருடி… சும்மா நடிக்காத… எழுந்திருடி..” என அவளை அடித்து உலுக்கினான். அப்பவும் எழாமல் போக ஓடிப்போய் தண்ணீர் கொண்டு வந்து முகத்தில் தெளித்தான். அவளிடம் ஒரு அசைவும் இல்லை.
அவள் எழுந்திருக்கவில்லை எனவும் சந்துருவிற்குபோதை இறங்கி இஆஈ பயம் பிடித்துக் கொள்ள… அவளைத் தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு சென்றான்.
அது ஒரு தனியார் மருத்துவமனை டாக்டர் வந்து கேள்விகளால் சந்துருவை குடைந்து எடுத்துவிட்டார். பெண் மருத்துவர் அதுவும் அவர் பெண்ணியவாதி. சந்துருவின் முன்னுக்கு பின் முரணான பதிலால் கோபம் கொண்டு போலீஸ்க்கு தெரிவித்துவிட… போலீஸால் கைது செய்யப்பட்டான் சந்துரு.
நள்ளிரவில் கோவிந்தனுக்கு போன் வர… பதறிப்போய் என்ன செய்வது என தெரியாமல் சுந்தரத்தின் வீட்டிற்கு ஓடினார். அந்த நேரத்தில் கோவிந்தன் பதட்டத்துடன் வந்ததை பார்த்து உட்கார வைத்து தண்ணீர் கொடுத்து மெதுவாக என்ன என்று கேட்க….
கோவிந்தன் அழுதுகொண்டே விஷயத்தை சொல்ல.. கேட்டு இருந்த சுந்தரம் வீட்டினர் பதறி தான் போனர். உடனே சுந்தரம் தனாவிற்கு அழைத்துவிட்டார்.
படுத்தும் உறக்கம் வராமல் முழித்திருந்தவனின் வேதனையான முகத்தைப் பார்த்து எழில் பலவாறாக பேசி சமாதானம் செய்து அப்போது தான் இருவரும் உறங்கி இருக்க…
தனாவின் போன் சத்தத்தில் அடித்து பிடித்து எழுந்தனர் இருவரும். சுந்தரத்தின் அழைப்பை பார்த்தவன் இந்த நேரத்தில் என்ன என பதைப்புடன் அழைப்பை ஏற்றான்.
சுந்தரம் கூறிய விசயத்தில் தனாவிற்கோ வேர்த்து விறுவிறுத்து “இதோ உடனே இப்பவே வரேன்” என கூறியவன் எழிலிடம் சொல்லி கொண்டு சுந்தரம் வீட்டிற்கு சென்றான்.
சுந்தரம் ஊரில் சில முக்கியஸ்தர்களை அழைத்து கொண்டு தனா வெற்றி கருணாவோடு மூன்று கார்களில் மதுரைக்கு சென்றனர்.
இவர்கள் நேராக மருத்துவமனைக்கு தான் சென்றனர். அங்கு ஐசியுவில் மூக்கில் வாயில் குழாய்களோடு மூச்சு பேச்சின்றி இருந்த பூங்கொடியைப் பார்த்து கதறிவிட்டார் கோவிந்தன்.
போலீஸ் ஸ்டேசனில் இருந்து வந்து கோவிந்தனை விசாரிக்க அவருக்கே என்ன நடந்தது என தெரியவில்லை. அவர் என்ன சொல்லுவார். பூங்கொடி தான் சொல்லவேண்டும் என்ற நிலையில் அவள் கண் விழிப்பதற்காக காத்திருந்தனர்.
இரண்டு நாட்கள் கழித்து பூங்கொடி சுயநினைவு திரும்ப அவளிடம் நடந்ததை கேட்க அவள் கூறியதை கேட்டு எல்லோருக்கும் கோபம்.
பூங்கொடி சொன்னதை வாக்குமூலமாக பதிவு செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் இரண்டு நாட்கள் மருத்துமனையில் இருந்து விட்டு பூங்கொடியை அழைத்து கொண்டு ஊர் திரும்பினர்.
தனா மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானான். பூங்கொடியைப் பார்க்க பார்க்க தனாவிற்கு ஆற்றாமையாக இருந்தது. தன்னையே நினைத்து நொந்து கொண்டான்.
ஊர் திரும்பியதும் தனா தன் பெற்றோர் அறையில் நீண்ட நாட்களுக்கு பிறகு அடைக்கலமானான். தன் பெற்றோர் படத்தை பார்த்ததும் எப்பவும் போல அவர்களின் இறப்புக்கும் தன்னையே குற்றம் சாற்றி வேதனை கொண்டான்.
எழிலுக்கு என்ன செய்வது என தெரியவில்லை. அவளின் பேச்சுக்கள் எதுவும் தனாவிடம் எடுபடவில்லை. ஒருநாள் முழுவதும் பேசவில்லை சாப்பிடவில்லை அறையை விட்டு வெளியே வரவுமில்லை.
அடுத்த நாள் காலையில் அறையை விட்டு வந்தவன் எழிலிடம் எதுவும் பேசாமல் குளித்து பேருக்கு ஏதோ சாப்பிட்டு விட்டு ஆலைக்கு கிளம்பி சென்றான். ஆலையிலும் யாரிடமும் பேசவில்லை. யாராவது எதாவது கேட்டால் ஓரிரு வார்த்தையில் பதில். கல்யாணத்திற்கு முன்பு இருந்தது போல் தனக்குள் சுருங்கி இறுகிவிட்டான்.
எழில் தான் மிகவும் தவித்துப் போனாள். நடந்த அனைத்தையும் வெற்றி எழிலிடம் சொல்லியிருக்க… வெற்றியோடு சென்று பூங்கொடியைப் பார்த்து விட்டு தான் வந்தாள். தனாவும் இப்படி இருக்க இந்த சூழ்நிலையை எப்படி கடந்து வருவது என தெரியாமல் முழித்தாள்.
தனா பூங்கொடி காதல் தெரிந்த போது கூட என் கடன் பணி செய்து கிடப்பதே என்பது போல அவன் யாரை காதலித்தால் என்ன நான் அவனை நேசிக்கிறேன். என் இறுதி மூச்சு வரை நேசிப்பேன். அவன் மகிழ்ச்சியாக இருந்தால் போதும் என தன் காதலை தனக்குள் பொக்கிஷம் போல பொத்தி வைத்துக்கொண்டு புன்னகை மாறாமல் வளைய வந்தவள்.
கல்யாணத்திற்கு பிறகு ஆதவன் முகம் பார்த்து மலரும் கமலம் போல வாழ்ந்திருந்தவளுக்கு தனாவின் இறுக்கம் எதற்கும் கலங்காமல் எப்பவும் முகத்தில் வாடா புன்னகையுடன் இருக்கும் எழிலை வாழ்வில் முதல்முறையாக கலக்கம் கொள்ளச் செய்தது.
இன்னும் விதி பின்னும் சதி வலை அறியும் போது எழில் அதிலிருந்து எப்படி மீண்டு வருவாள். தனாவை எப்படி மீட்பாள்…?

புள்ளி மேவாத மான் – 11 Read More »

2F92EEE1-11DB-414D-A57B-64682BFBFC0F

புள்ளி மேவாத மான் – 10

புள்ளி மேவாத மான் -10

தனா – எழில் வாழ்க்கையில் குழந்தை பாக்கியம் இல்லை என்ற குறையை தவிர அவர்கள் வாழ்க்கையில் அன்பிற்கோ காதலிற்கோ குறைவில்லாமல் நிறைவாக தான் சென்றது.
ஒரு நாள் இரவு தனா வெகு தாமதாக தான் வீடு வந்தான். வரும் போதே ரொம்ப சோர்வாக முகம் கவலையுடன் வந்தான். அவனைப் பார்த்துமே எழிலுக்கு பகீரென்றது.
பதறிப்போய் “என்னாச்சு மாமா… ஏன் இப்படி இருக்கறிங்க…”
ஒன்றுமில்லை என்பது போல தலையாட்டியவன் எதுவும் பேசாமல் சோபாவில் தலை சாய்த்து அமர்ந்து கொள்ள….
எழில் தான் என்ன செய்வது என தெரியாமல் விழித்தாள். அவனை ஒருநாளும் இப்படி பார்த்ததில்லை இவள்.
நேரம் தான் சென்று கொண்டு இருந்தது. எழில் சாப்பிட அழைத்தும் அவன் ஏதும் பேசவும் இல்லை சாப்பிட வரவும் இல்லை.
தோசை எடுத்து வந்து”மாமா சாப்பிடுங்க..” என ஊட்ட முயல…
“ப்ச்ச்… வேணாம் எழில். நீ போய் சாப்பிடு”
கெஞ்சி கெஞ்சியே இரண்டு தோசைகளை ஊட்டியவள் தானும் இரண்டு சாப்பிட்டு விட்டு வந்துப் பார்க்கும் போது கண்களை மூடி படுத்திருந்தான். ஆனால் புருவம் நெரித்து ஏதோ யோசனையில் இருக்க…… உறங்கவில்லை என்பதை பார்த்ததும் தெரிந்து கொண்டாள்.
எதுவும் பேசாமல் வழக்கம் போல் அவனருகில் அவனை அணைத்தாற் போல படுத்துக் கொண்டாள். அவனை பார்த்தவாறே படுத்திருந்தவளுக்கு என்னவென தெரியாமல்…. கேட்டு கஷ்டப்படுத்த விரும்பாமல்..… சொல்லவேண்டியதா இருந்தா அவங்களே சொல்வாங்க.… என தனக்குள்ளேயே மறுகிக் கொண்டிருந்தவள் கொஞ்ச நேரத்தில் அவள் தூங்கிவிட….. அவனுக்கு தான் தூக்கம் இல்லை.
அவனின் சிந்தனை முழுவதும் இன்று பூங்கொடி தந்தை சொன்ன விஷயங்களிலேயே..…
அவன் மில்லில் வேலையை முடித்துவிட்டு வீடு வந்து கொண்டு இருக்கும் போது …. பூங்கொடியின் தந்தை கோவிந்தன் பஸ்ஸிலிருந்து இறங்கி ஊருக்குள் செல்லும் சாலையில் சென்று கொண்டிருக்க…
தனா அவர் அருகில் வண்டியை நிறுத்தி “வாங்க மாமா நான் வீட்ல இறக்கிவிடறேன்”
எதுவும் பேசாமல் பைக்கில் பின்னால் அமர்ந்து கொண்டார். அவர் பேசாமல் வரவும் தனாவே தான் பேச்சுக் கொடுத்தான்.
“ஏங்க மாமா எங்க போயிட்டு வரிங்க”
“பூங்கொடிய பார்த்துட்டு வரிங்களா….”
“பூங்கொடி நல்லா இருக்கா..”
அவன் பூங்கொடியை பத்தி எதார்த்தமாக தான் கேட்டான். அவன் கேட்கவும் அவர் அழுக ஆரம்பித்து விட்டார்.
அவர் அழுகவும் பதறிப்போய் வண்டியை ஓரங்கட்டி நிறுத்த…. தலையில் அடித்துக்கொண்டு கதறியவாறே “நான் தப்பு பண்ணிட்டேன் மாப்புள்ள…. தப்பு பண்ணிட்டேன்…”
தனா பதறிக் கொண்டு “மாமா…. என்னாச்சு….. என்னனு சொல்லுங்க முதல்ல”
“என் வீம்பாலயும் வரட்டு கௌரவத்தாலயும் என் பொண்ணு வாழ்க்கையை நானே கெடுத்துட்டேன்”
“நான் என் பொண்ணை உனக்கு கொடுக்கக்கூடாதுனு பிடிவாதத்துல நல்லா விசாரிக்காம டவுன்ல படிச்சு வேலைல இருக்கானு ஒரு அயோக்கியனுக்கு கட்டிக் கொடுத்து என் பொண்ணு வாழ்க்கையை நானே சீரழிச்சிட்டேன்”
“கல்யாணம் பண்ணின புதுசுல நல்லா தான் இருந்தான். யாரோ நீயும் பூங்கொடியும் லவ் பண்ணினதை சொல்லிட்டாங்க போல அன்னைலருந்து சந்தேகப்பட்டு தினமும் குடிச்சிட்டு வந்து அடிச்சு சித்ரவதை பண்றான்”
“நான் ஆத்திரப்படாம உனக்கே என் பொண்ண கட்டி கொடுத்து இருந்தா உள்ளூர்லயே என் பொண்ணு என் கண் முன்னாடி சந்தோஷமா இருந்திருப்பா…”
தற்போது அவன் மனம் முழுவதும் எழிலே வியாபித்திருக்க எந்த இடத்திலும் பூங்கொடியின் சுவடுகள் இல்லை என்ற நிலையில் பூங்கொடியோடு இணைத்து பேசிய அவருடைய இந்த பேச்சு அவனுக்கு பிடிக்கவில்லை.
“நான் பண்ணின பாவம் தான் என் பொண்ணை சுழற்றி அடிக்குது. என்ன மன்னிச்சுடுப்பா..” என தனாவின் கைகளை பிடித்துக்கொண்டு அழுதார்.
அவரை எப்படியோ சமாதானம் செய்து வீட்டில் விட்டுட்டு வீடு வந்து சேர்ந்தான் அப்படி ஒரு நிலையில்….
தானாக தானே தேடிப் போய் காதல் சொன்னோம். ஆசையை வளர்த்து நம்பிக்கை கொடுத்து அதை காப்பாற்ற முடியாமல் ஒரு பொண்ணுக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டோம் என்று ஏற்கனவே இறுகி போய் இருந்தவனை எழிலின் காதல் தான் மீட்டது.
இப்போது இதை எல்லாம் கேட்டவுடன் ஒரு குற்றவுணர்வு வந்து மனதில் உட்கார்ந்து கொண்டது. அது பூங்கொடியை கல்யாணம் செய்து கொள்ள முடியாமல் போனதே என்றல்ல. காதல் என்ற பெயரில் ஒரு பெண்ணின் வாழ்க்கை கெட நான் காரணம் ஆகிவிட்டேன என்பது தான்.
படிப்பு முடிந்து வந்து ஆலை ஆரம்பித்த காலத்தில் கல்லூரிக்கு போய் கொண்டு இருந்த பூங்கொடி மேல் ஆசை கொண்டு இவனே தான் வழியப் போய் காதல் சொன்னான். கட்டிக் கொள்ளும் முறையும் இருக்க…. ஊரில் நல்ல படிப்பு படித்து பெரிய குடும்பத்து பையனாக…. நல்ல வாட்டசாட்டமாக அழகான இருக்கவும்…..அவளும் ஏற்றுக் கொண்டாள்.
அவள் கல்லூரிக்கு செல்லும் வழியில் பார்க்கப் பேச என இருக்க… அது அரசல் புரசலாக கோவிந்தன் காதிற்கு வர… ஏற்கனவே மாணிக்கவேலின் வளர்ச்சியும் செல்வாக்கும் பிடிக்காமல் பொறாமையில் இருந்த கோவிந்தன் பெண்ணின் காதலை முழு மனதாக எதிர்த்தார்.
மாணிக்கவேலும் லட்சுமியும் பெண் கேட்டு போக அவமானப்படுத்தி அனுப்பி விட்டு…. அவசர அவசரமாக பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செய்து வைத்தார்.
அந்த அவசர கல்யாணம் தான் இன்று அலங்கோலமாக நிற்கிறது.
எழிலின் காதலில் வாழும் தனாவுக்கு தான் காதல் என நினைத்து எல்லாம் காதலே இல்லை என ஏற்கனவே உணர்ந்திருந்தான்.
ஏதாவது செய்து பூங்கொடியின் வாழ்க்கையை சரி செய்திடவேண்டும் என அந்த நினைவிலேயே உழன்று கொண்டு இருந்தவனை எப்போதும் போல் எழில் தன் காதலால் அவனை தேற்றிக் கொண்டு இருந்தாள்.
தன் கணவனை ஏதோ மனதளவில் அரித்துக் கொண்டு இருக்கு என கண்டு கொண்டவள் அவனாக சொல்லும் வரை கேட்டு கஷ்டப்படுத்த விரும்பாமல் பசி தூக்கமின்றி தவித்தவனை நேரத்திற்கு பசியாற்றி…. மடி தாங்கி தூங்க வைத்து தாயாக மாறி போனாள்.
துவண்ட நேரத்தில் கேள்விகளற்ற எழிலின் அரவணைப்பு தனாவ ஓரளவு தேற்றி தெளிய வைத்திருக்க…. அடுத்து என்ன செய்யவேண்டும் என்று முடிவும் எடுத்திருந்தான். அதனால் இயல்பு நிலைக்கு திரும்பி இருந்தான் தனா.
அதற்குள் வெற்றியின் திருமணம் நெருங்கி விட அதில் பூங்கொடி பிரச்சினையை தள்ளி வைத்தான். சுந்தரம் சொன்னது போலவே எல்லா சுபகாரியங்களிலும் தனா எழிலை முன்னிறுத்தியே செய்ய…
ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ஒவ்வொரு விதமாக தன்னை அலங்கரித்து கொண்டு வளைய வந்த எழிலை காண காண தனாவின் காதல் மனம் விழித்துக் கொண்டது.
எழில் இருக்கும் இடத்தில் மகிழ்ச்சிக்கும் கலகலப்புக்கும் பஞ்சமா என்ன… திலகா தேவி கீர்த்தி என எல்லோரையும் கூட்டிக்கொண்டு பார்லர் போனாள்.
திலகா தேவி வயதின் காரணமாக மறுக்க…. திலகாவோ “வேணாம் அரசி… மாமாங்க இரண்டு பேரும் திட்டுவாங்க நீயும் கீர்த்தியும் செஞ்சுங்கோ”
“நான் பேசுறேன் மாமாகிட்ட…. சரினு சொல்லிட்டா நீங்க வரனும். ஓகேவா….”
“இந்த வயசுல எங்களுக்கு அதெல்லாம் நல்லா இருக்காது. வேணாம் அரசி” என தேவியும் சேர்ந்து கொள்ள…
“அத்தைஸ்…. நாம அழகா இருக்கோம் இல்லை அது வேற…. அதுக்காக அழுது வடிஞ்சிகிட்டு இருக்க முடியுமா….. இருக்கற அழக சூப்பரா மெயின்டென் பண்றோம். கல்யாணத்துல கெத்தா சுத்தறோம்” என்றாள் கலகலப்பாக….
பிறகு சுந்தரம் கண்ணனிடம் எழில் கேட்க அவர்களின் செல்ல மருமகள் கேட்டு இல்லனா சொல்லப் போறாங்க. சிரித்துக் கொண்டே சம்மதம் சொல்லவும் ஆவென வாயைப் பிளந்து பார்த்தனர் திலகாவும் தேவியும்.
வெற்றியின் வருங்கால மனைவி கனிமொழியையும் சேர்த்து கொண்டாள். பெண்களுக்கு மட்டும் ஒரு வாட்சப் குரூப் அதில் எந்த நேரமும் சாட்டிங் தான். புடவை அதன்கலர்க்கு ஆர்க்கிட் பூக்கள் தோதான ஜ்வல்ஸ் என எல்லோரையும் இணைத்தாள்.
கனிமொழிக்கும் திலகாவுக்கும் எழிலால் ஒரு ஒற்றுமை இழையோடியது.வெற்றி கனிக்கு போன் செய்யும் போது எல்லாம் அவள் போன் பிசியாகவே இருக்க…..
“எப்ப போன் பண்ணாலும் பிசியாவே இருக்க… நீயா பண்ணுவேனு பார்த்தா அதுவும் கிடையாது… என்ன தான் நினைச்சிகிட்டு இருக்க” கடுப்பில் காய்ச்ச…..
“நான் என்னங்க பண்ணட்டும். அத்தைங்க எழிலக்கா யாராவது பேசிட்டே இருக்காங்க. அதான் நைட் பேசறோம்ல அப்புறம் என்னங்க”
“நைட் பேசுவது எல்லாம் எனக்கு பத்தாது. எங்க அண்ணனும் அண்ணியும் கல்யாணத்துக்கு முன்னாடி ஓட்டுன ரொமான்ஸ் படத்துல பாதி கூட நாம இல்ல… நானே நொந்து போய் இருக்கேன். இவ வேற எரிச்சல் படுத்திகிட்டு….”
“சரி சரி கோபப்படாதிங்க என் புஜ்ஜீல்ல… செல்லம்ல்ல…” என கொஞ்சி தாஜா செய்து அவனை மலை இறக்கினாள். அவனும் சலுகையாக போனிலேயே சிலபல முத்தங்கள் கொடுத்து வாங்கிய பிறகே விட்டான்.
மாமியார் இரண்டு பேரையும் உள் வேலையை பார்க்க சொல்லிவிட்டு பெண்களுக்கான வெளி வேலைக்கு இவள் பொறுப்பில் ஏற்றுக் கொண்டாள். அதற்காக தினமும் கீர்த்தியை கூட்டிக்கொண்டு வெளியே சென்று வந்தாள். திருவு கருணாவும் இவர்களுக்கு டிரைவர் வேலை செய்தே நொந்து போனர்.
சுந்தரம் வீட்டிற்கும் தங்கள் வீட்டிற்கும் நடந்து கொண்டே இருந்தாள். இவளின் அலைச்சலைப் பார்த்து சுந்தரம் கூட தனாவிடம் கல்யாணம் முடியும் வரை இங்கேயே இருங்க என சொல்லிவிட…. எழில் எங்க அடங்குனா….
கொஞ்சம் நேரம் தனா தங்கள் வீட்டிற்கு வந்துட்டா கூட பின்னாடியே வந்துடுவா…. அவன் வெளியில் கிளம்பும் வரை இருப்பா….
பெரியவர்கள் கண்டு காணாமல் இருந்தாலும் இளசுகள் கேலி பேசியே ஒருவழியாக்கியது. அவள் அதை எல்லாம் சட்டை செய்யவே இல்லை. தனாவுக்கு தான் வெட்கமாகிவிட…..
எழிலின் அட்டகாத்தில் தனா “ஏன்டி புள்ளையார சுத்தற மாதிரி புருஷன சுத்திட்டு இருப்பியா… எந்நேரமும் என் பின்னாடி சுத்தாம போய் கல்யாண வேலையை பாருடி”
அவனின் நெஞ்சில் சாய்ந்து சட்டை பட்டனை திருகிக் கொண்டே”நான் என்ன பண்ணட்டும் மாமா நானே சும்மா இருந்தாலும் என் மனசு உங்க பின்னாடி தான வருது…. ம்ம்ம் என்ன பண்ணட்டும்.”என்றாள் பாவம் போல் முகத்தை வைத்து கொண்டு….
அவள் விளையாட்டாக சொன்னாலும் அது தானே உண்மை.
கல்யாண நாளும் வந்துவிட நிச்சயம் ரிசப்ஷன் முகூர்த்தம் என எழில் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒவ்வொரு மேக்கப்பில் மிளிர தனா தலைசுற்றி போனான்.
அவள சொல்லிட்டு இவன் தான் அவள் பின்னாடி சுத்திக்கிட்டு இருந்தான். அவளோடு ஒட்டிக்கொள்ள… உரசிக்கொள்ள… சடங்கு சம்பிரதாயங்களை சாக்கிட்டு கொண்டான். கேப் கிடைக்கும் போது எல்லாம் கெடா வெட்டிக்கோண்டு இருந்தான்.
நிச்சயம் முடிந்து வெற்றிமாறனும் கனிமொழியும் ரிசப்ஷனுக்காக நிற்க தனா எழில் திரு கீர்த்தி கருணா வசந்தி என எல்லோரும் மேடையில் வெற்றி கனியை கேலி செய்து கொண்டு இருக்க….
தனா கண்களால் எழிலிடம் காதல்மொழி பேச அதைப் பார்த்த கருணா “டேய் இங்க ஒருத்தன் தனி டிராக் ஓட்டிட்டு இருக்கான்டா டேய் திரு என்ன தான் சொல்லு உனக்கே கல்யாணம் பண்ணாலும் அப்பவும் இப்பவும் எப்பவும் உங்க அண்ணன் தான்டா காதல் மன்னன்”
அதை எல்லாம் அவன் காதிலேயே வாங்கவில்லை அவன் பார்வை முழுவதும் எழிலிடம் மட்டுமே. ரிசப்ஷன் முடிவில் பஸ்டர் வெடித்து கேக் வெட்டி வெற்றி கனிக்கு மாற்றி மாற்றி ஊட்டி ஒருவருக்கு ஒருவர் முகத்தில் பூசி என அந்த ரிசப்ஷன் கோலாகலமாக நடந்தது.
யாரும் அறியாமல் தனா கேக் சாப்பிட்டு கொண்டு இருந்த எழிலை மேடைக்கு பின்புறம் தள்ளி கொண்டு போனவன் தன்கையில் இருந்த கேக்கை அவளுக்கு ஊட்டிவிட்டான்.
விழுங்கும் முன் அவளை இழுத்து வாயோடு வாய் பொருத்தி அவள் வாயிலிருந்த கேக்கை தன் வாய்க்கு இடம் மாற்றி இருந்தான்.
நாக்கை சுழற்றி சப்பு கொட்டி சாப்பிடவாறே “கேக் செம்ம டேஸ்ட் இல்லடி”என்று கண்ணடித்தான்.
“ஓஓஹோஹோ….ஓ” என பின்னால் இருந்து இளைய பட்டாளத்தின் கூச்சல்.
ஒரே வெட்கமாகிவிட எழில் தனா முதுகின் பின் மறைந்து கொண்டாள்.
மேடையில் மைக் பிடித்து பேசும் பாவனையில் கருணா “சத்தியமாக உண்மையாக நிச்சயமாக இங்கு நடந்தது எதுவும் நாங்க பார்க்கவில்லை…. பார்க்கவில்லை. நம்பனும் யுவர்ஆனர்”
கருணாவின் மனைவி வசந்தி “எங்க அண்ணன் ஹுரோ. ஹீரோ எப்படி இருக்கனுமோ அப்படி இருக்காரு அதுல உங்களுக்கு என்ன பொறாமை. நீங்க ஒரு காமெடி பீஸ் தான். உங்களுக்கு இதெல்லாம் செட்டாகாது”
திரு “மாமா…. அக்கா சும்மா…..கிழி கிழினு கிழிச்சிடுச்சுல. உன் இமேஜ் டோட்டல் டேமேஜ்”
கருணா தலையை தொங்க போட்டு கொள்ள எல்லோரும் சத்தமாக சிரிக்க இவர்களின் கலகல பேச்சில் எழில் சகஜமாகி விட எல்லோரும் சாப்பிட சென்றனர்.
முகூர்த்த நேரத்திலும் எழில் எல்லா வேலைகளையும் எடுத்து கட்டி செய்ய வழக்கம் போல் தனா சைட் அடிக்கும் வேலையை செய்ய…
மங்கள வாத்தியங்கள் முழங்க சுற்றமும் நட்பும் சூழ வெற்றிமாறன் கனிமொழி கழுத்தில் தாலி கட்டி தன் மனைவி ஆக்கிக் கொண்டான்.
எல்லா சடங்கு சம்பிரதாயங்கள் முடிந்து மணமக்களை வீட்டிற்கு அழைத்து வரும் வரை எழில் ஓயவில்லை. தன் மனகவலைகளை மறந்து ரொம்ப உற்சாகமாகவே எல்லாம் செய்தாள். அது தான் அவள் இயல்பும் கூட.
ஊரார் பேச்சிற்கு பயந்து முதலில் தயங்கினாலும் தன் குடும்பத்தாரின் ஆதரவில் மிகவும் உற்சாகத்துடன் எல்லாம் செய்தாள்.
அனைவருக்கும் இவள் உற்சாகம் தொற்றிக் கொள்ள அந்த குடும்பத்தில் ஆனந்தம் ஆனந்தமே…

தன்னுள் பிரவாகமாக
ஊற்றெடுக்கும்அன்பை
அன்பால் நிரப்பி
தன் சூழ் உலகை இனிதே
இனிமையாக்கினாள்
இனியவள்!

புள்ளி மேவாத மான் – 10 Read More »

error: Content is protected !!
Scroll to Top