ATM Tamil Romantic Novels

தொடர் கதை

Photo-20240402-144052-S-993x1291

23 ஆசை வெட்கமறியாது

26 ஆசை   “முகரக்கட்ட” இன்னும் லோ கிளாஸ் கெட்டவார்த்தை நாலு சேர்த்து போட்டு பல்லைக்கடிச்சு வாய்க்குள் திட்டோ திட்டு விஜி செல்வாவுக்கு..   “அஸீ சட்டைய கொத்தா பிடிச்சு என் பொண்டாட்டிய எப்டி கூட்டிட்டு போவேன் சொல்லுவ? மூஞ்ச பேக்க  வேணாம்.. என்னத்த லவ் பண்ணான் இவன்லாம்.. தடிமாடு.. மேலே ஏறி படுத்து மூச்சு மூட்ட வச்சு சாகடிக்க மட்டும் உடம்பு வளர்த்து வச்சுருக்கான் மலை மாடு…”   அஸீயிடம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தியவள் செல்வாவிடம்  […]

23 ஆசை வெட்கமறியாது Read More »

Photo-20240402-144052-S-993x1291

22 ஆசை வெட்கமறியாது

22 ஆசை வெட்கமறியாது   செல்வா உடற்பயிற்சி செய்ய சீக்கிரம் எழுவான்..விஜி படிக்க எழுவாள்.. அதனால் இருவருக்கும் வழமை போல ஒரே நேரம் விழிப்பு வர,    அப்பொழுதுதான் கண்ணசந்த தம்பதியர் இருவரும் காதல் மதுவுண்ட போதையில் மயங்கி கிடக்க.. எழணுமா? சோம்பேறியா நெளிய முட்டிக்கொண்டனர்.. பின் அசடும் வழிந்தனர்..   விஜிக்கும் செல்வாக்கும் இது சுக இத காலை..   விஜி, “குட்மார்னிங் ம்ம்ம்ம்”.. என்று மோகனமாய் லேசா செல்வாவை இடிக்காது நெளிக்க.. அதில் அவளின்

22 ஆசை வெட்கமறியாது Read More »

871E8D70-CA19-43D1-9B90-81BAB6FE1597

புள்ளி மேவாத மான் -25 இறுதி பகுதி

25 – புள்ளி மேவாத மான்

தனா சொல்லாமலேயே அவன் மனதை படித்தவள் சந்தோஷமாக காரில் ஏறி தன் தாய் வீட்டிற்கு சென்றாள். எழிலை அனுப்பி விட்டு சோககீதம் வாசிப்பான். இவனை எப்படி சமாளிக்க என எல்லோரும் கவலைப்பட…
தனாவோ முகம் கொள்ளா சிரிப்புடன் வீட்டினுள் வந்தான். மனைவியை அனுப்பி விட்டு இவன் என்ன இவ்வளவு சந்தோஷமா வரான் பைத்தியம் பிடிச்சிருச்சோ என மொத்த குடும்பமும் அவனையே பார்த்திருந்தனர்.
எல்லோரையும் பார்த்து என்ன என்பதாக புருவம் உயர்த்தி கேட்க…ஒன்றும் இல்லை என அனைவரின் தலையும் ஆடியது.
எப்படியோ கவலை இல்லாமல் இருக்கான் என நினைத்து கொண்டு அவரவர் வேலையை கவனிக்க சென்றுவிட்டனர்.
தாய் வீட்டிற்கு சென்ற எழில் இரவு உணவை முடித்துக்கொண்டு படுக்கப் போகும் முன்
“டேய் அண்ணா இராத்திரில எப்ப வேணாலும் காலிங்பெல் அடிக்கும் எழுந்து திறக்க ரெடியா இரு”என சொல்லி படுக்க சென்றுவிட்டாள்.
இவள் என்ன சொல்லுகிறாள் மூவரும் யோசிக்க.. கற்பகத்திற்கு தெரிந்து விட்டது மகள் சொன்னதின் அர்த்தம். மகளின் மீதான மருமகனின் அன்பை நினைத்து ஒரு தாயாக பெரும் உவகை கொண்டார்.
தனாவோ இன்றே போக வேண்டுமா.. போனால் மாமனார் வேற முறைப்பார். தெரிந்தா இவனுங்க வேற ஓட்டியே கொல்லுவானுங்க நாளைக்கு போகலாம் என யோசித்து தூங்க போனான்.
ஆனால் மனைவியின் அணைப்பும் பாப்புகுட்டியின் ஸ்பரிசமும் இல்லாமல் ஒன்றும் முடியவில்லை. தினமும் தூக்கம் வரும் வரை பாப்புகுட்டியிடம் பேசுபவனுக்கு பேச ஆளில்லாத தனிமையும்.. யாரும் இல்லாத வீடும்.. என்னவோ வெறிச்சோடி போய் இருக்க.. அதுவே ஒரு அழுத்தத்தை கொடுத்தது.
தூங்க முயற்சித்து வெகு நேரம் புரண்டு படுத்தவன் இனி இது வேலைக்கு ஆகாது என கிளம்பிவிட்டான் மாமனார் வீட்டுக்கு..
தனா வந்து பெல் அடிக்க.. தமிழரசன் கீர்த்தியை நினைத்து வெகு நேரம் உறக்கம் வராமல்.. அப்போது தான் உறங்கி இருக்க.. முத்துக்குமார் எழுந்து மணியைப் பார்க்க.. மணி பன்னிரண்டு..
எழுந்து வந்து கதவை திறந்தவர் சற்றும் மருமகனை எதிர்பார்க்கவில்லை. மாமனாரின் முகத்தை பார்த்தவன் சற்றே அசடு வழிந்து தலையை கோதிக் கொண்டு முகத்தை திருப்பி வேறுபுறம் பார்த்தவாறு நின்றான்.
ஒன்றும் சொல்லாமல் விலகி நின்று வழிவிட்டார். உள்ளே சென்றவன் மாமனார் ஏதும் சொல்லாததிலேயே.. நிம்மதி கொண்டவனாக “ஊப்”என பெருமூச்சு விட்டான்.
எழிலின் அறைக்கு வந்தவன் அன்றைய விழாவின் களைப்பில் நன்றாக தூங்கி கொண்டு இருந்த எழிலை அணைத்து கொண்டு படுக்க..அந்த உறக்கத்திலும் கணவனின் அருகாமையை உணர்ந்தவள்
“வந்துட்டிங்களா” என கண்களை திறக்காமலேயே சோபையாக சிரித்து விட்டு மீண்டும் உறக்கத்திற்கு சென்றுவிட்டாள்.
ஆனால் அவன் பாப்புகுட்டி தந்தைக்காக விழித்திருந்ததோ என்னவோ.. அவனின் கைகளில் அசைந்தது.
“பாப்புகுட்டி இன்னும் தூங்கலையா நீங்க…
அப்பா இப்ப சொல்லறத நல்லா கேளுங்க..அம்மாவை கஷ்டப்படுத்தாம வந்திடுங்க..அம்மா கஷ்டப்பட்டா அப்பாவால தாங்க முடியாது பாப்புகுட்டி”என்றான் கொஞ்சம் வருத்தமாக..
தந்தையை சமாதானம் பண்ணியது பாப்புகுட்டி தன் வழக்கமான பாணியில்..
கதவை பூட்டி விட்டு அறைக்கு வந்த முத்துக்குமாரிடம் கற்பகம்
“யாருங்க.. மாப்பிள்ளையா..”என்று கற்பகம் கேட்க.. ஆச்சரியமாக பார்த்தவர்
“உனக்கு மாப்பிள்ளை வருவாருனு தெரியுமா..”
“ஏன் தெரியாம என்ன.. உங்க மக மேல வச்சு இருக்கிற அன்புக்கு வராம இருந்தா தான் ஆச்சரியம். உங்க மக வச்சது தானே சட்டம். அவ பேச்சை மீறமாட்டாரு..அவள விட்டு இருக்கமாட்டாரு..” என மருமகன் புகழ் பாட..
முத்துக்குமாருக்கு மருமகன் மேல கொஞ்சமே கொஞ்சம் கோபம் போயி.. துளியிலும் துளி பாசம் வந்தது.
தினமும் காலையில் பேக்டரிக்கு செல்பவன் இரவானதும் மனைவியிடம் வந்துவிடுவான். தினமும் தன் பாப்புக்குட்டியிடம் அம்மாவ கஷ்டப்படுத்தாம வந்திடுங்க என்று சொல்லிக் கொண்டே இருந்தான்.
ஒரு நாள் தனா பேக்டரிக்கு சென்ற சிறிது நேரத்திலேயே எழிலுக்கு பிரசவவலி வந்திட… அன்று காலையில் எழுந்ததில் இருந்தே மனதிற்குள் ஏதோ உணர்வு தனாவிற்கு. பேக்டரிக்கு போக வேணாம் என நினைத்தவனை எழில் தான் கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்தாள்.
முத்துக்குமார் வீட்டிலேயே இருக்க.. தனாவிற்கு போன் பண்ணி சொல்லிவிட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
போன் வரவும் பதட்டத்துடன் வந்தான். அவன் வருவதற்குள் எழிலை லேபர்வார்டுக்கு கூட்டி சென்றிருந்தனர்.தனா டாக்டரிடம் மனைவியின் அருகில் இருக்க அனுமதி வாங்கி கொண்டு உள்ளே சென்றான்.
எழிலைப் பார்த்ததும்”ரொம்ப வலிக்குதாடி..நான் தான் இன்னைக்கு உன் கூடவே இருக்கேன் பேக்டரிக்கு போகலைனு சொன்னே கேட்டியா..” என லேசாக கடிந்து கொள்ள…
தனாவின் கையை பிடித்துக்கொண்டு “மாமா ஒன்னும் இல்லை இப்ப தான் வலி ஆரம்பிச்சிருக்கு..”
“நான் அடிச்சு பிடிச்சு ஓடி வந்தேன். ரொம்ப கஷ்டப்படறியோனு டென்ஷன் வேற..”
“பயமா இருக்காடி.. பயப்படாத நம்ம பாப்புகுட்டி உன்னைய கஷ்டப்படுத்த மாட்டாங்க..” என அவளின் கையை பிடித்து ஆதரவாக தட்டி கொடுத்து தலை கோதி தடவி கொடுத்து அவளுக்கு தைரியம் கொடுத்து கொண்டு இருந்தான்.
கொஞ்சம் கொஞ்சமாக வலி அதிகரிக்க.. எழில் வலியிலும் பயத்திலும் வியர்வை கொட்டி முகம் வெளிறி உடல் நடுங்க.. என பிரசவ வேதனையில்..
தனாவிற்கு அவள் படும்பாட்டை பார்க்க தானாகவே கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.
டாக்டர் “குழந்தை சிரசு இன்னும் திரும்பவில்லை. சிறிது நேரம் பாராக்கலாம். இல்லையென்றால் சிசேரியன் தான் பண்ணனும்” என்றிட..
தனா உடனே எழில் வயிற்றில் கைவைத்து
“பாப்புகுட்டி அம்மா பாவம்டா.. சிரமப்படுத்தாம வந்திருங்கடா..”என கெஞ்ச..
தனா சொன்னதும் எழிலுக்கு உயிர் போகும் அளவிற்கு ஒரு வலி ஏற்பட.. இரண்டு நிமிடங்களில் குழந்தை தாய்க்கு கொடுத்த சிரமம் போதும் என்றோ.. இல்லை தந்தை சொல் கேட்டோ.. உலகை பார்க்க வந்துவிட்டது. தனாவின் பாப்புகுட்டி…அவன் வீட்டு மகாலட்சுமியின் ஜனனம்.
எழில் களைப்பில் லேசான மயக்கத்தோடு … தனா அவள் களைந்திருந்த தலைமுடியை ஒதுக்கி விட்டு வியர்த்திருந்த அவள் முகத்தை தன் வேட்டியால் துடைத்துவிட்டு நெற்றியில் அழுத்தமாக ஒரு முத்தம் வைத்தான்.
கணவனின் முத்தத்தில் களைப்பை மீறிய முறுவலுடன் கணவனை பார்க்க… தனாவிற்கோ சோபையான முறுவலோடு மனையாளின் முகத்தை பார்க்க பார்க்க காதல் கூடி தான் போனது. மீண்டும் நெற்றி கன்னம் என முத்தம் வைக்க..
டாக்டர் அடுத்து அவனின் எண்ணம் அறிந்தவர் போல..
“தனா கொஞ்சம் வெளியில் இருங்க.. பேபிய கொஞ்ச நேரத்தில் கொண்டு வந்து தரோம்”
டாக்டரை முறைத்துக் கொண்டே வெளியேறினான்.
குழந்தையை நர்ஸ் கொண்டு வந்து கொடுக்க.. சுந்தரம் கண்ணன் திலகா தேவி முத்துக்குமார் கற்பகம் எல்லோரும் இருக்க..
தன் பாப்புக்குட்டிய தானே முதலில் கையில் ஏந்த வேண்டும் என்ற ஆசையில் அனைவருக்கும் முன்பு சென்று வாங்கினான்.
ரோஜா நிறத்தில் பட்டு போல மென்மையாக இருந்த குழந்தையை நெஞ்சோடு அணைத்து அதன் கையை பூவை பற்றுவது போல பற்றி அதன் விரலில் மெல்ல முத்தம் வைத்தான் தனா. உடலை நெளிந்து லேசாக வாய் கோணி கொட்டாவி விட்டு கண்களை சிமிட்டி சிமிட்டி பார்த்த பாப்புகுட்டியின் அழகில் சொக்கி போனான் தனா.
வீட்டிற்கு அடுத்த தலைமுறையின் முதல் வரவு.. மூத்தவாரிசு அதுவும் பெண் குழந்தையாக இருக்க.. வீட்டுக்கு மகாலட்சுமி.. அதுவுன தனாவின் அம்மா லட்சுமியே வந்து பிறந்தாக எண்ணி கொண்டாடி மகிழ்ந்தனர்.
பதினொரு மாதங்கள் கடந்த நிலையில் தனஞ்ஜெயன் எழிலரசியின் மகள் அன்பரசிக்கு வீட்டில் காது குத்து விழா.
தனா மகளுக்கு அன்பரசி என்று பெயர் வைத்திருந்தான். ஆனால் எப்பவும் அவனுக்கு பாப்புகுட்டி தான்.
எப்பவும் போல யாரையும் விடாமல் இவனே எல்லா ஏற்பாடுகளையும் செய்ய…வழக்கம் போல ஆண்களின் வசவையும் வயிற்று எரிச்சலையும் சிரித்தபடியே சமாளித்தான்.
அதுகூட பெண்களுக்கு எழில் மீதான காதலாக தெரிய.. அதுவும் ஆண்களை கடுப்பாக்கியது.
குலதெய்வ கோயிலில் காலையில் தமிழரசன் மடியில் அமர வைத்து மொட்டை அடித்திருந்தனர். மதிய விருந்துக்கு அசைவ சமையல் தடபுடலாக தயராகிக் கொண்டு இருக்க…வீட்டிலேயே காது குத்து விழா.
காது குத்தும் நேரம் மகளின் அருகில் வந்துவிட்டான் தனா. அதுவரை தன் தாத்தா முத்துக்குமாரிடம் இருந்த அன்பரசி தந்தையை பார்த்ததும் தாத்தாவிடம் இருந்து தாவிக் கொண்டு தந்தையிடம் வந்தது.
முத்துக்குமாருக்கோ உடனே முகம் மாறிவிட்டது. என் மகளைபோலவே என் பேத்தியையும் மயக்கி வச்சிருக்கான்.என மனதோடு நொடித்து கொண்டார்.
மாமனாரின் முகத்தை கொண்டே அவரின் எண்ணப்போக்கை கண்டு கொண்டவன் உதட்டை கடித்து நமுட்டு சிரிப்பு சிரித்தான்.அதை கண்ட முத்துக்குமார் முகத்தை திருப்பி கொண்டார்.
எழில் தனாவின் அருகில் வந்து அன்பரசியை வாங்கி கொண்டு தனாவை முறைத்தாள்.
“ஏன்டி மாமன் அவ்வளவு அழகாவா இருக்கேன். இப்படி பாசமா பார்த்து வைக்கற” என்றான் நக்கலாக..
அவன் பேச்சில் உக்கிரமாக முறைத்து “ஏன் மாமா எப்ப பாரு எங்க அப்பாவ சீண்டிக்கிட்டே இருக்கறிங்க.. பாவம் மனுசன் ஒரு நல்லநாள் கூட அவர நிம்மதியா இருக்க விடறிங்களா..”என்றாள்.
“இதென்னடி வம்பா இருக்கு.. எப்ப பாரு அவரு தான் என்னய முறைக்கறாரு.. நான் எதுவும் பண்றதில்ல..”என்றான் அப்பாவியாக..
“எல்லாம் பண்ணிட்டு பச்சபுள்ள மாதிரி முகத்தை வச்சிக்கிறது. இராத்திரிக்கு எழிலு எழிலுனுட்டு கிட்ட வருவிங்கல்ல அப்ப வச்சுக்கிறேன் உங்களை”
“எப்படி வச்சுக்குவ”என்றான் அவளை மேலிருந்து கீழே வரை விழுங்குவதை போல பார்த்து கொண்டு…
“ச்சீ பேச்சப் பாரு”என கழுத்தை நொடித்து கொண்டு அன்பரசியோடுஉள்ளே சென்றுவிட்டாள்.
குழந்தை பிறந்த பிறகு சற்று பூசிய உடல்வாகுடன் இன்னும் கொஞ்சம் அழகு கூடிப் போய் இருந்த மனைவியை சைட் அடித்து கொண்டே அவள் பின்னால் சென்றான்.
உறவினர்கள் கூடியிருக்க.. நடுவீட்டில் ஜமுக்காளம் விரித்திருக்க..அதில் நடுநாயகமாக தழிரசன் அமர்ந்திருக்க.. சுற்றிலும் இரு குடும்பத்தாரும் இருந்தனர். அதிலும் கீர்த்தி தமிழரசனின் அருகிலேயே அமர்ந்து இருந்தாள்.
எழிலின் வளைகாப்பு முடிந்து சில தினங்கள் கழித்து கீர்த்தியை விரும்புவதை தனது குடும்பத்திலும் தனாவிடமும் சொல்லிவிட்டான்.
தனா அதை சுந்தரத்திடம் சொல்லி சம்மதம் வாங்கினான். முத்துக்குமாரும் பொண்ணு கேட்டு வர நிச்சயம் செய்துவிட்டனர். ஆனால் ஒரு வருடம் கழித்து தான் கல்யாணம் என்பதில் இருகுடும்பமும் ஏகமனதாக முடிவு செய்தனர். எழில் பிள்ளைபேறு முடிந்து தாயும் சேயும் தேறி வரனும் என காரணம் சொன்னனர்.
தமிழரசனுக்கோ என்ன தான் தங்கைகாக என்றாலும்.. ரொம்பவே ஏமாற்றம் தான். இருந்த போதும் போனிலேயும் நேரிலேயும் காதலை வளர்த்தான்.
இப்போது கூட தள்ளி அமர்ந்திருந்த கீர்த்தியை கண்களாலேயே மிரட்டல் விடுத்து தன் அருகே உட்கார வைத்திருந்தான்.
இளசுகள் தனாவை ஓட்டுவது போல இப்ப எல்லாம் தமிழரசனையும் செய்தனர்.அதுக்கு தமிழரசனோ “நான் யாரோட மச்சான்” என கெத்து காட்டுவான்.
தமிழரசனின் மடியில் அமர வைத்து காது குத்த.. வலியில் சொப்பு வாயை திறந்து கத்த ஆரம்பித்ததும்
“பாப்புகுட்டி அப்பாவ பாருங்க அழகூடாது” என தனா கன்னம் தட்டி சொல்லவும் அழுகையை அடக்கி உதடு பிதுக்கி தேம்பியது அன்பரசி. வாஞ்சையோடு அள்ளி எடுத்து மகளை தன் நெஞ்சில் சாய்த்து தட்டி கொடுத்தான்.
தந்தையின் கழுத்தை கட்டி கொண்டு எளிதில் சமாதானம் ஆகி சிரிக்க தொடங்கிவிட்டது. இதை பார்த்த எழிலுக்கோ கொஞ்சம் பொறாமையாக இருந்தது. எப்பவும் தனாவின் அன்பிற்கு இருவருமே போட்டி போடுவர்.
விருந்து எல்லாம் முடிந்து உறவினர்கள் எல்லாம் சென்று இருக்க.. குடும்பத்தினர் மட்டும் இரவு உணவை முடித்து கொண்டு சென்றனர். எல்லோரையும் அனுப்பி விட்டு கதவை பூட்டி விட்டு எழில் தந்கள் அறைக்கு வர…
தனா மகளை நெஞ்சில் போட்டு தட்டி கொடுத்து கொண்டு இருந்தான். பாப்புகுட்டி எல்லோரும் எடுத்து கொஞ்ச என கொஞ்சம் துவண்டு போயிருந்தாள். அதனால் தூக்கம் வராமல் தந்தையின் நெஞ்சில் முகத்தை பிரட்டி பிரட்டி தூங்க முயற்ச்சித்து கொண்டு இருந்தது.
இதை பார்த்த எழிலோ தனாவை முறைத்துக் கொண்டே தன் இடத்தில் சென்று படுத்துக் கொண்டாள். மகள் வந்த பிறகு தன்னை கண்டு கொள்வதில்லை என எழிலுக்கு ஒரு எண்ணம். அதனால் இப்படி அப்பப்ப தனாவை முறைத்துக் கொண்டு திரிவாள்.
மகளை தூங்க வைத்து அவளுக்காக தனா கேரளாவில் இருந்து பிரத்யேகமாக சின்ன தேக்கு கட்டில் சுற்றியும் அழகான மரவேலைப்பாடு செய்த தடுப்புகளுடன் கூடிய கட்டில் சொல்லி வரவழைத்திருந்தான். அதில் உறக்கம் கலையாதவாறு படுக்க வைத்து விட்டு மனைவியின் அருகே வந்து அவளை பின்புறமாக அணைத்தான்.
அவனை வெடுக்கென்று தள்ளிவிட்டாள்.அவனும் விடாப்பிடியாக அவளை கோழி அமுக்குவது போல மொத்தமாக அவளை இழுத்து அணைக்க…
“இப்ப எல்லாம் உன்னை கட்டிப்பிடிக்க இரண்டு கை பத்தமாட்டிங்குதுடி” என வேண்டும் என்றே சீண்ட..
அவனிடம் இருந்து விடுபட திமிறிக்கொண்டு இருந்தவள் அவனின் பேச்சில் கோபமாக…
“நான் என்ன அவ்வளவு குண்டாவா இருக்கேன்.. எப்ப பாரு இப்படியே சொல்றது”என அவனை அடிக்க..
அவளின் அடித்த கைகளை லாவமாகப் பற்றி அவளை நெருங்கி இதழோடு இதழ் சேர்த்தான். அவனிடம் இருந்து விலக எத்தனித்தவள் மெல்ல மெல்ல தன் மாமனின் காதலிலும் ஆளுமையிலும் கரைந்து கொண்டு இருந்தாள்.
அங்கே பாப்புகுட்டி உறக்கம் கலையாதவாறு சத்தமில்லாத சிணுங்கல் ஒலியும் காதல் அரங்கேற்றமும் நடந்து கொண்டு இருந்தது.
இரண்டு வருடங்கள் கடந்த நிலையில்..
அன்பரசி எழிலின் போனில் இருந்து தனாவிற்கு அழைத்தது.
“சொல்லுங்க பாப்புகுட்டி”
“அப்பா.. அம்மா சூஸ் குடிச்சு.. ஓ.. ஓனு ஒரே வாமிட் ப்பா.. டையர்டா.. படுத்தாங்க” என்றதும்..
“அப்பா இப்ப வரேன் பாப்புகுட்டி. அம்மாவ பார்த்துங்கங்க”என்று சொல்லி உடனே கிளம்பிவிட்டான்.
தனா வீட்டுக்கு வந்த போது அன்பரசி எழிலின் அருகில் அமர்ந்து தன் கவுன் கொண்டு எழிலின் முகத்தை துடைத்து கொண்டிருந்தது. வேகமாக எழிலின் அருகில் வந்தவன் காலை மடக்கி அமர்ந்து எழிலை மடி தாங்கி கொண்டான்.
எழில் கர்ப்பம் மூன்று மாதங்கள் ஆகியிருந்தது. எப்பவும் போல யாரையும் விடாமல் தானே எழிலை தாங்கினான். இப்போது அப்பாவிற்கு துணையாக அன்பரசியும் சேர்ந்து கொண்டது.
தனா என்ன சொன்னாலும் அடி பிசகாமல் செய்யும் அன்பரசி. ஜீஸ் எடுத்து வைத்து விட்டு அம்மாவுக்கு கொடுங்க என தனா அன்பரசியிடம் சொல்லி சென்று இருக்க..
தந்தை சொல் தட்டாமல் அதுவும் எழில் மறுக்க.. மறுக்க.. குடிக்க வைத்துவிட்டது. வயிற்றை பிரட்டி குடித்ததை விட இரண்டு மடங்கு வெளியே வந்துவிட்டது. சோர்ந்து போய் படுக்கவும் தனாவை அழைத்து விட்டது.
தனா வழக்கம் போல் இந்த குழந்தையிடமும் பேசினான்.
“ராசுக்குட்டி அம்மாவ கஷ்டப்படுத்தாதிங்கடா”என்க
அன்பரசியும் “அப்பா நானு.. நானு..”என எழிலின் வயிற்றில் கை வைத்து
“தம்பி ராசுக்குட்டி அம்மா பாவம் சமத்தா இருக்கனும்.. ம்ம்”என்றது.
தனா மகளின் செய்கையை புன்சிரிப்போடு பார்த்து கொண்டு இருந்தான். எழிலோ எப்பவும் போல தனாவை கண்ணில் காதல் வழிய ரசித்து கொண்டு இருந்தாள்.
தனாவின் வறட்சியான வாழ்க்கையில் வசந்தமாக வந்து தன் காதல்கொண்டு அவனை ஆட்சி செய்து கொண்டு இருக்கிறாள் எழிலரசி.
எழிலின் ஆழிக்காதலில் விரும்பியே தன்னை தொலைத்து கொண்டவன் அளப்பற்கரிய பதில் காதலை செலுத்தி எழில்தாசன் என்னும பட்டத்தை விரும்பியே ஏற்றுக் கொண்டான்.
இவர்களின் காதலால் இவர்கள் வாழ்க்கை அழகான நீரோட்டம் போல செல்லும்.

கண்பாராமல் செவி வழியே
கரை காணாத காதல் கொண்டு
பிருந்தாவன கண்ணன் மேல்
பித்தாகி போனாள் மீரா

கண்விழி அல்லாமல்
கேள்வி ஞானம் கொண்டு
குறிஞ்சி நில கடவுளின் மேல்
புள்ளி மேயா(வா)த மான்
தீரா காதல் கொண்டாள்
குறிஞ்சிமலை மகள் வள்ளி

அன்பில் எழில் வடிவமானவள்
தன் மனம் நிறைந்த மன்னவன் மேல்
தணியாத காதல் கொண்டாள்
தனஞ்ஜெயனின் வாழ்வரசி
புள்ளி மேவாத மான் எழிலரசி

வாழ்க வளமுடன்

புள்ளி மேவாத மான் -25 இறுதி பகுதி Read More »

Photo-20240402-144052-S-993x1291

21 ஆசை வெட்கமறியாது

21       இருக்காது போன்று ஏதோ சொல்ல வாயெடுத்த விஜியை.. உதட்டில் முத்தமிட்டு நிறுத்தி..   நீ காட்டிய பொழுது எனக்கு கண்ணீர் தான் வந்தது.. தாயில்லா பெண் குழந்தை என்று என் கண்ணம்மா.. மொச்சு மொச்சு வென்று முகமெங்கும் செல்வா முத்தமிட.. உப்பு கரித்தது சுவை..   என்னடா ஏன்? பதறிவிட்டான் செல்வா..   சாரி தப்பா நினைச்சுட்டேன் உன்னை.. வெரி சாரி செல்லு..   ப்ச் விடு விடு நானும் இப்படி

21 ஆசை வெட்கமறியாது Read More »

Photo-20240402-144052-S-993x1291

20 ஆசை வெட்கமறியாது

20.2 ஆசை   நம்பவே மாட்டேன் போடா போடான்னு ரொம்ப வெறி பிடிச்ச யட்சிணி போல அவனை உதைச்சி கிள்ளி கடித்து காதலோடு ஊடல் விஜி.. அவன் சொல்வதை அவளால் ஏற்க முடில..   நீ ஏன் பெரிய விஷயமா எடுத்துக்கிற.. விவரம் இல்லாதப்போ நடந்ததை இப்போ போட்டு பிரட்டாதே   டேய் தடியா என்னை சொல்ற நீ அதுதான் காண்டாவுது.. முறைத்தாள் விஜி..   விஜியின் காது மடலை தன் நாவால் நீவி முத்தமிட்டு கோவம்

20 ஆசை வெட்கமறியாது Read More »

4 சில்லுன்னு ஒருவிவாகரத்து

4 ஜில்லு   ஸ்ரீ.. புது பெண்ணுக்கு ட்ரெஸ் கோட் சொல்லலயா?   அவங்க போர்த் பிளேஸ்ல இருந்ததால் சொல்லல.. ஸ்ரீனி நெளிந்தான்.   பேன்ட் ஷர்ட் ஹை ஹீல்ஸ் அல்லது புஷ் ஷர்ட் லாங் ஸ்கர்ட்  அதெல்லாம் படிச்சி படிச்சி சொல்லியாச்சு. லியா  டிசைனர் சுடிதார் போட்டு மயிலாய் வருவாளே தவிர வெஸ்டர்ன் கிட்டே போக மாட்டா. ஏனோ சட்டத்திட்டதுக்கு அடங்கல.   இனி சொல்லிடுங்க.. இன்னைக்கு ஷெட்யுல்?   ஸ்ரீனி நோட் எடுக்க..  

4 சில்லுன்னு ஒருவிவாகரத்து Read More »

5084B066-540D-4AC3-A08E-4D1B268ABF71

புள்ளி மேவாத மான் – 24

24- புள்ளி மேவாத மான்

இதோ வெகு விமரிசையாக ஊரையே அழைத்து எழிலுக்கு வளைகாப்பு நடத்தி கொண்டு இருந்தான் தனா. மண்டபம் பார்த்து வைக்கலாம் என வீட்டார் சொல்ல வேண்டாம் என மறுத்து வீட்டிலேயே வைத்து கொண்டான். அவனிற்கு அவன் பெற்றோர் வாழ்ந்த வீட்டிலேயே தன் வாரிசின் வரவுக்கான விழா நடை பெறவேண்டும் என நினைத்தான்.அவன் சொன்னது போலேவே ஒன்பதாம் மாதம் தான்.
தனக்கு இருக்கும் ஒரே உறவு அவள் தான்.அதுவும் தன் காதல் மனைவி. தன் வாழ்க்கையில் விடிவெள்ளியாக வந்து வாழ்வை பிரகாசமாக்கினாள் என்றால் .. மண்ணில் உதிக்கும் முன்பே தந்தை மீதான அளப்பற்கரிய பாசம் கொண்ட அவனுடைய பாப்புகுட்டியின் வருகையை உலகுக்கு பறை சாற்றும் விழா. இவர்களுக்கான விழா கொண்டாடி மகிழ்ந்தான்.
மனம் நிறைந்த ஆசைகளோடு ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தான். முத்துக்குமார் தன் செல்லமகளுக்காக செய்ய மிகவும் ஆசைப்பட்டார். ஆனால் தனாவோ சீர்வரிசை மட்டும் செய்யுங்கள் போதும். என் மனைவிக்கு நான் செய்து கொள்கிறேன் என்க..
ஏழாம் மாதம் அனுப்பாததாலேயே ஏக கடுப்பில் இருந்தவர் வழக்கம் போல முத்துக்குமார் சுந்தரத்திடம் பஞ்சாயத்து வைக்க.. சுந்தரம் சொல்லியும் தனா கேட்கவில்லை. ஒரே பிடிவாதமாக தன் நிலையில் நின்று விட்டான்.
முத்துக்குமாரை சமாதானம் செய்வதற்குள் சுந்தரம் தான் சலித்து போனார். “முதப் புள்ள இல்லையா.. அதான் ஆட்டம் போடறான். அடுத்து இரண்டு மூன்று பொறந்தா அடக்கிடுவான். அடுத்த புள்ளபேறும் நீங்க தான் பார்க்க போறிங்க மாமா.. இப்ப அவன் போக்குல விட்டு புடிப்போம்” என சமாதானம் செய்தார்.
சுந்தரம் சொன்னதில் இரண்டு மூன்று பேரக்குழந்தைகள் என்ற நினைப்பே தித்திப்பாக இருக்க.. எளிதில் விட்டு கொடுத்தார்.
இருந்த போதும் வழக்கம் போல மாமனார் மருமகனும் பார்க்கும் போது எல்லாம் முறைத்துக் கொண்டு இருந்தனர்.
கற்பகத்திற்கமும் ஏழாம் மாதம் அழைத்து வந்து மகளை சீராட்ட ஆசைப்பட்டார். தனா மறுத்ததில் மனக்குறை இருந்த போதும்.. மகளின் மீதான மருமகனின் பாசத்தில் மனம் நிறைந்து போனார்.
அவ்வப்போது மகளிற்கு பிடித்ததை செய்து தமிழரசனோடு வந்து பார்த்து விட்டு சென்றார்.
தனா இதுக்கும் அதுக்கும் என நில்லாமல் சுற்றி சுற்றி அலைந்து எல்லாமே சரியாக நடக்கிறதா என பார்க்க.. கருணா இவனின் அலும்பை பார்த்து..
“டேய் மாப்பிள்ளை.. எதுக்குடா இப்ப ஓரிடம் நில்லாமல் அலைந்து கொண்டு இருக்கிற..”
“அது எல்லாம் சரியா இருக்கானு பார்த்தேன்”
அவனை கருணா முறைத்து பார்த்தான்.
“ஏன்டா உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல..”
ஒன்றும் தெரியாதவன் போல “என்னடா” என்றான் சிரிப்பை உதட்டை மடித்து அடக்கி கொண்டு..
அதில் மேலும் கடுப்பாவன் “என்ன… என்னடா..ஏற்கனவே நீ பண்ற அட்டகாசத்துல எங்க பொண்டாட்டிங்க எங்களை மதிக்கறதே இல்லை.. மானக்கேடா பேசறாங்க”
“இதுல இப்படி எல்லாம் பண்ணினா..ஒரு வாரமா எங்களை கூட நம்பாம நீ தான எல்லாம் பார்த்து ஏற்பாடு பண்ணின.. காலைல இருந்து மேற்ப்பார்வை பார்க்கறேனு அலையற…அதுததுக்கு ஆள் போட்டு இருக்கு..அடங்கி ஒரு இடத்துல இருக்க மாட்டியா” என்றான்.
“போடா”என சிரித்து கொண்டே அவனை கைகளால் நகர்த்தி விட்டு அவன் வேலையைப் பார்க்க சென்று விட்டான்.
“அடேய்” என பல்லை கடித்தான் கருணா. பின்ன அவனும் தான் என்ன பண்ணுவான். தனா யார் எங்க என இல்லாமல் எப்பவும் எழில்… எழில்.. என என்று எழில் ஜபம் படிக்க ஆரம்பித்தானோ.. அன்று ஆரம்பித்தது அந்த குடும்ப ஆண்களுக்கு ஏச்சும் பேச்சும் அவர்களின் மனைவிமார்களால்…
“தனா அண்ணா பாருங்க..எழில எப்படி தாங்கறாரு.. நீங்களும் அவர் கூடத்தான இருக்கறிங்க.. அவரப் பார்த்தாவது கொஞ்சம் பழககூடாது”
“தனா மாமா அக்கா வாய திறந்து சொல்லாமலே மனசறிஞ்சு பார்த்து பார்த்து செய்றாரு.. அவரு ரத்தம் தான உங்க உடம்புலயும் ஓடுது.. நீங்க மட்டும் ஏன் இப்படி இருக்கறிங்க..”
என்று ஏற்கனவே பல ஏச்சு பேச்சுகள வாங்கி கொடுத்துவிட்டு இப்படி அவர்கள் கண் முன்னாடியே அட்டகாசம் செய்தால் அவர்களும் என்ன தான் செய்வார்கள்.
“இன்னைக்கு இவன் மொத்தமா டைவர்ஸ் வாங்கி கொடுக்காம அடங்கமாட்டான்” என கருணா மற்றவர்களிடம் கூற அவர்களும் புலம்பி சலித்தனர்.
கொஞ்ச நேரத்தில் தான் வளைகாப்புக்கு என பிரத்யேகமாக எடுத்துக் கொடுத்த மயில் வண்ண பட்டில் தன் திருமணத்தின் போது வாங்கி கொடுத்த நகைகள் பூட்டி.. ஒன்பதாம் மாத வயிறு சற்று பெரிதாக..திருவாரூர் தேரை போல அசைந்து வந்தவளை… சற்று தள்ளி நின்று கண் எடுக்காமல் ரசித்து கொண்டு இருந்தான்.எழில் மணையில் அமர வைக்கப்பட்டு…நலுங்கு வைக்க ஆரம்பிக்க.. தனா எழலின் அருகில் வந்து நின்று கொண்டான்.
முதலில் திலகா நலுங்கு வைத்து வளையல் போட்டு ஆரம்பித்து வைக்க… அடுத்து கற்பகம் நலுங்கு வைத்து மகளுக்கு தங்க வளையல் கைக்கு இரண்டாக போட்டு மகிழ்ந்தார். பிறகு தேவி வசந்தி என பெண்கள் அனைவரும் வளையல் அணிவித்து முடிக்க…
முத்துகுமார் சுந்தரம் கண்ணன் என குடும்பத்தில் மூத்த ஆண்கள் சந்தன பொட்டு வைத்து ஆசிர்வாதம் செய்தனர்.
கடைசியாக தனாவை அழைக்க… தனா எழிலின் முன் வந்தவன்.. நெற்றி கன்னம் என சந்தனம் துலங்க… அலங்காரமான சற்று பெரிதான ஒற்றை சோபாவில் இவ்வளவு நேரம் நிமிர்ந்து அமர்ந்து இருந்ததில் இடுப்பும் முதுகும் வலிக்க.. சற்று சாய்ந்து ஆசுவாசமாக இடக்கையை பின்னால் ஊன்றி அமர்ந்து சோபையாக தனாவை பார்த்து மென்னகை புரிய…
தனாவிற்கோ பிள்ளை சுமக்கும் கிள்ளையை அணைத்து கொஞ்சிட வேகம் பிறந்தது. மெல்ல தன் இரு கைகளிலும் சந்தனத்தை எடுத்து தடவி அவள் கன்னங்களில் தடவ.. சந்தனத்தின் குளுமையை விட அவன் கைகளின் குளுமை அவளின் உடலெங்கும் சிலிர்ப்பை உண்டாக்க.. கோதையின் கண்களோ ஏக்கத்தை பிரதிபலிக்க.. கண்ணளானின் உள்ளமோ கள்வெறி கொண்டது.
நான்கு கண்களும் நேர்கோட்டில் சஞ்சாரமிட… இருவரும் மௌனமான மோனநிலையில்…
“க்க்கும்…க்க்கும்…” என சுற்றியும் கருணா வெற்றி திரு பிரசாத் தமிழரசன் கீர்த்தி கனி வசந்தி என ஒரு பட்டாளமே கணைத்து சத்தமிட…
தனா திரும்பி அவர்களை முறைக்க.. எழிலோ வெக்கத்தில் தலை குனிந்து கொண்டாள்.
தனா மெதுவாக எழிலின் கைகளை பிடித்து தன் சட்டைபையில் இருந்த இரு ஜோடி வளையல்களை அணிவித்தான். அதுவரை வெட்கத்தில் தலை குனிந்திருந்த எழில் தனா தன் கைகளில் அணிவித்த வளையல்களை பார்த்தவுடன் சராலென நிமிர்ந்து தனாவை நோக்கினாள்.
பார்த்தவளின் கண்களில் கண்ணீர் கரகரவென இறங்க… அந்த வளையல்கள் தனாவின் தாய் லட்சுமியின் வைரவளையல்கள் ஒரு ஜோடியும் நவரத்தின கற்கள் வளையல்கள் ஒரு ஜோடியும்… தன் அன்பு அத்தையின் வளையல்கள் கணவன் அணிவித்ததில் மங்கை அவளுக்கு அத்தனை ஆனந்தம். அதனால் வந்த ஆனந்த கண்ணீர்.
தனாவிற்கு புதிதாக வளையல் வாங்க இஷ்டமில்லை. தன் தாய்க்கு மிகவும் பிடித்தவள் அதுமட்டுமின்றி தன் மனைவிக்கும் மகவுக்கும் தன் பெற்றோரின் ஆசிர்வாதம் வேண்டும் என நினைத்தே இவ்வாறு செய்தான்.
“உஷ்ஷ்” என மெல்ல அதட்டி அவளின் நெற்றியில் இதழ் ஒற்றியவன்.. அவள் முன்பு மண்டியிட்டு அமர்ந்து.. அவளின் புடவையை லேசாக விலக்க.. சுற்றி நின்றவர்கள் இவன் என்னடா செய்யறான் என்று குறுகுறுப்புடன் பார்க்க..
அவளுக்கோ அவன் என்ன செய்ய போகிறான் என தெரிந்ததால்.. அனைவரும் முன்பும் இப்படி செய்ய சுற்றி நின்றவர்களில் பார்வையில் கூச்சமாகி நெளிந்தவாறே…
“மாமா என்ன பண்றிங்க..எல்லோரும் பார்க்கறாங்க” என அவனின் கைகளை பிடித்து தடுக்க..
“ஏய் என் பாப்புகுட்டிக்கு முத்தம் கொடுக்கறேன்டி. உனக்கு கொடுத்திட்டு பாப்புகுட்டிக்கு கொடுக்கலைனா கோவிச்சுக்குவாங்க..”
“மாமா.. எல்லாரும் முன்னாடி சேலையை விலக்கி.. எனக்கு ஒரு மாதிரியா இருக்கு..”
“லேசா தாண்டி.. யார் பார்த்தா என்ன நீ ஏன் அவங்களை பார்க்கற.. என்னை பாரு”
தனா “பாப்புக்குட்டி” என அழைத்து இரண்டு மூன்று முத்தங்கள் வைக்க… உடனே குழந்தை வயிற்றில் வேகமாக துள்ளாட்டம் போட..
இவன் என்ன செய்கிறான் என குழப்பமாக பார்த்து கொண்டு இருந்தவர்களுக்கு இவன் முத்தம் வைத்ததும் குழந்தை துடிப்பாக துள்ளவும்.. இவர்களை சுற்றி நின்று கொண்டு இருந்த இரு குடும்பத்தாரும் பேச்சின்றி வியந்து போய் நின்றனர்.
உடனே கீர்த்தி “அண்ணா நான் நான் ணா..” என்று ஓடி வந்து தனா அருகில் மண்டியிட..
தனா கீர்த்தியின் கைகளை எடுத்து மெதுவாக எழிலின் வயிற்றில் வைத்து..
“பாப்புகுட்டி.. இவங்க அத்தடா.. பாப்புகுட்டியோட அத்த…”
தந்தையின் குரலோ.. கீர்த்தியின் ஸ்பரிசமோ.. மீண்டும் குழந்தை அசைந்தாடியது.குழந்தையின் அசைவை உணர்ந்த கீர்த்தியின் கைகள் கூச செய்ய… கீர்த்திக்கோ சொல்ல முடியாத உணர்வில் தத்தளிக்க.. தன் அண்ணனை திரும்பி பார்த்தாள். தனா ஆம் என்பது போல கண்களை மூடி தலை அசைக்க…
பார்த்து கொண்டு இருந்தவர்களுக்கு இம்முறை முகத்தில் வியப்பை மீறிய ஆனந்தம் கூத்தாடியது.
தங்களின் வாரிசு பிறக்கும் முன்பே எவ்வளவு துடிப்பாக பாசமாக இருக்கிறது என தனாவின் சித்தப்பா சித்திகளும் கற்பகமும் பூரித்து போய் இருக்க ….
முத்துகுமார் தான் என் புள்ளைய மயக்கி வச்சிருக்கிற மாதிரி.. என் பேரபுள்ளயையும் மயக்கி வெச்சிருக்கான் என மனதில் வசை பாடினார்.
அடுத்து பிரசாத் “நான்.. நான் தொட்டு பார்க்கிறேன்” என வர..
எல்லோரும் முன்பு இப்படி இருக்க எழில் சங்கடமாக உணர்ந்தாள். அவளின் நிலை உணர்ந்த திலகா தான்..
“போதும் இது என்ன புள்ளதாச்சிய வச்சிகிட்டு விளையாட்டா..எல்லோரும் போங்க.. போயி ஆகற வேலையை பாருங்க..”என சத்தமிட..
எல்லோரும் அமைதியாக… கடைசியாக திலகா தேவி கற்பகம் ஆரத்தி சுற்றி முடித்து எழிலை தனாவோடு சாப்பிட அனுப்பி வைத்தனர்.
சாப்பிட்டு சிறிது நேரத்தில் எழிலை முத்துக்குமார் குடும்பத்தினர் அழைத்துச் செல்ல..தனாவோ அவளை எங்கே அனுப்பினான். அவளின் கைகளை பிடித்துக்கொண்டு தங்கள் அறைக்கு அழைத்துச் சென்றவன்..
“இங்கயே இருந்துடேன்டி.. நீயும் பாப்புகுட்டியும் இல்லாம நான் இங்க தனியா எப்படி இருப்பேன்”
“மாமா..”என எழில் பரிதாபமாக பார்த்தாள்.
“நான் நல்லா பார்த்துகறேன்டி.. வேணும்னா உங்க அம்மாவை இங்கேயே வச்சிக்கலாம்”
“மாமா..”
“நீ இல்லாம என்னால இருக்க முடியாதுடி.. சொன்னா புரிஞ்சுக்கோ..”
தனாவின் முகத்தை பார்த்து அவளால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.
ஏழாம் மாதம் அனுப்பததால் முத்துக்குமார் கற்பகத்திடம் அத்தனை சத்தம் போட்டு இருக்க.. அதை தாயின் மூலம் அறிந்திருந்த எழில் இப்போது என்ன செய்ய என முழித்தாள்.
சுந்தரம் “தனா நல்ல நேரம் போயிட்டு இருக்கு.. அரசி கிளம்பனும். என்ன பண்ணறிங்க.. வாங்க சீக்கிரம்” என்க..
“இதோ வரோம் சித்தப்பா” என்று வெளியே பார்த்து குரல் கொடுத்தவன் எழிலை ஏக்கமாகப் பார்க்க..
எழில் தனாவினை லேசாக அணைத்து “மாமா.. சொன்னா புரிஞ்சிக்குங்க.. இப்ப போய் வரலைனு சொன்னா பெரியவங்க என்ன சொல்வாங்க.. எங்க அப்பா கோவிச்சுகுவாரு..”
“போடி அந்த விருமாண்டிக்கு நான் எல்லாம் பயப்படுவேனா..”
“மாமா.. அவங்களுக்கும் பொண்ண பக்கத்தில் வச்சு பார்த்திகிடனும்னு ஆசை இருக்காதா.. என்ன ஒரு மூனு நாலு மாசம் நிமிசமா ஓடி போயிடும்”
“போடி” என முறுக்கி கொள்ள.. அவன் தாடையை பிடித்து கொஞ்சி கெஞ்சி என சமாதானப்படுத்தினாள் எழில். அப்போதும் மனசில்லாமல் முகத்தை தூக்கி வைத்து கொண்டு தான் அனுப்பி வைத்தான் தனா.
அவனின் முகவாட்டம் அவள் மனதை பிசைந்தது.
முத்துக்குமார் குடும்பம் எல்லோரிடம் சொல்லி கொண்டு எழிலை அழைத்து சென்றனர்.எழில் தனாவை திரும்பி திரும்பி பார்த்தவாறே காருக்கு சென்றாள்.
தமிழரசனோ கீர்த்தியை முறைத்துக் கொண்டே கிளம்பி சென்றான். இன்று எப்படியாவது கீர்த்தியிடம் தனியாக பேசி காதலிக்க சம்மதம் வாங்கி விட நினைத்தான்.
அவளோ இவனுக்கு போக்கு காட்டி கொண்டு இருந்தாள். வீட்டின் பின்புறம் கீர்த்தி எதற்கோ செல்ல.. தமிழரசன் யாரும் அறியாமல் அவளை பின் தொடர்ந்து சென்றான்.
அங்கு யாரும் இல்லாமல் போக இது தான் சரியான சமயம் என நினைத்து..
“ஏய் இங்க பாருடி.. என்ன… சும்மா உன் பின்னாடியே அலைய விட்டுட்டு இருக்க..”
கீர்த்தியோ அவ்விடம் விட்டு நகரப் பார்க்க.. சட்டென் அவள் கைகளை பிடித்துக் கொண்டான் தமிழரசன்.
அவனின் அந்த தீடீர் செயலில் பெண்ணவளோ பதறி போய் கையை உதறிக் கொண்டே யாராவது பார்த்தால் என்ன நடக்குமோ பதட்டத்துடன் சுற்றியும் பார்க்க..
அவள் கையை அவனிடம் இருந்து விடுவிக்க முயல… இன்னும் இறுக்கிப் பிடித்தான். இன்று பதில் தெரியாமல் விடமாட்டேன் என்பதை போல..
அவன் இறுக்கிப் பிடித்ததில் வலியால் முகம் சுருக்கி”ஷ்ஷ்… வலிக்குது விடுங்க..”
“இன்னைக்கு நீ எனக்கு பதில் சொல்லியே ஆகனும் கீர்த்தி அதுவரைக்கும் இப்படி தான் கையை விடமாட்டேன்”
“சொன்னா கேளுங்க.. யாராவது பார்த்தால் பிரச்சினை ஆகிவிடும் விடுங்க மாமா..” தன்னை அறியாமல் அவனை மாமா என அழைத்து விட்டதில் மென் சிரிப்போடு கண்களை சுருக்கி நுனி நாக்கை கடித்து நின்றாள்.
அவளின் அந்த அழகில் சொக்கி போய்..அவளுடைய மாமா என்ற அழைப்பிலும் சந்தோஷம் கொண்டவன் “அப்ப என்னைய லவ் பண்றேனு சொல்லு.. கைய விட்டுடறேன்”
“ஹூம்.. அப்படி எல்லாம் ஒன்னும் இல்லையே..” என சட்டென்று சொன்னாள்.
அவள் முகத்தை வைத்தே அவள் பொய் சொல்கிறாள் என அறிந்தவன் அவளிடம்..
“நிஜமா.. ஒன்னும் இல்லையாடி.. ஆனா நான் இருக்குனு சொல்லறேன் நிருபிக்கவா..” என்றவன் என்னவென்று உணரும் முன்பே அவளின் இடை வளைத்து இறுக்கி அணைத்து இதழில் முத்தமிடப் போக..
அவனின் தீடிர் செயலில் புரியாமல் முழித்தவள்.. பின்பு சுதாரித்து கொண்டு அவனிடம் இருந்து விடுபட முயல..
அங்கு “தமிழ்” என திருவின் குரல் கேட்க..அவனின் உறுமலில் இருவரும் விதிர்விதிர்த்து விலக…
தன் தங்கையின் விருப்பம் இல்லாமல் அவளை கட்டாயப்படுத்தி தப்பாக நடக்க முயற்சிக்கிறான் என நினைத்துக் கொண்டான் திரு
தங்கையின் கையை பிடித்து தன்னருகே நிறுத்திக் கொண்டவன் “என்ன பண்ணிகிட்டு இருக்கறிங்க.. விருப்பமில்லாத பொண்ணை கட்டாயப்படுத்தி தப்பா நடந்துக்க பார்க்கறிங்க.. அசிங்கமா இல்ல..”
தமிழோ “மச்சான்”என ஏதோ சொல்ல வர..அதை எல்லாம் எங்கே காது கொடுத்து கேட்டான் திரு..
“அண்ணியோட அண்ணாங்கறதால … தனா அண்ணா முகத்துக்காக சும்மா விடறேன். இதே வேற யாராவதா இருந்தா நடக்கறதே வேற..”
தமிழ் கீர்த்தியை பார்க்க.. அவளோ என்ன என உணரும் முன்பே எல்லாம் நடந்திருக்க.. செய்வதறியாது திகைத்து நின்றாள்.
தனக்கு சாதகமாக அவள் அண்ணணிடம் சொல்வாளா

புள்ளி மேவாத மான் – 24 Read More »

inbound3960724304124879389

என் மோகத் தீயே குளிராதே 08

அத்தியாயம் 8   “அய்யோ.. இப்ப நான் என்ன பண்ணுவேன்? நாளைக்கு அவனோட கம்பெனிக்கு போனா.. என்னைய உண்டு இல்லைன்னு ஆக்கிடுவானே.. இப்ப என்ன பண்ணுவேன்?” என்றவாறே சாப்பாத்திக்கு மாவு பிசைந்து கொண்டிருந்தவளின் கவனம் சமையலில் இல்லை. சிறிது நேரத்தில் சமையலறைக்கு வந்த ஹரிஷான்த், குளிர்சாதனப்பெட்டியை திறந்து, அதிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து வாயில் ஊற்றியவன், கண்ணில் யோசனையுடன் நின்றிருந்தவள் பட,   “இப்ப யாரை ஏமாத்தப் போற?” என்று கேட்க, அவன் கேட்பது புரியாது மலங்க

என் மோகத் தீயே குளிராதே 08 Read More »

Photo-20240402-144052-S-993x1291

19 ஆசை வெட்கமறியாது

19 ஆசை கட்டிலுக்கு செல்ல பாவையவள் நெளிய.. வலிய கரம் சேர்த்து அழைத்து போனான் அவளின் செல்வா.. தன் ஆவலெல்லாம் இன்றே தீர்ப்பவன் போல அவனுள் ஒரு வேட்கை.. முன்போ ஒரு தரம் போதும் என ஏகிய மனது ருசித்ததும் போதல.. சரியா செய்யல.. சாதா பெண்ணெயிருந்தாலும் கூட இது இத்தகையது தெரியாது சும்மாயிருக்கும்.. ஆனால் விஜியோ டாக்டர்.. தன்னுடைய இந்த உடனடி உச்சத்தை கண்டு பிடிச்சிருப்பா.. கேலியா நினைச்சிருப்பா.. சிறுபிள்ளை போல மனசை உழற்றினான் செல்வா..

19 ஆசை வெட்கமறியாது Read More »

Photo-20240402-144052-S-993x1291

18 ஆசை வெட்கமறியாது

18 ஆண்களுக்கு அந்த ரெட்டை கோபுரங்களின் மீது அப்படியென்ன வெறியோ?? மலைத்தாள்.. செல்லுவின் ஆர்வம் இவ்வாறு யோசிக்க தோணியது.. கொஞ்சம் விட்டு கொடுத்தா இவன் ரொம்ப பண்றான் என்று சலித்தாலும் இவளுக்குமே ரெண்டு பக்கமும் அவன் பல் படனும் வலிக்க வலிக்க பிசையனும் கசக்கனும் .. பிச்சே எடுக்கணும் என்றெல்லாம் உள்மனம் ரகசியமாய் ஏங்கியது.. இவ்ளோ மோசமா நான்! தன் மீதே குறையும் பட்டுக்கொண்டாள்.. வாழ்க்கையை ஆரம்பித்த முத நாளே இவ்ளோ குழப்பம் ஆகாதுடி.. இன்றா தொடங்குச்சி..

18 ஆசை வெட்கமறியாது Read More »

error: Content is protected !!
Scroll to Top