15 – ஆட அசைந்து வரும் தென்றல்
தனது மொபைல் அடிக்க சிரமப்பட்டு நெருப்பாக எரிந்த கண்களை பிரித்துப் பார்க்க… திரையில் ‘ரெட்சில்லி’ என காட்டியது. உயிர்பித்து காதில் வைத்தவள்…”சொல்லுங்க சார்..” குரலே பலஹீனமாக.. சோர்வாக இருக்க…
காதில் வைத்தவள்…”சொல்லுங்க சார்..” குரலே பலஹீனமாக.. சோர்வாக இருக்க…
அவளின் குரலை கேட்ட அனிவர்த் துடித்துப் போனான்.
“குட்டிம்மா.. வர்ஷிம்மா.. என்னடா ஆச்சு..” என உருகினான்.
“அது ஒன்னும் இல்ல வர்தா.. நேற்று மழைல நினைஞ்சேனில்ல… அதான் பீவர் வந்திடுச்சு போல…”
அவள் பேச்சை சரியாக கவனிக்காமல்…
“அதுக்கு தான்.. என்கூட வானு கூப்பிட்டேன்.. நீ எங்கடி கேட்ட..” என கோபப்பட்டான்.
“ஆமாம்.. அப்படி திட்டுவிங்க… அப்புறம் கூப்பிட்டா ரோசம் கெட்டு போய் பின்னாலயே வந்திருவாங்களா..”
“உன்மேல தப்பு இருக்கவும் தான திட்டினேன்.. சரி அத விடு.. டாக்டர்கிட்ட போனியா.. மெடிசன் எடுத்துகிட்டயா..”
“டாக்டர் வந்து பார்த்திட்டு மெடிசன் கொடுத்தாங்க.. இப்ப தான் சாப்பிட்டு டேப்லெட் போட்டேன் வர்தா..”
“ஏய்… இப்ப என்ன சொன்ன..” ஒரு வித பரபரப்பாக கேட்டான்.
“டேப்லெட் போட்டேன்னு சொன்னேன்..”
“அது இல்லடி.. நீ என்னை என்ன சொல்லி கூப்பிட்ட..”
கண்களை சுருக்கி… நுனி நாக்கை கடித்து… கையை உதறி…
“அச்சோ.. எப்பவும் மனசுக்குள்ள கூப்பிடற மாதிரி.. சொல்லிட்டேன் போல” என முணுமுணுக்க..
தெளிவாக அனிவர்த் காதில் விழ….
“அப்போ என்னை அடிக்கடி நினைப்பியா… கூப்பிடுவியா… அப்படி என்ன தான் நினைப்ப.. சொல்லு..”
“அப்படி எல்லாம் எதுவும் இல்லை… போங்க… நான் கால் கட் பண்ணறேன்..”
“ஏய்ய்ய்.. ஒரு நிமிசம் வர்தா கூப்பிடு..”
“ம்கூம் மாட்டேன்..”
“ப்ளீஸ் குட்டிம்மா.. ஒரே ஒருதடவை… கேட்கனும் போல ஆசையாயிருக்கு.. ப்ளீஸ்டி செல்லம்ல…”
“வர்தா.. “என கிசுகிசுப்பாக அழைக்க..
“சரியா கேட்கல.. கொஞ்சம் சவுண்டா.. ப்ளீஸ்டாம்மா..”
“போடா வர்தா..” என வேகமாக.. சத்தமாக சொல்லிவிட்டு போனை அணைத்துவிட்டாள்.
போனையே உல்லாசமாக பார்த்திருந்தான் மனம் நிறைந்த சிரிப்போடு…
இரண்டு நாட்கள் அவளை பார்க்காமல் மனம் நிலை கொள்ளவில்லை தான். இருந்த போதும் அவ்வப்போது அவளுக்கு அழைத்து பேசி ஆறுதல் தேடிக் கொண்டான். இரண்டு நாட்கள் கழித்து வந்தவளை அள்ளி அணைத்து முத்தமிட.. கைகள் பரபரக்க… அவள் தன் அறைக்கு வரும் வரை கூட காத்திருக்க முடியாமல் தவித்துப் போனான்.
தேவர்ஷி அனிவர்த் அறைக்கு வந்தாள். இரண்டு நாட்கள் அவனோடு போனில் பேசியதில் இது வரை இல்லாத ஒரு நெருக்கம் உரிமையும் வந்திருந்தது. அதுவும் இரவில் வெகு நேரம் பேச… என்ன பேசினார்கள் என தெரியாமல் பேசினார்கள்… சிரித்தார்கள்.. ரசித்தார்கள்..
தேவர்ஷிக்கு இந்த இரண்டு நாட்களில் பிடித்தம் காதலாக மாறி இருந்தது. காதல் என்ற உணர்வு அவளை முழுதாக அமிழ்ந்து அழுத்த… ஆபிஸ் வந்தவள் அவனை பார்க்க போவதற்குள் மூச்சு முட்டும் உணர்வு… கால்கள் பின்ன… நடையில் சற்று தேக்கம்… முகத்தில் துளியளவு நாணம்… ஏற்கனவே இருந்த சிவப்போடு இன்னும் தூக்கலான சிவப்பு கன்னங்களில் ஏறியிருக்க… காஜல் தீட்டிய கண்களில் காதல் மயக்கம்…
காதலை முழுதாக உணரும் முன்பே அவன் அணைப்பு.. இதழ்முத்தம் எல்லாம் பிடித்திருந்தது. இப்போது இன்னும் கூடுதலான எதிர்பார்ப்பு மனதில்… காதலை சொல்லாமலே இருவரும் உணர்ந்திருந்தனர்..இப்போது இன்னும் என்னன்ன செய்வானோ என நினைக்க.. உடலில் சிறு நடுக்கம் ஓடியது.
அவளது அறையில் இருந்து தனது அறைக்கு வரும் வரை கேமராவின் வழியாக பார்த்திருந்தவனுக்கு அவளின் அன்ன நடை… முகம் காட்டும் கலவையான உணர்வுகள் எல்லாம் புதிதாக இருக்க… அவனுள்ளும் சின்ன படபடப்பு…
உள்ளே வந்தவள் குனிந்து கொண்டே “குட்மார்னிங் சார்..”
அவனிடம் இருந்து பதில் வரவில்லை சில நிமிடங்கள்… மெல்ல கண்களை உயர்த்தி பார்த்தாள். புருவங்களை ஏற்றி இறக்கினான். வெட்கம் மிகுந்திட சட்டென பார்வையை தழைத்து எங்கோ பார்த்தாள். கருவிழி இரண்டும் இங்கும் அங்கும் உருண்டது. அனிவர்த் எழுந்து அவளை கண்களால் விழுங்கியவாறு ஒவ்வொரு அடியாக அழுத்தமாக எடுத்து வைத்து நெருங்கினான். அவனின் அழுத்தமான காலடி ஓசை அவன் வரவை சொல்ல… இனம் புரியாத பயம்… கைகால் உதறல்.. என்ன செய்வானோ… பதட்டம்…ஏதாவது செய்வானோ.. எதிர்பார்ப்பு.. எல்லாம் காதல் படுத்தும் பாடு..
அவளை நெருங்கியவன் சிறிது இடைவெளி விட்டு கைகளை மார்ப்புக்கு குறுக்கே கட்டி நின்றவன்… அவளிடம் விளையாண்டு பார்க்ககும் ஆசை தோன்ற…
“என்ன தேவவர்ஷி… எதுக்கு இவ்வளவு டென்ஷன்… கம்பெனி சேர்மென்கு ஒரு குட்மார்னிங் சொல்லறதுக்கு இத்தனை பதட்டம் எதுக்கு…”
‘என்னது சேர்மென்னா.. வேற எதுவும் இல்லையா..’ விழிகளில் நீர் கசிய படக்கென நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்க்க…
கண்களில் குறும்பு மின்ன… காதல் கண்ணாக நின்றவனை கண்டு…
‘எல்லாம் விளையாட்டா..’ என கோபம் கொண்டு அவனை நெருங்கி அவன் தோளில சரமாரியாக அடிக்க… அவளை இழுத்து மார்ப்புக்குள் பொதித்து கொண்டான். அவன் மாரப்பில் முகம் புதைத்திருந்தவள் கண்களில் கண்ணீர் வடிய.. அவன் சட்டையை நனைக்க… அவள் முகத்தை நிமிர்த்தியவன்…
“எதுக்குடா அழுகற குட்டிம்மா.. “
“நான் உங்களை எப்படி பார்க்க வந்தேன்.. நீங்க சேர்மன் சொல்லறிங்க..”
“பின்னே.. சேர்மன் இல்லையா…” என இழுக்க..
“எனக்கு சேர்மன் மட்டும் தானா..” கொஞ்சலாக..
“நோ.. சம்திங் ஸ்பெஷல் பார் யூ..”
அவன் சொல்லிய சந்தோஷத்தில்.. அவனே எதிர்பாராத நேரம் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் ஒன்று வைத்தாள்.
“தப்பு… தப்பு.. முத்தம் கொடுத்த இடம் தப்பு… இதோ இங்க கொடுக்கனும்” தனது உதடுகளை தட்டி சொல்ல…
“ம்ம்ம் கொடு… கொடு… இங்க கொடு..” என்றான் உல்லாசமாக…
“ம்கூம் மாட்டேன்.. போங்க..”
“கொடுக்காம இங்க இருந்து உங்களை அனுப்பமாட்டேன்.. வாங்க..” என அவளை போலவே பேச…
தேவர்ஷி கெஞ்சுதலான பார்வை பார்க்க… அனிவர்த் பிடிவாதமாக நிற்க… வேறு வழியில்லை என நினைத்து கதவை பார்த்தாள்.
“என் அனுமதி இல்லாம என் ரூம்கு வர துணிச்சல் உனக்கு மட்டும் தான் இருக்கு..” என சிரிக்க…
அவனின் நெஞ்சில் செல்லமாக குத்த.. அவள் கையை பிடித்து தடவி..
“ஏய் இப்படியே நேரத்தை கடத்தி சீட்டிங் பண்ணலாம்னு நினைக்கறியா…”
எக்கி அவன் பின்னந்தலையில் கை கொடுத்து அவனை தன் உயரத்திற்கு குனிய வைக்க… அவளுக்கு சிரமம் எதுக்கென அவளை தன் உயரத்திற்கு தூக்கி பிடித்தான்.
அவன் தூக்கி பிடித்த இடம் பின்புறம் அவன் கைகள் அழுந்த…. அது வேறு அவஸ்தையாக இருக்க நெளிந்தாள். இவள் வேலைக்காக மாட்டா என நினைத்தவன் தானே அவள் இதழில் தன் இதழை கோர்த்தான். சில நிமிடங்களில் அவன் இதழ் அவளின் கழுத்து நரம்பை கவ்வி இழுக்க… கண்ணனின் மாயங்கள் எல்லாம் காதல் ராதையை பித்து கொள்ள.. அவனின் தோளிலேயே துவண்டு சாய்ந்தாள். துவண்டவளை தூக்கி கொண்டு அங்கிருந்த சோபாவிற்கு செல்ல எத்தனிக்க… அவனின் மொபைல் சிணுங்க… காதலில் கரைந்து… கனவில் மிதந்து.. காற்றில் பறந்த இருவருக்கும் மொபைலின் ஒலி தரை தட்டி நிற்க வைத்தது.
“ம்ப்ச்..”என காற்றில் கைகளை வீசி..கோபமாக மொபைலைப் பார்க்க… அவனின் ஏமாற்றம் முகத்தில் அப்பட்டமாக தெரிய… அதை பார்த்து கிளுக்கி சிரித்தாள்.
“ஏய் உன்னை..” கை நீட்டி அவளை எட்டி பிடிக்க போக… அடித்து ஓய்ந்திருந்த மொபைல் மீண்டும் ஒலி எழுப்ப… ஏமாற்றமாக அவளை பார்க்க..
“பை வர்தா..” என நிற்காமல் ஓடிவிட்டாள்.
தன் முகம் பார்த்து வர்தா என அழைக்க சொல்ல ஆசை கொண்டிருக்க… நிற்காமல் சொல்லி சென்றவளை ஏக்கமாக பார்த்தான்.
அனிவர்த்தும் காதலை சொல்லவில்லை.. தேவர்ஷியும் சொல்லவில்லை.. சொல்லாமலேயே இருவருக்கும் ஒரு புரிதல் வந்திருந்தது. அவளை பார்த்திருப்பதும்.. அவளோடு சின்ன சின்னசில்மிஷங்கள்… இரவில் போனில் மோகப்பேச்சும் முத்த சத்தமுமாக காதலை அரங்கேற்றி கொண்டிருந்தனர்.
ஒருநாள் ஆயாம்மா தேவர்ஷியிடம்…
“தேவா பாப்பா… எம் புருஷன் வாங்கற சம்பளத்தை பூராத்தியும் குடிச்சே அழிச்சிபுடறான். வூட்ல ஒரே கஷ்டமா இருக்கு.. பையனுக்கு இஸ்கூல் பீசு கட்டனும்.. ஏதாவது உதவி பண்ணு பாப்பா..” என சேலை தலைப்பால் கண்ணை கசக்கி வராத கண்ணீரை துடைக்க…
தேவர்ஷி் ‘அச்சோ பாவம்.. எவ்வளவு கஷ்டம் இவங்களுக்கு…’ என மனம் இளகிவிட…
“பாவம் ஆயாம்மா நீங்க.. எவ்வளவு பணம் கட்டனும்..”
‘ஆஹா.. லூசு நம்பிடுச்சு லம்பா ஒரு தொகை பார்த்திடலாம்’ என கண்ணில் ஆசை மின்ன…
“பெரிய இஸ்கூலுல படிக்கறான் பாப்பா… இந்த கூட்டி துடைக்கற பொழப்பு என்னோடு போகட்டும்.. அவனாவது நல்லா பெரிய ஆபீசரா போகனும்னு என் கஷட்த்த மீறி படிக்க வைக்கறேன்.. முப்பதாயிரம் ரூவா.. பீசு கட்டமுடியல.. பள்ளிகூடத்துக்கு வரவேணானு பெரிய வாத்தியார் சொல்லிபுட்டாரு.. ஏதாச்சும் உதவி பண்ணு பாப்பா..” என வராத கண்ணீரை வரவைக்க.. சேலை தலைப்பில் கண்களை தேய்க்க.. உண்மை என நம்பிவிட்டாள் தேவர்ஷி.
அவ்வளவு தொகை பணமாக கையில் இல்லாதால் தனது வலது கைவிரலில் இருந்த ஒரு பவுன் மீன் மோதிரத்தை கழட்டி கொடுத்தாள்.
“ஐயோ பாப்பா இது எல்லாம் வேண்டாம்… பணமா இருந்தா கொடு… அதுவும் கடனா கொடு.. திருப்பி அடைச்சிடறேன்..”
“என்கிட்ட பணமா இல்ல ஆயாம்மா.. இதை வச்சுக்குங்க..திருப்பி எல்லாம் தர வேண்டாம்..” என கை பிடித்து அழுத்தி கொடுத்தாள்.
“ரொம்ப டேங்க்சு பாப்பா..” என கண்களில் ஆசை மின்ன.. வாங்கிவிட்டு வேகமாக சென்றுவிட்டது அந்தம்மா..
பார்த்திருந்த அனிவர்த் ‘இவளை வச்சுகிட்டு… இவ்வளவு ஏமாளியா இருக்கறளா… பேசாம என் ரூம்லயே இவளுக்கு ஒரு கேபின் போட்டறளாமா..’ என யோசித்தான்.
தேவர்ஷியிடம் மோதிரத்தை வாங்கியதும் அரைநாள் விடுப்பு எடுத்துக் கொண்டு முதல் வேலையாக விற்று காசு பார்த்துவிட எண்ணி.. அனிவர்த் அறைக்கு வந்தது அந்த ஆயாம்மா..
ஒன்றும் காட்டிக் கொள்ளாமல்…” சொல்லுங்க.. ஆயாம்மா..”
“சார்… அரைநாளு லீவு வேணும்..”
“எதுக்கு..”
“ஒரே பேதியாக போவுது.. சார்… டாக்டர்கிட்ட போவுனும்…”
“ம்ம்ம்…அப்படியா…” புருவ சுளிப்புடன்…
“ஆமாம் சார்..ரெம்ப சோர்வா இருக்கு….குளுகோசு ஏத்தனும்..”
“அச்சச்சோ… பாவம்..”
அனிவர்த் பரிதாபப்பட்டு பேசுகிறான் என நினைத்து கொண்டு அதிகமாக அளந்து விட்டு கொண்டிருந்தது அந்தம்மா…
“குளுக்கோசு ஏத்த சொன்னா கைல துட்டு கூட இல்ல சாரு..”
“ம்கூம்..”என்றான் பார்வையை உயர்த்தி ஆச்சரியமாக…
‘என்னாதிது .. எப்பவும் எதுவும் கேட்காமல் பணம் தருவாரு.. இன்னைக்கு இப்படி கேட்கறாரு’ என பேந்த பேந்த முழித்தது.
ஆயாம்மாவின் திருட்டு முழியை பார்த்தவாறு இரண்டாயிரம் ரூபாய் தாளகளை ஐந்தை எடுத்து டேபிள் மேல் வைத்தான்.
கண்களில் ஆசை மின்ன.. அசட்டு சிரிப்பு சிரிக்க…
“பணம் வேணுமா..”
“ஆமாம் சார்.. டாக்டரு பீசு கொடுக்கனும்..”
“அப்ப ஓகே.. மோதிரத்தை கொடுத்திட்டு இந்த பணத்தை எடுத்துக்குங்க…”
“மோதிரமா… எந்த மோதிரம் சார்…எனக்கு எதும் தெரியாது..” என திடுக்கிட்டு தட்டு தடுமாறி பேசியது.
“ஒழுங்கா கொடுத்திட்டா ஒன்னும் பண்ணாம மன்னிச்சு விட்றுவேன்.. எல்லாம் கேமரால ரெக்காரட் ஆகியிருக்கு…இல்ல அப்படினா போலீஸ்ல பிடிச்சு கொடுத்துருவேன்…” அனிவர்த் மிரட்டவும்…
போலீஸ் என்றதும் பயந்து போய் சேலை முந்தானையில் முடிந்து வைத்திருந்த மோதிரத்தை எடுத்து டேபிள் மேல் வைத்தது.. ஒரு இரண்டாயிரம் தாளை மட்டும் எடுத்து கொடுத்து…
“இனி இந்த மாதிரி யார்கிட்டயாவது ஏதாவது வாங்கினிங்க… வேலையை விட்டு தூக்கிடுவேன்.. போலீஸ்லயும் சொல்லிடுவேன்”
“இல்ல.. சார்.. வாயே திறக்கமாட்டேன்..” என குனிந்து ஒரு கும்பிடு போட…
“லீவ் எல்லாம் கிடையாது.. போய் வேலையை பாருங்க..” என விரட்ட…
வந்தவரை இலாபம் என பணத்தை வாங்கி கொண்டு ஓடிவிட்டது..
மோதிரத்தை கைகளில் எடுத்துப் பார்த்தான். மீன் வடிவத்தில் கண் பகுதியில் ஒற்றை வெள்ளை கல் பதித்திருக்க..அழகாக இருந்தது.