உரசி மலர்த்தாதே மாறா!-6&7 (விஷ்ணுப்ரியா )
மலர்தல்- 6 அன்று..திங்கட்கிழமை.அவன் டாக்டர். உஷாவிடம் குறிப்பிட்டது போல மருத்துவமனையின் புது நிர்வாகியான ‘அர்ஜூன் மனோஹருக்கு’ வரவேற்பளிக்க ஏற்பாடாகியிருந்தது . அதன பொருட்டு.. ஒட்டுமொத்த ஊழியர் குழாமும்.. அங்கே திரண்டிருந்தது. முற்பகல் பொழுதினில்.. ஊட்டியிலும் கூட வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அவர்களது மருத்துவமனையில் பேரழகாய் அமைக்கப்பட்டிருந்த தோட்டத்தினிடையில் ஊடறுத்து அமைக்கப்பட்டிருந்தது தார் சாலையொன்று. அதன் வழியாக.. அதிநவீனரக லம்போர்கினி வகையறாவைச் சேர்ந்த காரொன்று உள் நுழைந்தது. அதைக் கூடக் […]
