காற்றுக்கென்ன வேலி – இறுதி அத்தியாயம்
காற்றுக்கென்ன வேலி – இறுதி அத்தியாயம்
காற்றுக்கென்ன வேலி – இறுதி அத்தியாயம் Read More »
காற்றுக்கென்ன வேலி – இறுதி அத்தியாயம்
காற்றுக்கென்ன வேலி – இறுதி அத்தியாயம் Read More »
காற்றுக்கென்ன வேலி – எட்டாம் அத்தியாயம்
காற்றுக்கென்ன வேலி – எட்டாம் அத்தியாயம் Read More »
2 அத்தியாயம் சிறுமுகை பேரூராட்சியில் கைத்தறிப்பட்டுப் புடவைகளுக்கு உலகளவில் வரவேற்பு உள்ளது.. ஊரில் தெருவெங்கும் கைத்தறி சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும்..காஞ்சிபுரம், ஆரணி பட்டுபுடவைகளுக்கு அடுத்த மூன்றாவது இடத்தில் உள்ளது சிறுமுகைப்பட்டு சுந்தரம் பட்டு சேலை நெய்யும் கைத்தறி நெசவாளர்.. சுந்தரத்தின் மனைவி வசந்தி கணவருக்கு நெசவுத்தொழிலில் உதவியாக பட்டுபுடவைக்கு முடிபோடுவது, கச்சை கட்டுவது. போன்ற சிறு சிறு உதவிகளை செய்வார்.. இவர்களின் தவப் புதல்வி நம் கதையின் நாயகி காந்தக் கண்ணழகி ஜானவி.. மிடில் கிளாஸ் பேமிலி..
காற்றுக்கென்ன வேலி – ஏழாம் அத்தியாயம்
காற்றுக்கென்ன வேலி – ஏழாம் அத்தியாயம் Read More »
அத்தியாயம் -02
மொத்த குடும்பமும் கோயிலில் இருந்து குணசேகரனின் வீட்டிற்கு சென்றார்கள். மணமக்களை வாசலில் நிறுத்தி நாத்தனார் முறையில் உள்ள உறவு பெண்கள் ஆரத்தி எடுத்து உள்ளே அனுப்பினார்கள்.
18 – இத இதமாய் கொன்றாயடி
சூர்யா சொல்வதை நம்பாமல் நிலா கண்களை இடுக்கிக் கொண்டுப் பார்த்தாள். கல்யாணியோ இது தான் சமயம் என்று,”க்கா… இவன் நடிக்கிறான்கா நம்பாதிங்க…”என இவள் நடித்தாள். சூர்யாவின் பெற்றோரோ சூர்யா பக்கம் நியாயம் இருப்பதாக முழுவதும் நம்பினார்கள்.
எனவே சூர்யாவோட தந்தை சிந்தித்தவாறு,”சரிம்மா… நீ சொல்றது கரெக்ட் தான்… எங்க பையனா இருந்தாலும் தப்பு தான் தப்பு… தப்புக்கு தண்டனை இருக்கு… என்ன தண்டனை கொடுக்கலாம் நீயே சொல்லும்மா…” கல்யாணிப் பார்த்து வினயமாகக் கேட்டார்.
இவளும்,”எனக்கு செய்த மாதிரி வேற யாருக்கும் செய்யகூடாதில்ல… எனக்கும் அவருக்கும் கண்ணாலம் பண்ணி வச்சிடுங்க… அவரு பேருல இருக்கற சொத்தல்ல என் பேருக்கு மாத்திடுங்க… அவ்வளவு தான்.” தன் குரபுத்தியைக் காட்டினாள்.
வேணுகோபால்,”ஏம்மா… அவன் சொத்து முழுசும் உன் பேருல எழுதி வச்சா போதுமா… அவன் எப்படி போனால் உனக்கென்ன…” எனக் கேட்டார்.
உடனே அவள்,”ம்கூம் என் பேருல சொத்திருந்தா போதும்… அவன சொத்தில்லாம ஒரு பையனும் மதிக்கமாட்டாங்க…”
இவள் என்ன சூர்யாவை விட சொத்து தான் பெரியது என பேசுகிறாள் நிலா நினைத்தாள்.
சூர்யா ஏதோ குறுக்கிட்டு பேச வந்தான். பேசாதே என்று மகனுக்கு கண்ஜாடைக் காட்டிவிட்டு, வேணுகோபால்,”புருசன மதிக்க வேணாம்… சொத்துமட்டும் இருந்தா பரவாயில்லயா…” கேட்டார்.
“சொத்துக்காக என் காலை சுத்தி வரணும்ல…” என்று சொன்னாள்.
உடனே வேணுகோபாலுக்கு கோபம் வந்தது. “கூட்டுகளவாணிகளா… இரண்டு பேரும் சேர்ந்து சொத்துக்கு ஆசப்பட்டு எங்கள ஏமாத்துணுமங்கறது நனச்சிட்டு எங்க வந்து நாடகம் போடறிங்க… ஒழுங்கா மரியாதயா இடத்த காலி பண்ணுங்க… இல்லனா வாட்ச்மேன விட்டு துரத்தியடிப்பேன்…” என சிம்மாக கர்ஜித்தார்.
நிலாவுக்கு இவளே ப்ராடு எனத் தெரியாமல் வந்ததுக்கு இந்த கெட்டப் பெயர் தேவை தான் என மனம் நொந்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு காலிப் பண்ணினாள். கல்யாணியோ இவ்வளவுக்கு பிறகும் ஏதாவது தோறுமா என நினைத்து,”சொத்து ஒன்னும் வேணாம்… அதுக்கு பதிலா ஒரு ஐம்பது லட்சம் கொடுங்க… சத்தப்படாம போயிடுறேனு…” என்றாள்.
வேணுகோபாலோ,”வாடச்மேன்… வாட்ச்மேன்…” என வாசலைப் பார்த்து குரல் கொடுத்தார். வாட்ச்மேன் வருவதற்குள் இனிமேல் ஏதும் தேறாது என நினைத்தவாறே,”இருங்க… வெளிய போய் உங்க மகன பத்தி இல்லாதயும் பொல்லாதயும் சொல்லி மானத்த வாங்கலன்னா என் பேரு கல்யாணில்ல…” சொல்லிவிட்டு அந்த பங்களாவை விட்டு நிற்காமல் ஓடிப் போனாள்.
ஓடிவிட்டாள் என சூர்யாவும் சூர்யா பெற்றோரும் ஆசுவாசமாக பெருமூச்சு விட்டனர். அதற்கு ஆயுள் குறைவு போலும் ஏனெனில் அவள் போன வேகத்திற்கு ஊருக்குள்ள கட்டுக்கதைகளைப் பரப்பியிருந்தாள். ஊருக்குள்ளவர்களும் பெரிய இடத்துபையன் கொஞ்சம் அப்படி இப்படியிருந்தா என்ன என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள். அது இவர்களுக்கு தெரிந்த போது சூர்யா முகம் இருட்டிடடித்துவிட்டது. அதைப் பார்த்த வேணுகோபாலுக்கு கண்மண்ணு தெரியாத கோபம் வந்தது.
யாரைக் கொண்டு இவள் வாயை அடைப்பது என தெரியாமல் சூர்யா சிந்தித்தான். அவன் மூளையில் நிலா தான் சரியான ஆள் என்று டக்கென பொறித் தட்டியது. உடனே சூர்யா நிலாவை சந்திக்க எண்ணி அவள் வீட்டு முகவரியை விசாரித்துக் கொண்டு, ஒரு சேரியில் உள்ள அவள் வீட்டைக் கண்டுப்பிடித்துப் போனான்.
நிலா வீட்டுவாசலில் நின்றுக் கொண்டு,”நிலா… நிலா…” என அழைத்தான். வெளியே வந்த நிலா சூர்யாவைப் பாரத்ததும், இந்தாள் இங்க எதற்கு வந்திருக்கான்? என முகம் பேயறைந்தாற் போல ஆகிவிட்டது. சூர்யா நிலா மனதில் என்ன நினைக்கிறாள் என கணித்துவிட்டான்.
உடனே சூர்யா,”தோ பாரு.. நீ நனக்கற மாதிரியெல்லாம் பிரச்சனய பண்ண வரல… சொல்ல போனா நா ஒரு உதவி தான் கேட்டு வந்திருக்கேன்…” சொன்னான்.
நிலா மனதிற்குள் அப்பாடி இவன் ஒன்றும் பிரச்சனை பண்ண வரவில்லை. இது தெரிந்தால் தன் அம்மா ஆடித் தீர்த்துவிடுவாள் என எண்ணினாள்.
நிலா,”சரி எதற்கு வந்திருக்கே…” கேட்டாள். அதற்கு சூர்யா,”இல்ல… அன்னைக்கு வீட்டு வந்தில்ல… அங்க நடந்தது பூராவும் ஊருல சொல்லறியா… ப்ளீஸ்…” என மன்றாடிக் கேட்டான்.
நிலா பதிலுக்கு,”அதற்கென்ன… உண்மய தான் சொல்லறேனு… சொல்லிட்டா போச்சு…” சூர்யாவோடு கிளம்பினாள்.
சூர்யா நிலாவோடு கல்யாணி தங்கியிருக்கும் விடுதி வந்து இறங்கினான். அங்கு சூர்யாவோடு நிலாவைக் கண்டதும் கல்யாணி இவனோடு இவள் எங்க இங்க என்னத்துக்கு வந்திருக்கா என அதிர்ச்சியடைந்தாள். நிலா வந்த வேகத்திற்கு கல்யாணியைப் பிடித்து கன்னம் கன்னமாக அறைந்தாள். இவள் இப்படி செய்வாள் என எதிர்பார்க்காத கல்யாணி திரு திருவென முழித்தாள்.
“என்னடி யாருக்கும் தெரியாதுனு நனச்சிட்டு இருக்கறியா… எல்லா உண்மயும் தெரிஞ்சவ நா ஒருத்தி இங்க இருக்கேனு என்பதை மறந்துடாதே… ஒழுங்கா மருவாதயா எங்க கூட வந்து எல்லார் முன்னாடி உண்மய சொல்லறியா… என்ன புரிஞ்சுதா…” மிரட்டினாள்.
கல்யாணி அடிக்கு பயந்து வேறுவழியில்லாமல்,”நீங்க எங்க வந்து சொல்லனா… நா அங்க வந்து சொல்றேன்…” என ஒப்புக் கொண்டாள்.
மக்கள் கூடியிருக்கும் இடத்துக்கு இருவரும் அழைத்துப் போனார்கள். மக்கள் முன்னால கல்யாணியோ உண்மையை சொன்னாள்.. “உன் சுயநலத்துக்கா இப்படி பண்ணுவியா…” என்றும், “உன் பேச்ச நம்பி நல்ல பையன தப்பா நனச்சிட்டோம…” “நீயெல்லாம் மனுசியா இந்த பொழப்பு பொழைக்கறது நாண்டுகிட்டு சாகலாம்…” “நல்ல பையனப்பா இப்படி அவன் மேல அபாண்டமா பழிய தூக்கி போட்டிருக்கா பாரேன்…”என்று எல்லோரும் சூர்யாவை புகழ்ந்தும் கல்யாணியை வாய்க்கு வந்தபடி திட்டினார்கள். கல்யாணி முதலில் சொன்ன பொய்யை உண்மை என்று சூர்யாவை பேசின அதே வாய் தான் கல்யாணியை இப்பொழுது திட்டி தீர்த்தது. சூர்யாவையும் நிலாவையும் பாராட்டி விட்டுச் சென்றார்கள்.
கல்யாணியால் தனக்கு வந்த களங்கத்தை நிலாவைக் கொண்டு துடைத்துக் கொண்டான் சூர்யா. சூர்யா நிலாவிடம்,”ரொம்ப தேங்கஸ்… நீ வந்து சொல்லினா நா எப்படி இந்த உண்மய நிருப்பிப்பேன்… வா உன்ன கொண்டு போயி வீட்லய விட்டறேன்…”
அதற்கு நிலா,”தேங்கஸல்லாம் வேணாம்… உங்களோட இந்த கஷ்டத்துக்கு நானும் ஒரு காரணமாயிட்டேனு நனக்கும் போது கொஞ்சம் வருத்தமாயிருக்குது… நானே போயிக்குவேன்…” என்று சொல்லி விடைப் பெற்றாள்.
சூர்யாவும் சரியென சொல்லிவிட்டு அவன் பாதையில் விடைப் பெற்றான். நிலாவும் தலையாட்டிவிட்டு தன் பாதையில் கிளம்பினாள்.
எண்ணங்களும் வழிகளும் வெவ்வேறு…
தனித்தனி பாதைகளில் பிரிந்து செல்கின்றன…
இரண்டும் சேர்ந்து ஒரே பாதையில் பயணிக்குமா…
ஒரே கிளையில் ஒரே கூட்டில் வசிக்குமா…
சூர்யாவுக்கு நிலா ஞாபகமே இருந்தது. அவன் எண்ணம் முழுவதும் அவளாக இருக்கட்டும் தைரியமாக வந்து கல்யாணியை இரண்டு அறைக் கொடுத்து, மக்கள் முன்னால் உண்மையை ஒத்துக் கொள்ள வைத்து என் மானத்தைக் காப்பாற்றினாள் என புளங்காகிதம் அடைந்தான். இப்படியே சூர்யா நிலாவை நினைத்து நினைத்து, ஒரு கட்டத்தில் அவள் மேல் காதல் கொண்டான்.
நிலாவை ஒரு பொருட்காட்சிக்கு வரச் சொன்னான். இவனுக்கு முன்னால் வந்து நிலா வந்து இவனுக்காக காத்திருக்கலானாள். சூர்யா அவளிடம் காதலை சொல்ல கையில் ஒற்ற சிகப்பு ரோஜாவுடன் தைரியமாக கிளம்பிப் போனான். நிலாவை சந்தித்து தரையில் முட்டாங்கால் மடித்து அமர்ந்து சிகப்பு ரோஜாவை அவள் முன்னால் நீட்டி தன் காதலை சொன்னான்.
எதற்கு வரச் சொன்னான் என தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்த நிலா தீடிர் என்று அவன் காதலைச் சொல்வான் எதிர்பார்க்காதமல் அதிர்ந்துவிட்டாள்.
“ஏய் நிலா… என் காதலை சொன்னதுக்கு எதுக்கு இவ்வளவு அதிர்ச்சி?” கேட்டான்.
இவன் கேட்டதும், நிலா அதிர்ச்சி நீங்கியவளாக,”என்க்கு மூத்தவங்க இரண்டு பேரு இருங்காங்க… அது மட்டுமில்லாம நீங்க எங்க நா எங்க… உங்களுக்கும் எனக்கும் ஏணி வச்சா கூட எட்டாது… இது நடக்க சாத்தியமேல்ல… உங்க காதல மறுக்கறதுக்கு என்னய மன்னிச்சுங்க…” என சொல்லி விட்டு வேகமாக நடந்தாள்.
சூர்யாவால் நிலாவை மறக்க நினைத்தாலும், அவள் நினைவு வந்து கொல்லாமல் கொல்லுகிறது. மனதில் வலியோடு திரும்பிய பக்கமெல்லாம் அவளாகவே தெரிய பித்துப் பிடித்தது போலானான். அவளை மறக்கவே முடியாது என்ற நிலைக்கு வந்தப் பிறகு நிலாவைப் பார்க்க இந்த தடவை அவள் வேலை செய்யும் இடத்திறகு கிளம்பிப் போனான்.
“நிலா எவ்வளவோ முயற்சித்தும் என்னால உன்னய மறக்க முடியல… ப்ளீஸ்… என் லவ்வ ஏத்துக்கோ…” என மன்றாடினான். நிலா இருந்தும் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. சூர்யா சளைக்காமல் மீண்டும் மீண்டும் படையெடு்த்தான். அவன் படையெடுப்பைக் கண்டு மனம் இறங்கி ஒருவழியாக அவன் காதலை ஏற்றுக் கொண்டாள்.
சூர்யாவோ மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து,”யாஹீ…” என்று கத்தினான். நிலா மனம் கொள்ளாச் சிரிப்போடு பார்த்திருந்தாள்.
“நிஜமாகவே என் லவ்வுக்கு ஓகே சொல்லிட்டியா… என்னால நம்பவே முடியல…” மகிழ்ச்சியோடு ஆரவாரித்தான்.
அவன் ஆரவாரத்தை நிலா கண்கள் மின்னப் பார்த்திருந்தாள். தினம் தினம் ஏதாவது சாக்கு வைத்துக் கொண்டு சந்திக்கலானார்கள். அப்படியே இவர்கள் காதலும் வளர்ந்தது. இருவரும் காதலிக்கிறார்கள் என்று தெரிந்தவுடன் இருவீட்டாரும் முழு வீச்சில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சூர்யா வீட்டில் சொத்துக்கு ஆசைப்பட்டு உன் பின்னால் சுற்றுகிறாள் எனவும், நிலா வீட்டில் உனக்கு மூத்தவங்க இருக்கிறாங்கல்ல… அதுக்குள்ள உனக்கு என்ன அவசரம்… அவங்க பெரிய இடம் நம்மகிட்ட எல்லாம் சம்மந்தம் பேசமாட்டாங்க… எனவும் மறுத்தார்கள்.
சூர்யா – நிலா இருவரும் எதிர்ப்பை மீறி சந்தித்துக் கொண்டனர். நிலாவுக்கு அவள் அம்மா,”சொல்ல கேட்காம அவன போயி பார்ப்பியா… போவியா… போவியா…” கூறி கூறியே… அடுப்பில் எரிந்துக் கொண்டிருந்த விறகுக் கட்டையை எடுத்து சூடு இழுத்தாள். நிலா சூட்டின் வலி தாங்காமல் கதறி கதறி அழுதாள்.
சூர்யா வீட்டில் அவன் தந்தை எங்கும் போககூடாது என சொல்லி அறையில் நாற்காலியில் கட்டி வைத்துப் பூட்டி வைத்தார். வேளாவேளைக்கு கதவை மட்டும் நீக்கி உணவுக் கொடுத்தார். சூர்யாவோ தினம் தினம் அவன் தந்தை இல்லாத போது கை கால்கட்டுகளை கழட்ட கொஞ்ச கொஞ்சமாக முயற்சி செய்தான்.அவன் தந்தை கதவை நீக்கும் ஓசை கேட்டால் ஒன்றும் அறியாத பிள்ளைப் போல இருந்துக் கொள்வான்.
ஒருநாள் வெற்றிக்கரமாக கட்டெல்லாம் அவிழ்த்துவிட்டு அவன் தந்தை வருகிற நேரத்துக்கு கையில் இரவுவிளக்கை எடுத்து கதவு மறைவில் அடிக்க காத்திருந்தான். வேணுகோபால் கதவைத் திறந்துக் கொண்டு வரவும், மண்டையில் இரவுவிளக்கில் ஓங்கி ஒருபோடுப் போட்டான். அவர் மயங்கி விழவும் அவரை உள்ளே வைத்துப் பூட்டிவிட்டு தப்பித்து நிலா வீட்டிற்குச் சென்றான்.
பொழுது சாயும் நேரம் அந்த வீட்டில் நிலா அவள் அக்கா கோமதியைத் தவிர யாரும் இல்லை. நிலா காலில் தீக்காயத்துடன் அழுதுக் கொண்டிருந்தாள். அவளின் அக்கா கோமதி,”அழுகாதே… அழுதழுது கண்ணெல்லாம் வீங்கிப் போயிடுச்சு பாரு…” சமாதானப்படுத்தி் கொண்டிருந்தாள்.
சூர்யா நிலாவைக் கண்டதும் உணர்ச்சி பெருக்கில் கட்டியணைக்கப் போனான். கோமதி நாகரிகம் கருதி விலகிப் போனாள். அவள் கால் மேலே அவன் கால் பட்டதும் எரிச்சல் தாங்காமல் கத்தினான். அவள் கத்தவும்,”என்னாச்சு… கால்ல என்னாச்சு…” பதறியவாறே காலை இழுத்து பாவாடையை நீக்க முயற்சிச் செய்தான்.
“வேணாம்…” மறுத்து பாவாடையை கால்வழியை இழுத்துவிட்டுக் கொண்டாள். “காண்பிக்க போறியா… இல்லயா…” சண்டைப் பிடித்து பிடிவாதமாக பாவாடையை விலக்கிப் பார்த்தான். பார்த்தவுடன்,”ஐயோ… யாரு இப்படி கால்ல சூடு வச்சது…” பதறினான்.
அதற்கு நிலா அழுதவாறே,”எல்லாம் என் அம்மா தான்… உங்கள பார்க்ககூடாதுனு சொல்லி இப்படி சூடு வச்சிருச்சு…”
“என் வீட்லயும் எங்கப்பா எதிர்கறாரு… உன் வீட்லயும் உங்கம்மா எதிர்கறாங்க… பேசாமல் இரண்டு பேரும் சொல்லாம கொள்ளாம ஓடி போயி கண்ணாலம் பண்ணிக்கலாம்.”
நிலா அதற்கு சரியென தலையாட்டினாள். இருவரும் ஊரை விட்டு தப்பித்து ஓடினர்.
இருகிளிகளும் தங்கள் கூட்டை மறந்து…
சுகந்திரவானில் கை கோர்த்துப் பறந்தனர்.
18 – இத இதமாய் கொன்றாயடி Read More »
அத்தியாயம் 31 அதிகாலையில் எழுந்த ரணவீரனின் கண்முன்னே தெரிந்த பூவிழியாழின் பூமுகத்தையே கண்ணிமைக்காது பார்த்திருந்தான். “தூங்கும் போது எவ்வளவு அமைதியான குழந்தையாக தெரிகின்றாள்? ஆனால் விழித்துக்கொண்டு இவள் செய்யும் அட்டகாசங்கள் தாங்க முடியவில்லையே. இவள் குழந்தையா? இல்லை குமரியா? இவளைப் புரிந்து கொள்ளவே முடியவில்லையே?!” என்றவன் அவளது நெற்றியின் மத்தியில் தன் ஆள்காட்டி விரலை வைத்தவன், அங்கிருந்து நேர் கோடாக இழுத்து, அவள் நாசி வழியாக பயணித்து கழுத்தில் இறங்கி, இன்னும் கீழே இறங்கும்
இரகசிய மோக கனாவில் 31 முதல் 35 Read More »
காற்றுக்கென்ன வேலி – ஆறாம் அத்தியாயம் விமானத்தில் பக்கத்தில் இருந்த கோமதியிடம் ரவிக்குமார் சொன்னான் “உனக்கு ஏதாவது வேண்டுமா ? எது வேண்டுமானாலும் கேள் . என்னால் முடிந்தால் செய்து தருகிறேன். உனக்கு ஏதாவது செய்து கொடுக்க வேண்டும் போல இருக்கிறது. என் மனம் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறது. என் குழந்தைகளுக்கு நல்ல அம்மா கிடைத்து விட்டாள். அன்பை ஊட்டி வளர்க்கும் ஒரு பெண்ணின் அரவணைப்பில் இருக்கிறார்கள். அவர்களை விட அதிர்ஷ்ட சாலி வேறு யாரும் இல்லை
காற்றுக்கென்ன வேலி – ஆறாம் அத்தியாயம் Read More »
காற்றுக்கென்ன வேலி – அத்தியாயம் ஐந்து
காற்றுக்கென்ன வேலி – அத்தியாயம் ஐந்து Read More »