ஆடி அசைந்து வரும் தென்றல் – 9
9 – ஆடி அசைந்து வரும் தென்றல்
அனிவர்த் ஷாஷிகாவோடு பேசிக் கொண்டு இருந்தான். அனிவர்த் பேச்சுக்கள் ஓரிரு வார்த்தையில் இருக்க.. ஷாஷிகா தான் வாய் ஓயாமல் பேசினாள். இளையாளின் பேச்சுக்களை காதில் வாங்கி மூளையில் பதிவு செய்ய… அவளின் முகம் காட்டும் நவரசங்களை… பரவசங்களை.. மனதில் பதிவு செய்ய.. தனியொரு உலகில் வாழ்ந்து கொண்டிருந்தனர் இருவரும்…
“ஷாஷி.. வா.. லேட்டாகிடுச்சு..”என்ற குரல் இவர்களின் உலகில் உத்தரவின்றி உள்நுழைய… அனிவர்த் மனம் சுணங்க.. கூப்பிட்ட தோழனை கண்டு ஷாஷிகா…
“இருடா.. டீனு.. வரேன்”என கையாட்டி சொன்னவள்.. அனிவர்த்திடம்…
“பை அங்கிள்…” என சொல்லி விட்டு பட்டாம்பூச்சியாக பறந்துவிட்டாள்.
அனிவர்த் உற்சாகம் வடிந்து.. சோர்ந்து போய் அமர்ந்திருந்தான். ஏதேதோ சிந்தனைகள்.. எத்தனை நாளைக்கு…. அடுத்த வீட்டு பிள்ளையிடம் தனக்கு ஏன் இப்படி ஒரு பிணைப்பு… ஷாஷிகாவை பார்க்கும் போது தன் நெஞ்சில் ஏதோ ஒன்று சுனையாக ஊற்றெடுக்கிறதே.. அது என்ன… இன்னும் குழப்பங்கள் அதிகரிக்க… அங்கிருந்து கிளம்பினான்.
இப்படியே சில நாட்கள் கடக்க… மனம் ஷாஷிகாவையே தேடியது.. சோர்வு…அழுத்தம்..எதற்கு இப்படி… என அனிவர்த் என ஒரு நிலையில் இல்லை.
ஷாஷிகாவை பார்த்தே ஆகவேண்டும் என்ற நிலை.. ஷாஷிகாவை தேடி அவள் வீட்டிற்கே சென்றான். முதலில் ஷாஷிகாவை பாரக்க அவள் வீட்டிற்கு செல்ல.. மிகவும் யோசித்தான். முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள் வீட்டிற்கு சென்று அவர்கள் வீட்டுக் குழந்தையை பார்க்க வேண்டும் என்றால் என்ன சொல்வார்கள்..அனுமதிப்பார்களா.. ஏகப்பட்ட தயக்கம்..
ஷாஷிகா சொன்ன டிதேர்ட்டி.. காலிங் பெல்லை அழுத்தி விட்டு.. படபடப்புடன் நின்றான்.
ஒரு சில நிமிடங்களில் கதவு திறக்கப்பட… கதவின் உட்புறம் நின்றவளை கண்டு அனிவர்த்திற்கோ.. ஆச்சரியம்…
கதவை திறந்தவளுக்கோ கதவின் வெளிப்புறம் நின்றவனை கண்டு அதிர்ச்சி…
“வர்ஷி..”
“நீயா..”என்றான் ஆச்சரியமான குரலில்…
அவள் தேவர்ஷி..
மற்றவர்களுக்கு தேவா…
அனிவர்த்கோ வர்ஷி…
தேவர்ஷி…
தேவர்ஷி அனிவர்த்தை எதிர்பார்க்கவில்லை.. அதிர்ச்சியாகி நின்றாள்.ஆனால் அனிவர்த்கோ அவளை பார்த்ததில் மனதில் இருந்த சோர்வு வெறுமை எல்லாம் போன இடம் தெரியவில்லை.உற்சாகம் குமிழிட…
“வர்ஷி..இது உன் வீடா… அப்போ ஷாஷிகா..”
“அம்மா..” என ஷாஷிகா வர…
தேவர்ஷி வாசலை அடைத்துக் கொண்டு நின்றதால்.. அனிவர்த்தும் ஷாஷிகாவும் ஒருவரை ஒருவர் நேர் கோட்டில் பார்த்து் கொள்ளவில்லை. இருந்த போதும் ஷாஷிகாவின் குரலைக் கொண்டே இனம்கண்டு கொண்டவன்…
“ஷாஷிகா உன் பொண்ணா..”
“உன் ஹஸ்பென்ட் பேர் என்ன…”
“என்ன செய்யறார்..”
அவன் கேள்வியாக கேட்க.. ஏதும் பேசாமல் அவனையே பாரத்திருந்தாள். அதற்குள் அனிவர்த்தின் குரல் கேட்டு தேவர்ஷியின் பின்னிருந்து முன் வந்த ஷாஷிகா…
“அங்கிள்..”
“ஹாய் ஷாஷி..”என அனிவர்த் கை அசைக்க..
இதை அதிர்ந்து போய் பார்த்த தேவர்ஷி ஒரிரு நொடிகளில் தன்னை சுதாரித்து கொண்டாள்.
“ஷாஷி.. உள்ள போ..”என்றாள் உத்தரவாக…
இளையாளோ முகம் கூம்பி போய்.. தலையை தொங்கப் போட்டுக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள். அனிவர்த்க்கும் அடிப்பட்ட உணர்வு.. அதிலும் ஷாஷிகாவின் வாட்டத்தை
பார்த்து வருத்தமாகி போனது.
“ஏன் பாப்பாவை திட்டற… பாவம் முகமே வாடி போச்சு..”
அவனின் பேச்சை சட்டை செய்யாமல்…
“என்ன வேணும்… எதுக்கு வந்திங்க..” என்றாள் எரிச்சலாக..
“நானும் ஷாஷிகாவும் ப்ரண்ட்ஸ்.. ஷாஷிகாவை பார்க்க வந்தேன்..”
அவனை தீர்க்கமான பார்வை பார்க்க… அந்த பார்வையில் ஏதோ ஒன்று இருந்தது. அதை அனிவர்த்தால் கண்டு கொள்ள முடியவில்லை. ஆனால் அந்த பார்வை அவனிடம் என்னவோ சொல்லியது. அது மட்டும் அவனுக்கு புரிந்தது.
“ஷாஷிகாவிடம் பேச முடியுமா…”
“அவளுக்கு உங்க ப்ரண்ட்ஷிப் தேவையில்லை. இனி அவளை பார்க்கவோ பழகவோ.. செய்யாதிங்க..”
“ஏன்..” என்றான் ஒற்றை சொல்லாக..
“அது அவளுக்கு நல்லதில்ல.. இனி இங்க வராதிங்க..” கோபத்துடன்…
“கிளம்புங்க..”என சொல்லி விட்டு.. அவன் கிளம்பும் முன் கதவை அடைத்து விட்டு சென்றுவிட்டாள். முகத்தில் அடித்தாற் போல.. முகம் சுருங்கி.. அங்கிருந்து கிளம்பிவிட்டான்.
இரவு தனது அறையில் தூக்கம் வராமல் பால்கனியில் அமர்ந்திருந்தான் அனிவர்த். அவன் எண்ணம் முழுவதும் தேவர்ஷியே… அவளை பார்த்ததில் இருந்து எந்த உணர்வுகள் மறுத்துப் போய் இருந்ததோ… அவை எல்லாம் எழுந்து நின்று பேயாட்டம் போட்டது..
அவனின் எண்ணம் போக்கும்… உணர்வுகளும் அவனை நினைத்து அவனுக்கே அசிங்கமாக இருந்தது. அடுத்தவன் பொண்டாட்டியை இப்படி எல்லாம் நினைக்காதடா.. என அவனை அவனே திட்டி கொண்டு இருந்தான். இருந்தாலும் அடங்க மறுத்தது அவன் உணர்வுகள்.
அவளின் காதலில் மூழ்கி.. மோகத்தில் முத்து குளித்த காலங்கள் எண்ண அலையாக எழுந்து அவனை இம்சித்து கொண்டிருந்தது. தேவர்ஷியின் காதலை நிராகரித்தவனோ.. இப்போது நிராகரிப்பின் வழியை உணர்ந்தான்.
தூக்கம் வராமல் அவனுள் தாபத்தின் தவிப்பு.. தாபத்திற்கு தூபம் போட்டது அவளோடு இருந்த உள்ளி கால நினைவுகள்…
இரண்டு கைகளையும் மடித்து கோர்த்து தலைக்கு அடியில் அணைவாக கொடுத்து மல்லாந்து படுத்து… அவளின் நினைவுகளில் சுகமாக மூழ்கி போனான்.
ஐந்துவருடங்களுக்கு முன்… தேவர்ஷி அனிவர்த் அலுவலகம் வந்த முதல் நாள்…. இப்போதும் காட்சி பிழையின்றி தெளிவாக மனதில் தோன்றியது.
அந்தளவு அவன் நினைவடுக்குகளில் பதிந்துவிட்டாள் என்பதை இப்போதாவது உணர்வானா….
சி. கே டிரேடர்ஸ் வழக்கத்திற்கு மாறாக சற்று பரபரப்பாக இருந்தது. அதன் சுறுசுறுப்புக்கு இணையா தேவர்ஷியும் படபடப்புடன் அமர்ந்திருந்தாள்… நகம் கடிக்காதிருந்தது தான் குறை
படித்து முடித்து முதல் இன்டர்வியூ… தேறுவாளா? காலையிலேயே தாத்தாவும் பெரியப்பாவும் எதிர்மறையாக பேசி டென்ஷனை ஏகத்திற்கும் ஏத்திவிட்டு இருந்தார்கள்.
தங்கள் வீட்டு செல்வமகள் இன்னொரு இடத்தில் வேலைக்கு செல்வதா? என்பதே காரணம்
இன்று தனது அப்பாவோடு தாத்தாவை பார்க்க தன் பெரியப்பா வீட்டிற்கு சென்றாள். பார்க்க என்ன? பார்க்க!!… இன்டர்வியூக்கு செல்ல போவதை சொல்வதற்காக…
சுந்தரமூர்த்தி தன் சாய்வு நாற்காலியில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டு இருந்தார்.
“அப்பா.. “என திருகுமரன் அழைக்க…
பேப்பரில் இருந்து தலையை உயர்த்தியவர்…
“வாடா… குமரா.. என்ன காலங்கார்த்தால வந்திருக்க..”
அதற்குள் திருகுமரனின் குரல் கேட்டு விஸவநாதனும் வந்துவிட..
“வாப்பா.. குமரா..” வரவேற்று அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்தவர் மறந்தும் தன் தம்பியை அமர சொல்லவில்லை. சொல்லாமல் உட்காரமாட்டார் திருகுமரன்.
“என்ன விசயம்” விஸ்வநாதன்
திருகுமரன் தயக்கமே இல்லாமல் அமைதியாக…
“தேவா வேலைக்கு போக ஆசைபடறா.. இன்னைக்கு இன்டர்வியூ.. அதான் அப்பாகிட்ட சொல்லிட்டு போகலாம்னு வந்தோம்”
வி்ஸ்வநாதன் தந்தையைப் பார்த்தார். சுந்தரமூர்த்தி கோபத்தில் சத்தமாக…
“என்ன நினைச்சிட்டு இருக்க குமரா… நம்ம பொண்ண வேலைக்கு அனுப்பறது இது எல்லாம என்ன புதுசா பண்ணிட்டு இருக்கற…”
“சும்மா இன்டர்வியூ தானே போகட்டும்ப்பா..”
தேவர்ஷி அமைதியாக இவர்கள் பேசுவதை பார்ததுக் கொண்டு நின்றிருந்தாள். அதற்காக அவள் அமைதியான பெண் எல்லாம் கிடையாது. குறும்பையே கும்பிடு போட வைப்பாள். இவர்களை துடுக்காக பேசினால் அதற்கும் தன் தந்தை தான் திட்டுவாங்குவார் என்பதால் அமைதியாக நின்றாள்.
ஆனால் மனதுக்குள் கவுன்டர் கொடுத்து கொண்டு இருந்தாள்.
“நம்மகிட்ட ஆயிரம் பேர் வேலை செய்யறாங்க.. என் பேத்தி இன்னொரு இடத்துல வேலை செய்யறதா..”
‘ம்க்கும்.. பெரிய ராஜ பரம்பரை.. அட போங்கப்பா…’
“ப்பா… நம்ம கம்பெனிய பாரக்கவே இன்னும் பத்து பேரு இருந்தாலும் பத்தாது.. அப்படியிருக்க வெளிய எதுக்கு போய் வேலை பார்க்கனும்.. நம்ம கம்பெனிக்கே வரட்டுமே..”என விஸ்வநாதன் கேட்க…
‘இவங்க புள்ள விட்டுருவானா..’
“இல்லைங்கண்ணா.. வெளியே நாலு இடத்துக்கு போய்ட்டு பார்த்துட்டு வரட்டும்.. ஒருவேளை வேலைகிடைச்சாலும் மாப்பிள்ளை தகையற வரை சும்மா போவட்டும் உலக அனுபவம் கிடைக்கும்ப்பா..”
தகப்பனும் தமையனும் முகத்தை தூக்கி வைத்து விளக்கத்தை ஏற்காதிருக்க..
“உங்க பேத்திக்கு ஆசிர்வாதம் பண்ணுங்க… நேரமாகுது.. தேவா தாத்தா கால்ல தொட்டு கும்பிடுடா…”
தந்தை சொன்னது போலவே தேவா செய்ய…சுந்தரமூர்த்தி..
“ம்ம்..
எந்த கம்பெனிக்கு இன்டர்வியூ போற?
தேவா தன் பைல் காட்ட..
“இவன் நிச்சயம் பிரஷர்ஸ் எடுக்க மாட்டான்.. இவ்ளோ நேரம் பேசியதே வேஸ்ட்..போ. போ..”
‘இதுக்கு பேரு ஆசிர்வாதமா..’
அப்பா உங்க குடும்ப அங்கத்தினர்களை மியூசியத்தில் தான் வைக்கனும்..
ஒன்றும் பேசாமல திருகுமரன் மகளை அழைத்துக் கொண்டு வந்துவிட்டார்.
வீட்டிற்குள் வந்தவர்களைப் பார்த்து கௌசல்யா…
“என்னங்க சொன்னாங்க..” பதட்டத்துடன்…
“என்ன சொல்வாங்க.. இவங்க குடும்ப பெருமைய காப்பத்துனுமாம் பெரிய அம்பானி குடும்பம்…” தேவர்ஷி மிகுந்த எரிச்சலுடன்…
“விடுடா தேவா குட்டி அவங்க அப்படின்னு தெரிஞ்சது தான.. இதை எல்லாம் பேசி டென்ஷனான இண்டர்வியூ எப்படி அட்டென்ட் பண்ணுவ… கிளம்பி வா அப்பாவே டிராப் பண்றேன்.”
வர்ஷி உள்ளே செல்லவும் கௌசல்யா…
“ஏங்க என்ன சொன்னாங்க..”கவலையாக கேட்க…
“விடுமா… வழக்கமானது தான..”
“இன்னும் எத்தனை காலத்துக்குங்க.. நாம தான் ஒவ்வொன்னும் அவங்க சொல்றத கேட்டு சகிச்சு வாழனும்.. நம்ம புள்ளைகளுமா…” கண்கள் கலங்க..
“ப்ச் கௌசி.. தேவா வந்திடுவா.. கண்ணை துடை..” என தோளோடு அணைத்து ஆறுதல் படுத்தினார்.
தேவா வரவும் அவசரமாக விலகினார் கௌசல்யா… இருந்தும் வர்ஷி கவனித்துவிட்டாள்.
“லவ் பேர்ட்ஸ்..லவ்பேர்ட்ஸ.. தகதிமிதா..” என கண்ணடித்து கைகளை சிறாக விரித்து அசைத்து பாடிக் கொண்டே வந்தாள். கௌசல்யாவிற்கு வந்த வெட்கத்தை மறைத்தவாறு…
“வாயாடி. வா வந்து சாமி கும்பிடு..” என பூஜை அறைக்கு அழைத்து சென்று கடவுள் படங்களின் முன்பு கண்மூடி நின்று..
“கடவுளே.. என் பொண்ண விருப்பபட்ட மாதிரி அவளுக்கு இந்த வேலை கிடைக்கனும்..” என அப்பாவியாக வேண்டி திருநீறு பூசிவிட்டார்.
மனைவியின் வேண்டுதலை அறிந்தவராக பார்த்துக் கொண்டு நின்றார் திருக்குமரன்.
அவருக்கும் அண்ணன் சொன்னது உண்மையா இருக்கும் என்று தான் தோணுச்சு.. பொண்ணு விளையாட்டுக்காரி.. தடுத்தால் கோபம் கொள்வாள்.அங்கு செலக்ட் செய்யலேன்னாலும் சும்மா போய்ட்டு வரட்டும் என்று பெருந்தன்மையாக இருந்தார்
ஆடி அசைந்து வரும் தென்றல் – 9 Read More »